குருமார்களின் சரித்திரங்கள்

Page 44:§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/44_guru07_02.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

அத்தியாயம் இருபத்தி ஒன்பது§

குருவின் ஊக்கமளிக்கும் பண்பு §

1980 மற்றும் 1990 களில் இலங்கையில் வெடித்த ஈழப்போர் காரணமாக அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான இலங்கைவாசிகள் வெளியேற்றப்பட்ட போது, அவர்கள் புதிய நாடுகளில் வாழ்க்கையை தொடங்க குருதேவா உதவி செய்து வழிகாட்டவும் செய்தார். இதற்கு முன்னர் நடைப்பெற்ற இனக்கலவரத்தின் போது, அவர்கள் யோக சுவாமியின் காலடியில் விழுந்ததை போல, இலங்கை தமிழர்கள் குருதேவாவிடம் தங்கள் வேதனைகளை பகிர்ந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான சோகக்கதைகளை கேட்டு, “இத்தகைய கொடூரமான சம்பவங்களுக்கு இறைவன் எவ்வாறு அனுமதி வழங்குகிறார்?” என்று கேள்விக்கு மீண்டும் மீண்டும் பதில் சொல்வது ஒரு கடினமான வேலையாக இருந்தது. §§

அந்த காலகட்டம் முழுவதும், குருதேவா எந்த ஒரு அழைப்பையும் தவிர்க்கவில்லை, தங்கள் மகனை இழந்ததால் அல்லது தங்கள் வீடு எரிந்து சாம்பலாவதை பார்த்ததால் அல்லது தங்கள் தாய்நாட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு ஒரு புதிய இடத்தில் புதிய வாழ்க்கையை தொடங்கியதால், ஆதரவற்ற நிலையில் இருந்த ஒரு குடும்பத்திற்கு தனது நேரத்தை ஒதுக்க என்றுமே தவறியது இல்லை. அவர்கள் குருதேவாவிற்கு செய்த தொலைப்பேசி அழைப்புக்கள் ஒரு உயிர்ப்பாதையாய் விளங்கியது என்பதை அவரும் அறிந்து இருந்தார். இருபது ஆண்டுகளுக்கு தொடர்ந்த இந்த அழைப்புக்கள் இந்தியா, கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, டென்மார்க், சுவீடன், நார்வே, பின்லாந்து, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் பிரான்சு நாடுகளில் இருந்து வந்தன. இலங்கை தமிழ் இந்துக்கள் மற்றும் சிங்கள பெளத்த சமயத்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற மிகப்பெரிய இனக்கலவரம் மற்றும் அதைத் தொடர்ந்த ஈழப்போர் காரணமாக 700,000 தமிழர்கள் வெளியேற்றப்பட்டார்கள். §§

1983 ஆம் ஆண்டு படுகொலைகள் தொடங்குவதற்கு சில மாதங்கள் முன்பு, குருதேவா தெய்வீக அருளுடன் இலங்கையில் இருந்த இந்துக்கள் வசித்த பகுதி முழுவதும் பயணம் செய்தார். அவர் அனந்தபூராவில் இருந்த போது, யாழ்ப்பாண தீபகற்பம் மற்றும் இலங்கை நிலப்பகுதிக்கு இடையே குறுகலான தரைப்பாலமாக விளங்கிய யானை பாஸில் ஒரு வெடிகுண்டு வெடித்தது. அன்று காலையில் அவரும் துறவிகளும் கிளம்ப வேண்டும், ஆனால் குருதேவா கிளம்புவதை தாமதித்து வந்தார். அவர்கள் இறுதியில் மதிய வேளையில் கிளம்பி, தாமதமாக வெடிகுண்டு வெடித்த இடத்திற்கு வந்த போது, சிங்கள இராணுவத்தினரின் தீவிரமான சோதனையை எதிர்கொண்டனர். அவர்கள் திட்டமிட்டபடி காலையில் கிளம்பி இருந்தால், வெடித்த சமயத்தில் அவர்கள் சம்பவ இடத்தில் இருந்திருக்க வேண்டும். மேலும் அந்த வெடிகுண்டு தனது இலக்கை தாக்கி இருந்தால் (அந்த வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை), சில மாதங்களுக்கு பிறகு நடந்த கலவரம் அங்கே அப்போதே தொடங்கி இருக்கும். “இந்து சமயத்தில் வலுவாக நிலைத்து இருங்கள்!” “மரணத்தை கண்டும் எப்போதும் அச்சத்தில் இருப்பவர்களை கண்டும் அஞ்சவேண்டாம்” என்று அவர் டஜன் கணக்கான கோயில்களில் வழங்கிய தகவல், எதிர்காலத்தில் வரவிருந்த கடினமான காலங்களில் இலங்கை இந்துக்களுக்கு பாதுகாப்பை வழங்கியது. §§

1985 ஆம் ஆண்டு, யாழ்ப்பாணத்தை சுற்றியும் சில பயங்கரமான சம்பவங்கள் நடந்ததும், போரில் தங்கள் வீடுகளை இழந்து ஆதரவில்லாமல் தவித்தவர்களுக்கு, இலங்கை அகதிகள் நிவாரண நிதியை தொடங்கி மேற்கு நாடுகளில் இருந்த தமிழர்களிடம் இருந்து மிகவும் தேவையான நிதியுதவியை திரட்டும் பொருட்டு, குருதேவா தனது துறவிகள் குழுவை ஒன்று திரட்டினார். அவர் இந்த பணியில் பல மாதங்கள் ஈடுபட்டு இருந்தார். நிதியுதவிகள் குவிய தொடங்கியதும், அவை தேவையான மக்களுக்கு போய் சேர்கிறதா என்பதை உறுதி செய்ய, அவர் ஒவ்வொரு பரிவர்த்தனையையும் கவனமாக கண்காணித்தார். அவர் தொடங்கிய அந்த புது முயற்சி, மற்றவர்களும் அந்த தீவிற்கு நன்கொடைகளை திரட்டி நிதியுதவி அனுப்ப தூண்டுதலாக அமைந்தது.§§

image§

பெரும்பாலும் கவாய் ஆதீனத்தில் தினமும், பார்வையாளர்கள் குரு பீடத்தில் குருதேவாவை சந்தித்து, தங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்கள் மற்றும் பிரச்சனைகளை தெரிவித்து, அதற்கு ஆன்மீக ஆலோசனையை பெற்று, வாழ்க்கைக்கு உறுதி அளிக்கும் ஆசிகளுடன் கையில் ஒரு புத்தகத்துடன் கிளம்பினார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

கலவரம் தொடங்கியவுடன், குருதேவா அளவெட்டியில் இருந்த தனது ஆசிரமம் மற்றும் பள்ளியை மூடினார். பதினைந்து வருடங்கள் கழித்து அவர் வழங்கிய குறிப்பு:§§

image§

ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் நடைபெற்ற குரு பூர்ணிமா விழாவில், துறவிகளும் சீடர்களும் குருதேவாவை ஊர்வலமாக, சுயம்பு லிங்கம் வரை சன் மார்க பாதையில் அழைத்து சென்று, அங்கே அவருக்கு பாத பூஜை செய்வார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ஊரில் இருந்த முதியோர்கள் கொடுத்த தகவலின் மூலம் விரைவில் போர் வரவிருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு, நாங்கள் இலங்கையில் எங்கள் நடவடிக்கைகளை நிறுத்தி, எங்கள் பணிகளை அமெரிக்காவிற்கு வெளியே மொரீஷியஸ் நாட்டில் கவனம் செலுத்தினோம். இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் மொரீஷியஸ் நாட்டில் மறுபிறவி எடுக்க விரும்பியதாக முதியவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டோம். அதனால் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் மொரீஷியஸ் நாட்டில் மறுபிறவி எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு தற்போது பதினைந்து முதல் பதினெட்டு வயது வரை இருக்கலாம். நான் மொரீஷியஸ் நாட்டில் இளைஞர் முகாம்களை நடத்த இரண்டு சுவாமிகளை அனுப்பினேன். அந்த நாட்டில் இருக்கும் எங்கள் சமயப் பணியாளர்கள் சம்சாரிகளாக இருக்கிறார்கள், சமாஜத்தில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு சமயப் பணியாளர் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறார். ஒவ்வொருவரும் மற்றவர்கள் மீது கவனம் செலுத்துகின்றனர். §§

image§

குருதேவா ஒவ்வொரு கண்டத்திலும், இந்து கோயில்களை நிர்மாணித்து, அதன் அறங்காவலர்களுக்கு வழிகாட்டி, அவர்களுக்கு நிதி திரட்டி உதவி செய்யவும் அங்கிருந்த சமூகங்களுடன் இணைந்து செயல்பட்டார். அவர் தனது வாழ்நாளில் 37 கோயில்களை நிர்மாணித்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

மேற்கு நாடுகளில் குடிபுகத் தொடங்கிய தமிழர்கள் குருதேவாவின் கம்பீரமான தோற்றம், பாரம்பரிய முறைகள் மற்றும் தெளிவான வழிகாட்டலின் மதிப்பை முழுமையாக புரிந்துக் கொண்டார்கள். அவர் அவர்களது இழப்புக்களை பற்றி புலம்பாமல், அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புக்களை காண்பித்து, தங்களது புதிய நாடுகளில் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ ஆரம்பித்து அந்த சமூகத்தில் பங்குகொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார். “உங்கள் பயணப்பெட்டிகளை திறந்து வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள்,” தனது கருத்தை தெளிவாக சுருக்கமாக கூறினார். பலர் தங்களது புதிய நாட்டில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல், இலங்கைக்கு அடுத்த விமானத்தை பிடிக்க காத்து இருப்பதை போல வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் சென்ற புதிய நாட்டுடன் ஒன்று சேர்வது, குடியுரிமை பெறுவது, மக்கள் தொடர்புகள் பற்றி அவர் உட்பார்வைகளை வழங்கி, கலாச்சாரம் மற்றும் சமயம் வழிபாட்டில் இருந்து தோன்றும் என்றும், தங்கள் பாரம்பரியத்தை காப்பாற்றி அதை தங்கள் குழந்தைகளுக்கு வழங்க அவர்களுக்கு அருகில் கோயில் இருக்கவேண்டும் என்று கூறி, ஒவ்வொரு குழுவும் ஒரு கோயிலை தொடங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் சிறிதும் தயங்காமல், தனக்கு பகல் அல்லது இரவு என்ற பாரபட்சம் இல்லாமல் எந்த நேரத்திலும் அழைப்பு வரும் என்பதை தெரிந்து, தனது சொந்த கைப்பேசி எண்ணை அவர்களுக்கு வழங்கினார். §§

