குருமார்களின் சரித்திரங்கள்

Page 20: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/20_ka02_02.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

அத்தியாயம் ஆறு§

முக்தியானந்தா இலங்கையை நோக்கி கடலில் பயணம் §

ருகாலத்தில், தனக்கென்று ஒரு அரசருடன் இருந்த யாழ்ப்பாணம், கலாச்சாரம் மற்றும் ஆன்மீக ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் போர்த்துகீசியர்கள், நெதர்லாந்து நாட்டவர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் என்று தொடர்ச்சியாக ஒரு முப்பெரும் இராச்சியத்தின் கீழ் சிக்கிக்கொண்டது. இந்த குடியேற்ற குழுக்கள் அரசியல், வணிகம் மற்றும் மதத்தில் தங்களது மேலாதிக்கத்தை விரிவுப்படுத்த, இந்த அமைதியான தீவிற்கு வந்தடைந்தனர். யாழ்ப்பாணத்திலும் அதை சுற்றியும் பல இந்து கோயில்கள் அழிக்கப்பட்டு, பல கிறுத்துவ தேவாலயங்கள் கட்டப்பட்டன. அப்போது ஒரு ஆன்மீக தலைவரின் தேவை மிகவும் அதிகமாக இருந்தது. §§

தனக்கு கிடைத்த அறிவுறுத்தலின் படி முக்தியானந்தா, தென்னிந்தியாவில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்டார். அந்த பயணம் நடைமுறையில் கடினமாகதாக இருந்திருக்கவேண்டும். அவர் கால்நடையாக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை கடந்து, சுமார் 1860 வருடத்தில் இந்தியாவின் தெற்கு கரையை அடைந்தார். அவர் பால்க் நீர்சந்தியை மந்திர சக்தியால் பறந்து கடந்ததாக தமிழ் புராணக்கதை கூறினாலும், அவர் மிகவும் சாதாரண வழிகள் மூலமாக வந்ததாக வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் நமக்கு தெரிவிக்கிறார்கள். ஈழத்து சித்தர்கள் என்ற இலக்கியத்தில், முத்தையா இவ்வாறு வர்ணிக்கிறார்: §§

அந்த நாட்களில், வட இலங்கையில் ஊர்காவல்துறை ஒரு முக்கிய துறைமுகமாக இருந்தது. இந்தியாவில் இருந்து இலங்கை நோக்கி பெரிய கப்பல்கள் வந்துக்கொண்டு இருந்தன. இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு செல்லும் கப்பல்கள், முதலாவதாக எழுவைதீவை கடந்து செல்லும். இதைப்போன்ற ஒரு கப்பலில் முக்தியானந்தா ஊர்காவல்துறை வந்து சேர்ந்தார். அதன் பிறகு அவர் ஊர்காவல்துறையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நடந்து சென்றார். அவர் முதன்முதலில் மண்டைதீவு என்ற இடத்தில் தங்கினார். §§

image§

முக்தியானந்தா 1860 களில் வட இலங்கை வந்து சேர்ந்தார். அவர் இந்த தீவிற்கு ஒரு அந்நியராக வந்து இருந்தாலும், எதிர்காலத்தில் இந்த ஆன்மா தனிப்பட்ட முறையில், ஆங்கிலேய ஆட்சியில் உறக்கத்தில் இருந்த தமிழர்களை விழிக்க வைத்து, சிவபெருமான் மற்றும் அவர்களது முன்னோர்கள் சமயமான இந்து சமயத்தின் மீது, அவர்களது நம்பிக்கைக்கு மீண்டும் புத்துணர்ச்சி வழங்கவிருந்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் ஒரு தீவாக இருக்கும், மண்டைதீவின் நீளம் 800 மீட்டர் மற்றும் அகலம் 3.2 கிலோமீட்டர்கள். இந்த இடத்தில் சுவாமி வாசம் செய்ததால், இது ஒரு ஆன்மீக விழிப்புணர்வு பெற்ற இடமாக மாறியது. இன்றும் இந்த தீவு, ஆன்மீக சக்தி மற்றும் சிவன் கோயில்களுக்கு பிரசித்தமாக இருக்கிறது. §§

இந்த ஊருக்கு சுவாமி வந்தபோது, அவர் நன்னியர் என்று ஒரு நபரை சந்தித்தார். அவர் தனது வீட்டிற்கு அருகில், ஒரு சிறிய குடிசையில் சுவாமி தங்க அனுமதி வழங்கினார். அது சுவாமியின் இருப்பிடமாக மாறியது. அந்த ஆசிரமம், மாட்டு சாணத்தால் மொழுகிய தரை மற்றும் சுண்ணச்சாந்து சுவர்கள், பனை ஓலையால் மூடப்பட்ட தென்னைமர கூரையுடன் இருந்தது. அவருக்கு கட்டிலாக இருந்த ஒரு சிறிய மரப்பலகையின் நீளம் 4 அடி தான். இன்றும் அவர் பயன்படுத்திய கட்டில் உட்பட பல பொருட்கள் இருக்கின்றன; மற்றும் அங்கிருக்கும் மக்கள் இன்றும் சுவாமியுடன் தொடர்புடைய தங்களது முப்பாட்டனார் காலத்து கதைகளை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார்கள். §§

முக்தியானந்தா இலங்கைக்கு செல்வதற்கு முன், ஒரு தென்னிந்திய கோயிலில் வைரமுத்து என்ற ஒரு செட்டியாரை சந்தித்து இருந்தார். அப்போது வைரமுத்து சுவாமியை தன்னுடன் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்த போது, “நீ போ; நான் வருவேன்,” என்று முக்தியானந்தா பதில் அளித்து இருந்தார். ஒரு நாள் சுவாமி இலங்கையில் இருக்கும் வைரமுத்துவின் வீட்டிற்கு சென்றார். தனது கணவர் கோயிலுக்கு சென்றுள்ளதாக மனைவி கூறிய போது, அவளிடம் சுவாமி உணவு சமைக்க சொல்லி, தனக்கும் அவளது கணவனுக்கும் சாப்பிட வாழை இலை தயார் செய்யுமாறு அறிவுறுத்தினார். மனைவி விருந்தாளிக்கு உணவு பரிமாறி முடித்ததும், அவளது கணவன் வீட்டினுள் நுழைந்தார் மற்றும் சுவாமி அவரிடம், “வாங்க. உட்கார்ந்து சாப்பிடுங்க,” என்றார். §§

image§

முக்தியானந்தாவின் படகு இலங்கையின் வடமேற்கு பகுதியில் கரை சேர்ந்தது. அங்கே அவர் ஒரு சிறிய குடிசையில் குடி புகுந்தார். திறந்தவெளி சந்தையில் தனது சமயப்பணியை மேற்கொள்ள, அவர் விரைவில் யாழ்ப்பாணம் நோக்கி தினமும் குறுகலான குறுநிலம் வழியாக நடந்து செல்லத் தொடங்கினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இறுதியில், வைரமுத்து தனது வீடு மற்றும் சொத்துக்களை சுவாமிக்கு வழங்கி, தானும் சின்னசுவாமி என்ற சாதுவாக மாறினார். சுவாமி வீட்டை கந்தர்மடம் அன்னதானசதரன் என்ற பெயரில் நல்லூருக்கு அருகில் ஒரு ஆசிரமமாக மாற்றினார்; மற்றும் பணத்தை வைத்து தினமும் பக்தர்களுக்கு உணவு வழங்க ஒரு நன்கொடை நிறுவலை உருவாக்கினார். §§

தினமும் மண்டைதீவில் இருந்து மணல் நிரம்பிய குறுநிலம் வழியாக யாழ்ப்பாணத்திற்கு ஆறு கிலோமீட்டர் நடந்து சென்று, சந்தையில் நுழைந்து ஆன்மீக ஞானத்தை பகிர்வது கடையிற்சுவாமிக்கு பழக்கமாகிவிட்டது. அவர் மாலையில் மண்டைதீவு திரும்பி விடுவார் அல்லது யாழ்ப்பாணத்தில் தங்கி வண்ணார்பண்ணை சிவன் கோயிலின் படிகளை தனது கூடாரமாக மாற்றிக்கொள்வார் அல்லது அருகில் இருந்த தனியார் விடுதியில் தங்குவார். பிற்காலத்தில், யாத்ரீகர்களுக்கு படுக்கை மற்றும் உணவு வழங்குவதற்காக தனது சீடர்களான உஸ்ஸான், கந்தர்மடம் மற்றும் ஏற்லலை கட்டியிருந்த மையங்களை பயன்படுத்திக் கொண்டார். §§

ஒரு வினோதமான சாதுவாக விளங்கிய முக்தியானந்தாவிற்கு, எழுத்து வடிவில் பதிவு அல்லது புகைப்படம் என்று எதுவும் இல்லை, தெளிவில்லாத சில ஓவியங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் அவர் கர்நாடகாவில் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தது, மற்றும் ஆங்கிலம், சமஸ்கிருதம், கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் அவருக்கு இருந்த புலமையில் எந்த சந்தேகமும் இல்லை. தனது உள்ளத்தில் ஏற்பட்ட ஆழமான மாற்றம் காரணமாக, அவர் துறவறம் மேற்கொண்டார் என்பது அவருக்கு நெருக்கமான சீடர்களுக்கு தெரிந்து இருந்தது. §§

மைசூர் சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரிய பீடத்தின் 32 ஆவது தலைவராக இருந்த, ஸ்ரீ நரசிம்ம பாரதியின் மூலம் முக்தியானந்தாவிற்கு தீட்சை வழங்கப்பட்டது என்று உறுதிப்படுத்தப்படாத ஊகத்தை, ஈழத்து சித்தர்களில் என். முத்தையா குறிப்பிட்டுள்ளார்: §§

ஸ்ரீ நரசிம்ம பாரதி 1817 மற்றும் 1879 வருடத்திற்கு இடையில், மைசூர் சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரிய பீடத்தின் 32 ஆவது தலைவராக இருந்தார். ஒரு மிகப்பெரிய சித்தராக இருந்த இவர் பல ஞானிகள், யோகிகள், சித்தர்கள் மற்றும் ஜீவன்முக்தாக்களை உருவாக்கி இருக்கிறார். அவர் பீடாதிபதியாக விளங்கிய 62 வருட காலத்தில், 40 வருடங்கள் பயணத்தில் கழிந்தன. அவரது இறுதி பன்னிரண்டு வருடங்கள் தமிழ்நாட்டில் ஆன்மீக சேவை செய்வதில் கழிந்தன. தனது முக்கிய சீடன் மற்றும் சக சித்தராக இருந்த ஸ்ரீ சச்சிதானந்த சிவாவுடன் சேர்ந்து, மக்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்த பல கிராமங்களுக்கு பயணம் மேற்கொண்ட போது, ஒரு சந்தர்ப்பத்தில் நீதிபதி சுவாமி முக்தியானந்தாவாக மாறினார். §§

பல வருடங்களுக்கு முன்பு வாழ்க்கை வரலாற்று ஆசிரியராக இருந்த, பிரமா ஸ்ரீ அ. சுப்ரமணிய ஐயர் (1857-1912), முதியானந்தா 1810 ஆம் ஆண்டு பிறந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார். சுவாமி யாழ்ப்பாண மக்களிடம், தன்னைப்பற்றி மிகவும் குறைவான தகவல்களை மட்டுமே பகிர்ந்துள்ளார். இமயமலையில் இருந்து வந்து, காகங்களுடன் உணவை பகிர்ந்து சாப்பிடும் பழக்கமிருந்த ரிஷி, தன்னை யாழ்ப்பாணம் செல்லவேண்டும் என்று அறிவுறுத்தியதாக சுவாமி மக்களிடம் கூறினார். முக்தியானந்தா காகங்களுடன் உணவை பகிர்ந்து சாப்பிட்டார். அவர் ஒரு மரத்தடியில் தனியாக உட்காரும் போது, உணவில் ஏதாவது மீதம் இருக்குமா என்று பார்த்துக்கொண்டு, காகங்கள் அவருக்கு அருகில் உட்கார்ந்து இருக்கும். அவருக்கு வழங்கப்பட்ட பொருள் எதுவாக இருந்தாலும், அதை அவர் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. §§

image§

கடையிற்சுவாமி யாழ்ப்பாணம் சந்தைகள் வழியாக செல்லும் போது, தான் மக்கள் மத்தியில் இருக்கிறார் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு அகலக்கால் வைத்து மின்னல் வேகத்தில் நடந்து சென்றார். அவர் பொருட்களை வாங்க வந்தவர்களுக்கு மகிழ்ச்சியையும், கடைக்காரர்களுக்கு செழிப்பையும் அளித்த அன்புள்ளம் படைத்த முனிவராக, எல்லோருக்கும் ஒரு மர்மமாக விளங்கினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

