குருமார்களின் சரித்திரங்கள்

Page 19: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/19_ka02_01.html§

குருமார்களின் சரித்திரங்கள்§

அத்தியாயம் ஐந்து §

“நான் அவனுக்கு மரணதண்டனை வழங்கமாட்டேன்”§

ரு நாள், ஒரு நீதிபதி கர்நாடகாவின் பெங்களூரில் இருந்த உயர்நீதமன்றத்தில், ஒரு கொலை வழக்கிற்காக தலைமை தாங்கினார். தீர்ப்பில் எந்த சந்தேகமும் இல்லை, நடுவர் குழுவும் ஒருமனதாக இருந்தது. சட்டப்பூர்வமாக தீர்ப்பு வழங்கும் நேரம் வந்த போது, நீதிமன்றத்தில் உரை நிகழ்த்த நீதிபதி எழுந்து நின்றார். அவரது உயரமான உருவம் நீதிமன்றத்தில் அமைதியை ஏற்படுத்தியது. அவர் பேசுவதற்கு முன்பாக, தான் போர்த்திய சால்வை, தனது அங்கிகள் மற்றும் ஆபரணங்களை கழட்டிவிட்டார். இறுதியாக நீதிமன்றத்தை பார்த்து, “இறைவன் இந்த மனிதனை படைத்து இருக்கிறார். இவனுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு நான் யார்?” என்று தெரிவித்து, மரண தண்டனை வழங்க மறுத்துவிட்டு, நீதிமன்ற இருக்கையில் இருந்து எழுந்து, தனியாக வெளியே சென்று விட்டார். அவர் அந்த பகுதியில் மீண்டும் யார் கண்ணிலும் தென்படவில்லை. §§

பல வருடங்களுக்கு கழித்து, அவர் வட இலங்கையில் தென்பட்டார். அவர் ஒரு சுவாமியாக மற்றும் ஒரு ஆன்மீக சக்தியாக விளங்கி, நந்திநாத சம்பிரதாயத்தின் வருங்கால சற்குருமார்கள் மற்றும் தனிப்பட்ட மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், ஒரு நாட்டின் வரலாற்றையும் மாற்றி அமைத்தார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே என்ன நடந்தது என்பது தெளிவாக இல்லை, மற்றும் அனைத்து கதைகளும் ஒன்றுக்கொன்று முரணாகவே இருக்கின்றன. இந்த பாடத்தில் பேச்சு வழக்கில் இருந்த வரலாறுகள் மற்றும் அந்த சமயத்தில் இருந்த கலாச்சார மாதிரிகளின் அடிப்படையில், அதிக வாய்ப்புள்ள சம்பவங்களை இயல்நுணர்வுடன் புரிந்துகொள்ள பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. §§

நீதிமன்ற பணியைத் தவிர வேறெந்த முக்கிய கடமைகளும் இல்லாத அந்த முப்பது வயது இளைஞனுக்கு, அந்த கொலை வழக்கு வாழ்க்கை மற்றும் மரணம் பற்றி தூண்டிய ஆழமான சிந்தனைகள், இயல்பான ஆன்மீக மனமாற்றத்தை தீவிரப்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. இறுதியில் அவர் ஒரு சற்குருவை நாடி, தனது மீதமுள்ள வாழ்க்கையை இறைவனை உணர்வதற்கும், தனது இந்து சமயத்திற்கு சேவை செய்வதற்கும் அர்பணிக்க வேண்டும் என்ற ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தார். §§

image§

ஒரு கொலை செய்த குற்றவாளிக்கு ஒரு இந்திய நீதிபதி மரண தண்டனை வழங்கவேண்டும் என்று கடமை கோரியது, ஆனால் அவரால் அந்த கர்மவினையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் அவர் தனது பொய் முடி மற்றும் நீதிபதி அங்கிகளை அகற்றிவிட்டு, தனது இருக்கையில் இருந்து எழுந்து நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் அவர் நீதிமன்றம் திரும்பவும் இல்லை, மீண்டும் நீதிமன்ற பணியை தொடரவும் இல்லை. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அவர் துறவறத்தின் மீது தனக்கு இருந்த ஈடுபாட்டைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது, டீக்கடையில் இருந்த ரிஷியை பற்றி தெரிந்துகொண்டார். அந்த பிரசித்தமான முனிவரின் கதைகளால் ஈர்க்கப்பட்டு, அது அவர் மீது ஏற்படுத்திய வலுவான தாக்கம், விழிப்புணர்வு பெற்ற அந்த உயிர்சக்தியை நேரில் சென்று சந்திக்க தூண்டுதலாக இருந்தது. முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, ரிஷியை தேடும் வேட்கையில், இந்திய சாலைகளில் நடைப்பயணம் செய்யும், ஒரு நாடோடி சாதுவாக மாறிவிட்டார். அந்த ரிஷி தான் தனது குரு என்பதில் திட்டவட்டமாக இருந்தார், மற்றும் அவரை தேடும் வேட்கையில் அவர் கிராமம் கிராமமாக மூலை முடுக்கெல்லாம் தேடினார். அவர்கள் அதற்கு முன்பு சந்தித்திருக்கவில்லை என்பதால், அந்த தேடுதலுக்கு அறிவுப்பூர்வமான உத்தரவாதம் எதுவும் அளிக்க முடியாது. ஆனால் அது ஒரு உண்மையாக, ஒரு துணை மெய்ஞ்ஞான அறிதலாக, அவரது உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நிரம்பி இருந்தது. §§

