குருமார்களின் சரித்திரங்கள்

Page 21: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/21_ka02_03.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

அத்தியாயம் ஏழு§

நல்லூரை சேர்ந்த சித்தர் செல்லப்பசுவாமி §

த்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், நல்லூரை சேர்ந்த பொன்னம்மாவை, வட்டுக்கோட்டையை சேர்ந்த வல்லிபுரம் என்ற விவசாயி மணந்தார். அவர்கள் நல்லூர் கோயிலுக்கு அருகே தங்கள் வீட்டை கட்டி, வயல்களில் பயிர் சாகுபடி செய்து வந்தனர். அவர்களுக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர், அவர்களில் ஒருவன் செல்லப்பா. அவன் சிறு வயதில் இருந்தே, தனக்குள் இருந்த தெய்வீகத்தன்மையை நாடுவதில் ஒருமுக கவனத்துடன் இருந்தான். அவன் அதிகம் பேசாமல் இருந்ததால், அவன் குழப்பத்தில் இருந்ததாக அவனது பெற்றோர்கள் நினைத்தார்கள். செல்லப்பா விசித்திரமாக இருந்தாலும், உள்ளத்தில் தூய்மையானவராக, தன்னிடத்திலும் மற்றவர்களிடத்திலும் கண்டிப்பாக நடந்துகொண்டார். அவன் பிறந்ததில் இருந்தே ஒரு யோகியின் பண்புகளுடன் இருந்ததால், இளைஞனாக இருக்கும் போதே அவனுக்கு சந்நியாசம் பொருத்தமாக இருக்கும் என்று மக்கள் கணித்தார்கள். அவன் உணவு அல்லது உடை உட்பட எந்த பொருளையும் விரும்பியது இல்லை. அவனுக்கு வேண்டியது கிடைக்கவில்லை என்றால், அவன் அதில்லாமல் சென்றுவிடுவான். அவனுக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை. அவன் மனிதர்களிடம் இருந்து மறைந்து இருக்க தன்னால் ஆன முயற்சிகளை செய்து, ஒவ்வொரு நிமிடமும் தனிமையில் கழித்தான். அவனுக்கு யாரும் நெருக்கமாக இல்லை. அவன் எதைப்பற்றி நினைக்கிறான் என்று அவனது குடும்பத்தினருக்கு தெரியவில்லை, மற்றும் அவனை அவனது கூண்டில் இருந்து வெளியேற்றவும் அவர்களால் முடியவில்லை. அவர்களது முயற்சிகள் அதிகரிக்கும் போது, அவன் அதிகமாக விலகி சென்றான். §§

சிறு வயதில் அவனை பள்ளிக்கு அழைத்து செல்லவேண்டி இருந்தது, இல்லையென்றால் அவன் பள்ளிக்கு செல்லமாட்டான். பள்ளிக்கு சென்றதும், அவன் நாள் முழுவதும் எதையும் கேட்காமலும் பேசாமலும் அமர்ந்து இருப்பான். இந்த நடத்தை எல்லோருக்கும் பெரிய வேதனையாக இருந்தது. அவனை சக மாணவர்கள் கிண்டல் செய்தனர். அவன் தங்கள் வகுப்புக்களில் எப்போதும் “பகல் கனவு" காண்கிறான் என்று ஆசிரியர்கள் அவனை தண்டித்தார்கள். ஆனால் அவனது மனதை லெளகீகத்தில் ஈடுபடுத்த, மற்றவர்களது எந்த செயலாலும் முடியவில்லை. அவன் வீட்டில் இருக்கும் போது, பெற்றோர்கள் இவனைப் பற்றிய கவலையில் மூழ்கி இருக்க, அவன் வழக்கமாக தனியாக உட்கார்ந்து, ஏதாவது சிந்தனையில் மூழ்கி இருப்பான் அல்லது தியானம் செய்துக்கொண்டு இருப்பான். தங்கள் மகன் அதிகம் கவலைப்படுவதாக அவர்களுக்கு தோன்றியது மற்றும் மற்ற குழந்தைகளைப் போல ஓடி ஆடி விளையாட வேண்டும் என்று அவனை அறிவுறுத்தினார்கள். அவன் நல்லூர் கோயிலில் இருந்து ஒரு மைல் தூரத்தில், கந்தர்மடத்தில் அமைந்து இருந்த சைவ பிரகாச வித்யா சாலை என்ற ஒரு ஆரம்பப்பள்ளிக்கு சென்றான். §§

செல்லப்பாவிற்கு பதினாறு வயதாக இருந்த போது, அவன் மக்களிடம் இருந்து விலகி இருக்கும் பழக்கம் தீவிரம் அடைந்து, பல நாட்களுக்கு தொடர்ந்து யாருடனும் பேசாமல் இருந்தான். தங்கள் மகனிடம் ஏதோ ஒரு பெரிய குறை இருக்கிறது என்று நினைத்த பெற்றோர்கள், அவனை பல்வேறு மருத்துவர்கள், சோதிடர்கள் மற்றும் மற்ற வல்லுனர்களிடம் அழைத்து சென்றனர். ஆனால் யாராலும் அவர்கள் மகனைப் பற்றி அவர்களுக்கு புரியவைக்க முடியவில்லை. அவன் மிகவும் மெலிந்து இருந்தாலும், உடல்நலம் சீராக இருந்தது, ஆனால் யாராலும் அவனது தனித்த மனதை புரிந்துகொள்ள முடியவில்லை. இது ஒரு புறம் இருக்க, அவன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என்ற ஒரு உயர்நிலை பள்ளிக்கு சென்றான். அங்கே ஆங்கில மொழியில் கல்வி கற்றுத்தரப்பட்டது. §§

image§

செல்லப்பசுவாமி கோபத்துடன் வெளிப்படையாக பேசி, தைரியமாக தவறுகளை சுட்டிக்காட்டியதால், அவருடன் இருக்க யாரும் விரும்பவில்லை. அவர் தனிமை விரும்பியாக, பெரும்பாலும் எதையாவது புலம்பிக்கொண்டு இருப்பார். அவரது கிழிந்த வேஷ்டி மற்றும் கண்டிப்பான நடவடிக்கைகள் காரணமாக, உறுதியான சீடர்கள் சிலர் மட்டுமே அவருக்கு நெருக்கமாக இருந்தார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அதன் பிறகு செல்லப்பா, தூரத்தில் இருக்கும் கோயில் அல்லது கிராமம் என்று கிராமப்புறங்களில் சுற்றித்திரிந்து, ஒரு மரத்தடியில் தியானம் செய்துக்கொண்டு இருப்பான் அல்லது தெருக்களில் குறிக்கோள் இல்லாமல் நடந்துக்கொண்டு இருப்பான். அவனது குடும்பம் தீவிர தேடலை மேற்கொண்டு, எப்படியும் கண்டுபிடித்து விடும். அவன் அவர்களது வேண்டுகோள்கள் மற்றும் தண்டனைகளை பொறுத்துக்கொண்டான், ஆனால் விரைவில் மீண்டும் சுற்றித்திரியத் தொடங்கினான். அவனை அவன் வழியில் விட்டுவிட வேண்டும் என்று அவர்கள் இறுதியில் புரிந்துக்கொண்டார்கள். அவன் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் பசியுடன் சோர்வாக வீடு திரும்புவான். இதை பார்த்ததும் அவன் தாயின் கண்ணில் கண்ணீர் வந்து விடும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவன் நலனுக்காக வேண்டிக்கொண்டு இருந்தாள். §§

தனிமையில் இருந்த ஒரு நாட்டம் §

பள்ளி படிப்பை முடித்த பிறகு, சுடுகாட்டிற்கு அருகில் இருந்த ஒரு கட்டிடத்தில் இரவு காவலனாக காவல் காக்கும் வேலையை செய்தான். அவன் இரவு முழுவதும் வானிலையில் வெளியே இருந்துக்கொண்டு, அவ்வபோது அந்த கட்டிடத்தை சுற்றி வந்தான். அவன் அப்போது தனது பதின்ம வயதின் முடிவில் இருந்தான். பெற்றோர்கள் அவனது எளிய வாழ்க்கைக்கு முன்னுரிமை வழங்கி இருந்தாலும், அவன் அவர்களுக்கு மேலும் ஏமாற்றத்தை வழங்கினான். அவன் தினமும் பணியை தொடங்கும் போது, கண்காணிக்கும் கட்டிடத்தை மேலோட்டமாக சோதனை செய்த பிறகு, சுடுகாட்டிற்குள் புகுந்து, பெரும்பாலும் எரிந்துக்கொண்டு இருந்த ஈமவிறகுக்கு அருகில் அமர்ந்து, இரவு முழுவதும் தியானம் செய்ததாக தோன்றுகிறது. அவன் அதன் பிறகு ஒரு சிறிய அரசு அலுவலகத்தில் வேலை செய்தான், ஆனால் அவனுக்கு ஊதியத்தின் தேவையை காட்டிலும், தனது தனிமை மீது அதிக விருப்பம் இருந்தது. §§

