குருமார்களின் சரித்திரங்கள்

Page 42: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/43_guru07_01.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

அத்தியாயமும் இருபத்தி-எட்டு§

காலத்தைக் கடந்த மரபுரிமைச் செல்வம்§

1987 வருடத்து வசந்த காலத்தில் இறைவன் கோயில் பற்றிய குருதேவாவின் கற்பனை, சூட்சும வெளிப்பாட்டில் இருந்து யதார்த்தமான உலகின் திட்டமாக மாறியது. அவர் தென் இந்தியாவின் புனிதமான கட்டிட கலைஞர்களுடன் செயல்பட்டு, அவர் அதன் தூல வடிவத்தை வரையறுத்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென் இந்தியாவில் சோழ சாம்ராஜ்யத்தில் கற்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் கட்டிடங்களின் பாணியை கவனத்தில் கொண்டு, அதன் படைப்பின் கொள்கைகளை நிறுவிக்கொண்டு இருந்தார். ஆனால் ஒரு பெரிய கேள்விக்கு விடை கிடைக்காமல் இருந்தது. சிவபெருமானின் எந்த வடிவம் கருவறையில் இருக்க வேண்டும்? அந்த முடிவின் முக்கியத்துவத்தை அவர் அறிந்து இருந்ததால், அதன் மீது பல மாதங்களுக்கு தொடர்ந்து தியானம் செய்துக்கொண்டு இருந்தார். அது வெளிப்புற தோற்றத்தை காட்டிலும் கோயிலைப் பற்றி அதிகமாக விவரிக்கும் தன்மையுடையது. அது மற்ற அனைத்திற்கும் மையமாக இருந்து, அதன் உயிர் மற்றும் சாரமாக, மிகவும் புனிதமான மற்றும் ஆற்றல்மிக்க சக்தியாக விளங்கும்.§§

ஒரு தெள்ளத் தெளிவான காட்சி §

குருதேவா ஒரு நாள் அதிகாலையில் தனது அறையில் எதிர்காலத்தை கண்டதாக குறிப்பிட்டார். நீங்கள் எதை செய்யவேண்டும் என்று தெரிந்துகொள்ள விரும்பினால், உங்கள் மனதில் எதிர்காலத்திற்குள் பயணம் செய்து, என்ன நடந்தது என்று திரும்பிப் பார்த்தால், உங்களுக்கு நிகழ்காலத்தில் எடுக்கவேண்டிய முடிவு தெளிவாக தெரியும் என்று அவர் அடிக்கடி குறிப்பிடுவார். §§

குருதேவா கண்ட வருங்கால காட்சியில், ‘இறைவன்’ கோயிலின் கருவறையில் இருந்து ஒரு மாபெரும் படிக சிவலிங்கம் பிரகாசமாக ஒளி வீசி, அதன் பிரகாசம் உலகெங்கும் பரவுவதை கண்டார். அது படிகங்களில் பேராற்றல் படைத்த படிகமாக இருந்தது. அதை முதலில் பார்த்த போது அளவில் மிகவும் பெரியதாக, அற்புதமானதாக, யதார்த்தத்தை கடந்ததாக இருந்தது. அது சிவலிங்கத்தின் தூல வடிவமாக இல்லாமல் ஆன்மீக வடிவமாக இருக்கலாம் என்று அவர் நினைத்தார். §§

அவர் சில மணிநேரங்கள் கழித்து கீழே இறங்கி வந்து, துறவிகளிடம் தான் கண்ட காட்சியை பகிர்ந்து, ‘இறைவன்’ கோயிலில் சிவபெருமான் எந்த ரூபத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு தனக்கு பதில் கிடைத்து விட்டதாக தெரிவித்தார். அது ஒரு படிக லிங்கமாக இருக்கும் என்று அவர் கூறினார். அது சமஸ்கிருதத்தில் ஸ்படிக சிவலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சத்தை படைத்து-காத்து-அழிப்பவரின் அருவுருவமாக இருக்கும் லிங்கம், உருவ வழிபாட்டில் தலை சிறந்து விளங்குவதாக பழங்கால நூல்கள் குறிப்பிடுகின்றன. அது உருவமைப்பு, வடிவம் மற்றும் கற்பனையை கடந்த பரமாத்துமாவை குறிப்பிடுகிறது. அது காலம், வடிவம், பரவெளி மற்றும் காரணத்தை கடந்து, ஒட்டுமொத்த பரமாத்துமாவாக இருக்கிறது. §§

மண் அல்லது மணல், மாட்டு சாணம் அல்லது மரம், வெண்கலம் அல்லது கருங்கல்லில் உருவாக்கப்பட்டு, லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமானை வழிபடலாம் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால் மனிதனால் செதுக்கப்படாமல் நூறு, ஆயிரம் அல்லது லட்சக்கணக்கான வருடங்களில் உடலைப் போல வளர்ந்தாலும், ஒவ்வோரு அணுவாக சேகரிக்கப்பட்டு மிகவும் மெதுவாக வளர்ந்து ஒரு இயற்கையான கல்லாக உருவாகும், பளிங்கு படிகம் பலரால் நாடப்படும் வடிவமாக இருக்கிறது. அத்தகைய ஒரு அற்புதமான இயற்கையின் படைப்பே வழிபடுவதற்கு தகுதி உடையதாக இருக்கிறது. §§

image§

ஒரு நாள் அதிகாலையில் குருதேவா கண்ட கனவில் தோன்றிய ஒரு நிறைவான படிக சிவலிங்கம், அவரை ஆறு பக்கங்கள் ஒரு கூர் முனையுடன் இருந்த மிகப்பெரிய ஸ்படிகத்திற்கு வழிநடத்தி சென்றது. இறைவனை பற்றி அவர் கண்ட காட்சி தோன்றிய 1975 ஆம் ஆண்டில், அந்த ஸ்படிகம் சுரங்கத் தொழிலாளிகளால் தோண்டி எடுக்கப்பட்டு, 1987 ஆம் ஆண்டு கவாய் வந்து சேர்ந்தது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

தங்கள் குரு வெளிப்படுத்திய தகவல் துறவிகளுக்கு மகிழ்ச்சியை வழங்கியது, மற்றும் அவர்கள் அதன் பொருளை கற்பனை செய்து பார்த்தார்கள். பிரபஞ்சத்தில் ஒவ்வொரு அணுவையும் உருவாக்கி அதில் வாசம் செய்யும் நடனத்தின் அரசனாக நடராஜர் வடிவில் ‘கடவுள்’ கோயிலில் ஏற்கனவே சிவபெருமான் குடியிருந்தார் மற்றும் தற்போது ‘இறைவன்’ கோயில் யாவும் கடந்த நிலையில், உள்ளார்ந்து மற்றும் ஆழ்நிலையில், அருவுருவமாக இருக்கும் சிவபெருமானை வரவேற்கவிருந்தது நல்லதொரு பொருத்தமாக தோன்றியது. ஆனால் அதற்கு அடுத்து நிகழவிருந்த சம்பவத்திற்கு துறவிகள் தயாராக இல்லை. §§

அதற்கு அடுத்த நாள் குருதேவா கவாய் கிலோஹானாவில் இருந்த கிரிஸ்டல் ஜர்நி ஷாப்புக்கு சென்றார். அவர் அங்கிருந்த மண்பாண்ட பொருட்களை பார்த்துக் கொண்டு, தனது காட்சியில் தோன்றிய ஒரு பெரிய படிகத்தை பற்றி அந்த கடைக்கு உரிமையாளராக இருந்த ஒரு பெண்ணிடம் பேச ஆரம்பித்தார். அவள் தன்னிடம் அதைப்போன்ற ஒரு படிகம் இல்லை என்று கூறினாலும், அவர் கூறியதைப் போன்ற ஒரு பெரிய படிகத்தை தானும் ஒரு காட்சியில் கண்டதாக கூறினாள். §§

சில வாரங்கள் கழித்து, அவள் மதிய நேரத்தில் மடத்திற்கு வந்து, குருதேவாவை சந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். புராணக்கதைகளில் வரும் தேவதைகளைப் போல காட்சியளித்த அவள், 70 களில் பிறந்து, சுமார் 40 வயது நிரம்பிய ஒரு புத்திசாலி பெண்ணாக இருந்தாள். ரோமா போன்று இருந்த நீளமான உடையில், சந்தோஷத்தால் சிவந்த கண்ணங்களுடன், தான் அவருக்கு ஒரு முக்கியமான செய்தி கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தாள். அவள் குருதேவாவின் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டாள். அங்கே அவள் குருதேவாவிடம், “குருதேவா, நான் நேற்று இரவு ஒரு கனவு கண்டேன். அந்த கனவில் முன்பை விட தெளிவாக ஒரு மிகப்பெரிய படிகத்தை கண்டேன். அது நீங்கள் விளக்கியதைப் போலவே உயரமாக நிறைவாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. அது மட்டும் இல்லை, அது எங்கே இருக்கிறது என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். நீங்கள் எனக்கு அனுமதி வழங்கினால், நான் அங்கே செல்ல விரும்புகிறேன். நான் அந்த படிகத்தை தேடிப்பிடித்து, அதை உங்களுக்கு கொண்டுவந்து தர விரும்புகிறேன். நீங்கள் அதற்கான பயணச் செலவை ஏற்றுக்கொள்வீர்களா?” என்று கேட்டாள். §§

