குருமார்களின் சரித்திரங்கள்

Page 9: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/09_fm_09.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

முன்னுரை §

1972 வருடம் சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி (குருதேவா) உலகெங்கும் மேற்கொண்ட பயணத்தின் அங்கமாக இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற போது, இலங்கையில் தன்னிடம் சீடர்களாக இருந்த பலருக்கு ஒரு சுப முகூர்த்தத்தில் தீட்சையை வழங்கினார். அந்த தீட்சை பெற்றவர்களில் ஆசிரியராக இருந்த ஒருவருக்கு, சுப்பிரமுனிய ஆசிரமத்திற்கு அருகில் உள்ள அளவெட்டி கிராமத்தில் தனது மனைவி மற்றும் சிறிய வயது மகனுடன் வசித்துக்கொண்டு, யோக சுவாமியின் பரம்பரையின் குருமார்களைப் பற்றி பேச்சு வழக்கில் மற்றும் எழுத்து வடிவில் இருந்த வரலாறுகளை சேகரிக்கும் பணி வழங்கப்பட்டது. அந்த பணி மேற்கொள்ளப்பட்ட காலம் முக்கியமானதாக இருந்தது. யோக சுவாமியின் இறுதி மகாபயணம் 1964 ஆம் ஆண்டு நடந்தது, மற்றும் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களின் மனதில் நினைவுகள் பசுமையாக இருந்தன. அவர்கள் தங்களது குருவின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யவேண்டிய தேவையை உணர்ந்ததால், பரிச்சயமில்லாத புதியவர்கள் மீது தங்களுக்கு இருந்த அவநம்பிக்கையை தவிர்த்து, தங்களது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்கள். இந்த தருணத்தில் அவர்களின் நினைவுகளை சேகரிப்பது முக்கிய பணியாக இருந்தது, ஏனென்றால் அது யோக சுவாமியின் வாழ்க்கை மற்றும் போதனைகள் பற்றிய நம்பத்தகுந்த தகவலை உறுதி செய்தது. அதற்கு மாறாக பல வருடங்கள் காத்திருந்தால், ஒரு முழுமையற்ற வரலாறு மற்றும் மறக்கப்பட்ட கதைகளுக்கு வழி வகுக்கும். §§

பல வருடங்களுக்கு முன்பாகவே யோக சுவாமி தனது சீடர்களிடம், “எனது வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர் வந்துக்கொண்டு இருக்கிறார். அவர் வெள்ளை நிற உடலுடன் இருக்கிறார், மற்றும் அவர் எனது கதையை சொல்ல இங்கே வந்துக்கொண்டு இருக்கிறார்,” என்று கூறியதாக ஒரு வருடம் அங்கே தங்கியிருந்த போது தெரிய வந்தது. ஒரு சமயம் யாழ்ப்பாணத்திற்கு, ஒரு ஆங்கிலேயர் வந்த போது, சீடர்கள் சுவாமியிடம் விரைந்து சென்று, “இதோ உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர் வந்து விட்டார்,” என்று கூறினர். “இல்லை, அவர் சிறிது காலம் கழித்து வருவார்,” என்று யோக சுவாமி சுருக்கமாக பதில் அளித்தார். அந்த பக்தன் அளவெட்டியில் தங்கியிருந்த போது, அந்த ஊரில் வாழும் ஒரு அமெரிக்க பள்ளி ஆசிரியர் தான் யோக சுவாமி கூறிய நபர், என்று குறிப்பிடும் கனவுகளை பல கிராமவாசிகள் கண்டனர். இந்த செய்தி யாழ்ப்பாணம் தீபகற்பம் முழுவதும் பரவியது. சுவாமியின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் ஆசிரியரின் எளிமையான வீட்டிற்கு, பார்வையாளர்கள் ஒவ்வொருவராக வந்து, இலங்கையில் தர்மத்தின் தலைவனாக இருந்த அவர்களது குரு, மற்றும் அவரது குருவான, செல்லபசுவாமி மற்றும் அவரது குருவின் குருவான கடையிற்சுவாமி ஆகியோரின் கதைகளை பகிர்ந்துக்கொண்டனர். அந்த ஆசிரியர் ஒரு பாயில் அமர்ந்துக்கொண்டு, நூற்றுக்கணக்கான கதைகளை கவனமாக எழுதிக்கொண்டார். பின்னர் அவர் அதனை உள்ளிருக்கும் சிப்பாய்கள் (Soldiers within) என்ற தலைப்பில், அதனை 120 பக்கங்களைக் கொண்ட ஒரு கையெழுத்துப் பிரதியாக வடிவமைத்து, அமெரிக்காவிற்கு திரும்பி குருதேவாவிடம் சமர்ப்பித்தார். §§

