குருமார்களின் சரித்திரங்கள்

Page 42: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/42_guru07_00.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

அத்தியாயம் இருபத்தி-ஏழு§

சமயப்பணி உலகமயமாகிறது§

ந்து சமயத்தின் ஒவ்வொரு பிரிவும் மற்ற பிரிவுகளில் இருந்து தனித்து துண்டு, துண்டாக உடைந்த ஒரு மதமாக இருக்கிறது என்ற உண்மையை குருதேவா உலகெங்கும் மேற்கொண்ட பயணங்களின் மூலம் தெளிவாக தெரிந்து கொண்டார். இது தனது இயல்பான வலிமையை இந்து சமயம் உணர்துக்கொள்ள முடியாமல் தடுக்கிறது என்பதை அவர் அறிந்துகொண்டார். அவர் வழக்கமாக செய்ததை போல, ஒரு தேவையை கண்டுக்கொண்டதும், அதை பூர்த்தி செய்ய நன்றாக திட்டமிட ஆரம்பித்து விட்டார். 1995 ஆம் ஆண்டு அவர் வழங்கிய குறிப்பு: §§

நான் சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ், ரியூனியன், ஆப்பிரிக்கா, நேபால், இலங்கை, ஐரோப்பா மற்றும் மற்ற நாடுகளுக்கு பயணம் செய்த போது, இந்து சமயத்திற்கு என்று சர்வதேச அளவில் ஒரு பிரதிநிதி இல்லை என்பதையும், அவர்களுக்குள் தகவல் தொடர்பு இல்லை என்பதையும் நான் உணர்ந்துகொண்டேன். கொழும்புவில் இருக்கும் இந்துக்களின் நிலை என்ன என்பதை டர்பனில் இருக்கும் இந்துக்களுக்கு தெரிவதில்லை. லண்டனில் இருந்த இந்துக்களுக்கு கனடாவில் இருந்தவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை. எல்லா இந்துக்களையும் ஒரு வெல்ல முடியாத தன்னம்பிக்கைக்குள் இணைக்கும் ஒரு சர்வதேச குழுவை உருவாக்க வேண்டும் என்கிற அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய, இந்த பிறவியில் எனது சற்குருவாக விளங்கிய கைலாச பரம்பரையின் யோக சுவாமி வழங்கிய உட்புற ஆணைகளின் தெய்வீக சக்தியால் நான் இயக்கப்பட்டேன். §§

நான் 1979 ஆம் ஆண்டு இந்துயிசம் டுட என்ற பத்திரிகையை தொடங்கிய போது சைவ சமயத்தை வலுப்படுத்த வேண்டும், மூன்று முக்கிய பிரிவுகளை வலுப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். எங்கள் தத்துவம் சிவபெருமான் எல்லோருக்குள்ளும் இருக்கிறார் என்பதற்கு அர்ப்பணிக்கப்பட்டு இருப்பதால், நாங்கள் இந்து சமயத்தில் இருக்கும் ஒவ்வொரு பிரிவையும் சமமாக மதிக்கிறோம். எங்களது தத்துவம், கோட்பாடு மற்றும் கலாச்சார அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் இருந்தாலும், உலகெங்கும் இருக்கும் இந்துக்களுடன் ஒற்றுமையுடன் இருப்பதில் நமது வலிமை அடங்கி இருக்கிறது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வலிமை பெற்று வரும், இது ஒட்டுமொத்த இந்து மறுமலர்ச்சிக்கு அனுகூலமாக இருக்கும். ஏனென்றால் இந்து சமயத்தில் ஒவ்வொரு பிரிவும் வலுவடையும் போது, அது ஒட்டுமொத்த இந்து சமயத்திற்கு நன்மைகளை செய்து, நம்பிக்கையுடன் முன்னேறி செல்ல பெருமை, ஸ்திரத்தன்மை மற்றும் தைரியத்தை வழங்குகிறது. இந்த இந்து சமய ஒற்றுமை, நாங்கள் மனப்பூர்வமாக ஏற்ற பொறுப்புக்களில் ஒன்றாக விளங்குகிறது. இதில் இன்னோன்றாக சைவ சித்தாந்தத்தின் அத்வைத ஈஸ்வரவாதம் விளங்குகிறது. §§

ஜூன் 1980, குருதேவா மற்றும் இரண்டு சுவாமிகள் முதல் முறையாக மலேசியா வந்து இருந்தார்கள். அவர்கள் தங்கி இருந்த போது, “சுப்பிரமணியம்” என்ற பெயரில் ஒரு அமெரிக்க சுவாமி மலேசியா வந்து சைவம் மற்றும் இந்து சமயத்தை பரப்புவார் என்று 30 வருடங்களுக்கு முன்பு ஜெகநாதசுவாமி என்று ஒரு மலேசியா சாது தீர்க்கதரிசனத்துடன் கூறியதாக பல பெரியவர்கள் அவர்களிடம் தெரிவித்தனர். குருதேவா திடீரென்று மலேசியாவில் பிரபலமாக வில்லை. அவர் எந்த இடத்திலும் திடீரென்று பிரபலமாகவில்லை. அவர் சுய விளம்பரத்தை நாடாமல், தனது குறிக்கோள்கள்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அந்த நாட்டு சமயத்தலைவர்கள் மற்றும் சமய சங்கங்களின் தேவைக்கு ஏற்ப ஆதரவு அளித்து வலுப்படுத்தினார். §§

image§

குருதேவா சைவர்களின் ஒரு சர்வதேச கூட்டமைப்பை உருவாக்க தொடங்கிய போது, மலேசியா இந்துக்கள் உற்சாகத்துடன் முன் வந்தார்கள். அவர் அந்த நாட்டிற்கு அவ்வப்போது வருகை தந்து, அவர்களது ஆன்மீக கல்வி மற்றும் பயிற்சியில் வழிகாட்டியாக இருந்து, தகுதி பெற்றவர்களுக்கு தீட்சையை வழங்கினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

மலேசிய இந்து தலைவர்கள் இரண்டு பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இசுலாமிய பெரும்பான்மையுடன் இருந்த அந்த நாட்டு அரசு அவர்கள் சமயத்தின் மீது அதிக கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு இருந்தது, மற்றும் இளைஞர்கள் மேற்கத்திய பழக்கங்கள் மீது ஈர்க்கப்பட்டனர். ஒட்டுமொத்த இந்து சமூகத்திடம் தங்கள் அடையாளங்கள் மற்றும் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல்களாக இருந்த இவற்றைப் பற்றி தலைவர்கள் விழிப்புணர்வு வழங்க தொடங்கி இருந்தார்கள். குருதேவா நாடு முழுவதும் பயணம் செய்து, மக்களின் அறிமுகத்தை பெறுவதற்கு மலேசிய இந்து சங்கம், கோலாலம்பூர் மகாமாரியம்மன் கோயில், சிலோன் சைவர்கள் சங்கம், இராமகிருஷ்ணா மிஷன், தி டிவைன் லைஃப் சொசைட்டி மற்றும் பல முக்கியமான இந்து சங்கங்களுக்கு சென்ற, அவர் இந்த விழிப்புணர்வுக்கு உருவம், பாணி மற்றும் தூண்டுதலை வழங்கினார். குறிப்பாக அவர் மீது தமிழ் சமூகத்தினர் ஈர்க்கப்பட்டனர். யோக சுவாமியை அறிந்து இருந்த இலங்கை வம்சாவளியினர், அவருடன் எளிதில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். சைவ பாரம்பரியத்தில் வலுவாக நிலைகொண்டு இருந்தாலும், மேற்கத்திய முறைகள் மற்றும் பழமொழிகளுடன் தங்களுக்கு பரிச்சயமான பண்புகளுடன், அவர்கள் வெகு நாட்களாக காத்திருந்த குருவாக அவர் விளங்கினார். §§

அந்த நாட்டு மக்கள் தொகையில் எட்டு சதவீதம் அங்கம் வகித்த மலேசிய இந்துக்களின் நிலை, இந்தியாவில் இருந்த இந்துக்களின் நிலையில் இருந்து மாறுபட்டு இருந்தது. அரசின் கொள்கைகள் இந்தியர்கள் மற்றும் சீனர்களை காட்டிலும் இசுலாம் மற்றும் பூமிபுத்திரர்கள், இசுலாம் மதத்தை பின்பற்றிய மலாய் மக்களுக்கு ஆதரவாக இருந்தன. இந்த பாரபட்சம் காரணமாக, பல இந்துக்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் தனித்தன்மையை வலுப்படுத்த, தங்கள் மதத்தில் இருந்து விலகி சென்று இருந்தனர். §§

மலேசியா பல தனித்தன்மைகளை கொண்டு இருந்தது. உதாரணத்திற்கு குருதேவா சென்ற நாடுகளில், ஒரு கோயிலுடன் ஒரு இளைஞர் குழு இயங்கி வந்ததை அந்த நாட்டில் முதல் முறையாக எதிர்கொண்டார். அந்த அபூர்வமான இளைஞர்கள் எல்லோரும் “சித்தி விநாயகர் கோயில்” என்று பின்புறத்தில் அச்சிட்ட சட்டைகளை அணிந்துகொண்டு, கோயில் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தில் ஒரு குழுவாக செயல்பட்டு சுயநலமற்ற சேவையை செய்து வந்தனர். இளைய தலைமுறையினர் மூலம் தனக்கு வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பு, குருதேவாவிற்கு நல்ல சகுனமாக தோன்றியது. அறிவுறுத்தல்களை பின்பற்ற அவர்கள் தயாராக இருந்தனர். அந்த பண்பு இக்கால இளைஞர்கள் மத்தியில் அபூர்வமாக தென்படுவதால், அது அவரை வியக்க வைத்தது. அந்த குழுவில் பலர் ஆன்மீக முன்னேற்றம் பெறுவதில் தீவிரமாக இருந்தார்கள். §§

குருதேவாவின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட இந்துக்கள், அடுத்த சில வருடங்களுக்கு, அந்த நாட்டு அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்களை நடத்தினார்கள். மலேசிய இந்துக்கள் மீது, இந்த பிரபலமான கருத்தரங்குகள் மற்றும் இந்துயிசம் டுடேயின் பரவலான விநியோகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் பலர் சிரத்தையுள்ள அங்கத்தினர்களாக மாறி, இளைஞர்கள் மத்தியில் குருதேவாவின் தெளிவான இந்து போதனைகளை பரப்பினார்கள். அவர் புதுமையான முறையில் அவர்களின் ஆன்மாக்களுடன், சமய வாழ்க்கை மற்றும் சேவை பற்றி அவர்களது தற்கால குறிக்கோள்களைப் பற்றி பேசினார். அவர்களின் கட்டுப்பாடான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைகள் மற்றவர்களுக்கு ஒரு முன் மாதிரியாக விளங்கின; மற்றும் இதனால் இந்து சமயத்தின் பெருமையை மனதில் மெதுவாக பதிவாக வைத்த, ஒரு வலுவான சங்கத்தில் மகிழ்ச்சியுடன் மேலும் பலர் உறுப்பினர்களாக சேர்ந்தார்கள். §§

அந்த தேசம் முழுவதும் பாடம் நடத்துவதற்கு என்று, அவர் தனது துறவிகளில் ஒருவரை சுமார் ஒரு வருடத்திற்கு அனுப்பி வைத்தார். 1986 ஆம் ஆண்டு, அவரது சீடர்கள் மலேசியாவில் இளைஞர்களுக்கு வெற்றிகரமான சிறப்பு முகாம்களை நடத்தி, மற்ற இந்து சங்கங்களும் அதைப்போன்ற முகாம்களை இளைஞர்களுக்கு நடத்த ஊக்குவித்தனர். 1990 களில் குருதேவா மலேசியா திரும்பிய போது அவர் தொடர்ச்சியாக பல சொற்பொழிவுகளை நடத்தினார். அவர் இறுதியாக 2000 ஆம் ஆண்டில், தனது கடைசி புத்தகத்தில் கையொப்பமிட்ட நிகழ்ச்சிக்கு, 800 க்கும் மேலானோர் கூடியிருந்து, அரங்கமே நிரம்பி வழிந்தது. அதைப்பற்றி அப்பாசாமி குப்புசுவாமி வழங்கும் குறிப்பு:§§

குருதேவா ஒரு வெள்ளையராக இருந்ததால், அவரை மலேசியாவில் இருந்த பல இந்துக்கள் புறக்கணித்தனர். ஆனால் அவரை புரிந்துகொண்டதும், அதே மக்கள் உலகெங்கும் இந்து சமயத்திற்கு அவர் செய்த சேவையை புகழ்ந்து பேசினார்கள். அவரது பணியின் கூட்டு விளைவு காரணமாக, தேசிய அளவில் இந்துக்களின் தன்மானத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண முடிந்தது. §§

மலேசியாவில் குருதேவாவின் வெளியீடுகள் எப்போதும் பிரபலமாக இருந்துள்ளன. 1980 களில், யானை முகக்கடவுளைப் பற்றி இந்துக்களுக்கு விளக்க, விநாயகரை பற்றி ஒரு புத்தகம் எழுதுமாறு அந்த நாட்டு சீடர்கள் குருதேவாவிடம் கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் சில நாட்களில் வரவிருந்த ஒரு திருவிழாவில் அந்த புத்தகத்தை வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், குருதேவாவும் அவரது துறவிகள் குழுவும் எட்டு நாட்களில் முழுமையான புத்தகத்தை தயார் செய்தார்கள். பன்னிரண்டு துறவிகள் தினமும் பன்னிரண்டு மணிநேரம் முயற்சி செய்ததன் விளைவாக வெளிவந்த லார்ட் கணேஷா, பெனேவோலெண்ட் டெய்ட்டி ஃபார் ய மார்டன் இந்து வேர்ல்ட் புத்தகம் (Lord Ganesha, Benevolent Deity for a Modern Hindu World), அமோக வெற்றியை பெற்றது. அதன் தலைப்பு மட்டுமே மக்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. அதன் பின்னர் அந்த புத்தகம் விரிவாக்கம் செய்யப்பட்டு, லவிங் கணேஷா என்ற பெயரில் மேலும் புகழை பெற்றது. §§

குருதேவா மலேசியா சென்ற ஒவ்வொரு முறையும், சிங்கப்பூரில் தங்கி விட்டு செல்வார். அவர் அங்கே சீடர்களின் ஒரு சிறிய குழுவிற்கு உத்வேகம் அளித்து, இந்து கோயில்கள் மற்றும் சங்கங்களை ஊக்குவித்தார். மலேசிய மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த அவரது சீடர்கள் அதிக விசுவாசமாகவும் தீவிரமாகவும் இருந்தார்கள். தனது வாழ்க்கையில் குருதேவா ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி திரு. குப்புசாமி தனது சான்றுரையை வழங்குகிறார்: §§