திறந்தவெளி சந்தையின் அரசன்§

முக்தியானந்தா யாழ்ப்பாணத்தின் பெரிய கடையில் தனது நாட்களை, சந்தையில் உலாவிக்கொண்டு அல்லது ஒரு பெரிய ஆலமர நிழலில் அமர்ந்துக்கொண்டு கழித்தார். இந்த சந்தையின் வடக்கு மற்றும் மேற்கில் இருந்த தெருக்களில் பெரும்பாலான கடைகள் வணிக சமூகமான செட்டியார்களுக்கு சொந்தமாக இருந்தது. முக்தியானந்தா தனது பெயரை குறிப்பிடாததால், மக்கள் அவரை கடையிற்சுவாமி (தமிழ் மொழியில் கடைக்கு அடிக்கடி வரும் சுவாமி என்ற பொருளில்) என்று அழைத்தார்கள். மக்களுக்கு தெய்வீக புருஷர்களின் பெயர்கள் பெரும்பாலும் தெரியாததால், தமிழ் கலாச்சாரத்தில் அவர்கள் வசிக்கும் இடங்களை பயன்படுத்தி அழைப்பது வழக்கம். வரலாறு அவரை அடிகடைநாதன் அல்லது “திறந்தவெளி சந்தையின் தலைவன்" என்றும் குறிப்பிடுகிறது. §§

கடையிற்சுவாமி ஏதாவது ஒரு கடைக்கு சென்று, அங்கிருந்து ஒரு ரொட்டியை எடுத்து சாப்பிடுவார். ஒரு சாதாரண வாடிக்கையாளர் இவ்வாறு கேட்காமல் எடுத்தால் கடைக்காரர் கடிந்து கொள்வார், ஆனால் சுவாமி தங்கள் கடைக்கு வந்தால், வியாபாரம் செழிக்கும் என்பதை அறிந்து இருந்த கடைக்காரர்கள், அவருக்கு தங்களிடம் இருக்கும் பொருட்களில் சிலவற்றை தருவதற்கு ஆர்வத்துடன் இருப்பார்கள். அவர்கள் உயரமான சாது தங்கள் கடைக்கு வந்து தங்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று பிரார்த்தனையும் செய்வார்கள். இவற்றை எல்லாம் மக்கள் கவனித்துக்கொண்டு இருந்தார்கள் மற்றும் இந்த சிறிய அறிகுறிகள் சுவாமி மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சுவாமி ஆசீர்வதித்து மந்திர சக்தியால் தன்னை சுற்றியிருக்கும் உலகை மாற்றும் அவரது ஆற்றலின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவரது எதிர்கால சீடரான செல்லப்பசுவாமி, இத்தகைய அதிசயங்களை செய்யாததால், அவர் யாழ்ப்பாண மக்களிடம் அவ்வளவு பிரபலமாக விளங்கவில்லை. இது தொடர்பாக முத்தையா இவ்வாறு குறிப்பிடுகிறார்:§§

சுவாமி சிலசமயங்களில், சந்தையில் நடனமாடுவார் மற்றும் வேறு சில சமயங்களில் அவர் ஒரு கடையில் நுழைந்து அங்கிருக்கும் நாணயங்களை தனது கரங்களால் தொடுவார். இது அந்த கடை முதலாளியின் வியாபார வளர்ச்சிக்கு வழி வகுத்தது என்பதை எல்லோரும் புரிந்துகொண்டார்கள், மற்றும் ஒவ்வொரு கடைக்காரரும் சுவாமி தன் கடைக்கு வந்து தனக்கு அருள் புரியவேண்டும் என்று காத்து இருந்தார்கள். ஆனால் எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லை. §§

சிலசமங்களில் சுவாமி பித்து பிடித்தவர் போல, கைநிறைய நாணயங்களை கொண்டு ஒடுவார். இதைப்பார்த்த பல சிறுவர்கள் அவரை பின்தொடர்ந்து ஓடுவார்கள். அவர் திடீரென்று திரும்பி நாணயங்களை காற்றில் வீசிவார், உடனே சிறுவர்கள் ஆனந்தமாக குதித்துக்கொண்டு அந்த நாணயங்களை எடுக்க செல்வார்கள். §§

கடையிற்சுவாமியின் வாழ்க்கைக் கதைகள் முழுவதும் அதிசயமான மற்றும் உடல் வேதனையை தணிக்கும் நிகழ்வுகள் நிறைந்துள்ளன. அவர் தேனை சாரயமாகவும், சாராயத்தை தேனாகவும் மாற்றியதாக வரலாற்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் அவர் என்றுமே கழிவறையை பயன்படுத்தவில்லை என்றும் அல்லது அதன் தேவையும் தோன்றவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை செய்ததாக குறிப்பிப்படப்படும் அற்புதங்களைக் காட்டிலும் கடையிற்சுவாமி பல அற்புதங்களை செய்ததாக, அவரது சீடரின் சீடரான யோகசுவாமி, பல வருடங்களுக்கு பிறகு தனது சீடர்களிடம் தெரிவித்தார். ஒரு நாள் இறந்து அழுகிக்கொண்டு இருக்கும் பூனையை பார்த்த கடையிற்சுவாமி, அதை தனது கால்களால் தள்ளியதாகவும், உடனே பூனை உயிர் பெற்று, எழுந்து நடக்கத்தொடங்கியதாகவும் யோகமசுவாமி வர்ணித்தார். §§

முத்தையா இன்னொரு கதையில் இவ்வாறு வர்ணிக்கிறார்:§§

வல்வெட்டித்துறையை சேர்ந்த தாண்டெல் என்பவன் சுவாமியின் சீடனாக இருந்தான். அவன் சுவாமியை வண்ணார்பண்ணையில் தரிசிக்க சென்றான். சுவாமி முண்டைதீவுக்கு சென்று இருக்கிறார் என்பது தெரிந்ததும், அவன் அந்த திசையில் நடக்கத்தொடங்கினான். அது மதிய நேரமாக இருந்ததால், வெப்பம் அதிகமாக இருந்தது, மற்றும் அவன் நடந்து சென்ற மணல் பாதை அதிக சூடாக இருந்தது. அதனால் அவனது கால்களும் உடலும் எரியத்தொடங்கின. அதை பொறுக்கமுடியாமல், அவன், “என்னால் நிற்க முடியவில்லை குருநாதா!” என்று கூச்சலிடத் தொடங்கினான். அந்த நேரத்தில் மண்டைதீவில் தனது படுக்கையில் படுத்து இருந்த சுவாமி, எழுந்து உட்கார்ந்து, “வெயில் கொடுமையாக இருக்கிறது. என்னால் இந்த வெயிலில் நிற்க முடியவில்லை!” என்ற அலறத்தொடங்கினார். அவர் தனது சீடர்களில் ஒருவனிடம் தனது கால்களுக்கு குடை பிடிக்குமாறு கூறினார். அந்த சீடனுக்கு சுவாமி கூறியது புரியவில்லை என்றாலும், அவர் உத்தரவுப்படியே செய்தான். சுவாமி சிறிது நேரம் கழித்து, தனக்கு குடை பிடித்தது போதும் என்று சீடனிடம் கூறிய போது, தாண்டெல் உள்ளே நுழைந்தான். அவன் சுவாமியின் பாதங்களை தொட்டு வணங்கிவிட்டு, கண்ணீர் மல்க சுவாமியின் அருளுக்கு நன்றி உணர்வுடன் எழுந்து நின்றான். §§

முக்தியானந்தா ஒல்லியாக உயரமாக, கருப்பு வேட்டி அணிந்து, கையில் ஒரு குடையை பிடித்துக்கொண்டு இருப்பார் என்று அவரைப்பற்றி மக்கள் விவரித்துள்ளனர். அவர் ஆறு அடி நான்கு அங்குல உயரம், சுருள் முடி, கூர்மையான கண்கள் மற்றும் நீளமான மற்றும் கூரான மூக்குடன் இருந்ததாகவும்; அவர் நெட்டையாக இருந்தாலும், நல்ல உடலமைப்புடன் வசீகர தோற்றத்துடன் இருந்ததாகவும் கூறினார்கள். 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில், இலங்கை வானொலியில் திரு. கே. ராமச்சநதிரன் வழங்கிய உரையில் இவ்வாறு விவரித்துள்ளார். §§

image§

கடையிற்சுவாமிக்கு வாழ்க்கை மற்றும் மரணம் ஒரு மர்மமாக இருந்ததில்லை. ஒருநாள் கிராமத்து சாலைகள் வழியாக நடந்து செல்லும் போது, அவர் ஒரு இறந்த பூனையை குறுக்கிட்டார். அவர் அந்த பிணத்தை விழிக்க வைப்பதைப் போல, தனது காலால் தள்ளினார். சிறிது நேரம் கழித்து, அந்த பூனை உயிர் பெற்று, எழுந்து நின்று நடக்கத்தொடங்கியது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

கடையிற்சுவாமியின் புகைப்படம் எதுவும் நம்மிடம் இல்லை. இப்போது நம்மிடம் இருக்கும் அவரது உருவப்படங்கள், அவரது சீடனாக இருந்த ஒரு ஒவியரால் வரையப்பட்டவை. இந்த ஓவியங்களில் அவர் பரந்த தோள்கள், நீளமான கைகள் மற்றும் முகத்தில் தொடர்ந்து பிரகாசிக்கும் ஒரு புன்னகையுடன் சித்தரிக்கப்பட்டு இருக்கிறார். சிறிது வளைந்திருக்கும் அவரது முக்கின் நுனி, அவரது முகத்திற்கு அழகு சேர்ப்பதாக இருக்கிறது. அவரது விறுவிறுப்பான, கம்பீரமான நடையில் ஒரு துள்ளலும், அவரது பேச்சில் இருந்த நகைச்சுவையும் அவரது ஆளுமைக்கு வசீகரத்தை வழங்கியது என்று அவரை பார்த்தவர்கள் கூறுகிறார்கள். §§

அவர் பெரும்பாலும் சுருட்டு புகைத்துக்கொண்டு இருப்பார். அவர் சுருட்டு புகைப்பதால் தோன்றும் எச்சில் தங்களது முதுகில் ஒரு நல்லாசியாக விழவேண்டும் என்பதற்காக மக்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்வருவார்கள். இதை திரு. கே. ராமச்சந்திரன் தனது வானொலி உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:§§

அவரது எச்சிலை விழுங்கிய சிலர் நோய்களில் இருந்து குணமடைந்து இருக்கிறார்கள், மற்றும் சிலர் ஸித்திகளை பெற்று இருக்கிறார்கள். சுடுமலையை சேர்ந்த ஒருவர் சோதிட வல்லுனர் ஆனார். இன்னொருவர் ஒரு பிரபல மருத்துவர் ஆனார். கடையிற்சுவாமியின் மகிமையை யோக சுவாமி விளக்கும் போது: “கடையிற்சுவாமி உடலில் உடுப்பற்ற இளம்பெண்களுடன் கைகோர்த்து நடனம் ஆடினாலும், அவர் தனது கட்டுப்பாட்டை இழக்கமாட்டார். அவர் உண்மையில் புத்தர், இயேசு மற்றும் மற்றவர்களை காட்டிலும் பன்மடங்கு சிறந்தவர்.”§§

கடையிற்சுவாமி மற்றும் அவர்களது சீடர்களின் புரட்சிகரமான நடத்தை காரணமாக, மிகவும் ஆச்சாரமான சைவர்கள் அவருடன் சேராமல் இருந்திருக்கலாம், மற்றும் அது அவருக்கு பிடித்து இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் சைவ உணவை மட்டும் சாப்பிட்டு, தினமும் சிவபூசை செய்து, ஒரு ஆச்சாரமான பாதையை பின்பற்றினார்கள், ஆனால் கடையிற்சுவாமி தனக்கு அதைப்பொன்ற விதிகள் அல்லது கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளவில்லை. §§