கனவினால் தூண்டப்பட்ட ஒரு பணியில், ஒரு பரிச்சயமில்லாத நபருக்கு குருதேவா எப்போதும் பயணச் செலவை ஏற்றது இல்லை. ஆனால் இந்த பணி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. குருதேவா அன்று காலையில் தானும் கண்ட மிகப்பெரிய படிகத்தை பற்றி தனது விருந்தாளியிடம் தெரிவித்தார், ஆனால் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் தான் கண்ட கனவு இன்னொருவருக்கும் தோன்றும் என்று அவர் நினைத்து பார்க்கவில்லை. அது அவருக்கு ஒரு நல்ல அறிகுறியாக தோன்றியது, மற்றும் அவர் எல்லோரும் வியக்கும் விதமாக, அவளுக்கு இயற்கை அழகு நிரம்பிய மாநிலமான ஆர்கன்சாசுக்கு இரு வழி பயணச்சீட்டை வாங்கித் தந்தார். §§

அவள் விரைவில் படிக வேட்டையில் கிளம்பினாள். அவள் அதற்கு முன்பு ஆர்கன்சாஸ் சென்றிருக்கவில்லை என்பதால், அவள் வேறு வழியில்லாமல் அந்த பகுதியில் இருந்த பல்வேறு சுரங்கங்களுக்கு சென்று விசாரிக்க ஆரம்பித்தாள். பிரேசில் மட்டும் இல்லாமல், ஆர்கன்சாசும் உலகின் அதிக செழிப்பான படிக மூலமாக விளங்குகிறது. நீளமான செப்பனிடப்படாத பாதைகளின் முடிவில் தேடிப்பிடிப்பதற்கு பல டஜன் கணக்கான சுரங்கங்கள் இருந்தன. §§

அவள் இறுதியாக தான் தேடிய படிவத்தை ஜேம்ஸ் கோல்மனின் சுரங்கங்களில் தேடிப்பிடித்தாள். அவர் தடித்த கைகள் மற்றும் அசுத்தமான தாடியுடன் டெனிம் உடை அணிந்த ஒரு கடின உழைப்பாளியாக இருந்தார். சுமார் இரண்டு தலைமுறையாக அவரது குடும்பம் சுரங்கங்களில் படிகங்களை தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்ததால், அவருக்கு அந்த பணியில் நல்ல அனுபவ அறிவு இருந்தது. §§

அதிகம் பேசாத அந்த சுரங்க தொழிலாளி மெதுவாக தனது ஜீப் வரை சென்று, அதில் ஏறிக்கொள்ளுமாறு அவளுக்கு கை அசைத்தான். ஒரு பழைய மரக்கிடங்குடன் முடிவடைந்து, சிலருக்கு ஒரு பாதையாக தென்பட்ட, அந்த குழிகள் நிரம்பிய பவளப்பாதையில் அவர்கள் சுமார் ஒரு மைல் தூரத்திற்கு பயணம் செய்தார்கள். அவன் கோல்மன் வண்டியில் இருந்து இறங்கி, சிறகுக்கதவு வழியாக நடந்து, திறந்தவெளியின் பின்புறத்திற்கு சென்று, ஒரு இருண்ட மூலையில் இருந்த ஒரு மேடைக்கு முன்பாக சென்று நின்றான். அதன் மீது ஒரு பூஞ்சைக்காளான் பிடித்த மெத்தை, கிழிந்து பயனற்ற நிலையில், நன்றாக சுறுட்டபட்டு ஒரு சணல் கயிற்றால் கட்டப்பட்டு இருந்தது. §§

கோல்மன் அதிகம் எதுவும் பேசாமல், ஒரு சிறிய கத்தியை கொண்டு அந்த கயிற்றை அறுத்து, அந்த மெத்தையை திறந்து காண்பித்தார். அங்கே ஒரு மிகப்பெரிய அளவில், பாலைப் போல வெள்ளை நிறத்தில் ஒரு பளிங்கு படிகம் இருந்தது. அந்த அற்புதமான படிகம், ஒரு கலை அருங்காட்சியகத்தில் வைக்கக்கூடிய ஒரு கலைப்பொருளாக அல்லது ஒரு செல்வந்தரின் மாளிகையில் நுழைவாயிலில் காட்சிப்பொருளாக இருப்பதற்கு ஒரு பொருத்தமான பொருளாக இருந்தது. ஆனால் அது அங்கே அந்த மேடையின் மீது வைக்கப்பட்டு இருந்தது. §§

அந்த படிகத்தைப் பற்றிய கதையை சொல்ல வேண்டிய நேரம் வந்த போது, அவரிடம் இருந்த வழக்கமான தயக்கம் மறைந்தது. கோல்மன் அந்த பெண்ணை நோக்கி திரும்பியபோது, அவளது கன்னங்களில் ஆனந்த கண்ணீர் வடிந்துக்கொண்டு இருந்தது. §§

1975 ஆம் ஆண்டு என் சகோதரனும் நானும் படிகங்களைத் தேடி தோண்டிக்கொண்டு இருந்தோம். இந்த குன்றுகளின் கீழே நிரம்பியிருந்த குகைகளில் எங்கள் பாறைகளை ஒன்றாக பாதுகாத்து வருகிறோம். நாங்கள் அன்று 65 அடி ஆழத்தில் இருந்த போது, ஒரு புதிய குகைக்குள் நுழைந்தோம். இருபது அடி அகலம் மற்றும் ஐந்து அடி உயரத்துடன், இருள் சூழ்ந்து ஈரம் கசிந்து இருந்த அந்த குகையை முதலில் பார்த்த போது எதுவும் விநோதமாக தென்படவில்லை. ஆனால் சிறிது நேரம் கழித்து, என் மின்விளக்கின் வெளிச்சம் அந்த படிகத்தின் மீது பட்டது. அது குகையின் தரையில் இருந்து உடைந்து, ஒருபுறமாக சாய்ந்து, கீழே விழுந்து இருந்தது. அதனை சுற்றி மூன்று பக்கங்களிலும் இருந்த சுமார் பத்து சிறிய படிகங்களின் குழு உடையாமல் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்தன. ஆனால் இந்த படிகத்தின் வளர்ச்சி நின்று இருந்தது. இது கூர்முனையுடன் ஆறு பக்கங்களுடன இருப்பதை நீங்கள் பார்க்கலாம். மேலும் அதன் மேல்பரப்பு நாள் முழுவதும் குளிர்ச்சியான பனிக்கட்டி போன்ற ஒரு உணர்வை வழங்குகிறது. நாங்கள் ஒரு மெத்தையை கொண்டு வந்து, அதை அந்த பதிகத்தின் மீது சுற்றி, மிகவும் மெதுவாக மேற்பரப்பிற்கு கொண்டு வரும் போது, சூரியன் மறைத்துக்கொண்டு இருந்தது. §§

அது நாங்கள் இருவரும் மேற்கொண்ட ஒரு அற்புதமான கண்டுபிடிப்பாக விளங்கியது. எங்கள் குடும்பம் மூன்று தலைமுறையாக சுரங்கத்தில் இருந்து படிகத்தை தோண்டி எடுத்து இருந்தாலும், யாரும் இதைப்போன்ற ஒரு தலைசிறந்த பொக்கிஷத்தை அடைந்தது இல்லை. அது விசேஷமானது என்பதை நானும் என் சகோதரனும் புரிந்துகொண்டோம். அதற்கு என்று ஒரு எதிர்காலம் இருப்பதை எங்களால் உணர முடிந்தாலும், அது என்னவாக இருக்கும் என்பதை எங்களால் அறிய முடியவில்லை. ஒரு வினோதமான படிகம். இதைப்பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று எங்களுக்குள் பேசிக்கொண்டு, அதை அந்த மெத்தையிலேயே வைத்து, இங்கே கொண்டு வந்தோம். ஆனால் அது உங்கள் கனவில் தோன்றியுள்ளது. அதைப்பற்றி தெரிந்துக்கொள்ள வேறு எந்த வழியும் இல்லை. இந்த படிகத்தின் எதிர்காலம் என்னவென்று எங்களுக்கு ஒரு நாள் தெரியவரும் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். இது உங்களுடன் ஹவாய்க்கு சென்று, இதை கனவில் கண்ட அந்த தெய்வீக புருஷருடன் இருக்கவேண்டும் என்பது இதன் விதி என்று எனக்கு தோன்றுகிறது. இந்த படிகம் நீண்டநாட்களாக காத்துக்கொண்டு இருக்கிறது. இதை பெறுவதற்கு நீங்கள் இங்கே வந்தது, எனக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. §§

அந்த படிகத்தை நாடி வந்தவள் உற்சாகம் அடைந்து, இதைப்பற்றி குருதேவாவிடம் தெரிவித்தாள், அவர் அதன் புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அவர் அதை பார்த்ததும், “ஆமாம், நான் இதைத்தான் குறிப்பிட்டேன்!” என்றார். அவள் அந்த படிகத்தை விலை கொடுத்து வாங்கி, அதை ஒரு பெட்டில் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, அவள் தன் சொந்த நாட்டிற்கு புறப்பட்டாள். 700 பவுண்ட் எடையுடன், 39 அங்குல உயரத்துடன் இருந்த ஸ்படிக சிவலிங்கம் மடத்திற்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி வந்து சேர்ந்தது மற்றும் அது இரண்டு நாட்கள் கழிந்து ‘கடவுள்’ நடராஜருக்கு முன்பு ஸ்தாபனம் செய்யப்பட்டு, ‘இறைவன்’ கோயில் தொடங்குவதற்காக காத்து இருந்தது. குருதேவா அதிகாலையில் கண்ட கனவு அற்புதமான முறையில் வெளிப்பட்டு இருந்தது. §§

