குருமார்களின் சரித்திரங்கள்

Page 10: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/10_fm_10.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

முகவுரை §

வை அறியமுடியாததை அறிந்து இருந்து, உள்ளங்கையில் முடிவான புரிதலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த விசேஷமான ஆன்மாக்களின் கதைகள் ஆகும். அவர்கள் தங்கள் சகாக்களை வியக்க வைத்து, வாழ்க்கையின் குறிக்கோள் மற்றும் பாதையை வெளிப்படுத்தி, விசித்திரமான வகையில் எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வை பெற்றனர். கடவுள் சர்வவல்லமை படைத்தவராக எங்கும் எதிலும் இருக்கிறார் என்பதையும், அந்த கடவுள் ஒவ்வொரு மதம் மற்றும் பாதையில் வெவ்வேறு பெயர்களுடைய கடவுளாக இருக்கிறார் என்பதையும் அவர்கள் அறிந்திருந்து, கடவுளை சிவபெருமனாக வழிபடுகிறார்கள். அதில் பலர் குருமார்களாக இருக்கிறார்கள்; ஆனால் மனதின் ஆழ்நிலைக்கு சென்று, யோகத்தின் முடிவான இலக்கை அடைந்து, கடவுளை அறிந்த இவர்கள் சற்குருக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களது வாரிசுகள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள், அவர்களது சக்திகள் இடம் மாற்றப்பட்டு, ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு செல்லும்போது முதிர்ச்சியை பெற்று, 21ஆம் நூற்றாண்டில் தற்போது செழிப்பாக இருக்கின்றன. ஆனால் அவர்களின் கதைகள் பெரும்பாலும் சொல்லப்படாமல், ஒரு வகையில் பொதுவான ஆன்மீக இரகசியமாக இருக்கின்றன. இந்த புத்தகத்தில் முதல் முறையாக, அவர்கள் வெளிப்படுத்த விரும்பிய வரை, அவர்களை இயக்க மற்றும் ஊக்குவிக்க எது காரணமாக இருந்துள்ளது என்பது வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் முதல் முறையாக, அவர்கள் என்ன சொன்னார்கள் மற்றும் செய்தார்கள் என்பது தீட்சை பெற்ற குழுவிற்கு வெளியே பகிரப்பட்டுள்ளது. §§

தற்கால அறிஞர்களும் விஞ்ஞானிகளும் மனிதனின் கடந்தகால வரலாற்றை பற்றி தேடத்தொடங்கி, தங்களுக்கு மிகவும் சிறிதளவே தெரியும் என்பதை தெரிந்துக்கொண்டார்கள். நமது இனம் பூமியில், இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்துள்ளது, ஆனால் இன்று அந்த வரலாற்றில் ஒரு சுவடை மட்டுமே நம்மால் மதிப்பிட முடிகிறது. கடந்த காலத்தில் எத்தனை நாகரிகங்கள் இருந்துள்ளன? அவர்கள் நமக்கு எந்த தகவலையும் விட்டு வைக்காததால், அவர்கள் இந்த பூமியில் வாழ்ந்ததாக நாம் கருதுவதில்லை. மனிதன் சம்பந்தப்பட்ட வெறும் ஐம்பது நூற்றாண்டுகளின் சம்பவங்களை ஒன்று சேர்த்து பார்க்கும் போது, பல டஜன் கணக்கில் கலாச்சாரங்கள் பல யுகங்களுக்கு செழிப்பாக இருந்து, பெரும்பாலும் முழுமையாக அழிந்துள்ளன என்பது தெரிய வருகிறது. §§

