Page 68: URL
https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/68_glossary_09.html
சற்குருமார்களின் சரித்திரங்கள்
சொற்களஞ்சியம்
ஆதீனம் (adheenam): தென்னிந்தியாவின் சைவ சித்தாந்த முறைப்படி அமைந்து இருக்கும் ஒரு சைவ இந்து மடம் மற்றும் கோயில் வளாகம். குரு மகாசன்னிதானம் அல்லது ஆதீனகர்த்தார் என்று ஆதீனத்தின் தலைவர் அழைக்கப்படுகிறார். §
abhisheka(m): अभिषेक “Sprinkling; ablution.” அபிஷேகம்: “புரோக்ஷனம்; நீராட்டுதல்.” நீர், தயிர், தேன், நெய், பன்னீர் போன்றவற்றால் தெய்வ விக்ரகங்களுக்கு சடங்குகளுடன் நீராட்டுவதை குறிக்கிறது. ஆகம சாசனத்தில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு விசேஷமான பூஜையின் வடிவம். மேலும் சமய மற்றும் அரசியல் விழாக்களின் தொடக்கம் மற்றும் மற்ற சுப நிகழ்ச்சிகளிலும் அபிஷேகம் நடைபெறுகிறது. §
முழுமை (Absolute): ஆங்கில சிற்றெழுத்து (absolute): உண்மையாக, எதையும் சாராத, இன்னொன்றுடன் ஒப்பீடாக இல்லாத நிலை. ஆங்கில பெரிய எழுத்து (Absolute): முடிவான பரம்பொருள், வெளிப்படாமல், மாறாமல் எல்லாம் கடந்து இருக்கும் பரசிவம். மேலும் தகவலுக்கு: பரசிவம். §
ஆச்சார்யர் (āchārya): आचार्य அதிக மதிப்பிற்குரிய ஆசிரியர். §
ஆன்மீகம் சார்ந்தது (actinic): ஒளியை உருவாக்கக்கூடியது. புனிதமான, மாசற்ற நிலையில் இருக்கும் உணர்வை சார்ந்தது. ஒளி முதல் முறையாக தோற்றமளிக்கும் சுத்த மாயா என்கிற உணர்வின் அடிப்பகுதி, சக்தியின் அடிப்படை அளவுகள், புனிதமான பிந்துவின் மிகவும் தூய்மையான மெய்ஞ்ஞான உலகை விவரிக்கிறது. மெய்ஞ்ஞான மனதில் இருந்து வரும் ஒரு சக்தியாக ஆன்மீக சக்தி இல்லாமல், மெய்ஞ்ஞான மனமாக இருக்கிறது. இது பொதுவாக உயிர், ஆன்மா என்று அழைக்கப்படுகிறது, மற்றும் இதை மனிதனின் கண்களில் காணலாம்; மனிதன் காந்தத்தன்மை கொண்ட தனது தூல உடலை விட்டு விலகி செல்லும் போது, இந்த சக்தி மனிதனை விட்டு செல்கிறது. ஒளி தண்ணீரில் இருந்து மாறுபட்டு, அதன் வழியாக பிரகாசிப்பதை போல, ஆன்மீக சக்தி காந்த சக்தியின் எதிர்மறையாக இல்லாமல், அதிலிருந்து மாறுபட்டு இருக்கிறது. காந்த சக்தி வழியாக ஆன்மீக சக்தி சுதந்திரமாக பாய்ந்து செல்கிறது. மேலும் தகவலுக்கு: கோசம்.§
ஆனந்தமய கோசம் (actinic body): ஆன்மாவின் உடல் அல்லது காரண சரீரம். மேலும் தகவலுக்கு: ஆன்மா. §
ஆன்மீக காந்த சக்தி (actinodic): இது காந்த மற்றும் ஆன்மீக சக்தி கலந்து, அனாஹாத சக்கரத்தின் தொடர்ச்சி, மற்றும் ஓரளவிற்கு விசுத்த சக்கரத்தின் தொடர்ச்சியாக இருக்கும் சுத்தசுத்த மாயாவின் உணர்வை விளக்குகிறது. மேலும் தகவலுக்கு: ஆன்மீக சக்தி, காந்த சக்தி, தத்துவம்.§
advaita: अद्वैत “Non-dual; not twofold.” அத்வைதம்: இருமை அல்லாதது அல்லது ஒருமைவாதம். முடிவான பரம்பொருள் ஒரு அடிப்படை சாரம் அல்லது இறைவனை கொண்டுள்ளது என்ற கோட்பாடு. இது துவைதம், இருமை வாதத்தின் எதிர்பதம் ஆகும். மேலும் தகவலுக்கு: துவைதம்-அத்வைதம், வேதாந்தம்.§
Advaita Ishvaravada (Advaita Īśvaravāda): अद्वैत इश्वरवाद “Nondual and Personal-God-as-Ruler doctrine;” monistic theism. அத்வைத ஈஸ்வரவாதம்: ஒருமைவாத கடவுள் நம்பிக்கை. எல்லா பொருட்கள் மற்றும் தனிப்பட்ட தெய்வத்தின் யதார்த்தத்தில் இருக்கும் முடிவான ஒற்றுமை பற்றி எடுத்துரைக்கும் வேதங்கள் மற்றும் சைவ ஆகமங்களின் கோட்பாடு ஆகும்.§
Advaita Siddhanta (Advaita Siddhānta): अद्वैत सिद्धन्त “Nondual perfect conclusions.” அத்வைத சித்தாந்தம்: ஆகமங்களில் தொகுக்கப்பட்டுள்ள இந்த சைவ தத்துவம் உட்புற மற்றும் வெளிப்புற வழிபாடு, யோக சாதனாக்கள் மற்றும் தபஸ் ஆகியவற்றிற்கு வலுவான முக்கியத்துவம் வழங்கி இறைவன், ஆன்மா மற்றும் உலகின் அத்வைத அடையாளத்தை தனது மையமாக கொண்டுள்ளது. மெய்கண்டார் மற்றும் அகோரசிவாவின் பன்மைவாத சித்தாந்தத்தில் திருமூலரின் சிந்தனையை பிரித்து காட்டுவதற்கு தென் இந்தியாவில் அத்வைத சிந்தாந்தம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. §
Advaita Vedanta (Advaita Vedānta): अद्वैत वेदान्त “Nondual end (or essence) of the Vedas.” அத்வைத வேதாந்தம்: “வேதங்கள் குறிப்பிடும் இருமை அல்லாத முடிவு (அல்லது சாரம்).” இது பொதுவாக இந்தியாவின் பல்வேறு அத்வைத தத்துவங்களையும், மிகவும் முக்கியமாக உபநிடங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உரைகளில் இருந்து தோன்றிய ஆதி சங்கரரின் அத்வைத தத்துவப் பிரிவையும் குறிப்பிடுகிறது. §
Agama (Āgama): आगम The tradition; ஆகமம்: “தொன்றுதொட்டு" வந்த பாரம்பரியம். ஒரு மிகப்பெரிய சமஸ்கிருத சாஸ்திரங்களின் தொகுப்பாக விளங்கும் இதுவும், வேதங்களும் ஸ்ருதி (வெளிப்படுத்தப்பட்ட சாஸ்திரம்) என்று போற்றப்படுகின்றன. இது சடங்கு, யோகம் மற்றும் கோயில் கட்டுமானத்திற்கு ஒரு முக்கிய மூலமாகவும் ஆணையாகவும் விளங்குகிறது. §
Agastya: अगस्त्य அகத்திய முனிவர். பதினெட்டு புகழ்பெற்ற சைவ சித்தர்களில் ஒருவர். இவர் தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான அகத்தியத்தை இயற்றியவர். அவர் வட இந்தியாவில் இருந்து தென் இந்தியாவிற்கு வந்ததாக வரலாறு கூறுகிறது. அவருடைய பெயர் மகாபாரதம், இராமாயணம் மற்றும் புராணங்களில் தோன்றுகிறது மற்றும் பழங்கால இந்தோனேசியர்களும் அவரை அறிந்து இருந்தார்கள். §
agni: अग्नि “Fire.” அக்னி. 1) பஞ்சாபூதங்களில் ஒன்று. 2) யாகம், அக்னிகரக, ஹோமம் மற்றும் ஹவனம் என்று அழைக்கப்படும் வைதீக சடங்கு மூலம் அக்னி பகவான் ஆவாகனம் செய்யப்படுகிறார்; இந்த பிரார்த்தனைகள் மற்றும் படையல்களை ஏற்றுக்கொள்ளும் தெய்வ தூதுவர், அதனை சொர்க்கலோகத்திற்கு தெரிவிக்கிறார். §
ahimsa (ahiṁsā): अहिंसा “Noninjury,” nonviolence or nonhurtfulness. அகிம்சை: துன்புறுத்தாமல் இருத்தல் அல்லது இம்சை செய்யாமல் இருத்தல். மற்றவர்களுக்கு உடல், மனம் அல்லது உணர்ச்சி ரீதியாக துன்புறுத்தாமல் இருத்தல். மேலும் தகவலுக்கு: இயமம்-நியமம்.§
ajna chakra ( ājñā chakra): आज्ञाचक्र “Command wheel.” ஆக்ஞா சக்கரம்: மூன்றாவது கண்ணின் மையம். மேலும் தகவலுக்கு: சக்கரம்.§
akasha (ākāśa): आकाश “Space.” The sky. ஆகாசம்: தடையில்லாத திறந்தவெளி. பஞ்ச பூதங்களாக இருக்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாசத்தில் மிகவும் நுணுக்கமானதாக இருக்கிறது. அனுபவ ரீதியாக, இது உட்புற மற்றும் வெளிப்புற பிரபஞ்சங்களில் வியாபித்து இருக்கும் புனிதமான பரவெளி அல்லது சூட்சுமமான பிளாஸ்மா (plasma) வாயுவாக இருக்கிறது. எல்லா நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டு தீர்க்கதரிசிகளால் தெரிந்துக்கொள்ளும் வகையில் தற்போது உள்பொருளாக இருப்பது அனைத்தையும், எதிர்காலத்தில் இருக்கப்போகும் அனைத்தையும், அருள்ஞான ரீதியாக மனம், மெய்ஞ்ஞான நிலைகள் தக்க வைத்து இருக்கின்றன. §
எங்கும் வியாபித்து இருக்கின்ற (all-pervasive): எங்கும் வியாபித்து இருப்பது அல்லது பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் இருப்பது. §
anahata chakra ( anāhata chakra): अनाहतचक्र “Wheel of unstruck [sound].” அனாஹத சக்கரம். “ஒலிக்கப்படாத சக்கரம்.” இதயத்தின் மையம். மேலும் தகவலுக்கு: சக்கரம்.§
ananda (ānanda): आनन्द “Bliss.” ஆனந்தம். உணர்ச்சிகளை பரவசமாக வெளிப்படுத்தி அல்லது உணர்ச்சிகளை தனக்குள் கட்டுப்படுத்தி, இறைவனின் உணர்வு அல்லது ஆன்மீக அனுபவத்தால் கிடைக்கும் தூய மகிழ்ச்சி. §
aniconic: “Without likeness; without image.” அருவுருவம்: ஒரு தெய்வத்தின் சிலையை குறிப்பிடும் போது, அருவுருவம் என்பது மனிதனை போன்ற வடிவம் இல்லாமல் அல்லது உருவ ஒற்றுமையை முயற்சிக்க முடியாத ஒரு சின்னத்தை குறிப்பிடுகிறது. இதற்கு “இறைவனின் வடிவமாக இருக்கும்" சிவலிங்கத்தை ஒரு உதாரணமாக குறிப்பிடலாம். மேலும் தகவலுக்கு: மூர்த்தி, சிவலிங்கம்.§
anjali mudra ( añjali mudrā): अञ्जलिमुद्रा “Reverence gesture.” அஞ்சலி முத்திரை. இது பிரணாம அஞ்சலி என்றும் அழைக்கப்படுகிறது. மரியாதை மற்றும் வாழ்த்துக்களை தெரிவிக்கும் இந்த முத்திரையில், இரண்டு கைகளும் சிறிது குவித்து ஒன்று சேர்த்து வைக்கப்பட்டு, வழக்கமாக “நமஸ்காரம்" என்றும் வணக்கம் தெரிவிக்கப்படுகிறது. அஞ்சலி முத்திரையில் ஒருவர் தனக்கு சமமானவர்களுக்கு நெஞ்சின் அருகில் வைத்துக்கொண்டும், குருவிற்கு கண்களுக்கு அருகில் வைத்துக்கொண்டும், இறைவனுக்கு தலைக்கு மேல் வைத்துக்கொண்டும் பல்வேறு வடிவங்களில் வணக்கம் செலுத்துகிறார். ஒரு யாசகன் உணவை யாசிப்பதைப் போல, அல்லது கோயிலில் ஒரு பக்தன் இறைவனின் அருளை வேண்டுவதை போல, இரண்டு கைகளையும் அருகில் விரித்து வைத்து இருப்பது, இந்த முத்திரையில் ஒரு வடிவமாக விளங்குகிறது.§
antyeshti (antyeshṭi): अन्त्येष्टि “Last rites.” அந்த்யேஸ்டி. “இறுதி சடங்குகள்.” ஈமச்சடங்கு. §
anugraha shakti (anugraha śakti): अनुग्रहशक्ति “Graceful or favoring power.” அனுகிரக சக்தி. வெளிப்படுத்தும் அருள். இது ஆணவம், கர்மவினை மற்றும் மாயை என்று மும்மலங்களில் இருந்து ஆன்மாவை விடுவித்து, இறுதியாக முக்தியை வழங்கும் சிவபெருமானின் ஞானோதய சக்தியை குறிப்பிடுகிறது. அதில் குறிப்பாக, ஒரு சற்குருவிடம் இருந்து கிடைக்கும் தீட்சையாக, சக்திநிபாதமாக ஆன்மாவிற்குள் அனுகிரகம் இறக்கம் பெறுகிறது. §
arati (āratī): आरती “Light.” ஆரத்தி. “ஒளி.” ஒரு தெய்வீக புருஷர் அல்லது கோயிலில் இருக்கும் தெய்வத்திற்கு பூஜையின் போது ஒரு தட்டில் நெய், எண்ணெய் அல்லது கற்பூரத்தினால் ஏற்றிய விளக்கை காண்பிப்பது ஆரத்தி என்று அழைக்கப்படுகிறது. அது அதன் பிறகு பக்தர்களுக்கு வழங்கப்படும் போது, அவர்கள் அதை கைகளால் தொட்டு தங்கள் கண்களில் மூன்று முறை வைத்துக் கொண்டு, இறைவனின் ஆசியை பெறுகிறார்கள். ஒரு மிகவும் சிறிய பூஜை வடிவிலும் ஆரத்தி காண்பிக்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு: பூஜை.§
archana: अर्चन அர்ச்சனை: கோயில் பூசாரிகள் செய்யும் இந்த விசேஷமான, தனிப்பட்ட, சுருக்கமான பூஜையில் ஒரு பக்தருக்கு தனிப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் ஆசிகளை பெறுவதற்கு அவரது பெயர், நட்சத்திரம் மற்றும் கோத்திரம் உச்சரிக்கப்படுகின்றன. மேலும் தகவலுக்கு: பூஜை.§
ardha-Hindu: अर्धहिन्दु “Half-Hindu.” அர்த்த-இந்து: இந்து சமய நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டாலும், ஒரு இந்து சடங்கின் மூலம் முறையாக நாமகரணம் செய்துக்கொள்ளாத ஒரு சீடன். இது கிழக்கு நாடுகளில் இந்து சமயத்தில் பிறந்து இருந்தாலும், இந்து சமயம் சாராத பெயர்களை கொண்டிருப்பவர்களையும் குறிப்பிடுகிறது. §
ashrama (āśrama): आश्रम “Place of striving.” ஆசிரமம்: “முயற்சி மேற்கொள்ளும் இடம்." துறவி வசிக்கும் இடம்; வாழ்க்கையில் ஒரு நிலை. புனிதமான புகலிடம்; ஒரு சாது, மகான், சுவாமி, துறவி அல்லது குருவின் இருப்பிடம் மற்றும் அவர் சீடர்களுக்கு கல்வி கற்பிக்கும் இடம்; இங்கே வழக்கமாக மாணவர்களுக்கு தங்கும் வசதியும் வழங்கப்படும். இது வாழ்க்கையின் நான்கு நிலைகளையும் குறிப்பிடுகிறது. மேலும் தகவலுக்கு: ஆசிரம தர்மம். §
ashrama dharma (āśrama dharma): आश्रमधर्म “Laws of life development.” ஆசிரம தர்மம்: “வாழ்க்கையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் விதிகள்.” நான்கு தொடர்ச்சியான நிலைகளில் (ஆசிரமங்கள்) ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான போற்றத்தக்க வாழ்முறையில், இயற்கை மற்றும் வாழ்க்கைக்கு இடையே எந்த நிலை இணக்கத்துடன் இருக்கிறது என்பதை கண்டறிந்து உடல், உணர்ச்சி மற்றும் மனதை ஒரு மிகவும் நேர்மறையான வழியில் அவற்றின் இயல்பான சுழற்சிகளில் வளர்ச்சி அடைய அனுமதிப்பது ஆகும். பிரம்மச்சரியம், சம்சாரி 24 முதல் 48 வயது வரை, மூத்த ஆலோசகர் என்பதை குறிக்கும் வானப்பிரஸ்தம்: 48 முதல் 72 வரை; சந்நியாசம்: துறவற வாழ்க்கையை மேற்கொண்டு தனியாக ஆன்மீக நாட்டத்துடன் இருத்தல், 72 வயது முதல். §
ஆசிரமங்கள் (ashramas (āśramas)): மேலும்: ஆசிரம தர்ம. §
ashtanga yoga (ashṭāṅga yoga): अष्टाङ्गयोग “Eight-limbed union.” அஷ்டாங்கயோகம்: “எட்டு அங்கங்களைக் கொண்ட யோகம்.” ஞானோதயம் நோக்கி செல்வதற்கு பாரம்பரிய முறைப்படி இராஜ யோகம் எட்டு முற்போக்கான நிலைகளை கொண்டுள்ளது: 1) இயமம்: “கட்டுப்பாடுகள்.” நற்பண்பு மற்றும் ஒழுக்கத்துடன் வாழ்தல். 2) நியமம்: “கடைப்பிடித்தல்கள்.” உயர்ந்த பண்புகளை ஊக்குவிக்கும் சமய பயிற்சிகள். 3) ஆசனம்: “அமரும் இடம் அல்லது தோரணை.” 4) பிராணாயாமம்: “உயிர்சக்தியை கட்டுப்படுத்துதல்.” சுவாசக் கட்டுப்பாடு. 5) பிரத்யாஹார: “உள்நோக்கி திரும்புதல்.” ஒருவர் தனது உணர்வை தூல புலன்களில் இருந்து விடுவித்துக் கொள்வது. 6) தாரணா: “ஒருமுகச்சிந்தனை.” ஒருவர் தனது உணர்வின் ஓட்டத்தை வழிநடத்துதல். 7) தியானம்: “தியானம் செய்தல்.” 8) சமாதி: “உட்புறமாக கவனம் செலுத்துதல்,” “சமத்துவம், ஆழ்ந்த சிந்தனை/உணர்தல்.”§
சூட்சும உடல் (astral body): ஆன்மா அந்தர்லோகம் என்று அழைக்கப்படும், சூட்சும லோகத்தில் செயல்படும் தூல உடல் அல்லாத சூட்சும உடலை (சூட்சும சரீரம்) குறிக்கிறது. மேலும் தகவலுக்கு: ஆன்மா.§
சூட்சும லோகம் (astral plane (or world)): தொண்டையில் இருக்கும் விசுத்த சக்கரத்தில் இருந்து உள்ளங்கால்களில் இருக்கும் பாதாள சக்கரம் வரைக்கும் பரவியிருக்கும் உணர்வின் தொடர்ச்சி சூட்சும லோகம் அல்லது அந்தர்லோகம் என்று அழைக்கப்படுகிறது. சூட்சும லோகத்தில், ஆன்மா சூட்சும சரீரம் என்கிற சூட்சும உடலில் முழுவதுமாக மறைந்து இருக்கிறது. மேலும் தகவலுக்கு: லோகம், மூன்று லோகங்கள்.§
asura: असुर “Evil spirit; demon.” (Opposite of sura: “deva; God.”) அசுரன். “தீய சக்தி; அரக்கன்.” (“தேவர்கள்; இறைவனை" குறிக்கும் சுர என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம்) கீழ்நிலை சூட்சும லோகமான நரகத்தில் இருக்கும் ஒரு உயிர்சக்தி. அசுரர்கள் தூல உலகுடன் தொடர்பு கொண்டு, மக்களின் வாழ்க்கையில் பெரிய மற்றும் சிறிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். அசுரர்கள் எப்போதும் இந்த நிலையில் இருக்காமல் பரிணாம வளர்ச்சி அடைகிறார்கள். §
அசுர குணம் (asuric): ஒரு அசுரனிடம் இருக்கும் பண்பு, “ஆன்மீகம் அல்லாதது.”§
atma(n) (ātman): आत्मन् “The soul; the breath; the principle of life and sensation.” ஆத்மன்: “ஆன்மா; உயிர்மூச்சு; வாழ்க்கை மற்றும் தூல உணர்வின் கோட்பாடு.” ஆனந்தமய கோசம் மற்றும் அதன் சாரமாக (பராசக்தி மற்றும் பரசிவம்) இருக்கும் ஆன்மாவின் முழுமையை குறிக்கிறது. நாம் ஆத்மனாக இருக்கிறோம் ஆனால் நாம் தூல உடல், உணர்ச்சிகள், வெளிப்புற மனம் அல்லது ஆளுமையாக இல்லை என்பது இந்து சமயத்தில் மிகவும் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது. மேலும் தகவலுக்கு: பரமாத்துமன், ஆன்மா.§
ஆத்மார்த்த பூஜை (Atmartha Puja): மேலும் தகவலுக்கு: சைவ ஆத்மார்த்த பூஜை.§
Aum: ॐ or औम् Often spelled Om. ஓம். இந்து சமயத்தில் சூட்சுமமான சொல்லாக இருக்கும் ஓம், சமய நூல்களின் தொடக்கங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன் தொடக்க ஒலி மூலாதார சக்கரத்தில் அதிர்வை ஏற்படுத்துவதால், இது விநாயகருடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஓம் எனும் சொல் பல்வேறு இந்திய மொழிகளில், “ஆமாம், மிகவும்" அல்லது “வாழ்க" என்பதையும் குறிப்பிடுகிறது. §
ஒளி உடல் (aura): இது நுணுக்கமான சக்தியின் வண்ணமயமாக ஒளிரும் புலமாக, மனித உடலுக்குள்ளும் வெளிப்புறத்திலும் பிரகாசிக்கிறது. ஒருவரது உணர்வு, எண்ணங்கள், மனநிலைகள் மற்றும் உணர்ச்சிகளின் நிலைக்கு ஏற்ப ஒலி உடலின் நிறங்கள் மாறுகின்றன. §
Auvaiyar: ஔவையார். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் ஔவையார் என்பவர் ஒருவரல்ல ஆனால் பல்வேறு காலங்களில் ஒன்றும் மேற்பட்ட ஔவைகள் வாழ்ந்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர் என்பது தெரியவரும். அத்தகைய பெண் புலவர்களில் ஒருவர் எழுதிய ஆத்திச்சூடியை இன்றும் பள்ளிச்சிறுவர்கள் பயின்று வருகின்றனர். ஒரு ஔவை தமிழ்ச்சங்கத்தில் திருவள்ளுவரின் திருக்குறளை அரங்கேற்றம் செய்ய துணை புரிந்ததாக கூறப்படுகிறது. §
சாட்சி, விழிப்புணர்வு (awareness): தனிப்பட்ட விழிப்புணர்வு, விழிப்புணர்வு, அறிதல்; சாட்சி, “ஆன்மாவின் உட்புற கண்.” இது சமஸ்கிருதத்தில் சாக்ஷின் அல்லது சித் என்று அழைக்கப்படுகிறது. §
ayurveda (āyurveda): आयुर्वेद “Science of life.” ஆயுர்வேதம். “உயிரில் இருக்கும் விஞ்ஞானம்.” இது பழங்கால இந்தியாவை சார்ந்த மருத்துவம் மற்றும் ஆரோக்கியத்தின் ஒரு முழுமையான அமைப்பாக விளங்கி, ஆன்மீக முன்னேற்றத்தை பெறுவதற்கு நீண்ட ஆயுள் மற்றும் உடல் ஆரோக்கியம் பெறுவதை தனது இலக்காக கொண்டுள்ளது. ஒருவரது உடல் ஆரோக்கியம், வாழ்முறை மற்றும் இயல்புக்கு பொருத்தும் செய்முறைகளின் மூலம் சக்திகளை சமன் செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது. §
ஆயுர்வேதம் சார்ந்த (ayurvedic).§
Bhairava: भैरव “Terrifying.” பைரவர். இவர் காவல் தெய்வமாக கருதப்படுகிறார். அனைத்து சிவாலயங்களிலும் வடகிழக்கு திசையில் இவருக்கு தனியாக சன்னிதி இருக்கும். திரிசூலத்தை கையில் ஏந்திய படியும், நாய் வாகனத்துடனும் இவர் காணப்படுவார். மேலும் தகவலுக்கு: சிவபெருமான்.§
bhajana: भजन Spiritual song. பஜனை. தெய்வீக பாடல். தெய்வீக பாடல், ஸ்தோத்திரங்கள் மற்றும் ஸ்லோகங்களை தனியாக அல்லது குழுவினருடன் பாடுதல். §
bhakta: भक्त (Tamil: bhaktar) “Devotee.” பக்தர். வழிபாடு நடத்துபவர். தெய்வத்திடம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். §
bhakti: भक्ति “Devotion.” பக்தி. “அர்ப்பணிப்பு.” இறைவன், மகாதேவர்கள் அல்லது குருவிடம் சரண் அடைதல். பக்தி என்பது எளிமையான வழிபாட்டில் இருந்து தொடங்கி, ஆணவத்தை அழிக்கும் பிரபத்தி என்கிற முழுமையான சரணாகதி வரை பல்வேறு வடிவங்களில் இருக்கிறது. பக்தி என்பது இந்து சமயத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் உலகெங்கும் இருக்கும் யோக பள்ளிகளுக்கும் அடிப்படையாக விளங்குகிறது. §
bhakti yoga: भक्तियोग “Union through devotion.” பக்தி யோகம். ஒருவர் தனது இதயத்தில் அன்பை விழிப்படைய செய்து கடவுளின் அருளுக்கு தன்னை திறந்து கொள்ளும் நோக்கத்துடன் தெய்வீக கட்டுப்பாடுகள், வழிபாடு, பிரார்த்தனை, சுலோகங்கள் மற்றும் பாடல்களின் வழக்கம் பக்தி யோகம் என்று அழைக்கப்படுகிறது. பக்தியை இறைவன், மகாதேவர்கள் அல்லது ஒரு சற்குரு மீதும் செலுத்தலாம். பதஞ்சலியின் யோக தரிசனத்தில் (கோட்பாடு) இரண்டாவது அங்கமாக இருக்கும் நியமங்களில் (கடைப்பிடித்தல்கள்) பக்தியாக (ஈஸ்வரபிரணிதானா) சேர்க்கப்பட்டுள்ளது. §
bhashya (bhāshya): भाष्य “Talking over, discussion.” பாஷ்யம். ஒரு உரையின் மீதான கருத்து. இந்து தத்துவங்களில் பெரும்பாலானவை அடிப்படை சாஸ்திரத்தின் விளக்கங்கள் அல்லது பாஷ்யங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன. §
Bodhinatha Veylanswami (Bodhinātha Veylanswāmī): போதிநாத வேலன்சுவாமி “Lord of Wisdom, Holder of the Vel.” “ஞானத்தின் தலைவர், கையில் வேலை ஏந்தி இருப்பவர்.” தற்போது நந்திநாத சம்பிரதாயத்தின் சற்குருவாகவும், கவாய் ஆதீனத்தின் குரு மகாசன்னிதானமாக இருக்கும் இவர், 2001 ஆம் ஆண்டு சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமியால் நியமிக்கப்பட்டார். §
Brahma (Brahmā): ब्रह्मा பிரம்மா. படைப்புக் கடவுளின் பெயர். சைவர்கள் சிவபெருமானின் ஐந்து அம்சங்களில் மூன்று அம்சங்களாக பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்ரனை கருதுகிறார்கள். ஸ்மார்த்த சம்பிரதாயத்தை சேர்ந்தவர்கள் பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமானை முப்பெரும் தெய்வகளாக கருதுகிறார்கள் மற்றும் அதில் சிவபெருமான் அழிப்பவராக இருக்கிறார். இவரை பிரம்மம் (பிரம்மன்) உடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். மேலும் தகவலுக்கு: பிரம்மம், பரமேஸ்வரன். §
brahmachari (brahmachārī): ब्रह्मचारी பிரம்மச்சாரி: பிரம்மச்சரியம் என்பது தன்னடக்கத்துடன் இருந்து சாதனா, பக்தி மற்றும் சேவை உட்பட சமய அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல், சில சமயங்களில் எளிமையான விரதங்களை மேற்கொள்ளும் ஆன்மீக நாட்டமுள்ள ஒரு இளைஞரை குறிப்பிடுகிறது. இது மாணவ பருவத்தில் இருப்பவரை, 12 இருந்து 24 வயது வரை இருப்பவரை அல்லது அவருக்கு திருமணமாகும் வரை குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது. §
brahmacharini (brahmachāriṇī): ब्रह्मचारिणी பிரம்மச்சாரினி: பிரம்மச்சாரியின் பண்புகளுடன் இருக்கும் ஒரு பெண். §
brahmacharya: ब्रह्मचर्य “Divine conduct.” பிரம்மச்சரியம். திருமணத்தின் பிறகு விசுவாசமாக வாழ்வதற்கு, திருமணத்திற்கு முன்பு தனியாக இருக்கும் போது மனத்துறவுடன் காமத்தை கட்டுப்படுத்தி வாழ்வதை குறிக்கிறது. மேலும் தகவலுக்கு: இயமம்-நியமம்.§
Brahmaloka: ब्रह्मलोक பிரம்மலோகம். சஹஸ்ரஹார சக்கரத்தின் லோகம், மேலிருக்கும் லோகங்களில் மிகவும் உயர்வானது. மேலும் தகவலுக்கு: லோகம்.§
Brahman: ब्रह्मन् “Supreme Being; Expansive Spirit.” பிரம்மம், பிரம்மன். “பரமாத்துமா; விசாலமான ஆன்மா.” இது “வளர்தல், அதிகரித்தல். விரிவாக்குதல்,” என்று குறிக்கும் ப்ரிஹ் என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவானது. இது வேதங்களில் கடவுளின் பெயர் அல்லது மகாதேவரை குறிக்கிறது, மற்றும் அதில் அவர் 1) யாவும் கடந்த முழுமையாக, 2) எங்கும் வியாபித்து இருக்கும் சக்தியாக மற்றும் 3) பரமாத்துமாவாக அல்லது ஆதி ஆன்மாவாக விவரிக்கப்பட்டு இருக்கிறார். இந்த மூன்றும் சிவபெருமானின் மூன்று முழுமைகளுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. அதனால் சைவர்கள் பிரம்மன் மற்றும் சிவனை ஒரே கடவுளாக நிற்குண மற்றும் சகுண பிரம்மமாக இருப்பதாக அறிகிறார்கள். நிற்குண பிரம்மம் எனும் கடவுள் “பண்புகள் இல்லாமல்" (குணம்), உருவமில்லாமல், உணரக்கூடிய பண்புகளை அனைத்தையும் வெளிப்படுத்தும் உள்பொருள்கள் மற்றும் பராசக்தியையும் கடந்து பரபிரம்மமாக பரசிவமாக, குணங்களை முழுமையாக கடந்து இருக்கிறார். சகுண பிரம்மம், “பண்புகளுடன் இருக்கும்” கடவுள்; சிவபெருமான் தனது முழுமைகளாக இருக்கும் பராசக்தி மற்றும் பரமேஸ்வவரனாவும் மெய்ஞ்ஞானமாக, எங்கும் வியாபித்து, எல்லாம் அறிந்து, முழுமையான கருணையுடன் ஆற்றல் நிறைந்து இருக்கும் நிலை. பிரம்மம் என்கிற சொல்லை 1) பிரம்மா, படைக்கும் கடவுள்; 2) வேத நூல்களின் வர்ணனைகளைக் குறிப்பிடும் பிராமண அல்லது 3) இந்துசமயத்தின் பிராமண குலத்துடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. மேலும் தகவலுக்கு: பிரம்மா.§
Chakra: चक्र “Wheel.” சக்கரம். இது மனிதனின் ஆன்மீக உடலில் இருக்கும் நரம்பு பின்னல்கள் அல்லது விசை மையங்கள் மற்றும் உணர்வை குறிக்கிறது. தூல உடலில் அதற்கு தொடர்புடைய நரம்பு பின்னல்கள், முடிச்சுகள் மற்றும் சுரப்பிகள் உள்ளன. முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் இருந்து மண்டை ஓடு வரையும் ஏழு அடிப்படை சக்கரங்கள் அமைந்துள்ளன. முதுகுத்தண்டிற்கு அடிப்பகுதியில் மேலும் ஏழு சக்கரங்கள் உள்ளன. அவை பொறாமை, வெறுப்பு, வயிற்றெரிச்சல், குற்ற உணர்ச்சி, வேதனை மற்றும் உள்ளுணர்வின் இருப்பிடங்களாக இருக்கின்றன. அவை கீழ்நிலை லோகம் அல்லது நரகம் அல்லது பாதாளத்தில் அங்கம் வகிக்கின்றன. இவ்வாறு மொத்தம் பதினான்கு பிரதான சக்கரங்கள் உள்ளன. மேலிருக்கும் ஏழு சக்கரங்கள் பற்றிய விவரம்: 1) மூலாதாரம் (முதுகுத்தண்டின் அடிப்பகுதி): நினைவாற்றல், காலம் மற்றும் பரவெளி; 2) ஸ்வாதிஷ்டானா (தொப்புளுக்கு கீழே): காரணம்; 3) மணிப்புரா (சூரிய பின்னல்): மனோபலம்; 4) அனாஹத (இதயத்தின் மையம்): நேரடி அறிவெழுச்சி; 5) விசுத்த (தொண்டை): தெய்வீக அன்பு; 6) ஆக்ஞா (மூன்றாவது கண்): தெய்வீகப் பார்வை; 7) சஹஸ்ரஹார (உச்சந்தலை): ஞான திருஷ்டி, தெய்வ பக்தி. கீழிருக்கும் ஏழு சக்கரங்கள் பற்றிய விவரம் 1) அதள (இடுப்பு): பயம் மற்றும் காமம்; 2) விதள (தொடை): பொங்கி எழும் கோபம்; 3) சுதள (முழங்கால் முட்டிகள்): பழிவாங்கும் பொறாமை; 4) தளாதள (காலின் பின்பகுதி): நீடித்த மனக்குழப்பம்; 5) ரசாதள (கணுக்கால்): சுயநலம்; 6) மஹாதளம் (கால்கள்): மனசாட்சி இல்லாத நிலை; 7) பாதாள (உள்ளங்கால்கள்): கொலை மற்றும் தீய எண்ணம். மேலும் தகவலுக்கு: நரகலோகம். §
charya (charyā): चर्या “Conduct.” சரியை. தொண்டு மற்றும் நல்லொழுக்கம். மேலும் தகவலுக்கு: பாதம், சைவ சித்தாந்தம்.§
charya marga (charyā mārga): चर्यामार्ग சரியை மார்கம் : சரியை பாதத்தை குறிக்கும் இன்னொரு சொல். மேலும் தகவலுக்கு: சரியை பாதம்.§
charya pada (charyā pāda): चर्यापाद “Conduct stage.” சரியை பாதம்: தொண்டு செய்து நல்லொழுக்கத்தை வளர்த்துக் கொள்ளும் நிலை. எதிர்கால ஆன்மீக முன்னேற்றம் அனைத்திற்கும் அடிப்படையாக விளங்குகிறது. மேலும் தகவலுக்கு: பாதம்.§