பல வருடங்கள் கழித்து, ஒரு நாள் பிற்பகல் நேரத்தில், குருதேவா அடிக்கடி தொடர்பு கொண்ட தேவர் தான் வந்திருப்பதாக தகவல் தெரிவித்து, கேள்விகள் ஏதேனும் இருந்தால் கேட்கலாம் என்று கூறினார். குருதேவாவுடன் இருந்த ஒரு துறவி, அந்த மிகப்பெரிய படிகத்தின் முக்கியத்துவத்தை பற்றி கேட்டார். ஒரு நண்பன் பேசுவதை சாதாரண மக்கள் கேட்பதைப் போல, குருதேவா தனது கட்புலனுக்கு அப்பாற்பட்ட சக்தியால் அந்தர்லோகத்தின் தேவர் அளித்த பதிலை கேட்டு, அன்று படியெடுக்கும் பணியில் இருந்தவரிடம், இரண்டு மற்றும் மூன்று வார்த்தை கணைகளாக, அதை அறிவுறுத்த ஆரம்பித்தார். §§

இப்போது நம்மிடம் இருக்கும் மாபெரும் படிகம் பூமியில் அமைதி, இணக்கம், திருப்தி, குணப்படுத்தும் தன்மை மற்றும் பொறுமை, சுதந்திரம் மற்றும் நல்லிணக்கம் மற்றும் இந்த கிரகத்தில் மனிதர்கள் மற்றும் எல்லா உயிரினங்களுக்கும் இடையே ஒரு நெருக்கமான ஒற்றுமையை உருவாக்கும் ஒரு அஞ்சல் நிலையமாக செயல்பட்டு, அதன் திட்டப்பணிக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட, மிகவும் விசேஷமான படிகம் ஆகும். இது தற்போது இந்த கிரகத்தில் இருக்கும் ஒவ்வொரு படிகம் வழியாகவும் ட்ரில்லியன் கணக்கான தகவல்களை அஞ்சல் செய்து, மிகவும் சிறிய பூச்சிகளுக்கும் புத்துயிர் அளித்து அறிவுறுத்திக்கொண்டு இருக்கிறது. §§

image§

1988 ஆம் ஆண்டில் ஐந்து நாட்களுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் தலாய் லாமா, கேன்டர்பரி ஆர்ச்பிஷப், கார்டினல் கோனிக் மற்றும் பல்வேறு மதத்தலைவர்களுடன் உயர் பதவியில் இருந்த அரசியல்வாதிகள், ஊடகம் மற்றும் விஞ்ஞானிகள் பங்குபெற்ற ஒரு மாநாட்டில், குருதேவா ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து, இந்து சமயத்தின் விரிவான சகிப்புத்தன்மை பற்றிய தகவலை வழங்கினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அமைதி மற்றும் நீடித்த மனித வாழ்க்கைக்கு நடத்திய போராட்டம்§

உலகில் குருதேவாவின் புகழ் சீராக வளர்ந்தது. 1986 ஆம் ஆண்டு, இந்து சமய மறுமலர்ச்சிக்கு அவர் மேற்கொண்ட சர்வதேச முயற்சிகளை ஊக்குவிக்கும் வண்ணம், புது தில்லியில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாடு, நவீன யுகத்தின் ஐந்து ஜகதாச்சாரியார்களில் (உலகின் ஆசிரியர்கள்) ஒருவராக அவருக்கு பட்டம் சூட்டி கௌரவித்தது. அந்த பட்டம் மற்றும் அதனுடன் வந்த சில தகவல்கள், கிழக்கில் குருதேவாவிற்கு அங்கீகாரம் கிடைப்பதை தெளிவுபடுத்தியது. உண்மையில் அந்த கௌரவத்தின் மூலம், அவர் மிகவும் உயர்வான ஆன்மீக பதவியான, சற்குருவாக கருதப்படும் முதல் மேற்கு நாட்டவர் என்ற பெருமையை பெற்றார். அந்த பதவி இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்தது. அது ஒரு கௌரவமாக இருந்தாலும், அவர் மிகவும் முக்கியமாக அந்த பொறுப்பிற்கு அதிக மதிப்பை வழங்கினார். ஒரு குருவின் பாதங்களை தொட்டு வணங்க வேண்டியிருக்கும் என்பதால், இந்தியர்களில் ஒரு ஆச்சாரமான குழு இந்தியாவை சாராத ஒருவர் ஒரு குருவாக வளர்ச்சி அடைவதை என்றுமே ஏற்றுக்கொள்ளாது என்பதால், அதில் நேர்மறை அம்சங்களும் எதிர்மறை அம்சங்களும் இருந்தன. அவர்கள் விலகி நின்று, கூர்ந்து கவனித்து வந்தனர். §§

குருதேவா பெரும்பாலான மாநாடுகளுக்கு அழைக்கப்பட்டாலும், அவர் அவற்றில் மிகவும் அபூர்வமாக கலந்து கொண்டார். நீடித்த மனித வாழ்க்கை பற்றி ஆன்மீக மற்றும் பாராளுமன்ற தலைவர்கள் இடையே ஆக்ஸ்போர்டு (1988), மாஸ்கோ (1990) மற்றும் ரியோ டி ஜெனிரோவில் (1992) நடைபெற்ற சர்வதேச கருத்தரங்குகள், சிகாகோவில் (1993) நடைபெற்ற உலக சமயங்களின் மாநாடு மற்றும் ஐக்கிய நாடுகளில் (2000) நடைப்பெற்ற சமய மற்றும் ஆன்மீக தலைவர்களின் மில்லினியம் உலக அமைதி மாநாடு என்று அவருக்கு குறிப்பிட்ட சில மாநாடுகளே முக்கியமானதாக தோன்றின. §§

தனது மரணத்தை எதிர்கொள்வதே மனிதனுக்கு கடினமாக இருக்கும் போது, மனித இனமே நிரந்தரமாக அழியும் அபாயத்தில் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். இத்தகைய ஒரு நிலைமையை பற்றி பேசுவதற்காக, 1988 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 முதல் 15 வரை, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் அறுபது நாடுகளில் இருந்து அதிக செல்வாக்குள்ள சுமார் 140 ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள். வானியற்பியல் நிபுணராக இருந்த Dr. கார்ல் சாகன், உயிரியல் அறிஞராக இருந்த Dr. ஜேம்ஸ் லவ்லாக், சோவியத் நாட்டு விஞ்ஞானியாக இருந்த Dr. எவ்கெனி வெலிகோவ் மற்றும் மக்கள் தொகை, ஊடகம் மற்றும் கல்வித்துறையை சேர்ந்த மற்ற தலைசிறந்த வல்லுனர்கள் அச்சுறுத்தல்கள் பற்றிய கருத்துக்களை தொடர்ச்சியாக வழங்கினார்கள். பூமியும் அதில் சிறிய சுமையாக இருக்கும் உயிரினங்களும் ஆபத்தில் இருப்பதையும், விரைவில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றால், ஒவ்வொரு வருடமும் அழிந்துக்கொண்டு இருக்கும் பல ஆயிரக்கணக்கான உயிரினங்களை போல, மனிதனும் அழிந்து விடுவான் என்கிற பயங்கரமான தகவலுக்கு மனித இனம் விழிப்புணர்வை பெற்று இருந்தது. §§

ஐரோப்பிய இடைக்காலத்திற்கு பிறகு, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆன்மீக தலைவர்களின் ஒரு உயர்மட்டக்குழுவின் சந்திப்பு நடக்கவில்லை. அந்த காலத்தில் நடைபெற்ற சந்திப்பு ஐரோப்பிய அரசியல் அறிஞர்கள் மற்றும் கிறுத்துவ தலைவர்களுக்கு இடையே நடைபெற்றது. 1988 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சர்வதேச கருத்தரங்கு இந்து மதம், பெளத்த மதம், கிறுத்துவம், இசுலாம் மற்றும் யூத மதம் என்று ஐந்து முக்கிய மதங்களுடன் ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க இந்திய மதங்கள், சமணம், சீக்கிய மதம் மற்றும் ஷின்டோயிசத்தை சேர்ந்த பிரதிநிதிகளை ஒன்று சேர்த்தது. §§

நம்மை அச்சுறுத்தும் பிரச்சனைகள் என்ன? ஒரு குறிப்பிட்ட வரிசையில் இல்லாவிட்டாலும் போர், பசி, ஏழ்மை மற்றும் வளங்களில் ஏற்றத்தாழ்வு, கடன், பாலைநிலமாதல், படிப்பறிவின்மை, மக்கள்தொகை பெருக்கம், சமய அடிப்படைவாதம், பூமி வெப்பமாதல், உயிரின வாழ்க்கைச் சூழலியலின் சிதைவு, இனங்களின் அழிவு மற்றும் சமூக அநீதி ஆகியவை நம்மை அச்சுறுத்தும் பிரச்சனைகள் ஆகும். §§

