குருமார்களின் சரித்திரங்கள்

Page 18: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/18_na01_11.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

நான்காவது அத்தியாயம் §

இமயமலையில் இருந்து வந்த ரிஷி§

கைலாச பரம்பரையில் வந்த அடுத்த சற்குரு பற்றி எங்களுக்கு தெரிந்த தகவலை இங்கே பகிர்கிறோம். அவர் ஒரு நாத சித்தர், அவருக்கு முன்பாக இருந்த சுமார் 157 சற்குருமார்கள் இருந்தார்கள், மற்றும் அதில் 155 சற்குருமார்களின் பெயர் தெரியாது. ஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் மக்களிடம் பேச்சு வழக்கில் இருந்தவை. பெயர் தெரியாததால், அவர் இமயமலையில இருந்து வந்த ரிஷி என்று அழைக்கப்படுகிறார், மற்றும் அவரது வாழ்க்கை பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாக இருக்கின்றது. அவரது வாழ்க்கை மற்றும் அவர் வாழ்ந்த காலகட்டம் பற்றி கிடைத்த சில சூட்சும ஞான தகவல்களின் சிறிய விரிவாக்கமாக, பின்வரும் கற்பனை கதை தெளிவான விவரம் மற்றும் சூழ்நிலையை கிரகித்து, இந்தியாவின் துறவறம், தன் உள ஆய்வு, குருமார்களின் முன்பாக அமர்ந்து அவர்களது போதனைகளை கேட்டறிதல் மற்றும் கடவுளை உணர்தல் பற்றிய பழமையான பாரம்பரியம் பற்றி கூறுகிறது. §§

ஒரு சிறுவன் சாதுவாகிறான் §

ஒரு நாள் வட இந்தியாவின் ஒரு கிராமத்தில், சூரியன் தொலைவில் இருந்த தொடு வானத்தில் உதயமாகிக்கொண்டு இருந்தது. அந்த கிராமத்தில் இருந்த மக்கள், தங்கள் ஓலை குடிசைகளில், சூரியன் உதித்ததை கவனிக்காமல், கூடுதலாக சில நிமிடங்கள் தூங்குவதில் கவனமாக இருந்தார்கள். இன்று இந்த கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞனுக்கு மட்டும் விஷேசமாக இருக்கவிருக்கிறது. இன்று அந்த இளைஞன் காலையில் வழக்கம் போல் எழுந்து தனது வியாபாரத்திற்கு செல்லாமல், விழிப்புணர்வை பெறவிருக்கிறான். §§

அந்த இளைஞன் மெதுவாக தனது கட்டிலில் இருந்து எழுந்து, தனது குடிசையை சுற்றிப்பார்த்தான். அவன் நீண்டகாலமாக, இந்த நாளுக்காக தன்னை தயார்செய்து கொண்டு இருந்தான். அவனது வீட்டில் விலை மதிப்புள்ள பொருட்கள் எதுவும் இல்லாமல் காலியாக இருந்தது, மற்றும் மேலோட்டமான நினைவுகள் மட்டுமே இருந்தன. ஆனாலும், அவன் அந்த அறையை நோட்டமிடும் போது, வாழ்க்கையில் வேதனை அளித்த சம்பவங்கள் அவனது நெஞ்சை உருத்திக்கொண்டு இருந்தன. அதனால் அவன் தன் கவனத்தை இழந்து, தனது தாய் தினமும் தனது முதல் வேலையாக, தந்தைக்கும் தனக்கும் சூடாக காலைச் சிற்றுண்டியை தயார் செய்தது நினைவுக்கு வந்தது. பழைய நினைவில் மூழ்கியதால், சூடான சப்பாத்திகள் மற்றும் சுத்தமான நெய்யின் வாசனை அவனது மூக்கை துளைத்தன. அவனது தந்தை குடுவையில் இருந்த சப்பாத்திகளை திருட முயற்சிக்கும் போது, அவனது தாய் புன்னகைப்பதும் அவனது நினைவில் தோன்றியது. §§

இப்போது அவனுடன் குடும்பத்தினர் யாரும் இல்லை. அவன் யாரிடமும் சொல்லாமல் கிளம்பி இருக்கலாம், ஆனால் அவ்வாறு சிந்திக்கும் முன்னர், அவனுக்கு சிறு வயதில் இருந்தே பரிச்சயமான அவனது மாமாக்கள், அத்தைகள் மற்றும் அவர்களது குழந்தைகள் மற்றும் நண்பர்கள் என்று கிராமம் முழுவதும் அவனது வீட்டில் கூடி இருந்தனர். அங்கே ஒரு குழப்பமான அமைதி நிலவியது. அவர்களது குழந்தைகளில் ஒருவன், ஒரு சாதுவாக மாற துறவறம் செல்லவிருக்கிறான். அவன் தனது தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகள் காரணமாக, கடந்த ஆண்டு கிராமத்தில் இருக்கவேண்டி இருந்தது. அந்த சமயத்தில், கிராமத்தில் இருந்து சான்றோர்களுக்கு அவனது ஈடுபாடுகளைப் பற்றி தெரிந்து இருந்ததால், அவனை லௌகீக வாழ்க்கையை நோக்கி இழுக்க முயற்சி மேற்கொண்டனர். இந்த முயற்சிகளில் தவறான நோக்கங்கள் எதுவும் இல்லை. இந்த முரண்பாட்டை இந்தியா பல யுகங்களாக எதிர்கொண்டு வருகிறது. ஒரு புறத்தில் தங்களது உண்மையான மற்றும் இயல்பான வேட்கையை தேடிக்கொண்ட சாதுக்கள், சுவாமிகள், யோகிகள், ஆண்டிகள், ரிஷிகள் மற்றும் சித்தர்களுக்கு மிகப்பெரிய மரியாதையை வழங்குவார்கள். ஆனால் விசித்திரமாக (இது மனிதநேய பற்றுகளை பொறுத்தது, சிலசமயம் இல்லாமலும் இருக்கலாம்), ஒருவர் இந்த பாதையை தேர்ந்தெடுக்கும் போது, வழக்கமாக அவன் அல்லது அவளது குடும்பம் மற்றும் சமூகத்தில் இருந்து மிகப்பெரிய தடை மற்றும் மனச்சோர்வை சந்திக்க நேரிடலாம். இந்த பாதை அதிக சோதனைகள் நிறைந்ததாக இருக்கும்; ஆனால் இதில் முயற்சி மேற்கொள்ளும் சிலருக்கு, மற்றும் உணரவேண்டியதை உணர்ந்த வெகு சிலருக்கு, அது அளிக்கும் பலன்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. §§

image§

ஒரு நதியின் மூலம் மர்மமாக இருப்பதைப் போல, ஒரு சந்நியாசியின் கடந்தகாலம் மற்றும் அவரது தனிப்பட்ட வரலாறு அறியப்படாமல் இருப்பது வழக்கமான ஒன்றுதான். இதை நிரூபிக்கும் வண்ணம், இந்தியாவின் தெற்குப்பகுதியில் இருக்கும் பெங்களூர் மக்களின் மனதை கவர்ந்த, அந்த தனியான நாடோடியைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அவனது மனம் நிலையில்லாமல் இருந்தாலும், அவனது ஆன்மா உறுதியாக இருந்தது. அவன் பிரியமான பற்றின்மையுடன் சிரித்துக்கொண்டு, தனது இரு கைகளையும் ஒன்று சேர்த்து தனக்கு முன்பாக இருந்த அனைவருக்கும் கனிவாக வணக்கம் செலுத்தினான். எல்லோரும் உடனடியாக, தங்கள் கைகளை உயர்த்தி ஆசி வழங்கினார் கள். இறுதியாக இளைஞன், தனது பாதையை மாற்றிக்கொண்டு, புதிய பாதையில் தனது முதல் அடியை எடுத்து வைத்தான். அவன் தனது பழைய பாதையை மீண்டும் திரும்பிப் பார்க்கவும் இல்லை, அவன் மீண்டும் அந்த கிராமத்தில் தென்படவும் இல்லை.§§

பயணம் மேற்கொள்ளுதல் §

அவன் தனது பாதையில் தனியாக முன்னேற தொடங்கியதும், ஒரு உறுதியான தீர்மானத்துடன் நடந்து, ஓய்வு எடுக்க மட்டும் தனது முன்னேற்றத்தை நிறுத்திக்கொண்டான். அவன் பல நாட்களுக்கு இமயமலையின் நதிகள் ஓரமாக நடந்து சென்று, அவ்வப்போது கிராமத்தில் இருக்கும் கோயில்களை தரிசித்து, சாலைகளில் சென்றால் மக்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்காக, வயல்களின் குறுக்காக சென்றுக்கொண்டு இருந்தான். அந்த சமயத்தில், ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ளும் சந்தோஷமான நாட்களாக இருந்தன. ஒரு நாள் காலை தாமதமாக தூக்கத்தில் இருந்து எழுந்து, பாதி தூக்கத்தில் இருந்த அந்த நாடோடி குளிக்கவும், சூரிய பகவானை வழிபடவும், ஒரு நதியை நோக்கி சென்றான். அந்த நதியில் குளித்து விட்டு, தனது காலை நேர சாதனாக்களை செய்தான் மற்றும் அதன் பிறகு தெற்கு திசையில் நடக்கத் தொடங்கினான். இவ்வாறு பல நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்கள் என்று நகர்ந்துக்கொண்டே சென்றன. §§

ஒரு டஜனுக்கும் குறைவான நபர்கள் இருந்த ஒரு சாதுக்களின் குழுவுடன் அவனுக்கு நட்புறவு ஏற்பட்டது. அந்த குழுவினர் தங்களிடம் இருந்த சாதாரண உடையை அவனுக்கு வழங்கி, கோயில் குளமாக சென்றுக்கொண்டு இருந்த தங்களது குழுவில் அவனை சேர்த்துக்கொண்டனர். அவர்கள் அப்போது பழனிமலை நோக்கி பிரயாணம் செய்துக்கொண்டு இருந்தனர். பழங்காலத்து முனிவர்கள் வழிபாடு நடத்திய இந்த தென்னிந்திய புண்ணிய தளம், சக்தி வாய்ந்த முருகப்பெருமானின் (வட இந்தியாவில் கார்த்திகேயா என்று அழைக்கப்படுகிறார்) அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கியது. பூமியில் இருப்பவர்களுக்கு சிவபெருமானை உணரும் பாதையை தயார்நிலையில் வைத்திருப்பதே முருகப்பெருமானின் குறிக்கோள் பணியாக விளங்குகிறது. அவன் துறவிகளின் கடவுளை தரிசிக்க, அந்த குழு மேற்கொண்ட நீண்ட பாதயாத்திரையில் முழு மனதுடன் பங்கு பெற்றான் மற்றும் அந்த தரிசனம் அவனது துறவற இலட்சியமாகவும் இருந்தது. §§

image§

இமயமலையில் இருந்து வந்த அந்த சாது, தென்னிந்தியா நோக்கி மேற்கொண்ட நீண்டப் பயணம், அவனை மிகப்பெரிய நதிகள் மற்றும் பாதைகள் இல்லாத காடுகள் மற்றும் கிராமங்கள் வழியாக அழைத்து சென்றது. அவன் சிவபெருமானை வழிபட்டு தனது தினசரி சாதனாக்களை செய்துக்கொண்டு இருக்க, ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அவனுடன் பயணம் மேற்கொண்ட சகோதரர்களுடன் அவன் நெருக்கமானதும், அவர்களது பழக்கங்கள், இரகசியங்கள், வாழ்க்கை மற்றும் வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் மீது அவர்களது கண்ணோட்டம் என்று பல தகவல்களை தெரிந்துகொண்டான். அவர்களிடம் இருந்து ஜலநேத்தி கருவியை பயன்படுத்த, காட்டில் இருக்கும் மூலிகைகளை பயன்படுத்தி தனக்கு வைத்தியம் செய்து கொள்ள, மண்ணை பயன்படுத்தி குளிக்க, மண் சோறு சாப்பிட, நூறு வகை பிராணயாமம் செய்ய மற்றும் சாதாரண மக்கள் தவிர்க்கும் அல்லது நிராகரிக்கும் உலகின் முழுமையை பார்க்க கற்றுக்கொண்டான். தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதன் உள்ளும், அவனால் எளிதில் இறைவனை காணமுடிந்தது, மற்றும் அவர்களுடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் சிவபெருமான் மீதான அன்பு அதிகரித்தது. அவர்கள் அவனுக்குள் தங்களது இளவயது பண்புகளைக் கண்டார்கள், மற்றும் அவனிடம் இருந்த ஆவல், சாந்த குணம், ஆர்வம் மற்றும் அமைதியான ஞானத்தை பாராட்டினார்கள். அவர்கள் இரவு நேரங்களில் மேற்கொண்ட நீண்டநேர தியானங்களின் போது, அவனிடம் இருந்த ஒரு விசித்திரமான அமைதி மீது, அவர்களுக்கு மௌனமான பொறாமை இருந்தது. அவன் பழங்கால தத்துவங்களை நன்றாக கற்று, பேச்சிலும் தெளிவாக இருந்து, இரவு நேரங்களில் கேம்ப்ஃபயரை சுற்றி நடந்த விவாதங்களில் தனது கருத்தை நிலைநாட்டும் திறனுடன் பெற்று இருந்ததால், அவர்கள் இந்த புதிய இளைஞனிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டார்கள். அவன் அந்த குழுவினருக்கு ஒரு அதிமேதாவியாக தோன்றினான், மற்றும் குழுவினர் அவனுடன் சேர்ந்து இருப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். அந்த குழுவினரின் ஒட்டுமொத்த திறமை மற்றும் புலமைக்கு நிகராக அவனது தனிப்பட்ட திறமை மற்றும் புலமை இருந்தது. அவன் குழுவில் இருந்த ஆன்மீக சந்தோஷத்தில் மூழ்கி இருந்ததால், குழுவில் எதிர்மறையாக எதுவும் தோன்றவில்லை. அவன் தனது இலட்சிய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருந்தான். அவன் சாதுக்களில் ஒரு சாதுவாக இருந்தான், மற்றும் இதை காட்டிலும் பெரிய அதிசயம் வேறு எதுவாக இருக்க முடியும்? §§

