குருமார்களின் சரித்திரங்கள்

Page 45: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/45_guru07_03.html§

குருமார்களின் சரித்திரங்கள்§

அத்தியாயம் முப்பது §

ஒரு சூறாவளியின் பாதிப்பை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துதல் §

செப்டெம்பர் 11, 1992, கவாய் தீவின் மீது சூறாவளி இனிகி ஒரு நேரடி தாக்குதலை நிகழ்த்தியது. இந்த நான்காவது பிரிவு சூறாவளியின் கண் பகுதி மடத்தின் மீது மையம் கொண்டு இருந்தது. அந்த புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மடத்திற்கு சொந்தமான மூன்று கட்டிடங்களுடன் 10,000 மரங்கள் மற்றும் செடிகள் அழிந்தன. அந்த பகுதியில் மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகளை மீண்டும் சீரமைக்க பல மாதங்கள் ஆயின. அதனால் அந்த மாதங்கள் மடவாசிகளுக்கு சவால் நிறைந்ததாக இருந்தாலும், குருதேவா அந்த சூழ்நிலையை அமைதியாக எதிர்கொண்டார். இந்த பெருந்துயர சம்பவத்திலும் சிவபெருமான் தொடர்ந்து செயல்புரிவதை அவர் கண்டுகொண்டார். அந்த பகுதியில் இருந்த சாலைகள் அனைத்தும் சேதமடைந்து இருந்ததால், தினமும் சுத்தமான மாட்டுப்பாலுடன், ரொட்டிகளை சுட்டு மடத்திற்கு அருகில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரும் பணியில் அவர் தனது மடவாசிகளை ஈடுபடுத்தினார். அந்த புயல் ஏற்படுத்திய அழிவும் பாதிப்பும் தீவிரமாக இருந்ததாலும், அவர் சிரித்துக்கொண்டு அதை ஒரு நேர்மறை அனுபவமாக மாற்றியது எல்லோரையும் வியக்க வைத்தது. வாழ்க்கையில் எது நடக்கிறது என்பது முக்கியமில்லை, ஆனால் அதற்கு நாம் எவ்வாறு எதிர்செயலாற்றுகிறோம் என்பது தான் முக்கியம் என்கிற குருதேவாவின் போதனைக்கு அது ஒரு முன் உதாரணம், ஒரு நினைவூட்டல் மற்றும் துறவிகள் எல்லோருக்கும் ஒரு பாடமாக விளங்கியது. அவர் பேரழிவை கண்ணியமாக எதிர்கொண்டு, தனது வாழ்நாள் முழுவதும் உழைத்து உருவாக்கிய மடத்தை நிரந்தரமாக பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒரு சாமர்த்தியமான வழியை உருவாக்க, அந்த பேரழிவை பயன்படுத்திக் கொண்டார். §§

அதைப்பற்றிய குறிப்பை இங்கே காணலாம். பல மாதங்கள் கழித்து, மடத்திற்கு காப்பீட்டுத் தொகையாக, மிகவும் குறைவாக $300,000 காசோலை வந்த போது, அவர் அதை பணமாக மாற்ற மறுத்து, அதை தனது அறையில் வைத்துக்கொண்டு, சிறந்த முறையில் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தியானம் செய்ய ஆரம்பித்தார். சில நாட்கள் கழித்து, தான் அந்த தொகையில் செலவு எதுவும் செய்யாமல், அதை முழுமையாக வங்கியில் சேமிக்கப் போவதாகவும், அந்த நிதி ஈட்டும் வட்டியை பயன்படுத்தி சேதமடைந்த மடத்தின் பகுதியை சரி செய்ய பத்து வருடங்கள் தேவைப்படும் என்றும், அந்த பத்து வருடத்தின் முடிவில் வசதிகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு, $300,000 மூல தனமும் தங்களிடம் இருக்கும் என்றும் அவர் தனது துறவிகள் குழுவிடம் கூறினார்.§§

அது ஒரு அருமையான முடிவாக விளங்கி, அறக்கட்டளைகளின் சக்தியை பற்றி துறவிகளுக்கு கற்றுத் தந்தது. ஒரு பிரத்யேக நிதி நிறுவனத்தை உருவாக்க, குருதேவா தனது மூத்த சீடரான பரமாச்சாரியார் போதிநாதாவுடன் சேர்ந்து, 1994 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக இந்து பாரம்பரிய நன்கொடை நிறுவலை (HHE) உருவாக்கினார். 2011 ஆம் ஆண்டு கணக்குப்படி, HHE நிறுவலில் இருக்கும் 80 நிதிகள் மற்றும் $10 மில்லியன் சொத்துக்கள் உலகெங்கும் இருக்கும் அனாதை ஆசிரமங்கள், கோயில்கள், சுவாமிகள், ஆசிரமங்கள் மற்றும் வெளியீடுகளுக்கு உதவி செய்து வருகின்றன. குருதேவா ஒரு இயற்கை பேரிடரை ஒரு சர்வதேச சேவை நிறுவனமாக மாற்றி அமைத்ததன் மூலம், அவர் அந்த பேரிடரை ஒரு உயர்ந்த குறிக்கோளுக்காக உற்சாகமாக மாற்றி அமைக்கும் முறைக்கு உதாரணமாக விளங்கியது. §§

image§

குருதேவா தான் மேற்கொண்ட பணியின் ஒவ்வொரு அம்சத்தையும் அறிந்து, ஒவ்வொரு விவரத்தையும் அறிந்து, ஒவ்வொரு வரவுசெலவு திட்டத்தையும் அங்கீகரித்தார். அவர் தனது சர்வதேச பணி பற்றிய ஒரு கண்ணோட்டத்தை பெறுவதற்கு, பெரும்பாலும் கடற்கரையோர விடுதிகளில், தனது மூத்த துறவிகளுடன் வாரந்தோறும் காரியதரிசிகள் கூட்டங்களை நடத்துவார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

மணிக்கு 194 மைல்கள் வேகத்தில் வீசியதாக கவாய் நாசா நிலையத்தில் பதிவான அந்த சூறாவளி காற்றை எதிர்கொண்ட, வலுவானவை அனைத்தும் தப்பித்ததையும் பலவீனமானவை அனைத்தும் அழிந்ததையும் நான் தெரிந்துகொண்டேன். அந்த சூறாவளி தீவு முழுவதையும் சூழ்ந்து கொண்டது மற்றும் சில பகுதிகள் மட்டுமே பாதிப்பில் இருந்து தப்பியது.§§

இந்த ஆற்றலை எப்படி பயன்படுத்துவது? சூட்சும ஞான கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, வெளிப்புற அல்லது உட்புற, எதிர்மறை அல்லது நேர்மறை, சக்தியை ஞானம் என்கிற மாற்றி வழியாக இயக்கி, ஒரு ஆக்கப்பூர்வ சக்தியாக மாற்றலாம். எங்கள் ஆன்மீக மையத்தில், எங்களது ஆற்றலை இந்துயிசம் டுடே உட்பட புதிய, பெரிய மற்றும் சிறந்த வெளியீடுகளில் இயக்கினோம். §§

இன்னல்கள் வலுவான மனிதனை மேலும் வலுப்படுத்துவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இன்னல்கள் மற்றும் வெற்றிகளை சமமாக எதிர்கொள்வது சிறந்த அணுகுமுறை ஆகும். வாளிகளில் தண்ணீரை கிணற்றில் இருந்து இறைப்பது, நதிக்கு அருகில் இருக்கும் ஒரு கல்லில் துணியை அடித்து துவைப்பது மற்றும் திறந்த வெளியில் சமைப்பதை நாங்கள் ரசித்தோம் என்பதில் சந்தேகமில்லை. இந்த எளிய மகிழ்ச்சிகள் அனைத்தும், யாழ்ப்பாண தீபகற்பத்தில் தொடர்ந்து கிராம வாழ்க்கையை வாழ்ந்து வந்த, எங்கள் சுவாமிகளை நினைவூட்டியது. §§

இந்து அமைப்புக்களுக்கு நன்கொடை நிறுவல்கள் மூலம் நிரந்தரமாக வளரும் வருமானத்தை வழங்க, ஒரு தனிப்பட்ட பொதுமக்கள் சேவை அறக்கட்டளையாக இந்து பாரம்பரிய நன்கொடை நிறுவலை குருதேவா தொடங்கினார். அவருக்கு கிடைத்த ஒரு விசேஷ IRS உத்தரவின் மூலம், அந்த நன்கொடை நிறுவலின் பயனாளிகள் உலகின் எந்த பகுதியிலும் இருக்கலாம் என்று அனுமதியை வழங்கியது. இதன் மூலம் அமெரிக்காவில் இருக்கும் இந்து செல்வந்தர்கள் இந்தியாவில் தங்கள் கிராமத்தில் இருக்கும் கோயிலுக்கு ஆதரவு வழங்கவும் முடியும், அமெரிக்காவில் அதற்கு வரி விலக்கும் பெறமுடியும். அவர் தனது சொந்த அமைப்பின் எதிர்காலத்திற்கு மட்டும் திட்டமிடாமல், உலகில் இருந்த ஒவ்வொரு இந்து அமைப்பிற்கும் திட்டமிட்டார். §§

1994 முதல் 2001 வரை ஒவ்வொரு காலாண்டிலும், நிதி நிலையை கண்காணித்து, தங்கள் பணியை விரிவாக்கம் செய்து அதன் பயன்களை மேம்படுத்த குருதேவா ஆடம்பரமான பிரின்ஸ்வீல் ஹோட்டலில் ஒரு நாள் முழுவதும், தனது HHE நன்கொடை நிறுவலின் சந்நியாசி காரியதரிசிகளை சந்தித்து பேசினார். இறுதியில் HHE அவரது துறவற சமூகம் மற்றும் இறைவன் கோயிலின் ஒரு முக்கிய ஆதரவாக மாறி, தன்னிறைவு அடையவேண்டும் என்கிற குருதேவாவின் கற்பனையை பூர்த்தி செய்தது. §§

பயனாளி நிறுவனத்தின் அனைவரது மற்றும் நன்கொடை நிறுவலை தொடங்கிய அனைவரது காவல் தெய்வங்கள் HHE நிறுவனத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். அது எங்களால் தொடங்கப்படாத ஒரு தெய்வீக படைப்பு ஆகும். ஆனால் அது ஒரு தேவையை பூர்த்தி செய்ய தேவலோகம் மற்றும் சிவலோகத்தின் மூலம் எங்களுக்கு மரபுரிமையாக அளிக்கப்பட்டுள்ளது. இந்து பாரம்பரிய நன்கொடை நிறுவலில் ஒவ்வொரு அமைப்பின் காவல் தெய்வத்திற்கும் ஒரு தனிப்பட்ட ஆர்வம் இருக்கிறது, ஏனென்றால் அந்த அமைப்புக்களின் தலைமை தொடர்ந்து நிதி திரட்டுதல் மற்றும் பணம் பற்றிய அடிப்படை விசாரங்களில் இருக்காமல் தனது குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த, ஒவ்வொரு இந்து அமைப்பிற்கும் நிரந்தர செல்வ வளத்தை உருவாக்குவதில் அந்த தேவர்கள் தங்கள் கவனம் மற்றும் சிந்தனையை செலுத்துகிறார்கள். §§

அச்சகத்தின் வலிமை §

குருதேவாவின் ஆன்மீக பணியின் முக்கிய அம்சமாக தொடக்கத்தில் இருந்தே வெளியீடுகளுக்கு நூலை எழுதும் பணியும், வெளியீடும் இருந்துள்ளன. எழுதப்பட்ட சொல்லின் வலிமை மற்றும் ஒவ்வொரு ஆன்மீக பாரம்பரியமும் புனிதமான நூல்களை தங்களது அடித்தளமாக கொண்டு அமைத்துள்ளன என்பதை அவர் அறிந்து இருந்தார். ஆனால் அவர் 70 களின் இறுதியிலும் 80 களின் தொடக்கத்திலும் விரிவான பயணம் மேற்கொண்டதால், அவருக்கு மிகவும் பிடித்தமான தத்துவ ஞான படைப்புக்களில் இருந்து விலகி இருந்தார். இருந்தாலும் இந்துயிசம் டுடே பத்திரிகையில் அவரது பணி தொடர்ந்தது; மற்றும் இந்த இடைவெளியில் உலகெங்கும் அவர் வழங்கிய அருமையான உபதேசங்கள் எதிர்கால வெளியீட்டிற்கு பாதுகாப்பாக சேமிக்கப்பட்டன. §§

அவர் கடந்தகாலத்தில் செய்ததைப் போல, 1980 களின் மற்றும் 90 களின் இறுதியில் மீண்டும் அதிக வலிமை மற்றும் ஆர்வத்துடன் வெளியீட்டு பணியில் ஈடுபட்டார். ஆனால் தொழில்நுட்பம் அதிக வளர்ச்சி அடைந்து இருந்தது; மற்றும் அவரது குழுவினர் மல்டிமீடியா CDக்கள், ஒலி, காணொளி மற்றும் கணினி வரைகலையை உள்ளடக்கிய அதிநவீன இலக்கமுறை வெளியீட்டில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள அவர் ஊக்குவித்தார். இந்துக்களை இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க, அவர் இந்து பிரஸ் இன்டர்நேஷனல் (HPI) என்ற பெயரில் அவர் தனது தினசரி இந்து செய்தி சேவையை அறிமுகப்படுத்தினார். அதற்கிடையில் அவர் இணையதளம் தூண்டிவிட்ட விரிவான கருத்தியல் மாற்றத்திற்கு பழக்கப்பட்டு இருந்தார். §§

அந்த அற்புதமான தொழில்நுட்பத்தின் துணையுடனும், பிணையத்தில் இருந்த மேக்கின்டோஷ் கணினிகளை பயன்படுத்தியும், குருதேவா புதுமையாக மற்றும் பிரத்யேகமான கூட்டு முயற்சியுடன் தொகுக்கும் பாணியை உருவாக்கினார். அவர் பயணம் செல்லவில்லை என்றால், வருடத்தின் 365 நாட்களில், ஒவ்வொரு நாளும், மதியம் 3 மற்றும் மாலை 7 மணிக்கு இடையே, தொடக்கத்தில் இரு துறவிகளையும், பின்னர் மூன்று துறவிகளையும் சந்தித்து வந்தார். அந்த குழுவினரிடம் கைக்கு அடக்கமான மேக் கணினிகள் பிணையத்தில் இருந்ததால், உதாரணத்திற்கு லவிங் கணேஷா புத்தகத்தில் ஒரு அத்தியாயம் எல்லா கணினித்திரையிலும் ஒரே சமயத்தில் காட்சி அளிக்கும். குழுவில் ஒருவர் அந்த அத்தியாயத்தில் ஏதேனும் மாற்றம் செய்தால், அது உடனடியாக நிகழ்நேரத்தில் எல்லா கணினித்திரைகளிலும் புதுப்பிக்கப்பட்டது. ஒரு காகிதத்தில் அவசரமாக எழுதி, தட்டச்சு செய்து, அதை அடுத்த நாள் மறு ஆய்வு செய்யவேண்டிய வேலை இனி இல்லை. §§

குருதேவா எப்போதும் வழக்கமான பாணியில் ஒரு புத்தகத்தை எழுதவில்லை. அவர் தான் வழங்கிய ஒரு உரையின் எழுத்துப்படியில் வேலை செய்யவில்லை என்றால், அவர் அன்றைய தினம் தியானம் செய்த ஒரு தலைப்புடன் விவாதிக்க வந்து, வழக்கமாக அவர் ஒன்று அல்லது இரண்டு பக்கங்களை அறிவுறுத்த, துறவிகளில் ஒருவர் அதை திரையில் பதிவு செய்து கொள்வார். அவர் அதன் பிறகு அதிக உற்சாகத்துடன் பக்கங்களை திருத்தி அமைக்குமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்வார். “ஓபன் சீசன் (எல்லோரும் தொகுக்க ஆரம்பிக்கலாம்),” என்று அறிவித்து எல்லோரும் ஒன்றாக பணியில் ஈடுபடுவார்கள். இந்த தொகுக்கும் பணியின் போது, முதல் பதிவின் வலிமையை பாதுகாக்க அதிக கவனம் செலுத்தப்பட்டாலும், “உரையாடல் நடையில் இருந்து ஆங்கில மொழிக்கு" மாற்றி அமைக்கும் பணி என்று அவர் இதை அடிக்கடி குறிப்பிடுவார். மாஸ்டர் கோர்ஸ் ட்ரைலாஜியின் (முத்தொகுப்பின் பிரதான பயிற்சி வகுப்பு) பல அத்தியாங்களுக்கு மூலமாக விளங்கிய 50 கள், 60 கள் மற்றும் 70 களில் அவர் வழங்கிய உரைகளை தொகுக்கும் போது, சில நாட்களுக்கு முன்பாக அதில் நடைப்பெற்ற தேவையற்ற தொகுப்பை விலக்கி, முதலில் வழங்கப்பட்ட உபதேசத்திற்கு மாற்றி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. §§

