குருமார்களின் சரித்திரங்கள்

Page 23: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/23_yo03_02.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

ஒன்பதாவது அத்தியாயம்§

யோகநாதன் நிலைமாற்றம் பெறுகிறார் §

யோகநாதன் 1888 ஆம் ஆண்டு பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு, அவரது தந்தை அம்பலவாணர் கொழும்பில் இருந்து கிழக்கே, தெற்கு மலைநாட்டில், யாழ்ப்பாணத்தில் இருந்து 350 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த மசுகேலியாவிற்கு அவரை அழைத்து சென்றுவிட்டார். அங்கே அவர் ஒரு புகையிலை வியாபாரியாக பணிபுரிந்தார். தனது மகன் அதே இடத்தில் நிலைத்து இருந்து வணிக வர்த்தகத்தை கற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அந்த இளைஞன் வீட்டிற்கு வெளியே, தனியாக உடலில் சட்டை இல்லாமல், ஒரு பெரிய பாறை மீது உட்கார்ந்து, தியானம் செய்வதில் மற்றும் அந்த பகுதியின் வெப்பமண்டல மலை அழகை பார்த்து ரசிப்பதில் அதிக ஆர்வத்துடன் இருந்ததால், இறுதியில் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. சுமார் 1890 ஆண்டு, தனது மகனுக்கு குடும்ப வியாபாரத்தில் அக்கறை இல்லை என்பதை உணர்ந்த தந்தை, அவனை கொழும்புத்துறைக்கு திருப்பி அனுப்பிவிட்டார். அம்பலவாணர் 1892 ஆம் ஆண்டு மசுகெலியாவில் காலமானார். §§

யாழ்ப்பாணம் திரும்பிய சில மாதங்களில், யோகநாதன் யாழ்ப்பாணத்தில் இருந்து தெற்கே எழுபத்தி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த கிளிநொச்சி என்ற ஒரு விவசாய சமூகத்தில், பொதுப்பணித்துறையின் நீர்ப்பாசன பிரிவில் ஒரு வேலையை தொடங்கினார். இது தொடர்பாக சைன்ட் யோக சுவாமி மற்றும் டெஸ்ட்டமெண்ட் ஆஃப் ட்ருத்தில் ரத்னா மா நவரத்தினம் அளித்துள்ள விளக்கத்தை இங்கே காணலாம்:§§

வறட்சி மண்டலப் பகுதிகளில் நெல் சாகுபடி செய்வதற்கு அனுமதிக்கும் குடியேற்ற நாட்டின் கொள்கையின் தொடர்ச்சியாகவும், குடியேற்ற ஆட்சியில் இலங்கை சட்டமன்றத்தில் தமிழ் சமூகத்தின் பிரதிநிதியாக இருந்த சர் பொன்னம்பலம் இராமநாதன் மேற்கொண்ட தொடர் முயற்சிகளாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கிளிநொச்சி பகுதியில் இரணைமடு குளம் கட்டும் திட்டம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. §§

பொறியாளர் திரு. பிரவுனின் கீழ் வேலை செய்தல் §

சிறிய நீர்நிலைகளை ஒன்று சேர்த்து, ஒரு பெரிய நீர் தேக்கம் அமைக்கப்படவிருந்தது. இலங்கை ஆளுநராக இருந்த மாண்புமிகு சர் ஹென்றி வார்டு யாழ்ப்பாணத்திற்கு 1856 ஆம் ஆண்டு வந்திருந்த போது, திரு. டியுக் என்ற அரசாங்க பிரதிநிதி மூலம், இரணைமடு திட்டம் முதல் முறையாக முன்மொழியப்பட்டது. நீர்பாசன பொறியாளராக இருந்த திரு. பார்கர், 1866 ஆம் ஆண்டில் இறுதி பரிந்துரையை வழங்கினார். இது 1920 ஆம் ஆண்டு நிறைவடைந்து பின்பு விரிவாக்கம் செய்யப்பட்டு, இன்று வடக்கில் இருந்து தெற்கு வரை 9½ கிலோமீட்டர் நீளம் மற்றும் கிழக்கில் இருந்து மேற்கு வரை இரண்டு கிலோமீட்டர் நீளத்துடன் ஒரு மிகப்பெரிய நீர் தேக்கமாக இருக்கிறது. வறண்ட வடக்கு பகுதியை சேர்ந்த தமிழர்கள் நீர்குலங்களை நிர்மாணம் மற்றும் புனர்நிர்மாணம் செய்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்துள்ளனர், மற்றும் இந்த பகுதியில் பல நூற்றாண்டுகளாக நீர்பாசன பணிகள் நடைபெற்று வருகின்றன. §§

யோகநாதன் திட்டபணி மேற்பார்வையாளராக இருந்த திரு. பிரவுன் என்ற ஒரு ஆங்கிலேய பொறியாளரின் கீழ் பணிபுரிந்தார். முரட்டுத்தனமாக இருந்த அந்த மேற்பார்வையாளர், தமிழர்களை வெறுத்தார். மேலும் அவர் தங்கள் சகாக்களைப் போல, ஆங்கிலேயர்களை போன்ற மேம்பட்ட மக்களுக்கு அடிபணிந்து செல்லும் நாகரிகமற்ற உயிரினமாக தமிழர்களை கருதினார். அவர் பணியிடத்திற்கு அருகில் தனது வீட்டை தேடிக்கொண்டார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் லிவர்பூலில் இருந்து கப்பலில் வந்து சேர்ந்தனர். §§

image§

மிகப்பெரிய ஆன்மாக்கள் தாங்கள் மகான்களாக மற்றும் முனிவர்களாக மாற்றம் பெற்று, சீடர்களுக்கு அறிமுகமாகும் முன்னர் சுயசரிதைகள், நெறிமுறைகளை பின்பற்றினர். யோகநாதனின் இளவயது காலம் கிளிநொச்சியில் கழிந்தன. அங்கே எதிர்கால சற்குரு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நீர்பாசன திட்டத்தில் ஒரு குறைவான ஊதியத்தில் பணிபுரிந்தார் மற்றும் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் ஆன்மீக வேட்கையில் ஈடுபட்டார். §

• • • • • • • • • • • • • • §§

யோகநாதனின் தூய்மையாக நடத்தைகள் மற்றும் ஒழுக்கத்தினால் ஈர்க்கப்பட்ட பிரவுன், தனது குழுவில் பண்டகசாலையை காக்கும் பணியை வழங்கினார். நம்பிக்கைக்கு பாத்திரமான அந்த பணியில், போதுமான ஓய்வு நேரம் கிடைத்தது. அவரது புதிய பொறுப்பில், தினமும் காலையில் பணியாளர்களுக்கு நிறுவனத்தின் பண்டகசாலையில் இருந்து கருவிகளை வழங்கி, நாள் முடிவில் அவற்றை அவர்களிடம் இருந்து கவனமாக திரும்பப்பெற வேண்டும். அவர் இந்த பணியை மிகவும் கவனமாக கையாண்டார். அவருக்கு கிடைத்த விடுப்பு நேரத்தை, பல்வேறு பழச்செடிகளை நடுவதிலும், அவற்றை கவனிப்பதிலும் பயன்படுத்தினார். அவர் அந்த காலத்தில் நட்ட ஒரு மாமரம், இன்று சாமியார் மரமாக அழைக்கப்பட்டு, செழிப்பாக நிறைய பழங்களை வழங்கிக்கொண்டு இருக்கிறது. இதை பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர். அந்த மரம் இருக்கும் நிலத்தை சிவதொண்டன் நிலையம் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டது. §§

யோகநாதன் தன்னை பாக்கியசாலியாக கருதினார். பணி கடினமாக இருக்கவில்லை. அவருக்கு ஒரு தனி குடியிருப்பும், தனது விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக்கொள்ள ஓய்வு நேரமும் கிடைத்தது. அது காடுகள் நிரம்பிய இடமாக, யாழ்ப்பாணத்தை காட்டிலும் குளிர்ச்சியாக, ஒரு சில வீடுகள் மற்றும் நிறைய மயில்களுடன் இருந்தது. அவர் தனது தினசரி வாழ்க்கையில் நன்றாக பொருந்திக்கொண்டு, எல்லோருடனும் நல்ல உறவை வளர்த்துக்கொண்டார். §§

யோகநாதனுக்கு வழங்கப்பட்ட பயிற்சியின் போது, அவரது முதலாளியின் கொடூரமான கோபத்தைப் பற்றி பலமுறை எச்சரிக்கப்பட்டு இருந்தார். விரைவில் அவர் கண்முன்னே, அத்தகைய சம்பவங்கள் நடந்தேறின. ஒரு சிறிய தவறும் பிரவுனின் கோபத்தை தூண்டிவிடும், மற்றும் தனது ஊழியர்களின் வேலை தன்னை திருப்திப்படுத்தவில்லை என்றால் அவர்களை அடிக்கவும் தயங்கமாட்டார். யோகநாதன் எப்போதும் இந்த பிரச்சனையில் சிக்காமல், எரிமலை போல வெடிக்கும் அந்த பொறியாளரை சந்திக்கும் போது கூடுதல் கவனத்துடன் இருந்தார். அவர் பிரவுனின் மனதை புரிந்துகொள்ள அவரை கண்காணித்தார் மற்றும் அவரது மனநிலைகள் மீது கவனமாக இருக்க கற்றுக்கொண்டார். அவர் விரைவில் தன்னை காப்பாற்றிக்கொள்ள நுணுக்கமான வழிகளை தெரிந்துகொண்டார். பிரவுன் பதட்டத்துடன் இருக்கும் போதும், அவர் கோபங்கொள்ள வாய்ப்புக்கள் இருக்கும் போதும், அவர் தன் கையில் ஏதாவது ஒரு கருவியுடன் அவர் முன்பாக சென்று நிற்பார். இதனால் வரவிருந்த கோபம் தவிர்க்கப்படும். §§

காலப்போக்கில் அவருடன் யோகநாதனின் உறவு மேலும் வலுவடைந்தது. பிரவுன் தன்னுடைய குழந்தைகளுடன் யோகநாதனை விளையாட அனுமதித்ததால், அவர் தனது பணியில் திருப்தியுடன் இருந்தார் என்பதை யோகநாதன் அறிந்து இருந்தார். “தனது பணியை முடித்ததும், விரைந்து சென்று தியானம் செய்ய துவங்கும் ஒரு நேர்மையான பணியாளர்,” என்று அவரைப்பற்றி பிரவுன் ஒருமுறை விவரித்து இருந்தார். திரு. பிரவுன் பேசும் போது “தெய்வீக புருஷன்" என்று குறிப்பிட்டு, “உனக்கு மதத்தின் மீது அதிக ஈடுபாடு இருக்கிறது,” என்று அடிக்கடி கூறுவார். இறுதியில் அவர்கள் நட்புறவு வலுவடைந்து, யோகநாதன் திரு. பிரவுனுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க தொடங்கிவிட்டார். §§

திரு. பிரவுனிடம் இருந்த சில பண்புகள் யோகநாதனுக்கும் பிடித்து இருந்தது. அவருக்கு கடமையுணர்ச்சி தீவிரமாக இருந்தது மற்றும் விவரங்கள் சிறியதாக இருந்தாலும் அவர் அவற்றை புறக்கணிக்கவும் இல்லை தாமதிக்கவும் இல்லை. அவர் இரணைமடுவில் நடந்த ஒவ்வொரு நடவடிக்கையிலும் தனிப்பட்ட பொறுப்புடன் செயல்பட்டதால், அந்த திட்டம் ஒவ்வொரு தடையையும் கடந்து செல்வதற்கு வழிவகுத்தது. காலப்போக்கில், யோகநாதன் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், விநியோகங்கள், கால்நடைகள், நிதிக்கணக்கீடுகள், பொறியியல் என்று திட்டப்பணியில் இருந்த அனைத்து துறையையும் கண்காணித்து, கடமையை புனிதமாக கருதிய தனது முதலாளியின் தலைமையில், அவற்றை திட்டமிட்டபடி செயல்படுத்தினார். இது முதலாளியின் கவனத்தை கவர்ந்தது. §§

வண்டிகளை இழுப்பதற்கும், பளுவான பொருட்களை சுமந்து செல்வதற்கும் சுமார் ஐம்பது காளைமாடுகள் திட்டப்பணியில் சேர்க்கப்பட்டு இருந்தன. அவற்றை சிறந்த முறையில் கவனிக்கவேண்டும் என்று திரு. பிரவுன் வலியுறுத்தினார் மற்றும் அவற்றை துன்புறுத்துவதை அவர் எப்போதும் அனுமதித்தது இல்லை. ஒவ்வோரு நாளும் தங்கள் வேலையை முடிந்ததும், வாகன ஓட்டிகள் அந்த கால்நடைகளை நதிக்கு அழைத்து சென்று, குளிக்க வைத்து உணவு அளிப்பார்கள். இது சரியாக தினமும் நடக்கிறதா என்பதை கண்காணிக்க திரு. பிரவுன் தினமும் கால்நடைகளுடன் நடந்து செல்வார். இது யோகநாதனுக்கு வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பாடமாக இருந்தது. §§