நான் தொடக்கத்தில் சாதனாக்கள் மற்றும் மதத்தில் இருந்த பழக்கங்களில் அதிக ஆர்வத்துடன் இருந்ததில்லை. ஆனால் பின்னர், நான் அதில் என்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டேன். நான் வீட்டில் வழிபடுவதற்கு, ஆத்மார்த்த பூஜையை கற்றுக்கொண்டு, அதை மற்றவர்களுக்கும் கற்றுத் தந்தேன். நான் என் மனைவி, பத்து வயது மகன் மற்றும் இருபத்தி இரண்டு வயது மகள், எந்த வித தயக்கமும் இன்றி சைவ உணவை உண்ண ஆரம்பித்தோம். எனது தவறுகளையும், எனது முந்தைய பிறவியில் நான் செய்த தீய கர்மவினைகளையும் குருதேவா எனக்கு தெரியப்படுத்தி, அதை பிராயச்சித்தம் என்ற தவத்தின் மூலம் என்னை திருத்திக்கொள்ளவும் உதவினார். அந்த கடினமான தவத்தை மேற்கொண்ட பிறகு, கர்மவினை கரைந்து விட்டதால் நான் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். §§

எங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்ததற்காக நான் குருதேவாவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எங்களுக்கு இந்து சமயத்தை கற்றுத்தந்தார். அவர் எங்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தந்தார். அவர் எங்கும் எதிலும் உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் இருக்கும் கடவுளை பார்க்க கற்றுத் தந்தார். அவர் எங்களுக்கு சமயத் தொண்டு செய்ய கற்றுத்தந்தார். நான் இவை அனைத்தையும் என்னால் முடிந்த வரை சிறப்பான முறையில் பின்பற்ற முயற்சி செய்து வருகிறேன். §§

குருதேவா பெரும்பாலும் பின்வரும் தலைப்புக்களில் பேசி, வாழ்க்கையில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு முதல் தீர்வாக எங்கும் இறைவனை காணவேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார்:§§

இறைவனுக்கு பெயர் எதுவும் இல்லை, ஆனால் அனைத்து பெயர்களும் இறைவனின் பெயர்களே. நீங்கள் அவரை எந்த பெயரைக் கொண்டு அழைத்தாலும், அவர் இயல்பாகவே இருக்கிறார். இறைவன் நமக்கு உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் இருக்கிறார். ஆசை, ஆசையின் நிறைவேற்றம், மகிழ்ச்சி, வலி, வேதனை, பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய அனைத்தும் இறைவனே, இறைவனை தவிர வேறு எதுவும் இல்லை. நாம் இவ்வாறு இறைவனை எல்லா இடத்திலும் எல்லோரிடத்திலும் காண முடியும். அவர் ஒவ்வொரு ஆத்மாவின் பரமாத்துமாவாக இருக்கிறார். நீங்கள் உங்கள் ஆன்மீக கண்ணை திறந்து அவரை மற்றவர்களிடம் காணலாம் மற்றும் அவரை உலகில் உலகமாக காணலாம். தினமும் ஒரே சமயத்தில் தியானம் செய்ய உங்களை மெதுவாக ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். தியானம் செய்து, உங்களுக்குள் அமைதியாக இருக்கும் மையத்தை தெரிந்துகொண்டு, உங்களின் உண்மையான தெய்வீக தன்மையின் மையத்தில் ஆழமாக செல்லுங்கள். மெதுவாக புனிதத்தன்மை வருகிறது. மெதுவாக விழிப்புணர்வு தோன்றுகிறது. §§

குடும்பம் அல்லது பணியிடத்தில் பிரச்சனைகள் தோன்றி உணர்ச்சிகள் எழுச்சி பெறும் போது, இறைவனை மறப்பது இயல்பு. ஒருமையை காட்டிலும் இருமையில் ஈடுபட்டு இருப்பது மிகவும் எளிது. எப்போதும் இறைவனை நினைத்துக்கொண்டு, எப்போதும் இறைவன் மீது அன்பை செலுத்திக் கொண்டு இருப்பதற்கு அதிகமான உட்புற வலிமை தேவைப்படும். நாம் இறைவனை மறந்து, நம்மை பற்றியும் மற்றவர்களை பற்றிய விஷயங்களிலும் நம்மை ஈடுபடுத்திக்கொள்கிறோம். நமது தன்னுணர்வு தாக்கப்படும் போது அல்லது நமது உணர்ச்சிகள் பாதிக்கப்படும் போது அது சாத்தியமற்றதாகிறது. அதனால் நாம் நமது சொந்த உள்ளுணர்வு மனம் மற்றும் முன்பே-நிரலாக்கம் செய்யப்பட்ட சமயம் சாராத புத்தியை நினைத்து பயப்படாமல், இறைவனை மறந்து, அவரை பயப்பட வேண்டிய இறைவனாகவும் கருதுவதும் மிகவும் எளிதாகிறது. நமது வீட்டில் இருந்துக்கொண்டு தவறுகள் செய்யும் அந்த அரக்கன், எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறான். நீங்கள் இறைவனை நினைக்க வேண்டும் என்று விரும்பினால், உங்களை சிறிதளவு மறக்க கற்றுக்கொள்ளுங்கள. §§

இறைவனை மறப்பது இயல்பானது என்றாலும், கவனச் சிதறலை தவிர்க்க, எங்கும் இறைவனை காண்பதை நினைவில் வைத்துக்கொள்ள பல பயனுள்ள வழிகள் இருக்கின்றன. இவை அனைத்திற்கும் நடுவில், அவரின் நாமத்தை தொடர்ந்து சொல்வது யதார்த்தமான வழிகளில் ஒன்றாக இருக்கிறது. நீங்கள் மறப்பதை உணரும் போதும், இறைவனை எங்கும் பார்ப்பது ஒரு புறம் இருக்கட்டும், இறைவனை முற்றிலும் பார்க்க முடியவில்லை என்றால் ஜபம் செய்யுங்கள். வாழ்க்கை கடினமாகி அதிக முயற்சிகள் தேவைப்படும் போது, அவை அனைத்தையும் மனப்பூர்வமாக அவரது திருவடியில் சமர்பித்து விடுங்கள். §§

சூழ்நிலைகளை பொருட்படுத்தாமல், நீங்கள் சந்திக்கும் அல்லது எதிர்கொள்ளும் ஒவ்வொருவரின் இடத்திலும் அவரை காணுங்கள். அவர் அங்கே அவர்களின் உயிர்சக்தியாக இருக்கிறார், ஆனால் அதை காண்பதற்கு உங்கள் மனதை அமைதிப்படுத்த வேண்டும். நீங்கள் ஒருவர் மீது அதிருப்தியுடன் இருக்கும் போது முகத்தில் புன்னகையுடன், “இறைவனே, உங்களை இந்த வடிவில் காண்பது எவ்வளவு அருமையாக இருக்கிறது,” என்று மனதுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். இறைவனை விரும்பும் ஆன்மாவிற்கு விலங்குகள், யாசகர்கள், இளவரசர்கள், அரசியல்வாதிகள், நண்பர்கள் மற்றும் எதிரிகள், தெய்வீக புருஷர்கள், மகான்கள் மற்றும் முனிவர்களாக இருக்கும் அனைவரும் இறைவனாக காட்சி அளிக்கிறார்கள். அவர் சிரித்துக்கொண்டே, “இறைவனே, உமக்கு இருக்கும் பல வடிவங்களில், இன்னொரு வடிவமாக உம்மை காண்பதற்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது,” என்று சிந்திக்கிறார். §§

இறைவன் அன்பின் வடிவமாக இருக்கிறார். அவர் அன்பைத் தவிர வேறு எந்த வடிவத்திலும் இல்லை. அவர் இந்த பிரபஞ்சத்தில் அன்பை நிரப்பி இருக்கிறார். அவர் உங்களுக்குள் அன்பை நிரப்பி உள்ளார். இறைவன் நெருப்பாக, நிலமாக, காற்றாக, நீராக மற்றும் வானமாக இருக்கிறார். இறைவனின் பிரபஞ்ச சக்தி ஒவ்வொன்றிலும் வியாபித்து, உங்கள் மனதிற்கு ஒளி மற்றும் உயிரை தருகிறது. இறைவன் எங்கும் எதிலும் இருக்கிறார். இறைவன், நீங்கள் உங்கள் மனதில் பல வருடங்களாக தக்க வைத்துள்ள சிறிய மற்றும் முக்கியமற்ற கவலையாக இருக்கிறார். §§

அவர் தனது சொந்த பாணியில், உங்களை உணர்தலுக்குள், உங்களை மற்றும் அவரைப் பற்றிய விழிப்புணர்வுக்குள் அழைத்து வருகிறார். அவர் உங்களுக்கு மாபெரும் அனுபவத்தை வழங்கி உள்ளார். உங்கள் அனுபவத்தை ஆய்வு செய்யுங்கள். உங்கள் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். அது துன்பம் தருவதாக இருந்தால், அதுவும் நல்லதுக்கே என்று நினைத்துக்கொள்ளுங்கள். துன்பமும் இன்பமும் இருக்கும் அனுபவத்தின் நெருப்பில் நீங்கள் சுத்திகரிக்கப்படுகிறீர்கள். அதே சமயத்தில், நீங்கள் அதிக துன்பம் மற்றும் அதிக இன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். இரண்டும் ஒரே அளவு உணர்ச்சியை பதிவு செய்கின்றன. அது உருவாக எது காரணமாக இருந்ததோ அது அதிக ஆனந்தம் தருவதாக இருக்கிறது. இறைவனுடன் வாழ்வதற்கு பயப்படாமல், ஆனந்தமாக உங்கள் அனுபவத்தை அனுபவியுங்கள். அதை தைரியத்துடன் அனுபவியுங்கள். அதை தவிர்க்க முயற்சிக்க வேண்டாம்.§§

மலேஷிய அருள் நெறி திருக்கூட்டத்தின் தலைவர் சைவ பெரிய சங்கரத்ன தன் ஶ்ரீ சோமசுந்தரம் வழங்கும் குறிப்பு: §§

இந்து சமயத்தின பல்வேறு பிரிவுகளின் தத்துவங்களைப் பற்றி வாதாடுவதை குருதேவா தவிர்த்தார். அவர் விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், சமயத்திற்கு முக்கியத்துவம் அளித்தார். அவர் சைவர்களின் ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு மட்டும் குருவாக இருக்காமல், அவர் எங்கள் எல்லோராலும் ஒரு குருவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். நாம் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றாலும் உலகில், வீட்டில், கணவன் மற்றும் மனைவி இடத்தில் மற்றும் எங்கும் அமைதி வேண்டும் என்றாலும் நாம் அவர் வழங்கிய போதனைகளை பின்பற்றி வாழவேண்டும்.§§

மொரீஷியஸ்: அணிகலன் போல அழகாக இருக்கும் தீவு §

சில இனம் புரியாத காரணத்திற்காக, குருதேவாவின் தாக்கம் தீவுகள் மீது மிகவும் அதிகமாக இருந்தது. அது இலங்கையில் தொடங்கி, பின்னர் கவாய், பிஜி மற்றும் டிரினிடாட் வரை நீண்டு சென்றது. அரசாங்கத்தில் உயர்பதவிகளில் இருந்தவர்களையும் சேர்த்து, மக்கள் தொகையில் ஐம்பத்தி இரண்டு சதவீதத்தை இந்துக்களாக கொண்டு, ஒன்றரை மில்லியன் மக்கள் தொகையுடன் இருக்கும் மொரீஷியஸ் தீவு, அவரது புனித பாதங்களின் அருளுக்கு மரியாதை செலுத்துகிறது. §§

தனது நாட்டிற்கு வருமாறு அந்த நாட்டின் மூத்த தமிழ் குடிமகன், பிரபல எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளரான, ரெட்னான் வேல்வின்ந்தரன் குருதேவாவிற்கு அழைப்பு விடுத்தார். தான் இந்து இளைஞர்களின் எதிர்காலத்தை நினைத்து அச்சப்படுவதாக, அவர் 1981 ஆம் ஆண்டு குருதேவாவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். அவர்கள் மற்ற இரண்டு மதங்களுக்கு தொடர்ந்து மாற்றப்பட்டார்கள், மற்றும் அவர்களின் எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையில் குறைந்துகொண்டு வந்தது. ஏழையாக இருந்தவர்கள், வேலை இல்லாமல் தவித்தவர்கள், வீட்டுக்கடன் சுமையால் தவித்தவர்களுக்கு இசுலாமியர்கள் பணம் கொடுத்து உதவி செய்து, அவர்களை மதம் மாற்றிக்கொண்டு இருந்தார்கள். அசெம்பிளி ஆஃப் காட் (Assembly of God) மொரீஷியஸ் சமயப்பணி, சலூட் எட் காரிசொன் ஆகியவை நோயால் அவதிப்பட்டவர்களுக்கு உதவி செய்தது. அவர்கள் நோயால் வாடிய மற்றும் மரணப்படுக்கையில் இருந்த இந்துக்களை அணுகி, அவர்களுக்கு ஆதரவு அளித்து, அவர்கள் குணமடைய பிரார்த்திப்பதாக உறுதி அளித்தனர். அவர்கள் குணமடைந்தால், உறவுகள் மற்றும் நட்புறவுகள் உருவாகும், மற்றும் அதன் பின்னர் முறையான மத மாற்றம் தொடரும். குறிப்பாக அந்த நாட்டின் தமிழ் சமூகம் குறி வைக்கப்பட்டனர் மற்றும் ரெட்னான் வெல்விண்ட்ரான் சூழ்நிலையை மாற்றி அமைக்க குருதேவாவின் உதவியை நாடினார். §§

1982 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்திய யாத்திரைக்கு பிறகு, குருதேவா இரண்டு சுவாமிகளுடன் அந்த தீவிற்கு விரைந்து சென்றார். இலங்கை மற்றும் தென் இந்தியாவில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்பை ஒப்பிடும் போது, அங்கே வழங்கப்பட்ட வரவேற்புக்கள் சாதரணமாக இருந்தாலும் அவற்றில் இருந்த அன்பிற்கும், அவர்கள் வெளிப்படுத்திய நன்றியுணர்விலும் எந்த குறையும் இல்லை. உலகில் தலைசிறந்து மதமாக இந்து சமயம் விளங்குகிறது, கோயில்கள் கடவுள்களின் வீடுகளாக விளங்குகின்றன மற்றும் சமயப்பரப்பாளர்கள் உங்கள் வீடு தேடி வரும் போது, அவர்களை உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்புவதில் தவறு ஒன்றும் இல்லை என்று அவர் வழங்கிய தகவல் வழக்கமான மொரீஷிய சமய தற்காப்பு தகவல்களை காட்டிலும் அதிக வலுவாக இருந்தது. எல்லா நாடுகளிலும் இருந்த இந்துக்கள், தங்கள் குடும்பத்தை பிரிக்கும் நோக்கத்துடன் வருபவர்களுக்கும் உபசரிப்பு வழங்குவதில் பொறுப்புடன் நடந்துக்கொண்டார்கள். வேண்டாம் என்று சொல்வதில் தவறு ஒன்றும் இல்லை என்று உயரமாக, நரைத்த முடியுடன் இருந்த அமெரிக்க குரு தெரிவித்தார். §§