இந்த காலத்தில் நடந்த தகவல்களை யாழ்ப்பாண நல்லூர் தேரடி செல்லப்பா சுவாமிகள் என்ற புத்தகத்தில் கே. சி. குலரத்தினம் வழங்கியுள்ளார். (இதை செல்லப்ப சுவாமி ஆஃப் நல்லூர் என்ற பெயரில் முனைவர் திருமதி. விமலா கிருஷ்ணபிள்ளை மொழிபெயர்த்தார்)§§

image§

செல்லப்பசுவாமி வழக்கமாக, நல்லூர் கோயிலில் தேரடியை தனது புகலிடமாக கொண்டிருந்தார். அது 12 மீட்டர் உயரத்தில் கூரையால் வெய்த கோபுரமாக இருந்தது. அதில் முருகப்பெருமானின் உற்சவ மூர்த்திகள் மற்றும் நுணுக்கமாக அலங்கரிக்கப்பட்ட வண்டிகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. இது ஒரு இருட்டு அறையாக இருந்ததால், எந்த விதமான கவனச்சிதறலும் இல்லாமல் பல மணி நேரங்களுக்கு தியானம் செய்யவேண்டும் என்ற சாதுவின் தூண்டுதலுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

செல்லப்பா சில வருடங்களுக்கு பிறகு தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, யாழ்ப்பாணம் கச்சேரியில் [மாவட்ட செயலகம்] ஆராச்சி [மக்கள் தொடர்பு அதிகாரி] பணியை தொடங்கினார். அவர் சிறப்பாக வேலை செய்ததால், மேலதிகாரிகளின் பாராட்டையும் நம்பிக்கையையும் பெற்றார் மற்றும் பலசமயங்களில் அவருக்கு கருவூலப்பொறுப்பும் வழங்கப்பட்டது. செல்லப்பாவிற்கு சலுகைகள் நிறைந்த பதவி வழங்கிய உயர்ந்த கௌரவத்தை வழங்கினாலும், அதன் மீது அவருக்கு மோகம் ஏற்படவில்லை. அவர் எப்போதும் தனது உயிர்சக்தியின் உட்புற தூண்டுதலில் வாழ்ந்துக்கொண்டு இருந்தார். ஞானம், ஆன்மீகத்தில் ஈர்க்கப்பட்டதால் அவரது பழக்கங்கள், உடை மற்றும் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தோன்றின. இது பலரது ஆர்வத்தை தூண்டியது. மற்றவர்கள் தனது வேலையை பற்றி குறை கூறாமல் இருக்க, அதை முழுமையாக செய்து வந்தார். இரவு நேரங்களில் மற்றவர்கள் உறக்கத்தில் இருந்த போது, அவர் நல்லூர் முருகப்பெருமானுடன் மறைஞான முறையில் தொடர்பு கொண்டு, “தந்தையே! தந்தையே!” என்று பிதற்ற ஆரம்பித்தார். §§

உள்ளிருந்து வெளிவந்த இந்த ஞானப்பெருக்கு, வெளியே வழிய தொடங்கியதால், அவர் தமக்குள் பேசிக்கொள்ளுதல், “ஓம் ஓம்” என்று சொல்லிக்கொண்டு தலையசைத்தல், வலக்கையை உயர்வாக உயர்த்தி மற்றும் நன்றாக அசைத்து உரக்க கத்துதல் என்று அவரின் போக்கு பித்து பிடித்தவர் போலவும், பிசாசு பிடியில் சிக்கியவர் போலவும், ஒரு குழந்தை போலவும் காட்சி அளித்தது. தன்னை நெருங்கி வந்தவரை அவர் துரத்தி அனுப்பினார். இறுதியில் அவர் தனது கச்சேரி பணியை கைவிட்டு, தனது குடிசையின் மூலையில் நாள் முழுவதும் அமர்ந்துகொண்டார்.§§

image§

தனது சீடனான செல்லப்பசுவாமி தியானம் செய்துக்கொண்டு இருக்கும் போது, கடையிற்சுவாமி அவ்வப்போது வந்து கவனிப்பார். யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் அங்கம் வகித்த கிராமங்கள் வழியாக, எந்த இலக்கும் இல்லாமல், இருவரும் அடிக்கடி நடந்து செல்வதை மக்கள் பார்த்து இருந்தனர். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அவர் மீண்டும், மீண்டும் பின்வாங்கி ஒழுக்கம் தவறியதாக தோன்றிய நிலைகளில் அதிகமாக ஈடுபடுவதை பார்த்ததும், அவரது சொந்தங்கள் சிறப்பு பூசைகளுக்கு ஏற்பாடு செய்தனர். அந்த பூசைகளில் அவரிடம் இருந்ததாக கருதப்பட்ட பிசாசுகளை விரட்டி அடிக்க பூசாரி முயற்சி மேற்கொண்டார். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த பரபரப்பால் செல்லப்பா கலங்காமலும், தன்னை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்று பதட்டம் அடையாமலும் இருந்தார். மக்கள்தன்னை பைத்தியமாக நினைத்ததை, அவர் சிலசமயம் தனக்கு சாதகமாகவும் பயன்படுத்திக்கொண்டார். இதனால் அவர் தன் விருப்பப்படி சுற்றித்திரிய அல்லது மற்றவர்கள் அவரை துறவியாக நினைத்த போது ஒரு துறவியாகவும் இருக்க முடிந்தது. அவர் இலங்கையில் இருந்த சாதுக்களுடன் சேர்ந்து, அவர்கள் கதைகளை கேட்பார் மற்றும் அவர்கள் தத்துவ நுணுக்கங்களை பற்றி விவாதிப்பதை கவனமாக பார்த்துக்கொண்டு இருப்பார். இந்த நடவடிக்கைகள் அவரது கவனத்தை முழுமையாக ஈர்த்தன.§§

இதன் காரணமாக, செல்லப்பாவின் திருமணம் பற்றிய பேச்சை யாரும் எழுப்பவில்லை மற்றும் தனது சற்குருவான கடையிற்சுவாமியை சந்தித்த போது, அவரை தங்கு தடையின்றி பின்பற்றவும் முடிந்தது. அவரை சிறிது தயக்கத்துடன் குடும்பமும் சமூகமும் விடுவித்ததால், தனது இருபது வயதின் தொடக்கத்தில் இருந்து ஒரு சந்நியாசியாக வாழ்ந்தார். முன்பே தீவிரமாக இருந்த அவரது ஆன்மீக வாழ்க்கை, குரு அவருக்குள் உருவாக்கிய ஆன்மீக உருமாற்றம் மிகவும் வலுவாக இருந்ததால், அவரது சொந்தங்களுக்கு அவரை அடையாளம் காண முடியவில்லை மற்றும் அவராலும் மற்றவர்கள் மத்தியில் தனது சொந்தங்களை அடையாளம் காணமுடியவில்லை. அவரோடு தொடர்புடைய அனைத்தும் தொடர்ந்து மாறிக்கொண்டு இருந்தன. §§

கடையிற்சுவாமி மிகவும் குறுகிய காலத்தில், இறைவனை உணர்தலின் உச்சங்களுக்கு அவரை அழைத்து சென்றார், ஆனால் இந்த வலுவான அனுபவமில்லாத நிலையின் பின்விளைவுடன் தன்னை பொருத்திக்கொள்ள செல்லப்பாவிற்கு போதிய அவகாசம் தேவைப்பட்டது. அவர் திருவிழாக்களில் முருகப்பெருமானுக்காக பயன்படும் அலங்கார தேர்களை பாதுகாப்பாக வைக்க, கோயில் நுழைவாயிலில் இருந்து நாற்பத்தி ஐந்து மீட்டர் தூரத்தில் அமைந்து இருந்த, நல்லூர் கோயிலின் தேரடிக்கு அருகில் இருந்த திண்ணையில் நீண்ட நேரம் அமர்ந்து தியானம் செய்வார். அந்த காலத்தில், தேரடி என்பது சுமார் பன்னிரண்டு மீட்டர் உயரம் மற்றும் ஒரு புறத்தில் ஆறு மீட்டர் இடைவெளியுடன், இரண்டு மீட்டர் உயர சக்கரங்களுடன் மரத்தால் உருவாக்கப்பட்ட உற்சவத் தேர் மற்றும் முக்கிய திருவிழாக்களில் மட்டும் திருவீதியில் கொண்டு வரப்படும் மற்ற உற்சவ உபகரணங்களை கொண்ட ஒரு கூரை வேய்த அறையாக இருக்கும். அதற்கு முன்பாக ஒரு தேனிரும்பு வேலியால் சூழப்பட்ட, ஒரு மூன்று பக்க திறந்தவெளி கூடாரம் அமைந்து இருந்தது. §§

