குருமார்களின் சரித்திரங்கள்

Page 36: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/36_guru05_03.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

அத்தியாயம் இருபத்தி இரண்டு §

அமெரிக்காவில் சாதனா மேற்கொண்ட வருடங்கள் §

மார்ச் 1950, கலிபோர்னியாவின் சாண்டா க்ரூஸ் நகரத்தில் முருக ஆசிரமத்தை ஸ்ரீ சுப்பிரமுனியா நிறுவினார். அவர் மேற்கத்திய நாடுகளுக்கு இந்து தெய்வங்களை அழைத்து வரும் ஆர்வத்துடன் இருந்தார். ஸ்ரீ சுப்பிரமுனியா தனது சமயப்பணியை தொடங்குவதற்கு, முப்பதாவது வயது வரை காத்திருக்குமாறு அவரது குருவுக்கு அவருக்கு அறிவுறுத்தி இருந்ததால், தனது தீட்சை மற்றும் உணர்தல் பக்குவம் அடைவதற்கு அனுமதி வழங்கி, அடுத்த ஏழு வருடங்களுக்கு ஆழ்ந்த சிந்தனை மற்றும் ஆன்மீக நாட்டங்களின் மீது கவனம் செலுத்தினார். §§

நான் யோக சுவாமி வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றி, மேலும் விரிவாக்கம் பெறுவதற்கு அமெரிக்காவிற்கு திரும்பி வசிக்க ஆரம்பித்தேன். அவர் மகாசமாதி அடையும் வரை, அவர் என்னிடம் ஒவ்வொரு வருடமும் கந்தையா செட்டியார் மூலம் தொடர்பில் இருந்தார். நான் அமெரிக்கா திரும்பியதும், முதல் வேலையாக எனது புதிய சைவ இந்து பெயரை [சுப்பிரமுனியா] சட்டப்பூர்வமாக்கினேன். நீதிபதி சாமர்த்தியமாக செயல்பட்டு, எனது வேண்டுகோளுக்கு விரைவாக தீர்வு வழங்கினார். யோக சுவாமி எனக்கு தீட்சையை வழங்கியதும், காக்னிசண்டபிலிட்டி (புலனால் அறியும் திறன்) எனக்குள் விரிவாக்கம் பெற தொடங்கியது. §§

ஆழ்ந்த சிந்தனை மேற்கொண்ட இந்த வருடங்களில், வெளியுலக சம்பவங்கள் மிகவும் குறைவு. அதைப் பற்றி வேறு தகவல்கள் எதுவும் இல்லை. ஒக்லாண்டு திரும்பி, அவர் மீண்டும் மதர் கிறிஸ்டினியுடன் தொடர்பு கொண்டார். ஏப்ரல் மாதத்தில் இருந்து உறுதிமொழிகளின் முதல் தொகுப்பை இயற்ற ஆரம்பித்தார். அது பிற்காலத்தில் காக்னிசண்டபிலிட்டி என்ற தலைப்பில் வெளிவந்தது. §§

அவர் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்கு நாட்டிய உலகிற்கு திரும்பி, போஸ்டனில் அரங்கேறிய “டை ஃப்ளெடர்மாஸ்” என்ற இசை நாடகத்தை தயாரித்த, நியூ யார்க் நகரத்தின் மெட்ரோபொலிட்டன் ஓபராவுடன் ஈஸ்ட் கோஸ்ட் மற்றும் கனடாவிற்குள் பயணம் செய்தார். அவர் ‘மெட்டுடன்’ இருக்கும் போது, வானொலி மற்றும் தொலைக்காட்சியில் முதல் முறையாக தோன்றி, சிறிய பாத்திரங்களில் நடித்து, ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் மற்றும் அமெரிக்கன் கில்ட் ஆஃப் வரைட்டி ஆர்டிஸ்ட்ஸ்களில் அங்கத்தினராக இருந்தார். அவர் தான் பல மாதங்கள் தொடர்ந்து பயணத்தில் இருந்ததை, சிறிய பெட்டியுடன் ஒரு இடத்தில் தற்காலிகமாக தங்கியதை, கிராமப்புறம் வழியாக பல நாட்கள் நீண்டதூர பயணம் மெற்கொண்டதைப் பற்றி பேசிக்கொண்டு இருப்பார். அவர் கற்றுக்கொண்டு, பயிற்சி செய்துக்கொண்டு, நாடகங்களில் பங்கேற்று மாதம் $1,000 சம்பாதித்தார். அந்த குழு தென் அமெரிக்கா பயணம் செய்த போது, அதிலிருந்து விலகினார். §§