1995 ஆம் ஆண்டு, குருதேவா இரண்டு துறவிகளின் துணையுடன் 21 நாள் ஐரோப்பா பயணம் மேற்கொண்டு ஜெர்மனி, டென்மார்க், ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு சென்றார். அவர் அந்த நாடுகளில் இருந்து தமிழ் சமூகங்களை சென்று பார்த்து, ஹாம் நகரின் தெருவில் 11,000 மக்களின் அணிவகுப்பு மரியாதையை பெற்று, மதம் மாறியவர்களை மீண்டும் இந்து சமயத்திற்குள் அழைத்து வந்து, 1968 ஆம் ஆண்டு ஷும் மொழி வெளிவந்த அஸ்கோனா நகரத்திற்கு மீண்டும் சென்று, இந்த நாடுகளில் இருந்த ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகளின் வாழ்க்கையை மேம்படுத்தினார்.§§

அவர் அவர்களிடம் “ஓம்காரத்தை" உச்சரித்து அமைதியை பிரார்த்தனை செய்து, இலங்கையில் இருந்து வெளியேறாமல் இருந்தவர்களுக்கு சக்திகளை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அவர் 1983 ஆம் ஆண்டில் இருந்து சொல்லி வந்த தகவலை மீண்டும் கூறி, உள்ளூர் சமூகத்துடன் அன்புடன் பழகும் வழிகளை அவர்களுக்கு கற்றுத் தந்தார்:§§

நீங்கள் இந்த நாட்டிற்கு உங்கள் கர்மவினைகளின் காரணமாக வந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு இங்கே கொழும்பு பல்கலைகழகத்தை காட்டிலும் அதிகமான வாய்ப்புக்கள் கிடைக்கும். உங்கள் குழந்தைகளுக்கு ஒரு பள்ளியில் சேர்த்து, நீங்கள் இருக்கும் நாட்டின் மொழியை தெரிந்துகொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள். இலங்கையில் நிரந்தர அமைதி திரும்பியதும், நீங்கள் அந்த நாட்டிற்கு திரும்பி செல்லலாம். §§

நாம் எல்லோரும் ஆதரவு அளித்த அரசுகளை மனமுவந்து பாராட்டுவோம் என்று நினைக்கிறேன். இதற்கு நாம் நன்றிகடனை பலவழிகளில் செலுத்தலாம். அதன் அங்கமாக, நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் பார்த்து புன்னகைக்கலாம். நீங்கள் சிரித்ததால் அவர்கள் சிரிக்கிறார்கள் மற்றும் நீங்கள் சிரித்ததால் விரைவில் உலகமே சிரிக்கிறது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க, நீங்கள் மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும். §§

திருமதி. புவனேசம் வீரகத்தியர் பின்வரும் குறிப்பை பகிர்கிறார்:§§

அவர் பெர்லின் நகரத்தில் இருந்த ஒரு சிறுவர்கள் அகதிகள் முகாமிற்கு சென்று, சிறுவர்களுக்கு தேவையான பொருட்களை ஏற்பாடு செய்து தருமாறு அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். அவர் அதன் பிறகு ஒரு தாய்மார் குழுவினரை சந்தித்து பேசினார். அவர் அங்கிருந்த எங்களிடம், இந்த சிறுவர்களின் வாழ்க்கைகள் ஒரு தாயின் அன்பிற்காக ஏங்குவதாக தெரிவித்தார். சிறுவர்கள் மற்றும் மற்ற அகதிகளை எங்கள் வீட்டிற்கு உணவு அருந்த அழைத்து, அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ள அவர் எங்களுக்கு உற்சாகமளித்தார். எங்களில் பலர் இந்த பழக்கத்தை இன்றும் கடைப்பிடித்து வருகிறோம். §§

குருதேவா தனது பயணங்களின் போது வழங்கிய பல ஆயிரக்கணக்கான முகவரி அட்டைகள் மற்றும் புகைப்படங்களில் இருந்த விசேஷமான அற்புத சக்தியை பற்றி பலர் கூறுகிறார்கள். குருதேவாவின் புகைப்படத்தை காண்பித்ததும், தங்களால் இலங்கை இராணுவத்தின சோதனை சாவடிகளை சிக்கலில்லாமல் கடக்க முடியாததாக சிலர் குறிப்பிட்டனர். இது தொடர்பாக எம். இளங்கோவன் தனது அனுபவத்தை குறிப்பிடுகிறார்: §§

1990 ஆம் ஆண்டில் எனக்கு 14 வயதாக இருந்த போது, நான் இந்தியாவிற்கு சென்ற ஒரு மீன்பிடி படகில் இலங்கையில் இருந்து கிளம்பினேன். எனது பணப்பையில் புகைப்படமாக குருதேவாவின் படம் மட்டுமே இருந்தது. அந்த புகைப்படம் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள உதவிகரமாக இருந்தது. அந்த புகைப்படத்தை நான் இன்றும் எனது பணப்பையில் வைத்து இருக்கிறேன். குருதேவா என்னுடன் எப்போதும் இருந்து, உதவி செய்து வழிகாட்டி வருகிறார். §§

இலங்கையில் நடந்த சண்டையின் போது இறந்த தமிழ் மக்களுக்காக அவர் அந்தர்லோகத்தில் இருந்தது மட்டுமல்லாமல், குருதேவா அவர்களுக்கு அதிக வலுவான சூட்சுமமான வழிகளில் காட்சியளித்தார். அவர் காலை நேரங்களில் உறங்குவதை கண்ட அவரது கவாய் மடத்தின் துறவிகள், அவரிடம் அவரது உடல்நலம் பற்றி விசாரித்தார்கள். அவர் தான் நன்றாக இருப்பதாக அவர்களுக்கு உறுதி அளித்தார்; அவர் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் அங்தர்லோகங்களில் சுறுசுறுப்பாக இயங்கி, தன்னை காண நீண்ட வரிசையில் காத்து இருந்த இலங்கையில் இறந்த ஆன்மாக்களுக்கு ஆசிகளை வழங்கி, அவர்கள் நெற்றியில் விபூதியை பூசிக்கொண்டு இருந்தார். அவர் தொலை தூரத்தில் இருந்த தனது சீடர்களை அந்தர்லோகத்தில் சந்தித்து, அவர்கள் வாழ்க்கை மற்றும் கர்மவினைகளில் உதவி செய்து ஆறுதல், வழிகாட்டல் மற்றும் பாதுகாப்பை வழங்கினார். §§

கனடாவின் டொரன்டோவை சேர்ந்த திரு. சத்குநேந்திரன் தனது நினைவுகளை பகிர்கிறார்:§§

குருதேவா எங்களுக்கு ஒரு ஆன்மீக குருவாக மட்டும் இல்லாமல், கலாச்சார அதிர்ச்சியில் இருந்த இளையவர்கள் மற்றும் முதியவர்களுக்கு அதிக மரியாதைக்குரிய ஆலோசகராகவும் இருந்தார். நான் குருதேவாவை சந்தித்த ஒவ்வொரு முறையும், அவர் இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை பற்றி விசாரிப்பார். அவர் மத்தியஸ்தராக தனது சேவையை வழங்க எப்போதும் தயாராக இருக்கும் அளவிற்கு, தனது சற்குரு யோக சுவாமியை கண்டுகொண்ட இந்த நாடு மற்றும் அதன் மக்களின் மீது, இந்த தலைசிறந்த குருவிற்கு அன்பு இருந்தது. அவர் இன்றும் அந்தர்லோகத்தில் இருந்துக்கொண்டு, அமைதிக்காக முயற்சி செய்து வருகிறார் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். §§

அப்போது இருந்த சில சவால்களை பற்றி குருதேவா விளக்குகிறார்: §§

அந்த காலகட்டத்தில், இலங்கை சீடர்கள் அமைதியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள எங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டோம். இலங்கை மக்கள் ஒருமுறையின்றி குடியேறிக்கொண்டு இருந்ததால், நாங்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டியிருந்தது. ஜெர்மனியில் இலங்கை சிறுவர்கள் “கன்டெய்னர் சிறுவர்கள்" என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் ரஷ்யாவிற்கு கடத்தப்பட்டார்கள், மற்றும் அவர்கள் ரஷ்யாவில் கன்டெய்னர்களில் வைக்கப்பட்டு ஜெர்மனிக்கு கடத்தப்படுவார்கள். பலர் மூச்சடைப்பு ஏற்பட்டு இறந்தனர். ஆனால் பெரும்பாலானோர் நல்ல நிலையில் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு நாங்கள் தமிழ் குடும்பங்களிடம் கேட்டுக்கொண்டோம். அகதிகளிடம் ஜெர்மன் அரசு கருணை மற்றும் அன்புடன் உதவி செய்தது. §§

image§

இலங்கை, ஃபிஜி, டெக்சாஸ் மற்றும் மற்ற இடங்களில், கோயில் குடமுழுக்கு விழாவின் போது, குருதேவா கோயில் கோபுரத்தை புனிதமான கும்பத்தால் அபிஷேகம் செய்து வைத்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