Chellappaswami (Chellappaswāmī): செல்லப்பசுவாமி “Wealthy father.” தனிமையில் வாழ்ந்த சித்தர் மற்றும் நந்திநாத சம்பிரதாயத்தை சேர்ந்த கைலாச பரம்பரையின் 160 ஆவது சற்குரு. அவர் இலங்கையின் யாழ்ப்பாண தீபகற்பத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அருகே ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த இடத்தில் தற்போது ஒரு சிறிய சமாதி இருக்கிறது. அவரது சீடர்களில் ஒருவரான சிவயோக சுவாமிக்கு அவர் ஐந்து வருடங்கள் தீவிரமாக பயிற்சி அளித்து, தனது வாரிசாக நியமித்தார். மேலும் தகவலுக்கு: கைலாச பரம்பரை, நாத சம்பிரதாயம்.§
Chettiar: செட்டியார். தென்னிந்தியாவை சேர்ந்த செட்டியார் சமூகம், பெரும்பாலும் வணிகம் மற்றும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். வர்ண தர்மத்தில், அவர்கள் வைஷ்ய குலத்தை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில 14 % மக்கள் செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள். அதில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மற்றும் சேனைத்தலைவர் செட்டியார்களைப் போன்று பல உட்பிரிவுகள் உள்ளன. தமிழ்நாட்டில் செட்டியார் சமூகம் முக்கிய சமூகங்களில் ஒன்றாக விளங்குகிறது. §
கட்புலனுக்கு அப்பாற்பட்டதை கேட்டல் (clairaudience): “Clear-hearing.” இது திவ்யஷ்ரவன எனப்படும், மனோஉணர்வு அல்லது தெய்வீக சக்தியால் கேட்பதை குறிக்கிறது. இது நரம்பு மண்டலங்களில் இருக்கும் உட்புற ஒட்டங்கள், ஓம்காரம் மற்றும் மற்ற சூட்சும ஒலிகளை கேட்கும் திறமை ஆகும். ஒருவர் தனது மனதில் அந்தர்லோக சக்திகள் அல்லது வேறொரு இடத்தில் இருக்கும் லௌகீக சக்திகள் பேசுவதை காதால் கேட்கும் சக்தியையும், நாள் முழுவதும் அல்லது தியானத்தில் இருக்கும் போது நாதநாடி சக்தி எனப்படும் “ஈஈஈ” ஒலியை சத்தமாக கேட்பதையும் குறிக்கிறது. §
உணர்வுள்ள மனம் (conscious mind): நமக்கு தினமும் வெளிப்புறமாக இருக்கும் உணர்வு. மேலும் தகவலுக்கு: மனம்.§
உணர்வு (consciousness): சித்த அல்லது சைதன்ய. 1) இது சித்த மற்றும் மனதின் சாரத்தை குறிப்பிடும் வேறொரு சொல் ; அல்லது 2) புலனுணர்வு, விழிப்புணர்வு, அச்சத்தின் சக்தி அல்லது நிலை. §
ஆழ்ந்த சிந்தனை (contemplation): தியானத்தை கடந்து சமயம் அல்லது ஆன்மீக விவகாரங்களில் மூழ்கி இருக்கும் நிலை. §
அண்டம் (cosmos): பிரபஞ்சம் அல்லது படைப்புக்கள் முழுவதையும் குறிப்பிடுவதோடு அதில் இருக்கும் ஒழுங்கு, இணக்கம் மற்றும் முழுமையையும் குறிப்பிடுகிறது. மேலும் தகவலுக்கு: லோகம், மூன்று லோகங்கள்.§
சஹஸ்ரஹார சக்கரம் (crown chakra): உச்சந்தலையில் ஆயிரம் இதழ்களுடன் தெய்வீக உணர்வுடன் மண்டை ஓட்டின் மையமாக விளங்குகிறது. மேலும் தகவலுக்கு: சக்கரம்.§
Dakshinamurti (Dakshiṇāmūrti): दक्षिणामूर्ति “South-facing form.” தட்சிணாமூர்த்தி: “தெற்கு நோக்கி இருக்கும் மூர்த்தி.” சிவபெருமான் ஒரு ஆலமரத்திற்கு அடியில் அமர்ந்துகொண்டு, அமைதியாக தனது காலடியில் அமர்ந்து இருக்கும் நான்கு ரிஷிகளுக்கு கற்றுத்தருவதாக அமைந்து இருக்கும். மேலும் தகவலுக்கு: சிவபெருமான்.§
danda (daṇḍa): दण्ड “Staff of support.” தண்டம்: “ஊன்றுகோல்.” தனக்கு ஆதரவாக தபஸ் மட்டுமே இருப்பதையும், சுஷும்னா நாடியை உயிர்ப்பித்து, அதன் விளைவாக தான் நாடும் உணர்தலுக்கு உயிரூட்டம் அளிப்பதை குறிப்பிடும் விதமாக ஒரு சாது அல்லது சந்நியாசி தண்டத்தை பிடித்துக்கொண்டு இருப்பார். தண்டம் என்பது “அபராதம்" அல்லது “தண்டனையை” குறிப்பிடவும் பயன்படுகிறது.§
darshan(a) (darśana): दर्षन “Vision, sight.” தரிசனம். தெய்வீக சக்தியை காணுதல். பூஜிக்கக்கூடிய சக்தி அல்லது சக்திகளுடன் ஆன்மீக தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, அதன் அருளையும் ஆசிகளையும் பெறும் நோக்கத்துடன், கோயிலில் இருக்கும் ஒரு மூர்த்தி, தெய்வம், தெய்வீக புருஷர் அல்லது புண்ணிய தலத்தின் காட்சியை உட்புறமாக அல்லது வெளிப்புறமாக தக்க வைத்துக்கொள்வது. ஒரு புகைப்படத்தை ஒரு முறையான மனநிலையில் காண்பதும் தரிசனத்தில் ஒரு வடிவமாக கருதப்படுகிறது. ஒரு நெரிசலான கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரைவாக சந்நிதியில் இருக்கும் தெய்வத்தை கடந்து செல்லும் போது, ஒரு பக்தன் அந்த புனிதமான தெய்வத்தின் விழிப்படைந்த பார்வைக்கு முன்பாக ஒரு நொடியாவது பொறுமையுடன் நின்று தானும் அந்த தெய்வத்தை காணவேண்டும், அந்த தெய்வத்தின் பார்வையும் தன் மீது விழவேண்டும் என்ற நாட்டத்துடன் இருக்கிறார். இவ்வாறு சக்தியின் பரிமாற்றம் நடைபெறும் ஒரு சூட்சும இடமாக கண்கள் விளங்க, தெய்வங்கள் மற்றும் குருமார்கள் தரிசனத்தை “வழங்குவதாகவும்" பக்தர்கள் தரிசனத்தை “பெறுவதாகவும்" கருதப்படுகிறது. இந்த நேரடியான மற்றும் தனிப்பட்ட இருதரப்பு புரிதல், இந்து தர்மத்தின் மையமாகவும் அதிகம் நாடப்படும் அனுபவமாகவும் கருதப்படுகிறது. மேலும் தகவலுக்கு: “கண்ணோட்டம்,” கோட்பாடு அல்லது தத்துவம். §
dashama bhaga (daśama bhāga): दशमभाग “One-tenth-part.” தசமபாகம். இது இந்து பாரம்பரிய முறைப்படி, ஒருவர் தனது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை ஒரு சமய அமைப்பிற்கு வழங்குவதை குறிக்கிறது. இது பழங்கால இந்தியாவில் பரவலாக பின்பற்றப்பட்டு வந்தது. §
தெய்வம் (Deity): “God.” “இறைவன்.” இது ஒரு வரைபடத்தை அல்லது கோயிலில் ஸ்தாபனம் செய்யப்பட்ட சிலையை அல்லது மகாதேவரை பிரதிநிதித்துவம் செய்யும் மூர்த்தியை குறிப்பிடுகிறது. §
deva: देव “Shining one.” “பிரகாசமான ஒன்று.” உயர்ந்த சூட்சும லோகத்தில் ஒரு நுணுக்கமான, புலனாகாத உடலில் வாழும் ஒரு உயிர்சக்தி. சமஸ்கிருத சாஸ்திரத்தில் தேவ என்ற சொல் “கடவுள் அல்லது தெய்வத்தை" குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது. §
Devaloka: देवलोक “Plane of radiant beings.” தேவலோகம். இது அனாஹத சக்கரத்தின் உலகமாகவும், உயர்ந்த சூட்சும லோகமாகவும் இருக்கும் மகரலோகத்தை குறிப்பிடுகிறது. மேலும் தகவலுக்கு: லோகம்.§
Devaram: தேவாரம். இது சிவபெருமான் மீது பாடப்பட்டுள்ள பன்னிரண்டு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளை குறிப்பிடுகிறது. இவற்றை திருஞான சம்பந்தர் (கி.பி. ஆறாம் நூற்றாண்டு), திருநாவுக்கரசர் (கி.பி. ஆறாம் நூற்றாண்டு) மற்றும் சுந்தரமூர்த்தி (கி.பி. எட்டாம் நூற்றாண்டு) இயற்றியுள்ளார்கள். மேலும் தகவலுக்கு: திருமுறை.§
devasthanam (devasthānam): देवस्थानम् தேவஸ்தானம். தீர்த்த யாத்திரை செல்லும் பயணிகளுக்கு உணவு மற்றும் தங்கும் வசதியை குறைவான கட்டணத்தில் அல்லது இலவசமாக வழங்கும் இடம். §
தெய்வீகமான (devonic): தேவர்கள் அல்லது அவர்கள் உலகம் சார்ந்த. §
dharana (dhāraṇā): धारणा “Concentration.” தாரணை. “ஒருமுகச் சிந்தனை.” இது “தக்க வைத்துக்கொள்ளுதல்,” என்பதை குறிப்பிடும் த்ரி சொல்லில் இருந்து உருவானது. மேலும் தகவலுக்கு: அஷ்டாங்கயோகம்.§
dharma: धर्म தர்மம். இது “நிலை நிறுத்துதல்; தக்க வைத்துக் கொள்ளுதல்,” என்பதை குறிப்பிடும் த்ரி என்கிற சொல்லில் இருந்து உருவானது. அதனால் “பிரபஞ்சத்தை உள்ளடக்கியது அல்லது அதை தக்க வைத்திருப்பது,” தர்மம் ஆகும். தெய்வீக விதி, ஒழுங்குநெறி, உயிர்சக்தியின் விதி, நேர்மையின் பாதை, சமயம், கடமை, நல்லொழுக்கம், நீதி, நன்மை மற்றும் உண்மை என்று தர்மம் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. அடிப்படையில் தர்மம் என்பது, உள்ளார்ந்த இயல்பு அல்லது விதியின் முறையான நிறைவேற்றம் ஆகும். இது ஆன்மாவை பொறுத்தவரையில், ஆன்மீக மேம்பாட்டிற்கு சரியான மற்றும் நேர்மையான பாதைக்கு அதிக பயனுள்ள நடத்தை ஆகும். தர்மத்தில் நான்கு அடிப்படை வகைகள் உள்ளன, அவை கூட்டாக சதுர்தர்ம (நான்கு தர்மங்கள்) என்று அழைக்கப்படுகின்றன. 1) ரித தர்ம: “எல்லோருக்கும் பொதுவான விதி.” விண்மீன் கூட்டங்கள் முதல் சிந்தனை மற்றும் புலனுணர்வு சக்தி வரை அனைத்து உருவங்கள், செயல்பாடுகள் மற்றும் செய்முறைகளை உள்ளடக்கி நிர்வகிக்கும் இருப்பு மற்றும் இயற்கையின் விதிகள். 2) வர்ண தர்மம்: “ஒருவர் தனது சமூக பிரிவுகளுக்கு ஏற்ப தர்மத்தை கடைப்பிடிப்பது.” வர்ணம் என்பது “இனம், குலம், தோற்றம், பண்பு, நிறம், சமூக அந்தஸ்து போன்றவற்றை" குறிக்கிறது. ஒருவரது நாடு, சமூகம், பிரிவு, தொழில் குழு மற்றும் குடும்பத்தில் இருக்கும் கடமைகள் மற்றும் பொறுப்புகள். 3) ஆசிரம தர்மம்: “வாழ்க்கையின் பல்வேறு படிநிலைகளில் இருக்கும் கடமைகள்.” பிரம்மசரியம் (மாணவன்), கிரிஹஸ்தன் (சம்சாரி), வானப்பிரஸ்தம் (மூத்த ஆலோசகர்) மற்றும் சந்நியாசி (ஆன்மீக நாட்டத்த்துடன் தனியாக இருப்பவர்) என்று மனித வாழ்க்கையின் நான்கு கட்டங்களில் பூர்த்தி செய்யவேண்டிய கடமைகள். 4) ஸ்வதர்மம்: “ஒருவரது தனிப்பட்ட கடமைகள் அல்லது பொறுப்புக்கள்.” ஒருவரின் தனிப்பட்ட உடல், மனம் மற்றும் உணர்ச்சியின் இயல்பை பொறுத்து, வாழ்க்கை முழுவதும் அவரது முழுமையான தனிப்பட்ட மாதிரி; (தனிப்பட்ட கர்மவினை பொறுத்து) ஒருவரது தார்மீக பழக்கங்கள் அவரது இனம், சமூகம், தோற்றம், ஆரோக்கியம், அறிவு, திறமைகள் மற்றும் தகுதிகள், ஆசைகள் மற்றும் மனப்பாங்குகள், சமயம், சம்பிரதாயம், குடும்பம் மற்றும் குருவிடம் பிரதிபலிக்கும். §
dharmashala (dharmaśāla): धर्मशाल “Abode of righteousness.” தர்மசாலை. துறவிகள் மற்றும் சில நேரங்களில் யாத்திரை செல்லும் அல்லது தனியாக ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட்டு இருக்கும் சாதாரண மக்களுக்கு மதம் தொடர்பான பயிற்சிகளை அளிக்கும் மடம் அல்லது ஆசிரமம். இது சைவ சித்தாந்த தேவாலயத்தில், கவாய் ஆதீனத்தின் கிளை மடாலயங்களை குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது. §
dhoti (dhotī): धोती (Hindi). வேட்டி (தமிழ்). உடலில் இடுப்புக்கு கீழே உடுத்திக்கொள்ளப்படும் தைக்கப்படாத நீளமான துணி. மேலும் இது சில சமயங்களில், அந்த துணியை கால்களுக்கு நடுப்பகுதி வழியாக வெளியே இழுத்து, இடுப்பில் செருகும் பஞ்சகச்ச முறையிலும் உடுத்திக்கொள்வதுண்டு. இது ஆண்கள் உடுத்தும் ஒரு இந்து பாரம்பரிய உடை ஆகும். மேலும் தகவலுக்கு: வேஷ்டி.§
dhyana (dhyāna): ध्यान “Meditation.” தியானம். மேலும் தகவலுக்கு: அஷ்டாங்க யோகம்.§
diksha (dīkshā): दीक्षा “Initiation.” தீட்சை. இது ஒரு ஆசான் அல்லது குரு தனது ஆசிகளை வழங்கி, ஒரு சாதகரை ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் பயிற்சியின் ஒரு புதிய உலகில் அழைத்து செல்லும் புனிதமான அறிமுகம் ஆகும். இது ஆசான் மற்றும் அவரது பரம்பரையுடன் இருக்கும் தொடக்கநிலை அல்லது ஆழமான உறவை குறிப்பிடுகிறது மற்றும் இதனுடன் வழக்கமாக ஒரு சடங்கும் நடைபெறுகிறது. விழிப்புணர்வை பெறும் தருணமாக மதிக்கப்படும் தீட்சை ஒரு தொடுதல், ஒரு சொல், ஒரு பார்வை அல்லது ஒரு சிந்தனை மூலம் வழங்கப்படுகிறது. பெரும்பாலான இந்து பிரிவுகள், அதிலும் குறிப்பாக சைவ சமய பிரிவுகள், ஒரு சற்குருவிடம் இருந்து தீட்சை பெற்றால் மட்டுமே ஞானோதயத்தை அடைய முடியும் என்று அறிவுறுத்துகிறார்கள். §
Dipavali (Dīpāvalī): दीपावली “Row of Lights.” தீபாவளி. வருடந்தோறும் அக்டோபர்/நவம்பர் மாதங்களில் உலகெங்கும் இருக்கும் இந்துக்களின் எல்லா பிரிவினரும் தங்கள் வீட்டிலும் வெளியிலும், தீய சக்திகள் மீது நேர்மறை சக்திகள் வெற்றி பெறுவதால், வாழ்க்கையில் இருக்கும் இருள் அகன்று வெளிச்சம் அடைவதை கொண்டாடும் விதமாக, அவர்கள் விளக்குகளை ஏற்றி பட்டாசுகள் மற்றும் மத்தாப்புக்களை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடும் ஒரு மிகவும் பிரபலமான பண்டிகை ஆகும். §
இருமைவாதம் (dualism): மேலும் தகவலுக்கு: துவைதம்-அத்வைதம்.§
dvaita-advaita: द्वैत अद्वैत “Dual-nondual; twoness-not twoness.” துவைதம்-அத்வைதம்: “இருமை-இருமையற்ற தன்மை.” இது இந்து சமயத்தில் மிகவும் முக்கியமான தத்துவப் பிரிவுகளில் ஒன்றாக விளங்குகிறது. ஒரு விரிவான வகைப்பாட்டின் இரண்டு முனைகளாக துவைதம் மற்றும் அத்வைதம் விளங்குகின்றன. —துவைத்தம்: இந்த இருமைவாத கோட்பாட்டின் படி உண்மைப்பொருள் என்பது இரண்டு குறைக்க முடியாத கோட்பாடுகள், பிரிவுகள், உண்மைகள் போன்றவற்றை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு இறைவனும ஆன்மாவும் நிரந்தரமாக பிரிந்து இருப்பதாக கருதப்படுகிறது. அதனோடு தொடர்புடைய நான்கு சொற்களை இங்கே காணலாம். —இருமைவாதம் சார்ந்த (dualistic) : இருமையை (நன்மை-மற்றும்-தீமை, உயர்ந்த-மற்றும்-தாழ்ந்த, அவர்கள்-மற்றும்-நாங்கள்) வரம்பு மீறியதாக கருதாமல் நிரந்தரமானவை என்று கருதும் கோட்பாடுகள், படைப்புக்கள், தத்துவங்கள் சார்ந்தது. —பன்மைவாதம்: இது ஒருமைவாதம் சாராமல் இருக்கிறது, மற்றும் இது மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நிரந்தரமான தனித்த உண்மைப்பொருட்களை வலியுறுத்துகிறது. உதாரணத்திற்கு கடவுள், ஆன்மா மற்றும் உலகம். —அத்வைதம்: இந்த இருமைவாதம் அல்லாத அல்லது ஒருமைவாத கோட்பாட்டில், உண்மைப்பொருள் என்பது இறுதியில் தனித்த பாகங்கள் எதுவும் இல்லாமல் கொள்கை, சாரம் அல்லது கடவுளாக ஒரு முழுமையான அடிப்படையை கொண்டுள்ளது. சுருக்கமாக சொன்னால், இறைவன் எங்கும் இருக்கிறார். —ஒருமைவாத மதநம்பிக்கை: இது ஒருமைவாதம் மற்றும் இருமைவாதத்தை உள்ளடக்கிய ஒரு இருதுறவ கண்ணோட்டம். §
ஞானோதயம் (Enlightenment): இது அத்வைத சைவர்களுக்கு ஆத்மஞானம், நிர்விகல்ப சமாதியாகவும்; முடிவான ஸித்தியாகவும், சில சமயங்களில் பரமாத்தும தரிசனம் அல்லது ஆத்ம தரிசனம் என்றும் குறிப்பிடப்படுகிறது. §
தனக்குள் நிலைத்து இருத்தல், சமாதி (enstasy): பரவசநிலை (ecstasy) என்று “தன்னைவிட்டு விலகி வெளியே இருத்தலை" குறிப்பிடும் மேற்கத்திய கண்ணோட்டத்திற்கு எதிர்பதமாக, மிர்சியா எலியட் கிழக்கத்திய உருவாக்கிய “தனக்குள் இருத்தல்” (entasy) என்ற ஒரு சொல்லை உருவாக்கினார். இது சமாதி என்ற சொல்லுக்கு, ஆங்கிலத்தில் சரி நிகரான சொல்லாக தேர்ந்தெடுக்கப்பட்டது. §
ஆன்மாவின் பரிணாம வளர்ச்சி (evolution of the soul): அத்யாத்ம பிரசார. சைவ சித்தாந்தத்தில், ஆன்மாவின் பரிணாம வளர்ச்சி என்பது ஒரு முன்னேற்றம் பொருந்திய விரிவாக்கம், வளர்ச்சி மற்றும் தனது உள்ளார்ந்த, தெய்வீக விதியை நோக்கி பக்குவமடைவதை குறிப்பிடுகிறது. மேலும் இது சிவபெருமானுடன் நடைபெறும் முழுமையான ஐக்கியம் ஆகும். ஒவ்வொரு ஆன்மாவும் இயல்பாக எப்போதும் முழுமையாக இருக்கிறது. ஆனால் அது சிவபெருமான் மூலம் வெளியிடப்பட்ட ஒரு தனிப்பட்ட ஆனந்தமய கோசமாக, வளர்ச்சி அடையாமல் ஒரு சிறிய விதை போல இருக்கிறது. ஒரு கருவாலிக்கொட்டை ஒரு மாபெரும் கருவாலி மரமாக வளர்வதற்கு அதை ஒரு இருண்ட நிலத்தடியில் புதைக்க வேண்டியிருப்பதை போல, ஆன்மா முழு முதிர்ச்சியை பெற்று இறைவனுடன் இயல்பான ஒருமையை உணர்வதற்கு, அது மலங்களின் இருளில் இருந்து வெளிவந்து விரிவாக்கம் பெறவேண்டும். தூல உடலின் கருத்தரிப்பின் போது ஆன்மா உருவாக்கப்படுவது இல்லை. ஆனால் அது சிவலோகத்தில் உருவாக்கப்படுகிறது. அது பூலோகத்தில் இறுதியாக பிறவி எடுக்கும் வரை விஞ்ஞானமய, மனோமய மற்றும் பிராணமய என்று அதிக அடர்த்தியான கோசங்களாக தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. அதன் பிறகு பல பிறவி அனுபவங்களைப் பெற்று, மறுபிறவி மூலம் பக்குவம் அடைகிறது. இவ்வாறு ஆன்மாக்கள் ஒவ்வொரு பிறவியிலும் கற்றுக்கொண்டு பக்குவம் அடைகின்றன. ¶ அதில் இருந்து கிடைக்கும் அனுபவமும் பாடங்களின் விளைவாக பரிணாம வளர்ச்சி தோன்றுகிறது. அதில் பரிணாம வளர்ச்சி தொடங்கவிருக்கும் இளம் ஆன்மாக்களும் இருக்கிறார்கள், தற்காலிகமான தங்களது லௌகீக வாழ்க்கையை நிறைவு செய்யவிருக்கும் முதிர்ந்த ஆன்மாக்களும் இருக்கிறார்கள். சைவ சித்தாந்தத்தில், பரிணாம வளர்ச்சி தடைகளின் நீக்கமாக அறியப்படுகிறது, மற்றும் அது ஒரு இயல்பான விரிவாக்கம், உணர்தல் மற்றும் ஒருவரது உண்மையான மற்றும் சுயமாக பிரகாசிக்கும் இயல்பால் தோன்றுகிறது. ஆன்மாவின் மலங்கள் முதிர்வதை அல்லது விலகுவதை மலபரிபாகம் என்று அழைக்கப்படுகிறது. ஆன்மாவின் இயல்பின் மீது பெறும் உணர்தல் ஸ்வானுபூதி (பரமாத்துமாவை அறிதல்) என்று அழைக்கப்படுகிறது. ¶ஆத்ம ஞானம் மூன்று மலங்கள் மற்றும் மறுபிறவியில் இருந்து விடுவிக்கும் மோக்ஷத்திற்கு வழிவகுக்கிறது. அதன் பிறகு இறுதியில் ஆன்மா மகாதேவரான சிவபெருமான், ஆதி ஆன்மா, பரமேஸ்வரனுக்குள் முழுமையாக மற்றும் பிரித்தறிய முடியாத அளவிற்கு ஐக்கியமாகும் வரை, அது தேவலோகத்தில் தனது வளர்ச்சியை தொடர்கிறது. இதனை ரிஷி திருமூலர் தனது திருமந்திரத்தில் இந்த ஐக்கியத்தை விஷ்வகிராசா (“முழுமையான ஒடுக்கம்") என்று அழைக்கிறார். ஆன்மாவின் பரிணாம வளர்ச்சி ஒரு நேரியல் முன்னேற்றமாக இல்லாமல் ஒரு நுணுக்கமான, வட்ட வடிவில் பன்முகப்பு மர்மமாக இருக்கிறது. இந்த பரிணாம வளர்ச்சி, ஆரம்பகால பிரைமேட்களில் இருந்து தோன்றிய மனித உருவத்தின் தொடக்கத்தை விளக்கும் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் இடம்பெறவில்லை. §
Ganesha (Gaṇeśa): गणेश “Lord of Categories.” Or: “Lord of attendants (gana),” synonymous with Ganapati. விநாயகர் “கணங்களின் கடவுள்.” இவர் கணபதி என்றும் அழைக்கப்படுகிறார். இந்து சமயத்தின் ஒவ்வொரு பிரிவு மக்களும் ஆனைமுகத்துடன் மகாதேவர்களில் ஒருவராக இருக்கும் விநாயகரை அன்புடன் வழிபடுகின்றனர். §
Ganesha Chaturthi (Gaṇeśa Chaturthī): गणेश चतुर्थी. விநாயகர் சதுர்த்தி. விநாயகர் ஒரு ஆவணி மாத சதுர்த்தி அன்று யானை முகத்தோடும், மனித உடலோடும் கஜமுகாசுரனை அழித்து தேவர்களை மீட்டார். அதனால் அன்று முதல் இந்த தினம் விநாயகர் சதுர்த்தியாக பல்வேறு நாடுகளில் பத்து நாட்கள் வரை கொண்டாடப்பட்டு, இறுதி நாளன்று கடலில் சென்று விநாயகரை கரைக்கும் விநாயகர் விசர்ஜனம் ஒரு பெரிய அணிவகுப்பாக நடைபெறுகிறது. இந்த சந்தோஷமான தருணத்தில் இந்துக்கள் அனைவரும் ஒன்றாக வழிபடுகின்றனர். §
Ganga sadhana (Gaṅgā sādhana): गंगासाधन. கங்கா சாதனா. இது தேவையில்லாத சிந்தனைகளில் இருந்து விடுதலை பெறுவதன் மூலம், மனதின் சுமையை குறைக்கும் பயிற்சி ஆகும். ஒரு நதிக்கரையில் அமைதியாக அமர்ந்து, பாறைகள் மீது நதிநீர் பாய்ந்து செல்லும் போது எழும் ஓம்காரத்தை கேட்பதன் மூலம், உள்ளத்தை சுத்தம் செய்யும் சாதனா ஆகும். ஒரு எண்ணம் தோன்றும் போது, அது மானசீகமாக வலது கையில் இருக்கும் இலையில் வைத்து, ஓடும் நதிநீரில் மெதுவாக வைக்கப்படுகிறது. அதன் பிறகு அந்த எண்ணத்தை சுமந்து செல்ல உதவியாக இருந்த நதிநீருக்கு நன்றி செலுத்தும் வண்ணம் ஒரு பூ வழங்கப்படுகிறது. இது அடியுணர்வை சுத்தம் செய்யும் செயல்முறை ஆகும், மற்றும் இதில் மனக்கசப்புகள், கோபம், பிரச்சனைகள் அல்லது தியானத்தை குலைக்க மனதில் தோன்றும் அனைத்தையும் கைவிடுவதை குறிப்பிடுகிறது. §
இறைவன், கடவுள் (God): வானுலக சக்தி. இது பரமாத்துமாவான சிவபெருமானை, அல்லது அவரது படைப்புகளில் ஒருவராக இருக்கும் மகாதேவர்கள் என்கிற தலைசிறந்த ஆன்மாக்களையும் குறிப்பிடுகிறது. §
பெண் தெய்வம், அம்மன் (Goddess): தெய்வீக சக்தியின் பெண் வடிவம்; சக்தி அல்லது தேவி. அம்மன் என்பது பாலின வேற்றுமையின்றி தனது இயல்பான நிலையில் சிவலோகத்தில் இருக்கும் சக்தியின் (மகாதேவர்) ஒரு பெண் புலனுணர்வு அல்லது சித்தரிப்பை குறிப்பிடலாம் அல்லது ஒரு சூட்சும பெண் உடலில் வாசம் செய்யும் ஒரு சூட்சும லோக சக்தியை குறிப்பிடலாம். §
கடவுளை உணர்தல் (God Realization): தனக்குள் இருக்கும் தெய்வீகத்தன்மையை நேரடியாக அல்லது தனிப்பட்ட முறையில் அறிதல். அந்த அறிதல் 1) உட்புற ஒளியின் அனுபவத்தில் தொடங்கி சச்சிதானந்தத்தை உணர்தல் என்கிற தூய உணர்வு வரை பல்வேறு நிலைகளில் இருக்கும் சவிகல்ப சமாதி (“உருவத்துடன் இருக்கும் சமாதி”) அல்லது 2) காலம், உருவம் மற்றும் பரவெளியை கடந்த பரமாத்துமா மற்றும் யாவும் கடந்த முடிவான பரம்பொருள், பரசிவத்துடன் நடைபெறும் ஐக்கியத்தை குறிப்பிடும் நிர்விகல்ப சமாதியாக (“உருவம் இல்லாத சமாதி") இருக்கலாம். இங்கே இந்த புத்தகத்தில், கடவுளை உணர்தல் எனும் சொல் இரண்டு சமாதிகளையும் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது, ஆனால் ஆத்ம ஞானம் எனும் சொல் நிர்விகல்ப சமாதியை மட்டுமே குறிப்பிடுகிறது. §
கடவுள்கள், மகாதேவர்கள் (Gods): “சுயமாக பிரகாசிக்கும் உயர்வான சக்திகள்.” இந்த புத்தகத்தில், கடவுள்கள் எனும் சொல் சிவலோகத்தில் சுயமாக பிரகாசித்து தங்களது ஆனந்தமய கோசத்தில் வாசம் செய்யும் மிகவும் உயர்வான சக்திகளை குறிப்பிடுகிறது. §
Gorakshanatha (Gorakshanātha): गोरक्षनाथ கோரக்ஷனாதர் (கோரக்கநாதர்). இவர் ஆதிநாத சம்பிரதாயத்தின் (கி.பி. 950) வலுவான சித்த யோக குருவாக இருந்தார். இவர் சித்த சித்தாந்த சைவ சமயத்தை விவரித்து, அதன் முதல் குருவாக இருந்தார். இவர் நேபால் மற்றும் வட இந்தியாவிலும் பயணம் செய்து சிவபெருமானின் மகிமை பற்றி புகழ்ந்து பேசினா ர். இன்றும் இந்த பகுதிகளில், இவரும் இவரது குருவான மத்ஸ்யேந்திரநாதரும் உயர்வாக மதிக்கப்படுகின்றனர். §
அருள் (grace): இது இறைவனின் அனுக்கிரக சக்தியை (“இரக்கம், ஆதரவு வழங்குதல்") குறிப்பிடுகிறது, மற்றும் இதன் மூலம் ஆன்மாக்கள் தங்களது உண்மையான தெய்வீக பண்பின் மீது விழிப்புணர்வை பெறுகிறார்கள். ஒரு பக்தன் தனது ஆன்மீக பயணத்தில் பக்குவமடையாத நிலையில் இருக்கும் போது, இறைவனிடம் இருந்து தனக்கு பரிசுகள் அல்லது வரங்கள் பெரும்பாலும் எந்த தடையும் இல்லாமல் கிடைப்பதை உணர்கிறான். பக்குவமடைந்த ஆன்மாவிற்கு தன்னை சுற்றி அருள் நிறைந்து இருப்பது தெரிகிறது. அவருக்கு இறைவனின் செயல்கள் அனைத்தும் நன்மை செய்து பயன் தருவதாக தோன்றினாலும் தோன்றாவிட்டாலும், அவர் அவற்றை இறைவனது அருளாக காண்கிறார். அருள் என்பது ஞானோதய சக்தியாக அல்லது அனுக்கிரக சக்தியாக மட்டும் இல்லாமல், ஆன்மா பரிணாம வளர்ச்சி அடைவதற்காக சிவபெருமான் உலக அனுபவத்தை வழங்கி, ஆன்மாவின் உணர்வை கட்டுப்படுத்த பயன்படுத்தும் ஆக்கல், காத்தல், அழித்தல் மற்றும் மறைத்தல் என்ற அவரது மற்ற நான்கு சக்திகளையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் பொதுவாக பார்க்கும் போது, அருள் என்பது இறைவனிடம் இருந்து நிரந்தரமாக பாய்ந்து செல்லும் அன்பு மற்றும் இரக்கம், கருணை என்கிற கிருபை (“மென்மை, இரக்கம்”) மற்றும் பிரசாதமாக (“தெளிவு, தூய்மை") இருக்கிறது. ஆன்மாவின் தெய்வீக பண்பை மறைக்கும் சக்தியாக இருக்கும் திரோதான சக்தியின் மூலம் ஆணவம், கர்மவினை மற்றும் மாயையின் மூன்று மலங்களையும் சிவபெருமான் ஆன்மாவுடன் கட்டி வைக்கிறார். உலக அனுபவத்தின் மூலம் ஆன்மா வளர்ச்சி அடைந்து பக்குவமடைய வாய்ப்பு வழங்கும் நோக்கத்துடன் உணர்வு கட்டுப்படுத்தப்படுகிறது. §
grihastha (gṛihastha): गृहस्थ “Householder.” கிருகஸ்தன்: குடும்ப வாழ்க்கையை வாழும் ஆண் அல்லது பெண். திருமணமான தம்பதிகளும் அவர்களின் சொந்தங்களும். குடும்ப வாழ்க்கையை சார்ந்தது. சாம்சாரிகளாக இருக்கும் ஆண்களை மட்டும் குறிப்பிடுவதற்கு கிருகஸ்தின் என்றும் பெண்களை குறிப்பிடுவதற்கு கிருகஸ்தி என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகின்றன. கிருகஸ்தி வீட்டை குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது. §
guha (guhā): गुहा “Cave.” குகை. §
guna (guṇa): गुण “Strand; quality.” குணம். இயற்கையில் இருக்கும் மூன்று கொள்கைகள். மூன்று குணங்களின் விவரம்: 1) சத்துவ: அமைதியாக, அரிதாக, ஒளி ஊடுருவும் தன்மையுடன், நீக்கமற நிறைந்து, தூய உணர்வின் ஒளியை பிரதிபலிக்கிறது. 2) ரஜஸ்: சக்தி, இயக்கம், செயல், உணர்ச்சி மற்றும் வாழ்க்கையில் உள்ளார்ந்து இருக்கும் “பேரார்வம்.” 3) தமஸ்: “இருள்,” ஜடத்துவம், அடர்த்தி மற்றும் ஒடுக்கும், தடுக்கும் மற்றும் கலைக்கும் சக்தி. §
guru: गुरु “Weighty one,” குரு. சிறந்த புலமை அல்லது திறமை மீது இருக்கும் நிபுணத்துவத்தை குறிப்பிடுவது. குறிப்பாக சமயம் சார்ந்த இசை, நடனம், சிற்பக்கலை போன்ற ஏதேனும் ஒரு துறையில் ஒரு ஆசிரியர் அல்லது வழிகாட்டியாக இருப்பவர். வழக்கமாக குரு என்ற சொல்லுக்கு முன்பாக அவரது தகுதியும் சேர்க்கப்பட்டு இருக்கும். அதனால் குலகுரு (குடும்பத்தின் ஆசிரியர்), வீணாகுரு (வீணை கற்பிக்கும் ஆசிரியர்) மற்றும் சற்குரு (ஜீவன்முக்தாவாக இருக்கும் ஒரு ஆன்மீக குரு). ஜோதிடத்தில், குரு எனும் சொல் பிரிஹஸ்பதி எனப்படும் வியாழன் கிரகத்தை குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது. அத்வயதாரக உபநிடதம் (14-18), குரு என்ற சொல்லுக்கு “இருளை (ரு) அகற்றுபவர் (கு)" என்று குறிப்பிடுகிறது. §
guru jayanti (guru jayantī): गुरु जयन्ती குரு ஜெயந்தி. சீடர்கள் வருடந்தோறும் கொண்டாடும் சற்குருவின் பிறந்தநாள். அப்போது வழக்கமாக அந்த குருவிற்கு பாதபூஜை நடைபெறுகிறது. குரு பூஜை நடைபெறும் இடத்தில் இல்லை என்றால், அவரை பிரதிநிதித்துவம் செய்து அவருடைய அதிர்வை தக்க வைத்துள்ள ஶ்ரீ பாதுகைகளுக்கு பூஜை செய்யப்படுகிறது. §
