To attend worship at Kadavul Hindu Temple make a reservation here
FRONT GROUNDS ARE OPEN DAILY FROM 9AM to 12PM WITHOUT A RESERVATION

Thingad Sadaiyaay


 • Genre: natchintanai Deity: Siva
 • Artists: Mrs. Meena Thavaratnam
 • Original Script

  திங்கட் சடையாய்

  திங்கட் சடையாய் எங்களை யுடையாய் சிவனே ஓம்
  சீரிய அடியார் சிந்தையி லுறையுஞ் செல்வா ஓம்
  மங்கையை யுடையாய் மழவிடை யானே மாதவனே ஓம்
  மண்ணும் விண்ணும் ஒன்றாய் விளங்கும் மணியே ஓம்
  அங்கையி லங்கி தங்கிய பரனே யரனே ஓம்
  ஆருயி ரெல்லாம் நீயே யாகி யமர்ந்தாய் ஓம்
  கங்குலும் பகலும் இல்லாக் காட்சி தருவாய் ஓம்
  கருதும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஓம்

  சிறையார் வண்டறை கொன்றைப் போதனே சிவனே ஓம்
  சீவன் சிவனாய்ப் பாவனை செய்வார் திருவே ஓம்
  குறையா வன்பு தரவே வருவாய் குருவே ஓம்
  கூடிக்கூடி யுன்னடி பாடல் கொடுப்பாய் ஓம்
  பிறையார் சடையாய் பேரா யிரமே யுடையாய் ஓம்
  பேசப் பேச வின்பம் பெருகும் பிரானே ஓம்
  அறையார் கழலே யல்லாற் சிறியே னறியேன் ஓம்
  அன்புசெய் யடியரை யென்றும் ஆளக் கடவாய் ஓம்

  கல்லாப் பிழையுங் கருதாப் பிழையும் பொறுப்பாய் ஓம்
  காலனைக் காலாற் றாக்கிய பரனே யரனே ஓம்
  எல்லாஞ் செய்ய வல்லபம் உடையாய் எந்தாய் ஓம்
  எழில்சேர் நல்லை வாழும் குருவே யிறைவா ஓம்
  பொல்லா வினைகள் போகும் வண்ணம் புரிவாய் ஓம்
  பூவார் மலர்கொண்டடியார் போற்றும் பொருளே ஓம்
  எல்லா முன்செய லாமெனும் எண்ணந் தருவாய் ஓம்
  ஏத்தும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஓம்

  மாறிப் பொறிவழி போகா மனத்தார் இனத்தாய் ஓம்
  மாலோ டயனுங் காணா ஒளியே மணியே ஓம்
  ஆறும் பிறையுஞ் சூடிய ஐயா மெய்யா ஓம்
  ஆதியு மந்தமு மில்லாய் உள்ளாய் அறிவே ஓம்
  தேறித் தெளிவார் சிந்தையி லூறும் அமுதே ஓம்
  செயசெய வென்று பணியும் தேவர்கள் தேவா ஓம்
  கூரிய சூலப் படையினை யுடையாய் கோவே ஓம்
  கும்பிடும் நல்ல வடியரை யென்றுங் காப்பாய் ஓம்

  போற்றியென் வாழ்முத லாய பொருளே யருளே ஓம்
  புண்ணியர் நண்ணும் பூரண வடிவே புகலே ஓம்
  தோற்ற மறைக்குங் காரண மாகிய தொல்லோய் ஓம்
  சோதிச் சுடரே தோகைக் கிடமீ துணையே ஓம்
  நீற்றொடு பொலியும் நெற்றிக் கண்ணா நிமலா ஓம்
  நீதி வழுவா மாதவர் தங்கள் நெறியே ஓம்
  ஆற்றொடு தும்பை யம்புலி சூடிய யரனே ஓம்
  அன்பு செய்யடியரை யென்றும் ஆளக் கடவாய் ஓம்

  Transliteration

  thingad sadaiyaay engalai udaiyaay sivaney aum
  seeriya adiyaar sinthaiyil uraiyum selvaa aum
  mangaiyai udaiyaay mal.avidaiyaaney maathavaney aum
  mannum vinnum ondraay vilangum maniyey aum
  angaiyilangi thangiya paraney araney aum
  aaruyir ellaam neeyey aagi amarnthaay aum
  kangulum pagalum illaa kaadchi tharuvaay aum
  karuthum nalla adiyarai endrung kaappaay aum

  siraiyaar vandarai kondrai pohthaney sivaney aum
  seevan sivanaai baavanai seyvaar thiruvey aum
  kuraiyaa anbu tharavey varuvaay guruvey aum
  koodikkoodi unnadi paadal koduppaay aum
  piraiyaar sadaiyaay peyraayiramey udaiyaay aum
  peysappeysa inbam perugum piraaney aum
  araiyaar kal.aley allaar siriyeyn ariyeyn aum
  anbusey adiyarai endrum aala kadavaay aum

