குருமார்களின் சரித்திரங்கள்

Page 41: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/41_guru06_04.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

அத்தியாயம் இருபத்தி-ஆறு §

இந்து சமயத்தை வலுவாக ஆதரித்தல் §

ரு பிரபஞ்ச நாடகத்தில் கண்ணுக்கு தெரியாத சக்தி காட்சிகளை மாற்றி அமைப்பதை போல, குருதேவாவின் சமயப்பணி அமெரிக்கா கரைகளை கடந்து வலுவாக விரிவாக்கம் பெறுவதற்கு, 1980 களின் தொடக்கத்தில் வாய்ப்புக்கள் வரத் தொடங்கின. அவர் தொடக்கத்தில் ஒரு முறை இரண்டு சுவாமிகளுடன் மலேசியா சென்று வந்த பிறகு, கோலாலம்பூரில் வசித்து அவரிடம் மாஸ்டர் கோர்ஸ் படித்த சுமார் இருபது மாணவர்களின் குழு, அவர் தங்கள் நாட்டிற்கு மீண்டும் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மலேசியா, இலங்கை மற்றும் இந்தியாவிற்கு 1981 ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்திய யாத்திரையின் அங்கமாக இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. குருதேவாவுடன் இன்னர்சர்ச் குழுவினர்களாக சென்ற முப்பத்தி இரண்டு சீடர்கள், மலேசியாவில் நடந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு சாட்சிகளாக விளங்கினார்கள். சுமார் இருபது மில்லயன் இசுலாமியர்களுக்கு மத்தியில், தீவிரமாக ஆன்மீக வழிகாட்டலை நாடிய ஒரு மில்லியனுக்கும் மேலான இந்துக்கள் வாழ்ந்த நாட்டிற்கு ஒரு அமெரிக்க குரு அறிமுகப்படுத்தப்பட்டார். §§

கோலாலம்பூரை சுற்றி இருந்த டஜன் கணக்கான கோயில்களில் அந்த நாட்டின் இந்து தலைவர்களை சந்தித்து, பல ஆயிரக்கணக்கான இந்துக்களுடன் பேசிய இந்த குருதேவாவின் பயணம் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டது. மலேசிய இந்துக்களில் பெரும்பாலானோர் பின்பற்றிய சைவ சமயத்தின சைவ சித்தாந்தத்தை குருதேவா வெளிப்படுத்திய முறையும், மேற்கத்திய நாடுகளில் அவர் பிறந்து இருந்ததாலும், அந்நாட்டு மக்களுக்கு அவரை புரிந்துகொள்வது மிகவும் எளிமையாக இருந்தது. அது குறிப்பாக அந்நாட்டு இளைஞர்களை உற்சாகப்படுத்தி, ஒரு ஒடுங்கிய நிலையில் இருந்து அவர்களை விழிக்க செய்து, சைவ சமயம் அவர்கள் நாட்டில் அடுத்த சில வருடங்களில் வளர்ச்சி பெறுவதற்கு உதவியாக ஒரு ஆன்மீக கூட்டுறவுக்குள் அவர்களை ஒன்று சேர்த்தது. அதற்கு அடுத்த சில வருடங்களுக்கு, அவர்களது ஆன்மீக முன்னேற்றத்தை தனிப்பட்ட முறையில் இயக்கும் பொருட்டு, குருதேவா மீண்டும் மீண்டும் அந்த நாட்டிற்கு வந்து கொண்டிருந்தார். §§

குருதேவா சென்ற இடமெல்லாம், உள்ளூர் சமய குழுக்கள் மற்றும் சமூகங்களிடம் இருந்து நல்ல வரவேற்பையும் மரியாதையையும் பெற்றார். அவர் பொதுமக்கள் கூட்டங்களில், உற்சாகமாக கூடியிருந்த மக்களுக்கு காடேகிசம் மற்றும் கிரீட் தலைப்புக்களில் இருந்த தனது படைப்புக்களை அறிமுகப்படுத்துவார். அவர் சைவ சமயத்தை பற்றி பெருமையாக பேசி, அவர்கள் பூமியின் மாபெரும் சமயத்தின் வாரிசுகளாக இருந்ததாகவும், அவர்கள் தங்களது மூதாதையர் நம்பிக்கையின் மதிப்பை குறைத்து சிறுமைபடுத்தும் ஒரு வித்தியாசமான சூழ்நிலைக்கு பழகி விட்டதாகவும் கூறினார். உயரமாக, சிங்கத்தைப் போல, பழுப்பு நிற கண்களுடன் கையால் நெய்த சுவாமியின் ஆடையை உடுத்தியிருந்த ஒரு அமெரிக்க குரு, தங்கள் சமயத்தை பற்றி பெருமையாக நினைத்து, அதன் நற்பண்புகளைப் பற்றி தங்கள் வீட்டு மாடியில் இருந்து உரக்க (கத்தவேண்டும் என்று கூறாமல்) கத்தலாம் என்று கூறினார். குருதேவா பொதுக்கூட்டங்களில் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நம்பிக்கையையும், அவர்களுக்கு அவர்களை பற்றி ஒரு புதிய கண்ணோட்டத்தையும், அந்த கண்ணோட்டத்தை வெளிப்படுத்த புதிய தைரியத்தையும் வழங்கினார். §§

இது இசுலாமிய மற்றும் கிறுத்துவ கட்டுப்பாட்டில் வாழ்ந்த மலேசியர்களுக்கு திடுக்கிடும் செய்தியாக இருந்ததா என்பது புரிந்துகொள்வது கடினமாக இருந்தது, ஆனால் அவர்கள் அவர் சொல்ல வந்த கருத்தை புரிந்துக்கொண்டார்கள் மற்றும் அவர்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் தங்களை சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றிக்கொண்டார்கள். §§

image§

குருதேவா மீண்டும் மீண்டும் இந்தியா, இலங்கை மற்றும் மலேசியா பயணம் செய்து, அங்கிருந்த நூற்றுக்கணக்கான கோயில்களில் வெளிப்படையான பிரசங்கங்களை வழங்கினார். அவர் சைவர்களுக்கு வழங்கிய ஒவ்வொரு உரையிலும், அவர்கள் தங்கள் புராதன கடவுள் நம்பிக்கையை தேடிக்கொண்டு, எதிர்ப்பை வலுவாக எதிர்கொண்டு, முக்தியை நோக்கி செல்லும் சிவனின் பாதையின் ஆழத்தை உணர்வதற்கு அழைப்பு விடுத்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

1981, 1982 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில், குருதேவா தொடர்ச்சியாக இந்தியா, இலங்கை மற்றும் மலேசியா நாடுகளுக்கு மேற்கொண்ட யாத்திரைகளின் போது, ஒவ்வொரு மேடையிலும் “உலகின் மாபெரும் சமயமாக இந்து சமயம் விளங்குகிறது!” என்று கர்ஜித்தார். அவர் அரங்கில் கைதட்டி ஆரவாரம் செய்த மக்களிடம், “இந்து சமயத்தில் வலுவாக நிலைத்து இருங்கள்! ஒரு இந்துவாக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்!” என்று உத்தரவிட்டார். அவர் தான் மேற்கொண்ட ஒவ்வொரு யாத்திரையின் போதும் கோயில்கள், ஆசிரமங்கள் மற்றும் மண்டபங்களில் நின்றுக்கொண்டு இருந்த மக்கள் கூட்டத்தில் பேசுவதற்கு ஒரு குறிப்பிட்ட தகவலுடன் செல்வார். அது “இந்துக்களை இந்து சமயத்திற்கு மதம் மாற்றம்" செய்யும் பணியாக, குருதேவாவின் ஆன்மீக சகோதரனாகவும் இந்து சமய மறுமலர்ச்சியில் சக பணியாளராகவும் இருந்த சுவாமி சின்மயானந்தா, தனது சொந்த குறிக்கோள்களை விளக்கிய வண்ணம் அமைந்து இருந்தது. §§

ஒரு இந்து சமய மறுமலர்ச்சி §

வரலாற்றை திருப்பிப் பார்க்கும் போது 1800 களில், ஆர்ய சமாஜை தொடங்கிய தயானந்த சரஸ்வதி, இராம கிருஷ்ணா மிஷனை தொடங்கிய இராமகிருஷ்ணர் மற்றும் அவரது சீடர் விவேகானந்தர்; குருதேவாவின் நாதபரம்பரையை சேர்ந்த யாழ்ப்பாணத்தின் கடையிற்சுவாமி ; ராதாசுவாமி வைஷ்ணவ பிரிவின் சிவதயால்; யாழ்ப்பாணத்தின் ஆறுமுக நாவலர் மற்றும் தமிழ்நாட்டின் இராமலிங்க அடிகளின் பணிகளுடன் இந்து சமய மறுமலர்ச்சி தொடங்கியது. இந்த பணியில் மகாத்மா காந்திக்கு தனது சமூக சீர்திருத்த சிந்தனையால் ஊக்கத்தை வழங்கிய ஏக்நாத் ரானடே; மனித உணர்வின் வளர்ச்சியை மேம்படுத்த விரும்பிய ஶ்ரீ ஆரோபிந்தோ; அமெரிக்காவில் அதிகமாக உரை நிகழ்த்திய சுவாமி ராம தீர்த்தா, சாது வாஸ்வாணி மற்றும் இரமணமகரிஷி மற்றும் பலரும் இடம்பெற்று இருந்தனர். அவர்கள் பல நூற்றாண்டுகளாக ஓடுங்கி இருந்த இந்து சமயத்தை, நவீன யுகத்தில் அதற்கு பொருத்தமான இடத்திற்கு கொண்டு வர தங்களை அர்பணித்துக் கொண்டார்கள். §§

இந்த மகான்கள் மற்றும் அவர்களுக்கு பின்னர் வந்த சிலர் பல முன்னேற்றங்களை செய்து இருந்தாலும், 1980 களில் ஒரு உண்மையான இந்து மறுமலர்ச்சிக்கு தீவிர தடைகள் மீதம் இருந்தன. “மூளை வடிகால்" (brain drain) மூலம் இந்தியாவில் அறிவுக்கூர்மையுடன் தங்கள் துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்த போது, அமெரிக்காவில் அறிவுக்கூர்மையுடன் சிறந்து விளங்கியவர்களில் ஒருவரான குருதேவா வேறு திசையில் பயணம் செய்து, உலகின் தலைசிறந்த இந்து சமயம் அவர்களிடம் இருப்பதாகவும், அதை பணத்தால் சம்பாதிக்க முடியாது என்றும் அவர் இந்தியர்களுக்கு நினைவூட்டினார். முதலில் பல இந்துக்கள் தங்களை இந்துக்களாக ஏற்றுக்கொள்ளாததால், அது மிகவும் கடினமான பணியாக இருந்தது. இலங்கையில் அவர் வழங்கிய உரையில், அவர் இந்த பிரச்சனையை விளக்கினார்:§§

“நீங்கள் இந்து சமயத்தை சேர்ந்தவரா?” என்று பல இந்துக்களிடம் கேட்டால், “இல்லை. நான் இந்து சமயத்தை பின்பற்றுவது இல்லை. நான் எந்த பிரிவையும் சாராமல், சமத்துவாதியாக, எல்லா மதங்களையும் பின்பற்றி, எல்லோரையும் போல இருக்கிறேன். தயவு செய்து என்னை தனிப்பட்ட முறையில் பிரித்து பார்க்கவேண்டாம்,” என்று அவர்களிடம் இருந்து பதில் வரும். இந்த பதில் ஒரு உறுதியான மனிதனிடம் இருந்து வருமா? இல்லை வராது. இதைப்போன்ற பதில்கள் பலவீனமான மனதை உடையவர்களிடம் இருந்து வரும். அவர்கள் பணத்திற்காகவும், சமூகத்திடம் அல்லது தங்களது புத்திசாலித்தனத்திற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், தங்களது புனிதமான சொந்த பாரம்பரியத்தை கைவிடுகிறார்கள். அவர்களது சமய நம்பிக்கை எவ்வளவு தவறானதாக மேலோட்டமாக இருக்கிறது என்பதை பாருங்கள்! “இந்து சமயத்தில் வலுவாக நிலைத்து இருங்கள். அவ்வாறு நிலைத்து இருந்தால், நீங்கள் சுயமாக வலிமையை பெறுவீர்கள்,” என்ற அறிவிப்பு எல்லோரும் கேட்கும் படியாக வலுவாக பரவ வேண்டும். §§

இந்து என்ற தனது தனித்தன்மையை மறைத்து இருப்பதைப் போலவே, “எல்லா மதங்களும் ஒன்று" என்ற பிரபலமான கருத்தும் இருக்கிறது. எல்லா மதங்களும் ஒன்றாக கருதப்பட்டு, எந்த மதத்தை பின்பற்றுகிறோம் என்பது முக்கியம் இல்லாமல் இருந்ததால், இந்துக்கள் தாங்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்று கோரிக்கொள்ளும் தேவை மறைந்து விட்டது. இந்து சமத்துவவாதம் தலைவிரித்து ஆடியது, மற்றும் பாரம்பரிய இந்து சமயம் தேவையில்லாமல் குறுகிய பாதையாக இருக்கிறது என்று நிராகரிக்க, அந்த சமயத்தை சார்ந்தவர்கள் தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டார்கள். மேலும் இந்து சமயம் ஒரு மதமாக இல்லாமல் அதிகம் வாழ்முறை சார்ந்ததாக இருக்கிறது என்று அவர்கள் வாதாடினார்கள். இதற்கு எதிராக குருதேவா வழங்கிய கருத்து:§§

எல்லா மதங்களும் ஒன்றல்ல. அவை அதிக வேறுபாடுகளுடன் இருக்கின்றன. அவை அனைத்தும் கடவுளை பற்றி விவாதிக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அவை அனைத்தும் அதை பின்பற்றுபவர்களை ஒரே ஆன்மீக குறிக்கோளை நோக்கி வழிநடத்தி செல்வது இல்லை. தங்களுக்குள் இருக்கும் இறைவனை கிறுத்துவர்கள் நாடுவது இல்லை. அவர்கள் இறைவன் எங்கும் வியாபித்து இருப்பதாக கருதுவது இல்லை. பல பிறவிகள் இருப்பதையோ அல்லது கர்மவினை இருப்பதையோ யூதர்கள், கிறுத்துவர்கள் மற்றும் இசுலாமியர்கள் நம்புவது இல்லை. அவர்கள் இந்த நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அவை தங்களது மதக்கோட்பாடுகளுக்கு எதிரானதாக கருதினார்கள்.§§

அவர் அப்போதிருந்த வழக்கத்திற்கு மாறாக மதத்தில் அதிக பற்றுடன் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் சைவம், வைணவம், சாக்தம் மற்றும் ஸ்மார்த்தம் என்று இந்து சமயத்தின் தலைசிறந்த பாரம்பரியங்கள் ஒவ்வொன்றையும் தக்கவைத்து, அதன் விசேஷமான அம்சங்களுக்கு மதிப்பு அளித்து, அவற்றை பற்றிய போதனைகளையும் வழங்கினார். இந்து சமயத்தின முக்கிய சக்திகளாக இருக்கும் தனிப்பட்ட சம்பிரதாயங்கள், ஆன்மீகத்தை கற்பிக்கும் பாரம்பரியங்கள் ஆகியவை, சிலர் பரிந்துரைக்கும் வலிமை குறைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட இந்து சமயத்தால் நிலை நிறுத்த முடியாது என்று அவர் எச்சரித்தார். §§

