குருமார்களின் சரித்திரங்கள்

Page 46: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/46_guru07_04.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

அத்தியாயம் முப்பத்தி-ஒன்று §

உயர்ந்த நிலையை அடைதல் §

1996 முதல் 1999 வரை, குருதேவா தனது வாழ்க்கையை மடத்தில் மையப்படுத்தி, துறவற குலங்களில் முன்பை காட்டிலும் அதிக கவனம் செலுத்தி, சமயப்பணிகளை ஊக்குவித்து வந்தார். ஒரு சிறிய உயர்மட்ட குழு தாங்கள் நடத்திய ஒரு விசேஷ கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தது. விஷன் கவாய் 2020 என்ற பெயருடன் இருந்த அந்த குழுவில், அந்த தீவில் இருந்த அரசியல், வணிக, கல்வித்துறை மற்றும் விவசாயத்துறை தலைவர்கள் இடம்பெற்று இருந்தார்கள். இந்த ஆலோசனை சபையில் குருதேவா மட்டுமே ஆன்மீகத் தலைவராக இருந்தார், மற்றும் அவர் அவர்களுக்கு பரிசுகளை கொண்டு வந்தார். ஒவ்வொரு மாதமும் தாங்கள் வசிக்கும் தீவு மற்றும் அதன் மக்களின் எதிர்காலம் பற்றி திட்டமிட்டு விவாதிக்கவும், குருதேவா வழங்கவிருக்கும் உபதேசத்தை கேட்கவும், மேயர்கள் மற்றும் முன்னாள் மேயர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் குழு ஒன்று கூடியது. இந்த குழுவிற்கு அவரும் அவரது துறவிகளும் ஊக்கமளிக்கும் சக்தியாக விளங்கினர், மற்றும் இந்த காலகட்டத்தில் அந்த குழுவில் குறிப்பிடத்தக்க சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. கவுண்டி கவுன்சில் தலைரவராக இருந்த ரோன் கவுசி, “குருதேவாவின் அடுத்தகட்ட நடவடிக்கையை தெரிந்துக்கொள்ளவே நான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறேன்! நான் எனது வாழ்நாளில், இதுவரை அவரைப்போன்ற ஒரு அற்புதமான மனிதரை சந்திக்கவில்லை,” என்று துறவிகளிடம் தெரிவித்தார். §§

முத்தொகுப்பில் முன்னேற்றம் மும்முரமாக இருந்தது. குருதேவா ஒவ்வொரு நாளும் தவறாமல், தனது தொகுக்கும் குழுவுடன் தனது RV வாகனத்தில் ஏறி கடற்கரையோரமாக செல்வார். அவர் விடுப்பு நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களிலும், இந்த சந்திப்பில் தவறாமல் கலந்துகொண்டார். அது கவாய் தீவில் தங்கியிருக்க வேண்டும் என்ற அவரது விரதத்திற்கு காரணமாக இருந்தது, மற்றும் அவர் தனது பணியை பூர்த்தி செய்வதில் உறுதியாக இருந்தார். §§

அவரும் அவரது தொகுக்கும் குழுவும் டான்சிங் வித் சிவாவின் ஐந்தாவது பதிப்பை 1997 ஆம் ஆண்டு நிறைவு செய்ததும், மெர்ஜிங் வித் சிவா புத்தகத்தில் தங்கள் பணியை தொடங்கினார்கள. இந்த புத்தகம் அவர் தனது வாழ்நாளில் பெற்ற உட்பார்வைகள், நிகழ்த்திய பாடங்கள், உரைகள் மற்றும் பதிவு செய்ப்பட்ட தருணங்களை உள்ளடக்கி பாதுகாப்பு அளிக்கும் ஒரு ஆக்கப்பூர்வ படைப்பாக, அவரது ஆன்மீக மற்றும் மீமெய்யியல் சுருக்கமாக விளங்கியதால், இதில் குருதேவா அதிக ஆர்வத்துடன இருந்தார். அவரைப் பொறுத்தவரையில், மீமெய்யியல் வாழ்க்கைக்கு எலும்பு போல விளங்கி, மற்ற அனைத்திற்கும் ஆதரவு தருவதாக கருதியதால், “இந்து சமயத்தின் தற்கால மீமெய்யியல்" என்று அவர் அதற்கு பெயரிட்டார். §§

அவர் ஆம் 1998 ஆம் ஆண்டை “மெர்ஜிங் வித் சிவாவின் ஆண்டாக" பெயரிட்டார். அவர் தினமும் RV வாகனத்தின் நெரிசலான மூலையில் அமர்ந்து கொள்வார். அதன் சன்னல்கள் பசிபிக் கடலை பார்த்த வண்ணம் திறந்து இருக்க, அந்த கடலின் அலைகள் வாகனத்தில் இருந்து சில கஜ தூரத்தில் இருந்த பாறைகள் மீது மோதிக்கொண்டு இருந்தன. அவர் தினமும் அத்தியாயங்களை சிறப்பாக வடிவமைத்து, மொழியின் நடையை மாற்றி அமைத்து, தான் தெரிந்துகொண்ட ஒரு குறையை சரி செய்ய புதிய படைப்புக்களை வழங்கினார். ஒவ்வொரு மாதமும் புத்தகத்தின் ஒவ்வொரு பிரிவாக மறு ஆய்வுக்கு வந்த போது, அவர் ஒவ்வொரு பத்தியாக கூர்ந்து கவனித்து, அந்த படைப்பை வலுவாக வழிநடத்தி சென்றார். அத்தியாயங்கள் முடிவடைந்ததும், அவற்றை துறவிகளுடன் பேரானந்தத்துடன் பகிர்ந்து கொண்டார். ஒரு வருடம் தகவல்களை ஒன்று சேர்த்து, தொகுத்து, சித்திரங்களின் துணையுடன் எடுத்துரைத்து மெருகேற்றிய பிறகு, மெர்ஜிங் வித் சிவா வெளியிடப்பட்டது. சில மாதங்கள கழித்து, குருதேவா உலக மக்களிடம் அதைப்பற்றி அளித்த விளக்க உரை: §§

image§

குருதேவா தனது தொகுக்கும் மேசையில், ஒவ்வொரு புத்தகத்தின் ஒவ்வொரு சொல்லையும் மிகவும் கவனமாக மறு ஆய்வு செய்தார். அவர் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து பணியாற்றுவதை வலியுறுத்தியதோடு, ஒரே ஆவணத்தை நான்கு வெவ்வேறு கணினிகளில் இருந்து பணிபுரிய அனுமதித்த தொழில்நுட்பமும் அவருக்கு பிடித்து இருந்தது. அந்த காலத்தில் அத்தகைய தொழில்நுட்பம் புதுமையாக இருந்தது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

மெர்ஜிங் வித் சிவா மற்ற புத்தகங்களைப் போல அல்லாமல், விசேஷமானதாக இருக்கிறது. உங்களைப்பற்றி எடுத்துரைக்கும் இந்த புத்தகம், உங்களுக்கு உட்புறமாக உங்கள் மனம் உங்கள் உணர்ச்சிகளுடன் செயல்புரிவதைப் பற்றி, உங்கள் உணர்ச்சிகள் உங்கள் தூல உடலுடன் மற்றும் வாழ்க்கையின் உண்மையான குறிக்கோளாக விளங்கும் ஆத்ம ஞானத்துடன் செயல்புரிவதைப் பற்றி விளக்குகிறது. கனடா, இலங்கை, ஐரோப்பா மற்றும் போர் காரணமாக உலகின் பல நாடுகளுக்கு இடம்பெயர்ந்த எனது இலங்கை சீடர்களுக்கு, நாம் தூல உடலில் மற்றும் சூட்சும உடலில், அறிவுணர்வுடன் வாழும் ஒரு ஆன்மா என்றாலும், நாம் களங்கமில்லாமல், மாசற்று இருக்கும் ஒரு தூய ஆன்மாவாவாக இந்த வாழ்க்கையின் கர்மவினைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்கிற ஒரு புதிய சுய கோட்பாட்டுடன், வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்க இந்த புத்தகம் உதவியாக இருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.§§

பொதுவாக மீமெய்யியல் புத்தகங்கள், உங்களை இந்த உலகை கடந்த ஒரு உயர்ந்த தத்துவத்தை நோக்கி அழைத்து செல்லும். மெர்ஜிங் வித் சிவா புத்தகத்திலும் இந்த அம்சம் இருந்தாலும், இந்த புத்தகம் வழங்கும் உத்திகள் மற்றும் சாதனாக்கள் உலகில் உங்களுக்கு வெற்றிகளை தேடித் தருகின்றன. இதன் மூலம் ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு, ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு என்று உலகம் முழுவதும் பயணம் செய்யும் ஒரு பயணியைப் போல உங்கள் மனதில் பயணம் செய்யும் சாட்சியின் இயக்கத்தை நீங்கள் கட்டுப்படுத்துவதால், நீங்கள் உலக சக்திகளை இயக்குகிறீர்கள். மெர்ஜிங் வித் சிவா புத்தகத்தை ஐந்து நாடுகளில் வெளியிட்டு, நாங்கள் சமயப்பணி மற்றும் தத்துவ பாடங்கள் மற்றும் மீமெய்யியல் சாதனாக்களின் உபதேசங்களை தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவையும் கொண்டாடினோம். §§

image§

குருதேவா ஐந்து ஆண்டுகளுக்கு வியாபாரம், கல்வித்துறை, ஊடகம் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து வந்தார். கவாய் தீவின் எதிர்காலத்திற்கு ஒரு ஆன்மீக திட்டத்தை உருவாக்குவது மட்டுமே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ஒரு நாள் குருதேவா கடலை நோக்கி பயணம் செய்த போது, கடலுக்கு அருகே அவருக்கு பிடித்தமான வாகனம் நிறுத்தும் இடம், அந்த தீவில் கிழக்கு கடற்கரையோரமாக மிதிவண்டிகள் மற்றும் நடக்கும் பாதையை உருவாக்க, மிகப்பெரிய கற்பாறைகளால் தடுக்கப்பட்டு இருந்தது. அவரால் அந்த விசேஷமான இடத்திற்கு மீண்டும் திரும்ப முடியாததால், அவர் 1998 ஆம் ஆண்டு தனது தொகுக்கும் பணிக்கு தலைமையகமாக பயன்படுத்திய இடத்திற்கு அருகில், கடலுக்கு மத்தியில் வாடகைக்கு ஒரு குடியிருப்பை விரைவில் வாங்கினார். இந்த விசாலமான குடியிருப்பு, ஒவ்வொரு அமர்வுக்கு முன்னரும் கடலில் நீச்சலடிக்கும் வசதியை வழங்கியதுடன், அவர் அதிக ஈர்க்கப்பட்டு இருந்தால் இரவு தங்குவதற்கும் அனுமதி வழங்கியது. அவர் அதை ஹாலே மகாய் என்று அழைத்தார், அதாவது “கடலுக்கு அருகில் இருக்கும் அவரது வீடு.” யோக சுவாமியை போல அவருக்கும் தினமும் கடலுக்கு சென்று வருவது பிடித்து இருந்தது. பாதுகாப்பு காரணத்திற்காக, வெதுவெதுப்பான தண்ணீரில் நுழைவதற்காக, அபாயகரமான பவளம் வழியாக நடந்து சென்ற போது, அவரும் அவரது மூன்று தொகுப்பு ஆசிரியர்களும் ஒருவருக்கொருவர் கைகளை பிடித்துக்கொண்டு சென்றனர். அலைகள் மெதுவாக அவர் மீது மோதிக்கொண்டு இருக்க, தான் முதுகுப்புறமாக நீந்திக்கொண்டு வெப்பமண்டல மீன்களை பார்ப்பது குருதேவாவிற்கு பிடித்து இருந்தது. §§

அவர் ஒரே இடத்தில் அடைந்து இருந்ததால் ராக் பீவர் என்ற மந்தநிலையை தணிப்பதற்காகவும், அவர் பிறந்த நாளை அந்த தீவு மக்களால் அதுவரை கொண்டாடப்படவில்லை என்பதாலும், ஜனவரி 5, 1998 அன்று துறவிகள் குருதேவாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி அவரை வியக்க வைத்தனர். பல மாதங்களுக்கு இரகசியமாக திட்டமிட்ட பிறகு (அவருக்கு தெரியும் என்பதை துறவிகள் அறிந்து இருந்தாலும், இரு சாராரும் இதைப்பற்றி ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை), எங்கே செல்கிறோம் என்பது அவருக்கு தெரியாவிட்டாலும், மடத்தின் நிலப்பரப்பில் அமைந்து இருந்த ஒரு திறந்த புல்வெளியில் காத்து இருந்த ஒரு ஹெலிகாப்டரில் ஏறி செல்வதற்கு அவரது சம்மதத்தை பெற்றனர். §§

மூன்று நிமிடங்கள் கழித்து அந்த வானூர்தி கவாய் தீவில் பிரபலமான பண்ணையாக விளங்கிய கிலோஹனா மான்ஷனை சுற்றிய பிறகு, பாராட்டுதல்களும் மகிழ்ச்சியும் நிரம்பிய அந்த அற்புதமான இரவை தொடங்குவதற்கு, அது ஒரு உற்சாகமான மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் இறங்கியது. குருதேவாவின் மகத்துவத்தை மெதுவாக புரிந்துக்கொண்டிருந்த அந்த தீவின் நானூறு மக்கள், அவரை கோலாகலமாக வரவேற்றனர். சற்குருவை ஹவாய் நடனக்கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் ஒரு மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். அங்கே கூடியிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து அவர் வியந்து நின்றார். §§

அன்று இரவு அந்த அரங்கில், அவரும் மேயர் மேரியன் குசாகாவும் ஹூலா மற்றும் மணிப்புரி நடனமாடினார்கள். அன்று இரவு அவரது தேவாலய அங்கத்தினர்கள் அவரை ஒரு தற்காலிக தராசில் வைத்து, இன்னொரு புறம் அவரது எடையை சமன் செய்ய தங்க முலாம் பூசிய செங்கற்களை வைத்து, அதன் மீது $900,000 (அவர் எடைக்கு சமமான தங்கத்தின் விலை) காசோலையை வைத்து, அவரது ‘இறைவன்’ கோயிலுக்கு அந்த தொகையை திரட்டுவதாக வாக்குறுதி எடுத்துக்கொண்டனர். அவர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை சில மாதங்களில் பூர்த்தி செய்தனர். அன்று இரவு வாழ்க்கையில் அவர் செய்த சாதனைகள் பற்றி பேசப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டு, நினைவுகள் பகிர்ந்துக்கொள்ளப்பட்டு, அந்த தீவின் முன்னேற்றத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு பாராட்டப்பட்டது. மற்றவர்கள் நலனுக்காக அர்பணித்துக் கொண்ட அவரது வாழ்க்கைக்கு மக்கள் அன்பையும் நன்றியுணர்வையும் தெரிவிக்க, அன்று இரவு அவர் ஒரு அரசரின் உணர்வுடன் தென்பட்டார். §§

குருதேவா எல்லா தரப்பு மக்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டு, தீவில் இருந்த பல்வேறு பிரிவை சேர்ந்த மக்கள் அன்று இரவு கூடியதைப் போல பின்பு எப்போதும் ஒன்று சேரவில்லை என்று பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அது அதிகாரப்பூர்வமாக அவரது 71 ஆவது பிறந்தநாளாக இருந்தாலும், கருத்தரிப்பு காலத்தை வாழ்க்கையின் தொடக்கமாக கருதும் இந்திய முறைப்படி, அது தனது 72 ஆவது பிறந்த நாளாக அவர் கருதினார். வாழ்க்கையில் நான்காவது நிலையாக கருதப்படும் சந்நியாச ஆசிரமத்தின் தொடக்கமாக விளங்கும் 72 ஆவது வயது, இந்து சமயத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது மற்றும் அது குருதேவாவிற்கு முக்கியமானதாக விளங்கியது. §§

ஷும் மொழி மூலம் அந்தர்லோகத்தை ஆராய்ச்சி செய்தல் §

குருதேவா தனது வாழ்நாள் முழுவதும், முற்றிலும் தொடர்பில்லாத ஒரு உட்புற மற்றும் ஒரு வெளிப்புற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் ஒரு இன்னர்சர்ச் பயண திட்டத்தில் இருந்த போது, தனக்கு எப்போதாவது ஓய்வு நேரம் கிடைக்கும் போது, அவர் தியானம் செய்ய தொடங்கிவிடுவார். அவர் வழக்கமாக தினமும் மனோஉணர்வுடன் செயல்பட்டு, வெளிப்புற மனம் அழைக்கும் போது உணவு அருந்த செல்வதற்கு, தனது தொகுக்கும் குழுவுடன் இணைவதற்கு அல்லது ஒரு யாத்திரியை சந்திப்பதற்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டியிருந்தது. §§