ஒரு சீடனுக்கு சீர்திருத்த பாடத்தை நடத்த ஒரு சுடுகாட்டிற்கு சென்று, ஒரு சடலத்தின் கருகிய சதையை பற்களால் கடித்த சம்பவம், ஆச்சாரத்தை மீறிய அவரது செயல்களின் உச்சமாக இருந்தது. மூர்க்கத்தனமான நடத்தையைக் கொண்ட அத்தகைய சம்பவங்கள், நாதர்களின் பெருமைக்குரிய சின்னமாக விளங்கியது. யாழ்ப்பாணத்தை சுற்றி இருந்த பல சாதுக்கள், கடையிற்சுவாமியை தனது சற்குருவாக ஏற்றுக்கொண்டு இருந்தார்கள். அவர்களது உலகில், அத்தகைய வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகள், சமூக விதிமுறைகளை கடந்து இருக்கும் அறிகுறியாக, அசாதாரண பண்பின் சான்றிதழாக விளங்கியது. §§

கடையிற்சுவாமிக்கு செல்லப்பசுவாமி இல்லாமல் அருளம்பலசுவாமி, குழந்தைவேல்சாமி மற்றும் சடைவரதசுவாமி என்று பல நெருக்கமான பிரம்மச்சாரி சீடர்கள் இருந்தார்கள். அருள்பலசுவாமி தனது குருவான கடையிற்சுவாமியை, இரு வயது சிறுவனாக முதலில் சந்தித்தார் மற்றும் இளமை பருவத்தில் இருந்து அவரது சீடனாக விளங்கினார். கடையிற்சுவாமி சில காலம் கழித்து, கந்தர்மடம் அன்னதானசதரன் ஆசிரமத்தை நிர்வகிக்க அருளம்பலசுவாமியை அனுப்பி வைத்தார். மாவட்ட நீதிமன்றத்தில் செயலாளராக இருந்த குழந்தைவேல்சுவாமி, கடையிற்சுவாமியை பின்பற்ற தனது வேலையை துறந்தார். அருளம்பலசுவாமி மற்றும் குழந்தைவேல்சுவாமியின் சமாதி பீடங்கள் கீரிமலையில் உள்ளன, மற்றும் அவர்களை கௌரவிக்கும் வகையில் நகுலேஸ்வரம் சிவன் கோயிலுக்கு அருகே ஒரு மண்டபம் கட்டப்படடுள்ளது. §§

image§

அந்த நாட்டின் குருவாக கௌரவிக்கப்பட்ட கடையிற்சுவாமி பலரது பாராட்டுக்கள் அல்லது சிலரது விரோதத்தால் அசராது இருந்தார். அவர் எல்லாம் அறிந்து இருந்து, யாருக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல், தனக்கென்று ஒரு வழியை வகுத்துக்கொண்டு, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவர் தனியாக, காகங்களுடன் சேர்ந்து தானும் சாப்பிட்டு அதற்கும் பகிர்ந்து அளித்தார். இந்த உயிரினங்கள் தான் உணவு சாப்பிடும் போது, தனது இனத்தையும் அழைத்து சாப்பிடும் என்று கூறப்படுகிறது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

சடைவரதசுவாமிக்கு எட்டு வயது நிரம்பியிருந்த போது, மற்ற சிறுவர்களுடன் கடையிற்சுவாமியை சென்று பார்த்தார். அந்த சிறுவனை பார்த்ததும் கடையிற்சுவாமி பெருமகிழ்ச்சி அடைந்தார், அவனை தனியாக அழைத்து கட்டி அணைத்துக் கொண்டார், மற்றும் தான் அணிந்திருந்த ஒரு தொப்பியை அவனுக்கு அணிவித்து, “இது தான் நான் உனக்கு வழங்கும் தீட்சை. ஒரு நாள் நீ ஒரு தலைசிறநத சுவாமியாக வருவாய்,” என்றார். அதன் பின்னர் கடையிற்சுவாமி தந்த தொப்பி, ஒரு சிறிய கோயிலில் வைக்கப்பட்டு தினமும் பூசை செய்யப்பட்டது. §§

காவல் துறையில் தனது வேலையை கைவிட்ட படைத்தலைவர் சுவாமி என்று அழைக்கப்பட்ட சின்னதம்பிசுவாமியும், இந்தியாவில் கடையிற்சுவாமியை முதல் முறையாக சந்திந்து, இறுதியில் லௌகீகத்தை துறந்து, பின்னர் அவரது முதல் இலங்கை சீடரான வைரமுத்து செட்டியார் என்று அழைக்கப்பட்ட சின்னசுவாமியும் தங்களது லௌகீக வாழ்க்கையை துறந்தவர்களில் அடங்குவர். §§

இரும்புத்துண்டில் நடந்த அற்புதம் §

கடையிற்சுவாமி தனது வாழ்க்கையை, கிராமப்புறங்கள் மற்றும் பல்வேறு நகர்புறங்கள் வழியாக அகலக்கால் வைத்து நடந்து சென்றும், யாருக்கும் புலப்படாத வகையில் அங்கே ஓய்வெடுத்து தங்கியும் வந்தார். அவரது புகழ் பரவத்தொடங்கியதும், எல்லோரும் அவரிடம் இருந்து ஆசிகளை பெற விரும்பினர். காலப்போக்கில் அவரிடம் பலர் சீடர்களாக சேர்ந்தனர், மற்றும் அவர் செய்த அற்புதங்களின் கதைகள், அந்த ராச்சியத்தின் பிரபல பக்தி இயக்கமாக விளங்கின. பின்வரும் உண்மையான தகவல்களின் அடிப்படையில், அப்படியொரு ஒரு ஆசியை நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறது. §§

ஒரு நாள் சந்தையில் பொருள் வாங்க வந்தவர்கள் மாவில் இருந்து மீன் வரை, ஒவ்வொரு பொருளுக்கும் விறுவிறுப்பாக பேரம் பேசிக்கொண்டு இருந்த ஒரு பரபரப்பான சந்தையின் வாசல் வழியாக, கடையிற்சுவாமி திடீரென்று நுழைந்தார். அந்த சாலையின் முன்புறத்தில் அவருக்கு வலதுபுறமாக, திறந்த கடைகளில் அழகாக கோபுர வடிவில் அடுக்கப்பட்டு இருந்த, விலையுயர்ந்த பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களின் ஒவ்வொரு வகையும் விவசாய குடும்பத்தால் பராமரிக்கப்பட்டு வந்தன. காலை மகசூலை சுமந்து கொண்டு, மாட்டு வண்டிகள் தூரத்து வயல்களில் இருந்து உள்ளே நுழைந்துக்கொண்டு இருந்தன. ஒவ்வொரு பகுதியிலும் சந்தை இருந்தது. அந்த சந்தை மகசூல் செய்தவர்களுடன், பொருட்களை வாங்குபவர்கள் ஒரு வெறித்தனமான போராட்டத்தில் நேராக ஈடுபடும், நவீன விவசாயிகளின் சந்தையின் ஒரு மிகப்பெரிய வடிவமாக விளங்கியது. அந்த காலத்தில், ஒவ்வொருவரும் உள்ளூரில் விளையும் பொருட்களை சாப்பிட்டு வந்தனர். கிராம மக்களிடம் குளிர்சாதனப்பெட்டி இல்லை, பனிக்கட்டியும் இருந்ததில்லை, அதனால் பெரும்பாலும் தினமும் சந்தை செல்வது ஒவ்வொரு குடும்பத்திலும் அன்றாட வேலையாக இருந்தது, மற்றும் உணவும் எப்போதும் சுத்தமாக மற்றும் புதியதாக இருந்தது. ஒரு புறம் வியாபாரிகள் தங்கள் வரவை அதிகரிக்க நினைப்பதும், இன்னொரு புறம் கிராமமக்கள் தங்கள் செலவை குறைக்க நினைப்பதும் என்று காலங்காலமாக நடைபெறும் நாடகம் அங்கே அரங்கேறிக்கொண்டு இருந்தது. §§

ஒரு தனியான பகுதியில், முன்பே தயாரிக்கப்பட்ட உணவுகளின் ஒரு கலவை மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தன. அந்த கண்காட்சியில், அந்த காலத்தில் துரிதமாக மற்றும் அதிக ஆரோக்கிய உணவாக விளங்கிய பிட்டு இருந்தது. அரிசி மாவு மற்றும் தேங்காய் துருவலின் கலவையை ஒரு உருளை வடிவ மூங்கில் குழாய்களில் ஒன்று சேர்த்து, அதை கொதிக்கும் குடத்தின் மீது வைத்து வேக வைத்து பிட்டுவை தயார் செய்துக்கொண்டு இருந்தார்கள். அது சுத்தமாகவும் சாப்பிடுவதற்கு தயாரான உணவாகவும் இருந்தது. தட்டையாக சுபாகெட்டியை போன்று விசித்திரமாகவும் அற்புதமாகவும் காட்சி அளித்த இடியாப்பம், பிசைந்த அரிசி மாவில் தயார் செய்யப்பட்டு, ஒரு புறத்தில் வேக வைக்கப்பட்டு இருந்தது. அரிசி மற்றும் பருப்பு கலந்த புளித்த மாவில் இருந்து தயாராகும் தோசை மற்றும் ஆப்பத்தை, விறகு அடுப்பைக்கொண்டு சுடப்படும் இரும்பு தோசைக்கல்லில் நேர்த்தியாக தயார்செய்துக்கொண்டு இருந்தார்கள். அங்கே இட்லி, வடை, பிரியாணி, ஊத்தப்பம் மற்றும் உப்புமாவும் இருந்தன. §§

உணவுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு, மூலிகைகள் மற்றும் சிவப்பு, பச்சை மற்றும் வெள்ளை என்று முவர்ணத்தில் புதிதாக கல்லில் அரைக்கப்பட்ட அத்தியாவசிய சட்னிக்களுடன், ஒவ்வொரு கடையும் நிறைய காய்கறிகளையும் வழங்கின. இதனை ஒரு முறை பார்க்கும் போது, 8,000 ஆண்டுகளாக ஏற்பட்ட சமையல் வளர்ச்சியின் காரணமாக, பூமியில் உருவான அதிக விரிவான மற்றும் ஆரோக்கியமான சைவ உணவின் பல வண்ணங்களை பார்த்து ரசிக்க முடிகிறது. அந்த காலத்தில் சைவர்கள் எல்லோரும் சைவ உணவை சாப்பிட்டதால், புலால் உணவை தவிர்க்கும் பழக்கத்திற்கும், தமிழில் சைவம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இதனால் அவர்கள் மாமிச உணவுகளில் கவனத்தை சிதறவிடாமல், சைவ உணவில் தேர்ச்சி பெற்றதில் எந்த அதிசயமும் இல்லை. §§

கந்தையா என்பவர் கடையிற்சுவாமியின் பக்தர்கள் குழுவில் உறுப்பினராக இருந்தார், ஆனால் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டது இல்லை. திடீரென்று குரு கந்தையாவிற்கு அருகில் நின்றுக்கொண்டு இருந்தார். அவர் நல்ல உயரமாக இருந்ததால், மக்கள் கூட்டத்தில் தனியாக காட்சி அளித்தார். அவர் கந்தையாவை குனிந்து பார்த்து, ஒரு வலுவான எதிரொலிக்கும் குரலில், “நான் நாளை மதிய உணவிற்கு உன் வீட்டிற்கு வரப்போகிறேன். என்னுடன் நிறைய விருந்தாளிகளையும் அழைத்து வரப்போகிறேன்!” அது ஒரு வேண்டுகோளாக அல்லது ஒரு பேச்சுவார்த்தையாக இருக்கவில்லை. §§