guru mahasannidhanam (guru mahāsannidhānam): गुरु महासन्निधानम् குரு மகாசன்னிதானம். ஒரு பாரம்பரிய ஆதீனத்தின் ஆன்மீக தலைவர். மேலும் தகவலுக்கு: ஆதீனகர்தார். §
guru parampara (guru paramparā): गुरुपरंपरा “Preceptorial succession” (literally, “from one to another”). குரு பரம்பரை. ஆன்மீக குருமார்களின் அதிகாரப்பூர்வ வாரிசுகளின் தொடர்ச்சி; ஒரு குரு இன்னொரு குருவிற்கு வழங்கும் சூட்சும சக்தி மற்றும் அதிகாரப்பூர்வ தொடர்ச்சியின் சங்கிலி. மேலும் தகவலுக்கு: சம்பிரதாயம்.§
guru pitham (guru pīṭha): गुरुपीठ“Seat; pedestal; foundation.” குருபீடம். 1) அரியணை போன்று ஒரு மடாதிபதி அமரும் ஒரு புனிதமான இருக்கை. 2) அத்தகைய ஒரு ஆன்மீக ஆணையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு ஆதீனம், ஆசிரமம் அல்லது மடம். §
guru-shishya system (guru-śishya system): गुरुशिष्य “Master-disciple system.” குரு-சீடன் அமைப்பு. இந்து சமயத்தில் இருக்கும் இந்த முக்கியமான கல்விமுறையில், ஆசிரியர் தனது அறிவு மற்றும் பாரம்பரியத்தை ஒரு மாணவனுக்கு கற்றுத் தருகிறார். அத்தகைய அறிவு வேத-ஆகம கலை, கட்டிடக்கலை அல்லது ஆன்மீகம் என்று எதை சார்ந்து இருந்தாலும், அது குரு மற்றும் சீடனுக்கு இடையே உறவை வளர்ப்பதன் மூலம் வழங்கப்படுகிறது. §
Hanuman (Hanumān): हनुमान् (Hindi) அனுமார். இது சமஸ்கிரதத்தில் அனுமத் என்ற சொல்லில் இருந்து தோன்றியது மற்றும் “பெரிய தாடையை உடையவர்" என்பது இதன் பொருள். இவர் இராமாயணத்தில் வலுவான வானரக் கடவுளாகவும், பிரபலமான அனுமான்-நாடகாவி ல் கதாநாயகனாகவும் இருக்கிறார். அவர் தனது எஜமானர் ராமருக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட சேவகராக இருந்தார். இந்த பிரபலமான தெய்வம் தாஸ்ய பக்திக்கு முன் உதாரணமாகவும் விளங்கினார். §
hatha yoga (hat˙a yoga): हठयोग “Forceful yoga.” ஹட யோகம். இது உடலுக்கு புத்துணர்ச்சி வழங்குவதற்காக, பழங்காலத்தில் ரிஷிகள் மற்றும் தபஸ்விக்கள் மூலம் உருவாக்கப்பட்ட உடல் மற்றும் மனம் சார்ந்த பயிற்சிகளின் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு தற்போது தியானம் செய்ய உடல் மற்றும் மனதை தயார் செய்ய பயன்படுகிறது. §
Hatha Yoga Pradipika (Haṭha Yoga Pradīpikā): हठयोगप्रदीपिका “Elucidation of hatha yoga.” ஹட யோக பிரதீபிகா. “ஹட யோகம் பற்றிய விளக்கம்.” 14 ஆம் நூற்றாண்டில் 389 செய்யுள்களுடன் ஸ்வாத்மாராம யோகி இயற்றிய இந்த நூல், ஹட யோகத்தின் தத்துவம் மற்றும் பயிற்சிகளை விளக்குகிறது. §
Hindu: हिन्दु இந்து சமயத்தை பின்பற்றுபவர். மேலும் தகவலுக்கு: இந்து சமயம்.§
Hinduism (Hindu Dharma): हिन्दुधर्म இந்து தர்மம். இது இந்தியாவில் தோன்றிய சமய மற்றும் கலாச்சார அமைப்பு ஆகும். இது தற்போது சுமார் ஒரு பில்லியன் மக்களால் பின்பற்றப்படுகிறது. அதில் பெரும்பாலானோர் இந்தியாவில் இருந்தாலும், மற்ற நாடுகளிலும் இந்திய வம்சாவளியினர் பெருமளவில் இருக்கிறார்கள். இது சனாதன தர்மம், “நிலையான சமயம்" மற்றும் வைதீக தர்மம், “வேதங்களின் சமயம்”என்றும் அழைக்கப்படுகிறது. இது எண்ணற்ற நம்பிக்கைகளின் குடும்பமாக இருக்கிறது. இதன் நான்கு முக்கிய பிரிவுகளாக சைவ சமயம், வைணவ சமயம், சாக்த சமயம் மற்றும் ஸ்மர்த்த சமயம் விளங்குகின்றன. §
homa: होम “Fire-offering.” ஹோமம். இது வழக்கமாக செங்கற்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஹோம குண்டத்தில், அக்னியை மாத்தியமாக வைத்து தெய்வத்திற்கு நைவேத்தியங்களை வழங்கும் ஒரு புனிதமான சடங்காக விளங்குகிறது. ஹோமத்தில் இருக்கும் சடங்குகள் வேதங்கள், ஆகமங்கள் மற்றும் தர்ம மற்றும் க்ரிஹ்ய சாஸ்திரங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளன. §
Iccha shakti (icçhā śakti): इच्छाशक्ति “Desire, will.” இச்சா சக்தி. “ஆசை, விருப்பம்.” சிவபெருமானின் மூன்று முக்கிய சக்திகளில் ஒன்றாக விளங்குகிறது. §
ida nadi (iḍā nāḍī): इडानाडी “Soothing channel.” “அமைதியான பாதை.” இடா நாடி. பெண்மை பண்புடன் முதுகுத்தண்டு வழியாக செல்லும் மனோஉணர்வு ஓட்டம். §
இம்கைப் (im kaif) (īm» kaīf»): (Shum) ஷும். சாட்சியை கடந்து இருக்கும் நிலை. இது ஆத்ம ஞானத்தை விளக்கும் சொல்லாக இல்லாவிட்டாலும், அந்த அனுபவமற்ற நிலைக்குள் நுழைவதை குறிக்கிறது. ஈம்-கா-ஈப் என்று உச்சரிக்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு: ஷும்.§
உள்ளுணர்வு சார்ந்த (instinctive): “Natural” or “innate.” “உள்ளார்ந்த" அல்லது “இயல்பான.” விலங்குகள் உலகம் மனிதர்களின் தூல மற்றும் கீழ்நிலை சூட்சும அம்சங்களை ஆணையிடும் இயக்கங்கள் மற்றும் உத்வேகங்கள். உ.தா. சுய-பாதுகாப்பு, இனப்பெருக்கம், பசி மற்றும் தாகம், மற்றும் பேராசை, வெறுப்பு, கோபம், அச்சம், காமம் மற்றும் பொறாமையின் உணர்ச்சிகள். §
உள்ளுணர்வு மனம் (instinctive mind): Manas chitta. மனஸ் சித்த . புலனுணர்வு, உடலின் இயக்கம் மற்றும் சாதாரண சிந்தனை மற்றும் உணர்ச்சியை கட்டுப்படுத்தும் கீழ்நிலை மனம். §
உட்புறமாக வழிபாடு (internalized worship): Yoga. யோகம். வெளிப்புற சடங்குகள் இல்லாமல், தியானம் அல்லது ஆழ்ந்த சிந்தனை வழியாக கடவுள் அல்லது மகாதேவர்களை வழிபடுதல் அல்லது தொடர்பு கொள்ளுதல்.§
Iraivan: இறைவன் “Worshipful one; divine one.” கடவுளை அழைக்கப் பயன்படும் மிகவும் பழமையான தமிழ் சொற்களில் ஒன்று. மேலும் தகவலுக்கு: சன் மார்க சரணாலயம்.§
‘இறைவன்’ கோயில் (Iraivan Temple): மேலும் தகவலுக்கு: சன் மார்க சரணாலயம். §
Jagadacharya (jagadāchārya): जगदाचार्य “World teacher.” ஜகதாச்சார்யா. “ உலகிற்கு ஆசிரியராக இருப்பவர்.” §
japa: जप “Recitation.” ஜெபம். ஒரு மந்திரத்தை அமைதியாகவோ அல்லது சத்தமாகவோ ஒருமுகச்சிந்தனையுடன் தொடர்ந்து உச்சரிக்கும் போது, ஒரு மணிமாலையைக் கொண்டு அதை எண்ணும் பயிற்சி. கர்வம் மற்றும் அகந்தை, பொறாமை, அச்சம் மற்றும் குழப்பத்தை தணிப்பதற்கு இது ஒரு தீர்வாக இருக்கிறது. §
jayanti (jayantī): जयन्ती “Birthday.” ஜெயந்தி. “பிறந்தநாள்.” மேலும் தகவலுக்கு: குரு ஜெயந்தி. §
jiva (jīva): जीव “Living, existing.” From jiv, “to live.” ஜீவன். “வாழ்ந்துகொண்டு இருக்கிற.” தனிப்பட்ட ஆன்மா, ஆத்மன் ஒரு உடலுக்குள் இருக்கும் நிலை. §
jivanmukta (jīvanmukta): जीवन्मुक्त “Liberated soul.” ஜீவன்முக்தா. “முக்தி பெற்ற ஆன்மா.” ஆத்ம ஞானம், பரசிவத்தை குறிப்பிடும் நிர்விகல்ப சமாதியை அடைந்து, ஒரு மனித உடலில் வாழும் போதே மறுபிறவியில் இருந்து முக்தி பெற்றவர். (இது உடலை விட்டு உயிர் பிரியும் போது முக்தி பெறுகிற, விதேகமுக்தாவில் இருந்து மாறுபட்டு இருக்கிறது.) இந்த ஸித்தி பல பிறவிகளில் செய்த தீவிர முயற்சி, சாதனா மற்றும் தவத்தின் முடிவாக அமைகிறது, மற்றும் இதற்கு இந்த பிறவியில் முழுமையான துறவறம் என்கிற சந்நியாசம் (இவர் லௌகீக உலகிற்கு இறந்துவிட்டதால், அவர் தனது இறுதி சடங்கை தானே செய்து கொள்கிறார்) தேவைப்படுகிறது. இந்த தூல உடலில் ஜீவன்முக்தா தனது வாழ்க்கையை பூர்த்தி செய்துக்கொண்டு இருக்கும் போது, அவர் நிர்விகல்ப சமாதிக்குள் மீண்டும் மீண்டும் சென்று வரும் திறமையை பெற்று இருக்கிறார். §
jnana (jñāna): ज्ञान “Knowledge; wisdom.” ஞானம். “அறிவு; விவேகம்.” இது ஆன்மாவின் முதிர்ந்த நிலை ஆகும். இது குண்டலினி சக்தி பிரம்மனின் கதவை உடைத்துக்கொண்டு பரசிவம், பரப்பிரம்மத்தை உணரும் போது கிடைக்கும் மெய்யறிவை குறிப்பிடுகிறது. ஞானம் என்பது அன்றாட வாழ்க்கையில் பாய்ந்து செல்லும் விழிப்படைந்த, மெய்ஞ்ஞான நிலை (காரண சித்த) ஆகும். §
jnana shakti (jñāna śakti): ज्ञानशक्ति “Power of wisdom.” ஞான சக்தி. “விவேகத்தின் சக்தி.” சிவபெருமானின் மூன்று முக்கிய சக்திகளில் ஒன்று. கார்த்திகேயனின் வேலை குறிப்பிடும் இன்னொரு சொல். §
jnana pada (jñāna pāda): ज्ञानपाद “Stage of wisdom.” ஞான பாதம். சைவ சித்தாந்த ரிஷிகளை பொறுத்தவரையில், ஞானம் என்பது ஆன்மீக விரிவக்கத்தில் நான்கு தொடர்ச்சியான பாதங்களில் இறுதியானது ஆகும். இது மூன்றாவது நிலையாக விளங்கும், யோக பாதத்தின் நிறைவேற்றம் ஆகும். இது ஒவ்வொரு ஆகமத்தில் இருக்கும் ஞானப் பிரிவையும் குறிப்பிடுகிறது. மேலும் தகவலுக்கு: பாதம்.§
jnani (jñānī): ज्ञानी “Sage.” ஞானி. ஞானம் பெற்றவர். மேலும் தகவலுக்கு: ஞானம்.§
jyoti: ज्योति “Light.” ஜோதி. “ஒளி.” இந்த உரையில், ஞானோதயம் பெற்ற சக்தியை குறிப்பிடுகிறது.§
jyotisha: ज्योतिष From jyoti, “light.” ஜோதிடம். இது “ஒளியை" குறிப்பிடும் ஜோதி என்ற சொல்லில் இருந்து உருவானது. “ஒளிகளின் (அல்லது நட்சத்திரங்கள்) அறிவியல்.” இந்து சமய ஜோதிடம் கிரகங்களின் இயக்கங்கள் மற்றும் நிலைகளின் அடிப்படையில், நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளை ஆய்வு செய்து, பண்புகளை வரையறுத்து மங்களகரமான நேரங்களை தீர்மானிக்கிறது. §
Kadaitswami (Kadaitswāmī): கடையிற்சுவாமி “Marketplace swami.” நந்திநாத சம்பிரதாயத்தை சேர்ந்த கைலாச பரம்பரையின் 159 ஆவது சற்குரு. இவர் 1810 ஆம் ஆண்டு பிறந்து, அக்டோபர் 13 1891 அன்று மகாசமாதி அடைந்தார். கடையிற்சுவாமி தென் இந்தியாவின் பெங்களூரில் தான் வேலை செய்த நீதிபதி பணியை துறந்து ஒரு சந்நியாசியாக மாறி, இமய மலையில் இருந்து வந்த ரிஷியிடம் பயிற்சி பெற்றார். அந்த ரிஷி கடையிற்சுவாமியை இலங்கையில் சமயப்பணியை செய்ய அனுப்பி வைத்தார். அவர் பல வருடங்கள் ஊக்கமளிக்கும் உரைகள் வழங்கி மற்றும் ஸித்திகளை வெளிப்படுத்தி, இலங்கை சைவர்களை உயர்ந்த ஆன்மீக நிலைக்கு கொண்டு வந்தார். அவர் தனது பரம்பரையையில் அடுத்த சற்குருவாக செல்லப்பசுவாமியை நியமித்தார். கடையிற்சுவாமிக்கு தீட்சையின் போது முக்தியானந்தசுவாமி என்ற பெயர் வழங்கப்பட்டது. மேலும் தகவலுக்கு: கைலாச பரம்பரை, நாத சம்பிரதாயம்.§
Kadavul: கடவுள் “Beyond and within.” “உள்ளார்ந்தும் யாவும் கடந்த நிலையிலும்" இருக்கும் சிவபெருமானை குறிப்பிடும் ஒரு பழங்கால தமிழ் பெயர். மேலும் தகவலுக்கு: சிவா.§
kaif (kaīf»): கைஃப். சுத்தமான சாட்சி தன் மீது மட்டுமே கவனம் செலுத்தும் நிலை. கவனம் செலுத்துகிறோம் என்பதில் கவனமாக இருப்பதற்கு ஒரு சில நொடிகள் தேவைப்படும்; ஆனால் அதை நீண்டநேரம் தக்க வைத்துக் கொள்வதற்கு, பூர்வாங்கமாக சில வேலைகள் செய்யவேண்டி இருக்கும். §
Kailasa (Kailāsa): कैलास “Crystalline” or “abode of bliss.” கைலாயம், கைலாசம். இது மேற்கு திபெத்தில் இருக்கும் இமயமலை சிகரம்; சிவபெருமானின் பூலோக வாசஸ்தலமாக கருதப்படும் இந்த இடத்திற்கு, இந்துக்கள் மற்றும் திபெத் நாட்டு பெளத்தர்கள் யாத்திரை செல்கிறார்கள். §
Kailasa Parampara (Kailāsa Paramparā): कैलासपरंपरा கைலாச பரம்பரை. இது 163 சித்தர்களின் ஒரு ஆன்மீக பரம்பரையாக, நந்திநாத சம்பிரதாயத்த்தின் ஒரு முக்கிய பிரிவாக, அத்வைத சைவ சித்தாந்தத்தின் பழங்கால தத்துவத்தை பின்பற்றி வருகிறது. வரலாற்று குறிப்பின் படி, சுமார் 2,250 வருடங்களுக்கு முன்பாக, இந்த குருமார்களில் முதன்மையானவராக மகரிஷி நந்திநாதா (அல்லது நந்திகேஸ்வர) விளங்குகிறார். இவர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த திருமூலர் மற்றும் ஏழு மற்ற சீடர்களுக்கு சற்குருவாக இருந்தார் என்று திருமந்திரம் குறிப்பிடுகிறது. இந்த பரம்பரை பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து இயங்கி, இன்றும் நிலைத்து இருக்கிறது. இவர்களில் சமீபகாலத்தில் வாழ்ந்த மூத்த சித்தர் “இமய மலைகளில் இருந்து வந்த ரிஷி" என்று அழைக்கப்படுகிறார். அவர் அந்த புனிதமான மலைகளில் இருந்து வந்ததால், அவ்வாறு அழைக்கப்படுகிறார். இவர் தென் இந்தியாவில் வாழ்ந்த கடையிற்சுவாமிக்கு (சுமார் 1810–1875) பரம்பரையின் பொறுப்பை வழங்கினார். அந்த பொறுப்பை கடையிற்சுவாமி செல்லப்பசுவாமிக்கு (1840–1915) வழங்கினார். செல்லப்பசுவாமி அந்த பொறுப்பை சிவயோக சுவாமிக்கு (1872–1964) வழங்கினார். அவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிக்கு (1927–2001) பொறுப்பை வழங்கினார், மற்றும் அவர் 2001 ஆம் ஆண்டு தற்போது சற்குருவாக இருக்கும் சற்குரு போதிநாத வேலன்சுவாமிக்கு (1942–) பொறுப்பை வழங்கினார். மேலும் தகவலுக்கு: நாத சம்பிரதாய.§
Kali Yuga: कलियुग “Dark Age.” கலியுகம். பிரபஞ்சம் கடந்து செல்லும் நான்கு கட்டங்களின் தொடர் சுழற்சியில், கலியுகம் கடைசி யுகம் ஆகும். இந்த யுகத்தில் அறியாமை சக்தி முழு வீச்சில் இயங்கி, ஆன்மாவின் பல நுணுக்கமான புலன்கள் தெளிவற்று இருப்பதால், இதை இரவின் அதிக இருண்ட பகுதியுடன் ஒப்பிடலாம். மேலும் தகவலுக்கு: யுகம்.§
karehana (ka-reh-ā-na): கரேஹானா. இது சமஸ்கிருதத்தில் இடா என்று அழைக்கப்படும் மனோஉணர்வு ஓட்டத்தை குறிப்பிடுகிறது. இது இளஞ்சிவப்பு நிறத்தில் முதுகுத்தண்டில் கீழ்நோக்கி உடலின் இடது புறம் வரை செல்கிறது. பெண்மை குணத்துடன் அடங்கி இருக்கும் கரேஹானா, உயிர்சக்தியில் இருக்கும் தூல-உணர்ச்சியின் சக்தி ஆகும். §
karma: कर्म “Action,” “deed.” கர்மா, கர்மவினை. கர்மவினை என்பது 1) ஒரு செயல் அல்லது நடவடிக்கை; 2) காரண காரியத்தின் அடிப்படை; 3) ஒரு விளைவு அல்லது “செயலின் விளைவு" (கர்மபல) அல்லது விரைவில் செய்தவரையே வந்து சேரும் “பின்விளைவு" (உத்தரபல) ஆகியவற்றை குறிப்பிடுகிறது. வினை விதைத்தவன் வினை அறுப்பான். நாம் இந்த பிறவியில் செய்த செயல்களுக்கு, இந்த பிறவி அல்லது வரும் பிறவிகளில் பலனை அனுபவிப்போம். சுயநலம், வெறுப்பு நிறைந்த செயல்கள் (பாபகர்மா அல்லது குகர்மா) வேதனையை விளைவிக்கும். நல்ல செயல்கள் (புண்ணியகர்மா அல்லது சுகர்மா) அன்பு கலந்த எதிர்வினைகளை கொண்டு வரும். கர்மவினை மூன்று வகைப்படும்: சஞ்சித, பிராரப்த மற்றும் க்ரியாமன. —சஞ்சித கர்மா: “சேகரிக்கப்பட்ட செயல்கள்.” இந்த பிறவி மற்றும் முற்பிறவிகளில் செய்த கர்மவினைகளின் கூட்டுத்தொகை. —பிராரப்த கர்மா: “தொடங்கப்பட்ட செயல்கள்; இயக்கத்தில் இருக்கும் செயல்கள்.” பலன்களை வழங்கிக்கொண்டு ஒருவரின் உடற்பண்புகள், தனிப்பட்ட மனநிலைகள் மற்றும் நட்புறவுகள் உட்பட இந்த பிறவியில் நடைபெறும் சம்பவங்கள் மற்றும் சூழ்நிலைகளை உருவாக்கும் சஞ்சித கர்மவினையின் பகுதி. —க்ரியாமன கர்மா: “உருவாக்கிக்கொண்டு இருக்கும் கர்மவினை.” §
karma yoga: कर्मयोग “Union through action.” கர்மயோகம். சுயநலமற்ற சேவை. §
கவாய் ஆதீனம் (Kauai Aadheenam): 1970 ஆம் ஆண்டு சிவாய சுப்பிரமுனியசுவாமி ஸ்தாபனம் செய்த மடம் மற்றும் கோயில் கலந்த வளாகம். இது சைவ சித்தாந்த தேவாலயத்தின் சர்வதேச தலைமையகமாக விளங்குகிறது. §
kavadi (kāvadi): காவடி. குறிப்பாக தை பூசத்திருவிழாவின் போது பக்தர்கள் முருகப்பெருமான் கோயிலுக்கு சென்று காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்வார்கள். இந்த காவடியில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்ய ஒரு நீளமான தடியின் இரு முனைகளிலும் பால், தேன், இளநீர் குடங்கள் தொங்க விடப்பட்டு, மேலே அழகாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும். திருவிழாவின் போது இந்த காவடிகளின் பெரிய அணிவகுப்பு நடைபெறும். வழக்கமாக தெய்வத்திடம் வேண்டிக்கொள்பவரின் நாக்கு அல்லது உடலின் மற்ற பகுதிகள் ஒரு சிறிய வெள்ளி வேல் அல்லது வளைந்த வெள்ளி ஊசிகளால் குத்தப்பட்டு இருக்கும். §
kavi (kāvi): காவி “Ocher-saffron color.” கங்கை நதிக்கரையில் அமர்ந்து தியானம் செய்யும் அல்லது வாழும் சாதுக்கள் அணியும் உடையின் பெயர். இதன் காரணமாக சந்நியாசி அணியும் உடையும் காவி நிறத்தில் இருக்கிறது. இதற்கு சமஸ்கிருதத்தில் கஷாய என்று பெயர். §
khadi (khādī): खादी “Cotton.” காதி, கதர். இந்தியாவில் கைகளால் நூற்க்கப்பட்டு கைகளால் நெய்த துணி. இன்றைய பயன்பாட்டிற்கு காதியின் மூலப்பொருள்களாக பருத்தி, பட்டு அல்லது கம்பளி பயன்படுத்தப்படுகின்றன. அவை ஒரு கைராட்டினத்தில் நூற்க்கப்படும். §
kirtana (kīrtana): कीर्तन “Praising.” கீர்த்தனை. இறைவன், மகாதேவர்கள் மற்றும் குருவை போற்றும் தெய்வீக பாடல்கள் மற்றும் ஆடல்கள். இது பல இந்து சமய பிரிவுகளில் கூட்டு வழிபாட்டில் ஒரு முக்கிய வடிவமாக இருக்கிறது. §
kosha (kośa): कोश “Sheath; vessel, container; layer.” கோஷம், கோசம். ஆன்மா தத்துவரீதியாக, ஐந்து கோசங்கள் மூலம் பல்வேறு லோகங்கள் அல்லது இருப்பின் பல்வேறு நிலைகளில் ஒரே சமயத்தில செயல்படுகிறது. அவை சில சமயங்களில், ஒரு வெங்காயத்தில் இருக்கும் தோள்களுடன் ஒப்பிடப்படுகின்றன. கோசங்களில் அதிகரிக்கும் நுணுக்கங்களின் தன்மையை அடிப்படையாக கொண்டு, அவை பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன. —அன்னமய கோசம் (“உணவால் உருவான கோசம்”): ஆன்மாவின் புலன்களை ஒப்பிடும் போது, தூல அல்லது காந்த உடல் மிகவும் அடர்த்தியாக இருந்தாலும், பதினான்கு சக்கரங்களால் அதில் மட்டுமே செயல்பட முடியும் என்பதால், அது ஆத்ம ஞானம் மற்றும் பரிணாம வளர்ச்சிக்கு அத்தியாவசியமாக இருக்கிறது. மேலும் தகவலுக்கு: சக்கரம். —பிராணமய கோசம் (“பிராணனை உள்ளடக்கிய கோசம்”): இது பிராணன் அல்லது ஆரோக்கிய உடல், அல்லது ஆகாச உடல் அல்லது ஆகாச நகல் என்றும் அழைக்கப்படுகிறது. இது உயிர், சுவாசம் மற்றும் உடல் ஆற்றலின் மூலமாக இருப்பதால், இது தூல உடலுடன் இணைந்து இருந்து, தூல உடல் மற்றும் சூட்சும உடலுக்கு இடையே தொடர்பாக விளங்குகிறது. பிராணமய கோசத்தில் “அத்தியாவசிய காற்றுகளாக” இருக்கும் ஐந்து அடிப்படை ஓட்டங்கள் அல்லது வாயுக்களாக பிராணன் இயங்குகிறது. மரணத்தின் போது தூல உடலில் இருந்து பிராணமய கோசம் பிரிகிறது. மேலும் தகவலுக்கு: பிராணன். —மனோமய கோசம் (“மனதால் உருவான கோசம்”): கீழ்நிலை சூட்சும உடலை சார்ந்த மனஸில் இருந்து தோன்றும் “சிந்தனை, விருப்பம், ஆசை." சாதாரண சிந்தனை, ஆசை மற்றும் உணர்ச்சியின் உள்ளுணர்வு-அறிவுணர்வு கோசம். இது புலனுணர்வு உறுப்புக்களாக இருக்கும் ஜிதேந்திரியங்கள் மற்றும் செயற்கருவிகளாக இருக்கும் கர்மேந்திரியங்களின் இருப்பிடமாக விளங்குகிறது. தூல உடலின் வடிவத்தை எடுத்துக்கொண்டு மனோமய கோசம் வளர்கிறது மற்றும் அது மறுபிறவிக்கு முன்பாக அந்தர்லோகங்களில் அந்த வடிவத்தை கைவிடுகிறது. இது 1) காந்த சக்தி-காரண கோசம் (புத்தி) மற்றும் 2) காந்த சக்தி-சூட்சும கோசம் (மனஸ்) என்ற இரண்டு அடுக்குகளுடன் அறியப்படுகிறது. —விஞ்ஞானமய கோசம் (“அறிவெழுச்சியின் கோசம்”): இது மனம் அல்லது அறிவாற்றலுடைய இயலுணர்வு கோசம், மற்றும் இது ஆன்மீக காந்த கோசம் என்றும் அழைக்கப்படுகிறது. இது புரிந்துணர்வு, அறிந்த நிலை, நேரடி அறிவெழுச்சி, ஞானம், இயலுணர்வு மற்றும் ஆக்கத்திறனை உள்ளடக்கிய விஞ்ஞானமாக இருக்கும் உயர்ந்த சிந்தனையின் வாகனமாக இருக்கிறது. —ஆனந்தமய கோசம் (“பேரின்ப உடல்”): இயலுணர்வு-மெய்ஞ்ஞான கோசம் அல்லது ஆன்மீக-காரண உடல். அதிக உட்புறமாக இருக்கும் இந்த ஆன்மாவின் வடிவம் (ஸ்வரூப) எல்லா உயிர், நுண்ணறிவு மற்றும் உயர்ந்த புலன்களின் முடிவான அடிப்படையாக விளங்குகிறது. இது பரசக்தி (தூய உணர்வு) மற்றும் பரசிவத்தின் (பரப்பிரம்மம்) சாரமாக விளங்குகிறது. மேலும் தகவலுக்கு: ஆன்மா.§
kovil: கோவில்.§
koyil: கோயில். ஆலயத்தை குறிப்பிடும் இன்னொரு சொல். மேலும் தகவலுக்கு: கோவில்.§
kriya pada (kriyā pāda): क्रियापाद “Stage of religious action; worship.” கிரியா பாதம். வழிபாடு மற்றும் பக்தியின் நிலை, சைவ சித்தாந்தத்தில் ஸித்தி அடையும் பாதையில் இருக்கும் நான்கு முற்போக்கான நிலைகளில் இரண்டாவதாக இருக்கும் நிலை. மேலும் தகவலுக்கு: பாதம். §
kriya shakti (kriyā śakti): क्रियाशक्ति “Action power.” கிரியா சக்தி. செயலில் இருக்கும் பிரபஞ்ச சக்தி. சிவபெருமானின் மூன்று அடிப்படை சக்திகளில் ஒன்று. §
kulaguru: कुलगुरु “Family preceptor” or “family teacher.” குலகுரு. குலகுரு என்பவர் குடும்பத் தலைவர்கள் மூலமாக கூட்டு குடும்பங்களை வழிநடத்தி ஆன்மீக பாடத்தை வழங்குகிறார். அவர் ஒரு சற்குருவாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை.§
kulam: குலம் “Family” or “clan.” குலம். இந்த புத்தகத்தில், இந்த சொல் கவாய் ஆதீனத்தில் இருக்கும் ஐந்து துறவற குழுக்களை குறிப்பிடுகிறது. ஒவ்வொரு குழுவும் ஆற்றவேண்டிய குறிப்பிட்ட சில தொண்டுகள் மற்றும் பொறுப்புக்கள் இருக்கின்றன, மற்றும் இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து மடத்தின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. §
kulapati: कुलपति“Family head.” குலபதி. இது குடும்பத் தலைவர் அல்லது சைவ சித்தாந்த தேவாலயத்தில் அங்கத்தினரகளாக இருக்கும் கூட்டு குடும்பம் மற்றும் தனது மேற்பார்வையில் இருக்கும் மாணவர்களின் தலைவராக இருக்கும் சமயப்பணியாளரை குறிக்கிறது. அவருடைய மனைவி குலமாதா என்று அழைக்கப்படுகிறார்.§
குலபதி குடும்பம் (kulapati family): சைவ சித்தாந்த தேவாலயத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட குலபதி அல்லது சமயப்பணியாளரின் தலைமையில் இருக்கும் மாணவர்கள் மற்றும் தேவாலய உறுப்பினர்களின் கூட்டு குடும்பம்.§
kumbha(m): कुम्भ “Jar or pot; water vessel.” கும்பம். வழக்கமாக உலோகம் அல்லது களிமண்ணில் தயாரிக்கப்படும் கும்பங்கள், கோயில் பூஜைகள் மற்றும் ஹோமங்களில் பயன்படுத்தப்படுகின்றன. §
kumbhabhisheka(m) (kumbhābhisheka): कुम्भाभिषेक “Water pot ablution.” கும்பாபிஷேகம். ஒரு புதிய கோயிலில் நடைபெறும் முறையான பிரதிஷ்டை மற்றும் (பன்னிரண்டு வருட இடைவெளியில்) புதுப்பித்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழா. தலைகீழான குடம் அல்லது கும்பம் போல காட்சியளிக்கும் கோயில் கோபுர கலசங்கள் மீது புரோகிதர்கள் புனிதமான கலச நீரை ஊற்றி சடங்குகளை நிறைவு செய்கின்றனர். §
kundalini (kuṇḍalinī): कुण्डलिनी “She who is coiled; serpent power.” குண்டலினி சக்தி. “சுருண்டு இருப்பவள்; பாம்பின் சக்தி.” நாம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இந்த பழங்கால பிரபஞ்ச சக்தி, முதுகுத்தண்டின் அடியில் முதலில் ஒரு பாம்பைப் போல சுருண்டு இருக்கிறது, மற்றும் இது யோகசக்தியின் பயிற்சியின மூலம், இறுதியாக சுஷும்னா நாடி வழியாக எழுச்சி பெறுகிறது. குண்டலினி எழுச்சி பெறும் போது, அது வரிசையாக ஒவ்வொரு சக்கரத்தையும் விழிப்படைய செய்கிறது. அந்த சக்தி சஹஸ்ரஹாரத்தின் மத்தியில், பிரம்ம துவாரம் வழியாக துளைத்துக்கொண்டு நுழையும் போது, நிர்விகல்ப சமாதி என்கிற ஞானோதயம் தோன்றுகிறது. அதன் பிறகு குண்டலினி சக்தி, ஏழு சக்கரங்களில் ஏதாவது ஒரு சக்கரத்திற்கு திரும்பி ஓய்வெடுக்கிறது. குண்டலினி மீண்டும் சஹஸ்ரஹாரத்திற்கு திரும்பி இந்த சக்கரத்தில் தன்னை சுருட்டிக்கொள்ளும் போது, சிவசாயுஜ்ய நிறைவடைகிறது. §
kundalini yoga (kuṇḍalinī yoga): कुण्डलिनीयोग “Uniting the serpent power.” குண்டலினி யோகம். திட்டமிட்டு குண்டலினி சக்தியை விழிப்படைய செய்து அதை சஹஸ்ரஹார சக்கரத்திற்கு வழிநடத்தி செல்ல, இராஜ யோகத்தின் அங்கமாக விளங்கும் மேம்பட்ட தியான பயிற்சிகள் மற்றும் சாதனா உத்திகளை பூர்த்தி செய்தல். இந்த யோகம் தனது உயர்வான நிலையில், தனது சொந்த தகுதியின் காரணமாக முயற்சி செய்தல் மற்றும் கற்பித்தலின் ஒரு பிரத்யேக அமைப்பாக இல்லாமல், சிறப்பாக செய்த சாதனாக்கள் மற்றும் தவத்தின் இயல்பான விளைவாக இருக்கிறது. §
kutir (kuṭīr): कुटीर् “Cottage” or “hut.” குடில். “குடிசை.” §
kuttuvilakku: குத்துவிளக்கு. ஒரு கோவில், பூஜையறை அல்லது வீட்டில் நிலைகுத்தாக இருக்கும் ஒரு பஞ்சலோக விளக்கின் மேற்பகுதியில் நெய் அல்லது நல்லெண்ணெயை தாங்குவதற்கு ஒரு குழிவான பகுதி அமைந்திருக்கும். இந்த வட்ட வடிவ விளிம்பில் சமமான இடைவெளியில் திரிகளை வைக்க நீட்சியான அமைப்புக்கள் இருக்கும். §
ஸ்மார்த்த இந்து சமயம் (Liberal Hinduism): நியோ இந்திய மதத்திற்கு நெருக்கமான தொடர்புடையது. மேலும் தகவலுக்கு: நியோ- இந்திய மதம், ஸ்மார்த்த இந்து சமயம்.§
முக்தி (liberation): பாசத்தின் பிடியில் இருந்து விடுபடும் மோக்ஷத்தை குறிக்கிறது. இதன் பிறகு ஆன்மா சம்சாரத்தில் இருந்து முக்தி (பிறப்பு இறப்பின் சுழற்சி) பெறுகிறது. சைவ சித்தாந்தத்தில் பாசம் என்பது, ஆன்மா பரிணாம வளர்ச்சி அடைவதற்காக அதை மறுபிறவியின் சுழற்சியில் வரையறுத்து கட்டுப்படுத்தும் ஆணவம், கர்மவினை மற்றும் மாயை என்ற மும்மலங்கள் ஆகும். மோக்ஷம் என்பது இந்த மலங்களின் தடை செய்யும் சக்தியில் இருந்து ஆன்மா விடுதலை பெறுவதை குறிக்கிறது. அவை இந்த நிலையில் முற்றிலும் மறையாவிட்டாலும், ஆன்மாவிற்கு தடை விளைவிக்கும் அல்லது கட்டுப்படுத்தும் சக்தி இல்லாமல் இருக்கிறது. §
Linga(m) (Liṅga): लिङ्ग “Mark.” லிங்கம். மேலும் தகவலுக்கு: சிவலிங்கம், சுயம்பு லிங்கம். §
liunasi (līūnasī): (Shum) லியுநாசி (ஷும்): தூல உடல் மற்றும் சூட்சும உடலுக்குள் இருக்கும் ஒருவரது நாடியில் ஓடும் உயிர்சக்தியை உணர்தல்; உடலுக்குள்ளும் அதனை சுற்றியும் ஓடும் சக்தியின் மீது விழிப்புணர்வை பெறுதல்.§