சாதுவின் கிராமத்தில் இருந்து சுமார் 2,500 கிலோமீட்டர் தொலைவில் இருந்த, பிரபலமான பழனிமலை கோயிலை நோக்கி, சூழ்நிலையை பொறுத்து தினமும் பத்து முதல் பதினைந்து கிலோமீட்டர் என்று, கந்தலான துணிகளை உடுத்திய குழுவினர் நடக்கத்தொடங்கி வாரங்கள் மாதங்கள் ஆனது. இன்றும் இந்தியாவில் பழனிமலை கோயில் மிகவும் பிரபலமாக விளங்குகிறது, மற்றும் பல்லாயிரக்கணக்கான கோயில்களை கொண்டுள்ள இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் பட்டியலில், இந்த கோயில் இரண்டாவது இடத்தில் உள்ளது. §§

அந்த குழு கோயிலை நெருங்கத் தொடங்கியதும், தனது வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டது. யாத்ரீகர்கள் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் ஒன்று சேர்ந்து, இறைவனை நோக்கி தங்கள் பயணம் தீவிரமாக இருக்க வேண்டும் என்பதற்காக, பலர் காலணிகள் ஏதும் இல்லாமல், இரு புறத்திலும் பரவி இருந்த கேழ்வரகு, சிவப்பு மிளகாய் மற்றும் பருத்தி நிலங்களை கடந்து, வாத்துக்களின் கூட்டம் மற்றும் ஆடுகளின் மந்தை ஒன்றாக சென்ற பாதையில் மிகவும் கவனமாக பல்வேறு குழுக்களாக சென்றுக்கொண்டு இருந்தனர். யாத்ரீகர்களில் இருந்த பல குழுக்கள், ஒரே மாதிரியான உடைகளுடன், ஒன்று சேர்ந்து பாடிக்கொண்டு இருந்தனர். இது அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட பயணமாக இல்லாமல், ஒரே புனித பயணத்தில் ஒரு பரஸ்பர ஆதரவு மற்றும் ஒரு பகிர்வுடன், இணைந்து இருக்கும் ஒரு ஆன்மீக குடும்பமாக இருந்தார்கள். §§

எல்லோரும் திறமையான இசைக் கலைஞர்களாக இல்லாவிட்டாலும், எல்லோரும் உற்சாகத்துடன் தாங்கள் நாடும் தெய்வமாக, சிவபெருமானின் இரண்டாவது மகனாக, தமிழ்நாட்டை காக்கும் தெய்வமாக, பிரகாசமாக மற்றும் நிரந்தர பிரம்மச்சாரியாக, கையில் சந்நியாச தண்டத்துடன், வெறும் ஒரு கோவணத்துடன் அழகான இளைஞனாக இருந்த தண்டாயுதபாணியை போற்றும் பாடல்களை (தங்கள் வேண்டுதலையும் சேர்த்து) ஆர்வத்துடன் பாடினார்கள். அந்த இசைக்குழுவில் இருந்த ஒரு பக்தன், வெறும் இரண்டு வார்த்தைகளை கொண்ட ஒரு மணிநேர பஜனையை வழி நடத்திச்சென்றான். அவன் உரக்கமாக “ஹரோ! ஹரா!” என்று கோஷமிட, மற்றவர்களும் “ஹரோ! ஹரா!” என்று பதிலுக்கு கோஷமிடுவார்கள். தங்கள் நடைப்பயணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் சிலர், மெதுவாக கோஷமிடுவார்கள். அவர்களை சாதுக்கள் கடந்து சென்று, தாங்கள் அரை மைல் தூரம் முன் இருந்தபோது கேட்ட அதே மந்திரங்களை காதால் கேட்டுக்கொண்டே, அந்த இசைக்குழுவில் இணைந்தனர். §§

நடந்துகொண்டு இருக்கும் யாத்ரீகர்களின் கூட்டம் அதிகரிக்கும் போது, அவர்களது நடையில் இருந்த உற்சாகமும் அதிகரித்தது. இறுதியாக 500 அடி உயரத்தில் அமைந்து இருக்கும் கோயிலின் கோபுரங்கள் காட்சி அளித்தன. அவற்றை காண்பதற்கு, முருகப்பெருமான் கோபுரங்களிடம் தனது பாதம் பணியுமாறு அழைப்பது போலவும், அவை அவரது அழைப்பிற்கு இணங்குவது போலவும் இருந்தது. அவர்கள் இரு மலைகளுக்கும் அடிவாரத்தில் அமைந்து இருக்கும் பழனி நகரத்தை நுழையும் போது, சூரியன் அஸ்தமனமாகிக்கொண்டு இருந்தது. நகரம் முழுவதும் பரவி இருந்த பல சாதுக்கள் ஆசிரமங்களில், பயணக் களைப்பினால் சோர்வுற்ற ஆண்டிகள் உடனே தஞ்சம் புகுந்தனர். அவர்கள் அடுத்த நாள் மலை ஏறுவதாக முடிவு செய்து, மகிழ்ச்சியுடன் ஓய்வெடுக்க முடிவு செய்தனர். §§

image§

ரிஷி தனது பயணப்பாதையில் எதிர்கொண்ட வித்தியாசமான அனுபவங்களில் பல கிராமப்புற சம்பவங்களும் அடங்கும். ஒரு சமயத்தில், ஒரு உணவகத்தில் அவர் ஒரு தோசையை திருடியதாக ஒரு பெண் அவர் மீது குற்றம் சுமத்த, அவர் அந்த பெண்ணிற்கு உதவ வந்த கூட்டத்திடம் இருந்து தப்பி ஓடவேண்டி இருந்தது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

உட்புற ஒளியில் மூழ்குதல் §

சூரியன் உதயமாகி மலை ஏறுவதை கடினமாக்குவதற்கு முன்பாக, காலையில் வெப்பம் குறைவாக இருக்கும் நேரங்களில், மலை ஏறும் முக்கியத்துவத்தை யாத்ரீகர்கள் அறிந்து இருந்ததால், தொடுவானில் சூரியனின் முதல் கிரணம் வெளிவருவதற்கு முன்பே, நமது இளவயது சாது விரைவாக கண் விழித்துவிட்டான். காற்று இதமாக வீசும் போது, ஏறுவதும் கடினமாகத தான் இருக்கும். அவன் விழிக்காமல் உறங்கிக்கொண்டு இருக்கும் யாத்ரீகர்களை நோட்டமிட்டான். §§

தனக்கு புத்துணர்ச்சியை வழங்கிக்கொண்டு ஒரு புதிய வேஷ்டியை உடுத்தி, தனது உடலில் ஊற்றிக்கொள்ளவும் தூக்கத்தை களைப்பதற்காகவும், அதிக குளிர்ச்சியான தண்ணீரை பல வாளிகளில் கொண்டு வந்து, திறந்த வெளியில் இருந்த ஒரு கிணற்றில் குளித்தான். அவனுடன் வேறு சிலரும் கண் விழித்து மலைக்குச் செல்ல தயாராக இருந்ததால், அந்த சிறிய ஊர் வழியாக மலை அடிவாரத்தில் இருந்த நுழைவாயில் வரை மற்றவர்களை பின்தொடர்ந்து சென்று, நீண்டகாலமாக தான் ஏங்கி இருந்த மலையேற்றம் தொடங்கவிருப்பதை மனதிற்குள் குறிப்பிட்டுக் கொண்டான். இந்த புனித தலத்திற்கு பாதுகாப்பாக மற்றும் ஆரோக்கியமாக வந்து சேர்ந்ததற்கு மற்றும் இந்த மலையேற்றத்தை மேற்கொள்வதற்கு நன்றி செலுத்தும் விதமாக அமைதியாக நின்றான். ஒரு சவாலான மலையேற்றத்திற்கு, வழியில் எங்கும் நிற்காமல் செல்வது ஒரு ஒரு முறையான அணுகுமுறையாக இருக்கும் கேள்விப்பட்டு இருந்ததால், இறைவனை வேண்டிக்கொண்டதும் மனதில் உறுதியுடன் கிளம்பினான். §§

மலைப் பாறையில் கரடுமுரடாக செதுக்கப்பட்டு, அவனுக்கு முன்பு மலையேறி இருந்த பல இலட்சக்கணக்கான பக்தர்களின் வெறும் கால்களால் தேய்ந்து இருந்த, 659 படிகளில் ஏறி சென்று, இறுதியில் மலை உச்சியை அடைந்தான். அவனுக்கு மூச்சுத் திணறியது, நடப்பதை நிறுத்தி கீழே திரும்பிப் பார்த்தான். அவனால் எல்லா திசையிலும் பார்க்க முடிந்தது மற்றும் தான் நேற்று இரவு வந்து சேர்ந்ததைப் போல, ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வந்துக்கொண்டு இருந்த காட்சி மற்றும் காலையில் தென்பட்ட ஆயிரக்கணக்கான அடுப்புக்களின் நெருப்பு காலை சிற்றுண்டியை உறுதி செய்த காட்சி, மற்றும் பழனி முருகன் கோயிலை சுற்றி இருந்த வயல்கள் மற்றும் சாலைகள் மற்றும் கிராமங்கள் மற்றும் வீடுகளின் காட்சியைப் போன்று அவன் முன்பு எப்போதும் பார்த்ததில்லை. அவன் மூன்று முறை கோயிலை வலம் வந்து, அன்று நடைபெறவிருந்த முதல் பூஜைக்கு கோயிலுக்குள் நுழைந்தான். §§

அவன் கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு, திருமூலரின் சீடனான காலாங்கியிடம் சீடனாக இருந்து, கோயிலை ஸ்தாபனம் செய்தவரான போகர் ரிஷியின் குகைக்கு சென்றான். சீன நாட்டை சேர்ந்தவர் என்று சிலரால் கருதப்பட்டு மிகப்பெரிய சித்தராக, பொன்மாற்று சித்தராக, மருத்துவராக இருந்த போகர், கி.மு. சுமார் இரண்டாம் நூற்றாண்டில், இந்த இடத்தில் முதன்முதலில் ஒரு வருடம் முழுவதும் முருகப்பெருமானை வழிபட்டு, இன்றும் கோயிலின் கர்ப்பக்கிரகத்தில் நின்றுக்கொண்டு இருக்கும் 43 அங்குல உயர மூலவரை தனது சொந்த கரங்களால் மந்திரங்களைக் கொண்டு வடிவமைத்து இருக்கிறார். அவர் அந்த மூலவரை கல் அல்லது உலோகத்தால் உருவாக்காமல், நவபாஷணம் என்கிற ஒன்பது நச்சுப்பொருட்களுடன் பல்வேறு மூலிகைகளை கலந்து, கல்லைப் போன்ற ஒரு கலவையை உருவாக்கினார். 2006 ஆம் ஆண்டு தலைசிறந்த கைவினைஞர்கள் தோராயமான சூத்திரங்களைக் கொண்டு, பலவருடங்கள் பழமையான இந்த மூர்த்தியில் சீர்மைப்புக்களை மேற்கொண்டு இருந்தாலும், இன்றும் இந்த மூர்த்தியின் நகலை துல்லியமாக உருவாக்க முடியவில்லை. §§

போகர் இன்றும் மலையில் இருக்கும் ஒரு குகையில், அதிக வயதானவராக உயிருடன் இருக்கிறார் என்று உள்ளூர் மக்களிடம் நிலவும் கதைக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக, போகரின் புண்ணியதலம் ஒரு சக்தியை கொண்டு இருக்கிறது. அந்த கதை உண்மையா அல்லது பொய்யா என்பது ஒரு புறம் இருக்க, அந்த இளைஞனால் அந்த இடத்தில் இருக்கும் துடிப்புணர்வை உணர முடிந்தது மற்றும் அவன் தலத்தில் இருந்த ஒரு அமைதியான மூலையில் உட்கார்ந்துக் கொண்டான். §§

