குருமார்களின் சரித்திரங்கள்

Page 12: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/12_na01_02.html§

ஒரு சற்குரு இல்லையென்றால் அனைத்து தத்துவங்களும், அறிவும் மந்திரங்களும் பயனற்றது. பாரம்பரியம் தனக்கு வழங்கியதை துடிப்புணர்வுடன் வைத்திருக்கும் சற்குருவை மட்டுமே தெய்வங்கள் போற்றும். அதனால் பரமாத்துமாவான சிவபெருமானை மூலமாக கொண்டு, தடைப்படாத பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு சற்குருவை ஒருவர் நாடவேண்டும். §§

குலார்ணவ தந்திரா 10.1§§

Page 13: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/13_na01_03.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

முதல் அத்தியாயம் §

இலங்கையில் ஒரு குருவை தேடுதல்§

ராபர்ட் ஹான்சென், வயது 20, கிட்டத்தட்ட சந்நியாச வாழ்க்கையை போன்ற ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து, தான் சேமித்த பணத்தை பயன்படுத்தி, ஐந்து பேரைக்கொண்ட அமெரிக்க-ஆசிய கலாச்சாரக் குழுவின் தலைவராக, சான்பிரான்சிஸ்கோவில் இருக்கும் கோல்டன் கேட் பிரிட்ஜில் இருந்து இலங்கைக்கு (அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்டது) பயணம் செய்ய, 1947 பிப்ரவரி மாதத்தில் ஒரு நீராவிக்கப்பலில் ஏறினார். சில மாதங்கள் முன்பாக, அவர் சான் பிரான்சிஸ்கோ பாலே நிறுவனத்தின் அரங்கில், அதன் முக்கிய பாலே டான்சராக மகிழ்ச்சியுடன் நடனமாடிக்கொண்டு இருந்தார். ஆனால் அவருக்குள் வாழ்நாள் முழுவதும் இருந்த ஆன்மீக உத்வேகத்தை, லௌகீக வெற்றியால் தணிக்க முடியவில்லை, மற்றும் அவர் கிழக்கத்திய நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாகவும், உள்ளத்தில் இருக்கும் பரமாத்துமாவை நோக்கி தன்னை வழிநடத்தி செல்ல ஒரு உண்மையான மற்றும் நம்பத்தகுந்த குருவை தேடிப்பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். §§

ஒரு மேகமூட்டமான நாளில், ஒரு ஆங்கிலேய கப்பல் குழுவால் இயக்கப்பட்ட, MS மாபியா என்ற நெதர்லாந்து நாட்டை சேர்ந்த சரக்குக் கப்பலில் அந்த பயணத்தை மேற்கொண்டதாக 25 வருடங்கள் கழித்து, அவர் தனது யோக சமூகத்தின் துறவிகளிடம் தெரிவித்தார். அவர் பல வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக பொறுப்புக்களில் இருந்து விடுதலை பெற்று நிம்மதியாக இருந்தார், மற்றும் இந்த நிம்மதி அவருக்கு முழுமையாக பிடித்து இருந்தது. கடினமான குடியிருப்பு வசதியுடன் இருந்த கப்பலில், அந்த கடற்பயணம் ஒரு மாதம் நீடித்தது. அதில் ராபர்ட்டிற்கு கிடைத்த உறங்கும் இடம் மிகவும் மலிவானதாக, சிறியதாக ஒரு நபர் மட்டுமே இருக்கக்கூடிய அறையாக இருந்தது. அதற்கு மேலே கப்பல் தளமும், கீழே இயந்திர அறையும் இருந்தன. இந்த இடத்தில் எதிர்பாராத விதமாக வழக்கத்திற்கு மாறான ஒரு சம்பவம் நடந்தது, மற்றும் இதை அவர் தனது 45 சீடர்களிடம் 1999 அலாஸ்கா பயணம்-பயிற்சி கடல் பயணத்தின் போது இன்னொரு கப்பலில் தெரிவித்தார். §§

போருக்கு பிறகு துறைமுகத்தில் இருந்து இலங்கையை நோக்கி கிளம்பிய முதல் கப்பலில் நான் பிரயாணம் செய்தேன். அது ஒரு சரக்குக் கப்பலாக இருந்தது. நான் தங்கிய சிறிய அறை இயந்திர அறைக்கு மேலாக இருந்ததால், அந்த இடம் இரைச்சல்கள் நிறைந்து இருந்தது. நான் ஒரு முறை அதிக ஆழமான தியானத்தில் இருந்தபோது, எனக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து நான் அந்த நிசப்தத்தில் இருந்து வெளியே வந்தபோது, எனக்கு இயந்திரத்தின் ரர்ர்ரர்ர்ர் சத்தம் கேட்டது. “இந்த சத்தம் நின்றால் நன்றாக இருக்கும்,” என்று நான் மனதிற்குள் நினைத்தேன் மற்றும் அடுத்த வினாடி அந்த சத்தம் நின்றுவிட்டது. உடனடியாக, கப்பலும் இருந்த இடத்தில் நின்றுவிட்டது. நாங்கள் மூன்று நாட்கள் மிதந்துக்கொண்டு, எங்கள் பாதையில் இருந்து சிறிது விலகிச்சென்று இருந்தோம். கப்பல் குழுவினரால் பழுதை கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் இயந்திரத்தில் இரண்டு மறையாணிகள் தளர்வாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் பிரச்சனையை சரி செய்தத்தும், நாங்கள் மீண்டும் பயணிக்க ஆரம்பித்தோம். அப்போது தான் போர் முடிந்து இருந்தது மற்றும் நாங்கள் கண்ணிவெடிகள் வழியாக சென்றுக்கொண்டு இருந்ததால், அது ஒரு பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். அந்த கப்பல் மிகவும் சுலபமாக வெடித்து இருக்கக்கூடும், மற்றும் பயணம் முடிந்த பிறகு தான் அந்த சரக்குக்கப்பலில் வெடிமருந்துகள் இருந்தது தெரியவந்தது. அது எங்களுக்கு ஒரு பெரிய அழிவை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.§§

image§

ராபர்ட் இயந்திர அறைக்கு மேல் இருக்கும் தனது சிறிய அறையில் தியானம் செய்ய தொடங்கினார். ஒரு நாள் அவரது தியானம் தடைப்பட்ட போது, பெரிய இயந்திரங்கள் உருவாக்கிய காதை துளைக்கும் சத்தங்கள், அவருக்கு தொந்தரவு அளிப்பதாக இருந்தன. அந்த சத்தம் நிற்கவேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார், மற்றும் அந்த இயந்திரங்கள் பல நாட்களுக்கு செயல்படாமல் இருந்தன.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அவர் இதைப்பற்றி பின்னர் விவரிக்கும் போது, அன்றைய தினம் கப்பலில் இயல்பாக வெளிவந்த தியானம் செய்யும் மனதின் சக்தி, தன் மீது விளைவித்த பாதிப்பைப் பற்றி நினைவுக் கூர்ந்தார். §§