சில வாக்கியங்களை தொகுக்க பல மணி நேரங்கள் தேவைப்பட்டன. ஆனால் குருதேவா எப்போதும் அவசரப்பட்டது இல்லை, மற்றும் அவர் எப்போதும் நேரத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், தரத்திற்கு முக்கியத்துவம் அளித்ததால், ஒரு வாக்கியத்தை அமைக்க மூன்று மணிநேரங்கள் தேவைப்பட்டன. அவர் அதை உருவாக்கி முடித்ததும் மகிழ்ச்சி அடைவார். லிவிங் வித் சிவா (சிவபெருமானுடன் வாழ்தல்) புத்தகத்தில் வரும் 365 சூத்திரங்களை இயற்றும் போது, சராசரியாக ஒவ்வொரு மதியமும் இரண்டு அல்லது மூன்று சூத்திரங்கள் தொகுக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டன. முழு நிறைவாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், இவை ஒரு வாரம் கழித்து மற்றும் மீண்டும் ஒரு மாதம் கழித்து மீண்டும் தொகுக்கப்பட்டன. §§

டான்சிங் வித் சிவா புத்தகத்தை எழுதும் போது, ஒவ்வொரு தலைப்பிலும் இருந்த எண்ணற்ற தகவல்களை ஒரு பக்கத்தில் சுறுக்குவது சவாலாக இருந்தது. இந்த புத்தகத்தின் பக்கங்களை வடிவமைக்கும் போது, அதில் அறிவுறுத்தப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் ஒரே நீளத்தில் இருப்பதற்கு, சுலோகம் மற்றும் பாஷ்யம் சரியாக ஒரே அளவுடன் இருக்க, ஒவ்வொரு சொல்லில் இருக்கும் ஒவ்வொரு எழுத்திலும் மிகவும் நுணுக்கமான மாற்றங்களை செய்ய, குருதேவா தான் சுயமாக அமைத்துக்கொண்ட வழிமுறையை பின்பற்றுவதில் அதிக உற்சாகத்துடன் செயல்பட்டார். §§

image§

குருதேவா தனது மடத்தின் புனிதமான தோட்டங்களில் உலாவுவதை அதிகம் விரும்பினார். இந்த தனிமையான நடைகளுக்கு பெரும்பாலும் ஒரு குறிக்கோள் இருந்தது, மற்றும் அவர் திரும்பும் போது தனது துறவிகளுடன் பகிர்ந்துகொள்ள எதிர்காலம் பற்றிய புதிய உட்பார்வைகள், சிந்தனைகள் மற்றும் திட்டங்களுடன் வருவார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அந்த சவாலுடன் சேர்ந்து தோன்றிய ஒரு பணிப்போக்கில் அந்த குழு உரையை ஆய்வு செய்து, எழுதி சீர் செய்ததும், அது முழுமையாக மற்றும் நிறைவாக தென்பட்ட போது, “இங்கே மேலும் விளக்கம் தேவைப்படுமா?” என்ற கேள்வி கேட்கப்படும். அவர்களுக்கு ஒரு முக்கியமான கூடுதல் தகவல் கிடைத்தால், அதை நுழைப்பது கடினமாக இருந்தாலும், அவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு சொற்களை நன்றாக சுருக்கி, வியக்கும் வகையில் முழுமைக்கு மேலும் முழுமையை சேர்த்தனர். அது சுலபமாக இல்லை என்றாலும், திறமையான சில கவிஞர்களுக்கு மட்டுமே கிடைத்த ஒரு அபூர்வமான தெளிவு மற்றும் வலுவான அர்த்தத்தை, இந்த தேவைகள் வழங்கின. §§

தினசரி நடைபெற்ற இந்த அமர்வுகளுக்காக குருதேவா ஆர்வத்துடன் காத்து இருந்து, தனது சிந்தனை கருத்துக்களை தயார் செய்து ஆன்மீக சக்திகள், தனது தேவர்களின் குழுவிற்கு அழைப்பு விடுப்பார். வலுவான உட்பார்வையுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து இருந்து, எதிர்காலத்திற்கு சீடர்களை அழைத்து செல்லும் படைப்புக்களை உருவாக்குவதற்கு உதவியாக, குருதேவா தனது ஆன்மீக சக்திகள் மற்றும் தனது தேவர்களின் குழுவிற்கு அழைப்பு விடுத்தார். §§

அவர் ஒவ்வொரு சொல், ஒவ்வொரு தொடர் மற்றும் ஒவ்வொரு நிறுத்தக் குறியீட்டையும் கூர்ந்து கவனித்தார்; மற்றும் அவர் முழுமையாக திருப்தி அடைந்தால் மட்டுமே அந்த குழுவால் அடுத்த விவகாரத்திற்கு முன்னேற முடிந்தது. அவர் அந்த அமர்வுகளின் போது அபூர்வமாக தட்டச்சு செய்தாலும், அவர் தட்டச்சில் சுதந்திரமாக குறுக்கிடுவார் அல்லது ஒரு தெளிவை வழங்குவார் அல்லது ஒரு பத்தியில் இருந்த சில வார்த்தைகள் சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பார். இது பெரும்பாலும் எதிர்பார்க்க முடியாத புதிய உட்பார்வைகளுக்கு வழி வகுத்தது. அவ்வப்போது ஒரு விவகாரத்தில் ஆய்வு தேவைப்படும் போது, அவர் மதிய அமர்விற்கு தேவையான தகவலை அடுத்த நாள் சேகரிக்குமாறு சுவாமிகளுக்கு உத்தரவிடுவார். கூகிள் வருவதற்கு முந்தைய காலத்தில், தகவலை திரட்ட மடத்தின் நூலகம் அல்லது விவரமறிந்த இடங்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பவது போன்ற பழைய பாணியை கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. §§

தங்கள் சற்குரு குழுவுடன் சேர்ந்து தொகுக்கும் அமர்வுகளுக்கு, ஒவ்வொரு நாள் மதியமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செல்வதை அக்கம்பக்கத்தில் இருந்த தேவாலய உறுப்பினர்கள் தங்கள் வீட்டு சன்னல்கள் வழியாக பார்க்கும் அளவிற்கு, குருதேவாவின் தொகுக்கும் செய்முறை ஒழுங்குமுறையுடன் இருந்தது. அவர் பல வருடங்களுக்கு, கடற்கரைக்கு அருகில் இருந்த பல்வேறு ஓட்டல் முகப்பு அறைகளில் தனது அமர்வுகளை நடத்தினார். அந்த ஓட்டல் பணியாளர்களுக்கு அவரது வருகை பிடித்து இருந்தது மற்றும் அவர் தங்கள் இடத்திற்கு வருகை தந்தால் தங்களுக்கு அன்றைய மாலைப்பொழுது எப்போதும் நன்றாக இருப்பதை அவர்கள் உணர்ந்துக்கொண்டார்கள். அவர் கூட்டத்தை நடத்த கவாயில் இருந்த மிகவும் அழகான இடத்தை விட்டு, தங்கள் ஓட்டலுக்கு எதற்காக வந்தார் என்பது அவர்களுக்கு புரியவில்லை. அவர் தனது அலுவலகத்தில் தொகுப்புப் பணியை செய்ய முயற்சி செய்தார், ஆனால் மனம் அமைதி இல்லாமல் அலைந்தது, மற்றும் தொடர்ந்து தடங்கல் வந்துகொண்டு இருந்தது. §§

பரபரப்பான உணவகப் பகுதியில் இருக்கும் பல்வேறு ஓசைகள் அவரது பணிக்கு பாதகமாக இல்லையா என்று கேட்கப்பட்டபோது, “ஒருபோதும் இல்லை; ஓசைகள் என்னை அமைதிப்படுத்துகின்றன!” என்று அவர் பதில் அளித்தார். பரபரப்பான ஓசைகள் ஒருவரை எப்படி அமைதிப்படுத்த முடியும் மற்றும் ஆக்கப்பூர்வமான ஆன்மீக படைப்புக்கு எப்படி ஒரு ஓட்டல் முகப்பு அறையின் லௌகீக அதிர்வுகள் ஒரு வினையூக்கியாக இருக்க முடியும் என்று சில துறவிகளை குழப்ப வைத்தது. ஆனால் அது அவர்களின் குருவிற்கு மர்மாக இருக்கவில்லை. மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த யாழ்ப்பாணத்தின் தெருக்கள் வழியாக சென்ற யோக சுவாமி மற்றும் ஆரவாரம் நிறைந்த கோயிலின் முன்புறத்தில் பல வருடங்கள் வாழ்ந்த செல்லப்பசுவாமியை போல, குருதேவா வேறுபாட்டின் விளைவை, உட்புற மற்றும் வெளிப்புற உணர்வுகளின் மோதலை அனுபவித்து இருந்தார், மற்றும் அது அவருக்கு பருமனாக இல்லாமல் நுணுக்கத்தை அறிமுகப்படுத்தி, சுற்றியிருந்த நிழல்கள் காரணமாக வெளிச்சத்தின் மீது வெளிச்சத்தை காண்பித்தன. ஓசைகள் மற்றும் மக்கள் மற்றும் சுழலும் கர்மவினைகள் வழங்கிய பிடிப்பு இல்லாமல், மனதின் ஆன்மீக நிலைகள் ஆதிக்கம் செலுத்தியது மற்றும், அவர் தனது போதனைகளை வெளிக்கொண்டு வரமுடியாத அளவிற்கு அவர் உணர்வுப்பூர்வமாக அதிகமாக ஒதுங்கி, தன்னை அதிகமாக மேம்படுத்தி இருந்தார். §§

இந்த ஓட்டலில் கடலுக்கு அருகே அமர்ந்துகொண்டு, சற்குருவின் பல்வேறு பொறுப்புக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சீடர்களின் மனங்கள் ஏற்படுத்தும் தடைகள் இல்லாமல், சிறிய இடையூறுகளுடன் பல மணிநேரங்கள் அவரால் பணிபுரிய முடிந்தது. மடத்தில் தோன்றும் ஐந்து நிமிட தீங்கற்ற தடையும், அந்த சிக்கலை பற்றிய ஒரு மணிநேர சிந்தனையை தூண்டிவிடும். கடற்கரையோரம் அவர் மேற்கொண்ட பணி முறையாக கவனச்செறிவுடன் சீராக இயங்கியது. மதியம் வரையில் அருந்திய ஒன்று அல்லது இரண்டு குவளை மதுபானம் (wine) ஒரு நிம்மதியான மற்றும் சந்தோஷமான அமர்வை வழங்கியது. அந்த பானம் உணர்வுள்ள மனதை அடக்கி, மெய்ஞ்ஞான மனம் பாய்ந்து செல்ல அனுமதித்து, தனது பணியில் வழிகாட்டியதாக குருதேவா குறிப்பிட்டார். அது ஜப்பான் நாட்டு கவிஞர்களுக்கு ஒரு மொழியியல் அமுதமாக விளங்கிய சாகே மதுபான வகையைப் போன்று இருந்ததாக அவர் குறிப்பிட்டார். §§

image§

குருதேவா சில வருடங்களுக்கு, தனது தினசரி தொகுக்கும் பணியை கடலுக்கு அருகில், விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட ஒரு வின்னேபாகோ ரியல்டா வாகனத்தில் நடத்தினார். ஒரு மேசையில் அமர்ந்து பணிபுரிந்த தொகுக்கும் குழுவிற்கு பின்னால் காட்சியளித்த கடலில், கடல் ஆமைகள் மற்றும் திமிங்கிலங்கள் தென்பட்டன. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

1992 ஆம் ஆண்டு ஹவாய் தீவை இனிகி சூறாவளி தாக்கிய போது, அங்கிருந்த நாற்பத்தி எட்டு முக்கிய ஓட்டல்களில் இரண்டைத் தவிர மற்றவை மூடப்பட்டதால், குருதேவா தனது தொகுக்கும் குழுவுடன் கலிபோர்னியா பறந்து சென்று, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஓட்டல்களில் இருந்துக்கொண்டு பணிபுரிந்தார். அவர் கவாய் திரும்புவதற்கு முன்பு, ஒரு நாள் பிற்பகல் ஒரு பழைய RV வாகனத்தை வாங்க கிளம்பினார். அவருக்கு ஒரு 1979 வின்னேபாகோ வாகனம் பிடித்து இருந்தது, மற்றும் அதை பிற்பகல் அமர்வுகளுக்கு பயன்படுத்திக்கொள்ள கவாய் தீவிற்கு அனுப்பி வைத்தார். துறவிகள் மூலம் புதுப்பிக்கப்பட்டு, கெலியா கடற்கரைக்கு அருகில் இருபது கஜ தூரத்தில் நிறுத்தப்பட்ட, அந்த வாகனம் பெரும்பாலான நாட்களுக்கு அவரது படைப்பாற்றல் பணிக்கு தலைமையகமாக விளங்கியது. குளிர்கால மாதங்களில், கடல் பாறைகள் மீது திமிங்கிலங்கள் மற்றும் பச்சை நிற கடல் ஆமைகள் மகிழ்ச்சியுடன் விளையாடுவதை அவர் கண்டு ரசித்தார். அவர் டான்சிங் வித் சிவா (சிவபெருமானுடன் திருநடனம்) புத்தகத்தை நிறைவு செய்த அன்று, அந்த நிகழ்வை கொண்டாடுவதை போல, ஒரு மிகப்பெரிய ஆண் திமிங்கலம் கரையில் இருந்து நூறு அடி தூரத்தில் மேலெழும்பி, தனது பன்னிரண்டு அடி நீளமான துடுப்பை தண்ணீரில் இருபத்தி ஏழு முறை வலுவாக அடித்தது. இதை கவனித்த குருதேவா, இந்த புத்தகம் “திமிங்கில சக்தியால்" உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். §§

தொடக்கத்திலேயே கைப்பேசியை பயன்படுத்த ஆரம்பித்த குருதேவா, ஒவ்வொரு தொகுக்கும் அமர்வின் போதும் தனது கைப்பேசியை மேசையில் வைத்து இருப்பார். அவரது சொந்த எண்ணை பல்வேறு நாடுகளில் இருந்த நெருக்கமான சீடர்கள் அறிந்து இருந்தார்கள். அந்த எண்ணை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் விதமாக, விசைப்பலகையில் இருந்த ஆங்கில எழுத்துக்கள் “நியூ டெலி" என்ற சொல்லை குறிப்பிடும் விதமாக அமைந்து இருந்தன. ஒருவரது தந்தை இறந்துவிட்டார், ஒருவர் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மற்றும் அன்று காலை ஒரு குழந்தை பிறந்துள்ளது என்று ஒரு தொலைதூர நாட்டில் இருந்து அழைப்பு வராத நாளில்லை என்று சொல்லலாம். குருதேவா ஒரு அழைப்பிற்கு பதில் சொல்ல, தனது அமர்வை பாதியில் நிறுத்த எப்போதும் தயங்கியது இல்லை. அது ஒரு முக்கியமான அழைப்பாக இருந்தால், அவர் ஓட்டல் தோட்டங்களில் நடந்துக்கொண்டு தனது சீடர்களுக்கு ஆலோசனை வழங்கி சமாதானப்படுத்தினார். அதன் பிறகு அவர் மீண்டும் திரும்பும் போது, திரையில் இருந்த அடுத்த வாக்கியத்தின் அடுத்த சொல்லை தவறாமல் நினைவில் வைத்து இருந்தார். §§

அவர் மற்றவர்களுக்கு அறிவுறுத்தும் போதும், அவர் தானே தட்டச்சு செய்த போதும், அவர் ஒரு உட்புற குரலை கேட்டுக்கொண்டு இருந்ததைப் போலவே தோன்றியது. அந்த எழுச்சிகளின் போது தோன்றிய அருமையான வார்த்தைகளை துறவிகள் பாராட்டிய போது, “எனக்கு உதவியாக மேல் லோகத்தில் நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்,” என்று நகைச்சுவையாக பேசுவார். இருபது ஆண்டு காலமாக, கணினி துணையுடன் அதிக அளவில் ஆன்மீக உட்பார்வையை பரிமாற்றம் செய்த போது அவர் தனது தத்துவ ஞான, கலாச்சார மற்றும் ஆன்மீக மரபை உருவாக்குவதற்கு சாதனா மற்றும் சமயப்பணியின் ஐம்பது ஆண்டுகால பலன்களை முறையாக ஒன்று திரட்டினார்.§§

அவர் எழுதிய புத்தகங்கள் விரிவாக, பல தலைப்புக்களில் அமைந்து இருந்தன, இந்து சமயம் பற்றிய ஒருவரது புரிதலை வலுப்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி, எப்போதும் எளிமையான மற்றும் யதார்த்தமான மரபுத் தொடருடன் அமைந்து இருக்கும். அவரது இறுதி பத்து ஆண்டுகளின் போது, அவர் எழுதிய புத்தகங்களின் மகத்துவத்தை அதிகமான மக்கள் அறிந்து கொண்டதால், அதில் அவர் மேற்கொண்ட முயற்சி புதிய உத்வேகத்தை பெற்றது. அவரது போதனைகளை பகிர்ந்துக்கொள்ள விரும்பிய எசுப்பானிய மொழி வாசகர்கள், அவரது படைப்புகளை மொழிப்பெயர்ப்பு செய்ய அனுமதி பெற்றனர். ரஷ்யாவில் இருந்த ஒரு குழு மற்றும் இலங்கை (தமிழ்), மும்பை (மராத்தி), கோலாலம்பூர் (பாஷ்ய மலாய்) மற்றும் வேறு பல நாடுகளை சேர்ந்தவர்கள் பதிப்புகளை வெளியீடு செய்தனர். டில்லியில் இருந்த மூன்று பிரபல பதிப்பாளர்களான மோதிலால் பனாரசிதாஸ், முன்ஷிராம் மனோர்லால் மற்றும் அபினவ் ஆகியோர் இந்தியாவில் அவரது புத்தகங்களை மறு பதிப்பீடு செய்ய தங்கள் ஆர்வத்தை தெரிவித்தனர். ஒவ்வொரு நிறுவனத்திற்கும் குறிப்பிட சில புத்தகங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. §§

