குருமார்களின் சரித்திரங்கள்

Page 38: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/38_guru06_01.html§

குருமார்களின் சரித்திரங்கள்§

அத்தியாயம் இருபத்தி மூன்று§

ஐரோப்பாவிற்கு பயணம் செலுத்தல் §

1967 வருடத்து வசந்த காலத்தில், பதினான்கு வாரங்கள் பயணமாக மாஸ்டர் சுப்பிரமுனியா ஐரோப்பா புறப்பட்டார். அவர் இதற்கு ஆக்டினிக்ஸ் வேர்ல்ட் டூர் (ஆன்மீக சக்திகளின் உலகப்பயணம்) என்று பெயரிட்டார். அவர் தன்னுடன் மூன்று துறவிகள் மற்றும் ஐந்து குடும்பத்தினருடன், பாரிஸ் பயணம் செய்தார். அங்கே வோக்ஸ்வேகன் வாகனத்தை வாங்கி, பதினான்கு நாடுகளுக்கு கிளம்பினார். அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும், ஆன்மீக தலைவர்களை சந்தித்தனர்; அவர்கள் சுவிஸ் நாட்டு மடங்கள் மற்றும் ரோமன் இறையியல் பாடசாலைகளின் மதகுருக்களை சந்தித்தனர். அந்த பயணத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை மிகவும் குறைவு. ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு $2 தான். அதனால் அந்த குழுவினர் ஃப்ரெஞ்ச் நாட்டு கோதுமை வயல்களில் தங்கள் உறக்கப்பைகளை விரித்து வெளியே தங்கி, ஜெர்மனியின் பிளாக் ஃபாரஸ்ட் ஓடைகளில் குளித்தனர். அந்த குழுவினர் இரு முறை ஒரு கிராமப்புற விடுதியில் தங்கி, வெந்நீரில் குளித்தனர். §§

அது ஒரு குழப்பமான மற்றும் அற்புதமான பயணமாக இருந்தது. அவர்கள் துனிஸ் நகரத்தின் காஸ்பாவில் பாரசீக தரை விரிப்புகளை பேரம் பேசினார்கள். அப்போது அமெரிக்க-அல்ஜீரிய உறவுகளில் முறிவு ஏற்பட்டு இருந்ததால், அவர்கள் ஒரு விமானத்தில் ஏற்றிச் செல்லப்பட்டு, துப்பாக்கி முனையில் 36 மணி நேரங்களுக்கு ஒரு அல்ஜீரிய விமான நிலையத்தில் கைதிகளாக வைக்கப்பட்டு இருந்தனர். §§

மாஸ்டர் வெனிஸ் நகரத்தில், தனது முந்தைய பிறவி அனுபவத்தை ஆய்வு செய்துக்கொண்டு மூன்று நாட்கள் சுற்றிக்கொண்டு இருந்தார். அவர் இரண்டு துறவிகளின் துணையுடன், அவ்வப்போது ஒரு கொண்டோலாவை (வெனிஸ் நகர ஓடம்) வாடகைக்கு எடுத்துக்கொண்டு, நகரம் முழுவதும் சுற்றி வந்தார். தான் ஒரு அரங்கிற்கு வெளியே, ஒரு இடத்தை தேடி வருவதாக அவர் கூறிக்கொண்டு இருந்தார். அவர் பல மணி நேரங்களுக்கு தேடிக்கொண்டு இருந்தார். அவர் மூன்றாவது நாள் திடீரென்று, “இந்த இடம் தான்! இந்த இடத்தில் எனது முந்தைய பிறவியில் நான் கொல்லப்பட்டேன். நான் ஒரு ஓபரா நிகழ்ச்சியை முடித்து, அரங்கின் அந்த சிறிய கதவு வழியாக வெளியே வந்த போது, ஒருவர் என் பின்னாலிருந்து வந்து, என் தலையில் கத்தியால் குத்தி, என்னை கால்வாயில் வீசி எறிந்து மூழ்க செய்தார்.” §§

நீண்ட நாட்கள் முன்பாக நடந்த அந்த கொடூர கொலை சம்பவத்தினால், தனக்கு இந்த பிறவியில் பாட்டு பாடுவதற்கு எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை என்றும் மாஸ்டர் குறிப்பிட்டார். அந்த ஓபரா பாடகரின் வாழ்க்கை அருமையாக இருந்ததால், அந்த உடலை விட்டு பிரிவது கடினமாக இருந்ததாக அவர் தெரிவித்தார். §§

அவர் ஸ்விட்சர்லாந்தின் அஸ்கோனா சென்றிருந்த போது, இத்தாலி மற்றும் ஸ்விட்சர்லாந்து பகிர்ந்த, லாகோ மாகியோர் என்ற ஒரு மிகப்பெரிய ஏரியின் நதிக்கரையில் அமைந்து இருந்த காசா எரானோஸ் என்கிற கார்ல் ஜங்கின் அருமையான கோடைக்கால ஷாலே (ஆல்ப்ஸ் மலையில் இருக்கும் வீடு) வீட்டில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தார். தியானம் செய்து உபதேசங்களை வழங்கிக்கொண்டு ஜங்கின் சொந்த நூலகத்தில் ஆய்வுசெய்த போது, அந்த புகழ்பெற்ற உளவியாளருக்கு இந்திய தத்துவத்தின் மீது இருந்த நாட்டம், மற்றும் குண்டலினி சக்தி மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டை பற்றி மாஸ்டர் தெரிந்துகொண்டார். §§

ஒரு முறை ஒரு இளம் துறவி குருவிடம் ஆன்மீக ஒளி பற்றிய விளக்கத்தை கேட்டார். மாஸ்டர் சில வார்த்தைகள் பதில் அளித்து, திடீரென்று ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தார், பிறகு கூடியிருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் தனது அறைக்கு திரும்பினார். சில மணி நேரங்கள் கழித்து, குருவை மதிய உணவிற்கு அழைக்கும் பொருட்டு, துறவிகள் பூட்டியிருந்த கதவை தயக்கத்துடன தட்டினார்கள், ஆனால் தான் வேலையில் மும்முரமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். பல மணிநேரங்கள் கழிந்தன, அவர்கள் மீண்டும் கதவை தட்டினார்கள், ஆனால் எந்த பதிலும் இல்லை. அவருக்கு இடைஞ்சலாக இருக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், இது அந்த குழுவிற்கு விசித்திரமாக தோன்றியது, மற்றும் அவர்கள் அவரது பணியில் தலையிட வேண்டுமா என்று யோசிக்க ஆரம்பித்தனர். §§

இந்த உரையாடல்கள் நடந்துகொண்டு இருந்த போது, மாஸ்டர் தனது அறையின் கதவை திறந்து, வீட்டின் பின்புறத்தில் திறந்த வெளியில் ஏரியை பார்த்து அமைந்து இருந்த கற்கள் பதிந்த திண்ணைக்கு எல்லோரையும் வருமாறு அழைத்தார். அது மதிய நேரமாக இருந்தது. துறவிகள் சுற்றி அமர்ந்து இருக்க, அவர் வழக்கறிஞர்கள் எழுத பயன்படுத்தும் மஞ்சள் நிற காகித அட்டைகளை போன்ற ஒன்றை கொண்டு வந்தார். அவரது முகத்தில் எதையோ சாதித்த மகிழ்ச்சி தெளிவாக தெரிய, காலையில் கேட்கப்பட்ட கேள்வியை மீண்டும் சொல்லி, தனிமையாக இருந்த சில மணி நேரங்களில் தான் எழுதியிருந்த ஒரு சிறிய புத்தகத்தை பற்றி அவர் தெரியப்படுத்தினார். அவர் அதற்கு தூய வெள்ளை ஒளி என்ற தலைப்பை வழங்கி, ஆன்மீக அனுபவத்தின் ஒரு ஆழமான விளக்கமாக இருந்த அந்த எழுத்துப்பிரதியை வாசிக்க ஆரம்பித்தார். அவர் காக்னிசண்டபிலிட்டியை தவிர, இந்த முக்கிய படைப்பை மட்டுமே தன் கைகளால் எழுதி இருந்தார். மற்ற அனைத்தும் அவர் வழங்கிய ஊக்கமளிக்கும் உரைகள் மற்றும் மற்ற அறிவுறுத்தல்களின் எழுத்து வடிவங்களை தங்கள் மூலமாக கொண்டிருந்தன. அதில் இருந்து ஒரு தொகுப்பு.§§

image§

ஐரோப்பாவில் மேற்கொண்ட பயண-ஆய்வு திட்டங்கள், கிரேக்க நாட்டில் இருந்த பார்த்தீனான் போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு இன்னர்சர்ச் உறுப்பினர்களை அழைத்து சென்றது. அவர்கள் எங்கே சென்றாலும், உட்புறமாக நித்தியமாக இருக்கும் பரமாத்துமாவைப் பற்றி மாஸ்டர் உரை நிகழ்த்தினார். அவர் அதில் உறுதியாக நிலைகொண்டு இருந்தார்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