ஐந்து நாட்கள் நடைபெற்ற அந்த மாநாடு தொடங்கியதும், “நாம் இங்கே சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு வழிகளை தேடும் நோக்கத்துடன் கூடியுள்ளோம். நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வாழலாம் அல்லது ஒன்றாக சேர்ந்து மடியலாம். இதில் நம்மால் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய முடியும், “ என்று ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கார்டினல் கோனிக் பேசிய அவசரத் தேவையை கூடியிருந்த பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்டது தெளிவாக தெரிந்தது. இதனுடன் கேன்டர்பரியின் ஆர்ச்பிஷப்பாக இருந்த ராபர்ட் ரன்சி, “நீடித்து வாழ்வதற்கு மரியாதை மற்றும் கூட்டுறவு என்று இரண்டு பண்புகள் உள்ளன. நாம் நமது ஆன்மீக இறுமாப்பை கட்டுப்படுத்த வேண்டும். இந்த பிரபஞ்சத்தில் மனித உயிரைத் தவிர மற்ற அனைத்தும் அற்பமானது என்று உதறித்தள்ளும் எண்ணத்தை நாம் கைவிடவெண்டும்,” என்று தனது கருத்தை தெரிவித்தார். ஆப்பிரிக்க நாட்டவர்கள் பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையே இருக்கும் பரவலான வித்தியாசங்களை வலியுறுத்தி, “அதிகமான பொருள்முதல்வாதம் மற்றும் கட்டுப்பாடற்ற நுகர்வு,” என்று இகழ்ந்து உரைத்தனர். §§

தலாய் லாமாவின் வருகை மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அவர் மனித குழப்பத்தின் மையத்திற்கு சென்று, ஆன்மாவையும் உலகையும் உருமாற்றும் இடமாக இதயம் விளங்குகிறது என்று குறிப்பிட்டு, அன்பு மற்றும் பரிவு பற்றி அவர் வழங்கிய எளிமையான உரையும், அந்த சலசலப்புக்கு ஒரு காரணமாக விளங்கியது. பரஸ்பர மரியாதை மற்றும் புரிந்துணர்வு, ஒருவர் தனது சமயத்தை பிரச்சாரம் செய்வதை நிறுத்தி, அதற்கு பதிலாக ஒட்டுமொத்த மனித நேயத்திற்கு பயனுள்ள வகையில் பங்களிக்க வேண்டும் என்கிற ஒரு ஆசையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியது கேட்பதற்கரிய ஒரு தகவலாக விளங்கியது. இதைப்பற்றி பேசுவதற்கு, நாடு கடத்தப்பட்ட அந்த பெளத்த சமய ஆன்மீக தலைவர் தலைசிறந்த பேச்சாளராக இருந்தார். §§

மதத்தலைவர்களில் ஒருவர் தொடக்கத்தில் நடைபெறும் முழு அமர்வின் ஆரம்ப பிரார்த்தனையை முடித்ததும் அவமதிக்கப்பட்டபோது, குருதேவா ஒரு பெரிய அமளியை ஏற்படுத்திவிட்டார். ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த பேச்சாற்றல் நிறைந்த ஒரு பெண் மதகுரு தனது பிரார்த்தனையை முடித்துக்கொண்ட போது, “இனி, நாம் இன்றைய முக்கிய நிகழ்ச்சிக்கு முன்னேறலாம்,” என்று அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். அந்த கூட்டத்தில் குருதேவா தைரியமாக எழுந்து நின்று, தாங்கள் அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயல்படுவதற்காக அழைக்கப்பட்டதாகவும், தாங்கள் இங்கே வருகை தந்ததும் ஒரு சிரிய பிரார்த்தனை செய்து முடித்த பிறகு, தாங்கள் அவமதிக்கப்பட்டு தங்களது பங்களிப்பின் மதிப்பு குறைக்கப்படுகிறது என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் கூறி, அந்த குறிப்பிற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். “இன்றைய மற்ற நிகழ்ச்சிகளை போல, இந்த பெண் மதகுரு நடத்திய பிரார்த்தனையும் முக்கியமான நிகழ்ச்சியே,” என்று அவர்களை கடிந்துக்கொண்டு, தனது நீளமான கைகளை உயர்த்திக்கொண்டு, “இங்கே உங்கள் கூட்டத்திற்கு நாங்கள் வெறும் சுவரொட்டியாக இருக்கிறோம் என்று தெரிவித்து ஒவ்வொரு ஆன்மீக பாரம்பரியத்தையும் அவமதித்து இருக்கிறீர்கள். நாங்கள் இதற்காக இங்கே வரவில்லை,” என்று கூறினார். அந்த நிகழ்ச்சியின் தலைவராக இருந்த ஒரு பெண்மணி முதலில் மேடையிலும், பின்னர் அடுத்த நாள் காலையில் நேராக சந்தித்தும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டாள். குருதேவா சொல்வது சரியென்று அவளும் மற்றவர்களும் புரிந்துக்கொண்டு, கலந்து ஆலோசித்து தங்கள் பழக்கங்களை மாற்றிக் கொண்டார்கள். அது அந்த மாநாட்டில் ஒரு முக்கிய தருணமாக இருந்தது, மற்றும் மற்ற நிகழ்ச்சிகளில் ஆன்மீகத் தலைவர்கள் ஆர்வத்துடன் அழைத்து வரப்பட்டு முறையாக கௌரவிக்கப்பட்டார்கள். §§

1990 ஆம் ஆண்டு, குருதேவா மீண்டும் உலகின் சமய மற்றும் அரசியல் தலைவர்கள் பங்குபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த முறை ஏழு நாட்கள் நடைபெற்ற மாநாட்டின் போது, உணரக்கூடிய முக்கிய யதார்த்தமாக பனிக்கட்டி மற்றும் பனிமழை விளங்கியது மற்றும் சூரியன் என்றுமே கண்ணுக்கு தென்படவில்லை. ஒரு விமான கூடாரம் அளவுள்ள ஒரு அறையில் பூமியின் ஒவ்வொரு மூலை முடுக்கில் இருந்தும் அழகாக பல வண்ண உடைகளில் வந்திருந்த 1,400 ஆன்மாக்கள் நிரம்பி இருப்பதையும், எல்லோரும் தாங்கள் பகிர்ந்த அண்டவியல் பற்றி தெரிந்துகொள்வதையும், இந்த மென்மையான பூமியே நமக்கு இருக்கும் ஒரே உறைவிடம் என்பதை கருத்தில் கொண்டு, நமக்கு இருக்கும் ஒரே சரணாலயத்தை மூடத்தனமாக மாசுபடுத்தியதையும் தெரிந்துகொண்டு, அதை பாதுகாக்க எல்லோரும் உறுதியாக இருப்பதையும் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதை கற்பனை செய்ய முடிந்தால், மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச மாநாடு பற்றிய முழு அனுபவத்தையும் உங்களால் பெற முடியும். §§

ஆக்ஸ்போர்டு, ரியோ டி ஜெனிரோ மற்றும் மாஸ்கோவில் நடைபெற்ற அரசியல் மற்றும் மதத்தலைவர்களின் சர்வதேச கருத்தரங்கிற்கு எங்களுக்கு அழைப்புக்கள் வந்தன. “நாங்கள் வரவேண்டும் என்றால், நாங்கள் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யும் பயணிகள். நாங்கள் துறவிகள் மற்றும் எங்களது பயணத்திற்காக பணத்தை ஒதுக்குவது இல்லை. பயணச்சீட்டுக்களை அனுப்பினால், நாங்கள் அங்கே வந்து விடுவோம்,” என்று எல்லா அழைப்புக்களுக்கும் பதில்கள் அனுப்பப்பட்டன. அவர்களுக்கு எங்களது வருகை மிகவும் அவசியமாக தேவைப்பட்டதால், பயணச்சீட்டுக்கள் வந்து சேர்ந்தன. அந்த பயணச்சீட்டுக்கள் முதல் வகுப்பு அல்லது வணிக வகுப்பில் இருக்க வேண்டும், ஏனென்றால் எனக்கு இப்போதெல்லாம் சிறிய இருக்கைகள் சரிபட்டு வரவில்லை. அவை ஒவ்வொரு வருடமும் சிரியதாகிக்கொண்டே இருக்கின்றன.§§

ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, ஹவாய் மற்றும் மற்ற நாடுகளில் இருந்து வந்திருந்த பழங்குடி மக்களின் மிகப்பெரிய குழுக்கள், இந்த பாரம்பரியங்களின் மதிப்பையும், இவை இன்றும் புறக்கணிக்கப்பட்டு தவறாக பயன்படுத்தப்படுவதையும் குருதேவாவிற்கு நினைவூட்டின. ஒரு காலத்தில் மனிதநேயம் ஒன்று திரட்டி, விரயம் செய்த பழங்கால விவேகத்தின் பலவீனமான கலாச்சார கிடங்குகள் அல்லது விதைகள் போல இருக்கும் அவற்றை தற்போது மீண்டும் விதைக்க வேண்டியுள்ளது. நாம் எல்லோரும் பூமியின் பழங்குடி மக்கள் என்று ஒரு சான்றோர் சரியாக குறிப்பிட்டார். இந்த பாரம்பரியங்களுக்கு இந்துக்கள் இயல்பான நண்பர்கள் என்பதும், கட்டுப்பாடுகள் எதையும் விதிக்காமல், அவர்களுக்கு பயனுள்ள வளங்களை வழங்கி, அவர்களுக்கு ஆதரவாக பேச வேண்டும் என்பதில் குருதேவா தெளிவாக இருந்தார். §§