இந்த புத்தகம் அந்த கையெழுத்துப் பிரதியின் பக்கங்களுடன் தொடங்குகிறது. உண்மையில் உள்ளிருக்கும் சிப்பாய்கள், பல வருடங்களுக்கு மடத்திற்குள் வாசிக்கப்பட்டு, குறிப்பிட்ட சில பக்தர்களுடன் மட்டுமே பகிரப்பட்டது. இது வரையில் அந்த பிரதி அச்சிடப்படாமல் இருந்தது. இதற்கு இடைப்பட்ட காலத்தில், மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ளுமாறு குருதேவா தனது மடத்துறவிகளிடம் கேட்டுக்கொண்டார். நாங்கள் பேச்சு வழக்கில் இருந்த வரலாறுகள் மற்றும் எழுத்து வடிவில் இருந்த வாழ்க்கை வரலாற்று விவரங்களை சேகரித்து, தேவைப்படும்போது தமிழ் சான்றோர்களுடன் ஆலோசித்து, அதனை தமிழ் மொழியில் இருந்து மொழிபெயர்க்கவும் செய்தோம். இறுதியாக நாங்கள் அந்த தகவல்களை, இந்த பெரிய புத்தகத்தில் ஒன்று திரட்டினோம். 1998 ஆம் ஆண்டு, குருதேவா அதனை ஒவ்வொரு வரியாக மறு ஆய்வு செய்ய, மடத்துறவிகளை உள்ளடக்கிய தனது தொகுத்து அமைக்கும் குழுவுடன் அமர்வுகளை நடத்தினார். அது 400 பக்கங்களைக் கொண்ட ஒரு பூர்வாங்க பதிவாக இருந்தது, மற்றும் அதில் அவரது சொந்த வாழ்க்கை வரலாறு சேர்க்கப்படவில்லை. §§

ஒரு அறையில் அமர்ந்திருக்கும் மக்கள் வழியாக, ஒரு செய்தியை அனுப்பிப்பாருங்கள். முதலாவதாக சொல்லப்பட்ட செய்திக்கும், இறுதியாக வெளிவந்த செய்திக்கும் இடையே இருக்கும் மாற்றத்தைக் கண்டு வியப்பீர்கள். அதைப்போலவே, நிஜவாழ்கையில் இருக்கும் சம்பவங்களை மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதால், அது இயல்பாக மாற்றமடைந்து, இறுதியாக உருகுலைகிறது. ஆனால் பெரும்பாலான வரலாறு, இந்த முறையில் தான் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதை நம்மால் முழுமையாக நம்பமுடியாது என்றாலும், அது தான் பெரும்பாலும் நம்மிடம் இருக்கிறது. ஏழு சூட்சும ஞானிகளின் இந்த வாழ்க்கை வரலாறு, இந்த புத்தகத்தின் அடித்தளமான அவர்களது நூல்களை கொண்டுள்ளது. அதனுடன் அவர்களது சமகாலத்தவர்கள் எழுதிய கதைகளும் இருக்கின்றன, மற்றும் அவற்றில் சில கதைகள் முழுமையாக இல்லை. ஆனால் அவை பேச்சு வழக்கில் இருந்த கதைகள். இது இந்த புத்தகத்தின் பதிப்பாளர்கள் சந்தித்த, ஒரு முக்கியமான மற்றும் நிரந்தர பிரச்சனையாக இருந்தது. §§

நாங்கள் நூற்றுக்கணக்கான மூலங்களை பல வருடங்களுக்கு ஒப்பீடு செய்து, வரலாற்று சிறப்புமிக்க தகவல்களுடன் பொருத்தத்தை உறுதி செய்ய கடுமையாக உழைத்தோம். அதிலும் குறிப்பாக, புத்தகத்தில் இருக்கும் முந்தைய காலத்து குருமார்களான மகரிஷி நந்திநாதா, ரிஷி திருமூலர் மற்றும் இமயமலையில் இருந்து வந்த பெயர் தெரியாத ரிஷி பற்றி பதிவு செய்யப்பட்ட தகவல்கள் கிடைப்பது மிகவும் அரிது. உதாரணத்திற்கு திருமூலரின் வரலாறு பற்றி மேலோட்டமாக, பழங்கால பெரியபுராணம் மற்றும் அவரது திருமந்திரத்தில் இருக்கும் திருமூலரின் சில மறைபுதிரான சுயசரிதை குறிப்புக்களில் இருந்து மட்டுமே பெரும்பாலும் பெறப்பட்ட தகவலின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. §§