முதல் தூய வெள்ளை ஒளி உதித்து, ஒரு புதிய ஆன்மீக இனம் தொடங்கும் போது, அது மனதின் மாபெரும் புதிய உலகில் எடுத்து வைக்கும் முதல் அடியாக விளங்குகிறது. இதன் மூலம் அந்த நபர் தனது பெற்றோர்கள் மற்றும் மூதாதையர்களுக்கு முன்னோராக மாறுகிறார். அவர் ஒரு விரிவாக்கம் பெற்ற ஒரு உட்புற மனநிலையில் வாழும் போது, லௌகீக உணர்வுடன் இருப்பவர்கள் தங்களை புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடாது. இந்த “தனிமையான" புதிய பாதையில், அவர் இந்த உலகை உண்மை என்று நம்புவோர் கண்கள் வழியாக பார்த்து, அதன் லீலையை உண்மை என்று கருதி, அந்த வரையறுக்கப்பட்ட உலகை பார்த்து அதனுடன் தொடர்புபடுத்திக் கொள்வதன் மூலம், எதிர்கால விரிவாக்கங்களுக்கு தேவையான இணக்கத்தை பராமரிக்க, விவேகத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும். லௌகீக உலகில் ஆழமாக மூழ்கி இருப்பவர்களிடம் ஆன்மீக யதார்த்தங்களுக்கு சம்மதத்தை பெற முயற்சி செய்தால், அது அவர்கள் பலகாலமாக கடினமாக உழைத்து பெற்ற பாதுகாப்பிற்கு, ஒரு நேர்மறை அச்சுறுத்தலை உருவாக்குவதால், அது உறவில் முறிவை மட்டுமே ஏற்படுத்தும். §§

முதலில் நாம் உடல் வலிமை மற்றும் மனிதனின் சக்திக்கு மதிப்பு அளித்து உள்ளுணர்வு யுகத்தில் இருந்தோம். அதன் பிறகு தகவல்களை பெறுவதற்காக தகவலை நாடிச் சென்று, அறிவியலில் முன்னேற்றம் பெற்று அறிவுணர்வு யுகத்தில் இருந்தோம். இப்போது உலகம், மனம் மற்றும் மிகவும் முக்கியமாக பரமாத்துமாவின் புதிய புரிதலுடன், புதிய விதிகளை நிர்வகித்து, புதிய பண்புகளின் உலகில் இருக்கிறோம். இது மனதின் யுகமாக இருந்து, அந்த மனதில் ஒளியின் வேகத்தை காட்டிலும் மிகவும் தீவிரமாக இருக்கும் மண்டலங்களைப் பற்றி, அதைப்பற்றி கேட்பதற்குரிய உட்புற காதுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே தீர்க்கதரிசிகள் பேச விரும்புகிறார்கள் என்பதால், புரிதல் பயணத்தின் முன்னேற்பாடாக விளங்குகிறது. §§

மனிதனின் மனம் வெளிச்சம் அல்லது இருளை நோக்கி, விரிவாக்கம் பெற்ற விழிப்புணர்வு அல்லது லௌகீக பண்புகளை நோக்கி செல்கிறது. மனம் தன்னை சுயமாக உருவாக்கிக்கொண்ட நிலையை பொறுத்து, மனம் உயர்ந்த உணர்வின் தூய வெள்ளை ஒளியில் வாழலாம் அல்லது அவரது உட்புற பார்வைக்கு அறியாமையை பிரதிபலிக்கும் வெளிப்புற மனதின் அமைப்பில் வாழலாம். §§

image§

1967 ஆம் ஆண்டு, துறவிகள் மற்றும் குடும்பஸ்தர்ளாக இருந்த சீடர்களுடன் சுப்பிரமுனியாசுவாமி ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்டார். அந்த குழு ஒரு VW வாகனத்தில் பயணம் செய்து, இரவு நேரங்களில் வயல்களில் உறக்கப்பைகளில் உறங்கி, தினமும் இரண்டு டாலர்களுக்கு சாப்பிட்டு, அந்த கண்டத்திற்கு அத்வைத யோகத்தை கொண்டு வந்தார்கள். மாஸ்டர் முன்பக்க இருக்கையில் இருந்து “யோகம் பற்றிய கடிதங்களை" அறிவுறுத்த, பின்னால் அமர்ந்து இருந்த ஒரு துறவி அதை தட்டச்சு செய்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அந்த குழுவில் இருந்த ஒன்பது ஆடினிக்ஸ், ஸ்விட்சர்லாந்தில் இருந்து கிளம்பி மேற்கே பயணம் செய்து ஆஸ்திரியா, ஜெர்மனி, லக்சம்பர்க், பெல்ஜியம் மற்றும் டென்மார்க் வழியாக பயணம் மேற்கொண்டனர். ஐரோப்பா முழுவதும் அத்வைத யோக போதனைகளை பரப்புவதே மாஸ்டரின் குறிக்கோளாக இருந்தது; மற்றும் அந்த பயணத்தின் முடிவில் அவர் பாரிஸில் இருக்கும் சோர்போன் பல்கலைகழகத்தில் உரை நிகழ்த்தினார், மற்றும் அமஸ்டர்டாமில் முதல் யோக மாநாட்டிற்கு நிதியுதவி மூலம் ஊக்குவித்து, ஐரோப்பா முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான யோகிகள் மற்றும் யோகம் கற்பிக்கும் ஆசிரியர்களை ஒன்று திரட்டினார். §§

அவர்கள் பல வாரங்களுக்கு ஐரோப்பா வழியாக பயணம் செய்த போது, மாஸ்டர் வோக்ஸ்வேகன் வாகனத்தின முன்பக்க இருக்கையில் உட்கார்ந்துகொண்டு, பல்வேறு இடங்களுக்கு சுமந்து செல்லத்தக்க ஒரு தட்டச்சு பொறியுடன் பின்னால் அமர்ந்திருந்த ஒரு துறவிக்கு “யோகம் பற்றிய கடிதங்களை" அறிவுறுத்திக்கொண்டு இருந்தார். அந்த வாகனம் ஒரு நடமாடும் எழுத்தாளரின் கூடமாக மாறியது, மற்றும் எல்லோரும் அவரது வளமான குரலில் அன்றைய போதனையை சந்தோஷமாக கேட்டு ரசித்தனர். அதில் ஒரு பாகம் முடிந்ததும், அதை வெளியிடுவதற்காகவும், ஆசிரமத்தில் இருந்தவர்கள் மாஸ்டரின் பயணம் பற்றி தெரிந்துகொள்ளவும், அவர்கள் அந்த ஊர் தபால் நிலையத்தில் வாகனத்தை நிறுத்தி, தட்டச்சு செய்த காகிதங்களை, விர்ஜினியா சிட்டியில் இருந்த துறவிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். அதில் இருந்து ஒரு பகுதி.§§

உட்புற நாடி ஓட்டங்களில் பயிற்சி மேற்கொள்ளும் இன்னொரு தலைசிறந்த பண்பின் பெயர் மனஉறுதி ஆகும். இதில் இருந்து உட்புற வலிமை என்ற சொல் வெளிவருகிறது. தொடங்கிய வேலையை முடிப்பது, ஒவ்வொரு வேலையையும் முழுமையாக செய்வது, கொடுத்த வாக்கை காப்பாற்றுவது மற்றும் ஒருவர் தனக்கு அமைத்துக்கொண்ட உயர்ந்த இலட்சியங்களை தழுவி வாழ்வது போன்ற பயிற்சிகளின் மூலம் இந்த உட்புற ஓட்டங்கள் வலுவடைகின்றன. ஒருவர் தனது உட்புற மனஉறுதியை பயன்படுத்தும் போது, அவரிடம் இருந்து வெளிப்படும் உட்புற சக்தியை நம்மால் உணர முடியும். அவர் தியானம் செய்ய அமரும் போது, தனது தியானத்தையும் அதே முறையில் மேற்கொண்டு, இந்த உட்புற ஓட்டங்களை மேலும் வலுப்படுத்துகிறார். §§

தியானப்பயிற்சியின் மூலம் பெற்ற நேர்மறை சாதனைகளில் இருந்து தியானம் செய்யும் ஆசை தோன்றுகிறது. சில வெற்றிகரமான தியானங்களுக்கு பிறகு, மனம் தியானத்தின் சூழலை தொடர்ந்து பராமரிக்க கற்றுக்கொள்ளும் வரை, அடியுணர்வு அடுத்த தியானத்தை எதிர்பார்த்து இருக்கிறது. இந்த தருணத்தில், தியானம் தானாக நடைப்பெற்று, அது வாழ்க்கையின் அங்கமாக மாறுகிறது. அதன் பிறகு, சக்திகள் மற்றும் நான்காவது பரிணாமம் பற்றிய புரிதல் எப்போதும் நிலைத்து இருந்து, ஒரு மனித வாழ்க்கையின் அங்கமாக தொடர்ந்து விளங்குகிறது. §§

“அதைப்பற்றி மொட்டை மாடிகளில் இருந்து கூச்சலிடுங்கள்”§

அமெரிக்காவிற்கு மாஸ்டர் திரும்பியதும் ஞாயிற்றுக்கிழமை உபதேசங்கள், துறவிகளின் பயிற்சி, வானொலி நேர்காணல்கள், தனது நெவாடா மடத்திற்கு பாலைவனம் வழியாக நீண்ட பயணங்களை மேற்கொள்ளுதல் என்று அவர் தனக்கு மிகவும் பிடித்தமான ஆன்மீக வாழ்முறைகளில் தன்னை வலுவாக ஈடுபடுத்திக்கொண்டார். அவர் யோகம் கற்பிக்கும் ஆசிரியராக சிறிது புகழை சம்பாதித்து இருந்ததால், அவரே வியக்கும் வண்ணம், தி மாஸ்டர் கோர்ஸ் பற்றி உரை நிகழ்த்த, ஒரு வாரத்திற்கு UCLA வில் வருகை தரும் பேராசிரியராக அழைக்கப்பட்டார். அவர் கலிபோர்னியா பல்கலைகழகம், பெர்க்லி மாணவர்களுக்காக இன்டர்நேஷனல் ஹவுஸில், அதே போல ஒரு தொடரை நடத்தினார். மேலும் அவர் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் உரை நிகழ்த்தினார் மற்றும் தெற்கு கலிபோர்னியா, கொலராடோ, தி ஈஸ்ட் கோஸ்ட், பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் வாஷிங்டன் என்று விரிவான பயணம் மேற்கொண்டு விரிவுரைகளை வழங்கினார். சியாட்டிலில் மாஸ்டருக்கு நன்கு பரிச்சயமான ரெவ். கீத் ரைன்ஹார்ட் என்பவரால் 1955 ஆம் ஆண்டு அக்வாரியன் பவுண்டேஷன் என்ற ஆன்மீகம் மற்றும் மறைபொருள சார்ந்த தேவாலயம் தொடங்கப்பட்டது. இந்த தேவாலயத்தில் மாஸ்டர், இந்து சூட்சும ஞானம் மற்றும் அருள்ஞானங்கள் பற்றி சொற்பொழிவுகளை வழங்கினார். §§