எகிப்து, சுமேரியா, கிரேக்க நாடு அல்லது பெரு, இத்தாலி, பிரிட்டன் அல்லது பெர்சியாவின் பழங்கால சமயங்கள் எங்கே? இவற்றின் வரலாறு மற்றும் நவீன யுகத்தில் அவை ஏற்படுத்திய தாக்கத்தை பற்றிய, துல்லியமாக வரலாற்று ஆசிரியர்கள் கண்டுபிடித்தாலும், அது கல்வி சார்ந்த ஆய்வாகவே இருக்கிறது. புதைந்த நகரங்கள், உடைந்த சுவர்கள், மர்மமாக காட்சி அளிக்கும் உடைந்த துண்டுகள், பயன்பாட்டில் இருந்த சட்டத்தின் பகுதிகள் மற்றும் அவர்களது ஓவியத்தின் மிச்ச மீதிகள், அவை சிறந்து விளங்கிய காலத்து பாரம்பரியங்களை சித்தரிக்கவில்லை. ஆங்காங்கே தப்பித்த சில குழுக்களை தவிர்த்து, கடந்த ஆயிரம் ஆண்டுகளில் சமயம் சார்ந்த போர்கள் காரணமாகவும், புவியியல் மாற்றங்களை நீண்டகால அளவில் பார்க்கும் போது, தொடர்ந்து வரும் பனி யுகத்தின் மர்மமான சக்தியின் காரணமாகவும், பூமியில் இருக்கும் பெரும்பாலான பழங்கால சமயங்களின் தொடர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.§§

image§

இதில் குறிப்பிடும்படியான விதிவிலக்காக இருப்பது பாரதம் என்கிற நவீன இந்தியா. இது உலகின் மிகவும் பழமையான மற்றும் துடிப்புணர்வுள்ள சமயமான, இந்து சமயத்தின் தாயகமாக விளங்குகிறது. இந்துக்களின் மத்தியில் தங்கள் சமயத்தின் பழமை பற்றி புரிந்துணர்வு இருப்பதை, நவீன ஆராய்ச்சி பெரும்பாலும் நிரூபித்துள்ளது. “நிலையான பாதையாக” விளங்கும் சனாதன தர்மம், இயல்பாகவே உலகம் முழுவதற்கும் சொந்தமானதாக இருக்கிறது மற்றும் வரலாறு முழுவதிலும் பல ரூபங்கள் மற்றும் மொழிகளில் தூரத்து கண்டங்களுக்கு பரவி இருக்கிறது, மட்டும் அது இந்தியாவில் மட்டுமே கடந்த ஆயிரம் ஆண்டுகாலமாக நிலைத்து இருந்து, இடைவிடாத தொடர்ச்சியுடன் வளர்ச்சி பெற்று, இன்று ஒரு பில்லியன் மக்களுடன் வலுவாக, ஒரு உலகளாவிய இந்து சமயமாக செழிப்பாக இருக்கிறது. §§

இந்தியா ஆன்மீகத்திற்கு என்றுமே குழந்தைகளின் தொட்டிலைப் போல இருந்துள்ளது. மார்க் ட்வைன் இந்தியாவில் உரைகளை நிகழ்த்துவதற்காக 1895 ஆண்டில் பயணம் மேற்கொண்ட போது, “இந்தியா மனிதநேயத்திற்கு தொட்டிலாக, மனித உரையாடலின் பிறப்பு இடமாக, வரலாற்றின் அன்னையாக, புராணக்கதையின் பாட்டியாக, மற்றும் பாரம்பரியத்தின் முப்பாட்டியாக விளங்குகிறது. மனித வரலாற்றில் நம்மிடம் இருக்கும் அதிக மதிப்புமிக்க மற்றும் அதிக அறிவுறுத்தல் நிறைந்த தகவல்கள், இந்தியாவில் மட்டுமே பேணி பாதுகாக்கப்பட்டு வருகின்றன!” என்று குறிப்பிட்டிருந்தார். §§