கிளிநொச்சியில் இருந்த அந்த நீர்பாசன நிறுவனத்தில் சில எதிர்மறை இரகசியங்கள் மற்றும் துன்பங்கள் இருந்தன. தனியாக இருக்கும் போது, யோகநாதனை பணியாளர்களில் ஒருவன் துன்புறுத்தி வந்தான். அவன் பிறருக்கு தொல்லை தருவதையே தனது வழக்கமாக கொண்டிருந்தான், மற்றும் அவன் பழுப்பு நிற இளம் பணியாளரை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இகழ்ந்து பேசி வந்தான். இது பல மாதங்களுக்கு தொடர்ந்தது. மற்றும் அவன் ஒரு நாள், இளம் பணியாளருக்குள் கோபம் எரிமலையாய் கனன்று கொண்டிருக்கிறது என்பதை அறியாமல், யோகநாதனை அச்சுறுத்தினான். அதன் விளைவாக ஒரு சண்டை தொடங்கியது மற்றும் யோகநாதன் வம்புக்கு இழுத்தவனை குத்தினார். அந்த சம்பவம் பார்ப்போரை அச்சுறுத்தியது, மற்றும் திரு. பிரவுன் அதற்கு கடுமையான தண்டனை வழங்க முடிவு செய்தார். யோகநாதனுக்கு அருகில் இருந்த மண்குலம் குவாரியில், ஆறு வார காலத்திற்கு கடுமையான வேலையை வழங்க உத்தரவிடப்பட்டது. §§

அதே சமயத்தில், அவரது மாமன் சின்னையா யோகநாதனுக்கு ஒரு நல்ல வரனை பார்க்க தொடர்ந்து முயற்சி செய்து வந்தார், ஆனால் யோகநாதன் அதில் அக்கறை செலுத்தவில்லை. அவருக்கு தனது பாதை வேறு இடத்தில் இருப்பதாக தோன்றியது. அவர் தனது பணத்தை சாத்திரங்கள் மற்றும் பாடல்கள் சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் சைவத்துறவிகள் தொடர்பான கதைகளை படிக்க செலவழித்தார். அவர் தான் படித்த சொற்களின் உண்மை தனக்கு புலப்படும் வரை, திருப்தி அடையாமல் தொடர்ந்து படித்துக்கொண்டு இருந்தார். அத்தகைய ஒரு புனிதத்தன்மை மற்றும் பக்தியின் மூலம் இந்த உலகில் வாழலாம் என்ற சிந்தனை அவரை பிரமிக்க வைத்தது. அவருக்கு துறவிகளின் கதைகள் மனப்பாடமாக தெரிந்து இருந்தது மற்றும் அவர்கள் எழுதிய தேவாரப் பாடல்களை எப்போதும் பாடிக்கொண்டு இருந்தார். §§

இந்த காலகட்டத்தில் சம்ஸ்கிருத சாத்திரங்களை படிக்க, சமஸ்கிருத மொழியிலும் தேர்ச்சி பெற்றார். அவர் அதிக முக்கியத்துவம் அளித்த படிப்பு மற்றும் வழிபாட்டிற்கு கிளிநொச்சி நல்ல ஒரு அமைதியான சூழ்நிலையை வழங்கியது. இந்த காலக்கட்டதை யோகநாதன் நன்றாக பயன்படுத்திக் கொண்டார். அவர் தனக்கு விடுப்பு இருந்த நாட்களில் தனியாக ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்து இருந்தார் மற்றும் அருகில் இருந்த அனைத்து கோயில்களுக்கும் செல்வதை தனது வழக்கமாக கொண்டிருந்தார். இந்து சமயத்தின், பல சாத்திரங்களில் அவருக்கு இருந்த ஆழமான அறிவைக் கண்டு மக்கள் வியந்தனர். அவரால் அந்த சாத்திரங்களை பக்கம் பக்கமாக ஒப்பிக்க முடிந்தது. §§

அவர் தான் படித்த சாத்திரங்களை தினமும் காலை மற்றும் மாலையில் தியானம் செய்து, மெதுவாக தான் தினமும் மேற்கொள்ளும் சாதனாக்களில் ஒரு ஒழுங்குமுறையை உருவாக்கிக்கொண்டார். அவர் இந்த பயிற்சிகளுடன் புதிதாக பலவற்றை சேர்த்துக்கொண்டார், மற்றும் அவரது தியானங்கள் ஆழ்நிலையை அடைந்ததும், பல்வேறு வகை தவங்களை மேற்கொள்ள தொடங்கினார். அவர் கிளிநொச்சியில் இருந்த போது, தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக, ஆன்மீக பாதையில் தனது வாழ்க்கையை அர்ப்பணி்ப்பதை உறுதி செய்யும் வண்ணம், திருமணம் செய்துகொள்ளாமல் மனத்துறவுடன் இருக்கவேண்டும் என்று ஒரு முறையான உறுதிமொழியை எடுத்துக்கொண்டார். §§

இந்துமதி அம்மாவின் குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி:§§

தேவைப்படும் போது செலவழிக்கலாம் என்று பணத்தை சேமித்து வைக்காமல், ஒரு மாதத்தில் தான் சம்பாதித்த பணத்தை அந்த மாதமே செலவழிக்கும் பழக்கத்தை கடைப்பிடித்ததாக, அவர் தன் சீடர்களிடம் பல வருடங்கள் கழித்து கூறினார். தனக்கு இருந்த குறைவான செலவுகளுக்கு பிறகு மீதம் இருந்த பணத்தை கோயில்கள், நண்பர்கள், உறவுகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு செலவு செய்தார். §§

யோகநாதன் இரணைமடுவில் பணியில் இருந்த போது, உலக வாழ்க்கையை துறப்பதற்கு அவரது தூண்டுதல்களை ஊக்குவிக்கும் முக்கிய சம்பவம் ஒன்று நடைபெற்றது. அதைப்பற்றி ரத்னா மா நவரத்தினம் குறிப்பிடுகிறார்: §§

இந்த காலகட்டத்தில், சிகாகோவில் நடைபெற்ற உலக சமயங்களின் மாநாட்டில் இருந்து சுவாமி விவேகானந்தர் வெற்றிகரமாக திரும்பியிருந்தார். அந்த வெற்றிவாகை அந்நிய கலாச்சாரத்தால் கவர்ந்திழுக்கப்பட்ட மக்களின் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது, மற்றும் மக்கள் மத்தியில் இந்து சமயத்தின் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த, அவரது இலங்கை பயணம் ஒரு நல்ல அறிகுறியாக கருதப்பட்டது. 1897 ஆம் ஆண்டில் புதிய யுகத்தின் தேவதூதர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். இந்து கல்லூரி, கோட்டை மைதானம் மற்றும் கொழும்புத்துறையில் விவேகானந்தர் வழங்கிய உற்சாகமூட்டும் உரைகள், சுவாமியின் மனதில் நீங்காத இடம்பிடித்தன. §§

கொழும்புத்துறையின் இந்து மகாவித்தியாலயத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் பேசுவதற்காக, முன்னணி இந்து குடிமக்களால் சுமந்து வரப்பட்ட பல்லக்கில் சுவாமி விவேகானந்தர் வெகுவிமரிசையாக அழைத்து வரப்பட்டதாகவும், அவர் இலுப்பை மரம் இருக்கும் சந்திப்பில் பல்லக்கில் இருந்து இறங்கி பள்ளி வரை நடந்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தான் ஒரு புனிதமான பூமியில் சென்றுகொண்டு இருப்பதை உணர்ந்ததால் பல்லக்கில் இருந்து இறங்க தூண்டப்பட்டதாகவும், அதனால் இந்த பூமியை தொலைநோக்கு பார்வையுடன் பாலைவனச்சோலை என்று அழைத்ததாகவும், அவர் தனது உரையில் குறிப்பிட்டார். பிற்காலத்தில் சுவாமி சாதனா செய்த காலத்தில், வெயில் மழை என்று பார்க்காமல் இந்த இலுப்பை மரத்தடியில் அமர்ந்து இருப்பார். பிற்காலத்தில் சுவாமி இந்த இடத்தை தனது சமய மையமாகவும் ஆசிரமமாகவும் கௌரவித்த போதும், கொழும்புதுறை ஒரு அழகான பாலைவனச்சோலையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. §§

இது தொடர்பாக இந்துமதி அம்மாவின் கருத்து:§§

சுவாமி கிளிநொச்சியில் வேலை செய்தபோது, சுவாமி விவகானந்தரின் இலங்கை பயணம் (1897) நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் சுவாமி அதிக உற்சாகத்துடன் கலந்துகொண்டார். கோட்டையில் இருந்து இந்து கல்லூரி வரை நடைபெற்ற ஊர்வலம், மற்றும் பின்னர் இந்து கல்லூரியில் நடைபெற்ற பொதுக்கூடடத்திலும் சுவாமி பங்குபெற்றார். §§

அதன் பின்னர் யோக சுவாமி பேசியபோது, விவேகானந்தர் ஆரம்பக்காலத்தில் விவாதித்த தகவல்களை ஆர்வத்துடன் குறிப்பிட்டதில் இருந்து, துறவிகளின் தோழமையில் அவருக்குள் மறைந்து இருந்த மிகப்பெரிய ஆர்வம் வெளிப்பட்டது. §§

யோகநாதன் கிளிநொச்சியில் வாழ்ந்த போது, தனியாக தியானம் செய்துக்கொண்டு ஒரு யோகியை போன்று வாழ்ந்தார். அவருக்கு சுற்றியிருந்த மக்களின் மீது ஆர்வம் இல்லாததால், குறைவாக பேசினார். அவர் தனது ஆன்மீக அனுபவங்களை தனக்குள் கவனமாக பாதுகாத்து வந்தார். பணி நிமித்தமாக கிளிநொச்சிக்கு வந்த மூன்று வருடத்திற்குள், அவர் தனது பணியில் சீராக செயல்படத் துவங்கி, பொறுப்புக்களை நன்றாக நிறைவேற்றி, தனது ஆன்மீக பணியில் எதுவும் தடை ஏற்படுத்தாமல் இருப்பதில் கவனமாக இருந்தார். அவர் அடிக்கடி இரவில் நீண்டநேரம் வரை சாத்திரங்களை படிப்பார், பாடல்களை பாடுவார் அல்லது ஒரு விளக்கிற்கு அருகில் அமர்ந்து தியானம் செய்துக்கொண்டு இருப்பார். அவர் உலகில் வாழ்ந்தாலும், அதில் அவரது ஈடுபாடு மிகவும் குறைவாக இருந்தது. §§

உலக வாழ்க்கையை துறந்து, கவனச்சிதறல் இல்லாமல் ஆத்ம ஞானத்தை நாடவேண்டும் என்ற ஆசை சிறிய வயதில் இருந்தே வேரூன்றி இருந்ததால், அது மற்ற திட்டங்களை முடிவு கட்டியது. அது அவரால் நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. அதுவரை அவர் செய்த நடவடிக்கைகள் மற்றும் அவரிடம் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும், அந்த திசையை நோக்கி வழிநடத்தி சென்றன. அது மட்டுமே அவரது ஆர்வத்தை தூண்டவும் ஊக்குவிக்கவும் செய்தது. ஆனால் தன்னை வழிகாட்டுவதற்கு தனக்கு ஒரு சற்குரு, ஒரு ஞானி தேவை என்பதை அவர் உணர்ந்து இருந்தார். சாத்திரங்கள் உறுதியாக இருப்பதால், உணர்தலை பெற்ற ஒரு மனிதராக, வாழ்ந்துக்கொண்டு இருக்கும் ஒரு சற்குருவின் அருள் இல்லையென்றால், பரமாத்துமாவை நோக்கி செல்லும் பாதை தென்படாது. யோகநாதனுக்கு அதைப்போன்று யாரும் தெரியாததால், அவர் தயக்கத்துடன் கவனமாக காத்துக்கொண்டு இருந்தார். ஒரு சீடன் “அருள் பெறுவதற்கு தேவையான முதிர்ச்சியை பெற்று" தயாராக இருக்கும் போது, குரு கண்டிப்பாக தோன்றுவார் என்று சைவ சமயத்தில் பாரம்பரிய புரிந்துணர்வு இருக்கிறது. §§

இதை யோகநாதன் நன்றாக புரிந்து வைத்து இருந்தார். மாணிக்கவாசகரின் பாடல்கள் மற்றும் வாழ்க்கையில் இருந்த செயல்முறைகளை கற்று இருந்தார். மாணிக்கவாகர் தனது பதினெட்டாவது வயதில் பாண்டிய நாட்டின் பிரதம மந்திரியாக, புத்திசாலி இளைஞராக செல்வந்தராக இருந்தார். அவரிடம் எல்லாம் இருந்தாலும், அறியாமையில் இருந்து வெளிச்சத்தை நோக்கி தன்னை அழைத்து செல்ல ஒரு குருவிற்காக ஏங்கிக்கொண்டு இருந்தார். அவர் தனது ஆசிரியரை முதலில் பார்த்த போது, தனது ஆன்மா தேடிக்கொண்டு இருந்த இலக்கை உணர்ந்து கொண்டதால், தனது வலிமையை இழந்து அந்த ஆசிரியரின் அறிவுறுத்தலுக்கு அடிபணிந்து நடந்தார். அதன் பிறகு அவர் தனது குடும்பம், நண்பர்கள், செல்வம் மற்றும் புகழை கைவிட்டார். அதைப்போன்ற பல துறவிகளின் வாழ்க்கையை பற்றி, யோகநாதனுக்கு தெரிந்து இருந்ததால், ஒரு குருவை தேடிப்பிடிப்பது தன்னை மட்டும் நம்பியில்லை என்றும், அவர் தயாராக இருக்கும் போது, குரு தோன்றுவார் என்பதையும் அவர் அறிந்து இருந்தார். அவர் தனது சாதனாவை தொடர்ந்தார். அவர் தனது பணியை தொடர்ந்து செய்து, ஒரு குருவிற்காக விடாமல் பிரார்த்தித்து வந்தார். §§