கலை மீது இருந்த அதீத விருப்பம் §

கருத்துக்களை தெரிவிப்பதிலும் மனித பண்புகளை மேம்படுத்துவதிலும் ஓவியக் கலையின் முக்கியத்துவத்தை குருதேவா அறிந்து இருந்து, இந்து சமயத்தின ஓவியக் கலையை புனிதமானதாகக் கருதினார். அவர் சென்ற பயணங்களின் போது, அங்கீகாரம் கிடைக்காத கலைஞர்கள் தங்கள் குழந்தைகளை பொறியாளர்களாக்க விரும்பியதால், இந்து சமயத்தின் வேறுபல அம்சங்களைப் போன்று, ஓவியக் கலையும் மங்கி வருவதை கவனித்தார். இதன் காரணமாக, அவர் தலைசிறந்த ஒவியர்களை தேடிப்பிடித்து, பாரம்பரிய முறையில் செய்ய முக்கிய பணிகளில் அவர்களை நியமித்து, அவர்கள் வழங்கிய பரிசுக்கு தாராள பண உதவியையும் வழங்கினார். இந்தியா, பாலி மற்றும் வட அமெரிக்காவில் இருந்த ஓவியர்கள் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டனர். அதில் சிலர் ஒற்றை கித்தான் துணியில் பல வருடங்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய கடினமான பணியிலும், வேறு சிலர் இந்து சின்னங்களை படங்கள் மூலம் தெரியப்படுத்தும் நூற்றுக்கணக்கான மிகப்பெரிய ஓவியங்களை வரைவதிலும் ஈடுபட்டு இருந்தனர். §§

குருதேவா தனது கலை ஆர்வத்தை ஓவியத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் சைவ மகான்கள், சிவனின் 108 நடன கரணங்கள் மற்றும் 32,000 பவுண்டு எடையுள்ள நந்தி மற்றும் ஒரு 12 அடி உயர தட்சிணாமூர்த்தியை வடிவமைக்க வெண்கலம் மற்றும் கல் சிற்பிகளை தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார். தங்களது திரமைகளின் மீது ஹவாய் சுவாமி காண்பித்த ஆர்வத்தை கண்டு கலைஞர்கள் வியந்தனர். இந்த வெளியீடுகளை சித்திரங்கள் மூலம் விளக்கம் அளிக்கும் பணியில், பாரம்பரிய ஓவியர்களாக விளங்கிய ஏ. மணிவேலு மற்றும் எஸ். இராஜம் பல வருடங்களுக்கு ஈடுபட்டு இருந்தனர். மெட்ராஸ் நகரத்தில் இருந்த ஒரு சிறிய தனி அறையில் தூசிப்படிந்து வந்த தனது வாழ்நாள் சேகரிப்பை விலை கொடுத்து வாங்கிய போது, “அவர் ஹவாயில் இருந்த தனது ஆசிரமத்திற்கு, நான் வரைந்த 400 ஓவியங்களை எடுத்து சென்ற போது, எனது ஓவியங்களுக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். மிகவும் முக்கியமாக, அவரது கம்பீரமான தோற்றம், என்னைப்போன்ற கலைஞர்களுக்கு பழங்கால ரிஷிகள் மற்றும் சமயத் தலைவர்களை நினைவுப்படுத்துகிறது,” என்று வயதில் மூத்தவராக இருந்த எஸ். இராஜம் குறிப்பிட்டார். §§

ஒரு நவீன சாஸ்திரத்தை எழுதுதல்§

வாழ்க்கையின் எண்ணற்ற சிக்கல்களுக்கு குருதேவாவின் கருத்துக்களை தெரிந்துக்கொள்ள விரும்பிய சீடர்கள், பல வருடங்களாக தொடர்ந்து கேட்டு வந்த கேள்விகளுக்கு, அவர் முழு நிறைவான பதில்களை எழுதி, தனது தொகுக்கும் குழுவுடன் இணைந்து, நந்திநாத சூத்திரங்களை நிறைவு செய்த பிறகு, “உலகில் அதிக சலிப்பை ஏற்படுத்தும் புத்தகமாக அல்லது தூக்கமின்மைக்கு சரியான தீர்வு,” என்று நகைச்சுவை உணர்வுடன் குறிப்பிட்ட சைவ தர்ம சாஸ்திராஸ், தி புக் ஆப் டிஸ்சிபிளின் ஆப் சைவ சித்தாந்த சர்ச் என்ற புத்தகத்திற்கு 1994 ஆம் ஆண்டு முழுவதையும் அர்ப்பணித்தார். §§

அவர் அதன் வெளியீட்டு தேதியை, தனது சமூகத்தை எதிர்காலத்தில் வழிநடத்தி செல்வதற்கு, மூன்று தேவர்கள் குழு எழுதிய வெள்ளை நிற அந்தர்லோக தடித்த புத்தகத்தை, அவர் 1973 ஆம் ஆண்டு மனோ உணர்வு சக்தியால் வாசித்த தி சைவைட் சாஸ்திராஸ் என்ற புத்தகத்தை தேவர்கள் எழுதிய போது, அவர்கள் கடந்தகால கண்ணோட்டத்துடன் கருத்தில் கொண்ட தேதிக்கு இணங்குமாறு கவனமாக பொருத்திக்கொண்டார். அவர்கள் அப்போது தங்களை எதிர்காலத்தில் 1995 ஆம் ஆண்டிற்கு அழைத்து சென்று, குருதேவா மற்றும் அவரது சமூகம் என்ன செய்தது அல்லது அது வரை எந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்பது பற்றிய தங்களது மெய்ஞ்ஞான வரலாற்றை எழுதி வழிகாட்டலை வழங்கி இருந்தனர். குறி சொல்பவர்கள் பேசுவதைப் போல, அவர்கள் எழுதிய புத்தகங்களின் பக்கங்கள் ஒரு பரிந்துரையை மட்டும் வழங்காமல், குருதேவா மற்றும் அவரது துறவிகள் வாழ்க்கையில் என்ன நிகழவிருக்கிறது, அவர்கள் என்ன செய்வார்கள் மற்றும் எப்படி செய்வார்கள் என்பதைப் பற்றிய தகவலுடன் ஒரு பாதையை அமைத்து கொடுத்தார்கள். அவர் சுமார் 25 வருடங்களுக்கு அந்த தெய்வீக முன்னறிவிப்பை பின்பற்றி வந்தார், மற்றும் அது தற்போது வெளியிடப்பட்டு இருந்தது. §§

குருதேவா அந்த புத்தகம் பற்றிய அறிமுக உரையில் தனது கண்ணோட்டத்தை பகிர்ந்தார்:§§

1995 ஆம் ஆண்டின் தொடக்கம், கடந்தகாலம் நிகழ்காலத்தை சந்திக்கும் ஒரு பிரகாசமான காலமாக இருக்கிறது, ஏனென்றால் நான் 1973 ஆம் ஆண்டு முதல் முறையாக வாசித்த தலைசிறந்த அந்தர்லோக கையெழுத்துப் பிரதிகளுடன், எங்களது தற்கால தேவாலய குறிக்கோள்கள், தினசரி பழக்கங்கள் மற்றும் செய்முறைகளின் பற்றிய விவரணமாக இருக்கும் இந்த சைவ தர்ம சாஸ்திரங்களை என்னால் சேர்க்கமுடியும். டான்சிங், லிவிங் மற்றும் மெர்ஜிங் வித் சிவாவின் தொகுப்பாக விளங்கும் தி மாஸ்டர் கோர்ஸ் ட்ரைலாஜி (பிரதான பயிற்சி வகுப்பின் முத்தொகுப்பு) மற்றும் தியானத்தின் மொழியாக இருக்கும் ஷும் மொழியுடன், லெமூரியன் ஸ்குரோல்ஸ் மற்றும் சைவ தர்ம சாஸ்திரங்களின் வழிகாட்டல்கள் மற்றும் உறுதியான விதிகள் மற்றும் அறிவுறுத்தலை எனக்கு பின்வரும் ஆச்சார்யர்கள் பின்பற்றுவதற்கும் நிறைவேற்றுவதற்கும், அவற்றை நான் மரபுரிமை செல்வமாக விட்டு செல்கிறேன். எங்கள் நிகழ்முறை நிறைவடைந்து இருந்தது, தீர்க்கதரிசனம் எங்கள் எதிர்பார்ப்புகளை கடந்து சிறப்பாக வெளிப்பட்டு இருந்தது. நிகழ்காலத்திற்கு தேவைப்படும் வலுவான கடந்தகால தகவலாக விளங்கி, தற்போது எதிர்காலத்திற்கு என்று பாதுகாக்கப்படும், லார்டு சுப்பிரமணியம் சாஸ்திராஸ் (முருகப்பெருமானின் சாஸ்திரங்கள்) வெளிப்பட்டதில் இருந்து மகாதேவர்கள், தேவர்கள் மற்றும் ரிஷிகள் தொடர்ந்து வழங்கிய உதவிக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டு இருக்கிறோம். §§

அமெரிக்க தேவாலய அமைப்பின் அம்சங்களை உள்ளடக்கி, குருதேவா எழுதிய ஏழாவது அல்லது எட்டாவது தேவாலய கையேடாக விளங்கும், சைவ தர்ம சாஸ்திரங்கள், அவரது அமைப்புக்கள் சமூகத்தில் வெற்றிகரமாக செயல்படும் தன்மை மற்றும் நிறுவன அமைப்பின் ஒருமைப்பாட்டை உறுதி செய்ய உருவாக்கப்பட்டவை. அந்த கையேட்டில் அவர் தனது சமயப்பணிகளுக்கு தேவையான விரிவான குடும்ப அமைப்புக்கள் உட்பட, எதிர்காலத்திற்கு மாதிரிகளையும் முடிவு செய்து இருந்தார், மற்றும் அவர் தனது சந்நியாச குழுவில் மூத்த மூன்று சந்நியாசிகளாக இருந்த ஆச்சார்யா போதிநாத வேலன்சுவாமி, அதன் பிறகு ஆச்சார்யா சதாசிவநாத பழனிசுவாமி மற்றும் அதன் பிறகு ஆச்சார்யா சிவநாத சியோன்சுவாமியை தனது வாரிசுகளாக நியமித்தார். §§

image§

குருதேவா பல வருடங்களாக தனது மூத்த ஆச்சார்யாக்களுடன் இணைந்து செயல்பட்டு, தேவாலயத்தின் சர்வதேச பணிக்கு வழிகாட்டினார். அவர் 1995 ஆம் ஆண்டு, தனக்கு பிறகு வாரிசுகளாக வரவிருந்த ஆச்சார்யர்களின் வரிசையை அறிவித்தார்: போதிநாத வேலன்சுவாமி, சதாசிவநாத பழனிசுவாமி மற்றும் சிவநாத சியோன்சுவாமி.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ஆச்சார்யர்களாக இருக்கும் என் வாரிசுகளுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த பணி நிச்சயமாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சந்நியாசத்தின் புனிதமான ஆணைகளை பூர்த்தி செய்ய கடுமையாக உழைத்த இவர்களுக்கு நல்ல பழக்கமாக, அவர்களது சாதனாவாக மற்றும் சிலநேரங்களில் அவர்களின் தவமாக இந்த சைவ தர்ம சாஸ்திராஸ், லார்டு சுப்பிரமணியம் சாஸ்திராஸ் மற்றும் மடவாசி சாஸ்திராஸ் அமைந்து இருக்கும். கடந்தகாலத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலம் அமைவதால், இந்த சாஸ்திரங்களில் இருக்கும் பழங்கால பதிவுகள் புதிய சக்தியை வெளிப்படுத்துகின்றன. §§

சைவ சாஸ்திரங்களில் கணிக்கப்பட்டுள்ளதைப் போல, நாம் தற்போது வாழ்ந்துகொண்டு இருக்கும் வருடமான 1995 ஆம் ஆண்டில், நமது நிகழ்முறை அமைக்கப்பட்டு விட்டது மற்றும் அதை நிரந்தரமாக எதிர்காலத்தில் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக பல தலைமுறைகளுக்கு நிறைவேற்றும் பொருட்டு, தொடர் பாதுகாப்பு வழங்கி தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்று என்னாலும் அந்தர்லோகத்தாலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வலிமை மற்றும் எண்ணிக்கையில் வளர்ந்து வரும் ஒரு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் ஆன்மீக ஆக்கத்திறனுடன் இருக்கும் சிறிய உட்புற குழு மற்றும் பெரிய வெளிப்புற குழுவால் வாழப்பட்ட மற்றும் வாழவேண்டிய வாழ்க்கை பற்றிய விளக்கத்தை இந்த சாஸ்திரங்கள் வழங்குவதால், இது மேலும் பல காலத்திற்கு நிலைத்து இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. §§

ஹவாய் தீவில் ஒரு தென்னிந்திய கோயில் §

1991 ஆம் ஆண்டின் சிவாலய தீபம் ஒரு தீர்க்கதரிசனமாக விளங்கியது. டிசம்பர் மாத நண்பகல் நேரத்தில், மழை பெய்துக்கொண்டு இருந்த வேளையில், அக்னி மண்டபத்தில் துறவிகளும் இருப்பத்தி நான்கு உறுப்பினர்களும் ஒரு ஹோமம் நடத்திக்கொண்டு இருந்தார்கள். அருகில் இருந்த ஒரு நிலத்தில் பாரம்பரிய முறைப்படி, சிவபெருமானை உருகப்படுத்தும் உயரமான ஜவாலைகள் சுதந்திரமாக மற்றும் பாதுகாப்பாக சுழல்வதற்கு, மூங்கில் மற்றும் மற்ற விறகுகளால் அமைக்கப்பட்ட ஒரு மாபெரும் ஹோமகுண்டம் உருவாக்கப்பட்டது. குருதேவா தனது நண்பகல் தொகுக்கும் பணியை முடித்து விட்டு, தனது வின்னேபாகோ ரியால்டாவில் இரவு நேரத்தில் வந்து இறங்கினார். பல நாட்கள் பெய்த மழையால், பூமியில் அதிகம் மழைநீர் ஊறி இருந்ததால், அதனால் மேலும் நீரை உள்வாங்க முடியவில்லை. §§

image§

1990 களில் குருதேவா இந்தியாவிற்கு அடிக்கடி சென்று, தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்த ‘இறைவன்’ கோயிலின் பாகங்களை கண்காணித்து வந்தார். அவர் டிசம்பர் 21, 1990 பெங்களூர் கைலாஷ் ஆசிரமத்தில் நடைபெற்ற ஒரு விமர்சியான விழாவில் ஒரு கல்லை உடைத்து பணிகளை தொடக்கி வைத்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

குருதேவா வாகனத்தில் இருந்து தனது எடுப்பான காவி நிறத்தில் இருந்த, இந்திய குர்த்தாவில் இறங்கி போது, குடைகளை பிடித்துக்கொண்டு இருந்த துறவிகளும் பக்தர்களும், அவரை அன்புடன் வரவேற்றனர். ஆனால் அவர் ஒவ்வொரு வருடமும் செய்ததைப் போல அன்று சடங்குகளில் உட்காராமல், தன்னையே மறந்த நிலையில் மெதுவாக ஹோமகுண்டத்தை சுற்றி வந்து, ஓரிடத்தில் திடீரென்று நின்று, எல்லையற்ற ஆற்றலுடன் இருக்கும் சிவபெருமானை உருவகப்படுத்தும் அக்னியை வழிபட்டு சேற்றில் விழுந்து வணங்கினார். ஒரு சேற்று நிலத்தில் சற்குரு தனது அங்கங்கள் படுமாறு நமஸ்காரம் செய்வது ஒரு அபூர்வமான நிகழ்வாக இருந்தது. எதிர்காலத்தில் அந்த இடத்தில் ‘இறைவன்’ கோயில் தோன்றவிருந்தது என்று அந்த சமயத்தில் யாரும் அறிந்திருக்கவில்லை. மெய்ஞ்ஞான ரீதியாக, குருதேவா அதை அறிந்திருக்க வாய்ப்பு இருந்தாலும், அவர் அதைப்பற்றி எப்போதும் பேசவில்லை. §§

இதைப்போன்ற சம்பவம் மீண்டும் நடந்தது. 1994 ஆம் ஆண்டு, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் எட்மன்டன் நகரத்தில், தொடக்க நிலையில் இருந்த ஒரு விநாயகர் கோயிலின் நிர்வாக குழுவை குருதேவா சந்தித்தார். “ஒரு சிறிய குன்று மற்றும் அதில் ஒரு சிறிய ஓடையுடன், குறைந்தது ஐந்து ஏக்கர் பரப்பளவுள்ள ஒரு நிலத்தை விலைக்கு வாங்குங்கள்,” என்று நான்கு வருடங்களுக்கு முன்னர் அவர் அந்த குழுவிற்கு அறிவுறுத்தி இருந்தார். அவர் அப்போது ஒரு நிலத்தை வாங்கி இருந்தார்கள், மற்றும் குருதேவா அந்த இடத்தில் முதல் முறையாக அடியெடுத்து வைத்துக்கொண்டு இருந்தார். §§