பழங்காலத்தில் இருந்த மற்ற நம்பிக்கைகள் அனைத்தையும் அழித்த அறியாமை, இந்து சமயத்தை எதனால் விட்டு வைத்தது? அதற்கு அதிஷ்டம் தான் காரணம் என்று சொல்ல முடியாது. இந்திய நாடு பல கடினமான சூழ்நிலைகளை சந்தித்துள்ளது, மற்றும் அயல் நாட்டவர்கள் மூலமாக தொடர்ந்து இனங்கள் மற்றும் சமயங்கள் முழுவதுமாக ஈர்க்கப்பட்ட சமபவங்கள், அதன் வரலாற்றில் நிறைந்துள்ளன. அது மட்டுமல்லாமல், வெளிநாட்டில் இருந்து படையெடுத்தவர்கள், இயற்கை பேரழிவுகள் மற்றும் உள்நாட்டு போர்கள் என்று இந்தியா தனது பங்கிற்கு சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. இருந்தாலும், இந்து சமயம் என்றுமே ஊக்குவிக்க தவறாமல், என்றும் மங்காமல், எப்போதும் புத்துயிருடனும் உள்ளத்தில் வலிமையுடனும், ஒரு இரகசிய ஊட்டச்சத்தின் உதவியுடன், உறுதியான துடிப்புணர்வுடன் செழித்து, இந்தியாவின் ஆன்மா மீது தனது பிடியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பு என்று நாம் கேட்கலாம். இந்த சமயத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு இயக்கிக்கொண்டு இருந்தது யார்? இன்று அதை துடிப்புணர்வுடனும் உட்புற வலிமையுடனும் வைத்திருப்பது யார்? அவர்கள் எத்தனை பேர்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? அது எவ்வாறு சாதிக்கப்பட்டது? இதற்கான பதில்களில் ஒரு பகுதியை, இந்த புத்தகத்தின் பக்கங்களில் காணலாம். இந்த சுயசரிதையை சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமியின் வாழ்க்கை வரலாறு நிறைவு செய்கிறது. அவர் இவ்வாறு அதற்கு விளக்கம் அளிக்கிறார்:§§

[பக்தியுடன் இருக்கும்] ஆயிரம் இந்துக்களில், ஒன்று அல்லது வெகு சிலர் மட்டுமே ஆச்சாரமான பாதையில் செல்ல உலகை துறந்து, ஒரு நதிக்கு அருகில், குன்றுகளில் இருக்கும் ஒரு குகையில் தனிமையில் வாழ்ந்துக்கொண்டு அல்லது அலைந்து திரிந்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு வானம் கூரையாகவும், இறைவன் எசமானாகவும் இருக்கிறார். ஒவ்வொரு இந்துவும் சுவாமி அல்லது சாது தற்போது இருக்கும் நிலையை தாங்களும் எதிர்காலத்தில் அடைவார்கள் என்பதை அறிந்து, அவருக்கு மரியாதை செலுத்துகிறார்கள். இவ்வாறு இறைவனை நாடும் பல்லாயிரக்கணக்கான தபஸ்விக்களில், சிகரம் மிகவும் உயர்வாகவும், ஏற்றம் செங்குத்தாகவும் இருப்பதால், எல்லா ஆன்மாக்களும் நாடும் அந்த பரமாத்துமாவை, ஒன்று அல்லது பத்து நபர்கள் தேடிப்பிடிப்பார்கள். உணர்தலை பெற்ற துறவிகள் மற்றும் முனிவர்கள் அபூர்வம் என்றாலும், இந்தியாவில் அத்தகைய நபர்கள் இல்லை என்று சொல்லி விடமுடியாது. அவர்கள் இருப்பதால் நாடு புனிதமடைகிறது. §§