நகர்ந்துக்கொண்டு இருந்த கப்பலில், கலாச்சாரக் குழு மரப்பலகையிலான தளத்தில் பயிற்சி செய்தனர் மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கும் நாட்களில் அவர்கள் நீச்சல் அடிக்க ஒரு சிறிய நீச்சல் குளத்தை அமைத்துக்கொண்டனர். அவர்கள் கப்பல் குழு மற்றும் கேப்டனுடன் உணவை பகிர்ந்துக்கொண்டனர். அந்த கேப்டன் ஒரு நாள் தனது கப்பலில் இருந்த தைரியமான இளவயது பயணி ராபர்ட்டை, கப்பலை இயக்கும் அறைக்கு அழைத்து சென்று, “அந்த மேஜையின் மீது இருக்கும் பேனாவை பார்த்தாயா? நான் அதை எடுக்கவேண்டிய தருணம் வந்தால், எனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்,” என்று அந்த இளைஞனிடம் கூறினார். ராபர்ட் ஒரு குருவாக தனது கடமைகளை பிற்காலத்தில் விவரிக்கும் போது, இந்த சம்பவத்தை நினைவுக்கூர்ந்தார். §§

மார்ச் 8 ஆம் தேதி குழுவினர் பம்பாயில் கரை இறங்கினர், ஆனால் இந்திய விசா அவர்களை “(நடுவில் கரை இறங்காமல்) முழுமையாக பயணம் செய்பவராக" குறிப்பிட்டு இருந்ததால், அவர்கள் அங்கே சில நாட்கள் தங்கியிருந்து, தென்னிந்தியா நோக்கி ஒரு இரயிலில் பயணம் செய்தனர். அதன் பிறகு மெட்ராஸில் இருந்து, இலங்கையின் மேற்கு கரையோரம் இருக்கும் தலைமன்னாருக்கு செல்ல, ஒரு பயணிகள் படகில் ஏறி குறுகலான பால்க் ஜலசந்தியை கடந்தனர். இன்னொரு இரயிலில் ஏறி, 1947 மார்ச் மாத மத்தியில் கொழும்பு சென்றடைந்தனர். மார்ச் 23 ஆம் தேதி, காலே ரோட்டில் இருந்த தனது புதிய வீட்டில் இருந்து எழுதிய குறிப்பின் ஒரு பகுதி:§§

இலங்கைக்கு வருவதற்கு முன்பாக அதைப்பற்றி கேள்விப்பட்டதைக் காட்டிலும், அது மிகவும் சிறப்பாக இருந்தது; நீங்கள் இந்த நாட்டைப் பற்றி நல்லவிதமாக ஏதாவது கேட்டிருந்தால், அதை இருமடங்காக கற்பனை செய்துக் கொள்ளுங்கள். அது தான் இந்த நாடு பற்றிய உண்மையான நிலையாக இருக்கும். இது உண்மையில் உலகின் செழிப்பான இடமாக விளங்குகிறது. இங்கிருக்கும் மக்கள் கவனமாக, வலுவாக, அதிக விழிப்புடன், ஆரோக்கியமாக மற்றும் தங்கள் நாட்டை முழுமையாக நவீனமயமாக்கும் ஆசையுடன் இருந்தார்கள். §§

இந்தியாவில் இருந்த விசா கட்டுப்பாடுகள் இலங்கையில் இல்லை. நான் இங்கே வந்து இறங்கிய அடுத்த நாள் சில நண்பர்கள், ஒரு வாகன ஒட்டி மற்றும் ஒரு சிங்கள ஆணும் அவரது மனைவியும் என்னை கண்டி வரை அழைத்து சென்றனர். நீங்களும் அந்த அழகை ரசித்து இருப்பீர்கள். நாங்கள் புத்தரின் புனிதப்பல் இருக்கும் தலதா மாளிகை மற்றும் இன்று இடிபாடுகளில் சிக்கி இருக்கும் பழைய கண்டி அரண்மனையையும் சென்று பார்த்தோம். இந்த தீவில் வருடம் முழுவதும், எங்கே சுற்றிப் பார்த்தாலும், பச்சைப்பசேல் என்ற மரங்களைத் தான் காண்பீர்கள். மக்கள் வயல்களை யானைகளையும், தங்கள் கைகளை பயன்படுத்தியும் உழுகிறார்கள். ஆண்கள் சாரோங் அல்லது காற்சட்டையையும் மற்றும் பெண்கள் புடவையும் அணிவார்கள். கண்டியில் உடையை வேறுவிதமாக அணிவார்கள். ஒருவர் தனது தலையில் ஒரு பெட்டியை நிலைப்படுத்திக் கொண்டு என்னை கடந்து செல்கிறார். இங்கிருக்கும் மக்கள் இப்படித்தான் பொருட்களை சுமந்து செல்கிறார்கள்.§§

வீட்டு வேலைகளை கவனிக்க பல சிறுவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். நீங்கள் அவர்களை கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் அவர்கள், “ஹலோ, சார்" என்பார்கள். ஆங்கிலத்தில் அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான். அவர்கள் மிகவும் கண்ணியமாக இருப்பார்கள், மற்றும் நாம் எதை சொன்னாலும், அது அவர்களுக்கு புரிகிறதா என்பது தெரியாது, ஆனால் உடனே சரி என்று சொல்லிவிடுவார்கள். §§

