குருமார்களின் சரித்திரங்கள்

Page 37: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/37_guru05_04.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

அத்தியாயம் இருபத்தி இரண்டு §

நெவாடாவில் குடியேறுதல் §

மார்ச் 24, 1964, யாழ்ப்பாணத்தின் தலைசிறந்த சற்குரு யோக சுவாமி மகாசமாதி அடைந்தார். கந்தையா செட்டியார் இறுதிச் சடங்கின் புகைப்படங்களை, சில நாட்களுக்குள் அனுப்பி வைத்தார். அந்த சடங்கில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். ஶ்ரீ சுப்பிரமுனியாவை யோக சுவாமி ஆன்மீக ரீதியாக சந்தித்தார். உடனே அமெரிக்க சீடரின் உடலுக்குள் ஒரு சக்தி பரவியது, மற்றும் அவர் ஆன்மீக அதிகாரத்தின் புதிய சக்தியை ஏற்றுக்கொண்டது போல் தோன்றியது. நடப்பதை கவனித்துக்கொண்டு இருந்த அவரது சீடர்கள், அவரை மாஸ்டர் (குரு) சுப்பிரமுனியா என்று அழைக்க ஆரம்பித்தனர். அந்த பெயர் சில வருடங்கள் கழித்து சட்டப்பூர்வமானது. அவர் அந்த காலகட்டத்தைப் நினைவுக் கூர்கிறார்: §§

யோக சுவாமி மார்ச் 1965 தனது தூல உடலை விட்டு பிரிந்தார். இது நடந்து முடிந்த பிறகு, “எங்களுக்கு இங்கே குரு தேவைப்படுவதால், நீங்கள் உடனே இங்கே திரும்பி வரவேண்டும்,” என்று சொல்லி சிலோனில் இருந்து வந்த கடிதங்கள், அவருக்கு நான் தான் வாரிசு என்பதை குறிப்பிடும் விதமாக இருந்தன. எனது சமயப்பணி மேற்கில் இருந்ததாக எனக்கு தோன்றியது. §§

மாஸ்டர் 1965 வருடத்தை “அகாடமியின் வருடம்" என்று பெயரிட்டார். அவரது சமயப்பணி முன்னேற்றத்தில் இருந்தது, மற்றும் நெவாடாவில் இருந்த தனது சொத்தை, தனக்கும் தனது துறவிகளுக்கும் ஒரு தனிமையான மற்றும் அமைதியான மையமாக மாற்ற வெகு நாட்களாக யோசித்துக்கொண்டு இருந்தார். அவர் சான் பிரான்சிஸ்கோ கோயிலில் இருந்து ஆசிரமத்திற்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ள தொடங்கினார். சிலசமயம் வாரத்திற்கு ஒரு முறை சென்று வந்தார். குருவின் தேவையை அறிந்த உறுப்பினர்கள், அவர்களுக்கு ஒரு கருப்பு நிற காடிலாக் வாகனத்தை குத்தகைக்கு எடுத்தனர். அந்த காலத்தில் நெவாடாவில் வேகத் வரம்புகள் எதுவும் இல்லை, மற்றும் அந்த தொலை தூர சாலைகள் வழியாக அவரே வாகனத்தை ஒட்டிக்கொண்டு சென்றார். அவர் அதை ஒரு தியானமாக மேற்கொண்டு, எப்போதும் மணிக்கு 80 மைல் வேகத்தை கடக்காமல் வாகனத்தை ஓட்டினார். §§

வைல்ட், வைல்ட் வெஸ்ட் §

அந்த மவுன்ட்டன் டெசர்ட் மடம் (மலைகளுக்கு மத்தியில் இருந்த பாலைவனம்), குருவின் ஆன்மீக வீடாகவும் அவரது வெளியீட்டு மையமாகவும் மாற இருந்தது. சுமார் சிகப்பு-கழுத்துடன் இருந்த 600 மவுன்ட்டன் பாய்ஸ் மற்றும் அவர்கள் குடும்பங்கள் வசித்த கௌபாய் (மாட்டிடையன்) நகரத்தின் மையம், கால் மைல் தூரத்தில் இருந்தது. 100 ஆண்டுகள் பழமையான மரப்பலகை நடைப்பாதை இன்னும் பயன்பாட்டில் இருந்தன, புகழ்பெற்ற பக்கெட் ஆஃப் பிளட் சலூன் அதிகாலையில் திறந்தது. ஓபரா ஹவுஸ் பிரபலமாக இருந்த காலம் முடிவுக்கு வந்து, தற்போது அதன் அடிச்சுவடு மட்டுமே மீதம் இருந்தது; ஆனால் அந்த நகரம் ரெனோ நகரத்தில் இருந்து 24 மைல் தூரம் மலை ஏறி வந்த சிறிய சுற்றுலா பயணிகள் கூட்டத்தினர் வரவால் தன்னை தக்கவைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் சிறிது நேரம் சூதாட்டத்தில் ஈடுபடுவார்கள், சில சிறிய நகைகளை வாங்குவார்கள், பீர் குடிப்பார்கள் மற்றும் வுட்டன் இந்தியன் பொம்மைக்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். §§