“ஒரு அருவருப்பான வார்த்தையாக இருந்த இந்து சமயத்தை காப்பாற்றி, அதை அதன் பழங்கால புகழுக்கு மீண்டும் நிலை நிறுத்தியதில், குருதேவா மிகப்பெரிய பங்கு வகித்துள்ளார். அவர் இந்துக்கள் அனைவரும் தங்களை உலகின் முக்கிய சமூகத்தை சார்ந்தவர்களாக, மிகப்பெரிய நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் வாரிசுகளாக உணர்வதற்கு துணை புரிந்தார்,” என்று இந்தியாவின் முன்னணி சிந்தனையாளர்களின் ஒருவரான சீதாராம் கோயல் எழுதினார். இந்தியாவின் பிரம்ம வித்யா ஆசிரமத்தின் சுவாமி அத்வைதானந்தா வழங்கிய கருத்து: “தங்களை இந்துக்களாக அழைக்கப்படுவதையே அவமானமாக கருதும் இந்நாளில், குருதேவா என்று அவரை அழைக்கும் பல லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமையை வழங்கி, அவர்கள் உள்ளத்தில் சமய நம்பிக்கையை தூண்டி விடுவதற்கு அவரது போதனைகள் மற்றும் சமயப்பணிகள் முக்கிய காரணமாக இருந்துள்ளன.” §§

குருதேவா சைவ சமயத்தவர்களிடம் பேசும் போது, அவர் அவர்களது சமயப்பிரிவின் மகிமையை புகழ்ந்துரைத்து, சைவ சமயத்தை புதிய யுகத்தின் மதமாக அறிவித்தார்: §§

நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு மற்றும் நாம் தொழில்நுட்ப யுகத்தில் அடியெடுத்து வைப்பதற்கு, நாம் நமது சமயம் மற்றும் கலாச்சாரத்தை துறக்க வேண்டும் என்று இலங்கை மற்றும் இந்தியாவில் சில தவறான கருத்து நிலவுகிறது. இது ஒரு தவறான கோட்பாடு ஆகும். சமயம் எப்போதும் தொழில்நுட்பத்திற்கு முரணாக இருந்தது இல்லை. அது அதை வலுப்படுத்தி, அதற்கு ஸ்திரத்தன்மையையும் நோக்கத்தையும் வழங்குகிறது. சைவ சமயம் முக்கியமான இந்த யுகத்திற்கு, மிகவும் பொருத்தமான ஒரு சமயமாக பூமியில் விளங்குகிறது என்ற உண்மையை நமது மத போதகர்கள் கற்பிக்க தொடங்கி இருக்கிறார்கள். இது நவீன அறிவியலின் மிகவும் உயர்வான அனுமானக் கோட்பாடுகளுடன் முழுமையாக பொருந்தி இருந்தாலும், அதுவே தனிப்பட்ட முறையில் அதிக உயர்வான நிலையிலும் இருக்கிறது. §§

மலேசியா, இந்தியா மற்றும் இலங்கை முழுவதும் இருந்த புகழ்பெற்ற கோயில்களில், மண்டபங்களில் மற்றும் கிராமப்புற மேடைகளில் வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிகளில் குருதேவா பேசும் போது, அவர் தனது சைவ சமய சகாக்கள் முயற்சிகளை மேற்கொள்ள தூண்டிவிட்டார். இந்த பயணத்திற்கு செய்தித்தாள்கள் விரிவான அறிக்கைகளை வெளியிட்டன, மற்றும் ஆல் இந்தியா ரேடியோவின் தென் இந்திய பிரிவில், அவரது உரைகளின் ஒலிப்பதிவு ஒரு வானொலி நிகழ்ச்சியாக ஒலிபரப்பப்பட்டது. §§

கிறுத்தவ ஊடுருவலை எப்படி தடுப்பது? §

இந்திய மக்கள் தொகையில் வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே கிறுத்துவர்களாக இருந்தாலும், ஆங்கிலேயர்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறி இருந்தாலும், இந்தியாவில் பரவிய கிறுத்துவ மதத்தின் தாக்கம் குருதேவாவை வியக்க வைத்தது. இந்தியாவில் கிறுத்துவ பள்ளிகளில் படித்தவர்கள், ஒரு வெளிநாட்டு சமயத்தை பரிந்துரைத்த கன்னியாஸ்திரிகள் மற்றும் ஆசிரியர்களிடம் பல வருடங்கள் படித்ததால் அவர்களது சமய உணர்வின் அடிப்படை தகர்ந்து, அவர்கள் பலவீனமான இந்துக்களாக மாறியதை குருதேவா கவனித்தார். கொழும்பில் குருதேவாவிடம் ஒரு கத்தோலிக்க பாதிரியார், “எனது பள்ளியில் இருந்து தேர்ச்சி பெறும் இந்து குழந்தைகள் கத்தோலிக்கர்களாக மாறாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் நிச்சயமாக நல்ல இந்துக்களாக இருக்க மாட்டார்கள்,” என்று வெளிப்படையாக கூறினார். §§

குருதேவா கிறுத்துவ மதம் அல்லது வேறு எந்த மதத்திற்கும் எதிராக இருந்தது இல்லை. அவர் கிறுத்துவ பெரும்பான்மை இருந்த நாட்டில் இருந்து வந்தவர். அமெரிக்காவில் சமயப்பணிகளில் இருந்த வருடங்களில், அவர் மிகவும் அபூர்வமாக கிறுத்துவ தலையீட்டை எதிர்கொண்டார். அவர் தனது இளமை பருவத்தில் பெளத்தர்கள், இசுலாமியர்கள் மற்றும் கிறுத்துவர்கள் என்று பல்வேறு சமயத்தை சேர்ந்த வலுவான ஆன்மீக ஆசிரியர்களிடம் பயின்றார். அவர் ஒவ்வொரு மதத்திலும் இருந்த சிறப்பான அம்சங்களை அறிந்து இருந்தார். §§

கிறுத்துவ பள்ளிகள் மோசமாக இருப்பதை அவர் அறிந்து இருந்தாலும், வஞ்சனையால் கவர்ந்து இழுத்து நிர்பந்திக்கும் கிறுத்துவ மத பிரச்சாரகர்களின் நடவடிக்கைகள், அவரை ஆத்திரமூட்டியது. அவர் கிறுத்துவ சமயத்தின் தவறான வழிகளை எங்கே கவனித்தாலும் அதை எதிர்த்தார் மற்றும் உலகெங்கும் இருக்கும் இந்துக்களிடம் அவர்கள் தங்கள் சமய உரிமைகளை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். “யானைப்பாகன் ஒரு இளம்வயது யானையை ஒரு சிறிய கைத்தடியை பயன்படுத்தி கட்டுப்படுத்துகிறார். ஆனால் அந்த யானை முதிர்ந்து பெரிய உருவத்தை பெற்றதும், அதனால் அந்த கைத்தடி மற்றும் அந்த யானைப் பாகனையும் தூக்கி எரியமுடியும் என்றாலும், அது அந்த கைத்தடியை பார்த்தால் பயப்படுகிறது,” என்று அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பார். §§

குருதேவா அதே உளவியலை பயன்படுத்தி, இந்துக்கள் கிறுத்துவ ஆட்சி இருந்த காலத்தில் சாதுவாக அடிபணிந்து நடக்க ஆரம்பித்தார்கள் மற்றும் கிறுத்துவ அநீதிக்கு முதன்மையான காரணமாக விளங்கிய அரசியல் சக்தி நாட்டை விட்டு கிளம்பி இருந்தாலும், அந்த அநீதியின் தொடர்ச்சிக்கு எதிராக தீவிரமான எதிர்ப்பு தெரிவிக்க விருப்பமில்லாமல் இருக்கிறார்கள் என்று கூறினார். அவர் கிறுத்துவர்களை தாக்கவேண்டும் என்று அறிவுறுத்தவில்லை, ஆனால் அவர்களிடம் இருந்து விலகி அவர்களை புறக்கணிக்க வேண்டும் என்று கூறினார். கிறுத்துவ பள்ளிகளில் இருந்து தங்கள் குழந்தைகளை வெளியேற்ற வேண்டும் என்று அவர் ஆயிரக்கணக்கான இந்துக்களிடம் கூறியதோடு, மதமாற்றம் செய்யும் நோக்கத்துடன், கிறுத்துவ மத பிரச்சாரகர்கள் அவர்கள் வீடுகளுக்கு வரும் போது அவர்கள் தங்கள் வீட்டு கதவை மூடி விடவேண்டும் என்றும் கூறினார். §§

ஒரு மத பிரச்சாரகர் உங்கள் வீடு வரும் போது, இதை தவறாமல் செய்யுங்கள். அவரை “நமஸ்தே" சொல்லி வரவேற்று, உங்களுக்கு எந்த ஒரு சொந்தமான ஒரு காடேகிசம் (சமய கேள்வி பதில்) இருக்கிறது என்றும், எங்கள் சமயத்தில க்ரீட் என்ற பன்னிரண்டு சுருக்கமான நம்பிக்கைகள மற்றும் அந்த நம்பிக்கைகளின் சாரத்தை உள்ளடக்கிய ஒரு கூட்டு சொற்றொடரும் உள்ளது என்று அவர்களிடம் சொல்லுங்கள். எங்கள் சைவ இந்து சமயத்திற்கு புனித நூல்களாக வேதங்கள், ஆகமங்கள், திருக்குறள் மற்றும் திருமந்திரம் மற்றும் மேலும் பல நூல்களும் இருக்கின்றன என்று சொல்லுங்கள். எங்களுக்கு சமயகுருமார்கள் இருக்கிறார்கள் மற்றும் எங்களுக்கென்று மிகவும் பழமையான ஒரு பாரம்பரியம் இருக்கிறது. எங்களுக்கென்று புனிதமான கோயில்கள் மற்றும் மகாதேவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் மகாதேவர்கள் மற்றும் தேவர்களை வழிபடுவதில் பெருமை அடைகிறோம். எங்களிடம் இதுவும் மேலும் பல சிறப்பு அம்சங்களும் உள்ளன. மிக்க நன்றி என்று சொல்லி உங்கள் வீட்டு கதவை மூடி விடுங்கள்!§§

கூடியிருந்த மக்கள் கூட்டத்திற்கு முன்பாக குருதேவா தனது உரையின் ஒவ்வொரு பாகத்தை பேசி முடித்ததும், பல பகுதிகளாக இருந்த அவரது சிந்தனைகளை அறிந்துகொண்ட ஆங்கிலம் சரளமாக பேசத் தெரிந்தவர்கள் மத்தியில், அந்த உரையை அங்கீகரிக்கும் வகையில் ஒரு மென்மையான சலசலப்பு ஏற்படும். அதன் பிறகு ஒரு மொழபெயர்ப்பாளர் ஒலிபெருக்கி முன்பாக வந்து, அவர் பேசியது அனைத்தையும் மீண்டும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து முடித்ததும், பொதுமக்கள் கூட்டத்தில் என்றுமே எதிர்த்து பேசப்படாமல் பெரும்பாலும் முணுமுணுக்கப்பட்ட, மதமாற்றம் மற்றும் இந்துக்களுக்கு எதிரான பிரசாரங்களை பற்றி தைரியமாக மற்றும் சரளமாக பேசிய ஒரு ஆன்மீக தலைவர் இருப்பதை உணர்ந்த மக்கள் கூட்டத்தின் பாராட்டு மழை மற்றும் மகிழ்ச்சியான கரகோஷ ஒலி, அந்த கோயில் அல்லது மண்டபங்களில் நிரம்பியது. §§

அவர் வழங்கிய அறிவுரையை பின்பற்றும் தைரியம் சிலருக்கே இருந்தது. அவர் சொல்வதை புரிந்துகொள்ள முடியாமல் அல்லது தங்கள் சொந்த மண்ணில் ஒரு வெளிநாட்டவர் ஊடுருவதாக நினைத்த சிலர், அவரை எதிர்த்தனர். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற அலாஸ்கா இன்னரசர்ச் திட்டத்தின் போது, அவர் ஒரு சுற்றுலா கப்பலில் தனது துறவிகளிடம் இந்த காலத்தை பற்றி நினைவுக் கூர்ந்தார்: “அவர்களும் நாமும் ஒன்று. நாம் அவர்களுடன் சண்டையிடவில்லை, ஆனால் நாம் எல்லோரும் ஒன்றாக, இந்து சமயத்தின் மேம்பாட்டிற்கு முயற்சி செய்து வருகிறோம் என்பதை அவர்கள் தெரிந்துக் கொள்ளட்டும்.” அவர்கள் காலப்போக்கில் குருதேவாவை புரிந்துக்கொண்டதால், அவர் பரிகாசமாக, “நான் எனது எதிரிகளை அதிகம் ஏமாற்றி விட்டேன். என் மீது யாராலும் அதிக நாட்கள் கோபத்துடன் இருக்க முடியாது,” என்று கூறினார். §§

மலேசியா, இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்த சைவர்களுக்கு குருதேவா வழங்கிய மறுமலர்ச்சி செய்தியில் இந்து சமயத்தின் பெருமை, பொது வாழ்க்கையில் ஒரு தெளிவான சமய அடையாளம், சமயம் தொடர்பாக சரியான புரிதல், சாஸ்திரத்திற்கு மற்றும் மதகுருக்களுக்கு மரியாதை செலுத்துதல், வீட்டில் வழிபாடு, மதமாற்றத்தை எதிர்த்தல், பாரம்பரியங்களை பராமரித்தல், இணக்கத்துடன் செயல்படுதல், மதங்களிடையே ஒற்றுமை, அன்பின் வடிவமாக சிவபெருமான் மற்றும் உலகில் நவீன தொழில்நுட்ப யுகத்திற்கு மிகவும் பொருத்தமான மதமாக இருக்கும் இந்து சமயம் என்று பல தகவல்கள் அடங்கிய இருந்தன. அவர் இந்துக்களைப் பற்றி, ஒரே மாதிரியாக இந்துக்களிடமும் மற்ற மதத்தவர்களிடமும் நிலவிய, மர்மங்கள் மற்றும் தவறான கருத்துக்களை அகற்றினார். அவர் வலுவான பாசம் நிறைந்த இந்து வீட்டை பரிந்துரைத்து, தாய்மார்கள் வேலை செய்யாமல் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் கசையடி மற்றும் தடியடி மூலம் குழந்தைகளுக்கு தண்டனை வழங்கக்கூடாது என்றும் பரிந்துரைத்தார். அவர் இந்த தகவலை தெளிவாக, தைரியமாக, அன்பாக நகைச்சுவையுடன் வழங்கினார் மற்றும் நமது இந்து உலகிற்கு அவர் அளித்த புதிய விளக்கத்தின் மூலம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார். அந்த உரைகளில் இருந்து ஒரு பகுதியை இங்கே காணலாம்:§§