அதன் பிறகு வந்த வருடங்கள், பெரும்பாலும் தென்கிழக்கு நாடுகளான நியூ மெக்சிகோ மற்றும் அரிசோனாவில் கழிந்தன. இதை அவர் “சாதனா செய்து தனிமையில் இருந்த வருடங்கள்" என்று குறிப்பிட்டார். இந்திய மற்றும் மேற்கத்திய நடனங்கள், ஹட யோகம் மற்றும் இந்து அத்வைத தத்துவம் பற்றி கற்றுத்தந்து தனது தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டார்; ஆனால் ஆன்மீக வேலையே அவரது உண்மையான வேலையாக இருந்தது, மற்றும் அவருக்கு தனது தனிமை பிடித்து இருந்தது. §§

image§

சிலோனில் இருந்து திரும்பிய பிறகு, ஸ்ரீ சுப்பிரமுனியா இரண்டு வருடங்களுக்கு, தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய, நடனத்திற்கு திரும்பினார். அவர் நியூ யார்க் மெட்ரோபொலிட்டன் ஓபரா நிறுவனத்துடன் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு பயணம் செய்தாலும், அவரது இதயம் தனிமை மற்றும் சாதானாவில் அதிக ஆர்வத்துடன் இருந்தது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

1956, அவர் வடக்கில் இருந்த கொலராடோவின் சுத்தமான மலைகளுக்கு இடம் பெயர்ந்தார். அந்த இடம் இன்று சாதகர்கள் மற்றும் நவீன யுக யாசகர்களின் சரணாலயமாக விளங்குகிறது. இங்கே அவரது தியானங்கள் ஆழமாக இருந்தன. அவர் டென்வர் நகரத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருந்த போது, ஒரு மிகப்பெரிய ஆன்மீக அனுபவத்தை பெற்றார். அந்த அனுபவத்தின் போது, வெளிப்புற ஆன்மாவின் இறுதி உறை இருக்கும் இடத்தை, பக்குவமடைந்த ஆன்மா பிடித்துக்கொண்டது. அவர் இந்த சம்பவத்தை பிற்காலத்தில் “வெளிப்புற ஆன்மாவை இடம் பெயர்க்கும் ஸ்வர்ணசரீரத்தை முழுமையாக உணரும் நிலை" என்று குறிப்பிட்டார். அந்த சமயத்தில், தூல உடல் இருக்கும் இடத்தில் ஆன்மாவின் பொன்னுடல் முழுமையாக வாசம் செய்து, அதன் நிரந்தர வீடாக இருக்கும் ஆக்ஞா சக்கரம் நோக்கி பெற்ற நீளமான எழுச்சியையும், உடலுக்குள் தெய்வீக சக்தி இறங்குவதைவும் நிறைவு செய்கிறது. அவர் அதைப்பற்றி பின்னர் குறிப்பிட்டார்:§§

பொன்னுடலாக இருக்கும் ஸ்வர்ணசரீரம், பொன்னிற ஒளியால் உருவான ஒரு உடலாக விளங்குகிறது. பல பரசிவ அனுபவங்களுக்கு பிறகு, அது சஹஸ்ரஹார சக்கரத்திற்கு மேலிருக்கும் ஏழு சக்கரங்களில் இருந்து மெதுவாக ஆக்ஞா சக்கரத்திற்குள் இறங்குகிறது. அது ஆன்மாவின் புதிய மூலாதாரமாக மாறுகிறது. அதன் பிறகு அது விசுத்த சக்கரத்திற்குள் நுழைகிறது, மற்றும் அது அதன் மூலாதாரமாக மாறுகிறது. அதன் பிறகு அது அனாஹத சக்கரத்திற்குள் நுழைகிறது, மற்றும் அது அதன் மூலாதாரமாக மாறுகிறது. §§