புகழ்பெற்ற வடிப்பாலையை வாங்கிய மாஸ்டர் மற்றும் அவரது சான் பிரான்சிஸ்கோ யோகிகளை, உள்ளூர் மக்கள் புரிந்துகொள்ள முடியாமல் தவித்தனர். இரு குழுவினர் இடையே நட்புறவு ஏற்படுவதற்கு ஒரு வருடம் தேவைப்பட்டது. துறவிகள் தபால் நிலையத்திற்கு சென்று தபால் வாங்க நகரத்திற்கு வந்த போது, என்ன செய்வது என்று தெரியாத உள்ளூர் மக்கள் தெருவின் மறுபுறத்திற்கு சென்றனர். அதே போல அவர்கள் துறவிகளை அச்சுறுத்தும் நோக்கத்துடன், தங்கள் மிதியுந்து வாகனங்களில் வேகமாக ஆசிரமத்தை கடந்து சென்று, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். அது ஒரு கலாச்சார மோதலாக இருந்தது. இதை எப்படி சரி செய்வது என்று மாஸ்டர் தீவிரமாக சிந்தித்தார். முடிவில் உள்ளூர் மக்களின் நட்புறவை பெறும் நோக்கத்துடன், அவர் கௌபாய் காலணிகள், ஒரு தொப்பி மற்றும் போலோ கழுத்துப்பட்டையை வாங்கினார். அவர் அவர்கள் நடத்திய வியாபாரங்களுக்கு சென்று, அவர்கள் வழங்கிய சேவைகளை வாங்கி, அவர்களது மொழியில் பேசினார். இந்த முயற்சி பெரும்பாலும் நல்ல பலனை தந்தது. §§

image§

கோடைகாலத்தில் அமைதியாக தனியாக இருப்பதற்கு, குரு நெவாடா விர்ஜினியா சிட்டியில் இருந்த ஒரு பாழடைந்த மூன்று அடுக்கு வடிப்பாலையை வாங்கினார். ஆனால் அவரது சமூகம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்ததால், அது விரைவில் ஒரு மடமாக மாறியது. அவரது இளம் துறவிகள் பத்து வருடங்களுக்கு, புதர் படர்ந்து ஒதுக்குப்புறமாக இருந்த மலைகளில் சேவை செய்து பயிற்சியும் பெற்றனர். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இருந்தாலும், அவர்கள் முரட்டுத்தனமாக மிதியுந்து வாகனத்தில் வழங்கிய வரவேற்பு தொடர்ந்தது. அதனால் தனது துறவிகளில், துப்பாக்கி சுடுவதில் பயிற்சி பெற்று வான்குடை உபயோகிக்க தெரிந்த முன்னாள் ஒரு இராணுவ வீரிடம், ஒரு வேட்டை துப்பாக்கி வாங்கி வர உத்தரவிட்டார். மிதியுந்து வாகன ஓட்டிகள் மீண்டும் சிக்ஸ் மைல் கானியன் ரோட்டில் வாகனத்தை வேகமாக ஓட்டி தூசியை கிளப்பிய போது, அந்த துறவி இரண்டாவது மாடி சன்னலை திறந்து, அவர்கள் தலைக்கு மேலாக செல்லுமாறு இரண்டு 12-கேஜ் அளவுள்ள தோட்டாக்களை சுட்டார். அந்த தகவல் அற்புதத்தை நிகழ்த்தியது. வேகமாக வாகனம் ஓட்டுவது நின்றது, மற்றும் துறவிகள் மீது புதிய மரியாதை தோன்றியது. §§

அந்த மடம் உள்ளூர் கலாச்சாரத்தின் இன்னொரு முகத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. விபச்சாரம் நெவாடா பகுதியில் மட்டுமே சட்டப்பூர்வமாக இருக்கிறது, மற்றும் அந்த மாநிலத்தின் மிகவும் பிரபலமான விபச்சார விடுதி ஆசிரமத்தில் இருந்து சில மைல் தொலைவில் இருந்தது. மொட்டை அடித்த தலையுடன் துறவி கதவை திறந்த போது, அவரிடம் மிகவும் மோசமான கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த சம்பவம் பல முறை நடந்தது. “இந்த தெருவில் இன்னும் சிறிது தூரம் முன்னே சென்று விசாரியுங்கள்,” என்று விசாரிப்பவரை விவேகமாக திசைத்திருப்ப துறவிகள் விரைவில் கற்றுக்கொண்டனர். §§