1983 ஆம் ஆண்டு, அவர் மீண்டும் இரண்டு துறவிகளுடன் பறந்து சென்றார். இந்த முறை அவர் ஒரு மாதம் தங்கி இருந்தார். அவர் பெரும்பாலும் வேறெங்கும் இத்தனை நாட்கள் தங்கியது இல்லை. அவருக்கு என்று பிரத்யேகமாக, போர்ட் லூயிஸில் இருந்த ஶ்ரீ சொக்கலிங்கம் மீனாட்சி கோயிலில் ஒரு சிறிய விருந்தினர் இல்லம் கட்டப்பட்டது. பெரும்பாலும் குருதேவா அந்த தீவில் இருந்த ஒவ்வொரு முக்கிய இந்து சமூகத்திற்கும் சென்று, கோயில்களில் கூடிய பெரிய கூட்டங்களுக்கு சொற்பொழிவு நிகழ்த்தி, மொரீஷிய இளைஞர்களுக்கு மகத்தான அவர்களது மதத்தின் மீது விழிப்புணர்வை வழங்கினார். அது அந்த நாட்டின் ஆன்மீக வளர்ச்சியில் ஒரு திருப்பு முனையாக விளங்கியது. குருதேவா தனது துறவிகளின் ஃப்ரெஞ்ச் மொழி பேசத் தெரிந்த ஒருவரை எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்து, அவரை அதே ஊரில் தங்கவைத்து, ஆறு மாதங்களுக்கு சைவ சித்தாந்த பாடங்களை நடத்த ஏற்பாடு செய்தார். இந்த கருத்தரங்குகள் அமோக வரவேற்பை பெற்றதால் தேவாலய அங்கத்தினர்கள் எண்ணிக்கை அதிகரித்து, அந்த நாட்டில் ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் ஆன்மீக பூங்கா மற்றும் துறவற மையம் அமைய வழிவகுத்தது. §§

மொரீஷியஸ் ஆன்மீக பூங்கா பற்றி தொடக்கத்தில் தான் கண்ட ஒரு காட்சியைப் பற்றி குருதேவா வழங்கிய விளக்கத்தை இங்கே காணலாம். §§

நான் 1986 ஆம் ஆண்டு, மொரீஷியஸ் நாட்டில் சைவ சித்தாந்த தேவாலயத்திற்கு ஒரு இடத்தை தேடிக்கொண்டு இருந்த போது, எனக்கு விநாயகர் ஒரு வலுவான காட்சியில் தோற்றம் அளித்தார். விநாயகர் தனது கோயிலில் இருந்து இரண்டு பூசாரிகளுடன் சென்றுகொண்டு இருந்தார். அவர் அழகான இந்திய பெருங்கடல் இருக்கும் மொரீஷியஸ் நாட்டில், அந்த கடலுடன் நதி சந்திக்கும் இடத்தில் குளிக்க தயாராகிக் கொண்டிருந்தார். நான் தண்ணீரில் நின்றுக்கொண்டு இருக்க, என்னை சுற்றி பல சுறாமீன்கள் நீந்திக்கொண்டு இருந்தன. இரண்டு பூசாரிகளுடன் இருந்த விநாயகர் என்னை பார்த்து, “அதன் மூக்குகளின் மீது எண்ணெயை தடவுங்கள். அவை உங்களை துன்புறுத்தாது,” என்று கூறினார். §§

அந்த காட்சி என்னை நேரடியாக ரெம்பார்ட் நதி மற்றும் அதன் கடற்கரை காயலுக்கு அருகில் இருக்கும் இந்த விசேஷ இடத்திற்கு அழைத்து சென்றது. அந்த காட்சியின் ஒரு நிறைவேற்றமாக ஆன்மீக பூங்கா விளங்குகிறது. இந்த இடம் சுற்றுச்சூழல் மற்றும் கட்டிடக்கலையின் அழகை ஒருங்கிணைத்து, எதிர்காலத்தில் பல தலைமுறைகளுக்கு இங்கே வரும் பார்வையாளர்களுக்கு ஆன்மீக அமைதி மற்றும் சூட்சும ஞான அறிவை வழங்கும் என்று எனக்கு தோன்றுகிறது. இது எதிர்காலத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு புகழ்பெற்ற புனித தலமாக மாற உள்ளது. இங்கே மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் இருந்து இந்துக்கள் வருவார்கள்.§§

image§

குருதேவா மொரீஷியஸின் மையப்பகுதியில் ஒரு நிலத்தை வாங்கும் நோக்கத்துடன் தேடிக்கொண்டு இருந்த போது, விநாயகரும் சுறாமீனும் கடலுக்கு அருகில் இருந்த ஒரு நதியில் இருக்கும் காட்சியை கண்டார். அந்த காட்சி அவரை கடலுக்கு அருகில் இருந்த ஏழு ஏக்கர் நிலத்திற்கு அழைத்து சென்றது. அது எதிர்காலத்தில் ஆன்மீக பூங்காவாக மாறியது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இன்று இந்த ஆன்மீக பூங்காவில் மாதம் தோறும் நடைபெறும் ஹோமத்தின் மந்திர சக்திகள் நிறைந்த அக்னியில், ஆயிரக்கணக்கான இந்துக்கள் தங்கள் பிரார்த்தனைகளை இறைவனிடம் சமர்பிக்கிறார்கள். அவர்கள் ஐந்து முகங்கள் மற்றும் பத்து கைகளுடன் இருக்கும், ஒன்பது அடி உயர கருங்கல் விநாயகரை வழிபடுவதற்கு, கேரள பாணியில் மரப்பலகையில் கட்டப்பட்ட வைக்கோல் கூடாரத்துக்கு வெளியே மாமரம் மற்றும் புனிதமான கொன்றை மரங்களின் நிழலில் ஒன்றாக நிற்பார்கள். இவ்வாறு குருதேவாவின் சமயப்பணி, 1896 ஆம் ஆண்டு மார்க் ட்வெயின் மேற்கொண்ட பயணத்தின் போது, “முதலில் மொரீஷியஸ் உருவாக்கப்பட்டது. பிறகு சொர்க்கம் உருவாக்கப்பட்டது. சொர்க்கம் மொரீஷியஸில் இருந்து நகல் செய்யப்பட்டது என்று கற்பனை செய்து பாருங்கள்,” என்று அதன் அழகில் மயங்கி குறிப்பிட்ட, இந்த வெப்பமண்டல தீவில் வேரூன்றியது. §§

இந்திய பெருங்கடலில் அமைதியாக வீற்று இருக்கும் மொரீஷியஸ், இந்து மக்கள் பக்தியுடன் கோயிலில் வழிபடுவதற்கு பொருத்தமான இடமாக இருக்கிறது. அங்கிருக்கும் ஒவ்வொரு குடும்பமும், அந்த தீவில் இருக்கும் ஆயிரக்கணக்கான கோயில்களுடன் பல தலைமுறைகளாக தொடர்பில் இருக்கிறது. மகாசிவராத்திரி மற்றும் தைப்பூசம் போன்ற இந்து கொண்டாட்டங்களின் போது நடைபெறும் ஆயிரக்கணக்கான மக்களின் அற்புதமான ஊர்வலங்கள் பெரும்பாலும் போக்குவரத்தை முடக்கிவிடும். ஒரு சராசரி இந்துவிற்கு, இந்த திருவிழாக்களில் பங்குபெறுவதன் மூலம், அவர்களது அடிப்படை சமய பொறுப்புகள் பூர்த்தி அடைகின்றன. §§

1980 களில் மொரீஷியஸ் தீவில் குருதேவா முதல் முறையாக அடியெடுத்து வைக்கும் வரை, அந்த தீவில் இந்து குருவின் முக்கியத்துவம் அறியப்படாமல் இருந்தது. இந்த ஆன்மீக புதுமைப்பித்தன் அந்த தீவில் இருந்த பலருக்கு இந்து சமய கோட்பாட்டை புதிதாக எடுத்துரைத்தார். மொரீஷிய வழக்கத்தில் வட இந்தியர்களை குறிப்பிடுவதற்கு “இந்துக்கள்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது; “தமிழர்கள்" இன்னொரு சமயப்பிரிவாக கருதப்பட்டது. அவர்கள் அனைவரும் இந்துக்கள் தான் என்றும், இவை அனைத்தும் இனம்/மொழிப் பிரிவுகள் என்றும் குருதேவா விளக்கினார். இந்த எளிமையான அடையாள மாற்றம், நேர்மையான சாதகர்களின் உத்வேகத்தை வலுப்படுத்தி, மொரீஷியஸ் தீவில் இந்து ஒற்றுமை மற்றும் கூட்டுறவின் ஒரு புதிய யுகத்தை தொடங்கியது. தனது குடும்பத்தின் மீது குருதேவா ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி ராஜன் மாணிக் தெரிவிக்கிறார்: §§

இந்த சமயத்தில் தான் குருதேவாவை முதல் முறையாக சந்தித்தேன். ஒரு தொலைதூர பயிற்சி வகுப்பு மற்றும் இந்துயிசம் டுடே பத்திரிகையில் வந்த கட்டுரையின் மூலம் நான் அவரது போதனைகளை படித்து வந்தாலும், அவரை நான் முதல் முறையாக சந்தித்த அனுபவத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது. அவர் ஒரு சாதாரண மனிதர் இல்லை என்பதை என்னால் உடனே உணர முடிந்தது.§§

அவர் என் வாழ்க்கையை மாற்றி அமைத்தார். நான் மணந்துக்கொண்ட பெண்ணும் அதிஷ்டவசமாக குருதேவாவின் மாணவர்களில் ஒருவராக இருந்தார். மொரீஷியஸ் தீவில் அவரது சீடர்களாக இருந்து திருமணம் செய்துகொண்ட முதல் தம்பதி என்ற பெருமை எங்களை சேரும். இது 1985 ஆம் ஆண்டு நடைபெற்றது. மொரீஷியஸ் தீவில் குருதேவாவின் போதனைகளை மக்களுக்கு வழங்கி அவருக்கு சேவை செய்ததில், நாங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தோம். நாங்கள் முதலில் உள்ளூர் கோயில்களில் வகுப்புகளை ஏற்பாடு செய்து, இந்த சேவையை வழங்கினோம். §§

திருமணம் முடிந்து பத்து வருடங்கள் ஆகியும், எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எங்கள் கர்மவினைகளை சமநிலையுடன் எதிர்கொண்டு, கடினமான சூழ்நிலைகளில் பணிவாக இருக்க குருதேவா கற்றுத்தந்தார். அதன் பிறகு சிறிது காலம் கழித்து, குருதேவாவின் ஆசியுடன் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.§§

இந்த காலகட்டத்தில் கவாய் ஆதீனத்தில் இருந்து மொரிஷியஸ் தீவிற்கு தொடர்ந்து மடவாசிகள் பயணம் செய்துக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் குருதேவாவின் வழிகாட்டலின் கீழ், ஆன்மீக பூங்காவை அமைத்து, தீவில் இருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தனிமையான ஆன்மீக அமர்வுகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தினார்கள்.§§

இதற்கிடையில் தீவில் சம்சாரிகளாக இருந்த தனது சீடர்களிடம், ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என்றும் வெள்ளை சர்க்கரை, வெள்ளை அரிசி மற்றும் அரிசி மாவுக்கு பதிலாக பதப்படுத்தப்படாத சர்க்கரை, அரிசி மற்றும் முழுதானியத்தில் செய்த ரொட்டியுடன் ஒரு ஆரோக்கியமான உணவிற்கு மாறவேண்டும் என்றும் குருதேவா அறிவுறுத்தினார். வீட்டில், கோயிலில் மற்றும் திருவிழாக்களில் மற்றும் பணியிடத்தில் அனுமதி கிடைத்தால் இந்து சமய உடையை அணிய, அவர் தனது சீடர்களை ஊக்குவித்தார். §§

image§

தான் பரவலாக மேற்கொண்ட பயணத்தின் மூலம் இந்து சமயபரப்பாளர்களுக்கு பஞ்சம் இருப்பதை உணர்ந்த குருதேவா, சைவ சமயத்தை அடுத்த தலைமுறைக்கு பரப்ப ஆசிரியர்கள் மற்றும் தலைவர்களுக்கு பயிற்சி அளித்தார். குறிப்பாக மலேசியா மற்றும் மொரீஷியஸில் இருந்த அவரது சீடர்கள் கோயில்கள், ஆசிரமங்கள் மற்றும் வீடுகளில் இருந்த குழுக்கள் மற்றும் குடும்பங்களுடன் தொடர்ந்து பேசி வந்தனர். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

உணவக தலைமை சமையல்காரராக ஓய்வுபெற்று, தற்போது தனது சொந்த உணவளிப்பு நிறுவனத்தின் மேலாளராக இருக்கும் மௌகம் பரியதும்பீ, தனக்கு திருமணமான புதிதில், குழந்தைபேறுக்கு தனது மனைவியின் உடல்நிலை உகந்ததாக இல்லாமல், தனது வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்று நினைவுக்கூர்ந்தார். ஒரு நாள் குருதேவா ஹவாயில் இருந்து அவரை தொடர்பு கொண்டு, “நான் உன்னுடன் இருக்கிறேன். கவலைப்படாதே!” என்று கூறினார். விரைவில் அவர் மனைவி அமுதா, இரண்டு அழகான பெண் குழந்தைகளுக்கு தாயானார். §§

குருதேவா மொரீஷியஸ் தீவிற்கு வருவதற்கு முன்பாக, வீட்டில் பூஜை மாடம் இருக்கவேண்டிய அவசியத்தை யாரும் முழுமையாக அறிந்திருக்கவில்லை கணக்காளராக பணிபுரியும் எஸ். கே. மூர்கென் நினைவுக் கூர்ந்தார். “ஆனால், இன்று குருதேவாவின் சீடர்களாக இல்லாதவர்களும், தங்கள் வீட்டில் உறுதியாக பூஜை மாடத்தை வைத்து இருக்கிறார்கள். அது அவர்களுக்கு பெருமை அளிப்பதாகவும் இருக்கிறது” என்று கூறுகிறார். §§