யோகநாதனிடம் அவரது திருமணத்தை பற்றி பேசுவது மிகவும் முக்கியமானதாக சின்னையாவிற்கு தோன்றியது. தன் மீது இருந்த கலாச்சார ஈர்ப்புக்களை பற்றி யோகநாதனுக்கு தெரிந்து இருந்ததால், அவர் தன் மாமனை சந்திப்பதை தவிர்த்தார். என்றாவது சின்னையாவை சந்திக்கவெண்டிய சந்தர்ப்பம் இருந்தால், அவர் அதை தவிர்த்து வேறு எங்காவது சென்றுவிடுவார். அவர் துறவறத்தை மேற்கொண்டு, தனக்கு மிகவும் பிடித்தமான ஆன்மீக, துறவற வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடவேண்டும் என்பதை முன்பே முடிவு செய்து இருந்தாலும், அதை தனது சொந்தங்களிடம் தெரிவிக்கவில்லை. அவர் ஏதாவது ஒரு விதமான தவத்தை தினமும்செய்துக்கொண்டு இருந்தாலும், அவர்களுக்கு முன்பாக அவர் எப்போதும் போல இனிமையான ஆன்மாவாக இருந்தார். §§

அவர் தனியாக சேமிப்பு கிடங்கில் அமர்ந்திருக்கும் போது, சிலசமயங்களில் அந்த தற்பொழுதில் நிலைத்து இருப்பதா அல்லது அதில் இருந்து வெளியேறி இந்த உலகம், திரு. பிரவுன், கிளிநொச்சி மற்றும் அனைத்தில் இருந்தும் விலகி செல்வதா என்று இரண்டு மாறுபட்ட விருப்பங்களுடன் திறந்த கதவுகள் வழியாக தீவிர சிந்தனையுடன் வெளியே பார்த்துக்கொண்டு இருப்பார். அவர் தனது தனிப்பட்ட பாதையில் செல்ல ஏக்கத்துடன் இருந்தாலும், ஏதோ ஒன்று அதை தடுத்து நிறுத்தியது. அது சிவனின் சித்தம் என்பதை அவரது இதயத்திற்கு தெரிந்து இருந்தது. அவர் ஆன்மீகரீதியாக அதிக முயற்சி மேற்கொண்டு நிலைத்து இருந்தார், மற்றும் அவரது சாதனா தனித்த முறையில் ஒரு முக்கிய வடிவத்தை பெற்றுக்கொண்டு இருந்தது. அவர் ஓய்வு நேரத்தில் தனது அறையில் அல்லது ஒரு கோயிலில் அமைதியாக உட்கார்ந்து இருப்பார். தான் செய்யவேண்டியது அனைத்தையும் செய்து விட்டதாக, தனக்கு அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதாக அவருக்கு தோன்றியது. அவர் சிலசமயம் இரவு முழுவதும், நிலையாக ஒரு முறைக்கூட அசராமல் தியானம் செய்துக்கொண்டு இருப்பார். அவருக்கு விடுப்பு இருக்கும் நாட்களில், தூரத்தில் இருக்கும் ஒரு கோயிலை தேர்ந்தெடுத்து, கிளிநொச்சியில் இருந்து அந்த கோயில் வரை எங்கும் நிற்காமல் பாதயாத்திரை மேற்கொண்டு, அந்த கோயிலில் வழிபாடு நடத்தி திரும்பும் போது பாடல்களை பாடிக்கொண்டே வருவார். யாழ்ப்பாணம் நல்லூர் கோயிலில், அவர் முதல் சந்நியாசியான முருகப்பெருமானை வழிபட்டார். §§

நல்லூர் முனிவரை சந்தித்தல் §

ஒரு நாள் விதானையார் தனது சகோதரர்களான இராமலிங்கம் மற்றும் துரையப்பாவுடன் யோகநாதனை சந்திக்க வந்து இருந்தார், மற்றும் அவர்கள் எல்லோரும் ஒன்றாக நல்லூர் நோக்கி நடக்க தொடங்கினார்கள். விதானையாரும் யோகநாதனை போல ஆன்மீக ஈடுபாட்டுடன் சாதனா செய்தார். மேலும் விதானையார் இருவரில் மூத்தவராக இருந்ததால், தன்னால் இயலும் போது, யோகநாதனை பாதையில் முன்னேற்றி செல்வதை தனது கடமையாகவும் கருதினார். அன்று ஆகஸ்ட் மாதத்தில் தேர் திருவிழா நடைபெறும் நாளாக இருந்தது. அந்த திருவிழாவில் முருகப்பெருமான் நன்றாக அலங்கரிக்கப்பட்ட தனது தேரில் கோயிலை சுற்றி பவனி வருவார். அது வழிபடுவதற்கு உகந்த சமயமாக இருக்கும். அவர்கள் ஒரு கிணற்றில் குளித்து, நெற்றியில் விபூதியை பூசிக்கொண்டு நல்லூருக்கு புறப்பட்டனர். விதானையார் செல்லப்பாசுவாமியையும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். §§

நல்லூருக்கு செல்லும் வழியில், யோகநாதன் தான் பல வருடங்களுக்கு முன்பாக செல்லப்பசுவாமியை சந்தித்தது பற்றி விதானையாரிடம் கூறினார். அவருக்கு அப்போது பன்னிரண்டு வயதாக இருந்திருக்கும். தனது காலில் ஒரு நோய்க்கிருமி பாதித்த வேதனையில் இருந்த அவர், யாழ்ப்பாணம் நகரத்தில் இருந்த மருத்துவரின் குடிசைக்கு சென்றுகொண்டு இருந்தார். நல்லூர் கோயிலின் தேரடியை கடந்து செல்லும் போது, “இங்கே வா! உனக்கு எதற்காக மருந்து வேண்டும்?” என்று ஒருவர் உரத்த குரலில் கேட்டார். திரும்பிப் பார்த்தால், அந்த கேள்வியை கேட்டது செல்லப்பசுவாமி. அவர் யோகநாதனை அருகில் அழைத்து உட்கார வைத்து, காயத்தை கூர்ந்து நோக்கி ஒரு மருத்துவரை போல தலையை அசைத்தார். அந்த காயத்திற்கு ஆயுர்வேத மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்றும், தான் குறிப்பிட்ட மூலிகையை மசியலாக்கி காயத்தின் மீது ஒரு ஒத்தடம் போல வைத்துக்கொள்ள வேண்டும் என்று செல்லப்பசுவாமி கூறினார். சில நாட்களில் காலில் இருந்த காயம் குணமடைந்தது. அவரை யோகநாதன் நல்லூர் கோயிலுக்கு அருகில் பல வருடங்களாக பார்த்து இருந்தாலும், ஒரு சிறுவனாக அந்த ஞானிக்கு அருகில் அமர்த்தது, அதுவே முதல் முறையாக இருந்தது. §§

யோகநாதனுக்கு பத்து அல்லது பன்னிரண்டு வயதாக இருந்த போது, யாழ்ப்பாண நகரத்திற்கு அருகில் கடைவீதியில் கடையிற்சுவாமியையும் சந்தித்து இருந்தார். அந்த சிறுவனுக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது மற்றும் கடையிற்சுவாமி அவனை தொட்டவுடன், காய்ச்சல் படிப்படியாக குறைந்தது. §§

மதியவேளைக்கு சிறிது முன்பு, யோகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் நல்லூர் வந்து அடைந்து, திருவிழாவிற்காக கூடியிருந்த மக்கள் வெள்ளத்தில் ஐக்கியமானார்கள். அன்று வெப்பம் அதிகமாக இருந்தாலும், கோயில் வளாகம் நிரம்பி இருந்தது. கோயிலுக்குள் நுழையும் வாய்ப்பை தேடிக்கொண்டு இருந்த நூற்றுக்கண்கான மக்கள், கோயிலின் வாசலில் சுற்றிக்கொண்டு இருந்தனர். உடலில் சட்டை இல்லாமல் ஆண்களும் சிறுவர்களும் கோயில் பிரகாரங்களில் இருந்த சூடான மணலின் மீது ஒரு விரதமாக அல்லது சாதனாவாக, அங்கப்பிரத்சணம் செய்துக்கொண்டு இருக்க, பாடிக்கொண்டு இருந்த பக்தர்கள் அவர்களை பின்தொடர்ந்தனர். §§

image§

பக்தியுடன், புனிதமாக மற்றும் ஒரு மகானின் நடத்தையுடன் இருப்பவர்கள் என்றும் முனிவராக, வீடு வாசல் இல்லாமல் விசித்திரமான நடவடிக்கைகளுடன் இருப்பவர்கள் என்றும் இந்து சமயத்தில் தெய்வீக புருஷர்களை இரு முக்கிய பிரிவுகளாக குறிப்பிடப்படுகிறது. அழுக்கு படிந்த வேட்டி, சுத்தமற்ற உடல் மற்றும் விசித்திரமான நடத்தையை கொண்ட செல்லப்பசுவாமியிடம் மகானை காட்டிலும் ஞானியின் பண்புகள் அதிகமாக இருந்தன. இருந்தாலும் மிகவும் உயரிய சமூகத்தின் குருவாக அவர் கருதப்பட்டார். §

• • • • • • • • • • • • • • §§

சாம்பிராணி மற்றும் பூக்களின் ஒரு வாசனைக் கலவை காற்றில் நறுமணத்தை வீச, தேரடி மற்றும் கோயிலுக்கு நடுவில் இருந்த தூசிப்படிந்த திறந்தவெளி முழுவதும் பரவியிருந்த குடைகளின் கடலில் இருந்து இசைக்கலைஞர்களின் குரல்கள் ஒலித்துக்கொண்டு இருந்தன. குடைகள் வெப்பமண்டல பகுதிகளில், மழைக்காக மட்டும் பயன்படுத்தப்படாமல், சுட்டெரிக்கும் சூரியகிரணங்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. திறந்து இருந்த கருவறையின் கதவுகளில் இருந்து மெதுவாக அதிகரித்த நாதஸ்வரம், மேளங்கள் மற்றும் மணிகளின் ஒலிகளை, பிராமணர்களின் மந்திர முழக்கங்கள் வழிநடத்தி சென்றன. அதிகாலையில் இருந்து பூஜைகள் நடைபெற்று வந்தன, மற்றும் அந்த இடம் முழுவதும் முருகப்பெருமானின் அருள் வலுவாக வியாபித்து இருந்தது. §§

பூஜைக்கு அருகில் செல்லவேண்டும் என்று மண்டபம் முழுவதும் அயிரக்கணகான பக்தர்கள் ஒருவருக்கொருவர் தள்ளிக்கொண்டும் இடித்துக்கொண்டும் நின்று இருந்தார்கள். யோகநாதனும் அவரது மூன்று நண்பர்களும் செல்லப்பசுவாமியை பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் தேரடியை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தனர். அவர்கள் உணரும் முன்னர், கூட்டம் விலகியதும், அதோ அங்கே அவர் சுமார் மூன்று மீட்டர் தூரத்தில், தைரியமாக கம்பீரமாக நின்றுக்கொண்டு இருந்தார். மக்கள் கூட்டத்தின் மத்தியில் தெளிவாக தெரிந்த அவரது மெலிந்த உருவம், அவரது இயல்பான ஐந்து அடி ஒன்பது அங்குல உயரத்தை காட்டிலும் உயர்வாக தென்படச்செய்தது.§§

அவரது வன்மையான தோற்றத்தினால் பயந்து, மக்கள் எல்லோரும் அவரை நெருங்காமல் சற்று விலகி நடந்து சென்றனர். அவர் வெருங்கால்களுடன், மெல்லிய தாடி மற்றும் சூரிய வெப்பத்தால் கருகிய மேனியுடன், தனது இடுப்பில் ஒரு முறை மட்டும் சுற்றப்பட்ட ஒரு வெள்ளை துணியை மட்டும் அணிந்து இருந்தார். அவர் தெளிவான புன்னகையுடன் மக்கள் வெள்ளத்தை பார்த்துக்கொண்டும், யாரையும் குறிப்பிடாமல் உரக்க பேசிக்கொண்டும், தன்னை கவனிக்கும் மக்களின் பார்வைகளை பொருட்படுத்தாமலும் இருந்தார். அவரிடம் ஒரு சிங்கத்தின் ஆதிக்கம் மற்றும் சக்தி இயல்பாக அமைந்து இருந்தது. ஒரு ஆண்டியாக இருந்த அந்த சாது, தனது நடத்தை மற்றும் உடைக்கு முரணான தோரணையில் ஒரு அரசரை போன்று நின்று இருந்தார். §§

தன்னை காணவந்த நால்வர் தன்னை காணும் முன்பே, சுவாமி அவர்களை கண்டுகொண்டு தேரடி நோக்கி நடந்து சென்றார். அவர்கள் அவரை பணிவுடன் வணங்கினார்கள். செல்லப்பசுவாமியை யோகநாதனின் நண்பர்கள் பலமுறை சந்தித்து இருந்தார்கள் மற்றும் அந்த கம்பீரமான உயிர்சக்தியை மிகுந்த விழிப்புடன் இருப்பதை தவிர வேறு எந்த வழியும் யோகநாதனுக்கு தென்படவில்லை; ஆனால் தற்போது அவர் ஒரு மிகப்பெரிய ஞானியின் முன்பாக நின்றுக்கொண்டு இருந்தார். §§