ஒவ்வொரு இந்து தலைமுறையிலும் விவசாயிகள், வழக்கறிஞர்கள், தாய்மார்கள், அரசர்கள், பிச்சைக்காரர்கள், அறிஞர்கள், பூசாரிகள், சுவாமிகள் மற்றும் தெய்வீக புருஷர்கள் பிறந்து இருக்கிறார்கள். ஆனால் இந்த ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, சனாதன தர்மத்தின் முழு சக்தியையும் சுமந்து செல்வது அல்லது தாக்கு பிடிப்பது என்பது முடியாத காரியம். அவர்கள் தங்களது சொந்த ஆசைகள், தங்களது சொந்த அனுபவங்கள் அல்லது தங்களது சொந்த வேட்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்களது தேடல் தொடர்கிறது. அவர்கள் இன்னும் முழுமையான புரிந்துணர்வை பெறவில்லை; அவர்கள் தங்களது ஆன்மாவின் முழுமையான பக்குவத்தை இன்னும் அடையவில்லை. இறைவனை உணர்ந்த பிறகும், ஆன்மா தொடர்ந்து பரிணாம வளர்ச்சி பெறுகிறது. அது திடீரென்று மறைவதும் இல்லை, உலகம் காணாமல் போவதும் இல்லை. ஒரு ஞானோதயம் பெற்ற மனிதன், தனது ஆன்மாவின் முதிர்ச்சிக்கு ஏற்ப பலரை ஆன்மீக பாதையில் முன்னேற்றி செல்லமுடியும். தலைமுறைகள் முழுவதையும் வழிகாட்டும் குறிக்கோள் பணி யாருடையது? தங்களது தேடலை கைவிட்டு, பல லட்சக்கணக்கான மக்களை தான் கடந்து வந்த பாதையில் வழிகாட்ட யார் முன்வருவார்கள்? யாருடைய தேடல் முழுமையாக முடிந்துள்ளதோ, யார் குறிக்கோளாக மாறிவிட்டார்களோ அவர்களால் மட்டுமே இதை செய்ய முடியும். §§

அத்தகைய மனிதர்கள் வாழ்கிறார்கள்; அத்தகைய மனிதர்கள் எப்போதும் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள், அதாவது “சாதித்தவர்கள்” அல்லது “முழு நிறைவானவர்கள்.” இந்திய மக்கள் சனாதன தர்மத்தின் வெளிப்புற கோட்பாடுகள் மற்றும் அனுஷ்டானத்தை பின்பற்றுகிறார்கள், ஆனால் இந்த விசேஷ வகையான யோகிகள் ஒவ்வொருவரும் அந்த தர்மத்தின் உட்புற சக்தி மற்றும் நுணுக்கமான தகவலை பின்பற்றுகிறார்கள். அவர்கள் அதன் சக்தியை தக்க வைத்துக்கொண்டு, அதன் விதியை பாதுகாக்கிறார்கள். அவர்கள் சிவபெருமானுடன் ஐக்கியமாகி, இறைவனின் சித்தத்திற்கு இணங்கி பேசவும் செயல்படவும் செய்கிறார்கள். §§

ஒவ்வொரு குருவும் மற்ற குருக்களிடம் இருந்து தங்களது பரம்பரை, மற்றும் தங்களது இயல்பான குணம், விழிப்புணர்வு மற்றும் ஸித்திகளை பொறுத்து மாறுபடுகிறார்கள். உங்களை உங்களிடம் அறிமுகப்படுத்தும் பணியை மட்டுமே, ஒரு குருவால் செய்ய முடியும். அவர் அந்த பணியை மட்டுமே செய்வார், மற்றும் அது பல வழிகளில் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு குருவின் முடிவான ஸித்தியை குறிப்பிடும் அவரது தத்துவதம் மற்றும் அவரது சொந்த அனுபவத்தின் மூலமாக மட்டுமே அவர் கட்டுப்படுத்தப்படுகிறார். அவர் தான் செல்லாத இடத்திற்கு, உங்களை அழைத்து செல்ல முடியாது. ஊக்கம் அளிப்பது, உதவி செய்வது, வழிகாட்டுவது மற்றும் சிலசமயங்களில் குரு பரமாத்துமாவை நோக்கி தான் சென்றதை காட்டிலும், அதிகமாக முன்னேறி செல்ல சீடனுக்கு உத்வேகம் அளிப்பதும் குருவின் பணியாக இருக்கிறது. §§