போக்குவரத்துத்துறை அமைச்சர் அணில் பைச்சூ போன்ற அரசியல்வாதிகள், குருதேவா மொரீஷியஸில் வழங்கிய போதனைகள், அந்த தீவில் இருந்த பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்த உதவியாக இருந்தது என்று உறுதி அளித்தனர்: §§

இந்து சமயம் மீது குருதேவா கொண்டுள்ள அணுகுமுறை இனம் அல்லது மொழியை சார்ந்து இல்லை. இது வட இந்தியா மற்றும் தென் இந்தியாவை மூலமாக கொண்டுள்ள இந்துக்கள் மத்தியில் வலுவான இந்து ஒற்றுமை உருவாக உதவியுள்ளது. மேலும் குருதேவா மற்றும் சாய் பாபா குழுக்களின் தாக்கத்தால், மொரீஷியஸ் தீவில் மதமாற்றம் ஒரு பிரச்சனையாக இருந்தது இல்லை.§§

குருதேவா உலகெங்கும் இருக்கும் இந்துக்களை வலுப்படுத்த இந்த இருபது ஆண்டுகளில் மேற்கொண்ட முயற்சிகளின் போது, மொரீஷியஸ் தீவில் வாழ்ந்த தனிநபர்கள், தலைவர்கள் மற்றும் முழு சமூகங்கள் மீதும் தாக்கம் ஏற்படுத்திய சம்பவங்களை போன்று, மற்ற நாடுகளிலும் நடைபெற்றன. பிஜி மற்றும் ஜெர்மனி, டிரினிடாட் மற்றும் தென் ஆப்பிரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் அமெரிக்காவில் இருந்த இந்துக்களும், இதைப்போன்ற சம்பவங்களை பகிர்ந்துகொண்டனர். §§

image§

குருதேவா அந்த ஆன்மீக பூங்காவிற்கு விநாயகர், முருகன் மற்றும் சிவபெருமானின் மிகப்பெரிய மூர்த்திகளை கொண்டு வந்து, தங்கள் சமயத்தை கற்றுக்கொண்டு விசுவாசத்துடன் பின்பற்ற மொரீஷிய இந்துக்களை ஊக்குவித்தார். அவர் மக்கள் மத்தியில் விழிப்படைய செய்த பெருமை, கிறுத்துவ மதமாற்றங்களை நிறுத்தி, அந்த தீவை முழுமையாக மாற்றிவிட்டது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

சர்வதேச சமாஜங்களை வழிநடத்துதல் §

இந்த உலகில் வாழ்ந்துகொண்டும் வேலை செய்து கொண்டும் ஆன்மீக மாற்றத்திற்கு முயற்சி செய்து, தேவாலயத்திற்கு உதவி செய்ய தங்கள் வருமானத்தில் இருந்து தசமக பாகத்தை வழங்கி, வழிபாடு நடத்தி கர்ம யோகத்தை செய்ய வீடுகளில் மற்றும் உள்ளூர் சமயப்பணி குழுக்களில் கூட்டத்தை கூட்டி, குருதேவா 1980 களின் மத்தியில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஒரு வலுவான சர்வதேச சமாஜத்தை உருவாக்கி இருந்தார். §§

குருதேவா ஆரம்ப காலத்தில் இருந்து தனது துறவிகள் குழு மற்றும் சீடர்களிடம் கண்டிப்பாக இருந்து, சங்கல்பம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரை பொறுத்தவரையில், சங்கல்பங்கள் என்பது ஒழுக்கம் மற்றும் நற்பண்பை உருவாக்குவது மற்றும் மனம், உடல் மற்றும் உணர்ச்சியின் சக்திகள் மீது ஆளுமை செய்து, எதிர்காலத்தை எதிர்கொள்ள வலிமையை வழங்கி, ஒருவரை சாதனாவின் பாதையில் உறுதியாக நிறுத்தி வைப்பது ஆகும். முதலில் தசமபாக சங்கல்பம் இருந்தது. 80 களில் சைவ உணவு உண்பது பற்றிய சங்கல்பம் தேவைப்பட்டது, மற்றும் 90 களின் தொடக்கத்தில் அவர் குரு பரம்பரை மீது விசுவாசத்துடன் இருக்கும் சங்கல்பத்தை சேர்த்துக்கொண்டார். அவர் தனது உயிரை துறப்பதற்கு சில வருடங்கள் முன்பு, தனது சீடர்களில் சிலர் தங்கள் குழந்தைகளை ஒழுங்குபடுத்த அவர்களை உடல்ரீதியாக துன்புறுத்தி வருகிறார்கள் என்பதை அறிந்ததும், அப்போதைய மற்றும் எதிர்கால உறுப்பினர்கள் அனைவரும் நான்காவது சங்கல்பமாக அகிம்சை விரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். சங்கல்பம் எடுப்பதன் பயன் மற்றும் தேவையை பற்றி குருதேவா விளக்கினார்: §§

நான்கு சங்கல்பங்களாக இருக்கும் அகிம்சை, குரு பரம்பரை மீது விசுவாசம், சைவ உணவு மற்றும் தசமபாகம் ஆகியவை ஆர்வமுள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் முக்கியமானவை ஆகும். ஒரு சங்கல்பத்தை வாழ்க்கையின் ஒரு முக்கியமான தருணத்தில் எடுத்துக்கொண்டதும், அந்த சங்கல்பத்தை கடைப்பிடிக்கும் வரை, வரவிருக்கும் கர்மவினைகள் சிறிதளவு நல்ல பலன்களை வழங்கும் என்பதை, இந்த சங்கல்பங்களை ஆன்மீகத்தில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கும் நிபுணர்கள் அறிந்து இருப்பதால், அவர்கள் அந்த சங்கல்பங்களை தீவிரமாக கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் அந்த சங்கல்பங்களை கடைப்பிடிக்க தவறினால், குறிப்பாக கரைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட தீய கர்மவினைகள் அந்த நபர், குடும்பம் மற்றும் நண்பர்கள் மீது முழு வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் அகிம்சை, குரு பரம்பரை மீது விசுவாசம், சைவ உணவு மற்றும் தசமபாகம் என்ற நான்கு சங்கல்பங்களை எடுத்துக்கொண்டவர்கள், அவற்றை கடைபிடிக்கும் போது தேவைப்பட்டால் நமது மடவாசிகளின் உதவியை நாடுவது முக்கியமாகிறது.§§

ஒரு இணக்கமான, ஆக்கப்பூர்வமான, வலுவான சர்வதேச கூட்டுறவை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் குறிக்கோளாக எப்போதும் இருந்துள்ளதால், தீட்சை பெற அல்லது அங்கத்தினராக விரும்பும் புதிய நபர்கள் கவனமாக ஆய்வு செய்யப்படுகிறார்கள் மற்றும் அவர்கள் நுழைய விரும்பும் தருணத்தில் இருக்கும் கலாச்சார தரநிலைகள், நம்பிக்கைகள் மற்றும் அணுகுமுறைகளுக்கு இணங்கி வாழ வேண்டும். அவர்கள் எங்கள் தத்துவம் மற்றும் குறிக்கோள்கள் மீது விசுவாசமாகவும் சிரத்தையுடனும் இருந்து, தங்களது சொந்த சமய வாழ்கையை மேம்படுத்தவும் கூட்டுறவு பணியை மேலும் விரிவுபடுத்தவும், தற்போது தீட்சை பெற்று இருக்கும் குழுவினருடன் தங்கள் சக்திகளை இணைத்துக் கொள்ளும் விருப்பத்துடன் இருக்கவேண்டும். சமயப்பணிக்கு ஒரு தனிக்குழுவை உருவாக்கி பராமரிக்கும் நோக்கத்துடன், நாங்கள் உறுதியாக உரிமையுடன் கேட்டுக்கொண்டு இருப்போம். §§

மேலும் காலப்போக்கில், ஒவ்வொரு உறுப்பினர் இடத்திலும் நிலையான வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. என்னிடம் சீடனாக விரும்பும் ஒவ்வொருவரும் சாதனா செய்யும் நோக்கத்துடன் மட்டும் வரவேண்டும். தங்களது முதன்மையான நோக்கத்தில் இருந்து விலகி செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்த தருணங்களை தீட்சை பெற்றவர்கள் மதிப்பு அளித்து, தங்கள் வளர்ச்சியை சீராக வைத்திருக்க கடுமையாக முயற்சி செய்வார்கள். §§

image§

குருதேவாவிற்கு குழந்தைகள் மீது அதிக பிரீயம் இருந்தது, மற்றும் அவர் அவர்களின் வளர்ப்புமுறைக்கு வழிகாட்டி, அவர்களுக்கு சமயப் புத்தகங்களை வழங்கி, அவர்களை தீங்கில் இருந்து காப்பாற்ற அரும்பாடுபட்டார். ஆயிரக்கணக்கான குழந்தைகள் அவர் போதனைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வளர்ந்தனர்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இந்த நம்பத்தகுந்த ஆன்மாக்களை பற்றி குருதேவா சுருக்கமாக கூறுகிறார்:§§

ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் ஆன்மீக பாதையில் இருந்தால், அந்த குடும்பம் அழகாகவும் வலுவாகவும் முன்னேறும். அவர்களுக்குள் இருக்கும் அன்பு மற்றும் தங்கள் குழந்தைகள் மீது இருக்கும் அன்பு, குடும்பத்தில் இணக்கத்தை பராமரிக்கிறது. இருந்தாலும், அவர்களது சாதனாவின் இயல்பு ஒரு சந்நியாசியின் இயல்பில் இருந்து மாறுபடுகிறது. வீடு மற்றும் குழந்தைகளை பராமரிக்க போராடிக்கொண்டு, ஆழ்சிந்தனை முறையையும் கடைபிடிக்கும் போது, அதுவே வலிமை மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்கி, காலப்போக்கில் உள்ளார்ந்த ஞானத்தை மெதுவாக பக்குவமடைய செய்கிறது. §§

குருதேவா சம்சாரிகளுடன் உரையாடும் போதும் லிவிங் வித் சிவா (சிவபெருமானுடன் வாழ்தல்) புத்தகத்திலும், அவர்கள் இந்த ஸ்தித்தன்மையை அடைய கற்றுத்தரும் போது, ஆன்மீகரீதியாக நுணுக்கமான விஷயங்களில் இருந்து லௌகீக விஷயங்கள் வரை, குடும்ப வாழ்க்கையில் தோன்றும் ஒவ்வொரு சிக்கலைப் பற்றியும் பேசினார். கவாய் மடத்திற்கு அருகில் வசிக்கும் தேவ சாயொன், வழங்கும் குறிப்பு: §§

குருதேவா தீட்சை பெற்ற தனது சீடர்களுக்கு, வம்சத்தை குறிக்கும் கோத்திரம் என்ற சொல்லைப் பற்றி உண்மையான மற்றும் முடிவான பொருளை வழங்கினார். குருதேவா மாபெரும் துறவியாக இருந்தாலும் தீட்சை பெற்ற குடும்பங்களுக்கு தொழில், சமூக அல்லது தனிப்பட்ட, சொந்த பிரச்சனைகளுக்கு மிகவும் நுணுக்கமான தகவல் பற்றி அறிவுறுத்த எப்போதும் தடுமாறியது இல்லை. அவர் தனது ஒவ்வொரு சம்சாரி சீடரின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகள், அச்சங்கள் மற்றும் குறைகளைப் பற்றி ஆழமான மற்றும் தனிப்பட்ட முறையில் அறிந்து இருந்தார் மற்றும் தனது சீடர்கள் குழுவிற்கு வழிகாட்டி, உதவி செய்து சேவை செய்ய எப்போதும் யோசித்தது இல்லை. §§

கலிபோர்னியாவை சேர்ந்த தேவராஜன் தனது சந்திப்பை நினைவுக்கூர்கிறார்:§§

1990 களின் தொடக்கத்தில், நாங்கள் நடத்திய கான்யன் கன்ஸ்டிரக்ஷன் கம்பனியின் வியாபாரத்தில் சில பண நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருந்தோம். நான் குருதேவாவிடம் இதைப் பற்றி எடுத்துரைத்து, அறிவுரை வழங்குமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன். “நாம் உங்கள் அலுவலகத்திற்கு செல்லலாம். நீங்கள் அங்கே அந்த பிரச்சனைகளை பற்றி விளக்குங்கள்,” என்று கூறினார். §§

நாங்கள் என் அலுவலகத்திற்கு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் சென்றோம். அலுவலகத்தில் எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. அவர் எனது அலுவலகத்தில் உயரமான சுழலும் நாற்காலியில் அமர்ந்து கொண்டார். நான் அவரிடம் என் தொழில் சம்பந்தமான கணக்குப் புத்தகங்களை வழங்கினேன் மற்றும் அவர் என்னிடம் சில முக்கியமான கேள்விகளை கேட்டார். நான் என் வியாபாரத்திற்கு வாங்கிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணத்தை செலுத்த, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க மற்றும் வரிகளை செலுத்த எங்கள் கடனாளர்களிடம் இருந்து $140,000 கடன் வாங்கியதைப் பற்றி எடுத்துரைத்தேன். வியாபாரத்தில் இருந்த போட்டி காரணமாக எங்கள் இலாப வரம்பு குறைந்துவிட்டது, மற்றும் அந்த சமயத்தில் இருந்த பொருளாதார நெருக்கடிகள் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கவில்லை. புதிய பணிகள் அபூர்வமாக கிடைத்தன. கடன் தொகையை எப்படி செலுத்துவது என்று தெரியாமல் தவித்தேன். §§

குருதேவா எனது அலுவலில் இருந்த ஒவ்வொரு பொருளையும் கூர்ந்து கவனித்தார். பின்னர் அவர் தன் மடியில் எங்கள் வியாபார கணக்குப் புத்தகங்களை வைத்துக்கொண்டு, நம்பிக்கையுடன் சிரித்துக்கொண்டு, “சரி, நாம் இங்கே இருக்கும் பொருட்களை மாற்றி அமைக்கலாம்,” என்று கூறினார். அதன் பிறகு அவர் விரைவாக என் நாற்காலியை உதைத்து, அதை பலமுறை சுழல செய்தார். அவர் சிரித்துக்கொண்டு என் அலுவலகத்தை பல முறை சுற்றி வந்தார். இந்த அபூர்வமான காட்சிகளை காண்பதற்காக, நான் ஓரமாக தரையில் அமர்ந்துகொண்டேன். §§