“கோயில்களை நிர்மாணம் செய்யுங்கள்!”§

குருதேவா பக்குவமாக வாழ தொடங்கியதில் இருந்து, மதம் மற்றும் கலாச்சாரத்தின் மையமாக இந்து கோயில் இருக்கவேண்டிய தேவையை உணர்ந்து கொண்டார். அவர் பல்வேறு கண்டங்களில் 37 கோயில்களை திட்டமிட்டு நிர்மாணம் செய்வதில் அல்லது குடமுழுக்கு நடத்துவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இந்துக்கள் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும், அவர்கள் இயல்பான வசதியான உணர்வை பெறுவதற்கு, அவர்களுக்கு அருகில் கோயில்கள் இருக்கவேண்டும், குறிப்பாக மகாதேவர் மற்றும் தேவர்களை பக்தர்கள் அணுக உதவியாக இருக்கும் கோயில்களின் தேவையை அவர் அறிந்து இருந்தார். மேலும் தேவர்கள் சிலை வடிவங்களாக மட்டுமே இருக்கின்றன என்று சிலசமயம் குறிப்பிடப்படுவதைப் போல இல்லாமல், உண்மையில் அவர்கள் அந்தர்லோகத்தில் வாழும் சக்திகள் என்று அவர் எல்லோருக்கும் உறுதி அளித்தார். சொர்க்க லோகத்தில் வாழும் சக்திகள் என்ன செய்கிறார்கள் மற்றும் தங்களிடம் உதவியை நாடும் பத்தர்களுக்கு அவர்கள் எவ்வாறு யதார்த்தமான ஆதரவை வழங்குவார்கள் என்று அவர் தனது சொந்த அனுபவத்தில் அதிக ஆர்வத்துடன் விளக்கினார். §§

image§

‘கடவுள்’ இந்து கோயிலில் ஒவ்வொரு வாரமும் நடைபெற்ற ஹோமம், மடம் மற்றும் அன்பர்களின் ஒரு முக்கிய சடங்காக மாறியது. அதன் பிறகு அவர் ஒரு சிறிய சொற்பொழிவை வழங்கி, சைபர்கேடட்ஸ் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து, வந்திருந்த அன்பர்களுக்கு தனது ஆசிகளை வழங்குவார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

எனது சீடர்கள் அடிக்கடி யாத்திரை மேற்கொண்டு, வழிபட்டு ஆன்மீக பாதுகாப்பை பெறுவதற்கு விநாயகர், முருகன் அல்லது சிவன் கோயில்கள் இருக்கும் இடத்தில் விவேகத்துடன் குடி புகுவார்கள். அத்தகைய புனிதமான கோயில்களுக்கு செல்ல, ஒரு நாளை விட அதிகமான பயணதூரத்தில் யாரும் வாழக்கூடாது. மூன்று லோகங்களும் சந்திக்கும் இந்து கோயில்களில், பக்தர்கள் நமது சமயத்தை சேர்ந்த தேவர்களை ஆவாகனம் செய்கிறார்கள். மாளிகை போல கட்டப்படும் கோயிலில், தேவர்கள் வாசம் செய்கிறார்கள். அது பூமியில் இருக்கும் மற்ற இடங்களை போல இல்லாமல், அது கண்களுக்கு தென்படும் தேவர்களின் பிரத்யட்சமான வீடாக, ஒரு புனிதமான இடமாக இருக்கிறது. ஒரு இந்து கோயிலுக்குள் நுழையும் போது, மிகவும் நுணுக்கான முறையில் தன்னை இந்த தேவர்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும். §§

மூன்றாவது லோகத்தில் வாழ்ந்து, நமது பூசாரிகள் பூஜை செய்து கற்சிலைகளில் அவர்களின் சக்திகளை ஆவாகனம் செய்யும் போது அவர்கள் மூன்றாவது லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதால், நீங்கள் ஒரு கோயிலுக்குள் நுழையும் போது மனதில் கவலை, பொறாமை மற்றும் கோபத்துடன் நுழைந்து, மனச்சுமைகளில் இருந்து விடுபட்டு பாதுகாப்பு உணர்வுடன் வெளியே வரும் போது நான் எதை நினைத்து வருந்திக்கொண்டு இருந்தேன் என்று சிந்திக்கும் அளவிற்கு, தலைசிறந்தவர்களாக விளங்கும் தெய்வீக மனநல மருத்துவர்களாக இருக்கிறார்கள். §§

பெரும்பாலான சுவாமிகள் கோயில்களை ஸ்தாபனம் செய்வதில் ஆர்வமாக இல்லாமல் சமூக மேம்பாடு, தத்துவ பாடங்களை கற்பித்தல் மற்றும் யோகத்தில் கவனம் செலுத்த விரும்பும் போது, குருதேவாவின் அணுகுமுறை மாறுபட்டு இருந்தது. அவர் தனது அணுகுமுறையை விளக்குகிறார்:§§

1980 களில், நமது நாட்டின் பல்வேறு மாகாணங்களில், கோயில்களை ஸ்தாபனம் செய்வதில் தாங்கள் தீர்க்கமான முடிவை எடுக்க உதவி செய்யவேண்டும் என்று, புதிதாக உருவாகும் கோயில் மற்றும் கலாச்சார குழுக்களின் இந்து இந்திய சமூகத் தலைவர்கள் என்னை அணுகினார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவியாக முதன்மை கடவுளாக வழிபடும் விநாயகரின் பெரிய சிலையை பரிசாக வழங்கினோம். இந்த காலகட்டத்தில் வட அமெரிக்கா முழுவதும் கோயில் குழுக்களுக்கு ஊக்குவிப்பும் உத்வேகமும் வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த இரண்டு வருடங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால், தாதிக்கள் மற்றும் தாதாக்கள், அப்பாக்கள் மற்றும் அம்மாக்கள் மற்றும் அவர்களது சந்ததிகள் திருப்தி அடைந்து நிதியுதவி வழங்கத் தொடங்கியதால் மற்ற தெய்வங்களை வைக்க பல மில்லியன் டாலர் செலவில் கோயில்கள் கட்டப்பட்டன. இதன் மூலம் நாங்கள் இந்து மக்களுக்கு புதிய சேவையை வழங்க ஆரம்பித்தோம். §§

அதே சமயத்தில் நாங்கள் ஐரோப்பாவில் கோயில்களை தொடங்க ஊக்குவிக்க ஆரம்பித்தோம். நாங்கள் அடித்தளத்தில் பூஜையை செய்துக்கொண்டு இருந்த ஒரு சிறிய குழுவை சந்தித்தோம். நான் அவர்களிடம் ஐம்பது டாலர்களை வழங்கி, “நாம் ஒரு கோயிலை தொடங்க இருக்கிறோம்,” என்று கூறினேன். ஆறு மாதங்கள் கழித்து அவர்கள் ஒரு பெரிய கிடங்கை வாடகைக்கு எடுத்து, அதற்குள் மிகவும் அழகான கோயிலையும், பூஜை செய்வதற்கு இலங்கையில் இருந்து பூசாரியையும் ஏற்பாடு செய்து இருந்தனர். நான் மீண்டும் அந்த நாட்டிற்கு அழைக்கப்பட்டு, பத்தாயிரம் பக்தர்கள் பங்குபெற்ற அணிவகுப்பில் அந்த கோயில் பிரகாரத்தை சுற்றி அழைத்து செல்லப்பட்டேன். பக்தி பெருவள்ளத்தை பார்த்த காவல்துறை, அந்த பகுதியில் போக்குவரத்தை முழுவதுமாக முடக்கி இருந்தது. §§

அமெரிக்காவின் கேபிட்டோல் கட்டிடத்திற்கு அருகில், வட அமெரிக்காவின் மேரிலாந்தில் பல மில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட முருகன் கோயிலின் ஸ்தாபகர்களில் ஒருவரான ஆறுமுகம் சரவணபவன், குருதேவா கோயில் கட்டுவதற்கு அளித்த உத்வேகம் பற்றி தனது அனுபவத்தை பகிர்கிறார்:§§

image§

குருதேவா தினமும் தனது துறவிகள் அனைவருடனும் சேர்ந்து அமர்ந்து மதிய உணவு உண்பார். அவரது இருக்கையின் இருபுறத்திலும் தேக்கு மரத்தில் தயாரிக்கப்பட்ட யானைகள் இருக்கும். கீழே செங்கல் தரையில் துறவிகள் அமர்ந்துகொண்டு, தங்கள் குரு மற்றும் சகோதரர்களுடன் செய்திகளை பகிர்ந்துகொண்டு, பாரம்பரிய முறையில் தங்கள் கைகளால் உணவு அருந்துவார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

எங்கள் பகுதியில் நாங்கள் ஒரு கோயில் கட்ட விரும்பினோம். நாங்கள் நிலமும் இல்லாமல், எப்படி தொடங்குவது என்று தெரியாமல் தவித்த போது, ஹவாய் தீவில் இருக்கும் சுப்பிரமுனியசுவாமியை சென்று பாருங்கள் என்று எனக்கு ஒருவர் 1982 ஆம் ஆண்டில் பரிந்துரைத்தார். அதற்கு அடுத்த வாரம் நானும் என் மனைவியும் அவரை சென்று பார்த்தோம். நான் பிரச்சனையை விளக்கிய போது, அவர் ஒரு மூன்று-அடி உயர விநாயகர் சிலையை எங்களுக்கு பரிசாக வழங்கினார். “உங்களுடன் இந்த பிள்ளையாரை எடுத்து செல்லுங்கள், கோயில் கட்டுவதற்கு அவர் உங்களுக்கு வழி காட்டுவார்,” என்று அவர் கூறினார். §§