அவர் செல்லும் இடமெல்லாம், அவரது அசாதாரண உயரமும் பிச்சைக்காரனைப் போன்ற தோற்றமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. மக்களுடன் மக்களாக இணைந்து இருப்பதால் எந்த பயனும் இல்லை, மற்றும் அவர் அதை முயற்சிக்கவும் இல்லை. அவர் வழக்கமாக ஒரு கிராமத்தை வந்தடைந்ததும், யாரோ ஒருவருக்காக காத்துக்கொண்டு இருப்பதை போல, திறந்தவெளி சந்தையின் மத்தியில் நின்று இருப்பார். அவர் மத்தியில் நின்று இருப்பதை பார்த்த மக்கள், தங்கள் வேலைகளில் இருந்து விலகி, அவருக்கு என்ன தேவை என்று விசாரிக்க வருவார்கள். அவர் அந்த மக்களிடம் பேசி அவர்களை மகிழ்வித்து சிரிக்க வைப்பார். இதனால் அவரை சுற்றி ஒரு கூட்டம் சேர்ந்துவிடும். அதன் பின்னர் அந்த கூடியிருந்த சிறுவர்களிடம் தான் தேடி வந்த சுவாமியை பற்றி தெரிவித்து, தங்களது பெற்றோர்கள் மற்றும் சொந்தங்கள், அத்தைகள் மற்றும் தாய்மாமன்கள், மற்றும் அவர்களுக்கு தெரிந்த ஒவ்வொருவரிடமும், தான் தேடி வந்த சந்நியாசி தங்கள் கிராமத்தில் இருக்கிறாரா என்று விசாரிக்க அனுப்பி வைப்பார்.§§

அந்த சிறுவர்கள் சென்ற பிறகு, அவர் திறந்தவெளி சந்தை வழியாக நடந்து சென்று, வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் பேசுவார் மற்றும் கடைக்காரர்கள் வழங்கிய யாசகங்களை ஏற்றுக்கொள்வார். அவர்களும் தங்களால் இயன்ற உதவியை வழங்குவார்கள். மக்களின் மீது அவருக்கு ஒரு இயல்பான ஈர்ப்பு சக்தி மற்றும் தடுக்க முடியாத வசீகரமும் இருந்தது. இது மட்டுமல்லாமல், அவர் மக்களிடம் இயல்பாக பழகினார் மற்றும் சிறந்த பேச்சாற்றலையும் பெற்று இருந்தார். அவரால் தயக்கமின்றி சரளமாக தொடர்புகொள்ள முடிந்தது மற்றும் அவரது பேச்சில் என்றுமே தடுமாற்றம் இருந்ததில்லை. அவர் மீது மக்கள் நம்பிக்கை வைத்து, தயக்கமின்றி நண்பர்களானார்கள். பெரும்பாலானோர் அவரை தயக்கம் இன்றி அப்பர் என்று அழைத்தார்கள். குழந்தைகள் தங்களது தூது பணியில் இருந்து திரும்பும் போது, கடந்த பத்து ஆண்டுகளில் கிராமத்திற்கு வந்திருந்த ஒவ்வொரு சுவாமி, சாது அல்லது யாத்திரிகர் பற்றிய தகவலை கொண்டு வந்தார்கள். ஆனால், அதில் வழக்கமாக ரிஷியை பற்றிய எந்த தகவலும் இருக்கவில்லை. §§

சிலசமங்களில், ரிஷியின் இருப்பிடம் பற்றிய துப்பு திடீரென்று தோன்றியது. ஒரு சமயம் அவருக்கு கிடைத்த துப்பு, அவரை பெங்களூரின் டீக்கடைக்கு அழைத்து சென்றது. அங்கே அவரால் ரிஷியின் தரிசனத்தின் பின்விளைவை உணர முடிந்ததால், அந்த இடத்தில் சிறிது காலம் தங்கி இருந்தார். ஆனால் ரிஷி எங்கே சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை, அதனால் தேடும் வேட்கை தொடர்ந்தது. §§