கந்தையா தனது கைகளை கூப்பிக்கொண்டு, மிகவும் உயரமான சுவாமியை பார்த்து, அவரை வீட்டிற்கு வரவழைக்கும் படியாக, நன்றி தெரிவிக்கும் வண்ணம் மரியாதையுடன் வலுவாக ஏதாவது சொல்லவேண்டும் என்ற நம்பிக்கையில் ஒரு நொடி யோசித்தார். ஆனால் அவரால் சிறிய புன்னகையுடன் மெல்லிய குரலில், “சரி, சுவாமி” என்று மட்டுமே சொல்ல முடிந்தது. சுவாமி எதையும் பேசாமல் திரும்பி சென்றுவிட்டார். இந்த தகவல் ஊர் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. சுவாமி கந்தையாவை தேர்ந்தெடுத்து இருந்தார். அதன் பிறகு இந்த தகவலை, கடைகளில் இருந்த மக்கள் ஆனந்தமாக, ஆர்வத்துடன் மற்றும் வெளிப்படையான பொறாமையுடன் வரவேற்றனர். §§

கந்தையா அலைந்து திரிந்து தன் வீட்டிற்கு திரும்பிய போது, பசி வயிற்றை கிள்ளியது. அவன் கடந்த ஐந்து நாட்களில் என்றுமே வயிறார சாப்பிட்டதில்லை. அவர்களது குடும்பம் தங்களிடம் இருந்த சிறிய பருப்பு, வீட்டில் இருந்த பசுமாட்டின் பால் மற்றும் பக்கத்து வீட்டில் வசித்த பாசமிகு நண்பர் அவ்வப்போது வழங்கும் பிரசாதங்களின் மூலம் எளிமையாக வாழ்ந்துகொண்டு இருந்தார்கள். கந்தையாவின் பட்டனார் மூலம் தொடங்கப்பட்ட, பிரபலமான சி.ச.கே. தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆலையை அவர்கள் நிர்வகித்து வந்தார்கள். ஆனால் அந்த வியாபாரம் முடங்கிப்போனது. அவர்கள் தங்கள் நிலத்தை இழந்தார்கள் மற்றும் தங்கள் குடும்ப நகைகளை விற்றார்கள், மற்றும் அவரிடம் மனைவியின் தாலி மட்டுமே மிஞ்சி இருந்தது. மற்றவர்களிடம் உதவி கேட்டுசெல்லும் மனம் கந்தையாவிற்கு துளியுமில்லை. அப்படியென்றால், அவரால் சுவாமிக்கு எப்படி விருந்தளிக்க முடியும்? §§

அவர் வீட்டிற்கு வந்து சேர்ந்ததும், கடந்த காலத்தில் தன்னை சுற்றியிருந்த குடிசைகளில் மாட்டு சாணம் மொழுகிய தரையிருக்க, தன்வீட்டில் இருந்த ஆடம்பரமான வில்லைகள் பதிந்த தரை, சிறிய பட்டு மெத்தையுடன் அழகாக செதுக்கப்பட்ட நாற்காலி, செதுக்கிய கலைநயத்துடன் இருந்த வெள்ளி முலாம் பூசிய பெட்டி என்று தனது கடந்தகால நினைவுகளில் சிக்கிக்கொண்டார். அவருடைய சிந்தனை சிறிது நேரத்திற்கு, தற்போதைய வீட்டை காட்டிலும், ஐந்து மடங்கு பெரிய வீட்டில் பணியாளர்களுடன் வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கியது. §§

கந்தையா தன் மனைவி பொன்னம்மாவிடம், “நாளை மதியம் கடையிற்சுவாமி நம் வீட்டிற்கு சாப்பிட வருகிறார்?” என்று அறிவித்தார். ஒரு ஆன்மீக குரு தன் வீட்டிற்கு வருகை தரவிருப்பதால், அவளது முகத்தில் முதலில் உற்சாகம் காட்சி அளித்தது. ஆனால் அவரை எப்படி உபசரிப்பது என்ற சிந்தனை தோன்றியதும், புன்னகை வந்த வேகத்திலேயே மறைந்துவிட்டது. அவள் தன் கணவனிடம் பணிவுடன், “நீங்கள் சுவாமியை எவ்வாறு உபசரிக்க விரும்புகிறீர்கள்?” என்று பணிவுடன் கேட்டாள். §§

கணவன் எதையும் பேசாமல், அவளிடம் சிறிதளவு பணத்தை கொடுத்தார். அன்புள்ளம் கொண்ட மனைவி தனது கணவனை நேசத்துடனும் மரியாதையுடனும் பார்த்து, கையில் இருந்த பணத்தை கண்ணக்கிடாமல், அதை மகிழ்ச்சியுடன் மேலோட்டமாக பார்த்து, “நான் சந்தைக்கு சென்று, நாளைக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி வருகிறேன்,” என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்தாள். சந்தைக்கு செல்லும் அனுபவம் அவளுக்கு இருந்ததால், தனது கையில் இருக்கும் பணம் போதாது என்பது அவளுக்கு தெரியும். §§

பொன்னம்மா வீட்டை விட்டு கிளம்பும் முன்பாக, தனது தாலியை ஒரு முறை தொட்டுப் பார்த்தாள். இதை இந்து சமயத்தை சேர்ந்த மனைவிகள் அனைவரும், தங்கள் கழுத்தில் மஞ்சள் சரட்டில் அல்லது தங்கச்சரடில் அணிந்து இருப்பார்கள். திருமணத்தின் புனிதமான சின்னமாக விளங்கும் இந்த தாலியை மனைவிமார்கள் எப்போதும் அணிந்து இருந்து, அதை தினமும் காலையில் வழிபடுவார்கள். அதை இழப்பது அல்லது தொலைப்பது கெட்ட சகுணமாக கருதப்படுகிறது. இருந்தாலும், சந்தைக்கு கிளம்பிய பொன்னம்மா, நாளைய தேவைக்காக தங்கச்சரட்டினால் தயாரிக்கப்பட்ட தனது தாலியை அடகு வைக்க பொற்கொல்லர் கடையில், யாருக்கும் தெரியாதவாறு மறைமுகமாக நின்றாள். §§

அடுத்த நாள் மிகவும் விரைவாக வந்துவிட்டது, அல்லது செய்வதற்கு அதிக வேலைகள் இருந்ததால், அப்படி தோன்றி இருக்கலாம். அந்த தம்பதியர் தங்களது இரண்டு மகன்களையும் உதவி செய்ய வற்புறுத்தினார்கள், மற்றும் எல்லோரும் சேர்ந்து தடுமாறிக்கொண்டு இருந்தனர். மதியம் பன்னிரண்டு மணிக்கு பதினைந்து நிமிடங்கள் முன்பாக, உணவுகள் அனைத்தும் தயாராகி, உணவு அறையாக விளங்கிய, பனை ஓலையால் பின்னப்பட்ட பாயில் சுவாமி உட்கார்ந்ததும் சுடச்சுட பரிமாறப்படுவதற்காக காத்து இருந்தன. “கந்தையா, நான் வந்துவிட்டேன்!” என்று சொல்லிக்கொண்டே கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டதும், அவர்கள் ஓட்டம் தடைப்பட்டது. சுவாமியுடன் சேர்ந்து ஒரு விருந்தாளிகள் பட்டாளமே உள்ளே நுழைந்தது. அன்று நூற்றுக்கணக்கில் விருந்தாளிகள் வந்ததாக, ஒரு வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்!§§

பொன்னம்மா கற்பூரத்தையும், கந்தையா விளக்கையும், இரண்டு மகன்கள் தட்டையும் தங்கள் கையில் எடுத்துக்கொண்டனர். பெற்றோர்கள் கற்பூரத்தை ஏற்றினார்கள். கந்தையா கதவை திறந்தார். கைகளை அஞ்சலி முத்திரையில் வைத்துக்கொண்டு, “வணக்கம், சுவாமி,” என்று மரியாதை செலுத்தினார். ஆனால் கற்பூரத்தை ஏற்றி, அவர்கள் பாரம்பரிய முறைப்பட்டி தெய்வீக புருஷர்களுக்கு வணக்கம் செலுத்த முற்படும் போதே, சுவாமி வீட்டிற்குள் நுழைந்து விட்டார். அவர் ஆனந்தமாக கந்தையாவின் முதுகில் தட்டிக்கொடுத்து, “தம்பி, இன்று வெயில் அதிகமாக இல்லை. இன்று வானிலை நன்றாக இருக்கிறது!” என்றார். சுவாமி தனக்காக விரித்திருந்த பாயில் அமர்ந்துகொண்டார். பரிமாறப்பட்டிருந்த ஏராளமான பலகாரங்களை பற்றி நுணுக்கமாக எதையும் குறிப்பிடாமல், நேராக சாப்பிடுவதற்கு தயாராகிவிட்டார்.§§

பொன்னம்மா தனது ஒரு கையில் ஒரு எளிமையான களிமண் பாத்திரமும், இன்னொன்றில் ஒரு கூஜாவையும் எடுத்துக்கொண்டு, தமிழ் விருந்துகளில் தொடக்கத்தில் நடைபெறுவதை போல, சுவாமியின் வலது கையில் தண்ணீர் ஊற்றினாள். அவர் அந்த தண்ணீரால் தனது கைகளை சுத்தம் செய்துகொண்டார். கந்தையா சமையலறைக்கு சென்றார். அங்கே அவரது மனைவி, ஒரு சரியான முறையில் வாழை இலையில் பரிமாறுவதற்காக, ஒவ்வொரு உணவுப்பொருளாக வழங்கிக்கொண்டு இருந்தாள். அந்த காலத்தில், ஒரு சுவாமிக்கு ஆண்கள் மட்டுமே பரிமாறுவார்கள், மற்றும் விருந்தாளிகள் சாப்பிட்ட பிறகே குடும்பத்தினர் சாப்பிடுவார்கள். §§

image§

ஒரு காலத்தில் செல்வந்தர்களாக இருந்த ஒரு குடும்பம், தங்கள் வீட்டில் கடையிற்சுவாமிக்கு விருந்தளிக்க வேண்டும் என்பதற்காக பல தியாகங்களை செய்து, விருந்தில் எந்த குறையும் இருக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். அந்த குடும்பத்தினரின் வேதனையை பார்த்து, சுவாமிக்கு அவர் மீது இரக்கம் ஏற்பட்டது. சுவாமி அவர்களிடம் இருந்து ஒரு இரும்புத்துண்டை வாங்கி, அதை தனது கரங்களால் தொட்டு, தங்கமாக மாற்றினார். அதன் பிறகு, அந்த குடும்பம் அந்த தங்கத்துண்டை விற்று வந்த செல்வத்தின் மூலம் செழிப்பாக வாழ்ந்தனர். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

பொன்னம்மா ஒரு பெரிய விருந்தினர் குழுவிற்கு அறுசுவை உணவை வழங்க, உணவு மற்றும் பலகாரங்களை தாராளமாக வாங்கி இருந்தாள். ஆனால் கடையிற்சுவாமி உருவத்தில் பெரிய மற்றும் சுறுசுறுப்பான மனிதராக இருந்ததால், அவருக்கு அதற்கு ஏற்ற பசியும் இருந்தது. விருந்தாளிகளுக்கு உணவு தீரவில்லை என்ற உணர்வை வழங்குவதற்காக, இலையில் காலியாகும் உணவுப்பொருட்களை உபசரிப்பவர் நிரப்பிக்கொண்டே இருந்தார். இந்த பழக்கம் இன்றும் தமிழர்கள் வீட்டில் பின்பற்றப்படுகிறது. கடையிற்சுவாமி தான் சாப்பிட்டு முடித்ததை குறிப்பிடும் விதமாக, தனக்கு தட்டாக விளங்கிய இலையை பாதி மடித்து, இறுதியாக “சமையல் நன்றாக இருந்ததும்மா!” என்று தெரிவித்தார். பொன்னம்மா நிம்மதி அடைந்தாள், ஏனென்றால் அவளிடம் வழங்குவதற்கு வேறு எதுவும் இல்லை. §§