மனம் கபடம் நிறைந்து இருப்பதாலும், ஆணவம் என்பது சுயமாக-நிலைத்து இருந்து, தன்னை தன்னால் கடக்க முடியாமல் மற்றும் விருப்பம் இல்லாமல் இருக்கும் செயல்முறை என்பதாலும் சற்குரு தேவைப்படுகிறார். அதனால் ஒருவருக்கு, அந்த செயல்முறையை அனுபவித்த, பாதையின் இயல்பான முடிவு வரை நம்பிக்கையுடன் பின்தொடர்ந்து சென்ற, மற்றும் நமக்குள் இருக்கும் இறைவனை நோக்கி நம்மை வழிநடத்தி செல்ல முடிந்த, இன்னொருவரின் வழிகாட்டல் தேவைப்படுகிறது. சற்குரு உங்களை பாதையில் நிலைத்திருக்க செய்வார், ஆனால் பாதையில் முன்னேறி செல்வது உங்கள் பொறுப்பு என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். §§

சிலசமயங்களில் குரு தரும் நுணுக்கமான வழிகாட்டலை புரிந்துகொண்டு, பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, வழங்கப்பட்ட சாதனாக்களை பூர்த்தி செய்ய அவற்றை பயன்படுத்துவதும் சீடனின் கடமையாக விளங்குகிறது. உள்ளுணர்வு மனதிற்கு வளர்ச்சி ஒரு சவாலாக இருப்பதால், எப்போதும் சவாலாக இருக்கும் ஞானோதய பாதையில் ஒரு சற்குருவுடன் இருப்பது, ஒரு வலுப்படுத்தும் செயலாக விளங்குகிறது. ஒரு குரு இந்த தீவிரத்தை வழங்கவில்லை என்றால், நாம் அவரை தத்துவத்தை போதிக்கும் ஒரு ஆசிரியராக மட்டுமே கருதுவோம். எல்லா குருக்களும் சற்குருக்களாக இருப்பதில்லை. எல்லா குருக்களும் இறைவனை உணர்ந்திருப்பதில்லை. வாழ்க்கையின் மாதிரிகளில் நிலைத்து இருக்காமல், அவற்றை மாற்றி அமைப்பதே குறிக்கோள் ஆகும். ஒரு சற்குருவை தேடுவதற்கு, அது மட்டுமே காரணமாக இருக்கக்கூடும். §§

சில ஆசிரியர்கள் ஒழுக்கங்களை கற்றுத்தருவார்கள். மற்றவர்கள் தத்துவம், மொழி, வழிபாடு மற்றும் சாஸ்திரங்களை கற்றுத்தருவார்கள். சிலர் முன் உதாரணமாக திகழ்ந்து, ஒரு உட்புற வழிகாட்டலின் மூலம் கற்றுத்தருவார்கள். சிலர் அமைதியாக இருப்பார்கள், அதே சமயத்தில் மற்றவர்கள் விரிவுரைகளை வழங்கி பாடம் நடத்துவார்கள். சிலர் ஆச்சாரமாக இருப்பார்கள், மற்றும் சிலர் அவ்வாறு இருப்பதில்லை. எந்த உருவத்தில் பாடம் நடத்தப்படுகிறது என்பது முக்கியமில்லை. ஒரு உண்மையான மற்றும் முழுமையான உணர்தலை பெற்ற சற்குரு மற்றும் ஒரு உண்மையான மற்றும் முழுமையான அர்பணிப்புள்ள சீடன் இருப்பது தான் முக்கியம். இத்தகைய சூழலில், ஆன்மீக முன்னேற்றம் சுலபமாக இல்லாவிட்டாலும், விரைவாகவும் உறுதியாகவும் இருக்கும். சித்தர்கள் எங்களது பாரம்பரியத்தில் சிவனைப் பற்றி மட்டுமே எப்போதும் கற்றுத்தந்துள்ளார்கள். அவர்கள் சைவ தர்மத்தை கற்றுத்தந்து இருக்கிறார்கள், மற்றும் அந்த தர்மம் சிவபெருமானை தனிப்பட்ட கடவுளாக மற்றும் உயிர்சக்திகள் அனைத்தையும் படைத்தவராக; உள்பொருளாக, புரிதலாக மற்றும் எல்லா உருவம் வழியாக பாய்ந்து செல்லும் அன்பாக இருக்கும் பேரின்பமாக மற்றும் இறுதியில் காலம், உருவம், காரணத்தை கடந்து அனைத்திற்கும் பரமாத்துமாவாக மூன்று வழிகளில் சேவை செய்து அறிய முற்படுகிறது. §§