அவர் விநாயகர் தற்காலிகமாக பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு இருந்த ஒரு சிறிய வீட்டிற்குள் நுழையாமல், அவர் அந்த கட்டிடத்தை சுற்றி வந்து, அவரை உபசரித்தவர்கள் வியக்கும் வண்ணம், பாதையில்லாத புதருக்குள் நுழைந்தார். அவரை சிறிய அன்பர்கள் குழு பின்தொடர்ந்து செல்ல, அவர் அடிமரங்கள் மற்றும் முட்புதர்கள் வழியாக தைரியமான நோக்கத்துடன் நடந்து சென்றார். அவர் திடீரென்று ஒரு இடத்தில் நின்றார். அப்போது உபசரிக்க பயன்படுத்திய பூக்களை, அவர் தனது கூப்பிய கைகளில் வைத்துக்கொண்டு பிரார்த்தனை செய்ததை அவர்கள் அதிக ஆர்வத்துடன் கவனித்தார்கள். அவர் தான் நின்ற இடத்தில் பூக்களை வைத்து விட்டு, சற்குரு மரத்தூசி படிந்த தரையில் விழுந்து வணங்கினார். §§

அதன் முக்கியத்துவத்தை அறிந்துகொண்ட கோயில் நிர்வாகிகள், குருதேவா பூக்களை வைத்த பகுதியை ஒரு நில அளவாய்வாளரின் துணையுடன் குறித்துக்கொண்டனர். எதிர்காலத்தில் அந்த புனிதமான இடத்தில், எட்மன்டன் மகாகணபதி ஆலயம் கட்டப்பட்டது. அந்த பச்சை பூமியில் குருதேவா இரண்டு முறை நமஸ்காரம் செய்தார், மற்றும் அந்த இடத்தில் இரண்டு முறை கோயில்கள் எழுப்பப்பட்டன. §§

குருதேவா 1975 மற்றும் 1990 வருடங்களுக்கு இடையே, பூலோகத்தில் ‘இறைவன்’ கோயிலை கட்டுவதற்கு சாலைகளை உருவாக்கி, நிலத்தை சுத்தம் செய்து, அடமானங்களுக்கு வட்டியை செலுத்தி, படிக சுயம்பு லிங்கத்தை விலைக்கு வாங்கி, கட்டிடக்கலை நிறுவனங்களின் உதவியுடன் பெரிய திட்டங்களை தீட்டி கடுமையாக உழைத்து வந்தார். 1982 ஆம் ஆண்டு, குருதேவா புகழ்பெற்ற மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரிக்கு சென்று, அப்போது வளரும் கலைஞராக இருந்த ஶ்ரீ வி. கணபதி ஸ்தாபதியை சந்தித்தார். அந்த கலைஞர், பாரத நாட்டில் தலைசிறந்த கோயில் கட்டிடக்கலைஞராக விரைவில் புகழ்பெற்றார். நாட்டில் பொதுத்துறையில் செய்த சிறந்த சேவையை அங்கீகரிக்கும் வண்ணம், 2009 ஆம் ஆண்டு பலரது கனவாக விளங்கும் பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்த திறமையான கட்டிக்கலை வல்லுநர், தனது மூதாதையர்கள் பாணியில் ‘இறைவனை’ வடிவமைக்க இருந்தார். §§

தங்களது நேர்த்தியான அழகு மற்றும் பிரசித்தமான சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற, தமிழ்நாட்டு சோழ சாம்ராஜ்யத்தின் பழங்கால கோட்டைகளின் பாரம்பரியத்துடன், அது ஒரு கருங்கல் மாளிகையாக இருக்கவிருந்தது. அதன் பெயரும் அந்த யுகத்தின் பெயரைப் போல ஒலிக்கிறது. கடவுளை குறிப்பிடும் இன்னொரு பழங்கால சொல்லாக இருக்கும் ‘இறைவன்’ என்ற சொல், “வழிபடப்படுபவர்” என்று சிவபெருமானை அன்புடன் அழைக்கும் பெயராகவும் விளங்குகிறது. சிவபெருமானின் இந்த ஹவாய் இருப்பிடத்தில், ஒவ்வொரு கல்லும் புனிதமாக இருந்து, இறைவனின் உடலின் ஒவ்வொரு அங்கமும், நமது நவீன யுகத்தில் அழியும் தருவாயில் இருக்கும் ஒரு கலையில் தேர்ச்சிபெற்ற கைவினைஞர்களால் பழமையான முறையில் கைகளால் செதுக்கப்படவிருந்தது. §§

மின்சாரம் அல்லது நீராற்றலால் இயங்கும் கருவிகளின் ஆற்றல்களை பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்ததன் மூலம், குருதேவா இரண்டு விஷயங்களை உறுதி செய்தார்: முதலாவதாக, நவீன இயந்திரங்களை காட்டிலும் கைகளால் செதுக்குவது அதிக செம்மையாகவும் நுணுக்கமாகவும் இருப்பதால், அது மனிதனின் திறமையை சிறப்பான முறையில் பிரதிபலிப்பதாக இருக்கும்; மற்றும் இரண்டாவதாக, ஒரு தேர்ச்சி பெற்ற கைவினைஞரிடம் இருந்து மாணவனுக்கு கற்றுத் தரப்படுவதை போல, தகப்பன் தன் மகனுக்கு கற்றுத்தரும் இந்த கலை, குறைந்தபட்சம் மேலும் ஒரு தலைமுறைக்கு நிலைத்து இருக்கும். §§

இன்றைய காலத்தில் இந்திய கோயில்கள் கற்களை மட்டுமே பயன்படுத்தி அபூர்வமாக கட்டப்படுகின்றன, மற்றும் அதிக செலவழித்து, அதிக நாட்கள் தேவைப்படும் பாரம்பரிய முறையில் கட்டுவது அதை விட அபூர்வமாக இருக்கிறது. நவீன ஒப்பந்தக்காரர்கள் கட்டிட வேலைக்கு கற்காரை மற்றும் செங்கலையும், கற்களை வடிவமைக்க மின்சார சக்தியால் இயங்கும் கருவிகளை பயன்படுத்துகிறார்கள், மற்றும் இதன் தரத்தை செதுக்கும் வேலையுடன் ஒப்பிட முடியாது. இந்தியாவின் பெங்களூரில் 1991 மட்டும் 2017 வருடத்திற்கு இடையில், மூங்கில் கைப்பிடியுடன் இருக்கும் ஒரு சுத்தியல் மற்றும் மென்மையான இரும்பில் கைகளால் உருக்கப்பட்ட உளி என்று இரண்டு எளிமையான செதுக்கும் கருவிகள் மற்றும் கற்கரியின் மூலம் உலோகங்களை உருக்கும் பழமையான உலையை மட்டுமே பயன்படுத்தி, இந்தியாவில் கைகளால் கட்டுப்பட்ட இறுதியான கோயில் இதுவாகத்தான் இருக்கவேண்டும். §§

தினமும் குருதேவா கோயில் தொடர்பான தகவல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்த மாபெரும் பணி அவர்கள் பகிர்ந்துகொண்ட குறிக்கோள்களை எடுத்துரைத்து, அவர்களை ஒன்று சேர்க்கும் என்பதை அறிந்திருந்தது, அதன் படைப்பில் அவர் துறவிகள் மற்றும் தனது சீடர்களையும் ஈடுபடுத்தினார். அவர் அடிக்கடி அதன் முக்கியத்துவத்தை விளக்குவார்:§§

எதிர்காலத்தில் ‘இறைவன்’ கோயில், முற்றிலும் நிறைவடைந்து, சீடர்கள் தங்கள் மையத்தை தெரிந்துக்கொள்ள வருகை தரும் மையமாக இருக்கப் போவதாக எனக்கு தோன்றுகிறது. மக்கள் யோகத்தை பயிற்சி செய்து தங்களுக்குள் ஆழமாக செல்ல வருகை தந்த ரிஷிகேஷ் ஒரு முறையான, தூய்மையான மற்றும் அமைதியான இடமாக இருந்ததைப் போல, நாம் அதை பாதுகாத்து பராமரிப்போம். அதைப்போன்று இன்று பூமியில் ஒரு சில இடங்களே மீதம் உள்ளன. அதில் கவாய் இந்து மடம் ஒன்றாக விளங்குகிறது. எனக்கு ‘இறைவன்’ கோயில் யோகத்தின் கோட்டையாகவும் சிரத்தை, நேர்மை மற்றும் பக்தியுடன் இருப்பவர்களுக்கு ஒரு புண்ணிய தலமாகவும் தென்படுகிறது. இந்துக்களும் இந்துக்கள் அல்லாதவர்களும் ஒன்றாக விருந்தாளிகள் தினத்தன்று, சிற்பக்கலையில் இருக்கும் மிகப்பெரிய கலைத்திறனை ரசிக்க வரும் போது, உலகிற்கு இந்தியாவின் தகவலாக ‘இறைவன்’ விளங்கும் என்று எனக்கு தோன்றுகிறது. நமது பரம்பரை, நமது சாஸ்திரங்கள் மற்றும் நமது மடத்தின் முழுமையாக ‘இறைவன்’ விளங்குவதை நான் காண்கிறேன். இந்த இடத்தில் இறைவன் இருப்பதாலும், இங்கே சொர்க்கம் பூமியை சந்திப்பதாலும், இங்கே இறைவனை ஆவாகனம் செய்யவேண்டிய அவசியமில்லை. §§

image§

‘இறைவன்’ கோயிலின் குடமுழுக்க விழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவாயில் கூடவிருக்கும் மங்களகரமான நாளை ஓவியர் எஸ். இராஜம் சித்தரித்து உள்ளார். விமானங்கள் மீது புனிதமான நீரை ஊற்றும் போது, கைலாச பரம்பரையின் குருமார்கள் சூழ்ந்து இருக்க, குருதேவா தனது ஒளி உலகில் இருந்து ஆசிகளை வழங்குகிறார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அவரது இந்திய சகோதரர்களிடம் இருந்து உதவி பெறுதல் §

இந்தியாவில் ஒரு கருங்கல் கோயிலை கட்டி, அதை ஒவ்வொரு பாகமாக கப்பலில் அனுப்பும் மாபெரும் பணியை செய்ய ஒப்பந்தம் செய்வது என்பது பேச்சுவார்த்தையின் முடிவாக இல்லாமல் தொடக்கமாக இருக்கும் என்று அவர் கருதிய அந்த புண்ணிய பூமியில் 8,000 மைல் தொலைவில் தான் மேற்கொண்ட முயற்சிக்கு யார் உதவியாக இருப்பார் என்று விசாரிக்க ஆரம்பித்தார். இந்த பணிக்கு தேவையான அனுபவம், திறமை மற்றும் அடிமட்ட மக்கள் தொடர்புகள் யாரிடம் இருக்கும்? அவருக்கு திருச்சி சுவாமியை பற்றிய தகவல் கிடைத்தது. அந்த சுவாமி குருதேவாவை சந்திக்க ஒப்புக்கொண்டதோடு, குருதேவாவுடன் 1990 ஆம் ஆண்டு இந்திய இன்னரசர்ச் திட்டத்தில் பயணம் செய்த முப்பது யாத்திரிகர்களும் தனது ஆசிரமத்தில் இரண்டு நாட்கள் தங்குமாறு கேட்டுக்கொண்டார். §§

குருதேவாவை விட இரண்டு வயது இளையவராக, 1929 ஆம் ஆண்டு பிறந்து, பெங்களூரில் வெள்ளை உடையணிந்து வசித்து வந்த திருச்சி சுவாமி, ஒரு அபூர்வமான சூட்சும ஞானியாக இருந்தார். அவரது பெற்றோர்கள் தென் இந்தியாவின் கன்னியாகுமரியில் பயணம் செய்த போது, முன்பின் அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் அம்மன் கோயிலுக்கு அருகில், “அம்மன் மற்றும் முருகப்பெருமானின் அருளால் உங்களுக்கு பிறக்கும் மேன்மை பொருந்திய மகன் மனிதநேயத்திற்கு உபதேசம் வழங்கி, கொடைவள்ளலாக இருப்பார்,” என்று கூறினார். அவர் தீர்க்கதரிசனம் பலித்தது. குருதேவா இலங்கையில் தீட்சை பெற்ற அதே சமயத்தில், இந்த இளம் சாதகர் நேபால் பயணம் செய்து அங்கே தனது இருபது வயதில் தீட்சை பெற்றார். ஶ்ரீ திருச்சி மகாசுவாமிகள் (1929–2005), என்கிற திருச்சி சுவாமி இந்தியாவிற்கு திரும்பி தர்மத்தை பிரச்சாரம் செய்து ஒரு கோயிலை கட்டவேண்டும் என்று அவருக்கு அவரது குரு சிவபுரி பாபா அறிவுறுத்தினார். சுவாமிஜி திரும்புவதற்கு முன்பாக கைலாய மலைக்கு சென்று வந்தார். அப்போது துர்காதேவி, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஒரு காட்சியில் தோன்றி, அவர் தெற்கே கர்நாடகம் செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். §§

குருதேவா சான் பிரான்சிஸ்கோ நகரில் தனது ஆசிரமத்தை தொடங்கி மூன்று வருடங்கள் கழித்து, 1960 ஆம் ஆண்டு, சுவாமிஜி பயணம் செய்த போது அவருக்கு தோன்றிய காட்சி, அவர் பெங்களூருக்கு அருகில் ஒரு ஆசிரமத்தை தொடங்க ஊக்குவித்தது. அந்த ஆன்மீக ஆணைகளின் நிறைவேற்றமாக, குருதேவா பலமுறை தங்கிய சுவாமிஜியின் கைலாச ஆசிரமம் மற்றும் ராஜராஜேஸ்வரி ஆலயம் விளங்கியது. எதிர்காலத்தில் இந்த தலைசிறந்த இரண்டு குருமார்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள், வலுவான உறவுடன் தங்கள் வாழ்வில் ஒன்றாக கலந்து செயல்படவிருந்தார்கள். §§

ஶ்ரீ திருச்சி சுவாமிகளின் வழிகாட்டல் மற்றும் யதார்த்தமான ஈடுபாட்டுடன், அந்த திட்டம் வலுவடைந்து, தடைகள் நீங்கியது மற்றும் ராஜராஜேஸ்வரி கோயிலில் நடைபெற்ற ஒரு ஆடம்பர விழாவில் ‘இறைவன்’ கோயிலின் முதல் கல் செதுக்கப்பட்டது. அத்துடன் குருதேவா கணபதி ஸ்தாபதியுடன் நீண்டகால ஒப்பந்த வேலைகளை நிறைவு செய்வதற்கு, இரண்டு சுவாமிகளை இந்தியாவில் தங்க வைத்து, கவாய் தீவிற்கு பறந்து சென்றார். §§

image§

வாய்லூவா நதிக்கரையில் அமைந்த இருக்கும் ‘இறைவன்’ கோயிலின் தங்க கோபுரங்களை நாடி, எதிர்காலத்தில் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வந்துகொண்டு இருப்பார்கள். மேளதாளங்கள் மற்றும் சங்கொலிகளுடன் துறவிகள் நெருங்கிக்கொண்டு இருக்க, கற்சிலை வடிவில் இருக்கும் 12 அடி உயர தட்சிணாமூர்த்தி அமைதியாக அமர்ந்து இருக்கிறார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அதற்கு முன்னர், இன்னர்சர்ச் யாத்திரிகள் மெட்ராஸ் நகரில் இருந்த போது, குருதேவா ஒரு வாகனத்தில் தனது மூன்று துறவிகளுடன், இந்தியாவின் இன்னொரு தலைசிறந்த மகானிடம் ஆசிகளை பெறுவதற்காக ‘இறைவன்’ கோயிலின் வரைபடத்தை எடுத்து சென்றார். அவர்கள் காஞ்சிபுரம் வந்து சேர்ந்ததும், 97 வயது நிரம்பிய, காஞ்சி காமகோடி பீடத்தின் மூத்த மடாதிபதியாக இருந்த பூஜ்ய ஶ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் தரிசனத்திற்காக நின்று இருந்தவரிசையில் அவர்களும் காத்து இருந்தனர். பக்தர்கள் வரிசையில் நடந்து சென்று, ஒரு எளிமையான வெள்ளை நிற துணி விரித்த கட்டிலில், நிலையில்லாத சுயநினைவுடன் படுத்திருந்த மெலிந்த முனிவரிடம் ஆசிகளை பெற்றனர். அவருக்கு அருகில், தலையை சவரம் செய்து, நரைத்த முடியுடன் இருந்த ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மூத்த சுவாமிகளின் இந்த புனிதமான சந்நியாச வாழ்க்கையில், தீவிரமாக மற்றும் உறுதியாக உதவி செய்து வந்தார். அவருக்கு குருதேவா வந்து இருப்பது தெரிவிக்கப்பட்டதும், உயரமாக காவி உடை அணிந்து இருந்த அமெரிக்கா துறவிக்கு அவர் வணக்கம் தெரிவித்து, கோயில் வரைபடத்தை காண்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவை விரைவில், பக்தர்கள் வரிசை மற்றும் வேதாந்தத்தில் தேர்ச்சி பெற்ற துறவிகளுக்கு மத்தியில் இருந்த ஒரு மேசையில் விரிக்கப்பட்டன. அதன் பிறகு ஜெயேந்திர சரஸ்வதி மூத்த சுவாமியின் காதுகளில், “ஹவாயில் இருந்து சுவாமி வந்து இருக்கிறார்,” என்று முணுமுணுத்தார். §§