இந்த அழகான இலங்கை தீவில் இன்று இரவு பேசப்பட்ட இந்து சமயத்தின் அருமையான அம்சங்களை நினைத்து பார்க்கும் போது, இந்த பூமியில் எதிர்கால சந்ததியர்களுக்கு இந்து சமயம் ஒரு தீர்வாக விளங்குவது தெளிவாகிறது. அது புது யுகம், சத் யுகத்தின் தொடக்கத்திற்கு தீர்வாக விளங்குகிறது. தெய்வீக அருளை பெற்று நமது மாபெரும் மதமாக விளங்கும் சனாதன தர்மம் எல்லா தீர்வுகளையும் கொண்டுள்ளது. அது எல்லா யுகத்திலும் நிலைத்து இருந்துள்ளதால், அது ஒவ்வொரு யுகத்திற்கும் தேவையான தீர்வுகள் அனைத்தையும் எப்போதும் கொண்டுள்ளது. தங்கள் இந்து பாரம்பரியத்தை மறுப்பதற்கு, இந்து சமயத்தில் தங்கள் நம்பிக்கையை அல்லது நான் ஒரு இந்து என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள தயங்குவதற்கான நேரம் பலருக்கு முடிந்து விட்டது மற்றும் எல்லோருக்கும் விரைவில் முடியவிருக்கிறது. எல்லா இனங்கள், எல்லா நாடுகள், எல்லா கலாச்சாரங்கள் மற்றும் எல்லா பிரிவுகளை சேர்ந்த இந்துக்களும் எழுந்து நின்று, தாங்கள் தீவிரமாக பின்பற்றும் மாபெரும் சமயத்தைப் பற்றி உலகம் தெரிந்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்களுக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன்னம்பிக்கையுடன் முன்னேறுங்கள். இந்து சமயத்திற்கு வலுவாக நிலைத்து இருங்கள். §§

இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அத்வைத உண்மைகளை கற்றுத்தந்ததன் மூலம் தனது நாட்டு மக்களுக்கு தான் ஆற்றவேண்டிய கடமையை நிறைவு செய்து விட்டதாகவும், உலகின் மிகவும் பழமையான மதத்தின் கடினமான சூழ்நிலைகளுக்குள் தன்னை பின்தொடர்ந்து வர விரும்பும் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் அல்லாத மற்றவர்கள் மீதும், இனி அவர் கவனம் செலுத்தப்போவதாகவும் குருதேவா அறிவித்து நான்கு வருடங்கள் நிறைவடைந்து இருந்தன. அவர் தென் இந்தியா மற்றும் இலங்கையின் மேடைகளில் பேசும் போது, அவர் வீட்டு பூஜை அறைகளிலும் புதிதாக நிறுவப்பட்ட கோயில்களிலும் எதிர்கொண்ட விநோதமான சம்பவத்தை போன்று, தங்கள் பீடத்தில் மற்ற சமயத்து சிலைகளை வைத்து தங்கள் பழக்கத்தின் வலிமையை குறைக்க வேண்டாம் என்று அன்பர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். §§

உங்கள் மனம் மற்றும் உணர்ச்சியை கட்டுப்படுத்தி சிறிது அமைதியை மட்டும் நாடாமல், சிந்தனையின் ஆழம் வரை சென்று உண்மையில் தியானம் செய்வதற்கு, இறைவனுடன் அத்வைத ஐக்கியத்திற்கு நம்பிக்கை அளித்து, ஆத்ம ஞானம் பெறுவதற்காகவே மனிதனுக்குள் இறைவன் இருக்கிறான் என்று போதிக்கும் சமயத்தில் ஒருவர் உறுப்பினராக இருக்க வேண்டும். தியானம் ஞானத்திற்கு வழிநடத்தி செல்லவேண்டும் என்றால், அது இயல்பான தீய பண்புடன் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் தொடங்கி, நாம் செய்த செயல்களுக்கு நாமே பொறுப்பாகிறோம் என்ற கர்மவினையின் உண்மையை உள்ளடக்கி இருக்க வேண்டும். ஒருவர் அத்தகைய தியானத்தை மேற்கொள்ள, மறுபிறவி இருக்கிறது என்ற நம்பிக்கையை வழங்கி, தோல்வி ஏற்பட்டால் நிரந்தர வேதனைக்கு ஆளாக வேண்டும் என்று அச்சுறுத்தாத ஒரு சமயத்தில் உறுப்பினராக இருக்கவேண்டும். அத்தகைய தியானம் சாத்தியமாக இருப்பதுடன், இந்து தர்மத்தை பின்பற்றுவோருக்கு தேவையாகவும் இருக்கிறது. இதன் காரணமாகவே, அதிக பழமையான நமது சமயத்தின் உச்சநிலையாக யோகப்பயிற்சி விளங்குகிறது.§§

நீங்கள் நமது சைவ சமய சாஸ்திரங்கள் அனைத்தையும் வாசித்தீர்கள் என்றால், நமது மகான்கள் அடோனை-யாவே, புத்தர் அல்லது இயேசுவை புகழ்ந்து பாடுவது இல்லை என்பதை தெரிந்துகொள்வீர்கள். மகேஸ்வரனாக இருக்கும் சிவபெருமானை வழிபட வேண்டும் என்றும், சிவபெருமானை வழிபடுவதற்கு முன்பாக முதலில் விநாயகரை வழிபடவேண்டும் என்றும், முருகப்பெருமானை வழிபடவேண்டும் என்றும் நமது மகான்கள் நமக்கு அறிவுறுத்தினார்கள். பழங்காலத்தில் நேபாலின் இமயமலையில் தொடங்கி வட இந்தியா, தென் இந்தியா மற்றும் இலங்கை முழுவதும் மற்றும் தற்போதுள்ள மலேசியா மற்றும் இந்தோனேசியா வரை பல லட்சக்கணக்கான சிவன் கோயில்கள் இருந்தன. எல்லோரும் ஒரு மனதாக சிவபெருமானை வழிபட்டு, ஒன்றாக அவரது துதிப்பாடல்களை பாடினார்கள். இதன் காரணமாக, இந்தியா ஆன்மீக ரீதியாக ஒன்றுப்பட்டு இருந்தது. அது அன்று செல்வ செழிப்புமிக்க நாடாக இருந்தது. சிவனை வழிபடுவதால் நீங்கள் செல்வதையும், உடல்நலத்தையும், அறிவையும் பெறுகிறீர்கள். உங்கள் இதயத்தில் சிவ வழிபாடு பாசத்தையும் இரக்கத்தையும் நிரப்புகிறது. §§

சைவ சமயம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பழமையான சமயமாக விளங்குகிறது. சைவ சமயத்தில் யோகம், மிகப்பெரிய கோயில்கள், தலைசிறந்த பண்டிதர்கள், ரிஷிகள் மற்றும் சாஸ்திரங்கள் இருக்கின்றன. சிவபெருமானை போற்றி பாடிய மகான்கள் அனைவரும், நாம் எவ்வாறு சிவபெருமானை வழிபட வேண்டும் மற்றும் நாம் எவ்வாறு சைவ வாழ்கையை வாழவேண்டும் என்று வழங்கிய அறிவுறுத்தல்களை நாம் பின்பற்றி வாழ வேண்டும். சிவபெருமானை நினைத்து அந்த பாடல்களை பாடும் போது, அவர் நீங்கள் கேட்பது அனைத்தும் தருவார். சிவபெருமான் அன்பின் கடவுளாக இருப்பதால், அவர் நீங்கள் கேட்பது அனைத்தும் தருவார். சிவபெருமான் நமக்குள் இருப்பதாகவும், நாம் சிவபெருமானுக்குள் இருப்பதாகவும் நமது மகான்கள் பாடியுள்ளனர். இதை அறிந்ததும் நமது மனதில் இருந்து அச்சம், கவலை மற்றும் சந்தேகம் நிரந்தரமாக மறைகிறது.§§

மனம் தனக்குள் இருக்கும் வேற்றுமைகளுக்கு வழிபாடு, தவம், தாரனா, தியானம் மூலம் தீர்வு காணும் போது, உட்புறமாக இருக்கும் அமைதி தெரிய வருகிறது. அப்போது உட்புறம் வெளிப்புறத்தை காட்டிலும் வலுவாக இருக்கிறது. அப்போது எதிர்கொள்ளும் ஒவ்வொருவரும் தனது பாதையில் ஒரு குறிப்பிட்ட நிலையில் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துக் கொண்டிருப்பதை எளிதில் காணமுடியும். வேற்றுமைகள் இருக்கும், ஆனால் வேற்றுமைகள் எதுவும் தென்படாது. அதனால் தான் ஆன்மீக விரிவாக்கம் மூலம் விவேகத்தை பெற்றவர்கள், “உலகில் அநீதி என்று எதுவும் இல்லை. தீய பண்புடன் எதுவும் இல்லை. பாவம் என்று எதுவும் இல்லை,” என்று எளிதாக கூறு முடிகிறது. §§

நமது பார்வை வரையறுக்கப்பட்ட நிலையில் இருக்கும்போதும், நாம் அதை முழுமையாக அனுபவத்தை பெறாத போதும், வேற்றுமைகள் மட்டுமே நமக்கு தெரிகின்றன. எல்லா முரண்பாடுகளுக்கும் தீர்வு கண்டு, எல்லா கேள்விகளுக்கும் பதில் வழங்கும் ஒரு கண்ணோட்டம் இருக்கிறது. அனுபவிக்காமல் இருப்பது புரிந்துகொள்ளப்படாமல் இருக்கிறது. அனுபவித்து புரிந்துகொள்ளப்பட்டதும், அமைதி தோன்றுகிறது. கர்மவினைகள் அமைதியாக இருக்கின்றன. சரியை, கிரியை மற்றும் யோகத்தின் இந்த பாதையின் பலனாக ஞானம் கிடைக்கிறது. இது உயர்ந்த பண்புகளை விரிவாக்கம் செய்ய மேற்கொள்ளும் முயற்சியின் பாதையாக இருந்துக்கொண்டு, கீழ்நிலை பண்புகளின் மிச்சங்களை நேர்மறையாகவும் உணர்வுடனும் எதிர்கொள்ளும் பாதையாகவும் இருக்கிறது. நாம் இந்த பாதையை பின்பற்றும் போது, பேராசைக்கு பதிலாக தர்ம காரியங்களில் சுலபமாக நம்மை ஈடுபடுத்திக்கொண்டு பொறாமை, வெறுப்பு, ஆசை மற்றும் கோபத்தின் உள்ளுணர்வு உணர்வுகளை ஒடுக்காமல் எதிர்கொள்ளவும் செய்கிறோம். §§

தீட்சையின் முக்கியத்துவம்§

சைவ சமயத்திற்குள் ஆன்மாக்களை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும் என்று தான் வழங்கிய வலியுறுத்தலின் தொடர்ச்சியாக, குருதேவா சிதம்பரம் கோயிலின் ஆயிரம் கால் மண்டபத்தில் சைவ தீட்சை வழங்க ஏற்பாடு செய்து, சைவ சித்தாந்த தேவாலயத்தின் அங்கத்தினர்களாக பதினைந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தீட்சையை வழங்கினார். அவருக்கு முன்பிருந்த சைவ குருமார்கள் செய்து இருந்ததை போல, அவர் தீட்சைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். இது தொடர்பாக அவர் வழங்கும் குறிப்பு:§§

தீட்சை இந்துக்கள் அனைவருக்கும் குறிக்கோளாகவும், சைவ ஆன்மாக்கள் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமானதாகவும் விளங்குகிறது. அதனால் தான் அவர்கள் ஒரு குருவை நாடி, அவர் அங்கீகரித்த நன்மைகள் அனைத்தையும் தங்கள் வாழ்வில் வெளிப்படுத்துகிறார்கள். அதனால் தான் அவர்கள் குருவின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய தொடர்ந்து முயற்சி செய்வது மட்டுமல்லாமல், அவரது எதிர்பார்ப்பையும் மிஞ்சுகிறார்கள். ஒரு சற்குருவிடம் பெறும் தீட்சையை அழிக்க முடியாது, மாற்ற முடியாது, மற்றும் அதைப்பற்றி விவரிக்கும் முடியாது. இதன் காரணமாகத்தான், தீட்சை ஒரு மங்களகரமான நேரத்தில், ஒரு ஆன்மீக மனநிலையில் சிவபெருமானின் எங்கும் வியாபித்து இருக்கும் சக்தியில் கருத்தரிப்பில் தொடங்கி இந்த பிறவியில் வெளிப்படும் வரை ஆன்மா மேற்கொள்ளும் நீண்ட பயணத்தில் கர்மவினையின் சரியான தருணத்தில் தரப்படுகிறது. இந்த பிறவி அல்லது ஒரு வருங்கால பிறவியில், முக்தி அடையும் பாதையாக தீட்சை விளங்குகிறது. இதற்கு மாற்று வழியாக வேறு எதுவும் இல்லை. §§

தடைகளை விலக்குவதற்கு தீட்சை தூண்டுதலை வழங்குகிறது. இது சற்குருவின் ஆசியாகவும், மேலும் சாதனா செய்ய ஆன்மீக அனுமதியாகவும் விளங்குகிறது. தீட்சை பெறுவதை விதை விதைப்பதற்கு ஒப்பிடலாம். பலன் பெறுதல், வளர்ச்சி அடைதல் மற்றும் பக்குவமடையும் செய்முறை காலப்போக்கில் நடைபெறுகிறது மற்றும் அது இயல்பாக தீட்சையுடன் வழங்கப்பட்ட சாதனாவை செய்ய அல்லது வழங்கப்பட்ட பிராயச்சித்தத்தை நிறைவேற்ற, அந்த சாதனாவை செய்யவில்லை என்றால் அதை ஈடு செய்ய சீடன் மேற்கொள்ளும் தனிப்பட்ட முயற்சி மற்றும் அவரது நேர்மையை பொருத்து அமைகிறது. உன்னதமான கைலாச பரம்பரையை சேர்ந்த இந்து தேவாலயத்தின் மையமாக தீட்சை பெற்றவர்களின் தோழமை விளங்குகிறது. பல பிறவிகளாக தர்மத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்துள்ளதால், அவர்கள் உண்மையான விசுவாசிகளாக அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். §§