அமெரிக்காவில் இருந்த கல்லூரிகள் மற்றும் சமூகங்களுக்கு ஆழமான போதனைகளை எடுத்து செல்வதற்கான நேரம் வந்து இருந்தது. அது பரமாத்துமாவை பற்றி அமைதியாக இருக்கும் காலமாக இல்லாமல், “அதைப்பற்றி மொட்டை மாடிகளில் இருந்து கூச்சலிடுங்கள்" என்று அவர் கூறினார். அதற்கு முன்பு அல்லது பின்பு எப்போதும் இருந்திராத அளவிற்கு, அந்த காலத்தில் இருந்த அமெரிக்க இளைஞர்கள் சூட்சுமமான தகவலுக்கு அதிக தயார்நிலையில் இருந்தார்கள். §§

1968 ஆம் ஆண்டில், மாஸ்டர் சுப்பிரமுனியா முதல் முறையாக அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி, சான் பிரான்சிஸ்கோ ஸ்டேட் காலேஜில் ஒரு தொலைகாட்சி தொடரில் பங்குபெற்றார். அந்த தொடர் ஜென் குரு ரோஷி சுசூகியுடன் நடத்திய உரையாடல்களையும் ஒளிபரப்பிக்கொண்டு இருந்தது. வாரக்கடைசிகள் சான் பிரான்சிஸ்கோவில் கழிந்தாலும், அவர் வாரத்தின் பெரும்பாலான நாட்களை நெவாடா மடாலயத்தில் கழித்தார். அது அவரது பிரதான வீடாகவும் புதிய தலைமைச்செயலகமாகவும் மாறியது. அவர் தனது நேரத்தை அதிகமாக மடவாசிகளுடனும், தனது படைப்புக்களை வெளியிடுவதிலும் செலவிட்டார். §§

மாஸ்டரின் அனைத்து சீடர்களுக்கும், யோகம் மற்றும் தியானம் சொந்த மற்றும் தனிநபருக்குரிய சாதனாவின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கியது. தினமும் காலையில் கண் விழித்ததும் மற்றும் உறங்குவதற்கு முன்பும், பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் தியானம் செய்யவேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆன்மீக ஆய்வுகள் அவர்கள் வாழ்க்கைக்கு ஆதரவாக விளங்கி, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு மற்றும் ஆழமான புரிதலை வழங்கி, ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சிகரமாக மாற்றி, ஒவ்வொரு அனுபவத்தையும் வரவேற்றது. அவர்களது கர்மவினைகள் அதிகம் தீவிரமடைந்து நிலையில் விமோசனத்தை தேடி அவர்கள் குருவிடம் வந்த போது, அவர்கள் தினமும் தியானம் செய்கிறார்களா என்று கேட்பார். வழக்கமாக சமநிலையை இழந்தவர்களின் பதில், இல்லை என்பதாக இருக்கும். §§

1960 களின் தொடக்கத்தில் மாஸ்டர் வழங்கிய உரைகள், மெய்ஞ்ஞானத்தை விழிக்க வைப்பதையும், அடியுணர்வை சுத்தம் செய்வதன் மூலம் ஆத்ம ஞானம் பெறும் சாத்தியக்கூறுகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தன. உளவியல் ரீதியான பயன்களை பெறுவதற்காக அமைக்கப்பட்ட ‘என்கவுன்டர் குரூப்ஸ்’ அதிக புகழ்பெற்று இருந்தன. இந்த பிணி நீக்கும் அமர்வுகளின் போது, அதுவரை தடை செய்யப்பட்டு பேசப்படாத விஷயங்களைப் பற்றி மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள். ‘என்டர்-இன்’ (உள்ளே நுழை) என்ற வாசகத்தை அமல்படுத்தி, மாஸ்டர் தனது துறவிகளுக்கு மட்டும், குழுவாக தங்கள் கருத்துக்களை பகிரும் செய்முறையை அமல்படுத்தினார். §§

தனது குழுவில் இருந்த குடும்பத்தினரின் அடியுணர்வை சுத்தம் செய்ய, அவர் அக்னி யோகம் என்ற பெயரில், செய்த தவறை ஒப்புக்கொள்ளும் செய்முறையை தொடக்கி வைத்தார். இந்த செய்முறையின் போது, நமது கடந்தகாலம் மற்றும் பாதையில் நமக்கு பின்னடைவை ஏற்படுத்தும் மறைவான ஒடுக்கங்களைப் பற்றி, குருவிடம் தனிப்பட்ட முறையில் பகிர்ந்துக்கொள்ளப்பட்டது. ஆழமாக பதிந்த ஒடுக்கங்கள், வேதனை நிறைந்த நினைவுகள் மற்றும் அடக்கி வைக்கப்பட்ட குணாதிசயங்களை எதிர்கொள்ள அல்லது அதைப்பற்றி பேசமுடியாத மாணவர்கள், கவனமாக ஆய்வு செய்து தொடர்ச்சியாக குற்றங்களை ஒப்புக்கொண்ட பிறகு, அவர்கள் பெரும்பாலும் தங்களது முதல் உட்புற ஒளி அனுபவத்தை பெறுகிறார்கள். §§

மாஸ்டரின் மேற்பார்வையில் நடந்த, இந்த நூற்றுக்கணக்கான மற்றும் சிலசமயங்களில் ஆயிரக்கணக்கான வாக்குமூலங்கள், ஆரம்ப நிலையில் இருந்த துறவிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சியின் முக்கிய பகுதியாக விளங்கியது. அவர்கள் வழங்கிய அந்த தனிப்பட்ட வெளிப்பாடுகளின் சக்திகளை பயன்படுத்தி, அந்த வெளிப்பாடுகளை எவ்வாறு வெளிச்சத்தில் கொண்டு வந்து, ஆய்வினால் அல்லது பகுத்தறிவுள்ள ஆழமான புரிதலால் அல்லாமல், தூய வெள்ளை ஒளியின் இருப்பில் இருப்பதன் மூலமாக, அவற்றிற்கு எவ்வாறு தீர்வு காண்பது என்று அவர் கற்றுத் தந்தார். §§

image§

சுவிட்சர்லாந்தின் லாகோ மாகியோரை பார்த்த வண்ணம், ஒரு சிறிய பின்புற திண்ணையில் நின்றுக்கொண்டு, மாஸ்டர் முதல் முறையாக தான் சூட்சுமமாக உருவாக்கிய ஷும் மொழியை கற்றுத் தந்தார். மனதின் மறைஞான மற்றும் நுணுக்கமான மற்றும் ஊடுருவும் பண்புள்ள ஆழங்களை பற்றி பகிர்வதற்கு, அவர் இந்த முறையை விரும்பி பயன்படுத்தினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ஒரு சூட்சுமமான மொழியின் பிறப்பு §

ஜூலை 1968, இன்னரசர்ச் ஸ்விட்சர்லாந்து என்ற பெயரில், மாஸ்டர் 32 மாணவர்களை ஒரு பயண-ஆய்வு திட்டத்தில் அழைத்து சென்றார். இந்து சமய கோட்பாடுகள் மற்றும் யோகத்தின் தத்துவம் மற்றும் கோட்பாடுகளை, ஆங்கில மொழியில் கற்றுத்தருவது அவருக்கு எப்போதும் பிடிக்கவில்லை. தியானத்தின் சூட்சும நிலைகள் மற்றும் நுணுக்கமான உட்புற பயிற்சிகளை, ஆங்கிலம் போன்று வெளிப்புறமாக இருக்கும் ஒரு மொழியின் மூலம் எளிதில் கற்றுத்தர முடியாது என்பதை அவர் தெரிந்து கொண்டார். காசா எரானோஸ் எனும் இடத்தில், இந்து சமயத்தின் புனித நூல்களில் கூறப்பட்டுள்ள உணர்வின் உட்புற நிலைகளை மனித நேயம் அணுக மற்றும் புரிந்துகொள்ள அனுமதிக்கும் ஒரு தீர்வை நாடும் வேட்கையில், மாஸ்டர் தனக்குள் ஆழமாக கவனம் செலுத்தினார். §§

தொடர்ச்சியான தியானங்களுக்கு பிறகு, ஜூலை 28 காலையில், அவர் தியானத்தில் அமர்ந்து கொண்டு, எழுத்துக்களின் வடிவம் மற்றும் ஒலியை, கட்புலனுக்கு அப்பாற்பட்ட சக்தியின் மூலம் பார்த்து மற்றும் கேட்டுக்கொண்டு இருந்த போது, ஷும் மொழியின் முதல் எழுத்து மற்றும் சிறிது நேரம் கழித்து இரண்டு எழுத்து என்று எழுத்துக்கள் உட்புற மனதில் இருந்து வெளிவந்தன. அவர் அவற்றை எல்லாம் எழுதிக்கொண்ட பிறகு, அந்த காகிதத்தை உற்சாகமாக அசைத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார். அவர் தன்னை கடந்து செல்லும் ஒரு துறவியிடம் “அது எனக்கு கிடைத்து விட்டது! அது எனக்கு கிடைத்து விட்டது!’’ என்று கூறினார். அவர் இது வரை தான் செய்து இருந்ததை காண்பித்து, தான் தனிமையாக மீதம் இருந்த நாட்களை அதை மேம்படுத்த பயன்படுத்திக் கொண்டார். அடிப்படை எழுத்து, எழுத்துப் பிரதி, சொற்றொடர் இலக்கணத்துடன் படங்கள் மற்றும் ஓவியங்கள் என்று அழைக்கப்பட்ட முதல் சொல்லகராதி வார்த்தைகள் கொண்ட தியானத்தின் புதிய மொழி, தனியாக தங்கி இருந்த போது உருவாக்கப்பட்டது. §§