அந்த நாட்டில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் அது அவ்வாறு துளியும் இல்லை; மற்றும் அது அவர்களது கோடை காலமாக இருந்தாலும், இரவில் குளுமையாக இருந்தது. நான் ஒரு வூல் ஸ்போர்ட் கோட்டை அணிந்து இருந்தாலும், எனக்கு அதிகமாக வியர்க்கவில்லை. இலங்கை மற்றும் இந்தியா அதிக ஆன்மீக நாட்டமுள்ள நாடாக இருந்தாலும், நாம் மகான்களின் யுகத்தில் வாழவில்லை என்பதால், நமது பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பாக பூட்டி வைத்திருக்க வேண்டும். அவர்கள் மாமிசம் சாப்பிடாத, காபி அல்லது தேனீர் பருகாத, குடிப்பழக்கம் அல்லது புகைப்பழக்கம் இல்லாதவர்களை அதிகம் மதிப்பார்கள் என்பதால், எனக்கு நிறைய நல்ல நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள், மற்றும் அவர்கள் திறந்த மனதுடன் இருந்து, எல்லா இனம் மற்றும் சமயத்தை சேர்ந்தவர்களுடன் எளிதில் ஒன்று சேர்வதால், அது அவர்களுக்குக் கிடைத்த பெரிய வரமாக விளங்குகிறது. §§

image§

ராபர்ட் பம்பாயில் இருந்து தமிழ்நாட்டிற்கு, தெற்கு திசையில் இரயில் மூலம் பயணம் மேற்கொண்டார், மற்றும் அதன் பிறகு பால்க் ஜலசந்தியை கடக்க ஒரு பயணிகள் படகில் ஏறி, தனது இறுதி இலக்கான, இலங்கையில் இருக்கும் கொழும்புவிற்கு வந்தடைந்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ஞாயிற்றுக்கிழமை காலையில் சூரிய உதயத்தை காண, சனிக்கிழமை (மார்ச் 29) அன்று எனது நண்பர்களும் நானும், கடல்மட்டத்தில் இருந்து 6,000 அடிகள் உயரத்தில் (அங்கே கடுங்குளிர் நிலவியது) இருந்த பாதமலை என்கிற ஆடம்ஸ் பீக்கிற்கு சென்றோம். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பௌத்த, இந்து, இசுலாமிய மற்றும் கிறுத்துவ மதத்தை சார்ந்தவர்கள், பணக்காரர் அல்லது ஏழை என்ற பாரபட்சமின்றி, இந்த மலைக்கு வந்து, “எல்லோருக்கும் எனது அன்பை தெரிவிக்கிறேன்! எல்லோருக்கும் எனது அன்பை தெரிவிக்கிறேன்!” என்று கோஷமிடுவார்கள். §§

நீங்கள் அந்த மலையில் பாம்பாட்டிகள் மற்றும் ஜோதிடர்களைப் போன்ற பல விசித்திரமான மற்றும் அற்புதமான மனிதர்களை சந்திப்பீர்கள். அந்த ஜோதிடர்கள் பழைய சமஸ்கிருத சுவடிகளில் இருந்து உங்களது குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டு, அவர்களைப்பற்றியும் உங்களது கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றியும் துல்லியமான விளக்கத்தை தருவார்கள். இந்த சுவடிகள் பல்லாயிரம் வருடங்கள் பழமையானவை மற்றும் அவற்றை நீண்டநேரம் படிக்கவேண்டி இருக்கும். அதில்லாமல் தெருவில் நடந்து செல்லும் யானைகள், வியாபாரத்தில் நடைபெறும் பேரம், புதிய வகை உரையாடல்கள் மற்றும் அழகாக கதிரவன் மறைவதையும் காணலாம். மதியம் 3:30 மணிக்கு தேனீர். சாலையின் மறுபுறத்தில் வாகனத்தை ஓட்டுவது அமெரிக்க பாதசாரிகளுக்கு கடினமாக இருக்கும். எல்லோருக்கும் எனது அன்பை தெரிவிக்கவும்—விரைவில் பதில் அனுப்பவும். பாப்§§

ராபர்ட்டின் இலங்கை பயணம், அவரது ஆரம்பகால தூண்டுகோல்ளால் வடிவமைக்கப்பட்டது. அவர் கொழும்பு வந்தடைந்த போது, அவரது முதல் ஆசிரியையான கிரேஸ் பர்ரோஸ், அவரை வரவேற்று தனது நாட்டியக் கூடத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார் மற்றும் ராபர்ட் இலங்கைக்கு வந்து இறங்கிய புதிதில், ஒரு வருடத்திற்கு ராபர்ட்டின் நலனில் அக்கறையுடன் இருந்தார்.§§

தனது வழிகாட்டி வழங்கிய சவால்களை சந்தித்தல் §

அவர் தனது வாழ்க்கைப் பாதையில் நான்காவது தூண்டுகோலாக விளங்கிய தயானந்த பிரியதாசியுடன் (டார்ரெல் பெய்ரிஸ்) இலங்கையில் படித்தார். சிங்களத்தை தாய்மொழியாகக் கொண்டு பௌத்த சமயத்தை சேர்ந்த தயானந்த பிரியதாசி, 1934 ஆம் ஆண்டு முதல் முறையாக அமெரிக்கா பயணம் செய்த போது, ராபர்ட்டின் இரண்டாவது தூண்டுகோலாக விளங்கிய, அன்னை கிறிஸ்தினியின் ஓக்லாண்ட் ஹோமில் ஒரு ஆசிரமத்தை அமைத்தார். தயானந்தா தியானம் மற்றும் மறைபொருள் ஆய்வை பற்றி உற்சாகமாக பாடம் நடத்தும் ஆசிரியராகவும், தனது நாட்டின் மீது அதிக தேசபக்தியுடனும் இருந்தார்.§§