குருதேவா அறிவுறுத்தியபடி, அவர்கள் முதலில் தங்கள் வீட்டில் விநாயகர் பெருமானை வழிபட ஆரம்பித்தார்கள். அந்த சமூகத்தின பக்தி பக்குவம் அடைந்தது. குருதேவா பலமுறை வருகை தந்து, திட்டமிடுவதில் உதவி செய்து அவர்கள் வாங்கிய நிலத்திற்கும் தனது ஆசிகளை வழங்கினார். “ஆசிகளை வழங்கி குருதேவா வழங்கிய உரையால் குழந்தைகள் கவர்ந்து இழுக்கப்பட்டனர். அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அவர் நமது மதத்தைப் பற்றி தெளிவாக விளக்கினார்,” என்று கோயிலின் முதல் தலைவரின் மனைவி திருமதி. குருசுவாமி நினைவுக் கூர்ந்தார். 1999 ஆம் ஆண்டு கோயில் நடத்திய மகாகும்பாபிஷேகத்தில், குருதேவா கௌரவ விருந்தினாரக கலந்துகொண்டார். அந்த கோயில் வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கை தனது நன்றியை தெரிவித்துக் கொண்டது: §§

குருதேவா தனது துறவிகளின் துணையுடன், மக்கள் சமூகத்தை உருவாக்கி கட்டுமான பணி வரை, முருகன் கோயிலை கட்டுவதில் ஒவ்வொரு நிலையிலும் உதவி செய்தார். அவருக்கு மற்ற கடமைகள் இருந்தாலும், கோயில் பக்தர்களிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்புக்களுக்கு தனது நேரத்தை ஒதுக்கிக்கொண்டார். அவர் இளைஞர்களை ஊக்கமளித்து, எங்களில் பலரது இதயங்களில் இடம் பிடித்தார். §§

1982 ஆம் ஆண்டு, அவர் சிகாகோ சென்ற போது, ஒரு கோயிலை தொடங்கும் ஆர்வத்துடன் இருந்த ஒரு குழுவை சந்தித்தார். அதற்கு முன்பு, அந்த குழுவில் அறங்காவலர்களில் ஒருவராக இருந்த Dr. N. ஜானகிராமன், கவாய் வந்து இருத்நார். அவர்கள் பல பிரச்சனைகளை சந்தித்ததால், அடுத்த என்ன செய்வது என்று ஒரு தீர்மானத்திற்கு வரமுடியவில்லை என்று ஜானகிராமன் விளக்கினார். ஆனால் குருதேவா சொல்வதை கேட்டு செயல்படலாம் என்று எல்லோரும் ஒப்புக்கொண்டனர். குருதேவா அவர்களிடம் விநாயகரை வழிபடத் தொடங்குங்கள் என்று கூறினார். “குருதேவாவிடம் ஆசிகளை பெற்ற பிறகு, நாங்கள் எங்கள் வீடு திரும்பினோம். ஆனால் நாங்கள் வியக்கும் வண்ணம், விநாயகர் எங்களுக்கு முன்பாக ஓ’ ஹேர் விமான நிலையத்திற்கு வந்து இருந்தார். குருதேவா அதை பரிசாக அனுப்புவார் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை,” என்று ஜானகிராமன் கூறினார். §§

2000 பவுண்ட் எடைக்கொண்ட அந்த சிலையை ஒரு சிறிய பக்தர்கள் குழு வரவேற்று, அதை திரு. ராஜகோபாலின் வீட்டில் வழிபடலாம் என்று முடிவு செய்தனர். பெருகிய மக்கள் வெள்ளத்தை அந்த சிறிய வீட்டில் சமாளிக்க முடியவில்லை, அதனால் அவர்கள் 1983 ஆம் ஆண்டு ஒரு தொழில்துறை வளாகத்திற்கு இடம் பெயர்ந்தனர். அந்த சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு, தனக்கு கோயில் பணியில் நடைபெறும் முன்னேற்றத்தைப் பற்றி தெரிவிக்க, குருதேவா அந்த ஊரில் வசித்த தனது சீடர்களில் ஒருவரான திரு. தேவானந்த தண்டவனை நியமித்தார். இவ்வாறு கிரேட்டர் சிகாகோவின் இந்து கோயில் உதயமானது.§§

குருதேவா கோயில்களுக்கு அதிக அளவில் நிதியுதவிகளை திரட்டினார். அவர் சிகாகோவில் நடைபெற்ற ஒரு சில நிதி திரட்டும் கூட்டங்களில் கௌரவ விருந்தினராக பங்குபெற்று, ஒவ்வொரு முறையும் ஊக்கமளிக்கும் சொற்பொழிவை வழங்கி, கூட்டத்தில் திரண்டு இருந்த மக்கள் தங்கள் காசோலையை எடுத்து, அதில் ஒரு எண்ணுடன் தொடங்கி— “பின்னர் மேலும் சில பூஜ்ஜியங்களை சேர்க்குமாறு” கேட்டுக்கொண்டார்.§§

அவர் சிங்கப்பூரில் புணர் நிர்மாணம் செய்யப்பட்டு வந்த ஒரு கோயிலுக்கு சென்ற போது, புதிய கோயிலின் ஒவ்வொரு சதுர அடிக்கும் $100 என்று நிதி திரட்ட (ஸ்பான்சர்) திட்டமிட்டுள்ளதாக அதன் அறங்காவலர்கள் விளக்கினார்கள். அவர் உடனே தனது பணப்பையை எடுத்து, $100 வழங்கி ஒரு ஸ்பான்சர்ஷிப்பை வாங்கினார். அறங்காவலர்களின் முகத்தில் அதிர்ச்சியை பார்க்கும் போது, அவர்கள் கோயிலுக்கு நிதியுதவி செய்த முதல் வெளிநாட்டு சுவாமியாக குருதேவா இருக்கலாம் என்று தோன்றியது. அதன் பிறகு அவர் வழங்கிய சொற்பொழிவில், கோயிலில் கூடியிருந்த மக்களிடம் நிதியுதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். “நான் $100 நிதியுதவி செய்தேன், ஏனென்றால் அந்த நல்ல கர்மவினையின் பலன் என்றாவது ஒரு நாள் $500 வடிவில் என்னை வந்து சேரவேண்டும்,” என்று கூறினார். §§

image§

தீட்சைகள் துறவற சமூகத்தில் முக்கிய மைல் கற்களாக விளங்குகின்றன. குருதேவா தனது பாரம்பரிய சிம்மாசனத்தில் இருந்து ஆசிகள், சந்தனம், விபூதி மற்றும் மடத்தில் தயாரித்த ருத்ராட்ச மாலைகளை வழங்குவார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

உலகெங்கும் கோயிலுக்கு நிதி திரட்டும் பணியை வலுப்படுத்த அதே மாதிரியான ஊக்கமளிப்பு வழங்கப்பட்டது. தனது நிதி தேவைகளை பற்றி குறிப்பிடாமல், அவர் மற்றவர்களுக்காக நிதி திரட்டுவது மக்களின் மனதை கவர்ந்தது. மற்றவர்களை வலுப்படுத்துவதன் மூலம் தாங்களும் வலுவடைவார்கள் என்றும்; மற்றவர்கள் கோயில்களை கட்டுவதற்கு உதவி செய்வதன் மூலம், தனது கோயிலைப் பற்றி மற்றவர்கள் தெரிந்துக் கொள்வார்கள் என்றும் அவர் தனது துறவிகளிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருந்தார். அதற்கு அடுத்த சில வருடங்களில், இக்கட்டான நிலைமையில் அவரிடம் இருந்து உதவியை பெற்ற பலர், அவருக்கு தங்கள் நன்றியுணர்வு வெளிப்படுத்த ஆரம்பித்து இருந்தார்கள். §§

அதைப் போலவே, குருதேவா அமெரிக்கா, கனடா, குவாடலூப், டென்மார்க், இங்கிலாந்து, ஃபிஜி, ஜெர்மனி, மொரீஷியஸ், நியூசிலாந்து, ரியூனியன், ரஷ்யா, சுவீடன் மற்றும் இலங்கையில் இருந்த மற்ற முப்பத்தி ஆறு கோயில்களில் நேரடியாக ஈடுபட்டு, ஒவ்வொரு சமூகம் அல்லது கோயிலுக்கு தேவைப்படும் போது ஒரு கருங்கல் சிலை மற்றும் வழிகாட்டலை வழங்கினார். அவர் மேலும் பலருக்கு நேரடியாக அறிவுரை வழங்கி உதவி செய்து, பெரும்பாலும் நிதி திரட்டுதல், கோயில் நிலத்தின் பயன்பாடு பற்றிய முடிவு, கோயிலுக்கு அருகில் இருக்கும் மக்கள் சமூகத்துடன் உறவை வலுப்படுத்துதல், பூசாரிகள், கடன் மேலாண்மை மற்றும் மேலும் பல விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். §§

அவரது கவனமாக வழிகாட்டலைப் பெற்ற பல கோயில்களில் கனடாவின் எட்மன்டனில் இருக்கும் மகாகணபதி கோயிலும் ஒன்றாக இருந்தது. அவர் மேலும், இந்த கோயிலின் முதல் பூசாரியை இலங்கையில் இருந்து அழைத்து வந்து, அவர் கனடாவில் குடிபுகுவதற்கு தேவையான உதவிகளை செய்தார். அந்த இலங்கை பூசாரியின் பெயர் சுப்பிரமணிய குருக்கள். அவர் யோக சுவாமியை சிறுவயதில் இருந்தே அறிந்து இருந்தார். அந்த சமூகத்தில் ஒரு வழக்கறிஞராக இருந்த ஆரன் வேலன் தனது நினைவுகளை பகிர்கிறார்: §§