அவன் தனது மனதில் எந்தவித சந்தேகம் அல்லது எதிர்பார்ப்பும் இல்லாமல், கடந்தகாலம் அல்லது எதிர்காலம் பற்றிய சிந்தனை இல்லாமல், நிகழ்காலத்தில் முற்றிலும் வெறுமையாக இருந்தான். அவனால் சுலபமாக ஆழ்ந்த தியானத்திற்குள் செல்ல முடிந்தது. அவன் சுவாசத்தின் வேகம் குறைந்து, பெரும்பாலும் நின்றுவிட்டது; அவனது சாட்சி தன் மீதே கவனத்தை திருப்பிக்கொண்டது, மற்றும் அது விரைவில் புனிதமான ஞானஒளி, புனிதமான சக்தி மற்றும் அண்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு அமைதியால் சுத்திகரிக்கப்பட்டது. அவன் எல்லை இல்லாமல் விரிவாக்கம் பெற்று, வரையறை அல்லது உடல் இல்லாமல், எங்கும் எதிலும் இருந்தான். அவன் அந்த நிலையில் இருக்கும் போது, கார்த்திகை (நாள்மீன் கூட்டம்) நட்சத்திர குழுமத்தின் அதிபதியாக இருக்கும் முருகப்பெருமான், ஒரு பிரகாசமான ஒளி வடிவில் காட்சி அளித்தார். அந்த ஒளி மிகவும் பிரகாசமாக இருந்ததால், அவனால் அதனை ஒரு காட்சியாக தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை மற்றும் அந்த ஒளி தன்னை கிரகித்துக்கொள்ள அனுமதித்தான். அவனும் முருகப்பெருமானும் ஒன்றகிவிட்டார்கள். அவன் அங்கே அசையாது உட்கார்ந்து இருக்கும் போது, குண்டலினி மேல்நோக்கி எழுச்சி பெற்று, ஒளியை கடந்த நிலைக்கு அவனை அழைத்து சென்றது. §§

அவன் அந்த சமாதி நிலையில் சிறிது நேரம் அமர்ந்து இருந்தான். இறுதியில் அவனுக்கு மீண்டும் அந்த ஒளியின் மீது விழிப்புணர்வு தோன்றியது, மற்றும் அதன் பிறகு அவன் கண்ட இன்னொரு காட்சியில், முருகப்பெருமான அவனது வாழ்க்கையின் முழுமையான விரிவாக்கத்தை அவனிடம் வெளிப்படுத்தினார். பூர்வஜென்மங்களில் தொடங்கி அந்த சாதுவின் எதிர்காலம் வரை, அனைத்தையும் அவன் தற்செயலாக அறிந்துக்கொண்டான். அந்த வெளிப்பாடு மங்கியதும், அவன் ஒரு பஞ்சைப் போல உட்கார்ந்து, அதன் சக்தியின் ஒவ்வொரு துளியையும் கிரகிக்கத் தொடங்கினான். முழுமையாக திருப்தி அடைந்ததும், எழுந்து நின்றான் மற்றும் சுற்றும்முற்றும் பார்க்காமல், மலையில் இருந்து கீழே இறங்கி தனது பாதையில் செல்லத் தொடங்கினான். §§

தனக்கு ஒரு புதிய வாழ்வு கிடைத்ததைப் போல, தான் மீண்டும் உருவாக்கப்பட்டு இருப்பதை நடுங்கிகொண்டு இருந்த அந்த யோகி உணர்ந்தான். ஒரு நாட்டிய கலைஞன் ஒரு அனுபவத்தில் இருந்து இன்னொரு அனுபவத்திற்கு மாறிச் செல்வதைப் போல, அவன் இந்த பேரானந்த அனுபவத்திற்கு பிறகு ஒரு அனுபவத்தில் இருந்து இன்னொரு அனுப்பதிற்கு மாறிச் சென்றான். அவன் வழியாக உயிர் சக்திகள் சீராக பாய்ந்து சென்றன. அவனுக்கு நேரப்பொருத்தம் சரியாக இருந்தது. அவனுக்கு தேவையானது அனைத்தும் எந்தவித முயற்சியும் இல்லாமல் வந்து சேர்ந்தன. அவனுக்கு பசி இருக்கும் போது, யாராவது உணவுடன் வந்து நிற்பார்கள் அல்லது விருந்திற்கு அழைப்பு விடுப்பார்கள். இரவு நேரங்களில் தங்குவதற்கு இடம் தேவைப்படும் போது, அவனைப்போன்று தெய்வீக நாட்டம் உள்ள ஒருவரின் குடிசை அல்லது கோயில் தேவஸ்தானத்தில் தங்குவதற்கு ஒரு இடம் எப்போதும் அவனுக்காக காத்துக்கொண்டு இருக்கும். “இந்த வழியில் செல்லவேண்டுமா அல்லது அந்த வழியில் போகவெண்டுமா?” என்று அவன் என்றுமே சிந்தித்தது இல்லை. அவன் தனது உள்ளத்தில் இருந்து ஆணையின் படி சென்றுகொண்டு இருந்தான். அவனுக்குக் கிடைத்த இறைவனின் தரிசனமும் குண்டலினி அனுபவமும் மிகவும் தெளிவாக இருந்ததால், அதைப்பற்றி அவன் நினைக்கவேண்டிய அவசியமே இல்லாமல், அவனுடன் தொடர்ந்து வாழ்ந்து வந்தன. §§

பாரதநாட்டில் இருக்கும் மக்கள், ஒரு ஆன்மா ஆன்மீக பக்குவத்தை அடைந்து, உலக வாழ்க்கையை கைவிடுவதை உணர்தால், தாங்கள் முக்தி பெறுவதற்காக, அந்த ஆன்மாவிடம் இருந்து சில ஆசிகளை பகிர்ந்துக்கொள்ள விரும்புவார்கள். அவன் ஒரு குறிக்கோள் பணியில் இருப்பதை இயலுணர்வால் உணர்ந்து, அவனது தனிப்பட்ட வழியில் செயல்பட அனுமதித்து, மீண்டும் அவனை லௌகீக வாழ்கையில் ஈடுப்படுத்தாமல் இருப்பதில் கவனமாக இருப்பார்கள். அவனுடன் தேவையில்லாத உரையாடலில் ஈடுபடாமல், அவனுக்கு தேவையானதை வழங்கி, அவன் மீது அக்கறை செலுத்தினார்கள். அவர்கள் அவனுக்காக உணவை தயார் செய்து, அவன் அதை விரும்பிய வேளையில் தனிமையில் சாப்பிட மதிப்பு அளிப்பார்கள். இந்த இளம்வயது சாதுவின் வாழ்க்கையும் இவ்வாறே அமைந்து இருந்தது. அவன் தங்குவதற்கு கிராமவாசிகள் இடம் அளித்தார்கள் மற்றும் தங்களது சம்சார வாழ்க்கை அவனுக்கு இடையூறு விளைவிக்காமல் இருப்பதில் கவனமாக இருந்தார்கள். ஒரு கத்தி நீரை சீராக கிழித்துக்கொண்டு செல்வதைப் போல, இத்தகைய கலாச்சாரத்தில், பெயரில்லாத சாது எந்தவித தடையுமின்றி தனியாக தனது பாதையில் முன்னேறி சென்றான். §§

சாது தனது குருவை சந்திக்கிறான் §

அவன் முதல் சமாதி அனுபவத்தைப் பெற்று ஒரு வருடம் கழித்து, பழனி மலையில் இருந்து வடக்கு நோக்கி நடக்கத்தொடங்கி, இமயமலையில் இருந்த ஒரு சிறிய கோயிலை வந்தடைந்தான். அவன் கோயிலின் பிரகாரத்தில் ஓய்வெடுக்க அமர்ந்துகொண்டான். தான் பயணத்தின் முடிவில் இருப்பதை உணர்ந்து, யாவும் கடந்த ஆழ்நிலை தியானத்தினுள் சென்றான். முருகப்பெருமானின் தரிசனத்திற்கு பிறகு அவன் உணர்த்த அந்த தீவிரமான அதிர்வு, சரவணபவவின் பேரின்பத்தில் தணிந்தது. அவன் தனது பணிகளை முடித்துவிட்டதை போலவும், தான் இப்போது இல்லாததைப் போலவும், ஆனால் அவன் தெய்வீக தன்மையின் மையமாக இருப்பதைப் போல தோன்றியது. அவனை ஆட்க்கொண்டு இருந்த அமைதிக்கடலில் அவன் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தான். §§

அவன் தன் கண்களை திறந்த போது, தனக்கு முன்பாக ஒரு முதியவர் உட்கார்ந்து இருப்பது தெரிந்தது மற்றும் அவரும் அதே பேரின்ப நிலையில் அமர்ந்து இருப்பதைப் போல தோன்றியது. இளவயது சாது அவருடன் தங்கியிருந்து, அவர் கண்விழிப்பதற்காக காத்து இருந்தான். அந்த முதியவர் கண்திறப்பார் அல்லது பேசுவார் என்று அவன் மூன்று அல்லது நான்கு நாட்கள் காத்து இருந்தான். சில நாட்களுக்குப் பிறகு, அவருக்காக காத்து இருப்பதையும், அவரை வியந்து பார்ப்பதையும் நிறுத்திக்கொண்டான். விரைவில் அவனுக்கு ஒருமையின் மீது மிகப்பெரிய ஆர்வம் ஏற்பட்டது மற்றும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் உணர்வை இழந்தான். அந்த அமைதியான ஒற்றுமையில், இந்த வாழ்க்கையில் மோக்ஷம் தொடர்பாக அவன் கற்கவேண்டிய அனைத்தையும் கற்றுக்கொண்டான். அந்த போதனைகள் அனைத்தும் அவனுக்கு ஒரு சீரான முறையில் வந்தன. முதியவரிடம் இருந்து வெளிவந்த அந்த அமைதியான மற்றும் வலுவான சக்தியை கிரகித்துக்கொண்டும், அதனுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டும், பல நாட்களுக்கு அதே இடத்தில் அமர்ந்து இருந்தான். §§

அந்த முதியவருக்கு, அருகில் இருந்த கிராமத்தைச் சேர்ந்த அவரது சீடர்கள் மற்றும் இந்த சிறிய கோயிலில் வழிபடுவதற்காக வந்த யாத்ரீகர்கள் தேவையான பணிவிடைகளை செய்தார்கள். தனது சிஷ்யன் அனுபவித்துக்கொண்டு இருக்கும் வலுவான அனுபவங்களுக்கு குருவின் பாதுகாப்பு இருப்பதை தொலைவில் இருந்து அறிந்திருந்த அவர்கள், அந்த இளைஞனின் தேவைகளுக்கும் உரிய கவனம் செலுத்தினார்கள். அவர்கள் இந்த மலைப்பகுதிகளில் பல வருடங்களுக்கு ஒன்றாக இருந்தார்கள். பெரும்பாலான நாட்கள் முழுமுதற்பொருளின் மிகப்பெரிய அனுபவமின்மையின் பின்விளைவாக விளங்கும் பேரின்பத்தில் மூழ்கி, ஈடுபட்டு, எதையும் செய்யாமல், எதுவும் பேசாமல் தியானம் செய்வதில் கழிந்தன. §§

இளவயது சாது தனது அமைதியான குருவிடம் இருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவரிடம் தனக்கு இருந்த சில கவலைகளை பற்றி இறுதியாக பேசினான். தான் தென்னிந்தியாவில் இருந்த ஆரம்பகாலத்தில், தான் உணர்ந்த ஒரு ஆன்மீக தேவையைப் பற்றி எடுத்துக்கூறினான். ஒரு நாள் அதிகாலையில் சாது தனது குருவின் அருளை வேண்டிக்கொண்டு, இந்தியாவின் தென்பகுதியில் சூழ்நிலை சரியாக இல்லையென்றும், சைவ சித்தாந்த போதனைகள் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை என்றும், வழிபாட்டை வலியுறுத்தி, இறைவனும் மனிதனும் ஒன்று என்பதையும் உண்மையில் ஒவ்வொரு ஜீவனாக சிவபெருமான் இருக்கிறார் என்பதை உறுதி செய்யும், புனிதமான அத்வைத சைவ சித்தாந்த தத்துவத்தை மீண்டும் நிறுவுவதற்கு ஒருவரின் தேவை இருப்பதையும் விளக்கினான். §§

ஒரு நாள் நீண்ட தியானத்திற்கு பிறகு, பல வருடங்களுக்கு தனது சீடனை பார்த்திராத குரு, தனது கண்களை திறந்து புன்னகைத்தார். அவை சுத்தமாகவும் தெளிவாகவும், விளக்க முடியாத பிரகாசத்துடனும் இருந்தன. பல வருடங்களுக்கு முன்பு, பழனிமலை கோயிலில் முருகப்பெருமானின் கண்களில் கண்ட அதே பிரகாசத்தை அந்த கண்களில் கண்டார். அப்போது அவனுக்கு குரு மறைமுகமாக வழங்கிய உத்தரவு புரிந்தது மற்றும் அது அவனுக்கு வழங்கப்பட்ட உத்தரவாக இருந்தது. அவன் அதற்கு மேல் நேரம் தாழ்த்தவில்லை. அவனது வாழ்க்கையின் அடுத்த கட்டம் தொடங்கியிருந்தது. §§

அவன் தென்னிந்திய மண்ணில் மீண்டும் அடியெடுத்து வைத்த போது, இமயமலையில் இருந்து வந்த சாது, ஒரு முதியவராக, நரைத்த முடியுடைய ரிஷியாக மாறி இருந்தார். யாருக்கும் அவரது பெயர் தெரியவில்லை, அல்லது அவரது பெயர் தெரிந்து இருந்தாலும், மக்கள் அவரை ரிஷி என்றே அழைத்தனர். அவர் இமயமலையில இருந்து வந்த ஒரு சந்நியாசி மற்றும் சுமார் 1790 ஆண்டில் பிறந்து இருக்கவேண்டும் என்று அவரைப்பற்றி வெகுசில தகவல்கள் மட்டுமே தெரிய வந்துள்ளன. அவர் ஒரு முறை தனது பிரபல சீடரான கடைட்சாமியிடம், தான் பல வருடங்கள் இமயமலையில் வாழ்ந்ததாகவும், ஒரு சமயப்பணி மேற்கொள்ள தென்னிந்தியா செல்லுமாறு, அவரை அவரது குரு உத்தரவிட்டதாகவும் கூறினார். தென்னிந்தியா வந்து சேர்ந்ததும், அவர் சுமார் பத்து வருடங்களுக்கு ஒரு பெயர் இல்லாமல் வீடு இல்லாமல், மறைவாக யார் கண்ணிலும் படாமல் கிராமம் கிராமமாக சுற்றிக்கொண்டு இருந்தார். §§