ஒரு நாள் சாது மைசூருக்கு தென்பகுதியில் இருந்த ஒரு சிறிய ஊருக்கு வந்தடைந்தார் மற்றும் சந்தைக்கு செல்ல வழியை கேட்டுக்கொண்டு இருக்கும் போது, திடீரென்று வணிகர்கள் குடியிருப்பில் இருந்த ஒரு பெரிய வீட்டிற்கு முன்பாக வந்து நின்றார். சில மணிநேரம் கழித்து, ஒரு இளைஞன் அந்த வீட்டில் இருந்து வெளிவந்து, அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர் தான் ஒரு சாது என்றும், தான் ஒரு சுவாமி, ஒரு வயதான சந்நியாசியை தேடுவதாகவும், அவன் அந்த சந்நியாசியை பார்த்து இருக்கிறானா என்றும் கேட்டார். இளைஞன் பதில் ஏதும் சொல்லாமல், அவரை சிறிது நேரம் உற்றுப்பார்த்தான், அதன் பிறகு அவன் மீண்டும் வீட்டுக்குள் சென்று விட்டான். §§

சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞனின் தந்தை வீட்டிற்கு வெளியே வந்து, சாதுவை தங்கள் வீட்டிற்கு வந்து தங்களுடன் உணவு அருந்துமாறு கேட்டுக்கொண்டார். அவர் தானும் தனது இளைய மகனும் பழனிமலையின் ஒரு நீண்ட பாத யாத்திரையில் இருந்து சற்று முன் திரும்பி இருப்பதாகவும், வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு இருப்பதாகவும் விளக்கினார். உணவை காட்டிலும் அவர்களது உரையாடல் மீது இருவருக்கும் ஆர்வம் இருந்ததால், அவர்கள் இருவரும் உணவில் கவனமின்றி சாப்பிட்டார்கள். §§

அந்த வணிகர் தனது விருந்தாளி விளக்கியதை போன்று ஒரு சுவாமியை, பழனியில் கண்டதாக விளக்கினார். அதிக வயதானவராக இருந்த அந்த ரிஷி கரு விழிகளுடன், சடைமுடி உச்சந்தலையில் மடிக்கப்பட்டு, மிகவும் ஒல்லியான உருவத்துடன், ஆனால் ஆறு வயது சிறுவனின் உற்சாகத்துடன் இருந்ததாக குறிப்பிட்டார். அவர் எங்கே சென்று இருப்பார் என்பது தனக்கு தெரியவில்லை என்றும், ஆனால் அவரை பழனியில் ஒரு நாள் பார்த்ததாகவும் கூறினார். அந்த ரிஷியின் முகம் தனது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் என்றும் கூறினார். “நீங்கள் நாடுபவர் அவராகத் தான் இருக்க வேண்டும்,” என்று உறுதியாக கூறினார். “அவரைப் போன்ற ஒரு மாமனிதரை வாழ்நாளில் யாராலும் இருமுறை பார்க்க முடியாது,” என்றும் கூறினார். சாது உணவு அருந்திய பிறகு, தன்னை உபசரித்தவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, தமிழ்நாட்டின் தென்கிழக்கு திசையில் 300 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பழனிக்கு, ஒரு நீண்ட பாத யாத்திரையை தொடங்கினார். §§

ரிஷியை சந்தித்தல் §

ஒரு யோகியாக கோவணத்துடன் முருகப்பெருமான் எழுந்தருளி, அறுபடை வீடுகளில் ஒன்றான பிரசத்தி பெற்று இருக்கும், பழனிமலை கோயிலில் அவர்கள் இறுதியாக சந்தித்தார்கள். இது முருகப்பெருமான் முதல் முறையாக ரிஷிக்கு காட்சி அளித்த புனித இடமாகும். இந்த அனுபவம் ரிஷியை வடக்கு நோக்கி இமயமலைக்கு, வாழ்நாள் சாதனாவிற்கு மற்றும் தெய்வீக உணர்தல்களை பெறுவதற்கு வழிவகுத்தது. அவர் தனது ஆன்மீக விழிப்புணர்வு தொடங்கிய இடத்திற்கு திரும்பியிருந்தார். §§

அவர்களது சந்திப்பு, இருவர் சந்திக்கும் சாதாரண சந்திப்பாக இருக்கவில்லை. சாது வழிபாட்டில் ஈடுபட்டு இருந்த போது, ரிஷி பின்பக்கமாக வந்து தன்னை பின்தொடருமாறு கையை அசைத்தார். அவர்கள் சுமார் ஓராண்டிற்கு ஒன்றாக இருந்து சிதம்பரத்தில் சில நாட்கள், அதன் பிறகு திருவண்ணாமலை, மற்றும் வடக்கே மதராஸ் மற்றும் நெல்லூர் என்று தமிழ்நாட்டில் இருந்த கோயில் குளங்களுக்கு ஒன்றாக சென்றனர். §§