மனோஉணர்வு பார்வையுள்ள சூட்சும ஞானிகளின் கண்களுக்கு, சூட்சும உடல் முழுவதும் ஒரு பொன்னிற உடலாக தெரியும் வரை, சஹஸ்ரஹாரத்திற்கு மேலிருக்கும் ஏழு சக்கரங்களும் மிகவும் மெதுவாக இறங்குகின்றன. சூட்சும உடல் மிகவும் மெதுவாக பொன்னிற உடலுக்குள் கரைகிறது. அவ்வாறு நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதைத்தான் நமது பரம்பரையும் சம்பிரதாயமும் அனுபவத்தின் மூலம் அறிந்துள்ளது. அனுபவம் மட்டுமே உண்மையான அறிதலாக விளங்குகிறது—அந்த ஒரு அனுபவத்தை புத்தகத்தில், அதே அறிதலை உடைய மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம், ஆனால் அதே அனுபவத்தை பெறாதவர்களுக்கு அந்த ஒரு அறிதல் புரியாமல் இருக்கிறது. அது அவர்களுக்கு ஒரு கோட்பாடாக, ஒரு நல்ல கோட்பாடாக இருந்தாலும், அது ஒரு கோட்பாடாக அல்லது எழுதப்பட்ட ஒரு கருத்தாக மட்டுமே இருக்கிறது. §§

சூட்சும உடல் மீது பொன்னிற உடல் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தி, தூல உடலுக்குள் நுழையும் போது, அறிந்த அறிதல் தடையில்லாமல் வெளி வருகிறது. அது காரணத்தை கடந்து இருந்தாலும், அதற்கு முரணாக இருப்பது இல்லை. அது ஒரு துடிப்புணர்வுள்ள சாஸ்திரமாக விளங்குகிறது. இதனை பார்த்து, சாஸ்திரமாக மாறிய பதிவுகளை எழுதிய பழங்கால தீர்க்கதரிசிகள் எழுதிய படைப்புகளுக்கு இந்த அறிதல் முரணாக இல்லை. தனது முடிவான உண்மையின் தனிப்பட்ட உணர்தலின் மூலம் அதை சந்தேகிப்பவர்களை, அதை அலட்சியம் செய்பவர்களை, அதை அவமதிப்பவர்களை, இழிவுப்படுத்துபவர்களை எதிர்க்கும் அளவிற்கு சனாதன தர்மம் மிகவும் தலைசிறந்ததாக இருக்கிறது. §§

image§

டென்வர் 1956, சுப்பிரமுனியா வாழ்க்கையை மாற்றும் ஒரு ஆன்மீக அனுபவத்தை பெற்றார். அந்த அனுபவத்தின் போது அவரது வெளிப்புற ஆன்மாவை பொன்னிற ஆனந்தமய கோசம் இடம்பெயர்த்தது. உடனே ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருந்த யோக சுவாமி, “ஹான்சென் இறந்துவிட்டான்,” என்று அறிவித்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இந்த பொன்னிற உடல், நிர்விகல்ப சமாதி அனுபவத்திற்கு பிறகு ஒரு பொன்னிற உடலாக உருவாகத் தொடங்கும் போது, அது சஹஸ்ரஹார சக்கரத்துடன் தொடர்பில் இருக்கிறது. அதாவது, தூல உடலில் சஹஸ்ரஹார சக்கரம் பொன்னிற உடலின் இருப்பிடமாக விளங்குகிறது. பொன்னிற உடல் வளர்ச்சி அடையும் போது, இந்த சக்கரத்திற்கு பன்னிரண்டு அடிப்படை விரிவாக்கங்கள் இருக்கின்றன. உணர்தலை பெற்ற சந்நியாசி ஆழ்ந்த சிந்தனையின் உயர்நிலைகளில் பயணம் செய்யும் போது, அவர் தனது பொன்னிற உடலில் சுதந்திரமாக பயணம் செய்கிறார், மற்றும் அவரால் மனிதநேயத்திற்கு உதவி செய்து சேவை செய்யமுடிகிறது. காலப்போக்கில், ஒரு விசைப்பகுதியைப் போன்று அவர் சஹஸ்ரஹார சக்கரத்தின் மீது ஒரு உணர்வுள்ள கட்டுப்பாட்டை பெறுகிறார், மற்றும் அது அவரை உட்புற ஆகாசத்திற்குள் இயக்கி செல்கிறது. §§