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருக்கும் நல்லூரின் பிரசித்திபெற்ற வரலாறு மற்றும் பேரழகை, செல்லப்ப சுவாமி ஆஃப் நல்லூர் என்ற புத்தகத்தில் இருந்து நம்மால் தெரிந்துக்கொள்ள முடிகிறது. அதில் இருந்து ஒரு தொகுப்பு: §§

ஒரு சிவபூமியாக விளங்கும் நமது இலங்கை நாடு, இந்திய பெருங்கடலில் ஒரு தங்கம் போல மின்னுகிறது. தமிழில் ஈழம் என்றால் “தங்கம்" என்று பொருள். இந்த இலங்கையை ரிஷி திருமூலர் தனது திருமந்திரத்தில், சிவபெருமானின் இருப்பிடமாக குறிப்பிடுகிறார். இந்த பூமியில் பல ஈஸ்வரன் கோயில்கள் உள்ளன மற்றும் இந்த பூமியில் பல சித்தர்கள் வாழ்ந்து வசித்து உள்ளார்கள். சித்த பரம்பரையின் பாரம்பரியம் இங்கே வேரூன்றி இருக்கிறது. சிவபெருமானின் திருவடியில் தங்களது மனதை பறிகொடுத்த இந்த சாதுக்களின் மகத்துவம் கற்பனா சக்திக்கு அப்பாற்பட்டது. §§

தலைசிறந்த இந்த சித்தர்களின் சமாதி கோயில்கள் வடக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் நிறைந்து இருக்கின்றன. கடையிற்சுவாமியில் இருந்து யோக சுவாமி வரை, பல ஞானிகள் மற்றும் சித்தர்கள், யாழ்ப்பாணத்தை சுற்றி தங்கள் புனிதமான அடிசுவடுகளை விட்டு சென்றுள்ளனர். அத்தகைய கோயில்களுக்கு அருகில் கட்டப்பட்ட குரு பூசை மண்டபங்கள், அன்னதான மையங்களாக மட்டுமில்லாமல் கலாச்சார மற்றும் சமயம் சார்ந்த நடவடிக்கைகளின் இருப்பிடமாகவும் விளங்கின. §§

யாழ்ப்பாணத்தின் பழங்கால நகரமாக நல்லூர் [“நல்ல இடம்" என்று பொருள்] விளங்குகிறது. இது பேரரசராக விளங்கிய ஆரிய சக்கரவர்த்தியின் (1215-1240) தலைநகரமாக விளங்கியது. பரந்து விரிந்த அவரது சாம்ராச்சியத்தில் இராமேஸ்வரமும் இருந்தது, மற்றும் அவர் சேதுவை (தமிழ்நாடு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு மத்தியில் இருக்கும் குறுநிலம்) பாதுகாத்ததால் சேதுகாவலர் என்ற பட்டத்தை பெற்றார். இந்த நல்லூரில் தூய்மையான, புனிதமான தமிழ் மற்றும் சிவநெறி வளர்ச்சி பெற்றது. இந்த அரசரின் பழங்கால அரண்மனைக்கு அருகில் முருகப்பெருமானின் நல்லூர் கந்தக்கோயில் (சம்ஸ்கிருதம்: ஸ்கந்தஸ்வாமி) அமைந்து இருந்தது. இந்த கோயிலை சுற்றி கிழக்கில் வெயிலுகந்த பிள்ளையார், மேற்கில் கைலாசநாத சிவன் கோயில், வடக்கில் வீரகாளி அம்மன் கோயில் மற்றும் தெற்கில் சட்டநாதர் கோயில் என்று நான்கு திசைகளிலும், காவலுக்காக கோயில்கள் அமைக்கப்பட்டன. இராச்சியத்தின் சின்னாமாக கொடி மற்றும் முத்திரையில் நந்தி அமைந்து இருந்தது. இந்த சின்னத்தை அவருக்கு அடுத்ததாக வந்த அரசர்களும் தொடர்ந்தார்கள்.§§

போர்த்தகீசியர்கள் நல்லூர் கந்தசவாமி கோயிலையும் அதன் அடித்தளத்தையும் அழித்து இருந்தாலும், சுமார் 1734 வருடத்தில் டச்சு நாட்டவர்களின் ஆட்சியின் போது ஒரு சைவ சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. இந்த காலத்தில் வாழ்ந்த பல்வேறு பாணர்கள் மற்றும் கவிஞர்கள், தலைசிறந்த சமய பாடல்களை இயற்றினார்கள். இதனால் மீண்டும் நல்லூரில் சமய ஞானம் நிரம்பி வழிந்தது. அப்போது யாழ்ப்பாணம் கச்சேரியில் உயர் பதவியில் இருந்த, ஸ்ரீமத் ரகுநாத மாப்பாண முதலியார் அவர்கள், முருகப்பெருமானின் ஆயுதமான வேலை வழிபடுவதற்கு, ஒரு வேல் கோட்டம் அமைக்க டச்சு அரசிடம் வேண்டுகோள் விடுத்து, அவர்களிடம் இருந்து அனுமதி பெற்றார். §§

நல்லூர் கோயில் செல்லப்பசுவாமி வாழ்க்கையின் மையமாக இருந்தது. இந்த பழங்கால முருகன் கோயிலின் கருவறையில், ஒரு சக்தி வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது, மற்றும் அது இன்றும் யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் ஒரு மிகவும் முக்கியமான இந்து கோயிலாக விளங்குகிறது. இதற்கு இதன் வலுவான பரம்பரை தான் காரணம் என்று பலர் கூறுகின்றனர். §§

அந்த இடத்தில் கடையிற்சுவாமி அடிக்கடி செல்லப்பசுவாமியை வந்து சந்திப்பார். அவர்கள் இருவரும் நீண்டதூரம் ஒன்றாக நடந்து சென்று தனிமையான இடங்களில் தியானம் செய்தார்கள். ஒரு நாள் கோடைகால மதிய நேரத்தில், செல்லப்பசுவாமி நல்லூர் கோயில் வளாக மரத்தடியில் அமர்ந்து இருந்தார். அவர் திடீரென்று தான் வெய்யிலில் இருப்பதை போல, தனது குடையை விரித்துக்கொண்டார். பத்து நிமிடங்கள பிறகு கடையிற்சுவாமி வந்ததும், தனது குடையை மடக்கிக்கொண்டார். தனது குரு வருகிறார் என்பதை செல்லப்பசுவாமி தெரிந்துகொண்டு, அவர் நடந்து வரும் போது அவருக்கு சூட்சும ரீதியாக நிழல் வழங்க, தனது குடையை செல்லப்பசுவாமி விரித்திரிக்க வேண்டும் என்று சம்பவத்தை பார்த்த சாட்சிகள் கருதினார்கள். §§

பைத்தியக்காரன் என்ற வெளி வேடம் §

கடையிற்சுவாமி உயிர் நீத்த சில வாரங்களில், செல்லப்பசுவாமி வெளியுலக தொடர்புகளை இழந்து, ஒரு பைத்தியக்காரனாக, கட்டுப்பாடு இல்லாமலும் ஒழுங்கில்லாமலும் நடந்துகொண்டார். அவர் நல்லூர் தேரடியின் திண்ணையில் இரவு பகலாக நகராமல், சுவாசிக்காமல், பசி மற்றும் தாகம் இல்லாமல் அமர்ந்து இருந்தார். அவர் வேறு உலகில் வாழும் ஒரு அற்புதமான மனிதராக இருந்தார். ஆனால் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் பற்களுடன் மெலிந்து, வெள்ளை நிற முடியுடன் பார்ப்பதற்கு விகாரமாக இருந்தார். மக்கள் படையல்களாக கற்பூரம், பழங்கள் மற்றும் பூக்களை கொண்டு வந்து, அவரது திருவடிகளில் பேரானந்தத்துடன் அமர்ந்துக்கொண்டனர். அவர் அந்த இடத்தில் அதிக நேரம் இருந்ததால் மக்கள் அவரை நல்லூர் சித்தர் அல்லது தேரடி சித்தர் என்று அழைத்தார்கள். §§