தாங்கள் கணநேர காட்சியாக பார்த்து இருந்த மெய்ஞ்ஞான மனநிலைகளை புரிந்துகொண்டு, உயிருடன் வாழ்ந்துக்கொண்டு யோகம் கற்றுத்தந்த இந்த குருவுக்கு சேவை செய்ய மற்றும் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள, வாழ்க்கையில் பல நிலைகளில் இருந்த இளைஞர்கள், நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்தார்கள். துறவற பாதையை பின்பற்ற அதிக ஆர்வத்துடன் நல்ல தகுதியுடன் வரத்தொடங்கியதால் மடம் வளர்ச்சி பெற்றது. அவர்களது எண்ணிக்கை இருபது, முப்பது என்று கூடிக்கொண்டே சென்றது. அவர்கள் உணவு அருந்தும் அறையில், கொட்டகைத் தரையில், நடைக்கூடங்களில், பரணில் மற்றும் பின்பக்க தாழ்வாரம் என்று ஒரு உறக்கப்பை இங்கே பொருந்தினாலும், அங்கே உறங்கிக் கொள்வார்கள். §§

பெரும்பாலும் இருபது வயது நிரம்பியவர்களாக இருந்த இந்த இளைஞர்களை குரு நல்ல வரவேற்பு வழங்கினார் மற்றும் இவர்கள் கெட்ட பழக்கங்கள், வலுவான கர்மவினைகள், தனிப்பட்ட விருப்பங்கள், முரட்டுகுணம், பாலியல் ஏக்கங்கள், பூர்த்தி அடையாத ஆசைகள், வேதனை நிறைந்த அனுபவங்கள், ஒழுக்கமின்மை என்று பக்குவமடையாத ஆண்களிடம் இருக்கும் பண்புகளுடன் வந்ததால், குரு தனக்கு ஒரு மிகப்பெரிய வேலையை அமைத்துக்கொண்டார். அதனால் எப்படி உடை அணிவது, எப்படி நடப்பது மற்றும் பேசுவது, எப்படி மற்றவர்களுடன சேர்ந்து வேலை செய்வது, எப்படி மேசையில் சாப்பிடுவது மற்றும் எப்படி தொலைப்பேசியில் பேசுவது என்று அவர்களுக்கு குரு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். அவர்களிடம் இருந்த இளவயது உற்சாகத்தை பயன்படுத்த, அவர் வழங்கிய சில திட்டப்பணிகளில் வெளியீட்டு பணி நல்ல பலனை தந்தது. §§

மாஸ்டர் ஓக்லாண்டில் ஒரு அச்சிடும் வியாபாரத்தை விலைக்கு வாங்கி, முழு செயல்பாட்டில் இருந்த அந்த கடையின் உபகரணங்கள் முழுவதையும் விர்ஜினியா சிட்டிக்கு நகர்த்தினார். பழங்கால மேற்கு எல்லையில் அந்த நகரத்தின் போனி எக்ஸ்பிரஸ் ஸ்டேஷனாக இருந்து, செங்கல் சுவர்களால் கட்டப்பட்டிருந்த அறையில், அச்சு இயந்திரங்கள் மற்றும் காகிதம் வெட்டும் கருவிகளுடன், கட்டிடத்தின் தரைத் தளத்தில், துறவிகளின் மேற்பார்வையில் அந்த அச்சிடும் கருவிகள் நிறுவப்பட்டன. §§

image§

சமயப்பணியின் முக்கிய குறிக்கோளாக வெளியீடு தொடர்ந்து நிலைத்து இருந்தது. குரு அதிநவீன அச்சிடும் கருவியை விலைக்கு வாங்கி, தனது வெளியீட்டு பிரிவான, காம்ஸ்டாக் ஹவுஸை தொடங்கினார். அங்கே துறவிகள் பல ஆயிரக்கணக்கான ஆன்மீக புத்தகங்களை அச்சிட்டு அட்டையிடும் பணியை செய்தார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

துறவிகள் கலிபோர்னியாவின் ஆங்குயின் நகரத்தில் இருந்த அச்சிடும் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு அங்கே அச்சிடும் பணியாளர்கள், அச்சுக்கலை வல்லுநர்கள் மற்றும் இருட்டறை புகைப்படக்காரர்கள் பணிகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த ஆசிரமம் 1968 ஆம் ஆண்டில், ஒரு விறுவிறுப்பான, ஆக்கப்பூர்வமான, தகுதி வாய்ந்த அச்சிடும் மற்றும் பதிப்படும் மையமாக மாறியது. மாஸ்டர் சுப்பிரமுனியா ஏதாவது ஒரு சிறிய புத்தகத்தை வழங்கிக்கொண்டு இருக்க, அவற்றை அச்சிட்டு அட்டையிடுவதற்கு துறவிகள் இரவு பகலாக பணியாற்றிக் கொண்டு இருந்தனர். அவர்கள் சோர்வடைந்ததும், ஹைடெல்பெர்க் அச்சிடும் கருவிக்கு அடியில் இருந்த உறக்கப்பைக்குள் சென்று உறங்கி, சிலமணி நேரங்களில் எழுந்து, ஒரு பாத்திரத்தில் காபி தயார் செய்து, சூரிய உதயம் வரை அச்சிட்டுக்கொண்டு இருப்பார்கள். §§