ரிஷி மற்றும் அவரது சீடனை ஒன்றாக பார்ப்பது, ஒரு அபூர்வமான காட்சியாக இருந்ததால், அந்த நினைவு மக்கள் மனதில் நீங்காமல் இருந்தது. அவர்கள் எங்கே சென்றாலும், மக்கள் அவர்களை கவனமாக பார்த்தார்கள் அல்லது தங்கள் வேலைகளை நிறுத்திவிட்டு அவர்களை நோட்டமிட்டார்கள். ரிஷி அகல காலடியுடன் நேராக பார்த்து நடந்தார். மக்கள் அவரை நோட்டமிட்டால், அவர் தன்னைப்பற்றி பொருட்படுத்தாமல், வேறு எங்காவது பார்த்துக்கொண்டு இருப்பார். ஆனால் உயரமாக இருந்த அவரது சீடன், ரிஷியின் இரண்டு காலடிகளுக்கு ஒரு காலடி வைத்து, தனது பார்வையை மேகங்கள் மற்றும் மரங்களின் மேற்பகுதியில் பொருத்திக்கொண்டு, மெதுவாக நடந்துகொண்டு இருந்தார். §§

அவர்கள் நீண்டநாள் நண்பர்களைப் போல தோளோடு தோள் கொடுத்து நடந்து சென்றனர். ஒரு கிராமம், வழியில் ஒருவரது வீடு, ஒரு கோயில் அல்லது சாலைக்கு அருகில் இருக்கும் ஒரு மரத்தடி என்று பொழுது சாயும் போது எங்கே இருந்தார்களோ, அங்கே அன்றைய இரவை கழித்தார்கள். இரவின் பெரும்பாலான பொழுதை உட்கார்ந்தே கழித்த பிறகு, விடியலுக்கு முந்தைய இருட்டில் அவர்கள் வழக்கமாக ஒன்றாக தியானம் செய்துக்கொண்டு இருப்பதை காணலாம். அவர்கள் சூரிய உதயத்திற்கு முன்பாக, ஒரு கிணறு அல்லது நதியில் குளித்து, சிறிது உடற்பயிற்சி செய்த பிறகு, தனது சிஷ்யனை அருகில் அமர்த்தி, கிழக்கு நோக்கி உட்கார்ந்து இருப்பார். ரிஷி தினமும் காலையில் பல மணி நேரங்களுக்கு, தனது சீடனுடன் பேசிக்கொண்டு இருப்பார் மற்றும் அதன் பிறகு காலை உணவிற்கு யாசகம் செய்ய அனுப்பிவிடுவார். அவர்கள் வெப்பம் அதிகமாக இருக்கும் நேரம் முழுவதும் தூங்கி, மதியத்தில் நடக்கத் தொடங்குவார்கள். இவ்வாறு அவர்கள் ஒவ்வொரு நாளும் நிதானமாக ஒரு சில கிலோமீட்டர்கள் நடந்து சென்றனர். §§

அவர்கள் தங்கும் இடம் ஒரு காடாக இருக்கட்டும், அல்லது ஒரு வனப்பகுதி ஒரு காலி இடமாக இருக்கட்டும், மக்கள் உடனே அவர்களை சுற்றி கூடிவிடுவார்கள். அதனால் அவர்கள் ஒரே இடத்தில் மூன்றாவது நாள் என்றுமே தங்கியது இல்லை. இரண்டாம் நாள், அவர்களை தரிசித்து ஆசிகளை பெற அதிக மக்கள் வருவார்கள். கையில் உணவுடன் வரும் மக்கள் தங்களை பிடிக்க வருவதாக ரிஷி கூறுவார். அவர்கள் ஒரு முறையான கிராமத்தில் தங்காத போது, சாது தங்களுக்கு தேவையான உணவை யாசிக்க அருகில் இருந்த குக்கிராமத்திற்கு நடந்து செல்வார், மற்றும் பெரும்பாலும் கிராமத்தில் இருந்து திரும்பும் போது, அவரை பின்தொடர்ந்து ஐந்து அல்லது பத்து சிறுவர்கள் வருவார்கள். சாதுவைப் போன்ற ஒரு உயர்ந்த மனிதரை அவர்கள் பார்க்காததால், சிறுவர்கள் அவருடன் இருக்க விரும்பி, அவர் யாசித்த பொருட்கள் மற்றும் குடையை சுமந்து வந்தார்கள், மற்றும் தங்கள் தாயின் சமையலறையில் இருந்து பால், மாம்பழங்கள் மற்றும் இனிப்புக்களை கொண்டு வந்தார்கள். இத்தகைய ஒரு அணிவகுப்பு நெருங்குவதை பார்க்கும் போது, ரிஷிக்கு தானாகவே சிரிப்பு வந்துவிடும். அவரது சீடரால் இந்த அணிவகுப்பை நிறுத்த முடியவில்லை; இதில் அவர் செய்வதற்கும் எதுவும் இல்லை. அவர் சிறுவர்களை கடிந்து கொண்டாலும், அவர்கள் விளையாட்டுத்தனமாக சற்று விலகி பின்தொடர்ந்து வருவார்கள். §§