எட்மன்டனில் கோயில் கட்டவேண்டும் என்ற எண்ணம் குருதேவாவிடம் இருந்து வந்தது. இவ்வாறு குருதேவாவுடன் தொடர்பில் இருப்பதால், அது அந்த கோயிலுக்கு ஒரு விஷேச சக்தியை வழங்குகிறது. 70 களின் தொடக்கத்தில் தமிழர்கள், கிறுத்துவர்கள் மற்றும் இந்துக்கள் கலந்த ஒரு தமிழ் கலச்சார குழுவாக இருந்ததால், அவர் தமிழ் சமூகம் முழுவதையும் ஒன்று சேர்த்து “தமிழ் இந்துக்கள்" என்று அந்த சமூகத்திற்கு பெயர் வழங்கினார். இன்று அந்த சமூகம் தமிழ் சைவ சமூகம் என்று வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் அதற்கு, குருதேவாவின் செல்வாக்கு மட்டுமே ஒரே காரணமாக விளங்குகிறது. §§

ஒருவர் அங்கத்தினர் உரிமை பெறுவதற்கு அவர் சைவ இந்துவாக இருக்க வேண்டும் என்று கோயிலின் அடிப்படை கொள்கைகளை உருவாக்கும் அளவிற்கு, அந்த சமூகம் வலுவடைந்து இருந்தது. இதன் காரணமாக, அந்த கோயில் தற்போது மிகவும் தெளிவாக வலுவான சக்தியுடன இருப்பதாக தொடக்ககால உறுப்பினர்களில் ஒருவரான டி. செல்வராஜா கருதுகிறார். இந்த கோயில் கனடாவின் சிறந்த கோயில் என்றும், இது மற்ற கோயில்களுக்கு சிறந்த முன் உதாரணமாக விளங்குகிறது என்றும், இங்கே கனடா முழுவதில் இருந்தும் வருகை தரும் மக்கள், செல்வராஜாவிடம் கூறியுள்ளனர். அதைப்பற்றி அவர் தனது அனுபவத்தை நினைவுக்கூர்கிறார்:§§

“நீங்கள் எல்லோரும் இலங்கையில் கோயிலை நிர்மாணித்து இருக்கிறீர்கள். இன்று உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். குடும்பங்களை ஒன்று சேர்ப்பது மற்றும் குழந்தைகளை ஒன்று சேர்க்கும் பணியை கோயில்கள் நிறைவாக செய்கின்றன,” என்று குருதேவா எங்களிடம் தொடக்கத்தில் கூறினார். §§

image§

மும்பையில் இருந்த 89 ஆதிசைவ பூசாரிகளின் எதிர்காலம் பற்றி அவர்களிடம் பேசி, அவர்களுக்கு தனது ஆதரவை வழங்கும் பொருட்டு 1995 ஆம் ஆண்டில், குருதேவா அவர்களை சந்தித்தார். அவர் தனது வாழ்க்கை முழுவதும் பூசாரிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களது முக்கியத்துவத்தைப் பற்றி சமூகத்தில் மற்றவர்களுக்கு கற்றுத் தந்தார்.§§

குருதேவா டென்மார்க் நாட்டில், அபிராமி அம்மன் கோயிலை ஸ்தாபனம் செய்ய உதவி செய்தார். பெண் பூசாரியாக இருந்த ஶ்ரீ அபிராமி உபாசகி, ஆழமான மனோஉணர்வு சக்தியுடன் இருந்தார். அவர் நினைவு இழந்த நிலையில், அம்மனின் சக்தியை பக்தர்கள மீது இயக்கி, அவர்களின் வேதனைகளை குறைத்து ஆசிகளை வழங்குகிறார். இதற்காக அவர் தொடக்கத்தில் விமர்சிக்கப்பட்டார். அம்மனின் சக்திகளை பக்தர்களின் நன்மைக்காக இயக்குவதாகவும், அதனால் தீங்கு எதுவும் விளைவது இல்லை என்று அவர் கருதியதால், 1995 ஆம் ஆண்டு அவர் குருதேவாவின் உதவியை நாடினார். குருதேவா உபாசகி செய்வது சரிதான் என்று அவருக்கு உறுதி அளித்து, அந்த உபாசகியை தனது மனோஉணர்வு பாதுகாப்பில் வைத்துக்கொள்ள ஒரு விநாயகர் சிலையை அவருக்கு வழங்கினார். அந்த சிலை ஆகஸ்ட் மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று வந்து சேர்ந்தது. அவர்கள் அன்றே அதை வழிபட ஆரம்பித்த போது, விநாயகரின் கண்களில் இருந்து பால் சொட்ட ஆரம்பித்தது. §§

ஒரு மாதம் கழித்து, உலகெங்கும் பிரபலமான “பால் அதிசயம்" நடந்தது, மற்றும் இந்த சிறிய சிலைக்கு முன்பாக ஒரு சிறிய கரண்டியில் வழங்கப்பட்ட பாலை பல காலன் கணக்கில் குடிக்க ஆரம்பித்தது. அதன் பிறகு பல நாட்களுக்கு நூற்றுக்கணக்கான இந்துக்கள், டென்மார்க் நாட்டவர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் இந்த விநாயகருக்கு பாலை வழங்க வந்தனர். பலர் சாட்சியாக இருந்த இந்த சம்பவத்தை யாராலும் விளக்க முடியவில்லை.§§

சில மாதங்கள் கழித்து, குருதேவா அந்த கோயிலுக்கு மூன்று அடி உயர அம்மன் சிலையை அனுப்பி வைத்தார். அந்த பெண் பூசாரி குருதேவாவின் ஆதரவுடன் ஒரு மதிப்பிற்குரிய ஆன்மீக தலைவியாக மாறினார். ஆகஸ்ட் 2001, குருதேவா வடக்கு ஐரோப்பா முழுவதும் மேற்கொண்ட பயண-ஆய்வு திட்டத்தின் போது, அந்த உபாசகியின் கோயிலுக்கு தனது சொந்த கைகளால் அடிக்கல் நாட்டி வைத்தார். §§

உலகம் முழுவதும் நூறு கோயில்கள் கட்டப்பட்ட நிலையில், பல அறங்காவலர்கள் குருதேவாவிடம், “அடுத்த நடவடிக்கை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு குருதேவா வழங்கிய பதில்:§§

ஒவ்வொரு கோயிலில் இருக்கும் மேற்பார்வையாளர்கள், தங்கள் பொறுப்புக்களில் அக்கறையுடன் செயல்படுவதை நான் காண விரும்புகிறேன். கோயில்கள் கட்டப்பட்டு பக்தர்களுக்கு அர்ப்பணிக்கப்படுள்ளன, சிலை வடிவமாக தெய்வங்கள் இருக்கின்றன, பூசாரிகள் இருக்கிறார்கள் மற்றும் பக்தர்கள் சமாஜங்களும் உள்ளன. முக்கியமான பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தலைமையும், கோயிலின் அறங்காவலர்களும் உண்மையில் முழுநேர ஆன்மீக தலைவர்களாக மாறி, பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, தங்கள் சமூகத்தை ஒரு முன்மாதிரி சமூகமாக மாற்ற வேண்டும்.§§

“பூசாரிகளை தாக்குவதை நிறுத்துங்கள்!”§

உலகெங்கும் இருக்கும் இந்து கோயில்களில் சேவை செய்யும் பூசாரிகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்க குருதேவா தயாராக நின்றார். அவர் குறிப்பாக 90 களின் தொடக்கத்தில், கோயில் பூசாரிகளை நியாயமாக நடத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார். பூசாரிக்கு ஆதரவாக வெகு சிலரே இருந்ததால், எதிர்பார்த்தவாறு அவர்கள் குருதேவாவிற்கு பெருமதிப்பு அளித்து, அவரை எப்போதும் தங்கள் கோயில்களுக்கு வரவழைத்து அவ்வப்போது அவரை சென்று பார்த்தார்கள். §§

“அவர் எங்களுக்கு பெரும் ஆதரவாக இருந்தார். பல அமைப்புக்கள் மற்றும் அரசாங்கமும் எங்களை அவமதித்த கடினமான தருணங்களில், அவர் எங்களுக்கு வழங்கிய ஆதரவை உலகெங்கும் தெளிவாக வெளிப்படுத்தினார்,” என்று இதைப்பற்றி ஆதிசைவ பூசாரிகள் சமூகத்தின் தலைவராக இருந்த சிவஶ்ரீ Dr. டி. எஸ். சாம்பமூர்த்தி சிவாச்சாரியார் எழுதினார். குருதேவா தனது இந்துயிசம் டுடே பத்திரிகையின் ஆசிரியர் பக்கங்களில் வழங்கிய குறிப்பு:§§

இந்து பூசாரிகள் என்கிற பூஜாரிகள் உடல், உணர்ச்சி மற்றும் மனம் ரீதியாக கோயில் மேலாளர்கள், அறங்காவலர்கள் மற்றும் சில சமயங்களில் பக்தர்களாலும் தாக்கப்படுகிறார்கள். நம் எல்லோருக்கும் இது தவறான நடத்தை என்று தெரிந்து இருந்தாலும், தங்களை தற்காக்கும் சில பூசாரிகளைத் தவிர, வெகு சிலரே இதை முன்வந்து எதிர்க்கிறார்கள். அர்த்தம் தெரியாமல் மனப்பாடம் செய்து சடங்குகளை செய்யும் படிப்பறிவு இல்லாத, எளிமையான மக்களாக அவர்களை நிர்வாகம் கருதுவதால், தங்கள் பாதுகாப்பிற்கு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் எதிர்ப்புக்களை பெரும்பாலும் யாரும் கவனிப்பது இல்லை. §§