லோகோவோர் (locavore): தான் வாழும் பகுதிக்கு அருகாமையில் (அந்த இடத்தை பொறுத்து, 100 முதல் 250 மைல்கள் வரை) விளையும் உணவை (முழுமையாக இல்லாவிட்டாலும் முக்கிய உணவை) மட்டுமே சாப்பிடுபவர். உள்ளூரில் விளைந்த உணவை அருந்துவதால், பெரும்பாலான லோகோவோர்கள் தங்களுக்கும் தங்களுக்கு உணவு வழங்கும் இடங்களுடன் வலுவான தொடர்பை ஏற்படுத்தி, தொழில்மயமாக்கம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, தங்களது உள்ளூர் பொருளாதாரம் மேம்படுத்துவதற்கு ஆதரவு அளிக்கிறார்கள். §
loka: लोक “World, habitat, realm, or plane of existence.” From loc, “to shine, be bright, visible.” லோகம். “உலகம், வாழ்விடம், பிரபஞ்சம் அல்லது உள்பொருள் இருக்கும் பகுதி.” இந்த சொல் “பிரகாசிக்க, கண்ணுக்கு தென்படுகிற” என்பதை குறிக்கும் லோச் (लॊच्) என்ற சொல்லில் இருந்து உருவானது. வெளிப்பட்ட உள்பொருளின் ஒரு பரிணாமம்; பிரபஞ்சத்தில் ஒரு பகுதி. ஒவ்வொரு லோகமும் ஒரு குறிப்பிட்ட உணர்வின் தொடர்ச்சியை பிரதிபலிக்கிறது அல்லது உள்ளடக்கியுள்ளது. மூன்று அடிப்படை லோகங்கள்: 1) பூலோகம்: “லௌகீக உலகம்.” ஐம்புலன்களுக்கு புலப்படும் உலகம், இது உலகங்களில் மிகவும் பருமனாக இருப்பதால், இது பரு உலகம் என்றும் அழைக்கப்படுகிறது. 2) அந்தர்லோகம்: “உட்புறமாக இருக்கும் உலகம் அல்லது மத்தியில் இருக்கும் உலகம்.” இது நுணுக்கமான அல்லது சூட்சும லோகம் என்று அழைக்கப்படுகிறது. இது தூல மற்றும் காரண லோகங்களுக்கு மத்தியில் இருக்கும் பரிணாமமாகவும், ஆன்மாக்களின் சூட்சும உடல்கள் மறுபிறவிகளுக்கு மத்தியில் அல்லது உறங்கும் போது தற்காலிகமாக தங்கும் இடமாகவும் இருக்கிறது. 3) சிவலோகம்: “சிவபெருமான்,” மற்றும் மகாதேவர்கள் மற்றும் உயர்வாக வளர்ச்சி அடைந்த ஆன்மாக்களின் லோகம். அந்தர்லோகத்தின் ஆழத்தில் இருக்கும் காரண லோகம் ஒரு உயர்நிலை அதிர்வுடன் இருக்கிறது, மற்றும் இது மெய்ஞ்ஞான நிலை மற்றும் மிகவும் தூய்மையான சக்திகளின் உலகமாக இருக்கிறது. ஒளியின் ஆன்மீக துகள்களால் சுயமாக பிரகாசிக்கும் உடல்களுடைய ஆன்மாக்கள் வாசம் செய்யும் இந்த லோகம், ஆக்கத்திறன் மற்றும் இயலுணர்வின் லோகமாகவும், பிரபஞ்சம் நுணுக்கமான நிலையில் இருக்கும் லோகமாகவும் இருக்கிறது. இந்த லோகத்தில் சிவபெருமானும் மகாதேவர்களும் இயங்கி, அனைத்து லோகங்களின் பரிணாம வளர்ச்சிக்கு அன்புடன் வழிகாட்டி, நிரந்தரமாக பாய்ந்து செல்லும் அருளை வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். §
Mahabharata (Mahābhārata): महाभारत “Great Epic of India.” மகாபாரதம். உலகின் மிகவும் நீளமான காவியம். பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளான பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடைபெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காவியம் ஆகும். இந்த போர் தற்போதைய தில்லிக்கு அருகில் குருக்ஷேத்திரத்தில் சுமார் கி.மு. 1424 ஆம் ஆண்டு நடைப்பெற்றதாக ஒரு கருத்து நிலவுகிறது. இந்த மகாபாரதக் காவியம் வைணவர்கள் மற்றும் ஸ்மர்த்த சமயத்தை சேர்ந்தவர்களால் ஒரு சாஸ்திரமாக மதிக்கப்படுகிறது. §
Mahadeva (Mahādeva): महादेव “Great shining one;” “God.” மகாதேவர். சிவலோகத்தில் தங்களது இயல்பான, சுயமாக பிரகாசிக்கும் ஆன்மாவின் உடல்களில் வாழும் சிவபெருமான் அல்லது உயரிய பரிணாம வளர்ச்சியுடன் இருக்கும் உயிர்சக்திகளை குறிப்பிடுகிறது. சிவபெருமான் தனது முழு நிறைவான நிலையில் ஆதி ஆன்மாவாக, அந்த மகாதேவர்களில் ஒருவராக இருந்தாலும், அவர் மட்டுமே படைக்கப்படாமல், மற்ற மகாதேவர்களின் தாய்-தந்தை மற்றும் விதியாக இருக்கிறார். அவர் பரமேஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார். அவர் ஆதி ஆன்மாவாக இருக்க, மற்ற மகாதேவர்கள் தனிப்பட்ட ஆன்மாக்களாக இருக்கிறார்கள். §
maharishi (maharshi): महर्षि “Great seer.” மகரிஷி. தலைசிறந்த மற்றும் அதிக செல்வாக்கு நிறைந்த சித்தர்களுக்கு வழங்கப்படும் பட்டம்.§
mahasamadhi (mahāsamādhi): महासमाधि “Great enstasy.” மகாசமாதி. ஒரு மகான் தூல உடலை விட்டு வெளியேறுவதை அல்லது அவரது மரணத்தை குறிக்கும் நிகழ்வு. இந்த நிகழ்வில் பங்குபெறுவது மிகப்பெரிய வரமாக கருதப்படுகிறது. மேலும் இந்த சொல், ஒரு மகானின் உடல் கல்லறையில் வைக்கப்படும் புனிதமான இடத்தையும் குறிப்பிடுகிறது. §
Mahasivaratri (Mahāśivarātri): महाशिवरात्रि “Siva’s great night.” மகாசிவராத்திரி. சைவ சமயத்தை சேர்ந்தவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் இந்த விரதம், பிப்ரவரி-மார்ச் மாதத்தில் பௌர்ணமிக்கு முந்தைய நாள் இரவு கொண்டாடப்படுகிறது. அன்று இரவு முழுவதும் விழித்து இருந்து விரதம் இருப்பது மட்டுமில்லாமல் சுலோகம் சொல்வது, பிரார்த்தனை மற்றும் தியானம் செய்வது மற்றும் சிவபெருமானை எல்லா இருப்புக்களின் மூலமாகவும் பரமாத்துமாவாகவும் வழிபடும் மற்ற பழக்கங்களும் கடைப்பிடிக்கப்படுகின்றன. §
mahavakya(m) (mahāvākya): महावाक्य “Great saying.” மகாவாக்கியம். சாஸ்திரம் அல்லது ஒரு தெய்வீக புருஷர் வழங்கிய ஒரு வலுவான சூத்திரம். நான்கு மிகவும் பிரபலமான உபநிடத மகாவாக்கியங்கள் பின்வருமாறு: பிரக்ஞானம் பிரம்ம (“தூய உணர்வே பிரம்மம்”–ஐத்ரேய உபநிடதம்), அஹம் பிரம்மாஸ்மி (“நான் பிரம்மமாக இருக்கிறேன்”—பிரகதாரண்க உபநிடதம்), தத் த்வம் அஸி ( “அந்த பிரம்மமாக நீ இருக்கிறாய்"—சாந்தோக்ய உபநிடதம்) மற்றும் அயம் ஆத்மா பிரம்ம (“இந்த ஆன்மா பிரம்மம்”—மாண்டூக்ய உபநிடதம்).§
Maheshvara (Maheśvara): महेश्वर “Great Lord.” மகேஸ்வரன். சைவ சித்தாந்தத்தில், பரமேஸ்வரனிற்கு (ஆதி ஆன்மா) ஐந்து அம்சங்கள் அல்லது உருவங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு அம்சமும் இறைவனின் ஐந்து சக்திகளில் ஒன்றுடன் தொடர்பில் இருக்கிறது. ஆதி ஆன்மாவாக மற்றும் தனிப்பட்ட கடவுளாக இருக்கும் சிவபெருமானுக்கு மகேஸ்வரன் ஒரு பிரபல பெயராகவும் இருக்கிறது. மேலும் தகவலுக்கு: பரமேஸ்வரன்.§
mala: मल “Impurity.” மலம். “அசுத்தம்.” சைவ சமயத்தில் பாசம் என்று அழைக்கப்படும் ஆணவம், கர்மவினை மற்றும் மாயை என்ற மூன்று மலங்களை குறிப்பிடப் பயன்படும் ஒரு முக்கியமான சொல். இந்த மலங்கள் ஆன்மாவை கட்டுப்படுத்தி, அது தனது உண்மையான தெய்வீகத் தன்மையை அறிந்து கொள்வதில் இருந்து தடை செய்கிறது. §
mala (mālā): माला “Garland.” மாலை. இந்த சொல் வழக்கமாக ருத்திரட்சம், துளசி , சந்தனம் அல்லது படிகத்தில் செய்த ஜெப மாலையை குறிப்பிடுகிறது. மேலும் இது பூமாலையை குறிப்பிடவும் பயன்படுகிறது. §
mambashum (mambashūm): (Shum) மாம்பாஷும் (ஷும்): தியானம் செய்யும் போது ஆய்வு செய்ய குறிப்பிட்ட மனதின் பகுதிகளை வரையறுக்கும், ஒரு ஷும் மொழி வரைபடம் அல்லது சித்திரம். §
mandapa(m) (maṇḍapa): मण्डप மண்டபம். இது “அலங்கரி” என்பதை குறிக்கும் மண்ட் என்ற சொல்லில் இருந்து உருவானது. கோயில் சுற்றுச்சுவர்; கோயில் வளாகம், திறந்த கூடம் அல்லது அறை. ஒரு பெரிய கோயிலில் நுழையும் போது, தொடர்ச்சியான மண்டபங்களை கடந்து செல்கிறோம். அதில் ஒவ்வொன்றும் ஒரு பெயரை கொண்டு அமைந்துள்ளது. உ.தா. முகமண்டபம், “கோயிலுக்கு முன்னிருக்கும் மண்டபம்.” §
mantra(m): मन्त्र “Mystic formula.” மந்திரம். “சூட்சும சூத்திரம். வழக்கமாக சாஸ்திரத்தில் இருந்து பெறப்பட்டு, விஷேச சக்தியுடன் இருக்கும் ஒரு சப்தம், எழுத்து, சொல் அல்லது சொற்றொடர். §
matha (maṭha): मठ “Monastery.” மடம். “மடாலயம்.” மேலும் தகவலுக்கு: மடாலயம்.§
mathavasi (maṭhavāsi): मठवासि “Monastic; monastery dweller.” மடவாசி. “துறவி; மடத்தில் வாழ்பவர்.” மேலும் தகவலுக்கு: துறவி.§
maya (māyā): माया “She who measures;” or “mirific energy.” மாயை. “மருட்சி;" அல்லது “அற்புதங்களை விளைவிக்கும் ஆற்றல்.” சைவ சித்தாந்தத்தில், சிவபெருமானிடம் இருந்து வெளிவந்த சாரத்தில் இருந்து உருவத்தின் உலகம் வெளிப்பட்டுள்ளது. இதனால் எல்லா படைப்புகளும் மாயை என்றும் அழைக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் ஆக்கப்பூர்வ சக்தியாக, வெளிப்பாட்டின் கோட்பாடாக இருந்து தொடர்ந்து ஆக்கல், காத்தல் மற்றும் அழித்தல் என்கிற செயல்முறையில் இருக்கிறது. §
தியானம் (meditation): நீடித்த ஒருமுகச் சிந்தனை. தியானம் என்பது அமைதியான, கவனமான, ஆற்றல்நிறைந்த ஒருமுகச்சிந்தனையுடன் இருக்கும் நிலையை குறிப்பிடுகிறது. இந்த நிலையில் சாட்சி ஒரு பொருளின் மீது கவனம் செலுத்துவதால் அல்லது ஒரு குறிப்பிட்ட சிந்தனையுடன் இருப்பதால், உள்ளத்தில் புதிய அறிவு மற்றும் நுண்ணறிவுகள் விழிப்படைகின்றன. §
ஆண்டி (mendicant): ஒரு பிச்சைக்காரன்; ஒரு இடத்தில் நிரந்தரமாக இல்லாமல் யாசகம் செய்து வாழும் துறவி.§
தேவலோகம், மகரலோகம் (mental plane): சூட்சும உலகில் இருக்கும் புனிதமான நிலைகளை குறிப்பிடுகிறது. இது அனாஹத சக்கரத்தின் லோகம் ஆகும். இந்த லோகத்தில் ஆன்மா, விஞ்ஞானமய கோசம் எனப்படும் அறிவெழுச்சி கோசத்தில் மூடி மறைக்கப்பட்டு இருக்கிறது. §
மீமெய்யியல் (metaphysics): 1) முதன்மையான காரணங்கள் மற்றும் யதார்த்தத்தின் இயல்பை ஆய்வு செய்யும் தத்துவம் ஆகும். 2) சூட்சும ஞானத்தை சார்ந்த அறிவியல். §
Meykandar: மெய்கண்டார் “Truth seer.” 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் இறையியல் வல்லுநர். இவர் சிவஞானபோதம் என்கிற தத்துவ நூலின் ஆசிரியர் (அல்லது ரௌரவ ஆகமத்தை மொழிபெயர்த்தவர்). இவர் பன்மைவாத சைவ சித்தாந்தத்தின் மெய்கண்டார் சம்பிரதாயத்தை தோற்றுவித்தார். §
மனம் (ஐந்து நிலைகள் ) (mind (five states)): ஐந்து பாகங்களாக இருக்கும் மனதைப் பற்றிய ஒரு கண்ணோட்டம். —உணர்வுள்ள மனம் (conscious mind) (ஜாக்ரத் சித்த, “விழிப்புடன் இருக்கும் உணர்வு”): சாதரணமாக, விழித்திருந்து சிந்திக்கும் மனநிலை. —அடிமனம் (சம்ஸ்கார சித்த, “பதிவு செய்யும் மனம்”): உணர்வுள்ள மனதிற்கு “அடியில்" இருக்கும் மனதின் பகுதி; (உணர்வுடன் நினைவுக் கூர்ந்தாலும் அல்லது நினைவுக்கூராவிட்டாலும்) இது அனுபவங்கள் அனைத்தையும் பதிவு செய்யும் இடமாக சேமிப்புக் கிடங்காக இருக்கிறது. இது கடந்தகால பதிவுகள், எதிர்வினைகள் மாற்றும் ஆசைகளை தக்க வைத்து இருக்கிறது. இது மேலும் தனிச்சையான உடலியக்க செய்முறைகளின் இருப்பிடமாகவும் விளங்குகிறது. —மறைந்துள்ள பண்புகளின் மனம் (subsubconscious mind) (வாசன சித்த): ஒரே அதிர்வு விகிதத்துடன் இருக்கும் இரண்டு சிந்தனைகள் அல்லது அனுபவங்கள் வெவ்வேறு சமயங்களில் அடியுணர்வுக்குள் அனுப்பப்பட்டு, ஒன்றாக கலந்து, புதிய மற்றும் முற்றிலும் மாறுபட்ட அதிர்வுடன் தோன்றும் ஒரு அடிமனதின் பகுதி. —மெய்ஞ்ஞான மனம் (superconscious mind)(காரண சித்த): மனதின் ஒளி; ஆன்மாவிடம் இருக்கும் எல்லாம் அறிந்த நுண்ணறிவு. மெய்ஞ்ஞானம் தனது அதிக ஆழமான நிலையில் பராசக்தியாக, அல்லது சச்சிதானந்தமாக, சிவபெருமானின் தெய்வீக மனமாக இருக்கிறது. —துணைமெய்ஞ்ஞான மனம் (subsuperconscious mind) (அனுகரண சித்த): இந்த மெய்ஞ்ஞான மனம் உணர்வுள்ள மற்றும் அடியுணர்வு நிலைகளில் செயல்பட்டு இயலுணர்வு, தெளிவு மற்றும் நுண்ணறிவை கொண்டு வருகிறது. §
மனம் (மூன்று அம்சங்கள்) (mind (three phases)): மனம் உள்ளுணர்வு, அறிவுணர்வு மற்றும் மெய்ஞ்ஞானமாக இருக்கிறது என்கிற கண்ணோட்டம். —உள்ளுணர்வு மனம் (instinctive mind) (மனஸ் சித்த): ஆசையின் இருப்பிடமாக இருந்து ஞானேந்திரியங்கள் மற்றும் கர்மேந்திரியங்களை நிர்வகிக்கிறது. —அறிவுணர்வு மனம் (intellectual mind) (புத்தி சித்த): சிந்தனை மற்றும் நுண்ணறிவும் புலன். —மெய்ஞ்ஞான மனம் (superconscious mind) (காரண சித்த): இது இயலுணர்வு, இரக்க எண்ணம் மற்றும் ஆன்மீக ஆதாரத்தின் நிலை ஆகும். இதன் மிகவும் புனிதமான சாரமாக எல்லாம் அறிந்து, நீக்கமற இருக்கும் உணர்வாக, யாவும் கடந்து, சுயமாக பிரகாசித்து, எல்லா ஆன்மாக்களுக்கும் தெய்வீக மனமாக இருக்கும் பராசக்தி என்கிற சச்சிதானந்தம் விளங்குகிறது. §
moksha: मोक्ष “Liberation.” முக்தி, மோக்ஷம். கர்மவினையை கரைத்து, ஆத்ம ஞானம் என்கிற பரசிவத்தை குறிக்கும் நிர்விகல்ப சமாதியை அடைந்ததும், சம்சார என்கிற பிறப்பு இறப்பின் சுழற்சியில் இருந்து பெறும் விடுதலையை குறிக்கிறது. §
மடம் (monastery): “Place of solitariness.” “தனியாக இருக்கும் இடம்.” இது லெமூரியா கண்டத்தில் இருந்து இந்தியாவின் இந்து கலாச்சாரத்திற்கு கொண்டு வரப்பட்ட பழங்கால பாரம்பரியம் ஆகும். இந்த பாரம்பரியத்தில், ஒரு புனிதமான இடத்தில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள், தீவிரமான விரதங்களுடன் இருந்து, ஆத்ம ஞானம் பெறுவதற்காக ஒரு சமூகமாக தங்கள் பிறவி கர்மவினைகளை அனுஷ்டானம் செய்கிறார்கள். அவர்கள் கடினமான விரதங்களுடன் முயற்சி செய்கிறார்கள். பெரும்பாலான மடங்கள் ஆண்களின் குழுக்களாக இருந்தாலும், இந்திய பாரம்பரியத்தில் பெண்களை தலைவிகளாக கொண்ட பெண் துறவிகளின் மடங்களும் உள்ளன. ஆண்கள் மற்றும் பெண்களின் மடங்கள் பல மைல்கள் இடைவெளியில் அமைந்து இருக்கும். மடவாசிகள் எனும் சொல், தங்களது ஞானோதய பாதையில் ஒரு குறிப்பிட்ட துணை மெய்ஞ்ஞான நிலையை அடைந்து, அந்த நிலையை தக்க வைத்துக்கொள்ள விரும்பும் தனிநபர்களை குறிக்கிறது. அதனால் அவர்கள் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியாக உலகில் இருக்கும் பல்வேறு தொடர்புகளை துண்டித்து, ஆழ்சிந்தனையுடன் துறவற வாழ்க்கையில் நிலைத்து இருக்க முடிகிறது. சம்சாரி வாழ்க்கை அல்லது இரு பாலினத்தார் ஒன்றாக சேர்ந்து வாழும் ஆசிரம வாழ்முறையை காட்டிலும், ஒருவர் தனது ஆன்மாவை அதிக விரைவாகவும் முழுமையாகவும் விரிவாக்கம் செய்ய சுயமாக வகுத்துக்கொண்ட கட்டுப்பாடுகளில் நிலைத்து இருப்பது மடவாசி வாழ்க்கையின் குறிக்கோள் ஆகும். மடத்தில் வசிப்பவர்கள், பாலியல் சக்திகளை உருமாற்றம் செய்ய தங்களை அர்பணித்துக் கொள்கிறார்கள், அதனால் மனத்துறவு வலுவாக கடைப்பிடிக்கப்படுகிறது மற்றும் எதிர்பாலினத்தாருடன் எந்த தொடர்பும் இருப்பது இல்லை. §
அத்வைதம் (monism): “Doctrine of oneness.” “ஒருமைவாதக் கோட்பாடு.” 1) ஒரே ஒரு முடிவான சாரம் அல்லது அடிப்படை மட்டுமே இருக்கிறது என்கிற தத்துவ ஞான கண்ணோட்டம். 2) உண்மைப்பொருள் என்பது தனித்தனி பாகங்கள் இல்லாத ஒரு ஒருங்கிணைந்த முழுமை என்கிற கண்ணோட்டம். மேலும் தகவலுக்கு: துவைதம்-அத்வைதம். §
அத்வைத ஈஸ்வரவாதாம் (monistic theism): உண்மைப்பொருள் என்பது தனிப்பட்ட பாகங்கள் இல்லாத ஒரு முழுமையாக அல்லது உள்பொருளாக இருக்கிறது என்ற கோட்பாட்டுடன், இறைவன் உண்மையாக, உணர்வுடன், தனிப்பட்ட பரமாத்துமாவாக இருக்கிறார் என்ற ஈஸ்வரவாதம் சேர்கிறது. ஈஸ்வரவாதம் என்பது துவைதத்தை குறிப்பதால், இவை இரண்டும் வழக்கமாக நேர்மாறான அல்லது ஒன்றையொன்று விலக்கும் பண்பை உடையது இரண்டு கண்ணோட்டங்களாக இருக்கின்றன. §
துறவி (monk): மடவாசி. ஒரு ஆச்சாரமான வாழ்க்கையை வாழும் நோக்கத்துடன், ஒரு மடத்தில் மற்றவர்களுடன் சேர்ந்து மடத்துறவியாக அல்லது தனியாக ஒரு துறவியாக அல்லது ஆண்டியாக மனத்துறுவுடன் வாழும் ஒரு ஆணை குறிக்கிறது. யோகப்பயிற்சி, தனக்குள் இருக்கும் ஆண்மை மற்றும் பெண்மை சக்திகளை கட்டுப்படுத்தி உருமாற்றம் செய்வதன் மூலம் அந்த துறவி முழுமையான சக்தியாக மாறி, தனக்குள் ஆத்ம ஞானத்தை நோக்கி ஆழ்ந்த சிந்தனை மற்றும் ஆன்மீகம் கலந்த வாழ்க்கையை சுதந்திரமாக பின்பற்றுகிறார். இந்த துறவிகள் தயாள குணத்துடன் மனவலிமையுடன், தைரியமாக, அச்சமின்றி மற்றவர்களின் சிந்தனைகள் மற்றும் உணர்ச்சிகளில் சிக்காமல் இருப்பதுடன் சமூகம், சமயத்தின் ஆதரவாளர்களிடம் பிரியமான பற்றின்மையுடன் இருந்து, மற்றவர்களிடம் அன்பாகவும் பாசமகவும் இருந்து, எப்போதும் சமயோசித புத்தியுடன் செயல்படுகிறார். மேலும் தகவலுக்கு: சந்நியாசம்.§
mridanga(m) (mṛidaṅga): मृदङ्ग மிருதங்கம். இந்த தென்னிந்திய இசைக்கருவி உருளை வடிவில், இருபுறமும் தோலினால் மூடப்பட்டு இருக்கும். §
mudra (mudrā): मुद्रा “Seal.” முத்திரை. இது விரல்கள் மூலம் குறிப்பிட்ட ஆற்றல்கள் அல்லது சக்திகளை வெளிப்படுத்தும் அருள்ஞான நிலைகள் ஆகும். வழக்கமாக நுணுக்கமாக அமைந்திருக்கும் இந்த முத்திரைகள் வழிபாடு (பூஜை), நடனம் மற்றும் யோகத்தில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. §
mukti: मुक्ति “Release,” “liberation.” முக்தி, மோக்ஷம். §
muladhara chakra ( mūlādhāra chakra): मूलाधारचक्र “Root-support wheel.” மூலாதார சக்கரம். இது நான்கு இதழ்களுடன் முதுகுத்தண்டின் மனோஉணர்வு அமைந்து நினைவாற்றலை நிர்வகிக்கிறது. மேலும் தகவலுக்கு: சக்கரம்.§
murti (mūrti): मूर्ति “Form; manifestation, embodiment, personification.” மூர்த்தி. “உருவம்; வெளிப்பாடு, உருவகம், ஆளுருவகம்.” வழிபாட்டின் போது தெய்வத்தின் இருப்பை ஆவாகனம் செய்யும் இறைவனின் சிலை, விக்ரகம். §
Murugan: முருகன் “அழகானவர்.” கார்த்திகேயன் தென்னிந்தியாவின் தமிழ்நாடு, இலங்கை மற்றும் வேறு பல இடங்களில் முருகன் என்று அழைக்கப்படுகிறார். §
Nada (nāda): नाद “Sound; tone, vibration.” நாதம். மீமெய்யியல் அடிப்படையில், இது நிரந்தரமான சூட்சும ஒலிகள் ஆகும். இதில் மிகவும் உயர்வானதாக ஆழ்ந்த நிலையில் இருக்கும், ஒலியில்லாத ஒலியான பரநாதம் விளங்குகிறது. இதன் முதல் அதிர்வில் இருந்து படைப்பு வெளிப்படுகிறது. பரநாதத்தில் இருந்து ஓம் என்ற பிரவணவ மந்திரமும் நாதத்தின் மேலும் பல பரிணாமங்கள் தோன்றுகின்றன. இவற்றை தியானம் செய்பவர் நாதநாடி சக்தியாக அனுபவிக்கிறார். மேலும் இவற்றை ஸ்திரமாக உயர்ந்த தொனியுடன் இருக்கும் முரல் ஒலியாக, ஒரு தம்புரா, ஒரு மின்சார மின்மாற்றி, ஒரு தேனீக்களின் திரள் அல்லது ஒரு ஸ்ருதி பெட்டியை போன்று நரம்பு மண்டலத்தில் துடிப்பதை கேட்கலாம். உட்புற ஒலிகளை கேட்பது “ஒலி மூலம் வழிபடும்" நாத உபாசனா, “உட்புற ஒலியை பண்படுத்தும்" நாத அனுசந்தான, அல்லது “ஒலி மூலம் ஐக்கியமாகும்" நாத யோகம் என்று அழைக்கப்படும் ஒரு ஆழ்நிலை தியான பயிற்சி ஆகும். நாதநாடி சக்தியில் இருக்கும் நுணுக்கமான வேறுபாடுகள், பல இந்திய சமயங்களின் குரு பரம்பரையில் நிறுவப்பட்ட மனோஉணர்வு அலைநீளங்களை பிரதிபலிக்கிறது. நாதம் என்பது ஆழ்ந்த தியானத்தின் போது கேட்கும் மனோஉணர்வு ஒலிகளுடன், பல்வேறு இசைக்கருவிகளைப் போன்ற ஒலிகளையும் குறிப்பிடுகிறது. நாதம் என்பது சாதாரண ஒலியையும் குறிப்பிடுகிறது. §
nadanadi shakti (nādanāḍī śakti): नादनाडीशक्ति “Energy current of sound.” நாத நாடி சக்தி. மேலும் தகவலுக்கு: நாதம்.§
nadi (nāḍī): नाडी “Conduit; river.” நாடி. இது மனித உடலில் இருக்கும் ஒரு நரம்பு இழை அல்லது நுணுக்கமான (உட்புற) உடல்களில் இருக்கும் சக்தியின் பாதை ஆகும். 72,000 நாடிகள் இருப்பதாக கருதப்படுகிறது. இவை சக்கரங்களை ஒன்றோடு ஒன்று தொடர்புப்படுத்துகின்றன. இடா, பிங்களா மற்றும் சுஷும்னா ஆகியவை மூன்று முக்கிய நாடிகள் ஆகும். 1) இடா நாடி, இது சந்திர நாடி என்றும் அழைக்கப்படுகிறது. இது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறது. இது கீழ்நோக்கி பாய்ந்து சென்று, உடலின் இடது பகுதியில் நிறைவடைகிறது. இந்த ஓட்டம் பெண்மையின் பண்புடன் இருக்கிறது மற்றும் இது தூல உணர்ச்சி சக்தியின் பாதையாக இருக்கிறது. 2) பிங்களா நாடி, இது சூரிய நாடி என்றும் அழைக்கப்படுகிறது. இது நீல நிறத்தில் இருக்கிறது. இது மேல் நோக்கி சென்று, உடலின் வலது புறத்தில் நிறைவடைகிறது. இந்த ஓட்டம் ஆணின் இயல்புடன் அறிவுணர்வு மற்றும் மனதின் பாதையாக இருக்கிறது. 3) சுஷும்னா நாடி, இது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. இது முக்கிய நரம்பு ஓட்டமாக விளங்கி, அடிப்பகுதியில் இருக்கும் மூலாதார சக்கரத்தில் இருந்து உச்சந்தலையில் இருக்கும் சஹஸ்ரஹார சக்கரம் வரை முதுகுத்தண்டு வழியாக பாய்ந்து செல்கிறது. இது குண்டலினி சக்தியின் பாதையாக விளங்குகிறது. §
nadi jyotisha: நாடி ஜோதிடம். எல்லோருடைய கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை பழங்கால ரிஷிகள் தீர்க்கதரிசனத்துடன் ஓலைச்சுவடிகளில் (நாடி சாஸ்திரம் அல்லது நாடி கிரந்தம்) பழங்கால தமிழ் லிபியில் பதிவு செய்ததை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டில் பழக்கத்தில் இருக்கும் ஒரு ஜோதிட முறை. ஒரு நாடி ஜோதிடர் அல்லது சாஸ்திரி, ஒருவரது வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள, அவரது கட்டைவிரல் ரேகை மற்றும் மேலும் பல காரணிகளை அடிப்படையாக கொண்டு பொருத்தமான ஓலைச்சுவடியை தேர்ந்து எடுக்கிறார். அதன் பிறகு அவர் ஓலையில் பொறிக்கப்பட்ட தகவலை விவரிக்கிறார். இந்த தெய்வீகக் கலையை சிதம்பரத்திற்கு அருகில் இருக்கும் வைத்தீஸ்வரன் கோயிலை சுற்றி இருக்கும் நாடி சாஸ்திரிகள் பிரபலப்படுத்தினார்கள்; இந்த ஜோதிடம் இன்று வரை அங்கே மையமாக இருந்து வருகிறது மற்றும் அவர்களின் வாரிசுகள் இந்த தொழிலை தொடர்ந்து செய்து வருகிறார்கள். §
nadi shastra: நாடி சாஸ்திரம் மேலும் தகவலுக்கு: நாடி ஜோதிடம்.§
nadi shastri: நாடி சாஸ்திரி மேலும் தகவலுக்கு: நாடி ஜோதிடம்.§
naga (nāga): नाग “Serpent,” நாகம். பெரும்பாலும் நாகப்பாம்பை குறிப்பிடுகிறது; மூலாதார சக்கரத்தின் நான்கு இதழ்களில் சுருண்டு இருக்கும் குண்டலினியின் சின்னமாக விளங்குகிறது. மேலும் தகவலுக்கு: குண்டலினி, மூலாதார சக்கரம்.§
nagasvara (nāgasvara): नागस्वर “Snake note.” நாகஸ்வரம், நாதஸ்வரம். இந்த காற்றிசை கருவி, ஆச்சா மரம் கொண்டு தயார் செய்யப்பட்டு, நீண்ட மரக்குழளுடன் சுமார் மூன்று அடி நீளத்திற்கு இருக்கும். இது ஒபோ இசைக்கருவியை போன்று இருந்தாலும், அதிக கீரிச்சிடும் ஒலியுடன் காதில் ஊடுருவதாக இருக்கும். இது வழக்கமாக தென்னிந்தியாவில் இந்து சமய பூஜைகள் மற்றும் திருவிழாக்களில் தவில் என்கிற தாள வாத்தியத்துடன் வாசிக்கப்படும். §
naivedya(m): नैवेद्य நெய்வெத்தியம். கோயில் அல்லது வீட்டுப் பூஜையில் தெய்வத்திற்கு வழங்கப்படும் படையல். இது பூஜையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. மேலும் தகவலுக்கு: பிராசதம், பூஜை.§
nakshatra: नक्षत्र “Star cluster.” நட்சத்திரம். ஜோதிட கணிப்புக்களுக்கு மையமாக இருக்கும் நட்சத்திரங்கள் 27 விண்மீன் குழுக்களாக, பெருவட்டம் அல்லது சூரிய பாதையில் அமைந்து இருக்கின்றன. ஒருவரின் ஜென்ம நட்சத்திரம், அவர் பிறந்த சமயத்தில் சந்திரனுடன் பொருந்தி இருந்த விண்மீன் குழுவை குறிப்பிடுகிறது. §
namakarana (nāmakaraṇa): नामकरण “Name giving.” நாமகரணம். §
namakarana samskara (nāmakaraṇa saṁskāra): नामकरण संस्कार. நாமகரண சம்ஸ்கராம். “பெயர் சூட்டு விழாவின்" மூலம் இந்து சமயத்தில் ஏதாவது ஒரு பிரிவில் முறையாக நுழையும் சம்ஸ்காரம். இந்த சம்ஸ்காரம் ஒரு குழந்தை பிறந்து 11 முதல் 41 நாட்களுக்குள் நடத்தப்படுகிறது. ஜோதிட முறைப்படி தேர்ந்து எடுக்கப்படும் பெயர், பெரும்பாலும் ஒரு இந்து தெய்வத்தின் பெயராக இருக்கும். இந்த சமயத்தில், வாழ்க்கை முழுவதும் அந்த குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்க தேவதூதர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஒருவர் பிற்காலத்தில் இந்து சமயத்திற்கு மதம் மாற்றம் பெறும் போதும், இதே சடங்கு நடத்தப்படுகிறது. §
Namasivaya (Nama˙ Śivāya): नमः शिवाय “Adoration (homage) to Siva.” நமச்சிவாய. இது சைவ சமயத்தில் முக்கிய மந்திரமாக விளங்குகிறது. இது பஞ்சாட்சரம் என்றும் அழைக்கப்படுகிறது. §
namaskara (namaskāra): नमस्कार “Reverent salutations.” நமஸ்காரம். இது பாரம்பரிய முறைப்படி கைகளை ஒன்றாக குவிக்கும் அஞ்சலி முத்திரையுடன், வாழ்த்துக்களை தெரிவிப்பது ஆகும். அவ்வாறு வணக்கம் செலுத்தும் போது, கைகள் இதயத்தின் அருகே அல்லது நெற்றி உயரத்திற்கு உயர்த்தப்பட்டு இருக்கும். இந்த தெய்வீக முத்திரை கோயிலில் இருக்கும் தெய்வம், தெய்வீக புருஷர், நண்பர் அல்லது தற்காலிக தொடர்புக்கு முன்பாகவும் தெரிவிக்கப்படுகிறது. §
Nandikeshvara Kashika (Nandikeśvara Kāśikā): नन्दिकेश्वरकाशिका. நந்திகேஷ்வரகாஷிகா. நந்திகேஷ்வரரின் (சுமார் கி.மு. 250) படைப்புக்களில் இது மட்டுமே மிஞ்சியுள்ளது. சைவ ஆகமங்கள் இல்லாமல், அத்வைத சைவ சமயம் பற்றி தற்போது நிலைத்து இருக்கும் மிகவும் பழமையான விளக்கமாக, இதன் 26 செய்யுள்கள் விளங்குகின்றன. §
Nandinatha Sampradaya (Nandinātha Saṁpradāya): नन्दिनाथसंप्रदाय நந்திநாத சம்பிரதாயம். மேலும் தகவலுக்கு: நாத சம்பிரதாயம்.§
Narakaloka: नरकलोक Abode of darkness. நரகலோகம்: இருண்ட உலகம். நர என்ற சொல்லுக்கு “மனிதன் சம்பந்தப்பட்ட என்று பொருள்.” நரக லோகங்கள்; அந்தர்லோகத்தில் இருக்கும் ஒரு பருமனான, புனிதமற்ற உலகம். அரக்கர்கள் மற்றும் இளம் ஆன்மாக்கள் தாங்கள் உருவாக்கிய இருண்ட கர்மவினைகளுக்கு தீர்வு காணும் வரை, அவர்கள் தற்காலிகமாக தங்கும் இடமாக விளங்கும் நரகலோகம், நெரிசலான மற்றும் வேதனைகள் நிறைந்த இடமாக விளங்குகிறது. இங்கே உயிர்சக்திகள் தங்கள் முற்பிறவிகளில் செய்த தவறுகளுக்கு வேதனையை அனுபவிக்கிறார்கள். நரகம் என்பது தளங்கள் எனப்படும் ஏழு பகுதிகளுடன் இருப்பதாகவும், அவை ஏழு கீழ்நிலை சக்கரங்களின் உணர்வு நிலைகளுடன் தொடர்பில் இருப்பதாக அறியப்படுகிறது. §