அந்த சமயத்தில் இலங்கை கிரேட் பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக, 21 ஆண்டுகாலமாக மேற்கொண்ட போராட்டத்தின் இறுதி கட்டத்தில் இருந்தது. அதற்கு விடுதலை 1948 ஆம் ஆண்டு கிடைத்தது. அப்போது இலங்கையில் சூழ்நிலை சுமுகமாக இல்லை; மற்றும் ஐம்பது வயது நிரம்பி ஒரு சூட்சும ஞானியாகவும் மக்களின் கவனத்தை கவர்ந்திழுக்கும் அரசியல்வாதியாகவும் இருந்த தயானந்தா, சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு, உலகில் நேர்மறையான செயல்களை செய்து முடிப்புதற்கு தனது புதிய மாணவனை தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். ராபர்ட் வந்து இறங்கிய இரண்டு மாதத்திற்குள், கிராமத்து சிறுவர்களுக்கு இரண்டு பள்ளிகளை தொடங்குவதற்கு உதவினார், மந்தமாக இருந்த கண்டிய நடனத்திற்கு புத்துயிர் அளித்து உதவினார் மற்றும் தச்சர்களுக்கு முதல் முறையாக மின்சாரத்தால் இயங்கும் இரம்பத்தை அறிமுகப்படுத்தினார். அவர்கள் அதற்கு முன்னர் அதைப்போன்ற விசித்திரமான கருவிகளை பார்த்திருக்கவில்லை. அவரது பயிற்சியில் இந்த யதார்த்தமான திட்டங்கள் அங்கம் வகித்தன. §§

இலங்கைத் தீவில் எனது நான்காவது தூண்டுகோலை சந்தித்ததும் மகிழ்ச்சியுடன் பிரமித்து நின்றேன். அவர் பௌத்த மதத்தை சேர்ந்தவர். சிங்கள மொழியை தனது தாய்மொழியாகக் கொண்டு வலுவாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்த அவர், தனது வாழ்க்கையை ஆன்மீக விழிப்புணர்வுக்கு அர்ப்பணித்துக் கொண்டு, இந்த விழிப்புணர்வை மனிதநேயம் முழுவதற்கும், மிகவும் உற்சாகமாக பயனுள்ள வகையில் வழங்கினார். அவர் இலங்கை அரசில் மிகவும் உயர்ந்த பதவியில் இருந்தார் மற்றும் அவர் ஒரு ஆசிரியராக யதார்த்தமாகவும் உறுதியாகவும் இருந்தார். நான் அவருடன் ஒன்றரை வருடம் படித்தேன்.§§

சில வருடங்கள் முன்பு, தயானந்தா தாய்லாந்தில் ஒரு குகையில் உட்கார்ந்து, சூரியனின் மீது தனது கண்களை நிலைப்படுத்தி, இரவில் சூரியன் மறையும் வரை, நாள் முழுவதும் வானத்தில் அதன் பயணத்தை பின்தொடர்ந்து ஞானோதயம் பெற்றார். அவர் இந்த கடினமான சாதனாவில், தனது குரு வழங்கிய அறிவுறுத்தலின் கீழ் பயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகு அவர் குகையில் இரவு நேரத்தில் தியானம் செய்துக்கொண்டு இருக்கும் போது, அந்த குகை பிரகாசிக்கத் தொடங்கி, அவருக்கு முன்பாக ஒரு பெரிய சக்தி தோன்றி, உலகிற்கு சேவை செய்யும் குறிக்கோள் பணி மற்றும் அறிவுறுத்தல்களை அவருக்கு வழங்கியது. §§

மனஉறுதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், லௌகீக உலகில் எவ்வாறு வெற்றி பெறவேண்டும் என்று எனது நான்காவது தூண்டுகோல் எனக்கு கற்றுத்தந்தார். அவர் எனக்கு உண்மையான தந்தையைப் போன்று விளங்கினார். இது எனது இருபத்தி ஒன்றாம் வயதில் தேவைப்பட்டது. நான் தியானம் செய்ய விரும்பினேன், ஆனால் கிராமத்தை மறுசீரமைப்பு செய்வதில் கிராமப்புற மக்களுக்கு நான் உதவவேண்டும் என்று அவர் விரும்பினார். அவர் எனக்கு பல்வேறு பொறுப்புக்களை வழங்கினார், அதிலும் குறிப்பாக நான் ஒரே சமயத்தில் நிறைய பணிகளை செய்ய வேண்டி இருந்ததால், அதற்கான திட்டத்தை நானே வகுத்துக்கொண்டேன். நான் ஒரே சமயத்தில் ஒரு கிராமத்தில் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைக்கும் பணியை கண்காணிப்பத்திலும், அறைகலன்களை உருவாக்க பயன்படும் பழைய கருவிகளுக்கு பதிலாக நவீன இரம்பங்கள் மற்றும் மரவேலை உபகரணங்களை இன்னொரு கிராமத்திற்கு கொண்டு வரும் பணியிலும் ஈடுபட்டு இருந்தேன். §§

இலங்கையின் மேற்கு கரையோரம் கைப்பிடியுள்ள சிறிய இரம்பத்தை பயன்படுத்தும் தச்சர்களிடம் இருந்து விவரம் சேகரிக்க வேண்டியிருந்தது. எல்லோரும் மின்சக்தியால் இயங்கும் இரம்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று எனக்கு கொடுக்கப்பட்ட குறிக்கோள் பணி தொடர்பாக, கையில் ஒரு குறிப்பேட்டுடன், அவர்களது பெயர்கள் மற்றும் விலாசம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இரம்பங்களின் வகையை பட்டியலிட்டுக் கொண்டேன். நவீன கருவிகளை மொறட்டுவை பகுதிக்கு கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக இருந்தது, மற்றும் அதைப்போன்ற பணியை நான் அதுவரை வாழ்க்கையில் செய்யாததால், அதை எப்படி தொடங்குவது என்று எனக்கு தெரியவில்லை. எனது தூண்டுகோல் எப்போதாவது என்னிடம், “சரி, அவர்களுக்கு இரம்பங்களை கொடுத்துவிட்டாயா?” என்று கேட்பார். “வேலை நடந்துக்கொண்டு இருக்கிறது,” என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். §§