கடலுக்குள் ஊற்றப்படும் ஒரு குவளை தண்ணீரைப் போல, முக்திக்கு பிறகு, சிவலோகத்திற்குள் இந்த பொன்னிற உடல் தொடர்ந்து தன்னை சுத்திகரித்துக் கொண்டு, இறுதியாக சிவபெருமானுடன் ஐக்கியமாகிறது. அதே தண்ணீரை மீண்டும் தேடிப்பிடித்து, மீண்டும் குவளைக்குள் ஊற்ற முடியாது. இது உண்மையில் ஸ்வர்ணசரீர விஷ்வகிராசா என்கிற சிவபெருமானுடன் ஐக்கியமாதல் ஆகும். §§

இரண்டு மெய்ஞ்ஞான அனுபவங்கள் §

டென்வர் அனுபவத்திற்கு பிறகு, யாழ்ப்பாண மக்களிடம் சற்குரு யோக சுவாமி, “ஹான்சென் இறந்துவிட்டான்" என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். சில மாதங்கள் கழித்து, அவர் அமெரிக்காவில் இருந்து தனது பணி தொடங்கிவிட்டது என்று எழுதும் வரை, அந்த ஊர் மக்கள் அவர் உண்மையில் இறந்துவிட்டார் என்றே நினைத்தனர். அதன் பிறகு இறந்தது அவரது வெளிப்புற ஆன்மா என்பதை யாழ்ப்பாண தமிழர்கள் புரிந்துகொண்டார்கள். ஸ்ரீ சுப்பிரமுனியா உயிருடன் இருந்து, யோக சுவாமி யுகித்த பணியை நிறைவேற்றுவதில் மும்முரமாக இருந்தார். §§

image§

1950 களின் இறுதியில், சுப்பிரமுனியா மெய்ஞ்ஞான மனதின் யதார்த்தத்தை அனுபவித்தார்: அவர் ஆன்மீக சூத்திரங்களை எழுதிய டஜன் கணக்கான காகிதத் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, அதன் பின்புறத்தில் அவர் ஒரு விளக்கவுரையை எழுதினார். அது சூத்திரத்துடன் முழுமையாக பொருந்தியது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

சூத்திரங்கள் வெளிப்பட்டு ஏழு வருடங்கள் கழித்து, சராசரி கடல் மட்டத்தில் இருந்து ஒரு மைல் தூர உயரத்தில், ராக்கி மலைத்தொடரில் அமைந்து இருக்கும் டென்வர் நகரத்தில், இந்த [காக்னிசண்டபிலிட்டி] சூத்திரங்களுக்கு விளக்கவுரைகள் எழுதப்பட்டன. எனது வெளிப்புற மனம் மெய்ஞ்ஞான அறிதலை முழுமையாக ஏற்றுக்கொள்ள கற்றுக்கொண்டு இருந்தது, மற்றும் ஆழமான ஆன்மீக மனம் அறிந்ததை அறிந்தவராக தன்னை தீவிரமாக உருவாக்கிக்கொண்டு இருந்தது. §§