பெங்களூரில் இருந்த ஒரு டீக்கடை §

1850 ஆம் ஆண்டுவாக்கில், அந்த ரிஷி பெங்களூருக்கு அருகில் இருந்த ஒரு சிறிய கிராமத்து மக்களிடம் பரிச்சயம் ஏற்படவேண்டும் என்பதற்காக அங்குள்ள வீடுகளில் அடிக்கடி பிச்சைக்காரனாக வந்து சென்றார். அந்த காலகட்டத்தில், அவருக்கு கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்த நாத பரம்பரையின் சூட்சும ஞானிகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கவேண்டும். அவர்களது வழிமுறைகள் இவரை மிகவும் கவர்ந்தன. அவர்களைப் போல, அவர் நாம் அன்றாடம் காணும் யோகியாக இல்லை. எப்போதும் காலணி ஏதும் அணியாமல், கையில் பாத்திரம், தண்டம், தண்ணீர் குடம் அல்லது தோளில் துண்டு என்று எதுவும் இருக்காது. அவர் தினமும் ஒரு முறை மட்டுமே சாப்பிடுவார். அதுவும் அந்த உணவு ஒரு வீட்டில் இருந்து பெறப்பட்டு, அவரது இரு கரங்களால் பிடித்துக்கொள்ளும் அளவிற்கு மட்டுமே இருக்கும். அவரைப்பற்றி தெரிந்துகொள்ளவும் அவரது ஆசிகளைப் பெறவும் பலர் நெருங்க முயற்சித்தார்கள், ஆனால் ரிஷி ஒரு இடத்தில் இருந்து விரைவில் சென்றுவிடுவார் மற்றும் அவர் தலையீடுகள் அல்லது ஆர்வத்துடன் தம்மை விசாரிக்க வந்தவர்களை அவர் அனுமதிக்கவில்லை. அவர் ஏதாவது ஒரு வீட்டு வாசலில் திடீரென்று தோன்றுவார் மற்றும் அதே வேகத்துடன் மறைந்தும் விடுவார். அவர் சந்தையில் இருந்த கூட்டத்தில் இருந்து விலகிவிடுவார். அவரை ஒருவர் நெருங்குவதற்கு முன்பாக, அவர் தெரு மூலைக்கு சென்று இருப்பார் அல்லது ஒரு கடைக்குள் புகுந்து வெளியேறி இருப்பார். ரிஷி எங்கிருந்து வந்தார், எங்கே தங்குகிறார் போன்ற விவரங்கள், அந்த கிராமத்தில் இருந்த யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவரிடம் இதைப்போன்ற விவரங்களை கேட்க யாருக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. §§

அவர் சராசரி உயரத்துடன், ஒல்லியாக, சுறுசுறுப்பாக எப்போதும் நடந்துகொண்டு இருப்பார் என்று அவரைப் பார்த்தவர்கள் விவரித்தார்கள். அவர் சாலைகளில் சாவதானமாக அல்லது நிதானமாக நடக்கமாட்டார். அவர் முதியவராக இருந்தாலும், எங்கே நடந்து சென்றாலும் தலை நிமிர்ந்து, உறுதியாக வெற்றிநடை போட்டு செல்வார். அவர் ஒரு காவி வேட்டி (இந்து சந்நியாசிகள் அணியும் காவி நிறத்தில் கையால் நூற்க்கப்பட்டு, கையால் நெய்யப்பட்ட ஒரு பருத்தி உடை) மற்றும் கழுத்தில் இரண்டு ருத்திராட்சங்களுடன் இருப்பார். அவரது தாடி வெள்ளை நிறத்திலும், அவரது தலைமுடி முதுமையிலும் கருப்பாகவும் இருந்தன, மற்றும் அது அவரது தலையின் உச்சியில் முடிந்து வைக்கப்பட்டு இருந்தது. கருப்பு நிறத்தில் இரண்டு குளங்களைப் போல, பெரியதாக உருண்டையாக, நிலக்கரிகளைப் போல கருப்பாக மற்றும் அதிக தீவிரமாக இருந்த அவரது கண்கள் மட்டுமே பெரும்பாலானோருக்கு நினைவில் இருந்தன. அவர் அடக்கி வைக்கப்படாத சக்தியை கொண்டிருக்கும் ஒரு ஒளி உடலாக, தனது முகத்துவாரத்தில் இருக்கும் ஒரு நதியைப் போல, ஒரு புயலுக்கு முன்பாக இருக்கும் காற்றைப் போல மிகவும் அமைதியாக இருந்ததாக, அவரைப் பார்த்த மக்கள் தெரிவித்தனர். அவரிடம் இருந்து வெளிவந்த வெப்பம் மற்றும் ஒளி உடல் மிகவும் வலுவாக இருந்ததால், அவருக்கு அருகில் அதிக நேரம் இருப்பது கடினமாக இருந்தது. §§

அந்த கிராமத்தில் இருந்த திறந்தவெளி சந்தைக்கு அருகில், பிரசாத் என்பவன் தனது சொந்த டீக்கடை வைத்திருந்தான். அந்த கடை கற்காரை சுவர்களுடன் உத்தரத்தால் உருவாக்கப்பட்ட கூறையுடன் ஒரு வலுவான கட்டிடமாக இருந்தது. மேலும் அவன் அந்த கடையில் டீ, இனிப்புக்கள் மற்றும் நீர்மோரை விற்று ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தான். பெரும்பாலான இந்திய டீக்கடைகளைப் போல வியாபாரம் சுறுசுறுப்பாக இருந்தது. ஒரு நாள் காலையில் அந்த ரிஷி அவனது கடைக்குள் நுழைந்து, சுவரை ஒட்டி இருந்த ஒரு விசுப்பலகை மீது அமர்ந்துகொண்டார். வயதான சாது வெளியில் இருக்கும் வெப்பத்தின் காரணமாக, குளுமையான சுவரில் சாய்வதை பிரசாத் பார்த்துவிட்டான். அவன் பார்த்துக்கொண்டு இருக்கும் போது, ரிஷி அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்ய தொடங்கிவிட்டார். பிரசாத்திற்கு ஒன்றும் புரியவில்லை, அதனால் சாதுவை அவர் போக்கிற்கு விட்டுவிட்டான். அந்த காலகட்டத்தில் தெய்வீக புருஷர்களுக்கு அதிக மதிப்பு அளிக்கப்பட்டது, அந்த சாதுக்களில் மிகவும் விசித்தரமானவர்களும் பயபக்தி வணங்கப்பட்டார்கள், மற்றும் அவர்களது நடவடிக்கைகள் சராசரி மக்கள் சமூகத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை. §§

கடை மூடவேண்டிய நேரமும் வந்துவிட்டது, ஆனால் ரிஷி அதே இடத்தில் அமர்ந்து இருந்தார். அவர் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அவர் சுவாசிப்பதும் நின்று இருந்தது. பிரசாத் அவர் அருகில் வந்து, “அவர் இறந்துவிட்டாரா?” என்ற வியப்பில் சோதித்துப் பார்த்தான். இல்லை, அவர் உடல் வெதுவெதுப்பாக இருந்தது. அவன் ரிஷி அருகே ஒரு மணி நேரம் உட்கார்ந்துகொண்டு, என்ன செய்வது என்று யோசித்தான். இறுதியில், ரிஷியை கடைக்குள் விட்டுவிட்டு, விருப்பமின்றி கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றான். §§

அடுத்த நாள் காலையில் பிரசாத் கடையை திறந்து பார்த்தபோது, ரிஷியை நேற்று இருந்த அதே சமாதிநிலையில் நிலைத்து இருந்தார். அவர் துளியும் அசையவில்லை. இந்த செய்தி கிராமம் முழுவதும் பரவியது, மற்றும் கிரமாவாசிகள் அவரை காண சுற்றி நின்றுக்கொண்டு, அவரை உற்று கவனித்துக்கொண்டு, அவரைப்பற்றி விவாதித்துக்கொண்டு இருந்தார்கள். தன்னை சுற்றி ஒரு பரபரப்பு இருந்தாலும், ரிஷி அசையாமல் இருந்தார். அவரது முகம் பிரகாசமாக இருந்தது, ஆனால் அது நகராமல் ஒரு முகமடியை போன்று இருந்தது. §§

அன்று இரவும் பிரசாத் ரிஷியை உள்வைத்து பூட்டிச் சென்றான், மற்றும் அடுத்த நாள் காலையில் ரிஷி அதே இடத்தில், நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அசையாமல், எல்லோர் கவனத்தையும் ஈர்த்த வண்ணம் அமர்ந்து இருந்தார். இது பல நாட்களுக்கு, பிறகு பல வாரங்களுக்கு, பிறகு பல மாதங்களுக்கு தொடர்ந்தது. செய்தி மக்களிடையே பரவ ஆரம்பித்தது. இந்த மௌன துறவியை காண நூறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்து மக்கள் வரத் தொடங்கினார்கள். இந்த கதை ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவிய போது, பூதாகரமாக பெரிதாகிக் கொண்டே போனது. இவ்வாறு புராணக்கதைகளில் நடந்துள்ளது மற்றும் நாட்டுப்புறக்கதைகளில் நடந்து இருக்கலாம். ஆனால் இந்த புதிய யுகத்தில், மலைகளில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் அதுவரை நடக்கவில்லை. இருந்தாலும், ரிஷி அந்த கடையில் பல மாதங்களாக தனது தியானத்தை தொடர்ந்துக்கொண்டு இருந்தார். §§

அங்கிருந்த மக்களுக்கு தெரிந்தவரையில் ரிஷி எதையும் சாப்பிடவில்லை, குடிக்கவில்லை மற்றும் சுவாசிக்கவும் இல்லை. அவர் ஒரு மரக்கட்டையைப் போன்று, ஒரு சடலத்தைப் போன்று இருந்தார், ஆனால் அவர் இறக்கவில்லை என்பது அவர்களுக்கு தெரியும். அவர் சமாதி நிலையில், தூல உலகின் மீது ஒரு ஒரு நுண்ணிய பிடியை மட்டும் வைத்துக்கொண்டு, இறைவனிடத்தில் மூழ்கி இருந்தார். §§

இறுதியில் பிரசாத் தனது டீக்கடையை மூடி, கடையில் இருந்த சொரசொரப்பான மேஜைகள் மற்றும் இருக்கைகளை நீக்கிவிட்டான். அவன் அதன் விளைவுகளைப் பற்றி கவலைப்படவில்லை. அவனது பக்தி குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்ற நம்பிக்கையை வழங்கியது. ரிஷியின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து, அவரை தரிசிக்க வரும் மக்கள் கூட்டத்தை நிர்வகிப்பதற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்த பிறகு, அவனது வாழ்க்கையில் அனைத்தும் தொடர்ந்து சீராக இயங்கத் தொடங்கின. §§

image§

இமயமலையில் இருந்து பெங்களூருக்கு மேற்கொள்ளும் 2,200 கிலோமீட்டர் நடைப்பயணம் கடினமாக மட்டும் இல்லாமல், உயிருக்கும் ஆபத்தாக இருக்கக்கூடும். அதுக்கு அதிக அளவிலான உடலுறுதி தேவைப்பட்டது, மற்றும் அதற்கு தேவைப்பட்ட ஒரு எளிமையை வெகுசிலரால் மட்டுமே கடைப்பிடிக்க முடியும். இந்த படத்தில் இமயமலையில் இருந்து வந்த ரிஷி தனது கையில் ஒரு கமண்டலம் மற்றும் தியானம் செய்ய ஒரு யோக தண்டத்தை மட்டுமே சுமந்து செல்கிறார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அவர்கள் விடியலுக்கு முன்பாக வந்து, பொழுது சாயும் வரை இருந்து சென்றனர். சிலர் அங்கிருந்த மர்மத்திற்காக இருந்தார்கள், மற்றும் சிலர் தத்துவப்புலமை பெற்ற நண்பர்களுடன் சேர்ந்து இருப்பதற்காக வந்து இருந்தார்கள். சிலர் மூடநம்பிக்கையுடன் இருந்தார்கள், மற்றும் சிலர் அதை பொய்யென்று நிரூபிக்க வந்து இருந்தார்கள். தினமும் குருவை தரிசிக்காத கிராமவாசிகள், வெகுசிலரே இருந்ததால் மாலை நேரங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தன. இறுதியாக இந்தியாவின் அனைத்து மூலைகளில் இருந்தும் வந்த யாத்ரீகர்கள், நடைப்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு மற்றும் விசேஷமான நிகழ்ச்சியை காண்பதற்கு பெங்களூரில் ஒன்று கூடினர். §§