Nataraja (Naṭarāja): नटराज “King of Dance” or “King of Dancers.” நடராஜர். “நடனத்தின் அரசன்.” பிரபஞ்ச நாட்டியக்காரனாக இருக்கும் கடவுள். இந்து சமயத்தில் அதிக செழுமையான மற்றும் அதிக ஆற்றல்மிக்க சிலையாக இருக்கும் நடராஜர், உள்பொருள் அனைத்திலும் ஆற்றல், சக்தி மற்றும் உயிராக உள்ள ஆதி ஆன்மா, பரமேஸ்வரனாக இருக்கும் சிவபெருமானை வெளிப்படுத்துகிறார். கண்களுக்கு வெளிப்பட்டு இருக்கும் தெய்வீக சக்தியில், இது சிவபெருமானுக்கு நுணுக்கமான நிலையாக இருக்கிறது. நடனம் ஆடுபவர்களின் தலைவனாக விளங்கும் நடேசனாக, சிவபெருமான் ஆடும் நடனம், முழு பிரபஞ்சத்தின் நிலையான இயக்கமாக இருக்கிறது. உயிருள்ளதாக மற்றும் உயிரற்றதாக இருக்கும் அனைத்தும் அவருக்குள் துடிக்கிறது, மற்றும் அவர் அதனுள் வாசம் செய்கிறார். சிவன்-சக்தியின் பிரிக்க முடியாத இயல்பின் சின்னமாக, “பாதி-பெண் கடவுளாக,” இருக்கும் அர்த்தநாரீஸ்வரரைப் போல, இந்த சிலையில் ஆண் மற்றும் பெண்ணின் பண்புகள் அடங்கியுள்ளன. §
Natchintanai: நற்சிந்தனை. சற்குருவின் சக்தி, சிவபெருமானின் வழிபாடு, தார்மீக பாதையை கடைப்பிடிப்பது மற்றும் ஆத்ம ஞானத்தை அடைவதை பற்றி இலங்கை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவயோக சுவாமி (1872-1964) இயற்றிய கீர்த்தனைகளின் தொகுப்பு. §
Natha (Nātha): नाथ “Master, lord; adept.” நாதன். “இறைவன்; வல்லுநர்.” இது சைவ யோக சூட்சும ஞானத்தின் ஒரு பழங்கால இமாலய பரம்பரை ஆகும். வரலாற்று குறிப்பின் படி, இதன் முதல் பிரதிநிதியாக நந்திகேசவர் (சுமார் கி.மு. 250) விளங்கினார். ஆத்ம ஞானத்தில் தேர்ச்சி பெற்ற நாதன், இந்த பிரிவில் விசேஷமான சந்நியாச ஆசிரியர்கள் (அல்லது சீடர்களை) நியமித்தார். §
Natha Sampradaya (Nātha Saṁpradāya): नाथसंप्रदाय நாத சம்பிரதாயம். சைவ சமயத்தை சார்ந்த ஒரு தத்துவ மற்றும் யோக பாரம்பரியமாக நாத சம்பிரதாயம் விளங்குகிறது. இது பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக்கு முன்பு தோன்றியிருக்கும் என்று கருதப்படுகிறது. இன்று நிலைத்து இருக்கும் மிகவும் பழமையான சைவ சம்பிரதாயங்கள், நந்திநாத மற்றும் ஆதிநாத என்ற இரண்டு முக்கிய பிறவுகளை கொண்டுள்ளன. நந்திநாத சம்பிரதாயத்தில் மகரிஷி நந்திநாதா மற்றும் அவரது சீடர்களான பதஞ்சலி (யோக சூத்திரங்களை இயற்றியவர்) மற்றும் திருமூலர் (திருமந்திரத்தை இயற்றியவர்) போன்ற முன்மாதிரிகள் இருந்துள்ளனர். கைலாச பரம்பரையில் வந்த சித்தர்கள், அதன் இன்றைய பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். ஆதிநாத பரம்பரையில் மிகவும் பிரபலமான முன்மாதிரிகளாக ஆதிநாதா, மத்ஸ்யேந்திரநாதாவுடன் மிகவும் பிரபலமான யோகிகளின் சமூகத்தை உருவாக்கிய கோரக்ஷநாதரும் முன்மாதிரியாக இருக்கிறார். மேலும் தகவலுக்கு: கைலாச பரம்பரை. §
natyam (nāṭyam): नाट्यम् Literally, “divine dancer.” நாட்டியம். “தெய்வீக நாட்டியக்காரர்.” சந்நியாசியாக இருப்பவர் அல்லது சந்நியாசியாக மாறுவதற்கு பயிற்சி பெறுபவரை குறிக்கும் சமஸ்கிருதம் மற்றும் ஷும் மொழியில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். §
ஜல நேத்தி குடுவை (neti pot): நாசிகளில் இருக்கும் பாதைகளை சுத்தம் செய்ய மூக்கில் உப்பு கரைசலை ஊற்றுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறிய குடுவை. இதன் கீழ்பகுதியில் வழக்கமாக ஒரு மூக்குக் குழாய் பொருத்தப்பட்டு இருக்கும், மற்றும் சில சமயங்களில் மறுமுனையில் ஒரு கைப்பிடி இருக்கும். காலங்காலமாக நேத்தி குடுவைகள் உலோகம், கண்ணாடி அல்லது பீங்கானில் தயார் செய்யப்படும். “நாசியை சுத்தம் செய்யும்,” பழங்கால ஜலநேத்தி செய்முறை ஆயுர்வேதம் மற்றும் யோகத்தில் இணைந்துள்ள ஆரோக்கியமான பழக்கம் ஆகும். §
புதிய யுகம் என்றும் பொருள்படும் நியூ ஏஜ் (New Age): இதைப்பற்றி வெப்ஸ்டர்ஸ் நியூ வேர்ல்ட் டிக்சனரி வழங்கும் குறிப்பு: “ஆன்மீக உணர்வின் மீது அக்கறை மற்றும் தியானம், சைவ உணவு மற்றும் புனிதமான மருத்துவத்தை போன்ற பழக்கங்களுடன் மறுபிறவி மற்றும் ஜோதிடத்தில் நம்பிக்கை கலந்த பல்வேறு பண்புகளுடன் 1980 களில் இருந்து பிரபலமாக இருந்துள்ள ஒரு கலாச்சார அமைப்பு சார்ந்தது.” §
nirvani & upadeshi (nirvāṇī & upadeśī): निर्वाणी उपदेशी நிர்வாணி & உபதேசி. நிர்வாணி என்றால் “தனது ஆசைகள் மற்றும் பாசங்களை அழித்தவர்,” மற்றும் உபதேசி என்றால் “ஆசிரியர்" என்று பொருள். பொதுவாக, நிர்வாணி என்பது ஒரு முக்தி பெற்ற ஆன்மாவை, அல்லது துறவிகளின் ஒரு பிரிவை குறிக்கிறது. உபதேசி என்பது பொதுவாக ஆசிரியராக இருக்கும் ஒரு துறவியை குறிக்கிறது. உணர்தலை பெற்று, முக்தி பெற்ற ஆன்மாக்களின் லௌகீக அமைப்புக்களை, பெளத்த மதம் அரஹத் மற்றும் போதிசாத்வா என்று அழைப்பதை போல, இங்கே இந்த சொற்கள் விசேஷ அர்த்தத்தை கொண்டுள்ளன. ஒரு ஜீவன்முக்தா முழுமையான ஞானோதயம் பெற்ற பிறகு, பூலோகத்திற்கு திரும்பி பாதையில் இருக்கும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. இது உபதேசியின் (போதிசாத்வா) பாதையாக விளங்குகிறது, மற்றும் இறைவனை உணரும் குறிக்கோளை நோக்கி சாதகனை வழிநடத்தி செல்வதற்கு இரக்க குணமுள்ள சற்குரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அவர் எதிர்காலத்தில் சமய அமைப்புக்கள் மற்றும் துறவற பரம்பரைகளை தொடங்கி இயக்கவும் செய்யலாம். நிர்வாணி (அரஹத்) தனது லௌகீக ஈடுபாடுகள் அனைத்தையும் கைவிட்டு, உணர்வின் உச்சத்தில் வாசம் செய்கிறார். இவருக்கு அமைதியான துறவி, தனியாக இருக்கும் மகான் முன் உதாரணமாக இருக்கிறார்கள். §
nirvikalpa samadhi (nirvikalpa samādhi): निर्विकल्पसमाधि “Undifferentiated trance, enstasy (samadhi) without form or seed.” நிர்விகல்ப சமாதி. “வேறுபாடு இல்லாத மெய்மறதி நிலை, உருவம் அல்லது விதை இல்லாத சமாதி.” ஆத்ம ஞானம், பரசிவம், எல்லா மாற்றம் அல்லது வேறுபாட்டை கடந்து இருக்கும் ஒருமையின் நிலை; காலம், உருவம் மற்றும் பரவெளியை கடந்து இருப்பது. மேலும் தகவலுக்கு: சமாதி.§
niyama: नियम “Restraint.” கட்டுப்பாடு. மேலும் தகவலுக்கு: இயமம்-நியமம்.§
காந்த சக்தி (Odic force): இது தூல மற்றும் கீழ்நிலை சூட்சும லோகங்களின் அசுத்த மாயாவின் உணர்வு சார்ந்த ஆன்மீக காந்த சக்தி ஆகும். காந்த சக்தி தனது புனிதமான நிலையில் சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் என்று மூன்று குணங்களாக வெளிப்பட்டு, இயற்கையின் முக்கிய பருமனான சக்தியாக இருக்கும் பிரகிருதியாக இருக்கிறது. நிலம், நீர், நெருப்பு மற்றும் காற்று மற்றும் சிந்தனையுடன் எல்லா பருப்பொருட்களும் காந்த சக்தியை கொண்டு அமைந்துள்ளது. இது மனிதர்களுக்கு இடையே மற்றும் மனிதர்கள் மற்றும் அவர்களுடைய பொருட்களுக்கும் இடையே ஈர்க்கும் சக்தி அல்லது வெறுத்து ஒதுக்கும் சக்தியாக இருந்து, பிங்களா மற்றும் இடா நாடி ஓட்டங்களில் இருந்து ஆண்மை (தீவிரமாக) மற்றும் பெண்மை (மந்தமாக) பண்பாக வெளிப்படுகிறது. இந்த நாடி ஓட்டங்கள் இரண்டும், முதுகுத்தண்டின் சூட்சும உடலுக்குள் காணப்படுகின்றன. காந்த சக்தி என்பது காந்தத்தன்மையுடன, ஒட்டக்கூடியதாக, பிணைக்கும் பொருளாக இருக்கிறது மற்றும் கூட்டுத்தொழில்கள், திருமணங்கள், குரு-சீடன் உறவுகள் மற்றும் நட்புறவுகளில் மனிதர்கள் தங்களை பிணைத்துக்கொள்ள முற்படும் போது, இந்த சக்தியைத் தான் அவர்கள் மேம்படுத்த விரும்புகிறார்கள். இது இயல்பாக மந்தமாக செயலற்று இருக்கிறது. பிராணமய மற்றும் ஆனந்தமய கோசங்களின் கூட்டு வெளிப்பாடாக காந்த சக்தி விளங்குகிறது. மேலும் தகவலுக்கு: ஆன்மீகம் சார்ந்த, கோசம், நுணுக்கமான உடல், தத்துவம்.§
Pada: पद “Step, pace, stride; footstep, trace.” பதம்: “அடி, வேகம், நடை; காலடி, சுவடு.” §
pada (pāda): पाद “The foot (of men and animals); quarter-part, section; stage; path.” பாதம். “மனிதர்கள் மற்றும் விலங்குகளின்" காலடி, கால் பாகம், பிரிவு; நிலை, பாதை.” இது ஆகம உரைகளில் இருக்கும் முக்கிய பிரிவுகள் மற்றும் முக்தியை நோக்கி செல்லும் பாதையில் அதனுடன் தொடர்புடைய நிலைகளின் பயிற்சி மற்றும் விரிவாக்கத்தை குறிப்பிடுகிறது. சைவ சித்தாந்தத்தில், நான்கு பாதைகள் (சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம்) உள்ளன. அவை தொடர்ச்சியாக மற்றும் படிப்படியாக திரண்டு வரும் தன்மையுடன இருக்கின்றன. அதாவது ஆன்மா ஒவ்வொரு பணியையும் நிறைவு செய்து தன்னை அடுத்த நிலைக்கு தயார்படுத்திக் கொள்கிறது. —சரியை பாதம்: “நன்னடத்தையின் நிலை.” இந்த நிலையில் ஒருவர் நேர்மையுடன் வாழ்ந்து, சுயநலமின்றி சேவை செய்து, கர்மயோகம் செய்ய கற்றுக்கொள்கிறார். —கிரியை பாதம்: “சமயப்பணி; வழிபாட்டு நிலை.” இது பக்தி யோகத்தின் நிலை ஆகும். இந்நிலையில் பூஜை மற்றும் தொடர்ந்து தினசரி சாதனா செய்வதன் மூலம் பக்தி வளர்க்கப்படுகிறது. —யோக பாதம்: ஆன்மா சரியை மற்றும் கிரியை பாதங்களில் பக்குவம் அடைந்த பிறகு, அது ஒரு சற்குருவின் வழிகாட்டலின் கீழ் ஆன்மீக வழிபாடு மற்றும் இராஜ யோகத்தின் மீது தனது கவனத்தை திருப்பிக் கொள்கிறது. —ஞான பாதம்: “மெய்யறிவு பெறும் நிலை.” ஆன்மா ஆத்ம ஞானம் பெற்றதும், தனது மீதி வாழ்க்கையை, மற்றவர்களுக்கு ஆசிகளை வழங்கி நல்வழிப்படுத்துவதில் செலவழிக்கிறது. §
pādapūjā: पादपूजा “Foot worship.” பாத பூஜை. இது பாரம்பரிய முறைப்படி குருவின் பாதுகை அல்லது திருவடி வழிபாட்டை குறிப்பிடுகிறது. இந்த வழிபாட்டின் போது திருவடிகளை நீராட்டி மஞ்சள் குங்குமமிட்டு பழங்கள் மற்றும் பூக்கள் நெய்வெத்தியம் செய்யப்படுகின்றன. பூஜை முடிந்த பிறகு, அவருடைய பாதங்களை கழுவிய நீர் மற்றும் நெய்வெத்திய பொருட்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன. §
padmasana (padmāsana): पद्मासन “Lotus posture.” பத்மாசனம். ஹட யோகத்தில் மிகவும் பிரபலமான ஆசனம். ஸ்திரமாக தியானம் செய்வதற்கு உகந்த அங்கஸ்த்தியாக இருக்கிறது. இதில் கால்கள் குறுக்காக மடக்கி உடலுக்கு அருகில் வைக்கப்பட்டு, உள்ளங்கால்கள் மேல் நோக்கி அமைந்து இருந்து, ஒரு தாமரை மலர் போல காட்சி அளிக்கும். இந்த அங்கஸ்த்தியில் அறிவுணர்வு-மனவெழுச்சி சக்திகள் சமநிலை பெற்று அமைதியாக இருக்கின்றன. §
paduka (pādukā): पादुका “Sandals.” பாதுகை. ஶ்ரீ பாதுகை என்பது சற்குருவின் திருவடிகளாகவும் குருவின் பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி மரியாதைக்குரிய அவரது பாதங்களை பிரதிநிதித்துவம் செய்து, அருளின் மூலமாக வழிபடப்படுகிறது. §
அத்வைத ஈஸ்வரவாதம் (panentheism): “All-in-God doctrine.” “எல்லாம் இறைவனுக்ககுள் அடங்கிருக்கிறது என்ற கோட்பாடு.” இறைவனின் இருப்பின் அங்கமாக பிரபஞ்சம் இருக்கிறது என்ற கண்ணோட்டம். இது “எல்லாம் இறைவனாக இருக்கிறது" என்ற கோட்பாட்டில் (pantheism) இருந்து மாறுபட்டு இருக்கிறது. இந்த கோட்பாடு இறைவனை முழு யதார்த்தத்துடன் அடையாளம் காண்கிறது. இதற்கு மாறாக, அத்வைத ஈஸ்வரவாதம் (panentheism), இறைவன் உலகெங்கும் வியாபித்து, அதை கடந்தும் இருப்பதாக கருதுகிறது. அவர் உள்ளார்ந்தும் யாவும் கடந்த நிலையிலும், ஒப்பீட்டு அளவிலும் முழுமையாகவும் இருக்கிறார். இவ்வாறு எதிர்ப்பதங்களை தழுவி இருப்பதை (dipolar) இருதுருவம் என்று அழைக்கப்படுகிறது. இதைப் பின்பற்றுபவருக்கு, இறைவன் அனைத்திலும் இருக்கிறார் மற்றும் எல்லாம் இறைவனுக்குள் இருக்கிறது. மேலும் தகவலுக்கு: துவதைம்-அத்வைதம்.§
papa (pāpa): पाप “Wickedness or sin;” “crime.” பாவம். 1) தீய அல்லது கொடிய. 2) தவறான நடவடிக்கை. 3) தவறு செய்ததால் உருவான குறை. பாவம் என்பது சாதாரண சட்ட மீறலில் இருந்து திட்டமிட்ட கொலை போன்ற மிகவும் கொடிய குற்றங்கள் வரை, சகலவிதமான தவறுகளையும் உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு பாவமும் தனது கர்ம பலன் என்கிற “செயலின் விளைவை" கொண்டுள்ளது, மற்றும் அந்த பாவத்திற்கு பரிகாரம் செய்ய சாஸ்திரங்கள் குறிப்பிட்ட விரதங்களை விளக்கிக் கூறியுள்ளது. ஒருவரின் உட்புற அடியுணர்வு ஒளி உடலில் ஒரு வண்ணமயமான, பிசுபிசுப்பான சூட்சும பொருளாக பாவம் இருப்பதை மனோஉணர்வு சக்தியை தங்களுக்குள் விழிக்க செய்தவர்களால் தெளிவாக காணமுடிகிறது. பாவம் இருண்ட மற்றும் தொடர்பில்லாத நிறங்களுடன் காணப்படுகிறது, ஆனால் அதற்கு எதிர்பதமாக இருக்கும் புண்ணியம் மென்மையான நிறங்களாக இருக்கின்றன. அதில் இருக்கும் நிறங்களின் அமைப்புக்கள் நவீன சுவர் சித்திரங்களை போன்று இருக்கின்றன. பாவத்தின் நிறங்கள் நோய், மனச்சோர்வு, தனிமை மற்றும் அதைப்போன்ற நிறங்களை உருவாக்குகின்றன மற்றும் அவற்றை பிராயஸ்சித்தம், தபஸ் மற்றும் நல்ல செயல்களின் (சுக்ரித்திய) மூலம் கரைக்க முடியும். §
Paramatman (Paramātman): परमात्मन् “Supreme Self,” or “transcendent soul.” பரமாத்துமா. பரசிவம், பரப்பிரம்மம், ஒவ்வொரு ஆன்மாவிலும் யாவும் கடந்து இருக்கும் பரமாத்துமா. பரசிவம், பராசக்தி மற்றும் ஆனந்தமய கோசம் என்று ஆன்மாவின் மூன்று அம்சங்களையும் அடக்கிய ஆத்மன் என்ற சொல்லில் இருந்து இது மாறுபட்டு இருக்கிறது. மேலும் தகவலுக்கு: பரசிவம், பரமாத்துமா, ஆன்மா.§
Parameshvara (Parameśvara): परमेश्वर “Supreme Lord or Ruler.” பரமேஸ்வரன். இவர் சிவபெருமானின் மூன்றாவது முழுமையாக, உயர்ந்த மகாதேவராக, சிவ-சக்தியாக, பிரபஞ்சத்தின் அன்னையாக இருக்கிறார். இந்த முழுமையை தனிப்பட்ட பண்புடன், தந்தை-தாயாக ஒரு உடல், தலை, கை-கால்கள் போன்ற உடல் உறுப்புக்களுடன் இருக்கும் சிவபெருமான் ஒரு தனிநபராக செயல்பட்டு, ஆணையிட்டு, ஆசிர்வதித்து, தரிசனம் வழங்கி, வழிகாட்டி, உருவாக்கி, பாதுகாத்து, மீண்டும் ஒடுக்கிகொண்டு, மறைக்கவும் ஞானோதயம் வழங்கவும் செய்கிறார். செய்வது அனைத்தும் சிவ-சக்தி என்பதே முடிவான உண்மையாக இருக்கிறது. ஆதி ஆன்மா என்கிற பரமபுருஷர் எனும் சொல் முதன்மையாக, படைக்கப்படாத ஆன்மாவாக, மற்ற எல்லா ஆன்மாக்களையும் படைப்பவராக இருக்கும் பரமேஸ்வரனை குறிப்பிடுகிறது. பரமேஸ்வரனுக்கு மற்ற பெயர்களும் உள்ளன, அதில் வெளிப்படுத்துபவராக இருக்கும் சதாசிவம்; மறைப்பவராக இருக்கும் மகேஸ்வரன்; படைப்பவராக இருக்கும் பிரம்மா; பாதுகாப்பவராக இருக்கும் விஷ்ணு; அழிப்பவராக இருக்கும் ருத்திரன் என்று அவருடைய ஐந்து தெய்வீக நடவடிக்கைகள் அடங்கும். §
parampara (paraṁparā): परंपरा “Uninterrupted succession.” ஒரு பரம்பரை. §
Parasiva (Paraśiva): परशिव “Transcendent Siva.” பரசிவம். பரமாத்துமா, சிவபெருமானின் முதல் முழுமை, பரப்பிரம்மம். விளக்க முடியாமல் காலம், உருவம் மற்றும் பரவெளியை கடந்து உணர்வையும் கடந்து இருக்கும் அந்த முடிவான பரம்பொருளாக பரசிவம் விளங்குகிறது. பிறவி எடுத்து எல்லா ஆன்மாக்களின் முடிவான குறிக்கோளாக, அவர்கள் இந்த பூமியில் வாழ்வதற்கான காரணமாக, அவர்கள் அனுபவங்களின் ஆழமான அர்த்தமாக முடிவான பரம்பொருளுடன் நடைபெறும் ஐக்கியம் விளங்குகிறது. இதன் ஸித்தி ஆத்ம ஞானம் அல்லது நிர்விகல்ப சமாதி என்று அழைக்கப்படுகிறது. §
parivrajaka (parivrājaka): परिव्राजक “Spiritual wanderer.” பரிவ்ராஜக. இது ஊர் ஊராக சுற்றும் ஒரு இந்து துறவியை குறிக்கிறது.§
Parvati (Pārvatī): पार्वती “Mountain’s daughter.” பார்வதி. “மலை அரசனின் மகள்.” சிவபெருமானின் துணைவியார். வலிமை, ஆரோக்கியம் மற்றும் மாசுகளை நீக்கி தூய்மை பெறுவதற்கு, பார்வதியை வேண்டி பிரார்த்திக்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு: அம்மன், சக்தி .§
Patanjali (Patañjali): पतञ्जलि பதஞ்சலி. இவர் சைவ சமயத்தை சேர்ந்த நாத சித்தர் (சுமார் கி.மு. 200). இவர் தொகுத்துத்துள்ள பழங்கால யோக தரிசனம் (தத்துவம்) எனும் நூல் மனதை சுத்தப்படுத்தி, கட்டுப்படுத்தி ஆழ்நிலைக்கு சென்று ஞானோதயம் பெறும் பாதையை விவரிக்கிறது. §
pathashala (pāṭhaśāla): पाठशाल “Place of lessons.” பாடசாலை. கோயில் புரோகிதர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு பள்ளி. §
Pati: पति “Master; lord; owner.” பதி. “தலைவன்; கடவுள்.” அக்கறை செலுத்தும் அரசனாக மற்றும் உதவி செய்யும் வழிகாட்டியாக, சிவபெருமானுக்கு ஆன்மாக்களுடன் இருக்கும் வலுவான உறவை இந்த பெயர் குறிப்பிடுகிறது. மேலும் தகவலுக்கு: பதி-பசு-பாசம். §
Pati-pashu-pasha (Pati- paśu-pāśa ): पति पशु पाश Literally, “Master, cow and tether.” பதி-பசு-பாசம். “தலைவன், மாடு மற்றும் கயிறு.” தெய்வீகத் தன்மை, மனிதன் மற்றும் பிரபஞ்சமாக இருக்கும் இறைவன், ஆன்மா மற்றும் உலகம் ஆகியவை சைவ சித்தாந்த தத்துவத்தின் மூன்று அடிப்படை பிரிவுகள் (பதார்த்த, தத்வத்ராயி) ஆகும். இந்த பிரிவுகள் சூட்சும ரீதியாகவும் நுணுக்கமாகவும் ஒன்றோடு ஒன்று தொடர்பில் இருப்பதாக தென்படுகிறது. பதி என்பது கடவுளை குறிப்பிட்டு, ஒரு மாட்டு இடையனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. பசு என்பது ஆன்மாவை குறிப்பிட்டு, ஒரு பசுமாடாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான சக்தி அல்லது பிடியாக இருக்கும் பாசத்தின் மூலம் இறைவன் ஆன்மாக்களை முடிவான உண்மையின் பாதையில் அழைத்து வருகிறார். இந்த மூன்றுக்கும் இடையே இருக்கும் இணக்கத்தை, இந்து சமயத்தின பல்வேறு பிரிவுகள் மாறுபட்ட வழிகளில் விளக்குகின்றன. அவை பன்மைவாத சித்தாந்திகளுக்கு, மூன்று தொடக்கம் இல்லாத நம்பிக்கைகள் மற்றும் சுயமாக இயங்கும் அனாதி பிரிவுகளாக விளங்குகின்றன. அத்வைத சைவ சித்தாந்திகளுக்கு, கடல் அலைகள் கடலுக்குள் மீண்டும் வந்து சேர்வதைப் போல, பதியாக இருக்கும் சிவபெருமானிடம் எதிர்காலத்தில் ஒடுங்குவதற்காக, அவருடைய தற்காலிக படைப்பாக பசு மற்றும் பாசம் விளங்குகின்றன; அவர் மட்டுமே நிரந்தர யதார்த்தமாக விளங்குகிறார். மேலும் தகவலுக்கு: சைவ சித்தாந்தம், ஆன்மா.§
தவம் (penance): Prayashchitta. Atonement, expiation. கடந்தகாலத்தில் செய்த ஒரு செயலுக்கு எதிர்பார்க்கப்படும் எதிர்வினையை தணிக்க அல்லது பயனற்றதாக்க பக்தி, தபஸ் அல்லது நல்ல ஒழுக்கத்துடன் மேற்கொள்ளப்படும் ஒரு கிரியை (நடவடிக்கை). §
தீர்த்த யாத்திரை (pilgrimage): Tirthayatra. வருடத்திற்கு ஒரு முறை இந்துக்கள் அனைவரும் அருகில் அல்லது தொலைவில் இருக்கும் ஒரு புண்ணிய க்ஷேத்திரத்திற்கு மேற்கொள்ளும் பயணம். §
Pillaiyar: பிள்ளையார். விநாயகரின் இன்னொரு பெயர். §
pingala (piṅgalā): पिंगला “Tawny channel.” பிங்களா. முதுகுத்தண்டு வழியாக ஆண்மையின் பண்புடன் பாய்ந்து செல்லும் மனோஉணர்வு ஓட்டம். மேலும் தகவலுக்கு: நாடி.§
pitham (pīṭha): पीठ “Seat; pedestal; foundation.” பீடம். 1) சிவலிங்கம் அல்லது ஒரு விக்ரகத்தின் அடிப்பகுதி. 2) ஒரு மடத்தின் மடாதிபதி அமரும் இருக்கை. 3) அத்தகைய ஒரு ஆன்மீக அதிகாரத்தை சுற்றி அமைந்துள்ள ஆதீனம், ஆசிரமம் அல்லது மடம். §
பொங்கல் திருவிழா (Pongal festival): மேலும் தகவலுக்கு: தைப்பொங்கல்.§
pottu: பொட்டு “A drop, small particle, dot.” குங்குமம், சந்தனம், அழகு பூச்சுகள் மற்றும் மற்ற பொருட்களால் நெற்றியின் மத்தியில் அல்லது கண் புருவங்களுக்கு மத்தியில் வைத்துக்கொள்ளும் ஒரு சிறிய திலகம். சமஸ்கிருத மொழியில் பொட்டு பிந்து என்றும், ஹிந்தி மொழியில் பிந்தி என்றும் அழைக்கப்படுகிறது. §
prana (prāṇa): प्राण பிராணன். முக்கிய சக்தி அல்லது உயிரின் அடிப்படை. இதற்கு “முக்கிய காற்று என்று பொருள். மனித உடலில் இருக்கும் பிராணன், பிராணமய கோசத்தில் “அத்தியாவசிய காற்றுகள் அல்லது வாயுக்கள்" என்று அழைக்கப்படும் ஐந்து அடிப்படை ஓட்டங்களாக பாய்ந்து செல்கின்றன. பிராணன் என்பது சிலசமயங்களில் பிரபஞ்சத்திற்கு உயிரூட்டம் அளிக்கும் விசை அல்லது சக்தி, எல்லா ஆற்றல்கள் மற்றும் விசைகளின் கூட்டுத் தொகையை குறிப்பிடுகிறது. §
pranam(a) (praṇāma): प्रणाम “Obeisance; bowing down.” நமஸ்காரம், வந்தனம் செய்தல், தலை வணங்குதல். இந்த வணக்கமுறையில் தலை அல்லது உடல் வளைந்து வணக்கம் செலுத்தப்படுகிறது. தரையில் விழுந்து இரண்டு விதமாக வணக்கம் செலுத்தப்படுகிறது. 1) அஷ்டாங்க நமஸ்காரம்: ஆண்களுக்கு உரிய இந்த வணக்கமுறையில் ஒரு ஆணின் கைகள், மார்பு, நெற்றி, முழங்கால்கள் மற்றும் பாதங்கள் தரையில் படுமாறு நமஸ்காரம் செய்தல் (இது சாஷ்டாங்க நமஸ்காரத்தை போன்றது); மற்றும் 2) பஞ்சாங்க நமஸ்காரம்: பெண்களுக்கு உரிய இந்த வணக்கமுறையில் ஒரு பெண்ணின் கைகள், தலை மற்றும் முழங்கால்கள் தரையில் படுமாறு (கணுக்கால்களை மடக்கி வலது காலை இடது காலின் மீது வைத்து) நமஸ்காரம் செய்தல். இதற்கு அதிக பொருத்தமான சொல்லாக “தரையில் விழுந்து வணங்குதல்” என்பதை குறிக்கும் பிரணிபாத எனும் சொல் விளங்குகிறது. §
pranayama (prāṇāyāma): प्राणायाम “Breath control.” பிராணயாமம். “சுவாசக் கட்டுப்பாடு.” சுவாசிக்கும் உத்திகள் மூலம் பிராணனை கட்டுப்படுத்தும் இந்த செய்முறையில் மூச்சை உள்ளிழுத்தல் (பூரகம்), மூச்சை உள் நிறுத்துதல் (கும்பகம்) மற்றும் மூச்சை வெளிவிடும் (ரேசகம்) அளவுகளை மாற்றி அமைக்கப்படுகிறது. தியானம் செய்ய மனதை பிராணாயாமம் தயார் செய்கிறது. மேலும் தகவலுக்கு: அஷ்டாங்க யோகம்.§
பிராண சக்தி சார்ந்த (pranic (prāṇic)) மேலும் தகவலுக்கு: பிராணன்.§
பிராணாயாம கோசம் (pranic body (prāṇic body)): உடலுக்குள் மூச்சுக்காற்றின் இயக்கத்தினால் உடலின் எல்லா உறுப்புக்களும் இயங்குகின்றன. இதனால் செயல்படும் புலன்கள், உயிர் வாழ்வதற்கு அவசியமான உள் உறுப்புக்கள் மற்றும் அவற்றின் இயக்கங்கள் பிராணமய கோசம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு: கோசம்.§
prapatti: प्रपत्ति “Throwing oneself down.” பிரபத்தி. “ஒருவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்தல்.” இந்த பக்தியில் முழுமையாக நிபந்தனையின்றி இறைவனிடம் சரணடைதலுடன் வழக்கமாக தனிப்பட்ட நிராதரவு, அடக்கம் மற்றும் ஒப்புவிப்பும் சேர்ந்து கொள்கிறது. கிட்டத்தட்ட எல்லா இந்து சமய பிரிவுகளுக்கும் மிகவும் மையமாக விளங்கும் கோட்பாட்டை குறிக்கும் இந்த சொல், குறிப்பாக வைணவ சமயத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தகவலுக்கு: அருள்.§
prarabdha karma ( prārabdha karma): प्रारब्धकर्म பிராரப்த கர்மவினை. “தொடங்கி வைக்கப்பட்டுள்ள செயல்.” மேலும் தகவலுக்கு: கர்மவினை.§
prasada(m) (prasāda): प्रसाद “Clarity, brightness; grace.” பிரசாத. “தெளிவு, பிரகாசம்; அருள்.” 1) அமைதியாகவும் பணிவாகவும் இருக்கும் நற்குணம். 2) தெய்வம் அல்லது குருவிற்கு நெய்வெத்தியம் செய்யப்படும் உணவு, அல்லது அவ்வாறு நெய்வெத்தியம் செய்த உணவில் பக்தர்களுக்கு வழங்க மீதம் இருக்கும் உணவு. 3) ஒரு தோஷத்தை நீக்க வழங்கப்படும் படையல். §
pratyahara (pratyāhāra): प्रत्याहार “Withdrawal.” பிரத்யாஹார, பிரளயம். சக்திகளை உள்வாங்குதல். யோகத்தில், இந்த சொல் வெளிப்புற உணர்வு உள்வாங்குவதை குறிப்பிடுகிறது. மேலும் தகவலுக்கு: அஷ்டாங்க யோகம்.§
prayashchitta (prāyaśchitta): प्रायश्चित्त “Predominant thought or aim.” பிராயச்சித்தம், தவம். பரிகாரங்கள். கடந்த காலத்தில் செய்த ஒரு செயலுக்கு எதிர்பார்க்கப்படும் எதிர்வினையை தணிக்க அல்லது முழுமையாக நீக்க பக்தி, தபஸ் அல்லது நல்லொழுக்கத்துடன் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை. குகர்மாக்கள் எனப்படும் தவறான செயல்கள் மூலம் உருவான ஒருவரின் கர்மவினை சுமையை தணிக்க, ஒருவர் தனக்குத்தானே வழங்கிக்கொள்ளும் அசௌகரியமான கர்மவினையை தவம் என்று அழைக்கிறோம். இதில் 108முறை நமஸ்காரம் செய்வது, விரதம் இருப்பது, சுய-கட்டுப்பாடுகள் அல்லது காவடி எடுத்தல் மற்றும் மிகவும் கடுமையான விரதங்கள் அல்லது தபஸ் அடங்கும். வழக்கமாக ஆன்மீக தலைவர்கள் மற்றும் சான்றோர்கள் மூலம் பிராயச்சித்தம் பரிந்துரைக்கப்படுகிறது. §
prayopavesha (prāyopaveśa): प्रायोपवेश “Resolving to die through fasting. ” பிரயோபவேஷ. சுய விருப்பத்துடன் விரதம் இருந்து உயிர் நீத்தல். §
Pretaloka: प्रेतलोक “World of the departed.” பிரேதலோகம். பூமியுடன் பிணைந்து இருக்கும் ஆன்மாக்கள். புவர்லோகத்தின் கீழ் பகுதி தூல உலகின் நகலாக இருக்கிறது. பூலோகம், புவர்லோகம், ஸ்வர்லோகம், மகர்லோகம், ஜனலோகம், தபலோகம் மற்றும் சத்யலோகம் என்று ஏழு மேல் லோகங்களில் ஒன்றாக புவர்லோகம் விளங்குகிறது. மேலும் தகவலுக்கு: லோகம்.§
ஆதி ஆன்மா (Primal Soul): இது படைக்கப்படாத, முதன்மையான, முழுநிறைவான ஆன்மாவாக இருக்கும் சிவா பரமேஸ்வரனை குறிப்பிடுகிறது. இவர் தனது உள்ளத்தில் இருந்து உட்புற மற்றும் வெளிப்புற பிரபஞ்சகளையும், தனது சாரத்தை போன்ற சாரத்துடன் இருக்கும் பெருந்திரளான ஆன்மாக்களையும் வெளிப்படுத்துகிறார். தனது தனிப்பட்ட அம்சத்தில் தலைவனாகவும் ஸ்ருஷ்டிகர்த்தாவாகவும் இருக்கும் இறைவனை, சைவர்கள் நடராஜர் என்றும், வைணவர்கள் விஷ்ணு என்றும், சாக்த சமயத்தை சேர்ந்தவர்கள் தேவி என்று பல வடிவங்களில் சித்தரிக்கிறார்கள். §