அவர் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த வில்வ மரத்தடியில் அமர்ந்து சாப்பிடுவார் மற்றும் அதே இடத்தில் தியானமும் செய்வார். சில நாட்களுக்கு பிறகு, தேரடிக்கு எதிர்புறத்தில் இருந்த சாலையில், தனது சகோதரி செல்லாச்சிக்கு சொந்தமான நிலத்தில் ஒரு மூலையில், களிமண் சுவர்களுடன் கூடிய ஒரு ஓலை குடிசையை பயன்படுத்த தொடங்கினார். சில நாட்களுக்கு அவள் தனது சகோதரனுக்கு உணவை கொண்டு வருவாள், ஆனால் அவர், “இங்கிருந்து போ! அதை எடுத்து சென்றுவிடு! நீ எனக்காக நச்சு கலந்த உணவை கொண்டு வந்திருக்கிறாய்,” என்று அலறுவார். அவர் அந்த குடிசையில் தனக்கு உணவை தானே சமைத்துக்கொள்வார். அவர் அந்த தேரடியின் கற்காரை படிகளில் ஒரு மெல்லிய கோரைப்பாயில் உறங்கி, வாழ்ந்த ஒரு எளிமையான வாழ்க்கை மற்றவர்கள் மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதோடு, இலங்கையில் சைவ சமய எதிர்காலத்தையே மாற்றி அமைத்தது. §§

அவர் சமாதியில் இல்லாத போது, அவரது நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தன. தன்னிடம் ஆசிகளை பெற வந்தவர்கள் மீது பொருட்களை வீசி எறிவார். தன்னை இருமுறை பார்த்த நபர்களை துரத்திக்கொண்டு கூச்சலிட்டுக்கொண்டு ஓடுவார். இவர் அசாதாரணமானவர் என்பதை மக்கள் உறுதியாக அறிந்து இருந்தாலும், இந்த விசித்திரமான மனிதரை பற்றி புரிந்துகொள்ள முடியாமல் விலகியே இருந்தார்கள். செல்லபசுவாமியின் சீடரான சிவயோக சுவாமி, அந்த மர்மமான சாதுவை பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்:§§

சின்னத் தனமாய்த் தெருவாலே போவாரை §

என்னப்பன் பேசிடுவான் - சின்னத்தங்கம் §

இவன்விசரன் என்பாரடி.§

உல்லாச நடையனடி ஊரூராய்த் திரிவானடி §

எல்லோரு மிவனைக்கண்டு - சின்னத்தங்கம் §

ஏளனஞ் செய்வாரடி. §§

அப்போது ஆங்கிலேயர்களின் கிறித்துவ ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அந்த காலகட்டத்தில், காவி உடை அணிந்த சந்நியாசிகள் துன்புறுத்தப்பட்டார்கள் அல்லது சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதற்கு பயந்து இந்து துறவி அல்லது சுவாமி தனது ஆன்மீக வேலையை தொடர வெள்ளை உடை அணிந்துகொண்டார்கள். உண்மையில் செல்லப்பசுவாமிக்கு ஒரு பைத்தியம் இல்லை, தொல்லைகளை தவிர்க்க அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அவரது குரு அவருக்கு அறிவுறுத்தி இருந்தார். செல்லப்பசுவாமி உன்மத அவஸ்தா என்கிற பைத்தியக்கார வெளிவேடத்தில், தனது பெருமையை மறைத்து வைத்திருந்த ஞானியாக விளங்கினார். அவரை “விசரன் (பைத்தியம்) செல்லப்பசுவாமி" என்று உள்ளூர் மக்கள் அழைத்தனர். அவரது குடும்பம் அவரது நடத்தையை உண்மை என்று நம்பி, அவரது பாதுகாப்பிற்காக சங்கலியில் கட்டி வைத்தது. §§

அவர் ஆன்மீக தலைவர் என்றும் அதனால் தங்களுக்கும் தாங்கள் மேற்கொள்ளும் சமயபரப்பு முயற்சிகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்றும் ஆங்கிலேயர்கள் நிர்வகித்த அரசாங்கம் தன்னை சந்தேகிக்காமல் இருக்கவும், தகுதியில்லாத பக்தர்களை தவிர்க்கவும், செல்லப்பசுவாமி யாழ்ப்பாணம் சாலைகள் வழியாக, எல்லோருக்கும் கேட்கும்படியாக ஆனால் அதே சமயத்தில் யாருக்கும் புறியாதவாறு சிக்கலான மற்றும் குழப்பமான, மறைபுதிரான சொற்றொடர்களை உரக்க தனக்குத்தானே பேசிக்கொண்டு, யாழ்ப்பாணத்தின் சாலைகள் வழியாக பேரானந்தத்தில் தள்ளாடி செல்வார். அந்த சமயத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த பாதிக்கு மேலான ஆச்சாரமான சைவ குடும்பங்கள், மதம் மாற்றுவதில் தீவிரமாக இருந்த கத்தோலிக்க, ஆங்கிலிக்க மற்றும் மற்ற சீர்திருத்த திருச்சபை சமயப்பற்றுகளின், தற்காலிக தாக்கத்திற்கு ஆளாகினார்கள். §§

பல வருடங்களுக்கு பிறகு, யோக சுவாமியும் இதைப்போன்ற தொல்லைகளை எதிர்கொண்டார் மற்றும் அவரையும் உள்ளூர் மக்கள் பைத்தியம் என்று நினைத்தனர். ஆனால் நன்றாக தீர்மானிக்கும் திறனுடைய கிராம மக்களுக்கு, இவர்கள் உண்மையில் திடமான சிந்தனையாற்றலை உடையவர்கள் என்றும், அறிவுக்கு எட்டாமல் மறைந்து இருப்பதாக வேதங்கள் குறிப்பிடுவதை இவர்கள் அறிந்து இருந்தார்கள் என்றும் தெரிந்து இருந்தது. இவர்கள் முந்தைய பிறவியில் சாதுக்களாக இருந்தவர்கள் என்பதால், அவர்களால் மெய்யுணர்வின் ஆழங்களை முழுமையாக புரிந்துகொண்டு, தியானத்தில் இயல்பான ஈடுபாட்டுடன் பல மணிநேரங்கள் அல்லது பல நாட்களுக்கு தொடர்ந்து உட்கார்ந்து இருக்க முடிந்தது. ஆனால் சமூகத்திற்கு இதில் ஈடுபாடு இல்லை என்பதால், அவர்களால் இதை புரிந்துகொள்ள முடியவில்லை. பின்வரும் நுண்ணறிவை நல்லூரின் செல்லப்ப சுவாமி புத்தகம் வழங்குகிறது: §§

image§

யோக சுவாமி தான் செல்லப்பசுவாமியும் சேர்ந்து மேற்கொண்ட பயணத்தை பற்றி விவரிக்கும் போது, செல்லப்பசுவாமி எவ்வாறு வானத்தை பார்த்துக்கொண்டே தரையில் சிதறி இருந்த எறும்பு புற்றுக்களை மிதிக்காமல் சென்றார் என்றும், ஆனால் அவர் அவற்றின் மீது கவனமாக இருந்துக்கொண்டு எறும்புகளின சீற்றத்திற்கு ஆளானார் என்பதையும் ஆச்சர்யத்துடன் பகிர்ந்துக்கொள்வார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

“செல்லப்பா தனது உண்மை நிலையை வெளிப்படுத்த போவதில்லை,” என்று செல்லப்ப சுவாமி தெளிவாக அறிவித்து இருந்தாலும், “செல்லப்பா எங்கள் தந்தை, உண்மையான தந்தையாக எங்கள் மீது கருணையை பொழிந்து, நல்லூரின் தங்க தந்தையாக விளங்குகிறார்,” என்பதை உறுதி செய்யும் வண்ணம், ஏராளமான பக்தர்கள் அவரை நாடி வந்தனர். அவர் மீது வலுவான நம்பிக்கையுடன் வெகு தொலைவில் இருந்து அவரை நாடி வந்தவர்களில் திரு ஞானசம்பந்தர், ராமலிங்கம், கொழும்புத்துறையை சேர்ந்த துரையப்பா மற்றும் பொன்னையா, ஆறுமுகம், இளையதம்பி, கந்தர்மடத்தை சேர்ந்த தாமோதரம்பிள்ளை மற்றும் கம்பன்தரையை சேர்ந்த முருகேசு ஆகியோர் அடங்குவர். §§