திடீரென்று காஞ்சி பெயரிவருக்கு சுயநினைவு திரும்பி, நன்றாக விழித்துக்கொண்டு, தான் படுக்கையில் சாய்ந்து உட்கார உதவி செய்யுமாறு சிப்பந்திகளிடம் கேட்டுக்கொண்டார். அவருடைய பெரிய கருவிழிகள் குருதேவாவை கவனித்தன. சில நொடிகள் கழித்து, அவர் வரைபடங்களை பார்த்து, அவற்றின் மீது தனது கைகளை வைத்து, மீண்டும் கட்டிலில் படுத்து தன் கண்களை மூடிக்கொண்டார். ஜெயேந்திர சரஸ்வதி கோயிலை பற்றி விசாரித்தார். குருதேவாவின் துறவிகளில் ஒருவர் கோயில் பணியைப் பற்றிய விவரத்தை தமிழில் விளக்கிய போது, அவர் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார். ஜெயந்திர சரஸ்வதியும் அந்த வரைபடத்திற்கு தனது ஆசிகளை வழங்கி, அதற்கு முன்பு இரு முறை சந்தித்து இருந்த குருதேவாவுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவர்கள் கல்லில் கட்டப்பட்ட சிறிய அறையை விட்டு வெளியேறி மீண்டும் சாலைக்கு வந்து சேர்ந்ததும், “வந்த வேலை நல்லபடியாக முடிந்தது,” என்று குறிப்பிட்டார். §§

கல்லில் கட்டப்படும் இந்து கோயில் ஒரு விசேஷமான மற்றும் விசித்திரமான முறையில் உருவாக்கப்படவிருந்ததால், பெங்களூர் நகரில் நடந்த விவாதங்கள் ஒரு செதுக்கும் இடத்தை மையமாக கொண்டு அமைந்து இருந்தன. 75 சிற்பிகள் மற்றும் அவர்கள் குடும்பங்கள், அவர்களின் உணவு பொருட்களுக்கு தோட்டங்கள், தண்ணீருக்கு கிணறுகள், கொல்லன் பயன்படுத்தும் உலைகள் மற்றும் செதுக்கும் குடிசைகள் மற்றும் நிர்வாகிகளுக்கு தேவையான வசதிகளுடன் ஒரு முழுமையான கிராமத்தை உருவாக்க வேண்டியிருந்தது. இவை அனைத்தும் சாத்தியமா? §§

அதிஷ்டவசமாக, இந்த பணியின் தேவைகள் பற்றி கைலாச ஆசிரமத்தில் பயிற்சி பெற்று இருந்த, ஆதி சுஞ்சனகிரி மகா சமஸ்தானம் மடத்தின் ஶ்ரீ பாலகங்காதரநாத சுவாமிஜிக்கு தெரியவந்ததும், அவர் இந்த பணிக்காக இலவசமாக பதினொரு ஏக்கர் வறண்ட நிலத்தை வழங்கினார். அது ஒரு மிகப்பெரிய வரமாக அமைந்து, சிற்பிகள் தங்கள் வேலைகளை பல வருடங்களுக்கு தொடர்ந்து செய்யவிருந்த பணியிடம், சில மாதங்களில் நிறைவடைந்தது. இந்திய சுவாமிகள் குருதேவாவின் பிரதிநிதிகளாக இருந்துக்கொண்டு கட்டுமான பணியை கண்காணிப்பதற்கு வசதியாக, பெங்களூருக்கு அருகில் செதுக்கும் இடம் அமைக்கப்பட்டது. அவர்கள் அவரது பணியை கவனித்துக்கொண்டு, தடையில்லாத அன்பு மற்றும் எல்லையற்ற உதவியின் மூலம் அவரை கவனித்துக்கொண்டார்கள். ‘இறைவன்’ கோயில் உருவாவதற்கு அவர்கள் முக்கிய காரணமாக இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. §§

ஐந்து புனித செங்கற்கள் §

மேற்கு நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் பரிசாக ‘இறைவன்’ கோயில் இருக்கும் குருதேவா அறிவித்தார். அவர் 1995 ஆம் ஆண்டை ‘இறைவன்’ கோயிலுக்கு அர்பணித்தார். இந்த மாபெரும் முயற்சிக்கு தேவையான சக்திகளை ஒன்று திரட்டுவதற்காக, மற்ற மடங்களில் இருந்து துறவிகளை கவாய் தீவிற்கு அழைத்து வந்து, நாற்பது வருட காலத்தில் முதல் முறையாக தனது துறவிகள் சமூகம் முழுவதையும் ஒன்று திரட்டினார். §§

கோயில் அடித்தளத்தை புனிதப்படுத்தும் அஸ்திவார பூஜை மற்றும் ‘இறைவன்’ கோயில் கட்டிடத்தை தொடங்குவதை குறிப்பிடும் விதமாக, இரண்டு நாட்கள் விரிவாக நடைபெறும் பஞ்ச சீலான்யாச பூஜைக்காக துறவிகள் தங்கள் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டனர். அந்த அஸ்திவார பரப்பிற்குள் தோண்டப்பட்ட குழியில் நவ இரத்தினங்கள் மற்றும் நவ தானியங்கள் மற்றும் வேறு சில பொருட்களுடன், சந்தன குங்குமமிட்ட ஐந்து செங்கற்களை ஊன்றி, கட்டிட வேலைகளை தொடங்கும் விழாவை காண உலகெங்கிலும் இருந்து சுமார் 200 அன்பர்கள் வந்து இருந்தார்கள். வெதுவெதுப்பான ஹவாய் தீவின் காற்று, அங்கே கூடியிருந்த விசுவாசிகளை மென்மையாக தழுவியது. கற்பூரம், தூபம் மற்றும் பூக்கங்களின் நறுமணங்கள் மட்டுமில்லாமல், மணி ஓசைகள் மற்றும் விபூதி பூசிய பூசாரிகள் உரக்க உச்சரித்த சமஸ்கிருத மந்திரங்களும் அவர்கள் புலன்களுடன் பேசின. இந்த பூஜையை பற்றி தேவராஜன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்:§§

image§

மடத்திற்கு ஒரு வட இந்திய நர்மதா லிங்கம் பரிசாக வழங்கப்பட்ட போது, அந்த புனிதமான லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய யாத்திரிகளை குருதேவா வரவேற்றதோடு, தானும் அவ்வப்போது ஓடை தண்ணீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வைத்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

கட்டிட கலைஞராக இருந்த வி. கணபதி ஸ்தாபதியுடன், இந்து சமய சடங்குகளை முன்னின்று நடத்திய, மதிப்பிற்குரிய சிவஶ்ரீ சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் உட்பட, ஹோமத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து பல புரோகிதர்கள் வந்து இருந்தார்கள். ‘இறைவன்’ கோயில் கருவறையின் வடகிழக்கு மூலையில், நான்கு அடி அகலம் மற்றும் நான்கு அடி நீளத்துடன் சதுர வடிவில் ஒரு குழி தோண்டப்பட்டது. பொழுது விடிவதற்கு முன்பாக வானத்தில் இருள் சூழ்ந்து இருந்த நேரத்தில், தாங்கள் இருந்தது இந்திய நாடா அல்லது ஹவாய் தீவா என்று யாருக்கும் வித்தியாசம் தெரியவில்லை. அந்த மாபெரும் பூஜையின் போது அந்த குழியில் நவ இரத்தினங்கள், தங்கம், வெள்ளி, பல அரிய மூலிகைகள் மற்றும் மற்ற புனிதமான பொருட்களை எனது குருதேவா, இந்து புரோகிதர்கள், கட்டிட வடிவமைப்பாளர் மற்றும் கூடியிருந்த மற்றவர்கள் சமர்பித்துக் கொண்டிருந்தார்கள். துறவிகள் தொடர்ந்து பல தட்டுக்களை கொண்டு வந்து குழியில் வைத்தார்கள். ஒரு சமயத்தில் ஒரு பெரிய பானையில் கொண்டு வந்த விபூதி அந்த குழியில் கொட்டப்பட்டதால், அதன் பிறகு எந்த படையலை சமர்ப்பித்தாலும், அது அந்த குழியில் இருந்து விபூதி மேகமாக மேலெழுந்து, எங்கள் எல்லோரையும் ஆசிர்வதித்து. §§

அமைதியான நிலவொளியில் அமர்ந்து கொண்டு, சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் மற்றும் குருதேவா, அடிக்கடி எரிந்துக்கொண்டு இருந்த கற்பூர சுடருக்கு காற்று வீசிக்கொண்டு இருந்தனர். வலுவான மற்றும் புனிதமான வேத கோஷங்களுடன் பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த குழியில், தமிழில் ந ம சி வா ய என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஐந்து புனிதமான செங்கற்களை, கட்டிட வடிவமைப்பாளர் வைத்தார். §§

இந்த படையல்கள் மற்றும் பிரதிஷ்டைகளுக்கு பிறகு, அந்த குழியை கற்காரை கொண்டு மூடவேண்டும் என்று குருதேவா எங்களுக்கு உத்தரவிட்டார். கூட்டம் கலைந்த பிறகு, நாங்கள் பல வண்டிகளில் கற்காரைகளை கலந்து, அந்த குழியை நிரப்பினோம். அந்த பணி நிறைவடைந்த பிறகு, எங்கள் மனதில் என்றென்றும் நிலைத்து இருக்கும் இந்த அபூர்வமான நிகழ்வில் பங்குபெற்றோம் என்பதை அறிந்துகொண்டு, மனதில் மகிழ்ச்சியுடன் கிளம்பினோம். §§

அதற்கு அடுத்த சில வருடங்களில், கோயில் கட்டும் பணியில் இருந்த பல்வேறு குழுக்களை, குருதேவா பல முறை சந்தித்து, ஒவ்வொரு தகவலையும் பின்பற்றி வந்தார். அவரால் கருவறையில் முதல் மூன்று அடுக்குகள் வைப்பதை மட்டுமே காண முடிந்தது. §§

image§

“பல சூட்சும ஞானிகளுக்கு காட்சி அளித்து, காணக்கூடிய ஒரு அழகான மனித உருவுடன் பிரபஞ்சத்தின் சிற்பியாக,” சிவபெருமான் இருப்பதாக குருதேவா விவரித்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ஒரு வைணவ சமூகத்துடன் தொடர்பு §

1995 ஆம் ஆண்டு, தனது இரண்டு சுவாமிகளுடன் இந்தியாவில் மூன்று மாதங்கள் பயணம் செய்த போது, குஜராத்தை தலைமையகமாக கொண்ட போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) என்கிற ஒரு மாபெரும் வைணவ அமைப்பின் சற்குருவான பிரமுக் சுவாமி மகாராஜின் 75 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஒட்டி, மும்பையில் கூடிய 50,000 அன்பர்களுக்கு ஒரு முக்கிய உரையை வழங்க குருதேவா அழைக்கப்பட்டார். §§

இரண்டு குருமார்கள் அமைதியான ஆன்மீக கூட்டுறவில் அமர்ந்து இருப்பதைக் காண கூடியிருந்த பல டஜன் கணக்கான காவி உடை சாதுக்களை காண்பதற்கு, வேத காலத்தில் காணும் காட்சியை போன்று இருந்தது. இருவரும் போதித்த பாதை பக்தி மற்றும் தியானத்தை உள்ளடக்கி, துறவற வாழ்க்கையின் உறுதியான மற்றும் பாரம்பரிய விதிகளை வலியுறுத்தி, ஆன்மீக முன்னேற்றத்திற்கு குருவின் பங்கு முக்கியம் என்ற கருத்திற்கு ஆதரவு தெரிவித்தது. இரண்டு சமூகங்களும் பழங்கால செய்முறைகள் மற்றும் உயர் தொழில்நுட்பம் கலந்து, ஒரே குறிக்கோளுக்காக குருவை மையமாக வைத்து துறவிகள் மற்றும் சம்சாரிகள் முயற்சி செய்த நெறிமுறையின் அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடு மற்றும் முன்னேற்றத்தின் ஒரு வேறுபட்ட கலவையை பகிர்ந்துகொண்டன. அந்த துறவிகள் வழங்கிய அன்பான வரவேற்பின் மூலம் அவர்கள் தங்கள் குருவிற்கு வழங்கிய ஆழமான மரியாதையை குருதேவா உடனே புரிந்துகொண்டார். §§

குருதேவா BAPS துறவிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியை பற்றி தெரிந்துகொள்ள விரும்பி, அவர்கள் தன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் மற்றும் மிகவும் முக்கியமாக, அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையில் முன்னேற அவர்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தார். அவ்வாறு செய்வதை அவர் அதிகம் விரும்பி செய்தார். அதனால் அவர் பல மணிநேரம் பயணம் செய்து, சாரங்பூரில் இருந்த அவர்களின் சாது பயிற்சி மையத்திற்கு விரைந்து சென்றார். அந்த கிராமம் பண்ணையின் மத்தியில் சமவெளி மீது அமைந்து இருந்தது. இந்த மையம் ஒரு நவீன வளாகமாக, தனது இரண்டு அடுக்கு கட்டிடத்தில் பயிற்சி பெறும் நூற்றுக்கும் அதிகமான துறவிகளுக்கு குடியிருப்பு வசதியை வழங்குகிறது. அந்த துறவிகள் ஒவ்வொருவரும் இந்துயிசம் டுடே பத்திரிகையின் ஆர்வமுள்ள வாசகர்களாக இருக்கிறார்கள். §§

image§

பத்திரிகை வெளியீட்டு வளாகத்திற்கு வெளியே இருந்த ஒரு மிகப்பெரிய மாமரத்திற்கு அடியில் அமைந்து இருந்த ஆறு பக்க கூடாரத்தில் குருதேவா பார்வையாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து புத்தகங்களில் கையொப்பமிட்டார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

BAPS துறவிகளில் ஒருவர், “குருதேவா, மக்கள் எங்களை வெறி பிடித்தவர்கள் என்று அழைக்கிறார்கள். நாங்கள் இதை எப்படி எதிர்கொள்வது?” என்று கேட்டார். “அதை ஒரு பாராட்டாக எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகம் அவர்களிடத்தில் பொறாமை உணர்வை ஏற்படுத்துவதால், அவர்கள் அவ்வாறு பேசுகிறார்கள்,” என்று குருதேவா அந்த விமர்சனம் பற்றி தனது நேர்மறையான கருத்தை தெரிவித்தார். §§

அவர்கள் எடுத்துக்கொண்ட சங்கல்பங்களை கடைப்பிடித்து, கனவிலும் பெண்களைப் பற்றி நினைக்காமல் இருக்கவேண்டும் என்று குருதேவா துறவிகளிடம் கேட்டுக்கொண்டு, “சீடனுக்கு ஒரு கடமை மட்டுமே உள்ளது. உங்கள் குரு சொல்படி கேட்டு நடக்க வேண்டும்! உங்கள் குரு சொல்படி கேட்டு நடக்க வேண்டும்! உங்கள் குரு சொல்படி கேட்டு நடக்க வேண்டும்!” என்று கூறினார். இந்த அறிவுரை அவர்கள் இதயங்களுக்கு தெரிந்து இருந்தாலும், நவீன இந்திய கூர் உணர்வுகள் காரணமாக அவர்கள் என்றுமே கேட்காத அறிவுரையை அவர் தைரியமாக வழங்கினார். அவர் இதை கூறியதும், மகிழ்ச்சியடைந்த 250 சாதுக்களின் கரவொலி அந்த அறையில் நிரம்பியது. §§

அந்த சந்திப்பிற்கு பிறகு, ஒவ்வொரு துறவியும் முன்வந்து குருதேவாவிடம் இருந்து கைநிறைய பூக்களை பெற்றுக்கொண்டனர். அது ஒரு மறக்கமுடியாத பயணமாக அமைந்து, இரண்டு சமூகங்களையும் மேம்படுத்தியது. “இந்து துறவிகளுக்கு இதைப்போன்ற ஒரு பயிற்சி மையத்தை, நான் உலகில் எங்கும் பார்த்தது இல்லை,” என்று அவர் பின்னர் குறிப்பிட்டார். §§

பல வருடங்கள் கழித்து, 2001 ஆம் ஆண்டு 50,000 மக்களை பலிகொண்ட குஜராத் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவி செய்யும் பணியில், BAPS மூத்த துறவிகளில் ஒருவரை, பிரமுக் சுவாமி அனுப்பி வைத்தார். இந்துயிசம் டுடே பத்திரிகைக்கு BAPS பற்றி ஒரு கட்டுரை எழுதிய ராஜீவ் மாலிக்கிடம் அந்த துறவி, “நோயால் வாடிய 400 மாடுகளுடன் காட்டுக்குள் அனுப்பப்பட்டு, மந்தையின் எண்ணிக்கை 1,000 வரும் வரை திரும்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்ட சீடனைப் பற்றி உபநிடதங்களில் வரும் கதையை போன்று அது மிகவும் கடினமானதாக தோன்றியது. அப்போது நான், ‘உங்கள் குரு சொல்படி கேட்டு நடக்க வேண்டும்! உங்கள் குரு சொல்படி கேட்டு நடக்க வேண்டும்! உங்கள் குரு சொல்படி கேட்டு நடக்க வேண்டும், என்று குருதேவா கூறிய அறிவுரையை நினைவுகூர்ந்து, பணியில் நம்பிக்கையுடன் முன்னேறினேன்,” என்று கூறினார். கவாய் மடத்தின் துறவிகளை BAPS துறவிகள் இன்று சந்தித்தாலும், தங்கள் சமூகத்தின் மீது குருதேவாவின் வலுவான அறிவுறுத்தல் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றியும், தங்களுக்கு பிரியமான குருவின் பாதங்களை எப்போதும் பற்றியிருக்க அனுமதி வழங்கியதை பற்றியும் அவர்கள் நினைவுக்கூர்வார்கள். §§