  kallaa pil.aiyung karuthaa pil.aiyum poruppaay aum
  kaalanai kaalaal thaakkiya paraney araney aum
  ellaam seyya vallapam udaiyaay enthaay aum
  el.ilseyr nallai vaal.um guruvey iraivaa aum
  pollaa vinaigal pohgum vannam purivaay aum
  poovaar malarkond adiyaar pohttrum poruley aum
  ellaam un seyalaam enum ennan tharuvaay aum
  eytthum nalla adiyarai endrung kaappaay aum

  maari porival.i pohgaa manatthaar inatthaay aum
  maalohdayanung kaanaa oliyey maniyey aum
  aarum piraiyum soodiya aiyaa meyyaa aum
  aathiyum anthamum illaay ullaay arivey aum
  theyri thelivaar sinthaiyil oorum amuthey aum
  seyaseya vendru paniyum theyvarkal theyvaa aum
  kooriya soola padaiyinai udaiyaay kohvey aum
  kumbidum nalla adiyarai endrung kaappaay aum

  pohttri en vaal.muthalaaya poruley aruley aum
  punniyar nannum poorana vadivey pugaley aum
  thohttram maraikkung kaaranamaagiya thollohy aum
  sohthi sudarey thohgai kidamee thunaiyey aum
  neettrodu poliyum nettri kannaa nimalaa aum
  neethi val.uvaa maathavar thangal neriyey aum
  aattrodu thumbai ambuli soodiya araney aum
  anbusey adiyarai endrum aalak kadavaay aum

  Translation

  Siva with the Moon in His Locks Who Holds Us, Aum

  moon - One with Locks - us - holding - O Siva - Aum
  perfect - devotees - in the mind of - living - O Richness - Aum
  Maiden - You that holds - He with the beautiful bull - O Great Meditator - Aum
  Earth and - Heaven - as one - shining - O Precious Gem - Aum
  in the palm of the hand - fire - O God - O Hara - Aum
  dear life - all - You, indeed - became - You who sat - Aum
  dark night and - day also - without - vision - You who gives - Aum
  concerned - good - devotees - always - You who protects - Aum

  beautiful - bees humming - kondrai - He who Flowered - O Siva - Aum
  life - is Siva, thus - feeling - those that do - O Holy One - Aum
  endless - love - to give- You who comes - O Guru - Aum
  more and more - Your Feet - song - You who gives - Aum
  O One with the Crescent - O one with the Matted Locks - a thousand names - You that has - Aum
  talk and talk - happiness - multiplies - O Life like God - Aum
  beautiful God's - Kal.al (1) wearing Feet indeed - other (than that) - small one - I know not - Aum
  loving - devotees - always - rule - You who lets - Aum

  ignorance - fault - inconsiderate - fault also - You who bears - Aum
  Lord of Death - with Your Leg - attacked - O Supreme God - O Hara - Aum
  all - to do - capability - You who holds - O Mother - Aum
  graceful - Nalloor - living - O Guru - O God - Aum
  evil - action - to go away - such that - You who allows - Aum
  beautiful - with flowers - devotees - praising - O Matter - Aum
  all - your - action indeed - thus - thought - You who gives - Aum
  praising - perfect - devotees - always - You who protect - Aum

  wrong - path of the organs - not to go - those that want - You who belongs - Aum
  Vishnu with Brahma also - see not - O Light - O Gem - Aum
  river and - crescent also - wearing - O Sir - O Truth - Aum
  begining and - ending - You who is without - You who is there - O Knowledge - Aum
  analyze and - clear - in the mind - dripping - O Elixir - Aum
  victroy victory - thus (said) - bowing - devas - O Deva - Aum
  sharp - trident - batallion (about) - You who possesses - O King - Aum
  worshipping - good - devotees - always - You who guards - Aum

  praise - my - life prime thus - O Matter - O Grace - Aum
  virtuous ones - reach - full - O Form - O Refuge - Aum
  appearance - hiding - reason that is - O Ancient One - Aum
  O Light - O Flame - - O Companion - Aum
  with Holy Ash - shining - forehead - eyed - O Pure One - Aum
  justice - not slipping from - O Great Meditator - Your - Path, indeed - Aum
  with river - thumbai flower - moon - wearing - O Hara - Aum
  loving - devotees - always - rule - You who holds - Aum

  Footnotes:
  (1): This is an anklet worn by men.

  Photo of Gurudeva
  Add to your contemplative lifestyle a hobby or craft. Working creatively with your hands, taking physical substance and turning it into something different, new and beautiful is important in remolding the subconscious mind.
  —Gurudeva