குருமார்களின் சரித்திரங்கள்

Page 40: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/40_guru06_03.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

அத்தியாயம் இருப்பத்தி-ஐந்து §

ஒரு சைவ சமயக்கோட்டையை நிறுவுதல்§

1973 ஆம் ஆண்டு நடராஜர் சிலையை ஸ்தாபனம் செய்த பிறகு, ‘கடவுள்’ சிவன் கோயிலின் சக்தி ஒப்புயர்வற்ற நிலையை பெற்றது. சிவபெருமானின் மிகவும் பழமையான பெயர்களில் ஒன்றாக விளங்கும் கடவுள் என்ற தமிழ் சொல், “உள்ளார்ந்து மற்றும் யாவும் கடந்த நிலையில் இருப்பவர்" அல்லது “உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் இருப்பவர்" என்ற பொருளை தருகிறது. மாஸ்டரின் தொலைநோக்கு பார்வை, சிவபெருமானின் இருப்பு மற்றும் யோகத்திற்கு முருகப்பெருமான் வழங்கிய உந்துதலின் இயல்பான சந்திப்பாக, பார்த்தற்கு எளிமையாக இருந்த இந்த கோயில், தொடக்கத்தில் இருந்து வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சக்தியுடன் இருந்தது. மாற்றம், புணர்நிர்மாணம் மற்றும் அழிவின் பிரிவாக பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருக்கும் அக்னி இருப்பதால், மாஸ்டர் அந்த கோயிலை அக்னி தலம் என்று குறிப்பிட்டார். இந்த கோயிலுக்குள் வந்த சிலர் கட்டுப்படுத்த முடியாமல் அழ ஆரம்பித்தனர். அவர்கள் ஒரு நிலையில் கோயிலுக்குள் நுழைந்து, தங்கள் வாழ்க்கையில் பெரிய மற்றும் சிறிய மாற்றங்களுடன் இன்னொரு நிலையில் வெளியேறினார்கள். பக்தர்கள் கோயிலின் பேராற்றல் நிறைந்த நிலைமாற்ற சக்தியின் மூலம் முறியடிக்கப்பட்ட ஆற்றலினால் அதிக குழப்பமடையும் அளவிற்கு, கோயில் அதிக வலிமை வாய்ந்ததாக இருப்பதை கவனித்த மாஸ்டர், சிறிது காலத்திற்கு சைவ உணவு உண்பவர்களை மட்டுமே அனுமதித்தார். §§

image§

ஆறு அடி உயர விநாயகர் மற்றும் முருகனின் கருங்கல் சிலைகள், ஒரு வெண்கல நடராஜர் சிலை, 16-டன் எடையுள்ள ஒரு நந்தி மற்றும் உலகின் மிகப்பெரிய படிக சிவலிங்கத்தை கப்பலில் வரவழைத்து, "தண்ணீரால் முழுமையாக சூழப்பட்ட" என்று அவர் நகைச்சுவையாக அழைத்த கவாய் தீவில் 'கடவுள்' கோயிலை ஸ்தாபனம் செய்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இந்த புதிய சக்தியில் மூழ்கி இருப்பதை துறவிகள் உணர்ந்து கொண்டார்கள். ஒழுக்கம், மாற்றம், ஆன்மீக சுத்திகரிப்பு மற்றும் தவத்தின் கடினமான பல மாற்றங்கள் நிறைந்த சூழலை எதிர்கொள்ள பலர் நிர்பந்திக்கப்பட்டார்கள், அவர்கள் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் குரு அவர்களுக்கு வழங்கியிருந்த சோதனைகளுக்கு சான்றாக விளங்கியது. இந்த தீவிரமான நடவடிக்கைகள், ஒரு நிலைமாற்ற காலத்தை மற்றும் சைவ துறவிகளாக அவர்கள் வழங்கியிருந்த உறுதிமொழிகள் மீது பொறுப்புணர்வை உறுதிப்படுத்தும் காலத்தை, அந்த சமூகம் முழுவதற்கும் ஒரு கடினமான காலத்தை துவக்கி வைத்தது. இது சாஸ்திரங்கள் வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் மாஸ்டர் சுப்பிரமுனியாவின் திடமான கோரிக்கைகள், அவர் அவர்களது இலட்சிய வாழ்க்கை மீது வைத்திருந்த எதிர்பார்ப்புக்கள், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முழு நிறைவான தர்மம் ஆகியவற்றை சீர்படுத்திக் கொள்ளும் காலமாகவும் இருந்தது. “துறவற வாழ்க்கை எளிமையானது என்று யாரும் கூறியிருக்க மாட்டார்கள்,” என்று அவர் ஆறுதலாக கூறுவார்.§§

அவர் புளோ புக் (flow book) என்கிற ஒரு வழிகாட்டும் கையேட்டை உருவாக்கினார். அந்த கையேடு ஒரு சைவ துறவி எப்படி வாழ்வது, பதில் சொல்வது, கற்பது, பேசுவது, சமைப்பது, சுத்தம் செய்வது, அத்தியாவசிய கடமைகளை செய்வது, உத்தரவுகளை ஏற்றுக்கொள்வது, ஆடை அணிவது, சாப்பிடுவது, உறங்குவது, தியானம் செய்வது, வழிபடுவது, அர்பணித்துக் கொள்வது மற்றும் மற்றவர்களுடன் இணங்கி வாழ்வதைப் பற்றி நுணுக்கமாக விவரித்தது. அதில் இடம்பெறும் ஒவ்வொரு பதிவிற்கும், அவர் தனது ஒப்புதலை வழங்கும் வண்ணம் கையொப்பமிடுவார். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் அந்த புளோ புக்கில் விவரிக்கப்பட்டு இருந்தது. சற்குருவின் ஒவ்வொரு அறிவுறுத்தலும் புளோ என்று அழைக்கப்பட்டு, எந்த விதிவிலக்கும் இல்லாமலும், காரணம் எதுவும் சொல்லாமலும் தொடர்ந்து பின்பற்ற வேண்டியிருந்தது. §§

‘கடவுள்’ கோயிலின் தீவிரமான சக்தி, ஒரு சைவத்துறவியிடம் ஏற்றுக்கொள்ள முடியாத பழக்கங்கள் மற்றும் அணுகுமுறைகளை நீக்குவதற்காக சற்குரு வழங்கிய புதுப்பிக்கப்பட்ட ஆணை மற்றும் சமூகத்தில் இருந்த அனைவரும் முழுமையான, முறையான, திருப்தியான இந்துவாக இருக்கவேண்டும் என்ற புதிய தேவை ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து, துறவிகள் மத்தியில் அபூர்வமான சந்தேகங்களை ஏற்படுத்தியது. முன்பு பின்பற்றிய சமயத்தின் தொடர்புகளை முழுமையாக துண்டிக்க வேண்டும் என்று மாஸ்டர் தெளிவாக குறிப்பிட்டார். முழுமையான சைவத்துறவிகள் கடைப்பிடிக்க வேண்டிய இந்த ஆணை, அசாதாரண தைரியத்துடன் சவால்விடும் தேவையாக இருந்தது. §§

சில துறவிகள் கிழக்கத்திய மேசியா (உலகை காக்க வந்த தேவதூதர்) போன்று இருந்த ஒருவருடன் சேர்ந்து இருக்க வந்தனர். சிலர் தங்களை எந்த சமயத்தையும் ஏற்றுக்கொள்ளாத சமத்துவவாதிகளாக நினைத்து இருக்கலாம். சிலர் மாற்றம் பெறுவதில் மனநிறைவை அடைந்து இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், பலர் சமூகத்தை விட்டு ஒன்றன் பின் ஒன்றாக கிளம்பினார்கள். அவர்கள் மீண்டும் தங்கள் குடும்பங்களை நோக்கி, மீண்டும் தங்கள் தனிப்பட்ட கர்மவினைகளை நோக்கி, துறவற பாதைக்கு வரும் முன்னர் இருந்த இடத்தை நோக்கி இருவராக மூவராக தொடர்ந்து வெளியேறிக்கொண்டு இருந்தனர். “நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவர்கள்?” மற்றும் “மாஸ்டர் எந்த மதத்தை போதிப்பதாக நினைக்கிறீர்கள்?” போன்ற கேள்விகள் முதலில் துறவிகளிடமும் பிறகு உறுப்பினர்களிடமும் கேட்கப்பட்ட போது, இந்த வெளியேற்றங்கள் நடைப்பெற்றன. துறவற சமூகம் மற்றும் சாதாரண அங்கத்தினர்களில் இருந்து ஐம்பது சதவீதம் வெளியேறியதால், இது ஒரு மிகப்பெரிய எழுச்சியாக இருந்தது. §§

அந்த வெளியேற்றங்களை லௌகீக கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, ஒரு நிலப்பகுதி வழியாக பாய்ந்து செல்லும் சூறாவளி, அங்கிருக்கும் பாதி கட்டிடங்களை நிலத்தில் சாய்ப்பதைப் போல, அந்த வெளியேற்றங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தின. அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள், அர்ப்பணிப்புகள் அனைத்தும் வீணாகின. அதை மாஸ்டர் எவ்வாறு எதிர்கொண்டார்? அவர் மகிழ்ச்சியடைந்தார். தங்களது சந்தேகங்களின் மூலம், எதிர்காலத்தில் தனது சந்நியாச சமூகத்திற்கு கடினமான கர்மவினைகளை கொண்டு வரவிருந்த நபர்களை வெளியேற்றிய சிவபெருமானுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அதற்கு வாய்ப்பு இனி இல்லை என்பதால், அவர் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்தார்! §§

image§

பிப்ரவரி 15, 1975 மாஸ்டருக்கு மூன்று பாகமாக தோன்றிய காட்சி, அவர் தனது இறைவன் சிவன் கோயிலை கட்டுவதற்கு காரணமாக அமைந்தது. அந்த காட்சியில் சிவபெருமான் பக்தர்களுடன் ஒரு பள்ளத்தாக்கு வழியாக நடந்து செல்வதையும், அதன் பிறகு சிவபெருமானின் திருமுகத்தை நெருக்கமாக பார்ப்பதையும், பிறகு ஒரு சுயம்பு சிவலிங்கத்தின் மீது அமர்ந்து இருப்பதையும் கண்டார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அமெரிக்காவின் முதல் ஆதீனம் §

பிப்ரவரி 15, 1975 அன்று விடியற்காலையில், மாஸ்டர் தனது ரியோகன் அறையில் ஒரு டாடாமி பாயில் படுத்து இருந்தபோது, விழித்தும் இருக்காமல் கனவுகளும் இல்லாத ஆழமான உறக்கத்தில் இருந்தார். தூல உணர்வை கடந்து இருந்த அந்த தெளிவான பரவெளியில், 48 வயதான சற்குரு அனுபவித்த மூன்று காட்சிகள், இறைவன் கோயில் என்று அழைக்கப்படும் சிவபெருமானின் கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள சன் மார்க சரணாலயத்திற்கு ஆன்மீக தொடக்கமாக அமைந்தது. §§

நான் வைலுவா நதிக்கு அருகில் இருந்த புல்வெளி வழியாக சிவபெருமான் நடந்து செல்வதை பார்த்தேன். அவரது திருமுகம் என்னை பார்த்துக்கொண்டு இருந்தது. அதன் பிறகு அவர் ஒரு பெரிய பாறை மீது அமர்ந்து இருந்தார். நான் அவருக்கு இடதுபுறமாக அமர்ந்து இருந்தேன். இது தான் நான் கண்ட காட்சி. அது வருடங்கள் செல்ல செல்ல அதிக தெளிவடைந்தது. நான் மீண்டும் லௌகீக உணர்வை பெற்றதும், அந்த பெரிய பாறை எங்கள் மடத்தின் நிலப்பகுதியில் எங்காவது இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து அதை தேடத் தொடங்கினேன். §§

எனது சற்குருவின் வழிகாட்டலுடன், நான் நிலத்தை சமன் செய்யும் ஒரு புல்டோசர் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து, அந்த காலத்தில் எங்கள் நிலப்பகுதியின் வடக்கே நிரம்பி இருந்த எருமைப்புல் மற்றும் காட்டு கொய்யா மரங்கள் வழியாக நான் நடந்து செல்ல, என்னை பின்தொடர்ந்து வருமாறு அதன் வாகன ஓட்டியிடம் அறிவுறுத்தினேன். நான் காட்டின் தென்பகுதி வழியாக முன்னேறி செல்ல, அந்த இயந்திரம் என் பின்னால் ஒரு பாதையை அமைத்துக்கொண்டு வந்தது. சுமார் அரை மைல் தூரம் சென்ற பிறகு, நான் இளைப்பாற ஒரு சிறிய மரத்தின் அருகில் அமர்ந்து கொண்டேன். அப்போது காற்றோட்டம் இல்லை என்றாலும், திடீரென்று மரத்தின் இலைகள் உற்சாகமாக எதையோ தெரிவிப்பதைப் போல மினுமினுத்தன. நான் அந்த மரத்திடம், “என்ன சொல்ல வருகிறாய்?” என்று கேட்டேன். அதற்கு பதிலாக, எனது கவனம் நான் அமர்ந்து இருந்த இடத்திற்கு வலது புறம் திரும்பியது. §§

நான் உயரமாக வளர்ந்திருந்த புல்லை சிறிது வளைத்த போது, அங்கே சுயம்பு லிங்கம் போல ஒரு பெரிய பாறையை பார்த்தேன். எனக்கு தோன்றிய காட்சியில் இந்த பாறையின் மீது சிவபெருமான் அமர்ந்து இருந்தார். நான் வியக்கவைக்கும் வகையில் ஒரு வலுவான அதிர்வை உணர்ந்தேன். புல்டோசர் இயந்திரத்தின் பாதை நேராக அந்த புனிதமான பாறைக்கு அழைத்து சென்றது. அந்த பாறையை சுற்றி ஐந்து சிறிய பாறாங்கற்கள் இருந்தன. இறைவனை சென்றடையும் “நேரான அல்லது புனிதமான பாதை” என்பதை குறிப்பிடும் சன் மார்கம் உருவாக்கப்பட்டு இருந்தது. “எதிர்காலத்தில் இந்த இடத்திற்கு உலகமே வந்து வழிபடப்போகிறது,” என்று உட்புறமாக ஒரு குரல் கூறியது. இறைவனுடன் ஐக்கியமாவதன் மூலம் ஒவ்வொரு ஆன்மாவும் முக்தி பெறும் பாதையை சன் மார்கம் குறிப்பிடுகிறது.§§

அந்த காட்சி வெளி உலகில் ஏற்படுத்திய வலுவான மாற்றங்களுக்கு விதையாக இருந்ததால், அது மாஸ்டரின் உட்புற உலகில் வலுவான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கவேண்டும். அவர் உடனடியாக தொடங்கிய ஒரு நீளமான பயணம் அவரது சீடர்கள் வாழ்க்கையில் சைவசமயம் ஆழமாக வேரூன்ற உதவியதோடு, வாழ்கையை மாற்றி அமைத்த அவரது கற்பனையை கௌரவிக்கும் வகையில் ஒரு கோயிலை கட்டுவதற்கு மட்டுமல்லாமல், மூன்று வருடங்களுக்கு முன்பாக அவர் தென்னிந்தியாவிற்கு சென்று பார்த்திருந்த மிகப்பெரிய கோயில்களைப் போல ஒரு பாரம்பரிய ஆதீனத்தை கட்டவும் வழிவகுத்தது. §§