அவர் இறுதியாக ஓரிடத்தில் நின்றுக்கொண்டு, தன்னுடன் வந்த மடவாசியிடம் சிறிய பூஜை செய்து மற்றும் தீர்த்தம் தெளித்து தோஷங்களை நீக்குமாறு கேட்டுக்கொண்டார். மணியின் ஒலி, விளக்கு மற்றும் சாம்பிராணி மூலம் எங்கள் வணிக வளாகத்தில் இருந்த ஒவ்வொரு மூலை முடுக்கையும் அந்த பூசாரி தூய்மைப்படுத்தி கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு சன்னலின் அடிக்கட்டையிலும் ஒரு சிறிய பழத்துண்டை வைத்து, அலுவலகத்தில் அசுர சக்திகள் ஏதேனும் இருந்தால், அந்த பழத்தை உண்டு நிரந்தரமாக அந்த இடத்தை விட்டு கிளம்புமாறு கேட்டுக்கொண்டார். §§

இதற்கிடையில் குருதேவா எனது தொழில் சம்பந்தமான சில குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை வழங்கினார். அவர் இறுதியாக, “நம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேறுங்கள்,” என்று அதிக ஊக்கமளிக்கும் வார்த்தைகளை சொல்லிக்கொண்டு கிளம்பினார். §§

ஒரு சில மாதங்களில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் தென்பட்டது. புதிய பணிகள் வரத்தொடங்கின. எங்கள் வியாபாரம் வளர்ச்சி அடைந்ததால், அதிகமான ஊழியர்களை பணியில் சேர்த்தோம். கடன் சுமை விரைவில் நீங்கியது, மற்றும் எங்கள் லாபங்கள் தொடர்ந்து அதிகரித்ததால் எங்கள் வியாபாரம் தொடர்ந்து விரிவாக்கம் பெற்று வளர்ச்சியையும் பெற்றது. §§

பல வருடங்கள் கழித்து, பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பணிகள் எங்களை தேடி வந்தன. எங்கள் பணிகள் அனைத்தும் சீராக இயங்கின. ஒரு சமயத்தில், கலிபோர்னியாவின் ஓக்லாந்துக்கு அருகில் ஒரு நாற்பது ஏக்கர் மலை உச்சியில் இருந்த தனது $14 மில்லியன் பண்ணையை கட்டித் தருமாறு ஒரு செல்வந்தர் எங்களுக்கு அழைப்பு விடுத்தார். அவ்வளவு பெரிய பணியை செய்வதற்கு எங்களிடம் போதுமான அனுபவம் இல்லை என்று சொல்லி நான் தொடக்கத்தில் அந்த பணியை மறுத்துவிட்டேன். ஆனால் தொடர்ந்து வற்புறுத்தியதால், நான் இதைப்பற்றி பேச குருதேவாவை நாடினேன். §§

எங்கள் வியாபார வளர்ச்சியை பார்த்து மகிழ்ச்சி அடைந்த குருதேவா, நம்பிக்கையுடன் முன்னேறுமாறு எங்களை மீண்டும் ஊக்குவித்தார். நாங்கள் ஒப்பந்தங்களை கையெழுத்திட்ட பிறகு, நான் இந்த நற்செய்தியை அவரிடம் தெரிவித்து, “நான் ஒரு பெரிய செல்வந்தரிடம் வேலை செய்தது இல்லை. நான் என்ன செய்வது?” என்று கேட்டேன். “அவர் சொல்வதை மட்டும் செய்யுங்கள்,” என்று தெளிவாக மற்றும் நேரடியாக பதில் அளித்தார்.§§

அந்த அறிவுறுத்தல்கள் மிகவும் எளிமையாக இருந்தாலும், வாழ்க்கையில் அதிக வெற்றிகளை கண்ட இந்த தொழிலதிபர் மற்றும் அதன் பிறகு எனது அனைத்து வாடிக்கையாளர்களுடனும் பணிபுரிவதற்கு அவை மிகவும் முக்கியம் என்பதை நான் தெரிந்துகொண்டேன். அவருடன் ஒவ்வொரு வாரமும் நடந்த சந்திப்பின் போதும், அவர் அல்லது அவரது மனைவி குறிப்பிடும் ஒவ்வொரு சிறிய தகவலையும் நான் இரகசியமாக குறித்துக்கொள்வேன். இந்த வேண்டுகோள்களை எங்கள் நிர்வாகம் உடனடியாக சரி செய்வதை நான் உறுதி செய்து கொண்டு, நாங்கள் மாற்றங்களை செய்துள்ளோம் அல்லது அவர்கள் வழங்கிய அறிவித்தல்களை பின்பற்றி உள்ளோம் என்று வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிப்பேன். அவர் நியமித்த கட்டிட கலைஞர்கள் அவருடன் கட்டிட வடிவமைப்பு பற்றி நான் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் அதன் பிறகு பணியில் இருந்து நீக்கப்பட்டார்கள். நமது வாடிக்கையாளரிடம் வாதாடுவது அல்லது அவர்கள் மனதை மாற்ற முயற்சி மேற்கொள்வது வேண்டாம் என்று, இந்த பணியில் ஈடுபட்டிருந்த எங்களது நிர்வாகக் குழு மற்றும் சுமார் எண்பது துணை ஒப்பந்தக்காரர்களுக்கு நான் அறிவுறுத்தினேன். “அவர்கள் சொல்வதை செய்தால் போதும்,” என்று நான் அவர்களிடம் கூறினேன்.§§

முப்பது வருட காலத்தில், குருதேவா எங்களை பண இழப்பால் போராடிக்கொண்டு இருந்த ஒரு சிறிய நிறுவனத்தில் இருந்து சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் அதிக லாபகரமான மற்றும் அதிகம் மதிக்கப்பட்ட ஒப்பந்த வணிகங்களில் ஒன்றாக மாற்றி அமைத்தார். நாங்கள் அவரது வழிகாட்டல்களை தொடர்ந்து பெற்று, சில நேரங்களில் நிர்வாகம் மற்றும் திறமைகளில் புதிய நிலைகளை அடைந்து, அபரீத முன்னேற்றத்தை பெற்றோம். “உயர்ந்த இலக்குகளை வகுத்துக்கொள்ளுங்கள்,” என்று அவர் என்னை தொடர்ந்து ஊக்குவித்து, தன்னம்பிக்கையின்மை மற்றும் பதட்டத்தை அகற்றி வைத்தார். இருந்தாலும், அவர் வழங்கிய அறிவுரைகள் மிகவும் எளிமையான அடிப்படைகளைக் கொண்டு உருவாகி இருந்தன. §§

குருதேவாவின் சீடர்கள் உலகெங்கும் பரவி இருந்தாலும், ஒரே சிறிய கிராமத்தில் வாழ்ந்தது போல தொடர்பில் இருந்தார்கள். இதற்கு உதாரணமாக, வெவ்வேறு நாடுகளில் வசித்த, கவாய் தீவின் தேவ சேயோன் குடும்பம் மற்றும் மொரீஷியஸ் தீவில் பிரபல வழக்கறிஞரான மனோன் மர்தமூத்து குடும்பத்திற்கும் இடையே நடைபெற்ற திருமணத்தை குறிப்பிடலாம். 1991 ஆம் ஆண்டு, தேவாவின் மகளான கவிதா மனோனின் மகனான சிவகுமாரெனை திருமணம் செய்து கொண்டாள். இரு குடும்பங்களும் வெகு தொலைவில் இருந்தாலும், பாலுடன் பால் கலப்பதை போல ஒன்று சேர்ந்தார்கள். இதைப் பற்றி தேவா நினைவுக் கூர்கிறார்: §§

எனது குடும்பத்தின் தேவைகளுக்கு குருதேவா வழங்கிய அன்பு கலந்த கவனிப்பு மற்றும் தொடர்ச்சியான ஆசிகள், அவர் மீது அன்பு செலுத்தியவர்கள் மீது அன்பு செலுத்தவும் நம்பிக்கை வைக்கவும் வழி வகுத்தது. அவரது சர்வதேச ஆன்மீக குடும்பமும் நாங்களும் ஒரே வாழ்க்கை இலக்குகள் மற்றும் முன்னுரிமைகளை பகிர்ந்து கொண்டதால், ஒரே குடும்பமாக மாறினோம். ஒரே குலகுருவை பகிர்ந்த இரு குடும்பங்களும் ஒன்று சேர்ந்ததால், எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய முக்கிய கேள்விகளுக்கு விடை கிடைத்து இருந்தன.§§

குருதேவா தனது தேவாலய அங்கத்தினர்களிடம் தனது லிவிங் வித் சிவா (சிவபெருமானுடன் வாழ்தல்) புத்தகத்தில் 365 நந்திநாத சூத்திரங்களில் விவரித்த, தமிழ் சைவ கலாச்சாரத்தின் பாரம்பரிய மற்றும் நிரூபிக்கப்பட்ட நெறிமுறைகளை உறுதியாக கடைப்பிடித்து வாழவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தியா மற்றும் இலங்கையில் இருந்த ஆச்சாரமான சைவர்களுடன் தொடர்பில் இருந்ததால், இந்த புனிதமான கலாச்சாரத்தின் நுணுக்கங்கள் மற்றும் ஆழங்களை மேற்கு நாட்டு மக்களால் புரிந்துகொள்ள முடிந்தது மற்றும் குருதேவா வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊக்குவித்து வந்தார். §§

image§

தினமும் அதிகாலை நேர தியானம் முடிந்த பிறகு, குருதேவா கையில் காபி குவளையுடன், துறவிகள் மற்றும் விருந்தாளிகளை சமமாக வரவேற்று, எல்லோருக்கும் தங்களுக்குள் இருக்கும் பரமாத்துமாவைப் பற்றி நினைவூட்டிக்கொண்டு சிவபெருமானின் பூங்காவில் இருந்த பாதைகள் வழியாக நடந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இந்த நந்திநாத சூத்திரங்கள் வாழ்க்கை எளிமையாக இருந்த போது, குடும்பங்கள் மற்றும் கிராமங்கள் நெருக்கமாக இருந்த போது, அன்பு மற்றும் அமைதி, மரியாதை மற்றும் ஞானம் வலுவாக இருந்த போது மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் மற்றும் ஒருவரை ஒருவர் எவ்வாறு தொடர்பு கொண்டார்கள் என்று சுருக்கமாகவும் தைரியமாகவும் விளக்குகிறது. இதில் புதிய தகவல் எதுவும் அடங்கி இருக்கவில்லை. ஒவ்வொரு சூத்திரமும் அறிவிக்கும் பழங்கால ஞானம் மற்றும் நெறிமுறையை பின்பற்றினால், அது தினசரி வாழ்க்கைக்குள் அதே எளிமை, சமூக ஆதரவு, அமைதி, இணக்கம் மற்றும் நிரந்தர உறவுகளில் கண்ணியத்தை கொண்டு வருகிறது. இந்த 365 சூத்திரங்களில் ஒவ்வொன்றையும் தினமும் ஒவ்வொன்றாக படிக்க வேண்டும். இதில் பல வரலாற்று சிறப்புமிக்க கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன மற்றும் சில தற்காலத்தை சேர்ந்த புனிதமான பாடங்களாக உள்ளன. இந்துக்களின் ஐம்பத்தி இரண்டாவது நூற்றாண்டில், இந்த அறிவுறுத்தல்கள் நல்லொழுக்கத்துடன் நன்றாக வளர்க்கப்பட்ட பல லட்சக்கணக்கான ஆசிய நாடுகளில் இருப்பவர்களின் தினசரி வாழ்க்கையை இன்றும் நன்றாக விவரிக்கிறது. §§

இந்த சூத்திரங்கள் விதிகளாக இருக்கின்றன, ஆனால் இவை கட்டளைகளாக இருப்பதில்லை. இவை பக்தியுள்ள இந்துக்கள் என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் விவரிக்கின்றன. என்னை தீவிரமாக பின்பற்றும் சீடர்கள், இந்த 365 சூத்திரங்கள் மீது கவனம் செலுத்தி பயிற்சி செய்ய முயல்வார்கள் என்று நான் எதிர்ப்பார்க்கிறேன். இந்த சூத்திரங்களை வாசிக்கும் பலர், “எதற்காக இந்த கடுமையான பாரம்பரியங்கள் மற்றும் பயிற்சிகளை பின்பற்ற வேண்டும்? இவை பழைய பாணியாக தோன்றுகிறதே?” என்று நீங்கள் சிந்திந்துக்கொண்டு இருக்கலாம் அல்லது உங்கள் நண்பர்களிடம் பேசிக்கொண்டு இருக்கலாம். எனது பதில்: இரண்டு உலகப்போர்களுக்கு முன்பாக, குழந்தை வளர்ப்பு, ஆண்-பெண் உறவுகள், பெண்கள் வீட்டிலேயே இருந்து தங்கள் குழந்தைகளை கவனமாக வளர்ப்பது போன்ற பல பாரம்பரியங்கள் அமெரிக்காவிலும் இருந்துள்ளன. இரண்டாம் உலகப்போரின் போது பெண்கள் வெளியுலகில் வேலை செய்ய ஆரம்பித்ததால், அது பாரம்பரிய கலாச்சாரத்தின் சீர்குலைவை ஏற்படுத்தி உருவாக்கிய பாணியை, இன்று ஒவ்வொரு நாடும் பின்பற்றி வருகிறது. §§

கலாச்சாரமின்மை அல்லது கலாச்சார அழிவாக இருக்கும் கலாச்சாரமின்மை, எல்லோரும் பின்பற்றும் “கலாச்சாரமாக" மாறிவிட்டது. அதனால் ஒழுக்கமின்மை, விவாகரத்து, தற்கொலை மட்டுமில்லாமல் கொலை, திருட்டு, மனைவியை துன்புறுத்துதல், போதை மருந்து பழக்கம், திருமணம் செய்துக்கொண்டு ஒரு துணையுடன் நிலையாக இல்லாமல் தொடர்ந்து மாற்றிக்கொண்டு இருத்தல் மற்றும் குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தாமை போன்ற பல்வேறு தீவிர ஈடுபாடுகள் மற்றும் தவறான நடத்தைகளின் கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றுகிறது. இதனால் எல்லோரது பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. §§

நாம் எதற்காக பழங்கால மரபுகளை பின்பற்ற வேண்டும் என்று சுமார் அரை நூற்றாண்டிற்கு முன்பாக என் சற்குரு யோக சுவாமியிடம் கேட்கப்பட்ட போது அவர் மிகவும் எளிமையாக, “இரயில் வண்டி பல பெட்டிகளை இழுத்து செல்கிறது. ஆனால் தண்டவாளம் இல்லாமல், இரயில் வண்டியால் பல பெட்டிகளை இழுத்து செல்ல முடியுமா? கண்டிப்பாக முடியாது. சான்றோர்கள் நமக்கு பாதையை வகுத்துள்ளனர். நாம் அதை பின்பற்றி செல்ல வேண்டும்” என்று கூறினார். இந்த சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்கள் சவால் விடுவதாக இருந்தாலும், அவை சந்தோஷமான மனிதர்கள், ஒற்றுமையுடன் இருக்கும் குடும்பங்கள் மற்றும் பாதுகாப்பான நாடுகளை உருவாக்குகின்றன. நீங்கள் அவற்றை முழுமையாக பார்க்கும் போது, உங்களால் ஒரு உயர்வான சமூகத்தை காண முடியும். அத்தகைய ஒரு சமூகத்தால் ஒன்றாக இணைந்து வேலை செய்து, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி, ஒருவர் மற்றொருவர் மீது நம்பிக்கை வைக்க, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஒன்றாக சிவபெருமானுக்கு சேவை செய்து வழிபட்டு, ஆக்கப்பூர்வமான ஒற்றுமையில் ஒன்றாக வாழ்ந்து பிறப்பு, வாழ்க்கை, மரணம் மற்றும் மீண்டும் பிறப்பு என்று அவர்கள் ஒவ்வொருவரும் அனுபவிப்பதை போல தொடர்ச்சியான படைப்பாற்றலை வெளிப்படுத்த முடிகிறது. §§