image§

பௌத்த மதத்தை சேர்ந்த சூட்சும ஞானியாக, அரசியல்வாதியாக மற்றும் சமூக ஆர்வலராக இருந்த, அவரது ஆலோசகர் தயானந்தா, கைப்பிடியுடன் இருக்கும் எளிமையான இரம்பங்களை பயன்படுத்தும் இலங்கையின் கிராமத்து தச்சர்களுக்கு, மின்சாரத்தால் இயங்கும் வட்டவடிவ இரம்பத்தை வழங்கும் கடினமான பொறுப்பில், ராபர்ட்டை ஈடுபடுத்தினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அரசுத்துறை பரிந்துரைத்த மாற்றங்களை செயல்படுத்துவது எனக்கு புதிதாக இருந்தது. அதற்கு முன்பு, எனது வாழ்க்கை வியாபாரத்தின் செயல்முறைகளில் இருந்து விலகி அமைதியாக இருந்தது. மாறுபட்ட பழக்கங்களுடன், விளக்குவதிலும் பரிந்துரைப்பதிலும் நுணுக்கமான வழிகளை பயன்படுத்தும் ஒரு அயல்நாட்டில் நான் இருந்ததால், நிலைமை இன்னும் மோசமாக இருந்தது. பெரும்பாலும் கல்வி கற்றவர்கள் ஆங்கிலத்தை அழகாக பேசுவார்கள். ஆனால் கிராமங்களில், கிராம மக்களின் தாய்மொழிகளாக விளங்கும் சிங்களம் மற்றும் தமிழ் மட்டுமே பேசப்பட்டு புரிந்துக்கொள்ளப்பட்டது. அறைகலன் உருவாக்கும் தச்சர்கள் பழங்கால மற்றும் தங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய முறைகளுக்கு பழக்கப்பட்டு இருந்தனர், மற்றும் அவர்களது வேலையை மேம்படுத்த மின்சார இரம்பங்களை பயன்படுத்த, அவர்களிடம் இருந்து சம்மதம் பெறுவது சுலபமான காரியம் இல்லை. சிலர் மின்சார வசதி, தண்ணீர் குழாய் வசதிகள் இல்லாத ஒதுக்குப்புறமான பகுதிகளில் வளர்ந்து இருக்கலாம். அதனால் அவர்கள் இயல்பாக ஒரு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்த்தனர். அவர்கள் முன்பே நல்ல, உறுதியான அறைகலனை உருவாக்கிக்கொண்டு இருந்தனர். வாழ்க்கையில் ஏன் வம்பை விலைக்கொடுத்து வாங்கவேண்டும் என்று அவர்கள் நினைத்து இருக்கலாம். §§

எனக்கு இயல்பாகவே இருந்த கூச்ச சுபாவம், ஒரு மிகப்பெரிய தடையாக இருந்தது. நான் மக்களிடம் நேர்காணல் நடத்தி, ஆய்வு மேற்கொண்டு மின்சார கருவியில் இருக்கும் பயனை மக்களுக்கு விளக்கி அவர்களது சம்மதத்தை பெறவேண்டும். இறுதியில், இதனை செய்து முடிக்கும் வழி எனது உள்ளிருந்து உதயமானது. அதிகமான தகவல்கள், வரைப்படங்கள், பெயர்கள் மற்றும் விலாசங்களுடன், நீளமாக பல வார்த்தைகள் நிரம்பிய ஒரு முன்மொழிவை தயார் செய்து, அவரிடம் சமர்ப்பித்தேன். அவர் அதை பார்த்ததும் திருப்தி அடைந்து, “நீ இந்த அருமையான திட்டத்தை கிராமப்புற மறுசீரமைப்புத் துறையின் தலைவரிடம் எடுத்துச்சென்று, அவரிடம் கொடு, மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன். ஆனால் நீ அவரது அலுவலகத்தில் இருக்கும் போது, உனது நாட்டில் நவீன கருவியை பயன்படுத்தி அறைகலனை எவ்வளவு விரைவாக உருவாக்க முடிகிறது என்பதை அவருக்கு எடுத்து விளக்கு,” என்றார். §§

image§

பௌத்த கோயில்கள் மற்றும் மடங்களில் ராபர்ட் ஒரு விருந்தாளியாக தங்கி, துறவிகளுடன் உரையாடினார் மற்றும் பிற்காலத்தில் தனது சொந்த மடங்களில் செயல்படுத்த, அந்த துறவிகளின் ஆச்சாரமான வாழ்முறை, பழக்கங்களை கண்காணிப்பதோடு தன்னை அவற்றில் ஈடுபடுத்திக் கொள்ளவும் செய்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இறுதியில், இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு, எனக்கு ஒரு திட்டவட்டமான வேலை கிடைத்தது என்று சந்தோஷமாக இருந்தேன். நான் கொழும்பில் இருக்கும் கிராமப்புற மறுசீரமைப்புத் துறையின் அலுவலுக்கு சென்று திட்டத்தை விளக்கினேன். அரசு அதை ஏற்றுக்கொண்டது, மற்றும் சில மாதங்கள் கழித்து மின்சாரத்தால் இயங்கும் நவீன இரம்பம், மொறட்டுவை கிராமங்களில் தேவை இருக்கும் எந்த ஒரு தச்சருக்கும் கிடைக்கப்பெற்று மக்களிடையே பிரபலமானது. அந்த வருடம் தான், இலங்கைக்கு கிரேட் பிரிட்டன் அரசிடமிருந்து தன்னாட்சி உரிமை அந்தஸ்து கிடைத்து இருந்தது மற்றும் கிராமப்புறப் பகுதிகளை ஒரு சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு, இன்னும் நிறைய வேலைகள் செய்யவேண்டி இருந்தன. நான் எனது பங்கை எனக்கு தெரிந்தவரையில் சிறப்பாக செய்து முடித்த திருப்தியுடன் இருந்தேன். §§

இதைப்போன்று எனக்கு இன்னொரு பணியும் வழங்கப்பட்டது. உனக்கு கொடுக்கப்பட்டுள்ள பணியை நிறைவாக செய் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு, எனது நான்காவது தூண்டுகோல் செயல்பட்டார். உனக்கு ஒரு பணி வழங்கப்பட்டால், அதை முழுமையாக செய்து முடிக்கவேண்டும். ஆனால் செய்து முடிக்காமல் விளக்கங்களுடன் வரக்கூடாது. அவர் உங்களை ஒரு பணியில் அனுப்பினால், உங்களது திருப்திக்கு முக்கியத்துவம் தராமல், அவருக்கு திருப்தி ஏற்படும் வரை, அந்த பணியில் இருந்து திரும்புவதைப் பற்றி சிந்திக்கக்கூடாது. அவர் எனக்கு கொடுத்த பணியை முடிக்கவில்லை என்றால், எனக்கு மேலும் பணிகளை தரமாட்டார் என்பது எனக்கு தெரியும். அதனால் நான் மிகவும் கவனமாக இருந்தேன். இயலாததாக தோன்றும் பணிகளை செய்ய, நான் மனதுக்குள் போராடிக்கொண்டு இருந்தாலும், “மனம் தளராதே, பணியை பாதியில் நிறுத்தாதே. நீ தான் உனக்கு தடைகளை உருவாக்கிக் கொள்கிறாய். உன்னால் எதையும் வெற்றிக்கொள்ள முடியும், எதையும் செய்ய முடியும், எந்த உயரத்தையும் எட்டமுடியும்,” என்று அவர் சொல்வதை நான் கேட்டுக்கொண்டு இருந்தேன். எனக்கு குறைவான அறிவுரைகளை வழங்குவது மற்றும் ஒரு பணியை எனக்கு ஒதுக்கியதும் பெரும்பாலும் உடனே அந்த இடத்தை விட்டு விலகி, பணியில் இருக்கும் சிக்கல்களை எனது உள்ளத்தில் இருந்து சரி செய்துக்கொள்ள வேண்டும் என்று சவால் விடுவார். §§