அதைப்போன்று கோயில் மற்றும் மடம் ஒன்றாக சேர்ந்த வளாகம், மேற்கத்திய நாடுகளில் இருக்கும் இந்துக்களுக்கு இல்லாததை உணர்ந்த மாஸ்டர், அதை கட்டுவதற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். வழிகாட்டுவதற்கு நிர்வாகங்கள் எதுவும் இல்லாததால், அவர் ஆன்மீக மற்றும் லௌகீக நிர்வாக அமைப்புக்களை தனக்குள் ஆய்வு செய்து, தான் நிர்வகித்த பல நிறுவனங்களின் ஒவ்வொரு அம்சத்தையும் வழிநடத்த, துறவிகளின் வாழ்க்கை மற்றும் உறவுகளை பற்றி தெரிவிக்க, அவர் செயல்முறைகள் மற்றும் வழிகாட்டல்களின் ஒரு அற்புத தொகுப்பை உருவாக்கினார். இந்த தருணத்தில் மாஸ்டர் தனது தலைமையகத்தின் பெயரை சிவாசிரமத்தில் இருந்து கவாய் ஆதீனம் என்று மாற்றினார். அதன் பெயர் அந்த தீவில் இருந்த மக்களுக்கு பரிச்சயமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக ‘கவாய் இந்து மோனாஸ்ட்ரீ’ என்றும் அழைத்தார். §§

கவாய் மண்ணில் தன்னை வலுவாக அமைத்துக்கொள்ள தொடங்கியதும், அவரது பயணங்கள் குறைந்தன. மூத்த துறவிகள் அவரது அறிவுறுத்தலின் பேரில், சைவ சித்தாந்தத்திற்கும் ஆதி சங்கரர் எழுதிய அத்வைத வேதாந்தத்திற்கும் இடையே இருந்த தொடர்பு மற்றும் வேற்றுமை பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டனர். ரிஷி திருமூலரின் திருமந்திரம் மற்றும் திருவள்ளுவரின் திருக்குறள், சைவ சித்தாந்தத்தில் ஆக்கபூர்வமான ஆன்மீக உரைகள் மொழிபெயர்க்கப்பட்டு, மனப்பாடம் செய்யப்பட்டு, அதைப்பற்றி அவரது ஊக்கமளிக்கும் உரைகளில் கருத்தும் தெரிவிக்கப்பட்டன. அவர் தென்னிந்தியாவில் செதுக்கிய திருமூலர் மற்றும் திருவள்ளுவரின் ஆளுயுயர கருங்கல் மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து, அவற்றை தனது மடத்திற்கு கொண்டு வந்து, அவர்களது மனோஉணர்வு மற்றும் இறையியல் இருப்பிற்கு கண்களால் பார்க்கக்கூடிய வடிவத்தை வழங்கினார். §§

1970 களின் இறுதியில், மகாபலிபுரத்தை சேர்ந்த நீலமேகம் ஸ்தாபதி என்கிற பிரபல சிற்பியின் மூலம் செதுக்கப்பட்ட தொந்தி கணபதி மற்றும் தனது மயில் வாகனத்தில் கம்பீரமாக அமர்ந்து இருந்த முருகப்பெருமானின் அருமையான ஆறு அடி உயர சிலைகளை மாஸ்டர் வாங்கினார். 1979 பிப்ரவரி மாதம், அவை இந்தியாவில் இருந்து வந்து இறங்கின மற்றும் மாஸ்டர் அவற்றை ஜூன் 1 ஆம் தேதி, ‘கடவுள்’ இந்து கோயிலில் ஸ்தாபனம் செய்து வைத்தார். மேற்கே வெகு தொலைவில் இருந்த ஒரு அமெரிக்க தீவில், சைவ சமய இந்து மதம் முழுமையாக வெரூன்றிக்கொண்டு இருந்தது, மற்றும் அதன் ஒவ்வொரு அம்சமும் யதார்த்தமானது, தவிர்க்க முடியாதது, பரிணாம வளர்ச்சி என்று சிலரால் கருதப்பட்ட இந்து சமயத்தின அமெரிக்க வடிவமாக இருக்காமல், பல்லாயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்படும் முழுமையான மற்றும் தொகுக்கப்படாத இந்து சமயமாக இருந்தது. §§

‘கடவுள்’ கோயிலுக்கு வெளியே, சிவபெருமானுக்கு நிரந்தர காவலாக அமர்ந்திருக்க, ஒரு 32,000 பவுண்டு எடையுள்ள கருப்பு கல் நந்தியும் கொண்டு வரப்பட்டது. அதைப்பற்றிய செய்தி, சேனல் நைன் தொலைக்காட்சி செய்திகளில் “16 டன் எடையுள்ள ஒரு காளைமாடு” என்ற வேடிக்கையான தலைப்புடன் தொடங்கியது. 1976 ஆணை வழங்கப்பட்ட அந்த மாபெரும் சிற்பத்தை, நீலமேகம் ஸ்தாபதி நிறைவு செய்ய நான்கு வருடங்கள் ஆனது, மற்றும் அது இறுதியாக ஆகஸ்ட் 16, 1980 ஆம் ஆண்டு வந்து இறங்கியது. “மகிழ்ச்சியை தரும் தெய்வமான" அந்த நந்தி பகவானை, தனது வாழ்நாளின் தலைசிறந்த படைப்புக்களில் ஒன்றாக கருதுவதாக அந்த சிற்பி குறிப்பிட்டார். ஆறு அடி உயரம், ஒன்பது அடி நீளம் மற்றும் ஐந்து அடி அகலத்தில் இருந்த அந்த மிகப்பெரிய கருங்கல் காளை மாடு, இந்தியாவில் 20 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டதில் மிகவும் பெரியதாகவும், பழங்காலத்துடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய ஐந்து சிற்பங்களில் ஒன்றாகவும் இருந்தது. §§

image§

தனக்கு காட்சி அளித்த சிவலிங்கத்தை தன்னால் நிச்சியமாக கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன், மாஸ்டர் ஒரு புல்டோசர் இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து, அதன் வாகன ஒட்டியிடம் அடர்த்தியான புதர் வழியாக தன்னை பின்தொடர்ந்து வருமாறு அறிவுறுத்தி, மரங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட பாதை, சன் மார்க பாதையாக மாறியது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

‘கடவுள்’ கோயில் அடுத்த பத்து வருடங்களுக்கு, எளிதில் உணரக்கூடிய சக்தியால் அதிர்ந்துக்கொண்டு இருந்தது மற்றும் அந்த சக்தி மடத்தை நிலை நிறுத்தி, வந்து தரிசித்தவர்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. கோயிலில் அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்ட நிலையில், 1984 வருடத்து இலையுதிர் காலம் வரை மேலும் கட்டுமான பணிகள் நடத்துவதற்கு தடை விதித்தார். அதன் பிறகு அவர் கோயிலை சுற்றி செடிகளை பயிரிட்டு அதன் நிலத்தோற்றத்தை அழகுப்படுத்தி, பல நூறு அடிகளுக்கு கற்காரை பாதைகளை அமைத்து, ‘கடவுள்’ கோயிலின் உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் சாயம் பூசப்படாத வெற்று கற்காரை சுவர்களை எரிமலை பாறையினால் அகஉறை வழங்கியதோடு சுவர்கள், தரைகள் மற்றும் உட்கூரையில் ஓடுகளை பதித்து, அவர் தென்னிந்தியாவில் விசேஷமாக அச்சில் வார்த்து எடுத்த, சிவபெருமானின் 108 நடன தாண்டவங்களை சித்தரிக்கும், 108 வெண்கல தாண்டவ மூர்த்திகளை வைக்க 108 அலமாரிகளை அமைத்து, 1970 களின் தொடக்கத்தை நினைவூட்டும் ஒரு மிகப்பெரிய கட்டுமான பணியை முன்னின்று நடத்தினார். §§

மார்ச் 1985 ‘கடவுள்’ கோயில் ஸ்தாபனம் செய்து பன்னிரண்டு வருடங்கள் பூர்த்தி அடைந்தது. இந்து கோயில்களின் வாழ்நாளில் பாரம்பரிய முறைப்படி பன்னிரண்டு வருட நிறைவை குறிப்பிடும் மாபெரும் குடமுழுக்கு விழாவிற்கு முன்பு, கோயிலை புதுபித்து சீரமைக்கும் பணி அனுமதிக்கப்படுகிறது. இதை கோயிலின் அமைப்புமுறையை முழுமையாக மறுதொடக்கம் செய்வது என்றே குறிப்பிடலாம். இந்த சடங்கின் போது விரிவான ஹோமங்களின் மூலம் கோயிலில் இருந்து தெய்வீக சக்தி நீக்கப்பட்டு, தூல சீர்திருத்தங்கள் முடிவடைந்ததும் மீண்டும் வழங்கப்படுகிறது. இதை மாஸ்டர் ஒரு முறை முயற்சி செய்து பார்த்தார். §§

இந்த விரிவான சடங்குகளை நடத்த மதுரையில் இருந்து ஒருவரும், பெங்களூரில் இருந்து இன்னொரு ஆசாரியரும் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் நடத்திய சடங்குகளின் போது கோயிலில் இருக்கும் தெய்வீக சக்தியை விசேஷ கும்பங்களில் எழுந்தருள செய்து, அதை அதன் பிறகு அருகில் இருந்த ஒரு ஆலமரத்திற்கு அடியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் எழுந்தருள செய்தார்கள். §§

மூன்று நாட்கள் நடந்த விழாவின் தாக்கம் நுட்பமாக இல்லாமல், தீவிர விளைவுகளை ஏற்படுத்தியது. அப்போது பூமி தனது அச்சில் இருந்து விலகியது போல தோன்றியது. அது விநோதமாக, பதட்டம் நிறைந்த மற்றும் வெளிப்படையான அச்ச உணர்வை ஏற்படுத்தியது. ஆன்மீக சக்தியை இழந்திருந்த அந்த கோயில், ஆளில்லாத கிடங்கு போல ஏற்படுத்திய உணர்வு குருவிற்கும் மடவாசிகளுக்கும் பிடிக்கவில்லை. பூமியில் சமாந்தரமாக பெய்த மழை, இடி, மின்னல் மற்றும் ஊளையிடும் காற்று என்று பருவநிலை விசித்திரமாக மாறியது. மடம் அதிக வேதனையை அனுபவித்தது. அந்த சடங்கு பாரம்பரிய முறைப்படி பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தவேண்டியிருந்தாலும், அதை மீண்டும் நடத்தபோவது இல்லை என்று மாஸ்டர் உறுதி எடுத்துக்கொண்டார். பல மாதங்களுக்கு பிறகு சான்னித்ய திரும்பியது. §§

image§

ஒரு கிறுத்துவர் அவரிடம் சீடராக விரும்பினால், அவரது தேவாலய மதகுருக்களிடம் ஆசிகளை பெற்று, முறையாக விடுதலை பெற்று வருமாறு அவர் அனுப்பி வைப்பார். அவர் மற்ற சமயம் சார்ந்தவர்களை வஞ்சகமாக கவர்வதை தீவிரமாக வெறுத்ததால், அவர் ஒரு ஒழுங்குமுறையான மத மாற்றத்தை உருவாக்கினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ஒரு யோக சமூகத்தை உருவாக்குதல் §

ஒவ்வொருவருக்கும் ஒரு திசையை வழங்கும் நோக்கத்துடன், ஒவ்வொரு வருடத்திற்கும் பெயரை வைப்பது வெகு நாட்களாக மாஸ்டரின் வழக்கமாக இருந்தது. எல்லோரும் குரு-சீடன் உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படவேண்டும் என்பதை குறிப்பிடும் வண்ணம், அவர் 1974 ஆம் ஆண்டை “குருவின் வருடம்" என்றும் 1975 ஆம் ஆண்டை “மடவாசிகளின் வருடம்" என்றும் பெயரிட்டார். மடவாசிகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டது. இன்று மடத்தின் பெரும்பாலான வேலைகளை மேற்பார்வையாளர்கள், சமையல்காரர்கள், சுத்தம் செய்பவர்கள், தச்சர்கள் மற்றும் கணக்கர்கள் கவனிப்பதை போல அல்லாமல், இந்தியாவில் பழங்காலத்தில் நடந்ததை போல கவாய் ஆதீனத்தின் மடவாசிகள் அனைத்து வேலைகளையும் தாங்களே செய்துகொண்டனர். ஒவ்வொரு பணியும் கடினமாக இருந்தாலும், மடவாசிகளே செய்தார்கள். அவர்கள் தன்னிறைவு இலட்சியங்கள் மற்றும் அதனால் வெளிவந்த பல்வேறு திறமைகளால் அதிக மகிழ்ச்சி அடைந்தனர். §§

மடவாசிகள் நடவடிக்கைகளுக்கு எதிராக கேள்விகள் கேட்கப்பட்டு திருத்தப்பட்டார்கள். அந்த செய்முறை பெரும்பாலும் மென்மையாக இருந்ததில்லை. அவர்கள் மனதில் எந்தவித தற்காப்பு உணர்வும் இல்லாமல், வழங்கப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்செயலாற்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை அலட்சியப்படுத்தியவர்கள், “நியாயமில்லை" என்று கதரியவர்கள், அந்த வித்தைகள் பயனற்றவை என்றும், குருவை கீழ்படிந்து நடப்பது மட்டுமே பலன் தரும் என்பதை கற்றுக்கொண்டார்கள். தற்காப்பை தவிர்த்து, மற்றவர்களை பழிக்காமல் இருப்பது நல்ல பலனை வழங்கியது. மற்றவர்களிடம் மாற்றத்தை எதிர்பார்க்காமல், தானே மாறிகொள்வதும் நல்ல பலனை வழங்கியது. §§

பல வருடங்கள் கழித்து மடவாசிகள் மென்மையாக மற்றும் கண்ணியமாக, இணக்கமாக மற்றும் அன்பாக பழகுவதை முகத்தில் புன்னகையுடன் விளக்கும் போது, ஒரு நகை வியாபாரி இரத்தினங்களை மெருகூட்டுவதைப் போல அவர்களும் இந்த நிலையை அடைந்துள்ளதாக மாஸ்டர் குறிப்பிடுவார். ஒரு சுற்றும் தொட்டியில் சொரசொரப்பான இரத்தினங்கள் வீசப்பட்டதும், அவை அங்கே பல நாட்களுக்கு ஒன்றன் மீது ஒன்று மோதிக்கொண்டு, ஒவ்வொரு கல்லும் மற்ற கற்களுக்கு ஒரு உராயும் கருவியாக இருப்பதால், ஒவ்வொன்றும் தொடர் மோதல்கள் மூலம் கூர்மையான முனைகளை இழக்கின்றன. அதைப்போலவே குருவின் வழிகாட்டலின் கீழ் ஒன்றாக வாழ்ந்து, ஒன்றாக பணி புரிந்து, போராடிக்கொண்டு ஒன்றாக கற்றுக்கொண்டு, ஒன்றாக தியானம் மற்றும் வழிபாடு நடத்திய மடவாசிகளில் ஒவ்வொருவரும், மெதுவாக ஒரு மெருகூட்டப்பட்ட இரத்தினத்தை போல பிரகாசிக்கிறார்கள். பல்வேறு முகப்புக்கள், மற்றும் பல்வேறு நிறங்களுடன் இருந்தாலும் அனைத்தும் இரத்தினங்களே. தாங்கள் பெற்ற பண்புகளுக்கு மாஸ்டரின் அருளே காரணம் என்பதை அவர்கள் அறிந்து இருந்தார்கள். §§

பல வருடங்களாக துறவிகளுடன் இணைந்து செயல்பட்டதன் விளைவாக, கைவினைஞர்-தொழில் பழகுநர் அமைப்பு பயிற்சிக்கு மாஸ்டர் வலியுறுத்த காரணமாக விளங்கியது. மூத்த துறவிகள் தாங்கள் பெற்ற திறமைகளை இளைய துறவிகளுக்கு கற்றுத்தரவும், இளையவர்கள் தங்கள் மூத்த துறவிகளுக்கு சேவை செய்து கற்றுக்கொள்ளவும் நியமிக்கப்பட்டார்கள். காலப்போக்கில் மட நிர்வாகத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புக்களின் ஒட்டுமொத்த அமைப்பாக மாறிய இதற்கு, அவர் குலம் என்று பெயர் வைத்தார். குலம் என்றால் தமிழில் குடும்பம் என்று பொருள், மற்றும் விரிவுபடுத்துவதன் மூலம் அது ஒரே நிபுணத்தவம் மற்றும் சேவையில் இருக்கும் துறவிகளின் குழுவை குறிப்பிடுகிறது. இதன் விளைவாக விநாயகரின் பெயர்களுடன் ஐந்து குலங்கள் தோன்றின. கோயில்/சமையல் அறை (லம்போதரா); குழுவினரின் வளர்ச்சி/பயிற்சி (ஏகதந்தா); நிர்வாகம்/நிதித்துறை (பிள்ளையார்); கட்டிடங்கள்/நிலங்கள் (சித்திதாதா); மற்றும் வெளியீடுகள் (கணபதி) என்று மடத்தின் தினசரி நடவடிக்கைகளின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு தனிப்பட்ட குழு பொறுப்பு வகித்தது. §§