சமய தீட்சை எனப்படும் மந்திர தீட்சை, சைவ சமய தீட்சை அடிப்படையாக விளங்குகிறது, ஏனென்றால் அதன் விளைவாக அந்த சீடன் சற்குருவின் ஆன்மீக சக்தி மற்றும் அதிகாரத்தால், ஒரு குறிப்பிட்ட பரம்பரையுடன் ஒரு முறையான தொடர்பை பெறுகிறார். தீட்சை பெற்ற எல்லோரும் அறிவுப்பூரவமாக இல்லாமல் முன் உதாரணமாக இருந்து, புதியவர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள். தினசரி பூஜை, கோயில் வழிபாடு, திருவிழாக்களில் பங்குபெறுதல், தசமபாகம், சைவ உணவு, யாத்திரை, சாஸ்திரம் படித்தல், கங்கா சாதனா மற்றும் மேலும் பல செய்முறைகளின் மூலம் சுயமாக தங்களுக்குள் மாற்றம் ஏற்படுத்திக்கொள்வதைப் பற்றி புதிதாக தீட்சை பெற்றவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். சமய தீட்சை என்பது, கிரியை மார்கத்தில் நுழைந்து தினமும் ருத்திராட்ச ஜப மாலையில் “ஓம் நமச்சிவாய” என்ற பஞ்சாட்சர மந்திரத்தை குறைந்தது 108 முறை ஜபம் செய்வது உட்பட, சில சாதனாக்களை செய்ய ஆசியாகவும் அங்கீகாரமாகவும் விளங்குகிறது.§§

image§

குருவிடம் இருந்து சீடனுக்கு சக்தி வழங்கப்படும் சடங்காக விளங்கும் தீட்சையை விட முக்கியமானது எதுவும் இல்லை. இந்த சித்திரத்தில் ஒரு குரு இளம் சாதகர்களை நதிக்கரைக்கு அழைத்து வந்து, தனது இரு கைகளையும் ஒரு சாதகன் மீது வைத்துக்கொண்டு அவனுக்கு தனது ஆசிகளை வழங்குகிறார். வைதீக ஹோமம் நிறைவடைந்து விட்டது, மற்றும் சந்நியாச தீட்சைக்கு பிறகு புதிய சுவாமிக்கு வழங்கப்படும் காவித்துண்டு மற்றும் ருத்ராட்ச மாலையுடன் இரண்டு சீடர்கள் நின்றுக்கொண்டு இருக்கிறார்கள்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இந்த மந்திரம் மனதை அமைதிப்படுத்தி, நரம்பு மண்டலத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி, உள்ளிருந்து அறிவை வெளியே கொண்டுவந்து, சீடனுக்கு அவனது வாழ்க்கையின் குறிக்கோளையும், சிவபெருமானுடன் அவனது தொடர்பையும் நினைவூட்டுகிறது. நமச்சிவாயம் என்றால் “சிவபெருமானை போற்றுதல்" என்று பொருள். ஐந்து எழுத்துக்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளை உடையவை. சி என்பது சிவபெருமானையும், வா என்பது அவரது வெளிப்படுத்தும் சக்தியையும், யா என்பது ஆன்மாவையும், என்பது அவரது மறைக்கும் சக்தியையும், என்பது உலகையும் குறிப்பிடுகின்றன. நமச்சிவாய என்பது யோகத்தின் நுழைவாயிலாக விளங்குகிறது. நமச்சிவாயத்தின் மறைபொருள் என்னவென்றால், அதை சரியான நேரத்தில் சரியான ஒருவரிடம் இருந்து கேட்க வேண்டும். அப்போது தான், அது சைவ சமயத்தின் அதிக ஆற்றல்மிக்க மந்திரமாக உங்களுக்கு பலனை வழங்கும். §§

சிதம்பரம் கோயிலில் ஒரு மூத்த பூசாரியாகவும், குருதேவாவிற்கு பல வருடங்கள் நெருக்கமாக இருந்த, Dr. ஆனந்தநடராஜ தீட்சிதர், பின்வரும் சம்பவத்தை விரிவரிக்கிறார்:§§

ஒரு சமயம் குருதேவா யாத்திரிகர்கள் குழுவுடன் சிதம்பரம் வந்து இருந்தார். நான் விடுதியின் நுழைவாயிலில் ஒரு செல்வந்தருடன் நின்றுக்கொண்டு இருந்தேன். குருதேவா பேருந்தில் இருந்து இறங்கினார் மற்றும் நாங்கள் அவரை வரவேற்று அவருடன் பேசிக்கொண்டு இருந்தோம். சில நிமிடங்கள் கழித்து, ஒரு வயதான பிச்சைக்காரி எங்களிடம் பிச்சை கேட்டு வந்தாள். குருதேவா தன் கவனத்தை அவள் மீது திருப்பி, அவளுக்கு கொஞ்சம் பணத்தை வழங்கி, அவளுடன் பேச ஆரம்பித்து விட்டார். அவர் அவளை துரத்தி அனுப்பாமல், அவளுக்கு மதிப்பு அளித்து மகிழ்வித்தார். வழக்கமாக அந்த வயதான பெண்மணியை புறக்கணித்து, செல்வந்தருக்கு மதிப்பு அளிக்கும் பல சுவாமிகள் மற்றும் மற்ற மனிதர்களை நான் பார்த்து இருக்கிறேன். எனக்கு தெரிந்த வரை, குருதேவா மட்டுமே எல்லோருக்குள்ளும் உண்மையாக சிவபெருமானை கண்டார். அவர் எல்லோரையும் சமமாக கருதினார். §§

வேறுபாடு பார்க்காமலும், ஓரவஞ்சனை செய்யாமலும் விசுவாசமாக நாத பரம்பரையின் வழியை பின்பற்றிய குருதேவா எல்லா ஜாதி, சமூக அந்தஸ்து மற்றும் இனத்தை சேர்ந்த மக்களுடன் இயல்பாக பழகினார். §§

தீட்சிதர் குருதேவாவிற்கு தேநீர் அல்லது உணவு வழங்க, அவரை தனது எளிமையான வீட்டிற்கு பல முறை அழைத்து வந்திருந்தார், மற்றும் இவருக்கும் இடையில் நல்ல பரிச்சயம் இருந்தது. அந்த பூசாரி குருதேவாவின் துறவிகளுடன் இன்னொரு சம்பவத்தை பகிர்ந்தார்:§§

image§

குருதேவா தான் சென்ற ஒவ்வொரு நாடு, நகரம் மற்றும் கிராமத்தில் பூஜாரிகள், பண்டிதர்கள், ஆதீனகர்த்தாக்கள், யோகிகள், தத்துவ ஞானிகள் மற்றும் இறையியல் வல்லுனர்களை சந்தித்து, அவர்களிடம் அத்வைத சித்தாந்த தத்துவங்களை பகிர்ந்து, ஒரு ஆன்மீக குடும்பமாக செயல்படவேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜருக்கு பூஜை செய்யும் போது, வழக்கமாக சிவபெருமானுக்கு பூஜை செய்பவரே நெய்வேத்தியமும் செய்வார், மற்றும் அவரே அதை சந்நிதிக்கு எடுத்தக்கொண்டும் வருவார். நான் எப்போதும் எனது வீட்டில் நெய்வேத்தியத்தை உரிய நேரத்தில் தயார் செய்து, அதை நான் பூஜை தொடங்குவதற்கு முன்பாக சந்நிதிக்கு கொண்டு வந்து விடுவேன். ஆனால் ஒரு முறை, என் பிறந்த நாளன்று, அதை தயார் செய்வதில் தாமதமாகிவிட்டது. நான் நெய்வேத்தியத்தை தயார் செய்ய தொடங்கினேன், ஆனால் பூஜைக்கு முன்பாக என்னால் அதை தயார் செய்ய முடியவில்லை. நான் பூஜையை தொடங்க வேண்டியிருந்தது; அதன் பிறகு நெய்வேத்தியத்தை கொண்டு வருவதற்கு என்று அதை பாதியில் நிறுத்த வேண்டியதாயிற்று. எனக்கு இது மன வேதனையை வழங்கினாலும், அதை பற்றி நான் யாரிடமும் சொல்லவில்லை. §§

சில வருடங்கள் கழித்து, குருதேவா சிதம்பரம் வந்து இருந்த போது, நான் அவருடன் பேசிக்கொண்டு இருந்தேன், மற்றும் அவர் திடீரென்று என்னிடம், “அப்படியென்றால், உன் பிறந்தநாளன்று நீங்கள் செய்த சிவ பூஜைக்கு சரியான நேரத்தில் நெய்வேத்தியத்தை தயார் செய்யவில்லை,” என்று கூறினார். நான் அதைப்பற்றி யாரிடமும் சொல்லாத போது, அவர் அறிந்துக்கொண்டது எனக்கு இன்னும் வியப்பாகவே இருக்கிறது. §§

ஊக்கமளிக்கும் உரைகளின் வெள்ளம் §

குருதேவா 1970 களின் இறுதியில் மற்றும் 80 களின் தொடக்கத்தில், தங்கள் சமயத்தில் உறுதியாக நிலைத்து இருக்கவேண்டும் என்று இந்துக்களிடம் கேட்டுக்கொண்டும், இந்து கலாச்சாரத்தின் பெருமைகளை விவரித்துக்கொண்டும், சைவ சித்தாந்த தத்துவத்தின் நுணுக்கங்களை தெளிவுபடுத்திக் கொண்டும் தொடர்ச்சியாக உரைகளை வழங்கிக்கொண்டு இருந்தார். உட்புறமாக இருக்கும் சூட்சும ஞானத்தை பற்றி பேசும் போது, குருதேவா துல்லியமாகவும் தெளிவாகவும் இருந்துக்கொண்டு, மற்றவர்கள் ஆழமான உண்மைகளை புரிந்து கொள்வதற்கு, விவரிக்க முடியாததைப் பற்றி பேசவும் செய்தார். மே 18, 1981, ஒவ்வொரு ஆன்மாவின் மையத்திலும் இருக்கும் இரண்டு முழுமையான நிலைகளை பற்றி தனது துறவிகளிடம் விளக்கினார்:§§

image§

தூத்துக்குடியில் நடந்ததைப் போன்ற பிரம்மாண்டமான ஊர்வலங்கள், குருதேவாவிற்கு பிடித்து இருந்தது. ஹவாய் நாட்டு சற்குரு மற்றும் அவருடைய 70 சீடர்களை 300,000 மேலான மக்கள் வரவேற்று, சாலைகள் வழியாக சுமார் மூன்று மணிநேரத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்ற போது, அவர்கள் சென்ற பாதையில் மேலிருந்து மலர்கள் தூவப்பட்டன. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

பரசிவ என்கிற பரமாத்துமா, மனித இருப்பின் மையத்தில், உணர்வின் வெளிப்புற நிலைகளை கடந்து வாசம் செய்கிறது; இருந்தாலும் மனதை கடந்த நிலையில் அந்த பரமாத்துமா காலம், காரணம், பரவெளியை கடந்து இருப்பதன் விளைவாகவே இந்த வெளிப்புற மனநிலைகள் இருக்கின்றன. §§

மனித ஆன்மாவின் இன்னொரு உள்ளார்ந்த முழுமையாக சச்சிதானந்தம் என்கிற தூய இருப்பு, தூய உணர்வு மற்றும் பேரின்பம் விளங்குகிறது. மனதின் சக்தி, சிந்தனை சக்தி மற்றும் விருத்திகள் என்கிற மனதின் அலைகள் அமைதி அடையும் போது, வெளிப்புற மனம் அடங்குகிறது மற்றும் ஆன்மாவின் மனம் ஒளி வீசுகிறது. நமது உயிர்சக்தியின் இந்த மெய்ஞ்ஞான ஆழத்தில் நாம் சிவபெருமானின் மனதை பகிர்கிறோம். இந்த அமைதி நிலையில் நுழையும் போது, ஒருவர் தனது உடலுக்குள் ஒரு தூய வெள்ளை ஒளியை முதலில் எதிர்கொள்கிறார், ஆனால் இது ஒழுக்கத்துடன் நீண்டகாலம் யோகப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம், மனதின் மீது போதுமான கட்டுப்பாட்டை பெற்ற பிறகே கைக்கூடுகிறது. §§

வீணை, மிருதங்கம், தம்புரா மற்றும் மற்ற மனோஉணர்வு ஓசைகளை காதில் கேட்பது ஆன்மீக உடல் விழித்துக்கொள்வதை குறிப்பிடுகிறது, மற்றும் இந்நிலையில் சாதனாவை தொடர்ந்தால், இறுதியாக வளர்ச்சி பெற்று உறுதி அடைந்து, சிவபெருமானின் புனிதமான உட்புற மனமும் நமது ஆன்மாவும் ஒன்றாக இருக்கும், சச்சிதானந்தம் என்கிற மாற்றம் இல்லாத நிலைக்கு மனம் திறந்து கொள்கிறது. உருவத்திற்குள் தொடர்ந்து ஒளி மற்றும் உணர்வு வியாபித்துக்கொண்டு, எங்கும் எதிலும் இருக்கும் கடவுளாக இருக்கும் சச்சிதானந்தம் ஒரு உருவமாக, புனிதமான உருவமாக இருக்கிறது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சச்சிதானந்தம் என்பது தூய உருவம், தூய உணர்வு, பேரின்பம் மற்றும் உருவமாக இருக்கும் நமது ஆன்மாவின் முழுமையான நிலை ஆகும். பரசிவம் என்பது உருவம், காரணம், பரவெளி இல்லாமல் நமது ஆன்மாவின் உருவத்தை கடந்த முழுமையான நிலை ஆகும். §§

இது உன்னதமான உணர்வாக இருந்தாலும், உணர்வு அல்லது மனதை கடந்து இருக்கும் சச்சிதானந்தம் முடிவான உணர்தல் இல்லை. இது இரண்டு முழுமைகளையும் ஒன்றாக கருதும் இக்கால வேதாந்தத்தின் பிரபலமான விளக்கங்களில் இருந்து மாறுபடுகிறது. நவீன யுகத்தை சேர்ந்த வேதாந்த பண்டிதர்கள் முழுமையான அறிவாற்றலை போல சச்சிதானந்தத்தை பெரும்பாலும் அறிவாற்றலின் நிலையாக, இந்த ஆழங்கள் ஒரு தத்துவ அனுமானம் அல்லது நம்பிக்கைகள் மற்றும் உட்பார்வைகளின் தொகுப்பாக இருப்பதை போன்று, இந்த ஆழங்களை விழிப்புணர்வின் மூலம் அடையலாம் என்று அவ்வப்போது விளக்குகிறார்கள். இதைத்தான் நான் “எளிமையான வேதாந்தம்" என்று அழைக்கிறேன். §§

இந்த இரண்டு முழுமையான நிலைகளில் இருக்கும் மாறுபாட்டை புரிந்துகொள்ள, நம்மை சுற்றி இருக்கும் இந்த மடம் மற்றும் நகர்ப்புறத்தின் சுவர்களில் மிகப்பெரிய ஒளியின் உறை பரவி, அனைத்து பொருட்களின் துகள்கள் வழியாக ஊடுருவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒளி தொடர்ந்து மாறிக்கொண்டு, நிலை இல்லாமல், புரிந்துகொள்ளக்கூடிய எல்லா உருவங்கள் வழியாக ஊடுருவதால், அதை உருவமற்றது என்று அழைக்கலாம். இதைப்பற்றி மேலும் விளக்குவதற்கு, இந்த ஒளி மற்றும் அது ஊடுருவும் உருவங்களை விழுங்கும் அளவிற்கு வலுவான அதிர்வுடன் மிகவும் பெரியதாக “ஒன்று" இருக்கிறது என்று நினைத்துக் கொள்வோம். இதை விவரிக்க முடியாது, ஆனால் பரசிவ என்று அழைக்கலாம். இது உணர்தலை பெறவேண்டிய, சிவபெருமானின் முழுமையான நிலைகள் அனைத்திலும் சிறந்ததாக விளங்குகிறது. இதையும் ஒரு யோகியால் நிர்விகல்ப சமாதியில் அனுபவிக்க முடியும். §§

இதன் மூலம், பரசிவம் என்பது நிர்விகல்ப சமாதியில் அறியும் முழுமை என்றும், சச்சிதானந்தம் என்பது சவிகல்ப சமாதியில் அறியும் முழுமை என்றும் நமக்கு தெரிகிறது. உருவமற்ற என்ற சொல்லின் மூலம், அது எந்த உருவத்தையும் எடுக்காது அல்லது ஒரு குறிப்பிட்ட வடிவம் அல்லது அளவில் இருக்காது என்று நான் அதை விளக்கவில்லை. மனமும் உணர்வும் உருவமாக இருப்பதால், உருவம் மற்றும் பரவெளியை உணரும் மனதை கடந்து, உருவத்தை கடந்து உருவமே இல்லாது இருப்பதை நான் குறிப்பிடுகிறேன். §§