செல்லப்பசுவாமி சில நொடிகளுக்கு பிறகு, மூன்று சம்சாரிகளை பார்த்து, “நீங்கள் இங்கிருந்து முதலில் கிளம்புங்கள். உங்கள் குடும்பங்கள் மீது கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு சாதுவாக இருக்கும் தகுதியில்லை,” என்று கூச்சலிட்டார். ஆனால் யோகநாதனை காத்திருக்குமாறு கூறி, “நான் உனது வரவிற்காக காத்து இருந்தேன். நான் உனக்கு விரைவில் முடிசூட்டு விழா நடத்தப்போகிறேன். ” அவர் யோகநாதனை அருகில் அழைத்துக்கொண்டு, ஆன்மீக பண்புகளை பற்றி அறிவுறுத்தல்களை வழங்கினார். பின்பு திடீரென்று தனது வலது கையால் யோகநாதனின் தலையில் அறைந்து, “இது தான் உனது முடிசூட்டு விழா!” என்று கூக்குரலிட்டு ஐந்து முக்கிய போதனைகளை வழங்கினார்: §§

சும்மா இரு. §

எப்போவோ முடிந்த காரியம். §

நாம் அறியோம். §

முழுதும் உண்மை.§

ஒரு பொல்லாப்பும் இல்லை. §§

இதைப்பற்றி யோக சுவாமி இவ்வாறு குறிப்பிட்டார்:§§

எனக்கு அவ்வபோது தெய்வீக அருள் கிடைத்துக் கொண்டு இருந்தது. இந்த ஐந்து பொன்மொழிகள் ஒரு சீடனின் மனதில் பதிந்ததும், செல்லப்பசுவாமி கருணையால் பூத்த திருமுகத்துடன் அந்த சீடனை நோக்கி, “நல்லதப்பா வா, உன்னைப் போன்ற ஆளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்,” என்று கூறுவார். §§

அன்று பொழுது சாய்ந்ததும், அந்த சந்திப்பின் தாக்கத்தில் இருந்து மீளாத யோகநாதன், தனியாக தன் அத்தையின் வீட்டிற்கு திரும்பினார். அந்த சந்திப்பிற்கு பிறகு, அந்த இளைஞன் கிளிநொச்சியில் இருந்து வாரக்கடைசியில் பயணம் மேற்கொண்டு, செல்லப்பசுவாமியை அடிக்கடி சந்தித்ததாக, அந்த கால சம்பவங்களை நினைவுகூர்ந்தவர்கள் கூறினார்கள். §§

உண்மை புரியும் நேரம்§

அதன் பின்னர் நடந்த ஒரு சந்திப்பு, முதல் சந்திப்பை போலவே குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தது என்று யோக சுவாமி சில வருடங்கள் கழித்து, நற்சிந்தனை என்ற தனது புத்தகத்தில் விளக்கி இருந்தார். நல்லூர் கோயிலுக்கு வெளியே ஒரு சாலையில் யோகநாதன் நடந்து சென்றுக்கொண்டு இருந்தார். செல்லப்பசுவாமி தான் குடிக்கொண்டு இருந்த தேரடியின் கம்பிகளை அசைத்துக்கொண்டு, “யாரடா நீ?” என்று அதட்டினார். §§

எளிமையான மற்றும் நுணுக்கமான கேள்வியால், யோகநாதன் மெய்மறந்து நின்றார். அவர்களின் கண்கள் சந்தித்தன மற்றும் யோகநாதன் உறைந்து நின்றார். செல்லப்பசுவாமியின் பார்வை அவரது ஆன்மா வரை ஊடுருவி சென்றது. அவரது கண்கள் வைரத்தை போல, கோபத்துடன் கூர்மையாக இருந்தன, மற்றும் அவை அவரின் கண்களை மிகவும் வலுவாக கட்டுப்படுத்தியதால் யோகநாதன் தனது மூச்சு நின்றதை, வயிறு இறுகியதை, காதுகளில் இதயத்துடிப்பு கேட்பதை உணர்ந்தார். அவர் செல்லப்பசுவாமியை திரும்பிப் பார்த்தார். கண்ணை கூசும் சூரிய ஒளியில் அவர் கண்களை சிமிட்டியதும், ஒரு பிரகாசமான உட்புற ஒளி அவரது கண்களுக்கு பின்னால் தோன்றியது. §§

அவர் முடிவும் இல்லாமல் தொடக்கமும் இல்லாமல் இருக்கும் பரம்பொருளை எனக்கு வெளிப்படுத்தி, சும்மா என்கிற நிலையின் நுணுக்கத்தில் என்னை சுற்றி வளைத்துக் கொண்டார். வேதனைகள் அனைத்தும் மறைந்தன; மகிழ்ச்சிகள் அனைத்தும் மறைந்தன! ஒளி! ஒளி! ஒளி!§§

தலை முதல் கால் வரை, அவரது அங்கங்கள் முழுவதும் பேரானந்த அலைகள் பரவி, அவருக்குள் கவனத்தை கட்டுப்படுத்தின. அவர் இத்தகைய ஒரு அழகு அல்லது ஆற்றலை, இதற்கு முன்பு அறிந்திருக்கவில்லை. அது பேரொலியை எழுப்பி அவரை குலுக்கிய போது, அவர் அசையாமல் நீண்டநேரம் மெய்மறந்த நிலையில் நின்றது போல இருந்தது. அவர் இதை பிற்காலத்தில் நினைவு இழந்த நிலை என்று குறிப்பிட்டார். §§

துயரம் நிறைந்த பிறவி சக்கரத்தின் சுழற்சியை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு, அவர் என்னை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, பேரின்பத்தில் மூழ்கடித்தார். நான்கு வழிகள் மூலம் கொடை மற்றும் தவம், சரியை மற்றும் கிரியை ஆகியவற்றை நிலைக்கச்செய்து, அவர் தன்னை போல என்னை மாற்றிவிட்டார். §§

அவரது தலையில் நித்தியத்தின் சூட்சுமமாக, உயர் சுருதியில் இருக்கும் உட்புற ஒலியான நாத நாடி சக்தி ஏற்படுத்திய உறுமல், மற்ற அனைத்தையும் மூழ்க செய்தது. எல்லா திசைகளில் இருந்தும் விரைந்து வந்த ஒளிக்கடல், அவர் தலை மீது பெருக்கெடுத்து கீழே உருண்டு ஓடியதால், கோயில் மணியோசை வட்டமிடும் தூரத்தில் மங்கின. அவரால் அதை ஒரு நொடிக்கூட கட்டுப்படுத்த முடியவில்லை. தன்னை தெய்வீகத்தன்மை ஈர்த்துக்கொள்ள அனுமதித்தார். உடல் ரீதியாக அவராக காட்சி அளித்தாலும், உளரீதியாக அவராக இல்லை. §§

குருவின் அருளால், நான் வெற்றிகொண்ட பேரானந்தத்தில் எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை. எனக்கு கிடைத்த அமைதியில் அறியாமை தெரியவில்லை. நான் புரிந்துகொண்ட பரமாத்துமா, செயலற்று இருந்தார். நான் அட்டாங்க யோகத்தின் மூலம் விடுதலை பெற்றேன்.§§

யோகநாதன் பல நிமிடங்களுக்கு, ஒரு சிலையை போல மெய்மறந்த நிலையில் நின்றுக்கொண்டு இருந்தார். அவருக்கு இயல்பான சுயநினைவு திரும்பி கண்களை விழித்து பார்த்த போது, செல்லப்பசுவாமி அவரையே தொடர்ந்து பார்த்துக்கொண்டு காத்து இருந்தார். “ஆசையை விட்டுவிடு!” என்று அவர் கத்தினார். அருகில் சென்றுக்கொண்டு இருந்த மக்களுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. “ஆசையில்லாமல் இருப்பதற்கும் ஆசையை வளர்த்துக் கொள்ளாதே!” §§

அந்த கூர்மையான கண்களில் இருந்து வெளிவந்த குருவின் அருள் தனக்குள் முழுவதுமாக பாய்ந்து செல்வதை யோகநாதன் உணர்ந்தார். அவருக்கு அதற்கு முன்பு, அத்தகைய எழுச்சியை பற்றி தெரியாது. வியப்பில் இருந்த அவருக்கு, “இயல்பாக எதுவும் தீய பண்புடன் இருப்பதில்லை. ஒரு பொல்லாப்பும் இல்லை!” என்று போதித்த வார்த்தைகளின் பொருள் அப்போது புரியவில்லை என்றாலும், அவற்றை அறியாமை மற்றும் மாயையை அகற்றும் நோக்கத்துடன் குரு வழங்குகிறார் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். §§

பிற்காலத்தில் யோக சுவாமி, இந்த முக்கியமான சந்திப்பை குறிப்பிட்டு “நான் எனது குருவை நல்லூரில் பார்த்தேன்,” என்ற ஒரு பாடலை எழுதினார்:§§

image§

யோக சுவாமி தன் வாழ்க்கையில் நிலைமாற்றம் பெற்ற நாளை பலமுறை குறிப்பிட்டு இருந்தார். அன்று அவர் நல்லூர் தேரடி வழியாக சென்றுக்கொண்டு இருந்த போது, அவர் செல்லப்பசுவாமியின் தெய்வீக அருளால் மெய்மறந்த நிலையை அடைந்தார். “யாரடா நீ?” என்று குரு சவால் விட்டபோது, சீடன் ஒரு எல்லையற்ற ஒளியில் மூழ்கினார். அந்த ஒளி அவரை நிரந்தரமாக மாற்றிவிட்டது.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

மிகப்பெரிய தபஸ்விக்கள் வாழும் இடமான நல்லூரில் எனது குருவை சந்தித்தேன். அவர் பல கடுமையான வார்த்தைகளை சொல்லிக்கொண்டு இருந்தார், ஆனால் நான் அசையாது நின்றேன். “யாரடா நீ?” என்று என்னை சவால்விட்டார். அன்றே அவரது அருளை பெறுவதில் நான் வெற்றி அடைந்தேன். §§

நான் மகிமையாக இருந்த, அவரது அருளில் நுழைந்தேன். அங்கே எங்கும் இருள் பரவி இருந்தது. என்னால் அதன் பொருளை புரிந்துகொள்ள முடியவில்லை. §§

“ஒரு பொல்லாப்பும் இல்லை,” என்று அவர் கூறியது எனக்கு கேட்டது. அந்த இரகசியத்தின் ஆழம் புரியாமல், திகைத்து நின்றேன். §§

நான் குழப்பத்தில் நின்றுக்கொண்டு இருந்த போது, அவர் என்னை அன்புடன் பார்த்தார், உடனே எனக்கு வேதனையை வழங்கிய மாயை என்னை விட்டு விலகி மறைந்துவிட்டது. §§

அவர் கந்தன் கோயிலின் நுழைவாயிலுக்கு முன்பாக நின்றுக்கொண்டு, எனது தலைக்கு மேல் சுட்டிக்காட்டி பேசினார். எனக்கு உடல் இருக்கும் உணர்வை மறந்து, திகைத்து நின்றேன். §§

நான் வியப்பில் நிலைத்து இருந்த போது, எனது அச்சம் மறையவேண்டும் என்று அவர் வேதாந்தத்தின் சாரத்தை பணிவுடன் விளக்கினார். மிகபெரிய தவத்தை சாதித்துள்ள, ஈடு இணையற்ற மகான் “இது அப்படியே உள்ளது. ஆரறிவார்? இந்த வார்த்தைகளின் பொருளை புரிந்துகொள்,” என்று கூறி எனது முகத்தை உற்று நோக்கினார். §§

இந்த உலகில் எனது சொந்தங்கள், எனது சகோதரர்கள் மற்றும் எனது பெற்றோர்கள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்தனர். மேலும் ஈடு இணையற்ற எனது குருவின் அருளால், நான் ஈடு இணையற்றவனாக நிலைத்து இருந்தேன்.§§

இந்த அனுபவத்தை யோகநாதன் புரிந்துகொள்ள முயலும் போது, குரு அவர் இருப்பதையே மறந்து, தூரத்தில் இருந்த கூரைகளை பார்த்து தனக்குள் முணங்கிக்கொண்டு, தான் சொல்லியதற்கு தானே தலையை அசைத்த பின்னர், நடந்து செல்லத் தொடங்கினார். அவரை யோகநாதன் பின்தொடர ஆரம்பித்தார். உடனே அந்த முனிவர் திருப்பிப் பார்த்து, “நான் திரும்பும் வரை காத்திரு!” என்றார். §§

குரு மூன்று நாட்கள் கழித்து வந்தார். அதுவரை மனதில் உறுதியுடன் இருந்த யோகநாதன், குரு விட்டுச்சென்ற அதே இடத்தில் அவருக்காக காத்து இருந்தார். செல்லப்பசுவாமி எதையும் பேசவும் இல்லை, தனது நடையை நிறுத்தவும் இல்லை. அவர் யோகநாதனிடம் தனக்கு பின்னால் நடந்து வருமாறு சைகை காண்பித்து, தனக்கு உணவை தயார் செய்ய பயன்படுத்திய, திறந்தவெளி நெருப்பு குழிக்கு அழைத்து சென்றார். அங்கே அவர் யோகநாதனுக்கு தேநீர் மற்றும் காரமான காய்கறி கூட்டு பரிமாறி, வழியனுப்பி வைத்தார். §§