1968 வருடத்து கோடை காலத்தில், ஸ்விட்சர்லாந்து நாட்டின் அஸ்கோனா நகரம் சென்று இன்னரசர்ச் பயண-ஆய்வு திட்டத்தை இமாலயன் அகாடமி நடத்தியது. நான் தி அத்வைதின் என்ற ஒரு சிறிய புத்தகத்தை எழுதிக்கொண்டு இருந்தேன். அந்த புத்தகம் பரமாத்துமாவுடன் ஐக்கியமாகும் முன்பும், அந்த நிலையில் இருந்து வெளிவந்த பின்பும் நிலவும், தூய உணர்வின் உட்புற உலகங்களுக்குள் அனுபவிக்கும் புனிதமான நிலைகளை பற்றி இருந்தது. அந்த சிறிய புத்தகம் நன்றாக விரிவாக்கம் பெற்று வந்தது, ஆனால் நான் எழுதியதை மீண்டும் வாசிக்கும் போது, “இது எனக்கு புரிகிறது, ஆனால் தனது பாதையில் தொடக்க நிலையில் இருக்கும் ஒரு சாதகனுக்கு இது புரியுமா? ஆங்கிலத்தில் இல்லாத வார்த்தைகளை நான் எழுத்து வடிவம் தர விரும்புவதால், அது சிக்கல் நிறைந்ததாக, புரிந்துகொள்ள கடினமானதாக இருக்கும்,” என்ற சிந்தனை எனக்கு தோன்றியது. ஆங்கிலத்தில் உணர்ச்சிகள், தூல பொருட்கள் பெயரை பெற்றுள்ளதைப் போல, மனதின் உட்புற மற்றும் புனிதமான பகுதிகளும் தங்களுக்கு என்று தனிப்பட்ட பெயரை பெறுவதற்கு, தேவையான மற்றும் போதுமான வார்த்தைகளை வழங்க சமஸ்கிருத மொழியை பயன்படுத்தலாம் என்று அதன் பிறகு நான் நினைக்கத் தொடங்கினேன். §§

நாங்கள் கோடைகாலத்தில் அஸ்கோனா நகரத்தில் தனிமையாக இருந்த போது, எனது உட்புறத்தில் இருந்து விரிவாக்கம் பெற்றிருந்த இந்த கோட்பாட்டை, என் மனம் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தது மற்றும் நான் தி அத்வைதின் புத்தகத்தில் பயன்படுத்தும் நோக்கத்துடன், குறிப்பிட்ட சில வார்த்தைகளை பல்வேறு சமஸ்கிருத அகராதிகளில் தேடத் தொடங்கினேன். ஆனால் நான் பார்த்த மூன்று சம்ஸ்கிருத/ஆங்கில அகராதிகளில், அதன் மொழிபெயர்ப்பாளர்கள் ஒவ்வொரு வார்த்தையையும் பல்வேறு விதமாக மொழிபெயர்த்து இருந்தார்கள். “இவ்வாறு செய்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் எனது மாணவர்களுக்கு அதிகம் குழப்பம் தருவதாக இருக்கும். இதற்கு நான் சமஸ்கிருதம் பயன்படுத்தாமல் இருப்பதே மேல்,” என்று கருதி நான் அந்த முயற்சியை கைவிட்டேன். §§

நாம் பயன்படுத்துவதற்கு உணர்வின் உட்புற நிலைகளை துல்லியமாக விளக்கும் சொல்லகராதியுடன், மற்றுமொரு புதிய மொழி உண்மையில் தேவைப்படுகிறது என்பதை நான் உணர தொடங்கினேன். நாங்கள் சுற்றுப்பயணமாக இரண்டு-மூன்று நாட்களுக்கு வெனிஸ் நகரம் பயணம் செய்தோம். புதிய மொழி பற்றிய சிந்தனை, என் மனதில் தொடர்ந்து தீவிரமாக இருந்தது. ஒரு புதிய அருள்ஞான மொழியை வெளியிடவேண்டும் என்று வெனிஸ் நகரத்தில் தீவிரமாக முடிவு செய்தேன். அதனால் நான் எனக்குள் ஆழமாக சென்று, மகாதேவர்களில் ஒருவர் எனது வெளிப்புற ஆன்மாவிற்கு அறிவுறுத்திய தகவலை எழுதிக்கொண்டேன். இன்னொரு மொழியை விரிவாக்கம் செய்ய, நான் எனக்குள் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை அந்த மகாதேவர் விளக்கினார். “நீங்கள் சுஷும்னா நாடியில் இருக்கும் உடா ஓட்டத்திற்குள் செல்ல வேண்டும்,” என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது. §§

அந்த அறிவுறுத்தலை பின்பற்றிய போது, எனது முதுகுத்தண்டு ஒரு அழகான வெளிர் மஞ்சள் மற்றும் லாவெண்டர் நிற ஒளியில் பிரகாசித்தது. மஞ்சள் நிறமும் லாவெண்டர் நிறமும் ஒன்று சேர்ந்து, ஒரு நிறம் இன்னொரு நிறத்திற்குள் ஒரு புறமாக நுழைந்து மறுபுறமாக வெளிவந்தது. அது மிகவும் அருமையான காட்சியாக இருந்தது! ஆனால் எனக்கு உடா ஓட்டத்தின் ஒரு முனை மட்டுமே தென்பட்டது மற்றும் எனக்கு வெனிஸ் நகரத்தில் பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை. மூன்று நாட்கள் கழித்து, நான் சுவிட்சர்லாந்தின் அஸ்கோனா நகரம் திரும்பி எனது உட்புறமாக முயற்சி செய்துக்கொண்டு இருந்த போது, எனக்கு உடா ஓட்டத்தின் இரு முனைகளும் தென்பட்டன. அதன் பிறகு, நான் தியானத்தில் நிர்விகல்ப சமாதியை விட்டு வெளிவந்த போது ஸ்வாதிஷ்டானா, அனாஹத மற்றும் ஆக்ஞா சக்கரங்களின் ஓசைகளை கேட்டேன். இரண்டு மணி நேரத்திற்குள், எனது உட்புற மனதில் இருந்து எழுத்துப்படிவம், பதினெட்டு ஓசைகளின் அடிப்படை எழுத்துக்கள், சொற்றொடர் இலக்கணம் மற்றும் சிம்ஷும்பிசி, வும்டேயுடி, கரெஹனா போன்று சொல்லகராதியின் சில அடிப்படை சொற்கள் தோன்றின. முதல் வார்த்தையாக ஷும் உச்சரிக்கப்பட்டது. §§

தற்போது ஷும் தியானத்தின் சூட்சுமமான மொழியின் பெயராக இருக்கிறது. அவை அனைத்தையும் என்னால் முடிந்த வரை விரைவாக எழுதிக்கொண்டு, படிகட்டில் கீழே இறங்கி சென்று, எதிரே வந்த ஒரு துறவியிடம், “அது எனக்கு கிடைத்து விட்டது! அது எனக்கு கிடைத்தது விட்டது! இதோ இது தான் நமது சூட்சுமமான மொழி!” என்று கத்தினேன்.§§

இன்னரசர்ச் பயண-ஆய்வு திட்டத்தில் பயன்படுத்த எனக்கு ஐம்பது அல்லது நூறு வார்த்தைகள் அவசரமாக தேவைப்பட்டதால், அந்த புதிய மொழியை வெளியிடுவதில் நான் மிகவும் மும்முரமாக இருந்தேன். ஷும் மிகவும் எளிமையாக தொடங்கியது. “சரி. நாம் கற்றுக்கொள்வதற்கு தற்போது பத்து முதல் இருபது வார்த்தைகளை பயன்படுத்துவோம். இறுதியில் மேலும் நூறு வார்த்தைகள் இருந்தால் மேலும் பயனுள்ளதாக விளங்கி, அவை ஆன்மீகத்தை கற்றுத்தரும் அற்புதமான கருவிகளாக இருக்கும்,” என்று நினைத்தேன். ஆனால் அதற்கு அடுத்த நாட்களில், இந்த உடா ஓட்டம் அதிக வலிமையையும் பிரகாசத்தையும் பெற்றது. நான் இதைப்பற்றி, சுவிட்சர்லாந்தில் அந்த சமயத்தில் இருந்த இரண்டு-மூன்று சைவத் துறவிகளை தவிர வேறு யாரிடமும் சொல்லவில்லை. §§

image§

1968 வருடத்திற்கு அருகில், ஶ்ரீ சுப்பிரமுனியா பல வருடங்களாக மேற்கொண்ட சாதனாவின் காரணமாக, அவர் தனது உச்சந்தலையில் குண்டலினி நிரந்தரமாக சுருண்டு இருக்கும் அனுபவத்தை பெற்றார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