மக்கள் வெள்ளம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. மக்கள் ரிஷியின் புனிதமான உடலை தொட்டு, அவரது ஆசிகளை பெற விரும்பியதால், அவரை சுற்றி இருக்கும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. அவர்களை சற்று தொலைவில் வைத்திருக்க, பிரசாத் ரிஷியை சுற்றி ஒரு பித்தளை வேலியை அமைத்து வைத்தான். அது எதிர்பார்த்த பலனை வழங்கியது. அவன் அல்லது அவனது மகன்களால் மட்டுமே அந்த வேலியை கடந்து செல்ல முடிந்தது, மற்றும் அந்த இடம் திறந்து இருக்கும் போது அவர்களில் யாராவது ஒருவர் மட்டும் இருப்பதை உறுதி செய்துக்கொண்டார்கள். §§

மக்கள் கொண்டு வந்த படையல்கள் அனைத்தும் அப்போது பணியில் இருந்த “பூசாரியிடம்" வேலிக்கு முன்னிருந்து வழங்கப்பட்டன, மற்றும் அவர் அந்த பொருட்களை ரிஷி அமர்ந்திருந்த இருக்கைக்கு முன்பாக, செப்பு முலாம் பூசப்பட்ட ஒரு தாழ்வான மேஜையில் பரப்பி வைப்பார். மேலும் அந்த வேலிக்குள் சுமார் பன்னிரண்டு பித்தளை எண்ணெய் விளக்குகள், ஒரு வரிசையில் அடுக்கப்பட்டு இருக்கும். மேலும் பெரியது சிறியது என்று வெவ்வேறு வடிவங்களில் இருந்த அந்த விளக்குகள், யாத்ரீகர்கள் நன்கொடையாக வழங்கிய பொருட்கள். அந்த விளக்குகள் நாள் முழுவதும் தொடர்ந்து எரிந்துக்கொண்டு இருந்தன. சில நாட்கள் கழிந்து, அதிகமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றும் வண்ணம், வேலிக்கு முன்பாக அதிக ஆழமில்லாத ஒரு வெண்கல பாத்திரம் வைக்கப்பட்டது. பிரசாத் பாதுகாப்பு காரணத்தினால் எல்லா ஜன்னல்களையும் செங்கல் வைத்து மூடியதால், நெருப்பில் இருந்து வெளிவந்த புகைக்கரி விரைவில் அந்த அறையில் கருப்பு நிறத்தை படியவைத்துவிட்டது. அவன் மீதம் இருந்த கதவை மிகப்பெரிய கதவுக்கீல்கள் மற்றும் தாழ்ப்பால் கட்டைகள் மூலம் வலுப்படுத்தினான், மற்றும் அதன் சாவியை எப்போதும் தன்னுடன் வைத்து இருந்தான். §§

image§

இன்று ஸ்டார்பக்ஸ் இருப்பதைப் போல, 18 ஆம் நூற்றாண்டில் டீக்கடைகள் மக்கள் ஒன்றுகூடும் இடமாக, பயணிகள் ஓய்வெடுத்து புத்துணரச்சி பெறும் இடமாக விளங்கியது. இந்த சித்திரத்தில் ஒரு கடைக்காரன், ஒரு மீட்டர் இடைவெளியில் வைத்திருக்கும் இரு கிண்ணங்களுக்கு இடையே, கொதிக்கும் தேயிலையை (tea) ஒரு சரியான வெப்பதிற்கு கொண்டு வருவதற்கு, அதை மேலும் கீழுமாக சாமர்த்தியமாக ஊற்றி, சூடான தேநீரை தயார் செய்கிறான். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அவனது வியாபாரம் நின்றுவிட்டது, பக்தர்கள் படையல்களாக கொண்டு வந்த சமைத்த உணவு, பழங்கள், பூக்கள், ஊதுபத்திகள் மற்றும் பணத்தில் இருந்து பிரசாத் தனது குடும்பத்தின் தினசரி தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டான். கோயில்களில் செய்வதைப் போல மீதம் இருப்பதை, பக்தர்களுக்கே பிரசாதமாக திருப்பி தந்துவிடுவதால், இரவு நேரத்தில் அதிகமாக எதுவும் மீதம் இருக்கவில்லை. அந்த ரிஷி வியக்க வைக்கும் விதத்தில் அதிகமான செல்வத்தை ஈர்த்தார். அவர்களை நாடி வந்தவர்கள் யாரும் வெருங்கையுடன் திரும்பவில்லை. §§

அந்த இடத்தில் செய்வதற்கும் சுற்றிப்பார்ப்பதற்கும் அதிகம் ஏதும் இல்லை என்பதால், ஒரு நடைமுறை ஒழுங்கு விரைவில் ஏற்பட்டது. மக்கள் ரிஷியை காண்பதற்கு சில மணிநேரம் அல்லது சில நாட்கள் வந்திருந்து, அவரது ஆசிகளை பெற்று சென்றார்கள். அங்கே எந்த பூஜையும் நடக்கவில்லை; யாரும் மந்திரங்கள் சொல்லவில்லை, பாடல்கள் பாடவில்லை மற்றும் யாரும் எதைப்பற்றியும் பேசவில்லை. அந்த அறை எப்போதும் அமைதியாக இருந்தது, விளக்கு எரிந்துக்கொண்டு இருந்தது, ரிஷி எப்போதும் அதே இடத்தில் அமர்ந்து இருந்தார், மற்றும் பல வருடங்களுக்கு தொடர்ந்துக்கொண்டு இருந்தது. §§

தியானத்தில் ஏழு வருடங்கள் §

அந்த பழைய டீக்கடைக்கு செல்வது ஒரு வாழ்நாள் அனுபவமாக இருந்தது என்று பலர் பலமுறை கூறியிருக்கிறார்கள். இந்தியாவின் கண்ணைக் கூசும் வெய்யிலில் இருந்து தப்பி, அந்த இரும்பு வாசலுக்குள் நுழைந்து, அந்த குளுமையான குகைக்குள் செல்லும் போது, இன்னொரு உலகிற்கு செல்வதைப் போன்று இருந்தது. திறந்த கதவில் இருந்து வந்த சூரிய வெளிச்சம், அறையின் ஒரு புறத்தில் வெளிச்சம் அளித்தது. ரிஷி அமர்ந்திருந்த மறுபுறத்தில் எண்ணெய் விளக்குகள் மட்டுமே வெளிச்சம் அளித்தன. §§

நீங்கள் முதலில் ரிஷியை காணும் போது, அவர் ஒரு மாயத்தோற்றமாக, தூரத்தில் இருக்கும் சுவரில் சாய்ந்து இருக்கும் ஒரு ஆவியைப் போன்று காட்சி அளிப்பார். அவரது உருவத்தை கல்லில் செதுக்கினாலும், இந்த நிஜ உருவத்தைப் போலவே இருக்கும். அவர் எண்ணெய் விளக்குகளின் வட்டத்தில் அமர்ந்து இருந்ததால், அவரை எந்த நிழலும் நெருங்கவில்லை. அதனால் அவரது முகம் நெருப்பின் சிவந்த நிறத்தை பிரதிபலித்தன. அவர் முதியவராக மெலிந்து, விலா எலும்புகள் தெரியுமாறு காட்சி அளித்தார், மற்றும் அவரது தலையில் இருந்து பாதம் வரை, பல இடங்களில் விபூதி பூசப்பட்டு இருந்தது. அதை யாரும் பூசுவது இல்லை, ஆனால் அது எப்போதும் அவர் மீது பூசிய நிலையில், அவரது இருக்கை மற்றும் தரையில் கொட்டிக்கொண்டு இருந்தது. அது மட்டுமே அவரிடத்தில் நடந்த தினசரி மாற்றமாக இருந்தது. அவரை பார்க்கும் போது, அவரது அங்கங்களில் ஒரு உற்சாக உணர்வு தெளிவாக காட்சியளிக்கும். அவரது முகம் உள் இழுக்கப்பட்ட ஆனந்தத்தின் ஒரு வெளிப்படையான உணர்வு வெளிப்பாடாக விளங்கி, நெருப்பின் ஒளியுடன் கலந்து பிரகாசமாக பளபளத்தது. §§

முன்னிருந்த மேஜையில் பகட்டாக காட்சி அளித்த சிவப்பு மற்றும் பச்சை நிறத்துணியில் தாராளமாக பரப்பி வைக்கப்பட்டிருந்த வாழைப்பழங்கள் மற்றும் மாம்பழங்கள், அரிசி மற்றும் மாதுளங்கள், மண்பாண்டங்கள், பித்தளை ஜாடிகள், தூபம் மற்றும் நாணயங்களின் குவியல்கள் இருந்தன. அறை முழுவதும் மலர்கள் தூவப்பட்டு இருந்தன. ரிஷியை சுற்றி இருந்த வேலி, விளக்குகள், மேஜை என்று அனைத்தும் பளபளப்பாக புதிதாக இருந்தன, ஆனால் கற்பூரத்தட்டு மட்டும் கருப்பாக வளைந்து இருந்தது. ஒரு விறுவிறுப்பான நாளில், அது செம்பிழம்பாக எரிந்துக்கொண்டு இருக்கும். மண் தரையை, கோரைப்புற்களால் நெயப்பட்ட பாய் மறைந்து இருக்கும், மற்றும் அதன் மீது பக்தர்கள் அமர்ந்து இருப்பார்கள். பருமனாக வெள்ளை உடையில் இருந்த பிரசாத், ஒரு காவலாளியாக நிழலில் நின்று கொண்டு இருந்தான். §§

எல்லாம் மிகவும் அமைதியாக, முற்றிலும் அசையாமல் இருந்தன. அந்த அறை முழுவதிலும் நிரம்பி இருந்த அமைதியின் ஒலியை, வெகுதூரத்தில் ஆயிரம் வீனைகள் வாசிக்கப்படுவதைப் போன்று, ஒரு தெய்வீக ஒலியைப் போன்று, உட்புறமாக விழிப்புடன் இருப்பவர்களால் மட்டுமே கேட்க முடியும். இந்த ஒலியை நுணுக்கமான நரம்பியல் அமைப்பின் செயல்பாடுகளாக சிலர் கருதுகிறா்கள், மற்றும் சிலர் இதை, மனம் வழியாக பயணம் செய்யும் மெய்யுணர்வின் ஒலியாக, பல யுகங்களுக்கு குருவையும் சிஷ்யனையும் இணைக்கும் ஒலியாக கருதுகிறார்கள். இந்த ஒரு ஒலியை அதுவரையில் பல யாத்ரீகர்கள் அதுவரை கேட்டிருக்கவில்லை, மற்றும் அது அவர்களுக்குள் விளக்கமுடியாத மற்றும் பரிச்சயமான ஆனந்தத்தால் நிரப்பியது. §§

ஒளி குறைவாக இருந்த அந்த அறையில், கற்பூரம் மற்றும் மண்ணின் வாசனை மற்றும் மேஜையில் குவித்து வைக்கப்பட்டு இருந்த பழுத்த மாம்பழங்களின் நறுமணம் வீசின. அந்த அறை காலியாக இருந்தாலும், துடிப்புணர்வுடன் இருந்தது. மற்ற பக்தர்களுடன் பாயில் உட்காரும் போது, ரிஷி அந்த அறையில் இருக்கும் தாக்கத்தை திடீரென்று உணரமுடிகிறது. சந்தேகிக்கும் மனது அதிர்ச்சி அடைந்து, “அந்த முதியவர் தூங்கிக்கொண்டு இருக்கிறார். அவ்வளவு தான். அவர் உறக்கத்தில் இருக்கிறார் அல்லது ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார். வேறு எதுவும் விசேஷமாக இல்லை,” என்று ஒரு யதார்த்தமான விளக்கத்தை நாடுகிறது. ஆனால் ஏழு வருடங்களாக ஒருவர் உறங்கிக்கொண்டு இருப்பாரா? அவர் இந்த இடத்தில் ஏழு வருடங்களாக, தனது ஆன்மாவில் பரவசநிலையில் இருந்துக்கொண்டு, இறைவனின் சிந்தனையில் மூழ்கி இருக்கிறார் என்று மக்கள் கூறுகிறார்கள். இதை நம்ப முடிகிறதா? இது கற்பனையை திடுக்கிடச்செய்கிறது. மனம் போராட்டத்தை மேற்கொண்டு குழம்பி இருந்தாலும், ரிஷியின் பிரகாசமான சன்னிதானத்தில் இருந்ததால் மாற்றத்துடன் வெளிவருகிறது. §§