அடுத்த நாள் சுவாமி மீண்டும் வருகை புரிந்தார். ஆனால் இந்த முறை தனியாக வந்து, பொன்னம்மாவிடம் ஒரு சிறிய இரும்பை கொண்டு வருமாறு கூறினார். தங்கள் வளாகம் முழுவதும் தேடி, மண்ணில் பாதி புதைந்து கிடந்த துருப்பிடித்த இருண்புத்துண்டை தேடிப்பிடித்து, சுவாமியிடம் கொண்டு வந்து கொடுத்தாள். அவர் அந்த துண்டை தனது கைகளில் பிடித்து, “ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய….” என்று மெதுவாக உச்சரித்து, அதை மீண்டும் அவளிடம் வழங்கி, அதில் இருக்கும் துருவை சுத்தம் செய்து, ஒரு துணியில் சுற்றி ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு அறிவுறுத்திய பிறகு, திடீரென்று எழுந்து கிளம்பிவிட்டார். அவர் கிளம்பியது முறையில்லாமல் இருந்தாலும், கடையிற்சுவாமியின் நடவடிக்கைகள் விசித்திரமானவை என்பதில் யாருக்கும் சந்தேகம் இருந்ததில்லை. நடைபெற்ற விருந்தினால் சிறிது சோர்வாக இருந்த அந்த குடும்பத்தினர், மிகவும் புனிதமாக, மிகவும் உன்னதமாக மற்றும் மர்மமாக இருந்த, சுவாமியின் நெருக்கத்தின் பயனால் நிம்மதியாக இருந்தார்கள். §§

நான்கு நாட்கள் கழித்து பொன்னம்மா வீட்டு அலமாரியை திறந்த போது, அந்த இரும்புத்துண்டை பார்க்கவேண்டும் என்ற ஆசை அவளை தூண்டியது. என்ன அதிசயம்! அது வியக்கும் வண்ணம் தங்கமாக மாறியிருந்தது! அவள் கணவன், அதை பொற்கொல்லனிடம் சென்று சோதித்தார். அது உண்மையில் உறுதியான தங்கமாக மாறியிருந்தது. அவர்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் வடிந்தது. அதன் பின்னர் கந்தையா மற்றும் பொன்னம்மா, சுவாமியின் அருளுக்கு நன்றி தெரிவித்தனர். அவர்கள் அந்த தங்கத்துண்டை விற்று பணமாக்கி மறுபடியும் தொடங்கிய குடும்ப வியாபாரம், மீண்டும் செழிக்க தொடங்கியது. §§

ஒரு மீனவனை காப்பாற்றுதல் §

ஒரு நாள் மாலை நேரத்தில் கடலில் புயல் உருவாகியிருந்தது. அப்போது கடையிற்சுவாமி பொழுது சாய்வதற்கு முன்பாக, மீன்பிடி படகு வைத்திருந்த ஒருவரது வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அப்போது அந்த மீனவன் வீட்டில் இல்லை, மற்றும் சுவாமியின் நடவடிக்கை விசித்திரமாக இருந்ததால், அவரை மீனவனின் மனைவி உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டாள். அவர் பிடிவாதமாக இருந்ததால், அவள் இறுதியில் சுவாமி உள்ளே அனுமதித்தாள். §§

அவர் வீட்டின் முன்பாக இருந்த முற்றத்தில் நுழைந்து, அங்கிருந்த ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கொண்டார். இரண்டு மணி நேரம் கழித்து, மனைவி தன் கணவனுக்காக காத்துக்கொண்டு இருக்கும் போது, கடையிற்சுவாமியின் விசித்திரமான நடவடிக்கையை கவனித்தாள். அவர் தன் கையில் ஒரு பருமனான கோலை கையில் பிடித்துக்கொண்டு, தரையில் உட்கார்ந்து, அந்த தற்காலிக துடுப்பினால் எதையோ தள்ளுவதை போல, தன்னை சுற்றி இருக்கும் குப்பையை தோண்டும் பொழுது, மீனவர்கள் தங்கள் வலைகளை இழுப்பதற்காக பாடும், “ஏலேலோ ஐலசா” பாட்டை சுவாமி பாடிக்கொண்டு இருப்பதை கவனித்தாள். அவர் இரவு நேரத்தில் மண்ணில் உட்கார்ந்துகொண்டு, ஒரு படகை இயக்குவதை போல பாசாங்கு செய்வதாக அவளுக்கு தோன்றியது. கடையிற்சுவாமி தங்கள் தோட்டத்தில் விசித்திரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்ததாலும், கணவர் வந்தால் முற்றத்தில் தோண்டியிருக்கும் பள்ளத்திற்கு தன்னை கடிந்துக்கொள்வார் என்று பயத்திலும், அவள் கனத்த மழையில் வெளியே சென்று, தனது நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று கெஞ்சினாள். ஆனால் கடையிற்சுவாமி தனது பணியை கைவிடுவதாக இல்லை. ஆனால் புயலும் அவரது பணியும் தீவிரமாக இருந்ததால், அவள் கெஞ்சுவது அவருக்கு கேட்கவில்லை. §§

image§

ஒரு நாள் கடலில் உருவான பெரிய புயலால், தனது சீடனின் மீன்பிடி படகு கவிழ்ந்து அவன் ஆபத்தில் இருப்பதை, கடையிற்சுவாமி தொலைவில் இருந்து உணர்ந்துக்கொண்டார். அவர் விரைவாக அந்த மீனவனின் வீட்டிற்கு சென்று, சேறாக இருந்த முற்றத்தில் அமர்ந்துகொண்டு, படகை ஓட்டுவது போல பள்ளம் தொண்ட தொடங்கினார். இதை மீனவனின் மனைவி அச்சத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள். அந்த சமயத்தில் தனது கணவரின் உயிரை மர்மமான முறையில், காப்பாற்ற சுவாமி முயற்சி மேற்கொண்டு இருந்தார் என்பதை அவள் பின்னர் தெரிந்துகொண்டாள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இந்த விநோதமான மற்றும் கடுமையான நடவடிக்கையை உயரமான சாது தொடங்கி மூன்று மணி நேரத்தை கடந்து இருந்தது. மீனவனின் மனைவி அவரை வீட்டில் இருந்து வெளியேற்ற முடியாமல், தனது வீட்டின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, அவரது நடவடிக்கையை கவனித்துக்கொண்டு இருந்தாள். இறுதியாக சுவாமி தனது வேலையை நிறுத்திக்கொண்டு, எழுந்து நின்று உடனே வீட்டை விட்டு வெளியேறி, அமாவாசை இரவில் மறைந்துவிட்டார்.§§

கணவன் விடியும் வரை திரும்பவில்லை. இதைப்போன்று முன்பு எப்போதும் நடந்திருக்கவில்லை. முந்தைய இரவு கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக, அந்த கிராமத்தில் இருந்த பல மீனவ மனைவிகள் தங்கள் கணவன்மார்களை இழந்து இருந்தார்கள். மனைவி பதட்டத்துடன் காத்துக்கொண்டு இருக்கும் போது, கணவன் வீடு திரும்பினான். கணவனை பார்த்ததும் அவளுக்கு ஒரு புறம் நிம்மதி ஏற்பட்டாலும், முற்றத்தில் இருந்த பள்ளத்தை பார்த்து தன்னை கடிந்து கணவன் கொள்வான் என்று பயந்து இருந்தாள். மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, நேற்று இரவு சுவாமி வீட்டிற்கு வந்தது மற்றும் வீட்டின் தோட்டத்தில் விசித்திரமாக படகு ஓட்டுவதை போன்ற நடவடிக்கையை மேற்கொண்டது பற்றியும் விளக்கினாள். இதைக்கேட்ட கணவன், தான் சோர்வாக கலைந்த உடையுடன் இருந்தாலும், சுவாமி அமர்ந்து இருந்த இடத்தை முதலில் வணங்கிவிட்டு, பிறகு முற்றத்தில் இருந்த கிணற்றில் குளிக்க சென்றான். §§

அவள் சமையல் அறையில் காபியை தயார் செய்துக்கொண்டு இருக்க, கணவன் நேற்று அந்தி மாலை நேரத்தில் கடலில் தோன்றிய வலுவான புயலில் தனது படகு கவிழ்ந்த சம்பவத்தைப் பற்றி விவரிக்கத் தொடங்கினான். அவன் நேற்று புயல் காரணமாக கொந்தளித்த கடல் நீரில் போராடியதால், சோர்வடைந்து தனக்கு மரணம் நெருங்குவதை உணர்ந்தான், ஆனாலும் அவன் தனது முழு வலிமையையும் பயன்படுத்தி படகை திருப்ப முயன்றான். ஆனால் அவனால் முடியவில்லை. ஒவ்வொரு முயற்சியும் அவனை சோர்வடைய செய்தது. திடீரென்று ஒரு துடுப்பு அவனது தலையில் பலமாக அடித்து, அவனை நினைவிழக்க செய்தது. அவனுக்கு மீண்டும் நினைவு திரும்பிய போது, தான் ஒரு ஒரு அமைதியான கடலில் நிமிர்ந்து இருந்த படகில், ஒரு பலகையை பிடித்துக்கொண்டு இருப்பதை கண்டான். §§

வியப்பில் ஆழ்ந்திருந்த தன் மனைவியிடம் மரணத்தருவாயில் தனக்கு தோன்றிய காட்சியை பற்றி கூறினான். அந்த காட்சியில் கடையிற்சுவாமி, தன்னை நோக்கி ஒரு படகை ஓட்டி வந்து, கடல் கொந்தளிப்பில் இருந்து தன்னை காப்பற்றியதாகக் கூறினான். தான் குருவின் அருளால் காப்பாற்றப்பட்டதாகக் கூறினான். நேற்று இரவு தாங்கள் இருவரும் எதிர்கொண்ட அனுபங்களில் இருந்த தொடர்புகளை பற்றி வியப்புடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். தங்கள் புரிதலை கடந்த அபூர்வமான சக்தி, தங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியதை அவர்கள் உணர்ந்தார்கள். அவர்கள் தங்கள் சந்ததிகளிடம், கடலில் மூழ்கிக்கொண்டு இருந்த ஒரு மீனவனை கடையிற்சுவாமியின் தெய்வீக முயற்சிகள் காப்பாற்றியதைப் பற்றி பெருமையுடன் கூறிக்கொண்டு இருந்தனர். §§

குழப்பமான நடத்தை §

ஒரு நாள் யாழ்ப்பாண சந்தையின் திறந்த கடைகளில், கடையிற்சுவாமி யாசகம் செய்துக்கொண்டு இருந்த போது, கடைகளில் இரண்டு மூதாட்டிகள் திருடுவதை கண்டார். அவர்கள் தாங்கள் திருடிய பொருட்களை சந்தையில் விலகி தூரமாக இருந்த பகுதிக்கு எடுத்து சென்று, ஒரு சாக்குத்துணியில் அடுக்கி வைத்து, சந்தை விலையை காட்டிலும் குறைவான விலையில் விரைவில் விற்றுவிடுவார்கள். அவர்கள் கடுகடுப்பாக தொல்லை கொடுப்பவர்கள், தங்களுக்கு பணம் வேண்டும் என்று தொடர்ந்து நச்சரித்து வந்ததால், கடைக்காரர்கள் யாரும் அந்த இருவரை பற்றி காவல்துறையிடம் புகார் கொடுக்க தயாராக இல்லை. அவர்களது திருட்டை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்த கடையிற்சுவாமி, அவர்களை பின்தொடர்ந்து சென்று, சரியாக அவர்கள் திருடும் போது, வாழ்க்கையில் என்றுமே மறக்காத அளவிற்கு ஓங்கி அறைந்தார். சுவாமி அந்த இருவரை அறைந்துக்கொண்டு இருக்கும் போது, ஒரு காவலர் அந்த வழியாக சென்றுக்கொண்டு இருந்தார். இரண்டு மூதாட்டிகளை ஒரு உயரமான மனிதன் தாக்கிக்கொண்டு இருப்பதை பார்த்த காவலர் அதிர்ச்சி அடைந்தார். அவர் கடையிற்சுவாமியை கைது செய்து, சிறையில் அடைத்தார். §§