1990 களில், அவரது ஆன்மீக பணியின் முக்கியமான தருணங்கள் அவர் உருவாக்கிய ஷும் என்கிற தியான மொழியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவர் பல வருடங்களாக தனது ஆன்மீக ஆய்வுகளின் மூலம் உருவாக்கிய விரிவான ஷும் தரவுத்தளம் மற்றும் அகராதியை சுத்தப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்காக, அவர் விடிவதற்கு முன்பாக காலை இரண்டு அல்லது மூன்று மணிக்கு எழுந்து விடுவார். அவரது முயற்சிகளுக்கு உதவி செய்யும் பொருட்டு, பல துறவிகளுக்கு பல்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் குருதேவா, சூட்சும உலகை விளக்குவதில் மட்டும் கவனம் செலுத்தி, அது இந்த உலகை காட்டிலும் உறுதியானது என்று உறுதி அளித்தார். §§

அவர் யாரும் பார்க்காத ஒரு பகுதிக்கு தினமும் சென்று வந்த ஒரு ஆய்வு பணியாளர் போல, மீண்டும் மீண்டும் திரும்பி வந்து தான் கண்ட அற்புதமான பகுதியை பற்றி மற்றவர்களுக்கு விரிவாக விளக்கியதோடு, அவர்களும் அந்த பகுதியை ஒரு நாள் சென்று பார்க்கலாம் என்று உற்சாகமாக எடுத்துரைக்கவும் செய்தார். அவர் பிற்காலத்தில் மனதின் பல்வேறு பரிணாமங்களை ஆய்வு செய்து, பதினான்கு லோகங்கள் உள்ளடக்கிய அல்லது இயற்கைக்கு புறம்பான நிறங்கள் மற்றும் உருவங்கள் மற்றும் ஒலிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதைப் பற்றி விளக்கினார். இங்கே அவர் இயலுணர்வு பிரபஞ்சம் அல்லது நான்காவது பரிணாமம் பற்றி விளக்குகிறார். §§

நான்காவது பரிணாமமாக மனிதனின் துணை மெய்ஞ்ஞான புலன் விளங்குகிறது. இது வாசம் செய்வதற்கு ஒரு அழகான இடமாக விளங்குகிறது, மற்றும் உங்கள் முதுகுத்தண்டின் சக்தியை உணர்ந்துகொண்டு நீங்கள் அதில் தொடர்ந்து வாசம் செய்யலாம். உங்களுக்கு முதுகுத்தண்டில் இருக்கும் பிரகாசமான சக்தியைப் பற்றி தெரிந்தவுடன், நீங்கள் மூன்றாவது பரிணாமத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு, நான்காவது பரிணாமத்தில் வேகமாக எழுச்சி பெறுகிறீர்கள். §§

கலைஞர்கள் நான்காவது பரிணாமத்தில் இருக்கிறார்கள். நீங்கள் புதிதாக ஒன்றை வடிவமைத்து அல்லது உருவாக்கியதும், நீங்கள் உங்கள் நரம்பு அமைப்பின் மூலம் உள்ளிருக்கும் அழகை வெளிப்படுத்துகிறீர்கள். உங்கள் நரம்பு அமைப்பு முழுவதிலும் ஒரு நேர்மறை உணர்வு பரவுவதை உங்களால் உணர முடிகிறதா? அது உங்களது நான்காவது பரிணாமமாக இருக்கும் துணை மெய்ஞ்ஞானம் ஆகும். மற்றவரின் நலனுக்காக அறிய விரும்பும் நாட்டம், ஆக்கப்பூர்வமான அறிவுணர்வு மூலம் அறியப்படுகிறது. §§

வேடிக்கையாக பேசி தங்கள் கருத்துக்களை கேட்பவர் மனதில் புகுத்த விரும்பாமல், கவனமாக மற்றவர் கருத்துக்களை கேட்பதில் அதிக கவனம் செலுத்துபவரை நாம் திறந்த மனதுடன் இருப்பவர் என்று குறிப்பிடுகிறோம். அவர் நான்காவது பரிணாமத்தில் உணர்வுடன் இருக்கிறார். அவர் ஒரு புது யுக மனிதராக இருக்கிறார். தன்னை சுற்றி இருக்கும் மக்களின் லௌகீக அணுகுமுறைகளில் இருந்து தனது அணுகுமுறை அதிகம் மாறுபட்டு இருப்பதன் காரணமாக, அவர் பேச வேண்டியிருப்பதால், அவர் தன் கருத்தை தெரிவிக்கிறார். அவரால் ஒரே சமயத்தில் ஒரு விஷயத்தின் நான்கு கோணங்களையும் பார்க்கவும், மற்றவர்களின் கருத்து தனது கருத்தில் இருந்து மாறுபட்டு இருந்தாலும், அதனை புரிந்துகொள்ளவும் முடிகிறது. அவர் மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பவராக இருந்தார். அவர் மகிழ்ச்சியாக இருப்பதுடன் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் செய்கிறார். அவர் ஆக்கப்பூர்வமாகவும், விசேஷமாகவும், புதுமையான முறையிலும் செயல்படுகிறார். அவர் தனித்து இயங்கி, தன்னையும் தனது முதுகுத்தண்டின் சக்தியை மட்டுமே சார்ந்து இருக்கிறார். அவர் மற்றவர்களுக்கு விரைந்து உதவி செய்தாலும், அவர்களின் முப்பரிணாம சக்தியில் சிக்காமல் இருப்பதில் கவனமாக இருக்கிறார். அவர் நன்றாக வடிவமைக்கப்பட்ட குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளுடன் அதிக உற்சாகத்துடன் இருந்தார். அவரை உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் இயக்கும் சக்தியை விரயம் அல்லது வெளியேற்றம் செய்யாமல், நல்ல முறையில் பயன்படுத்துகிறார். அவர் வாழ்க்கையின் மீது உற்சாகமாகவும் திருப்தியாகவும் இருப்பதுடன், ஆன்மீக பாதையை பின்பற்றுவதற்கு தீவிர ஆசையுடன் இருக்கிறார். §§

உங்களுக்கு மனதின் நான்காவது பரிணாமத்தில் தொடர்ச்சியாக ஆக்கப்பூர்வமான சிந்தனை இருப்பதால், அது வாழ்வதற்கும் உட்புற விரிவாக்கத்தை தாங்கிக் கொள்வதற்கும் ஒரு அற்புதமான இடமாக விளங்குகிறது. வாழ்க்கைப் பற்றிய பரந்த பார்வை, தினமும் நான்காவது பரிணாமத்தில் இருந்து தடையில்லாமல் விரிவாக்கம் பெறுவதை உங்களால் காண முடிகிறது. அடியுணர்வை கூர்ந்து கவனித்து உணர்ச்சி, சிந்தனை மற்றும் எதிர்வினைக்கு இடையே இருக்கும் தொடர்பை அறிந்து புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் மூன்றாவது பரிணாமத்தின் காந்த விசைப்பகுதியை ஆய்வு செய்து, பல்வேறு மக்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ளும் செய்முறைகளை புரிந்துகொள்ள முடிகிறது. §§

நான்காவது பரிணாமத்திற்குள் நுழைவது மிகவும் சுலபமாக இருக்கிறது. நாம் நினைப்பதை போல சூழ்நிலை அமையாத போது பற்றின்றி இருப்பது சிறிது சவால் விடுவதாக இருந்தாலும், சக்திகள் சீரடையும் போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது சுலபமாக இருக்கும். §§

image§

தினமும் காலையில் விடிவதற்கு முன்பாக, குரு பீடத்தில் தனது சிம்மாசனத்தில் குருதேவா அமர்ந்து இருப்பார். அவரை பார்த்த வண்ணம் துறவிகள் அமர்ந்து இருக்க, அவர்களை ஒரு மணி நேரத்திற்கு, யோக பயிற்சிகள் கலந்த தியானத்தில் ஷும் மொழி மூலம் வழிநடத்தி செல்வார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

மடத்தில் அவரது அன்றாட நிகழ்வுகள் §

குருதேவாவிற்கு பயணம் செய்வது பிடித்து இருந்தது. மூன்று வருடங்கள் தனிமையில் இருந்த காலத்தைத் தவிர கோயில் திறப்பு விழாவிற்கு தலைமை தாங்க, தன்னிடம் தீட்சை பெற்ற உறுப்பினர்களை சந்திக்க, ஒரு மாநாட்டில் பங்குபெற என்று அவர் ஒரு வருடத்தில் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு மடத்திற்கு வெளியே இருப்பார். அவர் தனது மடத்தில் இருந்த காலத்தில், அவர் பூர்த்தி செய்யவேண்டிய பணிகளின் சலிப்பூட்டும் பட்டியல் நிரம்பி இருந்தது. அவர் அதை நல்ல ஒழுக்கங்களின் மூலம் கட்டுப்படுத்தி, உற்சாகத்துடன் எதிர்கொண்டார். §§

அவர் பெரும்பாலான நாட்களில் துறவிகளுக்கு முன்பாக எழுந்து, குளித்துவிட்டு படிகட்டில் கீழிறங்கி தனது மஹோகனி அறைக்கு நடந்து செல்வார். பழைய பண்ணை வீடு புதுப்பிக்கப்பட்ட போது, அவருக்கு அந்த அலுவலகம் வன்மரத்தில் மெருகூட்டப்பட்டது. அவர் தனது அலுவலகத்தில் அமர்ந்து சிறிது நேரம் வேலை செய்த பிறகு, சூடான தேநீர் அல்லது காபியுடன் ஒரு துறவி அங்கே வருவார். அதிகாலையில் தன்னை தேடி வந்த ஒரு அன்பருடன் சிறிது நேரம் ஆன்மீக விஷயங்கள் அல்லது முந்தைய இரவு தான் கண்ட ஒரு கனவு பற்றி சிறிது நேரம் பேசி அவரை வழியனுப்பிய பிறகு, அவர் தனது கணினி பக்கம் திரும்பி அன்றைய தினம் வந்த மின்னஞ்சல்களை பார்வையிட்டு அதை ஒழுங்குப்படுத்தி, வாரம் இரு முறை நாட்காட்டியை நோட்டமிட்டு, தனது கோயில் சொற்பொழிவுகளை தயார் செய்து கொள்வார். தினமும் அன்றாட நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பாக, அவர் தனது ஷும் பணிக்காக ஒதுக்கிய அந்த அமைதியான தருணங்கள் அவருக்கு பிடித்து இருந்தன. அவருக்கு அது ஒரு வேலையாக இல்லாமல், அதி முக்கியமான பணியாக இருந்தது, மற்றும் அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட பல மணி நேரங்கள் அவருக்கு சில நொடிகளாக தோன்றின. §§

தினமும் சிவ பூஜைக்காக துறவிகள் கூடியிருந்த ‘கடவுள்’ கோயிலுக்கு, அவர் சரியாக 5:15 மணிக்கு நடந்து செல்வார். அவர் சிவபெருமானை கைகூப்பி வணங்கிவிட்டு, முதுகை சாய்த்து அமரும் வசதியுடன் பின்புறத்தில் ஓரமாக இருந்த ஒரு உயரமான பிரம்பு நாற்காலியில் அமர்வதற்கு, அவர் கோயிலின் பிரதான மண்டபம் வழியாக நடந்து செல்வார். §§

பூஜைக்காக ஒவ்வொரு துறவியாக அங்கே கூடும் பொது, அவரிடம் அன்புடன் ஒரு பூவை வழங்கி அவரது பாதங்களை தொட்டு, நமஸ்காரம் செய்து விட்டு, தங்கள் குருவுக்கு அருகில் அமர்ந்து இயல்பாக பேசி மகிழ்ந்தார்கள். 5:30 மணிக்கு, உட்புறமாக இருந்த கருவறைக்கு நடந்து சென்று, சிவ நடராஜருக்கு அருகில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த விசேஷ இருக்கையில் அமரும் முன்பாக, விநாயகர் மற்றும் முருகனுக்கு காண்பிக்கப்பட்ட ஆரத்தியை பார்த்து விட்டு செல்வார். அங்கே அவர் நேராக நிமிர்ந்து அமர்ந்துகொண்டு, அவர் குறிப்பிடும் “வெளிப்புற வழிபாட்டில்" தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இறைவன் மனிதனுக்குள் இருப்பதாகவும், மனிதன் இறைவனின் சக்தியில் உலகமாக இருப்பதாகவும் கருதும் உண்மையான சைவ சித்தாந்தத்தில், ஆணவத்தை வெறுமையாக்கும் ஈடுபாட்டை பெறுவதற்கு “முதலில் வெளிப்புற வழிபாடும், பிறகு உட்புற வழிபாடும்” அவசியம் என்று சிரித்துக்கொண்டே குறிப்பிட்டார். §§

6:00 மணி அளவில் பூஜை முடிந்ததும், அவர் எழுந்து நின்று அருகில் இருந்த குரு பீடத்திற்கு கோயில் சுரங்கங்கள் வழியாக மெதுவாக நடந்து செல்வார். யோக சுவாமி தனது குருவான செல்லப்பசுவாமியை அவரது பாதுகைகளின் வடிவில் வழிபட்டதைப் போல, துறவிகள் ஒன்று சேர்வதற்கு முன்பாக, அவர் தினமும் காலையில் தனியாக தனது குருவான யோக சுவாமியின் சிறிய மாடத்தில் வைத்து வழிபடுவதற்கு சிவபெருமானின் கருவறையில் இருந்து ஒரு மலரை கொண்டு வருவார். §§

அவர் பாரம்பரிய முறையில் வடிவமைக்கப்பட்ட சிம்மாசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்ததும், தனது துறவிகளில் ஒருவர் அவருக்காக சிறிய குவளையில் கொண்டு வந்த காபியை ருசித்துக்கொண்டு இருக்க, மற்ற துறவிகள் அங்கே வந்து அவருக்கு முன்பாக தரையில் நான்கு அழகான வரிசையில் அமர்ந்து கொண்டனர். குருதேவா “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி அன்றைய நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்ததும், அதன் பிறகு துறவிகள் குரு மந்திரத்தை பாடி, அவர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்ட குறிக்கோள் மற்றும் இலக்குகளை வெளிப்படுத்தும் துறவிகளின் சமயப்பணி அறிக்கையாக, ஒரு தாளத்துடன் அவர் உருவாக்கிய உறுதிமொழியை இரண்டு முறை பாராயணம் செய்தனர். §§

image§

தேவர்களுக்கு புனிதமான வேள்வியின் மூலம் எழுதப்பட்ட பிரார்த்தனைகளை அனுப்புவதற்கு, குருதேவா அந்த தேவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கிக்கொண்டார். அவர் ஒவ்வொரு வாரமும், உலகெங்கிலும் இருக்கும் அவரது சீடர்கள் அனுப்பிய பிரார்த்தனைகளை ஒரு கூடையில் வைத்து, அதை அந்த அக்னியில் சமர்ப்பித்தார். இவற்றின் சூட்சும வடிவம் தேவர்கள் வாசிப்பதற்காக இரண்டாம் உலகில் தோன்றும் என்றும், அவர்கள் அதைப்படித்து ஒவ்வொரு பிரார்த்தனைக்கும் பதில் அளிப்பார்கள் என்றும் அவர் விளக்கம் அளித்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ஒரு ஆச்சார்யர் தியானத்திற்கு பூர்வாங்க வேலையாக, மனதை 15 நிமிடத்திற்கு அமைதிப்படுத்தி, முறையாக உள்நோக்கி செல்லும் செய்முறையை வழிநடத்தினார். அது ஒரு உயர்ந்த நிலையை அடைந்ததும், இறுதியான ஏற்றத்தை அடைவதற்கு, குருதேவா ஷும் மொழியில் தலைமை தாங்கி துறவிகளை மலையின் உச்சத்திற்கு அழைத்து சென்றார். குரு மற்றும் அவரது ஷும் மொழியால் வழிநடத்தப்பட்டு, எல்லோரும் ஒரே ஆன்மீக பாதையை பின்பற்றி, இந்த பூமியில் முழுமையான ஒத்திசைவுடன் நடைபெறும் தியானம் இதுவாகத்தான் இருக்கவேண்டும். §§

“ஸ்நோர்மாதி" (குறட்டை சமாதி) என்று வேடிக்கையாக அழைக்கப்பட்ட நிலையை தவிர்க்க சில துறவிகள் போராடிக்கொண்டு இருக்க, இதில் நன்றாக பக்குவமடைந்த துறவிகளில் சிலர் ஞானஒளி மற்றும் பரமாத்துமாவிற்குள் ஆழமாக சென்றார்கள். மற்றவர்களுக்கு சவால் விடுவதாக இருந்த பயிற்சியில் குருதேவா நிம்மதியாக, அமைதியாக மற்றும் நன்றாக கவனத்தை உட்புறமாக திருப்பிக்கொண்டு, நேராக நிமிர்ந்து அமர்ந்து இருந்தார். தெய்வீக மாற்றத்தின் சான்றாகவும், தனது துறவிகள் அனைவரும் குண்டிலினி சக்தியை பெறுவது சாத்தியம் என்று தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் விதமாக, இந்த அமர்வுகளின் போது அவரது உடல் தேஜசுடன் பிரகாசமாக மின்னியது. தினமும் நடைப்பெற்ற இந்த தெய்வீக தியானங்களில் பங்குபெறுவதற்கு அவரது துறவிகள் குழுவிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு, தியானம் நிறைவு செய்யப்பட்டது. §§