காம்ஸ்டாக் ஹவுஸ் என்ற வெளியீட்டு நிறுவனத்தை மாஸ்டர் தொடங்கினார்; மற்றும் அது வெளியிட்ட புத்தகங்கள் நாடு முழுவதும் பரவி, அந்த காலத்தில் மிகவும் பிரபலமான ஆன்மீக படைப்புக்களாக விளங்கின. தூய வெள்ளை ஒளி, தியானத்தில் இருக்கும் நுண்கலை, எல்லாம் உங்களுக்குள் இருக்கிறது, முழுமுதற்பொருளின் விளிம்பில், இதயக்கமலம் என்று அந்த அச்சிடும் கருவிகளில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தன. துறவிகளின் திறமைகளைப் பற்றி மக்கள் தெரிந்துகொண்டார்கள் மற்றும் விரைவில் நெவாடா கேசினோக்கள் தங்களுக்கு தேவையான கேனோ அட்டைகள், உணவகத்தில் உணவருந்தும் மேசையின் மீது வைக்கப்படும் சிறிய பாய், நிறுவனத்திற்கு தேவைப்படும் எழுதுபொருட்கள், மற்றும் மேலும் பலபொருட்களை இந்த மடத்திடம் இருந்து வாங்கினார்கள். இதன் மூலம் வந்த வருமானம் ஆசிரமத்திற்கு பயனுள்ளதாக இருந்தது. ஆனால் இந்த சேவைகள் சில காலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டன. §§

துறவிகளிடம் பூரணத்துவத்தை வலியுறுத்துதல்§

வெளியீட்டு நடவடிக்கைகள் இருந்தாலும், ஆன்மீக பணி மடத்தின் முக்கிய வேலையாக இருந்தது, மற்றும் மாஸ்டர் சுப்பிரமுனியா ஒரு கடினமான தியான அட்டவணையை தயார் செய்து இருந்தார். தினமும் காலையில் 6 மணி, மதியம் பன்னிரண்டு மணி, மாலை 6 மணி மற்றும் நள்ளிரவு பன்னிரண்டு மணி என்று நான்கு முறை, அவர் குறுகலான படிகள் வழியாக ஏறி, மூன்றாவது தளத்தின் விசாலமான அறையில் இருந்த மடத்தின் கோயிலுக்கு செல்வார், மற்றும் அங்கே வழிகாட்டலுடன் ஒரு மணிநேரம் தியானம் செய்ய துறவிகள் எல்லோரும் தவறாமல் ஒன்று கூடுவார்கள். கோல்டன் ரெட்ரீவர் என்ற நாய் இனத்தை சேர்ந்த பாபாஜி, எல்லா அமர்விலும் தவறாமல் கலந்து கொண்டு, மாஸ்டரின் பாதங்களில் சுருண்டு இருக்கும். யாரும் தியான வகுப்பை தவற விடக்கூடாது என்று எல்லோருக்கும் தெளிவாக சொல்லப்பட்டு இருந்தது. மாஸ்டர் தவறாமல் வந்து விடுவார், மற்றும் ஒவ்வொரு துறவியும் தவறாமல் வந்து விடுவார்கள். தியான வகுப்புகள் முழு பத்மாசனத்தில் நடத்தப்பட்டன, மற்றும் யாரும் அசராமல் அமர்ந்து இருக்கவேண்டும் என்று வெளிப்படையாக சொல்லப்படவில்லை என்றாலும் எல்லோராலும் புரிந்துகொள்ளப்பட்டு இருந்தது. §§

தினமும் இந்த யோகப்பயிற்சி வகுப்புக்களில் நீண்ட நேரம் பங்குபெறுவது ஒரு துறவிக்கு கடினமாக இருந்தது. அவரது கால்களில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு விடும், மற்றும் தியானத்தின் மீது கவனத்தை செலுத்துவது அவருக்கு கடினமாக இருக்கும். அதனால் ஒரு நாள் அன்றைய வகுப்பு முடிவதற்கு முன்பாக, தனது வலியை தணிப்பதற்கு கால்களை விரிக்க ஆரம்பித்தார். மாஸ்டர் அவரிடம், “வேண்டாம்,” என்று சொல்லி, வகுப்பு முடியும் வரை பத்மாசனத்தில் இருக்குமாறு அறிவுறுத்தினார். அடுத்த நாள் மற்றும் அதற்கு அடுத்த நாள் இதே நிலை தொடர்ந்தது, மற்றும் இறுதியில் அந்த இளம் துறவி தனது உடலை நிலையாக வைத்துக்கொள்ள போராடிக்கொண்டு இருக்கும் போது அழ ஆரம்பித்துவிட்டார். §§

