Karutthil Karutthaagi
Siva Yogaswami
Original Script
கருத்தில் கருத்தாகி
பல்லவி
கருத்தில் கருத்தாகி யிருக்கின்ற தெய்வமே
கடைக்கண் பார்நீ தெய்வமே
அநுபல்லவி
ஒருத்தர் துணையுமில்லை யுன்றுணை யல்லாமல்
உலகுயிர் பரமாகி நடிக்கின்ற செல்வமே
சரணம்
எங்கெங்கு சென்றாலும் அங்கெங்கும் நீயே
ஈசா மதுராபுரி வாசா மீனாட்சி
நேசனே சொக்கநாதா யோகனுக்கருள் தாதா
நின்று மிருந்துமுனை யென்றென்றும் போற்றநான்