குருதேவா வழக்கமாக தியானத்திற்கு பிறகு பேசுவார். அவர் சில சமயம் அன்றைய தினம் பற்றி ஒரு சில வார்த்தைகளை கூறி, காலையில் இருந்து மாலை வரை நடைபெறவிருந்த நடவடிக்கைகளுக்கு தனது துருப்புக்களை தயார் செய்து, வரவிருந்த விருந்தாளிகள் அல்லது எல்லோரும் ஈடுபடவேண்டிய ஒரு திட்டப்பணியை பற்றி குறிப்பிடுவார். அவர் சில சமயங்களில் ஆன்மீக முயற்சி அல்லது சாதனா பற்றி பேசுவார். இந்த சமயத்தில் அவர் துறவிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை மீது கவனம் செலுத்தும் நீண்ட உபதேசங்களை வழங்கத் தொடங்கினார். அவர் இந்த உரைகளை தனது மடவாசி சாஸ்திரங்கள் என்று அழைத்தார். அவை இரண்டு நிமிடங்கள் முதல் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் வரை நீடித்தன, மற்றும் அதில் ஒவ்வொன்றும் ஒரு மடவாசியின் இலட்சியங்கள் மற்றும் தனது மடத்தில் வாழ்பவர்கள் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை மீது தீவிரமாக கவனம் செலுத்தின. “கீழ்படிதல் மற்றும் ஒற்றை மனது:” (Obedience and the One Mind) என்று தலைப்பில் அவர் அறிவுறுத்திய உரையை இங்கே காணலாம்: §§

கவாய் ஆதீனத்தில் எல்லோரும் தாங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளுக்கு கீழ்படிந்து நடக்கிறார்கள்; அதனால் அவர்கள் மற்ற எல்லோருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்கள். இங்கே நம்மிடம் ஒரு சிறந்த நுண்ணறிவு இருக்கிறது; இங்கே அதிக மக்களும் இல்லை. இங்கே ஒரு தனிநபரும் இல்லை, ஆனால் ஒரு நுண்ணறிவு மட்டுமே உள்ளது. ஒரு எண்ணற்ற மக்களின் குழு தங்கள் மனங்களை இன்னொரு எண்ணற்ற மக்களின் குழுவுடன் சேர்க்கும் போது ஒரு பெரிய மனம் உருவாகிறது. இதன் காரணமாகத்தான் இந்துயிசம் டுடே மற்றும் எங்களது மற்ற பதிப்புகள் மூலம் மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது, ஏனென்றால் எங்கள் பதிப்புக்களை வாசிப்பவர் இந்த மிகப்பெரிய மனதுடன் இணக்கத்தை பெறுகிறார். உலக மக்களின் நலனுக்காக தனது சொந்த ஆன்மாவிற்கு கீழ்படிந்து ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கிக்கொண்டு பிணைந்து ஐக்கியமாகிய நிலையில் இருபத்தி ஐந்து ஆன்மாக்கள் இருக்கின்றன. §§

“நான் இதை செய்ய விரும்புகிறேன், நான் அதை செய்ய விரும்புகிறேன்” என்றும், “நான் வேறு எதையாவது செய்துக்கொண்டு இருக்க வேண்டும். ஆனால் நான் இதை செய்ய வேண்டியிருக்கிறது,” என்று எல்லோரும் தங்களது சொந்த விருப்பங்களுடன் இருக்கும் போது, நமது பதிப்புக்களை படித்து, “அவர்களின் வெளியீட்டு பணி மிகவும் நன்றாக இருக்கிறது. படங்கள் மிகவும் அருமையாக இருக்கின்றன,” என்று பலர் கூறலாம். இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள காந்தசக்தி எதுவும் இருக்காது. ஆனால் நாம் நம்மை லௌகீகம் மற்றும் சம்சார சமூகத்தில் இருந்து நம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால், நாம் நமது மனங்களை ஒன்றாக ஒரு குழுவாக ஐக்கியமாக்கி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால் (நாம் நமது மனங்களை சம்சாரி குழுவுடன் ஒன்று சேர்க்கவில்லை, நாம் நமது மனங்களை நமது சொந்த குழுவுடன் ஒன்று சேர்க்கிறோம்), நாம் ஒரு மிகப்பெரிய மனிதனாக, எண்ணற்ற உடல்களை கொண்ட ஒரு பெரிய மனமாக மாறியுள்ளோம். §§

அதனால் டான்சிங் வித் சிவா, இந்துயிசம் டுடே பத்திரிகையை படிக்கும் ஒருவர், இந்த பெரிய நுண்ணறிவுடன் இணக்கத்தை பெற்று, இந்த பெரிய நுண்ணறிவில் நாம் வழங்கியதை படிக்கும் குறுகிய காலம் வரை அதில் அங்கம் வகிக்கிறார். இத்துடன் கீழ்படிதல் பற்றிய உறுதிமொழியை நிறைவு செய்கிறேன். §§

அவர் இந்த தருணங்களில், அத்தகைய பொதுவான சூழலில் வழக்கமாக சத்தமாக விவாதிக்கப்படாத சிக்கல்களைப் பற்றி தைரியமாக சொற்பொழிவு நடத்தினார். இந்த உரைகள் அனைத்தும் நிறைவுபெற்றதும், முறையாக பேசப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு கவனமாக பதிவு செய்யப்பட்ட இந்த உரைகள், ஆன்மீக உட்பார்வை மற்றும் கோட்பாட்டின் ஒரு அற்புதமான பாகமாக தனித்து நின்றன. அது அவருடன் ஆன்மீக பணியில் ஈடுபட்டு இருந்த (சோல்ஜர்ஸ் ஆஃப் வித்தின்) மற்றும் அறையில் இருந்தவர்கள் மற்றும் எதிர்காலத்தில் வரவிருந்தவர்களுக்கு இறுதி அழைப்பாக, பாதையில் பலவீனமாக இருப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றிய அவரது எச்சரிக்கையாக, ஒரு வலுவான துறவற வாழ்க்கையை வாழ்வதால் உண்டாகும் சக்திகள் பற்றிய அவரது புகழ்ச்சியாக, நேர்மறை எண்ணத்துடன் எல்லோருடனும் இணக்கத்துடன் வாழ்வது எப்படி என்பதை பற்றிய அவரது அறிவுறுத்தல்களாக விளங்கின. அவர் இந்த அமர்வுகளின் போது சில சமயங்களில் மென்மையாக கடிந்துக்கொண்டு, அவர்கள் சிறப்பாக செய்யவேண்டிய சிறிய விஷயங்களை சுட்டிக்காட்டியதோடு, பாதையில் முன்னேற்ற அறிகுறிகளாக தனக்கு தோன்றிய சிறிய சாதனைகளை புகழ்ந்து பேசவும் செய்தார். §§

அதன் பிறகு ஒரு உயர்ந்த நிலையை எட்டியதும், அவர் முகத்தில் புன்னகை பளிச்சிடும். அதன் பிறகு அவர் அந்த நாள் இனிய நாளாக அமைய எல்லோருக்கும் வாழ்த்துக்களை சொல்லிய பிறகு, “ஓம் நமச்சிவாய” மந்திரத்தை பாடத் தொடங்குவார். துறவிகள் தங்கள் படிநிலையின் வரிசையில் ஒவ்வொருவராக முன் வரும் போது, அந்த மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு இருப்பார்கள். அதன் பிறகு அவர்கள், அவர் முன்பாக மண்டியிட்டு அவர் பாதத்தை தொட்டு வணங்கும் போது, குருதேவா தனது வலது கை கட்டைவிரலால் அவர்கள் நெற்றியில் விபூதி பூசுவார் மற்றும் அவர்கள் குரு பீடத்தில் இருந்து வெளியேறி முழுமை பெறும் பாதையை நோக்கி செல்வார்கள்.§§

குருதேவா தினாயத்திற்கு எப்போதும் முதலாவதாக வந்து, அங்கிருந்து இறுதியாக கிளம்புவதற்கு முன்பாக, பெரும்பாலும் கூடுதலாக சிறிது நேரம் தியானம் செய்வதற்காக அல்லது தனது மனதில் இருந்ததை பகிர்ந்துக்கொள்ள விரும்பிய துறவியுடன் பேசுவதற்காக சில நிமிடங்கள் தங்கிவிட்டு செல்வார். §§

காலையில் தோட்டத்தில் சிறிது நேரம் நடந்த பிறகு, அவருக்காக அவரது மஹோகனி அறையில் காலை சிற்றுண்டி வைக்கப்பட்டு இருக்கும். அந்த சிற்றுண்டியில் பழங்கள் மற்றும் தயிர் (யோகர்ட்) இருக்கும் அல்லது அவருக்கு பிடித்தமான பாசிப்பயிறு மற்றும் யாழ்ப்பாண முறையில் தயார் செய்யப்பட்ட காரமான தேங்காய் சட்னி வைக்கப்பட்டு இருக்கும். பெரும்பாலான நாட்களில், அவர் காலை சிற்றுண்டியை முடித்ததும், உடனடியாக தனக்கு பிடித்தமான பல்வேறு பணிகளில் ஈடுபடுவார். அந்த பணிகளில் ஒவ்வொன்றும் அவர் தனது வாழ்க்கையை அர்பணித்துக் கொண்ட சமயப்பணியின் சிறிய அங்கமாக இருந்தன. அவர் மனதில் பெரிய குழப்பங்கள் இருந்தால், அதனுடன் சம்பந்தப்பட்ட துறவிகளுடன் பேசுவதற்காக, அவர் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பார். அவர் பிரச்சனைகளை எப்போதும் தாமதமாக கையாளாமல், அவற்றை உடனடியாக எதிர்கொண்டு தீர்வு காண்பதை விரும்புவார். §§

அதைப்போன்று கூட்டம் எதுவும் இல்லாத போது, அன்று தான் செய்யவேண்டிய பணிகளின் பட்டியலை பார்வையிட்டு, ஆசிரியர் தலையங்கத்தை திருத்தி அமைப்பது, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டவெண்டும் என்று, வியாபாரத்தில் முடிவு எடுக்க அவரது அறிவுரை வேண்டும் என்று, பாட்டியின் அஸ்தியை என்ன செய்வது என்று அல்லது விவகாரத்தை எவ்வாறு தவிர்ப்பது என்று தனது சீடர்கள் தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் கவனம் செலுத்துவது அவரது வழக்கமாக இருந்தது. பணியாளர்களின் கூட்டங்களுக்கு முன்னேற்பாடுகளை செய்வது, துறவிகளுக்கு மத்தியில் இருக்கும் சாதாரண கருத்து வேறுபாடுகளை சரிசெய்வது, தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் சீடர்கள், சத்சங் குழுக்கள் மற்றும் மடத்தின் கிளைகளுடன் தொடர்பு கொள்வது மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்த முப்பதுக்கும் மேற்பட்ட குலபதி குடும்பங்கள் மற்றும் அரை டஜன் தேவாலய சமயப்பணிகளுக்கு வழிகாட்டுவது என்று இந்த பட்டியல் பல மணி நேரங்களுக்கு நீடித்தது. §§

இந்த பட்டியல் நிறைவு பெற்றதும், நிதி மற்றும் சட்டம் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண்பது, கோயில் அறங்காவலர்கள் குழுக்களுக்கு வழிகாட்டுவது, சமயப்பணிகளை கையாளும் துறவிகள் குழுக்களுடன் கூட்டங்கள் நடத்துவது மட்டுமில்லாமல் பதிப்பித்தல் சம்பந்தமான கேள்விகள், வெளியீடு சம்பந்தமான கேள்விகள், மக்கள் தொடர்பு சம்பந்தமான கேள்விகளை எதிர்கொள்வது என்று மேலும் பல பணிகள் இருந்தன. அவர் ஒப்பந்தங்கள் மற்றும் வங்கி கடன்கள் அனைத்திலும் மற்றும் ஒவ்வொரு காசோலையிலும் கையப்போமிடுவது என்று மடத்தின் நடவடிக்கைகள் மீது தீவிர கவனம் செலுத்தினார். இதற்கு மத்தியில், நாள் முழுவதும் துறவிகளுடன் திட்டமிடப்படாத கூட்டங்களும் நடைபெற்றன. “குருவை சந்திக்க யாருக்கும் முன்பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை” என்ற வாசகத்துடன் அவரது அலுவலக கதவு எப்போதும் திறந்து இருந்தது. §§

அவரது தரிசனத்தை பெறுவதற்காக யாத்திரிகள் காத்து இருக்கும் போது, இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அவருக்கு பார்வையாளர்களை சந்திப்பது பிடித்து இருந்தது மற்றும் அவர்கள் வருகை தருவதை சிவபெருமான் தன்னை காண வருவதாகவே கருதினார். யாத்திரிகளை வரவேற்பது ஒரு முக்கிய பணியாக இருந்தது. அவர் தனது துறவிகளிடம், “ஒருவர் சற்குருவை தரிசிப்பதற்காகவே மடத்திற்கு வருகை தருகிறார்,” என்று தெரிவித்தார். யாத்திரிகள் வந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் பதட்டமோ தயக்கமோ இல்லாமல், விரைவாக குரு பீடம் வரை ஐம்பது மீட்டர் நடந்து சென்று, வந்திருந்த குடும்பத்திற்கு தேவைப்படும் வரை அங்கே அமர்ந்து இருந்து, அறிவுரைகள் மற்றும் ஆசிகளை வழங்கி, சில சமயங்களில் அவர்கள் பாதைக்கு தொடர்புடைய தனது புத்தகங்களில் ஒன்றை அவர்களுக்கு பரிசாக வழங்குவார் அல்லது புதுமண தம்பதிகளை அல்லது தங்களது திருமண நாளை கொண்டாடும் தம்பதிகளை ஆசிர்வதிக்கும் விதமாக ஒரு சால்வையை வழங்குவார். §§

அது நிறைவு பெற்றதும், அவர் ஐந்து நிமிடங்களுக்கு தோட்டங்களுக்குள் தனியாக சென்று, ஆர்கிட் மண்டபம் வரை விரைவாக நடந்து சென்று திரும்பி வருவார். அவர் சில உடற்பயிற்சிகள் செய்வார். மற்றும் அவர் தான் கட்டிய மடத்தின் அழகையும் ரசித்துக் கொண்டிருப்பார். வழக்கமாக அவர் நடந்து செல்வதை ஒரு துறவி பார்த்ததும், ஒரு முக்கிய பணியை பற்றி சந்தேகங்களை கேட்க அல்லது வெறும் அவரது தரிசனத்தை பெற்று, அவருடன் இயல்பாக சில நிமிடங்கள் இருக்க அவரது நடையில் சேர்ந்து கொள்வார். §§

அவர் மஹோகனி அறைக்கு திரும்பியதும் குலம் தொடர்பாக திட்டமிடுதல், துறவிகள் கேட்ட தத்துவம் மற்றும் தியானம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தல், பயணம் செய்வதற்கு திட்டமிடுதல், கொள்முதல் ஆணை வேண்டுகோள்களை அங்கீகரித்தல் (அல்லது நிராகரித்தல்) உட்பட கடினமான வரவுசெலவு கணக்கு சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் என்று குருதேவா அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை ஆராய ஆரம்பித்தார். அவர் நண்பகல் நேரத்தில், தான் மட்டும் தனியாக இருந்து ஒரு “யோகா பிரேக்” (யோக இடைநிறுத்தம்) எடுத்துக்கொள்ள, தனது குடியிருப்பிற்கு செல்வார். §§

அவர் பெரும்பாலும் இந்த இடைநிறுத்தத்தின் போது உலகெங்கும் இருக்கும் தனது சீடர்களை பற்றி தெரிந்துகொள்ள பயன்படுத்திக் கொண்டார். ஒரு முறை ஒரு துறவி சூடான தேநீரை கொண்டு வந்த போது, குருதேவா தனது படுக்கையில் படுத்து இருப்பதை கண்டார். அவர் அமைதியாக தேநீரை வைத்து விட்டு கிளம்பிய போது, “போகாதீர்கள். நான் தூங்கவில்லை. மஹா ஸ்படிக லிங்கம் வழியாக நோட்டமிட்டு, ‘கடவுள்’ கோயிலில் அன்பர்கள் இருப்பதை பார்ப்பதற்கு பயிற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன்,” என்று அவரிடம் குருதேவா கூறினார். அதன் பிறகு குருதேவா, விநாயகருக்கு அருகில் இருந்த படிகட்டிற்கு அருகில், சிகப்பு நிற ஆடை அணிந்து அமர்ந்து இருந்த ஒரு பெண்ணை பற்றி விளக்கி, அவள் அங்கே உண்மையில் இருக்கிறாளா என்று பார்க்குமாறு அந்த துறவியிடம் கேட்டுக்கொண்டார். அவர் விளக்கியதைப் போலவே அந்த பெண் அங்கே இருந்தாள். §§