அவர்களிடம் சுவாமி மிகவும் பரிவுடன் நடந்துகொண்டார். தாங்கள் துறவறம் மேற்கொள்ள விரும்புவதாக சில சீடர்கள் குறிப்பிடும் போது, அவர், “உனது வாழ்க்கை முறையும் துறவறமும் இரு துருவங்களாக இருக்கின்றன. உனக்கு திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்,” என்று குறிப்பிடுவார். சொந்தங்கள் தங்களை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும், இது தொடர்பாக அவரது அனுமதி நாடி வந்து இருப்பதாகவும் சிலர் குறிப்பிடும் போது, “நீ திருமணம் செய்துகொள்ள என்னிடம் எதற்கு அனுமதி கேட்கவேண்டும். இங்கிருந்து முதலில் கிளம்பு,” என்று சுவாமி கூறுவார். யாராவது திருமணத்தை பற்றி பேசினால், அவர் அவமானப்படுத்தும் குரலுடன் கண்டித்து, “செய்தி கேட்டாயா? அரசாங்க அதிகாரி தனது மகளை எனக்கு மணம்முடிக்க விரும்புகிறார். நான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமாம். செய்துக்கொள்ளவா?” என்று நேரடியாக பேசுவார். §§

நீ ஒரு உணர்தலை பெற்ற குரு என்று மற்றவர்களுக்கு தெரிய வைப்பது, முட்டாளாக இருப்பதை காட்டிலும் பெரிய முட்டாள்தனம் என்று செல்லப்பசுவாமி யோக சுவாமியிடம் தெரிவித்தார். சாதாரண மக்கள் உனது நிம்மதியை கெடுப்பார்கள். அருளை பெறுவதற்கு தேவையான தகுதிகள் எதுவும் இல்லாமல், பெரும்பாலும் வலுக்கட்டாயமாக ஆசிகளை பெறுவதற்காக, அவர்கள் உன்னை இரவு பகலாக துரத்திக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் லௌகீக ஆசிகளை பெறுவதற்காக, தங்களது எதிர்காலத்தை பற்றி தெரிந்துக்கொள்ள அல்லது ஏதாவது வியக்கத்தக்க வகையில் நடைபெறும் என்ற நம்பிக்கையில் அருகில் நிற்பதற்காக வருவார்கள். §§

செல்லப்பசுவாமி பற்றிய தனது அபிப்ராயம் மற்றும் அவரது பைத்தியக்கார வெளிவேடம் பற்றிய தனது ஆழமான நுண்ணறிவுகளை யோக சுவாமி, லைஃப் அண்ட் டிசிங்ஸ் (யோக சுவாமி, வாழ்க்கை மற்றும் போதனைகள்) என்ற தனது எழுத்துப்பிரதியில் திருமதி இந்துமதி (அம்மா) நவரத்னராஜா வழங்கியுள்ளார். §§

மிகவும் பிரபலமான மனிதரான செல்லப்பர் தேரடியின் படிக்கட்டில் ஒவ்வொரு நாளும் அமர்ந்து இருப்பார். ஆனால் ஒரு வெற்று பார்வையுடன் அமர்ந்து இருந்த, அந்த கருப்பு நிற சாதுவின் முகத்தில் தெய்வீகத்தன்மை எதுவும் தென்படவில்லை என்றாலும், முரட்டுத்தனம் மட்டும் தெளிவாக தெரிந்தது. ஒளிக்கூட புகமுடியாமல் மக்கள் கூட்டம் அலைமோதும் பண்டிகை காலங்களிலும், அவர் படிக்கட்டில் பிரகாசமான முகத்துடன் உட்கார்ந்து, தன்னை நினைத்து சிரித்துக்கொண்டு இருப்பார். சிலசமங்களில் படியில் படுத்துக்கொண்டு, நிந்திப்பவர்களை பார்த்துக்கொண்டு இருப்பார். சிலசமயங்களில் அவர் குறிக்கோள் இல்லாமல் அலைந்து கொண்டு இருப்பவர்களை பார்த்து, இழிவான வார்த்தைகளால் திட்டுவார். அவர்கள் பதிலுக்கு அவரை நிந்தித்து, அவரை ஒரு முட்டாள் என்று கூறி கிளம்பி விடுவார்கள். அவர்கள் இந்த நிந்தனை பற்றி கவலைப்படாமல், அவர் தொடர்ந்து வசைப்பாடிக்கொண்டு இருந்தார்.§§

சிலசமயம் அவர் முருகப்பெருமானின் சன்னிதானத்தில் கருவறை முன்பாக கந்தல் துணியுடன் நின்றுக்கொண்டு, போவோர் வருவோரை கடுஞ்சொற்களால் திட்டுவார். அவர் சிலசமங்களில் திருநெல்வேலி, கொழும்புத்துறை மற்றும் மற்ற இடங்களில் சுற்றிக்கொண்டு இருப்பார். அவர் சுற்றித்திரிவதை பார்த்து, மக்கள் அவரை பைத்தியம் என்று கிண்டல் செய்வார்கள். அவர் வீடுகள் முன்பாக நின்றுக்கொண்டு யாசகம் செய்துக்கொண்டு இருப்பார். மற்றும் யாசகமாக எது கிடைத்தாலும், அதை ஏற்றுக்கொள்வார். சில சமயம், அவர் அரிசியுடன் ஏதாவது ஒரு காய்கறியை சமைத்து சாப்பிடுவார். அவர் அதிகநேரம் தூங்குவில்லை. அவர் நள்ளிரவிற்கு பிறகு, தனது கைகளை தலையணையாக பயன்படுத்தி, தரையில் உறங்கிக்கொண்டு இருப்பார். §§

பனை மற்றும் தென்னை ஓலைகளை பயன்படுத்தி, பல கலை வடிவங்களை பின்னுவதில் தென்பட்ட அவரது கைவண்ணம் மட்டுமே, அவர் ஒரு பைத்தியம் இல்லை என்பதை தெரிவித்தது. ஆனால் இந்த விசித்திரமான உலகம் அவரது இந்த ஆரோக்கியமான மனநிலையை புரிந்துகொள் இந்த ஒரு காரணம் மட்டும் போதுமா என்ன? §§

செல்லப்பசுவாமி ஒரு பைத்தியத்தின் பண்புகளையும், ஆன்மீக தியானத்தில் மூழ்கி இருக்கும் ஒரு மிகப்பெரிய சாதுவின் பண்புகளையும் கொண்டு இருந்தார். அவரால் முட்டாளாக்கப்பட்டவர்கள், அவரை ஒரு முட்டாளாக கருதினார்கள். ஆன்மீக புரிதலுக்காக ஏங்கிக்கொண்டு இருப்பவர்களுக்கு, அவர் ஆழமான ஞானத்தை உடையவர் என்ற அவரது உண்மையான நிலை தெரிந்தது. சிவயோக சுவாமி அவரை ஒரு உன்னதமான முனிவராக கண்டார், மற்றும் அவர் ஒரு குருவின் வடிவத்தில் யோக சுவாமிக்கு தகுதியை வழங்கி, தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றினார். “தேரடியில், பிறை வடிவில் பிரகாசமான அருளாக அவரை கண்டேன். அவர் என்னை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டு, எனக்கு பேரானந்த வழியை காண்பித்தார்.” §§

செல்லப்பா இந்த அச்சுறுத்தும் மாறுவேடத்துடன் தனியாக அலைந்துக்கொண்டு, தனது உண்மையான இயல்பை யாரும் அறியவேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார். அவரது உள்ளத்தின் உண்மையான இயல்பை பற்றி வேதாந்தம் மற்றும் சித்தாந்தத்தை கற்றறிந்த பண்டிதர்களுக்கும், அவருக்கு நீண்ட நாட்கள் நண்பர்களாக இருந்தவர்களுக்கும் தெரியவில்லை. செல்லப்பா தான் ஏற்ற பைத்தியக்கார வேடத்தில் யாருக்கும் சந்தேகம் வராமல் சிறப்பாக நடித்தார். “நாற்பது வருட காலமாக தாம் எடுத்த கோலத்தை எவரும் சந்தேகப்படாமல் நடித்துவிட்டு போனார்,” என்று ஒருமுறை யோக சுவாமி குறிப்பிட்டார். §§

செல்லப்பசுவாமி மறைபுதிராக பேசிய மொழியை குறிவிலக்கம் செய்து புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அவரது “தேன் துளிகளை” யோக சுவாமி பதிவு செய்ததில் இருந்து ஒரு தொகுப்பு:§§

“இயல்பாக எதுவும் தீய பண்புடன் இருப்பதில்லை,” மற்றும் “ முழுமையான உண்மையை யாராலும் புரிந்துகொள்ள முடியாது” என்று சொல்லி, அமைதியாக இருப்பார். “இது இப்படித்தான் இருக்கிறது, மற்றும் இது பாசாங்குத்தனத்தில் மறைந்து இருப்பதால், இதை முழுமையாக அறிந்தவர் என்று யாரும் இல்லை” என்று கந்தனின் முன்பக்க வாசலில், கந்தலான துணிகளுடன் இருந்த உயர்ந்த செல்லப்பன் கூறினார். அந்த இடத்திற்கு அடிக்கடி வந்தவர்களை, அவர் அவதூறாக பேசுவார்.§§