இலங்கை மற்றும் தென் இந்தியா வழியாக பயணம் செலுத்தல் §

குருதேவா 1982 ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்திய யாத்திரை மற்றும் இலங்கை சுற்றுப் பயணத்திற்கு வரலாறு காணாத வரவேற்பு கிடைத்தது. குருதேவாவிற்காக காத்து இருந்த ஆடம்பர வரவேற்பை பற்றி இலங்கையின் தேவாலயத்திற்கு தொடர்பு அதிகாரியாக இருந்து, இந்த பயணத்திற்கு முன்னேற்பாடுகளை செய்த எஸ். சண்முகசுந்தரமும் எதிர்பார்க்கவில்லை. §§

ஆசியாவில் சமயம் தொடர்பான நிகழ்வுகளுக்கு சீடர்கள் ஒருவரை மட்டுமே நாடியதாலும், ஒரு ஆசிரியரின் அல்லது குருவின் சீடர்கள் இன்னொரு குரு வழங்கிய உரையில் பங்கேற்காமல் இருந்ததாலும், இது எதிர்பாராத நிகழ்வாக இருந்தது. உதாரணத்திற்கு இராமகிருஷ்ண மடத்தின் ஒரு சுவாமி பயணம் மேற்கொண்டால், அவரது நிகழ்ச்சிகளின் பார்வையாளர்களாக இராமகிருஷ்ண மிஷன் உறுப்பினர்கள் மற்றும் அர்ப்பணிப்பு இல்லாத சில சாதகர்கள் மட்டுமே கூடுவார்கள். ஆனால் இலங்கைக்கு வந்த இந்த குரு இந்தியாவில் இருந்து வராமல், அமெரிக்காவின் மேற்கு எல்லைப்பகுயில் இருந்து வந்த ஒரு அபூர்வமான ஆன்மாவாக இருந்தார். அவருக்கு உள்ளூரில் சீடர்கள் யாரும் இல்லாததால், அவர் எந்த இயக்கத்திற்கும் அச்சுறுத்தலாக விளங்கவில்லை. அவர் விரைவில் தனது நாட்டிற்கு திரும்பிவிடுவார் மற்றும் உள்ளூர் ஆசிரமங்களில் இருந்து சீடர்களை தன் பக்கம் இழுத்துக்கொள்ள மாட்டார் என்ற கருத்து நிலவி, எல்லோரும் அவரது உரைகளில் சுதந்திரமாக பங்கு பெற்றதால் அங்கே திரண்ட மக்கள் கூட்டத்தை, அதே சிந்தனையை பற்றி தங்கள் சீடர்களிடம் பேச, அதே பாதைகள் வழியாக பழங்கால மகான்கள் பல நூற்றாண்டுகள் முன்பு நடந்து சென்ற பிறகு, அதுவரை யாரும் பார்த்திருக்கவில்லை. §§

உலகின் ஒதுக்குபுறமாக இருந்த ஒரு பகுதியில், கிராமம் வாழ்க்கையின் மையமாக இருந்தது; மற்றும் அது வழியாக குருதேவா வாகனம் அல்லது பல்லக்கில் பயணம் செய்த போது, அந்த பகுதி துடிப்புணர்வை பெற்றது. சற்குருவை கௌரவித்து மரியாதை செலுத்தவும், மேற்கில் இருந்து வந்த சைவ யாத்திரைகளுக்கு அன்புடன் வரவேற்பு வழங்கவும், ஆயிரக்கணக்கான சைவர்கள் அளவெட்டி, கோப்பாய், காரைநகர், மட்டக்களப்பு, ஹட்டன் மற்றும் வேறு சில ஊர்களின் தெருக்களில் கூடி இருந்தார்கள். ஒரு நாள் முழுவதும் அந்த பகுதியில் மொத்தம் பதினாறு மைல் தூரம் நீளமாக சென்ற அந்த ஊர்வலத்தில் கிளிநொச்சி மாவட்ட பள்ளிசிறுவர்கள் அனைவரும் பங்குபெறுவதற்கு, அந்த மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. §§

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, இந்த ஊர்வலத்திற்கு என்று தயார் செய்யப்பட்ட ஒரு உயரமான தேரை, மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த தெருக்கள் வழியாக, நூற்றுக்கணக்கான ஆண்கள் இரண்டு நீளமான மற்றும் திடமான கயிறுகளின் மூலம் இழுத்து சென்றனர். வழக்கமாக சாலையில் இருந்து சற்று விலகி, ஒவ்வொரு வீட்டு சுற்றுச்சுவரின் நுழைவாயிலில், பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பமும் ஆடம்பரமாக அலங்கரித்த வரவேற்பு மேடையில், பித்தளை குத்துவிளக்குகளும் ஒரு கும்பமும் வைக்கப்பட்டு இருந்தன. அந்த மேடையை சுற்றி குடும்பத்தின் மூன்று தலைமுறைகளும் நின்றுக்கொண்டு உயரமாக, நரைத்த முடியுடன், காவி உடை உடுத்தி, ருத்திராட்ச மாலைகள் அணிந்து இருந்த சற்குருவிற்கு மலர்கள், பன்னீர், விபூதி மற்றும் ஆரத்தியுடன் வரவேற்றனர். §§

அவர் பெரும்பாலான வீடுகள் வழியாக கடந்து சென்ற போது, அந்த குடும்பத்தினர் விரைந்து வந்து தாங்கள் தொடுத்த மாலைகளை அவர் கைகளில் வீசினார்கள். அவ்வப்போது ஊர்வலம் நின்றது மற்றும் குருதேவா தேரில் இருந்து இறங்கி, அங்கே குடும்பம் அமைத்திருந்த மேடையை நெருங்கியதும், அந்த குடும்பம் அவருக்கு ஆரத்தி எடுத்து, தூசி படிந்து அவர் கால்களில் தண்ணீர் ஊற்றி, அவர் நெற்றியில் குங்கும பொட்டு வைத்து மாலையிட்டினர். தெய்வீகத்தன்மையுடன் பிரகாசமும் அன்பும் நிறைந்த அவர் முகத்தை பார்ப்பதற்கு சிவபெருமானை பார்த்ததைப் போலவே இருக்கிறது என்று அவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர். இந்த குடும்பங்களில், இந்த நிகழ்வுகள் பல தலைமுறைகளுக்கு எதிரொலிக்கவிருந்தன.§§

இந்த ஊர்வலம் உச்சி வெய்யிலில் பல மைல் தூரம் பயணம் செய்து பல கிராமங்கள் வழியாக சென்றது. அவர் ஒரு கிராமத்தின் எல்லையை நெருங்கியதும், தூரத்தில் பயபக்தியுடன் “ஓம் நமச்சிவாய" மந்திரத்தை நூற்றுக்கணக்கான குரல்கள் ஓதிக்கொண்டு வரவேற்பு வழங்குவதை நம்மால் கேட்க முடிந்தது. சிறுவர்கள் வெடி வெடித்து மத்தாப்புக்களை கொளுத்தினர். கற்பனா சக்தி அதிகம் இருந்தவர்கள், மர உச்சியில் அமைத்து இருந்த வலைகளில் மலர்களை சேகரித்த வைத்து இருந்தனர் மற்றும் குருதேவா அதற்கு அடியில் நடந்து செல்லும் போது, அவர்கள் கயிற்றை இழுக்க அவர் மீது மலர்கள் மழை போல பொழிந்தன. சைவர்கள் மற்றும் மகான்கள் ஒன்று கூடும் இடமாக கோயில் இருந்ததால், ஒவ்வொரு ஊர்வலமும் வழக்கமாக கோயிலில் முடிந்தது, ஆனால் சில சமயங்களில் அது ஒரு மண்டபம் அல்லது ஒரு பள்ளி வளாகத்தில் முடிவுபெற்றது. §§

குருதேவாவின் பாதம் கோயிலை நெருங்கும் போது பூமியில் படாமல் இருக்க, கடைசி நூறு மீட்டர் தூரத்திற்கு, அல்லது சிலசமயங்களில் கடைசி ஒரு மைல் தூரத்திற்கு, புதிதாக நெய்த பத்து மீட்டர் நீள வெள்ளை வேஷ்டியை தரையில் விரிப்பதற்காக, எட்டு ஆண்களை கொண்ட குழுக்கள், அவர் முன்பாக வேகமாக ஓடி வருவார்கள். நாதசுவரம் மற்றும் தவில் கலைஞர்களின் குழு மற்றும் வெள்ளை உடையணிந்து அவரது பாதங்களில் ரோஜா மலர்களை தூவிய இளம்பெண்களின் கூட்டம் எப்போதும் சற்குருவிற்கு முன்பாக நடந்து சென்றன.§§

குருதேவா ஒரு கோயிலுக்கு வந்து அடைந்ததும், ஒரு சிறிய பூஜையில் பங்குபெற அந்த தெய்வத்தின் சந்நிதிக்கு அழைத்து செல்லப்படுவார், மற்றும் அதன் பிறகு வழக்கமாக உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் கிராமத்து பெரியவர்கள் வழங்கும் அறிமுக உரைக்காக அரங்கத்திற்கு அழைத்து செல்லப்படுவார். அந்த உரைகள் அனுமதிக்கப்பட்டால், அந்த கூட்டத்தின் முக்கிய நோக்கத்தையே மறக்க செய்துவிடும். இதை கவனித்து வந்த குருதேவா, தனது சொற்பொழிவு முதலில் இடம்பெற்று, அறிமுக உரைகள் பின்னர் நடைபெறவேண்டும் என்று பயணத்தின் பிற்பகுதியில் ஆணையிட்டார். மற்றவர்களின் மந்தமான ஒரு மணிநேர சொற்பொழிவுகள் இல்லாததால், அது வியக்கும் வண்ணம் நல்ல பலனை வழங்கி, கூட்டத்தில் இருந்த மக்களுடன் அவரது தொடர்பை வலுப்படுத்தியது. §§

குருதேவாவைப் போன்ற முக்கிய விருந்தாளிகளுக்கு, ஒரு பாராட்டு சான்றிதழை போன்று, அழகாக இயற்றப்பட்டு சட்டகம் செய்யப்பட்ட ஒரு ஆவணத்தை தயார் செய்து, அதை அந்த கூட்டத்தில் படித்து காண்பித்து விருந்தாளிக்கு பரிசாக வழங்குவது சமூகத்தின் வழக்கமாக இருந்தது. இதைப்போன்று குருதேவாவிற்கு நூற்றுக்கணக்கான பரிசுகள் வழங்கப்பட்டன, மற்றும் அதில் ஒவ்வொன்றும் ஒரு கலைஞர் பல நாட்கள் கடினமாக யோசித்து எழுதி டைப்செட் செய்த ஒரு கலை வடிவமாக இருந்தது. அதில் சில தமிழ் மற்றும் ஆங்கில கவிதைகளாகவும், சில ஆன்மீக அறிக்கைகளாகவும், மற்றவை கடந்த காலத்தை போல சைவ சமயத்தின் எதிர்காலமும் வளமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் சுவாமியின் உன்னதமான இருப்பின் மீது அன்பின் வெளிப்பாடுகளாக அமைந்து இருந்தன. §§

1982 இன்னரசர்ச் யாத்திரையின் போது மலேசியா, இலங்கை மற்றும் இந்தியாவில் சைவ சமய சங்கங்களின் பிரதிநிதிகள் மூலம், குருதேவாவிற்கு அன்புடன் வழங்கப்பட்ட டஜன் கணக்கான வரவேற்புரைகளில் இரண்டு உரைகளில் இருந்து ஒரு சிறிய பகுதியை இங்கே காணலாம். இந்தியாவின் ஆறுமுகநேரியில் இருக்கும் ஶ்ரீ சோமநாத சுவாமி கோயிலின் சைவர்கள் சபை வழங்கிய வரவேற்புரையில் இருந்து ஒரு சிறிய பகுதி:§§

ஆறுமுகநேரியில் அமைந்து இருக்கும் ஶ்ரீ சோமநாத சுவாமி கோயிலின் பக்தர்களாகிய நாங்கள், குருதேவாவையும் அவருடன் இந்த யாத்திரையில் துணையாக வந்துள்ள ஞானோதயம் பெற்ற சீடர்களையும் வரவேற்பதில் பெருமை அடைகிறோம். எங்கள் கிராமத்தில் சற்குரு முதல் முறையாக வருகை தந்தது, பக்தியுள்ள சைவர்களுக்கு உண்மையில் ஒரு பிணி நீக்கும் மருந்தாக விளங்குகிறது. சைவ தத்துவம் மற்றும் கடவுள் நம்பிக்கைக்கு சற்குரு தன்னை அர்பணித்துக் கொண்டுள்ளதால், ஒரு ஆன்மீக செய்திக்காக ஏங்கிக்கொண்டு இருந்த இந்த கிராமத்து அன்பர்களுக்கு, அவர் ஒரு முன் உதாரணமாக விளங்குகிறார். சற்குரு கிழக்கு நாடுகளில் ஒரு முனிவரான பிறகு, சரியான நேரத்தில் சைவ சித்தாந்தத்தைப் பற்றி மேலும் பல தகவல்களை வழங்கி தெளிவை வழங்குவதால், நம் மனதிற்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. மாறும் பழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்தின் காரணமாக, கிழக்கில் இருக்கும் பெரும்பாலான மக்கள் நெற்றியில் சைவ சமயத்தின் அடையாளங்களை வைத்துக்கொள்வதை நிறுத்தி விட்ட இக்காலத்தில், சரியான நேரத்தில் சற்குரு வருகை தந்து அவற்றை நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியதை நாங்கள் வரவேற்று போற்றுகிறோம். §§

சற்குரு மற்றும் அவரது சீடர்கள் மேற்கொண்ட யாத்திரை, மக்களுக்கு ஞானோதயம் வழங்கி, அவர்கள் காலத்தால் அழியாத சைவ சமய குழுவிற்குள் நிலைத்து இருக்க உதவியாக இருக்கட்டும். நாங்கள் சற்குருவின் ஆசிகளுக்காக சிரத்தையுடன் வேண்டிக் கொண்டு, சைவ சமயத்திற்கு புத்துயிர் வழங்க சற்குரு எடுத்துக்கொண்ட முயற்சிகள், இந்து சமய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்க பிரார்த்திக்கிறோம். உலகெங்கும் சைவ கோட்பாடு நன்றாக செழிக்கட்டும்! §§