puja (pūjā): पूजा “Worship, adoration.” பூஜை. “வழிபாடு, ஆராதனை.” ஒரு தெய்வீக சிலை (மூர்த்தி), ஒரு குருவின் புனிதமான பாதுகைகள் (ஶ்ரீ பாதுகா) அல்லது மற்ற பிரதிஷ்டை செய்த பொருட்கள், அல்லது சற்குருவைப் போன்ற ஒருவருக்கு வீட்டில், கோயிலில் அல்லது ஒரு புனிதமான இடத்தில் நடைபெறும் வழிபாட்டில் இடம்பெறும் ஒரு ஆகம சடங்கு. வழிபடும் பொருளை சுற்றி இருக்கும் சூழலை புனிதமாக்கி, அந்தர்லோகங்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தி கடவுள், தெய்வங்கள் அல்லது ஒரு குருவை ஆவாகனம் செய்வதே இதன் ஆன்மீக குறிக்கோளாகும். வழக்கமாக ஆத்மார்த்த பூஜை என்பது ஒருவர் தனது வீட்டில் அல்லது ஒரு தனிமையான பூஜை அறையில் தனக்கும் தனக்கு நெருக்கமான குடும்பத்தாருக்கும் செய்யும் பூஜை ஆகும். பொதுவாக நடத்தப்படும் பரார்த்த பூஜை, கோயில் அல்லது பொதுமக்கள் கூடும் ஒரு சிறிய பிரார்த்தனை கூடத்தில் தீட்சை பெற்ற புரோகிதர்களால் நடத்தப்படும் பூஜை. §
pujari (pujārī): पुजारी “Worshiper.” பூசாரி. பூஜை செய்பவர் மற்றும் இந்து கோயிலில் பூஜை செய்பவரை குறிப்பிடும் ஒரு பொதுவான சொல். §
pandit (paṇḍita): पण्डित “Learned one.” பண்டிதர். தத்துவம், வழிபாட்டு முறை, சமயம் தொடர்பான விதிகள் மற்றும் புனிதமான சாஸ்திரங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு இந்து சமய அறிஞர் அல்லது இறையியல் வல்லுநர். §
பண்டிதர் (pundit).§
punya (puṇya): पुण्य “Holy; virtuous; auspicious.” புண்ணியம். “புனிதமான; நற்குணமுள்ள; மங்களகரமான.” 1) நல்ல அல்லது நேர்மையான. 2) பாராட்டுக்குரிய செயல். 3) முறையான சிந்தனை, சொல் மற்றும் செயல் மூலம் கிடைக்கும் நன்மதிப்பு. ஒரு எளிய உதவியில் இருந்து வாழ்நாள் முழுவதும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்யும் நன்மை வரை, புண்ணியம் நற்செயலின் அனைத்து வடிவங்களையும் கொண்டுள்ளது. ஆன்மீக திருப்தி, பேரானந்தம், பாதுகாப்பு மற்றும் அச்சமின்மையை புண்ணியம் உருவாக்குகிறது. மேலும் தகவலுக்கு: பாவம்.§
Purana (Purāṇa): पुराण “Ancient (lore).” புராணம். “பழங்கால கதை.” புராணம் என்பது தெய்வங்கள், மனிதன் மற்றும் உலகம் தொடர்பாக நெறிமுறை மற்றும் அண்டவியல் போதனைகளை உள்ளடக்கிய இந்து சமய கதைகள் ஆகும். அவை முதன்மையான படைப்பு, இரண்டாம் தர படைப்பு, மரபு வழி ஆய்வு, காலம் மற்றும் வரலாற்றின் சுழற்சி என்று ஐந்து கருப்பொருளை சுற்றி அமைந்துள்ளன. 18 முக்கிய புராணங்கள் இருக்கின்றன. அவை சைவ சமயம், வைணவ சமயம் அல்லது சாக்த சமயம் என்று பிரிக்கப்பட்டுள்ளன. §
புராணங்கள் சார்ந்த (Puranic (Purāṇic).§
purushartha (purushārtha): पुरुषार्थ “Human wealth or purpose.” புருஷார்த்தம். “மனித செல்வம் அல்லது குறிக்கோள்.” மனிதர்கள் தார்மீக ரீதியாக தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் என்று நான்கு வேட்கைகளில் ஈடுபடுகிறார்கள். இது சதுர்வர்க என்று அழைக்கப்பட்டு, இந்து தர்ம சாஸ்திரத்தின் அடிப்படை கோட்பாடாக விளங்குகிறது. 1) தர்மம் (“நேர்மையான வாழ்க்கை”): இது சமூக சேவை மற்றும் அதன் மேம்பாட்டிற்கு ஒருவர் தனது பங்கிற்கு கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள், செய்யவேண்டிய நற்செயல்கள், கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், கட்டுப்பாடுகள் மற்றும் கடைப்பிடித்தல்களை குறிப்பிடுகிறது. இதில் ஒரு குறிப்பிட்ட பரம்பரை மற்றும் சம்பிரதாயத்தை சார்ந்த ஒரு குருவின் வழிகாட்டலுடன் மேற்கொள்ளும் உண்மைப்பொருளின் வேட்கையும் அடங்கும். மேலும் தகவலுக்கு: தர்மம். 2) அர்த்தம் (“செல்வம்”): லௌகீக நன்மை மற்றும் செழிப்பு, பணம், சொத்து, உடைமைகள். அர்த்தம் என்பது தர்மத்தின் வழிகாட்டலுடன் மேற்கொள்ளப்படும் செல்வத்தின் வேட்கை ஆகும். இதில் உணவு, பணம், உடை மற்றும் தங்கும் இடம் என்கிற அடிப்படை தேவைகளோடு ஒரு வசதியான வீட்டை பராமரிக்க, ஒரு குடும்பத்தை பேணி பாதுகாக்க, ஒரு வெற்றிகரமான தொழில் வாழ்க்கையை பூர்த்தி செய்ய மற்றும் மதம் சார்ந்த கடமைகளை செய்ய தேவைப்படும் செல்வமும் அடங்கும். மேலும் தகவலுக்கு: யாகம். 3) காமம் (“இன்பம், அன்பு; மகிழ்ச்சி”): லௌகீக அன்பு, அழகியல் மற்றும் கலாச்சார நிறைவேற்றம், லௌகீக சுகங்கள் (பாலியல் இன்பங்கள் உட்பட), குடும்பம் வழங்கும் மகிழ்ச்சிகள், சிந்தனை செய்து புரிந்துகொள்ளும் திறமையால் ஏற்படும் திருப்தி. மகிழ்ச்சி, பாதுகாப்பு, ஆக்கத்திறன், பயனுள்ள தன்மை மற்றும் உத்வேகத்தை அனுபவித்தல். 4) மோக்ஷம் (“முக்தி”): முடிவான ஸித்தியாக இருக்கும் ஆத்ம ஞானம், பரசிவம் மூலம் மறுபிறவியில் இருந்து பெறும் விடுதலை. ஆன்மீக ஸித்திகள் மற்றும் மெய்ஞ்ஞான சந்தோஷங்கள், ஆத்ம ஞானம் நோக்கி வழிநடத்தி செல்லும் துறவறம் மற்றும் யோகத்தில் பங்கு பெறுதல். இந்த பிறவி மற்றும் முற்பிறவிகளில் தர்மம், அர்த்த மற்றும் காமத்தை நிறைவேற்றுவதால் மோஷம் கிடைக்கிறது. இதன் மூலம் ஒருவர் உலக சுக துக்கங்களில் இருந்து நிரந்தர விடுதலையை பெறுகிறார். மேலும் தகவலுக்கு: முக்தி.§
Rajagopura(m) (rājagopura): राजगोपुर “Royal gateway.” இராஜகோபுரம். தென்னிந்திய கட்டிடக்கலையில் கோபுரம் என்பது ஒரு கோயிலின் நுழைவாயிலை குறிப்பிடுகிறது. பெரிய கோயில்களில் பல கோபுரங்கள் அமைந்து இருக்கும். இவற்றுள் பிரதான கோபுரம் இராஜகோபுரம் என்று அழைக்கப்படுகிறது. §
rajas: रजस् “Passion; activity.” ரஜஸ். “பேரார்வம்; நடவடிக்கை.” மேலும் தகவலுக்கு: குணம்.§
rasatala chakra ( rasātala chakra): रसातलचक्र “Subterranean region.” ரசாதள சக்கரம். இது மூலாதாரத்திற்கு கீழிருக்கும் ஐந்தாவது சக்கரம். இது கணுக்கால்களின் மத்தியில் அமைந்து இருக்கும். சுயநலம், தன்னலம் மற்றும் சொந்தம் கொண்டாடும் பண்பு குடிகொண்டு இருக்கும் பகுதி ஆகும். ரசம் என்றால் “பூமி, நிலம்; ஈரப்பதம்.” மேலும் தகவலுக்கு: சக்கரம், நரகலோகம்.§
மறுபிறவி (reincarnation): “Re-entering the flesh.” புணர்ஜென்மம். ஆன்மாக்கள் பிறப்பின் மூலம் ஒரு தூல உடலுக்குள் நுழையும் செய்முறை. §
சந்நியாசம் (renunciation).§
கட்டுப்பாடுகள் (restraints) மேலும் தகவலுக்கு: இயமம்-நியமம். §
அனுகிரக சக்தி (revealing grace) மேலும் தகவலுக்கு: அருள். §
rishi (ṛishi): ऋषि “Seer.” ரிஷி. மனோஉணர்வு மற்றும் தொலைநோக்கு மெய்யறிவுடன் இருக்கும் ஒரு ஞானோதயம் பெற்ற உயிர்சக்தியை குறிப்பிடும் சொல். §
Rudra: रुद्र “Controller of terrific powers;” or “red, shining one.” ருத்ரம். அழிக்கும் கடவுளாக, மீண்டும் ஒடுக்கிக்கொள்ளும் கடவுளாக இருக்கும் சிவபெருமானின் பெயர். ருத்திரனாக இருக்கும் சிவபெருமான், மனிதர்களிடம் புலம்பலை ஏற்படுத்தும் அச்சுறுத்தும் சக்திகளை பிரயோகித்து அவற்றை கட்டுப்படுத்தவும் செய்வதால், அவர் “அச்சுறுத்துபவராகவும்" “கண்ணீரின் கடவுளாகவும்” இருக்கிறார். மேலும் தகவலுக்கு: நடராஜர், சிவபெருமான்.§
rudraksha (rudrāksha): रुद्राक्ष “Eye of Rudra; or red-eyed.” ருத்ராட்சம்: இது மூன்றாவது கண் அல்லது ஆக்ஞா சக்கரத்தை குறிப்பிடுகிறது. ஒரு கோலிகுண்டு வடிவில், பல்வேறு முகங்களுடன், எலியோகார்பஸ் கேனிட்ரஸ் மரத்தின் செம்பழுப்பு நிற விதைகளாக இருக்கும் ருத்திராட்சம் சிவபெருமானின் கண்ணீரில் இருந்து வந்ததாகவும், மனித நேயத்தின் மீது அவர் வெளிப்படுத்தும் இரக்கத்தின் சின்னமாக இருப்பதாகவும் கருதப்படுகிறது. §
புனிதமான மதசடங்கு (Sacrament): 1) சடங்குகளை செய்து பயன்பெறுபவர் மற்றும் மகாதேவர், தெய்வங்கள் அல்லது குருவிற்கு இடையே ஒரு முறையாக விளங்கும் இந்த புனித சடங்கு, முறையாக மற்றும் ஆச்சாரமாக நடத்தப்படுகிறது. இதில் வாழ்க்கையின் முக்கியமான நிலைகள் அல்லது நிகழ்வுகளை குறிக்கும் மத சடங்குகளும் (சம்ஸ்காரம்) அடங்கும். 2) பிரசாதம். ஒரு புனிதமான சடங்கில் அல்லது ஒரு புனிதமான நபரால் ஆசிகள் வழங்கப்பட்ட புனிதமான பொருட்கள், அருள் நிறைந்த பரிசுகள். §
sadhaka (sādhaka): साधक “Accomplished one; a devotee who performs sadhana.” சாதகன். தீவிரமான நாட்டத்துடன் ஆன்மீக பயிற்சிகளை மேற்கொள்பவர், மற்றும் இவர் வழக்கமாக மனத்துறவுடன் ஒரு குருவின் வழிகாட்டலுடன் செயல்படுபவர். அவர் வெள்ளை உடை அணிந்து எளிய விரதங்களுடன் இருப்பார், ஆனால் அவர் ஒரு சந்நியாசியாக இருப்பதில்லை. §
sadhana (sādhana): साधन “Effective means of attainment.” சாதனா. பூஜை, யோகம், தியானம், ஜெபம், உபவாசம் மற்றும் தபஸ் போன்ற மதம் சார்ந்த அல்லது ஆன்மீக பழக்கங்கள். §
sadhu (sādhu): साधु “Virtuous one; straight, unerring.” சாது. “நற்பண்புடன் இருப்பவர்; தவறு செய்யாது நேர்மையாக இருப்பவர்.” இறைவனை தேடும் வேட்கையில் தன்னை அர்பணித்துக் கொண்ட ஒரு மகான். ஒரு சாது என்பவர் ஒரு யோகி அல்லது சந்நியாசி அல்லது ஒரு குருவின் கீழ் சீடனாகவோ அல்லது முறையான பரம்பரையை சார்ந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை. சாதுக்களுக்கு வழக்கமாக ஒரு குறிப்பிட்ட இடம் என்று எதுவும் இருப்பதில்லை மற்றும் அவர்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்து, யாசகம் செய்து வாழ்வார்கள். §
sahaja: सहज சகஜம். “தன்னிச்சையாக, இயல்பாக.” முடிவான உண்மையை அறிந்தவரின் நிலையை குறிப்பிடுவதற்கு சற்குரு யோகசுவாமி இந்த சொல்லை பயன்படுத்தினார். “ஆன்மா மற்றும் இருப்பு, கண்காணிப்பாளர் மற்றும் கண்காணிக்கப்படும் பொருளின் ஒருமையின் அங்கீகாரம்,” என்று ஆனந்த கொமாரசுவாமி அதை விளக்கினார். §
sahasrara chakra ( sahasrāra chakra): सहस्रारचक्र “Thousand-spoked wheel.” சகஸ்ர சக்கரம். “ஆயிரம் இதழ்களுடன் இருக்கும் சக்கரம்.” மண்டை ஓட்டில் இருக்கும் மனோஉணர்வு விசை மையம். மேலும் தகவலுக்கு: சக்கரம்.§
Saiva (Śaiva): शैव சைவம். சைவ சமயம் அல்லது அதை பின்பற்றுபவர்கள் சார்ந்தது. இன்றும் உலகெங்கும் 400 மில்லியன் சைவர்கள் இருக்கிறார்கள். மேலும் தகவலுக்கு: சைவ சமயம்.§
Saiva Agamas (Śaiva Āgamas): शैव आगम சைவ ஆகமங்கள். இவை சைவர்கள் பின்பற்றும் ஸ்ருதிகள் ஆகும். இவை தீவிரமான கடவுள் நம்பிக்கையை போதித்து, சிவபெருமானை பரமேஸ்வரனாக, உள்ளார்ந்து எல்லாம் கடந்து இருப்பவராக குறிப்பிடுகின்றன. 64 காஷ்மீர் சைவ ஆகமங்கள் மற்றும் 28 சைவ சித்தாந்த ஆகமங்கள் என்று அவை இரண்டு முக்கிய பிரிவுகளாக உள்ளன. அதில் இரண்டாவது பிரிவு, சைவ சித்தாந்தத்தின் அடிப்படை சாஸ்திரங்களாக விளங்குகின்றன. §
Saiva Atmartha Puja (Śaiva Ātmārtha Pūjā): शैव आत्मार्थ पूजा “Saivite personal worship rite.” சைவ ஆத்மார்த்த பூஜை. வீட்டு பூஜை அறையில் சமஸ்கிருத வழிபாட்டு முறையுடன் நடைபெறும் பூஜை. மேலும் தகவலுக்கு: பூஜை. §
Saiva Parartha Puja (Śaiva Parārtha Pūjā): शैव परार्थपूजा “Saivite public worship rite.” சைவ பரார்த்த பூஜை. ஆகம ஐதீக முறைப்படி கோயிலில் நடைபெறும் பூஜை. மேலும் தகவலுக்கு: பூஜை. §
Saiva Samayam: சைவசமயம் “Saiva religion.” மேலும் தகவலுக்கு: சைவ சமயம்.§
Saiva Siddhanta (Śaiva Siddhānta): शैवसिद्धान्त “Final conclusions of Saivism.” சைவ சித்தாந்தம். இன்று உலகெங்கும் அதிகமாக பரவி வலுவாக இருக்கும் சைவப்பிரிவு, குறிப்பாக இலங்கை மற்றும் தென் இந்தியாவை சேர்ந்த தமிழ் மக்களிடம் ஆதிக்கம் செலுத்துகிறது. தெய்வீக வெளிப்பாடுகளின் முறைப்படுத்தப்பட்ட இறையியலாக இருக்கும் சைவ சித்தாந்தம், இருபத்தி எட்டு சைவ ஆகமங்களை கொண்டுள்ளது. சைவ சித்தாந்திகளுக்கு, எல்லா உள்பொருள்களின் கூட்டுத் தொகையாக விளங்கும் சிவபெருமான் பரமேஸ்வரன் (தனிப்பெரும் உருவாய் இருக்கும் ஸ்ருஷ்டிகர்த்தா), பராசக்தி (உருவத்தின் ஆதாரத்தளம்) மற்றும் பரசிவம் (எல்லாம் கடந்து இருக்கும் பரப்பிரம்மம்) என்று மூன்று முழுமைகளாக அறியப்படுகிறார். சிவபெருமானுடன் ஆன்மாக்களும் உலகமும் சாரத்தில் ஒன்றாக இருந்தாலும், அவை மாறுபாடு இருப்பதால் பரிணாம வளர்ச்சி பெறுகின்றன. அகோரசிவா மற்றும் மெய்கண்டார் போதனைகளில் இருந்து இடைக்காலங்களில் ஒரு பன்மைவாத பிரிவு தோன்றியது. மேலும் தகவலுக்கு: சைவ சமயம். §
Saivism (Śaivism, Śaiva): शैव சைவ சமயம். சிவபெருமானை பரமாத்துமாவாக வழிபடுபவர்கள் பின்பற்றும் சமயம். இது இந்து சமய பிரிவுகளில் மிகவும் பழமையானதாக விளங்குகிறது. சைவ சமயத்தின முதல் சான்றாக, ஒரு யோகியின் தோரணையில் பசுபதியாக அமர்ந்திருக்கும் சிவபெருமான் முத்திரை, 8000 வருடங்களுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்டது. சைவ சமயத்தில் பல பிரிவுகள் உள்ளன. அதில் சைவ சித்தாந்தம், பாசுபத சைவ சமயம், காஷ்மீர் சைவ சமயம், வீர சைவம், சித்த சித்தாந்தம் மற்றும் சைவ அத்வைதம் என்று ஆறு பிரிவுகள் உள்ளன. அவை வேதங்கள் மற்றும் சைவ ஆகமங்களில் வலுவாக ஊன்றி இருப்பதால், பின்வரும் முக்கிய கோட்பாடுகளுடன் பல ஒற்றுமைகளை கொண்டுள்ளன: 1) படைக்கும், காக்கும், அழிக்கும், வெளிப்படுத்தும் மற்றும் மறைக்கும் அருள்சக்திகள் என்று சிவபெருமானின் ஐந்து சக்திகள்; 2) பதி, பசு மற்றும் பாசம் (“இறைவன், ஆன்மாக்கள் மற்றும் பந்தங்கள்") என்ற மூன்று பிரிவுகள்; 3) ஆணவம், கர்மவினை மற்றும் மாயை என்று மூன்று மலங்கள்; 4) இச்சா சக்தி (“ஆசை; விருப்பம்"), கிரியை சக்தி (“செயல்படும் சக்தி”) மற்றும் ஞான சக்தி என்று சிவபெருமானின் மூன்று சக்திகள்; 5) முப்பத்தி ஆறு தத்துவங்கள், அல்லது உள்பொருளின் பிரிவுகள்; 6) ஒரு சற்குருவிடம் இருந்து தீட்சை பெறவேண்டிய தேவை; 7) மந்திரத்தின் சக்தி; 8) நான்கு பாதங்கள் (ஆன்மீக முன்னேற்றத்தின் நிலைகள்): சரியை (சுயநலமற்ற சேவை), கிரியை (பக்தி), யோகம் (தியானம்) மற்றும் ஞானம் (ஞானோதயம்); 9) பஞ்சாட்சர மந்திரம் முதன்மையானது என்றும் மதத்தின் புனிதமான கருவிகளாக ருத்ராட்சம் மற்றும் விபூதி விளங்குகின்றன என்ற நம்பிக்கை; 10) சற்குரு, சிவலிங்கம் மற்றும் மகான்களின் நட்புறவை குறிப்பிடும் சங்கமம். §
Saivite (Śaivite, Śaiva): शैव சைவ சமயம் சார்ந்ததை குறிப்பிடுவதற்கு அல்லது அதை பின்பற்றுபவருக்கு குறிப்பிடும் சொல். இன்று உலகில் சுமார் 400 மில்லியன் சைவர்கள் இருக்கிறார்கள். மேலும் தகவலுக்கு: சைவ சமயம்.§
Saivite Shastras (Śaivite Śāstras): शैव शास्त्र சைவ சமய சாஸ்திரங்கள். இந்த அந்தர்லோக தீர்க்க தரிசனத்தை 1973 ஆம் ஆண்டு முதல் முறையாக, ஆகாசத்தில் இருந்து சிவாய சுப்பிரமுனியசுவாமி படித்ததில் இருந்து, சைவ சித்தாந்த தேவாலயத்தை வழிநடத்தி வந்துள்ளது. சைவ சித்தாந்த யோக சமூகத்திற்காக இந்த சைவ சாஸ்திரங்களை, அந்தர்லோகத்தை சேர்ந்த ஒரு தேவர்களின் குழு ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர். லெமூரிய மற்றும் திராவிட மடங்களின் பொருத்தமான பழக்கங்களை பரிந்துரைத்து, குரு-சீடன் உறவுகள், அணுகுமுறைகள் மற்றும் மடவாசி வாழ்க்கைக்கு வழிகாட்டல்கள் உட்பட, அதில் வெளிப்படுத்தப்பட்டிருந்த கலாச்சாரம் மற்றும் இலட்சியங்களுக்குள் துறவிகளை மாற்றி அமைப்பது அதன் குறிக்கோள் ஆகும். §
samadhi (samādhi): समाधि “Enstasy,” “standing within one’s Self.” “Sameness; contemplation; union, wholeness; completion, accomplishment.” சமாதி: “ஒருவர் தனது பரமாத்துமாவிற்குள் நிலைத்து இருத்தல்.” “ஒற்றுமை; ஆழ்ந்த சிந்தனை; ஐக்கியம், முழுமை; நிறைவு, ஸித்தி.” சமாதி எனும் உண்மையான யோக நிலையில், தியானம் செய்பவர் மற்றும் தியானம் செய்யும் பொருள் ஒன்றாக இருக்கிறது. சமாதியில் இரண்டு நிலைகள் உள்ளன. இதில் முதலாவதாக இருக்கும் சவிகல்ப சமாதி (“உருவத்துடன் அல்லது விதையுடன் இருக்கும் சமாதி"), ஒரு பொருளின் சாரத்துடன் அடையாளம் அல்லது ஒருமையை காண்பது ஆகும். இதன் மிகவும் உயர்வான நிலையாக முதன்மை ஆதாரத்தளம் அல்லது தூய உணர்வாக இருக்கும் சச்சிதானந்தம் விளங்குகிறது. இரண்டாவதாக பரமாத்துமாவுடன் அடையாளம் காணும் நிர்விகல்ப சமாதியில் (“உருவம் அல்லது விதை இல்லாத சமாதி"), உணர்வின் எல்லா வகைகளையும் கடந்து காலம், உருவம் மற்றும் பரவெளியை கடந்து இருக்கும் பரப்பிரம்மம், பரசிவம் அனுபவிக்கப்படுகிறது.§
samayam: சமயம் “Religion.”§
sampradaya (saṁpradāya): संप्रदाय “Tradition,” “transmission;” சம்பிரதாயம். இது தத்துவம் அல்லது சமய கோட்பாடு அல்லது பரம்பரையை குறிப்பிடுகிறது. இது இந்து சமயத்தில் துடிப்புடன் இருக்கும் ஒரு பாரம்பரியம் அல்லது இறையியலாக இருந்து, வாய்மொழி பயிற்சி மற்றும் தீட்சை மூலம் வழங்கப்படுகிறது. வழக்கமாக ஒரு சம்பிரதாயத்தில் பல பரம்பரைகள் இருக்கும். §
samsara (saṁsāra): संसार “Flow.” சம்சாரம். விந்தையான உலகம். பிறப்பு, இறப்பு மற்றும் மறுபிறப்பின் சுழற்சி; ஒரு ஆன்மா அனுபவிக்கும் தொடர்ச்சியான லௌகீக வாழ்க்கைகளின் முழுமையான மாதிரி. §
samskara (saṁskāra): संस्कार “Impression, activator; sanctification, preparation.” சம்ஸ்காரம். “பதிவு, வினையூக்கி; புனிதப்படுத்துதல், முன்னேற்பாடு.” 1) (இந்த அல்லது இதற்கு முந்தைய பிறவிகளின்) அனுபவத்தின் மூலம் அடிமனதில் பதியும் பதிவுகள் ஒருவரின் வாழ்க்கை, குணம், எதிர்வினைகள், மனநிலைகள் போன்றவற்றில் தாக்கம் ஏற்படுத்துகின்றன. 2) வாழ்க்கையில் நடைபெறும் முக்கியமான மாற்றங்களை குறிப்பிடும் சடங்கு. §
Sanatana Dharma (Sanātana Dharma): सनातनधर्म “Eternal religion” or “Everlasting path.” சனாதன தர்மம். “அநாதி சமயம்” அல்லது “நீடித்து இருக்கும் பாதை.” இது இந்து தர்மத்திற்கு வழங்கப்படும் ஒரு பாரம்பரிய பெயர். மேலும் தகவலுக்கு: இந்து சமயம். §
sanga(m) (saṅga): सङ्ग “Association,” “fellowship.” சங்கம்: சமயம் தொடர்பான குறிக்கோள்களுக்காக ஒரு குழுவாக ஒன்று சேர்தல். §
ஆதி சங்கரா (Sankara, Adi): மேலும் தகவலுக்கு: சங்கரா.§
San Marga (San Mārga): सन्मार्ग “True path.” சன்மார்கம் என்பது தேவையில்லாத மனோஉணர்வு ஆய்வு அல்லது ஸித்திகளை பயனற்ற முறையில் வளர்க்க முயற்சி செய்யாது, இறுதி இலக்கான ஆத்ம ஞானத்தை நோக்கி செல்லும் நேரடியான ஆன்மீக பாதை ஆகும். சன் மார்கம் என்பது ஞானப் பாதையையும் குறிப்பிடுகிறது. §
சன் மார்க சரணாலயம் (San Marga Sanctuary): ஹவாயின் கார்டன் ஐலாண்டு, கவாயில் எழுச்சியடங்கிய எரிமலை, வயலீலே சிகரத்தின் அடிவாரத்தில் இருக்கும் ஒரு தியான தீர்த்தம். 1970 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த ஸ்தாபனம், சைவ சித்தாந்த தேவாலயத்தின் பல சமூக சேவைகளில் ஒன்றாக விளங்கி, அமெரிக்காவில் இருக்கும் இந்து சமய ஸ்தாபனங்களில் பழமையான ஒன்றாக விளங்குகிறது. §
sannidhana(m) (sannidhāna): सन्निधान “Nearness; proximity; provost; taking charge of.” சன்னிதானம். “அருகாமை; அண்மை; தலைமை பொறுப்பு; பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல்.” மடங்களின் தலைவர் குரு மகாசன்னிதானம் என்று அழைக்கப்படுகிறார். மேலும் தகவலுக்கு: சான்னித்திய. §
sannidhya (sānnidhya): सान्निध्य “(Divine) presence; nearness, indwelling.” சான்னித்திய. “தெய்வீக இருப்பு; அருகாமை, நிரந்தரமாக வாசம் செய்கிற.” ஒரு கோயில் அல்லது தெய்வீக புருஷரை சுற்றி அல்லது அவற்றுள் இருக்கும் சக்தியின் பிரகாசமான மற்றும் புனிதமான இருப்பு. §
sannyasa (sannyāsa): संयास “Renunciation.” “Throwing down or abandoning.” சந்நியாசம். “துறவறம்.” சந்நியாசம் என்பது சம்சாரியின் பொறுப்புக்கள் மற்றும் கடமைகளை உள்ளடக்கிய தர்மத்தை நிராகரித்து, அதை காட்டிலும் அதிக நிபந்தனைகளுடன் இருக்கும் சந்நியாச தர்மத்தை ஏற்றுக் கொள்வது ஆகும். §
sannyasin (sannyāsin): संयासिन् “Renouncer.” சந்நியாசி. சந்நியாச தீட்சையை பெற்றவர். ஒரு இந்து துறவி, சுவாமி மற்றும் சந்நியாசிகள் சமூகத்தை சேர்ந்தவர். அவர்களில் சிலர் நாடோடிகளாக இருப்பார்கள் மற்றும் சிலர் மடத்தில் வாழ்ந்து வருவார்கள். §
Sanskrit (Saṁskṛita): संस्कृत “Well-made,” “refined,” “perfected.” சமஸ்கிருதம். “நன்றாக,” “புனிதமான,” “முழுமையான.” பழங்கால இந்தியாவின் பாரம்பரிய சமயகுருமார்களின் மொழியாக இருக்கும் சமஸ்கிருதம், விண்ணுலகத்துடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு புனிதமான வாகனமாகவும் கருதப்படுகிறது. இது வேதங்கள் மற்றும் ஆகமங்கள் உட்பட, இந்து சாஸ்திரங்கள் எழுதப்பட்ட முதன்மையான மொழி ஆகும். இன்று இந்த மொழி பேச்சு வழக்கில் இல்லாவிட்டாலும் வழிபாட்டு முறை, இலக்கியம் மற்றும் கல்வியில் தீவிரமாக ஆய்வு மேற்கொள்ளும் மொழியாக இருக்கிறது. §
santosha: सन्तोष “Contentment.” சந்தோஷம். “திருப்தி.” மேலும் தகவலுக்கு: இயமம்-நியமம்.§
sapta rishis ( sapta ṛishis): सप्तऋषि சப்த ரிஷிகள். அந்தர்லோகத்தில் இருக்கும் இந்த ரிஷிகள், மனித நேயத்தின் கர்மவினைகளில் வழிகாட்டி உதவி செய்கிறார்கள். §
sari (sārī): (Hindi, साई) புடவை. இந்து பெண்மணிகள் அணியும் பாரம்பரிய உடை. §
Satchidananda (Sacchidānanda): सच्चिदानन्द “Existence-consciousness-bliss.” சச்சிதானந்தம். “தூய இருப்பு-தூய உணர்வு-பேரின்பம்.” இது சிவபெருமானின் தெய்வீக மனதையும், அதே சமயத்தில் ஒவ்வொரு ஆன்மாவின் தூய மெய்ஞ்ஞான மனதையும் குறிப்பிடுகிறது. இது முழுமையான அன்பாக, எல்லாம் அறிந்த சர்வவல்லமை படைத்த உணர்வாக, எல்லா உள்பொருளின் முதன்மையான மூலமாக இருந்தாலும், எல்லா உள்பொருளையும் உள்ளடக்கி ஊடுருவியும் உள்ளது. இது தூய உணர்வு, தூய உருவம், இருப்பின் ஆதாரத்தளம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பராசக்தியை குறிப்பிடும் இன்னொரு சொல். மேலும் தகவலுக்கு: சிவபெருமான்.§
satguru (sadguru): सद्गुरु “True weighty one.” சற்குரு. நிர்விகல்ப சமாதியின் மூலம் பரசிவம் என்கிற முடிவான புரிதலை உணர்ந்து, மிகவும் உயர்ந்த ஸித்தி மற்றும் ஆற்றலை பெற்ற ஒரு ஆன்மீக குருவாகவும் ஒரு ஜீவன்முக்தாவாகவும் இருக்கும் இவர், மற்றவர்களை ஆன்மீக பாதையில் வழிநடத்தி செல்கிறார். அவர் எப்போதும் ஒரு சந்நியாசியாக, திருமணமாகாத ஒரு துறவியாக இருக்கிறார். இவர் அருள் மற்றும் முக்தியின் மூலமாக இருக்கும் சதாசிவன், இறைவனின் ரூபமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வணங்கப்படுகிறார். §
satsanga (satsaṅga): सत्सङ्ग “Association with the good.” சத்சங்கம். “நல்லவர்கள் சேர்க்கை.” நல்ல ஆன்மாக்களின் குழுவுடன் சேர்தல்.§
sattva guna (sattva guṇa): सत्त्वगुण “Perfection of Being.” சத்வ குணம். நன்மை மற்றும் தூய்மையின் பண்பு. மேலும் தகவலுக்கு: குணம்.§
satya: सत्य “Truthfulness.” சத்தியம். பொய்யாமை. மேலும் தகவலுக்கு: இயமம்-நியமம்.§
Sat Yuga: सत्युग (Also Satya) “Age of Truth,“ also called Krita, “accomplished, good, cultivated, kind action; the winning die of four dots.” சத்யுகம். கிருத யுகம் என்றும் அழைக்கப்படுகிறது. “இந்த யுகத்தில் மக்கள் எல்லோரும் அறநெறியுடன் வாழ்வார்கள்.” இந்த யுகம் 1,728,000 வருடங்களுக்கு நீடித்து, நான்கு யுகங்களின் வழக்கமான சுழற்சியில் முதலாவதாக இருக்கிறது. மிகவும் பிரகாசமாக இருக்கும் இந்த யுகத்தில், மையத்தில் இருக்கும் சூரிய வெளிச்சம் முழுவதும் பூமியில் ஊடுருவுகிறது. மேலும் தகவலுக்கு: யுகங்களுக்கு மத்தியில் இருக்கும் சூரியன், பிரபஞ்ச சுழற்சி, யுகம்.§
sayuja (sāyujya): सायुज्य “Intimate union.” சாயுஜ்யம். நிரந்தர இறையுணர்வு. இது வழக்கமாக சாயுஜ்ய சமாதி என்று அழைக்கப்படும். §
பரமாத்துமா (Self (Self God)): ஒவ்வொரு ஆன்மாவின் மையத்திலும் வாசம் செய்யும் அந்த பரசிவம், பரப்பிரம்மம் என்கிற சிவபெருமானின் முழுமையை குறிப்பிடுகிறது. மேலும் தகவலுக்கு: பரசிவம்.§
ஆத்ம ஞானம் (Self Realization): பரமாத்துமா, பரசிவத்தை நேரடியாக அறிதல். ஆத்ம ஞானம் என்பது சமஸ்கிருதத்தில் நிர்விகல்ப சமாதி என்று அறியப்படுகிறது; “உருவம் அல்லது விதை இல்லாத சமாதி;” முடிவான ஆன்மீக ஸித்தி (அசம்பிரஞாத சமாதி என்றும் அழைக்கப்படுகிறது). மேலும் தகவலுக்கு: கடவுளை உணர்தல்.§
seva (sevā): सेवा “Service,” சேவை, கர்ம யோகம். விருப்பம் அல்லது வெகுமதி பற்றிய சிந்தனை அல்லது சொந்த லாபம் எதுவும் இல்லாது ஒரு கோயிலில் செய்யும் ஒரு தனிச்சையான சேவையை போன்று, ஆன்மீக பாதையின் அங்கமாக, மற்றவர்களுக்கு சுயநலமற்ற மற்றும் பயனுள்ள சேவையை செய்வது ஆகும். சேவை, சிவத்தொண்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது சரியை பாதையில் முக்கிய பயிற்சியாக விளங்குகிறது. §
shakahara (śākāhāra): शाकाहार “Vegetarian diet.” சைவ உணவு. மேலும் தகவலுக்கு: இயமம்-நியமம்.§
Shakta (Śākta): शाक्त சாக்த சமயம் சார்ந்த. மேலும் தகவலுக்கு: சாக்த சமயம்.§