3,000 அடி உயரத்தில் இருந்த மைசூரின் மேட்டுநிலத்தில் அமைந்து இருந்த, இந்த பெங்களூரின் பழைய டீக்கடைக்கு, இந்தியா முழுவதிலும் இருந்து பல யாத்ரீகர்கள் வந்து சேர்ந்தார்கள். அந்த பக்தர்களில் பலர், தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், தங்களது கனவில் ரிஷி தோன்றியதாகவும் அல்லது அவர் தங்களுக்கு காட்சி அளித்ததாகவும் கூறினார்கள். இதைப்போன்று பிராசத்திற்கு ஆயிரம் கதைகள் தெரியும், மற்றும் அவற்றை யார் கேட்க விருப்பபட்டாலும் மகிழ்ச்சியுடன தெரிவிப்பார். அங்கே யாத்ரீகர்கள் பெரும்பாலும் தங்களது பிரச்சனைகளுடன் வந்தனர், மற்றும் அவர்களின் வேண்டுதல்கள் நிராகரிக்கப்படாமல், எப்போதும் தேவையான உதவி வழங்கப்பட்டு வந்தது. யாராலும் தனக்குள் ரிஷியை போன்ற ஒரு ஆளுமையை உணர முடியாது என்பதால், வெகு சிலரே ரிஷி தங்களது வேண்டுதல்களுக்கு தீர்வு அளித்தார் என்று கூறினார்கள். அவர் நேரே வந்து தீர்வு காணவில்லை என்றாலும், அந்த இடத்தில் அவரை மையமாகக் கொண்டு நடந்த சம்பவங்கள் வேறு எங்கும் நடைபெறவில்லை. §§

image§

இமயமலையில் இருந்து வந்த ரிஷி, ஒரு டீக்கடையில் அசையாமல் தியானம் செய்ததால், அவர் மிகவும் பிரபலமாகிவிட்டார். இந்த அதிசயத்தை காண வெகு தொலைவில் இருந்து மக்கள் வரத்தொடங்கியதால், மக்கள் கூட்டம் அவரை தொட்டு அவரை தியானத்தை சீர்குலைக்காமல் இருக்க, அவரை சுற்றி ஒரு பித்தளை வேலி அமைக்கப்பட்டது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ரிஷிக்கு அருகாமையில் இருக்கும் போது சில யாத்ரீகர்களின் மனம் மிகவும் தெளிவாக, மிகவும் அமைதியாகவும் இருந்ததால், பெரும்பாலான தீர்வுகள் தானாக வெளிப்படத்தொடங்குகிறது. பல வருடங்களுக்கு தீர்வு காணப்படாத சிக்கல்கள், அவருக்கு முன்பாக சில நிமிடங்களில் முடிவுக்கு வந்தன. அந்த பதில்கள் யாத்ரீகர்கள் உள்ளத்தில் இருந்து வந்தன. ஆனால் சிலருக்கு தீர்வுகள் உடனே வராமல், ரிஷியின் சன்னிதானத்தில் இருந்து கிளம்பிய பிறகு வரக்கூடும். சிலருக்கு பல நாட்கள் கழித்து வரக்கூடும். ஒரு யாத்ரீகன் குருவின் முன்பாக உட்கார்ந்து பிரார்த்தனை செய்வான் அல்லது தனது வாழ்க்கையை பற்றி நினைப்பான் மற்றும் அதன் பிறகு கிளம்பிவிடுவான். சந்தேகம் அல்லது பிரச்சனை அல்லது தேவை எதுவாக இருந்தாலும், தெருவில் நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதியை தற்செயலாக கேட்டதன் மூலமாக, பள்ளிக்கு செல்லாத சிறுவன் சந்தோஷமாக பாடும் பாட்டின் மூலமாக, அல்லது உட்புற ஆகாசத்தில் இருந்து தோன்றும் இயலுணர்வின் மூலமாக என்று தீர்வு மிகவும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாக விரைவில் வந்துசேர்ந்தது. ரிஷிக்கு அருகாமையில் உட்காருவதால் மனம் அதிக ஆழமாக திறக்கப்பட்டு, எல்லாம் தானாகவே தன்னை சரி செய்துக்கொண்டன. அது ஒரு தீர்வாக மட்டும் இல்லாமல், ரிஷியை போன்று, தென்பட்டு ஆனால் தென்படாமல், பேசப்பட்டு ஆனால் பேசப்படாமல், சுற்றிவளைந்து நேரடியாக மனதை வந்தடைந்து, தாக்கம் ஏற்படுத்திய விதம், அது எங்கிருந்து வந்தது என்பதை தெரிவித்தது. எப்போதும் தீர்வு எந்த சந்தேகத்திற்கும் இடம் அளிக்காமல், வியக்கவைக்கும் ஆற்றலுடன், தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தன. அன்றாட வாழ்க்கையில் இருக்கும் சிந்தனை சக்திகள் காலப்போக்கில் மங்கிவிடுவதைப் போல, அந்த சக்தி மங்காமல், உறுதியாகவும் தெளிவாகவும் வளர்ச்சி பெற்றன. §§

இதில்லாமல், ஒரு யாத்ரீகர் மௌனமாக ரிஷியின் முன்பாக வைத்த பிரச்சனைகளுக்கான தீர்வு, சில சமயங்களில் மெல்லிய காற்று வழியாக, ஒரு குறிப்பு வடிவில் வந்தது. அந்த குறிப்புக்கள் ஒரு சிறிய காகிதத்தில் எழுதப்பட்டு, அதே அறையில் தோன்றின. அந்த குறிப்பு எங்கிருந்து தோன்றியது என்று தேடும் போது, அது தரையில் வந்து விழும் போது ஏற்படும் ஒரு சலசலப்பை மட்டுமே கேட்கமுடிந்தது. இந்த குறிப்புக்கள் எப்போதும் தனிப்பட்ட முறையில், ஒரு தனிநபரை குறிப்பிடும் வண்ணம் இருந்ததில்லை, மற்றும் அவை கேள்விகளுக்கு நேரடியாக பதிலும் அளிக்கவில்லை. ஆனால் அவை அந்த பிரச்சனையைப் பற்றி பொதுவாக பேசி, அந்த பிரச்சனையை பழங்காலத்தில் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் வழக்கமாக விளக்கியது. §§

ஒரு தாய் தனது மகளின் திருமணத்தைப் பற்றி கவலைப்படுகிறாள் என்றால், திருமணங்கள் பற்றி வேதங்களின் கண்ணோட்டம் என்ன, பழங்காலத்து மக்கள் ஒரு குடும்பத்தில் எதை எதிர்பார்த்தார்கள், ஒரு ஆண் எதற்கு திருமணம் செய்து கொள்கிறான், ஒரு பெண் எதற்கு திருமணம் செய்து கொள்கிறாள், அந்த தேர்வு சரியானதா என்று எப்படி முடிவு செய்வது போன்ற தகவல்களை அந்த குறிப்பு விளக்கக்கூடும். அந்த குறிப்பு சுருக்கமாக இருந்தாலும், என்ன தேவைப்பட்டது மற்றும் எதற்காக தேவைப்பட்டது என்பதை தெரிவிக்க, அந்த குறிப்பு போதுமானதாக இருந்தது. அவை அன்றாட பிரச்சனைகளை பற்றி பேசியதால், அதன் தகவல் எப்போதும் குறிப்பிடும் படியாக இருந்ததில்லை. இதைப்போன்ற விளக்கங்களை எந்த ஒரு இந்து சாஸ்திரத்திலும் பார்க்க முடியும். அந்த குறிப்புகள் எப்போதாவது உபநிடதங்கள் போன்ற சாஸ்திரங்களின் குறிப்புடன் இருக்கும். ஆனால் அவை எழுதப்பட்டு இருந்த விதம், அந்த தகவலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் முறை, அதை பெற்றவர் மனதில் ஒரு குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த குறிப்புகள் பெரும்பாலும் கன்னட மொழியில் இருந்தாலும் தமிழ், ஹிந்தி, சமஸ்கிருதம் மற்றும் ஒரு சமயம் ஜெர்மன் மொழியும் பயன்படுத்தப்பட்டது.§§

தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்து இருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த, ஒரு வியாபாரி தனது மனைவியின் மரணத்திற்கு பிறகு, தனது தொழில் வாழ்க்கையை முடித்துக்கொண்டு, சொத்துக்களை தனது மகனிடம் ஒப்படைத்துவிட்டு, எந்த திட்டமும் இல்லாமல், எந்த பிரச்சனையும் இல்லாமல், ரிஷியை தரிசிக்கும் நோக்கத்துடன் வந்து இருந்தார். அவர் அங்கிருக்கும் போது, ஆன்மாவின் லௌகீக உயிர்சக்தி மற்றும் கர்மவினையின் இயல்பான மாதிரிகளாக இருக்கும் பிரம்மச்சரியம், கிரிஹஸ்தம், வானப்பிரஸ்தம் மற்றும் சந்நியாசம் (மாணவன், சம்சாரி, மூத்த ஆலோசகர் மற்றும் துறவி) என்று வாழ்க்கையின் நான்கு நிலைகளை குறிப்பிடும் ஒரு குறிப்பு அவருக்கு கிடைத்தது. அந்த குறிப்பு வழங்கிய நுணுக்கமான வழிகாட்டலை வியாபாரி புரிந்துக்கொண்டு, அருகில் இருக்கும் ஒரு ஆசிரமத்தில் சேவை செய்யும் வாழ்க்கையை தொடங்கி, ரிஷியை அடிக்கடி தரிசித்து வந்தார். §§

image§

சிறப்பான யோக சக்திகளை கொண்ட ஒரு ஆன்மீக மாமனிதரை மக்கள் தரிசிக்க வந்ததால், ஒரு டீக்கடை இறுதியில் ஒரு கோயிலாக மாறியது. அவரது சன்னிதானத்தில், பிரார்த்தனைகளுக்கு அபூர்வமான முறையில் தீர்வு கிடைத்தன. அதில் இருந்து அந்த சக்திகளின் மகிமை தெளிவாக தெரிந்தது. சில சமயங்களில் தீர்வுகள், மேலிருந்து சிறிய காகிதங்களாக கொட்டின. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ரிஷி அந்த டீக்கடைக்கு வந்து ஐந்து வருடங்கள் கழித்து, பெர்லின் பல்கலக்கழக மாணவர்களாக இருந்த நான்கு இளைஞர்கள், அவரை காண கிராமத்திற்கு வந்தனர். அவர்கள் எல்லோரும் சுமார் இருபது வயது நிரம்பியவர்களாக, சம்ஸ்கிருத மாணவர்களாக இருந்தனர். அதில் மூன்று பேர் சம்ஸ்கிருதத்தில், நல்ல தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருந்தனர். அந்த தலைமுறையை சேர்ந்த பெரும்பாலானோரை போல, அவர்கள் வேதங்கள் மற்றும் உபநிடதங்களால் ஈர்க்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அதிக மதிப்பளித்த அத்தகைய உயர்வான போதனைகளை பரப்புவதற்காக, ஜெர்மனியில் ஒரு ஆசிரமத்தையும் நிறுவி இருந்தனர். §§

இந்த நால்வரும் ரிஷியை பற்றி தூரத்தில் இருக்கும் பெர்லினுக்கு வந்த பயணிகளிடம் இருந்து தெரிந்துக்கொண்டு, இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு, அவரை கண்கூடாக காணவேண்டும் என்று முடிவு செய்தனர். அவர்களுக்கு கிடைத்த தகவல்கள் உண்மையாக இருந்தால், உபநிடதங்களில் உள்ள உயர்வான குறிக்கோள்களை, அவர்களுக்கு உணர்த்தி அதில் பயிற்சி வழங்க, அவர்கள் தேடும் வழிகாட்டி இவராகத் தான் இருக்கவேண்டும். அந்த மாணவர்களில் இருவர், நான்கு நபர்களின் பயணச்செலவை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு செல்வந்தர்களாக இருந்ததால், ரிஷியை தங்கள் நாட்டிற்கு அழைத்து சென்று, தங்கள் ஆசிரமத்திற்கு குருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன், அவர்கள் இந்தியா புறப்பட்டார்கள். §§

பம்பாயில் தரை இறங்கிய பிறகு, அவர்கள் தெற்கு நோக்கி பெங்களூர் சென்று, ரிஷி இருந்த கிராமத்திற்கு சென்றார்கள். அவர்களுக்கு இந்திய மொழிகளில் சம்ஸ்கிருதம் மட்டுமே தெரியும் என்பதால், அவர்களுக்கு வழிகாட்டவும் மொழிபெயர்க்கவும், அவர்களுடன் ஒரு பிராமணன் சென்றான். மாணவர்களின் நேர்மை கிராமவாசிகளின் மனதை கவர்ந்தது மற்றும் இந்து சமயம் பற்றி அவர்களுக்கு இருந்த அறிவு எல்லோரையும் வியக்க வைத்தது. அந்த மாணவர்களை உயர்குடிமக்கள் வரவேற்று நல்ல உபசரிப்பை வழங்கி, ராஜ மரியாதை வழங்கி, நால்வரையும் தத்தெடுத்துக்கொண்டார்கள் என்றே சொல்லலாம். பெர்லினில் அவர்களுக்கு இருந்த தோழர்கள் மற்றும் நிறைவேற்றுவதற்காக கிழக்கு நோக்கி பயணம் செய்த குறிக்கோள் பணி மட்டும் இல்லையென்றால், அவர்கள் அதே இடத்தில் தங்கள் வாழ்நாள் முழுவதும் இருந்திருப்பார்கள். §§

அவர்கள் ரிஷியை சந்தித்ததும், அவர்கள் கவனம் முழுவதும் அவர் மீது மட்டுமே இருந்தது. அவர்கள் இரண்டு நாட்களுக்கு அந்த கடையில் அமர்ந்து இருந்தார்கள், மற்றும் பிரசாத்திடம் கதைகளை கேட்க மட்டுமே வெளியே வந்தார்கள். இரண்டு வாரங்கள் கழித்து, தங்களுக்கு ஏற்பட்ட அற்புதமான அனுபவங்கள் பற்றி, அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது சொந்த கதைகளை சொல்ல ஆரம்பித்து விட்டனர். ரிஷி அவர்களது கற்பனையை கடந்தவராக இருந்தார். அவர்கள் தங்கள் ஆசிரியரை கண்டுபிடித்து விட்டோம் என்று மனநிறைவுடன் இருந்தார்கள். ஜெர்மனியில் இந்து சமயத்தின் எதிர்காலம் பிரகாசமாக தெரிந்தது. ரிஷியை தியானத்தில் இருந்து எழுப்ப முடியுமா? அவர் ஏதாவது பேசுவாரா? இந்த நிலையில் அவரால் பிரயாணம் செய்ய முடியுமா? நாம் அவரது தியானத்தில் குறிக்கிடலாமா? அடுத்தது முக்கியமான கேள்வி, அவர் பெர்லின் செல்ல சம்மதிப்பாரா? அவர் மறுத்தால் என்னவாகும்? அதன் பிறகு என்ன நடக்கும்? போன்ற கேள்விகளை பற்றி அவர்கள் உற்சாகத்துடன் விவாதிக்கத் தொடங்கினார்கள். §§