பல லட்சக்கணக்கான மக்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் போது, தங்களது ஆன்மாக்களில் இருக்கும் அநாதி உண்மையை வெளிப்படுத்தும் யோகிகள் மற்றும் சாதுக்கள், தங்களது கடமைகள் மற்றும் மனிதனுக்குள் இருக்கும் முடிவான புரிதலின் காவலர்களாக இருக்கும் தங்களது குறிக்கோள் பணியை பூர்த்தி செய்வதற்கு, மிகவும் உயர்ந்த மலைகளில் அமைதியாக பல வருடங்களுக்கு உட்கார்ந்து இருக்கிறார்கள் அல்லது தனிப்பட்ட குழுவாக ஒன்றுகூடி இருக்கிறார்கள். ஒரு அறியாமையின் யுகம் வழியாக இந்து சமயத்தின் தகவல் மற்றும் சக்தியை சுமந்து செல்லும் இமயமலை தீர்க்கதரிசிகள், ஒவ்வொரு தலைமுறைக்கும் சனாதன தர்மத்தை வெளிப்படுத்துவதோடு அவர்களுடன் பகிர்ந்துக்கொண்டு, கடினமான காலங்களில் மக்களின் மனதில் அதன் புரிதலை மீண்டும் விழிப்படைய செய்து, பக்தி வலுவிழக்கும் போது நம்பிக்கையை மீண்டும் தூண்டிவிட்டு, சிவபெருமான் உங்களுக்குள்ளும், எல்லா பொருளின் உள்ளும் இருக்கிறார், மற்றும் சிவபெருமான் எல்லாமாக இருக்கிறார் என்ற தகவலை, ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த உலகில் இருக்கும் எல்லா சூழ்நிலைகளையும் கவனத்தில் கொண்ட பிறகு, உட்புறமாக இருக்கும் எல்லையற்ற தன்மையை சிறிதளவு நெருங்குவதைத் தவிர வேறு எதுவும் முக்கியமானதாக இருப்பதில்லை. §§

இது ஆசியாவில் நன்றாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளதால், முக்தியை நோக்கி வழிநடத்தி செல்லும் தர்மத்தின் பாதையை காண்பித்து மற்றும் வழிகாட்டி, நமக்குள் ஒருவராக இருக்கும் குருமார்களை, பக்தி நிறைந்தவர்கள் அதிக மரியாதை செலுத்துகிறார்கள். இந்து பாரம்பரியத்தில் குருவின் பங்கு பற்றி குருதேவா மேலும்:§§