சைவ சமயத்தில் மிகவும் பழமையான நம்பிக்கையின் நிலைபேருடைய தகவலை அறிவித்து வலுவாக உறுதி செய்ததன் மூலம், பரந்து விரிந்த இந்த உலகில் தீவிரமான லௌகீகத்தால் பரவும் இருளை வெளியேற்ற நீங்கள் மேற்கொண்ட இந்த யாத்திரை தெய்வீக தூண்டுதலை பெற்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சைவ சமயம் வரலாற்று ஆராய்ச்சியின் வரம்பை கடந்து, குறிப்புக்கள் ஏதும் இல்லாத புராண காலத்தில் தோன்றியுள்ளது. நீக்கமற நிறைந்து எல்லாம் அறிந்திருக்கும் கடவுள், மனதை கவரும் பரமகுரு தட்சிணாமூர்த்தியின் வடிவத்தைப் பெற்று, சனாதன தர்மத்தின் நிலையான உண்மைகள் மற்றும் சைவ சித்தாந்த தத்துவத்தில் தெளிவாக விளக்கியுள்ளதைப் போல பரம்பொருளின் பிரகாசமான பாதையை, நான்கு சனகாதி முனிவர்களுக்கு வெளிப்படுத்தினார் அல்லவா? தர்மங்கள் குறைந்து அதர்மம் தலை தூக்கும் போது மனித நேயத்தை மீட்க, அவர் தன் எல்லையற்ற அருளுடன், மகான்கள் மற்றும் முனிவர்களை தூதர்களாக பூமிக்கு அனுப்பினார் அல்லவா? இந்த மகான்கள் மற்றும் முனிவர்களின் தோற்றமே, வழக்கமாக மனிதநேய வரலாற்றில் பரவி இருக்கும் அறியாமை என்ற இருளை நீக்கி வெளிச்சத்தை வழங்கியுள்ளது. §§

இன்று மனிதநேயம் தர்மம் மற்றும் கடவுள் நம்பிக்கையை கைவிட்டு விட்டதால், போரினால் பேரழிவை சந்திக்கும் அபாயத்தில் இருக்கிறது. மதிப்பிற்குரிய குருதேவா அவர்களே, இந்த முக்கியமான தருணத்தில், பேரின்பம் மற்றும் முக்திக்கு உறுதியான வழிகளாக சைவம் மற்றும் வைதீக சமயத்தின் எல்லையற்ற மகிமைகளை அறிவுறுத்தி பிரச்சாரம் செய்வதற்கு, கடவுள் உங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார். நீங்கள் சைவ சமயத்தின் எல்லா அம்சங்களையும் பற்றி வழங்கும் தெளிவான விளக்கங்கள் காரணமாக, தங்கள் சமயத்தின் மீது சைவர்களுக்கு மீண்டும் நம்பிக்கையை விழிப்படைய செய்து, அவர்களது இதயங்களில் தீவிரமாக சைவ வாழ்முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளது. நீங்கள் உலகெங்கும் இருக்கும் இந்துக்கள் மத்தியில் ஒரு அற்புதமான ஒற்றுமையை உருவாக்கியது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான புத்திசாலி அமெரிக்கர்கள் அடங்கிய உறுதியான சீடர்கள் குழுவின் இதயங்களை வெற்றிக்கொண்டு, கறைபடாத புனிதத்துடன் இருக்கும் அமெரிக்க துறவிகளைக் கொண்டு ஒரு அழகான குழுவை தொடங்கியும் உள்ளீர்கள். நீங்கள் இவ்வாறு, இந்த பூமியில் நிரந்தர அமைதியையும் தர்மத்தையும் நிலைநாட்டி, லௌகீக சக்திகளை கரைக்கும் எல்லையற்ற ஆன்மீக சக்தியை உருவாக்கி இருக்கிறீர்கள். §§

தென் இந்தியா மற்றும் இலங்கையில் இருக்கும் மாபெரும் கோயில்களில் இறைவனுடன் ஒன்றி இருப்பதால் ஏற்படும் அமைதியில் மெய்மறந்து இருக்கவும், உங்களது சமயப்பணி நிறைவடைய அவரது நிலையான அருளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும், சிவபெருமானை சுற்றி அவரது கணங்கள் இருப்பதை போல, நீங்கள் இங்கே ஒரு கம்பீரமான குழுவுடன் வந்து இருக்கிறீர்கள். குருதேவா, உங்களுக்குள் எதிரொலிக்கும் இறைவனின் குரலை கேட்டு, இந்த உலகம் முழுவதும் விழித்துக்கொள்ளட்டும், மற்றும் அவர்களுக்கு வாழ்க்கையின் நான்கு புருஷார்த்தங்கள் ஸித்திக்கட்டும். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி. §§

ஒவ்வொரு இடத்திலும், பாட்டுப்பாடி நடனமாடி தங்கள் விருந்தாளியை மகிழ்விக்க பள்ளிக்குழந்தைகள் முதலில் முன்வந்தார்கள், அதன் பிறகு மலர் மாலைகளுடன் சங்கங்கள் ஒவ்வொன்றாக மேடைக்கு வந்து சேர்ந்தார்கள். சில சமயம் ஒரு அடி விட்டம் மற்றும் ஒன்பது அடி நீளத்துடன் இருந்த, அந்த மிகப்பெரிய மாலைகளை, மேடைக்கு இருவர் சுமந்து வந்தனர். அவை நறுமணம் நிறைந்த மாலைகள், எளிமையான மாலைகள் மற்றும் ஆடம்பரமான மாலைகள் என்று மொத்தம் நூறு மாலைகள் குருதேவாவிற்கு அணிவிக்கப்பட்டன. குருதேவா வசதியாக கூட்டத்தை பார்க்கும் வண்ணம், அவர் கழுத்தில் ஒருசில மாலைகளை மட்டும் மீதம் வைத்து, மற்ற மாலைகளை சுமார் முப்பது நிமிடங்களுக்கு இருவர் தொடர்ந்து நீக்கிக்கொண்டு இருந்தார்கள். அந்த மாலைகளில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை, குருதேவாவிற்கு அருகில் இருந்தவர்களால் மட்டுமே உணர முடிந்தது, மற்றும் அவருக்கு வியர்க்கும் போது துறவிகள் மாறி மாறி விசிறி வீசுவார்கள். §§

இறுதியில் நான்கு அடி உயர மாலைகளின் அடுக்கினால், அரங்கம் சிறிது வளைந்து கொண்டது. முடிவில், குருதேவா உரை வழங்க பிரசங்க மேடைக்கு சென்றார். இதைப்போன்று காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் ஊர்வலங்கள் மற்றும் உரைகள் என்று பல நாட்களுக்கு தொடர்ந்தது. கிராமப்புற பாதைகள் வழியாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு, கண்டியில் இருந்து மட்டக்களப்பிற்கு, கொழும்புவில் இருந்து தேயிலை தோட்டங்கள் நிறைந்த மலைப்பிரதேசங்களுக்கு பயணம் செய்து, குருதேவா 25,000 சதுர மைல் பரப்புள்ள நாட்டில் பெரும்பாலான பகுதிகளுக்கு சென்று இருந்தார். §§

இந்த நிகழ்ச்சிக்காக கூடியிருந்த மக்கள் கூட்டத்துடன், இலங்கை சைவர்களின் இதயங்களில் எழுச்சி பெற்ற வலுவான தெய்வீக சக்தியும் இணைந்து கொண்டு, மக்களுக்கு சற்குரு மீது இருந்த நிலையான மரியாதையை எடுத்துரைத்தன. இந்த மூன்று வாரங்களின் போது, குருதேவா இலங்கையில் இருந்த ஒவ்வொரு முக்கிய சைவ மையத்திற்கு பயணம் செய்தார் மற்றும் அவரை தரிசித்து, சொற்பொழிவை கேட்டு, பாதத்தை தொட்டு வணங்கி அவரது ஆசிகளை பெறுவதற்கு 300,000 மேலான மக்கள் வந்ததாக மதிப்பிடப்படுகிறது. எஸ். சண்முகசுந்தரத்தின் கருத்து:§§

முக்தி பெற்ற ஆன்மாவாக இருக்கும் ஒரு ஜீவன்முக்தாவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்பு வழங்கி, அவரை பின்தொடர்ந்து சென்று அவரது சொற்பொழிவுகளில் பக்தியுடன் கலந்து கொண்டனர். 1,200 வருடங்களுக்கு முன்பு திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்திற்கு பிறகு, இத்தகைய ஒரு பக்தியை யாரும் பார்த்திருக்கவில்லை. §§

image§

குருதேவா இந்தியா மற்றும் இலங்கைக்கு மேற்கொண்ட பல பயணங்களின் போது, அவரிடம் ஆசிகளை பெறுவதற்கு பல ஆயிரககணக்கான அன்பர்கள் அவரை நாடி வந்தார்கள். ஒரு கோயிலில் சொற்பொழிவு வழங்கிய பிறகு, அவர் பல மணி நேரங்கள் ஓரிடத்தில் அமர்ந்து இருக்க, மக்கள் ஒவ்வொருவராக அவருக்கு வாழ்த்துக்கள் சொல்ல முன் வருவார்கள். அவர் அவர்களை முகத்தில் புன்னகையுடன் வரவேற்று, தனது வலது கட்டைவிரலால் அவர்களது நெற்றியில் விபூதியை பூசிவிடுவார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

தேவாலயத்தில் மூத்த சுவாமியாக இருந்த ஒருவர் வழங்கிய குறிப்பு:§§

இலங்கையில் ஒரு காலத்தில் பிரகாசமாக கொழுந்து விட்டு எரிந்த சைவ சமயத்தின் நிலை, தற்போது வலுவிழந்து புகைத்துக்கொண்டு தணியும் நெருப்பைப் போல உள்ளது. இந்த தணியும் நெருப்பை சிறிது விசிறி விட்டு, சில விறகுகளை அதன் மீது வைத்தால், அங்கே மீண்டும் நெருப்பு கொழுந்து விட்டு எரியும். குருதேவா இந்த தணியும் நெருப்புக்களை விசிற மட்டுமே செய்கிறார், இதனால் தீ பிரகாசமாக எரிகிறது. §§

இந்த பயணத்தின் போது குருதேவா நானூறு அல்லது ஐநூறு முறை தனது வாகனத்தை நிறுத்தி இருக்கவேண்டும். அவர் ஒரு நிகழ்ச்சிக்கு கிளம்பிய ஒவ்வொரு முறையும், தங்கள் இடத்தில் நிற்கவேண்டும் என்று குடும்பங்கள் மற்றும் சங்கங்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு முன் வந்தார்கள். மேலும் அவரை அழைத்துக்கொண்டு செல்லும் வழியில், “ஐந்து நிமிடங்கள் இருந்தால் போதும், குருதேவா. நான் உறுதி அளிக்கிறேன். உங்களிடம் ஆசிகளை பெறுவதற்காக மக்கள் நாள் முழுவதும் காத்து இருக்கிறார்கள். அவர்களுக்காக நீங்கள் ஐந்து நிமிடங்கள் ஒதுக்க முடியும் என்று நினைக்கிறோம்,” என்று கூறுவார்கள். இந்த சம்பவம் அடிக்கடி நடைப்பெற்றதால், துறவிகள் எப்.எம்.எஸ். (FMS) கோட்பாடு என்கிற “ஐந்து-நிமிட-நிறுத்தம் கோட்பாட்டை" உருவாக்கினார்கள். §§

image§

குருதேவா 1980 களில் தென்னிந்தியாவின் அனைத்து மடங்களையும் சென்று பார்த்து, அதன் மடாதிபதிகளுடன் தனது தொடர்பை வளர்த்துக்கொண்டார். இந்த பழங்கால மடம்-கோயில் வளாகங்களில் அவர் கவனித்த பாரம்பரிய கலாச்சாரம், கவாய் ஆதீனம் உருவாவதற்கு வழிகாட்டியாக விளங்கியது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

குருதேவாவின் குழு, “சரி, தரிசனத்திற்காக நாம் இங்கே சிறிது நேரம் நிற்கலாம்,” என்று தங்கள் மனதை மாற்றிக்கொண்டதும், வழக்கம் போல் ஒரு எப்.எம்.எஸ். தொடங்கும். அவர்கள் சாலைகளின் சந்திப்பை வந்து அடைந்ததும் உற்சாகமாக, அவரை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் முட்டி மோதிக்கொண்டு, வீட்டில் தயார் செய்த பதாகைகளை உயர பிடித்துக்கொண்டு, “சைவ சமயத்தின் மகானை” வரவேற்று, அவருக்கு ஆரத்தி எடுத்தார்கள். திடீரென்று அந்த மக்கள் கூட்டம், குருதேவாவை முன்னே தள்ளிக்கொண்டு, அவரை ஒரு மண்டபத்திற்கு அழைத்து செல்வார்கள். அங்கே மேலும் ஆயிரத்து இருநூறு நபர்கள் காத்து இருந்தார்கள். பாடிக்கொண்டு, சுலோகம் சொல்லிக்கொண்டிருந்த அவர்கள், சில வார்த்தை பேசவேண்டும் என்று குருதேவாவிடம் மன்றாடினார்கள். ஆனால் முதலில், அந்த கிராமத்தை சேர்ந்த பெரியோர்கள் ஒரு சிறிய அறிமுகத்தை வழங்கினார்கள்! சரியாக நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் கழித்து, அவரையும் அவரது ஐந்து நபர் (அவரது இரண்டு சுவாமிகள், ஒரு சாதகர், தேவாலயத்தை சேர்ந்த மதகுரு மற்றும் வாகன ஓட்டி) கொண்ட சிப்பந்திகளையும் அவர்கள் பயணம் செய்த வெள்ளை வாகனத்திற்கு, அந்த குழு வலுக்கட்டாயமாக இழுத்து சென்று, அடுத்த எப்.எம்.எஸ். நிறுத்தம் வரும் வரை அங்கிருந்து தப்பித்து தனது பயணத்தை தொடர்ந்தது. இதே முறையில், இருபது மைல்கள் பயணம் செல்ல மூன்று-நான்கு மணி நேரம் ஆனது. அதனால் நடக்கவிருந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் காத்து இருந்தவர்கள் நிலைமை வேதனை தருவதாக இருந்தது. §§

ஒரு இடத்தில் குருதேவா நிற்காமல் சென்றதால், அந்த கிராமத்து மக்கள் ஒரு பெரிய மரத்தை சாய்த்து சாலையில் குறுக்காக வைத்து வழியை மறைத்தனர். அவர்கள் பக்தி அதிக நேர்மையாகவும், அவர்கள் பயன்படுத்திய உத்திகளில் அதிக ஆர்வம் இருந்ததாலும், அவர் அங்கே இறங்கிக்கொண்டார். §§

இதைப்போன்ற வரவேற்புக்கள், இன்னர்சர்ச் குழு இந்தியா சென்ற போதும் கிடைத்தன. 1981 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டு தூத்துக்குடியின் பிரதான சாலையில் இரண்டு மணிநேரம் நடைப்பெற்ற வரவேற்பு அணிவகுப்பில் 80,000 மக்கள் கூடியிருந்தனர். அந்த அணிவகுப்பின் போது, நன்றாக அலங்கரிக்கப்பட்ட ரிக்ஷா வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகளில் குருதேவாவும் அவரது சீடர்களும் பயணம் செய்ய, மேலே வீட்டு கூரைகளில் அமர்ந்து இருந்த உற்சாகமான மக்கள், அவர் மீது கூடை கூடையாய் பூவிதழ்களை பொழிந்தார்கள். தவில் மற்றும் நாதவஸ்ர கலைஞர்களுக்கு பின்னால், மேற்கத்திய இசைக்குழுவின் அணிவகுப்பு சென்ற காட்சி கலாச்சார கூட்டுறவை தெளிப்படுத்தியது. இந்த அணிவகுப்பை பார்ப்பதற்கு, நியூ யார்க்கின் ஐந்தாவது அவெனியூவில் பூமிக்கு திரும்பும் விண்வெளி வீரர்களுக்கு, உயர்ந்த கட்டிடங்களில் இருந்து காகிதங்களை தூவி மரியாதை செலுத்தும் டிக்கர்-டேப் அணிவகுப்புக்கு இணையாக இருந்ததாக, ஒரு இன்னர்சர்ச் குழு உறுப்பினர் கருத்து தெரிவித்தார். மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய சைவர்களுக்கு இடையே கோலாலம்பூரின் மையப்பகுதியில் இருந்த கோயில்களில் இருந்து, யாழ்ப்பாண பள்ளிகளின் பொதுக்கூட்ட அரங்குகள் மற்றும் தென் இந்தியாவின் ஆதீனங்கள் வரை நடைபெற்ற இந்த சந்திப்புக்கள், புதிய முன்உதாரணங்களை அமைத்து தந்து, பல தலைமுறைகளுக்கு நிலைத்து இருக்கக்கூடிய தொடர்புகளை உருவாக்கின. §§