மாஸ்கோவில் ரஷ்ய அரசின் நிதியுதவிடன் நடைபெற்ற இந்த சர்வதேச கருத்தரங்கு, மனிதன் ஒரு இயற்கைக்கு புறம்பாக கொடூரமான செய்முறையின் மூலமாக, தன் இனத்தையே வேட்டையாடும் அளவிற்கு, இந்த பூமியில் மிகப்பெரிய வேட்டைக்காரனாக மாறிவிட்டான் என்பதை பற்றி தெரிந்துகொள்ளவும் நடத்தப்பட்டது. தற்போதைய போக்கு மாற்றி அமைக்கப்படவில்லை என்றால், நாம் ஒரு வகையான தற்செயலான தற்கொலைக்கு பொறுப்பாக வேண்டியிருக்கும் என்று விஞ்ஞானிகள் வற்புறுத்தினர். மாஸ்கோவில் குருதேவா கேட்ட உரைகளின் சுருக்கம்: நாம் நமது அணுகுமுறைகளை மாற்றாமல், நமது தற்போதைய பழக்கங்கள் மற்றும் வழக்கங்களில் நிலைத்து இருந்தால், நம்மால் வளர்ச்சி அடைய முடியாது, நம்மால் நீண்ட நாள் வாழவும் முடியாது. மாறிக்கொள்ளுங்கள் அல்லது அழிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிகவும் எளிமையாகவும் அதை குறிப்பிடலாம். நாம் பூமிக்கு தீங்கு விளைவிப்பதை நிறுத்தியதும், அது குணமடைய தொடங்கும். போர், தூய்மை கேடு, இனங்களின் அழிவு மற்றும் அடிப்படைவாதத்தை மனிதனின் மனசாட்சி ஏற்றுக்கொள்ளாத போது, அவை முடிவுபெறும். மேலும் அவற்றின் பயங்கரமான விளைவுகளை நாம் புரிந்துகொண்டதும், அவற்றை யாரும் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். §§

image§

1990 ஆம் ஆண்டு கடுமையான குளிர்காலத்தில், USSR உடைத்துக்கொண்டு இருந்த போது, மாஸ்கோவில் நடைபெற்ற ஒரு வார கருத்தரங்கிற்கு, மிகைல் கோர்பச்சேவ் 700 அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மீக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதற்கு வருகை தந்த இந்து தலைவர்களில் குருதேவாவும் ஒருவராக இருந்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

மாஸ்கோவில் தங்கியிருந்த நாட்கள் குருதேவாவிற்கு பிடித்து இருந்தன. விளக்குகளுடன் பிரகாசித்த 150 வருட பழமையான கிரெம்ளின் வரவேற்பு அறையில் நடைப்பெற்ற ஒரு இசை நிகழ்ச்சி மற்றும் காக்டெய்ல் விருந்தில், தானும் தன்னுடன் இருந்த சுவாமியும், எளிமையான மற்றும் தைக்கப்படாத தங்களது சந்நியாச ஆடையில் கலந்துகொண்டு, உலகத் தலைவர்களுடன் கூடிப்பழக வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்ட சங்கடமான மாலை நேரங்களும் அவருக்கு பிடித்து இருந்தன. §§

அந்த மாநாட்டின் முடிவில் ஒரு மாலை நேரத்தில், கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அரசு ஒரு மிகப்பெரிய பால்ரூம் நடனத்திற்கு ஏற்பாடு செய்து, மனித நேயத்தின் எதிர்காலத்தை எதிர்கொள்ள மற்ற நாடுகளில் இருந்து வந்திருந்த ஆண்கள் மற்றும் பெண்களுடன் கலந்துக்கொள்ள வணிக மற்றும் கலாச்சார தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தது. மதத்தலைவர்கள் ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும், தாங்கள் பிரார்த்தனைகளை நடத்தி ஆசிகளை வழங்க தங்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று போராடிக்கொண்டு, சில சமயம் தீவிரமாக சண்டையிட வேண்டியிருந்தது. எல்லோர் கவனத்தையும் பெறுவதற்காக நடைப்பெற்ற போராட்டத்தை இந்துக்கள் மட்டும் தனியாக நின்று பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஐந்து-ஆறு நாட்களுக்கு பிறகு, இந்துக்களைத் தவிர மற்ற எல்லா முக்கிய மதங்களும் தங்களது வாய்ப்பை பெற்று இருந்தன. அதனால் அன்று இரவு, ஒரு இந்து தலைவர் தேர்வு செய்ப்பட்டார், மற்றும் அந்த தேர்வு அன்று நடந்த நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமானதாக விளங்கியது. §§

அன்று சிருங்கேரி மடத்தின் துறவியாக இருந்த சுவாமி பரமானந்த பாரதி தேர்வு செய்யப்பட்டார். அவர் துறவறம் மேற்கொள்ளும் முன்பு இயற்பியல் வல்லுனராக இருந்தார். அவர் மதிய உணவு நேரத்தில் குருதேவாவை அணுகி, பல்வேறு சமூகங்களை சேர்ந்த இந்த குழு தான் வழங்கவிருக்கும் உரையை முழுமையாக புரிந்துகொள்ளுமா என்று தனது சந்தேகத்தை தெரிவித்தார். அவரது உரையை மாநாட்டில் கூடியிருக்கும் அனைவரும் தெளிவாக புரிந்துகொள்வார்கள் என்று குருதேவா அவருக்கு உறுதி அளித்து, கூட்டத்தில் தைரியமாக பேசுமாறு ஊக்கம் அளித்தார். §§

அன்று மாலை நேரத்தில், உலகம் முழுவதிலும் இருந்து வந்த 300 தொலைக்காட்சி கேமராக்களின் கவனம் அவர் மீது திரும்ப, அவர் ஆதி சங்கரரைப் போன்று உடையணிந்து, கையில் தண்டம், கைகள் மற்றும் நெற்றியில் மூன்று பட்டைகளாக விபூதியை பூசிக்கொண்டு, அழகாக அலங்கரிப்பட்ட அந்த அறையில் தூய்மை மற்றும் எளிமையின் சொரூபமாக காட்சி அளித்த சுவாமி, தனது காலணிகளை கழற்றி, மேடையில் ஏறி தனது பிரார்த்தனையை தொடங்கினார். §§

image§

குருதேவாவின் இதயத்தில் பழங்குடி மக்களுக்கு ஒரு விசேஷ இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அவர் பிரேசில் மற்றும் ஆப்பிரிக்க பழங்குடி மக்களை சந்தித்து பேசினார், ஆங்கரேஜ் (அலாஸ்கா) நகரத்தில் தான் ஒரு கோயிலை ஸ்தாபனம் செய்ய உதவவேண்டும் என்று இன்யூட் சமூகத்தை சேர்ந்த பெரியவர்களிடம் கேட்டுக்கொண்டார், மற்றும் அரிசோனாவில் வாழும் ஹோபி சமூகத்தின் தலைவர்களிடம், மறைத்துக்கொண்டு இருந்த அவர்களது கலாச்சாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, அவர்களின் புனிதமான நூல்களை இணையத்தில் வெளியிடுவது பற்றி உரையாடிக்கொண்டு இருந்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

நாம் ஏமாற்றம், குழப்பம் மற்றும் பதட்டம் நிறைந்த யுகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். நாம் ஞானோதயம் பெறுவதற்கு எந்த தருணத்தில், எந்த நோக்கத்துடன் மற்றும் எந்த வேகத்தில் தொடங்கவேண்டும் என்று நமக்கு தெரிவதில்லை. அதிஷ்டவசமாக, இந்த காரணிகள் அனைத்தையும் தீர்மானிக்கும் ஞானத்தின் பாதையை முடிவில்லாமல் இருக்கும் வேதங்கள் வழங்குகின்றன. இங்கே நான் இரண்டு வேத மந்திரங்களை குறிப்பிட விரும்புகிறேன். இவை சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் போன்ற வான்பொருட்களில் வியாபித்து இருக்கும், இல்லை இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் பஞ்ச பூதங்கள் அனைத்திலும் வியாபித்து இருக்கும் மகாதேவர்களை நினைத்து பிரார்த்தனை செய்வது ஆகும். இதில் நாம் சாந்தியை பிரார்த்தனை செய்கிறோம், அதாவது மாடுகளைப் போன்ற விலங்குகளின் சாம்ராஜ்யம் மற்றும் மனிதர்களின் சாம்ராஜ்யத்தில் அமைதியை வேண்டுகிறோம். இறைவனின் அருளில் இருந்து வரும் இந்த சாந்தி என்கிற அமைதி, நம் ஒவ்வொருவருக்கும் நிரந்தரமான பேரானந்தத்தை வழங்க, நமது இதயங்களின் ஆழங்களில் எதிரொலித்துக்கொண்டு இருக்கட்டும். இந்த சாந்தி எங்களை உபசரிக்கும் இந்த தலைசிறந்த நாட்டின் தலைவர்கள் மற்றும் மக்களுக்கு, உலகில் இருக்கும் மற்ற நாடுகளுக்கு மற்றும் இந்த சர்வதேச கருத்தரங்கிற்கு அமைதி மற்றும் செழிப்பை வழங்கட்டும். §§