இந்தியாவிற்கு வெளியே பூசாரியை தாக்குவது ஒரு பிரபலமான பொழுதுபோக்காக இருக்கிறது. பூசாரிகளுக்கு என்று ஒரு சங்கம் உள்ளது மற்றும் இந்தியாவில் இருக்கும் அதன் சங்கத் தலைவர்கள் பூசாரிகளுக்கு துணை நிற்கிறார்கள். ஒரு பூசாரி மீது வெறுப்பு ஏற்படும் போது, கோயில் காணிக்கையாக செலுத்தும் பணத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று சிறிய காரணங்களை பயன்படுத்தி அவர்கள் தாக்கப்படுவது மிகவும் பிரபலமான மற்றும் முதன்மையான உத்தியாக இருக்கிறது. மிகவும் நீளமாக இருக்கும் இந்த பட்டியல், அந்த பூசாரியை திட்டுவதற்கு, தள்ளி விடுவதற்கு, அவரது தேவைகளை புறக்கணிப்பதற்கு, அவரது சகாக்கள் மற்றும் சில சமயம் பொதுமக்கள் முன்னிலையிலும் அவரை அவமானப்படுத்த நிர்வாகத்திற்கு அனுமதி அளிக்கிறது. §§

ஆம், இந்து கோயில் பூசாரியை தாக்குவது ஒரு சர்வதேச உத்தியாக இருக்கிறது, மற்றும் அந்த தவறை செய்பவர்கள் சனாதன தர்மத்தின் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள். பூசாரிகளிடம் தவறாக நடந்துக்கொள்பவர்கள் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாதேவர்களை வழிபட்டு அவர்களிடம் இருந்து ஆசிகளை வரவழைக்கும் திறமையுடைவர்கள் கோபப்படும் போது, அவமானப்படும் போது மற்றும் அவர்கள் மனம் வலுவாக புண்படுத்தப்படும் போது, அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள, இந்த கிரகத்தில் இருக்கும் அசுர சக்திகளிடம் இருந்து சாபங்களையும் வரவழைக்க முடியும். ஹவாய் தீவை சேர்ந்த வலுவான கஹூனா என்ற பூசாரி குழுவின் சீடர்களை, கிறுத்துவர்கள் முழுமையாக மதம் மாற்றிய போது, இந்த அசம்பாவிதம் தான் நடந்தது. சிலர் கோபமுற்று, தலைசிறந்த கண்கட்டி வித்தைகாரர்களாக மாறினார்கள். அவர்களை கண்டு இன்றும் மக்கள் அஞ்சுகிறார்கள். அவர்கள் தற்போது பூமிக்கு அருகில் இருக்கும் சூட்சும லோகமான பிரேதலோகத்தில் வாழ்ந்துகொண்டு, தவறு செய்பவர்களை வருத்தி, விசுவாசமாக இருப்பவர்களுக்கு உதவி செய்கிறார்கள். இது இவ்வாறு நடக்கவேண்டிய அவசியம் இல்லை என்றாலும், இவ்வாறே நடந்தது. §§

இந்து கோயில் பூசாரிகள் தங்களது புனிதமான தொழிலின் செழுமைக்கும், தங்கள் அலுவலகத்தின் மரியாதைக்கும் தகுதி உடையவர்கள் மற்றும் இதில் எந்த தலையீடும் இருக்கக்கூடாது. “உண்மையான உலகில்" மற்ற தொழில்கள் அனுபவிக்கும் அதே மரியாதையை, அவர்களும் பெற்று இருக்கிறார்கள். §§

இந்துக்கள் கோயில் பூசாரிகள் மீது வைத்திருக்கும் அணுகுமுறையை மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது. இதற்கு கோயில் நிர்வாகிகள் தங்கள் சிந்தனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு சனாதன தர்மத்தின் சர்வதேச பூசாரிகள் குழுவும் தங்களை தாக்குபவர்களுக்கு எதிராக உறுதியாக இருந்து, தினமும் அவமதிப்பு அல்லது மராமத்து வேலைகளினால் ஏற்படும் அவமானத்திற்கு மற்றும் காலணிகளை சுத்தம் செய்வதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும். சிலர் தினமும் பதினான்கு மணி நேரம் அல்லது அதற்கும் மேல் பணி புரிகிறார்கள். அவர்கள் கோயில் தெய்வங்களின் சேவகர்களாக இல்லாமல், நிர்வாகிகளின் சேவகர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கான முடிவான தீர்வு மனிதன் இயற்றிய சட்டங்களில் இல்லாமல், அதிக சூட்சுமமாக இருக்கக்கூடும். அவர்கள் இறைவனின் நிலையான விதியை நோக்கி செல்ல அல்லது அவர்களுக்கு ஈடுபாடு இருந்தால், நிம்மதி பெறுவதற்கு இருண்ட உலகங்களுக்கு செல்ல முடிவு எடுக்கலாம். §§

கவனமாக இருங்கள்! அவர்கள் சொல்லும் மந்திரங்கள் அதிக வலுவானவை. தங்கள் பூசாரி குழுக்களுடன் பல சமூகங்கள் அழிந்துள்ளதாக வரலாறு தெரிவிக்கிறது. அது மீண்டும் நடப்பதற்கு நாம் அனுமதிக்க வேண்டாம்.§§

அவர் நியாயமான பூசாரிகளுக்கு ஆதரவு அளித்தாலும், பூசாரி குலத்தில் பிறந்ததை மட்டுமே பயன்படுத்தி, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை கோருவதை அவர் கண்டனம் செய்தார்: §§

தங்கள் தந்தைகள் பிராமணர்களாக இருந்ததால், தாங்களும் பிராமணர்கள் என்று கோரிக்கொள்பவர்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்களுக்கு தங்கள் சமயத்தை பற்றி தெரிவதில்லை, மற்றும் அவர்களுக்கு வழிபடவும் தெரியவதில்லை. “என் தந்தை ஒரு மருத்துவர். அதனால் நானும் ஒரு மருத்துவர். நான் உங்களுக்கு சிகிச்சை அளிக்கிறேன்,” என்று சொல்வது போல இருக்கிறது. அதை என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாது.§§

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பூசாரிகள் முறையாக நடத்தப்படவேண்டும், அதிலும் குறிப்பாக நல்ல வருமானம், பணியிடத்தில் முறையான சூழ்நிலைகள், நியாயமான வேலை நேரங்கள் மற்றும் தரமான வீட்டு வசதிகளை செய்து தரவேண்டும் என்பதற்கு அவர் ஆதரித்து வாதாடினார். பூசாரிகள் கோயில் மன்றங்களில் அங்கம் வகிக்க வேண்டும் என்றும், ஒரு மருத்துவர் அல்லது ஒரு வழக்கறிஞரைப் போன்று, மற்ற மதங்களின் பூசாரிகள் மற்றும் மதகுருக்கள் அனுபவிப்பதைப் போன்ற அவர்களுக்கு மதிப்பு மற்றும் அந்தஸ்த்து வழங்கப்படவேண்டும் என்று அவர் விரும்பினார். மருத்துவர்கள் அல்லது பொறியாளர்களாக பணிபுரிந்த பிராமணர்கள் அங்கம் வகித்த கோயில் மன்றங்களில், அவரது இந்த பரிந்துர நல்ல வரவேற்பை பெறவில்லை. இதற்கு பதிலாக, பூசாரிகள் தங்கள் சொந்த கோயில்களை தொடங்க அவர் ஊக்குவித்தார். அதை சிலர் பின்பற்றியுள்ளனர் மற்றும் எதிர்காலத்தில் மேலும் சிலர் பின்பற்ற உள்ளனர். §§

மோதலை கூட்டுறவாக மாற்றுதல் §

குருதேவா இந்துக்களிடத்தில் கூட்டுறவை போதித்து பயிற்சி செய்து வந்தார். தலைவர்களை எதிர்ப்பது, எதிர்ப்பவர்களை பொறுத்துக்கொள்வது மற்றும் மன்றங்கள் மற்றும் குழுக்களுக்கு இடையே வேற்றுமை ஆகியவை அந்த பாதையில் தடையாக இருக்கும் மூன்று தீய பழக்கங்கள் என்று அவர் கூறினார். §§

சமூகத்தில் ஒரு நபர் வளர்ச்சி அடைந்தால், அதைக்கண்டு பொறாமைக் கொள்ளும் நபர்கள் அமைதி பெறும் வரை, அவர்கள் அவரை அவமானப்படுத்தி, அவரைப் பற்றி அவதூறாக பேசி, அவரை விமர்சிக்கும் பழக்கத்தை நிறுத்துவது முக்கியம் ஆகும். நவீன தொழில்துறை சமூகத்தில், ஒவ்வொருவரும் மற்ற எல்லோரையும் மேம்படுத்த முயற்சி செய்கிறார்கள். தங்கள் சமூகத்தில் வளர்ச்சி அடையும் ஒரு நபரை நினைத்து மக்கள் பெருமை அடைவதோடு, அவருக்கு அடுத்து வருபவரும் வெற்றி பெறுவதற்கு உதவி செய்கிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தலைவர்கள் மீதும் அபிமானமாக இருக்கிறார்கள். §§

ஆனால் இந்தியாவில் நிலைமை மாறுபட்டு இருக்கிறது, அதனால் ஒருவர் ஆன்மீக உதவியை வழங்க விரும்பினால், அவர்கள் அமைதியாக மறைவில் இருக்க வேண்டும், இல்லையென்றால் அவர்கள் இழிவாக பேசப்படுவார்கள். யாரும் மதத்தை காப்பாற்ற ஆதரவாக இருப்பதில்லை; மற்றவர்கள் ஆதரவாக இருப்பதையும் யாரும் அனுமதிப்பது இல்லை. இந்த நிலை மாறவேண்டும், மற்றும் அது விரைவில் மாற்றத்தை பெறும். §§

“சுவாமிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்" குருதேவாவிற்கு பிடிக்காத இன்னொரு பொழுதுபோக்காக இருந்தது. இந்த பிரச்சனைக்கு எளிதில் உணரக்கூடிய இரண்டு மூலங்களாக, தங்கள் சொந்த காரணங்களுக்காக சுவாமிகளை அவமதிக்க நினைத்த கிறுத்துவ மதப்பிரசாரக்கர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் இருந்தனர். “பல வருடங்களுக்கு முன்பு, சுவாமிகளை தாக்குவது பழக்கத்தில் இருந்த போது, அவர்கள் அதை ஒரு விளையாட்டாக கருதவில்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துக்கொண்டு, ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து, அந்த தவறான நடத்தைக்கு முடிவு கட்டினர்,” என்று குருதேவா பின்னர் குறிப்பிட்டார். இந்தியாவில் முடிந்தவரை அதிகமான சுவாமிகளை சந்திக்க வேண்டும் என்று குருதேவா முடிவு செய்துக்கொண்டார். அவர் குறிப்பாக இந்துயிசம் டுடே பத்திரிகை மூலம், அவர்களுடன் தொடர்பில் இருந்தார் மற்றும் இந்துக்கள் அனைவருக்கும் ஒரு அணுகுமுறையை உருவாக்குவதற்கும், ஆன்மீக தலைவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், பல டஜன் கணக்கான விஷயங்களில் அவர் அவர்களது கருத்துக்களை சேகரித்தார். §§

image§

தத்துவம், ஆன்மீக பயிற்சி மற்றும் துறவற வாழ்க்கை தொடர்பான விவாதங்களின் போது, குருதேவா தனது ஆச்சாரியர்கள் குழுவினரை சந்தித்து, தனது கருத்துக்களை தெரிவித்து அவர்களது கருத்துக்களை நாடி, எந்த திசையில் முன்னேறுவது என்று ஒருமித்த முடிவு வரும் வரையில் காத்து இருப்பார்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இந்து சமயத்தில் தீவிரவாத நடவடிக்கைக்கு ஆதரவாக வாதாடிய சமயத்தில், குருதேவா அகிம்சையை முக்கிய கொள்கையாக கொண்டிருந்தாலும், அவர் அமைதிவாதியாக இல்லாமல், நாடுகளும் தனிநபர்களும் தங்களை தற்காக்கும் உரிமைக்கு தனது ஆதரவை தெரிவித்தார். ஆனால் தங்களது குறிக்கோள்களை அடைய அல்லது தவறை சரி செய்ய சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, வன்முறையை வலியுறுத்துபவர்களுக்கு, எதிர்மறை கர்மவினை மற்றும் பழிதீர்க்கும் படலத்தின் முடிவுறாத சுழற்சி காத்திருப்பதை அவரால் காண முடிந்தது. இது எப்போதும் பிரபலமான அணுகுமுறையாக இருந்ததில்லை என்றாலும், சாஸ்திரம் மற்றும் பெரும்பாலான சுவாமிகள் அவருக்கு ஆதரவாக இருந்ததால், தீவிரவாத முடிவுகளை வற்புறுத்தும் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டு சென்றது. §§

இணக்கமின்மைக்கு முற்றிலும் சகிப்புத் தன்மையற்று இருத்தல்§

முழுமையான இணக்கத்திற்கு ஆசைப்படும் மற்ற பெரிய தலைவர்களும், அதற்கு வாய்ப்பில்லை என்று ஏற்றுக்கொண்டு இருந்தாலும், அதை அடையமுடியும் என்று குருதேவா அறிந்து இருந்து, அந்த இலட்சியத்தை வலுவாக தக்க வைத்துக்கொண்டு இருந்ததால், அதை அடையமுடியும் என்று நம்ப துறவிகள் கற்றுக்கொண்டார்கள். “இணக்கம் இல்லாத சூழ்நிலைகளுக்கு முற்றிலும் சகிப்புத்தன்மையற்று இருத்தலை,” பற்றி அவர் அடிக்கடி பேசினார். §§

அவர் வழக்கமாக செய்ததை போல, அந்த கருத்தோடு நின்றுவிடாமல், அதை சாதிக்க கருவிகளையும் வழங்கினார். அவர் பயன்படுத்திய விதி: ஒரு துறவி இன்னொருவருக்கு தற்செயலாக வேதனை அளித்தால், இருவரும் அன்று தூங்க செல்லாமல், அந்த விவகாரம் முடிவுக்கு வந்ததாக இருவரும் உணர்ந்து, இருவருக்கும் இடையே பிராண சக்தி முழுமையான இணக்கத்தை பெறும் வரையில், இருவரும் ஒன்றாக அமர்ந்து மன்னிப்புக்களின் மூலம் பரஸ்பர தீர்வு காணவேண்டும் என்று அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்டது. §§

அதனால் அடிமனதில் சிறிய மனக்கசப்புக்கள் மற்றும் சிக்கல்கள் ஆழமாக பதிந்து தீவிரமடைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறு இளம் துறவிகள் ஒரு சர்ச்சைக்குரிய விவகாரத்திற்கு தீர்வு காண பல மணிநேரங்கள் தேவைப்படும், ஆனால் முதியவர்கள் கருத்து வேறுபாடுகளுக்கு விரைவில் தீர்வு காணும் கலையை கற்றுக்கொண்டார்கள், மற்றும் மிகவும் முக்கியமாக சர்ச்சைக்குரிய விவகாரத்தை எப்படி தவிர்ப்பதும் என்றும் கற்றுக்கொண்டார்கள். இந்த அணுகுமுறையை பற்றி குருதேவா லிவிங் வித் சிவா (சிவபெருமானுடன் வாழ்தல்) புத்தகத்தில் விளக்கி இருக்கிறார்:§§

எங்கள் கூட்டமைப்பில் எல்லா பணிகளும் நிறுத்தப்பட்டு, பிரச்சனை மீது உடனடியாக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த விவேகத்தை பின்பற்றுவது ஒவ்வொருவரின் பொறுப்பாக இருந்தது. குறிப்பாக சமயப்பணியில் மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சியும், பலன் அளித்து நீடித்து இருக்க, சுதந்திரமாக விடப்பட்ட அசுர சக்திகளை அகற்ற வேண்டும். ஆனால் கருத்து வேறுபாடு நிலைத்து இருந்தால், அது அதிக எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் மதிகெட்ட செயலாக இருக்கும். வீடு, மடம் அல்லது பணியிடத்தில் தெய்வீக விசைப்பகுதிகளில் அத்துமீறல் ஏற்பட்டால், அதை விரைவாக நிறுத்த வேண்டும். §§

நமது அணுகுமுறை எளிமையானது. எல்லா கடினமான உணர்ச்சிகளும் உறங்குவதற்கு முன்னர் தீர்வு காணவேண்டும், இல்லையென்றால் அவை மனப்போராட்டங்களை ஏற்படுத்தி, விதைக்கு (பீஜம்) சென்று, தொல்லை தரும் தேவையற்ற வாசனாக்கள் என்கிற அடியுணர்வு பதிவுகளை முளைக்க செய்கிறது. அவற்றை முழுவதுமாக அழிக்க முடியாது. ஆனால் அவற்றை பரிகாரத்தின் சூட்சுமமான செய்முறைகளின் மூலம் தணியச்செய்து நடுநிலைப்படுத்த மட்டுமே முடியும். §§

பகிரப்பட்ட ஆன்மாவின் சக்தியுடன் (Consensualocracy) நிர்வாகம் செய்தல் §

குருதேவா அதைப்போன்று நிறுவனத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் இருந்து விலகி, ஒருமித்த கருத்தின் சக்தியுடன் நிர்வாகம் செய்யும் பாணியை உருவாக்கினார். மடத்தில், இரண்டு விதமான நிர்வாகம் இருந்தன. சற்குரு சொல்வதே சட்டம் என்பதை ஒரு பாரம்பரியம் பின்பற்றியது. ஆனால் அவர் அந்த சக்தியை அபூர்வமாக பயன்படுத்தினார், மற்றும் அதை பயன்படுத்தும் இடமாக குரு பீடத்தை (அவர் குருவின் இருக்கை அமைத்திருந்த ஒரு தியான அறை) ஒதுக்கி இருந்தார் கொடுத்து இருந்தார். அவர் பீடத்தில் குரு மகாசன்னிதனமாக அமரும் போது, அவரது உதிரும் சொற்கள் விவாதிக்க மற்றும் கலந்துரையாடுவதற்கு பரிந்துரைகள் அல்லது சிந்தனைகளைக் இல்லாமல் ஆணைகளாக இருந்தன. §§

மற்ற இடங்களில், முடிவெடுக்கும் உரிமையை குழுவிற்கு வழங்க முடிவு செய்தார். ஆனால் அந்த உரிமை மடத்தில் இருக்கும் அனைவருக்கும் வழங்காமல் ஒரு திட்டப்பணி, ஒரு புதுமை அல்லது ஒரு கூட்டத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மட்டும் வழங்கினார். அத்தகைய சூழலில் அவர் ஒரு வாக்கெடுப்பிற்கு எப்போதும் அனுமதி வழங்கவில்லை. அவரை பொறுத்தவரையில், அது சிலர் மீது பலர் நடத்தும் அடக்குமுறையாக இருந்தது. வாக்கெடுப்பு நடைபெறும் போது, அவர் ஒருமித்த உடன்பாட்டை வேண்டினார். ஒருவர் எதிர்ப்பு குரல் எழுப்பினாலும், எந்த முடிவும் எடுக்கப்படாமல், விவாதத்தை தொடரவேண்டி இருந்தது. தான் மேற்கொள்ளும் தனிப்பட்ட முடிவு மிகவும் முக்கியமானது என்பதை எல்லோரும் அறிந்து இருந்தார்கள். ஒரு திட்டப்பணியை தொடர்வதற்கு குழுவில் பத்து நபர்கள் ஆதரவாக இருந்தாலும், தன்னால் அதை தடுத்து நிறுத்த முடியும் என்பதை எல்லோரும் அறிந்து இருந்தாலும், அந்த சலுகையை தவறாக பயன்படுத்தாமல் இருக்க ஒவ்வோருவரும் கற்றுக்கொண்டனர். §§