அவர் தனது வாழ்க்கை முழுவதையும் தியானத்தில் ஈடுபடுத்த வேண்டுமென்று தீவிரமாக இருந்தால், அவர் இந்த தடையை கடந்து வருவது மிகவும் முக்கியம் என்று மாஸ்டர் அவரை தனியாக அழைத்து விளக்கம் அளித்தார். அவர் வலியை உணரும் முறையை மாற்றி, அதை ஒரு வலியாக இல்லாமல் சக்தியாக, ஒலியாக பார்க்குமாறு அவரிடம் மாஸ்டர் கேட்டுக்கொண்டார். “நீங்கள் ஒரு சிம்பொனியில் உட்கார்ந்து இசை ஒலியை கேட்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இதை பயிற்சியை முயற்சி செய்து பாருங்கள்,” என்று மாஸ்டர் கூறினார். அந்த ஆலோசனையை அந்த துறவி சில நாட்கள் பின்பற்றியதும் வலி தணிந்தது, உடல் தேவையான மாற்றங்களை செய்து கொண்டது, மற்றும் அவரால் எந்தவித அசௌகரியமும் இல்லாமல் உட்கார முடிந்தது. உடல், உணர்ச்சி, அறிவு அல்லது கர்மவினை சார்ந்த வேதனைகளை வெற்றிகொள்ளும் மனஉறுதியை கோரும் இத்தகைய வேண்டுகோள்கள் மாஸ்டரிடம் இருந்து அடிக்கடி வந்துக்கொண்டு இருந்தன. §§

ஒருமுறை அவர் உடலின் வெப்பத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று துறவிகளுக்கு கற்றுத்தந்தார். ஆனால் அவர்களுக்கு அது புரியவில்லை என்பதை மாஸ்டர் தெரிந்துகொண்டார். அதனால் அவர் காலை 6 மணி தியானத்தை ஆசிரமத்திற்கு வெளியே நடத்த முடிவு செய்தார். அது குளிர்காலமாக இருந்தது, மற்றும் உயரமான பனிமலைகள் மிகவும் ஆழமாக குவிந்து இருந்தது. சில வருடங்களில், ஒருவர் தனது வீட்டின் இரண்டாவது மாடி கதவு வழியாக வெளியேறி நேராக நிலப்பரப்பிற்கு வரும் அளவிற்கு பனி ஆழமாக குவிந்து இருக்கும். அந்த வருடம் குளிர் சற்று அதிகமாக இருந்தது. தினமும் காலையில் எல்லோரும் ஒன்றாக ஒரு திறந்த வெளியில் அமர்ந்து தியானம் செய்ய, துறவிகள் தங்கள் மாஸ்டரை பின்தொடர்ந்து சென்றனர். அவர்கள் தங்களது வழக்கமான அங்கியுடன், தங்களை வெதுவெதுப்பாக வைத்திருக்க ஒரு கம்பளியை மட்டுமே வைத்து இருந்தார்கள். அதன் மூலம் குளிரை தணிப்பது மிகவும் கடினம். §§

அவர்கள் அணிந்திருந்த பாதுகாப்பு கவசங்களை கடந்து காலையில் வீசிய தென்றல், பனி மற்றும் உறைந்த காற்றை சுமந்து சென்ற போது, அவர்கள் குளிரில் நடுங்கிக்கொண்டு, அமைதியாக முழுமையான பத்மாசனத்தில், உள்ளுக்குள் இருக்கும் அமைதியை நாடி அமர்ந்து இருந்தார்கள். அதன் பிறகு குரு, ஷும் மொழியில் அலிகைஷும் என்று அழைக்கப்படும் உடல் வெப்பத்தை மேலே கொண்டு வருவதற்காக, அவர்களது மனங்களின் மூலம் அவர்களது உடல் வெப்பத்தை அதிகரிப்பதை பற்றி கற்றுத் தருவார். குரு தங்களுக்கு கற்றுத்தந்த கலையை கற்பதற்கு, துறவிகள் தீவிரமாக முயற்சி மேற்கொண்டார்கள். அது ஒரு பயிற்சியாக இல்லாமல், நீடித்து இருப்பதற்கு தேவையான ஒரு விஷயமாக இருந்தது. சில வாரங்களுக்கு பிறகு, பெரும்பாலான துறவிகள் தங்கள் விருப்பத்தினால் இல்லாமல், தேவையினால் நிர்பந்திக்கப்பட்டு தங்கள் உடல் வெப்பத்தை மனோரீதியாக உயர்த்த கற்றுக்கொள்ளும் அளவிற்கு, அந்த காலத்தில் குருவின் கற்பிக்கும் முறை அமைந்து இருந்தது. §§

அத்தகைய பயிற்சியின் போது குரு, துறவிகளுக்கு தேவையான தனிப்பட்ட நிலைமாற்றங்கள், அவர்களது அணுகுமுறைகள் மற்றும் உறவுமுறைகளில் மாற்றங்கள் வழியாக அவர்களை வழிநடத்தி சென்று, அவர்களது கடந்தகால சிக்கல்களை அகற்றுவதன் மூலம் தெளிவை வழங்கி, அவர்களது தொழில் பழக்கங்கள் மற்றும் தியான தீர்மானங்களை உறுதி செய்து எல்லோருக்கும் தீவிரமான பயிற்சியை வழங்கினார். அவர் அவர்களுக்கு மனஉறுதியுடன் எவ்வாறு தங்கள் குறிக்கோள்களை அடைவது, தடைகளை எவ்வாறு வெற்றி கொள்வது, எவ்வாறு துன்பங்கள் மற்றும் தடைகளை வெற்றிகளாக மாற்றுவது என்று கற்றுத் தந்தார்.§§