நான் அதிகம் உணர்ச்சிவசப்படுபவன் என்றும் மற்றவர்கள் திட்டுவதை என்னால் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது என்றும் அவருக்கு தெரிந்து இருந்தும், எனது தவறுகளை விரைவில் சுட்டிக்காட்டுவார். அவரது பழிப்பும் விமர்சனமும் கடுமையாக இருக்கும். இவை எனக்கு பயன் தருவதாக இருந்தன, மற்றும் நான் இன்றும் அவரது நேரடியான மற்றும் வலுவான அணுகுமுறைகளுக்கு கடன்பட்டு இருக்கிறேன். ஒவ்வொரு பணியையும் நிறைவு செய்ய எனது சொந்த உட்புற அறிவாற்றலை பயன்படுத்த கட்டாயப்படுத்தினார், மற்றும் அந்த பணிகளில் பெரும்பாலானவை லௌகீகம் சார்ந்ததாக இருந்தன. எனது வாழ்க்கையின் இந்த கட்டத்தில், எனது வெளிப்புற உறையை வலுப்படுத்திக் கொண்டு, உலகில் எனது கடமைகளை நிறைவு செய்ய கற்றுக்கொள்வதே எனக்கு அத்தியாவசியமாக இருந்தது. அந்த அனுபவம் பிற்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.§§

தயானந்தா என்னை கிராமங்களில் தியானம் செய்யச்சொல்லுவார். அவர் கிராமப்புற மக்களிடம் தியானம் என்கிற பாவனாவைப் பேசும் போது, நான் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்து இருப்பேன். அவர்கள் எல்லோரும் பௌத்த மதத்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் புத்தரின் தத்துவத்தை விரும்பினாலும், ஒருபோதும் தியானம் செய்யவில்லை. இவ்வாறு மக்களை தியானம் செய்ய ஊக்கம் அளிக்கவும், ஞானோதயம் பெற்ற போதனைகளை பழக்கத்தில் கொண்டு வரவும் பல கிராமங்களுக்கு ஒன்றாக சென்றோம். இறுதியில் அவர் கிராமவாசிகளுக்கும் பௌத்த மத பூசாரிகளுக்கும் தியானம் செய்யக் கற்றுத்தரும் போது, நானும் தியானம் செய்து முடித்திருப்பேன். §§

image§

தயானந்தா தொடர்ந்து கிராமங்களில் பிரச்சாரம் செய்து வந்தார். ஒரு நாள் அவர் அமெரிக்க பார்வையாளருக்கு தனது சக்திகளை நிரூபணம் செய்துக் காட்டினார். அவர் தன் கண்களை மூடிக்கொண்டு, அரங்கில் இருந்த ஒரு பேச்சாளரின் மனதில் புகுந்தார். இதனால் அந்த பேச்சாளர் திடீரென்று, தயானந்தா மற்றும் ராபர்ட் அன்றைய தினம் பேசிய விஷயத்தை பற்றி பேசத் தொடங்கினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

நான் இலங்கைக்கு வருவதற்கு முன்பாக, தாய்நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் சிறப்பான முறையில் தியானம் கற்பிக்கும் பள்ளியை உருவாக்க தாய்லாந்தில் இருந்த பௌத்த பூசாரிகளுடன் இணைந்து செயல்பட்டிருந்தார். அவர் அன்று மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக, தாய்லாந்தில் இருக்கும் சாதாரண மக்களைப் போன்று, இன்று அந்நாட்டில் உள்ள பல பூசாரிகளும் தியானம் செய்கிறார்கள். §§

நான் அவரிடம், “நான் ஒரு குகைக்கு சென்று தியானம் செய்யவேண்டும். நான் ஆத்ம ஞானத்தை பெறவேண்டும்,” என்று அடிக்கடி கூறுவேன். அதற்கு அவர், “அதற்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. நீ இன்னும் இரண்டு அல்லது மூன்று பணிகளை முடித்ததும் ஒரு குகைக்கு சென்று தியானம் செய்யலாம். இருந்தாலும், குகை உனது உள்ளத்தில் இருக்கிறது, “ என்று பதில் சொல்வார். அதனால் எனது பணிகளை பல மாதங்களுக்கு தொடர்ந்து செய்துக்கொண்டு இருந்தேன். §§

“நான் எனது குருவை காண்பதற்காக இலங்கைக்கு வந்தேன்,” என்று நான் அவ்வப்போது அவருக்கு ஞாபகப்படுத்துவேன். எனது குரு இலங்கையில் கிடைப்பார் என்றும், அதற்கு நான் முதலில் முழுமையான ஆத்ம ஞானத்தை பெறவேண்டும் என்றும் அதன் முக்கியத்துவத்தை கலிபோர்னியாவில் ஆசிரியர் எனக்கு புரிய வைத்து இருந்தார். அதனால் நான் தியானம் செய்து ஆத்ம ஞானத்தை பெற்று, எனது குருவை கண்டுபிடிப்பதற்காக இலங்கை வந்து இருந்தேன். ஆனால், நான் இங்கே அரசு நிறுவனங்களில் இருந்துக்கொண்டு கிராமங்களில் சுற்றிக்கொண்டு இருந்தேன். நான் இந்த வெளிப்புற வாழ்க்கையில் இருந்து விலகி, வழக்கமாக தியானம் செய்வதற்கு சிறந்த இடமாக விளங்கும் குகைக்கு சென்று தியானம் செய்தால் என்னால் ஆத்ம ஞானத்தை பெறமுடியும் என்று வலுவாக தோன்றியது. அதில் நான் உறுதியாகவும் இருந்தேன். அவர் எனக்கு சிறிது நேரம் ஓய்வு தந்தால் அதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் வாய்ப்பு தருவாரா? அவர் கண்டிப்பாக தரமாட்டார்.§§