புனிதமான அறிவுறுத்தல்கள்§

சுமார் 1860 ஆம் ஆண்டிற்கு அருகில், சிவபெருமானின் புண்ணியத்தலமான தஞ்சாவூரில், ரிஷியும் சீடனும் ஒன்றாக காணப்பட்டதாகவும், அங்கே அவர்கள் ஒரு பண்ணையாருக்கு சொந்தமான கோயிலில் பல வாரங்கள் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. நமது ஆக்கப்பூர்வ வர்ணனையாளர் பின்வரும் கதையை எழுதுவதற்காக, அந்த காலத்தில் நிலவிய கலாச்சாரத்தின் அடிப்படையில், மக்கள் நினைவில் இருந்து நீங்கிய பழங்கால நிகழ்வுகளை, கவனமாக ஆய்வு செய்திருக்கிறார். §§

தலைநகரமான மதராஸின் தென்திசையில் அமைந்துள்ள இந்த புண்ணிய தலத்தில் இருந்து கிளம்பி, அவர்கள் ஒரு பெரிய பண்ணையை கடந்து சென்றுக்கொண்டு இருந்தனர். நேர்த்தியாக உடை அணிந்திருந்த ஒருவர், தனது வீட்டில் இருந்து விரைந்து வந்து அவர்களை சந்தித்தார். அவர்களை பக்தியுடன் வணங்கிவிட்டு, தான் இதன் பண்ணையார் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். நேற்று இரவு தனது கனவில், இரண்டு விருந்தாளிகள் தோன்றியதாகவும், அவர்கள் இருவரும் தனது குடும்ப கோயிலில் அமர்ந்து இருப்பதாக கண்டதாகவும், அவர்கள் வருவார்கள் என்று காலையில் இருந்து தான் காத்து இருப்பதாகவும் உற்சாகத்துடன் கூறினார். அவர்கள் தனக்கு விருந்தாளியாக, அவர்களின் விருப்பத்திற்கேற்ப பல நாட்கள் இருக்கலாம் என்றும் கெஞ்சினார். அவர்கள் இருவரும் அந்த மாளிகைக்குள் நுழைந்த போது, நுழைவாயிலில் பணியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். §§

பண்ணையார் அவர்களது பாதங்களை கழுவினார், மற்றும் தான் கண்டது தீர்க்கதரிசன கனவாக இருக்கலாம் என்று நினைத்து தான் வாங்கியிருந்த பூக்களால் அவர்களது பாதங்களை பூசை செய்தார். அவர் தனது விருந்தாளிகளை வீட்டினுள் அழைத்து சென்று, தனது குடும்பத்தாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு தனது வீட்டின் பின்புறத்தில் விசாலமான முற்றத்தின் குறுக்காக அமைந்து இருந்த, தங்கள் குடும்ப கோயிலுக்கு செல்லும் வழியை காண்பித்தார். அது பல தூண்களுடன் ஒரு உயரமான கூரையுடைய மண்டபமாக இருந்தது. அதன் சுவர்களில் பாரம்பரிய முறைப்படி சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணக்கோடுகள் பூசப்பட்டு இருந்தது. அதன் வளாகத்தை சுற்றி வில்வம் மற்றும் மாமரங்கள் நிரம்பி இருந்தன. அந்த மண்டபத்தில் ஒரு சிறிய விக்ரகத்துடன் ஒரு சிறிய கோயில் அமைந்து இருந்தது. அவர் கைகளால் சைகை காண்பித்துக் கொண்டு, “இந்த கோயிலுக்கும் எனக்கும் ஒரே வயது,” என்று உற்சாகமாக கூறினார். “நான் பிறந்த போது என் பாட்டனார் இதை கட்டினார். இந்த கோயிலுக்காக எனது தந்தையும் கடினமாக உழைத்து இருக்கிறார்.” முகப்பு மண்டப்பத்தின் நிழலில் கல்லில் செதுக்கப்பட்ட சிறிய நந்தி அமைந்து இருந்தது, மற்றும் அதனை பண்ணையார் கடந்து செல்லும் போது அன்புடன் வணக்கம் செலுத்தினார். §§