அவர் அவர்களது நடவடிக்கைகளில் 108 சதவீத ஈடுபாட்டை எதிர்பார்த்தார். நூறு சதவீதம் போதாது என்றும், அது உங்கள் திறமையை பறைசாற்றவில்லை என்றும் அவர் அடிக்கடி கூறுவார். இந்த தீவிரமான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டலின் கீழ் அந்த துறவிகளின் முதல் குழு, தங்கள் உட்புற மற்றும் வெளிப்புற வாழ்க்கைகளில் பெற்ற அதே உறுதியான தன்மை மற்றும் வலிமையை வரவிருக்கும் தலைமுறைகள் அடையுமா என்று சற்குரு சந்தேகிக்கும் வகையில், அவர்களது வளர்ச்சி அமைந்து இருந்தது. §§

விர்ஜினியா சிட்டியில் இருந்து, மாஸ்டர் ஒரு சாதகருக்கு இந்த பதிலை அனுப்பினார்:§§

நமஸ்தே! நான் எங்களது இந்திய தீர்த்த யாத்திரையின் அங்கமாக இலங்கையில் இருக்கும் எனது அளவெட்டி ஆசிரமம் மற்றும் எட்டு மற்ற நாடுகளுக்கு சென்று இன்று திரும்பிய போது, நீங்கள் எழுதிய அற்புதமான கடிதம் வந்து சேர்ந்தது. நீங்கள் உங்கள் ஆன்மீக வேட்கையில் முன்பே மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக, நீங்கள் ஒரு ஆன்மீக ஒளியில் இருக்கிறீர்கள் என்பதை அந்த சமய பொருத்தம் குறிப்பிடுகிறது. பாதையில் இருந்த பல முட்டு சந்துகளை நீங்கள் கடந்து வந்துள்ளீர்கள் என்பது உங்கள் கடிதத்தில் இருந்து தெளிவாகிறது. துறவறம் வாழ்கையை மேற்கொள்வதாக நீங்கள் எடுத்துள்ள முடிவு ஒரு நல்ல மற்றும் முக்கிய முடிவாகும். அதைப்பற்றி நீங்கள் நன்றாக சிந்தித்து இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். காலங்கள் மாறிக்கொண்டு இருக்கின்றன. உங்களைப் போன்ற அர்ப்பணிப்புள்ள ஆன்மாக்கள், எங்களது துறவற சமூகங்களில் சாதகர்களை நிலைநிறுத்தி கற்பிக்க, ஆன்மீக பாதையில் இருக்கும் உதவியாளர்களாக தேவைப்படுகிறார்கள். மேற்கத்திய நாட்டு மக்களின் மனம், சைவ சித்தாந்த இந்து சமயத்தின் விரிவான போதனைகளை மீண்டும் தெரிந்துக்கொள்ளும் காலம் விரைவில் வரவிருக்கிறது. §§

நாம் இந்த வாழ்க்கையில் பகிரவிருக்கும் பல சோதனைகளில், நான் உங்களுக்கு வழங்கும் முதல் சோதனையாக, நான் எனது மடவாசிகளுக்கு ஆகஸ்ட் 28, 1960 அன்று சான் பிரான்சிஸ்கோ கோயிலில் வழங்கிய உரையின் மீது, ஒரு மாதம் முழுவதும் தினமும் ஆழமாக தியானம் செய்ய வேண்டும். உங்களைப் போல அவர்களும், தங்களது ஆன்மீக சக்தியின் பேரானந்தம் மற்றும் அமைதியான பகுதிகளை அனுபவிக்க தொடங்கி இருந்தார்கள் மற்றும் நாங்கள் முழுமுதற்பொருளின் விளிம்பில் பெறும் ஞானோதய நுண்ணறிவுகளைப் பற்றி பேசினோம். இந்த பணி உங்களுக்கு சவால் விடுவதாக இருக்கலாம். ஆனால் இதற்கு தேவைப்படும் முயற்சிகளை விட, கிடைக்கும் பலன்கள் ஏராளம். §§

இந்த பாதையில் சோதனைகள் உறுதியாக இருக்கும் என்று சொல்வது ஆன்மீக ஆசிரியராக இருக்கும் எனது கடமையாகிறது. ஒரு சந்நியாசியின் வாழ்க்கை எளிதில்லை. அது நினைத்ததை காட்டிலும் உங்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்க்கிறது. நீங்கள் சோர்வாக இருக்கும் போது சேவை செய்யவும், சிறிது கோபமாக இருக்கும் போது ஊக்குவிக்கவும், வழங்குவதற்கு எதுவுமில்லை என்று தோன்றும் போது வழங்க வேண்டிய நிலையையும், நீங்கள் நிச்சயமாக எதிர்கொள்வீர்கள். இந்த மிகப்பெரிய சமயப்பணியில் இருந்து விலகி செல்வது, உங்களுக்கும் உங்களை சார்ந்து இருக்க கற்றுக்கொண்டவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்காது. இந்து துறவற சமூகம் என்பது உலகியல் வாழ்க்கையில் இருந்து விலகி செல்வதில்லை. இருபது அல்லது முப்பது வருடங்கள் கழிந்து, இந்த வாழ்கையில் ஒரு ஆன்மீக தலைவராக உங்கள் கர்மவினை சார்ந்த விதியை நீங்கள் பூர்த்தி செய்யும் போது, மற்றவர்கள் உங்களிடம் சக்தியை காண, நீங்கள் எங்களுக்கும் உங்களுக்கும் உங்களை சார்ந்து இருக்க கற்றுத் தரவேண்டும்.§§