நான் தினமும் இரவு பகலாக வேலை செய்ய தொடங்கினேன், மற்றும் அந்த மொழியின் அமைப்பு மற்றும் எழுத்து வடிவம் எனக்குள் தெளிவடைய தொடங்கி, உட்புற ஒளியில் இருந்து சொல் அகராதி வர ஆரம்பித்தது. நான் எனது தலையில் ஒளியை கவனிக்கும் போது, ஷும் லிபியின் சிறிய உருவங்கள் அல்லது எழுத்துக்கள் ஒவ்வொன்றாக கீழே இறங்கி வந்து வரிசையாக நிற்பதை பார்ப்பேன். அதன் பிறகு நான், ஷும்சிம்னிசி போன்ற ஒரு சொல்லை படித்து, அந்த ஷும் சொல் மற்றும் அதன் ஆங்கில பொருளையும் எழுதிக்கொள்வேன். இதைப்போன்று இரண்டு-மூன்று வாரங்களுக்கு, சொல் அகராதியில் சேர்ந்து கொண்டிருந்தன. தெற்கு பிரான்சின் நீஸ் நகரில், மனோஉணர்வு நரம்பு அமைப்பை குறிக்கும் லியுனாசி மற்றும் உடலின் வெதுவெதுப்பு மற்றும் மனோஉணர்வு வெப்பத்தை குறிக்கும் அலிகைஷும் பற்றிய கோட்பாடு முழுவதும் வெளிவந்தது. §§

அதன் பிறகு எங்கள் இன்னர்சர்ச் குழு பாரிஸில் இருந்த போது, ஷும் மொழி மேலும் வளர்ச்சி பெற்றது. நான் அமெரிக்கா திரும்பிய போது, எனது சொல் அகராதியில் சுமார் 300 சொற்கள் இருந்தன, மற்றும் மேலும் பல சொற்கள் வந்துகொண்டு இருந்தன. இறுதியில் உட்புற ஒளியில் இருந்து உருவங்கள் வெளிவருவது நின்றது, மற்றும் கட்புலனுக்கு அப்பாற்பட்டதை கேட்கும் சக்தியின் மூலம், பெரும்பாலும் ஒருவர் பேசுவதைப் போல ஒரு சொல்லின் பொருளை கேட்டு தெரிந்துகொள்வேன். அவை சிலசமயங்களில் முதலில் ஆங்கிலத்திலும் பின்பு ஷும் மொழியிலும் வரும். அந்த மொழியின் சொல் அகராதி மற்றும் அதன் அமைப்பு விரைவில் உருவாகியது, ஆனால் மிகவும் முக்கியமாக ஷும் மொழியின் அணுகுமுறை தயாராக இருந்தது. §§

ஷும் மொழியில், அணுகுமுறை மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது. அது ஷுமிப் என்று அழைக்கப்படுகிறது. இந்த அணுகுமுறையில், நாம் உலகின் மையத்தில் இருக்கும் உணர்வை பெறுகிறோம். நாம் முதுகுத்தண்டில் ஒரு மைய கம்பம் போல ஒளியை காண்கிறோம், மற்றும் அதன்பிறகு கண்களை திறக்கும் போது உலகை வேறுவிதமாக பார்க்கிறோம். §§

அதற்கு பின்வந்த 1969 ஆம் ஆண்டில், நாங்கள் ஸ்விட்சர்லாந்து திரும்பி மாம்பாஷும் பற்றிய மிகப்பெரிய அனுபவத்தை பெற்றோம். இவை தியானப் பகுதிகளின் ஷும் வரைபடங்கள் ஆகும். இவை ஒரு அன்பர் தியானம் செய்ய தொடங்கும் முன்பாக, அந்த தியானத்தை வரையறுக்க உதவுவதுடன், அந்த தியானத்தில் முன்னேறும் போது அதைப்பற்றி தகவல்கள் எழுதிக்கொள்ளவும் பயன்படுகிறது. இதனால் அன்பர்கள் மீண்டும் மீண்டும் அதே மனதின் பகுதிக்கு செல்ல முடிகிறது. அதே மாம்பூஷத்தை பின்தொடர்வதன் மூலம், மனதின் அதே பகுதிக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் செல்ல முடிகிறது. நானும் எனது சீடர்களும் ஒரே மனதின் பகுதிக்கு சென்று, ஒரே ஒலிகளை பார்த்து மற்றும் கேட்டு, ஒரே நிறங்களை பார்த்து அனுபவிக்கும் போது, எங்களுக்குள் ஆன்மீக அனுபவங்கள் உருவாக தொடங்கியது. சூட்சும மற்றும் மறைஞான இலக்கியத்தில், இத்தகைய ஒரு நிகழ்வு வெளிப்படுத்தப்படவில்லை. §§

image§

1969 ஆம் ஆண்டில், மாஸ்டர் சுப்பிரமுனியா பதிமூன்று வார இந்திய தீர்த்த யாத்திரையை மேற்கொண்டார். இந்த யாத்திரையின் போது அவர் 65 சீடர்களை வழிநடத்தி சென்றார். 1949 ஆம் ஆண்டிற்கு பிறகு, அவர் இந்தியா மற்றும் இலங்கைக்கு முதல் முறையாக திரும்பி இருந்தார். அது அந்த இரு நாடுகளுடனும் பல வருட கருத்து பரிமாற்றத்தை தொடங்கி இருந்தது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

மலைகளில் நடந்த கிளர்ச்சி §

1968 இன்னர்சர்ச் திட்டத்தின் அங்கமாக நான்கு வாரங்கள் ஐரோப்பா பயணம் முடித்து வந்த போது, மாஸ்டர் வழக்கத்திற்கு மாறாக நீண்ட நாட்கள் வெளியே இருந்ததால், அவர் மோசமான விளைவுகளை சந்தித்தார். கலகம் செய்யும் எண்ணத்துடன் இருந்த ஒரு சிறிய துறவிகளின் குழு, வயதில் மூத்த துறவியின் தலைமையில், மாஸ்டரை அணுகி அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் மற்றும் இனி அவர்கள் சமயப்பணியை தொடர்வார்கள் என்று ஒரு மூர்க்கத்தனமான பரிந்துரையை வழங்கினார்கள். §§

இந்த சவாலை எதிர்கொள்ளும் போது, மாஸ்டர் தனது சமநிலையை இழக்காமல், அந்த குழுவினரை, இரவு உணவு அருந்த ரெனோ நகரில் இருந்த மிகெல்ஸ் என்ற ஒரு மெக்சிகன் உணவகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவர் தன்னுடன் அதே எண்ணிக்கையில், செருக்குமிக்க இந்த கிளர்ச்சி அபத்தமானது என்று எண்ணிய துறவிகளை அழைத்து சென்றார். அவர் செல்லும் வழியில், தனக்கு ஆதரவாக இருந்தவர்களிடம் தனது திட்டத்தை பற்றி விளக்கம் அளித்தார். அவர்கள் கிளர்ச்சியாளர்களின் காரணங்கள் மற்றும் சிந்தனைகளை கேட்டு, அவர்கள் திட்டங்களைப் பற்றி மேலும் தெரிந்துக்கொண்டு எதிர்செயலாற்றாமல் இருக்க வேண்டும். §§

இரவு விருந்தின் போது, எதிர்மறை பதில்கள் ஏதும் வராததால் கிளர்ச்சியாளர்கள் தங்கள் வலிமையை இழந்தார்கள். அவர் நீண்ட நாட்கள் மடத்திற்கு வெளியே இருப்பதாகவும், அவருக்கும் வயதாகிக் கொண்டு இருப்பதாகவும் (அப்போது 41) கிளர்ச்சியாளர்கள் மாஸ்டரிடம் கூறினார்கள். அவர்கள் எதிர்காலத்தை பற்றி தங்களது கருத்துக்களை திறந்த மனதுடன் பகிர்ந்து கொண்டனர். அதனால் அந்த மடத்தில் இருந்த கெடுபிடி சற்று தளர்ந்து புதிய யுகத்திற்கு ஏற்றார் போல ஒரு வெளிப்படையான அமைப்பாக மாறியது. §§

மாஸ்டர் நேரடியாக பதில் ஏதும் சொல்லாமல் உணவகத்தை விட்டு கிளம்பினார், மற்றும் அவர் அந்த விஷயத்தைப் பற்றி அந்த குழுவுடன் எப்போதும் பேசவில்லை. அதற்கு பின் வந்த நாட்கள் மற்றும் வாரங்களில், அவர் துறவிகளை ஒன்றன் பின் ஒன்றாக, இன்னொரு மடத்திற்கு, இன்னொரு பணிக்கு நகர்த்தி, கிளர்ச்சியில் ஈடுப்பட்டு இருந்தவர்களின் பொறுப்பை குறைத்து எதிர்ப்பை அகற்றினார். வருடங்கள் செல்ல செல்ல, கிளர்ச்சியாளர்கள் ஒவ்வொருவரும் விளைவுகளை நினைத்து அஞ்சாமல் தைரியமாக மடத்தை விட்டு வெளியேறினார்கள். பல வருடங்கள் கழித்து சுவாமி சச்சிதானந்தாவும், இதைப்போன்று சதி திட்டத்தை அறங்காவலர்கள் குழுவிடம் இருந்து எதிர்கொண்டார். அப்போது சுவாமி தன்னை கவிழ்க்க முயன்றவர்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள, மாஸ்டர் தனது மூத்த துறவிகளை உதவிக்கு அனுப்பினார். §§

அதற்கு பிறகு வந்த மாதங்களில், மாஸ்டர் தனது தனிமையான நெவாடா ஆசிரமத்தில் அதிக நேரம் கழித்து, தினமும் நான்கு முறை ஒரு மணிநேர தியானம் என்று அந்த காலத்தில் பின்பற்றப்பட்ட துறவிகளின் வாழ்முறைக்கு தலைமை தாங்கினார். அவரது ஆன்மீக அனுபவங்களை ஷும் வெளிப்பாடுகள் வலுப்படுத்தி இருந்தன. அந்த காலத்தை பற்றி, அவர் வழங்கிய குறிப்பு:§§