நள்ளிரவில் சிறையில் ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது. கடையிற்சுவாமி சிறைக்கம்பிகளை உள்பக்கமாக இழுத்துக்கொண்டு, “கவலைப்படாதே! நான் உன்னை விடுவிப்பதற்காக இங்கே இருக்கிறேன்!” என்று உரக்க கத்திக்கொண்டு இருந்தார். சிறை அலுவலர் தன் இருக்கையில் இருந்து கிளம்பும் வரை, அவர் நீண்டநேரம் அவ்வாறு கத்திக்கொண்டு இருந்தார். அலுவலர் சுவாமியின் சிறையறை வந்து அடைந்த போது, கைதி அங்கே இல்லை. அவர் சிறைச்சாலை முழுவதும் தேடினார், ஆனால் எந்த பயனும் இல்லை. அலுவலர் தனது மேலதிகாரியை எழுப்பி, நடந்த சம்பவத்தை பற்றி விவரித்தார். அவர்கள் இருவரும் சிறையறையை வந்தடைந்த போது, கடையிற்சுவாமி சிறையில் உறக்கத்தில் இருந்தார். தனது அலுவலர் உறக்கத்தில் கனவு கண்டிருப்பார் என்று நினைத்துக்கொண்டு, மேலதிகாரி உறங்க சென்றுவிட்டார். §§

ஆனால் சில நிமிடங்களில், “கவலைப்படாதே! நான் உன்னை விடுவிப்பதற்காக இங்கே இருக்கிறேன்!” என்று கரகரப்பான குரலில் கைதியின் பரிகாசம் தொடங்கியது. அவர்கள் மீண்டும் சிறையறைக்கு ஓடிச்சென்று பார்த்தனர், ஆனால் சுவாமி அங்கே இல்லை. அவர்கள் சில நிமிடங்களுக்கு பிறகு, சுவாமி சிறைச்சாலை மரத்தடியில் உறங்குவதை கண்டனர். அவர்கள் விரைவாக ஓடிச்சென்று பிடிக்க சுவாமியை முயன்ற போது, மர்மமான முறையில் மீண்டும் மறைந்து விட்டார். மீண்டும் அவர் சிறையறையில் இருந்து அலறுவது அவர்கள் காதில் விழுந்தது. சிறை கம்பிகளை பிடித்துக்கொண்டு, “நான் முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன். நீ விரைவில் விடுதலை பெற்று விடுவாய்!” என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். தங்களால் சுவாமியை கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்த காவலர்கள் அவரை விடுவித்தனர். அந்த காவலர்களில் சார்ஜண்ட்டாக இருந்த ஒருவரின் பெயர் சின்னதம்பி. அவர் பிற்காலத்தில், லௌகீக வாழ்க்கையை துறந்து சார்ஜண்ட் சுவாமி என்று புகழ்பெற்றார். §§

ஒரு நாள் கடையிற்சுவாமி யாசகம் செய்ய ஒரு கடைக்கு சென்றார். அந்த கடையின் காசாளர் அவரை சிறிது நேரத்திற்கு பொருட்படுத்தவில்லை. அதன் பிறகு இந்த வயதான பிச்சைக்காரரிடம் சிறிது விளையாட முற்பட்டு, “என்னிடம் ஒரு வைர மோதிரம் இருக்கிறது. அது எந்த கையில் இருக்கிறது என்று நீ சரியாக சொன்னால், நீ கேட்பதை நான் தருகிறேன்,” என்று கூறினான். அந்த காசாளர் மோதிரத்தை முதலில் தன் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, தனது கைகளையும் முதுகுக்கு பின்னால் எடுத்துச்சென்று, அதை தனது இரு கைகளுக்கு இடையே மாற்றிக்கொண்டான். பிறகு கடையிற்சுவாமியிடம் மோதிரம் எந்த கையில் இருக்கிறது என்று யூகிக்கச் சொன்னான். அந்த மோதிரம் எந்த கையிலும் என்று சுவாமி தெரிவித்தார். தான் சுவாமியை முட்டாளாக்கியதை நினைத்து, அந்த காசாளருக்கு குபீரென்று சிரிப்பு வந்தது. பிறகு மோதிரத்தை காட்டுவதற்காக கைகளை முன்பக்கமாக கொண்டு வந்த போது, மோதிரத்தை உண்மையில் காணவில்லை! சுவாமி சரியாக சொல்லி இருந்தார். கடையிற்சுவாமி கடையில் இருந்து கிளம்ப, கலங்கிய காசாளர் அவரை பின்தொடர்ந்தார். சிறிது தூரம் சென்ற பிறகு, கடையிற்சுவாமி தனது வாயில் இருந்து அந்த மோதிரத்தை துப்பினார். அவன் திக்குமுக்காடி போனான். கடையிற்சுவாமி முதலில் சிரித்தார், பிறகு, “இப்போது நீ பிடிபட்டு விட்டாய்,” என்று முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் கூறினார். §§

கடையிற்சுவாமி சிலசமங்களில் சாராயம் (இது பனைமர சாற்றில் இருந்து தயாரிக்கப்படுகிற இந்த வலுவான மதுபானம், கள் என்றும் அழைக்கப்படுகிறது) அருந்துவார் என்பதை ஒரு சிறுவர்கள் குழு அறிந்திருந்தது. அதை பயன்படுத்தி தங்களை மகிழ்வித்துக்கொள்ள விரும்பி, அவர்கள் ஒருநாள் சுவாமியை பின்தொடர்ந்து சென்றனர். ஆனால் உண்மையில் கடையிற்சுவாமி, அந்த சிறுவர்களுடன் விளையாட தொடங்கிவிட்டார். அந்த உற்சாகமான சிறுவர்கள் தன்னை நோட்டமிடுவதை உணர்ந்து, அவர் பல கள்ளு கடைகளுக்கு சென்று, அந்த வலுவான மதுபானத்தை பலமுறை அருந்தினார். இந்த விளையாட்டின் தொடர்ச்சியாக, கடையிற்சுவாமி ஒரு இரும்பு உருக்கும் கடைக்கு சென்றார். அங்கே ஒரு இரும்பு உருக்கும் தொழிலாளி, ஒரு பாத்திரம் நிறைய மெழுகை கொதிக்க வைத்துக்கொண்டு இருந்தார். அவர் அந்த பாத்திரத்தை எடுத்து, சிறிதளவு மெழுகை குடித்து விட்டு, மீதம் இருந்ததை அந்த சிறுவர்களுக்கு வழங்க முன்வந்தார். ஆனால் மதுபானமாக மெழுகை வழங்குவார் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த விசித்திரமான சம்பவத்திற்கு பிறகு, அவர்கள் மீண்டும் சுவாமியை சீண்டவில்லை. §§

அவர் பெரும்பாலும் தெருக்களில் நடனமாடிக்கொண்டு, காற்றில் பணத்தை வீசி எறிந்ததால், பலர் கடையிற்சுவாமியை ஒரு பைத்தியம் என்று கருதினார்கள். ஒரு வருடம் அக்டோபர் மாதத்தில், மக்கள் எல்லோரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட புத்தாடைகளை வாங்கிக்கொண்டு இருந்தனர். ஒரு வியாபாரி தனது கடையில் இருந்த ஒரு விலையுயர்ந்த சால்வையை கடையிற்சுவாமிக்கு வழங்கினார். அவர் அதை உடனே தன்னை கடந்து சென்று கொண்டிருந்த ஒரு பிச்சைக்காரனின் தோளில் போர்த்தி, சில நாணயங்களையும் வழங்கினார். இந்த விசித்திரமான நடவடிக்கையை பற்றி அவரிடம் விளக்கம் கேட்ட போது, “அந்த பிச்சைக்காரன், போன பிறவியில் நேபால் நாட்டு அரசராக இருந்தார், என்று விளக்கினார். பழங்காலத்து சித்தர்களை போல, அவரது தொலைநோக்கு பார்வை நிகழ்காலம் மற்றும் வாழும் இடத்தை மட்டும் சார்ந்து இருக்கவில்லை. ஆனால் ஒரு ஆழமான யதார்த்தத்தை காணும் திறமை, ஒரு எதிர்மறை பின்விளைவையும் கொண்டு இருந்தது. அந்த திறமையை சாதாரண மக்கள் தவறாக புரிந்துகொண்டனர். §§

காவல்துறையினர் அவரை பலமுறை கைது செய்தனர். அவர்கள் அவரை கைது செய்து அழைத்து செல்லும் போது, சுவாமி தலை குனிந்து கண்ணியமாக நடந்து செல்வார். அவர் ஒரு பைத்தியம் என்றும் அவருக்கு தண்டனை வழங்கி சிறையில் அடைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன், ஒரு முறை இரண்டு காவலர்கள் அவரை ஒரு நீதிபதி முன்பாக அழைத்து சென்றனர். குற்றவாளி நீதிபதியின் முன்பாக விசாரணைக்கு நிற்கும் போது, அலுவலர்களும் வெளியே காத்திருப்பது அன்றைய வழக்கமாக இருந்தது. நீதிபதி சுவாமியிடம் சில கேள்விகளை கேட்டார், அதற்கு அவர் தெளிவான ஆங்கிலத்தில் பதில் அளித்தார். சுவாமி முன்பு நீதிபதியாக பணியாற்றி இருந்ததால், நல்ல நண்பர்களாகி, ஆனந்தமாக உரையடினார்கள். நீதிபதி காவல்துறையை வரவழைத்து, “இந்த கண்ணியமான மனிதரை முதலில் விடுதலை செய்யுங்கள். இவரிடம் நீங்கள் கூறுவது போல் எந்த குறையும் இல்லை, மிகவும் இயல்பாக இருக்கிறார்,” என்று கடிந்துக்கொண்டார். §§

image§

ஆசிய நாடுகளின் பெரும்பாலான ஆசிரியர்களை போல கடையிற்சுவாமி, அறிவுப்பூர்வமாக அல்லாமல் மறைமுகமாக கற்றுத்தந்தார். பள்ளிக்கு செல்லாத சிறுவர்கள் தன்னை பின்தொடர்ந்து வந்து தன்னை சீண்டிக்கொண்டு இருந்தாலும், சுவாமி அவர்களை திருப்பி அனுப்பவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் இவரை நோட்டமிடும் போது, ஒரு பொற்கொல்லரின் கடைக்கு சென்று, ஒரு பாத்திரத்தில் இருந்த உருகிய மெழுகை குடித்துவிட்டார். இதைக்கண்ட சிறுவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது, மற்றும் அவர்கள் மீண்டும் சுவாமியை சீண்டவில்லை. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

கிறுத்துவ மதத்துடன் போராட்டம் §

அந்த காலத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்த பள்ளிகளில் பெரும்பாலானவை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த கிறித்துவ சமயப்பணியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த அதிநவீன பள்ளிகள் ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்டிருந்தன; மற்றும் இந்துக்கள் தங்கள் குழந்தைகளை இந்த பள்ளிகளுக்கு அனுப்பி சிறந்த கல்வியை பெறவேண்டும் என்றால், குழந்தைகள் தங்கள் பாரம்பரிய உடைகள், விபூதி மற்றும் பொட்டை கைவிட்டு, கிறுத்துவ மதம் தொடர்பான வகுப்புக்களில் பங்குபெற்று தினமும் கிறுத்துவ வழிபாட்டுக் கூட்டங்களிலும் பங்குபெற வேண்டியிருந்தது. குழந்தைகளை கிறுத்துவ மதத்திற்கு மாற்றும் இந்த நயவஞ்சக முயற்சி, பெரிதும் பலன் அளிப்பதாக இருந்தது. பெரும்பாலும் பெற்றோர்களுக்கு தெரியாமல், சிறுவர்கள் கிறுத்துவ சமய போதனைகளை ஏற்றுக்கொண்டார்கள். கிறுத்துவர்கள் நினைத்ததை போல, இந்த திட்டங்கள் இந்து குடும்பத்தின் ஒற்றுமையை சீர்குலைத்தது.§§

image§

எப்போதும் ஒரு குடையுடன் காணப்பட்ட கடையிற்சுவாமி, ஒரு நீதிபதியாக இருந்து ஆண்டியாக மாறியவர். அவர் இந்தியாவில் பிறந்து இலங்கையில் ஆன்மீக வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கினார், மற்றும் சந்தைக்கு வரும் சாதாரண மக்களுக்கு போதனைகளை வழங்கும் பன்மொழி வல்லுனராக இருந்து, யாழ்ப்பாணத்தில் இருந்த தமிழ் மக்களிடையே சைவ சமய மறுமலர்ச்சிக்கு தலைமை தாங்கினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ஆங்கிலேய ஆட்சியில் ஒரு நல்ல வேலை கிடைப்பதற்கு அவர்கள் மேற்கத்திய கல்வியை படிக்க வேண்டி இருந்தது. அதனால் பல சிறுவர்கள் சமயபரப்பாளர் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டார்கள், மற்றும் அவர்களில் பலர் கிறுத்துவ மதத்திற்கு மாறி, தங்கள் குடும்பத்தினர் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தினார்கள். இந்த அப்பாவி சிறுவர்கள் தங்கள் பள்ளிகளில் காலைநேர பிரார்த்தனைகளிலும் பங்குபெற்று, வீடுகளில் சைவ சமயத்தை உறுதியாக பின்பற்றும் தங்கள் குடும்ப வாழ்க்கையில் நடைபெறும் பூசைகளிலும் பங்குபெற்றனர். இந்த சமரசம் அவர்களது ஆன்மீக வாழ்க்கைகளை சீரழித்தது, மற்றும் அதுவே சமயப்பணியாளர்களின் நோக்கமாகவும் இருந்தது. வீட்டில் தனது தாயின் பாதை மற்றும் வகுப்பறையில் கன்னித்துறவிகளின் பாதை என்று சிறுவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு பாதைகளில் இருந்தார்கள். அவர்கள் பங்குபெற்ற சைவ சமய சடங்கை புரிந்து கொள்ளவில்லை, மற்றும் அவர்கள் பள்ளி விதிகளின் அங்கமாக தினமும் பங்குபெற்ற கிறித்துவ சமய சேவைகளும் மேலோட்டமாக செயல்படுத்தப்பட்டன. §§