நான் கிளர்ச்சியில் இருந்தேன் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். வணிகம் மற்றும் சமூக மாற்றத்தை பற்றி இருந்த தொடர் கவலையை நினைத்து, நான் என்னை கடிந்து கொண்டேன். முக்கியமாக அவர் எனது குரு இல்லை, மற்றும் நான் இங்கே உலகை மாற்றுவதற்காக வரவில்லை. நான் இங்கே தியானம் செய்ய வந்திருக்கிறேன். நான் அவரிடம் சொல்லாமல் குகைக்கு செல்வது சரியாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. இந்த போராட்டம் எனது சாட்சியை வெளிப்புறமாக்கியது. எனது பணிகளை சரிவர செய்வது கடினமாகியது. நான் தனிப்பட்ட முறையில் எதை செய்ய விரும்பினேன் என்பதற்கும், எனது ஆசிரியர் நான் எந்த பணியை செய்ய விரும்பினார் என்பதற்கும் இடையே இணக்கம் இல்லாமல், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தேன். நான் இதனால் சிறிது காலம் போராடினாலும், ஒரு வாரத்தில் இந்த கிளர்ச்சியை வெற்றிக்கொண்டேன் மற்றும் மீண்டும் அந்த எண்ணம் தோன்ற அனுமதிக்கவில்லை. நமது சொந்த பாணியில் செயல்களை செய்ய விரும்பி, பிடிவாதமாக இருந்து ஒரு மிகப்பெரிய குறிக்கோளுக்காக நமது சொந்த விருப்பத்தை கைவிடாமல் இருக்கும் கீழ்படியாத குணமே, இந்த பாதையில் இருக்கும் மிகப்பெரிய எதிரியாக விளங்குகிறது. நான் அவருக்கு முழுமையாக மற்றும் திறந்த மனதுடன் கீழ்ப்படிய முடிவு செய்து, அதிக நேர்மறையான நபராக மாறினேன். நான் அந்த சமயத்தில் அதிக நேர்மறையான மனிதனாக மாறி, இன்றும் அதில் நிலைத்து இருக்கிறேன். §§

நான் இலங்கையின் பௌத்த சமய கோயில்களுக்கு சென்று அங்கே வாழத் தொடங்கினேன். எனக்கு அங்கே இருந்த துறவிகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், எப்படி ஆடை அணிந்தார்கள் என்பதை கவனித்தேன், மற்றும் அது எங்களது சொந்த சந்நியாச சமூகத்தில் செயல்படுத்திய சந்நியாச நெறிமுறைகளில் மிகவும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தின.§§

image§

நடனம் மற்றும் இசை மூலம் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் குறிக்கோளுடன், ராபர்ட் ஹான்சென் என்கிற இளைஞனை தலைவனாக கொண்டிருந்த அமெரிக்க-ஆசிய கலாச்சாரக் குழு, பல மாதங்களுக்கு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒவ்வொரு முக்கிய இடங்களிலும் நடனமாடியது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

தயானந்தா தொடர்ந்து சாலைகளில் பிரச்சாரம் மேற்கொண்டு, தனது மாணவனை பல கிராமங்களுக்கு அழைத்துச் சென்றார். அவர் அந்த நாட்டின் தலைவனாக விரும்பினார், மக்களில் பலர் அவ்வாறு நினைத்தாலும், இறுதியில் அவ்வாறு நடக்கவில்லை. அவர் ராபர்ட்டை ஒரு பௌத்த சமய வீட்டிற்கு அழைத்து சென்றார், மற்றும் அவர்கள் அங்கே மூன்று நாட்கள் தங்கினர். ஆசிரியர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இளவயது அமெரிக்கரின் ஒழுக்கத்தை சோதனை செய்ய நினைத்து, ராபர்ட் இடைவெளி இல்லாமல் இரவு முழுவதும் தியானம் செய்ய வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக்கொண்டார்.§§

தயானந்தா ஒரு திறமையான பேச்சாளராக இருந்தார், மற்றும் அவர் அருகே அமெரிக்க நிர்வாக செயலாளர் நின்றுக்கொண்டு இருக்க, பெரும்பாலும் ஒரு தற்காலிக மேடை அல்லது ஒரு மரத்தடியில் இருந்து நீளமான மற்றும் உறுதியான உரையை வழங்குவார். ஒரு நாள் தொலைதூர கிராமத்தில், அந்த கிராமத்து தலைவர் தயானந்தா பற்றிய அறிமுகம் வழங்கி, அவருடைய உரைக்கு கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு இருக்க, இவர்கள் இருவரும் ஒன்றாக நின்றுக்கொண்டு இருந்தார்கள். அப்போது தயானந்தா விளையாட்டுத்தனமாக ராபர்ட்டிடம் திரும்பி, “இப்போது நடப்பதை வேடிக்கை பார்,” என்றார். தயானந்தா தனது கண்களை மூடிக்கொண்டு, தனது கவனத்தை தனது புருவத்தின் மீது ஒருமுகப்படுத்திக் கொண்டார். அடுத்த வினாடி, பேச்சாளர் தான் பேசிய தலைப்பில் இருந்து முழுமையாக விலகி, அதற்கு முன்னர் தயானந்தா மற்றும் ராபர்ட் பேசிய விஷயங்களைப் பற்றி பேசலானார். தயானந்தா தனக்குள் சென்று, அந்த பேச்சாளரின் மனத்திற்குள் நுழைந்து, அவர் வழியாக பேசத் தொடங்கி இருக்கிறார் என்பதை ராபர்ட் விரைவில் புரிந்துக்கொண்டார். சுயநலமற்ற நல்ல காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் மாயவித்தைகளின் அந்த செயல்முறை விளக்கத்தை, ராபர்ட் என்றுமே மறக்கவில்லை. அந்த சம்பவம் அற்புதமாக இருந்தாலும் அவ்வளவு பயனுள்ளதாக இல்லை என்று பின்னர் குறிப்பிட்டார். தயானந்தாவிடம் இதைப்போன்ற மாயவித்தைகள் பல இருந்தன, மற்றும் இது ஆன்மீக விரிவாக்கத்தின் செயல்விளக்கமாக இல்லாமல் ஒரு தடையாக விளங்குவதாக ராபர்ட் பிற்காலத்தில் கருதினார். §§