கடும் முயற்சி செய்து உணர்தலை பெற்ற ஒரு சந்நியாசி, பிரம்மத்தின் கதவில் இருக்கும் முத்திரையை உடைத்துக்கொண்டு வரும் குண்டலினி சக்தியை பல பிறவிகளாக ஒன்று சேர்த்து வருகிறார். ஒரு முக்கியமான விஷயம். அது உடைந்தது என்றால், அதை என்றுமே சீர் செய்ய முடியாது. உடைந்ததை சரி செய்ய முடியாது. குண்டலினி திரும்பி வரும் போது, உபதேசி மற்றும் நிர்வாணிக்கு இடையே முடிவு செய்ய ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அந்த சக்தி திரும்பி வரும் போது ஸ்வாதிஷ்டானா, மணிப்புரா மற்றும் அனாஹத சக்கரங்களில் மெய்யுணர்வு வளர்ச்சி அடைந்த நிலையில், வசதியாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்கும் ஏதாவது ஒரு சக்கரத்தில் அது சுருண்டு கொள்கிறது. ஒரு மிகப்பெரிய புத்திமான் அல்லது பரமாத்துமாவை கண்டறிந்த ஒரு சித்தர் அறிவெழுச்சி மையத்திற்கு திரும்புவார்; இன்னொருவர் மணிப்புரா சக்கரத்திற்கு திரும்பலாம். §§

image§

1970 ஆம் ஆண்டு நடைபெற்ற டஹிடி-சிலோன் இன்னரசர்ச் பயணத்தின் போது, சிலோனில் இருந்த சைவ சமூகம் மாஸ்டருக்கு நல்ல வரவேற்பை வழங்கினார்கள். அவரது வரவை தவில் மற்றும் நாதசுவரம் ஐம்பது கிராமங்களில் அறிவித்தது, மற்றும் மேற்கில் இருந்து வந்த தெய்வீக புருஷர் நடந்து செல்ல, பல மைல் தூரத்திற்கு கையால் நெய்த துணி தரையில் விரிக்கப்பட்டு இருந்தது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

சஹஸ்ரஹாரத்தில் குண்டலினி சுறுண்டுக்கொள்வதே முடிவான அனுபவமாக விளங்குகிறது. நான் அந்த அனுபவத்தை 1968-69 வரை பெறவில்லை. ஆனால் அந்த வருடத்தில் சஹஸ்ரஹார சக்கரத்தில், குண்டலினி சக்தியின் வலுவான அனுபவங்களின் தொடர்ச்சியை பெற்றேன். அது தினமும் கடுமையான சாதனாக்கள் மற்றும் தவத்தை தொடர்ந்து இருபது வருடங்களுக்கு செய்தத்தால் கைக்கூடியது. இதற்கான பூர்வாங்க பயிற்சி முந்தைய பிறவியில் வழங்கப்பட்டுள்ளது என்றும், அதன் காரணமாகவே இந்த பிறவியில் கிடைக்கும் உணர்தலின் மூலம், வருடங்கள் செல்ல செல்ல என்னை சுற்றியும் எனக்குள்ளும் வெளிப்பட்டதை என்னால் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றும் நான் சில வருடங்கள் முன்பு கேள்விப்பட்டிருந்தேன். பலமுறை நான் மேற்கொண்ட ஒருமுகப்பபட்ட முயற்சிகளால் சாதனாக்களின் பலன்கள் என்னை வந்து அடைந்தன என்பதை உறுதியாக சொல்லலாம், ஆனால் அது கடினமாக இருக்கவில்லை என்பதால் முந்தைய பலன்கள் மீண்டும் தூண்டப்படுகின்றன என்று அது என்னை சிந்திக்க வைக்கிறது. §§

கார்டன் ஐலன்ட் (பூங்கா தீவு) §

ஆசிரம் கவாய் என்று அழைக்கப்பட்ட இரண்டாவது இன்னரசர்ச் டிசம்பர் 1968 நடைபெற்றது. கவாயில் இருந்த கார்டன் ஐலன்ட்டுக்கு 27 மாணவர்களை மாஸ்டர் அழைத்து சென்று, டிராபிகல் இன் என்ற பெயரில் ஒரு அமைதியான கிராமப்புற உல்லாச விடுதியில் மூன்று வாரங்கள் தங்கினார். அவர்கள் தங்களுக்கு அங்கே சகல வசதிகளையும் வரவழைத்துக் கொண்டு, அதை ஒரு ஆசிரமமாக மாற்றினார்கள். அந்த விடுதி 1929 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, வாய்லுவா நதியில் இருந்து நான்கு மைல் தூரத்தில், மேலிருந்து ஒரு பசுமையான ஆற்றுப் பள்ளத்தாக்கை பார்த்த வண்ணம் அமைந்து இருந்தது. அங்கிருந்து சில மைல் தூரத்தில், அந்த தீவின் எழுச்சி அடங்கிய எரிமலையை தத்ரூபமாக காண முடிந்தது. அது ஒரு விண்ணுலகம் போல காட்சி அளித்தது. §§

நான் எனது கற்பிக்கும் நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்வதற்கு மற்றும் உலகெங்கும் இருக்கும் மக்கள் என்னை எளிதில் அடையும் வகையில் ஒரு புதிய சர்வதேச தலைமையகத்தை பலவருடங்களாக தேடிக்கொண்டு இருந்தேன். நான் முதல் இன்னரசர்ச் திட்டத்தை நடத்திய கோடைகாலத்தில், பதினொரு நாடுகளுக்கு பயணம் செய்தேன். அதன் பின்னர் தொடர்ந்து நடைப்பெற்ற இன்னரசர்ச் திட்டங்களின் போது, மொத்தம் 27 நாடுகளுக்கு பயணம் செய்தேன். இறுதியில் நான் கவாய் தீவியில் எனது தலைமையகத்தை அமைக்கலாம் என்று முடிவு செய்தேன். §§

அந்த இடத்தின் அழகு எல்லோர் கவனத்தையும் ஈர்த்ததால், அந்த இடத்தை விலைக்கு வாங்கி தேவாலயத்தை அமைக்கலாம் என்று பக்தர்கள் பரிந்துரைத்து, முன்பணம் செலுத்த தங்களுக்குள் பணத்தை திரட்ட ஆரம்பித்தார்கள். ஒரு நாள் அந்த சீடர்கள் அந்த அழகான இடத்தை தனது இருப்பிடமாக மாற்ற வேண்டும் என்று கூறி அவரது கையில் $480 வழங்கினார்கள். அது விற்பனைக்கு வரவில்லை, ஆனால் மாஸ்டர் அந்த பணத்தை அந்த குறிப்பிட்ட நோக்கத்திற்கு ஒதுக்கி வைத்தார். §§

உலகின் தலைசிறந்த மேசை பணியாளர்கள் §

1969 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நெவாடா மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மாஸ்டர் திரும்பிய போது, தனது துறவற சமூகத்தின வளர்ச்சி அவருக்கு சவால் விடுவதாக இருந்தது. அவர் அவர்களுக்கு உணவு, இருப்பிடம் மற்றும் பயிற்சியை எப்படி வழங்குவது? அது வரை துறவிகள் அருகில் வாடகை குடியிருப்பில் அல்லது கோயில் வளாகத்தில் தங்கி இருந்தார்கள். அவர் துறவிகளுக்கு வாங்கிய ஒரு புதிய கட்டிடத்தில், தொடங்கப்பட்ட ஒரு புதிய பயிற்சி திட்டத்தின் கீழ், துறவிகள் சான் பிரான்சிஸ்கோ நகர உணவகங்களில் வேலை செய்தார்கள். துறவிகள் மத்தியில் விறுவிறுப்பான சூழ்நிலைகளில் மக்களை எதிர்கொள்ள தேவையான திறமைகளை வழங்க, மற்றவர்களுடன் பணியாற்றி பலவிதமான தகவல்களை கையாளும் திறமைகளை பக்குவப்படுத்த, துறவற வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக விளங்கும் பணிவான சேவையை வழங்கும் பண்புகளை ஊக்குவிக்க மற்றும் வருவாய் மிகவும் குறைவாக இருந்த சமயத்தில் தனது சமூகம் பொருளாதார தன்னிறைவை பெறும் நோக்கத்துடன், இந்த திட்டத்தை மாஸ்டர் உருவாக்கினார். §§

“உலகின் தலைசிறந்த உணவகங்களில் தலைசிறந்த மேசை பணியாளர்களை உருவாக்குவதே” இதன் குறிக்கோளாக இருந்தது. இதற்காக துறவிகள் சுய ஒழுக்கம் மற்றும் நடத்தையில் சிறந்து விளங்க வேண்டியிருந்தது. மாஸ்டர் அவர்கள் பயிற்சியை மேலும் மேம்படுத்த, துறவிகளுக்கு நுணுக்கமான மேசை பணியை பற்றி ஒரு விரிவான பயிற்சி திட்டத்தை தொடங்கி, உரைகள் மற்றும் செயல் விளக்கங்களின் மூலம் துறவிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க, நகரத்தின் பிரபலமான உணவக உரிமையாளர்கள், தலைமை சமையல்காரர்கள், உணவகத்தில் மதுபானம் வழங்கும் ஊழியர்கள் மற்றும் உணவக மேற்பார்வையாளர்களை நியமித்தார். §§