குருதேவா தனது படுக்கையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த மற்ற வேளைகளில், தனக்கு உணவு அளிக்க பல்வேறு தேவர்கள் வந்தது பற்றியும், சில சமயங்களில் அவர்கள் நேராக தனக்கு உணவை ஊட்டிவிட்டதைப் பற்றியும் விளக்கினார். §§

அவர் அரை மணி நேரத்தில் தனது அலுவலகத்திற்கு திரும்பி உள்நாட்டு அரசியல், ‘இறைவன்’ கோயில் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம், கொள்கை பற்றி விவாதங்கள், பூனைகள் மற்றும் மாடுகள் மற்றும் பறவைகள் மற்றும் மீன்கள், காட்டு பன்றிகள் மற்றும் மக்காச்சோளம், உணவு மற்றும் அருகில் வசிப்பவர்கள், கலை மற்றும் கட்டிடக்கலை, சாஸ்திரங்கள், அழையாத விருந்தாளிகள் மற்றும் முக்கியமான விருந்தாளிகள், ஒரு புதிய வாகனத்தை வாங்குவது, ஒரு புதிய கணினியை வாங்குவது, விரைவில் வரவிருக்கும் இன்னர்சர்ச் பாடத்திட்டம், இந்து பாரம்பரிய நன்கொடை நிறுவலின் அடுத்த கூட்டம், சீரமைப்புப்பணிகள், பழுது பார்த்தல், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், துறவியாக மாற விருப்பம் தெரிவித்தவர்கள், மடத்தில் தங்கியிருக்கும் விருந்தாளிகள், விவசாயம் மற்றும் தோட்டம் தொடர்பான பிரச்சனைகள், மூன்று வருட திட்டத்தை புதுப்பித்தல், கோயில் கடமைகளை ஒதுக்குதல், திருவிழாக்களை திட்டமிடுதல், வெளியீடுகளின் தோற்றத்தை திட்டமிடுதல், இந்துயிசம் டுடே திட்டமிடும் கூட்டங்கள், காணொளிப் பதிவு மற்றும் ஒலிப்பதிவு அமர்வுகள், திருமண ஏற்பாடுகள், உறுப்பினர்களுக்கு தீட்சை வழங்க ஏற்பாடு செய்தல், சாதனாக்கள் மற்றும் பிராயஸ்சித்தங்களை வழங்குதல், இன்னொரு சுவாமி வழங்கும் வாழ்த்துரைக்கு பதில் அளித்தல், ஒரு சிறிய சிக்கலில் இருக்கும் ஒரு துறவிக்கு உதவி செய்தல் என்று பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டார். §§

சரியாக மதியம் 12:30 மணிக்கு அவர் பீகாக் கோர்ட் சென்று விடுவார். அங்கே மதிய உணவிற்கு கூடியிருந்த துறவிகள், செங்கற்களின் மீது பரவியிருந்த எளிமையான பாய்களில் அமர்ந்து இருப்பார்கள். அவர் பாரம்பரிய முறைப்படி சமஸ்கிருத மொழியில் அன்னபூரணியை வணங்கும் பாடலுக்கு தலைமை தாங்கி, கடந்த வாரத்தில் தனது குழு அடைந்த முன்னேற்றங்களைப் பற்றி பகிர்ந்துக்கொள்ள தினமும் ஒரு குலத்தை வரவழைப்பார். இது மடத்தில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தையும் பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள குருதேவா பயன்படுத்திய வழிமுறையாக இருந்தது. §§

அது முடிந்ததும், உலகெங்கும் தனது சமயப்பணியின் தினசரி தகவலை துறவிகள் எப்போதும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துடன், எதிர்காலத்தில் வரவிருக்கும் பயணங்கள் அல்லது மலேசியா, மொரீஷியஸ் அல்லது மற்ற இடங்களில் இருக்கும் உறுப்பினர்கள் செய்த சாதனைகளைப் பற்றி அவர் தனது சிறிய அறிக்கையை தருவார். மதிய உணவு நிறைவு பெற்றதை குறிப்பிடும் வண்ணம், அவர் மரம் மற்றும் துணியில் செய்த ஒரு பெரிய சுத்திலை எடுத்து, தனக்கு பின்னால் இருந்த 36 அங்குல பாலி நாட்டு இரும்பு சேகண்டியை அடிக்க, அதன் எதிரொலிக்கும் ஒலி எல்லோரையும் அவர்களின் மலை குகைகளுக்கு ஒரு சிறிய நண்பகல் உறக்கத்திற்கும், அவரை மேல் மாடியில் இருந்த ரியோகன் குடியிருப்பிற்கும் அனுப்பியது. §§

நண்பகலின் தொடக்கத்தில் அவர் மீண்டும் தனது அலுவலகத்திற்கு திரும்பி ஒன்று அல்லது இரண்டு தொலைப்பேசி அழைப்புகளுக்கு பதில் அளிப்பார்; அதன் பிறகு சரியாக மதியம் 3 மணிக்கு அவர் தனது தொகுக்கும் குழுவை சந்தித்து, மலை அடிவாரத்தில் இருந்த கடலுக்கு செல்ல 14 நிமிடம் பயணம் மேற்கொள்வார். இந்த தகவல் தொடர்பையும் உபதேசிக்கும் சமயப்பணியையும் அவர் தனது வாழ்நாள் பணியின் மையமாக கருதியதால், ஒவ்வொரு மதியமும் தவறாமல், அவரது புத்தகங்கள் மற்றும் பதிப்புக்களுக்கு ஒதுக்கப்பட்டன. நடைபெற்ற அமர்வின் தீவிரத்தை பொறுத்து, அவர் மாலை 7 அல்லது 8 மணிக்கு அமர்வை நிறைவு செய்து, தனது வாகனத்தில் குன்றின் மீது இருந்த மடத்திற்கு திரும்பி, நிலவறையில் எல்லோரும் கூடும் இரண்டு அடுக்கு சன் பேலஸ் அறையில், “மோசமான தொலைகாட்சிக்கு முன்னால் சில நிமிடங்கள்” இருக்க தனது துறவிகள் சமூகத்துடன் ஒன்று சேர்வார். ஆனால் குருதேவா அந்த சந்தர்ப்பத்திலும், அந்த மந்தமான லௌகீக நடவடிக்கையை அனுபவித்து பயன் பெறுவது பற்றி துறவிகளுக்கு ஒரு ஆன்மீக கண்ணோட்டத்தை வழங்கினார்:§§

நாம் நமது கர்மவினைகளுக்கு, விவசாயத்தை சார்ந்து இருந்த யுகத்தை காட்டிலும் விரைவாக தீர்வு காண தேவையான வழிகளை தொலைகாட்சி நமக்கு வழங்கியுள்ளது. தொலைக்காட்சியில் வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள், மற்றும் அதில் ஒளிபரப்படும் செய்திகளை வாசிப்பவர்கள் மற்றும் செய்திகளில் வரும் “மற்றவர்கள்" நமது கடந்த கால அனுபவங்களை நமக்கு நிகழ்த்திக் காட்டுகிறார்கள் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். உடல், மனம் அல்லது உணர்வு ரீதியாக எதுவும் நடைபெறாது, ஆனால் அது இந்த பிறவியில் நாம் நம்முடன் கொண்டு வந்த செயல்-எதிர்செயல் மாதிரிகளாக இருக்கும் பிராரப்த கர்மவினைகளில் விதைகளாக இருக்கின்றன என்பதை சைவர்கள் அறிந்து இருக்கிறார்கள். அதனால் நாம் தொலைக்காட்சியை நேர்மறையாக பார்க்கும் போது, அதை கர்மவினைகளை சுத்தம் செய்யும் கருவியாக கருதுகிறோம். §§

ஒரு நாளின் முடிவில் துறவிகளுடன் இயல்பாக கழித்த தருணம், அவருக்கு முக்கியமானதாக இருந்தது மற்றும் அதை அவர் எப்போதும் தவறவிட்டது இல்லை. அவருக்கு இளம் துறவிகள் தோசை மற்றும் சாம்பார், சூப் அல்லது சாலட் என்று எளிதில் செரிமானாகம் ஆகும் உணவை இரவு சாப்பிடுவதற்கு கொண்டு வருவார்கள். சரியாக 9:00 மணிக்கு இல்லாமல், 9:01 மணிக்கு எழுந்து நின்று, முகத்தில் பெரிய புன்னகையுடன், ஒவ்வொருவராக எல்லோரையும் கட்டி அணைத்து, “குட்நைட்” என்று சொல்லி தனது குடியிருப்பின் ரெட்வுட் கதவை மூடி, மற்றவர்கள் கண் பார்வையில் இருந்து மறைந்து, இன்றும் துறவிகள் உறங்குவதற்கு பயன்படுத்தும், ஒரு பூட்டன் படுக்கையை தரையில் விரித்து உறங்கிவிடுவார். §§

எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லாத கடல் பகுதிக்கு செலுத்தல் §

1999 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கவாய் தீவில் மூன்று வருடங்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று சுயமாக விதித்துக்கொண்ட நிபந்தனை நிறைவடைய இருந்தது மற்றும் குருதேவாவிற்கு உளவியல் வேதனை அதிகரித்து வருவதை உணர்ந்த துறவிகள், இந்த சிறைவாசத்தை நிறைவு செய்ய ஒரு திட்டம் தீட்டினர். அவர்கள் ஒரு புதுமையான முறையில், அலாஸ்காவிற்கு ஒரு உல்லாசப் பயணக் கப்பலில் பயணம் செய்துக்கொண்டு இன்னர்சர்ச் திட்டத்தை நடத்தலாம் என்று பரிந்துரைத்தார்கள். குருதேவா இந்த திட்டத்திற்கு தனது திருப்தியை தெரிவித்து, 1964 ஆண்டில் தோன்றிய கிரேட் அலாஸ்கா நிலநடுக்கத்தின் காரணமாக லாண்ட் ஆஃப் மிட்நைட் சன் (நள்ளிரவு நேரத்தில் சூரிய வெளிச்சம் இருக்கும் வட ஆர்க்டிக் வட்டத்தின் நிலப்பகுதிக்கு) பகுதிக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட திட்டத்தில் தடை ஏற்பட்டதில் இருந்து, அங்கே செல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்த வந்ததாக அவர் தெரிவித்தது மட்டுமில்லாமல், அங்கே செல்லவும் செய்தார். §§

1999 ஆம் ஆண்டு ஜூன் 18 முதல் 25 வரை, அவருடன் நான்கு துறவிகள் மற்றும் முப்பத்தி எட்டு யாத்திரிகள், ஹாலந்து அமெரிக்கா லைன் நிறுவனத்தின் MS நூர்டாம் கப்பலில் ஒரு வாரம் தங்கி இருந்து, வான்கூவரில் இருந்து வால்டேசுக்கு பயணம் செய்தனர். அவர் ஏழு தசாப்தங்கள் வாழ்ந்து இருந்தார்; அதனால் அவர் அந்த உல்லாச கப்பலில் ஒவ்வொரு நாளும், ஸ்டார்போர்டை பார்த்த வண்ணம் அமைந்து இருந்த ஹட்சன் அறையில் இன்னர்சர்ச் குழுவினரை சந்தித்து தனது வாழ்க்கையில் ஒரு தசாப்தம் பற்றிய தகவலை பகிர்ந்துகொண்டு, தனது ஆன்மீக வேட்கையை அவர்களுடைய வேட்கையுடன் தொடர்புப்படுத்தி, அவர்களை சைவ இந்து சமயத்தின் ஆழத்திற்குள் கொண்டு வந்தார். §§

ஜூன் 25 ஆங்கரேஜ் நகரத்தில், குருதேவா அந்த நாட்டின் முதல் இந்து கோயிலாக ஒரு விநாயகர் கோயிலை திறந்து வைத்தார். இந்து வம்சாவளியினரின் கோயில்களை உள்ளூர் மக்கள், குறிப்பாக அந்த பகுதியை சேர்ந்த இன்யூட் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று குருதேவா விரும்பியதால், அலாஸ்கா நாட்டு ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் சான்றோர்களிடம் இருந்து ஆசிகளை பெறவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பைப் காரியர்ஸ் என்று அழைக்கப்பட்ட அதன் தலைவர்கள் கலந்து கொண்ட சடங்குகளில், ஆங்கரேஜ் இந்து சமூகம் பாடல்கள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் மூலம் கௌரவிக்கப்பட்டனர். அவர்கள் குருதேவாவுடன் அமைதி குழாயை (peace pipe) பகிர்ந்து கொண்டு, அவருக்கு புனிதமான முரசு ஒன்றை வழங்கினார்கள். அதைப்போல கவாய் ஆதீனத்தில் இருக்கும் ‘இறைவன்’ கோயிலுக்கு தங்கள் ஆசிகளை வழங்குமாறு ஹவாய் நாட்டு பூசாரிகளுக்கு குருதேவா அழைப்பு விடுத்தார். §§

இந்த பயணத்தின் மத்தியில், புத்தகக்கடைக்கு செல்லும் பழக்கம் தொடங்கியது. அந்த பழக்கம் மூன்று வருடங்களுக்கு நீடித்து இருந்தது. அவர் அந்த புத்தகக் கடைகளில் ஐம்பது முதல் எண்பது வாசகர்களுடன் பேசி, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து புத்தகங்களில் கையெழுத்திடுவார். அவர் எழுதிய புத்தகங்களின் விற்பனை அமோகமாக இருந்தது என்றாலும், அங்கே புதிய சாதகர்களை சந்திக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்த காரணத்தால், புத்தகக்கடைக்கு சென்று கையெழுத்திடுவது குருதேவாவிற்கு பிடித்து இருந்தது. ஒரு எளிமையான சூழலில் ஒரு சாதாரண வாசகரும் எழுத்தாளருடன் தொடர்பு கொள்ள முடிந்தது, மற்றும் இந்த தொடர்பில் இருந்து சிலர் சீடர்களாக மாறினார்கள். §§

இது அவரது பயணத்தில் ஒரு புதிய அடையாளமாக மாறி, அவர் எங்கே சென்றாலும் அவரது பரிசாக, அவரது ஆலோசனையாக, தன்னிடம் மக்கள் கொண்டு வந்த எல்லா பிரச்சனைகளுக்கும் அவர் வழங்கும் மருந்தாக புத்தகங்கள் விளங்கின. “அது ஒரு நல்ல கேள்வி. அந்த கேள்விக்கான பதில் இந்த புத்தகத்தில் இருக்கிறது,” என்று அவர் சிரித்துக்கொண்டு கூறுவார். “முட்டாள், இந்த விஷயங்கள் புத்தகங்களில் இருக்காது,” என்று அவருடைய குரு யோக சுவாமி பரிகாசம் செய்வார். ஆனால் அவர் அந்த காலத்தில், இந்த புத்தகங்களை பார்த்திருக்கவில்லை!§§

பயணத்தின் மீதும் இன்னர்சர்ச் திட்டத்தின் மீதும், அவருக்கு இருந்த ஆர்வத்தை தொடர்புப்படுத்திய இந்த உல்லாச கப்பல் பயணத்தின் போது, தான் நடனமாடிய காலத்தை நினைவுக்கூரும் விதமாக, மாலை நேரத்தில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியவர்களை ஒப்பனை அறைகளில் சென்று சந்திக்கும் வாய்ப்பு மற்றும் புதிய கோயில்களின் திறப்பு விழா என்று ஒரு மாபெரும் வெற்றியை பெற்றது. §§

கடல் அவரை மீண்டும் அழைத்ததால், குருதேவா அடுத்த வருடமும் கடலில் பயணம் செய்தார். மார்ச் 25 முதல் ஏப்ரல் 4, 2000 வரை அவருடன் ஐந்து துறவிகள் மற்றும் நாற்பத்தி ஒன்பது இன்னர்சர்ச் குழுவினர்கள் போர்ட் லாடர்டேல், புளோரிடா சவுத்தில் இருந்து செயின்ட் கிட்ஸ், மார்டினிக், டிரினிடாட், செயின்ட் தாமஸ், டொமினிகா மற்றும் ஹாஃப் மூன் கே ஆகிய இடங்களுக்கு பயணம் செய்தனர். கரீபியன் தீவுகள் அவரை பல முறை அழைத்து இருந்தது. அங்கிருக்கும் இந்துக்கள் உலகின் மற்ற நாடுகளில் இருந்து விலகி இருக்கிறார்கள், மற்றும் சுவாமிகள் எப்போதும் அதிக தூரம் பயணம் செய்வது இல்லை. §§