ஒரு நாள் தயானந்தா தனது மாணவனுக்கு சாவிகளால் இயங்கும் ஒரு கடிகாரத்தை தந்து, பௌத்த சமயத்தின் தியான பயிற்சியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இரண்டு மணிநேரம் கழித்து விழித்துக்கொள்ள, அந்த கடிகாரத்தை ராபர்ட் தயார் செய்துக்கொள்ள வேண்டும். அலாரம் நின்றவுடன், அவர் பத்மாசனத்தில் அமர்ந்து முடிந்தவரை ஆழமாக தியானம் செய்யவேண்டும். அதன் பிறகு அவர் கடிகாரத்தை மீண்டும் தயார்செய்து, இரண்டு மணிநேரம் கழித்து மீண்டும் விழிக்க, தரையில் படுத்து உறங்கிவிடுவார். தியானத்தின் உணர்வு மற்ற மனநிலைகளுக்குள் கொண்டுவருவதற்காக, இந்த பயிற்சியை தொடர்ந்து பல நாட்களுக்கு, இரவு முழுவதும் மேற்கொண்டார். §§

தயானந்தாவிடம் பணி புரியும் போது, கலாச்சார குழுவின் பயணங்களில் ராபர்ட் மும்முரமாக இருந்தார். அவர்கள் வடக்கில் இருந்து தெற்கு வரை பயணம் செய்து, அந்த நாட்டின் முறைப்படுத்தப்பட்ட இசை மற்றும் நாட்டிய மன்றங்களில், சிறிய ஊர்கள் மற்றும் கல்லூரி அரங்குகளில் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அவர்கள் கொழும்பில் இருக்கும் ராயல் காலேஜ் ஹாலில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிற்கு நிதி திரட்டினார்கள். மற்றும் அவர்கள் ஜூலை 23, 1947 அன்று, தங்கள் திறமையால் பிஷப்ஸ் காலேஜில் கூடியிருந்த பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர். அதில் ஒரு விமர்சகர், “தான் பாலே மற்றும் குணச்சித்திர நடனத்தில் திறமையானவர் என்பதை ராபர்ட் மீண்டும் நிரூபித்துள்ளார்,” என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டார், மற்றும் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள சூடான தண்ணீர் அதிகம் குடித்ததால், சிங்களர்கள் அவரை உனு வாதுரா என்று அழைத்தார்கள். அதற்கு சிங்களத்தில் “சூடான தண்ணீர்" என்று பொருள்.§§

image§

இளவயது அமெரிக்கருக்கு கொடுக்கப்பட்ட ஆன்மீக பயிற்சிகளில் ஒன்றாக உறங்கும் சாதனா இருந்தது. அவர் தியானம் செய்வதற்காக இரவு முழுவதும், இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை விழிக்க வேண்டியிருந்தது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

சில்வர் பான் கிளப்பில் லத்தின் அமெரிக்க இரவின் போது அரங்கேறிய மாட்ச்லெஸ் முச்சாசோஸ் மற்றும் அக்ரோபாடிக் டாங்கோவை தவிர, களுத்துறையில் இருக்கும் டவுன் ஹாலில் இருந்து மொறட்டுவையில் இருக்கும் வேல்ஸ் காலேஜ் ஹால் மற்றும் பௌத்த மதத்தின் இளைஞர்கள் அமைப்பு வரை, அவர்கள் வழங்கிய கிழக்கு மற்றும் மேற்கின் ஆடல் மற்றும் பாடல்களின் வலுவான கலவை போன்ற நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள், அதற்கு முன்பு பார்த்திருக்கவில்லை. §§

நடனத்திற்கு அதிகமான பயணமும் கடின முயற்சியும் தேவைப்பட்டது, இருந்தாலும் ராபர்ட்டிற்கு பிடித்த இன்னொரு விஷயமான ஒருங்கிணைக்கும் பணிக்கும் இடையிடையே நேரத்தை ஒதுக்க முடிந்தது. நல்ல காரணங்களுக்காக இலங்கையின் மக்களை, ஒன்று சேர்க்கும் அவரது முயற்சிகளைப் பற்றி செய்தித்தாள்களில் தொடர்ந்து செய்திகள் வந்துக்கொண்டு இருந்தன. அவர் மார்ச் 20, 1948 அன்று இளைஞர்களின் உலக கூட்டமைப்பை உருவாக்கினார். மற்றும் அதன் பிறகு விரைவில் கலைஞர்களின் உலக கூட்டமைப்பை உருவாக்கினார், அது ஜூலை 23 அன்று தொடங்கப்பட்டு ஓபரா அண்ட் பாலே கில்டு ஆப் சிலோன் என்று வளர்ச்சி பெற்றது. §§

எல்லோருக்குள்ளும் இருக்கும் பரமாத்துமாவான, பரசிவத்தை உணரும் போராட்டம் மற்றும் அவரது மிகப்பெரிய சவாலுக்குள் ராபர்ட் அடியெடுத்து வைக்கவிருந்தார். அவரது வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு அனுபவமும், அவரை இந்த தருணத்தை நோக்கி அழைத்து சென்று இருந்தது. அந்த தருணம் ஒரு இளவயது அமெரிக்கரை ஒரு ஞானோதயம் பெற்ற உயிர்சக்தியாக மாற்றியது, மற்றும் அவர் எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகளில், ஹிந்து சமயத்தை உருமாற்றி வழிநடத்தினார். அவர் விரைவில் இலங்கையின் தென் முனையில் இருந்த காடுகளில் பெறவிருந்த அனுபவம் மற்றும் அவர் கண்டுபிடித்த ஆன்மீக பாரம்பரியத்தை புரிந்துக்கொள்ள, இமயமலை மற்றும் தற்போது ராபர்ட் இருக்கும் பாதையை முதலில் வடிவமைத்த சூட்சும ஞான முனிவர்களின் காலத்திற்கு, நாம் பின் நோக்கி செல்லவேண்டியிருக்கிறது. §§