குருதேவா மனித நேயத்திற்கு ஞானோதயம் வழங்கும் மாபெரும் பணியில் ஈடுபட்டிருந்த எல்லா சம்பிரதாய துறவிகளையும் தனது சகோதரர்களாக கருதி, அவர்களுடன் இயல்பாக பழகினார். ஒரு மடம் அல்லது ஆசிரமத்திற்கு மேற்கொண்ட ஒவ்வொரு பயணமும், ஊக்கமளிக்க ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்பட்டது. இதைப்பற்றி பெங்களூரின் ஶ்ரீ பாலகங்காதரநாத சுவாமி வழங்கும் குறிப்பு: §§

ஒரு தனிநபராகவும் ஒரு அமைப்பாகவும், குருதேவா என் மீது பலவழிகளில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் எங்கள் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தந்த போது, ஒரு அரசு பாடத் திட்டத்தைப் போன்று கல்வி வரையறைகளுடன் இருக்கக் கூடாது என்று என்னிடம் கூறினார். நமது சாஸ்திரங்கள், நமது பாரம்பரியங்கள் மற்றும் பண்புகளையும் கற்றுத் தரவேண்டும் என்று அவர் கூறினார். அவரது அறிவுறுத்தலின் பேரில், நாங்கள் எங்கள் பள்ளிப்பாடதிட்டத்தில் ஆன்மீகம் தொடர்பான பாடங்களை கற்றுத்தர நாங்கள் தனியாக நேரத்தை ஒதுக்கியுள்ளோம். §§

எங்களது மருத்துவமனைகளில பெண் சிசுக்கொலை மற்றும் கருக்கலைப்பு நடைப்பெறுவதை கேட்டதும் சிவாய சுப்பிரமுனியசுவாமி வருத்தம் அடைந்து, நாம் இந்த பழக்கத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். அவர் உண்மையில் ஒரு அமைதி தூதுவராக இருந்தார். வெளிப்படையாக பேசும் பண்பு எனக்கு சிவாய சுப்பிரமுனியசுவாமியிடம் பிடித்து இருந்தது. அவர் தர்மம் மற்றும் சமயம் பற்றிய பிரச்சனைகளை அவர் நேரடியாக பேசுவார். அவருக்கு சமூகத்தின மீது இருந்த அக்கறை, அதிலும் குறிப்பாக குடும்பம் மற்றும் குழந்தைகள் மீது இருந்த அக்கறை என்னை வெகுவாக கவர்ந்தது. §§

பெரும்பாலும் மற்ற சகோதர துறவிகளை அவர் சென்று பார்க்கும் போது, அதை புதிய செய்முறைகளை பின்பற்றுவதற்கு தனக்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். ஒரு தென் இந்திய ஆதீனக்கர்த்தாரிடம் அவரது சுவாமி அணிந்திருந்த காதணிகளின் பாணி மற்றும் அவர்களது உடையின் நிறத்தை பின்பற்றினார், மற்றும் இன்னொருவர் மூலம் அவருக்கு திருமந்திரம் பற்றிய அறிமுகம் கிடைத்தது. இதற்கு முன்னர் அவர் BAPS சாதுக்களை சந்திக்க வந்திருந்த போது, வாழ்க்கையை வாழ்வது பற்றி குறிப்பிடும், அவர்களது வழிகாட்டு கோட்பாடுகளுக்குள் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்தி கொண்டார். அந்த 212 ஈரடி செய்யுட்கள் விதிவிலக்கிற்கு இடந்தராத கோட்பாடுகளாக இருக்கின்றன. இதனை பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பின்பற்றி வருகின்றனர். குருதேவா தனது 365 நந்திநாத சூத்திரங்களை எழுதும் போது, ஷிக்ஷபத்ரி என்று அழைக்கப்படும் இந்த படைப்பில் இருந்த சில தகவல்களை பயன்படுத்திக் கொண்டார். §§

ஆன்மீக கருவிப்பெட்டி §

ஆயிரக்கணக்கான அன்பர்கள் ஆன்மீக உணர்தலை பெறுவதற்காக, ஞானோதயம் பெறுவதற்கு சில அபூர்வமான மாத்திரைகள் பெறும் நம்பிக்கையில் மற்றும் தங்களை உருத்திக்கொண்டு இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெறுவதற்கு குருதேவாவை நாடி வந்தனர். ஒரு வழிப்போக்கன் ஒரு மயில் இறகை தொட்டதால் சிவபெருமானின் திருவடிகளுக்கு அழைத்து செல்லப்பட்டது பற்றி அவர்கள் நன்றாக அறிந்து இருந்தார்கள், மற்றும் பிரகாசமான ஒளியின் இடத்திற்கு தங்களாலும் விரைவில் பயணம் செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். §§

சாத்தியமில்லை என்று சொல்ல முடியாவிட்டாலும், மிகவும் அபூர்வமான அத்தகைய சம்பவங்களை பற்றி குருதேவா அறிந்து இருந்தார். அவர் பக்குவமடைந்ததும், சீடர்கள் யோகம் பயிற்சி செய்யும் தகுதியுடன் ஒரு சுத்தமான வாழ்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியவரும் வரை, அவர் ஆழமான பயிற்சிகளை அதிகமாக தவிர்த்து, சில சமயங்களில் தியானம் செய்வதையும் தடை செய்து வந்தார். அவர்களின் தூய்மையற்ற வாழ்முறை மற்றும் ஆரோக்கியமற்ற கர்மவினை, புலால் உண்ணும் பழக்கம், அவர்களின் சிற்றின்ப சிந்தனைகள், ஆழமாக பதிந்த ஆத்திரங்கள் மற்றும் தீர்வு காணப்படாத வேதனைகள் மற்றும் அச்சங்களின் காரணமாக, தவிர்க்க முடியாமல் தியானங்களின் மூலம் பலன்கள் கிடைக்காத போது, அவர்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்பதை அவர் உறுதி செய்துக்கொள்ள விரும்பினார். அவரது அமைப்பில் பயன்படுத்தப்பட்ட தளர்வுகள் இல்லாத விதிகள், அவரது முக்கிய தற்காப்பு முறையாக விளங்கியது. §§

தங்களை மாற்றிக்கொள்ளாதவர்கள் தானாகவே தனித்து விடப்பட்டார்கள். அவர் நிலைத்து இருந்தவர்களுக்கு, ஒரு அபூர்வ மந்திரம் அல்லது காவி உடையை வழங்காமல், ஒரு நல்ல மனிதனாக இருப்பது எப்படி என்ற அறிதலில் இருந்து தொடங்கி, தனிப்பட்ட வாழ்க்கையின் மிகவும் அடிப்படையான நிலைகள் மீது கவனம் செலுத்தி சுய மாற்றங்களை ஏற்படுத்தும் கருவிகளை வழங்கினார். ஆன்மீக ஸித்தியை அடைவது கடினம் என்பதை அவர் அறிந்து இருந்தார், மற்றும் ஆத்ம ஞானத்தின் உச்சத்தை அடைவதற்கு, எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதை காட்டிலும், வாழ்முறை மற்றும் அணுகுமுறையில் அதிக ஒழுக்கம், அதிக அர்ப்பணிப்பு மற்றும் பயிற்சி தேவைப்படும் என்பதையும் அறிந்து இருந்தார். இந்த பண்புகளை உடையவர்களால் மட்டுமே வெற்றி அடைய முடியும். இதை எல்லோரும் புரிந்துகொள்ளவில்லை என்றாலும், அவர்கள் தங்களை மாற்றிக்கொள்வார்கள் என்றும், தாங்கள் நாடியதை எப்படி அடைவது என்று அவர்கள் தெரியாமல் இருந்த போது, அந்த மாற்றம் அவர்களுக்குள் ஆன்மீக ஞானோதயத்தை ஏற்படுத்தும் என்ற தனது அடிப்படை நம்பிக்கையுடன், அவர் தனது சீடர்களை அனைத்து நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஊக்குவித்து வந்தார். §§

அவர் தனது சமயப்பணியில் எப்போதும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஒரு இயக்கத்தை தொடங்குவதில் ஆர்வத்துடன் இல்லாமல், எண்ணிக்கையை விட தரத்திற்கு அதிக மதிப்பு அளித்தார். அன்பர்கள் தன்னிடம் கொண்டு வந்த பிரச்சனைகள், தனது அறிவுரைக்கு மதிப்பு அளிக்காமல் அல்லது சாதனா செய்வதை புறக்கணிப்பதால் விளைந்தது என்று தெளிவாக தெரிந்தால், “நான் உங்களுக்கு சுவரில் இருக்கும் சித்திரமாக தெரிகிறேனா?” என்று கோபித்துக் கொள்ளும் அளவிற்கு, அவர் மனம் மற்றும் உணர்ச்சி ரீதியாக தங்களை தயார்படுத்திக் கொள்ள ஆர்வத்துடன் இருப்பவர்களுடன் மட்டுமே செயல்படுவதில் அதிக ஆர்வத்துடன் இருந்தார். §§

ஆனால் நேர்மையான மற்றும் தீவிரமான சீடர்களும், தங்களுடன் சில சந்தேகங்கள் மற்றும் தங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தேவைப்படும் சில தீர்வுகளுக்காக, அவரை நாடி வந்தார்கள். குருதேவா பிற்காலத்தில், ஒரே மாதிரியான கேள்விகளை கேட்டு, அதற்கு தான் ஒரே மாதிரியான அறிவுரைகளை வழங்கி சோர்வடைந்து இருந்தார். அவர் வழங்கிய அறிவுரை பெரும்பாலும் பின்பற்றப்பட்டன. கற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு குற்றம், ஒவ்வொரு இக்கட்டான நிலை மற்றும் சிக்கல் பற்றிய வாக்குமூலத்தை அவர் கேட்டு இருந்ததால், தற்போது அவருக்கு மனிதனின் நிலை ஒரு திறந்த புத்தகமாக மாறி இருந்தது. இவற்றை எல்லாம் கவனமாக கேட்பதும், கர்மவினையை எதிர்கொள்ளும் சுமையும் வலுவாக இருந்தது, மற்றும் அது தனது திசையை திருப்பி அவரது நரம்பியல் அமைப்பை தொந்தரவு செய்யாமல் இருக்க, தினமும் அதை கிரகித்துக் கொள்ள அமைதியான தருணங்கள் தேவைப்பட்டன. அவற்றில் தனது உச்சந்தலை வழியாக செலுத்தி, அவற்றை உட்புற ஒளியில் கரைக்க வேண்டி இருந்தது என்று அவர் விளக்கினார். §§

பிராயச்சித்தம் என்று அவர் அழைத்த தவத்தை, ஒரு தீர்வாக சீடனுக்கே வழங்குவதால் பிரச்சனைகள் குறைவாக இருப்பதுடன், அதிக பயனுள்ளதாகவும் இருப்பதை அவர் தெரிந்து கொண்டார். அடிமனதில் இருந்து தீர்வு காணப்படாத துன்புறுத்தல்கள் மற்றும் ஆத்திரங்கள், அச்சங்கள் மற்றும் ஒடுக்கங்கள் மற்றும் பழைய குற்றங்களின் குற்ற உணர்வின் சுமைகளை குறைப்பதே நோக்கம் மற்றும் குறிக்கோளாக விளங்கியது. அவர் தவத்தை பற்றி ஒரு சூட்சுமமான விளக்கத்தை வழங்கினார்:§§

image§

அவர் கவாய் தீவின் தனிமைக்காக அதை தேர்ந்தெடுத்து இருந்தாலும், பார்வையாளர்கள் மடத்தைப் பற்றி தெரிந்துகொண்டு, சற்குருவுடன் இருக்க மற்றும் அவரது உரைகளை கேட்க, மிகப்பெரிய சிலைகள் மற்றும் படிக சிவலிங்கத்துடன் இருந்த ‘கடவுள்’ கோயிலில் வழிபடுவதற்கு உலகெங்கிலும் இருந்து மக்கள் வந்தனர். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

பின்வரும் வரிசையில் தேவையற்ற கர்மவினை சுமைகளை விடுவிக்கும் உட்புற செய்முறை நடைபெறுகிறது: கடுங்கழிவிரக்கம் மற்றும் அவமானம்; குற்ற ஏற்புரை (அதில் ஒரு வடிவமாக மன்னிப்பு கோருதல் விளங்குகிறது); வருத்தம்; மற்றும் இறுதியாக சமரசம் வந்து, எங்கும் நல்ல உணர்வுகள் வாசம் செய்யும் பொருட்டு, சூழ்நிலையை சீர் செய்கிறது. அதனால் அறிவு மற்றும் தெளிவற்ற ஆன்மீக பண்புகளை தடை செய்யும் கீழ்நிலை உள்ளுணர்வு மனதின் குழப்பங்களில் இருந்து விடுபடும் போது ஏற்படும் போராட்டங்களை சீடன் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதால், உட்புற ஒளி உடலில் இருந்து எதிர்மறை சம்ஸ்காரங்கள் மற்றும் வாசனாக்களை நீக்குவதற்கு, சுமந்து செல்வதற்கு கடினமான ஒரு அடியுணர்வு சுமையில் இருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட ஏற்புரையும் தனக்கென்று ஒரு சமரசத்தை கொண்டிருக்க வேண்டும். ஆன்மாவிற்கு அறியாமையின் பாதுகாப்பு கிடைக்காத போது, அது விடுதலை பெறுவதற்கு ஏங்கிக்கொண்டு ஆறுதலை நாடுகிறது. அப்போது வேதனையை கரைத்து சாந்தியை கொண்டு வருவதற்கு, பிராயஸ்சித்த என்கிற தவம் தீர்வாக விளங்குகிறது.§§

தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு அவமானத்தை வெளிப்படுத்தி விநாயகர், முருகன் அல்லது பரமனாக இருக்கும் சிவபெருமானுக்கு 1,008 முறை தரையில் விழுந்து வணங்குதல்; புனிதமான ருத்ராட்ச மணிகளை பயன்படுத்தி மெதுவாக 1,008 முறை ஜபம் செய்தல்; கோயிலுக்கு 108 கைவினை பொருட்களை நன்கொடையாக வழங்குதல்; தன் கைகளால் சுத்தம் செய்தல், மாலைகளை தொடுத்தல் மற்றும் பூக்களை ஒழுங்காக அடுக்குதலைப் போன்று 108 மணி நேரங்களுக்கு கோயிலில் சேவை செய்தல்; படையல்களாக சமைத்த உணவை கொண்டு வருதல்; காவடி எடுத்தல் மற்றும் உடல் தசையில் ஏதாவது ஒரு பகுதியில் சிறிய வேலை குத்தி நேர்த்திக்கடன் செலுத்துதல்; தொடர்ந்து அஷ்டாங்க நமஸ்காரம் செய்துக்கொண்டு ஒரு யாத்திரை செல்லுதல் அல்லது கோயிலை சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்தல் என்று பிராயஸ்சித்தம் என்கிற தவத்திற்கு பல வடிவங்கள் உள்ளன. ஒவ்வொரு குற்றமாக ஏற்றுக்கொண்ட பிறகு, மேலே குறிப்பிட்ட பிராயஸ்சித்தங்களுடன் மேலும் பல முக்கிய பரிகார முறைகள் உள்ளன. §§

மறைபொருளாக இருக்கும் தத்துவ கோட்பாடுகளை எளிமையான நடையில் மாற்றி வழங்கியதோடு நிற்காமல், அந்த கோட்பாடுகளை பழக்கத்தில் கொண்டு வருவதற்கு குறிப்பிட்ட சாதனாக்களை சிந்திக்கும் குருதேவாவின் திறமையை பார்த்து சீடர்கள் வியந்தனர். யோகத்தில் மிகவும் முக்கியமாக விளங்கும், “அடியுணர்வை சுத்தம் செய்தல்" என்கிற ஆன்மீக கோட்பாடு, ஒரு உதாரணத்தை வழங்குகிறது. §§

உணர்வுள்ள மனதின் சேமிப்புக் கிடங்காக அடிமனம் விளங்குகிறது. தினசரி நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் மற்றும் எதிர்வினைகள் அனைத்தும் அதில் சேமிக்கப்படுகின்றன. அடியுணர்வு கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அது ஒரு அதிர்வு விகிதத்தில் இருக்கிறது. அடியுணர்வை புரிந்துக்கொண்டு, ஒருமுகப்படுத்தி, குழப்பங்களை நீக்கி துணை மெய்ஞ்ஞான மனம் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அதிர்வு விகிதம் அதிகமாக இருக்கிறது.§§

விடுவிப்பதற்கு தீர்வு காணப்படாத நினைவுகள், உணர்வுகள் மற்றும் அனுபவங்கள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதைக் காட்டிலும், அதை சாதிக்க வழிகளை பெறுவது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. தங்கள் கடந்தகாலத்தில் இருந்து விடுதலை பெற விரும்பிய பல அன்பர்களை அவர் சந்தித்ததால், எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஒரு எளிமையான ஆனால் வலுவான மற்றும் பயனுள்ள யுத்தியை தியானத்தின் மூலம் உருவாக்கினார். இதை பலர் பின்பற்றினர் மற்றும் அது அவர்கள் ஆன்மீக முன்னேற்றத்தில் முக்கியமானதாக விளங்கியுள்ளது. குருதேவா இதை வாசன தாஹ தந்திரம் (அக்னியால் அடியுணர்வை சுத்தம் செய்தல்) என்று அழைத்தார். §§