தான் அங்கே சென்றால், தனது வருகை அந்த பகுதி முழுவதும் எதிரொலிக்கும் என்பதை அவர் அறிந்து இருந்ததால், இந்த முறை MS வோலன்டாம் கப்பலில் கிளம்பினார்கள். அந்த புதிய கப்பல் நிறுத்தப்பட்டதும், தீவுகள் சிறியதாக தென்படும் அளவிற்கு மிகவும் பெரியதாக இருந்தது. அங்கிருந்த தீவுகளில் அதிக தொலைவில் இருந்த டிரினிடாட் & டொபாகோவில் வசித்த 4,500 இந்துக்களின் பிரத்யேகமான சவால்களை, எந்த குருவும் எதிர் கொள்ளவில்லை என்பதால் குருதேவா அவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஊக்கமளித்தார். §§

image§

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற இன்னர்சர்ச் உல்லாச கப்பல் பயணத்தின் போது, குருதேவா அலாஸ்காவின் முதல் இந்து கோயிலை தொடங்கி வைத்து, அங்கே நடந்த ஹோமத்தில் கலந்துக்கொள்ள அந்நாட்டை சேர்ந்த இன்யூட் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். 2000 ஆம் ஆண்டில் 54 சீடர்கள் பயணம் செய்த உல்லாச கப்பல், கரீபியன் தீவுகள் முழுவதும் பயணம் செய்து, குறிப்பாக டிரினிடாட் தீவில் இருந்த இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்க அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

“அது ஆயிரம் வருடங்கள் நீடித்த இருக்குமாறு கட்டுங்கள்”§

‘இறைவன்’ கோயில் மிகவும் கடினமான திட்டமாக இருந்தது. உலகில் ஏற்பாட்டியலில் இருந்த அச்சுறுத்தல்கள், அந்த கோயில் கட்டுமானத்திற்கு திட்டமிடப்பட்ட மாபெரும் பட்ஜெட்டை அதைப்போன்ற ஒரு சிறிய துறவிகள் குழு தனிச்சையாக ஏற்றுக்கொள்வது அபூர்வம், அதற்கு அத்தியாவசியமான சாஸ்தீரிய புலமைக்கு அதிக பயிற்சி மற்றும் வழிகாட்டலின் தேவை, அது முழுவதும் கைகளால் செதுக்கப்பட வேண்டி இருந்ததால் கட்டுமானத்தில் தேவைப்பட்ட கடினமான விதிகள் என்று அதில் இருந்த கஷ்டங்கள் காரணமாக, அதைப்பற்றி கற்பனை செய்வதே கடினமாக இருந்தது. குருதேவா தனது துறவிகள் சமூகத்திடம் இந்த பொறுப்புக்களை வழங்கும் போது, இந்த பணியை பூர்த்தி செய்வதற்கு இந்த துறவிகளின் தலைமுறை ஒரு குழுவாக செயல்படவேண்டும், இதற்காக அவர்கள் தியாகம் செய்ய வேண்டும், எல்லோரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும், கடினமாக முயற்சி செய்து வளர்ச்சி அடைய வேண்டும் என்பதை அறிந்து இருந்தாரா? இந்த கோயிலுக்காக குருதேவா அதிக முயற்சிகளை மேற்கொண்டு இருந்தாலும், இதன் லௌகீக வெளிபாட்டில் மிகவும் முக்கியமான அடித்தளம் அமைத்தலைப் போன்ற தொடக்க நிலைகளை மட்டுமே அவரால் காண முடிந்தது. §§

பழமையான இந்தியா மற்றும் ஒரு இளமையான ஹவாய் தீவிற்கும் இடையே இருந்த நிலவியல் வேறுபாடுகளுடன் தொடங்கி பல நீளமான மற்றும் முக்கியமான விவாதங்கள் நடைப்பெற்றன. இந்தியாவின் நிலப்பகுதி எழுபது மில்லியன் ஆண்டுகளை எதிர்கொண்டதால், அதன் மேற்பரப்பில் இருந்து பல மீட்டர்கள் ஆழத்திற்கு மண் படிப்படியாக அழிந்து, அடிநிலப்பாறையை வெளிப்படுத்தியுள்ளது. பூமி, மிகப்பெரிய கற்கள், குன்றுகள் முழுவதிலும் மற்றும் மலைத்தொடர்களில் இருந்து வெற்றுப் பாறைகள் வெளிவந்து இருப்பதை எங்கும் காண முடிகிறது. இந்தியா பல பருவங்களை தாங்கி தன்னை சீரமைத்துக் கொண்டுள்ளது. சுமார் ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த அடிநிலைப்பாறை மீது இந்திய கோயில்கள் கட்டப்பட்டுள்ளன, மற்றும் அசையாத மற்றும் அசைக்க முடியாத பாறையின் மீதுள்ள அதன் அடித்தளம் காரணமாகவே, பூகம்பம் அல்லது வெள்ளத்தால் பாதிப்பு அடையாமல், காலத்தைக் கண்டு அஞ்சாமல் அவை நிலைத்து இருக்கின்றன. §§

களிமண் தோல் மற்றும் தளர்வான பாறை அதிகமாக பரவி, இளமையாகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் ஹவாய் தீவில், இந்தியாவில் இல்லாத அனைத்தும் இருக்கின்றன. வெறும் ஐந்து மில்லியன் வருடங்கள் பழமையானதாக இருப்பதால், இந்த தீவின் அடிநிலப்பாறை மேற்பரப்பில் இருந்து 80 முதல் 120 அடிகள் வரை கீழே இருக்கிறது. மேற்பரப்பிற்கு கீழிருக்கும் அடுக்கு மென்மையாக இருப்பதால், இங்கே வலுவான கோயில் கட்ட முடியாது, அதிலும் குறிப்பாக பூவியீர்ப்பு சக்தியின் துணையுடன் நிற்கும் சோழர்கள் வடிவமைத்த கோயில்களை நிச்சயமாக கட்ட முடியாது. படிகம் நிரம்பி, அடர்த்தியாக மிகவும் கடினமான பாறையாக இருந்து, அதன் உறுதி மற்றும் வலிமை காரணமாக கட்டிடம் கட்டுபவர்கள் விரும்பும் கருங்கல்லில் ஒரு குறை இருக்கிறது. அதற்கு குறைவான விறைப்பு வலிமை இருப்பதால், நொறுங்காமல் அதை சிறிதளவு வளைக்கவும் முறுக்கவும் முடியாது. அது தன் அமைப்பு முறையில் உடையக்கூடியதாக இருக்கிறது. 12 அடி நீளத்துடன் இருக்கும் கூரை உத்தரம், தனது நீளத்தில் 1/8 அங்குலம் வளையும் போது, அது உடைந்து கூரையை சாய்த்துவிடுகிறது. §§

கோயில் அஸ்திவாரம் சிறிதும் அசையாமல் அமைப்பது ஒரு பெரிய சவாலாக தொடக்கத்தில் இருந்தது. பூமிக்குள் ஆழமான கடைக்கால்களை அமைக்கும் சிந்தனையை கைவிட்டு, பொறியாளர்கள் இறுதியாக ஒரு விவேகமான வழியை தேடிக்கொண்டனர். அவர்கள் ஒற்றை கல்லில் தயார் செய்த கற்காரை தீவாக (monolithic concrete island) அஸ்திவாரத்தை வடிவமைத்தார்கள். இதை பொறியாளர்கள் ராப்ட் என்று அழைப்பார்கள். மனிதனால் வடிவமைக்கப்பட்ட இந்த கல், இந்தியாவின் அடிநிலைப்பாறையின் நகலாக இருந்தது. பூகம்பம் அல்லது மற்ற இயற்கையின் சக்தியால் கோயில் அரை அங்குலம் கீழே இறங்கினாலும், ராப்ட் முழுமையாக நகர்ந்து, தூண்கள் மற்றும் உத்தரங்களுக்கு இடையே பழைய தொடர்பை தக்க வைத்துக்கொண்டு, பேரழிவை தவிர்க்கிறது. இந்த கற்காரை தீவு, கீழிருக்கும் களிமண் மீது உண்மையில் மிதக்கிறது. §§

ரோமர்கள் காலத்து எரிமலை சாம்பல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, அதிக அடர்த்தியான நிலக்கரி சாம்பலில் தயாரித்த கற்காரையில் ஒரு புதிய ஆர்வத்தை அறிவிக்கும் அளவிற்கு, ராப்ட் அடித்தளத்தை உருவாக்கும் வடிவமைப்புக்கள் வளர்ச்சி அடைந்து இருந்தன. இந்த தொழில்நுட்பத்தின் குருவாக, பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழத்தை சேர்ந்த ஒரு சைவ இந்து பொறியாளர் விளங்கினார். 1999 ஆம் ஆண்டு, நவீன யுகத்தில் மிகப்பெரிய நிலக்கரி சாம்பல் கலவையாக விளங்கி, கான்கிரீட் டுடே பத்திரிகையின் அட்டையில் 'இறைவன்' கோயிலை வெளிப்படுத்திய நிகழ்வுக்கு தேவையான தகவல் மற்றும் பொருட்களை Dr. குமார் மேத்தா என்ற புதுமையான சிந்தனைகள் நிரம்பிய ஒரு ஆன்மா கொண்டு வந்தார். §§

குருதேவா தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 'இறைவன்' கோயில் நீண்டகாலம் நிலைத்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கட்டுமான பணி தொடங்குவதற்கு முன்பாகவே, அது 1,000 வருடங்களுக்கு மேல் நிலைக்க வேண்டும் என்று வற்புறுத்த ஆரம்பித்தார். அந்த கோயில் தொடர்பான ஒவ்வொரு தகவல், ஒவ்வொரு திட்டம் மற்றும் ஒவ்வொரு முடிவும் குருதேவா வழங்கிய அந்த அளவுகோலை ஆலோசித்தது. அந்த அளவுகோல் அவரது பணியும், அவரது சமூகத்தின் பணியும் ஒரு வாழ்நாள் அல்லது இரண்டு வாழ்நாள் நீடித்து இருக்கும் என்பதை அவர் குறிப்பிடும் முறையாகவும், உங்களது வாழ்நாளை கடந்த குறிக்கோளை வைத்துக்கொள்ளுங்கள் என்று துறவிகளுக்கு அவர் வழங்கும் ஆணையாகவும் இருந்திருக்கலாம். §§

அந்த ஒரு ஆணை மடத்தில் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி, துறவிகளின் மனங்கள் மற்றும் திட்டங்களின் நோக்கத்தை விரிவுப்படுத்தி, தங்களுக்காக இல்லாமல் மற்றவர்களின் எதிர்காலத்திற்காக தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். இந்த ஆயிரம் வருடங்கள் விதி நன்கொடை நிறுவல்களுக்கு, வெளியீடுகளுக்கு மற்றும் மேலும் பல விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டது. §§

குருதேவா இந்தியாவிற்கு பயணங்கள் மேற்கொண்ட போது, பல பிரம்மாண்டமான கோயில்கள் கேட்பாரற்று இருப்பதையும், பராமரிக்க போதிய நிதியுதவி இல்லாமல் தவிப்பதையும், போதிய வருமானம் இல்லாமல் பணிபுரிந்த சிறிய பூசாரிகள் குழுவதையும் கவனித்து இருந்தார். இதைப்போன்ற ஒரு நிலை 'இறைவன்' கோயிலுக்கு வரக்கூடாது என்று உறுதியுடன் செயல்பட்ட குருதேவா ஒரு நிரந்தர பராமரிப்பு நன்கொடை நிறுவலை ஸ்தாபனம் செய்து, கோயிலுக்கு நன்கொடையாக வரும் ஒவ்வொரு டாலரில் அரை டாலர் அந்த நிறுவலுக்கு செல்ல வேண்டும் என்று நிர்ணயித்தார். இதன் மூலம் 'இறைவன்' கோயில் எதிர்காலத்தில் பல வருடங்களுக்கு தொடர்ந்து செழிப்புடன் இருப்பதை உறுதி செய்தார். அவரது திட்டத்தில் இந்த கருத்து மையமாக விளங்கியதால், இந்த கோயில் கட்டுமான பணிக்கு திட்டமிடப்பட்டிருந்த $7.2 மில்லியன் செலவுக்கு ஈடாக நிறுவலில் நிதி சேர்ந்ததால் மட்டுமே கோயிலுக்கு பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார். கோயிலுக்காக துறவிகள் மீண்டும் நிதி திரட்ட வேண்டிய அவசியம் இல்லாமல், போதுமான வருமானம் வரும்படியாக இந்த நிறுவல் வடிவமைக்கப்பட்டு இருந்தது.§§

சிவபெருமானின் மூன்று பாகக்காட்சி குருதேவாவிற்கு தோன்றி 24 வருடங்கள் கழித்து, ஆகஸ்ட் 21, 1999 அன்று தனது கோயில் அஸ்திவாரத்தின் மீது கற்காரை ஊற்றப்படுவதை கண்டார். நாற்பது பணியாளர்களின் ஒரு நாள் முழுவதும் பணிபுரிந்து, அடித்தளத்தில் இரண்டு அடி உயர கற்காரையை ஊற்றினார்கள். ஒரு வாரம் கழித்து, அதன் மீது இரண்டாவது இரண்டு அடி உயர அடுக்கு சேர்க்கப்பட்டது. 20 கனரக வாகனங்கள் 108 முறை சுழற்சி பயணங்களை செய்து, 4 அடி ஆழத்துடன் 56 அடிக்கு 117 அடி அளவில் 'இறைவன்' கோயிலுக்கு அதிக கனமான அடித்தளத்தை வைக்கும் அற்புதமான காட்சியை காண குருதேவாவுடன் அந்த தீவில் இருந்து பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். §§

அந்த காலத்தில் குருதேவா அஸ்திவாரத்தின் ஒரு முனையில் கைகளை உற்சாகத்துடன் விரித்துக் கொண்டு, முகத்தில் ஒரு அற்புதமான செயலை செய்த பூரிப்புடன் இருக்கும் ஒருவரிடம் தென்படும் புன்னகையுடன் நின்றுக்கொண்டு இருந்தார். அந்த வருடத்தின் நவம்பர் மாதத் தொடக்கத்தில், தேவர்களிடம் இருந்து தான் பெற்ற இந்த ஊக்கமளிக்கும் தகவலை மின்னஞ்சல் மூலம் துறவிகள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்:§§

'இறைவன்' கோயிலின் அஸ்திவாரத்தில் உற்சாகமாக நடவடிக்கைகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன. அதன் வழியாக ஒளி அதிர்ந்துக்கொண்டு இருக்கிறது. அது பார்ப்பதற்கு ஒரு அற்புதமான காட்சியாக இருக்கிறது. இதை நாங்கள் எப்போதும் எதிர்பார்க்கவில்லை. இப்போது நடப்பது ஒரு அபூர்வமான நிகழ்வாக இருக்கிறது. அதுவே கடவுளின் ஒரு தெய்வீக பண்பைப் போல தோன்றி, பார்ப்பதற்கு அழகாக இருப்பதால், நெருங்கும் போது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இருந்தாலும், அதற்கு இயல்பாக இருக்கும் வடிவமே அதன் வடிவமாக இருந்து, பல வண்ணங்களை கொண்ட வானவில் போன்று, பெரிய அலைகளாகவும் கதிர்களாகவும் ஒளி வீசுகிறது.§§

அஸ்திவாரத்தை பதப்படுத்திய பிறகு, அது ஆய்வு செய்யப்பட்டது மற்றும் Dr. மேத்தாவின் சர்ச்சைக்குரிய உத்தி உண்மை என்று நிரூபிக்கப்பட்டது. 2000 வருடங்களில் முதல் முறையாக, ஒரு மிகப்பெரிய கற்காரை பலகை ரீபார் இல்லாமல் வைக்கப்பட்டது, மற்றும் ஒரு சிறிய விரிசல் அல்லது ஒரு சிறிய பிளவும் இருக்கவில்லை! §§

image§

1980 கள் மற்றும் 1990 களில், குருதேவா உலகின் எல்லா திசைகளுக்கும் தொடர்ந்து பயணம் செய்த போது, ஒவ்வோரு நாட்டில் இருந்த இந்து சமூகத்தின் வரவேற்பை பெற்று, கோயில்களில் உரை நிகழ்த்தி மாணவர்கள் மற்றும் உறுப்பினர்களை ஊக்குவித்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அஸ்திவாரம் அமைக்கப்பட்ட பிறகு, குருதேவா ஒரு புதிய வழக்கத்தை தொடங்கினார். ஒவ்வொரு வாரமும் ‘கடவுள்’ கோயிலில் நடைபெற்ற ஹோமத்திற்கு பிறகு, அவர் அங்கே மடவாசியாக இருந்த புரோகிதரை ஹோமகுண்ட அக்னியில் இருந்து ஒரு கற்பூரத்தை ஏற்ற சொல்வார். அதன்பிறகு எல்லோரும் ‘இறைவன்’ கோயிலுக்கு ஒரு பெரிய அணிவகுப்பாக நடந்து வருவார்கள். ‘இறைவன்’ அஸ்திவாரத்திற்கு வடக்கே இருந்த யாகசாலையில், அந்த கற்பூரத்தைக் கொண்டு குருதேவா ஒரு சிறிய ஹோமத்தை நடத்துவார். அதன் பிறகு, ஹோமத்தில் தெய்வீக ஆற்றலை ஆவாகனம் செய்த கும்பத்துடன், எதிர்காலத்தில் அந்த இடத்தில் தோன்றவிருந்த ‘இறைவன்’ கோயிலை கற்பனை செய்துகொண்டு, கும்பத்தில் இருக்கும் புனிதமான நீரை ஆங்காங்கே தெளித்துக்கொண்டு, குருதேவா தலைமையில் எல்லோரும் கோயில் அஸ்திவாரத்தை மூன்று முறை பிரதட்சணம் செய்து வந்தனர். ஒரு சிறிய செடியை கவனமாக வளர்ப்பதைப் போன்று, அவர் தன் சூட்சுமமான சக்திகளை பயன்படுத்தி வளர்ச்சி அடைந்து வந்த அந்த கோயிலுக்கு ஊட்டம் அளித்து வந்தார். §§