இந்த காலகட்டத்தில் சைவ சமயத்தை கிரகித்து மற்றும் கற்றுக்கொண்டு தங்களை அதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள, இந்தியா மற்றும் இலங்கையில் இருந்த சிவபெருமானின் தலைசிறந்த கோயில்களுக்கு துறவிகள் அனுப்பப்பட்டனர். மாஸ்டர் அவர்களை சாஸ்திரங்களை படிக்க, சிவாச்சாரியார்களிடம் இருந்து சிவப்பூஜைகளை கற்க மற்றும் அவர் உலகில் மிகவும் உயர்வானதாக கருதும் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்திய நாட்டை தெரிந்துக்கொள்ள ஊக்குவித்தார். துறவிகள் கடவுள் நம்பிக்கையில் வலுவடைந்ததும், அவர் அடுத்த முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டார். §§

மதம் மாறும் புதிரால் ஏற்பட்ட குழப்பம் §

“நான் எனது நாட்டு மக்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்து விட்டேன். இனி, உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் சைவர்களுக்கு சேவை செய்யவிருக்கிறேன்.” ஜனவரி 5, 1977 (தனது 50 ஆவது ஜெயந்தி) அன்று சான் பிரான்சிஸ்கோ கோயிலில் கூடியிருந்தவர்களுக்கு இந்த செய்தியை தெரிவித்துக்கொண்டு, மாஸ்டர் சுப்பிரமுனியா மேற்கு நாடுகளில் தனது பொது அமைச்சக தலைவர் பதவியில் இருந்து முறையாக மற்றும் இறுதியாக விலகினார். வாழ்க்கையில் அதிக ஆழமான குறிக்கோள்களுக்கு ஒரு ஆன்மீக பாதை மீது அர்ப்பணிப்புடன் இருப்பது முக்கியம் என்பதையும், பிதற்றிக்கொண்டு அல்லது நிலையாக இல்லாமல் அல்லது மழுப்பிக்கொண்டு இருப்பவர்களால் முன்னேற முடியாது என்பதையும் அவர் தனது அனுபவத்தின் மூலம் அறிந்து இருந்தார். அதனால் அவர் ஆர்வத்துடன் ஆனால் அர்ப்பணிப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு குருவாக இருக்கப்போவது இல்லை என்பதை தீர்மானித்து, தனது மீதி வாழ்க்கையை சைவ சமயம் மற்றும் சிவபெருமானின் மாபெரும் மகிமை, மகாதேவர்கள் மற்றும் தனது சற்குரு சிவயோக சுவாமிக்கு அர்ப்பணிக்கவும், அதற்கு மேல் பொதுமக்களுக்கு சொற்பொழிவுகள் தான் நடத்தபோவதில்லை, யோகத்தின் பொருளை இனிமேலும் விளக்கப்போவது இல்லை என்றும் முடிவு செய்தார். §§

மாஸ்டர் தங்களை எங்கே வழிநடத்தி செல்கிறார் என்பது புரியாமல், மீண்டும் சில துறவிகள் அந்த சமூகத்தை விட்டு வெளியேறினார்கள். பல வருடங்களாக நெருக்கமாக இருந்தவர்களும், அந்த வெளியேறிய குழுவில் இருந்தனர். தொடக்கத்தில் இந்த சம்பவம், அவருக்கு ஏற்பட்ட அபூர்வ ஏமாற்றங்களில் ஒன்றாக இருந்தாலும், இந்த வடிகட்டும் செய்முறை ஒரு பெரிய திட்டத்தின் அங்கமாக விளங்கியது. அவருடன் நிலைத்து இருந்தவர்கள், அவரது சமயப்பணி பூர்த்தி அடைவதற்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்கள். இதனால் முன் எப்போதும் இருந்திராத அல்லது கற்பனை செய்யவும் முடியாத ஒரு இணக்கம் மற்றும் ஒருமுகச் சிந்தனையை உருவாக்கியது. துறவிகளுக்கு கற்பிக்கப்பட்ட பாடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது: ஒரு நிறுவனத்தின் வலிமை அதன் உறுப்பினர்களின் அர்ப்பணிப்பின் அளவை பொறுத்து அமையும்; மேலும் அது பொதுவாக எண்ணிக்கையின் அடிப்படையில் இல்லாமல் தரத்தின் அடிப்படையில் அமைந்தது இருக்கும். §§

மாஸ்டர் கடைசி இருபது ஆண்டுகளுக்கு, இந்து சமயத்தில் பிறக்காத மாணவர்களுக்கு, அத்வைத்தின் மிகவும் உயர்வான உண்மையாக விளங்கும் பரமாத்துமாவைப் பற்றி கற்றுத்தந்தார். இந்த உயரிய போதனைகள் மாணவர்களுக்கு நல்ல பலனை வழங்க, அவர்கள் மற்ற அனைத்தையும் தவிர்த்து, இந்து சமயம் மற்றும் கலாச்சாரத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மாஸ்டருக்கு அவர் பல வருடங்களாக எதிர்கொண்ட யதார்த்தமான உலக சோதனைகள் மற்றும் வேதனைகள் புரியவைத்தன. ஒருமனதாக ஒரு பாதையில் அர்ப்பணிப்புடன் இருப்பதன் சக்தி, மற்றும் அத்தகைய கவனம் இல்லையென்றால் ஒருவர் எதிர்கொள்ளும் எண்ணற்ற கவனச் சிதறல்கள் பற்றி அவர் உணர்ந்துக்கொண்டார். மனிதன் அடைந்த ஆன்மீக உச்சங்களில் மிகவும் உயர்வான நிலையை வலுவாக மற்றும் உறுதியாக இருப்பவர்கள் மட்டுமே அடைகிறார்கள். §§

ஒரு இந்து வாழ்முறை மற்றும் மாற்று பெயரை ஏற்றுக்கொண்டாலும், தங்களது கிறுத்துவ பெயர்கள் மற்றும் சில மத நம்பிக்கைகளை தக்க வைத்து, இரு மதத்தின் மீதும் விசுவாசமாக இருந்தவர்கள் சந்தித்த விளைவுகளை, மாஸ்டர் பல வருடங்களாக கவனித்து வந்தார். அது நல்ல பலனை அழிக்காமல், அந்த நபரிடத்தில் ஒரு பிளவை ஏற்படுத்தி, சமயம் சார்ந்த மனக் கோளாறை தூண்டுகிறது. மாஸ்டர் முடிவு செய்திருந்ததைப் போல குடும்பம் அல்லது சமூகம் என்ன சிந்திக்கும் என்று கருதாமல், ஒருவர் தான் யார் என்பதை முழுமையாகவும் முடிவாகவும் முடிவு செய்ய வேண்டும். §§

இவ்வாறு 1997 ஆம் ஆண்டில், மாஸ்டர் மேற்கத்திய சீடர்களிடம் தனது எதிர்பார்ப்பை வலுப்படுத்தி, அவர்கள் தங்களது முந்தைய சமய, தத்துவ நம்பிக்கைகளை துண்டித்து, தங்களது இந்து பெயர்களை சட்டப்பூர்வமாக்கி, முறையாக நாமகரணம் செய்துக்கொண்டு இந்து சமயத்தில் நுழையவேண்டும் என்று வலியுறுத்தி, தனது துறவிகளிடம் எதிர்பார்த்த அதே தரநிலைகளை நிலை நிறுத்தினார். அவர் அவர்களிடம் எதிர்பார்த்த இலட்சியத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பதற்கு, மாஸ்டர் என்கிற தனது பெயரை கைவிட்டு, குருதேவா என்கிற ஒரு ஆன்மீக சற்குருவின் ஒரு பாரம்பரிய இந்து பெயரை ஏற்றுக்கொண்டார். §§

மதமாற்றம் என்ற பெயரை கேட்டாலே பயந்து ஒதுங்கிய பல இந்துக்களுக்கு இதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் இந்து சமயத்திற்கு மதமாற்றம் புதிதில்லை என்று அவர் விளக்கினார். இந்தியாவில் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சமணம் மற்றும் பௌத்த சமயம் தொடங்கிய போது, பல லட்சக்கணக்கான இந்துக்கள் மாதம் மாறினார்கள். பல நூற்றாண்டுகள் கழிந்து, மறுமலர்ச்சி தொடங்கி மீண்டும் லட்சக்கணக்கான சமணர்கள் மற்றும் பௌத்த சமயத்தவர்கள் மீண்டும் இந்து சமயத்திற்கு மதமாற்றம் பெற்றனர். இக்காலத்தில், இந்து சமயத்திற்கு அல்லது இந்து சமயத்தில் இருந்து வேறொரு சமயத்திற்கு மதமாற்றம் பெறுவது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து, பெரும்பாலும் குடும்பங்கள் மற்றும் ஊர்களுக்கு இடையே ஒரு மிகப்பெரிய வேற்றுமை உணர்வை ஏற்படுத்துகிறது. மருட்சி அல்லது வஞ்சனையால் மதம் மாறிய இந்துக்கள் இருக்கிறார்கள். இந்து சமயத்திற்கு திரும்ப வேண்டும் என்று மதம் மாறிய இந்துக்களும் இருக்கிறார்கள். ஒரு இந்துவை திருமணம் செய்து கொண்டவர்கள் உட்பட, இந்தியாவிற்கு வெளியே வாழும் இந்து அல்லாதவர்கள் இந்த சமயத்தில் முறையாக நுழைய காத்து இருக்கிறார்கள். §§

குருதேவா இந்த சிக்கல்கள் ஒவ்வொன்றையும் எதிர்கொண்டு, இறுதியாக ஹவ் டூ பிகம் எ இந்து என்ற புத்தகத்தில் “முறையான மதமாற்றத்திற்கு" தனது பரிந்துரைகள் மற்றும் அனுபவத்தை முறைப்படுத்தி வெளியிட்டார். பெரும்பாலான மதமாற்றங்கள் வற்புறுத்தலாலும் தவறான தூண்டுதலாலும் நடைபெறுகின்றன. யூதர்களை கத்தோலிக்கர்கள் வஞ்சகமாக மதமாற்றுவது, மற்றும் இசுலாமியர்கள் பாப்டிஸ்ட்களை மதமாற்றுவது, மற்றும் இவர்களில் மிகவும் தீவிரமாக மோர்மொன் மற்றும் பெண்டகோஸ்டல் பிரிவினர் (ஹார்வெஸ்டிங் சோல்ஸ் என்ற வெறுப்பூட்டும் சொற்றொடர்கள் மூலம்) மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டனர். மதங்கள் ஒன்றை ஒன்று மதிக்க வேண்டும் என்று குருதேவா கருதினார். யூதனாக இருக்கும் ஒரு சிறுவன் மதமாற்றம் செய்துக்கொள்ள விரும்பினால், அவன் யூதர் திருக்கோயிலில் இருந்து ஓடி ஒளியாமல், அவன் தனது ரபையின் ஆசிகளை பெற்று வருவதற்கு புதிய ஆன்மீக ஆலோசகர்கள் ஊக்குவிக்க வேண்டும். §§

அவர் தான் வழக்கமாக செய்வதை போல, இந்த விஷயத்தில் ஒரு ஆழமான ஆன்மீக புரிதலுடன் தொடங்கினார். பழங்காலத்தில், மக்கள் ஒரே கிராமம் மற்றும் சமயத்தில் தொடர்ந்து பிறவி எடுத்துக்கொண்டு இருந்தார்கள். “ஆனால், இப்போது இருக்கும் நவீன யுக பயணம் மற்றும் உலகளாவிய தகவல் தொடர்பு காரணமாக, மிகவும் நெருக்கமாக இருந்த மறுபிறவியின் மாதிரி சிதறி விட்டது, மற்றும் ஆன்மாக்கள் பிறவி எடுக்கும் புதிய தூல உடல்கள் வேற்று நாடுகள், குடும்பங்கள் மற்றும் மதங்களில் இருப்பதால், அந்த சூழ்நிலை அவர்களுக்கு சிலசமயங்களில் புதியதாக இருக்கின்றன,” என்று அவர் கூறினார். §§

“மேற்கத்திய நாட்டு உடலில் ஒரு கிழக்கு தேச ஆன்மாவாக,” இருப்பவருக்கு, அவர் சுயமாக மதம் மாறுவதற்கு சிந்தனை நிறைந்த, ஒரு அமைதியான வழியை பரிந்துரைத்தார். அவர் மதம் மாறவிரும்பும் சீடர்களிடம், அவர்களது முந்தைய சமயத்தை நன்றாக ஆய்வு செய்து, தாங்கள் அதன் நம்பிக்கைகளை ஏன் தக்க வைத்துக்கொள்ளவில்லை என்பதை உறுதியாக, நுணுக்கமாக விளக்க வேண்டும் என்று கூறுவார். அவர் அவர்களது கிறுத்துவ தேவாலயங்கள், யூத திருக்கோயில்கள், சிலருக்கு அவர்களின் முந்தைய இந்து குருக்களிடம் மீண்டும் சென்று, அங்கே சிறிது காலம் தங்கியிருந்து, அதன் மதகுருமார்களிடம் ஆலோசிக்கவேண்டும் என்று கூறுவார். அவர் தங்கள் மனதை மாற்றிக்கொள்வதற்கும், அல்லது இன்னொருவர் அவர்களின் மனதை மாற்றுவதற்கும் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. §§

அவர்கள் இந்த சோதனையில் வெற்றி பெற்றால், தொடர்ச்சியான பரீட்சைகள் மூலம் தங்கள் இந்து சமய அறிவை நிரூபித்து, தங்களது இந்து பெயரை சட்டப்பூர்வமாக்கி, ஒரு பிரபலமான கோயிலில் நாமகரணம் என்கிற பெயர் சூட்டு சடங்கின் மூலம் மதத்தில் முறையாக நுழைய வேண்டியிருந்தது. குருதேவா பெயருக்கு முக்கியத்துவம் அளித்து, தனது சீடர்கள் தங்கள் கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்குகள் மற்றும் மற்ற அனைத்து ஆவணங்களிலும் தங்களது சட்டப்பூர்வமான பெயரை சேர்த்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அது இன்றும் தேவாலயத்தில் உறுப்பினராவதற்கு தேவைப்படுகிறது. தங்களது முந்தைய பெயரை மாற்றாமல், ஒரு சைவ இந்து பெயரை முறையின்றி ஏற்றுக்கொண்டு இரண்டிற்கும் இடையே ஊசலாடிக்கொண்டு இருப்பதால் உருவாகும் இரட்டை அடையாளங்களுடன் இருக்கும் பல குழுக்களை பார்த்து இருந்ததால், அவர் முறையான மற்றும் சட்டப்பூர்வமான ஒரு சைவ பெயர் நிச்சயமாக வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆரம்பகாலத்தில் தன்னிடம் புதிதாக சேர்பவர்களுக்கு நீண்ட நாள் சீடர்கள் மூலம் உதவி அளித்து வந்தார், ஆனால் இறுதியில் தனது போதனைகளில் விருப்பம் இருந்தவர்கள், அந்த செயல்முறைகள் அனைத்தையும் தங்கள் சொந்த வலிமை மற்றும் உத்வேகத்தின் மூலம் செய்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். §§