தங்கள் விரோதங்கள் மற்றும் வேதனைகள், தங்கள் குழப்பங்கள் மற்றும் எதிர்மறை அனுபவங்களை எழுதிக்கொண்டு, அவற்றை திட்டமிட்டு விழிப்புணர்வுடன் அடியுணர்வு ஆழத்தில் இருந்து உணர்வுள்ள மனதிற்கு கொண்டு வந்து, காகிதம் நெருப்பாகவும் சாம்பலாகவும் மாறும் போது தூல வடிவிலும், பிரச்சனையின் தூல வெளிப்பாடு எரிக்கப்படும் போது மனோஉணர்வு வடிவிலும், அவற்றை எரித்து விடுங்கள் என்று அவர் தனது அன்பர்களுக்கு அறிவுறுத்தினார். §§

மனதில் இருக்கும் பதிவுகள் நேர்மறையாக அல்லது எதிர்மறையாக இருக்கலாம். நடைமுறையில், நாம் வேதனைகளை விளக்கி, குழப்பங்களை வெளிப்படுத்தி, மனக்குறைகள் மற்றும் நீண்டநாளாக மனதில் இருந்த பதிவாகிய துன்புறுத்தல்கள் பற்றிய குற்ற ஏற்புரைகள், அல்லது பிரியமானவர்கள் மற்றும் தோழர்களுக்கு எழுதிய நீளமான கடிதங்களை எரிக்கிறோம். பிரச்சனைகளை எழுதி, அதை ஒரு சாதாரண நெருப்பில் எரிப்பாதால், அவை அடியுணர்வில் இருந்து வெளிப்புற மனதிற்கு கொண்டு வரப்பட்டு, நெருப்பு அந்த காகிதத்தை எரிக்கும் போது ஒடுக்கப்பட்ட உணர்ச்சிகள் விடுதலை பெறுகின்றன. §§

புனிதமான ஹோமங்களை நடத்தி பிரார்த்தனை செய்வது மற்றும் தினமும் குப்பையை எரிக்கும் ஒரு பெரிய சட்டியில் இருந்து வேறுபடுத்த வேண்டும் என்பதற்காக, இந்த தந்திரத்தை பயிற்சி செய்பவர்கள் தங்கள் பிரச்சனைகளை ஒரு சாதாரண நெருப்பில் எரிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இவ்வாறு ஒருவர் தனது வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் அவ்வப்போது திரும்பிப்பார்ப்பதற்கு உதவியாக, குருதேவா ஒரு அமைப்பை உருவாக்கும் அளவிற்கு, இந்த செய்முறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. §§

மறந்துவிட்ட யோக அடிப்படை §

குருதேவா எழுதிய முத்தொகுப்பில் மூன்றாவது புத்தகத்தின் மூன்றில் ஒரு பங்கு, பழங்கால இயமங்கள் மற்றும் நியமங்களை குறிப்பிடுகிறது. இதை அவர் இந்து சமயத்தின் முக்கிய பண்புகள் என்று அழைத்தார். இந்த இருபது செய்யக்கூடாதவைகள் மற்றும் செய்ய வேண்டியவைகள் யோகப்பயிற்சிக்கு தேவையான அடிப்படை என்றும் இவை இல்லாமல், ஆன்மீக வேட்கை எதுவும் நீடித்த பலன்களை வழங்காது என்றும் அவர் குறிப்பிட்டார். §§

ஆகம உரைகளை படிக்காமல் அல்லது அதைப்பற்றி அறியாமல், அதன் ஞானத்தை குருதேவா வெளிக்கொண்டு வந்துள்ளதால், அவர் ஒரு உண்மையான ரிஷியை போன்று இருக்கிறார் என்பதற்கு ஒரு சான்றாக விளங்குகிறது என்று சைவ ஆகம வித்வான் Dr. எஸ். பி. சபாரத்தினம் சிவாச்சாரியார் தனது கருத்தை தெரிவித்தார். இயமங்கள் மற்றும் நியமங்கள் பற்றி குருதேவா அளித்த விளக்கத்திற்கு, “இந்த உண்மையான ஆச்சார்யர், குருத்துவத்தின் உண்மையான பண்புடன் இணங்கி இருப்பதால், அவரால் நவீன சமூகத்தை நன்றாக வடிவமைத்து, மனித நேயத்தை நன்றாக வழிநடத்தி செல்ல முடியும் என்று எண்ணம் என் மனதில் உடனே உதித்தது,” என்று சபாரத்தினம் குறிப்பிட்டார். §§

“இயமங்கள் மற்றும் நியமங்களை பின்பற்றாத யோக அமைப்பு, அடித்தளம் இல்லாத மாளிகை போல வலுவற்று, நறுமணம் இல்லாத பூவைப் போன்று பயனற்று, சிவபெருமான் மற்றும் ஆன்மாவின் ஒருமையில் இருந்து விலகி இருக்கும் அறிவைப் போன்று முழுமை இல்லாது இருக்கிறது,” என்று குறிப்பிடும் சூட்சும ஆகம செய்யுளுடன், குருதேவாவின் விளக்கங்கள் விநோதமாக பொருந்தி இருப்பதை அவர் குறிப்பிட்டார். சபாரத்தினம் மேலும் வழங்கிய குறிப்பு:§§

image§

ஜூலை மாதம் வரும் ஒவ்வொரு பௌர்ணமியிலும், கவாய் மடம் சற்குரு பெளர்ணமியை கொண்டாடி, சுயம்பு லிங்கத்திற்கு அருகில் இருக்கும் குருவின் திருவடிகளை வழிபடுகிறது. ஒருவர் தனது குருவை வழிபடும் போது, எல்லா சற்குருமார்களும் கௌரவிக்கப்படுகிறார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

மூன்றாவது உலகின் உட்புறத்தில் வாழும் மகாதேவர்கள் சக்திகளின் உண்மையான இயல்பு, வெல்ல முடியாத கந்தனின் வேல், ஐந்து மனநிலைகள், தலைக்கு மேலிருக்கும் உலகில் ஏழு சக்கரங்கள் மற்றும் மத்திய உலகில் ஏழு சக்கரங்கள் மற்றும் நரகலோகத்தில் இருக்கும் ஏழு சக்கரங்கள் என்று மொத்தம் இருபத்தி ஒன்று சக்கரங்களின் இயல்பு, கோயில் மற்றும் கோயில் சடங்குகள் மற்றும் மந்திரங்களின் முக்கியத்துவம், நிறங்களின் பங்கு மற்றும் முக்கியத்துவம் மற்றும் அதைப்போன்ற மற்ற தெளிவுரை பற்றி குருதேவா அளித்த விளக்கங்கள், சைவ ஆகம செய்யுட்களின் நேர்மையான மற்றும் தெளிவான பிரதிபலிப்புக்கள் ஆகும். §§

எனக்கு தெரிந்தவரை, சூட்சும ஆகமத்தின் யோக பிரிவில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள மூலாதாரத்திற்கு கீழிருக்கும் சக்கரங்களை பற்றி விவாதித்த முதல் யோகி, குருதேவாவாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. §§

குருதேவா உருவாக்கிய ஷும் என்ற தியான மொழி அவரது படைப்புக்களின் மகுடமாக விளங்குகிறது. சதாசிவன் சூட்சும ஆகமத்தில், மிகவும் உயர்வான நிலைகளில் இருக்கும் சிவயோகிகளுக்கு சிவயோகத்தின் அருமையான மற்றும் அதிக ஆழ்நிலையில் இருக்கும் சீடர்களை பற்றி தெரியப்படுத்துகிறார். அவர் ஒரு சமயத்தில் தனது அறிவுறுத்தல்களை நிறுத்தி, “இந்த அறிவுறுத்தல்கள் போதும். இந்த சர்வாத்ம-நாத யோகத்தில் அதிக நுணுக்கமான மற்றும் ஆழ்நிலை அம்சங்கள் உள்ளன. இவை திறமையான மகாயோகிக்களுக்கு காலப்போக்கில் கற்றுத்தரப்படும். ஆனால் இப்போது இல்லை,” என்று கூறினார். 1968 ஆம் ஆண்டு, ஸ்விட்சர்லாந்தின் அஸ்கோனா நகரத்தில் ஷும் என்கிற தியான மொழி உருவாக்கப்பட்டதை நான் அறிந்த போது, எனக்கு அவர் விடுத்த இந்த அறிக்கை தான் நினைவுக்கு வந்தது. §§

“குழந்தைகளை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்”§

1990 களின் இறுதியில், நீண்ட நாட்களாக தன்னிடம் சீடர்களாய் இருந்தவர்கள் உட்பட, பல சீடர்கள் தங்கள் குழந்தைகளை உடல் ரீதியாக துன்புறுத்துவதாக தெரிந்துகொண்டதும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்த குருதேவா, இந்த நிலை உடனடியாக மாற வேண்டும் என்று அறிவுறுத்தினார். இனி குழந்தைகளை அடிப்பது, கிள்ளுவது, காதை திருகுவது, அறைவது, தாக்குவது அல்லது குத்துவது வேண்டாம். இனி திட்டுவது, இழிவுபடுத்துவது, குற்றம் சுமத்தி அவமானப்படுவது வேண்டாம். §§

அவர்கள் கடந்த காலத்தில் செய்த தவறான நடவடிக்கைக்கு பரிகாரமாக, தவம் செய்யவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். முதலில் அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் முழுமனதுடன் மன்னிப்பு கேட்கவேண்டும் மற்றும் அவர்கள் ஒரு குழந்தையை அடிக்கும் ஒவ்வொரு முறையும், அவர்கள் கண்ணாடி முன்பாக நின்றுக்கொண்டு தங்களை ஐந்து முறை அடித்துக்கொள்ள வேண்டும் என்பதை போல குறிப்பிட சில வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். இரண்டாவதாக, தங்கள் சமூகத்தில் நேர்மறை ஒழுக்கத்தைப் (Positive Discipline) பற்றி வகுப்புக்களை நடத்த வேண்டும் என்று அவர் அவர்களிடம் அறிவுறுத்தினார். நேர்மறை ஒழுக்கம் என்கிற அமைப்பு கலிபோர்னியாவை சேர்ந்த ஆசிரியர் Dr. ஜேன் நெல்சன் என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர் தான் எழுதிய புத்தகங்கள் மற்றும் சொற்பொழிவுகளின் தொடரில் குழந்தைகளை குற்றம் சுமத்தி, அவமானப்படுத்தி அல்லது துன்புறுத்தாமல், அவர்களுக்கு ஊக்கம், பாசம் மற்றும் மரியாதை அளித்து வளர்ப்பதைப் பற்றி குறிப்பிட்டு இருந்தார். §§

குருதேவாவின் நீண்டநாள் சீடனாகவும் பிரபல வழக்கறிஞராகவும் இருந்த மனோன் மர்தமூத்து, மொரீஷியஸ் தீவில் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டார். “இந்த போதனைகளை மக்களிடம் எடுத்து சென்று, அதை அன்றாட வாழ்க்கையின் யதார்த்தமாக மாற்றுவது, குருதேவாவின் மொரீஷியஸ் நாட்டு சீடர்களின் இன்றைய சாதனாவாக இருக்கிறது,” என்று அவர் குறிப்பிட்டார். இவ்வாறு 1998 ஆம் ஆண்டு, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளை துன்புறுத்தக்கூடாது என்கிற குழந்தைகளின் உரிமைக்கு ஆதரவாக குருதேவா ஒரு தீவிர பிரச்சாரத்தை தொடங்கி, பெற்றோர்கள் குழந்தைகளை அன்புடன் வளர்க்க, அவர்களுக்கு நேர்மறை ஒழுக்க வகுப்புக்களை தன்னிடம் சம்சாரியாக இருந்த சீடர்கள் மூலம் அவர்களின் முக்கிய சமூக சேவையாக வழங்கி உதவி செய்தார். இதைப்பற்றி சிங்கப்பூரில் ஒரு சீடர் விளக்கினார்:§§

குருதேவா வீடுகள் மற்றும் பள்ளிகளில் உடல்ரீதியாக தண்டனை வழங்குவதை ஒழிப்பதற்கு ஆதரவாக வாதாடி, மற்ற இந்து பெற்றோர்கள் அகிம்சை வழியில் குழந்தை வளர்ப்பபதற்கு பாடங்கள் நடத்துமாறும், மாணவர்களுக்கு உடல்ரீதியாக தண்டனை வழங்குவது தொடர்பாக பள்ளிக் கொள்கைகளை மாற்று மாறும், தனது சீடர்களை அறிவுத்தினார். §§

குருதேவாவின் சீடர்கள் கடந்த சில வருடங்களாக, சிங்கப்பூர் வீடுகள் மற்றும் பள்ளிகளில் உடல்ரீதியான தண்டனைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர் உள்ளூர் பள்ளிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெற்றுள்ளனர். உடல்ரீதியாக தண்டனை வழங்கிக்கொண்டு இருந்த ஆசிரியர்களுக்கு கண்டனம் செய்ததோடு சிறந்த செய்முறைகளில் புதிதாக பயிற்சி அளிப்பது என்று, அந்த பள்ளிகள் முன்கூட்டியே இந்த பிரச்சனையை சமாளிக்க முயற்சிகள் செய்து வந்தன. §§

எப்பொழுதும் தற்பொழுதில் இருத்தல் §

குருதேவாவின் நடவடிக்கைகள், மற்றவர்களுக்கு செய்த உதவிகள் மற்றும் மற்றவர்கள் அவரை அறிந்திருந்த தகவல்கள் மட்டுமில்லாமல், அவரிடம் ஒரு உணர முடியாத அபூர்வ சக்தி இருந்தது. அவர் தனது மையத்தில், எல்லோருடைய பரமாத்துமாவின் மையத்தில் இருந்ததால், எல்லோரும் அவரை தங்களுக்கு நெருக்கமாக கருதி, அவர் மீது அதிக அன்பு செலுத்தினார்கள். அவர்களை பொறுத்தவரையில், அவரது வாழ்க்கை தங்களது அன்றாட சோகங்களை கடந்த ஒரு அற்புதமான வானவில் போன்று இருந்தது. குருதேவா எப்போதும் இளமையுடன், தடைகளில்லாமல், களங்கமில்லாமல், திறந்த மனதோடு எப்போதும் தற்பொழுதில் இருக்கும் ஒரு உணர்வு வெளிப்பட்டது. §§

மே தின கொண்டாட்டத்தின் போது எழுப்பப்படும் கம்பத்தை போன்று, ஒரிடத்தில் இருப்பது போலவும், என்னை சுற்றி எல்லாம் நடப்பதைப் போன்ற உணர்வும், எனக்கு சில நாட்களாக தோன்ற ஆரம்பித்துள்ளது. நான் உயிரின் சுழற்சிகள் ஒன்று இன்னொன்றுக்குள் பாய்ந்து செல்வதை கவனித்துக்கொண்டு இருக்கிறேன். பாதையில் இருக்கும் ஆண்களும் பெண்களும் விரிவாக்கம் பெறும் போது, தூல உலக சுழற்சிகள் சூட்சும உலக சுழற்சிகளுக்குள் பாய்ந்து செல்கின்றன. அந்த சூட்சும உலக சுழற்சிகள் மெய்ஞ்ஞான சுழற்சிகளுக்குள் பாய்ந்து சென்று மீண்டும் தூல உலக சுழற்சிகளுக்கு திரும்புகின்றன. நான் வெறும் பார்த்துக்கொண்டு இருக்கும், இந்த நிலையை “சும்மா இருக்கும் நிலை" என்று குறிப்பிடுகிறேன். §§

அவர் மிகவும் தீவிரமான சவால் அல்லது பேரிடரிலும் அமைதியாக, நடுநிலையுடன் பற்றின்றி இருந்தார். அவர் காசா எரானோஸில் ஷும் மொழியை கண்டுபிடிக்கும் சமயமாக இருக்கட்டும், இறைவன் கோயிலில் அடிக்கல் நாட்டும் சமயமாக இருக்கட்டும், அவர் எந்த செயலில் ஈடுபட்டு இருந்தாலும், அவர் தன்னை சுற்றி இருந்தவர்கள் விஷேசமானதாக கருதிய எல்லையற்ற அன்பு மற்றும் ஒடுக்கம் இல்லாத பிரகாசமான மகிழ்ச்சியை தன்னிடம் தக்க வைத்து இருந்தார். §§

அவர் இந்த அபூர்வமான பண்பின் மூலம் தனது துறவிகளை ஊக்குவித்தார். அவர்கள் பலவருடங்களாக பின்பற்றிய பிரம்மச்சரிய வாழ்க்கையின் படிப்படியான வளர்ச்சியின் துணையுடன், அது அவர்களுக்கு ஒரு வழங்கிய நிலையான மகிழ்ச்சியை பார்த்த்து, “இங்கே இருக்கும் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது போல தோன்றுகிறது!” என்று வருகை தந்த பார்வையாளர்கள் தெரிவித்தனர். அது உண்மை தான். அவர் தனது தூல உடலை விட்டு பிரிந்த பிறகும் இந்த சமூகத்தில் மகிழ்ச்சியாக, உத்வேகத்துடன் சாதனா மற்றும் சேவை செய்ய ஊக்கமளிக்கும் கட்டுப்படுத்த முடியாத பண்புகள் வாசம் செய்து வருகின்றன. §§

image§

“தியானத்தின் அடிப்படையாக குரு விளங்குகிறார். பூஜையின் அடிப்படையாக குருவின் திருவடி விளங்குகிறது. மந்திரத்தின் அடிப்படையாக குருவின் போதனை விளங்குகிறது மற்றும் முக்தியின் அடிப்படையாக குருவின் அருள் விளங்குகிறது,” என்று குளார்ணவ தந்திரம் அறிவிக்கிறது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