அந்த சிறிய கோயில் எந்த வித குறையும் இன்றி மிகவும் தூய்மையாக இருந்தது. சந்தன மரக்கதவுகளை திறந்தபோது, அது பளபளக்கும் கருங்கல் தரையை வெளிப்படுத்தின மற்றும் சுவர்களின் பெரும்பாலான பகுதி பிரத்யேகமாக இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர மரம் மற்றும் சுண்ணாம்புக்கலவையினால் செய்த சிற்பவேலைகளால் நிரம்பி இருந்தன. அந்த சிறிய கோயிலில் இருந்த சிவலிங்கம் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, நகைகளை கிரிடமாக கொண்டு இருந்தது. அங்கே சாம்பிராணி வாசனை நிரம்பி இருந்ததால், அப்போது தான் பூசாரி கோயிலை விட்டு கிளம்பி இருக்கவேண்டும். பண்ணையாரிடம் அதிகம் செல்வம் இருப்பது தெளிவாக தெரிந்தது. மணி, தட்டுகள் மற்றும் லிங்கத்திற்கு மேலே தொங்கிக்கொண்டு இருக்கும் பானை என்று பூசை பொருட்கள் அனைத்தும் தங்கம் அல்லது வெள்ளியால் உருவாக்கப்பட்டு இருந்தன. அங்கே ஒரு அமைதியான மற்றும் உன்னதமான சூழ்நிலை நிலவி, அதுவே ஒரு உலகமாக இருந்தது. §§

image§

இளம் வயது சாது தனது குருவான, இமயமலையில் இருந்து வந்த ரிஷியை பழனிமலையில் சந்தித்தார். இருவரும் இணைபிரியாது சாலையில் ஒன்றாக, ஒரு இடத்தில் இரண்டு இரவுக்கு மேல் தங்காமல், உண்மையான ஆண்டிகளாக, தங்களது உணவிற்கு யாசகம் செய்து திறந்தவெளியில் வாழ்ந்துகொண்டு இருந்தனர். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அந்த கோயிலில் இருந்த இன்னொரு கதவு வழியாக ஒரு ஒல்லியான பிராமண இளைஞன் நுழைந்தான். இவர்களை பார்த்ததும் அவன் ஒதுங்கிக்கொண்டான், ஆனால் பண்ணையார் அவனை திரும்ப அழைத்து, “இவன் பெயர் ரமேஷ். இவன் தந்தை பல வருடங்களாக நம்மிடம் பூசாரியாக இருக்கிறார். எதிர்காலத்தில் ரமேஷ் தனது தந்தையின் பணியை தொடரவிருக்கிறான்,” என்று தனது இரு விருந்தாளிகளிடம் தெரிவித்தார். §§

யாத்ரீகர்களுக்காக தான் பராமரித்த ஓய்வு விடுதி மற்றும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய, பொருட்களால் நிரப்பி வைத்திருந்த சேமிப்பு கிடங்கையும் காண்பித்தார். தண்ணீர் குடங்கள், வேட்டிகள், சால்வைகள், குடைகள், பாய்கள், கைத்தடிகள், விசிறிகள், சந்தனக்கட்டைகள், தட்டுகள் மட்டுமில்லாமல் சிறிய ஊசிகளில் இருந்து போர்வைகள் வரை, மற்றும் நிறைய நாணயங்கள் நிரம்பிய ஒரு சிறிய குடை என்று யாத்திரைக்கு தேவைப்படும் ஒவ்வொரு பொருளும் அங்கே இருந்தன. §§

“இந்த வழியாக மழைக்காலங்களில் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்,” என்று அவர் விளக்கினார். “அவர்கள் தஞ்சாவூர் மற்றும் சிதம்பரம் வரை சென்று, மீண்டும் இதே இடத்திற்கு திரும்பி வருவார்கள். எங்கள் குடும்பம் அவர்களை தொடர்ந்து சிறந்த முறையில் உபசரித்து வந்துள்ளது,” என்று கூறி சிறிய இடைவெளிக்குப் பிறகு, “ஆனால் இந்த மாதம் யாத்ரீகர்கள் வருவது குறைவாக இருக்கும். அதனால் நீங்கள் தனியாக இருப்பீர்கள். யாரும் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கமாட்டார்கள்.” §§

பிறகு வெளியே சென்று, மண்ணில் 12 அடி அகலத்துடன் உட்புறத்தில் கற்களால் வட்டவடிவில் உள்வரிப்பூச்சு செய்யப்பட்ட குடும்பக் கிணற்றை காண்பித்தார். மீண்டும் தனது விருந்தாளிகளை பார்த்து கைக்கூப்பி, “ உங்களுக்கு சேவை செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் இங்கே சிறிது காலம் தங்க வேண்டும். உங்களின் வசதிக்கேற்ப இங்கே தங்கலாம். இது எனக்கு சிவபெருமான் அளித்த கடமை; இதை உங்களால் நிராகரிக்க முடியாது,” என்றார். அவரிடம் இருந்த குழந்தையின் நேர்மையும், கெஞ்சிக்கேட்கும் பார்வை வேண்டிக்கொண்டதையும் அவர்களால் நிராகரிக்க முடியவில்லை, மற்றும் அவர் பெருமகிழ்ச்சி அடைந்தார். அவர் மீண்டும் வணக்கத்தை தெரிவித்து, அவர்களுக்கான உணவு விரைவில் வந்துவிடும் என்று கூறி, நேராக தனது வீட்டை நோக்கி சென்றார். §§

