குருமார்களின் சரித்திரங்கள்

Page 72 URL:§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/72_bk12_04.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

வெளியீட்டாளர் குறிப்பு§

ந்த புத்தகத்தை ஹவாய் கார்டன் ஐலன்ட்டில் இருக்கும் கவாய் இந்து மடத்தின், கவாய் ஆதீனத்தின் சைவ சித்தாந்த சமூகத்தை சேர்ந்த ஆச்சாரியர்கள் மற்றும் சுவாமிகளால் வடிவைக்கப்பட்டுள்ளது. இது இன்டிசைன் (InDesign), ஃபோட்டோஷாப் (Photoshop) மற்றும் இல்லஸ்டிரேட்டர் (Illustrator) உட்பட, அடோப கிரியேட்டிவ் சூட் (Adobe’s Creative Suite) பயன்படுத்தி ஆப்பிள் மாக்பூக் புரோ (Apple MacBook Pro) மற்றும் மாக் புரோ (Mac Pro) கணினிகளில் தயாரிக்கப்பட்டது. இதன் எழுத்து வடிவம் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வடிவமைப்பாளர் எட்வர்டோ மான்சோ மூலம் உருவாக்கப்பட்ட ரிலாடோ ஃபேமிலி ஆஃப் பாண்ட்ஸ் (Relato family of fonts) மூலம் அமைக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் பிரதான அங்கம் 14.25-பாய்ண்ட் லைன்ஸ்பேசிங் மீது 11.5-பாயிண்ட் ரெகுலரில் அமைக்கப்பட்டுள்ளது. சொற்களஞ்சியம் மற்றும் அட்டவணைக்கு 11 மீது 8.25 என்று அமைக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத மற்றும் தமிழ் எழுத்து வடிவங்களை எகோலாஜிகள் லிங்விஸ்டிக்ஸ் மற்றும் ஶ்ரீகிருஷ்ண பாடில் வடிவமைத்துள்ளனர். மேலுறை ஓவியம் மற்றும் புத்தகத்தின் முக்கிய கதை விளக்கப்படங்கள், சென்னையின் டி. எஸ். ராஜம் (1919-2009) கடைசியாக நீர் வண்ணங்களில் வரைந்த ஐம்பத்து ஆறு ஓவியங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. அவருடைய மற்ற ஓவியங்களில் இருந்து துணை விளக்கப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய துணை கண்டம், இலங்கை மற்றும் யாழ்ப்பாண தீபகற்பத்தின் வரைபட விளக்கங்களை மிட்வேல், உட்டாவை சேர்ந்த மைக்கேல் கிப்பன்ஸ் வரைந்துள்ளார். பழங்கால குருமார்களின் ஒரு சில கதைகளுக்கு தேவையான அலங்காரங்களை சான் லூயிஸ் ஒபிஸ்போ, கலிபோர்னியாவை சேர்ந்த தர்ஷக் ஜெயநந்தராஜன் வழங்கியுள்ளார். சான் அன்செல்மோ, கலிபோர்னியாவில் புத்தகம் பதிப்பிக்கும் ஆலோசகராக இருக்கும் ஜான் லவுடன் விரிவாக ஆய்வு செய்து புத்தகத்தை வடிவமைக்க உதவினார். தனக்கு மற்றும் தனது நண்பர்களுக்கு நினைவில் இருந்த மற்றும் பல்வேறு தமிழ் வாழ்க்கை வரலாறுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், பெயர்கள் மற்றும் கதைகளின் பிழையின்மையை உறுதி செய்து, பல சம்பவங்களுக்கு ஒரு உயிருள்ள தொடர்பை வழங்கிய டொரன்டோவை சேர்ந்த, தி. சிவயோகபதிக்கு விசேஷமான நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவருக்கு சிறு வயதில் இருந்தே யோகசுவாமியிடம் நல்ல பரிச்சயம் இருந்தது, மற்றும் அவருடைய குடும்பம் யோகசுவாமிக்கு மிகவும் நெருக்கமான சீடர்களாக இருந்தார்கள். புத்தகத்தின் அட்டவணையை அடோப் இன்டிசைன் (Adobe InDesign) பயன்படுத்தி காபா, ஹவாய் சேர்ந்த சாமுண்டி சபநாதன் உருவாக்கினார். தமிழ் மொழி மற்றும் கலாச்சார விஷயங்கள் பற்றி ஆலோசனையை சென்னை, இந்தியாவை சேர்ந்த ஷீலா வெங்கடகிருஷ்ணன் வழங்கினார். 1972 ஆம் ஆண்டு முதன் முதலாக தான் கண்ட கனவு இந்த புத்தக வடிவில் நிறைவு பெற்றதை, அங்கர்லோகங்களில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் குருதேவா திருப்தி அடைந்து, இதை படிக்கும் வாசகர்களுக்கும், முன் உதாரணமாக இருக்கும் கைலாச பரம்பரையின் ஞானத்தை தங்களது தினசரி வாழ்க்கையில் பயன்படுத்த முயற்சி செய்பவர்களுக்கும் தனது ஆசிகளை வழங்குவார் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஓம்.§§

Page 73: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/73_bk12_05.html§

The Guru Chronicles§

இந்த புத்தகத்தில் நாம் கண்ட தலைசிறந்த மகான்களைப் போல, இந்த லௌகீக உலகில் மனநிறைவு அடைந்து இந்து துறவிகளாக சேவை செய்து வாழும் விருப்பத்துடன் சில அபூர்வமான இளைஞர்கள் இருக்கிறார்கள். §§