“அது முடிவில்லாத தொடக்கத்தில் இருந்து அப்படித்தான் இருக்கிறது,” என்று சொல்லி அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு இருப்பார். “இவை அனைத்தும் மாய நிகழ்வுகள்,” என்று முணுமுணுப்பார், “யார் அறிவார்?” மற்றும் “எப்போவோ முடிந்த காரியம்” என்று சொல்லி நல்லூர் கோயிலின் வெளிபுறத்தில் இருந்த பிரகாரத்திற்கு சென்று புழுதி படிந்த இடத்தில் அமர்ந்து, தன்னை வணங்கவரும் மக்களைப் பார்த்த அச்சத்தில் புழுதி எல்லாம் பறந்து விடும் என்பார். யாரும் அவரிடம் இருந்து தனது கேள்விக்கான பதிலை பெற்றதில்லை என்று நினைக்கிறேன். அவரது முட்டாள்தனமான பேச்சில் இருந்து அவ்வப்போது வெளிவரும் தேன் துளிகளுக்காக, நான் அவர் அருகே காத்து இருந்தேன்.§§

ஒரு உணர்தலை பெற்ற நபரின் சக்திகள் பற்றிய எண்ணற்ற அற்புதமான கதைகள் மற்றும் தன்னை குருவாக அறிவித்தவரை நோக்கி ஆர்வத்தை நாடுபவர்கள் ஈர்க்கப்பட்ட கதைகள், இலங்கை இந்துக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன. சற்குருவின் உண்மையான இயல்பை புரிந்துகொண்டு தயார் நிலையில் இருந்த சில சீடர்கள், அவருடன் இருப்பதற்காக எந்த தடையையும் கடந்து செல்வார்கள் என்று செல்லப்பசுவாமி கூறினார். சற்குரு எந்த ஒரு மாறு வேடத்தில் இருந்தாலும், அத்தகைய ஒரு விழைபவர் அவரை உணர்ந்துக்கொள்வார். சற்குரு வீடு வாசல் இல்லாத ஆண்டியாக, கிராமத்தில் ஒரு பறையனாக இருந்தால், சமூக ரீதியாக தகுதியற்றவராக இருக்கும் ஒருவரை பின்பற்றும் போது சமூகம் வெளிப்படுத்தும் அதிருப்தியை தாங்குவதற்காக, விழைபவர் அதிக வலிமையை பெறுவார். §§

உணர்தலை நாடும் சீடன், எந்த தடையாலும் துவண்டு விடமாட்டார். குரு அவரை திருப்பி அனுப்பி விட்டால், அவர் தனது பாதையில் இருந்து விலகமாட்டார். குரு செய்வது எதுவானாலும், அதை தனக்கு கிடைக்கும் ஆசியாக ஏற்றுக்கொள்வார். குருவுடன் இணக்கத்தை பெறுவதற்கு தனது உருவம், தனது கருத்துக்கள், தனது அறிவாற்றல், தனது இயல்பை மாற்றிக்கொள்வார். ஒரு குருவால் திருப்பி அனுப்பப்பட்ட சீடர்கள், அதே குருவிடம் மாறு வேடத்தில் திரும்பியதாக எண்ணற்ற கதைகள் குறிப்பிடுகின்றன. இந்த உத்தி பலனளிக்கவில்லை என்றால், அந்த சீடன் அந்த இடத்தில் இருந்து கிளம்பி, தனது குணத்தை மாற்றிக்கொண்டு நல்ல நிலையில் திரும்பும் வரை, தனது வாழ்க்கையை உருமாற்றும் தவத்தை மேற்கொள்வார். §§

செல்லப்பாவின் சகோதரியின் மகன், அவர்களது வீட்டில் தங்கி இருந்தான். அந்த இளைஞன் முன்கோபியாக இருந்தான். அவன் செல்லப்பசுவாமியை ஒரு சாதுவாக ஏற்றுக்கொண்டு இருந்தாலும், செல்லப்பசுவாமி தன்னை, தனது தாயை மற்றும் தனது குடும்பத்தை மட்டும் அல்லாமல் தங்கள் நண்பர்கள் மற்றும் விருந்தினர்களையும் தரக்குறைவான வார்த்தைகளால் தாக்கியதால், அவன் பெரும்பாலான சமயங்களில் சுவாமியை கடிந்து கொண்டான். §§

ஒரு நாள் செல்லப்பசுவாமி தங்கள் குடும்ப வளாகத்தில் இருந்த திறந்தவெளி கிணற்றிற்கு அருகில் நின்றுக்கொண்டு, தனது சகோதரியை உரத்த குரலில் திட்டிக்கொண்டு இருந்தார். உடனே அந்த இளைஞன் தனது தாயை காப்பாற்றுவதற்காக வீட்டிற்கு வெளியே ஓடி வந்து, செல்லப்பசுவாமி திட்டுவதை நிறுத்தவேண்டும் என்று அலறினான். செல்லப்பசுவாமி அவன் சொன்ன வார்த்தைகளை கிண்டல் செய்யும் வண்ணம், அவரும் பதிலுக்கு கத்தத் தொடங்கினார். அந்த இளைஞன் சுவாமியை நெருங்கி அவரை குத்துவதற்காக இரண்டு கைகளையும் மடக்கிக்கொண்டு, திடீரென்று இரண்டு மீட்டர் அகல கிணற்றைத் தாவி மறுபுறம் வந்து விழுந்தான். செல்லப்பசுவாமி அவனது நெஞ்சில் லேசாக கை வைத்தார். உடனே அவனது கோபம் முழுமையாக தணிந்தது. அந்த இளைஞன் என்ன செய்கிறோம், எங்கே இருக்கிறோம் என்று தெரியாமல், பேச்சு மூச்சு இல்லாமல் அதிர்ந்து நின்றுக்கொண்டு இருந்தான். §§

அந்த குடும்பம் காலப்போக்கில், செல்லப்பசுவாமியின் வார்த்தைக்கு மதிப்பு அளிக்க கற்றுக்கொண்டது. ஒரு முறை அந்த குடும்பம் தங்களுக்கு நெருக்கமான நண்பர்களுடன், தென்கிழக்கு பிராந்தியத்தில் இருக்கும் மலைகளில் காடுகளால் சூழப்பட்டு, புலிகள் நடமாட்டம் அதிகமிருக்கும் இடத்தில் அமைந்துள்ள, இலங்கையின் மிகவும் பிரபலமான கந்தக் கடவுளின் கோயிலான கதிர்காமத்திற்கு தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிட்டனர். அவர்கள் அதற்காக பணத்தை சேமித்து, பல மாதங்கள் முன்பே பயணத்தை பற்றி பேசத்தொடங்கினர். அவர்கள் பயணத்தை பற்றி செல்லப்பசுவாமிக்கு தெரிய வந்தது. இறுதியாக அவர்கள் கிளம்பும் நாள் வந்த போது அவர், “எதற்காக தேடி செல்கிறீர்கள்? கடவுள் இங்கேயே இருக்கிறார்,” என்று கூறினார். உடனே அவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். ஆனால் அந்த குழுவில் இருந்த ஒருவர் மட்டும், தனியாக தனது பயணத்தை தொடங்கினார். ஆனால் அவர் கதிர்காமம் சென்றடையவில்லை. அவருக்கு நடுவழியில் தீவிர மலேரியா தொற்றிக்கொண்டது மற்றும் மருத்துவமனையில் ஆறு மாதங்கள் இருந்து, மருத்துவ கட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்திய பிறகே யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். §§

image§

செல்லப்பசுவாமி தனது ஆசைகள் மற்றும் உணவுப்பழக்கங்கள் மீது ஒரு தீவிரமான கட்டுப்பாட்டை கடைப்பிடித்தார். அவர் வழக்கமாக தனியாக உட்கார்ந்து சாப்பிடுவார். அந்த உணவு நல்லூர் கோயிலின் வில்வ மரத்தடியில் ஒரு எளிமையான விறகு அடுப்பில் தயார் செய்யப்பட்டு இருக்கும்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அற்புதமான வேலைப்பாடுகள் §