பிடிவாதம் நிறைந்த இந்த தாக்கத்திற்கு கடையிற்சுவாமி ஒரு எதிரியாக விளங்கினார். அவர் ஒரு வழக்கறிஞராகவும் நீதிபதியாகவும் இருந்ததால், இவருக்கு முன்பு இலங்கையில் இருந்த மற்ற தெய்வீக நாட்டமுள்ள நபர்களை காட்டிலும் அதிக தெளிவாக பேசினார். அவர் சந்தையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த, வண்ணார்பண்ணை சிவன் கோயிலுக்கு அடிக்கடி சென்று, பார்வதி தேவியின் துதிப்பாடல்களை பாடுவார். அவர் தனது வழிபாட்டிற்கு பிறகு, உள எழுச்சியை ஏற்படுத்தும் ஆன்மீக சொற்பொழிவுகளை வழங்குவார். கடையிற்சுவாமி யாழ்ப்பாணத்தில் இருந்த போது, சிவன் கோயில் முன்பாக பலமுறை சொற்பொழிவு வழங்கியதால், அங்கே அவருக்காக கூறை வேய்த கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டது. அவர் அந்த கூடாரத்தின் மேடையில் நின்றுக்கொண்டு, அந்த கோயிலில் வழிபட வந்தவர்கள் மற்றும் அருகில் இருந்த சந்தைக்கு சென்று கொண்டிருந்தவர்கள் என்று நூற்றுக்கண்கான மக்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் ஒரு சிறந்த பேச்சாளராக, சமய பணியாளரின் உற்சாகத்துடன பேசினார். சுவாமியின் தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கிலத்துடன் நன்றாக தமிழிலும் (அவர் பேசிய கிளைமொழியை இலங்கை மக்கள் புரிந்துகொள்வது கடினமாக இருந்தது) பேசினார். §§

அது வரை மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன் கிறித்துவ பாதிரியார்கள் வழங்கிய மத போதனைகளை மட்டுமே கேட்டு பழகியிருந்த மக்களுக்கு, அவர் வழங்கிய சைவ சமயத்தின் சிறப்பை பற்றிய உபதேசங்கள், புத்துயிர் பெற்ற பக்தியை ஊக்குவித்தது. ஒருவர் மக்கள் மத்தியில் நின்றுக்கொண்டு, தனது வலுவான நம்பிக்கைகளை பற்றி தைரியமாக பேசி பலநாட்கள் ஆகியிருந்தது. அந்த மக்களின் மூதாதையர்கள் சமயத்தின் அருமைகள் மற்றும் வலிமைகளைப் பற்றி, அவர்களுக்கு கடையிற்சுவாமி தைரியமாக நினைவூட்டியதால், அவர் சைவ தர்மத்தின் காப்பாளராக, அவர்களது பாரம்பரியத்தின் குரலாக விளங்கினார். அவர் வண்ணார்பண்ணை மேடையில் நடத்தும் சொற்பொழிவை கேட்ட பல்லாயிரக்கணக்கான மக்களில் பெரும்பாலானோர், காலப்போக்கில் சைவ இந்து வாழ்க்கையின் பழங்கால நெறிமுறைகளை உறுதியாக பின்பற்றுவதற்கு ஊக்குவிக்கப்பட்டனர். §§

அந்த காலகட்டத்தில், கடையிற்சுவாமியை காட்டிலும் பன்னிரண்டு வயது இளையவராக, இலங்கை தமிழின் உரைநடை தந்தையாக, யாழ்ப்பாணத்தில் நன்கு கற்றறிந்த மேதையாக ஆறுமுக நாவலர் விளங்கினார். அவருக்கு முன்பாக தமிழ் மொழியில் எழுத்து வடிவில் இருந்த அனைத்தும் செய்யுள் வடிவில் இருந்தன. அவர் ஒரு சமயத்தில், கிறுத்துவ விவிலியத்தில் இருப்பதை தமிழ் மக்களுக்கு காண்பிப்பதற்காக, அதை தமிழில் மொழிபெயர்த்தார். அவர் அதை இந்து சமய புனித நூல்களை காட்டிலும் தரம் குறைவானதாக கருதினார். §§

இந்த இரண்டு புரட்சியாளர்களும், தங்கள் மக்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை தெளிவாக புரிந்துக்கொண்டு, இலங்கையில் சைவ சமய கலாச்சாரத்தை பாதுகாக்க தங்களை அர்ப்பணித்துக்கொண்டு இருந்தனர். தமிழ் மாணவர்களின் சமய நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தை மிகவும் தீவிரமாக அச்சுறுத்திய கிறுத்துவ கல்வியை ஈடு செய்ய, அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பல இந்து பள்ளிகளை திறந்தனர். இதில் முதல் பள்ளி, கடையிற்சுவாமி மக்களுக்கு போதனைகளை வழங்கிய சிவன் கோயிலுக்கு அருகில், இந்து உயர்நிலைப்பள்ளி என்ற பெயரில், யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் தொடங்கப்பட்டது. இது பிற்காலத்தில், இலங்கையின் வடக்கு பகுதியின் முன்னணி கல்வி நிறுவனமான, யாழ்ப்பாணம் இந்து கல்லூரியாக மாறியது. §§

மண்டைதீவில் நடந்த அதிசய சம்பவங்கள் §

ஒரு நாள் மண்டைதீவில் தனது இருப்பிடத்தில், கடையிற்சுவாமி தனது சீடர்களான நிரஞ்சனாநந்தசுவாமி மற்றும் சின்மயானந்தசுவாமியின் துணையுடன் மதிய உணவை தயார் செய்துக்கொண்டு இருந்தார். இதை நண்ணியாரின் மனைவி கண்காணித்து கொண்டு இருந்தாள். திடீரென்று கடையிற்சுவாமி, “ஒரு கருமி வருகிறான்! விரைவாக எங்காவது சென்று மறைய வேண்டும்,” என்று அலறினார். மீதம் இருக்கும் உணவுகளை சேமிக்க பயன்படும் ஒரு கட்டைபெட்டியில் பானைகளை வைத்துவிட்டு, அவர்கள் ஓடிச்சென்று ஒளிந்துக் கொண்டார்கள். அங்கே விரைவில் ஆத்ம திருப்தியில்லாத ஒருவர் வந்து, சுவாமியை பற்றி அந்த பெண்ணிடம் விசாரித்தார். சுவாமி சற்று முன் அந்த இடத்தில் இருந்து கிளம்பியதாக கூறினாள். அவர் நாள் முழுவதும் சுவாமிக்காக காத்து இருந்தார், ஆனால் சுவாமி திரும்பவில்லை. அவர் மூன்று நாட்களுக்கு அதே இடத்தில் தங்கி இருந்தார், மற்றும் நண்ணியாரின் மனைவி அவருக்கு மூன்று நாட்களும் உணவு அளித்தாள். அந்த மனிதன் கிளம்பியதும், சுவாமி தனது இரு சீடர்களுடன் வெளிவந்து, “வாங்க, இனி நாம் சாப்பிடலாம்,” என்று கூறினார். அவர்கள் உணவை சேமித்து வைத்திருந்த பெட்டியை திறந்தனர். “அவர்கள் மூன்று நாட்கள் பழைய உணவை சாப்பிடப்போகிறார்கள்!” என்று அந்த பெண் மனதில் நினைத்துக்கொண்டு இருந்தாள். அவர்கள் அந்த பெட்டியை திறந்த போது, சற்று முன் சமைத்ததை போல ஒவ்வொரு பானையில் இருந்தும் ஆவி பறந்துக்கொண்டு இருந்தது. அந்த பெண் நடப்பதை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு இருக்க, அவர்கள் ஒரு சூடான மதிய உணவை ருசித்துக்கொண்டு இருந்தார்கள். §§

image§

தனது குரு ஆதிக்கம் செலுத்திய சந்தையில் செல்லப்பசுவாமி தீட்சையை பெற்றார். மற்றவர்களிடம் இல்லாத ஒரு உண்மையான ஆன்மீக வாழ்க்கை மற்றும் விழிப்புணர்வின் உறுதியை, அந்த விநோதமான இளைஞனிடம் கடையிற்சுவாமி கண்டார். சுவாமி தனது சீடனின் உள்ளங்கையில் ஒரு பெரிய நாணயத்தை வைத்து, முதுகில் தனது குடையால் தட்டிக்கொடுத்து, அந்த இடத்தை விட்டு கிளம்புமாறு கூறினார். அதுவே அந்த இளைஞனுக்கு வழங்கப்பட்ட தீட்சையாக விளங்கியது.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அந்த தீவிற்கு ஒருமுறை சென்றிருந்த போது, சுவாமி நன்னியர் குடும்பத்தை ஒன்றாக அழைத்து, அவர்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் ஈமச்சடங்கை போல (அந்த்யேஷ்டி) ஒரு ஹோமத்தை நடத்தினார். இதை கவனித்த குடும்பத்தினர், விரைவில் தனது உயிர் பிரிவதை குறிப்பிடும் வண்ணம், சுவாமி தனது ஈமச்சடங்கை தானே செய்கிறார் என்று நினைத்துக்கொண்டு இருந்தனர். அவர் ஹோமத்தை முடித்து, 31 நாட்களுக்கு அந்த குடும்பத்தினர் கோயிலுக்கு செல்லக்கூடாது என்று தெரிவித்தார். “சுவாமி உயிருடன் இருக்கும் போது, இதை எதற்கு செய்யவேண்டும்?” என்று அவர்கள் யோசித்தனர். சில நாட்களுக்கு பிறகு, இந்தியாவில் இருக்கும் சிதம்பரத்திற்கு பாத யாத்திரை சென்றிருந்த, அந்த குடும்பத்தாரின் மகன் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. அப்போது தான் குடும்பத்தினருக்கு சுவாமி செய்த விசித்திரமான சடங்கின் அர்த்தம் புரிய வந்தது. §§

கடையிற்சுவாமி செய்த அற்புதங்களில் ஒரு விதமான சூட்சும மரபணு கலந்து இருந்தது. அவர் மக்களின் வாழ்க்கையில் நடைபெறவிருந்த சம்பவங்கள், கண்ணருகே இருந்த மக்களை கடந்து நடைபெற்ற சம்பவங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பாதித்த சம்பவங்கள், ஒரே சமயத்தில் பரவெளியை கடந்து நடைபெற்ற சம்பவங்களை பலமுறை அறிந்து இருந்தார். மேலும் எல்லாம் அறிந்தவராக இருந்த அவர், தொடர்பில்லாத இரண்டு சம்பவங்களுக்கும் ஒரு நடுவராக இருந்து, ஏற்படுத்திய மாற்றம் காரணத்தை கடந்து இருந்தது. §§