பிரசாத் சொன்னதைப் போல, அவர்களுக்காக பிரத்யேகமாக ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட ஒரு குறிப்பு கிடைத்தது. அந்த குறிப்பு அவர்களை முழுமையாக திருப்திப்படுத்தியது. அதை ஒரு மந்திரமாக, ஒரு பாடலாக தங்களுக்குள் உச்சரித்துக்கொண்டு, பல நாட்களுக்கு உற்சாகத்தில் மிதந்துக்கொண்டு இருந்தனர். அந்த குறிப்பு ரிஷியின் வழக்கமான பாணியில், மறைமுகமாக, கேள்விக்கு சுற்றி வளைத்து பதில் அளித்தாலும், நல்ல தெளிவுடன் இருந்தது: §§

“எல்லா சம்பவங்களும் கர்மவினை மற்றும் வாய்ப்பை பொறுத்து அமையக்கூடும். எதிர்காலத்திற்காக காத்திருக்கும் கர்மவினை, ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கும் கர்மவினை மற்றும் தற்போது இயக்கத்தில் இருக்கும் கர்மவினை என்று ஒரு மனிதனின் கர்மவினை மூன்று வகைப்படும். சாதனா மிகவும் குறைவான மனிதர்களை, ஆயிரம் புனர்ஜெமங்களில் இருந்து விடுதலை அளிக்கிறது.” §§

அத்தகைய வலுவான சிந்தனைகள் தங்கள் தாய்நாட்டில் கேட்கவேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவர்கள் அடுத்த ஒரு வாரத்திற்கு, ரிஷி எப்படி உணவு அருந்தாமல் உயிர் வாழ்ந்தார் என்பதைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் விசாரிக்க முடிவு செய்து, ஒரு நாள் மாலையில் பிரசாத் வீட்டிற்கு சென்றனர். அங்கே அவர்கள் முதல் முறையாக, தங்கள் பிராமண மொழிபெயர்ப்பாளரின் துணையுடன், பிராசத்திடம் தங்கள் கேள்விகளை கேட்டனர். §§

அவர்கள் பிரசாத்திடம், “அவர் எப்போதாவது உணவு சாப்பிடுவாரா? அவரால் உணவு சாப்பிடாமல் எத்தனை நாட்கள் இருக்க முடியும்? ரிஷி என்றாவது ஒரு நாள் ஒரு பெரிய மாளிகைக்கு செல்ல வேண்டும் என்றால், அது சாத்தியமாகுமா?” என்று கேள்வி கேட்டனர். அவர்களின கேள்விகளுக்கு, பிரசாத் முடிந்தவரை சிரித்துக்கொண்டே பதில் அளித்தான். அவர்களது நோக்கம் அவனுக்கு புரியவில்லை. ஆனால் வேலியை கடந்து செல்லலாமா என்று கேட்டபோது தான், அவனுக்கு புரிய வந்தது. அப்போது அவன், “அப்படி செய்ய வேண்டாம். அது ரிஷிக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடும்.” அவர்கள் மீண்டும் கேட்டனர். வேலியை கடந்து யாரையும் அனுமதிப்பது இல்லை என்று தெளிவாக பதில் அளித்தான். மாணவர்கள் இன்னொரு உத்தியை கையாள முயன்றனர். அந்த மாணவர்களில் ஒருவன் ஜெர்மனியில் தங்களுக்கு இருக்கும் ஆசிரமம் பற்றியும், அங்கே ரிஷியை போன்று ஒரு உண்மையான ஆசிரியரின் தேவையை பற்றியும் விவரமாக விளக்கத் தொடங்கினான். §§

அவன் பேசுவதை கேட்ட பிரசாத்திற்கு அச்சம் அதிகரித்துக்கொண்டு இருந்தது. இறுதியாக அந்த மாணவன் திடீரென்று எழுந்து நின்று மரக்கூடைகள், கட்டை வண்டிகள் மற்றும் நீராவிக்கப்பல்களின் துணையுடன் தான் உருவாக்கி இருந்த இரகசிய திட்டத்தை பற்றி உரக்க உரை வழங்கத்தொடங்கியதும், பிரசாத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. அவன் ஐந்து நிமிடங்களுக்கு கராரான குரலில் தனக்குத்தானே பேசிய வார்த்தைகளில் எதுவும் புரியும் படியாக இல்லை. பிராமணன் மொழிப்பெயர்ப்பதை நிறுத்து விட்டு, அத்தகைய விஷயங்களை பற்றி சிந்திப்பதால் ஏற்படும் விளைவுகளை பற்றி விளக்கிக்கொண்டு இருந்தான், மற்றும் மாணவர்கள் அவனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு இருந்தனர். பிரசாத் அறைக்குள் சென்று, கதவை கோபத்துடன் மூடிக்கொண்டான். §§

அதன் பின்னர் மாணவர்கள் அவனை மீண்டும் பார்க்கவில்லை. அடுத்த நாள் மாணவர்கள் தங்களது தியான வகுப்பிற்காக டீக்கடைக்கு சென்ற போது, பிரசாத் அதிக வேதனையுடன், வேஷ்டி அவிழ்ந்து, தலை கலைந்து, சுவரில் சாய்ந்து, கடையின் முன்பக்கத்தில் இருந்த குப்பைக்கு அருகில் அமர்ந்து இருந்தான். கடை இன்னும் பூட்டப்பட்டு இருந்தது. §§

அவர்கள் பிரசாத்திடம் “பிரசாத், என்ன பிரச்சனை? ஏன் இப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார்கள். பிரசாத் பிராமணனிடம் துக்ககரமான செய்தியை சொன்னான். பிராமணனும் தான் கேட்கும் செய்தியை நம்பமுடியாமல், துக்கத்துடன் தன் தலையை ஆட்டினான். அதன் பிறகு அவன், அந்த செய்தியை ஜெர்மன் நாட்டவர்களுக்கு மொழிப்பெயர்த்தான். “நண்பர்களே, ஒரு துக்ககரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு மணி நேரம் முன்பாக, பிரசாத் தனது கடையை திறந்து பார்த்த போது, அங்கே அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது! அறை காலியாக இருந்தது, ரிஷி இரவோடு இரவாக மறைந்துவிட்டார். ரிஷியை ஊரெங்கும் தேடி இருக்கிறார்கள், ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் சென்றுவிட்டார். ஆமாம்! நாம் இதற்கு என்ன பாவம் செய்தோம் என்று தெரியவில்லை. இது மிகவும் துக்ககரமான சம்பவம். ” §§

அதன் பிறகு அவன் வருத்தத்துடன் பிரசாத்திற்கு அருகில் தன் தலையில் கைகளை வைத்து உட்கார்ந்தான். மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள விரும்பினார்கள். “ரிஷி உள்ளே இல்லை என்றால், இந்த கதவு எதற்காக பூட்டி இருக்கிறது?” என்று கேட்டார்கள். பிரசாத்திற்கு இந்த கேள்வி காதில் விழவில்லை. அவர்களில் ஒருவன் எழுந்து நின்று, கதவை வேகமாக அசைத்து, “சாவி எங்கே?” என்று விசாரித்தான். கண் சிமிட்டும் நேரத்தில், அந்த கடையின் திண்ணையில் பத்து பன்னிரண்டு நண்பர்கள் கூடிவிட்டார்கள். அப்போது திறந்தவெளி சந்தை வழியாக சென்றுக்கொண்டு இருந்த ஊர் தலைவர்,“என்ன கூச்சல்? நான் உதவலாமா?” என்று விசாரித்தார். §§

image§

டீக்கடைக்கு வந்தவர்கள் ரிஷியை யோகி, மந்திரவாதி, மதகுரு மற்றும் தெய்வம் என்று பல்வேறு ரூபங்களில் பார்த்தனர். யாத்ரீகர்கள் அவரை எந்த ரூபத்தில் உணர்ந்தாலும், அவர் சாதாரண மெய்யுணர்வை கடந்த பிரசித்தமான மனிதராக இருந்ததால், அவரை பயபக்தி மற்றும் மரியாதையுடன் அணுகினார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ஜெர்மன் நாட்டவர்கள் பிரசாத் பயன்படுத்திய தந்திரங்களை பற்றி விளக்கினார்கள். இதை கேட்டு ஊர் தலைவர் ஆச்சரியம் அடைந்தார். “நீங்கள் அவனை தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறீர்கள். நான் உங்களுக்கு விளக்கம் அளிக்கிறேன். எனது நண்பன் பிரசாத், ஒரு நேர்மையான மனிதன். எனக்கு அவனை பல வருடங்களாக தெரியும். இங்கிருக்கும் அனைவரும் அவனது நேர்மைக்கு உத்தரவாதம் அளிப்பார்கள். அவன் ரிஷி இங்கில்லை சென்றுவிட்டார் என்று சொன்னால், அதில் சந்தேகப்படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்களால் இனிமேல் ரிஷியை மீண்டும் பார்க்க முடியாது என்று தோன்றுகிறது.” §§

ஊர் தலைவர் அளித்த விளக்கம் மாணவர்களுக்கு புரிந்தது மற்றும் அவர்கள் பின்வாங்கினார்கள். தங்களுக்கு கிடைத்த வாய்ப்பு நழுவியதை பற்றி அவர்களுக்கு தாமதமாகத் தான் புரிந்தது. அவர்கள் மூன்று நாட்கள் அந்த கிராமத்தில் சுற்றித்திரிந்தனர், ஆனால் எந்த பயனும் இல்லை. ரிஷி “சென்றுவிட்டார்" மற்றும் அவர்களுக்கு கிடைத்த வரவேற்பும் நின்றுவிட்டது. அவர்கள் இந்தியா வந்ததில் இருந்து, முதல்முறையாக தனியாக உணவு அருந்தினார்கள். அவர்களை யாரும் அழைக்கவில்லை, அவர்களது பிரயாணம் பற்றி விசாரிப்பதைத் தவிர, தெருக்களிலும் அவர்களுடன் யாரும் பேசவில்லை. அவர்கள் நான்காவது நாள் பம்பாய்க்கு புறப்பட்டனர், மற்றும் அவர்கள் அதன் பின்னர் இந்தியாவிற்கு திரும்பி வரவில்லை. §§

மேலும் இரண்டு வெளிநாட்டு பயணிகள் இரண்டு வருடங்கள் கழித்து டீக்கடைக்கு வந்தாலும், யாரும் ரிஷியின் தியானத்தை மீண்டும் குலைக்க முயற்சிக்கவில்லை. இவ்வாறு நாட்கள் நகர்ந்தன, மற்றும் ஒரு நாள் ரிஷி தனது கண்களை திறந்து, தன்னை சுற்றி இருப்பவர்களை ஒருமுறை பார்வையிட்டார். சில நிமிடங்கள் கழித்து, அவர் எழுந்து நின்று, கடையில் இருந்து வெளியேறி சாலையில் நடந்து செல்ல ஆரம்பித்து விட்டார். அவர் தனது உடலில் பிராணசக்தியின் ஓட்டத்தை பராமரிக்க, இத்தனை ஆண்டுகள் மேற்கொண்ட பிராணாயாம பயிற்சியின் மீது அதிக கவனம் செலுத்தி இருந்தார். அதனால் தனது இடத்தில் இருந்து எழுந்து, ஒரே இடத்தில் பலமணி நேரங்கள் உட்கார்ந்து இருந்தவரை போல, மிகவும் குறைவான தடுமாற்றத்துடன் எழுந்து நடக்க முடிந்தது. §§

சிறிய கிராமங்களில் பரவுவதை போல, செய்தி விரைவாக பரவத் தொடங்கியது. எல்லோரும் தங்கள் வயல்கள், கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து ஓடி வந்தனர். எல்லோரும் அவரைக் காண அங்கே திரண்டுவிட்டனர். ரிஷி ஏழு வருடங்களுக்கு தியானம் செய்த பிறகு எழுந்து நடப்பதை பார்த்து கிராமமக்கள் வியந்தனர். அவர்கள் யாரும் தங்கள் மௌன சாதுவை இழக்க விரும்பவில்லை. ரிஷியின் உயிர்சக்தி அவர்களது வாழ்க்கைகளை மாற்றி இருந்தது, அதனால் அவர் தங்களுடன் இருக்க விரும்பினார்கள். அவர் இல்லாத வாழ்க்கையை அவர்களால் கற்பனை செய்ய முடியவில்லை என்பதால், அவர்கள் விரைவாக செயல்பட்டார்கள். §§