Shakti (Śakti): शक्ति “Power, energy.” சக்தி. “ஆற்றல், சக்தி.” உள்பொருள் அனைத்திலும் வியாபித்து இருக்கும் சிவபெருமானின் இயங்கும் சக்தி அல்லது வெளிப்படையான சக்தி. இதன் மிகவும் புனிதமான அம்சமாக, எல்லா வடிவத்தின் தூய உணர்வு மற்றும் முதன்மை ஆதாரத்தளமாக இருக்கும் பராசக்தி என்கிற சச்சிதானந்தம் விளங்குகிறது. இச்சா சக்தி (ஆசை, விருப்பம், அன்பின் சக்தி), கிரியா சக்தி (செயல்பாட்டில் இருக்கும் சக்தி) மற்றும் ஞான சக்தியாக (விவேகம், அறிதலில் இருக்கும் சக்தி) வெளிப்படும் இந்த தூய்மையான, தெய்வீக சக்தி சிவபெருமானின் திருசூலத்தில் மூன்று கூரிய முனைகள் மூலம் உருவகம் செய்யப்பட்டுள்ளன. மறைக்கும், ஒடுக்கும், காக்கும் மற்றும் படைக்கும் என்று இதில் இருந்து ஐந்து சக்திகள் தோன்றுகின்றன. சைவ சித்தாந்தத்தில், எல்லாமாக இருக்கும் சிவபெருமானின் தெய்வீக ஆற்றலாக இருக்கும் சக்தி, அவரிடம் இருந்து பிரிக்க முடியாததாக இருக்கிறது. இந்த ஒற்றுமை, ஆண் உருவம் பாதியும் பெண் உருவம் பாதியுமாக இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் விக்ரகத்தில் உருவகம் செய்யப்பட்டுள்ளது. இந்து சமயத்தின் வேறு சில பிரிவுகளில் சிவபெருமானும் சக்தியும் தனித்தனி தெய்வங்களாக வழிபடுவது பிரபலமாக இருக்கிறது. இந்த வழிபாட்டில் சக்தி பெண் வடிவிலும், சிவபெருமான் ஆண் வடிவிலும் இருக்கிறார். இந்து கோயில்கள், கலை மற்றும் புராணங்களில், இவர்கள் தெய்வீக தம்பதிகளாக தென்படுகிறார்கள். சாக்த சமயத்தில், அம்மன் மற்றும் அவளது பல்வேறு கோரமான மற்றும் கருணையுள்ளம் கொண்ட வடிவங்கள் மீது வழிபாடு நடத்தப்படுகின்றன. சக்தி என்பது ஒரு தெய்வீகப் புருஷர் அல்லது பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயிலில் இருந்து வெளிப்படும் உன்னதமான, ஆனந்தத்தை ஊக்குவிக்கும் சக்தியாக பக்தர்களால் எளிதில் உணர முடிகிறது. மேலும் தகவலுக்கு: சாக்த சமயம்.§
shaktinipata (śaktinipāṭa): शक्तिनिपाट சக்திநிபாத. இது ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியில் சகல அவத்தையில், அருள் என்று அழைக்கப்படும் உயர்வான நிலையில் “அருளின் இறக்கத்தை,” குறிப்பிடுகிறது. சக்திநிபாத இரண்டு பிரிவாக இருக்கிறது: அது உட்புறமாக இறங்குவதை சிவபெருமான் மீது ஏற்படும் ஒரு மிகப்பெரிய ஏக்கத்தின் மூலமாகவும், அதன் வெளிப்புற இறக்கத்தை ஒரு சற்குரு தோற்றத்தில் இருந்தும் உணர முடியும். இந்த நிலையில், ஒரு பக்தன் ஆன்மீகம் மற்றும் புனிதமாக இருக்கும் விஷயங்கள் அனைத்திலும் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறான். இதே பொருளுடன் சக்திபாத என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. §
shaktipata (śaktipāṭa): शक्तिपाट சக்திபாத. இதே பொருளுடன் சக்திநிபாத என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தகவலுக்கு: சக்திநிபாத.§
Shaktism (Śāktism, Śākta): शाक्ति “Doctrine of power.” சாக்த சமயம். மென்மையாக அல்லது கோரமாக பல உருவங்களில இருக்கும் சக்தி அல்லது தேவியை வணங்கும் சமயப் பிரிவு. இந்து சமயத்தின் நான்கு முக்கிய பிரிவுகளில் ஒன்றாக சாக்த சமயம் விளங்குகிறது. சாக்த சமயத்தின் முதல் அறிகுறிகளாக கி.மு. 5500 காலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண் சிலைகள், இந்தியாவின் மெஹர்கர் கிராமத்திற்கு அருகில் கண்டு எடுக்கப்பட்டன. தத்துவம் மற்றும் பழக்கங்களை பொறுத்தவரையில், சைவ சமயம் போலவே பெரும்பாலும் சாக்த சமயம் தென்படுகிறது. உதாரணத்திற்கு அவை இரண்டும், சிவபெருமானுடன் நடைபெறும் அத்வைத ஐக்கியம் மற்றும் மோக்ஷத்தை முடிவான குறிக்கோள்களாக குறிப்பிடுகின்றன. ஆனால் சாக்த சமயத்தை சேர்ந்தவர்கள் தெய்வீக அம்சத்தின் வலுவான அம்சமாக இருக்கும் சக்தியை பரமாத்துமாவாக தனித்து வழிபடுகிறார்கள் மற்றும் சிவபெருமான் தனியாக யாவும் கடந்த நிலையில் இருப்பதாக கருதினாலும், அவரை வழிபடுவது இல்லை. மேலும் தகவலுக்கு: சக்தி.§
Shankara (Śaṅkara): शङ्कर “Conferring happiness;” “propitious.” சங்கரா. “மகிழ்ச்சியை வழங்குவது;” “அனுகூலமான.” சிவபெருமானை குறிப்பிடும் பெயர். மேலும் இந்த சொல், ஸ்மார்த்த சம்பிரதாயத்தின் முதன்மையான குருவாக, தனது அத்வைத வேதாந்தம் மற்றும் சாஸ்திரங்களுக்கு வழங்கிய விளக்க உரைகள் மூலம் புகழ்பெற்று, இந்தியாவின் முக்கிய பகுதிகளில் நான்கு மடங்களை ஸ்தாபனம் செய்து அதற்கு தனது சீடர்களை மடாதிபதிகளாக நியமித்த இந்து சமயத்தின் மிகவும் பிரசித்தமான துறவிகளில் ஒருவராக விளங்கிய ஆதி சங்கரரையும் (788-820) குறிப்பிடுகிறது. அவர் 32 வருடங்கள் மட்டுமே வாழ்ந்தாலும், இந்தியா முழுவதும் பயணம் செய்து, அந்த காலகட்டத்தில் இந்து சமூகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தினார். §
Sharavanabhava (Śaravaṇabhava): शरवणभव “Thicket of reeds.” சரவண பவ. முதன்மையான உணர்வின் புனிதமான சரவண பொய்கையில் தோன்றி, ஆன்மீக வேட்கையின் தலைவனாக இருக்கும், சிவபெருமானின் மகன் கார்த்திகேயனை அழைக்கும் மந்திரம். அந்த பொய்கையின் கண்ணாடி போன்ற மேற்பரப்பு அமைதியான, நிம்மதியான மனதை குறிப்பிடுகிறது. ஒரு சற்குருவால் நமச்சிவாய மந்திரத்தில் தீட்சை பெறாத சைவர்களுக்கு இந்த மந்திரம் பரிந்துரைக்கப்படுகிறது. §
shastra (śāstra): शास्त्र “Sacred text; teaching.” சாஸ்திரம்: “புனிதமான உரை; போதனை.” சமயம் அல்லது தத்துவம் சார்ந்த ஒரு நூல் அல்லது ஆகமங்களை போன்ற படைப்புக்கள். அரசாட்சி முறையை பற்றி குறிப்பிடும் அர்த்த சாஸ்திரங்களை போல ஏதாவது ஒரு துறையை சேர்ந்த அறிவு அல்லது அறிவியல்.§
shastri (śāstrī): शास्त्री சாஸ்திரி. (சாஸ்திரங்கள் அல்லது சட்ட நூல்கள்) சாஸ்திரத்தில் தேர்ச்சி இருப்பவர். §
shaucha (śaucha): शौच “Purity.” சவுச்சம். “புனிதம்.” மேலும் தகவலுக்கு: இயமம்-நியமம்.§
shishya (śishya): शिष्य சீடன். “ஒரு மாணவன் அல்லது சீடன்,” இது குறிப்பாக தனது திறமைகளை நிரூபித்து ஒரு குருவால் ஏற்றுக்கொண்ட ஒருவரை குறிப்பிடுகிறது. §
shloka (śloka): श्लोक சுலோகம். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட அளவில் இயற்றப்பட்ட ஒரு செய்யுள், சொற்றொடர், பழமொழி அல்லது கீர்த்தனை. இது குறிப்பாக இரண்டு வரிகளுடன், ஒவ்வொரு வரியிலும் பதினாறு எழுத்துக்களுடன் அமைந்து இருக்கும். §
Shri Rudram (Śrī Rudram): श्रीरुद्रम् “Hymn to the wielder of terrific powers.” ஶ்ரீருத்ரம். சிவபெருமானின் அழிக்கும் சக்தியை பிரார்த்திக்கும் இந்த முதன்மையான வேத மந்திரம், தினமும் இந்தியா முழுவதிலும் இருக்கும் சைவ கோயில்களில் ஓதப்படுகின்றன. மூன்று வேதங்களின் மத்தியில், யஜூர் வேத தைத்திரீய சம்ஹிதையின் அமைந்து இருக்கும் இந்த நீளமான பிரார்த்தனையின் மத்தியில் சிவாயநம எனும் பஞ்சாட்சர மந்திரம் முதல் முறையாக தோன்றுகிறது. §
ஷும் (Shum (Shūm)): / 1968 ஆம் ஆண்டு சிவாய சுப்பிரமுனியசுவாமி நாத பரம்பரையின் சூட்சுமமான தியான மொழியை வெளியிட்டார். இந்த மொழியின் முக்கிய எழுத்துக்களின் தோற்றம்:§
ஷூமீப் (shumif (shūmīf)): ஷும் மொழி மற்றும் தத்துவத்தில் வரையறுக்கப்பட்ட நான்கு கண்ணோட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த கண்ணோட்டத்தில் மனம் நிலையாக இருந்து, சாட்சி மனதின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு பயணம் செய்கிறது. மேலும் இந்த சொல் ஷும் கண்ணோட்டத்தை குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது. இது சைவ சித்தாந்தத்தில் ஆழமான தியான பயிற்சிகளை உள்ளடக்கியுள்ளது. இது ஒரு அத்வைத அல்லது ஒருமைவாத கண்ணோட்டம்.§
shumsimnisi (shūmsimnīsī): / ஷும்சிம்நிசி. தீவிர உணர்விற்கு வழி வகுக்கும் உற்சாகமான சிந்தனைகள். §
siddha: सिद्ध சித்தர். “பூரணமானவர்” அல்லது மிகப்பெரிய ஆன்மீக அல்லது சக்திகளை பெற்ற யோகி. மேலும் தகவலுக்கு: ஸித்தி. §
siddhanta (siddhānta): सिद्धान्त “Final attainments;” “final conclusions.” சித்தாந்தம். ஒரு துறையில் சிந்தித்து கண்டறிந்த முடிவான உண்மை. §
siddhanta shravana (siddhānta śravaṇa): सिद्धान्तश्रवण “Scriptural listening.” சித்தாந்த ஸ்ரவணம். “சாஸ்திரங்களை கேட்டல்.” மேலும் தகவலுக்கு: இயமம்-நியமம்.§
ஸித்தி (siddhi): “Power, accomplishment; perfection.” “ஆற்றல், சாதனை; முழுமை.” உறுதியான தியானம் மற்றும் ஒரு நோக்கத்துடன் உடலை வருத்தும் தபஸ் மூலம் வளர்ச்சி அடைந்த அல்லது ஆன்மீக பக்குவம் மற்றும் யோக சாதனா மூலம் இயல்பாக விழிப்படைந்த ஆன்மாவின் விசேஷமான சக்திகள். ஆத்ம ஞான அனுபவத்தை தொடர்ந்து பெறும் போது, ஒரு தனிநபரின் தேவைக்கு ஏற்ப ஸித்திகள் இயல்பாக விரிவாக்கம் பெறுகின்றன. ஸித்திகள் அகங்காரம் என்கிற தன்உணர்வை வளர்ச்சி அடைய செய்து இறைவன், மகாதேவர்கள் மற்றும் குருவின் விருப்பத்திற்கு முழுமையாக சமர்பித்துக்கொள்ளும் பிரபத்தி நிலையை அடைவதற்கு எதிராக போராடுவதால், ஆத்ம ஞானத்திற்கு முன்பாக ஸித்திகளின் பயன்பாடு அல்லது வளர்ச்சி ஒருவரின் பாதையில் மிகப்பெரிய தடைகளில் ஒன்றாக விளங்குகிறது. §
simshumbisi (simshūmbīsī»): சிம்ஷும்பிசி. முதுகுத்தண்டில் இருக்கும் ஆன்மீக சக்தி; மஞ்சள் நிறத்தில் முதுகுத்தண்டில் இருந்து நரம்பு மண்டலம் வழியாக பாய்ந்து செல்லும் சுத்தமான உயிர் சக்தி. துணை மெய்ஞ்ஞான நிலையின் பதினான்கு வலுவான மனோஉணர்வு நரம்பு ஓட்டங்களின் பகுதியாக சிம்ஷும்பிசி விளங்குகிறது. இந்த பதினான்கு ஓட்டங்கள் அல்லது நாடிகள் வும்டேயுடி மற்றும் கரேஹனா என்கிற இடா மற்றும் பிங்களா நாடிகளுடன் நடுவில் இருக்கும் சுஷும்னா நாடியையும் உள்ளடக்கியுள்ளது. ஒரு யோகி சிம்ஷும்பிசியில் வாழும் போது, அவர் ஆண் (தீவிரமான) அல்லது பெண்ணின் (செயலற்ற) இயல்பு இல்லாத உணர்வுடைய உயிர்சக்தியாக இருக்கிறார். §
Siva (Śiva): शिव The “Auspicious,” “Gracious,” or “Kindly one.” சிவபெருமான். சைவ சமயத்தின் பரமாத்துமா. சிவபெருமான் ஒரே சமயத்தில் படைப்பவராகவும் படைப்பாகவும், உள்ளார்ந்தும் யாவும் கடந்த நிலையில் இருப்பதாலும், அவர் நீக்கமற நிறைந்து இருக்கிறார். அவர் தனிப்பட்ட கடவுளாக, படைப்பவர், காப்பவர் மற்றும் அழிப்பவராக இருக்கிறார். ஒரு தெய்வீக சக்தியாக இருக்கும் அவர், பரமேஸ்வரன் (ஆதி ஆன்மா), பராசக்தி (தூய உணர்வு) மற்றும் பரசிவம் (பரப்பிரம்மம்) என்று மூன்று முழுமைகளில் பரவலாக புரிந்துகொள்ளப்படுகிறார். மேலும் தகவலுக்கு: பரமேஸ்வரன்.§
Sivadhyana (Śivadhyāna): शिवध्यान “Meditation on Siva.” சிவ தியானம். “தியானத்தில் இருக்கும் சிவன்.” மேலும் தகவலுக்கு: அஷ்டாங்க யோகம்.§
Sivalinga(m) (Śivaliṅga): शिवलिङ्ग “Mark (or sign) of Siva.” சிவலிங்கம். இது பெரும்பாலும் எல்லா சிவன் கோயில்களிலும், சிவபெருமானின் மிகவும் பிரபலமான வடிவமாக இருக்கிறது. சிவபெருமானின் மிகவும் பழமையான மற்றும் எளிமையான உருவமாக விளங்குகிறது. ஒரு உருண்டையாக, நீள்வட்டமாக, அருவுருவமாக இருக்கும் லிங்கம் வழக்கமாக ஒரு வட்டவடிவ பீடத்துடன் அமைந்து இருக்கும். சிவலிங்கத்தை பீடம் மற்றும் லிங்கம் என்று இரண்டாக பிரிக்கலாம். இதில் மேல் புறத்தில் இருக்கும் உருளை லிங்கம் என்று அழைக்கப்பட்டு, எல்லா உருவங்கள் மற்றும் பண்புகளை கடந்து இருக்கும் பரசிவத்தை குறிப்பிடுகிறது. லிங்கத்தில் கீழிருந்து மேலே எழும்பி இருக்கும் பகுதி பீடம் என்று அழைக்கப்பட்டு, இறைவனின் ஆற்றலை வெளிப்படுத்தும் பராசக்தியை குறிப்பிடுகிறது. லிங்கம் வழக்கமாக கல்லில் (செதுக்கப்பட்டு இருக்கும் அல்லது விரைந்து ஓடும் ஆற்றை போன்ற இயற்கை செயல்களால் தோன்றும் சுயம்புலிங்கம்) உருவாக்கப்பட்டாலும் உலோகம், ரத்தினம், படிகம், மரம், மண் மற்றும் உருகும் தன்மையுள்ள பனிக்கட்டியாலும் உருவாக்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு: மூர்த்தி, சைவ சமயம். §
Sivaloka (Śivaloka): शिवलोक “Realm of Siva.” சிவலோகம். மேலும் தகவலுக்கு: லோகம்.§
Siva Purana(m) (Śiva Purāṇa): शिवपुराण “Ancient [lore] of Siva.” சிவபுராணம். சைவர்கள் புனிதமாக கருதும் ஆறு முக்கிய சாஸ்திரங்களின் தொகுப்பு. மேலும் இந்த ஆறு நூல்களில் பழமையான நூலின் பெயராகவும் இருக்கிறது. ஆனால் சிலர் அதை வாயு புராணத்தின் ஒரு பதிப்பாக கருதுகிறார்கள். மேலும் தகவலுக்கு: இந்து சமயம், புராணங்கள்.§
Sivaratri (Śivarātri): शिवरात्रि “Night of Siva.” சிவராத்திரி. மேலும் தகவலுக்கு: மகாசிவராத்திரி.§
Sivathondu: சிவதொண்டு “Service to Siva.” இது கர்ம யோகம் கோட்பாட்டை போன்றது. §
Skanda: स्कन्द “Quicksilver;” “leaping one.” ஸ்கந்தன், கந்தன். கார்த்திகேயனை குறிப்பிடும் மிகவும் பழமையான பெயர்களில் ஒன்று. இவர் ஒண்சிவப்பு சாயலுடன் தேவர்கள் படைத்தலைவராக இருக்கிறார். §
Skanda Shashthi (Skanda Shashṭhī): स्कन्दषष्ठी கந்த சஷ்டி. அசுர சக்திகள் மீது கந்தன் எனும் கார்த்திகேயன் வெற்றிபெற்றதை கொண்டாடுவதற்கு அக்டோபர்-நவம்பர் மாதத்தில் நடைபெறும் ஆறு நாள் திருவிழா. §
Smarta (Smārta): स्मार्त “Of or related to smriti,” the secondary Hindu scriptures. இந்துக்களின் துணை சாஸ்திரங்களான “ஸ்ம்ருதி சார்ந்தது,” மேலும் தகவலுக்கு: ஸ்மர்த்த சமயம்.§
Smartism (Smārtism): स्मार्त् ஸ்மர்த்த சமயம். இவர்கள் ஸ்ம்ருதியை தங்களது அடிப்படையாக கொண்டவர்கள். நான்கு இந்து பிரிவுகளில் ஸ்மர்த்த சமயத்தை சேர்ந்தவர்கள் அதிக தாராள மனப்பான்மையுடன் ஆறு கடவுளையும் முழுமுதற் கடவுளாக வணங்குகிறார்கள். இவர்கள் பழங்கால வைதீக பிராமண பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் (சுமார் கி.மு. 700). 9 ஆம் நூற்றாண்டில் இருந்து இந்த சமயத்தின் மீது, ஆதி சங்கரரின் அத்வைத வேதாந்த போதனைகள் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி வழிநடத்தி வருகிறது. §
ஆன்மா (soul): மனம் மற்றும் உணர்ச்சிகளாக இல்லாமல் மனிதனின் உண்மையான உயிர்சக்தி. ஆத்மன் அல்லது “புருஷனாக" இருக்கும் ஆத்மா, தனது சாரம் மற்றும் உருவம் அல்லது உடல் என்கிற இரண்டு அம்சங்களை கொண்டுள்ளது. மனிதனுக்குள் அதிக உட்புறமாக மாறாத சக்தியாக இருக்கும் ஆன்மாவின் சாரம் அல்லது மையம், நிரந்தரமாக பரசிவம் (பரப்பிரம்மம்) மற்றும் பராசக்தி (சச்சிதானந்தம், தூய உணர்வு) என்ற சிவபெருமானின் முதல் இரண்டு முழுமைகளைப் போல இருக்கிறது. ஆன்மாவின் உடல், காரண சரீரம், அதிக உட்புறமாக இருக்கும் கோசம், ஆன்மீக உடல் மற்றும் ஒளியின் உடல் என்று ஆனந்தமய கோசம் அழைக்கப்படுகிறது. இந்த பெயர்கள், ஒளியினால் உருவாகி (குவாண்டம்) சுயமாக பிரகாசிக்கும் மனித உருவைப் போன்ற ஒரு தனிப்பட்ட சக்தியாக வெளிப்பட்டு இருக்கும் ஆன்மாவை குறிப்பிடுகிறது. மேலும் தகவலுக்கு: ஆன்மாவின் பரிணாம வளர்ச்சி. §
sphatika (sphaṭika): स्फटिक “Quartz crystal.” ஸ்படிகம், படிகம். ஸ்பட் என்றால், “விரிவடைதல்; மலர்தல்; கண் முன்னே திடீரென்று தோன்றுதல்.” மேலும் தகவலுக்கு: ஸ்படிக சிவலிங்கம்.§
sphatika Sivalinga(m) ( sphaṭika Śivaliṅga): स्फटिकशिवलिङ्ग “Crystal mark of God.” ஸ்படிக சிவலிங்கம். பளிங்கு படிகத்தில் ஒரு சிவலிங்கம். மேலும் தகவலுக்கு: சன் மார்க சரணாலயம், சிவலிங்கம் சுயம்பு லிங்கம்.§
ஆன்மீக விரிவாக்கம் (spiritual unfoldment): மனிதனுக்குள் உள்ளார்ந்து இருக்கும் தெய்வீக ஆன்மாவின் விரிவாக்கம். சுஷும்னா நாடி வழியாக குண்டலினி சக்தி மெதுவாக எழுச்சி பெறும் போது, உணர்வில் ஏற்படும் மெதுவான விரிவாக்கம். ஒரு மொட்டில் இருந்து அழகான மற்றும் பிரகாசமான தாமரை மலர் மலர்வதைப் போல, ஆன்மீக விரிவாக்கம் என்பது இந்த மெதுவான மற்றும் மிகவும் நுட்பமான செய்முறையை குறிப்பிடுகிறது. §
அடிமனம் (subconscious mind): Samskara chitta. இது கடந்தகால பதிவுகள், எதிர்வினைகள் மற்றும் ஆசைகளின் சேமிப்புக் கிடங்காகவும், தனிச்சையான உடலியக்க செய்முறைகளின் இருப்பிடமாகவும் இருக்கிறது. மேலும் தகவலுக்கு: மனம்.§
Subramaniam: சுப்பிரமணியம். இதற்கு சமஸ்கிருதத்தில் “அதிக கடவுள் பக்தியுள்ள; தெய்வீக புருஷருக்கு பிரியமான” என்று பொருள். முருகப்பெருமானை குறிப்பிடும் இன்னொரு பெயர். §
Subramuniyaswami: சுப்பிரமுனியசுவாமி. நந்தினாத சம்பிரதாயத்தை சேர்ந்த கைலாச பரம்பரையின் 162 ஆவது சற்குரு (1927–2001). அவர் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமான இந்து குருவாகவும், இந்து சமயத்தின் மறுமலர்ச்சிக்கு எண்ணற்ற முயற்சிகள் மேற்கொண்டதற்காகவும் உலகெங்கும் போற்றப்படுகிறார். அதே சமயத்தில், பாரம்பரியங்கள் என்பது கடந்தகாலத்தில் முயற்சி செய்து நிரூபிக்கப்பட்ட பாதைகள் என்ற கருத்தை தீவிரமாக ஆதரித்து, தற்கால மனித நேயத்தின் வாழ்க்கைக்கு புதிய மாதிரிகளை அமைத்து தருவதில் தைரியமாக புதிய சிந்தனைகளை அறிமுகப்படுத்தினார். §
மறைந்திருக்கும் பண்புகளின் மனம் (sub-subconscious mind): வாசன சித்த. மேலும் தகவலுக்கு: மனம் (ஐந்து நிலைகள்).§
துணை மெய்ஞ்ஞான மனம் (subsuperconscious mind): அனுகரண சித்த. உணர்வுள்ள மற்றும் அடியுணர்வு நிலைகள் வழியாக மெய்ஞ்ஞான மனம் செயல்படுவதை குறிப்பிடுகிறது. இது இயலுணர்வு, தெளிவு மற்றும் நுண்ணறிவை தோற்றுவிக்கிறது. §
சூட்சும உடல், நுணுக்கமான உடல் (subtle body): சூட்சும சரீரம். ஆன்மா அந்தர்லோகத்தில் செயல்படுவதற்கு, ஆன்மா தன்னை உறையிட்டுக் கொள்ளும் தூல பண்பில்லாத உடல், சூட்சும உடல் அல்லது வாகனம். சூட்சும உடல் விஞ்ஞானமய கோசம் (மனம், அறிவெழுச்சி-இயலுணர்வு கோசம்), மனோமய கோசத்தை (உள்ளுணர்வு-அறிவுணர்வு கோசம்) கொண்டுள்ளது. மேலும் ஆன்மா தூல உடலில் இருக்கும் வரை, சூட்சும உடலில் பிராணமய கோசமும் (உயிர் சக்தியின் கோசம்) இருக்கிறது. மரணத்திற்கு பிறகு, பிராணமய கோசம் பிரிவதால், சூட்சும உடலில் மனோமய மற்றும் விஞ்ஞானமய கோசம் மட்டுமே இருக்கின்றன. முறுபிறவிக்கு முன்பு அல்லது உயர் பரிணாம வளர்ச்சி லோகங்களில் நுழையும் போது, மனோமய கோசமும் விலக்கிகொள்வதால், அந்த சமயத்தில் சூட்சும உடலில் விஞ்ஞானமய கோசம் மட்டுமே இருக்கிறது. மேலும் இந்த சூட்சும உடலில் அந்தகரணம் (புத்தி, மனஸ் மற்றும் தன்னுணர்வு என்ற மனதின் புலன்கள்) மற்றும் தூல உடலுடன் இருக்கும் போது ஐந்து ஞானேந்திரியங்கள் (புலனுணர்வு கருவிகள்: கேளுணர்வு, தொட்டுணர்வு, பார்வை, சுவை மற்றும் வாசனை) மற்றும் ஐந்து கர்மேந்திரியங்கள் (செயற்கருவிகள்: வாக்கு, கைகள், கால்கள், உடற்கழிவுகளை வெளியேற்றும் உறுப்புக்கள் மற்றும் பிறப்புறுப்புக்கள்) இருக்கின்றன. இது உள்பொருளின் 36 பிரிவுகளில், 6 ஆவது தத்துவத்தில் இருந்து 36 ஆவது தத்துவம் வரை இடம் பிடிக்கிறது. §
summa: சும்மா “Stillness.” §
மெய்ஞ்ஞான மனம் (superconscious mind): காரண சித்த. மேலும் தகவலுக்கு: மனம் (ஐந்து நிலைகள்), மனம் (மூன்று கட்டங்கள்).§
sutra (sūtra): सुत्र “Thread.” சூத்திரம். ஒரு முதுமொழி போன்ற செய்யுள் அல்லது அத்தகைய முதுமொழிகளைக் கொண்ட இலக்கிய நடையை இது குறிப்பிடுகிறது. கி.பி. 500 ஆம் ஆண்டில் இருந்து இந்த நடையை இந்திய தத்துவ ஞான அமைப்புக்கள் பரவலாக ஏற்றுக்கொண்டு இறுதியில் சட்டம், இலக்கணம், மருத்துவம், கவிதை, கைவினைகள் தொடர்பான படைப்புக்களில் பயன்படுத்தவும் தொடங்கின. §
svadharma: स्वधर्म “One’s own way.” ஸ்வதர்மம். “ஒருவரது தனிப்பட்ட தார்மீக வழி.” மேலும் தகவலுக்கு: தர்மம். §
svarnasharira vishvagrasa (svarṇaśarīra viśvagrāsa): स्वर्णशरीरविश्वग्रास ஸ்வர்ணசரீர விஷ்வகிராசா. சிவபெருமானுடன் நடைபெறும் இறுதியான இந்த ஐக்கியத்தின் போது தனிப்பட்ட ஆன்மா எதுவும் இல்லாமல், சிவபெருமான் மட்டுமே நிலைத்து இருக்கிறார். மேலும் தகவலுக்கு: விஷ்வகிராசா.§
svayambhu Linga(m) ( svayambhū Liṅga): स्वयम्भूलिङ्ग சுயம்பு சிவலிங்கம். மேலும் தகவலுக்கு: சுயம்பு சிவலிங்கம்.§
svayambhu Sivalinga(m) (svayambhū Śivaliṅga): स्फटिकशिवलिङ्ग “Self-existent mark or sign of God.” சுயம்பு சிவலிங்கம். இது மனிதனின் கைகளால் வடிவமைக்கப்படாமல் இயற்கையாக கண்டு எடுக்கப்பட்ட ஒரு சிவலிங்கத்தை குறிப்பிடுகிறது. இது பெரும்பாலும் ஒரு வழுவழுப்பான உருளை வடிவில் பானலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. இதைப்போன்ற கற்கள் இந்தியாவின் நர்மதா நதியில் காணப்படுகின்றன. மேலும் தகவலுக்கு: சிவலிங்கம்.§
swami (svāmī): स्वामी “Lord; owner; self-possessed.” சுவாமி. “கடவுள்; எஜமான்; சுய கட்டுப்பாட்டுடன் அமைதியாக இருப்பவர்.” எல்லாம் அறிந்தவராக அல்லது தனக்குத்தானே ஆசிரியராக இருப்பவர். தனது வாழ்க்கையை முழுமையாக சமயப்பணியில் ஈடுபடுத்திக் கொண்ட ஒரு துறவி, தீட்சை பெற்றவர், காவி உடை அணிந்த துறவி மற்றும் வழக்கமாக ஒரு சந்நியாசிக்கு வழங்கப்படும் பெயர். சுவாமி எனும் சொல் மரியாதையின் சின்னமாக விளங்குவதோடு, சிலமயங்களில் துறவறம் மேற்கொள்ளாமல் ஆன்மீக பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களை குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது. §
Tai Pongal: தைப்பொங்கல். ஒவ்வொரு வருடமும் பருவத்தின் முதல் அறுவடையை கொண்டாடும் விதமாக, தை மாதத்தில் நான்கு நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் எல்லா செல்வ வளங்களையும் உழைக்கும் மக்களுக்கு வழங்கிய சூரிய பகவானுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. புதிதாக அறுவடை செய்த அரிசி அலங்கரிக்கப்பட்ட ஒரு பெரிய பானையில் சமைக்கப்படுகிறது. நமது முன்னோர்கள் பொங்கல் பொங்கும் திசையை வைத்து, இந்த வருடம் முழுவதும் எப்படி இருக்கும் என்பதையும் கணித்துள்ளனர். §
Tai Pusam: தைப்பூசம். இது ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் (ஜனவரி-பிப்ரவரி மாதத்தில்) பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில், இந்த திருவிழா நடைபெறும் இடத்திற்கு ஏற்ப சிவபெருமான் அல்லது முருகப்பெருமானுக்கு பிரார்த்தனை நடைபெறுகிறது. மொரீஷியஸ் மற்றும் சிங்கப்பூரில், இந்த திருவிழாவையொட்டி அரசு விடுமுறையும் அறிவிக்கப்படுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, பிஜி, தென் ஆப்ரிக்கா மற்றும் ரியூனியன் ஆகிய நாடுகளில் இருக்கும் தமிழர்களால் இந்த திருவிழா வெகு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின் போது பக்தர்கள் வழக்கமாக காவடி எடுக்கிறார்கள். §
tali: தாலி Wedding pendant. தாலி, திருமாங்கல்யம். இதை இந்து பெண்கள் தங்களது திருமண பந்தத்தின் அடையாளமாக தங்களது கழுத்தில் அணிந்து கொள்கிறார்கள். இது வழக்கமாக பருத்தி அல்லது பட்டு நூலில் இருக்கவேண்டும். ஆனால் இன்று பெரும்பாலானோர் தங்கத்தில் திருமாங்கல்யத்தை அணிந்து கொள்கிறார்கள். இது சமஸ்கிருதத்தில் மங்களசூத்திரம் என்று அழைக்கப்படுகிறது. அவள் அதை தனது கணவனின் பிம்பமாக மதிக்கிறாள் மற்றும் அவள் காலை இறைவனை வணங்கும் போது தனது தாலியையும் தொட்டு வணங்குகிறாள். §
tamas(ic): तमस् “Force of inertia.” தமஸ், தமோ குணம் சார்ந்த. மேலும் தகவலுக்கு: குணம்.§
tambura (taṁbūrā): तंबूरा (Hindi) தம்புரா. இந்த தந்தி வாத்தியம், நான்கு கம்பிகளை கொண்டு, குடம் போன்ற அடிப்பகுதியும் நீண்ட கழுத்தையும் கொண்டு இருக்கும். இது செங்குத்தாக நிறுத்தி வைத்து விரல்களால் மீட்கப்படுகிறது. இது பாடகர் அல்லது இசைக்கருவி வாசிப்பவருக்கு பின்னிசையாக இசைக்கப்படுகிறது. §
Tamil: தமிழ். தென்னிந்தியா மற்றும் வடக்கு இலங்கையில் இருக்கும் தமிழர்களின் மொழி. இது தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக இருக்கிறது, மற்றும் இது 60 மில்லியன் மக்கள் பேசும் மொழியாக இருக்கிறது. §
tandava (tāṇḍava): ताण्डव “Violent dance.” தாண்டவம். “பரவச தண்டனம்.” ஆண்களால் உக்கிரமாக ஆடப்படும் இந்த நடனம் 108 கரணங்களை கொண்டது. இந்த தாண்டவங்களில், சிவபெருமானின் ஆனந்த தாண்டவம், முதன்மையானதாக விளங்குகிறது. அதிக மென்மையான நடனம் லாஸ்யம் என்று அழைக்கப்படுகிறது. இது “துடிப்புணர்வுள்ள" என்பதை குறிக்கும் லச என்ற சொல்லில் இருந்து உருவானது. நடனம் பொதுவாக நர்த்தனம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு: நடராஜர்.§
tantra: तन्त्र “Loom, methodology.” தாந்திரீகம்: 1) இது பொதுவாக, “சாஸ்திரம்" என்ற சொல்லுக்கு ஒத்த பொருள் சொல்லாக கருதப்படுகிறது. 2) சமயம், சூட்சும ஞானம் மற்றும் அறிவியல் தொடர்பான எல்லா அம்சங்கள் பற்றியும் விரிவான விளக்கத்தை வழங்கும் சாக்த சமய பிரிவை பெரும்பாலும் சார்ந்து இருக்கும் ஆகம உரைகளை குறிப்பிடும் இன்னொரு சொல். தாந்தரீகங்கள் சைவ பாரம்பரியத்துடனும் தொடர்புடையதாக இருக்கின்றன. 3) சைவ மற்றும் சாக்த பாரம்பரியங்களில் இது குறிப்பிட்ட செய்முறை, உத்தி அல்லது ஆன்மீக பயிற்சியை குறிப்பிடுகிறது. 4) சாக்த சமயத்தில் தாந்தரீகம் என்பது, உருமாற்றம் மற்றும் தெய்வத்துடன் ஐக்கியம் என்று புனையப்பட்ட நோக்கத்துடன், பெரும்பாலும் உடலுறவுகள் உட்பட, பெண் சக்தியின் வழிபாட்டை வலுவாக வலியுறுத்தும் கட்டுப்பாடுகள் மற்றும் உத்திகள். §
tapas: तपस् “Heat, fire; ardor.” தபஸ். “வெப்பம், நெருப்பு; ஆர்வம்.” ஒருவர் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ளும் ஆன்மீக பழக்கங்கள், தீவிர தவம், பிராயச்சித்தம் மற்றும் தியாகம். இது தீவிர பிராயச்சித்தம், சமயம் சார்ந்த தவம் மற்றும் விரதங்கள் மூலம் வலி மற்றும் வேதனையை தாங்கிக்கொள்வதை குறிப்பிடுகிறது. §
tapasvin: तपस्विन् தபஸ்வின். இது வழக்கமாக தபஸ் கொண்டிருக்கும் ஒருவரை குறிப்பிடுகிறது. மேலும் தகவலுக்கு: தபஸ்.§