அவர் தனது புதிய சீடனை வரவேற்கவும் இல்லை அல்லது போற்றவும் இல்லை; சீடனிடம் திரும்பி வா அல்லது திரும்பி வரவேண்டாம் என்று சொல்லவும் இல்லை. அவர் அப்படி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. குரு தன்னை ஏற்றுக்கொண்டது, யோகநாதனுக்கு புரிந்து இருந்தது. அதன் பிறகு அவரது பயிற்சி தொடங்கியது. யோகநாதனுக்கு வாய்ப்பு கிடைத்த போது, குனிந்து செல்லப்பசுவாமியின் காலை தொட்டு வணங்க முயன்றார், ஆனால் அவரது குரு கதற உக்காரமிட ஆரம்பித்துவிட்டார். முனிவர் சற்று பின்வாங்கி, “அதைப்பற்றி கனவிலும் நினைக்காதே!” என்று அவரை அதட்டினார். யோகநாதன் குழப்பம் அடைந்தாலும் அடிபணிந்து நடந்ததால், குரு அமைதி அடைந்து, “நீயும் நானும் ஒன்று,” என்று கூறினார். “உன்னை என்னிடம் இருந்து தனியாக பார்த்தால், நீ பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.”§§

செல்லப்பசுவாமி வலியுறுத்திய குரு மற்றும் சீடனின் ஒருமை மட்டுமல்லாமல், ஒவ்வொன்றிலும் இருக்கும் ஒருமை, சாதாரண மனிதனுக்கு விசித்திரமாக இருந்தாலும், அது பழங்கால ஆகம உரைகளின் உண்மையான வெளிப்பாடாக விளங்குகின்றன. அவற்றில் இருந்து ஒரு பகுதி: §§

“சிவபெருமான் என்னை போன்று இல்லை. உண்மையில், நான் சிவபெருமானை போன்று இல்லை.” அத்தகைய தவறான வேறுபாட்டு எண்ணங்களை, மிகவும் புனிதமான சாதகர் தவிர்க்க வேண்டும். “சிவபெருமானாக இருப்பது உண்மையில் நான் தான்.” அவர் சிவபெருமானுக்கும் தனக்கும் இடையில் இருக்கும் இந்த அத்வைத சங்கமத்தை பற்றி எப்போதும் ஆழமாக சிந்தித்துக்கொண்டு இருக்கட்டும்.§§

ஒருவர் அத்தகைய அத்வைத சங்கமத்தின் மீது ஒருமுக சிந்தனையுடன் இருப்பதால், அவர் தனது சொந்த பரமாத்துமாவிற்குள், நிரந்தரமாக எல்லா இடத்திலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார். அவர் தனக்குள் தன்னை நிலைநிறத்திக் கொண்டுள்ளதால், ஒவ்வொரு ஆன்மாவின் உள்ளும், ஒவ்வொரு பொருளின் உள்ளும் மற்றும் வெளிப்பட்டு இருக்கும் எல்லா உடல்களிலும், தன்னை வெளிப்படுத்தி இருக்கும் இறைவனை நேரடியாக காண்கிறார். அத்தகைய ஒரு அனுபவம் நடைபெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை.§§

பிறப்பு இல்லாதவராக அதிகாரப்பர்வமான எல்லா சாத்திரங்களாலும் அறிவிக்கப்பட்டு, படைப்பாளராக பிரபஞ்சத்தை கட்டுப்படுத்துபவராக, மாயையில் இருந்து பிறந்த உடலுடன் தொடர்பு இல்லாதவராக, மாயையில் இருந்து வளர்ச்சி பெற்ற பண்புகள் இல்லாதவராக மற்றும் அனைத்திற்கும் பரமாத்துமாவாக இருப்பது, உண்மையில் நான் தான். இந்த அத்வைத சங்கமத்தில் எந்த சந்தேகமும் இல்லை.§§

சர்வஞானோத்தர ஆகமம் 2.13-16§§

செல்லபசுவாமி மீது யோகநாதன் அதிகமான மரியாதையை செலுத்தினார். அவர் பிற்காலத்தில், தனது ஆழமான மரியாதையை, நற்சிந்தனை என்ற தலைப்பில் எழுதிய பாடல்கள் மற்றும் கட்டுரைகளில் வெளிப்படுத்தினார். அதில் இருந்து ஒரு தொகுப்பு:§§

“ஒரு பொல்லாப்பும் இல்லை,” என்று எனது இதயத்தை உருக வைத்த, குருநாதரின் திருவடிகளை வணங்குவதற்கு வா மனமே. “முழுதும் உண்மை" என்று சொல்லி எனக்கு உறுதியை வழங்கிய, தலைவனை நான் வணங்கப்பொகிறேன் என்பதால், விரைந்து வா மனமே. அன்று நல்லூரில் “நாமறியோம்” என்று அறிவித்தவரை, விரைந்து சென்று சந்திக்க எங்களுக்கு அனுமதி வழங்கிட வா மனமே. §§

“அப்படியே யுள்ளது” என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கும் செல்லப்பனை காண விரைந்து வா மனமே. உலகமக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் கலந்த இதயத்துடன் தேரடிக்கு அருகே “ஆரறிவார்?” என்று அறிவித்தவரை, போற்றி பாட வா மனமே. தவத்தின் பாதையில் யாராலும் அளக்க முடியாத ஆழத்திற்கு சென்று, சிங்கங்களின் தலைவனாக இருக்கும் சற்குருவை புகழ்வதற்கு, இப்போதே நல்லூருக்கு வா மனமே. ஆசையும் கோபமும் இல்லாமல், கந்தலான துணியுடன் இருக்கும், நமது தந்தையை காண, ஆனந்தமாய் வா மனமே. §§

மந்திரங்களும் தந்திரங்களும், கௌரவம் அல்லது அகௌரவம் அறியாத அந்த அழகானவரை காண, என்னை பின்தொடர்ந்து வா மனமே. மத்தனை போல சுற்றித்திரிந்து, யாசகத்தை மட்டும் நம்பி இருந்த, குரு மீது உனது அன்பை பொழிய, அஞ்சாமல் வா மனமே. மாறாத அருளை வழங்கி, முப்பத்தி ஆறு தத்துவங்களை கடந்து இருக்கும் தலைவனுடன் சேர்வதற்கு வா மனமே.§§

கிளிநொச்சியில் ஆன்மீக பணி§

வாழ்க்கையை மாற்றி அமைத்த அனுபவத்திற்கு பிறகு, யோகநாதன் தனது வேலையை தொடர கிளிநொச்சிக்கு திரும்பினார். அவர் ஒவ்வொரு வாரக்கடைசியிலும், தனது சற்குருவுடன் இருக்க நல்லூருக்கு அறுபத்தி ஐந்து கிலோமீட்டர் தூரம் யாத்திரை மேற்கொண்டு, திங்கள் காலை தனது கடமைகளை நிறைவேற்ற மீண்டும் நடைப்பயணம் மேற்கொள்வார். ஆனாலும் வேலையை கைவிட்டு, குருவுடன் நல்லூரில் இருக்கவேண்டும் என்று அவர் மனம் ஏங்கியது. இரணைமடுவில் அவரது தினசரி வேலைகளை தொடர்ந்து செய்ய, அவர் சாதனாவில் மேற்கொண்ட தீவிர முயற்சி மட்டுமே துணை புரிந்தது. §§

எந்த தவமும் கடினமாக இருக்கவில்லை. பல வருடங்கள் கழித்து, ஒரு நாள் யோக சுவாமி என்று அழைக்கப்பட்ட ஒரு முனிவரை காண ஒரு இளைஞர் வந்தான். அவர்கள் ஒரு சில நிமிடங்கள் உரையடினார்கள். அப்போது அந்த இளைஞன் தன்னை சுத்தப்படுத்திக்கொள்ள, தனது உடலில் மிளகாய் தூளை தடவிக்கொண்டு, உச்சி வெயிலில் அமர்ந்து இருப்பதை வழக்கமாக கொண்டு இருந்ததாக குறிப்பிட்டான். யோக சுவாமி கண்களில் உற்சாகத்துடன், “ஒரு அருமையான தபஸ்! நானும் அதை செய்து இருக்கிறேன்!” செயின்ட் யோக சுவாமி மற்றும் டெஸ்ட்டமெண்ட் ஆஃப் ட்ருத்தில் ரத்னா மா நவரத்தினம், இவ்வாறு விவரிக்கிறார்: §§

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் சுவாமி, பல ஆன்மீக நுண்ணுணர்வுகளை அனுபவித்து, தனது குருவின் மீது வலுவாக ஈர்க்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கொழும்புத்துறையில் இருந்து விதானே திருஞானசம்பந்தர், கதிரிதம்பி வெட்டிவேலு, பொன்னையா உபாத்தியாயர், சிவகுருநாதர் துரையப்பா மற்றும் தியாகர் பொன்னையாவை உள்ளடக்கிய ஒரு பிரத்யேக குழு நல்லூரில் செல்லப்பரை அடிக்கடி சந்தித்து கொண்டிருந்தது. தனக்கு பணிச்சுமை குறைவாக இருக்கும் போது, அவர்களுடன் சுவாமி இணைந்து கொள்வார். தனது குருவிற்கு அருகில் இருக்கவேண்டும் என்ற தூண்டுதல் அவருக்கு மிகவும் வலுவாக இருந்ததால், செல்பப்பரை சந்திக்க கிளிநொச்சியில் இருந்து நல்லூர் வரை நாற்பத்தைந்து கிலோமீட்டர் தூரம் உற்சாகத்துடன் நடந்து சென்றதைப் பற்றி, அவர் சிலசமயங்களில் நினைவு கூர்வார். §§

பணியிடத்தில் தனக்கு விடுப்பு நேரம் கிடைக்கும் போது, யோகநாதன் தனது குருவின் அறிவுறுத்தல்கள் மற்றும் தனது சாதனாவில் ஆழமாக மூழ்கி இருப்பார். இந்துமதி அம்மா அந்த நாட்களைப் பற்றி இவ்வாறு விவரிக்கிறார்: §§

சுவாமி அமைதியாக அமர்ந்து இருக்கவும், தான் செல்லப்பசுவாமியிடம் இருந்து கற்றது அனைத்தையும் பயிற்சி செய்யவும், அதைப்பற்றி ஆழமாக சிந்திக்கவும், கிளிநொச்சி காடு ஒரு பொருத்தமான ஆசிரமமாக அமைந்தது. நீண்டநேரத்திற்கு ஆழமாக சிந்தித்தல், ஆழமான நித்தைக்குள் [தெய்வீக தன்மையில் மூழ்கி இருக்கும் நிலை] நுழைதல் மற்றும் தியானத்தில் அமர்ந்து யோக பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், அவர் தனது குருவிடம் இருந்து கற்றது அனைத்திலும் பயிற்சி பெற்றார். “தன்னை புரிந்துகொள்வதே”, அவரது பிரதான குறிக்கோளாக விளங்கியது. அவர் தனக்குள் இருந்த புத்தகத்தை மிகவும் கவனமாக, மிகவும் எச்சரிக்கையாக ஆய்வு மேற்கொண்டார். அவர் மதம் தொடர்பான புத்தகங்களை எப்போதாவது புரட்டிப் பார்ப்பார். அப்படி பார்த்தாலும், அதை ஒரு பொழுதுபோக்கு சாதனமாகவே பயன்படுத்துவார். அவர் தனது சாதனாவில் முதிர்ச்சி பெறத்தொடங்கியதும், யோகத்தில அமர்ந்து இருக்கும் போது, தியானத்தின் பேரானந்த புதையலை அனுபவிக்க தொடங்கினார். §§

இறைவனுடன் கலந்த ஒரு ஆனந்தமான வாழ்க்கையை வாழ்வதற்கு, கிளிநொச்சி தனக்கு ஒரு பயிற்சி கூடமாக விளங்கியது என்பதை சுவாமி என்றும் மறவாமல் இருந்தார். பிற்காலத்தில், அந்த பகுதி வழியாக தனது சீடர்களுடன் பயணம் செல்லும் போது, “இந்த இடம் தியானம் செய்வதற்கு மிகவும் உகந்தது,” என்று தான் யோகப்பயிற்சி மேற்கொண்ட இடத்தை சுட்டிக்காட்டி கூறுவார். §§

1897 ஆம் ஆண்டின் முடிவில், யோகநாதன் தனது குருவின் அருகாமையில் இருக்க முடிவு செய்து, தனது பணியை கைவிட முடிவு செய்தார். இதைப்பற்றி எஸ். அம்பிகைபாகனின் குறிப்பு: §§

சுவாமிகள் வாழ்க்கையில் 1897 வருடம் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. அந்த வருடத்தில், சுவாமி தனது பணியில் இருந்து விலகி யாழ்ப்பாணம் திரும்பி இருக்கவேண்டும். அப்போது சுவாமிகளுக்கு சுமார் இருபத்தி ஐந்து வயதாக இருந்திருக்கும். அந்த சமயத்தில் சுவாமிகள் தனது சமய வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறினார். §§