ஒரு பாரம்பரிய சைவ குடும்பத்தில், தங்களது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் முதல் ஆசிரியர்கள் அல்லது குருக்களாக விளங்கி கலை, அறிவியல், மருத்துவம் மற்றும் பொதுக்கல்வியை புகட்டும் அடுத்த குருவிடம் அனுப்ப தங்களது குழந்தைகள் போதுமான முதிர்ச்சி பெறும் வரை உதாரணம், விளக்கம் மற்றும் அறிவுரை மூலமாக பாடம் புகட்டுகிறார்கள். ஒரு சற்குருவை தங்களுக்கு வழிகாட்டியாக கொண்டுள்ள குடும்பங்கள், அதிக திறமை மற்றும் சமய ஈடுபாட்டுடன் இருக்கும் இளைய மகனின் வாழ்க்கை எவ்வாறு முதிர்ச்சி பெறுகிறது என்பதை பொறுத்து, அந்த சற்குருவின் ஆசிரமத்திற்கு செல்ல, சமயம் பற்றி ஆய்வு செய்து கற்றுக்கொள்ள மற்றும் எதிர்காலத்தில் ஒரு சந்நியாசி அல்லது குடும்ப பண்டிதராக தகுதி பெறுவதற்காக தேர்ந்தெடுப்பார்கள். இந்த விவகாரத்தில், முதல் குருமார்களாக இருக்கும் பெற்றோர்கள் தங்களது மகனின் கவனத்தை முழுவதுமாக இரண்டாவது குருவாக இருக்கும் சற்குருவை நோக்கித் திருப்புகிறார்கள், மற்றும் அப்போதிலிருந்து அந்த சற்குரு அந்த மகன் மற்றும் அவனின் பெற்றோர்களின் கண்களுக்கும் தாய் தந்தையராக காட்சி அளிக்கிறார். §§

ஒரு சற்குரு தனது சிந்தனையை இன்னொரு நபருக்கு வழங்க, நிறைய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டியது இல்லை; ஆனால் சிஷ்யர்கள் திறந்த மனதுடன் இருக்கவேண்டும் மற்றும் அவர்களை திறந்த மனதுடன் வைத்திருக்க வேண்டும். சிந்தனையின் சிறிய பகுதி ஒரு நுண்ணிய இழை, ஒரு மெல்லிய நூலை போன்று, சற்குருவிடம் இருந்து சீடனை நோக்கி, எளிதில் உடையும் படியாக நீட்டிக்கொண்டு இருக்கும். அந்த கூட்டணி சிறிது வலுவடையும் போது, இன்னொரு இழையை சேர்க்கிறது, மற்றும் இதனால் இரண்டு, மூன்று மற்றும் இறுதியாக நான்கு நூல்கள் கிடைக்கின்றன. அவை சேவை மூலமாக மெதுவாக பின்னிப்பினைகிறது, மற்றும் குரு மற்றும் சீடனுக்கு இடையே ஒரு வலுவான இழை உருவாகிறது. மேலும் பல இழைகள் உருவாகி, இறுதியாக அவை அனைத்தும் ஒன்றாக பின்னிப் பிணைந்து, ஒரு வண்டியை இழுக்கும் அளவிற்கு ஒரு வலுவான கயிறாக மாறுகிறது. இந்தியாவில் ஒரு கோயிலுக்கு சொந்தமான ரதத்தை தடித்த கயிறுகளை கொண்டு இழுக்கப்படுவதை பார்த்து இருப்பீர்கள். அதுவே குரு-சீடன் உறவின் முடிவான குறிக்கோளாக விளங்குகிறது. §§

குரு மற்றும் சீடனுக்கு இடையே ஏற்படும் தொடர்பு வாயிலாக, பரம்பரை உணர்வு மற்றும் சம்பிரதாய உணர்வு பயணிக்கிறது. அது மிகவும் ஆழமாக செல்லும் தகவல்களை உருவாக்கவல்லது. அவை அறிவுணர்வில் இருந்து திசை திரும்பாமல், அந்த தகவல் மனிதனின் உள்ளத்தில் ஆழமாக பதிகிறது. குருவிற்கும் சீடனுக்கும் இடையில் பல இழைகள் ஒன்றாக பிணைக்கப்படுகின்றன, மற்றும் இறுதியில் நமக்கு கிடைக்கும் ஒரு உறுதியான கயிற்றை, இரண்டு நபர்கள் எதிருக்கு எதிராக இருந்து இழுத்தாலும் அறுக்கவோ அழிக்கவோ முடியாது. அது தான் சம்பிரதாயம். அது தான் பாரம்பரியம். அது நாதர்களின் அற்புதமான சக்தியாக விளங்குகிறது. §§