tattva: तत्त्व “That-ness” or “essential nature.” தத்துவம்: “முக்கிய இயல்பு.” தத்துவங்கள் என்பது பிரபஞ்சத்தின் முக்கிய கோட்பாடுகள், பாகங்கள், உட்பொருளின் நிலைகள் அல்லது பிரிவுகள், அடிப்படை அலகுகளாக இருக்கின்றன. சிவபெருமான் தொடர்ந்து படைத்துக்கொண்டு, தனது படைப்புக்களுக்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டு, தனக்குள் தனது படைப்புக்களை மீண்டும் ஒடுக்கிக்கொள்கிறார். இந்த படைக்கும் செய்முறை தத்துவங்களின் விரிவாக்கமாக, வெளிப்பாட்டு நிலைகளாக இருக்கின்றன என்றும் ரிஷிகள் விளக்குகிறார்கள். மேலும் இந்த தத்துவங்களின் மூலம் நுணுக்கமாக தொடங்கி பருமனாக மாறுவதாகவும் ரிஷிகள் கூறுகிறார்கள். மகாபிரளயத்தின் போது, அவை தனது மூலங்களில் அடைந்து கொள்வதால், அந்த மகாபிரளயத்திற்கு பிறகு முதல் இரண்டு தத்துவங்கள் மட்டுமே நிலைத்து இருக்கின்றன. தூய உணர்வாகவும், மற்ற வெளிப்பட்ட நிலைகளின் மூலமாகவும் இருக்கும் முதல் மற்றும் நுணுக்கமான உருவம் சிவ தத்துவம் அல்லது பராசக்தி-நாதம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் சிவ தத்துவத்தை கடந்து, அதத்துவம் என்று அழைக்கப்பட்டு யாவும் கடந்த நிலையில் இருக்கும் பரப்பிரம்மம் என்கிற பரசிவம் இருக்கிறது. இது சிவபெருமானின் முதல் முழுமையாக இருக்கிறது. சங்கியா அமைப்பு 25 தத்துவங்களை குறிப்பிடுகிறது. சைவ சமயம் அந்த 25 தத்துவங்களுடன் அதை கடந்து இருக்கும் 11 தத்துவங்களையும் சேர்த்து, மொத்தம் 36 தத்துவங்களை அங்கீகரிக்கிறது. §
tavil: தவில். தென் இந்தியாவில் தோன்றியதாக கருதப்படும் தவில், இந்து பூஜைகளில் நாதஸ்வரத்துடன் சேர்ந்து இசைக்கப்படும் இசைக்கருவி ஆகும். §
Tayumanavar: தாயுமானவர். இவர் தமிழ்நாட்டின் வேதாரண்யத்தில் 17 ஆம் நூற்றாண்டில் பிறந்ததாக கருதப்படுகிறது. இந்த சைவ சமய யோகி, தெய்வ பக்தி நிறைந்த பாடல்களை இயற்றினார். அந்த பாடல்கள் தத்துவம் மற்றும் பக்தியின் அற்புத கலவையாக இருந்தன. தாயுமானவர் “சின்மயானந்த குரு: என்ற தனது கவிதையில், தன்னை திருமூலரின் வம்சாவளியை சேர்ந்தவராக பாடியுள்ளார். மேலும் தகவலுக்கு: திருமூலர். §
teradi: தேரடி “Chariot shed.” திருவிழாக்களின் போது உற்சவ மூர்த்தியை ஊர்வலமாக அழைத்து செல்லும் தேர் நிறுத்தும் இடம். §
அந்த முடிவான பரம்பொருள் (That): முடிவாக, விளக்க முடியாமல் அல்லது பெயர் இல்லாத முழுமையாக இருக்கும் பரமாத்துமா, பரசிவத்தை குறிப்பிடும் பிரதி பெயர். §
ஈஸ்வரவாதம் (theism): இது இறைவன் ஒரு உண்மையான, உணர்வுள்ள, தனிப்பட்ட பரமாத்துமாவாக, ஸ்ருஷ்டிகர்த்தாவாக பிரபஞ்சத்தில் ஆட்சி செய்கிறார் என்ற நம்பிக்கை மற்றும் பரமாத்துமாவால் படைக்கப்பட்ட மகாதேவர்களின் மீது இருக்கும் நம்பிக்கையையும் குறிப்பிடுகிறது. §
சிவலோகம் (Third World): சிவலோகம் அல்லது கரணலோகம். மகாதேவர்கள் மற்றும் மிகவும் உயர்வான நிலையில் இருக்கும் ஆன்மாக்கள், சுயமாக பிரகாசிக்கும் தங்கள் உருவங்களுடன் வாழும் ஆன்மீக லோகம் அல்லது உள்பொருளின் காரண லோகம். மேலும் தகவலுக்கு: லோகம், மூன்று லோகங்கள்.§
மூன்று லோகங்கள் (three worlds): உள்பொருளின் மூன்று லோகங்களை குறிப்பிடும் த்ரிலோகம், பிரபஞ்சத்தின் அடிப்படை படிநிலை பிரிவுகள் ஆகும். 1) பூலோகம்: தூல உலகம். 2) அந்தர்லோகம்: “மத்தியில் இருக்கும் லோகம்,” நுணுக்கமான அல்லது சூட்சும லோகம். 3) சிவலோகம்: சிவன் மற்றும் உயர்ந்த பரிணாம வளர்ச்சி பெற்ற ஆன்மாக்களின் உலகம்; காரண லோகம்.§
tirtha (tīrtha): तीर्थ “Passageway; ford.” தீர்த்தம். குறிப்பாக புனிதமான நதிக்கரையில் அமைந்து இருக்கும் புண்ணிய க்ஷேத்திரம் அல்லது நீராடும் துறை. இது பூஜையில் பயன்படுத்தப்படும் நீரையும் குறிப்பிடுகிறது. §
tirthayatra (tīrthayātrā): तीर्थयात्रा “Journey to a holy place.” தீர்த்த யாத்திரை. §
Tirukural: திருக்குறள் “Holy couplets.” இது தமிழ்மொழியின் மாபெரும் இலக்கிய படைப்பு மற்றும் இந்து சமய நன்னெறி பற்றிய நுணுக்கங்களை வழங்கும் பொக்கிஷமாகவும் விளங்குகிறது. உலகின் முதன்மையான அறநூலாக விளங்கும் திருக்குறள், மனித நேயத்திற்கு வாழ்வியல் பற்றி விளக்குகிறது. §
Tirumantiram: திருமந்திரம் “Holy incantation.” நந்திநாத சம்பிரதாயத்தின் மிகவும் பழமையான தமிழ் சாஸ்திரம். இதை திருமூலர் சுமார் கி.மு. 200 ஆம் ஆண்டில் இயற்றினார். இது திருமுறைகளில் பத்தாவாதாக சேர்க்கப்பட்டு மறைபொருள், யோகம் மற்றும் தாந்தரீகம் சார்ந்த அறிவின் ஒரு பெரிய சேமிப்புக் கிடங்காக இருக்கிறது. இது இராஜ யோகம் மற்றும் சித்த யோகம் பற்றிய ஆன்மீக சாரம் மற்றும் பண்டையகால சைவ சமய பாரம்பரியமாக இருக்கும் 28 சைவ சித்தாந்த ஆகமங்களின் அடிப்படை கோட்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. ஆகமங்களில் பல தற்போது அழிந்து விட்டதால், 3,000 செய்யுட்களை கொண்ட திருமந்திரம் ஆகம தொகுப்பின் ஒரு அரிய பொக்கிஷமாக விளங்குகிறது. §
Tirumular: திருமூலர். நந்திநாத சம்பிரதாயத்தை சேர்ந்த கைலாச பரம்பரையின் ஒரு புகழ்பெற்ற சித்த யோகி மற்றும் ரிஷி. இவர் தமிழில் திருமந்திரத்தை இயற்றுவதற்கு (சுமார் கி.மு. 200) இமயமலையில் இருந்து வந்தார். அவர் இந்த சாஸ்திரத்தில் தனது சொந்த உணர்தலுடன் சைவ ஆகமங்கள் மற்றும் வேதங்களில் இருக்கும் தனது புலமையின் மூலம், துல்லியமான மற்றும் நுணுக்கமான பாடல் வடிவில் சைவ சமய கோட்பாடுகளை பதிவு செய்துள்ளார். மகரிஷி நந்திநாதாவின் சீடர்களில் ஒருவராக திருமூலர் இருந்தார். §
Tirumurai: திருமுறை “Holy book.” தென்னிந்திய நாயன்மார்கள் சிவபெருமானை போற்றிப் பாடிய பாடல்கள் மற்றும் இலக்கியங்களின் தொகுப்பு. இதை சைவ மகான்களின் ஒருவரான நம்பியாண்டார் நம்பி (சுமார் கி.பி. 1000) தொகுத்து அமைத்தார். முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் என்று அழைக்கப்படுகின்றன. §
tiruvadi: திருவடி. இது சற்குருவின் பாதங்களை குறிப்பிடுகிறது. இது சமஸ்கிருதத்தில் ஶ்ரீ பாதுகை அழைக்கப்படுகிறது. இது அருளின் மூலமாக வணங்கப்படுகிறது. குருவின் திருவடி குறிப்பாக தெய்வீக மற்றும் தூல லோகங்களுடன் தொடர்பில் இருப்பதால், அவை புனிதமாக விளங்குகின்றன.§
tiruvadi puja: திருவடி பூஜை. ஒரு குருவின் பாதங்கள் அல்லது அவரது திருவடிகளை வைத்து நடத்தப்படும் ஒரு பூஜை. மேலும் தகவலுக்கு: பூஜை.§
Tiruvalluvar: திருவள்ளுவர் “Holy weaver.” இவர் தென்னிந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்து வந்தார். சைவ சமயத்தை சார்ந்த இவர், நெசவுத்தொழில் செய்து வந்தார். இவர் உலகப்பொதுமறை, பொய்யாமொழி மற்றும் வேறு பல பெயர்களுடன் அழைக்கப்படும் திருக்குறளை இயற்றினார். அவர் நற்பண்புகளும், விசுவாசத்திற்கும் புகழ்பெற்ற தனது மனைவி வாசுகியுடன், இன்றைய திருமயிலையில் வாழ்ந்து வந்தார். §
Tiruvasagam: திருவாசகம் “Holy Utterances.” மாணிக்க வாசகர் (கி.பி. 850) அருளிய தமிழ் சாஸ்திர நூல். மிகவும் அழகிய பக்திப் பரவசப் பாடல்களைக் கொண்ட இத்தமிழ் நூல், மிகவும் உன்னதமான படைப்பாக கருதப்படுகிறது. இந்த நூலில் ஆன்மீக வாழ்வின் எல்லா படிநிலைகளும் விவாதிக்கப்பட்டுள்ளன. சந்தேகம் மற்றும் கடுந்துயரத்தில் இருந்து சிவபெருமான் மீது முழு நம்பிக்கை வைப்பது வரை, லௌகீக அனுபவத்தில் இருந்து குரு-சீடன் உறவு மற்றும் மறுபிறவியில் இருந்து விடுதலை வரை, ஆன்மீக பாதையில் இருக்கும் ஒவ்வொரு கட்டத்தையும் திருவாசகம் விவாதிக்கிறது. §
தசமபாகம் (tithe (tithing)): இது ஒரு ஆன்மீக பழக்கமாக, ஒரு விரதமாக விளங்குகிறது. இதன் மூலம் ஒருவர் தனக்கு விருப்பமான சமய அமைப்பிற்கு நன்கொடை வழங்குவதால், பூமியில் ஆன்மீக கல்வி மற்றும் முன்னேற்றம் நிலைநிறுத்தப்படுகிறது. இது சமஸ்கிருதத்தில் தசமாம்சா என்றும் தமிழில் பதின்மை என்றும் அழைக்கப்படுகிறது. §
trishula (triśūla): त्रिशूल திரிசூலம். சிவபெருமான் மற்றும் சில சைவத் துறவிகள் பிரயோகம் செய்யும் முத்தலைச் சூலம். இது இச்சா சக்தி (ஆசை, விருப்பம், அன்பு), கிரியா (செயல்) சக்தி மற்றும் ஞான சக்தி என்று இறைவனின் மூன்று அடிப்படை சக்திகள் அல்லது ஆற்றல்களை குறிப்பிடுகிறது. §
விரிவாக்கம் (Unfoldment). மேலும் தகவலுக்கு: ஆன்மீக விரிவாக்கம்.§
upadesha (upadeśa): ऊपदेश “Advice; religious instruction.” உபதேசம். இது வழக்கமாக குரு தனது சீடனுக்கு கேள்வி பதில் வடிவில் வழங்குவார். இது சற்குருவின் ஆன்மீக சொற்பொழிவுகளையும் குறிப்பிடுகிறது. §
upadeshi (upadeśī): उपदेशी உபதேசி. மற்றவர்கள் முக்தி அடைவதற்கு தீவிரமாக உதவி செய்ய மற்றும் உபதேசிக்க முடிவு செய்யும் ஒரு முக்தி பெற்ற ஆன்மா. இது நிர்வாணியில் இருந்து மாறுபட்டு இருக்கிறது. மேலும் தகவலுக்கு: நிர்வாணி மற்றும் உபதேசி. §
Upanishad: उपनिषद् “Sitting near devotedly.” உபநிடதம். “அருகில் பக்தியுடன் அமர்தல்.” இது வேதங்களின் நான்காவது இறுதி பகுதியாக விளங்கி, வேத மந்திரங்களின் இரகசிய, தத்துவ பொருளை விளக்குகிறது. உபநிடதங்கள் என்பது வலுவான உரைகளின் தொகுப்பு ஆகும் மற்றும் அவை வேதாந்தத்தின் மூலமாக விளங்கி, ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்திய சிந்தனை மீது ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அவை கடவுள், ஆன்மா மற்றும் அண்டத்தின் இயல்பு மற்றும் மிகவும் ஆழமான இந்து சிந்தனையின் பிரத்யேக வெளிப்பாடுகளை விளக்கும் ரிஷிகளின் தத்துவ பதிவுகளாக விளங்குகின்றன. §
Vaishnava (Vaishṇava): वैष्णव. வைணவம், வைணவர். விஷ்ணுவை சார்ந்த. விஷ்ணு மற்றும் அவருடைய அவதாரங்களை வழிபடுவர். மேலும் தகவலுக்கு: வைணவம், விஷ்ணு. §
Vaishnavism (Vaishṇava): वैष्णव வைணவம். இந்து தர்மத்தில் இருக்கும் நான்கு முக்கிய சமயங்கள் அல்லது பிரிவுகளில் ஒன்று. உலகில் இருக்கும் ஒரு பில்லியன் இந்துக்களில் ஐம்பது சதவீதம் வைணவர்களாக இருக்கிறார்கள். இது தனிப்பட்ட கடவுளாக விஷ்ணுவை, அவரது அவதாரங்கள் மற்றும் அந்த அவதாரங்களின் துணைவிகளை வழிபடுவதை மையமாக கொண்டு அமைந்துள்ளது. வைணவம் பண்புகள் இல்லாத இறைவனை காட்டிலும் பண்புகளுடன் இருக்கும் இறைவனுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, முக்தி பெறுவதற்கு பக்தியை உண்மையான பாதையாக வலியுறுத்துகிறது. §
வைணவர் (Vaishnavite): வைணவம் அல்லது விஷ்ணுவை சார்ந்தது. விஷ்ணு அல்லது அவருடைய அவதாரங்களை வழிபடுவர். மேலும் தகவலுக்கு: வைணவ சமயம், விஷ்ணு.§
vasana (vāsanā): वासना “Abode.” அடியுணர்வு ஈடுபாடுகள். “வாசம் செய்யும், மீதம், மிகுதி" என்பதை குறிக்கும் வாஸ் என்ற சொல்லில் இருந்து உருவானது. இயக்கும் சக்திகள், தாக்கங்களாக இருக்கும் இந்த அடியுணர்வு ஈடுபாடுகள் மற்றும் பழக்க மாதிரிகள் ஒருவரின் அணுகுமுறைகள் மற்றும் எதிர்கால செயல்களை ஊக்குவிக்கின்றன. §
vasana daha tantra (vāsanā daha tantra): वासनादहतन्त्र. “Purification of the subconscious by fire.” வாசன தாக தந்திரம் . தாக என்றால் எரிகிற, தந்திரம் என்றால் செயல்முறை மற்றும் வாசனா என்றால் ஒருவரது தூண்டுதல்கள் மற்றும் அணுகுமுறைகளை உருவாக்கும், ஆழப்பதிந்த அடியுணர்வு பண்புகள் அல்லது மனநிலைகள் என்று பொருள். வாசனாக்கள் நேர்மறை அல்லது எதிர்மறையாக இருக்கலாம். வாசன தாக தந்திரம் என்பது குற்றத்தை ஏற்றுக்கொள்ளும் அறிக்கைகள், பிடித்தமானவர்கள் அல்லது நெருக்கமானவர்களுக்கு எழுதிய நீண்ட கடிதங்கள் உட்பட வேதனையின் விளக்கங்கள், குழப்பங்களின் வெளிப்பாடுகள், மனக்குறை மற்றும் நீண்டநாளாக இருக்கும் வருத்தங்களின் பதிவுகளை எரிக்கும் பயிற்சி ஆகும். இது பிரச்சனைக்குரிய வாசனாக்களை அழிக்கவும் வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணவும் மிகவும் சிறந்த முறைகளில் ஒன்றாக இருக்கிறது. பிரச்சனைகளை ஒரு காகிதத்தில் எழுதி, அதை சாதாரண நெருப்பில் எரிக்கும் போது, அவை அடியுணர்வில் இருந்து வெளிப்புற மனதிற்கு கொண்டு வரப்படுகிறது மற்றும் நெருப்பு காகிகத்தை எரிக்கும் போது, ஒடுக்கப்பட்ட உணர்ச்சிகள் வெளிப்படுகின்றன. இவ்வாறு எழுதுவதை ஆங்கிலத்தில் ஸ்பிரிச்சுவல் ஜர்ணலிங (spiritual journaling) என்பார்கள், அதாவது ஒருவர் தனது ஆன்மீக பயணத்தைப் பற்றி எழுதுதல் என்று பொருள். இந்த பழக்கத்தின் விசேஷ வடிவமாக மகா வாசன தாக தந்திரம் விளங்குகிறது. வழக்கமாக செய்யும் வாசனா தாக தந்திரத்தில் செய்வதைப் போல, ஒருவர் தனது அடியுணர்வில் சேகரித்த சுமைகளை நீக்குவதற்கு, தனது கடந்தகாலத்தை நினைவுக்கூர்ந்து வாழ்நாளின் பல்வேறு அம்சங்களை காகிதத்தில் எழுதி, அதை எரிப்பதே இந்த சாதனா ஆகும். ஒவ்வொரு வருடமும் பத்து பக்கங்கள் எழுத வேண்டும். இந்த தந்திரத்தின் மற்ற அம்சங்களாக ஒருவர் தனக்கு தெரிந்த மனிதர்களை பற்றி மற்றும் தனது பாலியல் அனுபவங்கள் அனைத்தையும் பற்றி எழுதுவதும் அடங்கியுள்ளது. §
Veda: वेद “Wisdom.” வேதம். இது ரிஷிகளால் அருளப்பட்ட இந்து தர்மத்தின் அதிகாரப்பூர்வ சாஸ்திரமாக விளங்குகிறது. வேதங்களும் ஆகமங்களும் ஸ்ருதி என்று அழைக்கப்படுகின்றன. ஸ்ருதி என்றால் காதால் கேட்கப்பட்டவை என்று பொருள். பல புனிதமான சாஸ்திரங்களின் தொகுப்பாக வேதங்கள் விளங்குகின்றன. வேதங்கள் ரிக், யஜூர், சாம மற்றும் அதர்வணம் என்று நான்கு வகைப்படும். இவை கூட்டாக 100,000 மந்திரங்கள் மற்றும் கூடுதலாக உரைகள் மற்றும் விளக்கங்களை உள்ளடக்கியுள்ளன. வேதங்கள் வழங்கும் அறிவு லௌகீக பக்தியில் இருந்து உயர்ந்த தத்துவம் வரை பரவியுள்ளது. §
Vedanta (Vedānta): वेदान्त “Ultimate wisdom” or “final conclusions of the Vedas.” வேதாந்தம். வேதாந்தம் என்பது வேதங்களின் இறுதியான முடிவுகளை வெளிப்படுத்தும் உபநிடதங்களில் (சுமார் கி.மு. 1500-1600) உள்ள சிந்தனை முறை ஆகும். சுத்த துவைதத்தில் தொடங்கி முழுமையான அத்வைதம் வரை, வரலாறு முழுவதும் பல்வேறு வேதாந்த பிரிவுகள் உருவாகியுள்ளன. §
வேதம் மற்றும் ஆகமம் சார்ந்த (Vedic-Agamic (Vedic-Āgamic)): வரலாறு மற்றும் பாரம்பரியத்தில் ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக இருந்து பின்னிப்பிணைந்த இரண்டு பிரிவுகளை பிரதிபலித்து, இந்து சமய ஸ்ருதிகளாக விளங்கும் வேதங்கள் மற்றும் ஆகமங்களில் இருந்து கிரகித்து அவற்றுடன் இணங்கி இருத்தல். §
vel: வேல் “Spear, lance.” வேல். யோகத்தின் தலைவனாகவும் தேவர்கள் படைத்தலைவனாகவும் இருக்கும் முருகப்பெருமானின் தெய்வீக அதிகாரத்தை தெரியப்படுத்தும் சின்னம். (இது சமஸ்கிருதத்தில் சூல என்று அழைக்கப்படுகிறது)§
veshti: வேஷ்டி. நீளமாக தைக்கப்படாத துணியாக வெள்ளை நிறத்தில் இருக்கும் வேஷ்டி, இந்து சமயத்தை சேர்ந்த ஆண்கள் இடுப்புப் பகுதியில் அணியும் உடை ஆகும். இது பல்வேறு விதமாக அணியலாம். “சுற்றுதல்" என்பதை குறிப்பிடும் “வேஷ்டனா” என்ற சம்ஸ்கிருத சொல்லில் இருந்து உருவான ஒரு தமிழ் சொல். இது வேட்டி (தமிழ்) அல்லது தோத்தி (இந்தி) என்றும் அழைக்கப்படுகிறது. §
vibhuti (vibhūti): विभूति “Resplendent, powerful.” விபூதி, திருநீறு. பால், நெய், தேன் போன்ற விசேஷமான பொருட்களுடன் மாட்டு சாணத்தை எரித்து வெள்ளை நிறத்தில் திருநீறு தயாரிக்கப்படுகிறது. இது தூய்மையை குறிப்பிட்டு, எல்லா சிவாலயங்கள் மற்றும் சிறிய கோயில்களில் பூஜைக்கு பிறகு பக்தர்களுக்கு வழங்கப்படும் முக்கிய பிரசாதங்களில் ஒன்றாக விளங்குகிறது. §
Vishnu (Vishṇu): विष्णु “All-pervasive.” விஷ்ணு. “எங்கும் வியாபித்து இருக்கிற.” சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள். தனிப்பட்ட தலைவனாக, ஸ்ருஷ்டிகர்த்தாவாக, சர்வவல்லமையுடன் எல்லாம் அறிந்த உதார குணமுள்ள தெய்வமாக, தர்மத்தை நிலைநிறுத்த வேண்டிய போது அவதரிக்கும் இறைவனாக இருக்கிறார். சைவ சமயத்தில், சிவபெருமானின் காக்கும் அம்சமாக விஷ்ணு இருக்கிறார். §
vishuddha chakra ( viśuddha chakra): विशुद्धचक्र “Wheel of purity.” விசுத்த சக்கரம். “தூய்மையான சக்கரம்.” ஐந்தாவது சக்கரம். தெய்வீக அன்பின் மையம். மேலும் தகவலுக்கு: சக்கரம். §
vishvagrasa (viśvagrāsa): विश्वग्रास “Total absorption.” விஷ்வகிராசா. “முழுமையான ஒடுக்கம்.” ஆன்மாவின் பரிணாம வளர்ச்சி நிறைவு பெற்றதும், சிவபெருமானுடன் நடைபெறும் ஆன்மாவின் முடிவான ஐக்கியம். ஆன்மா முதல் முறையாக தோற்றம் அளித்த சிவலோகத்தில், சிவபெருமானின் உடலான பரமேஸ்வரனுடன் தனியான ஆனந்தமய கோசத்தின் முடிவான ஐக்கியத்தை இது குறிப்பிடுகிறது. §
vitala chakra: वितलचक्र “Region of negation.” விதள சக்கரம். மூலாதாரத்திற்கு கீழிருக்கும் இரண்டாவது சக்கரம். இது தொடைகளில் மையம் கொண்டு இருக்கிறது. சீற்றம் மற்றும் வன்முறை குடியிருக்கும் பகுதி. மேலும் தகவலுக்கு: சக்கரம், நரகலோகம்.§
vrata: व्रत “Vow, religious oath.” விரதம். இது தவம், உபவாசம், குறிப்பிட்ட மந்திரத்தை ஜெபம் செய்தல், வழிபாடு அல்லது தியானத்தை போன்று சில பழக்கங்களை செய்யவேண்டும் என்ற உறுதிமொழியை பெரும்பாலும் குறிப்பிடுகிறது. §
vritti (vṛitti): वृत्ति “Whirlpool, vortex.” விருத்தி. இது யோக உளவியலில், உணர்வில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள், மனதின் செயல்பாடுகள் (சித்த விருத்தி) மற்றும் சிந்தனை மற்றும் புலனுணர்வின் அலைகளை குறிப்பிடுகிறது. “யோகம் என்பது மனதின் செயல்பாடுகளை (சித்த விருத்தி) கட்டுப்படுத்துவது (நிரோதா) ஆகும். பொதுவாக விருத்தி என்றால்: 1) பாதை, வாழ்முறை; ஒழுக்கம், நடத்தை; ஒரு செயலை செய்யும் முறை; 2) இயல்பு, பண்பு, வகை. §
vumtyeudi (vūmtyēūdī):/ உம்தியுடி. நீல நிறத்தில் இருக்கும் இந்த நாடி ஓட்டம், மேல்நோக்கி பாய்ந்து சேர்ந்து, உடலின் வலது புறமாக முடிகிறது. இது சமஸ்கிருதத்தில் பிங்களா என்று அழைக்கப்படுகிறது. இந்த ஓட்டம் ஆண்மையின் பண்புடன் தீவிர இயல்புடன் இருக்கிறது. இது உயிர்சக்தியில் அறிவுணர்வு-மனம் சார்ந்த சக்தியாக இருக்கிறது. அந்த அறிவுணர்வு சக்தி ஒருவருக்கு தனது அறிவுணர்வு மனதின் மீது விழிப்புணர்வு ஏற்பட்டு சிந்திப்பதற்கு காரணமாக இருக்கிறது. உம்தியுடி நாடி சிம்ஷும்பிசியில் இருக்கும் ஓட்டங்களில் ஒன்றாக விளங்குகிறது. §
Yagam: யாகம் “Worship; sacrifice.” “வழிபாடு; தியாகம்.” மேலும் தகவலுக்கு: யக்ஞன.§
yajna (yajña): यज्ञ “Worship; sacrifice.” யாகம். “வழிபாடு; தியாகம்.” உட்புற மற்றும் வெளிப்புற வழிபாட்டின் மூலம் தியாகம் செய்து சரண் அடைவதை குறிப்பிடும் யாகம், இந்து தர்மத்தின் மிகவும் முக்கிய கோட்பாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. 1) வைதீக காலங்களில் இருந்து நடைபெற்று வரும் இந்த வழிபாட்டில் வேத மந்திரங்களின் உச்சரிப்புடன் நெய், தானியங்கள், நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகை சுள்ளிகள் அக்னி பகவானுக்கு சாஸ்திர முறைப்படி வழங்கப்படுகின்றன. தேவ தூதராக கருதப்படும் அக்னி பகவான், படையல்கள் மற்றும் பிரார்த்தனைகளை மகாதேவர்களிடம் கொண்டு சேர்க்கிறார். யாகத்திற்கு நான்கு பொருட்கள் தேவைப்படுகின்றன, அவற்றில் எதையும் தவிர்க்க முடியாது: திரவியம், அர்ப்பணிக்கும் பொருட்கள்; தியாகம், அனைத்து பொருட்களையும் இறைவனுக்கு படைக்க வேண்டும் என்ற எண்ணம்; தேவதா, படையலை பெறும் விண்ணுலக சக்திகள்; மற்றும் மந்திரம், சக்தியை வழங்கும் சொல் அல்லது சுலோகம். 2) மனுஷ்ய யக்ஞம் அல்லது வெறும் யக்ஞம், “மனிதர்களுக்கு மரியாதை செய்தல்,” ஏழை, ஆதரவற்றோர் மற்றும் மாணவர்களுக்கு அன்னதானம். தசமபாகம் மற்றும் ஈகை போன்ற பரோபகார செயல்களை மனுஷ்ய யக்ஞம் உள்ளடக்கியுள்ளது. இலங்கையில் யாகம் என்ற சொல் மிகப்பெரிய அன்னதானங்களை குறிப்பிடுகிறது. §
yagasala: யாகசாலை (Sanskrit—yajñaśālā: यज्ञशाला) “Place of worship.” “வழிபடும் இடம்.” மிகப்பெரிய ஹோமங்கள் அல்லது ஒரு கோயில் புனருத்தாரணப் பணி (திருப்பணி) போன்று இந்து சடங்குகள் நடத்த அமைக்கப்படும் ஒரு தற்காலிக அமைப்பு.§
yama-niyama: यम नियम. இயமம்-நியமம். இயமங்கள் மற்றும் நியமங்கள் இராஜ யோகத்தின் எட்டு அங்கங்களில் முதல் இரண்டு அங்கங்களாக விளங்கி, இந்து சமயத்தின அடிப்படை நெறிமுறைகளை உள்ளடக்கி, ஆன்மீக முன்னேற்றம் அனைத்திற்கும் அத்தியாவசிய அடிப்படையாக விளங்குகிறது. பாரம்பரிய பத்து இயமங்கள் மற்றும் பது நியமங்களை இங்கே காணலாம். இயமங்கள்: 1) அகிம்சை: “கொல்லாமை.” மற்றவர்களை சிந்தனை, சொல் அல்லது செயலால் துன்புறுத்தாமல் இருத்தல். 2) சத்தியம்: “வாய்மை.” பொய் சொல்லாமல் மற்றும் வாக்கு தவறாமல் இருத்தல். 3) அஸ்தேயம்: “கள்ளாமை.” திருடாமல், பேராசை இல்லாமல், கடன் பெறாமல் இருத்தல். 4) பிரம்மச்சரியம்: “எப்போதும் பரமாத்துமாவின் நினைவாக இருத்தல் .” திருமணத்திற்கு பின் விசுவாசமாக நடந்துகொள்ள, பிரம்மச்சாரியாக இருக்கும் போது மனத்துறவுடன் இருத்தல். 5) ஷமை: “பொறுமையுடமை.” மன்னிக்கும் தன்மை. 7) தயா: “கருணை.” மற்ற உயிரினங்கள் இடத்தில் இரக்கமற்ற, கொடூரமான மற்றும் கருணையில்லாத உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருத்தல். 8) ஆர்ஜவ: “நேர்மை, பாசாங்கு இல்லாமை.” வஞ்சகம் மற்றும் தவறான செயல்களை கைவிடுதல். 9) மிதஹார: “அளவுணவு.” அதிகம் சாப்பிடாமல் இருத்தல். மாமிசம், மீன், கோழி அல்லது முட்டைகள் சாப்பிடாமல் இருத்தல். 10) செளச்சம்: “தூய்மை.” உடல், மனம் மற்றும் பேச்சில் அசுத்ததை தவிர்த்தல். நியமங்கள்: 1) ஹ்ரி: “கழிவிரக்கம்.” அடக்கமாக இருந்து செய்த தவறுக்கு வருந்துதல். 2) சந்தோஷம்: “திருப்தி.” வாழ்க்கையில் சந்தோஷம் மற்றும் அமைதியை நாடுதல். 3) தானம்: “நன்கொடை வழங்குதல்.” தசமபாகம் மற்றும் பலனை எதிர்பார்க்காமல் தாராளமாக வழங்குதல். 4) ஆஸ்திக்ய: “கடவுள் நம்பிக்கை.” 5) ஈஸ்வரபுஜன: “இறைவனை வழிபடுதல்.” தினசரி வழிபாடு மற்றும் தியானம் மூலம் பக்தியை வளர்த்தல். 6) சித்தாந்த ஸ்ரவண: “சாஸ்திரங்களை கேட்டறிதல்.” ஒருவர் தனது பரம்பரையின் ஞானிகள் வழங்கிய போதனைகளை கேட்டல் மற்றும் அவர்களின் உபதேசங்களை படித்தல். 7) மதி: “அறிவெழுச்சி.” குருவின் வழிகாட்டுதலுடன் ஒரு ஆன்மீக விருப்பத்தை வளர்த்தல். 8) விரதம்: “புனிதமான உறுதிமொழிகள்.” ஒருவர் தனது மதம் தொடர்பான உறுதிமொழிகள், விதிகள் மற்றும் கடைப்பிடித்தல்களை விசுவாசத்துடன் பூர்த்தி செய்தல். 9) ஜெபம்: தினமும் மந்திரங்களை ஜெபித்தல். 10) தபஸ்: “தவம்.” சாதனா, பிராயச்சித்தம், தபஸ் மற்றும் வேள்விகள் நடத்துதல். இயமங்கள் என்று பதஞ்சலி வழங்கிய பட்டியல்: அகிம்சை, சத்யம், அஸ்தேயம், பிரம்மச்சரியம் மற்றும் அபரிகிரஹ (பேராசை இல்லாமல் இருத்தல்); அவர் வழங்கிய நியமங்களின் பட்டியல்: செளச்ச, சந்தோஷ, தபஸ், ஸ்வாதியாய (ஆத்ம விசாரம், தனியாக சாஸ்திரங்களை படித்தல்) மற்றும் ஈஸ்வரபிரணிதான (வழிபாடு). மேலும் தகவலுக்கு: அஷ்டாங்க யோகம்.§
Yama(n) (Yama): यम “The restrainer.” யமன். இந்து சமயத்தில் மரணத்தை நிர்வகிக்கும் இறைவன்; இவர் மரணத்தின் போது நடைபெறும் நிலைமாற்றி செயல்பாடுகளை கண்காணித்து, உயிர் பிரிந்த உடலில் இருந்து ஆன்மா வெளியேறுவதற்கு வழிகாட்டியாக இருக்கிறார். §
yatra (yātrā): यात्रा “Journey.” யாத்திரை. வழக்கமாக “ஒரு புனிதமான இடத்திற்கு பயணம் செல்லும்,” தீர்த்த யாத்திரையை குறிப்பிடுகிறது. §
yoga: योग “Union.” From yuj, “to yoke, harness, unite.” யோகம். “கட்டுப்படுத்துதல், இணைதல்" என்பதை குறிக்கும் யுஜ் என்ற சொல்லில் இருந்து தோன்றியது. தனிப்பட்ட உணர்வை யாவும் கடந்த அல்லது தெய்வீக உணர்வுடன் கட்டுப்படுத்துவதே தத்துவம், செய்முறை, பயிற்சிகள் மற்றும் கட்டுப்பாடுகளாக இருக்கும் யோகத்தின் நோக்கம் ஆகும். §
yoga pada (yoga pāda ): योगपाद. யோக பாதம். சைவ சித்தாந்தத்தில் இருக்கும் அடுத்தடுத்த நிலைகளில் மூன்றாவது நிலை ஆகும். இதன் குறிக்கோள் ஆத்ம ஞானம் பெறுவது ஆகும். மேலும் தகவலுக்கு: பாதம்.§
Yogaswami (Yogaswāmī): யோகசுவாமி “Master of yoga.” சமீபகாலத்தில் இலங்கையில் மிகவும் பிரபலமாக இருந்த ஒரு ஆன்மீக குரு (1872–1964). இந்துக்கள் மற்றும் பெளத்த சமயத்தை சேர்ந்தவர்களால் மதிக்கப்படும் ஒரு சிவஞானி மற்றும் நாத சித்தர். இவர் சற்குரு செல்லப்பசுவாமியிடம் பயிற்சி பெற்று, அவரிடம் இருந்து குரு தீட்சை பெற்றார். இவர் சிவாய சுப்பிரமுனியசுவாமியின் சற்குருவாக இருந்தார். யோகசுவாமி தனது உபதேசங்களை பாடல்கள் வடிவில் வழங்கினார். அவை நற்சிந்தனை என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது. மேலும் தகவலுக்கு: கைலாச பரம்பரை.§
yogi (yogī): योगी யோகி. யோக பயிற்சி மேற்கொள்பவர். §
yogini (yoginī): योगिनी யோகினி. யோக பயிற்சி மேற்கொள்ளும் ஒரு பெண்ணின் பெயர்.§
yuga: युग “Eon,” “age.” யுகம். இந்து சமய கால கணிப்பு முறையில், காலத்தை அளக்கும் அலகுகளில் ஒன்று. சத்திய அல்லது கிருதா, திரேதா, த்வாபர மற்றும் கலி என்பவை அந்த நான்கு யுகங்கள் ஆகும். முதல் யுகத்தில் தர்மம் மேலோங்கி இருக்கிறது, ஆனால் யுகங்களின் சுழற்சியில், நற்பண்பு குறைந்து அறியாமை மற்றும் அநீதி ஆதிக்கம் செலுத்துகிறது. நாம் தற்போது இருக்கும் கலியுகத்தின் முடிவில், இந்த சுழற்சி மீண்டும் தொடங்கி ஒரு புதிய கிருதா யுகம் தோன்றுகிறது. §