அஸ்திவாரம் அமைப்பதற்கு முன்பாக அவர் நான்கு வருடங்களுக்கு பின்பற்றி வந்த பழக்கத்துடன், இது புதிய இணைப்பாக சேர்ந்து கொண்டது. ‘கடவுள்’ கோயிலில் அதிகாலை பூஜை நடந்துமுடிந்த பிறகு, அவர் அவ்வப்போது துறவிகள் மற்றும் உறுப்பினர்களை ‘இறைவன்’ கோயிலுக்கு வழிநடத்தி சென்று, கோயிலுக்கு வடக்கே தற்போது தட்சிணாமூர்த்தி அமைந்து இருக்கும் ஆலமரத்திற்கு பின்னால் பதிக்கப்பட்ட சிறிய விநாயகருக்கு ஆரத்தி எடுத்ததும், ‘இறைவன்’ கோயிலின் இதயமாக, நிலத்திற்கு கீழே எதிர்காலத்தில் சிவலிங்கம் வைக்கப்படவிருந்த இடத்தை குறித்துக் காட்டிய சிறிய பள்ளத்தை சுற்றி, அவர் ஒரு ஊர்வலத்தை வழிநடத்தி சென்றார். இந்த சிறிய புனிதமான பயணங்களின் போது, அவர் பலவருடம் முன்பாக ஸ்தாபனம் செய்யப்பட்ட ‘கடவுள்’ கோயிலில் இருந்து ஆன்மீக சக்தியை எதிர்கால ‘இறைவன்’ கோயிலுக்கு உணர்வுடன் அனுப்பி, எதிர்காலத்தில் அந்த இடத்தில் கம்பீரமாக நிற்கவிருந்த கோயிலை கற்பனை செய்து பார்க்க அவர் தனது சீடர்களுக்கு பயிற்சி அளித்தார். “கற்பனை செய்து, அதை நிகழ்த்திக் காட்டுங்கள்,” என்றும் அவர் எல்லோரிடமும் விருப்பத்துடன் கூறுவார். ஒரு நாள் தூல உலகில் உண்மையாக இருக்கப்போவதைப் போன்று, அந்த கோயில் தன் ஆரம்பக்கட்ட நிலையிலும் அவருக்கு காட்சி அளித்தது. §§

மே 2001, குருதேவா அடிக்கல் நாட்டு விழாவில் பங்குபெற்றார். இந்த நிகழ்ச்சியை நிர்வகிக்க இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட, பிரதான கட்டிட கலைஞர் வி. கணபதி ஸ்தாபதி சடங்குகள் முடிந்த பிறகு, அங்கே கூடியிருந்த அன்பர்கள் கூட்டத்தில் பேசினார்:§§

குருதேவா பல வருடங்களுக்கு முன்பாக, அமெரிக்கா வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு முன்பு நான் இங்கே வந்ததில்லை.... நான் இங்கே வந்து வட அமெரிக்காவில் இருந்து கோயில்களை ஸ்தாபனம் செய்ய உதவி செய்யவேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். §§

நான் இங்கே ஒரு உண்மை சம்பவத்தை தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியாவில் இருக்கும் பிரபலமான நாடி சாஸ்திர ஜோதிடர்களைப் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள். அவர்களிடம் தீர்க்கதரிசனத்துடன் கூடிய ஒலை சுவடிகளின் மிகப்பெரிய தொகுப்பு இருக்கும். நான் குருதேவாவை சந்திப்பதற்கு முன்பாக நான் ஒரு நாடி ஜோதிடரை சந்தித்தேன். அவர் எனது நாடி சுவடிகளை படித்து: “புகழ்பெற்ற சோழ பேரரசரான இராஜராஜ சோழர் மீண்டும் பிறவி எடுத்துள்ளார். அவர் உயரமாக நரைத்த முடியுடன் இருப்பார். அவர் விரைவில் உங்களை வந்து சந்தித்து, மேற்கு நாடுகளுக்கு சென்று அங்கே கோயில்களை கட்டுமாறு உங்களிடம் கேட்டுக்கொள்வார்,” என்று கூறினார். அதன் பின்னர் நான் குருதேவாவை சந்தித்து, அவர் இராஜராஜ சோழனின் மறுபிறவி என்பதை தெரிந்துகொண்டேன். அதனால் இந்த கோயில் ஒரு விசேஷ முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. தெற்கு திசையை நோக்கி அமைந்து இருக்கும் புனிதமான மூன்று கோயில்களில் இதுவும் ஒன்றாக இருப்பதால், இந்த கோயில் முக்தி வழங்கும் சக்தியுடன் இருக்கிறது. §§

image§

ஐக்கிய நாடுகள் சபையில் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற மில்லினியம் சம்மிட்டில் உலகத் தலைவர்களின் மாபெரும் கூட்டம் கூடியிருந்தது, மற்றும் பொதுசபையில் முதல் முறையாக மதத்தலைவர்கள் பங்குபெற்றார்கள். குருதேவா 1,200 தலைவர்கள் முன்பாக அமைதிப் பற்றி உரை நிகழ்த்தி, ஶ்ரீ சின்மோய் அவர்களிடம் இருந்து மதிப்புமிக்க உ தன்ட் பரிசைப் பெற்றார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

உள்நாட்டிலும் உலக அளவிலும் கிடைத்த அங்கீகாரம் §

செப்டம்பர் 1999 மொரீஷியஸ், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு குருதேவா பயணம் செய்து, எட்டு வருடங்களாக அவரை தரிசிக்காத உறுப்பினர்களை சந்தித்தார். அவர் தேசிய தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்தித்து, மொரீஷியஸ் நாட்டில் எதிர்காலத்தில் பிரதான ஆன்மீக தொடர்பாக வளர்ச்சி பெறவிருந்த தனது ஆன்மீக பூங்காவின் அலங்கார பொருளாக, புதிய பஞ்சமுக கணபதி மண்டபத்தை திறந்து வைத்தார். §§

ஒரு வருடம் கழித்து, ஆகஸ்ட் மாத இறுதியில், ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் டாக் ஹம்மர்ஸ்க்ஜோல்ட் அரங்கத்தில், ஶ்ரீ சின்மொய் அவர்களிடம் இருந்து உ தன்ட் அமைதிப்பரிசைப் பெற்றார். இந்த பரிசை அதற்கு முன்னர் தலாய் லாமா, நெல்சன் மண்டேலா, மிக்கைல் கோர்பச்சேவ், போப் ஜான் பால் II மற்றும் அன்னை தெரேசா ஆகியோர் பெற்று இருந்தனர். §§

சில நாட்கள் கழித்து, குருதேவாவும் அவருடன் பயணம் செய்த மூன்று துறவிகளும், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நடைபெற்ற சமய மற்றும் ஆன்மீக தலைவர்களின் மில்லினியம் வேர்ல்ட் பீஸ் சம்மிட்டில் கலந்து கொண்டனர். குருதேவா அருகில் இருந்த வால்டோர்ஃப்-அஸ்டோரியா ஹோட்டலில், எல்லா மதங்களில் இருந்தும் வந்திருந்த 1,200 வலுவான ஆன்மீக குழுவில் உரை நிகழ்த்தி, “மன்னிப்பு மற்றும் சமரசம்" பற்றி பேசினார் மற்றும் “உலக அமைதிக்கு, முதலில் உள்நாட்டுப் போரை நிறுத்துங்கள்,” என்ற தலைப்பில் தனது ஐ.நா. உரையின் சுருக்கத்தை வழங்கினார். §§

அவர் அக்டோபர் 18 அன்று கவாய் திரும்பிய போது, அந்த தீவிலும் உலகின் மற்ற பகுதிகளிலும் அவர் செய்த சாதனையை அறிவிக்க 350 குடிமக்கள், மாவட்ட மற்றும் அரசு அலுவலர்கள் கூடியிருந்தார்கள். மாரியட் ஓடட்டலில் இருந்த டெர்ரஸ் ரெஸ்டாரன்ட்டில், மேயர் மேரியன் குசாகா மற்றும் மாவட்டக்குழு தலைவர் ரொன் கவுச்சி ஒரு விருந்தை ஏற்பாடு செய்து இருந்தனர். தங்கள் வாழ்க்கை மற்றும் தங்கள் தீவின் மீது குருதேவா ஏற்படுத்திய குறிப்பிட்டத்தக்க மாற்றங்கள் மற்றும் அவர் பல வழிகளில் தங்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தை பற்றியும், அந்த தீவின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஹவாய் ஆளுநர் கயீடானோவின் பிரதிநிதி ராய் நிஷிடா சிறப்பாக உரையாடினார்கள். “விநோதமான உடைகள் மற்றும் நீளமான தாடிகளுடன் இருந்த இந்த துறவிகளை சந்தித்த போது, அவர்கள் யார் என்று அல்லது அவர்கள் எதற்காக இங்கே இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. மேலும் தகவலை நான் அறியவும் விரும்பவில்லை. அதன் பிறகு தீவில் நடைப்பெற்ற “விஷன் குரூப்" கூட்டத்தின் நான் அவர்களைப் பற்றி, குருதேவா எவ்வாறு செயல்படுகிறார், நாம் எல்லோரும் “கவாயினன்ஸ்" என்ற சிந்தனையை நமக்குள் தூண்டிவிட்டதை பற்றி நான் தெரிந்துகொண்டேன். நான்கு வருடங்கள் பிறகு, அவர் என் வாழ்க்கையை மாற்றி அமைத்தது மட்டுமில்லாமல், முதிர்ச்சி பெற்ற எனது இன்றைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மனிதராக இருக்கிறார் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடிகிறது,” என்று தனக்கு முன்பு இருந்த தவறான எண்ணத்தைப் பற்றி ரான் கவுச்சி ஒரு அற்புதமான உரை நிகழ்த்தினார். §§

அரசியலில் நடுநிலைமையுடன் (அவரது துறவிகள் என்றுமே வாக்கு அளித்தது இல்லை, ஆனால் யார் தேர்ந்து எடுக்கப்பட்டாலும் அவருக்கு ஆதரவு அளித்தனர்) இருக்கும் குருதேவாவின் உறுதியான கொள்கையை, அரசிடமிருந்து விசேஷமான சலுகைகளை எதிர்பார்க்காமல், எப்போதும் எதையும் பெறாமல் தொடர்ந்து வழங்கவேண்டும் என்று தனது துறவிகள் மற்றும் சம்சாரி உறுப்பினர்களுக்கு அவர் வழங்கிய அறிவுரைகளை கவாய் தீவின் தலைவர்கள் பாராட்டினார்கள். §§

பழுப்பு நிறக்கண்களைக் கொண்ட அமெரிக்க குரு ஹவாயில் ஸ்தாபனம் செய்யும் பாரம்பரிய இந்து மடம் அறிவு, அதிகாரம், செல்வாக்கு மற்றும் உத்வேகத்தின் மூலமாக இந்து உலகம் முழுவதும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு வளர்ச்சி பெறும் என்று யார் எதிர்பார்த்து இருப்பார்கள்? கவாயின் இந்து மடாலயத்திற்கு இருந்த ஒரு சாத்தியமில்லாத தோற்றம் மற்றும் அதன் தூய்மை மற்றும் நம்பகத்தன்மையால் ஈர்க்கப்பட்ட இந்து சுவாமிகள், தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் பாராட்டுதலை பெற்று அது ஒரு புகழ்பெற்ற புண்ணிய தலமாக மாறியது. கடந்தகால வேதனைகளை இந்து சமயத்தால் எவ்வாறு தாங்கிக்கொள்ள முடியும் என்பதற்கு குருதேவாவின் மடம் மற்றும் சமூகம் ஒரு முன் உதாரணமாக விளங்கியது. ஹவாய் தீவில் சனாதன தர்மம் செழிப்பாக இருந்தால், அதனால் இந்தியாவிலும் செழித்து இருக்க முடியுமா? அவர் தனது முற்பிறவியில் சுவாமி விவேகானந்தராக அல்லது இராஜராஜ சோழராக இருந்ததாக கற்பனை கதைகள் ஒருபுறம் இருக்க, அவர் சைவ சமயத்தை காக்க வந்த சிவபெருமானின் அவதாரம் என்ற குறிப்புக்களும் உள்ளன. அத்தகைய பாராட்டைக் கேட்கும் போது, குருதேவா முகத்தில் புன்னகையுடன் அமைதியாக இருப்பார். §§

இதைப்பற்றி பெங்களூரில் இருக்கும் ஶ்ரீ கைலாஷ் ஆசிரம மகாசமஸ்தான மடத்தின் தலைவர் ஜெயேந்திர புரி சுவாமி வழங்கும் குறிப்பு: §§

சிவாய சுப்பிரமுனியசுவாமி ஒரு அபூர்வமான பிறவியாக இருக்கிறார். ஒருவர் தான் பிறந்த நாட்டிற்கு தொடர்பில்லாத ஒரு சமயத்தைப் பற்றி கற்றுக்கொண்டு அதை பின்பற்றுவது மட்டுமல்லாமல் ஒரு அயலாராக இருந்துக்கொண்டு இந்து சமய முன்னேற்றத்தில் அதிகம் பங்களிப்பது வியக்க வைப்பதாக இருக்கிறது. ஒரு இந்து எப்படி ஒரு இந்துவாக இருக்கவேண்டும் என்று அவர் கற்றுத் தருகிறார். தேவர்களின் படைத்தலைவராக இருக்கும் முருகப்பெருமான், சிவாய சுப்பிரமுனியசுவாமியாக அவதாரம் எடுத்து இருப்பதாக ஞானோதயம் பெற்ற எனது குரு திருச்சி சுவாமி நூறு முறைக்கு மேல் சொல்லியிருக்கிறார். “இதைப்போன்ற ஒரு சிறப்பான படைப்பை இந்தியாவில் இருக்கும் யாராலும் வழங்க முடியவில்லை,” என்று குருதேவா எழுதிய புத்தகங்கள் பற்றி திருச்சி சுவாமி தனது கருத்தை தெரிவித்தார். §§

மாஸ்கோ சர்வதேச மாநாட்டின் போது கிரெம்ளின் மாளிகையில் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை ஓதி புகழ்பெற்ற சிருங்கேரி பீடத்தின் சுவாமி பரமானந்த பாரதி, அதே கருத்தை எதிரொலித்தார்: §§

உலகெங்கும் இருக்கும் இந்துக்களை ஊக்குவிப்பதில் குருதேவாவிற்கு ஈடு இணையாக யாரும் இல்லை. அவர் ஒரு முழுமையான சிவபக்தராக இருந்தார், ஆனால் அவர் அதில் சிறிதளவும் வெறியுடன் இருந்ததில்லை. இந்து சமயத்தைப் பற்றிய அவரது கண்ணோட்டம் முழுமையாக, அவரது அணுகுமுறை யதார்த்தமாக, அவரது அன்பு எல்லோருக்கும் பொதுவாக, புனிதமாக, ஆறுதல் அளிப்பதாக மற்றும் தடுக்க முடியாததாக இருந்தது. இவ்வளவு ஒரு முழுமையான மனிதரை நான் பார்த்ததில்லை. §§

நியூயார்க்கின் சுவாமி புவா ஜி மகாராஜ் வழங்கும் குறிப்பு:§§

இந்த மகான் உலகெங்கும் சைவ சித்தாந்தத்தின் உயர்வான சாரத்தை மிகவும் சுருக்கமாக பரப்பியுள்ளார். இது முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்த ஒருவருக்கு எப்படி சாத்தியமாகும்? இதற்கு பூர்வ ஜென்ம பந்தம் மட்டுமே காரணமாக இருக்க முடியும். மேற்கத்திய நாடுகளில் இருக்கும் இந்துக்களின் மத்தியில் அவர் ஏற்படுத்திய ஆன்மீக விழிப்புணர்வு வியக்க வைப்பதாக இருக்கிறது. மிகவும் எளிமையான முறையில் அதிக சிக்கலான கொள்கைகளை விளக்க குருதேவா பயன்படுத்திய பிரத்யேகமான முறைகள் திகைக்க வைப்பதாக இருந்தது. மிகவும் சிக்கலான கோட்பாடுகள் அவருக்கு மிகவும் எளிமையான மற்றும் மிகவும் சுலபமான தகவல்களாக தோன்றியது என்றாலும், அவை அதே வலிமை மற்றும் சாரத்துடன் இருந்தன. §§

image§

குருதேவா தனது புத்தகங்களை எழுதுவதில் அதிக முயற்சி மேற்கொண்டார் மற்றும் தனது படைப்புக்கள் ஈடு இணையற்றது என்பதை அவர் அறிந்து இருந்தார். உலகெங்கும் புத்தகங்களில் கையெழுத்திடும் நிகழ்ச்சிகளை நடத்தி வாசகர்களிடம் புத்தகங்களை அறிமுகப்படுத்த, பார்டர்ஸ் மற்றும் பார்ன்ஸ் & நோபல் போன்ற புத்தகக்கடைகளும் அவருக்கு அழைப்பு விடுத்தன. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