இந்துமதி அம்மா இந்த நிலைமாற்ற காலத்தை பற்றி விவரிக்கிறார்: §§

கண்ணுக்கு தென்படாத காட்சிகளை காண்பிக்க காத்து இருந்த, அருள் மற்றும் இரக்க குணம் நிறைந்த குருவான, செல்லப்ப தேசிகரின் மீது இருந்த தணியாத அன்பு, யோகமுனியிடம் [அமைதியான முனிவர் என்று பொருள்படும் யோக சுவாமியின் இன்னொரு பெயர்] வளர்ச்சி பெற தொடங்கி இருந்தது. தனக்கு அறிவு மற்றும் ஞானத்தின் பாதையை விளக்கி, “வேதங்களை ஆய்வு செய்யாது, அதை அறிந்துக்கொண்டு உணரவும் செய்த” பேரறிவாளன், செல்லப்பாவை பார்த்து அவர் திகைத்து நின்றார். அவர் நாமம் சொல்ல சொல்ல, அதன் இனிமை அதிகரித்துக்கொண்டு சென்றது. செல்லப்பாவின் உருவமே தியான மூலமாக விளங்கியது. அவரது பாதங்களையே பூஜை மூலமாயின. அவரது அமுதமொழிகளே மந்திர மூலமாய் விளங்கின. ஒரு திசைகாட்டி எப்போதும் வடக்கு திசையை காண்பிப்பதை போல, அவர் எந்த பணியில் இருந்தாலும், எந்த வேதனை சகித்துக்கொண்டு இருந்தாலும், அவரது மனம் எப்போதும் தேரடியின் மீதே இருந்தது. ஒளியும் அறியாமையும் ஒன்றாக இருக்க முடியாது என்பதை உணர்ந்த யோகமுனி, தனது வேலை மற்றும் மற்ற லௌகீக சங்கதிகளில் இருந்து விலக முடிவு செய்தார். அவர் சொந்தங்கள், பெற்றோர்கள் மற்றும் உடன்பிறப்புக்களை காட்டிலும் நல்ல முனிவர்களின் சகவாசம் சிறந்தது என்பதை உணர்ந்து, தனது உறவுகளை துறந்தார். இதைப்போல அவர் தனது வேலை, உற்றார் உறவினர்களை துறந்து, தன்னை முழுமையாக அர்பணித்துக்கொள்ள முடிவு செய்து, தேரடி வந்தடைந்தார். அங்கே அவர் செல்லப்பாவின் காலடிகளில் அவரது நல்ல சீடனாக நிலைத்து இருந்தார். §§

திரு. பிரவுன் நல்ல மனநிலைக்கு வரும் வரை காத்திருந்த பிறகு, யோகநாதன் தான் வேலையை விட்டு விலகுவதை பற்றி தெரிவித்தார். கண்டிப்பான குணமுடைய ஆங்கிலேயருக்கு இயல்பான சோகம் ஏற்பட்டது மற்றும் அவர் யோகநாதனின் மனதை மாற்ற முற்பட்டார். ஆனால் தான் எடுத்த முடிவில் யோகநாதன் உறுதியாக இருந்தார். அந்த முடிவை ஒரு வருடம் ஒத்தி வைக்க பிரவுன் முயன்றார். ஆனால் இறுதியில், “நீ பணியை விட்டு விலகுவதாக இருந்தால், உன்னைப் போன்ற ஒருவனை பொறுப்பில் நியமிக்கும் பொறுப்பையாவது ஏற்றுக்கொள்,” என்ற நிபந்தனையுடன் ஏற்றுக்கொண்டார். §§

அதை யோகநாதன் ஏற்றுக்கொண்டார். அவர் தன் வேலையில் இருந்து மட்டும் விலகாமல், உலக வாழ்க்கையையும் துறக்கவிருந்தார். இது பிரவுனுக்கு தெரியாது, அப்படி தெரிந்து இருந்தாலும் அவரால் புரிந்துக்கொண்டிருக்க முடியாது. யோகநாதன் தான் சென்ற பிறகு குழப்பம் அல்லது பதட்டநிலை ஏற்படக்கூடாது என்று நினைத்ததால், தனக்கு பிறகு பணியில் சேர்பவருக்கு போதுமான பயிற்சி அளிக்கும் வரை பணிக்கு வருவதாக வாக்கு அளித்தார். அவர் அந்த பணிக்கு, 19 வயது நிரம்பிய தனது தம்பி வைத்தியலிங்கத்தை பரிந்துரைத்தார். எப்போதும் ஒரு நிர்வாகியாக செயல்படும் பிரவுன், அந்த இளைஞன் யோகநாதனை போல பணியாற்றினால் மட்டுமே பணியில் சேர்த்துக்கொள்வேன் என்று திட்டவட்டமாகக் கூறினார். தனக்கு வேலை கிடைத்ததில் வைத்தியலிங்கம் மகிழ்ச்சி அடைந்தார். அவர் யோகநாதனின் எளிய குடியிருப்பை பகிர்ந்துகொண்டு, இருவரும் ஒன்றாக இருந்த ஒரு சில வாரங்களில், அவரது அனுபவத்தை கிரகித்துக்கொண்டார். §§

நிறுவனத்தின் சேமிப்புக்கிடங்கில் யோகநாதனுடன் இணைந்து இருந்த காலத்தை வைத்தியலிங்கம் நன்றாக நினைவில் வைத்து இருந்தார். அந்த காலகட்டத்தில் சுவாமியின் வாழ்க்கை பற்றிய தகவலுக்கு, அவரது நினைவுகள் ஒரு முக்கிய மூலமாக விளங்கியது. அண்ணனின் உறுதியான பழக்கங்கள் மற்றும் ஆச்சாரமான வாழ்முறை அவரை வியப்பூட்டியது. அவருக்கு சமயத்தில் அதிக ஈடுபாடு இருப்பதை குடும்பத்தினர் எல்லோருக்கும் தெரிந்து இருந்தாலும், அவர் அதிக தொலைவில் கிளிநொச்சியில் வாழ்ந்து வந்ததால், அவரது நாட்டத்தின் ஆழத்தை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. §§

யோகநாதன் யோகாசனத்தில் அமர்ந்துகொண்டு, சிவபெருமானின் அருளுக்காக உரத்த குரலில் வேண்டியதால், பல இரவுகள் தான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டதாக வைத்தியலிங்கம் கூறினார். அவர் தான் இருக்கும் அறையைப் பற்றிய கவனமில்லாமல், தனக்குள் எழுச்சி பெற்று உணர்தலை வழங்கவேண்டும் என்று சிவபெருமானின் ஆற்றலின் அம்சமான சக்தியிடம் பிரார்த்தனை செய்வார். “எனது அன்னையே! எனது ஐயனே!” என்று அவர் கண்ணீர் மல்க இறைவனின் அருளை வேண்டிக்கொண்டு இருக்கும் போது, விழித்திருந்த வைத்தியலிங்கம், இதனை பல மணி நேரங்களுக்கு கேட்டுக்கொண்டு இருப்பார். யோகநாதனுக்கு ஒரு சாதாரண லௌகீக வாழ்க்கை என்றுமே திருப்தியை அளித்து இருக்க முடியாது என்று குடும்பத்தில் மற்றவர்கள் அறியாததை தான் அறிந்துக்கொண்டதாக அவர் கூறினார். அவர் மற்றவர்களின் சாதிக்க நினைக்கும் கற்பனையை கடந்த, பரசிவத்தை உணரவேண்டும் என்ற ஒரு உறுதியான முடிவுடன் இருந்தார். இதைப்பற்றி அவர் பிற்காலத்தில், இந்த பூமியில் பிறவி எடுத்ததே அதற்காகத் தான் என்று குறிப்பிட்டார். §§

துறவறம் மேற்கொள்ளுதல் §

வைத்தியலிங்கத்தின் பணியில் பிரவுனுக்கு திருப்தி ஏற்பட்டு, யோகநாதன் போகலாம் என்று சொல்லும் வரை, சகோதரர்கள் இருவரும் ஒன்றாக பணிபுரிந்து வந்தனர். தான் முழுநேரமும் சாதனாவை மேற்கொள்ளவும், லௌகீக வாழ்க்கையை துறக்கவும் மற்றும் தனது குருவுடன் இருக்கவும் இரணைமடுவில் இருந்து புறப்பட்டார். அவர் அதற்கு தயாராக இருந்ததற்கு, பல பிறவிகளாக மேற்கொண்ட முன்னேற்பாடுகள் காரணமாக இருந்தன. அவர் மேற்கொண்ட தவம் மற்றும் தியானங்கள், முன்பே தனது லௌகீக தளைகளை அறுத்துக்கொண்டு இருந்தன. அத்தை முத்துப்பிள்ளை வீட்டிற்கு யோகநாதன் திரும்பினார். அங்கே அவளுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு சிறிய குடிசையில் வாழ அனுமதி பெற்றுக்கொண்டார். அவர் துறவறம் மேற்கொள்ளப் போவதாக சொன்னதும் அத்தை ஆச்சரியம் அடைந்தாள், ஆனால் அவரிடம் தென்பட்ட மனஉறுதியை பார்த்ததும் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டாள். §§

இந்த காலகட்டத்தைப் பற்றி, சிவயோக சுவாமியார்: வரலாறும் சாதனைகளும் என்ற தனது புத்தகத்தில் மு. அருணாசலம் நமக்கு விளக்குகிறார்: §§

1897 மற்றும் 1900 வருடம் வரை, கொழும்புத்துறை பகுதியில் இருந்த அத்தை முத்துப்பிள்ளையின் வீடு, யோகநாதனின் நிரந்தர வீடாக இருந்தது. யோகநாதன் அவள் வீட்டில் இருந்து, சில நாட்கள் நல்லூர் கிளம்பி சென்று, அங்கே பகல் பொழுது முழுவதும் தனது குரு செல்லப்பருடன் கழிப்பார். யோகநாதன் சிலசமயங்களில், தனது நண்பர்களுடன் (விதனையார், துரையப்பா போன்றவர்கள்) நல்லூர் கோயில் சென்று வருவார். மேலும் இந்த காலகட்டத்தில், யோகநாதன் கிளிநொச்சி வரை நடந்து சென்று, அமைதியான மரத்தடியில் தியானப்பயிற்சி மேற்கொள்வார். அதன் பிறகு அவர் மீண்டும் கொழும்புத்துறை வரை நடந்து வந்து, அங்கே சில நாட்கள் தங்கி நல்லூர் கோயிலில் தனது குருவை சந்திப்பார். இது 1900 வருடம் வரை தொடர்ந்தது. 1901 முதல் 1910 வரை, அவர் தனது குரு வழங்கிய தீவிரமான பயிற்சி மற்றும் சாதனாக்களை மேற்கொண்டார். §§

யோகநாதன் தனது தம்பியுடன் கிளிநொச்சி மலைகளுக்கு சிறிய பயணம் மேற்கொண்டு, அங்கே வாரக்கடைசிகளில் தங்கியிருந்ததைத் தவிர, அவரது வாழ்க்கையின் மையமாக யாழ்ப்பாணம் விளங்கியது. அவர் தினமும் அதிகாலையில், தனது குருவுடன் இருக்க தனது அத்தையின் வீட்டில் இருந்து நல்லூர் வரை நடந்து செல்வார். அவரை செல்லப்பசுவாமி சிலசமயம் திருப்பி அனுப்பிவிடுவார். யோக சுவாமி தனது குருவுடன் தேரடியில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டாரா? இதைப்பற்றி சுவாமி எதையும் பேசவில்லை. ஆனால் 1906 முதல் 1910 வரையிலான காலகட்டத்தில், தனது குருவுடன் அதிகாலையில் நடந்து செல்வதற்கு தயாராக இருப்பதற்காக, அவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, முருகன் கோயிலின் தேரடியில் தங்கி இருந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. அவர்கள் இருவரும் சேர்ந்து தினமும் பயணம் செய்து, உணவிற்காக யாசகம் செய்ததாக கண்கூடாக பார்த்த சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. அந்த காலகட்டத்தில், யோக சுவாமியின் பழக்கங்களாக தான் கேள்விப்பட்டதை, அ. தில்லையம்பலத்தின் மகன் தி. சிவயோகபதி இவ்வாறு விரிவரிக்கிறார்:§§

அவர் காலையில் இருந்து பொழுது சாயும் வரை, தொடர்ந்து தன் குருவுடன், நல்லூர் தேரடி மற்றும் நல்லூரை சுற்றியுள்ள பகுதிகள் அல்லது அவரது குடிசையில் இருப்பார். அவர் மெதுவாக மிகவும் உயரிய சாதனாக்களில் ஈடுபட்ட காலத்தில், தன் குருவுடன் தொலைதூர இடங்களுக்கு கால்நடையாக சென்று மீண்டும் தேரடிக்கு கால்நடையாக திரும்புவார். அவரது குருவிற்கு ஒரு குறிப்பிட்ட திட்டம் இல்லை என்பதாலும், குரு திடீரென்று விடியற்காலையில் எழுந்து ஏதாவது ஒரு தொலைதூர இடத்திற்கு கிளம்பிவிடுவார் என்பதாலும், யோக சுவாமி எப்போதும் தன் குருவின் காலடிகளில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அதனால் யோக சுவாமி பெரும்பாலும் இரவுப்பொழுதை தேரடியின் படிகளில் கழித்து, தன் அத்தையின் வீட்டிற்கு எப்போதாவது செல்வார். §§