அதன் பிறகு சுவாமி உச்சரித்த இனிமையான சமஸ்கிருத மந்திரம், கிரெம்ளின் வரவேற்பு அறை முழுவதும் வியாபித்தது. அவர் முடிவில், அரங்கில் இருக்கும் எல்லோரும் தன்னுடன் சேர்ந்து பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தை மூன்று முறை சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். சுவாமி “ஓம்” என்று உச்சரித்து, தனது கைகளை உயர்த்தி எல்லோரும் சேர்ந்து சொல்லுமாறு கேட்டுக்கொண்டார். வலுவாக எதிரொலித்த அந்த ஓம்காரம், அரங்கம் முழுவதும் நிரம்பியது. ஓம் காரத்தை சுவாமி இரண்டாவது முறை மற்றும் மூன்றாவது முறை உச்சரித்த போது, அரங்கில் இருந்த மக்கள் கூட்டம் ஒவ்வொரு முறையும் அதிக வலுவாக உச்சரித்தது. அவர்களது அடிப்படை ஒருமையில் இருந்து தோன்றி, அவர்களது வேற்றுமைகளை கடந்து எல்லோரும் புரிந்துகொண்ட ஒரு மொழியை பகிர்ந்து, உலகமே ஒன்றாக சேர்ந்து உச்சரித்தைப் போல அது ஒரு சக்திவாய்ந்த தருணமாக இருந்தது. அங்கே கூடியிருந்த மக்களுக்கு தெரியாமல், USSR யில் விரைவில் வரவிருந்த குறிப்பிடுத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய சூட்சும சக்தியாக “கிரெம்ளின் மாளிகையில் உச்சரிக்கபட்ட ஓம்காரம்” விளங்கியது என்று குருதேவா பின்னர் குறிப்பிட்டார். அவர் இந்த அனுபவத்தைப் பற்றி இந்துயிசம் டுடே பத்திரிகையில் விளக்கினார்:§§

ஒரு காலத்தில் லெனின் இருந்த கிரெம்ளின், குருசேவ் இருந்த கிரெம்ளின் மற்றும் தற்போது கோர்பச்சேவ் இருக்கும் கிரெம்ளின் மாளிகையில் அமர்ந்து இருக்கும், இரண்டாயிரத்திற்கும் மேலான ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள், இந்தியாவில் இருந்து வந்திருந்த ஒரு சுவாமியின் தலைமையில், வேதங்களில் இருந்து ஒரு சாந்தி மந்திரத்தை கேட்பார்கள் மற்றும் எல்லோரும் ஒன்றாக “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தை உச்சரிப்பார்கள் என்பதை யாரால் நம்பமுடியும்? அந்த ஓம்காரம் போரை நிறுத்தும் ஆற்றலுடன் அமைதியை வேண்டிய மக்களின் குரலாக விளங்கியது. ஆனால் துரதிஷ்டவசமாக டைம் பத்திரிக்கை வழங்கிய ஒரு சிறிய குறிப்பைத் தவிர, இதை அமெரிக்க பத்திரிகைத்துறை கவனிக்கத் தவறியது. அங்கே கோர்பச்சேவ் மற்றும் ஷெவர்ட்நாசி போன்ற பெருந்தலைவர்களுடன், உலகின் பிரபலமான யூதகுருமார்கள் மற்றும் இமாம்கள், துறவிகள் மற்றும் இறையியல் வல்லுனர்கள் மட்டுமில்லாமல் 57 நாடுகளின் பாராளுமன்றத்தில் இருந்து அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஊடக வல்லுனர்கள் என்று பல முக்கியமான மற்றும் தலைசிறந்த வல்லுனர்கள் கூடியிருந்தார்கள். எல்லோரும் ஒன்றாக அமைதிக்காக செயல்பட்டு, எல்லோரும் ஒன்று சேர்ந்து இனிமையான ஒற்றை குரலில், சர்வதேச ஒருமையின் புனிதமான ஓம்காரத்தை உச்சரித்து, மனித இனத்திற்காக நடைபெற்ற முதல் சர்வதேச கருத்தரங்கு இதுவாகத்தான் இருக்கவேண்டும்.§§

முப்பது வயதுகளின் தொடக்கத்தில் மற்றும் தங்கள் பதின்ம வயதுகளில் இருந்த பல சோவியத் இளைஞர்களை சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்த போது அவர்களிடம் யோகம், தியானம், மறைஞானம், சூட்சும ஞானம், படிகங்கள் பற்றிய ஆய்வு மற்றும் கட்புலனுக்கு அப்பாற்பட்டதை காணும் சக்தியைப் பற்றி தெரிந்துகொள்ள அவர்களிடம் தென்பட்ட பக்கவுமடைந்த ஆர்வம் எங்களை வியக்க வைத்தது. விண்வெளியில் மனிதன் அடியெடுத்து வைக்க தேவையான தகவல் தொடர்பு ஆற்றல்களை வலுப்படுத்த (மற்றும் சில சாதாரண நோக்கங்களுக்கும்), கடந்த இருபது ஆண்டுகளாக மனதை பயன்படுத்தி தொலை நுண்ணுணர்வு மற்றும் புவிக்கு அப்பாற்பட்ட விஞ்ஞானங்கள் மூலம் சோவியத் விஞ்ஞானிகள் மற்றும் இந்து யோக வல்லுனர்கள் இணைந்து செயல்பட்டு வந்தது பலருக்கு தெரியாது. §§

நாங்கள் மாஸ்கோவில் -10°f குளிரை (அதற்கு கைகளால் தைக்கப்பட்ட எங்கள் பருத்தி உடைகள் உகந்ததாக இல்லை) எதிர்கொண்டாலும், அந்த நகரத்தில் எனது சொந்த அனுபவம் அன்பு மற்றும் உற்சாகத்துடன் நிறைவாக இருந்தது. எழுபது ஆண்டுகள் கழித்து நடைபெற்ற, ரஷ்யாவின் முதல் பொதுமக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை நான் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். ஏப்ரல் 1988 ஆக்ஸ்போர்டில் நடைப்பெற்ற சர்வதேச கருத்தரங்கில், நான் சந்தித்திருந்த பழைய ஆன்மீக நண்பர்களுடன் பேசி நினைவுகளை பகிர்ந்ததாலும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த உணர்ச்சி எனக்கும் நம்பிக்கை மற்றும் ஆர்வத்தை வழங்கியது. §§

நமக்கு ஏதாவது ஒரு இக்கட்டான நிலை தோன்றும் வரை, நாம் மற்றவர்கள் மீது அக்கறை செலுத்தாமலும் அன்றைய தேவைகள் மீது பொதுவாக கவனம் செலுத்தாமலும் மகிழ்ச்சியை நாடுவதில் அதிகம் தேர்ச்சி பெற்ற உயிரினங்கள் என்பதை வெளிப்படுத்தி உள்ளோம். இந்த இரண்டு சர்வதேச கருத்தரங்குகளும் பூமியில் மனித நேயம் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலை முழுவதையும், மிகைப்படுத்தாமல் யதார்த்தமாகவும் கவனமாகவும் எடுத்துரைத்தன. இது பிரச்சனைகளின் ஒரு துக்ககரமான பட்டியலாக இருந்தாலும், மனிதனிடம் இருக்கும் உற்சாக சக்தி அதை எதிர்கொள்ளும் சவால்களை விட வலுவானது. தங்களுக்கு இருந்த முக்கியமான பொறுப்புக்களில் இருந்து ஒதுங்கி, குளிர் காலத்தின் நடுவில் மாஸ்கோவிற்கு பறந்து வந்து, ஏழு நாட்கள் ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாக உணவு அருந்தி, ஒன்றாக கலந்து பேசி, ஒருவருக்கொருவர் அன்பு மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்த விருப்பத்துடன் கற்றுக்கொண்டு, மற்றவர்கள் பேசுவதை கவனமாக கேட்டு, கேள்விகளை கேட்டு சந்தேகங்களை தெளிய செய்து, அறிவை பகிர்ந்த இந்த உலகின் தலைசிறந்த தலைவர்களை பார்க்கும் போது எனக்குள் நம்பிக்கை பிறந்தது. நாம் எதிர்கொண்ட நெருக்கடியின் தீவிரமும், பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒன்று கூடிய மக்களின் நேர்மையும் வெளிப்பட்டன. இவர்கள் மனித நேயத்தின் தலைவர்களாக இருப்பதால், அவர்களின் கருத்துக்கள் அவர்கள் நாட்டில் இருக்கும் மக்களுக்கு சென்றடையும். இந்த தகவலை அவர்கள் பாராளுமன்றத்தில் அல்லது அவர்கள் சமாஜங்களில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் அறிந்து புரிந்துக் கொள்வார்கள், மற்றும் இங்கே வருகை தந்த விஞ்ஞானிகள் இதை தங்கள் சகாக்கள் அனைவருடனும் பகிர்ந்துக் கொள்வார்கள். §§

image§

ரியோ டி ஜெனிரோவில் 1992 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சர்வதேச கருத்தரங்கில் “எல்லாம் தெய்வீகமானது. நாம் எல்லோரும் ஒன்று,” என்று உலகில் இருக்கும் அனைத்து மதங்களும் சொல்வதைத் கேட்டு குருதேவா ஆச்சரியம் அடைந்தார். ஹவாயில் இருந்து வந்த உயரமான சுவாமியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள பிரேசில் நாட்டு பழங்குடியினர் விரும்பினார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இறுதியில் மிகைப்படுத்தப்படாமல் உண்மை வெளியே வந்தது மற்றும் தீர்வு தெளிவாக இருந்தது. ஒரு பிரச்சனை நன்றாக விளக்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட்டால், தீர்வு தானாக தெளிவாகும் என்று மக்கள் நம்புகிறார்கள். எளிமையாக இருக்கும் இந்த தீர்வு, ஒவ்வொரு மனிதனின் பொறுப்பாகவும் இருக்கிறது. சுத்தமான மற்றும் நிலையான சுற்றுப்புற சூழலை பெறுவதற்கு தனது வீடு, தனது பண்புகள் மற்றும் இயற்கையுடன் தனது உறவை மாற்றி அமைக்க ஒருவன் உலக நலனை கருத்தில் கொண்டு தனது சமூகத்தில் செயல்பட வேண்டும். §§

