குருமார்களின் சரித்திரங்கள்

Page 48: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/48_conclusion.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

முடிவுரை§

ரு பரம்பரை என்பது மிகப்பெரிய நதியைப் போல, எப்போதும் தூய்மையாக இருந்து, வற்றாத ஆற்றலுடன் இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு பல நாடுகள் மற்றும் கலாச்சாரங்கள் வழியாக பல கிளைகளுடன் விரிவடைந்து வந்துள்ள, கைலாச பரம்பரை முடிவான உண்மையை தெரிந்துக்கொள்ள ஆர்வத்துடன் இருக்கும் எல்லோருக்கும் உயிரூட்டம் அளிக்கும் நீரை கொண்டு வருகிறது. §§

இந்த பூமியில் மகாபுருஷர்களாக வலம் வந்து, மனிதன் மற்றும் இறைவனை பிரிக்க முடியாது என்பதைப் பற்றியும், பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் பரவியிருக்கும் ஒற்றுமை மற்றும் முழுமை பற்றியும் பேசி, தங்கள் வாழ்நாளில் இறைவனை உணர்ந்து, ஒரு அரிய எடுத்துக்காட்டாக விளங்கிய ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்த ஏழு சற்குருமார்களின் வாழ்க்கை வரலாற்றை நாம் இந்த புத்தகத்தில் தெரிந்துகொண்டோம். இந்த ஏழு சற்குருமார்கள் அறியாத சில விவேகமான சவால்களை வரவிருக்கும் காலங்களில் எதிர்கொள்ளவிருக்கும் ஞானோதயம் பெற்ற சற்குருமார்கள் மற்றும், அத்வைத சைவ சித்தாந்தத்தை எதிர்கொண்டதும் தாங்கள் நாடிய முடிவான உண்மை தாங்கள் தான் என்பதை அறிந்ததும் இந்த ஏழு சற்குருமார்களின் பாதங்களில் சரணடையும் மற்றவர்களாலும் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும், இது வரை அறியப்படாத விளைவுகளை நாம் இன்னும் பார்க்கவில்லை. §§

ஒரு குரு இன்னொருவரை எந்த முறையில் தீட்சை வழங்குவார் என்பது யாருக்கும் தெரியாது. தஷனாமி சமூகங்கள் போன்ற சில பாரம்பரியங்களில், சம்பிரதாய முறைப்படி நடக்கும் சந்நியாச தீட்சையில் உறுதியான நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் நாத சமூகங்கள் போன்ற மற்ற சமூகங்களில் அது வழக்கமாக ஒரு சிந்தனை, ஒரு சொல் அல்லது தொடுதல் மூலம் வழங்கப்படும், ஒரு வலுவான விழிப்புணர்வாக அதிக தனிச்சையாகவும் ஒழுங்குமுறை இல்லாமலும் இருக்கிறது. கைலாச பரம்பரையில் குருமார்கள் வழக்கமாக தங்களது ஆன்மீக சக்தியை தொடுதல் மூலம் வழங்குகிறார்கள். கடையிற்சுவாமிக்கு இமயமலையில் இருந்து ரிஷி தொட்டு வழங்கிய சக்தியை, அவர் தன்னிடம் சீடனாக இருந்த செல்லப்பகுருவின் திறந்த உள்ளங்கையில் ஒரு பெரிய ரூபாய் நாணயத்தை வைத்த வழங்கினார். செல்லப்பகுரு ஒரு மங்களகரமான தருணத்தில், யோகசுவாமியின் கைகளில் இருந்த சாப்பாட்டு தட்டு மற்றும் குவளையை தட்டிவிட்டார். யோகசுவாமி தனது ஆசிரம வளாகக் கதவிற்கு அருகில், குருதேவாவின் முதுகில் ஓங்கி அடித்து அவரை தடுமாற செய்தார். அதைப்போன்ற சாதாரண சைகைகள் மூலம், ஆன்மீக சக்தி ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு வழங்கப்படுகிறது. §§

ஒரு தந்தை தனது குடும்ப தொழிலை தனது தகுதி வாய்ந்த மகனுக்கு தருவதைப் போல, குறிக்கோள் மீது அதிக கவனத்துடன் இருக்கும் அந்த சிறப்பான தொடுதல், சீடனிடத்தில் விரிவாக்கம் பெற்று இருந்த உணர்தல் மற்றும் பக்குவத்தை அங்கீகரித்து, அவருக்கு அந்த முக்கியமான தருணத்தில் பரம்பரையின் ஆன்மீக அதிகார பொறுப்பை வழங்குகிறது. தீட்சையை வழங்கும் குரு தனது தூல உடலை துறந்தால் மட்டுமே, இந்த பொறுப்பின் முழு சக்தியும் தீட்சை பெற்றவருக்கு கிடைக்கப்பெறுகிறது. §§

இந்த பரம்பரையின் தொடர்ச்சியை உறுதி செய்யும் பொருட்டு, ஒவ்வொரு வாரிசும் பரம்பரையின் பொறுப்பை ஞானோதயம் பெற்ற அடுத்த வாரிசிடம் வழங்கி, முழுமுதற் பொருளை உணர வேண்டும் என்று மனிதன் நாட்டம் கொண்டதில் இருந்து தொடங்கி காலத்தின் முடிவையும் கடந்து மேலும் சில நாட்களுக்கு தவிர்க்க முடியாமல் தொடர உள்ள ஒரு சங்கிலியில், அவர் தனது பங்கை பூர்த்தி செய்கிறார். §§