யோக சுவாமி தன் குருவுடன் இருக்கும் போது, ஒரு அமைதியான சாட்சி போல நின்று இருப்பார். அவரது மனம் வேறு ஏதாவது ஒன்றின் மீது கவனம் செலுத்தினால் அல்லது “குரு நம்மிடம் எதையும் பேசவில்லை,” என்று நினைத்தால், திடீரென்று செல்லப்பசுவாமி அவரிடம் எதையாவது கொண்டு வருமாறு சொல்லி, குரு செய்யும் எல்லா செயலும் சீடனின் முழுமையான கவனத்திற்கு தகுதியானவை என்பதை நினைவூட்டு்வார். நேரம் அல்லது இடம் அல்லது சுற்றுப்புறம் எதுவாக இருந்தாலும், தனது சீடன் எதைப்பற்றி நினைக்கிறான் என்பது செல்லப்பசுவாமிக்கு தெரிந்து இருந்தது. செல்லப்பசுவாமி விரும்பாத ஒன்றை யோக சுவாமி நினைத்தால், அல்லது தன்னையும் தனது குருவையும் ஒன்றாக கருதவில்லை என்றால், செல்லப்பசுவாமி அவரை தீவிரமாக கடிந்துக்கொள்வார். அந்த கடிந்துரையை மற்றவர்களால் தாக்கப்பிடிக்க முடியாது. இந்துமதி அம்மா இந்த கடினமான சாதனாவை விளக்குகிறார்:§§

செல்லப்பா மர்மங்களில் மர்மமாக விளங்கினார். அவர் கும்பிட்டு நிற்கும் அன்பரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார். அதிக அன்புடன் தன்னை வணங்க வரும் அன்பர் மீது சீற்றம் கொள்வார். இந்த சீற்றத்திற்கு ஆளாகிய அன்பர், செல்லப்பசுவாமி தன்னை கவனிக்கவில்லை என்று சற்று விலகி சென்று யோசனையில் ஆழ்ந்து இருக்கும் போது, அவர் வீதியில் செல்லும் மற்றவர்களுடன் சிரித்து பேசிக்கொண்டு இருப்பார். “அவர் வேடிக்கையாக எதையோ பேசுகிறார்,” என்று அன்பர் எண்ணும் போது அரிய மந்திர வாசங்கள் வெளிவரும். அன்பர் அருகில் சென்றால் காரணமின்றி தாக்குவார். அந்த அன்பர் விலகி சென்றால், அவரை ஈர்த்துவிடுவார். அதனால் அவருடன் “அகலாது அணுகாது தீக்காய்வார் போல" பழகவேண்டியதாயிற்று. §§

சாதுவின் வாழ்க்கை, சாதாரண மக்கள் தங்களுக்கு ஆறுதல் வழங்க ஈடுபடுத்திக்கொள்ளும் இன்பங்களினால் தடைபடாமல் கடினமானதாக இருக்கும். இது கவனத்தை திசை திருப்பும் இன்பங்கள் என்று யோக சுவாமி குறிப்பிட்டார். ஆனால் அவர்களது கிராமப்புற தெருக்களில் நடந்து செல்லும் சலுகையை மட்டும் செல்லப்பசுவாமி வழங்கி இருந்தார். எந்த ஒரு இலக்கும் இல்லாமல், காலத்திற்கு உரிய மதிப்பு அளிக்காமல் தங்களது நிலத்தை பார்த்துக்கொண்டு, அதன் அரசர்களை போல, நிதானமாகவும் அகலக்கால் வைத்தும் விசாலமான பகுதியில் சுற்றித்திரிவார்கள். அது அவர்களுக்கு வாழ்க்கையின் சிறிய கொண்டாட்டங்களில் ஒன்றாக விளங்கியது. §§

அவர்கள் பெரும்பாலும் எல்லா நாட்களும், கிராமத்து வீதிகளில் யாசகம் செய்துக்கொண்டு இருப்பார்கள் அல்லது செல்லப்பசுவாமிக்கு மட்டுமே தெரிந்த விசித்திரமான இடங்களில் தியானம் செய்துக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் சுற்றியிருந்த கிராமங்களில் இருந்த கிராமப்புற சந்நிதிகள் அல்லது கோயில்களை வலம் வந்தார்கள். சிலசமயங்களில், அன்றைய தினம் செல்லப்பசுவாமி மனதில் நினைத்து இருந்த கோயில் அல்லது சந்நிதிக்கு பல மணிநேரம் நடந்து செல்வார்கள். அங்கே அவர்கள் நிழலில் அமர்ந்து தியானம் செய்வார்கள். ஆனால் அவர்கள் வந்து சேர்ந்ததும் ஏதாவது சரியாக இல்லையென்றால் அல்லது தவறாக தோன்றினால், செல்லப்பசுவாமி வேறொரு கோயிலுக்கு நடந்துகொண்டு இருப்பார். நாள்முழுவதும் இடைவிடாது, சிலசமயங்களில் ஐம்பது கிலோமீட்டர் வரை நடந்து செல்வது அவர்களுக்கு பழக்கமாகி இருந்தது. அவர்கள் நல்லூருக்கு விரைவாக அல்லது தாமதமாக திரும்பும் போது, இருவருக்காக செல்லப்பசுவாமி உணவு சமைக்கத் துவங்குவார். §§

யோக சுவாமியிடம் இருந்து எந்த ஒரு மரியாதை அல்லது பக்தியையும் தன்னால் அனுமதிக்க முடியாது என்பதை செல்லப்பசுவாமி மீண்டும் தெளிவுப்படுத்தினார். தனது சீடன் தனக்கு சேவை செய்வது, சமைப்பது அல்லது சுத்தம் செய்வது அல்லது பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுவதை அவர் என்றுமே அனுமதிக்கவில்லை. யோக சுவாமி தன்னை தரையில் விழுந்து வணங்க முயன்றால் அல்லது தான் திரும்பி இருக்கும் போது கையை உயர்த்தி நமஸ்காரம் செய்ய முயன்றாலும், அவர் உரத்த குரலில் அதட்டுவார். அவருக்கு இவரது செயல்கள் தெரிந்ததும், தீவிரமாக நிந்திப்பார் மற்றும் அதை அவர் விரைவில் நிறுத்தவில்லை என்றால் ஒரு சமயத்தில் காலால் உதைக்கவும் செய்திருக்கிறார். இதைப்பற்றி யோக சுவாமி வழங்கும் குறிப்பு:§§

என்னைநீ வேறாயெண்ணி இடர்ப்பட வேண்டாமென்று§

தன்னத்தந் தாண்டுகொண்ட சற்குரு தாள்கள் வாழ்க.§§

ஒரு சீடன் தனது குருவை சிவபெருமானின் உருவமாக பாவித்து, இரவு பகல் பாராமல் அவரது உடைகளை துவைப்பது, உணவு கொண்டு வருவது, தூது செல்வது மற்றும் மற்ற பணிவிடைகளை செய்ய வேண்டும் என்று இந்து கலாச்சாரம் வற்புறுத்துகிறது. இதை யோக சுவாமி அறிந்து இருந்தார் மற்றும் தனது இதயத்தில் நிரம்பி இருந்த, நன்றி கலந்த அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்தார், ஆனால் செல்லப்பசுவாமி குரு மற்றும் சீடனுக்கு இடையே, அவர் மேற்கொள்ளும் எந்த ஒரு இருமைவாத பக்தியின் வெளிப்பாட்டையும் நிரகரிப்பதில் தீவிரமாக இருந்தார். யோக சுவாமியின் பயிற்சி அவரிடம் இருந்து அதிகமாக எதிர்பார்த்தது. அவர் தன் குருவை அதிகமாக விரும்பினார், ஆனால் செல்லப்பசுவாமி தன் இளவயது சீடனிடம் கண்டிப்பாக இருந்து, மெதுவாக அவருக்கு பொறுமை, அமைதி, சேவை மற்றும் ஆன்மீக பக்குவத்தை வழங்கினார். §§

எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை பொருட்படுத்தாமல், செல்லப்பசுவாமி தான் மட்டும் தான் உலகில் இருப்பதை போல, தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பார். அவர் அவன், அவள் அல்லது அது என்ற சொல்லை அபூர்வமாக பயன்படுத்தி, முன்னிலையை என்றுமே பயன்படுத்தாமல், தான் சொன்ன தெளிவற்ற சொற்றொடர்களை பல மாதங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருந்தார். தன்னுடன் யோக சுவாமி இருந்த போது, செல்லப்பசுவாமி ஒரு வருடம் முழுவதும், “இந்த உலகில் இயல்பாக தீய பண்புடன் எதுவும் இல்லை. எந்த பொல்லாப்பும் இல்லை,” என்று சொல்லிக்கொண்டு இருந்தார். குரு முணுமுணுத்தது அனைத்தும் மிகவும் உயர்வான கருத்துக்களை தெரிவிக்கவில்லை. செல்லப்பசுவாமியின் வாசகங்கள், புரிதலை கடந்த சிந்தனையின் தொடர்ச்சி என்றும், அவருடைய உதட்டில் இருந்து உதிரும் முத்துக்களை சேகரிக்க அவற்றை கவனமாக கேட்கவேண்டியிருந்தது என்றும் பிற்காலத்தில் யோக சுவாமி குறிப்பிட்டார். §§

இருவரையும் ஒன்றாக பார்த்த மக்கள், குரு சொல்வதை எவ்வாறு அந்த சீடனால் புரிந்துகொள்ள முடிகிறது என்று வியந்தனர். இருவருக்கும் இடையே வெளிப்படையான கருத்து பரிமாற்றங்கள் எதுவும் மக்களுக்கு தென்படவில்லை. ஆனால் செல்லப்பசுவாமியின் பித்து பிடித்த நிலையில் மறைந்து இருந்த ஒவ்வொரு சைகை, ஒவ்வொரு சொல், ஒவ்வொரு பார்வையையும், யோக சுவாமி தனது சொந்த இயல்பை சுத்தப்படுத்த மற்றும் தனது சாதனாவை முழுமையாக்க பயன்படுத்திக் கொண்டார். தனது வாழ்க்கை முழுவதும், செல்லப்பசுவாமியின் முழுமையான தூய்மைக்கு யோக சுவாமி மதிப்பு அளித்தார். அவர் மிகவும் தூய்மையாக இருந்ததால், அவருக்கு அருகில் தூய்மையற்ற எதுவும் தாக்கு பிடிக்காது. பின்வரும் நற்சிந்தனையில், யோக சுவாமி ஒரு தெளிவான விளக்கத்தை வழங்குகிறார்: §§

விருப்பு வெறுப்பை வேரோடு அழித்து, திருவடியை மறவாத சீருடையாளர், “ஒரு பொல்லாப்பும் இல்லை” என்று தெளிவாக அறிவித்தவர், குருவின் அற்புத உருவாய் இருக்கிறார்! முழுதும் உண்மை என்று இடைவிடாது அறிவித்து, நல்ல மற்றும் தீய சிந்தனைகளை கடந்து, தன்னையும் என்னையும் ஒன்றாக உணர்ந்து, அவ்வாறு தனது சிந்தையிலும் வைத்திருந்த எனது ஆசான், அன்பின் வாயிலாக, எனது தலையில் அவரது பொற்பாதத்தை வைத்தார். §§

இந்த உலகத்தால் என்றுமே அறியப்படாமல், விசரனாக “ஆரறிவார்? ஆரறிவார்?” என்று தொடர்ந்து சொல்லும் செல்லப்பன் என்ற பெயருடைய உயர்வான தீர்க்கதரிசி, தினமும் தேரடி படிகளில் அமர்ந்து இருப்பார். கருமேகத்தை போன்ற மேனியுடன், எப்போதும் தனது கையை தலையணையாக வைத்து தரையில் உறங்குவார். அவர் சுத்தமான தண்ணீரும் செழிப்பான நிலங்களும் மிகுதியாக இருந்த நல்லூரில், அருள் மற்றும் கௌரவத்துடன் குருவின் வடிவில் வாழ்ந்தார். “யாம் அறியோம்" என்ற மிகவும் சிறந்த மற்றும் புனிதமான மந்திரத்தை அனைவருக்கும் அறிவித்து, தனது இதயத்தில் இருந்து மாயை, காமம் மற்றும் கோபத்தை அழித்த வல்லவர், செல்லப்பர் என்ற பெயருடன், நல்லூரில் வாசம் செய்கிறார். §§

ஒரு ஈடு இணையற்ற புதையலாக, பல யுகங்களாக அப்படியே உள்ளது என்று மீண்டும் மீண்டும் சொல்லும், யாராலும் விளக்க முடியாத விசரன், நிரந்தரமாக முருகப்பெருமானுக்கு அருகில் வாழ்கிறார். பேச்சாளர்கள் மற்றும் கவிஞர்கள் தலை வணங்கும் நல்லூரில், எனது பாதுகாவலர், என்னை தன்னுடையதாக்கி பிறப்பு மற்றும் இறப்பில் இருந்து விடுதலை அளித்து, புனிதமான செல்லப்பனின் தெய்வீக மற்றும் தூய்மையான உருவத்தில், கந்தசுவாமியின் சந்நிதியில் தனது சேவையை நிறைவேற்றுகிறார். §§

பின்வரும் சுருக்கத்தில், செல்லப்பசுவாமியின் உருவமில்லாமல் போதிக்கும் பாணிக்கு இந்துமதி அம்மா உருவத்தை வழங்குகிறார்:§§