அவர்களது சீடர்களில் பலர் மேற்கத்திய நாடுகளில் பிறந்து இருந்தாலும், எந்த மதத்தையும் சாராமல் இருந்தார்கள். இந்த சீடர்கள் மதம் மாறவேண்டிய அவசியம் இல்லாமல், இந்து சமயத்தைப் பற்றி படித்து தெரிந்துகொண்டு, ஒரு பெயர் சூட்டு விழாவின் மூலம் இந்து சமயத்தை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். இந்து சமயத்திற்கு மாறி அதை தனதாக ஏற்றுக்கொண்ட நேர்மையான மேற்கு நாட்டவர்களை, வழக்கம் போல் தவிர்க்காமல் அல்லது புறக்கணிக்காமல் வரவேற்கவேண்டும் என்று இந்துக்களிடம் குருதேவா தீவிரமாக அறிவுறுத்தினார். §§

image§

சைவ சித்தாந்தத்தின் இரு கிளைகளை பற்றி, 80 களில் நடைப்பெற்ற மிகப்பெரும் விவாதம் நடைப்பெற்றது. குருதேவாவின் தனிப்பட்ட உணர்தல்கள், சிவபெருமான் மற்றும் ஆன்மாவின் அத்வைத ஐக்கியத்தை பற்றி பேசிய திருமூலருடன் இணக்கத்துடன் இருந்தது, ஆனால் பல சைவர்கள் கடவுள் மற்றும் ஆன்மா நிரந்தரமாக பிரிந்து இருக்கிறது என்று பன்மைவாத போதனைகளை அறிவுறுத்திய மெய்கண்டாரை பின்பற்றினார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

கவனமாக சிந்தித்து இந்து சமயத்திற்கு மதம் மாறியவர்கள், எதிர்கொண்ட மாபெரும் இன்னல்கள் காரணமாக, அவர்கள் நிரந்தர மாற்றத்தை பெற்று, தங்களது அர்ப்பணிப்புக்களை வலுப்படுத்தி, தங்கள் விசுவாசங்களை சுத்தப்படுத்திக் கொண்டதால், அவர்கள் உலகில் மிகவும் வலுவான இந்துக்களில் ஒருவராக மாற்றம் பெற்றார்கள். இந்த தீவிரம் மற்ற இந்து குழுக்கள் மற்றும் இந்து சமயம் போன்ற குழுக்களின் அணுகுமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. அதில் பெரும்பாலான குழுக்களுக்கு மிகவும் சிறிய மாற்றம் மட்டுமே தேவைப்பட்டது. அந்த குழுக்கள் அர்ப்பணிப்பு என்ற சொல்லை வெறுத்ததாகவும், இந்த காலத்து சாதகர்கள் அர்ப்பணிப்பு இல்லாமல் இருப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் குருதேவா வேடிக்கையாக குறிப்பிடுவார். இந்த தீவிரம் அவரது சீடர்களை மேம்படுத்தி, அவர்களை தலைவர்களாக மாற்றியது. இந்து தத்துவஞானி மற்றும் எழுத்தாளராகவும் இருந்து, குருதேவா மற்றும் அவரது சீடர்களை சந்தித்து இந்துயிசம் டுடே பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதிய ராம் ஸ்வரூப், பல வருடங்கள் கழித்து, அவர்களை பற்றி தி அப்சர்வர், புது டில்லி 1998 இதழில் எழுதினார்:§§

அவர்கள் NRI பிரிவை சேர்ந்தவர்கள் இல்லை. தன்னிச்சையுடன் இந்துக்களாக மதம் மாறிய அவர்களில் பெரும்பாலானோர் வெள்ளை நிற அமெரிக்கர்கள். மேலும் அவர்களில் சிலர் சந்நியாசிகளாக இருக்கிறார்கள். இந்து குடும்பத்தில் பிறந்தவர்கள், இந்து சமயம் மீது கவனம் செலுத்தாமல் அதன் ஆழமான ஆன்மீக பிரிவுகளை புறக்கணிக்கிறார்கள். ஆனால் அந்த சமயத்தை ஆழ்ந்த சிந்தனை மற்றும் தன் உளஆய்வு மூலம் ஏற்றுக்கொள்பவர்கள் அவ்வாறு செய்வதில்லை. சாதகர்களாக இருக்கும் அவர்கள் இறைவன், பரமாத்துமா, ஆன்மீக வாழ்க்கை, தர்மம் மற்றும் முக்தி பற்றிய ஆய்வுகளில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். §§

1979 ஆம் ஆண்டின் தொடக்கம், ‘கடவுள்’ இந்து கோயிலில் குரு ஜெயந்தி கொண்டாட்டங்களுடன் இருபதுக்கும் மேற்பட்ட நாமகரண சடங்குகளுடன் விறுவிறுப்பாக தொடங்கியது. சைவ இந்து சமயத்திற்குள் அடியெடுத்து வைப்பதை குறிப்பிடும் இந்த பெயர் சூட்டு விழாவை பெற்ற சீடர்கள், பல ஆண்டுகளாக இமாலயன் அகாடமியில் இந்து சமயம் பற்றி படித்து இருந்தார்கள். அதில் பலர் தங்களது முந்தைய மதத்தில் தங்களை துண்டித்துக்கொள்ள தீவிரமான செய்முறைகள் நிறைவு செய்து இருந்தனர். அது அமெரிக்க வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்கியது. §§

அதற்கு பின்னர், சுய விருப்பத்துடன் நடைப்பெற்ற நூற்றுக்கணக்கான மத மாற்றங்கள் மற்றும் நாமகரண சடங்குகளுக்கு பிறகு, குருதேவா தனது சமூகம் தர்மத்தை தீவிரமாக கடைப்பிடித்ததால் திருப்தியும், பெருமையும் அடைந்தார். அவர் அதன் பிறகு வந்தவர்களை தயக்கத்துடன் மதத்தில் சேர்த்துக்கொண்டார் மற்றும் அவர்கள் தீவிரமாக மற்றும் நேர்மையான நாட்டத்துடன் தன்னை நாடி வந்தால் மட்டுமே சேர்த்துக்கொண்டார். அவர் மேற்கில் ஒரு இந்து சமூகத்தை தொடக்க நிலையில் இருந்து உருவாக்கினார், மற்றும் அவர் தனது மீதி வாழ்க்கையை வெறும் ஆர்வம் மட்டுமே இருப்பவர்களிடம் இருந்து விலகி இருந்து, இந்து தர்மத்தின் முழு அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுக்கு தனது சக்திகளை வழங்கிக்கொண்டு, இந்து சமயத்தின் கட்டுப்பாடுகளுக்குள் வாழ்ந்து வந்தார். §§

குருதேவாவின் மனதில் எதிர்கால சிந்தனை தெளிவாக இருந்தது. அதில் சைவ இந்து சமயம் மற்ற சமயங்களுடன் ஒரு கௌரவமான இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது. மேற்கில் இருந்த இந்து குடும்பங்கள் வலுவாக ஒற்றுமையுடன், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக மற்றும் தங்கள் ஆன்மீக பொறுப்புக்களில் தீவிரமாக இருந்தனர். அந்த எதிர்காலத்தை நோக்கி செயல்பட்டுக் கொண்டு, அவர் அனைத்து அம்சங்களையும் ஒவ்வொன்றாக சேர்த்து, தனது துறவிகளுக்கு மிகப்பெரிய பணிகளை வழங்கினார். §§

அவரது வழிகாட்டலின் கீழ், அவர்கள் குடும்பத்திற்கு தேவையான நன்னடத்தை கோட்பாடுகள் மற்றும் ஒழுக்கங்கள், சமயகுருவின் அறிவுறுத்தல்கள், குழந்தைகளுக்கான தொடர் பயிற்சி வகுப்புக்கள், இந்து சமய துதிப்பாடல்கள் மற்றும் இந்துக்களை பிறப்பில் இருந்து மரணம் வரை வழிநடத்துவதற்கு, வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் நடத்தவேண்டிய சடங்குகள் பற்றிய விளக்கங்களை உருவாக்கினார்கள். அவர் மதகுரு மற்றும் பள்ளி ஆசிரியர்களாக தகுதி பெற சான்றிதழ்களை உருவாக்கி, பதின்ம வயதில் இருப்பவர்களுக்கு அந்த கடினமான பருவத்தில் வழிநடத்த, அவர்கள் வீட்டில் இருந்தே பயிலும் சைவ பாடத்திட்டத்தை உருவாக்கி அதற்கு பாடங்களை எழுதினார். இந்து தொழில் முனைவர்களுக்கு உறுதித்தன்மையை வழங்க இந்து வியாபாரிகள் கூட்டமைப்பும், பெண்கள் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள இந்து பெண்கள் விடுதலை மன்றத்தையும் உருவாக்கப்பட்டன. §§

அவரது தொலைநோக்கு பார்வையில் கிழக்கு நாடுகளும் அடங்கி இருந்தன. அந்த நாடுகளில், அவர் குறிப்பாக குழந்தைகள் பயிற்சியில் பாற்றாக்குறையை கவனித்தார். இலங்கையின் அளவெட்டியில், அவர் தனது சுப்பிரமுனியா ஆசிரமத்தில் இசை, நடனம், ஓவியம், திருமந்திரம் மற்றும் தேவார பாடல்களுடன், குழந்தைகள் ஆங்கிலம் பேச பயிற்சி அளித்த வகுப்புக்கள் நல்ல வரவேற்பை பெற்றன. §§

அப்போதிருந்த ஆயிரக்கணக்கான இந்து பேரவைகள், எதிர்காலத்தில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பரவும் என்றும், அவற்றிற்கு இடையில் அனுபவ அறிவை மேம்படுத்தி அதை பகிர்வதற்கு உதவி செய்ய, இந்து அமைப்புக்களின் தேசிய மற்றும் சர்வதேச மன்றங்களின் தேவையை அவர் எடுத்துரைத்தார். அப்போது அத்தகைய சமூகங்கள் எதுவும் இல்லை என்றாலும், அவர் கனவு வெறும் முப்பது வருடங்களில் மெய்ப்பட்டது. தொலை தூரத்தில் இருக்கும் குழுக்களை ஒன்று சேர்க்க, மடத்தில் அச்சிடும் கருவிகளை மீண்டும் அமைக்க குருதேவா கடும் முயற்சிகள் மேற்கொண்டு, நெவாடாவிலிருந்து கவாய் தீவிற்கு அந்த கருவியை கொண்டு வந்து, உலகெங்கும் சைவ சமய செய்திகளை வழங்க, தி நியூ சைவைட் வேர்ல்ட் என்கிற ஒரு புதிய செய்தித்தாளை தொடங்கினார். §§

இந்த பணியை செய்வதற்கு, குருதேவாவிற்கு கிடைத்த உதவிகள் மிகவும் குறைவு. பாரம்பரியம் தெரிந்தவர்கள், இணையதளம் இல்லாத உலகின் இன்னோரு இடத்தில் இருந்ததால், அவர்களிடம் இருந்து அதிக உதவி கிடைக்கவில்லை. அதனால் அவர் தனக்குள் கவனம் செலுத்தி, யோக சுவாமியின் வழிகாட்டலை நாடினார் மற்றும் பல முக்கிய தருணங்களில், அந்த வழிகாட்டல் வேகமாக பாய்ந்து வந்தது. யோக சுவாமி ஒரு காட்சி அல்லது தியானத்தில் தோன்றி எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது, ஒரு பணியை தொடங்க வேண்டுமா அல்லது கைவிட வேண்டுமா என்று தைரியமான அறிவுறுத்தல்களை வழங்கியதாக குருதேவா தனது மடவாசிகளிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பார். அவருக்கு உண்மையான சைவப்பாதையின் தொடர்பாக யோக சுவாமி விளங்கினார், மற்றும் குருதேவா தனது குருவிடம் இருந்து வந்த ஒவ்வொரு அறிவுறுத்தலையும், அது எவ்வளவு நுணுக்கமாக இருந்தாலும், மிகவும் கவனமாக பின்பற்றினார். §§

ஒரு நாள் யோக சுவாமி தனக்கு எந்த விளக்கமும் அளிக்காமல், “இரு பொருளுடன் பேச வேண்டாம்" என்று கூறியதாக குருதேவா கூறினார். “இரு பொருளுடன் பேச வேண்டாம் என்றால் என்ன பொருள்?” என்று குருதேவா தனது துறவிகளிடம் கேட்டார். தெளிவில்லாமல் குழப்பம் நிறைந்து இருப்பது என்பதை தெரிந்துகொண்டதும், அவர் தனது பாணியில் நேரடியான, உறுதியான மற்றும் தெளிவான, மற்றும் தவறாக புரிந்துகொள்ள அல்லது தெளிவின்மைக்கு வாய்ப்பில்லாத ஒரு முறையை கையாண்டார். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு முக்தி பெற்றிருந்த தனது குருவுடன் அவருக்கு இருந்த நெருக்கம், அவரது துறவிகள் குழுவிற்கு ஒரு பாடமாகவும் ஒரு தூண்டுதலாகவும் இருந்தது. §§

இரண்டு தமிழ் புதையல்கள் §

1970 களின் இறுதியில், நரைத்த முடியுடன் அமெரிக்க இந்து சூட்சும ஞானியாக இருந்த குருதேவா, மேற்கு நாடுகளில் முதல் முறையாக , ஆதீனம் என்கிற பாரம்பரிய தமிழ் சைவ மடம்-கோயில் வளாகத்தை சிறந்த முறையில் அமைத்து இருந்தார். அவர் அதிகாரபூர்வமாக கவாய் ஆதீனத்தின் முதல் மகாசன்னிதானமாக இருந்துக்கொண்டு, ஒரு புதிய யுகத்திற்கு ஆங்கில மொழியில், சைவ சித்தாந்தத்திற்கு புதிய தெளிவான விளக்கத்தை அளிக்க பொறுப்பேற்றுக்கொண்டார். அவ்வாறு செய்யும் போது, அவர் புராண கதைகள் மற்றும் இதிகாசங்களை புறக்கணித்தார். அவை தத்துவ ரீதியாக பொருத்தமில்லாமல், தவறுதலாக சாஸ்திரத்தின் அந்தஸ்த்தை பெற்றுள்ளதாக தைரியமாக இகழ்ந்துரைத்த இந்து தலைவர், அவராகத் தான் இருக்கவேண்டும்.§§

அவர் கம்பீரமான உறுதிப்பாட்டுடன் பேசியதாலும், அவர் வழங்கிய ஒவ்வொரு அறிவிப்புகளும் கட்டளைகளும் அவருடன் இருந்தவர்களுக்கு உண்மையாக தோன்றியதாலும், அவர் இந்த ஆன்மீக இருப்பிடத்தின் அதிகாரத்தை உணர்ந்து இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இந்த காலத்தில் அவர் உருவாக்கிய படைப்புக்களில் துண்டுதல் மற்றும் சக்தி, தூய விளக்கங்கள் மற்றும் அவர் குரு பின்பற்றிய சமயத்தின் ஆன்மீக மற்றும் அதிகாரப்பூர்வ வெளிப்பாடுகள் நிறைந்து இருந்தன. நவீன யுகத்தில் சைவ சித்தாந்ததிற்கு இதைப்போன்ற தெளிவான விளக்கம் எந்த மொழியிலும் வழங்கப்பட்டதில்லை என்ற புகழ்ச்சி கலந்த பரிந்துரையுடன், தமிழ் சைவ சான்றோர் குழுவில் இருந்த ஆர்வமுள்ள நண்பர்கள் அவரது படைப்புக்களை தேடி வந்து, அவற்றை தமிழில் மொழிபெயர்க்கவும் செய்தார்கள். அதை Dr. பி. நடராஜன், எஸ். ராமசேஷன், எஸ். சண்முகசுந்தம் மற்றும் பலர் மொழிபெயர்த்தனர். §§