அடுத்த வருடம் இலங்கையில் ஒரு இனப்போராட்டம் வெடிக்கும் என்று குருதேவாவிற்கு எச்சரிக்கை கிடைத்து இருந்தது. அந்த போராட்டம் 2009 ஆம் ஆண்டு வரை நீடித்து 100,000 மக்களை கொன்று, பல ஆயிரக்கணக்கான தமிழர்களை அவர்களுக்கு பிடித்தமான தாய்நாட்டில் இருந்து வெளியேற்றியது. “சிவபெருமானின் திருவடிகளை வலுவாக பிடித்துக்கொண்டு பயப்படாமல் இருங்கள்,” என்று இலங்கை மக்களுக்கு அவர் வழங்கிய தகவல் மோசமான சூழ்நிலைக்கு தயாராக இருங்கள் என்பதை குறிப்பிடுவதாக இருந்தது. அந்த காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் இரண்டரை மில்லியன் தமிழர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் எதிர்காலத்தை நினைத்து அச்சத்தில் இருந்தனர். தைரியமாக இருந்துக்கொண்டு இறைவனையும் குருவையும் மறக்காமல் இருக்க வேண்டும் என்று குருதேவா அவர்களுக்கு அறிவுறுத்திக்கொண்டு, அவர்கள் அச்சங்களை தணிக்க கடுமையாக முயற்சி செய்துக்கொண்டு இருந்தார். §§

தங்கள் ஆன்மாவை காப்பாற்ற, அவர்கள் கிறுத்துவ மதமாற்ற இயக்கங்களுக்கு எதிராக, அப்போது நடத்திய போராட்டத்தைப் பற்றியும் அவர் தைரியமாக பேசினார்:§§

நீங்கள் சிவபெருமானை நேசித்தால், மரணத்தை நினைத்து பயப்படவேண்டாம். ஒரு கிறுத்துவ சமயப்பார்ப்பாளர் அல்லது அதைப்போன்று அச்சத்தில் வாழ்பவர்களை நினைத்து நீங்கள் பயப்படவேண்டாம். நான் ஹட்டன் சென்றிருந்த போது, ஒரு இந்துவை கிறுத்துவ மதத்திற்கு மாற்றுபவருக்கு நூறு ரூபாய் தரப்படுவதாக சில சுவரொட்டிகளை பார்த்தேன். தமிழர்களை பிடித்துத் தந்தால் வெகுமதி என்பதை கேட்பதற்கு அருவருப்பாக இருக்கிறது. நீங்கள் யாரையாவது மதம் மாற்றினால் உங்களுக்கு கிறுத்துவர்கள் நூறு ரூபாய் தருவதை பார்க்கும் போது, பழங்கால அமெரிக்காவில், வைல்ட் வெஸ்ட் பகுதியின் ஷெரீஃப் (ஊர்த்தலைவர்) வங்கியை சூறையாடிய கொள்ளையனை பிடித்து தருபவருக்கு வெகுமதியாக பணத்தை கொடுத்தது போல இருக்கிறது. §§

இந்த மதமாற்றாங்கள் அனைத்தும் மிகவும் மேலோட்டமானவை. அவை ஒருவரின் அடிப்படை நம்பிக்கையை அல்லது அதைப்போன்ற ஒரு இயல்பை மாற்றி விடுவதில்லை. “நீங்கள் மதம் மாறினால் உங்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கும்; இல்லையென்றால் நீங்கள் அதே மதத்தில் வேதனையால் இறக்க நேரிடும்,” என்று அவர்கள் லௌகீக பயன்களை மட்டுமே உறுதி அளிக்கிறார்கள். கிறுத்துவ மதத்திற்கு மாற்றும் நோக்கத்துடன் இத்தகைய கொடுமையான உத்திகளை தமிழர்களே கையாள்வதால், இது பெரும்பாலும் அமெரிக்காவில் இருக்கும் தலைமையகத்திற்கு தெரிய வாய்ப்பில்லை. இவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டங்கள் எதுவும் இல்லை என்பதால், “காப்பாற்றபப்பட்டவர்களின்" பெயர் பட்டியலை வழங்கி, அமெரிக்காவிடம் இருந்து உள்ளூர் சமயப்பரப்பாளர்கள் பணத்தை பெறுகிறார்கள். §§

சைவ சித்தாந்தம் ஒரு தலைவனை தேடிக்கொள்கிறது§

மிகவும் பிரபலமான ஆதி சங்கரரின் அத்வைதத்தில் இருந்து சைவ சித்தாந்தம் மாறுபட்டு இருந்தாலும், அது அடிப்படையில் அத்வைதம் சார்ந்தது என்பதை சற்குரு யோக சுவாமி வாழ்ந்த காலத்தில் இருந்து, குருதேவா ஆதரித்து அறிவுறுத்தியும் வந்தார். ஆனால் அவர் மிகவும் முக்கியமான இன்னொரு சைவ சித்தாந்த கருத்தை 40 களின் இறுதியில் கற்று இருந்தார் மற்றும் அதை தற்போது தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ளவும் இருந்தார். §§

எனது சற்குரு சிவயோக சுவாமியிடம் இருந்து தீட்சை பெறும் முன்னர், இலங்கையின் யாழ்ப்பாணத்தில் மாட்டு சாணத்தால் மொழுகிய தரையுடன் இருந்த சிறிய மண் குடிசைகளில் வாழ்ந்துகொண்டு, சாதனா செய்த போது, முடிவுக்கு வராத இந்த பிரச்சினையைப் பற்றி 1948 ஆம் ஆண்டு நான் தெரிந்துகொண்டேன். இந்த நவீன சூட்சும ஞான அறிக்கைகள் மற்றும் சித்தாந்தங்கள், அந்த பகுதியில் இருந்த பல்வேறு பன்மைவாத ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது என்பதை நான் தெரிந்துக்கொண்டேன். §§

image§

சிவபெருமானைப் போல காட்சி அளித்து, அவரைப் போல பேசி, தங்கள் வாழ்க்கையை உருமாற்றும் சக்தியுடன் ஒரு தீவிரமான அன்பை வெளிப்படுத்திய, ஒரு உயரமான சற்குருவை மலேசியா, பிஜி, டிரினிடாட் , ஐரோப்பா, இலங்கை, இந்தியா, மொரிஷியஸ் மற்றும் வேறு பல நாட்டு மக்கள் விஷேசமான மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அவர்கள் மிகவும் பெரிய ஊர்வலங்களில், அவர் நடந்து செல்வதற்கு தரையில் வெள்ளை நிற பருத்தி துணியை விரித்தார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இந்த இரண்டு சிந்தனை பிரிவுகளில் எது சரியானது என்று சிவயோக சுவாமி என்னிடம் கேட்டார். அது நீங்கள் மலை உச்சியில் இருந்து பார்க்கிறீர்களா அல்லது மலை அடிவாரத்தில் இருந்து பார்க்கிறீர்களா என்பதை பொறுத்து இருக்கிறது என்று கூறி அதற்குரிய பாணியில் பார்க்கும் போது இரண்டும் சரியானது என்று நான் தெரிவித்தேன். அவர் சிரித்துக்கொண்டு தலையை அசைத்தார். அத்வைத ஈஸ்வரவாதம் உண்மைப்பொருளின் உயர்வான காட்சி என்று ஞானகுரு யோக சுவாமி எனக்கு கற்றுத்தந்தார். §

நான் கவாய் ஆதீனத்தின் மகாசன்னிதானம் மற்றும் நாத பரம்பரையை சேர்ந்த கைலாச பரம்பரையின் ஜகதாச்சாரியராக சர்வதேச சைவ சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போது, எனது வாழ்க்கையில் அந்த பிரச்சனையை நான் மீண்டும் எதிர்கொண்டேன். §§

image§

குருதேவா பல நூற்றாண்டுகள் பழமையான தர்மபுர ஆதீனத்திற்கு சென்று இருந்த போது, அதன் மடாதிபதி அணிந்து இருந்த மாபெரும் காதணிகளை கவனித்தார். மடாதிபதி இரண்டு தங்க காதணிகளை வரவழைத்து, அவற்றை தனது விருந்தாளிக்கு சம்பிரதாய முறைப்படி அணிவித்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

1980 களின் தொடக்கத்தில், ஒருமை பண்புடன் இறைவன் மற்றும் ஆன்மாவிற்கு இடையில் முடிவான ஒற்றுமையை வலியுறுத்தி குருதேவா அச்சிட்ட பல ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்கள் உலகை சுற்றி வலம் வந்தன. இவை இறைவனும் ஆன்மாவும் நிரந்தரமாக தனித்து இருக்கும் கருத்துக்கு ஆதரவு அளித்து, தங்களை பன்மைவாதிகள் என்று குறிப்பிட்டுக்கொண்டவர்களிடம் இருந்து சில சுவாரஸ்யமான பதில்களை தூண்டுவிட்டன. இரு கருத்துக்களுக்கும் இடையே இருந்த அடிப்படை வித்தியாசத்தை அவர் விளக்கினார்:§§

அத்வைத கண்ணோட்டத்தில், சிவபெருமான் எல்லாமாக இருக்கிறார்; இந்த தூல பிரபஞ்சத்தில் அவர் வியாபித்து இருந்தாலும், இதுவும் அவரது அங்கமாக விளங்குகிறது. பன்மைவாத கண்ணோட்டத்தில், சிவபெருமான் பிரபஞ்சத்திற்கு உயிரோட்டம் வழங்கி அதை வழிநடத்தி செல்கிறார், ஆனால் அது அவரது அங்கமாக இருப்பதில்லை. இந்த பிரபஞ்சத்தில் முடிவான உள்பொருள் ஒன்றா அல்லது மூன்றா, ஆன்மா நிரந்தரமாக தனித்து இருக்கிறதா அல்லது இயல்பாக சிவபெருமானுடன் ஒன்றி இருக்கிறதா என்பதே வேறுபாட்டின் மையமாக விளங்குகிறது. §§

பெரும்பாலும், ஒருமைவாதிகள் (அத்வைதம் பின்பற்றுவோர்) மற்றும் பன்மைவாதிகள் ஒரே எண்ணத்துடன் இருக்கிறார்கள். அவை முற்றிலும் முரணான தத்துவங்கள் இல்லை. இரண்டிற்கும் இடையே வேற்றுமைகளை காட்டிலும் ஒற்றுமை அதிகமாக இருக்கிறது. இரண்டு பிரிவுகளுக்கும் இடையே தொண்ணொற்றி ஐந்து சதவீத ஒற்றுமையும் ஐந்து சதவீத வேறுபாடும் இருக்கிறது. §§

பன்மைவாதிகளிடம் இருந்து முதலில் வந்த கடிதங்கள், அவர்கள் கருத்துக்கு ஆதரவாக இருந்தாலும் மென்மையாகவும் பணிவாகவும் இருந்தன. ஏதும் அறியாத குழந்தைக்கு பெரியவர் ஒருவர் புத்தி புகட்டுவது போல, அவை மென்மையாக ஹவாயின் சற்குருவிடம் இறைவன், ஆன்மா மற்றும் உலகம் நிரந்தரமாக தனித்து இருப்பதைப் பற்றி நினைவூட்டி, அவர் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள, தனது புத்தகங்கள் மற்றும் தனது சமய கோட்பாடுகளை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டன. தனது கருத்துக்கள் சரியானதே என்றும், தனது போதனைகள் யோக சுவாமி மற்றும் திருமூலரின் போதனைகளுடன் இணக்கத்தில் இருப்பதாகவும், அந்த பாரம்பரியத்தின் நவீன வேறுபாடு சைவ சித்தாந்தத்தின் இன்னொரு வடிவமாக இருக்கிறது என்று கவலையுடன் இருந்த பெரியவர்களுக்கு உறுதி அளிக்கும் பதில்களை அவர் அனுப்பி வைத்தார். §§

அது சண்டையின் தொடக்கமாக விளங்கியது. பல நாடுகளை சேர்ந்த சுவாமிகள் மற்றும் பண்டிதர்கள் சிறிய கவாய் மடத்தின் மீது தத்துவ சாஸ்திர வாதங்கள், பாரபட்சமான விவாதங்கள் மற்றும் அற்பமான விமர்சனங்கள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள். அவருக்கு உலக அரங்கில் இருந்த மதிப்பை அவர்கள் விரும்பவில்லை என்பதால், ஹவாய் குருவை கட்டுப்படுத்துவது அவர்களுக்கு முக்கியமாக இருந்தது; மற்றும் அவர்கள் நவீன யுகத்தில் சைவ சமயத்தின் மறுமலர்ச்சிக்கு அவரை அணைத்துக்கொண்டதைப் போல, அவரது முரணான நம்பிக்கைகளில் இருந்து தங்களை விலகிக்கொள்ள அவர்கள் தற்போது நிர்பந்திக்கப்பட்டார்கள். §§

குருதேவாவின் மனதை மாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அவரிடம் இருந்து அன்பையும், நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அவரது அணுகுமுறைக்கு ஆதரவை மட்டுமே வெளிப்படுத்தின. அதில் மிகவும் முக்கியமாக, உலகில் திருமந்திரத்தில் தேர்ச்சி பெற்ற மேதைகளில் முக்கியமானவராக கருதப்பட்ட, மெட்ராஸின் நீதிபதி மகாராஜன் குருதேவாவின் கருத்துக்களுக்கு தீவிர ஆதரவாளராக விளங்கினார். §§

பன்மைவாதிகள் இழிவாகவும் கீழ்த்தரமாகவும் செயல்படத்துவங்கி, புத்தக புழுக்களால் மட்டுமே பேச முடிந்த நுணுக்கமான நிந்தனைகளில் அந்த பண்புகளை வெளிப்படுத்தி, தரக்குறைவான மற்றும் பழித்துரைக்கும் பிரச்சாரத்தை தொடங்கினார்கள். குருதேவா தவறான, தற்கால சித்தாந்தத்தை உருவாக்கி உள்ளார் என்று பரிந்துரைத்து, அவரை சைவ சித்தாந்த நடவடிக்கைகளில் இருந்து விலக்கிவைக்க யோசித்தனர். அவர்கள் “ஹவாய் சைவ சமயம்" என்று அதை இழிவுபடுத்தினார்கள். §§