இந்த அமைப்பில் இருந்த இரட்டை விவேகத்தை துறவிகள் விரைவில் புரிந்துகொண்டார்கள். அதில் முதலாவதாக, அந்த செய்முறை சிலசமயங்களில் மிகவும் மெதுவாக இருந்தாலும், எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவிற்கும் எதிராக யாரும் செயல்படாமல், முழு குழுவின் ஒட்டுமொத்த சக்தியின் ஆதரவை பெற்று இருந்தது. இது அதன் நிறைவேற்றத்தில் வழங்கிய சக்தி மற்றும் தெளிவை, ஒரு பணிக்குழுவில் பகிரப்பட்ட அர்ப்பணிப்பால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். இரண்டாவதாக, சிலசமயங்களில் குழுவில் இருக்கும் சிறுபான்மையினருக்கு சில விஷேச உட்பார்வைகள் இருக்கும். ஒரு விவகாரத்தில் பெரும்பாலானோர் விரைவாக செயல்படுவதில் ஆர்வமாக இருந்தாலும், இயலுணர்வு நன்றாக தீட்டப்படும் ஆன்மீக சமூகத்தின் வழக்கத்தைப் போல, ஒன்று அல்லது இரண்டு துறவிகளுக்கு அதிக வலுவான, நுணுக்கமான கருத்து இருக்கக்கூடும். மேலும், பகிரப்பட்ட ஆன்மாவின் சக்தி(consensualocracy ) என்பது யாரையும் கைவிடாமல், ஒதுக்கி வைக்காமல், ஓட்டு எண்ணிக்கையில் தோற்கடிக்காமல் அல்லது புறக்கணிக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. குருதேவா லெமூரியன் ஸ்குரோல்ஸ் புத்தகத்தின் முடிவுரை எழுதிய குறிப்பு:§§

நிர்வாகத்தில் இருக்கும் ஒரு உயர்ந்த வடிவத்தை, நாங்கள் ஒருமித்த கருத்துடன் செயல்படும் நிர்வாகம் என்று அழைக்கிறோம். இந்த விதி பயன்படுத்தும் பாணியில் கட்டுப்படுத்தும் சக்தியாக ஒரு தனிநபர் அல்லது ஒரு பெரும்பான்மை இல்லாமல், ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு விசேஷமான முறையில் அதன் மக்கள், தேவைகள் மற்றும் அடிப்படைகளை தழுவி உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், அத்தகைய அமைப்பு சுயமாக வளர்ச்சி பெறாமல், இந்த ஸ்குரோல்ஸ் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளதைப் போல, மூன்று உலகங்களின் மிகப்பெரிய சக்திகள் வழங்கும் ஒரு ஆன்மீக தலைமையின் பிரத்யேகமான சூழ்நிலைகளில் மட்டுமே வளர்ச்சி அடையும்.§§

இந்த அமைப்பில், மூத்த உறுப்பினர்களுக்கு மரியாதையும், இளையவர்கள் மீது விசேஷ கவனிப்பு மற்றும் ஊக்குவிப்பும் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பில், வாக்கெடுப்பு மற்றும் பெரும்பான்மை தொடர்பான விதிகள் இல்லை என்பதால், ஓட்டுரிமை இல்லாதவர்கள் அல்லது வாக்கெடுப்பில் தோற்றவர்கள் வெற்றிபெற்றவர்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இருப்பதில்லை. எல்லோரிடமும் ஒரு கருத்து இருக்கிறது; மற்றவர்கள் நலன் கருதி தங்கள் நலனை தியாகம் செய்யும் தூண்டுதல் எல்லோரிடமும் இருக்கிறது. இந்த அமைப்பில், முக்கிய முடிவுகள் வாக்கெடுப்பால் இல்லாமல், ஒத்திசைவான செய்முறை மூலம் உறுதி செய்யப்படுகிறது. இந்த செய்முறை எல்லோருக்கும் நன்மை செய்யும் சிறந்த தொடர் நடவடிக்கைக்கு, ஒரு ஒருங்கிணைந்த ஒப்பந்தத்தை தேடும் பொருட்டு அனைத்து குழுக்களையும் ஒன்று சேர்க்கிறது. இந்த செய்முறையில், இதன் நுணுக்கமான வழிகளை அறியாத புதிய உறுப்பினர்கள் இடம்பெறும் போது, இது மெதுவாக இயங்குவது போல தோன்றினாலும், இது நாளடைவில் எல்லா முடிவுகளிலும் எல்லா உறுப்பினர்களின் 100 சதவீத மனப்பூர்வமான ஆதரவின் மூலம் மாபெரும் சக்தியாக வளர்கிறது. உத்வேகம் செழிப்பை வழங்குகிறது. ஒருமித்த கருத்துடன் செயல்படும் நிர்வாகம் கடினமாக இருந்தாலும், அதை அடைவதால் நல்ல பலன்களை தரும். §§

இவ்வாறு அரசாங்கங்களில் குழப்பத்துடன் செயல்படும் அரசாங்கம் (ஒழுங்கின்மை), கொரில்லா படைக்கு (பயங்கரவாதம்) அனுமதி அளிக்கும் அரசாங்கங்கள் இருக்கின்றன. இந்த அரசாங்கம் தனது குறிக்கோளை அடைவதற்கு பயங்கரவாதத்தின் கொடிய நடவடிக்கைகளை தூண்டிவிடுகிறது. அதன் பிறகு ஒரு தலைவரின் சக்தியில் (ஏகாதிபத்தியம்) இயங்கும் அரசாங்கம், இராணுவ சக்தியில் (சர்வாதிகாரம்) இயங்கும் அரசாங்கம், சமூக மற்றும் பணத்தின் சக்தியால் (தன்னலக்குழு நடத்தும் அரசாங்கம்) இயங்கும் அரசாங்கம், புள்ளிவிபர அடிப்படையில் (சமூகவுடைமை) இயங்கும் அரசாங்கம், எண்ணிக்கை மற்றும் உணர்ச்சியின் அடிப்படையில் செயல்படும் அரசாங்கம் (மக்களாட்சி), அரசர்கள் மற்றும் அரசியல் நடத்தும் அரசாங்கம் (அரசாட்சி), அந்தர்லோகங்களின் துணையுடன் மதத்தலைவர்கள் நடத்தும் அரசாங்கம் (இறையாட்சி), பகிரப்பட்ட ஆன்மாவின் சக்தியினால் நடைபெறும் அரசாங்கம் (கன்சென்சுவலோக்கிரேசி) என்று பலவிதமான அரசாங்கங்கள்/நிர்வாகங்கள் இருக்கின்றன. §§

இறுதியாக குறிப்பிட்ட அமைப்பு சனாதன தர்மத்தை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது. இந்த விதி புத்திசாலித்தனமான கூட்டுறவிற்கு மதிப்பு அளித்து, சம்பந்தப்பட்ட எல்லோரையும் பிராண சக்தியால் பிணைக்கிறது. இதே வழியை பயன்படுத்தி இரண்டாம் உலகின் தெய்வீக ஆன்மாக்கள் மற்றும் மூன்றாம் உலகில் இருக்கும் உயர்வான வளர்ச்சி பெற்ற சக்திகள், முதலில் தூண்டுதலுடன் தொடங்கி, ஒரு சிந்தனையின் பிறப்பு, பிறகு அதிர்வு, ஒட்டுமொத்த குழுவின் கண்ணோட்டம் மற்றும் முயற்சியின் மூலம் திட்டமிட்டு மற்றும் உருவாக்கி, சூட்சும அல்லது தூல யதார்த்தத்தில் அதன் வெளிப்பாட்டிற்கு வழிநடத்தி செல்வது என்று சரியான திசையில் ஆன்மீக பிராண சக்திகளை நிர்வாகம் செய்து, தங்கள் கருத்துக்களை செயல்படுத்துகின்றன. இதனால் பகிரப்பட்ட ஆன்மாவின் சக்தியை தான் வேதங்கள் பதிவு செய்துள்ளன. இந்த முறையில் மாபெரும் கலாச்சாரங்கள் பழங்காலத்தில் இருந்துள்ளன. இந்த நிர்வாக முறையை பயன்படுத்தி மிகப்பெரிய கூட்டு குடும்பங்கள் பல தலைமுறைகளாக நீடித்து இருந்து, அதை இன்றும் பயன்படுத்தி வருகின்றன. §§

அதிக இரக்க உணர்வுள்ள நிர்வாக வடிவமாக இருக்கும் பகிரப்பட்ட ஆன்மாவின் சக்தி, ஒற்றை கண்ணோட்டம் மற்றும் குறிக்கோளுடன் இருக்கும் ஆன்மீக ஈடுபாடுள்ள குழுக்கள், அதிக ஒழுங்குமுறையுடன் அர்ப்பணிப்புடன் இருக்கும் சமூகங்களுக்கு மிகவும் பொருத்தமாக விளங்குகிறது. இதில் இலக்குகள், அந்த இலக்குகளை அடைய உதவும் செயல்முறைகள் மற்றும் அந்த செயல்முறைகளை செயல்படுத்த தேவைப்படும் தினசரி நடவடிக்கைகள் உடன்பாட்டில் இருக்கின்றன. புத்திசாலித்தனமான கூட்டுறவுடன் நடைபெறும் நிர்வாகம் என்று அதை எளிமையாக குறிப்பிடலாம். §§