அந்த பிரிவுகளில் இருக்கும் வரலாற்று இடைவெளிகளை நிரப்புவதற்காக, வரலாற்றில் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு மறைந்து இருக்கும் உயிர்களுக்கு, வெளிச்சம் மற்றும் மதிப்பை வழங்குவதற்கு, நாங்கள் ஒரு அலங்கார பாணியை கையாண்டு இருக்கிறோம். இந்த புத்தகத்தில் எடுத்துரைக்கபட்டுள்ள, அந்த பழங்காலத்து குருமார்களின் கதைகள், அந்த காலத்தில் அந்த பகுதியில் இருந்த வாழ்க்கை பற்றி ஒரு நவீன வரலாற்றாசிரியரின் புரிதலின் துணையுடன், அடிப்படை வரலாற்று உண்மைகளின் அடிப்படையில், ஓரளவு கற்பனை நிறைந்த சம்பவங்களின் மறு உருவாக்கமாக விளங்குகின்றன. நமது கதை நிகழ்காலத்தை நெருங்கும் போது, அது அதிக யதார்த்தத்தை பெறுகிறது. §§

குருதேவாவின் வாழ்க்கை தொடர்பான அத்தியாயங்களுக்கு, எங்களிடம் அதிகமான வளங்கள் இருந்ததால், நிலைமை முற்றிலும் மாறுபட்டு இருந்தது. அவருடைய வாழ்க்கை வரலாற்றில் எங்களுக்கு சவாலாக விளங்கிய ஐந்து சதவீதத்தை, நாங்கள் ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்தது. அவர் தனது கதையை, தனது சொந்த வார்த்தைகளால் எடுத்துரைக்கவும் வாய்ப்பு இருந்தது. 1970 ஆம் ஆண்டில் “குரு உருவான கதை” (Making of a Master) என்ற தலைப்பில், அவர் வழங்கிய உரையின் ஒரு பகுதியை நாங்கள் குறிப்பிட்டு இருந்தோம். அதில் அவர் தனது இளமைபருவத்து சூட்சும ஞான அனுபவத்தைப் பற்றி விளக்கி இருந்தார். 1999 ஆம் ஆண்டு, அலாஸ்கா உட்புறதேடல் பயணம்-ஆய்வு திட்டத்தின் (Innersearch Travel-Study Program) போது, அவர் வழங்கிய ஏழு பாடங்களின் காணொளியையும் நாங்கள் எழுத்து வடிவில் பதிவு செய்துள்ளோம். அவர் இந்த திட்டத்தை தனது வாழ்நாளில் ஒவ்வொரு பத்து வருடத்திற்கு ஒரு முறை நடத்தினார். மடத்தில் இருந்த பெட்டகங்களில், அவரது சிறு வயது தகவல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவரது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், பழைய கடவுச்சீட்டுக்கள், பத்திரிகைத் துணுக்குகள் மற்றும் மற்ற ஆவணங்கள், குழந்தை பருவத்து புகைப்படங்கள், 1940 களின் இறுதியில் இலங்கையில் இருந்து அவர் எழுதிய கடிதங்கள், மற்றும் அந்த நாட்டில் அவரது சுற்றுப்பயணம் தொடர்பான நிகழ்வுகள் பற்றி, ஒரு கண்காணிப்பாளரின் கண்ணோட்டத்தில் அவருக்கும் அவரது மடத்துறவிகளுக்கும் எழுதப்பட்ட கடிதங்களை நாங்கள் ஆய்வு செய்தோம். அந்த காலத்தில் குருதேவா தனது கைப்பட எழுதிய குறிப்புகள் மிகவும் முக்கியமானதாக இருந்தன. §§

அவர் போதனைகளை வழங்கத் தொடங்கிய காலத்தில் ஆரம்பித்து, அவரது வாழ்க்கையின் கதை அமைப்பை வடிவமைக்க, அவரது மடத்துறவிகள் பல வருடங்களாக மாத வாரியாக பாதுகாத்து வந்த, ஒரு விரிவான சம்பவப்பட்டியல், மற்றும் அவருடன் வாழ்ந்த மற்றும் கல்விகற்றவர்களின் தனிப்பட்ட சான்றுரைகளை ஆலோசித்தோம். உட்புறதேடல் திட்டத்தின் ஆரம்பக் காலத்தில் குறிப்பிடும்படியாக இருந்த பல சம்பவங்கள் பற்றிய தகவல்கள், அதில் பங்குபெற்றவர்களின் நாட்குறிப்பில் இருந்து பெறப்பட்டன. எங்களது இந்துயிசம் டுடே பத்திரிகையின் ஏப்ரல்/மே/ஜூன் 2002 நினைவக பதிவில் இருந்து, குருதேவாவின் வாழ்க்கை பற்றிய மற்ற பாகங்கள் பெறப்பட்டன. ஆனால் சம்பவப்பட்டியலில் இருந்த சுருக்கமான தகவல்கள் மற்றும் குருதேவாவின் மடத்துறவிகள் அரைகுறையாக வெளிப்படுத்திய நினைவுகள் காரணமாக வரலாற்றில் இருந்த இடைவெளிகள், பல கதைகள் சொல்லப்படவேண்டி இருப்பதை தெரிவித்தன. அதனால் இந்த புத்தகம் நிறைவு பெறும் வரை, குருதேவாவின் தொகுத்து அமைக்கும் குழுவில் இருந்த மடத்துறவிகள், 2007 வருடத்தின் தொடக்கத்தில் இருந்து ஐந்து வருடங்களுக்கு, தங்களது மற்ற வேலைகளை தவிர்த்து, அந்த கதைகளை எழுதுவதில் மற்றும் இந்த நவீன யுகத்தின் ரிஷியின் வாழ்க்கை பற்றிய முதன்மையான முழு விவரத்தையும் வடிவமைப்பதில் ஈடுபட்டனர். §§