குருதேவா அத்வைத ஈஸ்வரவாதம் என்ற மத சாஸ்திரத்தின் யோக அணுகுமுறையை ஊக்குவித்தார். இது சில சமயம் ஒன்றுக்கொன்று எதிரானதாகவும் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதாகவும் கருதப்படும் அத்வைதம் மற்றும் ஈஸ்வரவாதத்தை சார்ந்துள்ளது. அவர் கர்மவினை மற்றும் மறுபிறப்பு பற்றிய இந்து சமயத்தின முக்கிய கோட்பாடுகளுக்கு புதிய தெளிவை கொண்டு வந்து, அனைத்து ஆன்மாக்களும் இயல்பாக நற்பண்புடன் இருக்கிறது என்றும், அனைத்து கர்மவினைகளையும் கரைக்கலாம் என்றும், தன்னைப்போல ஆத்ம ஞானத்தை பெற முடியும் என்றும், பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து முக்தி பெறுவது உண்மையில் சாத்தியம் என்றும் அவர் உறுதி அளித்தார். §§

அவர் சரியை (சேவை), கிரியை (வழிபாடு), யோகம் (தியானம்) மற்றும் ஞானம் (விவேகம்) என்று இறைவனை சென்றடையும் சைவ சித்தாந்தத்தின் நான்கு நிலை பாதையை பரிந்துரைத்தார். இந்த நிலைகள் தொடர்ச்சியாக வளர்ச்சி அடைபவை என்றும், ஒரு நிலை அடுத்த நிலைக்கு பூர்வாங்கமாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் கோயில்களை உற்சாகமாக புகழ்ந்து, முறையான வழிபாட்டு முறைகளை தெளிவாக விளக்கினார். அவர் பாலியல் சக்தி கட்டுப்பாட்டை பற்றி வழங்கிய பிரத்யேக அறிவுறுத்தல்களுடன், துறவற மற்றும் குடும்ப வாழ்க்கையின் ஒழுக்கங்களையும் விளக்கமாக எடுத்துரைத்தார். உலகின் மிகவும் பழமையான சமயத்தை பற்றி மக்கள் “மேலோட்டமாக தெரிந்துக்கொள்ள", அவர் இந்து சமயத்தை ஒன்பது நம்பிக்கைகள் மற்றும் சைவ சமயத்தை பன்னிரண்டு நம்பிக்கைகளாக சுருக்கிக் கூறினார். அவர் இந்து சமயத்தின் முதன்மையான ஸ்ருதிகளாக வேதங்கள் மற்றும் ஆகமங்களை பரிந்துரைத்தார், அவர் அத்துடன் திருமூலர் எழுதிய திருமந்திரம் மற்றும் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் (இரண்டும் சுமார் கி.மு. 200) போன்ற இரண்டாம் நிலை சாஸ்திரங்களையும் ஏற்றுக்கொண்டார். §§

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் காகிதங்கள் அல்லது எழுதுகோல்கள் இல்லை, அதனால் விசேஷமாக தயாரிக்கப்பட்ட ஓலை இலைகளில் ஒரு எழுத்தாணி கொண்டு அழுத்தி அல்லது கீறி எழுத்துக்கள் எழுதப்பட்டன. இந்த முறையையில் பழங்கால சாஸ்திரங்கள் மற்றும் இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன, மற்றும் அந்த பழங்கால மூல படைப்புக்களில் சில இன்றும் அழியாமல் இருந்து நம்மை வியக்க வைக்கின்றன. நவீன கால காகிதம் எதுவும் பல நூற்றாண்டுகள் அழியாமல் இருக்காது என்பதில் சந்தேகம் இல்லை! §§

அவர் மீண்டும் மீண்டும் சைவ சமயத்தின் பாரம்பரிய பாதையை பரிந்துரைத்து, அந்த பாதையின் நுணுக்கங்கள், அதன் சொல்லகராதி மற்றும் இறையியலை தனது மடவாசிகள், மற்றும் பின்னர் சம்சாரிகளுக்கு கற்றுத் தந்தார். யோக சுவாமி வகுத்த பாதை தனது சீடர்கள் மனதில் ஆழமாக பதிய வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அவர் தனது மடத்தில் நிறுவிய இரண்டு ஆளுயர சிலைகளை அறிமுகப்படுத்தும் போது, குருதேவா உற்சாகமாக புகழ்ந்துக்கொண்டு இரண்டு முக்கியமான சாஸ்திரங்களை பற்றி தனது கண்ணோட்டத்தை விளக்கினார்.§§

திருமூலர் பத்மாசனத்தில் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து இருப்பதாகவும், திருவள்ளுவர் தனது மடியில் ஓரு சிறிய எழுதும் மேசையுடன் தரையில் அமர்ந்து கைகளில் எழுத்தாணி கொண்டு புனிதமான செய்யுட்களை இயற்றுவதாகவும் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய திருக்குறள் ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வது பற்றி எடுத்துரைக்கிறது. அது இந்த உலகில் சந்தோஷமான மற்றும் இணக்கமான வாழ்கையை வாழ்வதற்கு தேவையான முக்கிய கருவிகளை தந்தாலும், அது இறைவனின் இயல்பு பற்றிய உட்பார்வைகள் எதையும் வழங்குவதில்லை. ஆனால் திருமந்திரம் இறைவன், மனிதன் மற்றும் பிரபஞ்சத்தின இயல்புகளை மிகவும் ஆழமாக ஆராய்கிறது. இரண்டையும் ஒன்றாக ஏற்றுக்கொள்ளும் போது, அவை இந்துக்கள் அனைவருக்கும் தங்கள் கருத்தை தெரிவித்து, சமய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் தங்கள் வழிகாட்டலை வழங்குகின்றன. ஒழுக்கம், செல்வம் மற்றும் அன்பை பெறுவது பற்றி திருக்குறளும், மோக்ஷம் அல்லது முக்தியை அடைவது பற்றி திருமந்திரமும் குறிப்பிடுகின்றன. §§

திருமந்திரம் ஒரு சூட்சுமமான மற்றும் கடினமான புத்தகமாக இருக்கிறது. இதன் மூல பாடல்கள், பழங்கால தமிழ் மொழியில் ஒரு அடிப்படை சீருடன் எழுதப்பட்டு இருக்கும். சைவ சித்தாந்தத்தை முதல் முறையாக திருமூலர் தொகுத்து, அதற்கு “சைவ சித்தாந்தம்" என்ற பெயரை முதலில் வழங்கியதும் அவர் தான். தேவை ஏற்பட்டால், ஒரு மதம் முழுவதும் சார்ந்து இருக்கக்கூடிய ஒரு ஆவணமாக இது விளங்குகிறது. இது மனிதனுக்கு தெரிந்த மிகவும் பழமையான சாஸ்திரங்களில் ஒன்றாக இருக்கிறது. எனது உணர்தலின் மூலம் பெற்ற எனது அனுமானங்கள் அனைத்தும், இந்த மாபெரும் படைப்புடன் இணங்கி இருப்பது எனக்கு அதிக திருப்தி அளிப்பதாக இருக்கிறது. இந்த புத்தகம் தனிப்பட்ட அனுபவத்தின் அங்கீகாரமாகவும், எனது குரு பரம்பரை உருவாக்கி பாதுகாத்த தத்துவ கோட்டையின் ஒரு முழுமையான அறிக்கையாகவும் இருப்பதால், இது எனக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. §§

அவர் 1978 ஆம் ஆண்டு, “திருமந்திரம், பவுண்ட்டன்ஹெட் ஆஃப் சைவ சித்தாந்தம்,” (திருமூலம், சைவ சித்தாந்தத்தின் மூலம்) என்ற தலைப்பில் வழங்கிய உரையின் ஒரு பகுதியை இங்கே காணலாம். அது இந்த புனிதமான உரைக்கு அவர் வழங்கிய முக்கியத்துவத்தை குறிப்பிடும் விதமாக இருந்தது. §§

நம்மிடையே இன்று பாதுகாப்பாக இருக்கும் சைவ சமய சாஸ்திரங்களில் மிகவும் பழமையான ஒன்றாக திருமூலரின் படைப்பு விளங்குகிறது. இறையியல் சார்ந்த படைப்புக்களில், அவர் படைப்பு முதலாவதாக இல்லாவிட்டாலும், பாதுகாக்கப்பட்ட படைப்புக்களில் மிகவும் பழமையான ஒன்றாக இருக்கிறது. அவர் புதிதாக எதையும் தொடங்கவில்லை. அவர் இயற்றிய திருமந்திரம், நியூ டெஸ்டமெண்ட் என்கிற விவிலிய உரைகளின் இரண்டாம் பகுதியை காட்டிலும் வெறும் நூறு வருடங்கள் பழமையானதாக இருக்கிறது. அவர் தான் அறிந்து இருந்த தகவல்களின் அடிப்படையில், சைவ சமயத்தை தொகுத்து இருந்தார். அதன் கோட்பாடுகள் உள்ளடக்கியிருந்த உண்மைகள் பற்றி தனது சொந்த உணர்தல்களின் அடிப்படையில், அவற்றை அவர் சுருக்கமான மற்றும் நுணுக்கமான பாடல் வடிவில் பதிவு செய்து இருந்தார். அவரது படைப்பு அறிவு சார்ந்து அல்லது பக்தியை மட்டும் சார்ந்து இருக்கும் உரையாக குறிப்பிடமுடியாது. அது யோகத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. மனிதனுக்கு தன்னைப் பற்றிய அறிவை வழங்கும் இராஜ அறிவியலாக, அது யோகத்தை புகழ்ந்து விவரித்தாலும், அதில் இறையியல் கோட்பாடு மற்றும் பக்தி பாடல்களும் உள்ளன. அது ஆன்மா, புத்தி மற்றும் உணர்ச்சிகளை அடக்கிய மனித தேடலின் முழு வெளிப்பாடாக இருக்கிறது. §§

ஒரு சித்தராகவும், இமயமலையில் ரிஷியாகவும் இருந்த திருமூலர், தென்னிந்தியாவில் இருக்கும் மக்களுக்கு சைவ சமயத்தின் மிகவும் புனிதமான போதனைகளை பரப்புவதற்கு அங்கே அனுப்பப்பட்டார். இந்து சமயம் சமயப்பணிகளின் மதமாக இருக்கிறது. என்னையும் சேர்த்து, அந்த மதத்தில் இருக்கும் ஒவ்வொருவரும், பரமாத்துமாவாக இருக்கும் இறைவனிடம் இருந்து ஒரு சமயப்பணியை எதிர்பார்த்துக்கொண்டு, ஒரு பணியில் ஈடுபட்டு இருக்கிறார் அல்லது சாதனா மூலம் தன்னை போதுமான அளவு சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுவே சைவ சமயத்தின் மாதிரியாக இருக்கிறது, மற்றும் மிகவும் புனிதமான சைவ பாதையாக சைவ சித்தாந்தமாக இருக்கும் சனாதன தர்மத்தின் முடிவான உண்மைகளை சுருக்கி புதுப்பித்து மீண்டும் உறுதிப்படுத்துவதே ஒரே சமயத்தில் திருமூலரின் பணியாக இருந்தது. §§

இன்று சித்தாந்தம் என்ற சொல்லை கேட்கும் போது, அந்த சொல்லுக்கு பல அர்த்தங்கள் நம் மனதில் தோன்றுகின்றன. சிலருக்கு, மெய்கண்ட தேவர் மற்றும் அவர் வழங்கிய சைவ சித்தாந்த விளக்கம் உடனடியாக நினைவில் வரலாம். சிலருக்கு அத்வைத-வேதாந்தம் மற்றும் த்வைதத்திற்கும் மத்தியில் இருக்கும் தத்துவத்தில் இருந்து ஏதாவது ஒரு கோட்பாடு தெளிவில்லாமல் தோன்றலாம், மற்றும் சிலருக்கு “உண்மையான முடிவு,” “முடிவான முடிவு" அல்லது “உண்மையான தீர்மானம்" போன்ற பல்வேறு மொழிபெயர்ப்புக்கள் நினைவில் தோன்றலாம். §§

திருமந்திரத்தில் முதல் முறையாக சித்தாந்தம் என்ற சொல் தோன்றுகிறது. அந்த என்ற சொல், ஆங்கிலத்தில் வரும் எண்ட் சொல்லை போல, குறிக்கோள்/முடிவின் பொருளை கொண்டுள்ளது. திருமூலர் அந்த சொல்லை “சைவ ஆகமங்களின் போதனைகள் மற்றும் உண்மையான முடிவுகளை,” குறிப்பிடவே பயன்படுத்தி இருந்தார். மேலும் இவை வேதாந்தம் அல்லது “உபநிடதங்களின் முடிவுகளுடன்” ஒத்து இருப்பதாக கருதினார். சைவ சித்தாந்தம் வேதாந்தத்தை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்பதை அவர் மிகவும் தெளிவாக குறிப்பிடுகிறார். சித்தாந்தம் என்பது குறிப்பாக, முடிவான உண்மையை நோக்கி ஒருவரை கொண்டு வருவதற்கு தேவையான சாதனாக்கள் மற்றும் பயிற்சிக்குரிய கட்டுப்பாடுகளை வழங்குகிறது. வேதாந்தம் என்பது பொதுவாக, அனைத்து பாதைகளின் குறிக்கோளாக இருக்கும் முடிவான உண்மையை மேலோட்டமாக மட்டுமே அறிவிக்கிறது. §§

image§

இந்த சித்திரத்தில் சைவர்கள், வைணவர்கள், பெளத்த சமயத்தவர்கள், சீக்கியர்கள், கிறுத்துவர்கள், இசுலாமியர்கள், யூதர்கள், சமணர்கள், தாவ் நெறி சார்ந்தவர்கள் மனிதனின் ஆன்மீக பாதையில் சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவற்றுடன் மேலும் பல மதங்களுக்கு மதிப்பு அளிக்கும் சைவ சமயம், எல்லையற்ற சகிப்புத்தன்மையுடன் இருக்கிறது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

சித்தாந்தம் மற்றும் வேதாந்தத்தை அறிவுப்பூர்வமாக பிரிப்பவர்கள், குறிக்கோளில் இருந்து குறிக்கோளை அடையும் பாதையை பிரித்து விடுகிறார்கள். ஆனால் நமது குரு பரம்பரை அவற்றை வேறுபடுத்தி பார்ப்பது இல்லை. மலை உச்சிக்கு அதிக மதிப்பு அளித்து, அதற்கு செல்லும் பாதையை நாம் குறைவாக மதிப்பிட முடியுமா? இரண்டும் ஒன்று தான். சித்தாந்தமும் வேதாந்தமும் ஒன்றாக இருந்து, சைவ சித்தாந்தத்தில் அடங்கி உள்ளது. அதுவே சாஸ்திரங்களின் முடிவாகவும், எனது சொந்த அனுபவங்களின் மூலம் பெற்ற முடிவாகவும் இருக்கிறது. சைவ சித்தாந்தத்தின் சுத்த சித்தாந்தமாக வேதாந்தம் விளங்குகிறது. §§

வழிபாடு மற்றும் சமய பாரம்பரியம் இல்லாமல் வேதாந்தம் என்றுமே தனித்து இயங்கியது இல்லை. ஆனால் வேதாந்தத்தை விவேகானந்தர் மேற்கு நாடுகளுக்கு கொண்டு வந்ததில் இருந்து, அது அவ்வாறே தனித்து விடப்பட்டுள்ளது. பாரம்பரியமிக்க சனாதன தர்மத்தை மதசார்பற்றதாக்க, இந்து சமயத்தில் இருக்கும் தத்துவ முடிவுகளை எடுத்துக்கொண்டு, அவற்றை சமயம், மற்றும் சரியை, கிரியை, சேவை மற்றும் பக்தியில் இருந்து தனித்து வைக்க, மேற்கத்திய மக்கள் மேற்கில் படித்த கிழக்கு நாடுகளை சேர்ந்த மக்கள் நவீன வேதாந்தத்தில் முயற்சி செய்து இருக்கிறார்கள். இந்து சமயத்தின் சிறந்த பழக்கங்கள், சடங்குகள் மற்றும் கோயில் வழிபாட்டை தவிர்த்து, அதன் உன்னதமான தத்துவத்தை மட்டுமே ஏற்றுக்கொள்ள, மற்ற மதங்களை சார்ந்த வேதாந்திகள் எந்தவித நோக்கமும் இல்லாமல் முயற்சி செய்துள்ளார்கள். இவற்றை எல்லாம் யோகத்திற்கு முன்பாக மேற்கொண்டால் தான், உண்மையில் யோகம் நல்ல பலனை வழங்கும் என்பதை அவர்கள் முழுமையாக உணர்ந்துகொள்ளவில்லை. இந்த விஷயங்களின் நுணுக்கங்களை ஆச்சாரமான இந்துக்கள் புரிந்துகொள்வார்கள். இத்தகைய தவறான விளக்கங்களின் பிரச்சனை திருமூலர் காலத்திலேயே இருந்திருக்க வேண்டும், அதனால் தான் அவர் “வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்தம் (வேதாந்தம் என்பது சுத்தமான சைவ சித்தாந்தம்)” (பாடல் 1422) என்றும் §