செல்லப்பர் என்ற இனிமையான நறுமணமுள்ள மலரின் தித்திக்கும் தேன் துளிகளை, அவரை சுற்றி வந்த யோக சுவாமி சேகரித்ததை இவ்வாறு குறிப்பிடலாம். முதலில், செல்லப்பர் அறிவின் பாதையை “ஆரடாநீ?” ( யார் நீ?) என்ற அரிய மந்திர வார்த்தைகளால் கற்றுத்தந்தார். பிறகு ஒருவர் தனக்குள் ஆழமாக ஆய்வு மேற்கொள்வதன் மூலம், இதை புரிந்துகொள்ளும் பாதையை “தேரடாவுள்” (உனக்குள் தேடு) என்ற வார்த்தைகளால் கற்றுத்தந்து அவருக்கு வழிகாட்டினார். §§

உள்ளக்குள் ஆய்வு மேற்கொள்வதற்கு தடையாக லௌகீக பற்று இருந்ததால்; “தீரடாபற்று” (பற்றை கைவிடு) என்று கூறினார். தனக்குள் ஆய்வு மேற்கொள்ளும் போது, முழுமையாக இருள் சூழ்ந்து இருப்பதை கண்ட சீடன், “ஒரு பொல்லாப்பும் இல்லை” (தவறாக எதுவும் இல்லை) என்ற வாசகத்தால் பதட்டம் அடைந்ததும், அந்த சீடனை அவர் அமைதிப்படுத்தினார். §§

“ஒரு பொல்லாப்பும் இல்லை,” என்ற வாசகத்தின் பொருளை புரிந்துகொள்ள முடியாமல், யோக சுவாமி மனம் குழம்பி நின்ற போது, குரு அவரை கந்தன் கோயிலின் முன்பக்கம் அழைத்து சென்றார். கோயிலில் திரை மூடப்பட்டதும், அறிவின் வேலை காண்பித்து, மாயையை திரையால் மூடிய பிறகு பிரம்மம் மட்டுமே நிலைத்து இருக்கும் என்ற வேதாந்த உண்மையை விளக்கினார். சீடன் மாயையில் இருக்கும் மர்மத்தை பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது, “அது அப்படியே உள்ளதை காண்” என்ற மகாவாக்கியத்தை வழங்கினார். மற்றும் அந்த மர்மத்தை விளக்க, “ஆரறிவார்?” (யார் அறிவார்?) என்று கூறினார். §§

அறிவின் பாதையை கற்றுத்தந்த பிறகு, அவர் யோகத்தின் பாதையை கற்றுத்தந்தார். வாசி யோகம் தேர் [பிராணயாமம்: சுவாசக் கட்டுப்பாடு] (வாசி யோகத்தில் தேர்ச்சி பெறு). இரு வழிகளை அடக்கு—[இடா மற்றும் பிங்களா அந்த இரண்டு பாதைகள் ஆகும்]; கரு வழியை கட; நாசி நுனியை நோக்கு; உனது சிந்தனையில் கவனம் சிதறாமல் இரு; காசிதேசம் செல்; பச்சை புரவியிலே பாங்காக ஏறு (பச்சை குதிரை மீது பாங்காக ஏறு) [சுவாசக்கட்டுப்பாட்டை குறிப்பிடுகிறது]. தச்சன் கட்டா வீட்டிலே தாவு பரி கட்டு (தச்சன் [உடல்] காட்டாத வீட்டில், தாவும் குதிரையை கட்டு) [மீண்டும் சுவசக்கட்டுப்பாட்டை குறிப்பிடுகிறது]. யோகத்தை பற்றி எதுவும் படிக்காமல், அதில் பயன்படுத்தப்படும் நுட்பமான சொற்கள் அனைத்தையும் அறிந்து இருந்த செல்லப்பசுவாமி, யோக பாதையின் நுணுக்கங்கள் மற்றும் விவரங்களை கற்றுத்தந்தார். அவர் சீடான விளங்கிய யோகருக்கு, யோக பயிற்சியில் முன்னேறும் போது தோன்றும் பல்வேறு அறிகுறிகள் மற்றும் விழிப்புணர்வுகளைப் பற்றி விளக்கினார். §§

பிறவியின் பாதையை கடந்ததும், மனம் கட்டுப்பாட்டை பெறும் என்றும், ஒருவர் தனது முக்கின் நுனி மீது கவனம் செய்துக்கொண்டு கண் விழித்தால், அவருக்கு பிரபஞ்ச நடனம் தெரியும் என்றும், இன்னொரு நிலையில் அவருக்கு இனிமையான சங்கீத இசை கேட்கும் என்றும் மிகவும் தெளிவாக விளக்கினார். யோக சுவாமி முன்பு பயிற்சி மேற்கொண்ட பக்தி பாதையை கைவிடாமல் இருக்க, அவர் “அக்குமணி அணி” (ருத்தராட்ச மாலையை அணி); “அஞ்செழுத்து ஓது” (ஐந்து எழுத்துக்களை மீண்டும் மீண்டும் சொல்); நெக்கு நெக்கு உருகு (இதயம் மெல்ல மெல்ல உருகட்டும்) போன்ற வாசகங்களின் மூலம் அவரை ஊக்குவிக்கவும் செய்தார். §§

ஒரு நாள் குருவும் சீடனும் தெருவில் நடந்து சென்றுகொண்டு இருந்தார்கள். பெரும்பாலான மக்கள் கீழே நிலத்தை பார்த்து நடப்பார்கள். ஆனால் செல்லப்பசுவாமி எப்போதும் போல், நேராக தலைநிமிர்ந்து தைரியமாக நடந்து சென்றார். அவர்கள் இருவரும் சேர்ந்து நடந்த ஐந்து வருடத்தில், தெருவில் பல எரும்புப்புற்றுக்கள் இருந்தாலும், தனது குரு அதில் ஒன்றையும் மிதிக்காமல் சென்றது யோக சுவாமியை வியக்க வைத்தது. ஆனால் யோக சுவாமி தங்கள் பயணத்தின் போது அவற்றை மிதிக்காமல் கவனமாக செல்லவேண்டி இருந்தது.§§

இந்த முறை வெளியே சென்ற போது, குரு அவ்வபோது தன்னை நோட்டமிடுவதை யோக சுவாமி கவனித்தார். அவர் ஏதாவது தவறு செய்து இருந்தாரா? அப்படி எதுவும் இல்லை. ஒரு கிராமத்தை நெருங்கும் போது, செல்லப்பசுவாமி தனது நடை வேகத்தை அதிகப்படுத்தி, நேராக சந்தையை நோக்கி நடந்தார். அவர் ஏதோ வாங்க வந்ததைப் போல, ஒரு மணி நேரத்திற்கு கடை கடையாக ஏறி இறங்கினார் மற்றும் அவ்வபோது யோக சுவாமியையும் நோட்டமிட்டார். அவரது சீடன் அமைதி காத்து இருந்தார். §§

அவர்கள் நீண்டநேரம் கிராமத்தை சுற்றிவிட்டு, வயல்களில் இருந்த கால்நடை தடங்கள் வழியாக நடந்து சென்றனர். செல்லப்பசுவாமி சாலையை சென்றடையும் வரை விரைந்து சென்றார், பின்னர் தனக்குத்தானே பேசிக்கொண்டு மற்றும் தனது சீடனை கண்காணித்துக்கொண்டு மெதுவாக நடந்து சென்றார். அவர்கள் ஒரு சாலை சந்திப்பில் இடது பக்கமாக திரும்பி ஆறு மீட்டர் தூரம் சென்றிருக்கையில், முனிவர் திடீரென்று யோக சுவாமி பக்கம் திரும்பி, அவரை சந்தேக கண்ணுடன் பார்த்தார். அந்த பார்வை “நீ எதற்காக என்னை பின்தொடர்ந்து வருகிறாய்?” என்று கேட்பது போல இருந்தது. தங்களது உறவின் ஆழமான நோக்கத்தை ஆய்வு செய்ய, செல்லப்பசுவாமி தனது சீடனிடம் சவால் விடுகிறாரா?§§

செல்லப்பசுவாமி தனது உணவில் மிகவும் கவனமாக இருந்தார். அவரது உணவு பெரும்பாலும் அவரால் தயாரித்ததாக இருக்கும், மற்றும் அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் சுத்தமாகவும் புதிதாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்வார். அவர் சமைக்கும் உணவை யாராவது பார்த்து விட்டால் அல்லது அவர் சமைக்கிறார் அல்லது சாப்பிடுகிறார் என்று யாராவது அவரைப்பற்றி நினைத்துவிட்டாலும், உடனே தான் செய்வதை நிறுத்திவிட்டு விரதம் இருப்பார். பெரும்பாலான சீடர்கள் அவருக்கு அன்பளிப்பாக கிழங்குகளை கொண்டு வருவார்கள், ஆனால் அவர் அதை சாப்பிடாமல், தோட்டத்தில் குழி தோண்டி அதில் புதைத்து வைப்பார். அதில் இலைகள் தோன்ற தொடங்கியதும், அவர் தனது சகோதரியிடம் அதை பறித்து தனக்கு சமைத்து தரும்படி கூறுவார். அதைப்போலவே, மக்கள் தனக்கு வழங்கும் படையல்களில் பயன்படுத்தும் அதிர்வுகள் மீது மிகவும் கவனமாக இருப்பார். §§

அவரது சீடர்களில் ஒருவர், நல்லூர் கைலாசநாதர் சிவன் கோயிலின் பிரதான பூசாரியாக இருந்தார். அவர் தனது சாதியின் விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றும் ஒரு ஆச்சாரமான பிராமணராக இருந்தார். அவரது வீடு கோயிலுக்கு அருகாமையில் இருந்தது. ஒரு நாள், தன் வீடு வழியாக செல்லப்பசுவாமி நடந்து செல்வதை அவர் கவனித்தார். அவர் சுவாமியை அழைத்து, பூஜையில் இருந்து சற்றுமுன் கொண்டு வரப்பட்ட பொங்கலை தன்னுடன் சேர்ந்து சாப்பிடுமாறு வேண்டிக்கொண்டார். அவருக்கு செல்லப்பசுவாமியின் பழக்கங்கள் தெரியும் என்பதால், அவர் சாப்பிட மறுப்பார் என்று நினைத்தார். ஆனால் என்ன ஆச்சரியம், குரு சேர்ந்து சாப்பிட வீட்டிற்குள் நுழைந்துவிட்டார். §§

அவருக்கு பொங்கல் வழங்கப்பட்டது, வாடிய முகத்துடன் செல்லப்பசுவாமி தான் மிச்சம் மீதியை சாப்பிடுவதில்லை என்று கூறினார். “இதை யாரோ சாப்பிட்டு இருக்கிறார்கள், ” என்று கூற, உடனே பூசாரி, “இல்லை, இல்லை. இதை யாரும் பார்க்கவே இல்லை,” என்று கூறினார். அவர் கருவறையில் இருந்து அதை நேராக கொண்டு வந்ததாக கூறினார். ஆனால் செல்லப்பசுவாமி உறுதியாக இருந்தார். பூசாரி அந்த பொங்கலை தயார் செய்த தன் மனைவியை அழைத்து, அதை யாராவது தொட்டார்களா என்று கேட்டார். அதை யாரும் தொடவில்லை என்பதில் அவள் உறுதியாக இருந்தாலும், கோயிலுக்குள் எடுத்து செல்லும் முன், தங்கள் இளைய மகன் அதை சாப்பிட்டானா என்று விசாரிக்கலாம் என்றாள். அவர்கள் விசாரித்த போது, தனது தந்தை அதை பூஜையில் நெய்வேத்தியம் செய்வதற்கு முன்பாக, அதில் இருந்து ஒரு கவளம் எடுத்து சாப்பிட்டதாக ஒப்புக்கொண்டான். §§

யாழ்ப்பாணத்தில் இருந்த பெரும்பாலான மக்கள், செல்லப்பசுவாமி ஒரு முழுமையான விசரன் என்பதில் அல்லது ஒரு சாதுவாக ஆசிகளை பெறுவதற்கு தகுதியற்றவர் என்பதில் உறுதியாக இருந்தனர். அவரது போலி வேடம், அவரை நல்லூரில் பார்த்த முதல் நாளே யோக சுவாமிக்கு புரிந்துவிட்டது. இந்த இளைஞனை உணர்தலின் உச்சத்திற்கு எடுத்து செல்லவேண்டும் என்று குறிக்கோளுடன் உறுதியாக இருந்த, செல்லப்பசுவாமியின் கண்களை உணர்ந்த தருணம், யோக சுவாமி உள்ளத்தில் நிலைத்து இருந்து, அவருக்கு தேவையான உறுதியை வழங்கியது. யோக சுவாமியை பொறுத்தவரை, தான் சாதிக்க நினைத்த அனைத்தையும், அப்போது சாதித்து இருந்தார். அதைத்தொடர்ந்த மாதங்களில், அது விரிவாக்கம் மட்டுமே பெற்று வந்தது. அவர் செல்லப்பசுவாமியுடன் இணைந்து இருந்த முதல் வருடம், அந்த தருணத்தின் இயல்பான விரிவாக்கமாக இருந்தது. அவர் குரு அனுமதி வழங்கும் இடமெல்லாம் அவரை பின்தொடர்ந்து சென்று, என்ன தேவைப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள காதால் கேட்டு, கண்களால் பார்த்து, பொறுமையான வார்த்தை அல்லது பார்வைக்காக காத்து இருந்தார். யோக சுவாமி விழித்து இருந்தாலும் அல்லது உறக்கத்தில் இருந்தாலும், அவரது சிந்தனைகள் குருவையும் மந்திரசக்தி நிறைந்த அவரது அருளையும் சுற்றியே அமைந்து இருந்தன. §§