அதனால் இந்த வார்த்தைகளை கவனமாக படியுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளித்து, உங்கள் சக்திகளை எங்கே இயக்க விரும்புகிறீர்கள் என்பதை நன்றாக யோசியுங்கள். ஆத்ம ஞானம் தான் இலக்கு. அது இயல்பாக வரும். அதற்கு அடிப்படை முதலில் முக்கியம். மெதுவான மற்றும் கடினமான ஆய்வு, மேற்கொண்ட சாதனாக்கள் மற்றும் சாதகருக்கு குரு வழங்கிய வேண்டுகோள்கள் மூலம் வளர்க்கப்பட்ட, ஒரு அடிப்படை முதலில் தேவைப்படுகிறது. இது உங்கள் வாழ்க்கையில் ஒரு அருமையான தருணமாக விளங்குகிறது. இந்த நிலையில் அவசரம் வேண்டாம். இந்த பணியை செய்யுங்கள், மற்றும் உங்களுக்கு அதிக ஒழுக்கம் மற்றும் தீவிரமான பயிற்சி தேவைப்பட்டால், சாதனா செய்யுங்கள். உலகியல் வாழ்க்கையில் உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள். அதன் பிறகு நாம் ஒன்றாக சேர்ந்து அமரலாம். அன்பு மற்றும் ஆசிகள், குரு. §§

image§

மவுன்டன் டெசர்ட் மடத்திற்கு அருகில் கேட்பாரற்று ஒரு வெள்ளிச் சுரங்கம் இருந்தது. குரு எங்கும் பரவியிருந்த இருட்டில் ஆன்மீக ஒளியை எவ்வாறு கண்டுகொள்வது என்பதை கற்பித்து, அங்கிருந்த ஆழமான குகைகளுக்குள் பல நாட்கள் தொடர்ந்து தங்கியிருக்க தனது இளம் துறவிகளை அனுப்பி வைப்பார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

மடத்தில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில், சிக்ஸ் மைல் கானியான் ரோட்டில் குகை ஒன்று உள்ளது. இந்த பகுதியில் இருக்கும் குன்றுகளில் நிரம்பியுள்ள நூற்றுக்கணக்கான வெள்ளி சுரங்கங்களில் இதுவும் ஒன்றாகும், ஆனால் அது பெரும்பாலான குகைகளை காட்டிலும் கிடைநிலையில் அதிக ஆழத்துடன் இருந்தது. அதன் அறைகளில் சுமார் அரை மைல் தூரம் நடந்து செல்லலாம். இதை ஒரு நாள் கண்டறிந்த மாஸ்டர் உற்சாகமடைந்து, தனது மடவாசிகளுக்கு உடனே ஒரு செய்முறை திட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அந்த இருண்ட அறைகளில் தியானம் செய்ய, அவர்களை பெரும்பாலும் தனியாகவும் சிலசமயங்களில் சோடியாகவும் அவர் அனுப்பி வைத்தார். அந்த மடவாசி கைகளில் உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாமல், வெறும் குடிக்கும் தண்ணீருடன், துளியும் வெளிச்சம் இல்லாத பகுதி வரும் வரை, அந்த நீளமான சுரங்கப்பாதை வழியாக, குகை உட்புறமாக வளைவதை தாங்கிப்பிடித்த மிகப்பெரிய மரக்கட்டைகளை தவிர்த்துக்கொண்டு முன்னேறி, மேலும் சிறிது தூரம் நடந்து சென்றார். இந்த இருண்ட பகுதிக்குள் ஒரு முறை நுழைந்ததும், அவர் குரு வழங்கிய அறிவுத்தலுக்கு ஏற்ப, பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு தங்குவார். அவர் பாட்டு பாடிக்கொண்டு தியானம் மட்டுமே செய்யவேண்டும். இதைத்தவிர அவருக்கு சாதனாவாக, உட்புறமாக மனதில் இருக்கும் தூய வெள்ளை ஒளியை நாடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. §§