“கேடறு ஞானி கிளர்ஞான பூபதி§

பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்§

ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன்§

பாடுறு சத்தசை வப்பத்த நித்தனே” (பாடல் 1428) என்றும் குறிப்பிட்டுள்ளார்.§§

வேதாந்தம் மற்றும் சித்தாந்தத்திற்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்துவதில் திருமூலர் முன்னோடியாக இருந்திருக்கலாம். ஆனால் திருமூலர் வேதாந்தம் என்று எதை குறிப்பிடுகிறார்? ஆதி சங்கரர் வேதாந்தம் பற்றிய தனது விளக்கங்களை, சில நூற்றாண்டுகள் கழித்து வழங்கினார். அதைப் போலவே ஒரு ஆழ்நிலை/உள்ளார்ந்த கடவுளாக இல்லாமல் இரண்டு தனித்தனி உண்மைப்பொருள்களாக இருக்கும் நிர்குண மற்றும் சகுண பிரம்மன், உலகின் முழுமையான யதார்த்தமின்மை மற்றும் ஞான பாதை மற்றும் அதற்கு முந்தைய நிலைகளில் இருப்பதாக கூறப்படும் வித்தியாசங்கள் போன்ற கோட்பாடுகள், அப்போது வேதாந்தத்திற்குள் சேர்க்கப்படவில்லை. உபநிடதங்கள் வழங்கிய நேரடி கோட்பாடுகளையே, திருமூலர் வேதாந்தமாக அறிந்து இருந்தார். உபநிடதங்கள் தெளிவாக “தத் துவம் அசி—அது நீயாக இருக்கிறாய்,” “அஹம் பிரம்மாஸ்மி—நான் பிரம்மம்” என்று அத்வைதத்தை தெளிவாக தெரிவிக்கிறது. மேலும் சித்தாந்தம் வேதாந்தத்தை அடிப்படையாக கொண்டுள்ளது என்று திருமூலர் குறிப்பிடும் போது, இந்த அத்வைதத்தை குறிப்பிட அவர் வேதாந்தத்தை பயன்படுத்துகிறார், மற்றும் அது அவரை பொறுத்தவரையில் சித்தாந்தத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும். இது ரிஷியின் போதனைகளில் இருந்து விலகி செல்வதால், இது இன்றைய சித்தாந்தத்திற்குள் கொண்டு வரவேண்டிய மிகவும் முக்கியமான தேவைகளில் ஒன்றாக இருக்கவேண்டும். §§

image§

கவாய் தீவில் இருந்த தனது மடத்திற்கு சைவ சித்தாந்தத்தின் புனிதமான பாதையை கொண்டு வந்து, தனது மடவாசிகள் மற்றும் சீடர்கள் மத்தியில் திருவள்ளுவரின் திருக்குறள் மற்றும் திருமூலரின் திருமந்திரத்தை அறிமுகப்படுத்த, குருதேவா அந்த இரண்டு தமிழ் மகான்களின் ஆளுயர கருங்கல் சிலையை திறந்து வைத்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அதனால் தான் நாங்கள் அவ்வப்போது “அத்வைத சைவ சித்தாந்தம்" என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். அது வேதாந்தத்தை தனது முடிவான குறிக்கோளாக கொண்டுள்ள சித்தாந்தத்தின் மீது எங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வெளிப்படுகிறது. எப்போதும் முழுமையான ஐக்கியத்தை பெறாமல், கடவுள் மற்றும் ஆன்மா நிரந்தரமாக பிரிந்து இருப்பதாக கருதும், மெய்கண்ட தேவர் தொடங்கிய த்வைத சைவ சித்தாந்த பிரிவின் விளக்கத்தில் இருந்து, இது எங்களை வேறுபடுத்தி காண்பிக்கிறது. இரண்டு பிரிவுகள், பெரும்பாலான வழிகளில் ஒன்றாக இருந்து, இறையியல் விஷயங்களில் மாறுபட்டு இருப்பது வழக்கமான ஒன்று தான். வரலாறு முழுவதும் இதைப்போன்ற வேறுபாடுகள் நிரம்பியுள்ளன. இறைவனை அடையும் வழியில் இருக்கும் வேறுபாடு, இரண்டு கிளைகள் உருவாக காரணமாக இருக்கிறது. §§

ஒரு புறம் யோகத்தின் ஆழத்திற்கு சென்று, சாதனாவில் மூழ்கி இருக்கும் ரிஷி, யோகி, முனிவர் அல்லது சித்தர் நேரடி அனுபவத்தை உருவாக்குகிறார். அவரது முடிவுகள் எப்போதும் அத்வைதம், ஒரு முழுமையான அத்வைத உணர்வை சார்ந்தே இருக்கின்றன. அது ஒரு நம்பிக்கையாகவும் இருப்பதில்லை. அது அனுபவத்தின் தத்துவ பின்விளைவாக இருக்கிறது. பெரும்பாலான சற்குருக்கள் மற்றும் அத்வைத பாதையை பின்பற்றும் பெரும்பாலானோர், அத்வைத சைவ சித்தாந்தத்தின் கோட்பாடுகளின் மீது உறுதியான நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். §§

இன்னொரு புறம் தத்துவவாதிகள், அறிஞர்கள் மற்றும் பண்டிதர்கள் அனுபவத்தை சார்ந்து இருக்காமல், யோகத்தை புறக்கணித்து, இறைவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்ளும் முயற்சியில் ஒரு நுணுக்கமான அறிவுணர்வு செய்முறை மூலமாக, அவர்கள் கோட்பாடுகளை ஊகித்து, பரிந்துரைத்து, சீர்செய்து மீண்டும் சீர் செய்ய வேண்டும். இவர்கள் பெரும்பாலும் சம்சாரிகளாக இருக்கிறார்கள் மற்றும் அவர்களின் சிந்தனை த்வைத சைவ சித்தாந்தத்தின் ஏதாவது ஒரு வடிவத்தை நோக்கி வழிநடத்தி செல்கிறது. இரண்டும் யதார்த்தமான பிரிவுகள் தான். இரண்டும் பாரம்பரிய பிரிவுகள் தான், மற்றும் அவற்றை ஒப்பிடுவது வெறுக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் அவை முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றன, மற்றும் அந்த வித்தியாசங்களை புரிந்துகொள்வது நல்லது.§§

நீங்கள் பரமாத்துமா, பரசிவ மற்றும் ஆன்மாவிற்கு இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். பரமாத்துமா என்பது உலகில் நாம் வழக்கமாக அடையும் பொருளை போல, அதை நாடிச் சென்று பெறவேண்டும் என்று பலர் கருதுகிறார்கள். ஆனால் உங்களிடம் இருந்து பரமாத்துமாவை இம்மியளவும் பிரிக்க முடியாது. நீங்கள் ஏதாவது ஒரு இடத்திற்கு சென்று, வாங்கிக்கொண்டு வர முடியாது. ஆனால் உருவமற்ற, ஆழ்நிலை பரமாத்துமா உங்களை விட்டு என்றுமே பிரிவது இல்லை. அது உங்கள் இதயத்துடிப்பைக் காட்டிலும் அதிக அருகாமையில் இருக்கிறது. §§

சிவபெருமான் தனிப்பட்ட ஆன்மாக்களை உருவாக்கி, முழுமையான வடிவமாக, முதன்மையான ஆன்மாவாக இருப்பதால், அவர் ஆதி ஆன்மா என்று அழைக்கப்படுகிறார். தனிப்பட்ட ஆன்மாவிற்கு ஒரு தொடக்கம் இருக்கிறது, மற்றும் இறைவனுடன் ஐக்கியமாவது அதன் முடிவாக விளங்குகிறது. அதற்கு உருவமும் இருக்கிறது. எல்லா உருவத்திற்கும், ஒரு தொடக்கமும் ஒரு முடிவும் இருக்கிறது. முழுமையான பரமாத்துமாவாக இருக்கும் பரசிவத்திற்கு உருவம் இல்லை, காலமில்லை, முடிவுமில்லை மற்றும் தொடக்கமும் இல்லை. எல்லா வஸ்துக்களும் பரமாத்துமாவில் இருக்கின்றன, மற்றும் பரமாத்துமா எல்லா வஸ்துக்களிலும் இருக்கிறார். பலர் பரமாத்துமாவை ஒரு நாடவேண்டிய பொருளாக கருதுகிறார்கள். நீங்கள் ஒரு இடத்தில் இருந்து கிளம்பி, வேறொரு இடத்திற்கு சென்று பரமாத்துமாவை வாங்க, இன்று முயற்சி செய்வீர்கள். இன்று கிடைக்கவில்லை என்றால் மீண்டும் நாளை முயற்சி செய்வீர்கள். அது வெளியே நாடும் பொருள் இல்லை. அது வெளியுலகில் தேடி அடையும் ஒரு பொருளாக இல்லாமல், முழுமையான உயிர்சக்தியாக நீங்கள் பெறும் மாற்றமாக உங்களுக்குள் இருந்து வருகிறது. இருந்தாலும் நீங்கள் அதை நாடி அதை அடைகிறீர்கள் என்பதால் அதை விளக்குவது மிகவும் கடினம். §§

தனிப்பட்ட ஆன்மா மாறுபட்டது. அதற்கு ஒரு உருவம் இருக்கிறது. ஆன்மா மிகவும் புனிதமான மற்றும் நுணுக்கமான உருவமாக இருந்தாலும், அந்த உருவம் உருவத்தின் விதிகளை மதிக்கிறது. அந்த ஆன்மா சிவபெருமானிடத்தில் தொடங்கி, அவருடன் நடைபெறும் சங்கமத்தின் மூலம் முடிவையும் பெறுகிறது. கடவுளை, உங்களது பரமாத்துமாவை புரிந்துகொள்வதே வாழ்க்கையின் குறிக்கோள் ஆகும். இது எல்லா சமயங்கள், சமயங்கள் மேற்கொண்ட முயற்சிகளின் முடிவாக விளங்குகிறது. அதனால் தான் நாம் வலுவான மற்றும் அதிக பக்குவமடைந்த சக்திகளாக மாறுவதற்கு, இயற்கையின் விதிகளுடன் நமது மனதில் இணக்கத்தை ஏற்படுத்தி, நம்மை மேம்படுத்தும் செய்முறையை சமயம் என்று அழைக்கிறோம். நாம் உயர் சக்திகளாக மாறி, உயர்ந்த சக்கரங்களில் வாழ்ந்து, கடவுளை அதிகமாக நெருங்குகிறோம். கடவுள் நம்மை நெருங்குவது இல்லை. இதற்கு மேல் கடவுளால் எவ்வாறு நெருங்க முடியும்? அவர் தற்போது உங்களது சிந்தனைகள், சுவாசம், கால்கள் மற்றும் கைகளை காட்டிலும் அதிக நெருக்கமாக இருக்கிறார். §§

உங்களில் சிலருக்கு புரிந்துகொள்வது கடினமாக இருப்பதை நான் உணர்வதால், நான் இதை வேறு விதமாக விளக்க முயற்சி செய்கிறேன். மனிதனுக்கு ஐந்து உடல்கள் இருக்கின்றன. அதில் ஒவ்வொன்றும் முந்தைய உடலை காட்டிலும் அதிக நுணுக்கமாக இருக்கிறது. மனிதனின் ஆன்மாவை ஒரு ஒளி விளக்கு போலவும், அவரது பல்வேறு உடல்கள் அல்லது உரைகள் பல்வேறு நிறங்களில், தூய வெள்ளை ஒளியை துணிப்போல மூடி இருப்பதாகவும் கற்பனை செய்துகொள்ளுங்கள். இவற்றில் தூல உடல் அதிக வெளிப்புறமாக இருக்கிறது. அதன் பிறகு பிராண உடல் இருக்கிறது, மற்றும் தூல உடலின் நகலாக இருக்கும் சூட்சும உடல் இருக்கிறது. அதன் பிறகு மனோமய உடல் இருக்கிறது. அதில் ஒருவர் உடனடியாக எந்த இடத்திற்கும் பயணம் செய்யலாம். §§

அதன் பிறகு ஆனந்தமய கோசம் இருக்கிறது, அதை நான் (ஆங்கிலத்தில்) ஆக்டிநோடிக் பாடி என்று குறிப்பிடுகிறேன். இந்த உடல் ஒவ்வொரு பிறவியிலும் வளர்ச்சி பெற்று, புதிய வெளிப்புற கோசங்களுடன் மறுபிறவி எடுக்கிறது மற்றும் தூல உடல் பூமியோடு சேரும் போது, இறக்காமல் இருக்கிறது. இந்த உடலே இறுதியில் ஒளி உடலாக, ஆன்மாவின் பொன்னிற உடலாக வளர்ச்சி பெறுகிறது. இந்த ஆனந்தமய கோசம் தனது முடிவான பரிணாம வளர்ச்சியில் அதிக முழுமையான வடிவமாக, மனித வடிவத்தின் நகலாக விளங்குகிறது. தூல பிறவிகள் நின்றதும், உள்பொருளின் நுணுக்கமான உலகங்களில் இந்த ஆனந்தமய கோசம் வளர்ச்சி பெறுகிறது. நிர்விகல்ப சமாதி, இறைவனின் உணர்தலுக்கு பிறகும், ஞானோதயம் பெற்ற ஆன்மாவின் பிரகாசமான ஆன்மீக உடல், சிவபெருமானுடன் இறுதியான ஐக்கியம் நடைபெறும் வரை அந்தர்லோகங்களில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. §§

“இறைவன், இறைவன், இறைவன்,” என்று எங்கும் இறைவன் இருக்கிறார் என்று நான் சொல்ல விரும்புகிறேன். எங்கும் ஒரு இறைவன் மட்டுமே இருக்கிறான், ஆனால் முழுமுதற்பொருள், தூய உணர்வு அல்லது எல்லா வடிவங்கள் வழியாக பாய்ந்து செல்லும் பரமாத்துமா, மற்றும் எல்லா இருப்புக்களின் சிருஷ்டிகர்த்தா என்று தெய்வீக சக்தியின் மூன்று அம்சங்களை மனிதன் கவனமாக ஆய்வு செய்வதன் மூலம், அவனுக்கு அந்த பரமாத்துமா பற்றிய புரிதல் வலுவடைகிறது. §§