பெரும்பாலான சமயங்களில் செல்லப்பசுவாமி முட்கள் நிறைந்த வில்வ ( Aegle marmelos) மரத்து அடியில் காணப்படுவார். இதன் இலைகள் திரிசூலம் போன்ற வடிவத்தை கொண்டு இருப்பதால், இது சிவபெருமானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அந்த மரம் வழங்கிய மிகப்பெரிய நிழலின் கீழ் சூரிய வெப்பத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டு, அவர் தனக்குத்தானே பேசிக்கொள்வார், தியானம் செய்தார், உணவு அருந்துவார் மற்றும் அங்கே அமர்ந்துகொண்டு பனை மற்றும் தென்னை ஓலைகளை பயன்படுத்தி பல்வேறு வடிவங்களில் விசிறிகள் மற்றும் கொள்கலன்களை உருவாக்குவார். அவர் பொதுவாக நாள் முழுவதும், சுட்டெரிக்கும் வெய்யிலில் ஓலைகள் மூலம் விசிறிகளை பின்னிக்கொண்டு இருப்பார். அந்த கலையில் தேர்ச்சி பெறுவதற்கு பொறுமை மற்றும் திறமை தேவைப்பட்டது, மற்றும் அதில் மிகவும் சிறந்தவராக விளங்கினார். அவர் தயாரித்த ஒவ்வொரு விசிறியும் ஒரு பிரத்யேக வடிவத்தில் இருந்தன. அவர் அந்த விசிறிகளை சீடர்கள் மற்றும் வழிப்போக்கர்களுக்கு வழங்கினார். அந்த விசிறி வேதனையில் இருந்து பாதுகாப்பு, குளிர்ச்சி மற்றும் நிம்மதியின் மறைமுக அர்த்தத்தால் ஊக்குவிக்கப்பட்டு, ஒரு பிரார்த்தனை மற்றும் ஆசியாக விளங்கியது. கூரைகள், சுவர்கள் மற்றும் வேலிகளுக்கு பயன்படுத்தப்படும் தென்னை ஓலையில் இருந்து காட்சன் என்ற ஒரு வகை பாயையும் தயார் செய்தார். §§

இந்த மர்மமான சித்தர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இலங்கை கலாச்சாரத்தில் அதிகம் கௌரவிக்கப்பட்டவர்களில் ஒருவரான சர் பொன்னம்பலம் ராமநாதன், செல்லப்பசுவாமி இருந்த காலத்தில், யாழ்ப்பாணம் நகரத்தின் எல்லையில் இருந்த மருதனார்மடத்தில் இளம்பெண்களுக்காக இராமநாதன் கல்லூரியை துவக்கினார். விமர்சியாக நடந்த அதன் திறப்பு விழாவில், சுவாமி முதலாவதாக வந்து இருந்தார். திறந்து இருந்த கதவுகள் வழியாக அவர் நடந்து சென்று, இராமநாதனிடம் தான் செய்த சிறந்த மின்விசிறிகளில் ஒன்றை பரிசாக வழங்கி, “இயல்பாக எதுவும் தீய பண்புடன் இருப்பதில்லை; எப்போவோ முடிந்த காரியம்; முழுதும் உண்மை; நாம் அறியோம்,” என்று கூறினார். §§

பள்ளியின் வெற்றிக்கு, அன்றைய தினம் செல்லப்பசுவாமி வருகை தந்து ஆசி வழங்கியது முக்கிய காரணம் என்று அந்த சமூகம் கருதுகிறது. மிகவும் முக்கியமான நாளில் அதிலும் குறிப்பாக மங்களகரமான தருணத்தில், இந்த தெய்வீக புருஷர் தங்கள் பள்ளிக்கு வந்தது தனிச்சிறப்பு வாய்ந்ததாக பள்ளியில் இருந்த அனைவரும் கருதினார்கள். §§

தனது சொந்த செலவில், முழுமையாக கருங்கல்லில் செதுக்கவேண்டும் என்று உத்தரவிட்டு, கொழும்பின் கொச்சிகடேயில் புணர்நிர்மாணம் செய்த சிவன் கோயில் உட்பட, இராமநாதன் சைவ சமயத்திற்கு பல முக்கிய தொண்டுகளை செய்துள்ளார். அந்த கோயிலை முதலில் அவரது தந்தை முதலியார் பொன்னம்பலம் 1856 ஆம் ஆண்டில் கட்டியிருந்தார். புனர்நிர்மாணம் 1910 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. §§

image§

செல்லப்பசுவாமி பாரம்பரிய விசிறிகளை தயாரிக்க, பனைமரத்தின் உறுதியான ஓலைகளை பல மணிநேரங்கள் அறுத்துக்கொண்டும் பின்னிக்கொண்டும் இருப்பார். மக்கள் அந்த விசிறிகளை கொண்டு வெப்பத்தை தணித்துக்கொள்வார்கள். அவரது விசிறிகளை பெற்றவர்கள், தங்களுக்கு வலுவான ஆசிகள் கிடைத்ததாக கருதுவார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

செல்லப்பசுவாமி தனிமையை விரும்புவார். அவரது சொந்த சீடர்கள் அழைப்பு வந்தால் மட்டுமே அவரை சென்று சந்திப்பார்கள். அந்த அழைப்பில் சுவாமியின் முயற்சியே அதிகமாக இருக்கும். அவர்களுக்கு ஏதாவது தேவைப்படுகிறது என்றால், அது அவர்களுக்கு முன்பே கிடைத்து இருக்கும். சுவாமி அவர்களின் மனதை அறிந்து இருந்தார். பக்தர்கள் பெரும்பாலும் தங்களது இக்கட்டான தருணங்களில் உதவியை நாடுவார்கள். இதோ செல்லப்பசுவாமி ஆஃப் நல்லூரில் இருந்து ஒரு எடுத்துக்காட்டு :§§

கொழும்புத்துறையை சேர்ந்த இராமலிங்கத்தின் குழந்தை தீராத நோயால் வாடியது. பெற்றோர்கள் குழந்தையை சுவாமியிடம் அழைத்து செல்ல விரும்பினர், ஆனால் அவரது மாமியார், “அந்த பைத்தியம் எந்த சாதியை சேர்ந்தவர் என்று நமக்கு தெரியாது. குழந்தையை அவரிடம் அழைத்து செல்லவேண்டாம்,” என்று எச்சரித்தார். அந்த மூதாட்டியின் அறிவுரையை கேட்காமல், இராமலிங்கமும் அவரது மனைவியும் குழந்தையை சுவாமியிடம் அழைத்து சென்றனர். சுவாமி அவர்களை பார்த்ததும் “கனகம்மா, குழந்தையை இங்கே கொண்டு வா!” என்று ஆணையிட்டார். ஒரு உள்ளூர் மருத்துவரிடம் சென்று ஒரு குறிப்பிட்ட மருந்தை வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தலை வழங்கிக்கொண்டே, “உன் தாய்க்கு சாதியை பற்றிய சந்தேகம் இருந்தது. நான் வட்டுக்கோட்டை வெள்ளாள சமூகத்தை சேர்ந்தவன் என்று சூரியன் மற்றும் சந்திரனை சாட்சியாக வைத்து உறுதி செய்கிறேன்,” என்று அறிவித்தார். சுவாமி குழந்தையை தொட்டதும், அதன் வெப்பம் குறைந்தது, மற்றும் அவர் பரிந்துரைத்த மருந்தை தந்ததும், குழந்தை பூரண குணமடைந்தது. §§

image§

செல்லப்பசுவாமியின் விசேடமான சுயகட்டுப்பாட்டை, அவர் தனது பசியை அடக்கிக்கொள்ளும் முறையில் இருந்து தெரிந்துக்கொள்ளலாம். அவர் உணவு தயாரிக்கும் போது, சாப்பிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நாவில் நீர் ஊருகிறது என்றால், அவர் சமையலுக்கு வைத்திருந்த மண் பாண்டங்களை உடைத்து, சாப்பிடாமல் விரதம் இருப்பார். இது அவ்வப்போது நடந்துகொண்டு இருந்ததால், யோக சுவாமி அவரை “உடைந்த மண் பாண்டங்களால் சூழப்பட்டவர்,” என்று அவரை வர்ணிப்பார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

புதியவர்கள் சுவாமி என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு ஆர்வத்துடன் அருகில் நெருங்கி வந்தால், அவர் அவர்களை திட்டி, பொருட்களை அவர்கள் மீது எறிந்து திருப்பி அனுப்பிவிடுவார். அவர் தூசி, சேர், மாட்டுச்சாணம், குப்பை என்று கையில் கிடைப்பதை எடுத்து வீசியதால், அவர் தனது வேலையை தொடரட்டும் என்று மக்கள் கிளம்பிவிடுவார்கள். §§

இவ்வாறு செல்லப்பசுவாமி திட்டும் ஒவ்வொரு முறையும், அவர் சீடர்களின் தவறுகளை திருத்தி அவர்களது உட்புற மனதில் அதிக நலிவுற்ற மற்றும் அதிக ஆத்திரத்துடன் இருக்கும் பகுதியுடன் தொடர்பு கொண்டார். அவர்கள் எங்கே தவறு செய்கிறோம் என்பதை தெரிந்துகொள்ள, ஆன்மீக மாற்றம் பெறுவதற்கு எதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள சுவாமி மீது நம்பிக்கை வைத்து இருந்தார்கள். §§