போதனைகள் மற்றும் கதைகளை தெரியப்படுத்தும் திறமை கலைப்படைப்பிற்கு இருப்பதால், குருதேவா அதன் பயன்பாட்டிற்கு அதிக மதிப்பு அளித்தார். அதை கருத்தில் கொண்டு கதைகளுக்கு உணர்ச்சியூட்டுவதற்கும், வெகு சிலரால் மட்டுமே பார்க்கப்பட்ட இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தத்ரூபமாக காண்பிப்பதற்கும், இந்த புத்தகத்தில் பரவலாக ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த ஓவியங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் திருமயிலையைச் சேர்ந்த திரு. எஸ். ராஜம் (1919-2009) அவர்களின், அற்புதமான படைப்புக்கள் ஆகும். அவருக்கு இயற்கை தந்த வரமாக இசை விளங்கினாலும், அவரது கலையுணர்வும் சிறப்பாக இருந்ததது, மற்றும் அது சுத்தமான தென்னிந்திய பாணியை அடிப்படையாகக் கொண்டு ஒரு பிரத்யேக பாங்கில் உருவாக்கப்பட்டு இருந்தது. அவர் அதை தனது வழிபாடாகவும், தன்னை ஒரு அழகுணர்வுள்ள துறவியாகவும் கருதினார். அதனால் இந்த பக்கங்கள் வெளிப்படுத்துவதைப் போல, துறவிகளான எங்களுடன் சிறப்பாக பணிபுரிய வழிவகுத்தது. மற்றவர்கள் வழக்கமாக கோயிலுக்கு செல்லும் போது, அவர் ஓவியம் தீட்ட பயன்படும் தனது கித்தான் துணியில், ஆன்மீகம் தொடர்பாக ஏதாவது வரையவேண்டும் என்பதற்காக, கோயிலுக்கு சிறிது நேரம் கழித்து செல்வார். இந்த புத்தகத்திற்காக ஓவியர் ராஜம், ஐம்பத்தி ஆறு கித்தான் துணிகளை உருவாக்க, சற்றே இருள் சூழ்ந்த இரண்டு அடுக்கு கலைக்கூடத்தில் 2002 முதல் 2003 வரை தினமும் பதினான்கு மணி நேரம் வரை தனது சித்திரம் தாங்கும் பலகையில் வேலை செய்து வந்தார். அந்த கித்தான் துணி ஒவ்வொன்றும் பல்வேறு கதைகளை சித்தரித்தன. அவரது தூரிகைக்கு ஹவாயில் இருக்கும் கவாய் இந்து மடத்தில் இருந்து சந்நியாசி தொகுப்பாளர்களான நாங்கள் வழங்கிய விளக்கங்கள், புகைப்படங்கள் மற்றும் விளக்கப்படங்கள் வழிகாட்டியாக விளங்கின. அந்த சித்திரத்தில் வெளிப்பட்ட படைப்பாற்றல் மற்றும் கலாச்சார நுணுக்கங்கள் அனைத்தும் அவருக்கு சொந்தமானவை §§

நீங்கள் வாசிக்கும் இந்த புத்தகத்தை நிறைவு செய்ய சுமார் முப்பத்தி எட்டு வருடங்கள் எடுத்துக்கொண்டாலும், அது ஒரு முதல் பதிப்பாக இருந்தது. மற்றும் முதல் பதிப்பு என்றுமே முழுமையாக இருப்பதில்லை. எதிர்கால பதிப்புகள் முழுமையாக மற்றும் குறையின்றி இருக்க கூடுதல் கதைகள், புகைப்படங்கள், திருத்தங்கள் மற்றும் யோசனைகள் வரவேற்கப்படுகின்றன. உங்களது கதைகள் மற்றும் திருத்தங்களை sadasivanatha@hindu.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். www.himalayanacademy.com என்கிற எங்கள் இணையத்தில், இந்த புத்தகம் PDF மற்றும் மின்-புத்தக வடிவில் கிடைக்கிறது. §§