மனதை, உருவத்தை மற்றும் நுணுக்கமான புரிதலை கடந்த முழுமையான பரமாத்துமாவாக, பரசிவமாக காலம் மற்றும் உருவத்தை கடந்து, பரவெளியற்ற பரம்பொருளாக சிவபெருமான் இருக்கிறார். பரசிவத்தை அறிந்துக்கொள்வதற்கு அனுபவிக்க மட்டுமே முடியும், ஆனால் அதன் பிறகு அதை விளக்க முடியாது. சிவபெருமான் எல்லா இருப்புக்களின் தூய உணர்வாக, துணைப்பகுதியாக அல்லது மூலாதாரப் பொருளாக இருக்கிறார். அவர் சச்சிதானந்தமாக அல்லது முடிவான உண்மையாக, தூய உணர்வாக அல்லது பேரின்பமாக, எல்லா வடிவங்கள் வழியாக பாய்ந்து செல்லும் பரமாத்துமாவாக இருக்கிறார். ஆதி ஆன்மாவாக, மகேஸ்வரனாக மற்றும் முதன்மையான மற்றும் மிகவும் நிறைவான உயிர்சக்தியாக சிவபெருமான் இருக்கிறார். அவர் என்றுமே சிருஷ்டிக்கப்படாமல், மூலாதாரமாக சிருஷ்டக்கர்தாவாக இருக்கிறார். அவர் எல்லா உயிர்சக்திகளின் கடவுளாக இருக்கிறார். அவர் எல்லா ஆன்மாக்களையும் தனக்குள்ளிருந்து உருவாக்குகிறார், மற்றும் அவர் தனது நிரந்தர திருநடனத்தில் வடிவங்களை தொடர்ந்து உருவாக்கி, காத்து அழித்து வருகிறார். சிவபெருமான் ஆக்கும் கடவுள், காக்கும் கடவுள் மற்றும் அழிக்கும் கடவுளாக இருக்கிறார் என்று எனக்கு எனது ஒன்பதாவது வயதில் கற்றுத் தரப்பட்டது. பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்ரன் என்று மூவராகவும் சிவபெருமான் இருக்கிறார் என்பதை அறிந்து இன்றுவரை நம்பி வருகிறேன். இதுவே சனாதன தர்மத்தின் சைவ சமயத்தின் சித்தாந்தங்கள் ஆகும். §§

நீங்கள் எல்லோரும் நமது சமயத்தின் தலைசிறந்த சாஸ்திரங்களை படிக்க வேண்டும். இந்த சித்தர்கள் வழங்கிய தெய்வீக அறிவுறுத்தல்கள், உங்களது சொந்த ஆன்மீக அறிதலை விழிக்க வைக்கும். திருமந்திரம் பெரும்பாலும் திருக்குறளை போன்றே அமைந்துள்ளது. நீங்கள் அவை இரண்டையும் குழந்தைகளுக்கு கற்றுத்தந்து, அது வழங்கும் ஞானத்தை தினசரி வாழ்க்கையில் பயன்படுத்தலாம். சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் நிறைந்த காலத்தில் நீங்கள் அவற்றை வழிகாட்டியாக பயன்படுத்தலாம், மற்றும் அவை உங்களை சரியான பாதையில் உறுதியாக அழைத்து செல்லும். நீங்கள் அவற்றை உங்கள் வீட்டில் புனிதமான பூஜை முடிந்த பிறகு அல்லது கோயில் பிரகாரங்களில் துதிப்பாடல்களைப் போல பாடலாம். ஒவ்வொரு செய்யுளையும் ஒரு பிரார்த்தனையாக, ஒரு தியானமாக மற்றும் நமக்கு முன்பாக இருக்கும் சிறந்த பாதையை பற்றிய ஒரு புனிதமான நினைவூட்டலாக பயன்படுத்தலாம். §§

இதை புரிந்துகொள்வது கடினம் என்றாலும், நீங்கள் அதற்காக உற்சாகத்தை இழக்க வேண்டாம். அதில் இருப்பது அனைத்தையும் புரிந்துகொள்வதற்கு இந்த பிறவி அல்லது பல பிறவிகள் தேவைப்படும் என்பதையும், அது தங்களது தனிப்பட்ட சாதனாக்களில் ஆழமாக செல்பவர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது என்பதையும் மட்டும் புரிந்துகொள்ளுங்கள். இது வேதங்கள் மற்றும் ஆகமங்களை முழுமையாக அறிந்திருந்த ஒரு மகானால் வழங்கப்பட்டது, மற்றும் அதை புரிந்துகொள்வதற்கு, நீங்களும் இந்த மற்ற சாஸ்திரங்களில் அதிக தேர்ச்சி பெற்று, ஒரு மிகப்பெரிய தகுதியை மெதுவாக பெறலாம். §§

திருமூலர் வாழ்ந்த காலத்து தலைமுறைக்கு சைவ சித்தாந்தத்தை தெற்கில் பரப்பும் நோக்கத்துடன் அவரது இமாலய குருவால் அவர் அனுப்பப்பட்டதும், கிழக்கு மற்றும் மேற்கிற்கு இடையே பாலத்தை அமைக்க யோக சுவாமி குருதேவாவை அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பியதையும் ஒப்பிட்டு பார்ப்பது சுவாரசியமாக இருக்கும். உலகெங்கும் இருக்கும் இன்றைய சைவ சாதகர்களுக்கு திருமூலர் செய்தது போன்ற சமயப்பணியை குருதேவாவும் செய்தார். இருவரும் தங்களது ஆழமான உணர்தல்களை ஆய்வு செய்து, சுருக்கி மற்றும் விளக்க பயன்படுத்தி, சைவ சமய கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பொக்கிஷங்களை ஒரு கலாச்சாரம் மற்றும் ஒரு மொழியில் இருந்து இன்னொன்றுக்கு எடுத்து சென்று, சைவ சமயத்தை ஒரு புதிய யுகத்திற்கு வழங்கினார்கள். §§

திருமூலரின் உறுதியான அத்வைத தத்துவம் மற்றும் வலுவாக சைவ சமய வெளிப்படுத்திய முறையின் காரணமாக, அவர் மீதும் அவரது ஆழமான ஆன்மீக பாடல்கள் மீதும் குருதேவாவிற்கு காதல் ஏற்பட்டு இருந்தது. அவர் வழங்கிய ஒவ்வொரு உரையிலும் திருமூலர் எழுதிய படைப்பை குறிப்பிட்டு, முகத்தில் புன்னகையுடன், தனது சொந்த உணர்தல்களுடன் முழுமையான இணக்கம் மற்றும் உடன்பாட்டுடன் இருந்த ஒரு சாஸ்திரத்தை தேடிப்பிடித்த திருப்தியை வெளிப்படுத்துவார். திருமந்திரத்தில் இருந்து சில பாடல்களை இங்கே காணலாம். §§

கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து§

உடலிடை வாழ்வுகொண்டு உள்ளொளி நாடின் §

உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனைக்§

கடலின் மலிதிரைக் காணலும் ஆமே. 3028§§

பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்§

தெரிந்துட லாய் நிற்கும் தேவர் பிரானும்§

இருஞ்சுடர் விட்டிட்டு இகலிடம் எல்லாம்§

பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே. 3029§§

உணர்வும் அவனே உயிரும் அவனே§

புணரும் அவனே புலவி அவனே§

இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்§

துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே. 2857§§

இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம்§

உருக்கொடு தன்னடு ஒங்கஇவ்வண்ணம்§

கருக்கொடு எங்கும் கலந்துநின் றானே§

திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே. 3042§§

1977 ஆம் ஆண்டு ஒரு நாள், அவர் தனது மூத்த சுவாமிகள் சிலரை தனது அலுவலகத்திற்கு அழைத்து, அவர்களை இன்னொரு தென்னிந்திய புனித நூலான திருக்குறளை வாசிக்க சொன்னார். மைலாப்பூரில் வாழ்ந்த நெசவாளர் சமூகத்தை சேர்ந்த இந்த மகான் எழுதிய செய்யுட்களுக்கு, யோக சுவாமி அதிக முக்கியத்துவம் அளித்து இருந்ததை அவர் அறிந்து இருந்தார். மூன்று பிரிவுகளுடன், வாழ்வியல் கோட்பாடுகள் மற்றும் மனிதன் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் பற்றிய உட்பார்வைகள் நிறைந்து இருக்கும், இந்த உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியத்தை தினமும் பள்ளிச்சிறுவர்கள் படிக்கிறார்கள்; ஆனால் அந்த நூலின் கருத்து ஆங்கிலத்தில் பிரபலமாக இல்லை. அந்த உலகப் பொதுமறையின் பிரிட்டிஷ் ஆங்கில மொழிபெயர்ப்பை சுவாமிகள் குருவிடம் காண்பித்தார்கள். அது அவர் காதுகளுக்கு விசித்திரமாக மற்றும் செயற்கையாக ஒலித்தது. அவர் அந்த புத்தகத்தை எடுத்து, அதில் பல குறள்களை உரக்க படித்து, ஓரிடத்தில் படிப்பதை நிறுத்தி, “இது நன்றாக இருக்கிறது, ஆனால் அதற்கு என்ன பொருள்?” என்று கேட்டார். அதன் பொருள் விவாதிக்கப்பட்டது. தமிழ் அகராதிகள் அலசப்பட்டன, மற்றும் அரை மணிநேரம் கழித்து, மிகவும் பகட்டாக இருந்த அந்த உரைநடை மொழிபெயர்ப்பு புதிய வார்த்தைகளின் மூலம் அழகாக மாற்றியமைக்கப்பட்டது. §§

மிகவும் சுருக்கமான பொருளை பெற்றதும் மிகவும் மகிழ்ச்சியடைந்த குருதேவா, முழுமையான மற்றும் தெளிவான விளக்கத்தை வலியுறுத்தி, திருக்குறள் முழுவதையும் தமிழில் இருந்து நவீன அமெரிக்க பயன்பாட்டிற்கு பொருந்தும் படியாக மொழிபெயர்க்கும் பணியை தனது சுவாமிகளுக்கு வழங்கினார். அவர்கள் குருதேவாவின் பாணியை கடைபிடித்து, அன்றே பணியை தொடங்கினார்கள். 1,080 குறட்பாக்களுடன் (அந்த துறவிகள் இறுதியான 250 செய்யுள் பகுதியை மொழிபெயர்க்க வில்லை. புலனுணர்வை அடிப்படையாக கொண்ட அந்த மென்மையான காதல் செய்யுளை, இன்னொரு எழுத்தாளர் எழுதியதாக கருதப்படுகிறது) அது சிறிய வேலையாக இருந்தாலும், அந்த பழங்கால உரை குறள் வெண்பாவை சார்ந்து இருந்தது, தமிழ் மொழியின் நுணுக்கங்களுடன் இருந்தது; மற்றும் நீண்ட இடைவெளிகளுடன், இருபத்தி இரண்டு வருடங்கள் கழித்து, அந்த படைப்பு நிறைவு செய்து வெளியிடப்பட்டது. 1999 ஆம் ஆண்டு வீவர்ஸ் விஸ்டம் இறுதியாக, தெளிவான அமெரிக்க ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. “திருவள்ளுவர் தனது படைப்பில் குறிப்பிட்டு இருந்த அனைத்து விஷயங்களுடனும் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அவரது குறிக்கோள்கள் நமது வாழ்க்கையில் அங்கமாக இருக்கின்றன,” என்று குருதேவா முடிவில் தனது சுருக்கத்தை வழங்கினார். §§

அவர் அந்த மொழிபெயர்ப்பை முந்தைய மொழிபெயர்ப்புக்களுடன் ஒப்பிட்டு பார்க்க விரும்பினார். அவர் இரண்டையும் அருகில் வைத்து, சிரித்துக்கொண்டு, “நாம் சிறப்பாக செய்துள்ளோம்,” என்று கூறினார். உதாரணத்திற்கு, குறள் 15 மழையின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. 1886 ஆம் ஆண்டு Rev. G. U. போப் வழங்கிய மொழிப்: “மழை அனைத்து வேலைகளையும் செய்கிறது: அது பரவலாக அழிவை ஏற்படுத்துகிறது, பிறகு சரியான நேரத்தில் உதவிகளை வழங்குகிறது; முன்பு இருந்த சந்தோஷமான காலத்தை போல, அது அழிவை சந்தித்த மக்களை மேம்படுத்துகிறது.” குருதேவாவின் சுவாமிகள், சாரத்தையும் நேரடியாக தமிழ் மொழியையும் பின்பற்றி எழுதியது: “மழை அழிவை ஏற்படுத்துகிறது, மற்றும் அந்த மழை அழிவை ஏற்படுத்தியவர்களை மேம்படுத்தவும் செய்கிறது.” இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டாக, புலான்மறுத்தல் அதிகாரத்தில் வரும் திருக்குறளைப் பார்க்கலாம். 1962 ஆம் ஆண்டு, அந்த குறளை கே. எம். பாலசுப்ரணியம் “காப்பாற்ற தெரியாதவர்களுக்கு செல்வத்தின் ஆசிகள் கிடைக்காது. இறைச்சி உண்பவர்களுக்கு இரக்கத்தின் ஆசிகள் கிடைக்காது,” என்று மொழிபெயர்த்தார். “ஊதாரித்தனமாக இருப்பவர்களிடம் செல்வம் இருக்காது, இறைச்சி உண்பவர்கள் இதயங்களில் இரக்கத்தை பார்க்க முடியாது,” என்று சுவாமிகள் மொழிப்பெயர்த்தார்கள். §§

சைவ சமயம் ஒரு நவீன குரலை பெறுகிறது §

தனது கவாய் தலைமையகத்தை நிறுவுவதில் அவர் மும்முரமாக இருந்ததால், அவருடைய அதிகமான நேரத்தை பயன்படுத்திக் கொண்டு குறைவான பலனை வழங்கிய வெளிப்புற தாக்கங்களில் இருந்து, பல வருட இடைவெளிக்கு பிறகு 1978 ஆம் ஆண்டு விடுதலை பெற்று இருந்ததால், குருதேவா மீண்டும் ஆக்கப்பூர்வமான வெளியீட்டில் ஈடுபட்டார். அது ஒரு எளிமையான துண்டு பிரசுரங்களின் தொடர்ச்சியுடன் தொடங்கியது. அதற்கு அவர் பிரசாத என்று பெயரிட்டார், அதாவது அருள் நிறைந்த பரிசுகள் என்று பொருள். அதன் பிறகு இன்ஸ்பயர்ட் டாக்ஸ் என்று தலைப்பில், விர்ஜினியா சிட்டியில் வெளியிட்ட அதே பாணியை பயன்படுத்தி சிறிய புத்தகங்கள் வெளிவந்தன. அவர் தன் வாழ்நாள் முழுவதும் தனது போதனைகளை வழங்க பயன்படுத்திய உபதேச முறையில் இருந்து, இந்த 16-24 பக்க சிறிய புத்தகங்களை துறவிகள் அச்சிட்டு இருந்தாலும், அவை நேர்த்தியாக இருக்கவேண்டும் என்று அவர் விரும்பியதால், அவை ஹானலுலுவில் திறமைமிக்க முறையில் டைப்செட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். §§

அது ஃபோட்டோ டைப்செட்டிங் விலைப்பட்டியல் வரும் வரை தொடர்ந்தது. $700 கோரி ரசீது வந்ததும் அதிர்ச்சி அடைந்த குருதேவா, இதற்காக மேலும் செலவு செய்ய மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக, மடத்திலேயே சொந்தமாக டைப்செட்டிங் செய்ய வழிகளை தேடுமாறு, தனது வெளியீட்டு குழுவிடம் கேட்டுக்கொண்டார். அதைப்போன்ற ஒரு கருவி அப்போது தான் சந்தைக்கு வந்து இருந்ததால், நேரப்பொருத்தம் சரியாக இருந்தது, மற்றும் குருதேவா ஒரு குவாட்ரிடெக் 1200 ஃபோட்டோடைப்செட்டிங் இயந்திரத்தை வாங்க, தனது துறவிகளுடன் ஓஹு பறந்து சென்றார். எதிர்காலத்தில் இந்த துறவிகள் இந்த கருவியை பயன்படுத்தி ஒரு நியாயமான விலையில், தங்கள் தனிப்பட்ட திறமையால் எழுத்துரு (font) மற்றும் வடிவத்தை (style) மாற்றி அமைத்து, அவர்கள் வெளியீடு செய்த முறையையே மாற்றி அமைத்தது. §§