மாஸ்கோவில் நாங்களும் எங்கள் கருத்துக்களை தெரிவித்தோம். உலகம் மீண்டும் சமஸ்கிருதத்தில் அஹிம்சா என்று அழைக்கப்படும் அகிம்சை நெறிமுறையை கடைப்பிடிக்க தொடங்கவேண்டும் என்று உலக மக்களிடம் வேண்டிக்கொண்டோம். நாம் இதை வெறும் தத்துவமாக கருதாமல், மிகவும் யதார்த்தமாக இருக்கவேண்டும். உலக அமைதி வீட்டில் இருந்து தொடங்குகிறது. அமைதியை அடைய முடியும் மற்றும் அதை புத்தியை பயன்படுத்தி பராமரிக்கவும் முடியும் என்பதை குழந்தைகள் பார்த்து தெரிந்துக்கொள்ளும் பொருட்டு அமைதியாக இருக்கவும், மூன்று நாட்கள் தாமதமாக உறங்க சென்றாலும், இரவு உறங்குவதற்கு முன்பாக தங்கள் விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்களுக்கு சுமூகமாக தீர்வு காண குடும்பங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்கால அமைதிக் காப்பாளர்களை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்கள் கையில் இருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு நாம் முன் உதாரணமாக இருப்பதால் மட்டுமே நம்மால் கற்றுத் தரமுடியும். §§

வித்தியாசமாக இருப்பவர்களை, வித்தியாசமான நம்பிக்கையுடன் இருப்பவர்களை மதிக்க பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். அவர்களுக்கு மனித வேற்றுமையின் மதிப்பைப் பற்றி கற்றுத்தர வேண்டும். பல வேற்றுமைகள் இருக்கும் இந்த உலகில் மனதில் அச்சமில்லாமல், மற்றவர்கள் மீது தங்கள் வழிமுறைகள் அல்லது விருப்பத்தை திணிக்காமல், அவர்கள் வாழ்வதற்கு தேவையான கருவிகளை கொடுக்க வேண்டும். இதுவே தர்மத்தின் பாதை ஆகும். §§

தாய்மையின் சக்தியை வெளியே கொண்டு வந்து, நமது பெண்களின் வழிகாட்டல் மற்றும் இயலுணர்வு அறிவை நாடவேண்டியதைப் பற்றியும் நான் தெரிவித்தேன். ஹவாய் தீவில் இருக்கும் தாய்மார்கள், ஆப்பிரிக்க தாய்மார்கள் மற்றும் பூமியில் இருக்கும் தாய்மார்கள் அனைவரும் முன் வந்தால், நம்மால் உலக அமைதியை பெற முடியும். கலியுகம் முற்றி இருப்பதால், ஆண்களால் மாற்றம் ஏற்படுத்துவது கடினமாக இருக்கிறது. அவர்கள் கடந்தகாலத்தில் முயற்சி செய்து இருக்கிறார்கள். திருத்தி அமைத்து, இணக்கம் மற்றும் தாக்கம் ஏற்படுத்தும் வலுவான திறமையுடன் இருக்கும் தாய்மார்கள், மகள்கள், சகோதரிகள் மற்றும் மனைவிமார்களிடம் அமைதிக்காக போராட அதிக சக்தியை வழங்கினால், அவர்கள் நம்மை பொற்காலத்திற்குள் அழைத்து செல்வார்கள். §§

அகிம்சை என்பது கொல்லாமையை மட்டும் குறிக்காமல், மிகவும் நுணுக்கமான முறையில் உடல், மனம் மற்றும் உணர்வுப்பூர்வமாக புண்படுத்துவதையும் தவிர்ப்பதை குறிக்கவேண்டும். நாம் நம்மை, நமது சுற்றுப்புறத்தை, இயற்கையில் இருக்கும் மற்ற உயிரினங்களை துன்புறுத்துவதால், நாம் ஒரு வலி அல்லது வேதனையின் மூலமாக இருக்கலாம் அல்லது நாம் அகிம்சை வழியை பின்பற்றி குணப்படுத்தி மகிழ்ச்சி வழங்குவதில் மூலமாக இருக்கலாம். §§

image§

குருதேவா பயணம் செய்த இடமெங்கும், தலாய் லாமாவில் இருந்து இசுலாமிய மதத் தலைவர்கள் வரை, ஆனந்தமயி மா முதல் பிரமுக் சுவாமி மற்றும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வரை, அனைத்து மதத்தலைவர்களை நாடி, சகிப்புத்தன்மை மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்த தொடர்புகளை உருவாக்கிக் கொண்டார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

முனிவர்கள் மற்றும் ஞானோதயம் பெற்ற ஆன்மாக்கள் கர்மவினைகளைப் பற்றி முழுமையாக அறிந்து இருந்தார்கள். நாம் மற்றவர்களுக்கு செய்த செயல்கள், இந்த பிறவி அல்லது இன்னொரு பிறவியில் நம்மை வந்து சேரும் என்பதை அவர்கள் நன்றாக அறிந்து இருந்தார்கள். ஒருவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் வன்முறை செயல்கள், ஒரு பிரபஞ்ச செய்முறையின் மூலம் உறுதியாக அவரையே வந்து சேரும் என்பதை அவர்கள் அறிந்து இருந்தார்கள். §§

மாஸ்கோவில் கிழக்கு நாட்டு சிந்தனை மற்றும் உணர்வுகள் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. ஒரு சில செமிட்டிக் இனத்தலைவர்கள் மனிதன் இயற்கையின் தலைவனாக இருப்பதைப் பற்றி பேசினார்கள். வாழ்க்கையின் அங்கமாக இருக்கும் ஒருமைப் பற்றி பெளத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் பேசினார்கள். ஆதிக்கம் செலுத்தும் உணர்வு ஒருமையை அவமதித்து, தவறான புண்படுத்தும் செயல்களை நீடிக்க செய்வதாகவும் அவர்கள் விளக்கினார்கள். கிழக்கத்திய நாடுகளின் கண்ணோட்டத்தில், பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் ஒரு தெய்வீக விதி மற்றும் ஒழுங்கு முறையில் இருக்கின்றன மற்றும் எந்த ஒரு உயிரினத்திற்கும் வாழ்வதற்கு அதிக உரிமை இல்லை. வாழ்க்கையை நிலைத்திருக்க செய்து, நுணுக்கமாக பின்னிப் பிணைந்து மற்றும் ஒன்றோடு ஒன்று சார்ந்து இருக்கும் மிகப்பெரிய முழுமையின் அங்கமாக மனிதர்களாகிய நாம் நம்மை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். §§

image§

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிற்கு சென்று வலுவான தகவலை வழங்கி நூறு ஆண்டுகள் நிறைவை குறிப்பிடும் வண்ணம், 1993 ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக சமயங்களின் மாநாட்டில், இந்து சமயத்தின் முக்கிய பிரதிநிதிகளாக சிவாய சுப்பிரமுனியசுவாமி சிதானந்தர் மற்றும் மாதா அம்ரிதானந்தமயி தேர்வு செய்யப்பட்டார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

மாநாட்டின் இறுதி நாளன்று, குருதேவா ரோசியா ஓட்டலில் இருந்த டஜன் கணக்கான உணவகங்களில் ஒன்றில் உணவு அருந்திக்கொண்டு இருந்தார். அங்கிருந்த பணியாளர்களுக்கு அன்று மாநாட்டின் இறுதி நாள் என்று தெரிந்து இருந்ததால், எல்லோரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்கள். குருதேவா கடுங்குளிரில் இருந்து தப்பிக்க வாங்கியிருந்த வெதுவெதுப்பான, சாம்பல் நிற காலணிகளை அந்த உணவகத்தின் மேசைப் பணிப்பெண் தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தாள். உணவகத்தில் பணத்தை செலுத்தும் போது, தனது குடும்பம் வறுமையில் தவிப்பதாக அவள் தைரியமாக தெரிவித்தாள். அவள் தனக்கு தெரிந்த அறைக்குறை ஆங்கிலத்தில், குருதேவா அணிந்திருந்த காலணிகளை தனது கணவனுக்காக தரமுடியுமா என்று அடக்கத்துடன் கேட்டாள். அவளது உயர்வான வேதனையை கவனித்த குருதேவா, தனது காலணிகளை கழற்றியதோடு தன்னுடன் வந்திருந்த சுவாமியின் காலணிகளையும் கழற்றுமாறு கேட்டுக்கொண்டு, மகிழ்ச்சியடைந்த பணிப்பெண்ணுக்கு அந்த இரண்டு ஜோடிகளையும் வழங்கிவிட்டு, இருவரும் தங்கள் அறைக்கு காலுறைகளுடன் சென்றார்கள். §§