அவர்கள் இந்த சிறிய கோயிலில் ஒரு வாரம் தங்கி இருந்தார்கள். வேறு யாரும் அங்கே தங்கவில்லை, யாரும் அவர்களது அமைதியை குளைக்கவில்லை. வந்த விருந்தாளிகள் கனிவாக திருப்பி அனுப்பப்பட்டதாக அவர்களுக்கு தோன்றியது. அந்த சிறிய கோயிலின் வலுவான கல் சுவர் வழியாக வெளியுலகின் எந்த சிந்தனையும், சிவபெருமானைத் தவிர எந்த நினைவும் உள்ளே நுழைய வாய்ப்பில்லை; மற்றும் இந்த பேரின்பம் நிறைந்த சூழலில் அன்றாட நிகழ்வுகளின் கவலை இல்லாமல், தங்களது யாத்திரையை அவர்களால் மெய்யுணர்வின் உச்சத்திற்கு எளிதில் எடுத்துச்செல்ல முடிந்தது. §§

அவர்கள் இரவு பகல் என்று பார்க்காமல், ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும், கிணற்றில் இருக்கும் குளிர்ச்சியான மற்றும் சுத்தமான நீரை வாளியில் இறைத்து, தலையில் இருந்து கால் வரை ஊற்றி குளித்துவிட்டு, சிறிது தூரம் நடந்து செல்வார்கள். அதன் பின்னர் குரு தனது சீடனிடம், வாழ்நாள் முழுவதும் துணைபுரியும் வலுவான அறிவுறுத்தல்கள் மற்றும் உட்பார்வைகளை வழங்குவார். மதிய உணவிற்கு பிறகு, அவர்கள் நீண்டநேரம் தூங்குவார்கள் மற்றும் சூரிய மறைவுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் தியானம் செய்ய தொடங்குவார்கள். அவர்கள் இருவரும் பலமணி நேரங்களுக்கு ஆழமான, ஆன்மீக ஒற்றுமை மற்றும் ஒரு முழுமையான இணக்கத்தில் அமர்ந்து இருப்பார்கள். அவர்களுக்கு இடையே நடைபெறும் உரையாடலில் ரிஷி மட்டுமே உரை வழங்குவார், மற்றும் அதுவும் தொடர்ச்சியில்லாமல் இருக்கும். §§

image§

அவர்கள் ஒன்றாக சேர்ந்து இருந்த இறுதி நாளன்று, எளிமையாக இருந்தாலும் வலுவாக சீடனின் முழங்காலை தொட்டு, அதன் மூலம் சிவபெருமானின் ஒளி மற்றும் அன்பை சிஷ்யன் என்கிற இந்த புதிய பாத்திரத்தில் ஊற்றி, ரிஷி தனது சீடனுக்கு தீட்சையை வழங்கினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அவர் தனது சீடனிடம், அவன் இலங்கையின் வடக்கு தீபகற்பத்தில் இருக்கும் யாழ்ப்பாணத்திற்கு செல்லுவான் என்றும், ஆனால் அதற்கு தனது உட்புறத்தில் இருந்து ஆணைகள் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார். “சைவ சமயம் உலகின் இந்த பகுதியில் மட்டுமே வலுவாக பின்பற்றப்படுகிறது. சமீபகாலத்தில் மேற்கத்திய தாக்கத்தால், ஒரு பின்னடைவு ஏற்பட்டு இருந்தாலும், அது அழியவில்லை. கடுமையான முயற்சியின் மூலம், அதை புனர்நிர்மாணம் செய்ய முடியும். அங்கிருக்கும் மக்கள் தூய்மையானவர்கள்; அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை பேணி காக்கிறார்கள்; ஆனால் அவர்களுக்கு சிவபெருமானின் ஆன்மாவைப் பற்றி தெரியவில்லை. அவருடைய சக்தியும் அருகாமையும், அவர்களுக்குள் உறங்கிக்கொண்டு இருக்கிறது. அவர்கள் ஆச்சார வழிகளை பின்பற்றினாலும், தங்களது ஆச்சாரத்தின் ஆழங்கள் அவர்களுக்கு தெரியவில்லை. ஆன்மீக விரிவாக்கத்தின் வாகனமாக, ஆச்சாரமான சைவ கலாச்சாரம் விளங்குவதை அவர்கள் மறந்து இருக்கிறார்கள். §§