யதார்த்தத்தைப் பற்றி தனது ஆன்மீக மற்றும் மற்ற லௌகீக உட்பார்வைகளின் துணையுடன், அவர் தன்னை சுற்றி இருந்த துறவிகள் மற்றும் சம்சாரிகளின் ஒரு வலுவான குழுவின் கவனத்தை ஈர்த்து, தொடர்ந்து பயிற்சி அளித்து, ஆர்வத்தை தூண்டும் ஒரு வினோதமான சக்தியை பெற்று இருந்தார். அவர் இந்த சிரத்தையுள்ள ஆன்மாக்களுக்கு அதிகமான பொறுப்புக்களை ஒப்படைக்க, அவர்களுக்கு கவனமாக பயிற்சி அளித்து, அவர்களின் திறமைகளை வளர்த்து வந்தார். இது ஒரு தனிநபர் தனது ஒரு வாழ்நாளில் நிறைவேற்ற முடியாததை சாதிக்க அவருக்கு உதவியாக இருந்தது. அவரை பின்பற்ற அவரது சீடர்களாக இருந்த சில துறவிகள் மற்றும் சாதாரண உறுப்பினர்களுக்கு அவர்களின் கர்மவினைகள் அனுமதிக்க வில்லை என்றாலும், அவரும் மீதம் இருந்த சீடர்களும் தாங்கள் பிறவி எடுத்த பணியை பூர்த்தி செய்ய தொடர்ந்து பணிபுரிந்து வந்தனர். அவர் ஆரம்ப காலத்தில், தனது ஆன்மீக பணியில் தன்னுடன் சேர்ந்து பணிபுரிந்தோரை குறிப்பிடுவதற்கு சோல்ஜர்ஸ் ஆஃப் தி வித்தின் என்ற வாசகத்தை உருவாக்கி, “ஆன்மீக பணியை செய்வதற்காக பிறந்தவர்கள்,” என்று அவர் அடிக்கடி குறிப்பிடுவார். §§

குருதேவா தீவிரமான ஸ்திரத்தன்மையுடன் செயல்பட்டதால், அவரது முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தேடித்தந்தன என்பதில் சந்தேகமில்லை. அவர் ஒவ்வொரு திட்டப்பணியையும் அணுகும் போது தீவிர கவனத்துடன் ஒவ்வொரு தேவை மற்றும் பிரச்சனையை எதிர்கொண்டு, தனது திட்டத்தை தினமும் ஆய்வு செய்து, தனது மூத்த துறவிகளுடன் ஆலோசித்து, ஒவ்வொரு நாள் முடிவிலும் தாங்கள் பெற்ற முன்னேற்றத்தை ஆய்வு செய்து கவனம் செலுத்தவேண்டிய இடங்களை குறித்துக்கொண்டார். போர்க்களத்தில் வீரர்கள் மடிவதை ஒரு நல்ல படைத்தலைவர் பார்க்கும் போது வேதனை அளிப்பதாக இருந்தாலும், சமீபத்தில் நடைப்பெற்ற பேரிழப்பில் சிக்கிக்கொள்ளாமல், அவர் தனது எதிர்கால கண்ணோட்டத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். குருதேவாவால் எப்போதும் ஒரு மிகப்பெரிய கண்ணோட்டத்துடன், ஒரு நீண்ட காலகட்டத்தின் மீது கவனம் செலுத்தி, தினசரி நிகழ்வுகளில் அற்புதமான முறையில் பற்றின்றி இருக்க முடிந்தது. §§

“இது சட்டப்பூர்வமானதா?”§

1990 களின் மத்தியில், இந்த பிரபலமான மனது உலகளாவிய வலையை (World Wide Web) ஏற்றுக்கொண்டது. தங்கள் மடம் மற்றும் உலகம் செயல்படும் விதத்தை இந்த வலை மாற்றி அமைத்து விடும் என்பதை சிறிதும் அறியாமல், துறவிகள் இந்த அற்புதமான நிகழ்வின் தொடக்கத்தை கண்காணித்து வந்தனர். அது புதிதாக, உற்சாகம் மற்றும் குழப்பம் அளிப்பதாக மற்றும் பயனருக்கு சிறிதும் வசதியாக இல்லை என்றாலும், துறவிகள் அதன் தொடக்கநிலை பயன்களை ஒன்றுதிரட்டி குருதேவாவிடம் காண்பித்தனர். விரைவில் அவரது முக்கிய வெளியீடுகள் எல்லோரும் படிப்பதற்காக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது, மற்றும் அது வரலாறு அதுவரை அறிந்து இருந்த விநியோக அமைப்பு போல இல்லாமல், இலவசம் போல தோன்றியது. §§

ஒரு நாள் காலையில், துறவிகள் ஒரு டயல்-அப் மோடம் துணையுடன் குருதேவாவின் கணினியை இணையத்துடன் இணைத்தனர். அவர் இணையதளத்தில் சிறிது நேரம் உலாவிய பிறகு, “இதற்கு கட்டணம் யார் செலுத்துகிறார்கள்? இது சட்டப்பூர்வமானதா?” என்று அவர் அக்கறையுடன் கேள்வி கேட்டார். அங்கிருந்த யாராலும் சரியாக விளக்க முடியவில்லை என்றாலும், அது சட்டப்பூர்வமானதாக இருந்தது. அது ஒரு சில மாதங்களில், இந்துயிசம் டுடே, டான்சிங் வித் சிவா, ஓம் கிராபிக்ஸில் இருந்து ஒரு பக்கம் மற்றும் அவரது வேறு சில படைப்புக்களையும் வெளியிடுவதற்கு ஒரு முக்கிய தளமாக அமைந்தது. §§

துறவிகளின் திறமைகள் பக்குவமடைந்ததும், ஹோபி இந்தியர்கள் தங்கள் கலாச்சாரத்தை பதிவு செய்து பாதுகாக்க ஒரு இணையதளத்தை வடிவமைத்து உதவி செய்வதைப் போன்று, அவர் துறவிகளின் திறமைகளை மற்றவர்களுடன் தாராளமாக பகிர்ந்துகொண்டார். இந்த புதிய ஊடக பயன்பாட்டில் கவாய் மேயரின் அலுவலகமும் உதவியை நாடி மடத்திற்கு வந்தது. §§

1998 ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் ஒரு நாள், வெளியீட்டு மையத்தில் இருந்த கலந்தாய்வு அறையான செடார் ரூமில், தனது நிபுணர்கள் குழுவை ஒன்று திரட்டி, மடத்தில் நடைபெறும் தினசரி நிகழ்வுகளை உலக மக்களுடன் பகிர்ந்துக்கொண்டு, டிஜிட்டல் முறையில் தினமும் உலகெங்கும் இருக்கும் தனது ஆன்மீக கூட்டமைப்பை ஒன்று சேர்க்க முடியுமா என்று கேள்வி கேட்டார். அந்த வேண்டுகோள் காரணமாக செய்திகளின் கலவை, ஒலிப்பதிவு செய்யப்பட்ட உரைகள், புகைப்படங்கள், ஆன்மீக குறிப்புக்கள் மற்றும் மடத்தில் தான் மேற்கொண்ட பணி மற்றும் உலகெங்கும் இருந்த உறுப்பினர்களின் நடவடிக்கைகள் பற்றிய துணுக்குகளுடன் வெளிவந்த “டுடே அட் கவாய் ஆதீனம்,” (சுருக்கமாக டாகா), உலகின் முதல் வலைப்பதிவாக (blog) இருக்கலாம் என்று தோன்றுகிறது. §§

அவர் மூன்று வருடங்களுக்கு பெரும்பாலும் தினமும், யாத்திரிகள் மற்றும் சாதகர்களை இணையத்தில் தொடர்பு கொண்டு, அவர்களின் ஆன்மீக கேள்விகளுக்கு பதில் அளித்தார் அல்லது தார்மீக விஷயங்களைப் பற்றி பேசினார். இணையம் மூலம் தன்னை தொடர்புகொண்ட பார்வையாளர்களை, சைபர்காடெட்ஸ் (இணைய மாணவர்கள்) என்று பெயரிட்டு, மின்னஞ்சல் மூலம் தனது கேள்விகளை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அவரது பதில்கள் பதிவு செய்யப்பட்டு, பெரும்பாலும் அதே நாள் டாகாவில் இடுகை (post) செய்யப்பட்டன. இவை உலகின் முதல் வலையொலிகளில் ஒன்றாக இருக்கக்கூடும். இதைப்போன்று நூற்றுக்கணக்கான சைபர்டாக்ஸ் தோன்றின, மற்றும் வரலாற்றில் முதல் முறையாக, இணையதளம் மற்றும் கணினி இருக்கும் ஒருவர், இலவசமாக கிட்டத்தட்ட நிகழ் நேரத்தில், வாழ்க்கையின் யதார்த்தமான பிரச்சனைகளைப் பற்றி, உண்மையான மக்களுக்கு சற்குரு அறிவுரை வழங்குவதை கேட்க முடிந்தது. §§

டாகாவில் ஒரு சிறிய குறை இருப்பதை, குருதேவா தெரிந்து கொண்டார். அவர் பயணம் செய்த போது, ஒவ்வொரு நகரத்திலும் கடந்த சில நாட்களில் தான் எதிர்கொண்ட அனுபவங்களைப் பற்றி விளக்குவது அவரது வழக்கமாக இருந்தது. அவர் மலேசியாவிற்கு வந்த போது, கடந்த வாரம் இந்தியா மற்றும் மொரீஷியஸ் தீவில் நடைப்பெற்ற சம்பவங்களைப் பற்றிய தகவல்களை வழங்குவார். 1999 ஆம் ஆண்டில், தனது கூட்டங்களில் கூடியிருந்த பார்வையாளர்கள் கவனம் செலுத்தாமல் பெரும்பாலும் ஆர்வமின்றி இருப்பதை உணர்ந்து கொண்டார். அவர் இதைப்பற்றி விசாரித்த போது, “குருதேவா, இவற்றை எல்லாம் நாங்கள் நேற்று டாகாவில் பார்த்து விட்டோம்,” என்று பதில் அவரது சீடர்கள் அளித்தார்கள். தனது சீடர்களை டாகா ஒன்றாக பிணைத்து இருக்கிறது என்பதை அவர் உணர்ந்ததும், தனது பயணங்களின் போது பேசுவதற்கு புதிய விஷயங்களை தேடவேண்டும் என்பதை அவர் தெரிந்துகொண்டார்.§§

இணையதளம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்தது, மற்றும் எதிர்காலத்தில் அவரது மடம் இந்து உலகில் ஒரு முன்னணி இணைய களஞ்சியமாக மாறவிருந்தது. குருதேவா சில இந்து சடங்கு அல்லது தகவலை தேடிய போது, அவருக்கு அவர் எழுதிய படைப்புக்களே இணைப்பாக (link) தேடல் பொறி (search engine) வழங்கியது. பல வருடங்கள் கழித்தும், “இந்து சமயம்" தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கூகிள் தேடல் முடிவுகளில் தங்கள் மடத்து படைப்புகள் தொடர்ந்து மேலிடத்தில் இருப்பதைக் கண்டு துறவிகள் வியந்தனர். §§

1995 ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்திய பயணம் §

டிசம்பர் 1995 முதல் பிப்ரவரி 1996 வரை, குருதேவா ஆறு நாடுகள் மற்றும் இந்தியா முழுவதும் பயணம் செய்த போது, ஒவ்வொரு ஊரிலும் அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது அவர் மேற்கொண்ட பல முயற்சிகள் உயர்வானதாக இருந்தாலும், அது வேறுவழியில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தன. அந்த பயணத்தின் முடிவில் ஒரு நாள் மதியம், தெற்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செய்த ஒரு விமானத்தில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடைபெற்றது. §§

உஜ்ஜைனில் இருந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க சைவ சித்தாந்த மையத்தில் 5,000 அன்பர்கள் காத்து இருந்தார்கள். ஹவாய் மடத்தில் இருந்து வரவிருந்த உலகப்புகழ் பெற்ற சற்குருவை, புகழ்பெற்ற மகாகலேஷ்வர் சிவன் கோயில் உட்பட, நகரத்தில் இருந்த புனிதமான மையங்களுக்கு வழிநடத்தி செல்ல, விமான நிலையத்தில் யானைகள் தயாராக இருந்தன. ஆனால் மும்பை நோக்கி சென்றுக்கொண்டு இருந்த விமானத்தில் குருதேவாவிற்கு ஒரு முறை வலிப்பு ஏற்பட்டு, தனது இருக்கையில் சுமார் இரண்டு நிமிடங்களுக்கு சுயநினைவை இழந்தார். அவருக்கு உதவி செய்ய விமான பணிப்பெண்கள் விரைந்து வந்தனர் மற்றும் அவருக்கு முன்பாக அமர்ந்து இருந்த ஒரு மருத்துவர் சில ஆலோசனைகளை வழங்கி, அவரது நாடித் துடிப்பை பரிசோதித்து அந்த சம்பவம் சாதாரணமானது என்றும் அதை பொருட்படுத்த வேண்டாம் என்றும் தெரிவித்தார். குருதேவா மனம் தளராது அந்த கடினமான பயணத்தை தொடரவேண்டும் என்று வற்புறுத்தி, அடுத்த நாள் உஜ்ஜைன் நகரத்தில் ஒரு முக்கிய சொற்பொழிவை வழங்கி, அதன் பிறகு மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு பயணம் செய்தார். §§

சில நாட்கள் கழிந்து, குருதேவாவிற்கு மேலும் சில முறை வலிப்புக்கள் வந்தன. அவருடன் இருந்த இரண்டு சுவாமிகள், இந்த வலுவான வலிப்புக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவர் உயிருக்கு ஆபத்தாக முடியுமோ என்றும் பயந்தனர், ஆனால் அது அவருக்கு இயல்பாக உறக்கத்தில இருந்து எழுவது போன்ற அனுபவமாக இருந்தது. அவர் அந்த சம்பவத்திற்கு பிறகு, “உங்களால் அந்த அருமையான வாசனையை நுகர முடிந்ததா? நான் எவ்வளவு நேரம் சுயநினைவின்றி இருந்தேன்?” என்று கேட்பார். அது ஒரு சில நிமிடங்கள் நீடித்தது என்பதை தெரிந்துகொண்டாலும், அந்த பயணம் தொடரவேண்டும் என்று வற்புறுத்துவார். காலப்போக்கில் இந்த சம்பவங்களின் வீரீயம் குறைந்தது என்றாலும், 2001 ஆம் ஆண்டு அவரது உயிர் பிரியும் வரை அவை தொடர்ந்து தோன்றிக்கொண்டு இருந்தன. §§

அவர் கவாய் திரும்பியதும், வலிப்பு ஏற்படுவதற்கான காரணத்தை தெரிந்துக்கொள்ளும் நோக்கத்துடன், ஒரு MRI எடுக்கவேண்டும் என்று அவரது மருத்துவர்கள் வலியுறுத்தினார்கள். துறவிகள் இந்த கருத்தை பற்றி விவாதித்த போது, “தேவையில்லை. நான் மருத்துவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பவில்லை. அவர்கள் உங்களை பயமுறுத்தி, உங்கள் உயிர் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து, உங்களிடம் இருக்கும் பணத்தை எல்லாம் சுரண்ட ஆரம்பித்து விடுவார்கள். அது தொடங்கினால் என்றும் முடிவுக்கு வருவதில்லை. அது வாழ்வதற்கான வழிமுறை இல்லை,” என்று அவர் கூறினார். எந்த சோதனையும் அனுமதிக்கப்படவில்லை.§§

தனக்கு தோன்றியிருந்த நோயின் தீவிரத்தை முழுமையாக அறிந்து இருந்த குருதேவா, தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைப் பற்றி பல நாட்களுக்கு தியானம் செய்தார். தான் மூன்று வருடங்கள் ஓய்வு எடுக்கப்போவதாகவும், இனி பயணம் செய்யாமல் கவாயில் தங்கியிருக்கப்போவதாகவும் தனது துறவிகளிடம் ஒரு நாள் தெரிவித்தார். அவர் மிகவும் கவனமாக திட்டமிட்டு மேற்கொண்ட உற்சாகம் நிரம்பிய பயணங்களில் இருந்து, அந்த அறிவிப்பு முற்றிலும் மாறுபட்டு இருந்தது. சிவபெருமானுடன் திருநடனம், சிவபெருமானுடன் வாழ்தல் மற்றும் சிவபெருமானுடன் ஐக்கியமாதல் என்ற தலைப்பில் தான் எழுதிய மூன்று புத்தகங்களில் இருந்து 1,000 பக்கங்களை உள்ளடக்கிய தி மாஸ்டர் கோர்ஸ் ட்ரைலாஜியை (பிரதான பயிற்சி வகுப்பு - முத்தொகுப்பு), மரபுரிமை செல்வமாக உலகிற்கு வழங்கும் பொருட்டு, தான் கவாய் தீவில் தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளதாக, தனது துறவிகள் எல்லோரிடமும் சில நாட்கள் கழித்து அறிவித்தார். அவர் எந்த ஒரு சூழ்நிலையையும், ஒரு நேர்மறை சக்தியாக உருமாற்றி, ஒரு பின்னடைவை சாதகமாக பயன்படுத்தி எவ்வாறு விசேஷமான ஒன்றை உருவாக்கினார் என்பதற்கு அது ஒரு அருமையான உதாரணமாக இருந்தது. ஒரு இயல்பான சூழ்நிலையில் அந்த விசேஷமான படைப்பு உருவாகி இருக்குமா என்பது சந்தேகம் தான். §§