சிவபெருமானிடம் இருந்து தொடங்கி, நந்திநாதா மற்றும் நந்திநாதாவிற்கு முன்பாக எண்ணற்ற சற்குருக்கள் வாயிலாக, ரிஷி திருமூலருக்கு மற்றும் அவருக்கு பிந்தைய எண்ணற்ற ரிஷிகளிடம் இருந்து பெங்களூரில் இருந்த ரிஷிக்கு, மற்றும் கடைட்சாமி, செல்லப்பகுரு மற்றும் யோக சுவாமி என்று சற்குருக்களின் சிறப்பான வரிசையை பார்க்கும் போது, ஒரே ஆன்மீக சக்தி பாய்ந்து செல்வதை நாம் காண்கிறோம். அபூர்வ பரம்பரையை சேர்ந்த இந்த தனிநபர்கள் மனதில் உறுதி தளராமல் இருந்து, இறைவன் தங்களுக்கு தந்த வரமாக இன்னல்களை கருதினார்கள். மற்றும் இந்த இன்னல்கள், கரைக்க வேண்டிய சேகரித்த கர்மவினைகள் அனைத்தும், ஒரே சமயத்தில் கவனம் செலுத்துவதற்காக ஒன்று சேரும் இடமாக விளங்குகிறது. §§

இலங்கை மற்றும் இந்தியாவில், மக்கள் பொதுவாக ஒரு தெய்வீக புருஷரை சந்திக்கும் போது, அது எந்த இடம் அல்லது எந்த நேரமாக இருந்தாலும், நிலத்தில் தங்கள் முகம் முழுமையாக பதியும் படியாக நமஸ்காரம் செய்வார்கள். அவர்கள் இவ்வாறு, அவரிடம் உணரும் தெய்வீகத்தன்மை அல்லது மெய்ஞ்ஞான நிலைக்கு தங்களது பக்தியை தெரிவிப்பார்கள். அவரது ஆசிரமத்தில் வழிபடுவதற்கு வரும் போது, தங்களது மரியாதையை காண்பிக்க பழங்கள் அல்லது பூக்கள் அல்லது மற்ற படையல்களை கொண்டு வருவார்கள். இந்த வழிபடும் பாரம்பரியத்தை, சமஸ்கிருதத்தில் குருபக்தி என்பார்கள். சில சாஸ்திரங்கள் முழுமையாக குருவையும் ஆன்மீகப் பாதையில் அவரது முக்கியத்துவத்தையும் போற்றி, ஒருவர் குருவின் பீடத்திற்குள் நுழையும் போது பாடவேண்டிய பாடல்களையும் கொண்டுள்ளன. அத்தகைய பக்தியை மக்கள் வெளிப்படுத்தும் போது, தாங்கள் இந்த பூமியில் பிறவி எடுத்ததற்கான காரணம் புலன்களை மகிழ்விக்க இல்லை, செல்வத்தை சேகரிக்க இல்லை, அறிவை சேமித்து வளர்ப்பதற்கு இல்லை, வலுவான ஆணவத்தை வளர்த்துக்கொள்ள இல்லை, ஆனால் இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சூட்சும ஞானிகள், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்த விவரிக்க முடியாத முழுமையான உண்மையாக தங்களுக்குள் இருக்கும் இறைவனை உணர்வதற்காக பிறவி எடுத்தோம் என்பதை தங்களுக்கு வலுவாக நினைவூட்டிக்கொள்கிறார்கள். §§