சிலசமயம் ஒருவர் தியானம் செய்யும் போது, தான் பார்ப்பது உட்புற ஒளியா அல்லது தனது முடியுள்ள கண்களை கடந்து இருக்கும் ஒரு பிரகாசமான பகுதியா என்ற சந்தேகம் ஏற்படும். ஆனால் பூமியின் ஆழத்தில் இருக்கும் ஒரு குகையில் சுற்றுப்புறத்தில் எந்த ஒளியும் இருக்காது. அவரை சுற்றி இருளும் அமைதியும் மட்டுமே இருக்கும். அந்த குகையில் துறவிகள் தங்களுக்கு ஏற்பட்ட சமீபத்திய அனுபவம், மடத்தில் தாங்கள் மேற்கொண்ட பணிகள், குறைவான உணவு மற்றும் வேறு பல தொடர்பில்லாத தலையீடுகளால், தொடக்கத்தில் அவரது கவனம் சிதறினாலும், சிறிது நேரம் கழித்து அவர்கள் உற்சாகமாக ஈடுபடுகிறார்கள். ஆனால் சில மணி நேரங்களுக்கு பிறகு அமைதி அதிகரித்து, அவர்களை மனதின் ஒளிக்குள் கொண்டு வருவதற்கு நன்றாக துணை புரிகிறது. ஒரு இருண்ட குகையில் நீங்கள் ஒளியை காணும் போது, அது உங்களிடம் இருந்து தான் வருகிறது என்பதை நீங்கள் தெளிவாக தெரிந்துகொள்வீர்கள். §§

சில துறவிகள் திருப்பி வந்து தங்களுக்கு ஏற்பட்ட விசேஷமான அனுபவங்களைப் பற்றி பேசுவார்கள். தங்களுக்குள் இருந்து வந்த ஒளி அந்த தளம் மற்றும் குகையின் சுவர்களில் அதிக பிரகாசத்தை ஏற்படுத்தியதால், அந்த சுரங்கப்பாதையில் இருந்த தகவல்களை உணர்ந்து, தங்கள் கை மின்விளக்கை பயன்படுத்தாமல் தங்களால் வெளியே வர முடிந்ததாகவும் அவர்கள் கூறும் அளவிற்கு, அந்த காலத்தில் குருவின் வழிமுறைகள் ஆற்றல்மிக்கதாக இருந்தன. குகையில் இந்த அனுபவங்கள் ஏற்பட்டதும், மாஸ்டர் இந்த ஆன்மீக ஒளியை பற்றி இவ்வாறு எழுதினார்: §§

முத்திரை உடைந்து, மனம் முழுவதும் தூய வெள்ளை ஒளி நிரம்பியதும், உட்புறத்திற்கும் வெளிப்புறத்திற்கும் இடையே ஒரு இடைவெளி இருக்காது என்பதை நினைவில் வைத்து இருங்கள். தியானம் செய்து மீண்டும் ஒளியை நாடுவதன் மூலமாக, உணர்வின் எதிர்மறை நிலைகளையும் கரைத்து விடலாம். சாதகர் உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் புதிய விடுதலையை பெற்று இருப்பதால், அவர் தினசரி அனுபவங்களுக்கு மிகவும் வலுவான எதிர்வினைகளை வழங்குவதன் மூலம், மனம் ஒரு புதிய நெரிசலான அடியுணர்வை மீண்டும் உருவாக்க, ஒரு வலுவான தூண்டுதல் இருந்துக்கொண்டு இருக்கும் என்பதை அறிய வேண்டும். தாங்கள் முன்பு விளையாட்டாக பார்த்த ஒன்றை விளையாடினாலும், அந்த விளையாட்டில் நுழையும் போது, மெதுவாக ஒன்று சேர்ந்த எதிர்வினைகளுக்கு இயற்கையின் உள்ளுணர்வு பிரிவுகள் இரையாக வாய்ப்புள்ளது. §§

அதனால் ஒரு ஆன்மீக ஒளியின் அனுபவம் ஒரு தீர்வாகாது; ஆழ்நிலை செல்லும் வாய்ப்புக்களுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை தூய வெள்ளை ஒளி பிரகாசித்த சம்பவங்கள் ஒரு திறவுகோலாக பயன்படலாம். இளம் சாதகன் அனுபவிப்பராக இருக்க வேண்டும். ஆனால் அவர் அந்த அனுபவத்தை பெற்று, அது ஏற்படுத்திய ஞாபக மாதிரிகளில் இளைப்பாறக்கூடாது. இந்த தருணத்தில் பலர் விரும்பாத ‘ஒழுக்கம்’ வாழ்க்கையிலும் மலர்ந்துக்கொண்டிருக்கும் இந்த சீடனின் சொல்லகராதியிலும் நுழைகிறது மற்றும், அதனால் தான் ஆசிரமங்கள் சிறிது காலத்திற்கு மாணவர்களை தனித்து வைத்து இருக்கிறார்கள். அவர்கள் ஒழுக்கத்துடன் இருப்பதால் அனுபவிப்பவர்களாக மாறி, தினமும் சாதாரண வேலைகளை செய்யும் முன்பாக, தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை பிரித்து, தங்களுக்கு குரு வழங்கிய ஒவ்வொரு சோதனை மற்றும் பணியில் தேர்ச்சி பெறுகிறார்கள். தினமும் மாலைப் பொழுதில், தனது ஆழ்ந்த சிந்தனை நிலைகளில் தனது எதிர்வினை பழக்க மாதிரிகளை கரைப்பதற்கு சேலா (சீடன்) கற்றுத் தரப்படுகிறார். §§