வேலை வாய்ப்புக்கள் மற்றும் சொந்த நாடுகளில் இருந்த இன தகராறுகள், சண்டை மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக, குடிபெயர்ந்த இந்துக்கள் உலகமெங்கும் பரவி உள்ளனர். உலகெங்கும் புலம்பெயர்ந்த இந்துக்கள் காரணமாக, அவர்களின் மூதாதையர்கள் புரிந்துக்கொண்டு சிறப்பாக வாழ்ந்து இருந்த நடத்தை முறைகள் மற்றும் கலாச்சாரம் மற்றும் வரைமுறையின் விதிகளை மீண்டும் வலியுறுத்துவது முக்கியமாகிறது. §§

image§

குருதேவா தனது சீடர்களுடன் அவர்களது ஆரோக்கியம், குடும்பம், வேலை மற்றும் தியானங்களை பற்றி இரவு பகல் பார்க்காமல் தொலைபேசி மூலம் அறிவுரை வழங்கி வந்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

“குரு ஒரு மடத்திற்கு பணி புரிவதை போல குடும்பங்களுடனும் பணி புரிகிறார்,” என்று 1973 ஆம் ஆண்டு குருதேவாவிற்கு வெளியிடப்பட்ட தி சைவைட் சாஸ்த்ராஸ் (சைவ சாஸ்திரங்கள்) விளக்குகிறது. மடங்கள் மற்றும் குடும்பங்களுக்கு இடையே இருந்த அந்த உறவை பற்றி தேவ சேயோன் விரிவாக விளக்குகிறார்: §§

தேவாலய பணிகள் மற்றும் பெரும்பாலான மக்கள் பணிகளிலும், குருதேவாவின் பல்வேறு அறிவுறுத்தல்களை பல்வேறு நிலைகளில் பூர்த்தி செய்ய, சைவ சித்தாந்த தேவாலயத்தின் மடம் மற்றும் குடும்பங்கள் இணைந்து செயல்படுகின்றன. குடும்பங்கள் மடவாசிகளின் அணுகுமுறைகள், அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் சுயநலமற்ற சேவையை கவனித்து கற்றுக்கொள்கிறார்கள். §§

இந்த உறவு தனது சீடர்கள் அனைவரிடத்திலும் குருதேவா கவனமாக வளர்த்து இருந்த தியானம் மற்றும் சாஸ்திர ஆய்வு போன்ற தினசரி சமய பயிற்சிகளினால் விருப்பத்துடன் கடுமுயற்சி செய்வதால் உருவாகியுள்ளது. §§

எல்லோரும் ஒன்றாக வீட்டு பூஜை மாடத்தில் வழிபடுதல், இந்து ஆடைகளை அணிதல், குழந்தைகளை துன்புறுத்தாமல் வளர்த்தல், தினமும் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து பேசுதல் மற்றும் மாலையில் வாரத்திற்கு ஒரு முறை எல்லோரும் ஒன்றாக கூடி வீட்டில் இருத்தல் போன்றவற்றால் இந்து சமயத்தின் பாரம்பரியங்களை பரப்பும் போது வரம்புகளை உருவாக்கிக் கொள்ளுமாறு, தேவாலய குடும்பங்களிடம் குருதேவா கேட்டுக்கொண்டார். தங்கள் குழந்தைகளுக்கு ஒன்றாக வீட்டிலேயே கல்வி கற்பித்தல், யாத்திரைகள் மற்றும் விஷேச விருந்தாளிகளை உபசரித்தல் மற்றும் தென் இந்தியா மற்றும் கவாய் ஆதீனத்திற்கு கூட்டாக யாத்திரை செல்லுதல் போன்ற பல வழிகளில் ஒரு அர்த்தமுள்ள இந்து வாழ்க்கையை வாழ்ந்து, ஒரே பகுதியில் இருக்கும் குடும்பங்களின் குழுக்கள் தங்களுக்குள் கூட்டு சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க கற்றுத்தந்தார். §§

குருதேவா தீட்சை பெறாத தொண்டர்களின் குழுவை உருவாக்க அதிக முக்கியத்துவம் அளித்து, ஒவ்வொரு தேவாலய பணிக்கும் ஒரு குலபதி குடும்பம் என்று ஒருசில தம்பதிகளை நியமிப்பார். கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, களத்தில் மதப் பரப்பாளர்களாக, நன்றாக தேர்ச்சி பெற்ற இந்த குழுவின் வாயிலாக, அவர் தான் பெரும்பாலும் சமாஜங்களுடன் மேற்கொண்ட பணி, மற்றும் பல நாடுகளில் மேற்கொண்ட ஆன்மீக திட்டங்களை செயல்படுத்தினார். அவர் பெரும்பாலும் இந்த குழுவினரை தினமும் அழைத்து பேசுவார். §§

சம்சாரிகளாக இருந்த சீடர்களின் வாழ்க்கை மீது குருதேவா ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி மனோன் மர்தமூத்து தெளிவாக எடுத்துரைத்தார்: §§

வீட்டிலும் வெளியுலகிலும் அமைதி, அன்பு மற்றும் இணக்கத்திற்கு உகந்த ஒரு வாழ்முறையைப் பற்றி குருதேவா எங்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார். அவர் எங்களுக்கு அமைதியை நிலைநாட்ட, நல்ல குடும்ப மக்களாக மற்ற எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க, விவேகமுள்ள பெரியோர்களாக இருக்க, மிகவும் மோசமான சூழ்நிலைகளிலும் மரியாதையுள்ள தலைவர்களாக நிலைத்து இருக்க கருவிகளை வழங்கியுள்ளார். அவர் தனது சொந்த வாழ்க்கையின் மூலம், நமது நம்பிக்கைகள் மற்றும் பண்புகளில் வலுவாக இருந்து, கவனமாக திட்டமிட்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவது பற்றியும், நிகழ்காலத்தில் முழுமையாக இருப்பது பற்றியும் எங்களுக்கு கற்றுத் தந்தார். நாங்கள் தற்போது குடும்பங்கள் மற்றும் கூட்டு குடும்பங்களுடன் அற்புதமான அனுபவங்களை ரசித்துக்கொண்டு, எங்களால் எங்கள் கலாச்சாரம் மற்றும் சமயத்தை பாதுகாத்து தக்க வைத்துக்கொள்ள முடிகிறது என்றால், அதற்கு சற்குருவிற்கு தான் நன்றி சொல்லவேண்டும். §§

மகாதேவர்கள் சிவலோகத்தை விட்டு வெளியேறுதல் §

குருதேவா அதிக ஆழமான ஆன்மீக உலகம் பற்றிய விளக்கங்களில் இருந்து தொடங்கி, இந்துக்களுக்கு இந்து சமயத்தை பற்றி முழுமையாக கற்றுத் தந்தார்.§§

மிகவும் உயர்வான சக்திகளான விநாயகர், முருகன் மற்றும் சிவபெருமான் போன்றோர், தங்க ஒளியில் மின்னும் தங்கள் உடல்களுடன் மூன்றாவது உலகில் வசிக்கின்றனர். இந்த மூன்றாவது லோகம் சிவலோகம் என்று அழைக்கப்படுகிறது. உள்பொருளின் இரண்டாவது உலகமாக விளங்கும் சூட்சும லோகம் தேவலோகம் என்று அழைக்கப்படுகிறது. தேவலோகத்தில் மகாதேவர்களுக்கு இருக்கும் லட்சக்கணக்கான உதவியாளர்கள் நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்து வருகின்றனர். இந்த முதல் லோகத்தில் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்ய ஒன்று அல்லது பலர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். லௌகீக அல்லது தூல உள்பொருளாக இருக்கும் இந்த லோகம், பூலோகம் என்று அழைக்கப்படுகிறது. §§

ஒருவர் நெற்றியில் பூசியிருக்கும் விபூதியை தேவர்களால் எவ்வாறு காண முடிகிறது, கோயிலில் பூசாரி உச்சரிக்கும் சமஸ்கிருத மந்திரத்தை தேவர்களால் எவ்வாறு கேட்கமுடிகிறது மற்றும் கோயில் கருவறையில் கற்சிலையாக இருக்கும் தெய்வம் எவ்வாறு மூன்றாவது லோகத்தில் இருக்கும் மகாதேவர்களுக்கு ஒரு தொலைபேசி இணைப்பு போல விளங்குகிறது என்பதை பற்றி அவர் விளக்குவார். அவர் கூட்டத்தில் கூடியிருந்த தேர்ந்தெடுத்த சிலர், தங்கள் மூதாதையர்களிடம் இருந்து அத்தகைய விளக்கங்களை கேட்டு இருந்தாலும், தனது சொந்த உணர்தலை போதிக்கும் குருதேவா சொல்வதை கேட்பது மிகவும் விசேஷமானதாக இருந்தது. §§

சிவபெருமானை வீட்டில் வழிபடக்கூடாது, மற்றும் அழிக்கும் கடவுளாக மட்டுமே பலரால் தவறாக கருதப்படும் சிவபெருமானை வழிபட்டால் வறுமை நிலை உண்டாகும் என்று மக்களிடம் நிலவும் பொதுவான தவறான கருத்துக்களை அகற்றுவதற்காக, அவர் தனது சக சைவர்களுக்கு வழங்கிய தகவலில் ஒரு விசேஷ பகுதியை ஒதுக்கியிருந்தார். “அபத்தமானது, சிவபெருமான் அன்பின் கடவுளாக இருக்கிறார்!” என்று அவர் பதில் அளித்தார். ஆக்கல், காத்தல் மற்றும் அழிக்கும் கடவுளாக இருக்கும் சிவபெருமானை வழிபடுவதால் செல்வத்துடன் எல்லா நன்மைகளையும் கிடைக்கும் என்று அவர் விளக்கினார். மக்களிடம் நிலவும் மூடநம்பிக்கைகளுக்கு இரையாகி, தங்கள் வீடுகளுக்கு எளிமையான நடராஜரை கொண்டு வர தயங்கிய ஆயிரக்கணக்கான சைவ குடும்பங்கள், தைரியமாக தங்கள் பூஜை அறைகளுக்கு அன்பின் வடிவமாக இருந்த கடவுளை கொண்டு வந்தனர். §§

குருதேவா அனைத்து மகாதேவர்களையும் அவர்கள் லோகத்தில் இருந்து “வெளியே அழைத்து" வர விரும்பினார் மற்றும் வீட்டு பூஜை அறையை தங்கள் வீட்டில் இருக்கும் மிகவும் அழகான அறையாக மாற்ற இந்து சமயத்தின் ஒவ்வொரு பிரிவை சேர்ந்த மக்களையும் ஊக்குவிதார். தங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிக்கு தென்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக, தங்கள் வீட்டு பூஜை அறையை இரகசியமாக வைத்திருந்த இந்துக்களுக்கு ஒரு பிரத்யேக கண்டனத்தை தயார் செய்து இருந்தார். அவர் அவர்களை “இரகசியமான இந்துக்கள்" என்று கடிந்துக்கொள்வார். அவரது சீடர்களின் வீடுகள், அதில் வசிப்பவர்களின் சமயம் மற்றும் கலாச்சாரத்தை அந்த வீடு அருமையாக மற்றும் தெளிவாக பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் விரும்புவார். “சிவலிங்கம், நடராஜர், முருகன், விநாயகர் மற்றும் சற்குருவின் திருவடியை வழிபடுவதற்கும், தியானம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு, முற்றிலும் திகைக்க வைக்கும் வீட்டு பூஜை அறையாக இருக்க வேண்டும். இது வீட்டில் இருக்கும் மிகவும் அழகான அறை,” என்று பூஜை அறையை பற்றி அவர் தனது கருத்தை தெரிவித்தார். §§

அவர் பல வருடங்களாக ஆன்மீக வாழ்க்கைக்கு அடிப்படையாக பரிந்துரைத்த தியானத்துடன், ஒவ்வொரு வீட்டிலும் தினமும் பூஜை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கினார். மேற்கில் இருந்தவர்களுக்கும் கிழக்கில் இருந்தவர்களுக்கும், 1970 களின் இறுதியில் தனது மடவாசிகள் கற்க ஏற்பாடு செய்திருந்த, பாரம்பரிய வீட்டு பூஜை செய்முறையை அவர்கள் மூலமே எழுதி, முதல் முறையாக எல்லோருக்கும் கிடைக்கும் படியாக சைவ ஆத்மார்த்த பூஜை என்ற பெயரில், பழங்கால சமஸ்கிருத சுலோகங்களுடன் வெளியிடவும் செய்தார். அதில் அவர் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புக்களுடன் ஒலிபெயர்ப்பையும் வழங்கி இருந்தார். §§

அவர் தான் மேற்கொண்ட ஒவ்வொரு பணியிலும் தீவிரமாக இருந்ததை போல, சைவ வழிபாட்டு முறையின் அதிக ஆழமான மூலத்தில் இருந்து, 1982 ஆம் ஆண்டு குருதேவா தான் நிர்மாணித்த கோயில்களுக்கு பழங்கால புரோகித அற்புதங்களை கொண்டு வந்தார். அது வரை கேட்டிராத, கோயில் பூஜையின் கலைகள், சைவ பரார்த்த பூஜையைப் பற்றி தனது மடவாசிகளுக்கு தெரிவிக்குமாறு குருதேவா சுப்பிரமணிய குருக்களிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அவர் அதைப்பற்றி அளவெட்டியின் ஶ்ரீ சுப்பிரமுனிய ஆசிரமத்தில் தனது கருத்துக்களை தெரிவித்தார். 1985 குருதேவா அந்த அறிவை பி. சண்முக சிவாச்சாரியார் மூலம் மேலும் வலுப்படுத்தினார். அவர் ஹோம சடங்குகளைப் பற்றி விளக்க தென் இந்தியாவில் இருந்து பறந்து வந்து, பரார்த்த பூஜையை தேவநாகரி லிபியில் தனது சொந்த கையால் எழுதி, அதை ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்கவும் செய்தார். இது அப்போதைய இந்திய அர்ச்சகர் சங்கத்தின் தலைவராக இருந்த சாம்பமூர்த்தி சிவாச்சாரியாரின் ஒப்புதலுடன் நடைப்பெற்றது. §§