வேதனை நிறைந்த கர்மவினை §

டிசம்பர் 5, 2000 அன்று, நதிக்கு அப்பால் மடம் வாங்கிய புதிய நிலத்தை காண குருதேவா, தனது மூன்று மூத்த துறவிகளுடன் நீண்ட தூரம் நடந்து சென்று அருகில் இருந்த ஒரு சிறிய குன்றின் உச்சிக்கு ஏறினார். அந்த குன்று செங்குத்தாக இருந்தது, மற்றும் திரும்பும் போது குருதேவாவிற்கு சறுக்கியது. அவர் கீழே விழவில்லை என்றாலும், அந்த அதிர்வு அவருடைய பின் முதுகில் காயத்தை ஏற்படுத்தியது. அவர் தீவிர வேதனையில் இருந்ததால், காப்பாவில் கடற்கரைக்கு அருகில் மடத்திற்கு சொந்தமாக இருந்த ஹாலே மகாய் என்ற ஒரு ஒதுக்குபுறமான பண்ணையில் தங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அது கடலில் இருந்து 150 அடிகள் தூரத்தில் மற்றும் மடத்தில் இருந்து ஐந்து மைல் தூரத்தில் அமைந்து இருந்தது. அவர் அந்த இடத்தில், தனக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள் மற்றும் பிணி நீக்கும் மருத்துவர்களுக்கு அருகில் இருக்கும் நோக்கத்துடன், அடுத்த நான்கு மாதங்களுக்கு தனது வழக்கமான பொறுப்புக்களில் இருந்து விலகி இருந்தார். தினமும் அவருக்காக மதியம் மற்றும் இரவு வேளைகளில், மடத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று துறவிகள் வாகனத்தில் சூடான உணவை கொண்டு வருவார்கள் மற்றும் அவருக்கு சேவை செய்யும் விருப்பத்துடன் மூன்று துறவிகள் அவருடன் தங்கி இருந்தார்கள். அவர்கள் சற்குருவுடன் தங்களுக்கு கிடைத்த தனிப்பட்ட நேரத்தில் கதைகள் கூறி மகிழ்ச்சியாக இருந்தார்கள். §§

ஐரோப்பிய இன்னர்சர்ச் பயணம் செல்ல சில மாதங்களே மீதம் இருந்த நிலையில், அவர் தனக்கு என்று ஒரு குணமடையும் திட்டத்தை வகுத்துக்கொண்டு, தனது உடலை குணப்படுத்த தினமும் கடுமையாக உழைத்தார். குருதேவா 73 வயது நிரம்பிய முதியவர் என்பது ஒரு புறமிருக்க, தான் சிகிச்சை அளித்த பெரும்பாலான மக்களுக்கும் சில விளையாட்டு வீரர்களுக்கும், பல வருடங்களுக்கு உடல்சோர்வை ஏற்படுத்தும் ஒரு காயம், சில மாதங்களில் குணமடைவதை தான் முன்னெப்போதும் பார்த்தது இல்லை என்று அவரது சிகிச்சை அளித்த பிலாடிஸ் தெரபிஸ்த் பிற்காலத்தில் தெரிவித்தார். குணமடைவதற்கு முன்னரும் பின்னரும் எடுக்கப்பட்ட ஊடுகதிர் அறிக்கைகள் நம்பமுடியாத அற்புதத்தை எடுத்துரைத்தன. §§

அந்த சில மாதங்களின் போது குருதேவா அந்த காயத்தில் இருந்து மட்டும் குணமடையாமல், தனது மனதை துடிப்புணர்வுடன் வைத்துக்கொண்டு, தொகுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த தனது குழுவினருடன் செயல்பட்டு வந்தார். ஆகஸ்ட் மாதம் இன்னர்சர்ச் குழுவுடன் பயணம் செல்லும் முன்னர், தனது பிரதான பயிற்சி வகுப்பின் முத்தொகுப்பில் மூன்றாவது மற்றும் இறுதியான புத்தகமான, லிவிங் வித் சிவா புத்தகத்தை ஒரு சிறிய மென்னட்டையாக (பேப்பர் பேக்) இல்லாமல், 1000 பக்கங்களுடன் இன்னொரு தலைசிறந்த படைப்பாக நிறைவு செய்யவேண்டும் என்பதை அவர் தனது குறிக்கோளாக அமைத்துக் கொண்டார். அவர் தனது மனம் மற்றும் தனது உடலை வலுவாக இயக்க ஆரம்பித்ததும், குறிக்கோள்களை அடைவது எளிதானதால், அந்த புத்தகம் ஜூலை மாதம் அச்சகத்திற்கு சென்றது மற்றும் ஆகஸ்ட் மாதம் பயணம் செல்ல அவருடைய உடல் தயாரானது. §§

வட ஐரோப்பிய கடல்களில் பயணம் §

அந்த சமயத்தில் கப்பல்கள் குழுவில் புதிதாக 780 அடி நீளத்துடன் 2,000 பயணிகள் செல்லும் அளவிற்கு பெரிதாக இருந்த, புதிய MS ஆம்ஸ்டர்டாம் என்ற இன்னொரு மிகப்பெரிய கப்பலில் எழுபத்தி இரண்டு இன்னர்சர்ச் குழுவினருடன், ஆகஸ்ட் 10-22, 2001 இன்னர்சர்ச் ஐரோப்பா பயணம் தொடங்கியது. அந்த கடல் பயணத்திற்கு முன்னர், குருதேவா லண்டன் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு பயணம் செய்து, அங்கிருந்த தமிழ் சமூகங்களை சந்தித்துப் பேசினார். தொலைதூரத்தில் இருந்து வந்திருந்த குருவை வரவேற்க ஹெல்சின்கி, St. பீட்டர்ஸ்பர்க் மற்றும் வார்ன்முண்டே என்று ஒவ்வொரு துறைமுகத்திலும் சாதகர்களின் குழுவினர் காத்து இருந்தனர். ஒஸ்லோ மற்றும் ஸ்டாக்ஹோம் நகரங்களில் இருந்த சிறிய தமிழ் சமூகங்கள், தங்கள் கோயில்களில் உரை நிகழ்த்த குருதேவாவை அழைத்து வந்தனர். குருதேவா கப்பலுக்குள் ரஷ்ய சீடர்களை அழைத்து வந்து, நெப்டியூன் லவுஞ்சில் ஒரு சீடருக்கு நாமகரண சம்ஸ்காரத்தை நடத்தி வைத்தார். §§

image§

குருதேவா தனது இறுதியான மற்றும் நீளமான இன்னர்சர்ச் கடல் பயணத்தின் போது, எழுபத்தி இரண்டு சீடர்களுடன், வடக்கு ஐரோப்பா மற்றும் ரஷ்யா பயணம் செய்து, இந்து சமூகங்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தி டென்மார்க் நாட்டில் ஒரு பெரிய கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இந்த பயணத்திற்கு கப்பலில் கூடியிருந்த இந்துக்கள் மற்றும் அர்த்த-இந்து சாதகர்களின் சர்வதேச குழு தனியாக தென்பட்டு, அழகான புடவைகள் மற்றும் வேஷ்டிகளில் தியான மண்டபத்தை நோக்கி நடந்து செல்ல, மற்ற எல்லோரும் உணவு அருந்துவது, சூதாடுவது, நீந்துவது பொருட்களை வாங்குவது மற்றும் பல மணிநேரத்திற்கு சூரிய ஒளியில் அமர்ந்து இருப்பது என்று தங்கள் பொழுதை போக்கிக்கொண்டு இருந்தனர். குறிப்பாக இரவு நேரத்தில் எல்லோரது கவனமும் குருதேவாவின் மீது அமைந்து இருந்தது. துறவிகள் குழு தன்னை பின்தொடர, ஐந்து நட்சத்திர உணவு அறைக்குள் நுழைந்து, இரண்டு அடுக்கு படிக்கட்டு வழியாக இறங்கி செல்வது அவருக்கு பிடித்து இருந்தது. தினமும் இரவு நேரத்தில் நேர்த்தியாக காவி உடை அணிந்த குரு தங்களுக்கு மத்தியில் வந்து அமர்வதை பார்த்த ஆயிரக்கணக்கான பயணிகள், உணவு அருந்துவதை நிறுத்தி, தனக்கு அருகில் இருந்தவரிடம், “யார் இவர்?” என்று ஜாடையாக பேசிய போது, அந்த அறையில் நிலவிய கூச்சல் மறைந்து திடீரென்று மயான அமைதி நிலவியது. அவர் ஒரு இருக்கையில் அமர்ந்ததும், விலையுயர்ந்த பீங்கான் மீது ஒரே சமயத்தில் கத்திகள் மற்றும் முள்கரண்டிகள் தங்களது வேலையை தொடங்கியதும் ஏற்பட்ட கடகட ஒலியால், அறையில் இருந்த அமைதி குலைந்தது. “நீங்கள் இந்த ஐந்து நட்சத்திர கப்பல்களில் எதற்காக பயணம் செய்கிறீர்கள்?” என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்ட போது, “இதுவரை ஆறு நட்சத்திர கப்பல்கள் அறிமுகமாகவில்லை,” என்று அவர் அமைதியாக பதில் அளித்தார். §§

கடல் பயணம் கோபேன்ஹேகனில் நிறைவடைந்த பிறகு, குருதேவா சுழல்விசிறி மூலம் இயங்கிய ஒரு விமானத்தில் தனது மடவாசியுடன் டென்மார்க்கின் வடக்கு முனைக்கு சென்று, பிராண்டே நகரத்தில் ஒரு அம்மன் கோயிலுக்கு அடிக்கல் நாட்டி, ஹெர்நிங் நகரத்தில் தனியாக இருந்த விநாயகர் கோயிலில் நடைபெற்ற ஒரு திருவிழாவில் அந்த ஊர் இந்துக்களுடன் கலந்து கொண்டார். அவரை பலவீனப்படுத்திய முதுகுக் காயம் மற்றும் அவர் அறியாமல் அவருக்கு தோற்றி இருந்த நோயின் காரணமாக, குருதேவாவிற்கு அந்த பயணம் ஒரு சவாலாக இருந்தது. இருந்தாலும், அவர் எப்போதும் புகார் கூறாமல், உற்சாகமாக அடுத்த அனுபவத்தை பெறுவதற்கு தயார் நிலையில், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம் செய்தார். அவர் இன்னும் சில மாதங்கள் தான் வாழப் போகிறார் என்பது அவருக்கும் தெரியாது, வேறு யாருக்கும் தெரியாது. §§

குருதேவா ஹட்சன் அறையில் நடத்திய தினசரி வகுப்புக்களில் நன்றியுணர்வு பற்றிய பாடங்கள் உட்பட, எங்கும் இறைவனை காணுதல், இயமங்கள் மற்றும் நியமங்கள், சாதனா, குடும்பத்துடன் சேர்ந்து இருத்தல், குருவின் சக்தி, நந்திநாத சூத்திரங்கள், இணக்கமின்மை மீது முற்றிலும் சகிப்புத்தன்மையற்று இருத்தல், மதத்தின் தேவை, தவத்தின் வலிமை மற்றும் இந்து சமயத்திற்கு வலுவாக ஆதரவு அளித்தல் என்று பலவிதமான தொகுப்புக்களில் பாடம் நடத்தினார். அவருக்கு கேள்வி-பதில் நேரம் பிடித்து இருந்தது மற்றும் அவர் எல்லோரது சந்தேகங்கள் மற்றும் கவலைகளை அமைதியாக எதிர்கொண்டார். அவர் தனது சிற்றறையில், துறவிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து துறவிகளுக்குள் வலுவான தொடர்பை ஏற்படுத்தியதோடு தினசரி நிகழ்வுகளை, விநோதமான நிகழ்வுகளை, திட்டங்களில் உள்ள மாற்றங்களை, ஒருங்கிணைத்தார் மற்றும் சோர்வாக இருந்த கால்களை ஒரு துறவி முன்வந்து தேய்த்து விடுவதற்காக அமைதியாக காத்து இருந்தார். §§

வாழ்க்கையில் மிகவும் உயர்வான தருணம் §

வடக்கு ஐரோப்பாவில் பல நாடுகளுக்கு மேற்கொண்ட கடினமான பயணத்தில் இருந்து குருதேவா திரும்பிய சில வாரங்களில், அக்டோபர் 6, 2001 அன்று அவருக்கு தீவிர இரத்த சோகை ஏற்பட்டதால், அவர் வில்காக்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மூன்று நாட்கள் தங்கியிருந்த போது, அவரது பெருங்குடல், சிறு குடல் மற்றும் மூளையில் முத்திய நிலையில் புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் தெரிந்துகொண்டார்கள். அதன் பிறகு குருதேவா ஹாலே மகாய் திரும்பினார் மற்றும் அடுத்த வாரத்தில் கவாய், கலிபோர்னியா மற்றும் சியாட்டிலில் இருந்த மருத்துவர்கள் குழு, பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து, அவர் இனி அதிக நாட்கள் உயிருடன் இருக்கப்போவதில்லை என்பதை தெரிவித்தனர். §§

அவர் சில நாட்கள் சிந்தனை செய்த பிறகு, அக்டோபர் 16 அன்று, தனது மூத்த துறவிகளை அழைத்து தான் இறக்கும் வரை விரதம் இருக்கப்போவதாக தெரிவித்தார். அவர் பாரம்பரிய முறைப்படி உயிர் துறக்கும் பிரயோபவேஷத்தை முன்பு தனது சீடர்களுக்கு பாடம் புகட்டி இருந்தார். பல வாரங்கள் மற்றும் மாதங்களுக்கு மருத்துவ உதவிகளை தவிர்த்து, யோகியின் உயிர் உணர்வுடன் பிரிந்து, திட்டமிட்ட சீர் குலைவின் மூலம் சுயநினைவை இழக்கும் அந்த கடினமான ஒழுங்குமுறையை, அவர் தற்போது பின்பற்றவிருந்தார். அவர் வாழ்க்கையின் முக்கியமான தருணமாக மரணத்தை தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார் என்பதால் துறவிகள் அவரது முடிவை கண்டு அதிர்ச்சி அடையவில்லை. புற்றுநோயால் அவதிப்பட்ட ரமண மகரிஷியைப் போன்ற மற்ற சிறந்த ஆன்மாக்களும், இந்த வழியில் உணர்வுடன் தனது உயிரை துறந்ததை அவர்கள் நினைவுகூர்ந்தார்கள். §§

குருதேவா தான் எடுத்த முடிவு உணர்ச்சிவசப்படாமல் பின்பற்றினார். இந்த முறையில் உபவாசம் இருந்தவர்கள் எத்தனை மணிநேரங்கள் உயிருடன் இருந்தார்கள் என்பதை அவர் தெரிந்துகொண்டு, “அப்படியென்றால், இருபத்தி நான்கு நாட்களில் எல்லாம் முடிந்துவிடும். அதனால் நான் இனி உங்களுக்கு இருபத்தி நான்கு மணி நேரமும் சேவை செய்ய தயாராக இருக்கிறேன்,” என்று கூறினார். தினமும் இருபத்தி நான்கு மணி நேரம் மட்டும் விழித்து இருக்காமல், இனி துறவிகளுடன் இருபத்தி நான்கு மணி நேரமும் இருப்பேன் என்று சொல்லி அவர்களை அவர் சமாதானம் படுத்த முயற்சி செய்து கொண்டு, மற்றவர்கள் செய்த உபவசாத்தை அவரும் தொடர்ந்தார். “நீங்கள் இப்போது இளமையாக இருப்பதால், இது வாழ்க்கையில் ஒரு அற்புதமான தருணம் ஆகும்,” என்று அவர் குறிப்பிட்டார். இருந்தாலும் அந்த முக்கியமான ஒரு சில நாட்களின் போது, அவர்களின் உலகம் தலைகீழாக மாறி, அவர்களின் வாழ்க்கையும் மிகப்பெரிய மாற்றத்தை பெற்றது. §§