குருதேவா இந்த முக்கிய கருத்தரங்குகளின் முக்கியத்துவத்தை தெரிந்துகொண்டாலும், அதில் நடைபெற்ற கூட்டங்கள் பயனற்றதாக, சோர்வடைய செய்வதாக, மந்தமானதாக மற்றும் பரிதாபகரமாக தொடர் நடவடிக்கை இல்லாமல் இருந்ததையும் தெரிந்துகொண்டார். அந்த கூட்டங்களில் தொடர்ந்து அதே மக்களை சந்தித்து, நல்ல நோக்கங்களுடன் அதே தீர்மானங்களை முடிவு செய்து, பின்னர் அதை மறந்து போவதாக அவர் குறை கூறினார். 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சமயங்களின் சிகாகோ மாநாட்டிற்கு பிறகு, அவர் பல்வேறு மதங்களை சேர்ந்த இருபத்தி ஐந்து “தலைவர்களின்" குழு இயக்கத்தில் இருக்க முயற்சி செய்தார். அந்த குழுவில் இருந்த மூன்று இந்துக்களில் அவரும் ஒருவராக இருந்தார். இந்த குழு முக்கியமான விவகாரங்களில் அவ்வப்போது விவேகமான அறிக்கைகளை வழங்கலாம் என்று அவருக்கு தோன்றியது. ஆனால் அவர் மேற்கொண்ட முயற்சிகளைத் தவிர குழுவில் மற்றவர்களின் ஆர்வம் குறைவாக இருந்தது, மற்றும் அந்த குழு பயனுள்ளதாக அமையவில்லை. அதனால் அவர் எதிர்காலத்தில் இதைப்போன்ற ஈடுபடுகளில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார். §§

குரு ஶ்ரீ சின்மொய் அவர்களின் சீடராகவும், ஐ.நா. சபையில் சர்வதேச கருத்தரங்கு, பாராளுமன்றம் மற்றும் மில்லனியம் சம்மிட்டியில் பணிபுரிந்த Dr. குசுமிதா பெடர்சன், இந்த சர்வதேச மாநாடுகளில் குருதேவாவின் பங்கேற்பில் இருந்த அவரது வலுவான ஆன்மீக தோற்றம் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்வதில் அவரிடம் தென்பட்ட மிகப்பெரிய தெளிவு மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டினார். மேலும் அவர் திரைக்கு பின்னால் இருந்து செய்த உதவிகள் பலருக்கு தெரியவில்லை என்றும் அவை கடந்த தலைமுறையில் மதங்களுக்கு இடையே நம்பிக்கையை வளர்க்கும் பணியில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன என்றும் பாராட்டினார். §§

மனித இனம் நீடித்து வாழ எதிர்கொள்ளும் சவால்களை பற்றி விவாதிக்க மூன்றாவது சர்வதேச கருத்தரங்கு பற்றிய அறிவிப்பு வெளிவந்த போது, தனது மதத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை என்பதை உணர்ந்த ஒரு இந்து செல்வந்தர், 1992 ஆம் ஆண்டு குருதேவாவின் ரியோ டி ஜெனிரோ பயணத்திற்கான செலவை ஏற்றுக்கொண்டார். இந்த சிறிய நிகழ்ச்சியில் சுமார் எழுபத்தி ஐந்து சமய தலைவர்கள் முன்னூறு அரசியல்வாதிகளுடன் உரையாடினார்கள். அத்தகைய கூட்டங்களில் வழக்கமாக நடைபெறும் சம்பவங்கள் மட்டுமல்லாமல், மிகவும் விசித்திரமான மற்றும் விசேஷமான ஒன்று நடைபெற்றது. குருதேவா அதற்காக தயாராக இல்லை, மற்றும் அது யாருடைய நிகழ்ச்சி நிரலிலும் இல்லை என்றாலும் அது நடைபெற்றது. §§

ஒரு அமெரிக்க செனட் உறுப்பினர் வழங்கிய தொடக்க உரையில் இருந்து, மூன்று நாட்கள் கழித்து மதத்தலைவர்கள் வழங்கிய இறுதி உரை வரை, பெரும்பாலும் எல்லோரும் வாழ்க்கையின் புனிதத்தன்மையை அங்கீகரித்தனர். அதை இந்துக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் மட்டுமில்லாமல் எல்லோரும் கூறினார்கள். அதை அரசியல்வாதிகள் பரிந்துரைத்தார்கள். அதை வணிகர்கள் உறுதி செய்தார்கள். அதை பூசாரிகள் போதித்தார்கள். அதை இசைக் கவிஞர்கள் பாராட்டினார்கள். அது ஒவ்வொரு சொற்பொழிவிலும், மனித பழக்கங்களில் மாற்றத்தை கோரிய ஒவ்வொரு அழைப்பிலும் இடம்பெற்று, அவற்றை ஒருங்கிணைத்து மதிப்பை வழங்கியது. §§

இந்த பொதுவான மந்திரம் குருதேவாவை திகைக்க வைத்தது. அத்தகைய ஒரு சம்பவம் முந்தைய சர்வதேச கருத்தரங்குகளில் நடைபெறவில்லை. இயற்கை புனிதமானது மற்றும் வாழ்க்கை புனிதமானது என்று ரியோவில் சத்தகமாகவும் தெளிவாகவும் கூறப்பட்டது. இந்த அபூர்வமான மற்றும் புனிதமான படைப்பை அழிப்பது, அதன் புனிதத்தை அவமதிப்பது ஆகும். இந்த அவமதிப்பு தொடர்ந்தால், அது உறுதியாக நமது இனம் அழிவதற்கு காரணமாக அமையும். §§

செனட் உறுப்பினர் அல் கோர், குருதேவாவை அணுகி அவருடன் கைக்குலுக்கி “நாம் ஏதாவது ஒரு வகையில் இயற்கையில் இருந்து மாறுபட்டு இருக்கிறோம்" என்ற தவறான ஊகத்தை பற்றி பேசினார். பிரேசில் நாட்டு ஆர்ச்பிஷப் காமரா அருமையான பின்வரும் அறிக்கையை வழங்கினார்: “நாம் இறைவனுக்குள் இருக்கிறோம். நான் இறைவனின் அங்கமாக இருந்தால் என்னால் எப்படி வெறுக்க முடியும்? இது வியக்கத்தக்கதாக இருந்தாலும், உண்மையாக இருக்கிறது. இறைவன் எங்கும் இருக்கிறான் என்றால், நாம் இறைவனுக்குள் இருக்கிறோம், மற்றும் நமக்குள் இறைவன் இருக்கிறார் என்று பொருள்.” இந்தியாவின் பிஷப் கிருகாரியஸ் “உள்ளார்ந்த தன்மை மற்றும் யாவும் கடந்த பண்பை” பற்றி பேசினார். ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த பெண் பூசாரி வாழ்க்கை புனிதமானது, தாவரங்கள் புனிதமானது மற்றும் விலங்குகள் புனிதமானது என்ற கண்ணோட்டத்தை பகிர்ந்து கொண்டார். வாழ்க்கையில் எல்லா வடிவங்களுக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்று சமண மதத்தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். “அதிக அளவிலான மதத்தலைவர்கள் தொடர்பில்லாமல் யாவும் கடந்த நிலையில் இறைவன் இருக்கிறார்,” யூத இறையியல் வல்லுநர் Dr. சூசன்னா ஹெர்ஷல் குறிப்பிட்டார். “உங்களுக்குள் அதிக ஆழமாக சென்று, அனைத்து உயிரினங்களிடத்திலும் ஒருமையை உணருங்கள்,” என்ற கருத்துடன் ஆச்சார்யா சுஷில் குமார் ஒரு தியானத்திற்கு தலைமை தாங்கினார். §§

“இறைவன் எங்கும் இருக்கிறான். வாழ்க்கை புனிதமானது,” என்ற ஒரு அனுமானம் ரியோவில் இருந்தது. இது நமது வாசகர்களுக்கு மற்றும் தனிப்பட்ட முறையிலும் ஒரு வழக்கமான உட்பார்வையாக தோன்றலாம். ஆனால் ரியோவின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் வெளிவந்த இந்த புதிய ஆன்மீக உடன்பாடு, எல்லோருக்கும் இறைவனின் போதனையாக விளங்கி, பூமி முழுவதற்கும் பொருந்தும் வெளிப்பாட்டின் ஒரு உன்னதமான தோற்றத்தை எடுத்துக்கொண்டது. இது மிகவும் தெளிவாக இருந்ததால், யாரும் இதைப்பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அது காற்றை போல யாருக்கும் தென்படாமல் எங்கும் இருந்து, தனது மறைவான தோற்றத்தினால், தன்னைப் பற்றிய உரையாடலை தூண்டிவிட்டது.§§