குருதேவா 1981 ஆம் ஆண்டு இந்திய யாத்திரை சென்ற போது, திருச்செந்தூரில் தமிழ் சான்றோர்களும் பேசும் போது, “நீங்கள் உங்கள் கோயில்கள் மற்றும் சமயத்தை புறக்கணிக்க ஆரம்பித்தால், 50 வருடங்களுக்குள் நீங்கள் உங்கள் இனத்தை இழக்க நேரிடும்” என்று கூறினார். அதே வருடம் நடைபெற்ற இன்னரசர்ச் திட்டத்தின் போது, ஈழத்து திருநெறி தமிழ் மன்றத்தின தலைவர் திரு. ஏ. குணநாயகம், சைவ சித்தாந்த தேவாலயத்தின் நடவடிக்கைகள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு, அதன் சைவ சமய சேவையை புகழ்ந்து, மன்றத்தின் சார்பாக கொழும்புவின் சரஸ்வதி மண்டபத்தில் வழங்கிய உரையின் தொகுப்பு: §§

15 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை, மேற்கில் இருந்து பல்வேறு சமயத்தை சேர்ந்த தூதர்கள் கிழக்கு கரைகளுக்கு வந்த போது, ஆன்மீக நதியின் உண்மையான பாதையை தாங்கள் பின்பற்றுவதாக அவர்கள் கருதினார்கள். அவர்கள் மனதை பொறுத்தவரை, அது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சென்றுகொண்டு இருந்தது. ஆன்மீக ஞானோதயத்தின் வழிகாட்டலை தேவையானவர்களுக்கு வழங்கவே, தான் அதை கொண்டு வந்ததாக அவர்கள் உண்மையில் கருதினார்கள். ஆனால் சுவாமி விவேகானந்தரின் எழுச்சி, ஆன்மீக நதி உண்மையில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி அல்லவா சென்று கொண்டிருக்கிறது என்று அவர்களை சிந்திக்க வைத்தது. §§

ஹவாய் தீவில் சைவ சித்தாந்த தேவாலயம் தொடங்கியதன் மூலம், தற்போது ஒரு மூன்றாவது நிலை தோன்றியுள்ளது. நமக்கு முன்பாக ஒரு அற்புதம் நடந்துகொண்டு இருக்கிறதா? நதி பின்னோக்கி செல்ல ஆரம்பித்து விட்டதா? ஒரு காலத்தில் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கிய கிழக்கு நாடுகளில், ஆங்காங்கே இருக்கும் ஒரு சில பாலைவனச் சோலைகளைத் தவிர, பெரும்பாலான பகுதி வறண்டு பலரால் முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருக்கிறது. கிழக்கு நாடுகள் மாறிக்கொண்டு இருக்கும் காலத்தின் மீது கவனம் செலுத்தாமல், தொழில்நுட்ப யுகத்துடன் முன்னேற தவறியுள்ளது. பொன்போன்ற தலைசிறந்த பாரம்பரியத்தின் மீது உரிமையுள்ள வாரிசுகளை சோம்பேறித்தனமும் அக்கறையின்மையும் ஆட்க்கொண்டுள்ளது என்பதால், விதிகள் மற்றும் முன் உதாரண அடிப்படையில், பூமியில் இருக்கும் தலைசிறந்த மதத்திற்கு ஆதரவு வழங்குவது சைவ சித்தாந்தத்தின் பொறுப்பாகிறது. அது சைவ சமயத்தின் வழிகாட்டலுக்கு வலுவாக ஆதரவு அளித்து வருகிறது. §§

image§

புதிய தொழில்நுட்பங்களை விரைவில் ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்ட குருதேவா, வசன குறிப்புக்களுக்கு சிறிய ஒலிப்பதிவுப் பெட்டி மற்றும் எழுத்து வடிவத்தை ஒலிப்பேழை நாடாவிற்கு பதிவு செய்த புதுமையான 1980 சோனி டைப்கார்டரை போல கைக்கு அடக்கமான கணினிகள் போன்று தனது சிந்தனைகள் மற்றும் படைப்புக்களை பதிவு செய்து மக்களுடன் தொடர்பு கொள்ள உதவிய கருவிகளை அதிக ஆர்வத்துடன் பயன்படுத்தினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

தேவாலயத்தில் அமர்ந்து இருக்கும் ஒரு ஆர்வமுள்ள சாதகன், புகழ்பெற்ற சைவ சமயத்தின் கடந்த காலத்தில் இருந்து சிலவற்றை மீண்டும் பெறும் அளவிற்கு, ஹவாய் தீவில் அமைதி புரட்சி நடந்துகொண்டு இருக்கிறது. இல்லையென்றால், ஹவாய் தீவில் சைவ சித்தாந்த தேவாலயத்தின் புனிதமான வளாகங்களில், எவ்வாறு மகாபலிபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 16-டன் எடையுள்ள கருங்கல் நந்தியை அமர்த்த முடியும்? எவ்வாறு ‘கடவுள்’ கோயிலில் ஆறு அடி உயர நடராஜர் சிலை வாசம் செய்ய முடியும்?…§§

இது சம்பந்தமான சடங்கு மற்றும் விழாக்கள் மட்டுமே நம்மை கவர்ந்து இழுக்காமல், அதிக கவனமாக தெரிவிக்கப்பட்டுள்ள தேவாலயத்தின் அடிப்படை கொள்கையும் அதிக ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. உங்கள் தேவாலயம் வழங்கும் தலைசிறந்த நற்பணி மனித நேயத்தை தொடர்ந்து ஒழுங்குபடுத்தி அறிவூட்டும் தலைசிறந்த நற்பணியை தொடர வேண்டும் என்று, மனதில் பிரார்த்தனையுடன், சைவ சமயத்தின் வலுவான தேவ தூதராக இருக்கும் குருதேவா உங்களுக்கும், அர்ப்பணிப்புடன் சுயநலமற்ற சேவையை செய்யும் சுவாமிகளின் குழு மற்றும் சைவ சித்தாந்த தேவாலயத்திற்கும் இருகரம் கூப்பி மரியாதை மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!”§§

சர்ச் (தேவாலயம்) என்ற சொல்லை தற்காத்தல் §

1975 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் சமய அமைப்பின் சட்டப்பூர்வமான வடிவத்தின் முக்கியத்துவத்தை, பல ஆண்டுகளாக தான் மேற்கொண்ட ஆய்வால் உணர்ந்து இருந்த குருதேவா, தனது அமைப்பை சைவ சித்தாந்த தேவாலயம் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றினார். இந்த பெயர் பலருக்கு பிடிக்கவில்லை. இதற்கு பல தரப்புக்களில் இருந்து குறிப்பாக ஆசிய இந்துக்களிடம் இருந்து எதிர்ப்புக்கள் வந்தன. இந்து சமயம் விரோதியாக நினைத்த கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்க தேவாலயங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் குருதேவா உறுதியாக இருந்து, தான் எடுத்த முடிவை பல வருடங்களுக்கு தற்காத்து வந்தார். §§

இறுதியில் அவர் சரியென்று நிரூபிக்கப்பட்டார் என்றாலும் அது ஒரு சாதாரண போராட்டமாக இருக்கவில்லை. இந்த பிரச்சனையின் காரணமாக, சில அங்கத்தினர்கள் அவரை விட்டு விலகினர். ஆனால் அவரை விட்டு, புகைப்பதை நிறுத்த மறுத்தவர்கள் அல்லது வீட்டில் தங்கள் மனைவி தங்குவதை அல்லது குழந்தைகளை வளர்ப்பதை மறுத்தவர்கள் அல்லது அர்ப்பணிப்பிற்கு அவர் வழங்கிய ஏராளமான தேவைகளை மறுத்தவர்களும் விலகத் தான் செய்தார்கள். 1990களின் தொடக்கத்தில் அவர் இயற்றிய, சைவ தர்ம சாஸ்திராஸ், தி புக் ஆஃப் டிஸ்சிப்ளின் ஆப் சைவ சித்தாந்த சர்ச் என்ற புத்தகத்தில், குருதேவா பின்வரும் விளக்கத்தை வழங்குகிறார்:§§

நமது இந்து தேவாலயத்தின் பெயர் சைவ சித்தாந்த தேவாலயம் ஆகும். “பரமனாக இருக்கும் சிவபெருமானின் வெளிப்படுத்தப்பட்ட முடிவான உண்மையின் புனிதமான சமாஜம்,” என்பது அதன் பொருள். இதில் இருக்கும் இரண்டு சமஸ்கிருத சொற்கள் மற்றும் ஒரு ஆங்கில சொல்லை, எங்களது சர்வதேச அடையாளமாக கருதுகிறோம். §§

ஆங்கிலத்தில் எழுதும் போது அல்லது பேசும்போது, சர்ச் என்ற சொல்லுக்கு பதிலாக வேறு எந்த சொல்லையும் பயன்படுத்தக் கூடாது. அந்த சொல்லை உரையாடும் காரணத்திற்காக மற்ற மொழிகளில் மொழிப்பெயர்த்துக் கொள்ளலாம். பிரதான தேவாலயத்தின் விருப்பத்திற்கு ஏற்ப, அதை சமயப்பணி குழுக்களின் பதிவுகளைப் போன்ற சட்ட ஆவணங்களுக்கும் மொழிபெயர்க்கலாம். அத்தகைய மொழிப்பெயர்ப்புக்கள், எப்போதும் தேவாலயம் ஒப்புதல் வழங்கியது அதிகாரப்பூர்வமான சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அத்தகைய மொழிபெயர்ப்புக்களில், இந்த பகுதியில் இருக்கும் பாரம்பரிய தேவாலயங்களின் மாதிரியின் அடிப்படையில், பின்வரும் பொருளை மிகவும் வலுவாக தெரிவிக்கும் சொற்களை நாங்கள் தேர்வு செய்கிறோம்: ஒரு நம்பிக்கை கோட்பாட்டை பின்பற்றி, ஒரு மனதுடன் இருக்கும் பக்தர்களின் படிநிலை குழு, உறுதியான நடத்தை நெறிமுறைகளுடன், தீட்சை பெற்ற பூசாரி குழுவினர், ஆச்சாரியர்கள் மற்றும் சமய பரப்பாளர்கள், நன்றாக வரையறுக்கப்பட்ட சடங்குகள், சாஸ்திரத்தின் மீது பகிரப்பட்ட அதிகாரம் மற்றும் மற்ற தொடர்புகள் இல்லாமல் பிரத்யேக உறுப்பினராக இருத்தல். §§

image§

1979 ஆம் ஆண்டு குருதேவா தொடங்கிய பத்திரிகை பின்னாளில் இந்துயிசம் டுடே என்று அழைக்கப்பட்டது. அந்த பத்திரிகையின் நோக்கம் தனது சமயப்பணியை ஊக்குவிப்பதற்காக அல்ல என்றும், உலகெங்கும் இருக்கும் இந்து சமூகங்களை இணைத்து தகவல்களை தெரிவிக்கவே தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் தனது துறவிகள் குழுவிடம் தெரிவித்தார். அவர் அதனை “கப்பலின் முன்பக்கத்துடன்" ஒப்பிட்டு பேசினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

சர்ச் என்ற சொல் சில சமூகங்களில் நல்ல மரியாதை மற்றும் சக்தியை வெளிப்படுத்தும் என்றும், மற்ற சில சமூகங்களில் அது இழிவுபடுத்தப்பட்டு சிறுமைப்படுத்தப்படும் என்பது எங்களுக்கு தெரியும். தாங்கள் சார்ந்து இருப்பது உலகின் முதல் இந்து தேவாலயம் என்பதை அறிந்த எங்கள் உறுப்பினர்கள், சைவ சித்தாந்த சர்ச் (அல்லது அதை உலகின் பல மொழிகளில் பாரம்பரிய முறையில் சித்தரிக்கும் சமமான சொல்) என்று எல்லா சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தி, தேவைப்படும் போது அதன் பயன்பாட்டை ஆதரிக்கவும் செய்கின்றனர். நாங்கள் தேவாலயத்தின் நிறுவன அமைப்பை வலுவாக தக்க வைத்துக்கொண்டு இருக்கும் போது, நாங்கள் வேதங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை போல புனிதமான, பாரம்பரியம் சார்ந்த சனாதன தர்மத்தை அதிக பயனுள்ள வகையில் தெரிவிக்கிறோம் என்பதையும் வலியுறுத்த வேண்டும். உலகில் மிகவும் ஆச்சாரமான சமாஜங்களில் ஒன்றாக இருப்பதால், இந்த நிறுவன அமைப்பு கிறித்துவ அல்லது மேற்கத்திய சமய கருத்தை ஏற்றுக்கொள்வதாக அல்லது மறைமுகமாக குறிப்பிடுவதாக தவறான கருத்தை என்றுமே உருவாக்கக் கூடாது. §§

கிரேக்க மொழியை அடிப்படையாக கொண்ட சர்ச் என்ற சொல் பொதுவாக ஒரு வழிபாட்டு இடம் என்று புரிந்துகொள்ளப்பட்டாலும், பல்வேறு நிலைகளில் நடவடிக்கைகளை கொண்ட ஒரு சமய பேரவை மற்றும் சங்கம் என்ற விரிவான பொருளையும் உள்ளடக்கியுள்ளது. தேவாலயம் மற்றும் அரசு தொடர்பான விவகாரங்கள் அதிகமாக கவனம் செலுத்தப்படும் சட்டம் மற்றும் அரசாங்க விவாதங்களில் சர்ச் ஒரு விசேஷ முக்கியத்துவத்தை பெறுகிறது. அதிகமான நாடுகளில், மத்திய மற்றும் மாநில அரசுகளில், மதம் தேவாலயமாக விளக்கப்பட்டு, தேவாலயம் மற்றும் அரசின் பிரிவினை மதிக்கப்பட்டு அரசியல் சாசனத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவாலய கருத்துக்களின் அடிப்படையாக விளங்கும் அத்தகைய பாதுகாப்புகள், அனைத்து சமய குழுக்களின் உரிமைகளுக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றன. அரசாங்கத்திடம் இருந்தும், அரசியல் ஆதரவு குறைவாக இருக்கும் மதங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும் மற்ற மதங்களிடம் இருந்து கிடைக்கும் பாதுகாப்பும் இவற்றில் அடங்கும். §§