16 ஆம் தேதி மாலை நேரத்தில் அவர் மடத்திற்கு திரும்பிய போது, துறவிகள் அவரது மஹோகனி அறையில் ஒரு விசேஷமான படுக்கையை விரித்து இருந்தார்கள். வரவிருந்த வாரங்களில், அவருடைய சொந்த இறுதி மகாபயணம் மிகவும் கடினமான பணியாக இல்லை, அது மடவாசிகள் மனதில் வேதனையாக இருந்தது. அவர்கள் வேதனைக்கு ஆறுதல் அளிக்கும் பொருட்டு, அவர் அவர்களுக்கு உறுதி அளித்து, அரவணைத்து, ஊக்கம் மற்றும் ஆறுதலை வழங்கினார். யாரும் எந்த குறையும் கூறவில்லை. “நடப்பது அனைத்தும் நன்மைக்கே. நடப்பது அனைத்திற்கும் காரணம் இருக்கிறது,” என்று அவர் ஒரு சமயத்தில் மெதுவாக பேசினார். §§

அவர் தனது உபவாச படுக்கையில் இருந்துக்கொண்டு, தனது மூன்று வாரிசுகளுக்கு குரு தீட்சை வழங்கி, அத்தகைய சூழ்நிலைகளுக்கு தேவையான முக்கியமான ஆவணங்களில் கையொப்பமிட்டார் என்றாலும், வெளியில் இருந்து பார்ப்பதற்கு எளிமையாக தோன்றும், உடலை விட்டு பிரியும் கடினமான பணிக்கு அவர் தயாராகிக் கொண்டிருந்தார். அவர் தனது மாபெரும் இறுதி சாதனாவை தொடங்கி, தான் செய்த பணிகள் அனைத்திலும் இருந்த அதே வீரியத்துடன் நிலை மாற்றதிற்குள் ஈடுபட்டதால், நெருங்கி வந்த மரணம் அவரிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தாமல் கவனத்தை அதிகரித்தது. எல்லோரும் செய்யவேண்டிய பணிகள் தெளிவாக இருந்தன, மற்றும் அது கடந்தகாலம் அல்லது எதிர்காலம் பற்றிய பயனற்ற பேச்சால் தடைப்படாமல் இருக்க, துறவிகள் தன்னிடம் தொடர்புகொள்ள வந்த போது, “அமைதியாக அமர்ந்து இருந்து, என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்,” என்று அவர் மென்மையாக அறிவுறுத்துவார். அவரது வேலை: தனது கர்மவினைகளுக்கு தீர்வு கண்டு சஹஸ்ரஹார சக்கரம் வழியாக வெளியேறுவது, மற்றும் துறவிகளின் பணி: அவரது நிலைமாற்றத்தில் உதவியாக இருந்து, அவர் இல்லாத வாழ்க்கைக்கு தயார் செய்து கொள்வது. §§

ஒரு நாள் மாலை நேரத்தில், துறவிகள் உணவு அருந்தி விட்டார்களா என்று விசாரித்த பிறகு, குருதேவா எழுந்து அமர்ந்து, இரு கரங்களையும் கூப்பி பலவீனமான குரலில் பின்வரும் தகவலை வழங்கினார்:§§

“நான் எட்டு மணி நேரம் உறங்குகிறேன். இது வாழ்க்கையில் ஒரு உண்மை நிலை,” என்று மக்கள் கூறுவார்கள். “நான் மூன்று முறை சாப்பிடுகிறேன். இது வாழ்க்கையில் ஒரு உண்மை நிலை,” என்றும் சொல்வார்கள். நீங்கள் அவர்களிடம், “நீங்கள் பரமாத்துமா,” என்று கூறினால், “அது வாழ்க்கையில் ஒரு உண்மை நிலை இல்லை,” என்று அவர்கள் பதில் கூறுவார்கள். இந்த அறியாமை கலந்த தவறான சிந்தனை பரமாத்துமா பற்றி நீங்கள் அறிந்து கொள்வதை தடுக்கிறது. அந்த தடைகள் மேற்கத்திய கோட்பாடுகளில் இருந்து வருகின்றன. §§

ஒரு துறவி குருதேவாவிடம் ஆத்ம ஞானம் பெறுவதை பற்றி அறிவுரை கேட்ட போது, அவர் வழங்கிய பதில்: §§

அது உங்களுடன் தொடக்கத்தில் இருந்தே இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அது நீங்கள் வாங்கும் ஒரு பொருளோ அல்லது காலப்போக்கில் அடையும் நிலையோ இல்லை. அது உங்களிடம் தொடக்கத்தில் இருந்தே இருக்கிறது. அதனால் நீங்கள் அதைப்பற்றி சிந்தியுங்கள். முதலில் உங்களுக்குள் பரமாத்துமா இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஒளி முடியும் நிலை இம் கைஃப் ஆகும். பரமாத்துமா உங்களுக்கு வேறாக இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். அது அனைத்திலும் வியாபித்து, அனைத்தையும் உருவாக்கி அனைத்தையும் அழிக்கவும் செய்கிறது. நீங்கள் தற்போது பரமாத்துமாவாக இருக்கிறீர்கள். அதை உங்கள் மனதில் வலுவாக புகுத்திக்கொண்டு, மற்ற அனைத்தையும் எரித்துவிட்டால், நீங்கள் எப்போதும் பரமாத்துமாவாக இருப்பீர்கள். §§

நீங்கள் தொடக்கத்தில் இருந்தே பரமாத்துமாவாக இருப்பதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். அதன் பிறகு “ஈஈஈ” ஒலியின் முடிவு இம் கைஃப் ஆகும். ஆத்ம ஞானத்தை பெறுங்கள். பரமாத்துமாவிற்கு வேறாக மனதில் தோன்றுவது அனைத்தையும் எழுதி எரித்துவிடுங்கள். நீங்கள் அதை மட்டும் செய்தால் போதும். இது மிகவும் எளிமையானது. உங்களிடம் அதற்கான கருவிகள் அனைத்தும் உள்ளன. அதன் பிறகு மீண்டும் ஆத்ம ஞானத்தை பெறுவது மட்டுமே ஒரே வேலையாக இருக்கிறது. §§

image§

தனக்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருப்பதை அறிந்துகொண்ட குருதேவா, தான் உயிர் துறக்கும் வரை உபவாசம் இருக்கப்போவதாக அறிவித்தார். அவருக்கு அருகில் இருந்து 32 நாட்களுக்கு கவனித்து வந்த அவரது துறவிகள், இறுதியாக அவரது உடலை ஒரு பல்லக்கில் சுடுகாட்டிற்கு சுமந்து சென்றனர். அவரை சிவலோகத்திற்கு அழைத்து செல்ல அவருடைய குருமார்கள் அனைவரையும் வரவழைக்கும் ஒரு சூட்சுமமான பூஜை நடத்தப்பட்டது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

குருதேவா தனது கைகளால் எழுதிய செல்ஃப் காட் (பரமாத்துமா) பற்றிய உரையை ஒரு துறவி அவர் கைகளில் வைத்து, அதை துறவிகள் சத்தமாக படிக்கலாமா என்று கேட்டார். “படிக்கலாம்" என்று அவர் சுருக்கமாக பதில் அளித்தார். ஒவ்வொரு துறவியும் சுழற்சி முறையில், ஒரு சில வரிகளை படித்தனர். மங்கலான ஒளியுடன் இருந்த அந்த அறையில் சக்தி நிரம்பியது. காலவரம்பை கடந்த அந்த முக்கியமான தருணத்தில், பல்வேறு குரல்களுடன் வெளிவந்த அந்த ஆழமான சொற்கள் மனதை மயக்குவதாக இருந்தன. துறவிகள் அதை வாசித்து முடித்த பிறகு, “அப்படியென்றால் பரமாத்துமா 1950களில் உண்மையாக இருந்தது மற்றும் அது தற்போது 2000 ஆண்டிலும் உண்மையாக இருக்கிறது,” என்று குருதேவா குறிப்பிட்டார். முழுமையான மற்றும் முடிவான உண்மை எப்போதும் ஒரே மாதிரியாக, எப்போதும் உண்மையாக வாழ்க்கை மற்றும் மரணத்தை கடந்து இருக்கிறது என்பதை அங்கீகரிக்கும் விதமாக அங்கிருந்த எல்லோரும் சிரித்தனர்.§§

ஒரு நாள் குருதேவா சூட்சும விருந்தாளிகளை உபசரித்துக்கொண்டு இருந்தார். அவர் படுக்கையில் அமர்ந்து கொண்டு, கைகளை நன்றாக உயர்த்தி வணக்கம் தெரிவித்து, ஒவ்வொருவருக்கும் மரியாதை செலுத்தினார். நள்ளிரவு நேரத்தில் ஒரு சமயத்தில், யோக சுவாமி தன்னிடம் வந்து, “எல்லாம் முடிந்துவிட்டது. எல்லாம் முழுமையாக இருக்கிறது. நான் திரும்பி வருவேன்,” என்று யோக சுவாமி தன்னிடம் கூறியதாக அவர் தனது துறவிகளிடம் கூறினார்.§§

தங்கள் சற்குரு உயிர் துறக்கும் போது அவருக்கு அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக உலகெங்கிலும் இருந்து சீடர்கள் குவிந்தனர் என்றாலும், தனது அறைக்குள் நுழைவதற்கு அல்லது தன்னை பார்ப்பதற்கு தனது துறவிகள் மட்டுமே வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் நற்குணம் நிறைந்த சீடர்கள் அவர் மீது இருந்த பாசத்தாலும், தங்களுக்கு அவர் வழங்கிய பரிசுகள் மற்றும் வழிகாட்டலுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் அங்கேயே காத்து இருந்தார்கள். அவர் அவர்களின் வாழ்க்கைகளை மாற்றி அமைத்து இருந்தார் மற்றும் மகாசமாதியின் போது சற்குருவிற்கு அருகில் இருக்கவேண்டிய அவசியத்தைப் பற்றி அவர் அவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். அந்த சமயத்தில் வெளிப்படும் சக்தி கங்கை நதியில் ஆயிரம் முறை குளிப்பது, கைலாய மலைக்கு ஆயிரம் முறை யாத்திரை செல்வது, ஆயிரம் மிகப்பெரிய யாகங்களை செல்வதைக் காட்டிலும் சிறந்தது என்று பாரம்பரியம் குறிப்பிடுகிறது. §§

இந்துக்களின் தீபத்திருநாளான தீபாவளி பண்டிகை தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு, நள்ளிரவு 11:54 மணிக்கு, சித்ரா நட்சத்திரத்தில், நவம்பர் 12, 2001, 32 நாட்கள் உபவாசம் இருந்த பிறகு, குருதேவா மகாசமாதி அடைந்தார். தைரியமாகவும் மனஉறுதியுடனும் வாழ்ந்த ஒரு வாழ்க்கைக்கு மகுடமாக அமைந்த அந்த உன்னதமான மகாபயணம், பழங்கால முறையில் மரணத்தை அணுகுவது தொடர்ந்து உசிதமாக இருப்பதை உலகிற்கும், மரணப்படுக்கையில் இருந்தவர்களுக்கும் தெரியப்படுத்தியது. அவர் ஆணையிட்டப்படி, ஒரு மணி நேரம் கழித்து, சமூகத்தின் மூத்த துறவியாகவும் அவர் நியமித்த வாரிசாகவும் இருந்த, சற்குரு போதிநாத வேலன்சுவாமியை பதவியில் அமர்த்தி, அவரை முதல் முறையாக நமஸ்காரம் செய்து, பழங்கால கைலாச பரம்பரையின் அடுத்த சற்குரு தலைமையில் புதிய யுகத்தின் தொடக்கத்தை அறிவிக்க மடத்தின் குரு பீடத்தில் எல்லோரும் கூடினார்கள். §§

image§

கவாய் ஆதீனத்தின் குரு மகாசன்னிதானமாக நவம்பர் 31, 2001 அன்று சற்குரு போதிநாத வேலன்சுவாமி நியமிக்கப்பட்டார். தேவாலயத்தை பிரதிநிதித்துவம் செய்யவும் குருதேவா தனது வாழ்நாள் முழுவதும் செய்த பணியை நிலைநிறுத்துவதற்கு முன்பாக மடத்தில் ஒரு ஆசிரியராக, கணக்காளராக மற்றும் தியானம் செய்யும் சாதுவாக இருந்த இவரது வாழ்க்கை ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை பெற்றது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

போதிநாதா 21 வயது இளைஞனாக, பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இருந்த போது, நெவாடாவின் மவுன்ட்டன் டெசர்ட் மடத்தில் செங்கற்களில் கட்டப்பட்டிருந்த ஒரு அறையில் குருதேவாவை அவர் முதல் முறையாக சந்தித்தார். 1965 ஆம் ஆண்டு அவர் குருதேவாவின் சமூகத்தில் சேர்ந்து, பல வருடங்களுக்கு குருதேவா நடத்திய அமைப்புக்களுக்கு வழிகாட்டும் நிர்வாகியாக இருந்து, சட்டம் மற்றும் அலுவல் தொடர்பான விவகாரங்களை கண்கணித்தார். 1970 களில், கடல் மணலில் அமைந்து இருந்த ஒரு எளிமையான ஓலை குடிசையில் ஒன்பது மாதங்கள் தங்குவதற்காக, குருதேவா அவரை ஹவாய் தீவின் பிக் ஐலன்ட்டிற்கு அனுப்பி வைத்தார். போதிநாதாவை சந்திப்பதற்காகவும் அவரது சாதனா மற்றும் தியானங்களை வழிநடத்துவதற்காகவும் குருதேவா விமானம் மூலம் கோனாவிற்கு செல்வார். அத்தகைய சேவை மற்றும் சாதனா, போதிநாதா தனது தோள்களில் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புக்களை சுமக்க, அவரை தயார் செய்தது. குருதேவா அவரை 1972 ஆம் ஆண்டு இலங்கையில் ஆறு மாதங்கள் தங்க வைத்த போது, யோக சுவாமி அவரது வலது காதில், “நான் உன்னை உனது/எனது பணிக்காக தயார் செய்துக்கொண்டு இருக்கிறேன்,” என்று கூறினார். அவரது துறவற வாழ்க்கையை எடுத்துரைத்த கண்ணியத்துடன், அவர் பீடத்தில் அமர்ந்து நந்திநாத சற்குருமார்களின் நீளமான தொடர்ச்சியில் அடுத்த சற்குருவாக பதவியேற்றார். §§

அடுத்த நாள் மதியம் துறவிகள் மற்றும் சீடர்கள், குருதேவாவின் உடலை ஊர்வலமாக மடத்தின் நுழைவாயில் வரை சுமந்து சென்றார்கள். அவர் மீது அதிக அன்பு செலுத்திய மேயர், எதிர்பாராத விதமாக ஒரு காவல்துறை பாதுகாப்பை வழங்கி, கவாய்க்கு மிகவும் பிடித்தமான ஆன்மீக தலைவர் சிவபெருமானின் திருவடியை மேலும் ஒரு தருணமும் தாமதிக்காமல் செல்ல வேண்டும் என்பதைப் போல, வழியில் இருந்த போக்குவரத்தை முழுவதுமாக நிறுத்தி, 20 மைல் பயணத்தில் ஒவ்வொரு சந்திப்பிலும் காவல்துறை வாகனத்தை நிறுத்தி, சுடுகாடு செல்லும் மக்கள் கூட்டத்தை விரைவுப்படுத்தினார். அவரை வழியனுப்ப நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த ஒரு உணர்ச்சிப்பூர்வமான நினைவேந்தல் சேவையில், “ஓம் நமச்சிவாய” என்று உச்சரித்துக் கொண்டு அவரது உடலை சுமந்து சென்ற மூத்த துறவிகள் நவீன சிதைக்கு அருகில் செல்லும் வரை, அன்பின் உற்சாகமான வெளிப்பாடு நிரம்பியிருந்த ஹலா ஹலாவ் பள்ளியின் ஆன்மீக பாடல்கள் மற்றும் ஆடல்கள் தொடர்ந்தன. அவரது மறைவு பற்றிய செய்தியை தி நியூ யார்க் டைம்ஸ், CNN மற்றும் மற்ற செய்தி நிறுவனங்கள் அறிவித்தன. §§

அடுத்த நாள் விடிந்ததும், அவரது அஸ்தியை துறவிகள் மடத்திற்கு கொண்டு வந்து, அவர் அறிவுறுத்திய படி, அதை குரு பீடத்திற்கு பின்னால் இருந்த ஒரு நிலத்தடி குகையின் சுவற்றில் வைத்தனர். அன்றைய தினத்தில் இருந்து, மாதந்தோறும் சித்ரா நட்சத்திரத்தன்று நடைபெறும் குரு பூஜையின் போது, அவர் காலை நேரத்தில் தனது சீடர்களுக்கு ஆன்மீக உபதேசத்தை வழங்க நூற்றுக்கணக்கான முறை அமர்ந்த ‘கடவுள்’ கோயிலின் பிரதான மண்டபத்தில் துறவிகள் கட்டிய ஒரு மாடத்தில், அவரது வாழ்க்கையும் பரம்பரையும் கௌரவிக்கப்படுகின்றன. ஜெய் குருதேவா!§§