இந்த விளைவு அதிக உற்சாகம் தருவதாக இருந்தது. அச்சுப்பணி சிறிய ஓடைகளாக தொடங்கி, பெரிய நதிகளாக வெளிவந்தன. அந்த கருவியின் வேகம் குருதேவாவை உற்சாகப்படுத்தியது. அவர் தான் முன்பு வழங்கிய உரையை பார்த்ததும், அதை ஒரு நாள் முழுவதும் கவனமாக பார்த்தார். அதன் பிறகு அந்த உரையை அடுத்த நாள் டைப்செட் செய்வார். அவர் அதிக உற்சாகத்துடன் இருந்ததால், ஒரு விரைவான முறையில் இந்த பணியை தொடர்ந்து செய்துக்கொண்டு இருந்தார். இந்த முறை சுழற்சி முன்பு போல இல்லாமல், வெளிவந்த போதனைகள் சுத்த சைவ சமயம் சார்ந்ததாக இருந்தன. 1969, 1970 மற்றும் 1972 ஆம் ஆண்டு அவர் இலங்கையில் இருந்து வந்த பிறகு, அவர் சைவ சித்தாந்தத்தின் மீது தியானம் செய்து, சைவ சித்தாந்தம் பற்றி பேசி, சைவ சித்தாந்தத்தை பின்பற்றி வாழ்ந்தார். அதன் பிறகு அவருக்குள் அடங்கி இருந்த அனைத்தும் நூறு வழிகளில் வெளிவந்தன. §§

ஃப்ரீ வில் அண்ட் தி டெய்டீஸ் இன் இந்துயிசம் (Free Will and the Deities in Hinduism); தி ஹாண்ட் தட் ராக்ஸ் தி கிரேடில் ரூல்ஸ் தி வேர்ல்ட் (The Hand That Rocks the Cradle Rules the World); புரோடெக்ட், பிரசர்வ் அண்ட் பிரமோட் தி சைவ தர்மா (Protect, Preserve and Promote the Saiva Dharma); தி டூ பெர்பெக்சன்ஸ் ஆஃப் அவர் சோல் (The Two Perfections of our Soul); தி மெடிடேடர் (The Meditator), மற்றும் மேலும் பல தலைப்புகளில் வெளிவந்தன. அந்த புத்தகங்களில் இந்துயிசம், தி கிரேட்டெஸ்ட் ரெளிஜியன் இன் தி வேர்ல்ட் (Hinduism, the Greatest Religion in the World) மிகவும் பிரபலமாகவும் சர்ச்சைக்குரியதாகவும் இருந்தது. அந்த தலைப்பை பார்க்கும் போது, ஆர்வத்துடன் சமயத்தை பின்பற்றும் ஒருவர், தனது சமயத்தின் மேன்மையை வலியுறுத்தி எழுதிய ஒரு மதவெறி பழியுரையாக நினைத்து சிலர் பயந்தார்கள். ஆனால் அந்த புத்தகத்தில் சனாதன தர்மம் பற்றிய ஒரு சமநிலையான சுருக்கம் இருந்தது மற்றும் அதனுடன் மற்ற மதங்கள் மீது இந்து சமயத்தின் உள்ளார்ந்த மற்றும் பிரத்யேக சகிப்புத்தன்மை பற்றிய இதயத்தை தொடும் ஒரு அறிக்கையும் இருந்தது. அது மதத்தின் பெருமையாக குறிப்பிடப்பட்டிருந்த அம்சங்களின் பட்டியலில் இடம்பெற்று இருந்தது. அதில் இருந்து ஒரு பகுதி:§§

இந்து சமயம் ஒவ்வொரு முக்கிய சமயத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதாலும், அதனால் மற்ற சமயங்கள் அனைத்தையும் கிரகித்து, கௌரவித்து அதன் சாஸ்திரங்கள், அதன் மகான்கள் மற்றும் அதன் தத்துவங்களை ஏற்றுக்கொள்ள முடியும் என்பதாலும், இந்து சமயம் “ஆன்மீகத்தின் தொடக்கம்" மற்றும் “எல்லா சமயங்களின் தாயாகவும்" என்று அழைக்கப்பட்டது. இது உண்மையான எல்லா ஆன்மீக முயற்சிகளின் மீது இந்து சமயம் பரிவுடன் இருப்பதாலும், தெய்வத்துடன் ஐக்கியமாகும் பாதையில் எல்லா ஆன்மாக்களும் வளர்ச்சி அடைகின்றன என்பதையும், அவை அனைத்தும் இந்த பிறவி அல்லது அடுத்த பிறவியில், எந்த விதிவிலக்கும் இல்லாமல், ஆன்மீக ஞானோதயம் மற்றும் முக்தியை அடைவார்கள் என்பதை தவறாமல் அறிந்து இருப்பதாலும் சாத்தியமாகிறது.§§

தனது சமயம் அதிகம் பரந்து விரிந்து, ஆன்மீக விரிவாக்கத்திற்கு மிகவும் யதார்த்தமான மற்றும் பயனுள்ள கருவி என்பதை ஒரு இந்து இயல்பாக உணர்வது மட்டுமில்லாமல், உலகில் இருக்கும் எல்லா சமயங்களும் சாசுவதமான ஒரே பாதையின் வெளிப்பாடுகள் என்பதை அவர் தனது மனதில் பதியவைத்து, அதில் ஒவ்வொன்றையும் தனது கோட்பாடுகள் மற்றும் சமயக்கொள்கையின் அடிப்படையில் புரிந்துக்கொள்கிறார். சில நம்பிக்கைகள் மற்றும் உட்புற அணுகுமுறைகள் மற்றவைகளை காட்டிலும் அதிக அனுகூலமானவை என்பதையும், அதனால் எல்லா மதங்களும் ஒன்றல்ல என்பதையும் அவர் அறிந்து இருக்கிறார். அவை பல வழிகளில் மாறுபடுகின்றன. ஆனால், இந்து சமயத்தில் தங்கள் பாதையே "ஒரே பாதை" என்ற உணர்வு எதுவும் இல்லை. ஒரு சுத்தமான மற்றும் ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும் எல்லா முயற்சிகளுக்கும், ஒரு கடவுள் பற்றுள்ள இந்து ஆதரவாக இருப்பார் மற்றும் ஒரு சிரத்தையுள்ள பக்தனை அவர் தேர்ந்தெடுத்த பாதையில் இருந்து திசைத்திருப்ப நினைப்பதே தவறு என்று கருதுவார். இந்த இந்து மனதைத்தான் நாங்கள் கற்றுத்தந்து, பயிற்சி செய்து, பாதையில் இருக்கும் சாதகர்களுக்கு வழங்கவும் செய்கிறோம். §§

குருதேவா எ காடேகிசம் பார் சைவைட் இந்துஸ் (A Catechism for Saivite Hindus) மற்றும் எ க்ரீட் பார் சைவைட் இந்துஸ் (A Creed for Saivite Hindus) என்று இரண்டு படைப்புக்களை உருவாக்கி, தனது படைப்புக்களில் மிகவும் முக்கியமானதாக கருதிய மதத்தின் அறிக்கைகளை சுருக்கினார். அந்த காடேகிசம் சைவ சமயத்தை பின்பற்றி வாழ்வது பற்றிய கேள்விகள் மற்றும் சுருக்கமான பதில்களை கொண்டிருந்தது, மற்றும் க்ரீட் தத்துவத்தை சுருக்கமாக விளக்கிய பன்னிரண்டு நம்பிக்கைகளை கொண்டிருந்தது. எதிர்கால சந்ததிகளின் எண்ணங்களுக்குள் சைவ சமயத்தின் ஆற்றல் மற்றும் சக்தியை சுமந்து செல்ல, ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சமூகத்தில் இருந்த மூத்த சுவாமிகளுடன் விவாதிக்கப்பட்டு, ஆய்வு செய்து வடிவமைக்கப்பட்டன. இந்த பணி மார்ச் 7, 1978 மகாசிவாத்திரிக்கு சில நாட்கள் முன்பாக பூர்த்தி அடைந்தது. அவர் அதன் பிறகு தினமும் தனது சீடர்கள் தொடர்ந்து சொல்வதற்கு, அந்த சுருக்கமான பன்னிரண்டு நம்பிக்கைகளின் சாரத்தை ஒரு கூட்டு சொற்றொடராக வடிவமைத்தார். அது சைவ சித்தாந்த நம்பிக்கைகளின் மிகவும் குறுகிய சுருக்கமாக இருந்தது. “உள்ளார்ந்த அன்பாகவும் யாவும் கடந்த யதார்த்தமாகவும் சிவபெருமான் இருக்கிறார்,” என்பதே அவர் வடிவமைத்த சொற்றொடர். §§

இந்த காலகட்டத்தில் துறவற வாழ்க்கையின் பல நிலைகள் பதிவு செய்யப்பட்டு முறைப்படுத்தப்பட்டன. இது குருதேவாவுடன் இணைந்து செயல்பட்ட, இறையியல் பாடசாலையின் மூத்த துறவிகளுக்கு ஒரு தொடர் வேலையாக இருந்தது. இந்த பணியில் இருந்து தேவாலயத்திற்கு சாதகர், கெஞ்சி வேண்டுபவர் மற்றும் சமய அமைப்பில் சேர விண்ணப்பிப்பவரின் உறுதிமொழி புத்தகங்கள் வெளிவந்தன. ஒரு சைவ சந்நியாசி தனது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய உறுதிமொழிகளுக்கு ஒரு முழுமையான ஆவணத்திற்கு முன்னேற்பாடு நடவடிக்கைகளை, குருதேவா ஏப்ரல் மாதத்தில் தொடங்கி இருந்தார். அது பின்னர் தி ஹோலி ஆர்டர்ஸ் ஆஃப் சந்நியாஸ் (சந்நியாச வாழ்க்கையின் புனித ஆணைகள்) என்ற பெயரில் வெளிவர இருந்தது. அதுவரை வாய்மொழியாக வழங்கப்பட்ட சைவ துறவியின் தர்மம் முதல்முறையாக ஒன்று திரட்டப்பட்டது. அது துறவியின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களது இலட்சியங்கள், ஒழுக்கங்கள் மற்றும் வாழ்முறை தெளிவாக வரையறுத்த ஒரு சுருக்கமான மற்றும் விரிவான ஆவணமாக இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி குருதேவா தனது சைவ சித்தாந்த யோக சமூகத்தில் நுழைய ஒரு முறையான பிரமாணத்துடன், தனது சந்நியாசிகள் அனைவரையும் மீண்டும் தங்கள் உறுதிமொழிகளை எடுக்க செய்து, அந்த புதிய கையேட்டில் அவர்கள் கையொப்பத்தையும் பெற்றார். அவர் 1950 களின் இறுதியில் யோக சமூகத்தை முதல் முறையாக தொடங்கி இருந்தார், மற்றும் அது தற்போது அவரது வேலை மற்றும் பணியின் மையமாக மாறிக்கொண்டு இருந்தது. §§

1970 முதல் 1980 வரை, பத்து வருடங்களுக்கு, அங்கத்தினர்கள், மாணவர்கள் மற்றும் விருந்தாளிகள் இல்லாமல் நாங்கள் இந்த கவாய் தீவில் வாழ்ந்து வந்தோம். எங்களுக்கு விருந்தாளிகளாக யாத்திரை மேற்கொண்ட எனது சீடர்கள் மற்றும் சுவாமிகள், பண்டிதர்கள், அறிஞர்களைப் போன்ற இளம் துறவிகளின் ஆன்மீக வாழ்க்கைகளை மேம்படுத்த அதிக தேர்ச்சி பெற்ற விசேஷ விருந்தினர்கள் மட்டுமே வருகை தந்தனர். இந்த காலகட்டத்தில், சைவ சித்தாந்தத்தின் இரண்டு பிரிவுகள், சைவ சமயத்தின் ஆறு பிரிவுகள், இந்து சமயத்தின நான்கு பிரிவுகள் மற்றும் உலகின் எல்லா முக்கிய மதங்களையும் ஆழமாக ஆய்வு செய்வது உட்பட, எங்களது பதிப்புக்களில் சாஸ்திர ஆராய்ச்சி செய்வதில் மடவாசிகள் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் அழிந்து இருந்த தேனீ வளர்ப்புத்துறையை மீட்டு, அதனால் வருமானத்தை ஈட்டனர். அவர் தீவு முழுவதிலும் தேனீக் கூட்டங்களை 300 யில் இருந்து 3,000 வரை பெருக்கி, அந்த துறைக்கு புத்துயிர் வழங்கினார்கள். இது அந்த தீவில் அடிமட்ட நிலையில் இருந்த மக்களுடன் உருவங்களை வளர்த்துக்கொள்ள நல்ல வழிகளை ஏற்படுத்தி தந்தது. §§

குருதேவாவின் போதனைகள் சிக்கலான சிந்தனை மற்றும் சூட்சுமமான மறைபொருள்கள் நிறைந்து இருந்தாலும், அவை மிகவும் எளிமையாக இருந்தன. மனிதன் உடலாக, மனமாக அல்லது உணர்ச்சியாக இல்லை என்று அவர் பேசினார். மேலும் யோக சுவாமி முன்னர் குறிப்பிட்டதை போல, மனிதன் மனிதனாக இல்லை, இறைவனாக இருக்கிறான் என்று அவர் தைரியமாக அறிவித்தார். ஆன்மாவின் இயல்பான தன்மை தெய்வீகமாக, இறைவனுடன் முழுமையான ஒருமையில் இருக்கிறது ஆர்வமுள்ளவர்களுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருந்தார். ஆன்மா இறைவனுடன் ஒன்றாக எப்போதும் இருந்துள்ளது, மற்றும் அது மனிதனின் விழிப்புணர்வு உணர்தலாக மாறுவதற்காக காத்து இருக்கிறது. ஒரு முழுமையான பிரபஞ்சத்தில் வாழும் நாம் ஒவ்வொருவரும் ஒரு முழுமையாக ஆன்மாவாக இருக்கிறோம் என்று அவர் உறுதி அளித்தார். தற்போது சைவ சித்தாந்தத்தின் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியில் தெளிவாக விளக்கப்பட இவை அனைத்தும், பல வருடங்களுக்கு முன்பு 1959 ஆம் ஆண்டு பரமாத்துமா (The Self God) என்ற தலைப்பில் அவர் வழங்கிய உரையில் குறிப்பிட்டு இருந்தார். அந்த உரை பெற்ற வரவேற்பை, குருதேவா விளக்குகிறார். §§

அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து, பரமாத்துமா ( The Self God) என்ற பெயரில் அந்த சிறிய புத்தகத்தின் பல ஆயிரக்கணக்கான நகல்கள் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் அச்சிடப்பட்டு பரவலாக விநியோகம் செய்யப்பட்டன. அது பெற்ற பிரபலத்தை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள, நான் ஒரு சம்பவத்தை விவரிக்க உள்ளேன். நாங்கள் தென்னிந்தியாவில் இருந்த ஒரு தொலைதூர கிராமம் வழியாக சென்ற போது, எங்கள் வாகனத்தின் சக்கரம் பழுதடைந்து விட்டது. அதை வாகன ஓட்டி சீர் செய்ய ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்த போது, நாங்கள் அந்த இடத்தை சிறிது சுற்றிப்பார்த்தோம். எங்களை கடந்து பலர் அவ்வப்போது சென்று கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து, அந்த கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் எங்களிடம் எங்கள் “சொந்த ஊர்" பற்றி விசாரித்தார். நான் அவரிடம் அடக்கமாக என்னிடம் இருந்த ஒரு துண்டு பிரசுரத்தை வழங்கினேன். அவர் எங்களை எங்களை ஒரு முறை நோட்டமிட்டார், அதன் பின்னர் அதை ஏற்க மறுத்து, தனது சட்டை பையில் இருந்து ஒரு சிறிய புத்தகத்தை எடுத்து, “எனக்கு இதற்கு மேல் எதுவும் தேவையில்லை. எனக்கு தேவையானது அனைத்தும் இதில் இருக்கிறது,” என்று அவர் கூறினார். அவர் என்னிடம் நான் எழுதிய பரமாத்துமா புத்தகத்தை காண்பித்தார். அது இந்தியா மற்றும் இலங்கையில், பெரும்பாலும் “சிறிய பொக்கிஷம்" என்று அழைக்கப்பட்டு, விளக்க முடியாத நிர்விகல்ப சமாதியின் விளக்கமாக கருதப்படுகிறது. §§