துறவிகள் பல வருடங்களுக்கு மாற்றுப்பெயருடன் நகரத்தின் தலைசிறந்த உணவகங்களில் வேலை செய்து, ஒவ்வொரு இரவும் தாங்கள் பெற்ற சம்பாத்தியத்தை கோயில் பீடத்தில் சமர்பிப்பார்கள் மற்றும் தங்களது விடுப்பு நேரங்கள் மற்றும் விடுப்பு நாட்களை குருவுடன் மடத்தில் கழிப்பார்கள். இந்த திட்டத்தை அமைதியான சமயப்பணி என்று மாஸ்டர் அழைத்தார். இந்த பணியின் போது துறவிகள் தாங்கள் சேவை செய்யும் மற்றும் இணைந்து பணி புரியும் மக்களுக்கு ஆசிகளை வழங்கி அவர்களை வாழ்க்கையில் மேம்படுத்த, கோயிலின் அதிர்வை சுமந்துக்கொண்டு மாறுவேடத்தில் சென்றனர். அது பொறுமையும் திறமையும் அதிகம் தேவைப்பட்ட சூழலில், நீண்ட நேரம் பணி புரியும் ஒரு கடுமையான சாதனாவாக இருந்தது. இதில் நிலைத்து இருந்தவர்களுக்கு இது ஒரு சிறந்த பயிற்சியாக விளங்கி, சகோதரத்துவத்தை வலுப்படுத்தி இளைஞர்களை பக்குவப்படுத்தியது. அவர்கள் இறுதியில், உலகின் தலைசிறந்த உணவகங்களில் சிறந்த மேசை பணியாளர்களாக மாறினார்கள். §§

ஒரு இந்திய யாத்திரை §

மாஸ்டர் சுப்பிரமுனியா மீண்டும் ஐரோப்பா பயணம் செய்தார். அவர் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் இன்னர்சர்ச் ஸ்விட்சர்லாந்து 1969 திட்டத்தின் அங்கமாக, இந்த முறை ஐந்து துறவிகள் மற்றும் இருபத்தி ஏழு மாணவர்களுடன் சென்றார். அந்த பயணத்தில் போர்ச்சுகல், பிரான்ஸ் மற்றும் ஸ்விட்சர்லாந்து முக்கிய நாடுகளாக விளங்கின. ஒரு மாதம் நீடித்த அந்த பயணத்தில் பாதி நாட்கள், காசா எரானோஸில் தனிமையில் கழிந்தன. அங்கே அவர் மீண்டும் ஷும் மொழியை உருவாக்குவதில் ஈடுபட்டு, அத்வைத சித்தாந்த தத்துவத்தை விளக்குவதற்கு, கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அதன் ஓவியங்களை பயன்படுத்தினார். அவர் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்விட்சர்லாந்தில் வசித்த ஐரோப்பிய யோக ஆசிரியர்களுக்கு, காசா எரானோஸில் ஒரு விசேஷ பயிற்சி வகுப்புபை நடத்த தேவையான நிதியுதவியை வழங்கினார். §§

அக்டோபர் மாதத்தில், 12 துறவிகள் மற்றும் ஐம்பத்தி நான்கு மாணவர்களுடன், அவர் இந்தியா மற்றும் இலங்கைக்கு பதிமூன்று வார யாத்திரையை மேற்கொண்டார். அது இந்திய யாத்திரை என்று அழைக்கப்பட்டது, மற்றும் அதன் அங்கமாக பிரான்ஸ், கிரீஸ், இந்தியா, நேபால், சிலோன், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, இந்தியாவில் அதிக நாட்கள் பயணம் செய்தனர். மாஸ்டருடன் சென்ற குழுவின் எண்ணிக்கை, அதுவரை இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட மிகப்பெரிய குழுவாக இருந்தது. அது மிகவும் பெரிய குழுவாக இருந்ததால், அன்றைய விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கரண் சிங், அவர்களது பயணங்களில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தினார். அவர் பிற்காலத்தில் கவாய் வந்து, மாஸ்டர் சுப்பிரமுனியாவை தனது “மேற்கு நாட்டு குருவாக" ஏற்றுக்கொண்டார். ஜப்பானில் ஒரு மாஸ்டர் காலிகிராபர் (கலை நயத்துடன் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர்), தாய்லாந்தில் ஒரு பௌத்த ரோஷி மற்றும் இந்தியாவில் யோகிகள் மற்றும் மிகப்பெரிய ஆன்மாக்களின் குழு என்று ஒவ்வொரு நாட்டிலும் ஆன்மீக தலைவர்கள் நாடப்பட்டனர். §§

இது இருபது வருடங்கள் கழித்து மாஸ்டர் இந்தியா செல்லும் முதல் பயணமாகவும், அவருடன் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு அவர்களது வாழ்நாளின் முதல் இந்திய பயணமாகவும் இருந்தது. அவர்களது மனதை இந்தியா கவர்ந்து, பிரமிக்க வைத்து, சவால் விட்டு இறுதியில் மேம்படுத்தவும் செய்தது. பூமியில் உள்ள நாடுகளில் தெருக்களில் அற்புதங்கள் நிகழ்ந்து, மக்களின் கண்களில் தெய்வீகம் வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது என்று அவர்கள் முடிவு செய்து கொண்டார்கள். §§

அவர்கள் ஒரு வாரத்திற்கு தனிமையாக அமைதியை நாடி, வடக்கே இமாலய மலை அடிவாரங்களில் இருந்த டார்ஜீலிங் மற்றும் உதைப்பூர் மற்றும் தென் இந்தியாவில் நீலகிரி மலையில் இருந்த உதகமண்டலத்திற்கும் சென்றார்கள். அவர் ஒரு நாள் யாத்ரீகர்களை, அந்த ஊரில் புதிதாக திரையிடப்பட்ட, “2001: எ ஸ்பேஸ் ஒடிசி” என்ற திரைப்படத்திற்கு அழைத்து சென்றார். ஷும் மொழி யாத்ரீகர்களுக்கு மீண்டும் ஒரு முக்கிய பாடமாக விளங்கியது, மற்றும் அவரது சீடர்கள் ஆச்சாரமான கோயில் வழிபாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டனர். அவர் மெட்ராஸில் சர்வதேச யோக மாநாட்டை நிகழ்த்தினார். §§

இந்த மூன்று மாத யாத்திரையில், தனது சற்குரு யோக சுவாமி வசித்த சிலோனிற்கு திரும்வுவது மாஸ்டருக்கு மிகவும் பிடித்து இருந்தது. அவர் அந்த நாட்டில் இருந்து கிளம்பி இருபது வருடங்கள் கழிந்து இருந்தன, மற்றும் அந்த நாட்டிற்கு செல்லவேண்டும் என்று அவர் பல வருடங்களாக ஏங்கிக்கொண்டு இருந்தார். அவரை யாழ்ப்பாண சைவர்கள் அதிக மரியாதை மற்றும் ஆரவாரத்துடன் வரவேற்றனர் மற்றும் நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடந்தேறியது. “எனக்கு துணையாக ஒருவர் அமெரிக்காவில் இருக்கிறார்” என்று யோக சுவாமி கூறியதை அவர்கள் நினைவுக் கூர்ந்தார்கள். அந்த அமெரிக்க குரு ஒரு தலைசிறந்த ஆன்மாவாக இருப்பது அவர்களுக்கு தெரிந்து இருந்தாலும், மேற்கத்திய மனிதரை ஒரு ஆன்மீக குருவாக எப்படி ஏற்றுக்கொள்வது என்று அவர்கள் மனதில் மறுப்பும் தயக்கமும் நிலவியது. அவ்வாறு அது வரை நடக்கவில்லை, மற்றும் அது இனி நடக்காது என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் மாஸ்டர் அவர்கள் மீது கவனம் செலுத்தவில்லை. அவருக்கு யோக சுவாமி ஒரு பணியை வழங்கி இருந்தார் மற்றும் அதை அவர்களின் துணையுடன் அல்லது துணை இல்லாமல் வழிநடத்தி செல்வது அவரது கடமையாக இருந்தது. §§

அவர் சுப்பிரமுனிய ஆசிரமத்திற்கு அருகில் விஷேச விருந்துகள் மற்றும் திருவிழாக்களுக்கு ஏற்பாடு செய்தார். அவர் தனது மடவாசிகளுக்கு, மடத்திலேயே நீண்டநாட்கள் தங்கியிருந்து இந்து சமயம் பற்றி தங்களது தனிப்பட்ட விழிப்புணர்வை விரிவாக்கம் செய்து, மேற்கத்திய நாடுகளில் பதிப்பிடுவதற்கு சாஸ்திரங்களை சேகரிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அவர்கள் தங்கியிருந்த நாட்களில், கோயிலில் பூஜைகள் மற்றும் உரைகள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் கூட்டங்கள் நிரம்பி இருந்தன. அருகில் எந்த விடுதியும் இல்லாததால், இன்னர்சர்ச் குழுவினர் யோக சுவாமியின் சீடர்களின் வீட்டில், இருவர் அல்லது மூவராக தங்கியிருந்து கதைகளில் கேட்டிருந்த சைவ கலாச்சாரத்தில் வாழ்ந்துகொண்டும், கிழக்கு கலாச்சாரத்தின் அழகு மற்றும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டும், பல வருடங்களுக்கு கிழக்கு மற்றும் மேற்கு கலாச்சாரத்தை இணைத்து வைக்கும் ஆழமான மனித உறவுகளை உருவாக்கிக்கொண்டும் இருந்தார்கள். §§