வெளியுலகிற்கு தெரிய வேண்டாம் என்று தாங்கள் விரும்பிய தகவல்களை இவை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், ஒரு ஆழமான மனோஉணர்வு சிகிச்சை ஏற்படுத்தும் உணர்வை போன்று அதிகமாக ஊடுருவும் ஒரு ஆன்மீக சக்தியின் துணையுடன் வழங்கப்பட்டதால், அவர்களுக்கு இந்த கண்டிப்பு பிடிக்கவில்லை. இருந்தாலும் அவர்கள் மேலும் பெறுவதற்காக திரும்பத்திரும்ப சென்று, தெய்வீக ஆசிகளாக இந்த விவேகமான திருத்தங்களை பெற்றனர். அவரது வலுவான அருள் தனது தீவிரமான சீற்றத்துடன் அவர்களுக்குள் மூழ்கியதும், காலப்போக்கில் அவர்கள் எல்லா நிலைகளிலும் மேன்மையை அடைந்தனர். அவரது அருகில் இருந்து, எல்லையற்ற சக்திபாதத்தில் சிறிதளவை பெற்றதால், அது அவர்களை உருமாற்றி, வேறுபடுத்தி மேன்மை அடைய செய்தது. §§

இவ்வாறு ஒரு ஆன்மீக காதுடன் இருந்தவர்களுக்கு, அவர் ஒரு ஆன்மீக அரசராக பேசினார். ஒரு நுணுக்கமான மனதுடன் இருந்த சில வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள், செல்லப்பசுவாமி மீது பயபக்தியுடன் இருந்தனர். அவர் அவர்களை சபிப்பார், திட்டுவார் மற்றும் சில சமயம் அடிக்கவும் செய்வார். அவர் மனித ஆய்வில் மிகவும் உயர்வாக கருதப்பட்டு, வடக்கு இலங்கையில் பொதுவாக எல்லோராலும் புரிந்துகொள்ளப்பட்ட ஆன்மீக வாழ்க்கையை முழுமையாக வாழ ஊக்குவிக்கும் ஆன்மீக குருவாக, அவர்களின் ஆன்மீக வழிகாட்டியாக விளங்கினார். §§

செல்லப்பசுவாமி பசுமையாக மண்வளம் நிறைந்த இந்த தீவு எங்கும் பரவியிருக்கும் தமிழ் மக்களின் இதயங்கள் மற்றும் ஆன்மாக்களில் சைவ சமயம் தொடர்பான விழிப்புணர்வை படிப்படியாக, ஆனால் உறுதியாக மற்றும் மெதுவாக உருவாக்கும் தனது பரம்பரையின் மிகப்பெரிய சமயப்பணியை தொடர்ந்தார். அவர் மட்டும் இல்லை என்றால், சைவ சமயம் 21 ஆம் நூற்றாண்டில் நிலைத்து இருந்திருக்குமா என்பது சந்தேகம் தான். §§

ஆனால் சிலசமங்களில், தனக்கு பரிச்சயம் இல்லாத நபர்கள் தனக்கு பூக்களை கொண்டு வந்தாலோ அல்லது தனது காலடிகளில் விழுந்து வணங்கினாலோ, அவர்கள் மீது சுவாமி துளியும் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் தங்கள் வணக்கத்தை தெரிவிக்கும் போது, இவர் அசையாமல் உட்கார்ந்து இருப்பார். தாங்கள் வந்ததை சுவாமி அறிந்துகொண்டாரா என்பதை அவர்கள் உணர்வது மிகவும் கடினமாக இருந்தது. புதிராக இருந்த இந்த ஆன்மீக மாமனிதரிடம் இருந்து எதை எதிர்பார்ப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் தேவையானவை கிடைத்தன. §§

செல்லப்பா என்றும் ஒரு முனிவராக இருந்தார், ஆனால் எப்போதும் துறவியாக இருந்ததில்லை. அவர் பல சமயங்களில், தனக்கு பரிச்சயம் இல்லாதது போல் யோக சுவாமியை துரத்தி அனுப்பி, ஆன்மீக சிந்தனைகளில் அதிக நாட்டம் இல்லாமல் தெருவில் நடந்து செல்பவர்களை அழைத்து பேசிக்கொண்டு இருப்பார்.சுவாமி அவர்களிடம் இனிமையாக பேசி அருகில் வரவழைத்து, அவர்கள் கடவுள் அல்லது தங்களது சொந்த ஆன்மாக்களை பற்றிய சிந்தனை இல்லாமல், தினமும் பன்றிகளை போல தங்கள் வயிற்றை நிரப்பிக்கொண்டு, இரவில் நாய்களை போல தூங்கிக்கொண்டு, எண்ணற்ற ஆசைகளில் ஈடுபட்டு விலங்குகளை போல வாழ்ந்துகொண்டு, நரகத்தை நோக்கி விரைந்து செல்வது மட்டுமல்லாமல் மேலும் பல வழிகளில் ஒரு கசடை போன்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று முதலில் விரிவுரை வழங்கி, பின்னர் மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டி அனுப்புவார். அவர் குழுவில் இருந்த ஒவ்வொருவராக ஆய்வு செய்து, அவர்களது இரகசியமான தவறான நடத்தைகளை குறிப்பிட்டு, அவர்கள் செய்த பாவங்களை வெளிப்படுத்தி, பொதுமக்கள் முன்பாக அவர்களை நிந்திப்பார். அவர்கள் அந்த இடத்தில் இருந்து கிளம்ப முற்பட்டால், அவர் தனது கோபம் தீரும் வரை அவர்களை பின்தொடர்ந்து செல்வார். அவமானம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அவர் தனது ஆசிகளை வழங்குவதில், உண்மையை வெளிப்படுத்துவதில் அசராது உறுதியுடன் இருந்தார். §§

மக்களுக்குள் இருக்கும் உயிர்சக்தியை மாற்றி, அவர்களது வாழ்க்கையை மாற்றுவது அவரது மிகப்பெரிய ஸித்தியாக விளங்கியது. இந்த மனோஉணர்வு சக்திகளை செல்லப்பசுவாமி கடையிற்சுவாமியிடம் இருந்து பெற்று, யோக சுவாமிக்கு வழங்கினார். நமது முனிவர்களின் நியாயமான கோபத்தை இன்றும் தமிழ் மக்கள் “வெள்ளை கோபம்" அழைக்கிறார்கள். இதற்கு எதிர்பதமாக மூலாதார சக்கரத்திற்கு கீழே, விதள சக்கரத்தின் தீங்கிழைக்கும் கருப்பு கோபம் இருக்கிறது. §§

வாழ்க்கையில் குருவின் தீவிரமான வசவு பற்றிய பேச்சு எழும் போது, “குப்பையை எரிப்பதற்கு ஒரு பெரிய தீ தேவைப்படுவது இல்லையா?’ என்று யோக சுவாமி சவால் விடுவார். பிற்காலத்தில், யோக சுவாமியும் தீவிரமாக திட்ட ஆரம்பித்தார், மற்றும் இதனால் பலர் அவரை நெருங்க அஞ்சினார்கள். ஆனால் தான் கடுமையாக நடந்துகொள்வதாக யாருக்காவது தோன்றினால், அவர்களால் தனது குருவின் கடுமையான பேச்சை ஒரு நொடி கூட தாக்குப்பிடித்து இருக்க முடியாது என்று கூறுவார். §§

உங்களது கவனம் தங்கள் மீது இருக்கவேண்டும் என்பதற்காக, பெரும்பாலான மக்கள் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை உங்களுக்கு வழங்கி உங்களது அன்பை பெற விரும்புவார்கள்; உங்களுக்கு பிடித்தமான ஒன்றில் மீது இருந்த பற்றில் சிறிதளவை, அதை வழங்கிய நபருக்கு மாற்றுவீர்கள் என்று யோக சுவாமி விளக்கம் அளித்தார். “செல்லப்பகுரு, தனது நுணுக்கமான திட்டங்கள் மூலமாக, அனைத்தையும் என்னிடம் இருந்து விலக்கி, என்னை தன் பக்கம் இழுத்துக்கொண்டார். நான் எதையாவது வெளிப்படுத்துவதற்கு, ஏதாவது சேவை செய்வதற்கு, எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்வதற்கு, ஏதாவது ஸித்திகளை பெறுவதற்கு, மற்ற துறவிகள் அல்லது ஞானிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள அனுமதிக்கவில்லை. நான் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளவும் எனக்கு அனுமதிக்கவில்லை,” என்று தனது சீடர்களிடம் கூறினார். §§