குருதேவா வளைந்து கொடுக்காததால், அவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்கவில்லை. அவர் அவர்களை அணுகி அஞ்சல் மூலம் விவாதம் நடத்த அழைப்பு விடுத்தார். அவர் சைவ மையங்களுக்கு பயணம் செய்து, பல நூற்றாண்டுகளாக சைவ சூட்சும ஞானத்தை நிலை நிறுத்தி, தமிழ் சாஸ்திரத்தின் ஆன்மீக களஞ்சியமாக இருக்கும் திருமந்திரத்தில் இருந்து வலுவான கருத்துக்களை எடுத்து, அந்த மையங்களில் அத்வைத சைவ சித்தாந்தம் தான் சிறந்தது என்று வாதாடினார். குருதேவா தனது மொழிபெயர்ப்பாளர்களின் மூலம், தனது விளக்கத்திற்கு சாதகமாக ஆங்கில வார்த்தைகளை மாற்றுகிறார் என்று பண்டிதர்கள் அவர் மீது குற்றம் சுமத்தி, வலுவாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நல்ல தகுதி வாய்ந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர்களை இந்த பணியில் ஈடுபடுத்தியதும், குருதேவா கூறியது சரி என்றும், திருமந்திரம் தைரியமாக அத்வைத கருத்தை தெரிவித்ததையும் பன்மைவாதிகள் தெரிந்துகொண்டார்கள். விவாதத்தில் நம்பிக்கை இழந்தவர்கள் செய்வதை போல, அவர்கள் தங்கள் புனிதமான நூலை தூக்கி எரிந்து, “நாம் இது வரை நச்சு கலந்த கிணற்றில் இருந்து தண்ணீரை குடித்துள்ளோம்,” என்று அறிவித்தனர். அவர்கள் சாஸ்திரத்தை புறக்கணித்தது அதிர்ச்சி தருவதாக இருக்கலாம், ஆனால் அவர்கள் அதை பின்பற்றினால் குற்றம் சுமத்தப்படுவார்கள் என்பதால், அவர்களுக்கு இதைத்தவிர வேறெந்த வழியும் தெரியவில்லை. §§

உலகில் இருக்கும் ஒவ்வொரு சித்தாந்தியும் அறிந்து இருந்த இந்த சர்ச்சையின் மீது ஜூலை 1983, கொலாலம்பூரில் ஒரு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அறநூறு அறிஞர்கள் பங்குபெற்ற இரண்டு நாள் நிகழ்ச்சியில், இரண்டு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். மாநாட்டில் விவாதங்கள் ஒருபுறம் நடந்துகொண்டு இருக்க, கடவுள் நம்பிக்கை பற்றிய விவாத மேடைக்கு நூல்களை கொண்டு வருவதற்காக நூலகத்தில் நீண்ட அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. வரலாற்று சிறப்புமிக்க இந்த இரண்டு நாள் மாநாட்டின் முடிவில் குருதேவா மட்டுமே ஒற்றை சிந்தனையுடன் வெளிவந்தார். அவர் அத்வைத சைவ சித்தாந்தத்தை தீவிரமாக ஆதரித்தார், மற்றும் அவர் மனதை யாராலும் மாற்ற முடியவில்லை.§§

இதை கவனித்ததாலும், குருதேவா மற்றும் அவரது துறவிகள் தொடர்ச்சியாக மலை போல வழங்கிய ஆதாரங்கள் காரணமாகவும், எதிர்கட்சியினர் மனம் மாறி அமைதி அடைந்து, ரிஷி திருமூலர் முதலில் தோற்றுவித்த அத்வைத பிரிவு மற்றும் அதன் பின்னர் தோன்றிய மெய்கண்டாரின் பன்மைவாத பிரிவு என்று உண்மையில் சைவ சித்தாந்தத்தில் இரண்டு பிரிவுகள் இருக்கிறது என்று சில மாதங்கள் முன்பு குருதேவா வழங்கிய தீர்வே சரியானது என்ற முடிவுக்கு வந்தனர். இதன் மூலம் பதட்டமான சூழ்நிலையில் அமைதி ஏற்பட்டு, சைவ சமயத்தின் எதிர்காலம் சிறப்பாக அமைய இருதரப்பும் சேர்ந்து பணியாற்ற வழிவகுத்தது. இந்த தீர்மானம் பற்றி குருதேவா பின்னர் நினைவுகூர்ந்தார்:§§

ஒருமைவாத/பன்மைவாத சர்ச்சை, ஒரு முடிவான தீர்மானம் மட்டுமே இருக்க முடியும் என்ற எங்கள் அறிக்கையை மீண்டும் தூண்டிவிட்டு, சைவ சித்தாந்த்திற்குள் பன்மைவாதிகளுக்கு ஒரு முடிவான தீர்மானமும், அத்வைத ஈஸ்வரவாதத்தை பின்பற்றுவோருக்கு ஒரு முடிவான தீர்மானமும் மட்டுமே இருக்க முடியும் என்ற புரிதலுடன் முடிவுக்கு வந்தது. இது தர்மபுர ஆதீனத்தின் 26 ஆவது மகாசன்னிதானமாக இருந்த ஶ்ரீ ல ஶ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியா சுவாமிகளின் தென்னிந்திய மடத்தில் பிப்ரவரி 1984 நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், வேத சாஸ்திர வல்லுனர்கள், கலைத்துறை உறுப்பினர்கள் மற்றும் வாக்குவாதத்தில் ஈடுப்படிருந்த பண்டிதர்கள் கலந்து கொண்டார்கள். §§

இதனால் நவீன இந்து சமயமாக இருக்கும் சனாதன தர்மத்தின் கோட்பாடுகள், எல்லோருக்கும் நல்லதை செய்வதற்காக ஒரு ஆக்கப்பூர்வமான கூட்டுறவில் அத்வைத பிரிவு மற்றும் பன்மைவாத பிரிவை கட்டுப்படுத்தி, உலகெங்கும் இந்து வம்சாவளியினர் பரவி இருந்ததால் முன்னேறிக்கொண்டு, தவிர்க்க முடியாத இந்து சமய தன்னம்பிக்கையை தூண்டிக்கொண்டு, மாபெரும் இந்து மறுமலர்ச்சியில் இணைந்து செயல்படுகின்றன. இந்த இரண்டு பிரிவுகளுக்கும் இடையே தற்போது அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை நிலவுகிறது என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.§§

அன்பு மற்றும் நம்பிக்கை கலந்த இந்த இணக்கத்திற்கு, நாங்கள் தர்மபுர ஆதீனத்தின் பரமாச்சாரிய குருவை முதன் முறையாக ஜனவரி 30, 1981 சந்தித்த போது அடிக்கல் நாட்டப்பட்டதாக எங்களுக்கு தோன்றுகிறது. நான் நாற்பது கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளை சேர்ந்த சீடர்களுடன் சைவ சமயத்தின மிகவும் புனிதமான தலங்களுக்கு புனித யாத்திரை சென்ற போது, பரமாச்சாரிய குருவின் பழமையான தர்மபுர ஆதீனத்திற்கு வருகை தருமாறு அவரது தூதர்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்தனர். §§

பதினாறாம் நூற்றாண்டின் மகாராஜாக்களால் கட்டப்பட்ட அரண்மனையின் ஆன்மீக புகலிடத்தில் உட்புறமாக இருந்த அறைகளில் நாங்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கொண்டோம். தங்கள் குருவுடன் அமர்ந்து இருந்த கிழக்கு நாட்டு பண்டிதர்களுடன், தங்கள் குருவுடன் அமர்ந்து இருந்த மேற்கு நாட்டு பண்டிதர்கள், வரலாற்று தொடக்கத்தில் இருந்து மனிதனின் மனதை குழப்பும் தத்துவ புதிர்களை பற்றி விவாதித்தது, ஒரு கண்ணைக் கவரும் காட்சியாக இருந்தது. நாங்கள் மொழிபெயர்ப்பாளர்கள் உதவியுடன் இறைவன், ஆன்மா மற்றும் உலகம் பற்றியும், இந்த தலைசிறந்த தகவலை அடுத்த தலைமுறைக்கு வழங்க, தென் இந்தியா மற்றும் உலகமெங்கும் சைவ சமய பள்ளிகளின் உடனடி தேவையைப் பற்றியும் நாங்கள் பேசினோம். §§

உற்சாகமான விவாதத்திற்கு பிறகு, ஒரு விசேஷ விருந்து பரிமாறப்பட்டது. அதன் பின்னர், எங்கள் சுவாமிகளில் ஒருவர் பரமாச்சாரியார் அணிந்து இருந்த மிகப்பெரிய காதணிகளை பற்றி விசாரித்து, அதைப்போன்று எனக்கும் கிடைக்குமா என்று சகஜமாக கேட்டார். குரு எந்த தயக்கமும் இன்றி ஒரு சிப்பந்தியை அழைத்து, சில அறிவுறுத்தல்களை முணுமுணுத்தார். சிறிது நேரம் கழித்து, அவர் அணிந்து இருந்ததைப் போன்ற ஒரு காதணி ஜோடி அவர் கைக்களுக்கு வந்து சேர்ந்தன. இது எனக்காக கொண்டு வரப்பட்டவை என்று பரமாச்சாரியார் குறிப்பிட்டார். அவர் தாராள மனதுடன் எங்கள் மறுப்புக்களை புறக்கணித்து, பரமாச்சாரிய குரு மகாசன்னிதானம் ஆதீனக்கர்த்தாரின் பாரம்பரிய சின்னமான அந்த பெரிய தங்க காதணிகளுக்கு ஏற்றார் போல், என் காதில் இருந்த துவாரங்களை பெரிதுபடுத்தி அவரே பொருத்த ஆரம்பித்துவிட்டார். அவர் அதன் பிறகு எனக்கு மற்றும் என்னுடன் வந்திருந்த சுவாமிகளுக்கு புதிய காவித்துணியை அன்பளிப்பாக வழங்கினார். §§

நாங்கள் மேற்கொண்ட சைவ சித்தாந்த செய்தியை பரப்பும் பணிக்கு உதவிகரமாக, சன்னிதானம் பெருந்தன்மையுடன் வழங்கிய எதிர்பாராத பரிசை நல்லெண்ண நடவடிக்கையாக ஏற்றுக்கொண்டோம். ஆனால் மிகவும் முக்கியமாக, கிழக்கில் பன்மைவாத சைவ சித்தாந்தத்தை உறுதியாக போதித்த ஒரு மடத்திற்கும், மேற்கில் அத்வைத சைவ சித்தாந்தத்தை தைரியமாக பிரகடனம் செய்த இன்னொரு மடத்திற்கும் இடையே நாங்கள் மேற்கொண்ட கூட்டுறவு முயற்சிகளின் ஒரு சின்னமாக விளங்கியது. நடந்தவை அனைத்தும் நல்லதுக்கே என்று நாங்கள் எண்ணிக்கொண்டோம். எதிர்காலத்தில் சைவ சித்தாந்தத்தின் வளர்ச்சிக்கு தர்மபுர ஆதீனத்தின் குரு மகாசன்னிதானம் மற்றும் கவாய் ஆதீனத்தின் குரு மகாசன்னிதானமும் இணைந்து செயல்படுவார்கள் என்பதை அறிவுள்ள எல்லா இந்துக்களும் அறிந்துக்கொள்வார்கள் என்பதை, பரமாச்சாரியார் காதணியை பரிசாக அணிவித்த காட்சியை பார்த்துக்கொண்டு இருந்த பண்டிதர்கள் தெரிந்துகொண்டார்கள். §§

அன்று மாலை நேரத்தில், பெரிதாக இருந்த கோயில் குளத்தை பார்த்த வண்ணம் உட்புறமாக அமைந்த ஒரு மிகப்பெரிய மண்டபத்தில் அமர்ந்து இருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, நான் சொற்பொழிவு நடத்த வேண்டும் என்று மகாசன்னிதானம் என்னிடம் கேட்டுக்கொண்டார். நான் சைவ சமயம் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பெருமை மற்றும் அவை மேற்கத்திய நாடுகளில் பரவுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றியும் பேசினேன். சைவ சித்தாந்தத்தை பரப்புவதற்கு நான் மேற்கொண்ட பணியை கௌரவிக்கும் காகித சுருளுடன், ஒரு அலங்கார வெள்ளி பெட்டகத்தை பரமாச்சாரியார் எனக்கு வழங்கியவுடன் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன. §§

அதன் பின்னர் வாழ்த்துக்களை பொறித்த பிறகு, அந்த பெட்டகம் எனக்கு அதிகாரப்பூர்வமாக சிதம்பரம் கோயிலில் ஆயிரம் கால் மண்டபத்தில், தமிழ்நாட்டின் பொக்கிஷமாக விளங்கிய குமாரி ஸ்வர்ணமுகியின் புனிதமான பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு முன்பாக வழங்கப்பட்டது. எங்கள் இன்னர்சர்ச் பயண-ஆய்வு திட்டத்தின் அங்கமாக, அந்த நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோயில்களில் தேவதாசிகள் நடனமாடுவதை ஆங்கிலேய அரசு தடை செய்ததால், அது ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு கோயிலில் நடைபெற்ற முதல் நடன நிகழ்ச்சியாக இருந்தது. அந்த மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிகளை காணும் தூரத்தில் 15,000 க்கும் மேலான பக்தர்கள் இருந்ததாகவும், 40 ஏக்கர் கோயில் வளாகத்தில் 300,000 க்கும் மேலானோர் கூடியதாகவும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிதம்பரம் கோயிலில் மீண்டும் நடன நிகழ்ச்சி நடைபெறலாம் என்பதையும், அந்த கோயிலில் மாலை நேரத்தில் நடைப்பெற்ற மிகவும் பிரபலமான மற்றும் அற்புதமான நிகழ்ச்சியின் போது, 108 கரணங்களை வெளிப்படுத்தும் இந்த விசேஷமான நடனத்தை காண சிதம்பரம் நகரம் முழுவதில் இருந்தும் மற்றும் அருகில் இருந்த கிராமத்தில் இருந்தும் மக்கள் வந்து இருந்தார்கள். தடை செய்யப்பட்டு இருந்த இந்த பாரம்பரியம், சிவபெருமானின் மிகவும் புனிதமான கோயிலில் இன்றும் தொடர்கிறது. §§

அதனால் அந்த விசேஷமான நாளில், மீண்டும் தொடங்கிய சிவபெருமானுடன் திருநடனம், என்றுமே முடிவு பெறுவது இல்லை. தென் இந்தியா மற்றும் உலகெங்கும் இருக்கும் ஒவ்வொரு சைவ கோயிலிலும், வழிபாட்டின் முக்கிய அம்சமாக நடனம் இடம்பெறும் நாளுக்காக நாங்கள் காத்து இருக்கிறோம். தங்கள் சிறுவர்கள் மற்றும் சிறுமியர் மகாதேவர் மற்றும் தேவர்களை நினைத்து ஆடும் போது ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்காவில் இருக்கும் கோயில் சமாஜங்கள் அதிக மகிழ்ச்சி அடைய ஆரம்பித்து விட்டதால், அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த நடனம் சிவபெருமான் உருவாக்கிய உலகில் அவரது கருணை இருப்பிற்கு முழுமையான உருவகமாக விளங்குகிறது!§§