அன்று மதியம் கிராமத்து மக்களிடம் இருந்த பொருட்களை ஒன்று சேர்த்து, ஒரு சிறிய குன்றில் இருந்து கிராமத்தை பார்த்த வண்ணம், ஒரு ஓடைக்கு அருகில் இருந்த பச்சை மண்ணில், இரண்டு அறைகளுடன் ஒரு பனை ஓலை ஆசிரமம் உருவாக்கப்பட்டது. அவர்கள் அந்த அறையில் பாத்திரங்கள் மற்றும் உணவு, படுக்கை மற்றும் மேலும் பல பொருட்களை சேமித்து வைத்தனர். இனி ரிஷி விருப்பப்பட்டால், அவர் மீது அன்பும் மரியாதையும் செலுத்துவதால் வளர்ச்சி பெற்ற கிராமத்து மக்களுக்கு அருகாமையில், தனியாக தங்குவதற்கு ஒரு ஆசிரமம் தயாராக இருந்தது. §§

ரிஷி யாருக்கும் தென்படவில்லை, அதனால் அடுத்த நாள் காலையில் ஆண்களும் சிறுவர்களும், கிராமத்தில் பல மைல் தூரத்திற்கு தனித்தனியாக பிரிந்து சென்று தேடத்தொடங்கினர். அந்த தேடலின் போது, மதிய நேரத்தில் அவர் ஒரு மரத்தடியில் உறங்கிக்கொண்டு இருப்பதை கண்டனர். அந்த இடத்திற்கு கிராமத்து பெரியோர்கள் பரிசு பொருட்களுடன் விரைந்து சென்றனர். அவர்கள் அங்கே வந்து, தங்கள் வணக்கத்தை தெரிவிக்க தொடங்கும் போது, அவர் எழுந்து அமர்ந்துகொண்டு, மக்களை வியப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தார். அவர்கள் தங்களது படையல்களை அவரது பாதங்களில் வைத்துவிட்டு, தங்களுடன் இருந்து தங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று எல்லோரும் சேர்ந்தும், தனித்தனியாகவும் கேட்டுக்கொண்டனர். அவரது தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும், அவரது ஆசிரமம் தயாராக இருப்பதாகவும், அது சிறியதாக தோன்றினால், பெரியதாக ஒன்று கட்டித்தருவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார்கள். தங்களது குழந்தைகள் தங்களுக்கு அடிபணிந்து சேவை செய்வதை போல, தாங்களும் அவரிடம் நடந்துக்கொள்ள தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்கள். “நீங்கள் எங்கள் கிராமத்தில் தங்கவேண்டும். தயவு செய்து போகவேண்டாம்,” என்று அவரிடம் கெஞ்சினார்கள். அவர் அசையாமல் அமர்ந்து இருந்தார் மற்றும் தாங்கள் கிளம்பவேண்டிய நேரம் வந்துவிட்டதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். §§

அடுத்த நாள் விடிவதற்கு முன்பாக, ஊர் தலைவரின் வீட்டு வாசலில், “சீக்கிரமாக வாங்க! அங்கே மேலே பாருங்க!” என்று அந்த சிறிய மலையை சுட்டிக்காட்டி சிறுவர்கள் ஏற்படுத்திய கூச்சலால், ஊர் தலைவர் உறக்கத்தில் இருந்து எழுப்பப்பட்டார். கிராமத்து மக்கள் விரும்பியதை போல, ரிஷி தனக்கு முன்பாக இருந்த கிராமத்தை பார்த்துக்கொண்டு, கடல் மட்டத்தில் இருந்து 1,000 மீட்டர்கள் உயரத்தில் இருந்ததால், பல நாட்களுக்கு நீடிக்கும் குளிரை தணிக்க ஒரு சிறிய நெருப்பை உருவாக்கி, அது அணையாமல் கவனித்துக் கொண்டு, தனது ஆசிரமத்தின் வாசலில் அமர்ந்து இருந்தார். ஊர் தலைவரும் மற்றவர்களும் கையில் பழங்கள் மற்றும் பூக்களுடன், ரிஷியை நெருங்கும் போது, ரிஷி சிறிய நெருப்பில் விறகுகளை வைத்துக்கொண்டே, வந்தவர்கள் மீது பார்வையை திருப்பினார். தங்களது படையல்களை அவரது பாதத்தில் வைத்து நமஸ்காரம் செய்தனர். அதன் பிறகு அவர்கள் கைகளை கூப்பிக்கொண்டு, இத்தனை வருடங்கள் சமாதி நிலையில் இருந்துக்கொண்டு, தற்போது நடக்கத்தொடங்கி இருக்கும் இந்த மாமனிதரை, நேற்றைய சம்பவத்திற்கு பிறகு எப்படி அணுகுவது என்று பதட்டத்துடன் நின்று இருந்தனர். ரிஷி எந்த பதிலும் அளிக்கவில்லை, மற்றும் சில தர்ம சங்கடமான தருணங்களுக்கு பிறகு, சூழ்நிலை சாதகமாக இல்லை என்பதை புரிந்துகொண்ட கிராமவாசிகள், தங்கள் வீடுகளுக்கு மௌனமாக திரும்பத் தொடங்கினர். §§

அடுத்த நாள் தைரியமான கிராமவாசிகள் அவரது தரிசனத்தை பெறுவதற்காக விரைவாக வந்துவிட்டனர். ஆனால் அவரது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தன. ரிஷி கிராமவாசிகள் தயாரித்த உணவை முற்றிலுமாக மறுத்துவிட்டார். ஆனால் தான் சமைத்த உணவில் ஒரு கைப்பிடி அளவு மட்டும் சாப்பிட்டு, மீதி இருந்ததை காகங்களுக்கு வழங்கி, வெறும் தரையில் அமர்ந்துகொண்டார். அவரது நடவடிக்கை கிராமவாசிகள் நினைத்ததை போல இல்லாமல், முற்றிலும் விசித்திரமாக இருந்தது. §§

அவரது கண்கள் சிவப்பாக தீவிரமாக இருந்ததால், அவர் சமாதி நிலையில் அமர்ந்து இருந்த போது, அவரை பக்தியுடன் வழிபட்ட கிராமவாசிகளுக்கு, பழைய இணக்கம் ஏற்படவில்லை. இத்தகைய ஒரு வலுவான ஆன்மீக நெருக்கத்தை, அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதால் அச்சத்துடன் இருந்தனர். அதில் சிலர் ரிஷி தங்கள் வாழ்க்கையை விட்டு போனால் போதும் என்றும், அவரிடம் இருந்து எப்படி விடுதலை பெறுவது என்றும் சிந்தித்துக்கொண்டு இருந்தனர். அவர்களது அச்சங்களும் குழப்பங்களும் ரிஷிக்கு தெரியாமல் இல்லை. ஒரு நாள் மதியம், கவலையுடன் இருந்த கிராமவாசிகள் சிலர் அவருடன் பேசக்கிளம்பினர். ஆனால் கூரை வேய்த குடிசை நெருப்பில் சாம்பலாகி தரை மட்டமாகி இருந்து. ரிஷி அந்த இடத்தை விட்டு கிளம்பி இருந்தார். §§

image§

டீக்கடையில் இருந்த அமைதியான காலங்களில், அவரிடம் இருந்த சாந்தத்தில் அவரது உக்கிரமான குணம் தென்படவில்லை, ஆனால் அது பின்னர் வெளிப்பட்டது. அவர் கிராமத்தை விட்டு செல்லவேண்டும் என்று மக்கள் விரும்பினர், ஆனால் அவரை வெளியேற்ற திட்டமிடுவதற்கு முன்பாகவே, அவர் தனது எளிமையான கூரை வேய்த ஆசிரமத்தை எரித்து, அந்த கிராமத்தில் இருந்து நிரந்தரமாக கிளம்பிவிட்டார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

கிராமத்திற்கு வரும் யாத்ரீகர்களின் வழக்கமான வருகை குறையத் தொடங்குவதற்கு ஒரு மாதம் ஆனது. தொடர்ந்து ரிஷியை காண மக்கள் வந்துக்கொண்டு இருந்தார்கள், யாரையும் குறை கூறாமல் ரிஷி எதற்காக கிளம்பி சென்றார் என்று அவர்களிடம் விளக்குவது, கிராமவாசிகளுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் அதைப்பற்றி யாரும் பேசவேண்டாம் என்பதில் அவர்களுக்குள் ஒரு நம்பிக்கை அளவிலான உடன்பாட்டுடன் இருந்தனர். ரிஷி அங்கே இருந்தார் என்பதை சந்தேகப்பேர்வழிகள் நம்பவேண்டும் என்பதற்காக, அந்த டீக்கடை எப்போதும் திறந்து வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் சென்றதை பற்றி யாரும் பேசவில்லை. அது ஒரு இந்து கிராமத்தின் விவேகமான வழக்கத்தில், என்றுமே நடக்காத, பேசப்படாத அல்லது சிந்திக்கப்படாத பின்னடைவுகளில் ஒன்றாக விளங்கியது. அதன் பிறகு இயல்பு வாழ்க்கை தொடர்ந்தது. ஆனால் ரிஷியின் கம்பீரம், ஒரே இடத்தில் ஏழு வருடங்களுக்கு அமர்ந்து இருந்து விநோதமான வழிகளில் பிரார்த்தனைகளுக்கு தீர்வு வழங்கியது மற்றும் ஒரு நாள் சமாதியில் இருந்து எழுந்து கிராமத்தை விட்டு செல்லும் வரை அசையாமல் இருந்ததைப் பற்றி யாத்ரீகர்கள் தெரிந்துகொண்டார்கள். அவர் எங்கே சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் திரும்புவார் என்று யாரும் நினைக்கவில்லை. அதற்கு வாய்ப்பும் குறைவாகவே இருந்தது. §§

ரிஷி கிளம்பி சில மாதங்கள் கழித்து, மிகப்பெரிய உருவத்துடன், இரண்டு மீட்டர் உயரத்தில் ஒரு சாது, கிராமத்திற்கு வந்தடைந்தார். அவர் எல்லோரைக் காட்டிலும் மிகவும் உயரமாக இருந்தார். அவர் கிராமத்திற்கு வந்ததும், முன்பு தனக்கு பரிச்சயமான இடம் போல, நேராக டீக்கடைக்கு சென்று தியானம் செய்ய அமர்ந்துவிட்டார். அதன் பிறகு அவர் பல மணி நேரங்களுக்கு வெளியே வரவில்லை. அதன் பிறகு அவர் ரிஷியை பற்றி விசாரிக்கத் தொடங்கினார். பிரசாத் தனக்கு தெரிந்த விஷயங்களை தெரிவித்தான். §§

அன்று மாலை அவர் பிரசாத்தின் வீட்டில் உணவு அருந்தினார் மற்றும் அதன் பிறகு அவர்கள் இருவரும், இரவு நேரத்தில் நீண்டநேரம் தனியாக பேசியதாக மக்களிடம் ஒரு வதந்தியும் நிலவியது. வழக்கமாக பரிச்சயமில்லாதவர்களிடம் பகிரக்கூடாத விவரங்களை, பிரசாத் பகிர்ந்து இருக்கலாம் என்று ஊர்மக்கள் நம்பினார்கள். §§

அந்த உயரமான சாது ஒரு வாரத்திற்கு கிராமத்தில் தங்கி இருந்து, எல்லோரிடமும் ரிஷியை பற்றி பேசினார். அவர் வயல்களுக்கு சென்று விவசாயிகளிடமும் விசாரித்தார். அவர் குன்றின் மீது ரிஷியின் இடம் வரை நடந்து சென்று, அங்கே எதுவும் இல்லை என்று சொல்லிக்கொண்டு திரும்பிவிட்டார். அவருக்கு ஒரு நாளில் பெரும்பாலான பகுதி இவ்வாறு மக்களுடன் பேசுவதில் கழிந்தது, மற்றும் மீதமிருக்கும் நேரத்தில் அவர் தியானம் செய்துக்கொண்டு இருந்தார். அவர் கிராமத்தில் தங்கியிருந்த பெரும்பாலான நாட்களில், டீக்கடையின் தரையில் உறங்குவார் அல்லது அவர் பிரசாத்தின் வீட்டில் தென்படுவார். அவரது பெயரை விசாரித்தால், தான் ரிஷிகேஷில் இருந்து வந்ததாக கூறுவார். உச்சரிப்பில் இருந்து அவரது தாய்மொழி தெலுங்காக இருக்கவேண்டும் என்று மக்கள் நம்பினார்கள், ஆனால் அவர் கிராமத்தில் கன்னடம், தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் உரையாடிக்கொண்டு இருந்தார். §§

ரிஷி மீண்டும் வடக்கு நோக்கி சென்று இருக்கவேண்டும் என்று பெரும்பாலான கிராமவாசிகள் கருதினாலும், யாருக்கும் உறுதியாக தெரியவில்லை; அதனால் இந்தியாவில் ரிஷி இருக்கும் இடம் தெரியாமல், கிராமத்தை விட்டு சாது கிளம்பிவிட்டார். அதன் பின்னர் ரிஷி இலங்கையில் இருந்ததாக கதைகள் தெரிவிக்கின்றன. மேலும் அங்கே பல அதிசயங்கள் நடந்ததாகவும், திடீரென்று மர்மமான முறையில் குறிப்புக்கள் தோன்றி தரையில் விழுந்ததாகவும் கதைகள் குறிப்பிடுகின்றன. அவருக்கு இந்தியாவை காட்டிலும் இலங்கையில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக கருதப்படுகிறது. §§