ந்த அபூர்வமான ஆன்மாக்கள் பாரம்பரிய இந்து சந்நியாச பாதையை பின்பற்றி ஏழ்மை, பணிவு, கீழ்ப்படிதல், தூய்மைக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஆத்மஞானத்தை நோக்கி அழைத்து செல்லும் சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானத்தின் கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாரம்பரியங்களை இந்த பழங்கால மதநம்பிக்கை முழுமையாக வழிநடத்தி செல்கிறது. இந்த பூமியில் இன்று ஒரு பில்லியனுக்கும் அதிகமான இந்துக்கள் இருக்கிறார்கள், மற்றும் இந்தியாவில் மட்டும் மூன்று மில்லியன் சுவாமிகள், சாதுக்கள் மற்றும் சற்குருமார்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. BAPS சுவாமிநாராயண் சமூகத்தில் சுமார் 800; உலகெங்கும் ராமகிருஷ்ணா மிஷனில் சுமார் 700. பாரத் சேவாசிரம் சங்கத்தில் 500க்கும் மேலானோர் உள்ளனர். ஜுனா அகாராவின் தலைவர் ஒரே நாளில் 25,000 பேருக்கு தீட்சை வழங்கியதாக கூறப்படுகிறது. மற்ற முறைப்படுத்தப்பட்ட இந்து சமூகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. சனாதன தர்ம தெய்வங்களுக்கு இருக்கும் 500,000 கோயில்களில் 1,000 கோயில்கள் அமெரிக்காவில் உள்ளன. உலகில் இருக்கும் மற்ற மிகப்பெரிய சமயங்களில் இருக்கும் பூசாரிகளை காட்டிலும், இந்த இந்து கோயில்களில் சேவை செய்யும் பூசாரிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. உங்களுக்குள் வலுவான தூண்டுதல் இருந்து, 25 வயதிற்கு உட்பட்டவராக இருந்து, எங்கள் சைவ சித்தாந்த யோக சமூகத்தில் சேர விரும்பினால், நாங்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். சிவபெருமானை அறிவதும் மற்றவர்களுக்கு சேவை செய்வது மட்டுமே வாழ்க்கையில் நமது குறிக்கோள் ஆகும். நாங்கள் வழிபடுவதற்கு, தியானம் மற்றும் சேவை செய்வதற்கு, வேதங்கள் மற்றும் ஆகமங்கள் குறிப்பிடும் முடிவான உண்மையை உணர்வதற்கு உலகில் இருந்து விலகி மடங்களில் வாழ்ந்து, முன் உதாரணமாக விளங்கி உலகை மேம்படுத்தி, முழுமையான அமைதியில் இருக்கும் மனதின் மையத்தில் ஆத்ம ஞானம் பெறுவதன் மூலம் மனிதனின் முடிவான குறிக்கோளை பூர்த்தி செய்கிறோம். எங்களுடைய சற்குருவாக இருக்கும் போதிநாத வேலன்சுவாமியின் வழிகாட்டலுடன், ஹவாய் தீவில் கவாய் ஆதீனத்தை தலைமையகமாக கொண்டு, இந்து சமயத்தில் பாரம்பரிய முறைப்படி இயங்கும் முதன்மையான துறவற சமூகங்களில் அங்கம் வகிக்கும் எங்கள் சமூகம், பூமியில் இருக்கும் எல்லா நாடுகளில் இருந்தும் விண்ணப்பங்களை வரவேற்கிறது. வாழ்க்கையில் துறவற பாதையை ஏற்றுக்கொள்ள விரும்பி, போதிநாதாவை தங்களது ஆன்மீக குருவாக கண்டுகொண்ட இளைஞர்கள், அவரிடம் தங்களது சொந்த தகவல்கள், ஆன்மீக விருப்பங்கள், சிந்தனைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும், எங்கள் மடத்திற்கு வந்து பூமியில் இந்த உயர்ந்த பாதையை பின்பற்றும் மற்றவர்களை சந்திக்கவும் வரவேற்கிறோம். போதிநாதா அப்படிப்பட்ட இளைஞர்களை சந்திக்க காத்து இருக்கிறார். சமூகத்தில் நுழையும் செய்முறை மெதுவாக நடைபெறும். இதில் முதல் கட்டமாக ஆறு மாத காலத்திற்கு கவாய் தீவில் ஒரு திட்டப்பணியில் ஈடுபடவேண்டும். பிறகு சொந்த வீட்டிற்கு திரும்பி இந்த அனுபவத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். அதன் பிறகு முதல் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு, தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள் வழங்கப்படுகின்றன. பத்து அல்லது பன்னிரண்டு வருட பயிற்சிக்கு பிறகு வழங்க வாய்ப்புள்ள வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்கள், சந்நியாசத்தின் புனிதமான ஆணைகள் கிடைக்கும் வரை இரண்டு வருட விரதங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகின்றன. எங்கள் சமூகத்தை பற்றி மேலும் தகவல்களை அறிய அணுகவேண்டிய மின்னஞ்சல்: www.himalayanacademy.com/monks/§§

கவாய் இந்து மடம் §

107 கஹோலலேலே சாலை, காபா, ஹவாய் 96746-9304 அமெரிக்கா §

மின்னஞ்சல்: bodhi@hindu.org§§