செல்லப்பா கடையிற்சுவாமியை சந்திக்கிறார் §

ஒரு நாள் கடையிற்சுவாமியின் கூடாரத்திற்கு ஒரு இளவயது சாது வந்தான். அவனது கண்கள் ஆழ்ந்த ஞானத்தை வெளிப்படுத்தின, மற்றும் அவனுக்குள் ஒரு அசாதாரண சக்தி ஒளிந்திருப்பதை சுவாமி உணர்ந்துக்கொண்டார். சுவாமி அவனுடன் நீண்டநேரம் உரையாடிய பிறகு, தனக்கு சந்தையில் பிரதான சீடன் கிடைத்துவிட்ட ஆனந்தத்தில் இருந்தார். அருகில் வேர்கடலை விற்றுக்கொண்டு இருந்த பெண்ணிடம் இருந்து ஒரு ரூபாய் வாங்கி, அதை ஒரு வெற்றிலையில் சுருட்டி, தனது இளைய சீடனிடம் வழங்கினார். அந்த காலத்தில் பணம் பெரிய நாணயங்களாக இருந்தன. அந்த சுருள் சாதுவின் உள்ளங்கையில் பாதி இடத்தை உள்ளடக்கி இருந்தது. அந்த சாது பிற்காலத்தில் செல்லப்பசுவாமி என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு கடையிற்சுவாமி தனது குடையால் அவனது முதுகில் தாக்கி வழி அனுப்பி வைத்தார். §§

ஒரு நாணயத்தை வழங்கி, துறவற வாழ்க்கையான சந்நியாச வாழ்க்கைக்கு கடையிற்சுவாமி தீட்சை வழங்கிய முறை, நாத பரம்பரையின் வழக்கத்திற்கு மாறானது என்று எதிர்கால சீடர்கள் கூறினார்கள். பல வருடங்களுக்கு பிறகு, செல்லப்பசுவாமியின் சீடனான யோகசுவாமி, தனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த மிகப்பெரிய ஆன்மீக அனுபவம் பற்றி இவ்வாறு விவரித்தார்:§§

ஒரு வெள்ளி ரூபாய் நாணயத்தின் மூலமாக, கடையிற்சுவாமி செல்லப்பருக்கு தனது அருளை வழங்கினார்! உலகம் அவரை ஒரு பைத்தியமாக பார்த்தது. வெறித்தனமான மக்கள் கூட்டத்தின் இழிவான சச்சரவில் இருந்து விலகி, தனது உயர்வான தெய்வீக பண்புடன், தனியாக இருந்தார்.§§

அடுத்த நான்கு வருடங்களில் இருவரும் பலமுறை சந்தித்து நீண்டதூரம் நடந்து சென்றனர். கடையிற்சுவாமியுடன் தான் இருந்த காலத்தை பற்றி செல்லப்பசுவாமி எதையும் கூறவில்லை, அதனால் வரலாற்றில் அதைப்பற்றிய எந்த சுவடும் இல்லை. அந்த இருவர் தொடர்பாக அம்பிகைபாகன் குறிப்பிட்டுள்ள, ஒரு சிறு கதையை இங்கே காணலாம். §§

இனம் அல்லது மதம், உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர், பணக்காரர் அல்லது ஏழை என்ற பாகுபாடு இல்லாமல், எல்லா பக்தர்களும் கடையிற்சுவாமியின் முன்பாக சமமாக இருந்தனர். அவர் எல்லோர் மீதும் சமமாக கவனம் செலுத்தினார் மற்றும் அவர்களது உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள் மற்றும் அவர்களது வறுமையையும் சீர் செய்தார். இதை அறிந்ததும், அதிக அளவில் மக்கள் அவரை நாடி வந்தனர். தங்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஏழை எளிய மக்களிடம் இருந்தும் பல கோரிக்கைகள் வந்தன. அவர் வந்த போது, அவர்கள் தங்களது வழக்கமான அசைவ உணவு மற்றும் மதுபானத்தை வழங்கினர். அவர் எந்த கட்டுப்பாட்டையும் விதித்துக்கொள்ளாமல், அவர் வழங்குவதை ஏற்றுக்கொண்டார்.§§

இது ஆச்சாரமான இந்து சைவர்களுக்கு தெரிந்ததும், அவர்களுக்கு சுவாமி மீது கோபமும் ஆத்திரமும் தோன்றியது. தனது குருவாக மதித்த கடையிற்சுவாமி மது அருந்தும் பழக்கமுடையவர் என்று மற்ற சீடர்கள் சொல்வதை, சிவயோக சுவாமியின் குருவான செல்லப்பசுவாமியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை அவரால் நம்பவும் முடியவில்லை. அதை சோதிக்க நினைத்து, கையில் ஒரு மதுபானத்தை தனது சால்வையில் மறைவாக மூடிக்கொண்டு கடையிற்சுவாமியை தேடி, பெரிய கடைக்கு சென்றார். §§

செல்லப்பர் அவருக்கு அருகில் சென்று அமர்ந்தார். “அடடா, நீ எனக்கு மதுபானத்துடன் விருந்தளிக்க முடிவு செய்து இருக்கிறாய்! சரி, சால்வைக்கு அடியில் மறைத்து வைத்திருக்கும் மதுபானத்தை திறந்து கொடு. நான் அதை உன்னுடனும் மற்ற சீடர்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்!” என்று கடையிற்சுவாமி உற்சாகமாக கூறினார். செல்லப்பசுவாமி நடுங்கிக்கொண்டு அந்த மதுபானத்தை வெளியே எடுத்தார். ஆனால் அது காலியாக இருந்தது. ஏமாற்றம் அடைந்த சீடன், தனது குருவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, நல்லூர் தேரடிக்கு திரும்பினார். §§

கடையிற்சுவாமி இன்னொரு முறை, செல்லப்பசுவாமியிடம் ஒரு போத்தல் சாராயத்தை வழங்கி, சீடன் தான் முதலில் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவர் தன்னை குருவை விட சிறந்தவராக கருதினாரா என்ன? குரு வழங்கியதை மறுக்க முடியாமல், போத்தலை கையில் எடுத்து சிறிது ருசித்துப் பார்த்தார். அது அவரது மூக்கிற்கு சாராய வாசனையை வழங்கினாலும், அவரது நாவிற்கு தேனைப் போல இருந்தது. §§

தென்னிந்தியாவில் இருந்து வந்த ஒரு ஆற்றல்மிக்க சித்தர் மற்றும் ஆன்மீக ஈடுபாட்டுடன் இருந்த அவரது சீடரும் ஒன்றாக சேர்ந்து இருந்த காலங்களில், இருவருக்கும் பிடித்தமான, மெய்யுணர்வின் ஆழங்களை, சைவ சமயத்தின் ஆழ்ந்த நுண்ணறிவுகளை பற்றி ஆய்வு செய்து இருப்பார்களா? இதைப்பற்றி நம்மால் கற்பனை மட்டுமே செய்ய முடியும். §§

இறுதி மகாபயணம்§

இறுதியில் சில வருடங்களுக்கு, கடையிற்சுவாமி மண்டைதீவு செல்வதை நிறுத்திவிட்டு, யாழ்ப்பாணம் பகுதியில் தங்கிவிட்டார். அவருக்கு சந்தையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த நீராவியடியில், தனியாருக்கு சொந்தமான ஒரு சிறிய நடராசர் கோயில் பிடித்து இருந்தது. அந்த கோயிலுக்கு பின்புறத்தில் இருந்த வளாகத்தில், அவருக்கென்று ஒரு குடிசை கட்டப்பட்டது. அதில் அவர் குழந்தைவேல்சுவாமியுடன் தங்கி இருந்தார். இது அவரது இராச்சியமாக, தனிமை மற்றும் ஆன்மீக கூட்டுறவின் இடமாக மாறியது. பிரபஞ்சத்தின் மையமாக சூட்சும ரீதியாக கருதப்பட்டு, தென்னிந்தியாவின் பிரபலமான தில்லை நடராசர் கோயிலை குறிப்பிடும் விதமாக, “இது தான் சிதம்பரம்,” என்று தனது சீடர்களுக்கு அறிவித்தார். §§

இந்த இடத்தில், அக்டோபர் 13, 1891 அன்று, கடையிற்சுவாமி இந்த உலகில் இருந்து தனது இறுதி மகாபயணத்தை மேற்கொண்டார். அந்த இறுதி தருணங்களின் போது, அவருக்கு அருகில் குழந்தைவேல்சுவாமி இருந்தார். ஞானோதயம் பெற்ற ஆன்மாக்களை ஒரு நிலவறையில் வைத்து அடக்கம் செய்வதை போல, தன்னையும் அடக்கம் செய்யவேண்டும் என்று தனது சீடர்களிடம் அறிவுறுத்தி இருந்தார். அவரது சமாதி சடங்கு மற்றும் அவரது குடிசை இருந்த இடத்தில் கல்லறை அமைப்பதை குழந்தைவேல்சுவாமி கவனித்துக்கொண்டார். அதன் பிறகு, அந்த இடத்தில் விரைவில் ஒரு பெரிய கல் வைக்கப்பட்டு, பக்தர்கள் மூலம் தொடர்ந்து பூசைகள் நடத்தப்பட்டு வந்தன. ஒரு வருடம் கழித்து, 1892 ஆம் ஆண்டு, சுவாமியின் உத்தரவுப்படி, அந்த பெரிய கல் வைக்கப்பட்ட இடத்தில், இந்தியாவின் வாரணாசியில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஒரு பெரிய கோயில் கட்டப்பட்டது.§§

பல நூற்றாண்டுகளுக்கு பிறகு, அந்த சமாதி அழிவை சந்தித்துக்கொண்டு இருந்தது. அந்த இடத்தில் கிரிக்கெட் ஆடிய சிறுவர்களின் கனவுகளில் உயரமான மற்றும் ஒல்லியான ஒரு மனிதர் தோன்றி, அந்த சமாதியை புதுப்பிக்க வேண்டும் என்று கூறினார். பெற்றோர்களுக்கு அந்த கனவை பற்றி தெரிய வந்த போது, சிறுவர்களின் கனவில் வந்தவர் கடையிற்சுவாமி என்பதை உணர்ந்து, இனி அந்த இடத்தில் விளையாட வேண்டாம் என்று உத்தரவிட்டனர். சிறுவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, செட்டியார் சமூகத்தையும் சேர்த்துக்கொண்டு 1980 களின் தொடக்கத்தில் கோயிலை புனர்நிர்மாணம் செய்ய தொடங்கினர். §§

1983 ஆம் ஆண்டு, சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி (கடையிற்சுவாமியின் பிரதான சீடனாக இருந்த செல்லப்பசுவாமியின் சீடனின் சீடன்) இறுதியாக யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட போது, பெரும்பாலும் இளைஞர்களால் நிர்வகிக்கப்பட்ட கடையிற்சுவாமி கோயிலின் நிர்வாகிகள், கருவறை மீது ஒரு புதிய கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக அவரை வரவழைத்து இருந்தனர். அவர் பலவீனமான மூங்கில் ஏணி மீது ஏறி அடிக்கல் நாட்டினார் மற்றும் ஒரு சிறிய பூசையும் நடந்தது. புதுப்பிக்கும் பணிகள் தொடர்ந்தன மற்றும் இறுதியாக குடமுழுக்கு விழா 1985 ஆம் ஆண்டு நடைபெற்றது. §§

image§

கடையிற்சுவாமி நடராசர் கோயிலுக்கு அருகில் அமைந்து இருந்த ஒரு சிறிய குடிசையில் தனது இறுதி மகாபயணத்தை மேற்கொண்ட போது, அவரது சீடர்கள் அவரது உடலை ஒரு நிலவறையில் வைத்து அடக்கம் செய்து, அந்த புனிதமான இடத்தில் ஒரு சிவன் கோயிலை கட்டினார்கள். அந்த கோயிலில் இன்றும் பூசைகள் நடைபெற்று வருகின்றன. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§