குருதேவா தனது சங்கத்தை நிர்வகிக்கும் முக்கியமான விதிகளை அமைப்பதில் தெளிவாக இருந்தார். முதல் விதி, சற்குரு மற்றும் அவரது மடவாசிகளிடம் முழு பொறுப்பும் இருக்கும்; தேவாலய நிர்வாகத்தில் எந்தவித குடும்ப தலையீட்டிற்கும் அனுமதி இல்லை. இரண்டாவது, குரு அல்லது துறவிகளின் சொந்தங்களுக்கு பிரத்யேக அனுமதி, சலுகை அல்லது நிர்வாகத்தில் பங்குபெற அனுமதி இல்லை. மூன்றாவது, தேவாலயம் தனது நிதி தேவைகளுக்கு வணிகங்களில் ஈடுபடாமல், தனக்கு வரும் நன்கொடைகளை சார்ந்து இருக்க வேண்டும். நான்காவது, அவரது மடவாசிகள் ஆண்கள் மட்டுமே வசிக்கும் மடங்களில் வாழ வேண்டும். §§

இலக்குமுறைக்கு மாறும் வெளியீட்டுப்பணி §

1985 ஆம் ஆண்டு ஒரு நாள் மதிய நேரத்தில், குருதேவா வரலாற்று சிறப்புமிக்க காப்பா நகரத்தில் இருந்த ஒரு சிறிய கணினி கடைக்குள் நுழைந்தார். அவர் சிறிது நேரம் அதிநவீன மாக்கின்டோஷ் கணினியுடன் விளையாடிய பிறகு, அவர் தனக்காக ஒரு கணினியை வாங்கிக்கொண்டார். கணினிகள் மீது அவருக்கு அதிக ஈடுபாடு இருந்ததில்லை என்றாலும், இந்த கருவி மாறுபட்டு, பயனுள்ளதாகவும் பயன்படுத்த எளிதாகவும் இருந்தது. அவர் ஒரு வாரத்திற்கு அதில் சோதனை மேற்கொண்டு, அதில் அவர் ஒரு புதிய அம்சத்தை தெரிந்துகொண்டதும் துறவிகளை தனது அலுவலகத்திற்கு அழைத்து, அவர்களுக்கும் காண்பிப்பார். §§

குரு மற்றும் அவரது சீடர்கள் அருகில் அமர்ந்துகொண்டு கணினியின் செயல்பாட்டை கற்றுக்கொண்டனர். அவர் அதில் மறைந்திருக்கும் ஆற்றலை புரிந்துக்கொண்டு, இந்த புதிய கருவிக்கு ஏற்ப தங்களது பல்வேறு சேவைகளை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவித்தி, தனது துறவிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு கணினியை ஆணையிட்டார். அவர்கள் குருதேவாவின் அறிவுறுத்தலை பின்பற்றினார்கள். அன்றிலிந்து சற்குருவிற்கு சந்தைக்கு வரும் புதிய, அதிவேகமான மற்றும் நேர்த்தியான மாக்கின்டோஷ் கிடைப்பதை அவர்கள் உறுதி செய்து கொண்டார்கள்; மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் பவர்புக் வெளியிடப்பட்ட போது, விமானத்தில் இருந்த சக பயணிகள் சந்நியாசியின் அழகான மடிக்கணினியை பொறாமையுடன் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். §§

தர்மத்தின் பணியை செய்ய முழு வீச்சில் கணினி உலகை பயன்படுத்த ஆரம்பித்ததால், அது மாபெரும் விளைவுகளை ஏற்படுத்திய ஒரு முக்கிய முடிவாக விளங்கியது. இந்த புதிய தொழில்நுட்பத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள, தனது துறவிகள் குழு 2,500 தேன்கூடுகளை விற்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். ஏனென்றால் இந்த இரண்டு பணிகளையும், ஆட்பலம் குறைவான அவரது சிறிய வெளியீட்டு குழு செய்துக்கொண்டு இருந்தது. இலங்கை மட்டக்களப்பில் தனது ஆண் சீடர்களுக்கு யோக சுவாமி தொடங்கிய விவசாய திட்டத்தை போல, துறவிகள் ஒரு விவசாய அறக்கட்டளையாக கவாய் தீவு முழுவதிலும் பத்து வருடங்களுக்கு தேன்கூடுகளை நிர்வகித்து வந்தனர். §§

இந்துயிசம் டுடே பத்திரிகையில் அவர் தனது ஆசிரியர் தலையங்கத்தில் எழுதிய கருத்துக்கள், மிகவும் முக்கியமான மற்றும் மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கடமைகளில் ஒன்றாக விளங்கியது. அது பல வருடங்களுக்கு மாதாந்திர பத்திரிகையாக இருந்தது. சீடர்கள், மாணவர்கள் மற்றும் உலகெங்கும் பரவியிருந்த அங்கத்தினர்களுடன் தான் மேற்கொண்ட தேவாலய பணிகளின் மூலம், தனது கவனத்தை பெற்ற விஷயங்களைப் பற்றி அவர் அடிக்கடி எழுதினார். §§

1983 ஆம் ஆண்டு, கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உலகெங்கும் பரவியிருந்த இந்துக்கள் சந்தித்த பிரச்சனைக்கு தற்செயலாக ஒரு தீர்வை தேடிப்பிடித்தார். அந்த சமயத்தில் இந்து குழந்தைகள் வருத்தத்தில் இருந்தனர், மற்றும் அவர்கள் பெற்றோர்கள் குழப்பத்தில் இருந்தனர். மேலும் வருடம் ஒருமுறை நடந்த இந்த சித்திரவதைக்கு, இந்து உலகில் இருந்து யாரும் ஒரு நல்ல தீர்வை வழங்கவில்லை. ஒரு ஆசிரியர் தலையங்கத்தில், பஞ்ச கணபதி என்ற பெயரில், அவர் ஒரு நவீன இந்து விடுமுறையை தொடங்கி வைத்தார். டிசம்பர் 21 முதல் 25 வரை, ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த வழிபாட்டின் போது, வாழ்த்து அட்டைகள் மற்றும் பரிசுகள் சொந்தங்கள் மற்றும் பந்தங்களுடன் பகிரப்பட்டு வீட்டில், நண்பர்களிடத்தில், பணியிடத்தில் மற்றும் சமூகத்தில் கொண்டும் வரும் இணக்கம் மற்றும் அந்த இணக்கத்தால் ஏற்படும் தீவிரமான சமயப்பற்று மற்றும் புனிதமான கலாச்சாரத்தை வரமாக வழங்கும், விநாயகரின் ஐந்து சக்திகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. இனி குழந்தை மற்றும் பெற்றோர்களிடம், “எதற்காக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு நமக்கு பரிசுகள் வருவதில்லை?” என்று கேட்கும் போது பெற்றோர்கள், “நமக்கும் வரும். ஆனால் ஒரு நாள் இல்லை, நாம் ஐந்து நாட்களுக்கு சொந்தங்கள் பந்தங்களுடன் பரிசுகளை பகிரலாம்,” என்று சொல்லலாம். இது பற்றி குருதேவா வழங்கும் குறிப்பு: §§

image§

குருதேவா ஒவ்வொரு மாதமும் தனது இந்துயிசம் டுடே பத்திரிகையின் பதிப்பிக்கும் குழுவுடன் கலந்துரையாடுவார். அவர் ஒரு வெளியீட்டாளராக, அந்த பத்திரிகையின் உள்ளடக்கத்திற்கு வழிகாட்டி, அதன் குறிக்கோள்களை வரையறுத்து, கொள்கையை நிர்ணயித்து விநியோக யுத்திகளில் உதவி செய்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

“அப்பா, நாம் ஏன் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில்லை?” இந்த கேள்வியை நாங்கள் சென்ற பல இந்துக்கள் வீடுகளில் கேட்டதால், பல சான்றோர்கள் மற்றும் பெரியோர்கள் ஒத்துழைப்புடன், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பதிலாக ஒன்று திட்டமிடப்பட்டது. ஆப்பிரிக்க-அமெரிக்க கருப்பர் சமுதாயம் 1966 ஆம் ஆண்டில் இருந்து, ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 26 முதல் ஜனவரி 1 வரை தங்கள் கலாச்சாரத்தை கௌரவிக்கும் வண்ணம் குவான்சா என்ற பண்டிகையை கொண்டாடுகின்றனர். நாம் உருவாக்கிய இந்த பஞ்ச கணபதி பண்டிகை, ஐந்து முகங்களை கொண்ட ஆனைமுக கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது ஆகும். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த பண்டிகையின் போது, குறிப்பாக குழந்தைகளுக்கு வீட்டில் அன்பளிப்புக்களும் இனிப்புக்களும் வழங்கப்படுகின்றன. மரத்தின் தேவை இருப்பதில்லை (சுற்றுச்சூழல் வல்லுனர்கள் இதை ஆதரிக்கிறார்கள்), மலர் வளையங்கள் அல்லது ஒரு சாந்தாவின் தேவை இருப்பது இல்லை. அந்த ஐந்து நாட்களிலும் விநாயகர் மகிழ்ச்சி மற்றும் வேடிக்கையை வழங்குகிறார். §§

இந்த பண்டிகையை வீட்டில் டிசம்பர் 21 முதல் 25 வரை கொண்டடியவர்கள், அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகையின் போது வெளியூர் பயணம், சுற்றுலா மற்றும் விருந்துகளுடன் சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் அலுவலக நண்பர்களுடன் வாழ்த்து அட்டைகள் மற்றும் அன்பளிப்புக்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு தட்டில் இனிப்புக்கள், பழங்கள் மற்றும் தூபம் ஆகியவற்றை பெரும்பாலும், குழந்தைகளே தயார் செய்து விநாயகருக்கு படைக்கிறார்கள். அவரை புகழ்ந்து சுலோகங்கள், பாடல்கள் மற்றும் பஜன்கள் நடக்கின்றன. பூஜைக்கு பிறகு, இனிப்புக்கள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. தினமும் குழந்தைகளுக்கு அன்பளிப்புக்கள் வழங்கப்படுகின்றன. ஐந்தாவது நாள் திறக்க வேண்டிய அந்த அன்பளிப்புக்களை, அவர்கள் பஞ்ச கணபதி முன்பாக வைக்கிறார்கள். பரிமாற்றிக் கொள்ளும் வாழ்ந்து அட்டைகளில், எப்போதும் இந்து ஞானம் அல்லது சாஸ்திரத்தில் இருந்து ஒரு செய்யுள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.§§

பலரை சென்றடைய அவர் மேற்கொண்ட முயற்சியின் மையமாக இந்துயிசம் டுடே வளர்ச்சி பெற்ற போது, பெரும்பாலும் மெதுவாக பேசப்பட்ட பிரச்சனைகளை தனது தலையங்கத்தில் குருதேவா கவனம் செலுத்தினார், மற்றும் வாழ்க்கை துணையின் சித்ரவதை, தற்கொலை, கூடா ஒழுக்கம், ஆபாச படங்கள், கலப்புத் திருமணங்கள், உடல் உறுப்பு மாற்றுதல் மற்றும் மனித குளோனிங் போன்ற விஷயங்களை தார்மீக முறையில் எதிர்கொள்ள நவீன இந்துவிற்கு வழிகாட்ட தனது இதழை பயன்படுத்திக் கொண்டார். அவர் மனித குளோனிங் பற்றி தனது பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் காரணமாக, அந்த பிரச்சனைக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, மனித குளோனிங் பற்றிய இந்து கண்ணோட்டத்தை தெரிவிக்க வேண்டும் என்று அதிபர் கிளின்டனின் ப்ளூ ரிப்பன் கமிட்டி குருதேவாவிற்கு அழைப்பு விடுத்தது. பல வருடங்கள் கழித்து, தங்களது இந்து நோயாளிகள் மீது அமெரிக்க மருத்துவர்கள் முறையாக கவனம் செலுத்துவதற்கு வழிகாட்டியாக, தங்களது புத்தகத்தில் மருத்துவ நெறிமுறைகளை குறிப்பிட்டு ஒரு அத்தியாயம் எழுத வேண்டும் என்று டெக்சாஸ் மெடிகல் அசோசியேஷன் அந்த பத்திரிகையிடம் கேட்டுக்கொண்டது. §§

இந்து சமயம் பற்றி கிறித்துவர்களுக்கு தெரிவிக்க, ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று தங்கள் பத்திரிகை ஆசிரியர்களை கிறிஸ்டியானிடி டுடே ஆசிரியர் அணுகிய போது, குருதேவா பெருமகிழ்ச்சி அடைந்தார். தங்களது மதங்களை பற்றி நன்றாக புரிந்துகொள்ள கிறிஸ்டியானிடி டுடே பத்திரிகை இந்துயிசம் டுடே பத்திரிகையுடன் இணைந்து செயல்படுவதை அவர் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. அந்த கட்டுரை எழுதப்பட்ட போது, அவர் தனது நுணுக்கமான வழிகாட்டலை வழங்கினார். அவர் அந்த கட்டுரைக்கு மட்டுமல்லாமல், பெரும்பாலும் ஒவ்வொரு கட்டுரை எழுதப்படும் போதும், தனது துறவிகளுடன் அடிக்கடி விரிவான விவாதங்களை நடத்தி வந்தார். §§

1996 ஆம் ஆண்டின் இறுதியில், அவர் ஒரு செய்தித்தாள் வடிவில் இருந்த இந்துயிசம் டுடே பத்திரிகையை மாத இதழாக மாற்றினார். அது உலகின் மூலை முடுக்குகளை சென்றடைந்து, இந்து சமூகங்கள் மீது வலுவான தாக்கத்தை ஏற்படுத்த அவர் மேற்கொண்ட பணியில் ஒரு மாபெரும் முன்னேற்றமாக இருந்தது. இந்த விசேஷமான இதழ் தொடங்கப்பட்ட குறிக்கோளை பற்றி, 1999 ஆம் ஆண்டு அவர் வழங்கிய விளக்கம்:§§

ஒவ்வொருவருக்கும் உதவி செய்வதற்கு, ஒவ்வொரு பிரிவிற்கும் ஆதரவு தெரிவிப்பதற்கு ஒரு இதழை தொடங்கவேண்டும் என்று யார் சிந்திப்பார்கள்? இது நாங்கள் வழங்கும் சமூக சேவை என்று மக்கள் உணரும் வரை, இது நீண்டகாலமாக பலருக்கு ஒரு மர்மமாகவே இருந்துள்ளது. தாங்கள் லௌகீக உலகில் இருந்து தனித்து வாழ அனுமதி வழங்கப்பட்டதற்கு பரோபகாரமாக பல மடங்கள் ஏழை, அனாதைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு உணவு வழங்கும் மையங்களை தொடங்கியுள்ளனர். 21 ஆம் நூற்றாண்டில் தைரியமாக அடியெடுத்து வைக்கும் போது, எங்களது இந்துயிசம் டுடே ஒரு அத்தியாவசிய சேவையாக விளங்குகிறது. §§