மாஸ்டர் தனது வீட்டில் இருப்பதைப் போன்று இயல்பாகவும் அமைதியாகவும் இருப்பதை எல்லோராலும் உணர முடிந்தது. அவர் யோக சுவாமியிடம் தன்னை அறிமுகப்படுத்தி வைத்த கந்தையா செட்டியார் வீட்டில் தங்கி தனது உறவுகளை புதுப்பித்துக்கொண்டார். அவர் எங்கும் வெள்ளை வேட்டி அணிந்து சென்றார். அவரை அந்த உடையில் முன்பு பார்த்திராத மக்களுக்கு, அது வியப்பை வழங்கியது. காலம் அனுகூலமாக இருப்பதை உணர்ந்து, அவர் துறவிகள் மற்றும் சீடர்களுக்கு உயர்ந்த தீட்சைகளை வழங்கி, தமிழ் சமூகத்திற்கு அளவெட்டி ஆசிரமத்தின் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டங்களை உருவாக்கினார். §§

image§

1972 ஆம் ஆண்டு நடைப்பெற்ற இந்திய யாத்திரையின் போது, சற்குருவுடன் எழுபத்தி இரண்டு இன்னர்சர்ச் குழுவினர் உலகை சுற்றி வந்தனர். பழனி மலை, மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் மற்ற கோயில்களில், மக்கள் வெள்ளம் அவரை மலர் மாலைகளால் அலங்கரித்து, அவரை ஒரு உன்னதமான எதிர்காலத்திற்கு இந்து சமயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக அறிவித்தது.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அவர் நல்லூர் மற்றும் கும்பழாவளை மற்றும் யோக சுவாமியின் குடிசையில் வழிபாடு நடத்தினார். அவர் இலங்கையில் இருந்த மூத்த சீடர்களை சந்தித்தார் மற்றும் மெலிந்து உருவம் மற்றும் நரைத்த முடியுடன் தனது ஓலை குடிசையில் தங்கியிருந்த வயது முதிர்ந்த மார்கண்டுசுவாமியை சென்று பார்த்தார். அவர் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த துறவியின் காலில் விழுந்து வணங்கினார். அவர்கள் இருவரும் பல வருடங்களாக பகிர்ந்த அந்த குருவிற்கு, அவர் வழங்கும் மரியாதையாக மக்களுக்கு தோன்றியது. தனது பங்கிற்கு மார்கண்டுசுவாமியும், கூடியிருந்த எல்லோரது கவனத்தையும் கவர்ந்தார். இன்னர்சர்ச் குழுவினர் உள்ளே நுழையும் போது, அவர் அந்த குழுவில் யாரையும் தவறவிடாமல், ஒவ்வொருவர் மீதும் கவனமாக தனது பார்வையை செலுத்தி, அவர்களது கண்கள், ஆன்மா சந்திக்கும் வரை, அடுத்தவர் மீது தனது பார்வையை செலுத்தவில்லை. அவர் ஒரு விசுப்பலகையில் சுத்தமான வெள்ளை ஆடையை தளர்வாக அணிந்து அமர்ந்து இருந்தார் மற்றும் அவரது தலைமுடியும் தாடியும் கட்டுப்பாடின்றி வளர்ந்து இருந்தது. அவர் ஐந்து வருடங்கள் முன்பாக இறந்திருந்த, ஞானோதயம் பெற்ற குருவின் மிகப்பெரிய போதனைகளை சொல்லி தனது விருந்தாளிகளை மகிழ்வித்தார். இந்த சந்தோஷமான நிகழ்ச்சிகளின் மூலம் இன்னர்சர்ச் குழுவினர் நிலைமாற்றத்தை பெற்றனர். §§

அந்த சில வாரங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைப்பெற்ற வலுவான சந்திப்புக்களின் மூலம் மாஸ்டரின் சமயப்பணி ஒரு முழுமையான மாற்றத்தை பெற்றது. அவர் அந்த பயணத்தின் போது இந்து சமயத்தின் மூலத்திற்கு சென்று, சிதம்பரம் கோயிலில் வழிபட்டு, பூமியின் மிகவும் பழமையான தர்மத்தில் தனது சீடர்களை ஈடுபடுத்தி இருந்தாலும், அவர் அதன் பிறகு பல முறை திரும்பி வந்து, தனது சிறு வயதில் இருந்து பார்த்த மற்றும் நினைவில் வைத்திருந்த விஷயங்களை தொடர்ந்து ஒரு நதியை போல வரவழைத்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு இந்தியாவும் சிலோனும் ஒரு மந்தமான நினைவாக இருக்கவில்லை. அது பரமாத்துமாவின் தகவலையும், இந்து கலாச்சாரத்தின் அழகான பண்புகளையும், மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு வருவதற்கு அவர் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளின் மையமாகவும் விளங்கின. §§

யாத்திரையின் போது, அமெரிக்க ஆசிரமத்தில் இருந்த அனைவரும் நிகழ்ச்சிகள் மற்றும் அனுபவங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஒரு தினசரி குறிப்பும் வெளியிடப்பட்டது. இந்த யாத்திரை கடிதங்கள் விர்ஜினியா சிட்டிக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டன. ஆசிரமத்தில் இருந்தவர்கள் மற்றும் வீடுகளில் இருந்த சீடர்கள் யாத்திரை அனுபவத்தை பெறுவதற்காக, அந்த கடிதங்கள் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன. §§

கவாய் தீவு அழைப்பு விடுத்தது §

உலகை சுற்றி வந்த குழுவினர் சோர்வடைந்து இருப்பதை உணர்ந்த மாஸ்டர், சான் பிரான்சிஸ்கோ செல்வதை தாமதித்து, அவர்களுடன் கவாய் பயணம் மேற்கொண்டார். அவர் 1968 வருடத்தின் இறுதியில், ஆசிரம் கவாய் என்ற பெயரில் அங்கே ஒரு இன்னர்சர்ச் குழுவை அழைத்து சென்றிருந்தார். அவர்கள் அதிகம் தேவைப்பட்ட ஓய்வு எடுப்பதற்காக பொய்புவில் இருந்த ஒரு விடுதியில் தங்கினார்கள். ஆனால் மாஸ்டர் அதில் எப்போதும் சரியாக செயல்பட்டது இல்லை, மற்றும் அவர்கள் அதிகம் விரும்ப தொடங்கியிருந்த அந்த அழகான டிராபிகல் இன் விடுதியை விலைக்கு வாங்கும் திட்டப்பணியில் உடனே இறங்கினார். §§

அதை விலைக்கு வாங்குவதைப் பற்றி விசாரிக்க மாஸ்டர் ஒரு துறவியை அனுப்பி வைத்தார். “அது தற்போது விற்பனைக்கு இல்லை,” என்று பதிலுடன் அவர் திரும்பினார். “பரவாயில்லை, நீங்கள் அந்த விடுதிக்கே சென்று விசாரித்து வாருங்கள்,” என்று மாஸ்டர் அவருக்கு ஆறுதல் அளித்து அனுப்பி வைத்தார். அந்த துறவி கடமையுணர்வுடன் அந்த இடத்திற்கு சென்று, “அதை விற்கும் எண்ணம் முதலாளிக்கு இல்லை,” என்ற பதிலுடன் திரும்பினார். “சரி. அவருக்கு ஒரு வேளை விற்கும் எண்ணம் தோன்றினால், எந்த விலைக்கு விற்பார் என்பதை மட்டும் கேட்டு வாருங்கள்.” §§

image§

டிசம்பர் 1968, மூன்று வாரங்கள் அமைதியாக தியானம் செய்வதற்கு, மாஸ்டர் 27 ஆன்மீக சாதகர்களுடன், தனியாக இருந்த ஹவாய் தீவிற்கு சென்றார். கிழக்கிற்கும் மேற்கிற்கும் மத்தியில் இருந்த கவாய், அவர் கவனத்தை வலுவாக கவர்ந்ததால், அவர் 1970 ஆம் ஆண்டு அந்த கார்டன் ஐலண்டில் தனது தலைமையகத்தை நிறுவினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அந்த துறவி மீண்டும் கடமையுணர்வுடன் டிராபிகல் இன் திரும்பினார். அந்த விடுதிக்கு பணி ஓய்வு பெற்ற Col. ஆல்பர்ட் ரோஷ் உரிமையாளராக இருந்தார். அவரிடம் துறவி விற்க விரும்பும் விலையை பற்றி விசாரித்தார். “எனது மேலாளர் உங்களிடம் இருமுறை சொல்லிவிட்டார். இதை தற்போது விற்கும் எண்ணம் எனக்கு இல்லை, தம்பி,” என்று உரிமையாளர் கூறினார். “ஆமாம் எனக்கு தெரியும். ஆனால் ஒரு வேளை…” என்று துறவி தயக்கத்துடன கேட்டார். விலையாக ஒரு எண்ணிக்கையை குறிப்பிடவில்லை என்றால் தனக்கு நிம்மதி கிடைக்காது என்பதை உணர்ந்த Col. ரோஷ், சிறிது அச்சுறுத்தும் குரலில், “நான் விற்பேன் என்று சொல்லவில்லை. ஆனால் நான் ஒரு வேளை விற்றால், $300,000 குறைவாக விற்க மாட்டேன்,”என்று கர்ஜித்தார். இந்த தகவலை துறவி பொய்பு சென்று கூறிய போது, “நம்மால் அதிக விலை கொடுத்து வாங்க முடியாது என்றும், நம்மால் உடனடியாக $165,000 தரமுடியும் என்றும், ஆனால் அதற்கு மேல் தரமுடியாது என்றும் அவரிடம் சென்று சென்று சொல்லுங்கள்.” “ஆனால்...” “என்னை நம்புங்கள். அவரிடம் சென்று நாம் வாங்க விரும்பும் விலையை மட்டும் தெரிவியுங்கள்.” ஒரு மணிநேரம் கழித்து அந்த துறவி, அந்த உரிமையாளரிடம் சென்று தாங்கள் வாங்க விரும்பிய விலையை அதிக தயக்கம் இல்லாமல் தெரிவித்தார். “சரி! நான் என் மனைவியிடம் பேசிவிட்டு வருகிறேன்,” என்ற எதிர்பாராத பதில் வந்தது. §§

வியக்கும் வகையில், அந்த விலைக்கு விற்க உரிமையாளர் ஏற்றுக்கொண்டார் மற்றும் மாஸ்டர் பிப்ரவரி 5, 1970 புதிய குடியிருப்புக்கு இடம் பெயர்ந்தார். அந்த குடியிருப்பின் மீது மனோஉணர்வு கட்டுப்பாட்டை பெறுவதற்காக, மாஸ்டர் முதல் நாள் இரவு தனியாக இருந்து, அடுத்த நாள் தன்னுடன் வந்து இருக்குமாறு துறவிகளுக்கு அழைப்பு விடுத்தார். §§