“அங்கே சென்று அந்த உணர்விற்கு புத்துணர்ச்சியை வழங்கி, அதை காண்பித்து, அதைப்பற்றிய விளக்கமும் வழங்கு. அதிசயங்கள் செய்பவனாக இரு. நீ அறிந்திருப்பதைக் காட்டிலும் உன்னிடம் அதிகமான ஸித்திகள் இருக்கும். நீ பல அற்புதங்கள் நிகழ்த்துவாய். நீண்டகாலம் வாழ்ந்து நிறைய சீடர்களுக்கு வழிகாட்டு. அங்கிருக்கும் மக்கள் உன்னை சிறை பிடித்து, தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்வார்கள், ஆனால் நீ அதற்கு அனுமதி வழங்காதே. நீ உனது பணியை முடித்த பிறகு, அவர்கள் நலனை கருதி, அவர்களை விட்டு விலகிவிடு. உன்னை பயன்படுத்திக் கொள்ள பலர் இருப்பார்கள், ஆனால் புரிந்துகொள்ள அல்ல பாராட்ட சிலர் மட்டுமே இருப்பார்கள் மற்றும் நீ தருவதை கேட்பதற்கு வெகு சிலரே இருப்பார்கள். மற்றவர்கள் எல்லா விவகாரங்களுக்கும் உன்னிடம் வருவார்கள். அவர்களுக்கு தேவையானது அனைத்தும் வழங்கிவிடு. இப்படி செய்வதால், நீ பணிகள் அனைத்தையும் முடித்து விடுவாய்.” §§

தனது சீடனின் ஆன்மீக பொறுப்பை மரபுரிமையாக இறுதியில் பெறவிருக்கும் உயிர்சக்தியை பற்றி ரிஷி விளக்கம் அளித்தார். அவன் அமைதியாக, மிகவும் புனிதமாக இருப்பான். ஆனால் அவன் பித்து பிடித்தது போல நடந்துக்கொள்வான். “நீ பெற்ற ஸித்திகளை மற்றவர்களுக்கு கற்றுக்கொடு. ஆனால் ஞானத்தின் முத்துக்களை இவனுக்கு மட்டும் வழங்கு. அவன் வெளிநாட்டவர்கள் ஆட்சியின் போது, முட்டாள்தனத்தின் போர்வையில், தனது குரு பரம்பரையின் சக்தியை காப்பாற்றி, தனது சீடர்களுக்கு வழங்குவான்,” என்று அறிவுறுத்தினார். இவ்வாறு ரிஷி, தினமும் தனது சீடனுக்கு விரிவான அறிவுறுத்தல்களை வழங்குவார். §§

இருவரும் இணைந்து இருந்த இறுதி நாளன்று, விடியற்காலையில் அவர்கள் அக்னிக்கு முன்பாக அமர்ந்து, சைவ சமய ஈமச்சடங்குகளில் செய்வதைப் போல, ரிஷி தனது சீடனின் நெற்றியில் விபூதியை பூசி, அவனுக்கு சந்நியாசம் என்கிற துறவற தீட்சையை வழங்கினார். புதிதாக அரைத்த சந்தனத்தை சீடனின் மார்பில் பூசி, தீட்சை பெற்றவருக்கு முக்தியானந்தா என்று துறவற வாழ்க்கைக்கான பெயரை வழங்கினார். “முக்தியில் இருக்கும் பேரின்பத்தை அனுபவிப்பவன்” என்பது அதன் பொருள். §§

ரிஷி கைகளை நீட்டி, தனது நோக்கத்தில் கவனத்துடன், முக்தியானந்தாவின் முழங்காலை தொட்டு, திடீரென்று தனது சீடனை உலகில் சமயப்பணியை மேற்கொள்ள அனுப்பி வைத்தார். அந்த தொட்டுணர்வை சீடன் தனது வாழ்நாள் முழுவதும் மறக்கவில்லை. முக்தியானந்தா எழுந்து நின்று, தனது சற்குருவை தரையில் விழுந்து வணங்கினார் மற்றும் குரு அறிவுறுத்தியவாறு, உடனே அந்த இடத்தை விட்டு கிளம்பினார். ரிஷி அந்த கோயிலில் தொடர்ந்து வசித்து வந்தார். §§

ரிஷி தனிநபருக்கு கோயிலில் சில நாட்கள் தங்கி இருந்தார். அதன் பிறகு அவர் தெற்கு திசையில் சென்று, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சிறிது காலம் தங்கி இருந்து, இந்தியாவின் தென் முனையில் இருக்கும் அம்மன் கோயிலான கன்னியாகுமரிக்கு சென்றார். அந்த கடற்கரையில் அவர் தனக்கு உகந்த இடத்தை தேடிக்கொண்டு, தனது உடலில் இருந்து உயிர் பிரியும் வரை, சமாதி நிலையில் தொடர்ந்து வளர்ச்சி அடையும் அனுபவங்களை எதிர்கொண்டு வந்தார். §§