ஒரு நாள் விசித்திரமாக ஆன்மீக மனம் வெளிப்புற மனதிடம், ஒவ்வொரு சூத்திரத்தையும் இலக்கமிட்டு, தரையில் தலைகீழாக வைக்குமாறு கேட்டுக்கொண்டது. அவை தற்போது காக்னிசண்டபிலிட்டியின் பாகம் ஒன்று மற்றும் இரண்டாக இருக்கின்றன. நான் அதை சிரத்தையுடன் செய்தேன். அதன் பின் விளக்கவுரைகள் ஒன்றன் பின் ஒன்றாக, ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளியுடன் ஒரு சமயத்தில் மூன்று வார்த்தைகளாக வெளியிடப்பட்டன. உணர்வுள்ள மனம் எழுதுவதற்காக, ஒவ்வொரு வார்த்தையாக மெய்ஞ்ஞான மனம் சொல்லிக்கொண்டு இருக்கும். அது விசித்திரமாக ஏழாவது சூத்திரம், பதினான்காவது சூத்திரம் என்ற வரிசையில் தொடர்ந்து விளக்கவுரைகளை சொல்லிக்கொண்டு இருந்தது. எல்லாம் முடிந்த பிறகு, பின்பக்கத்தில் இலக்கமிட்டு தலைகீழாக வைக்கப்பட்டிருந்த சூத்திரங்களை திருப்பி, அந்த சூத்திரத்துடன் பின்புறம் இருந்த விளக்கவுரையின் பொருத்தத்தை சோதிக்கவேண்டும் என்று இயல்பான தூண்டுதல் கேட்டுக்கொண்டது. என்ன அதிசயம்! அவை அனைத்தும் நன்றாக பொருந்தின! எல்லாம் கடந்த அனுபவத்தின் பின்விளைவாக இருக்கும் ஞான மார்கத்தின் மீது அதிக அக்கறையுள்ள நம்பிக்கையை பெற தொடங்கியிருந்தேன். யோக மார்கத்தின் நிறைவேற்றமாக இருக்கும் அதை நாம் பரசிவ என்று அழைக்கிறோம். §§

வருடங்கள் செல்ல செல்ல, மனதின் உயர்நிலையில் இருந்து வெளிப்புறத்திற்கு, இந்த ஒத்திகை பார்க்காத ஞானத்தை வெளிக்கொண்டு வரும் செயல்முறை, எனது தினசரி வாழ்க்கையின் அங்கமாகியது. நான் அதை “அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் கருவிகளில் ஒன்று" என்று குறிப்பிடுவேன். இந்த மனோஉணர்வு சக்திகள் வளர்ச்சி அடைவதற்கு பல வருடங்கள் ஆகும். ஆனால் சரியான தருணங்களில், முந்தைய பிறவியில் இருந்து கொண்டு வந்த சக்திகள் உடனடியாக தோன்றுகிறது மற்றும் அவை பேசும், கேட்கும் மற்றும் உணரும் திறனை போல எளிதில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது. §§

சமய அமைப்புக்களை பற்றிய ஆய்வு ஸ்ரீ சுப்பிரமுனியாவின் தீவிர ஆர்வங்களில் ஒன்றாக விளங்கியது. மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் நவீன தொழில்நுட்ப யுகத்தில், சைவ இந்து சமயத்திற்கு மிகவும் நிலையான மற்றும் எதிர்பார்த்த பலனை தரத்தக்க வாகனத்தை கண்டுபிடிக்க, அந்த ஆய்வை மேற்கொண்டார். அவருக்கு இறுதியில் அமெரிக்க தேவாலய அமைப்பு பொருத்தமானதாக தோன்றியது. §§

image§

ஒரு நாள் சுப்பிரமுனியா பீனிக்ஸ் நகரத்தில் பயணம் செய்த போது, அவரது ஆன்மீக குரல் அவரிடம் பேசியது. அந்த குரல் அவரிடம், பரந்து விரிந்த புறநகர் பகுதியில் திருப்பங்கள் நிறைந்த ஒரு சிக்கலான பாதை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தியது. அவர் அதை அக்கறையுடன் பின்பற்றினார். அது இரண்டு மணி நேரங்கள் கழித்து, பயணத்தை தொடங்கிய இடத்திற்கே அழைத்து வந்தது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

“உனக்கு முப்பது வயதாகும் வரை, நீ எதையும் தொடங்க வேண்டாம். நீ அதிகம் பக்குவமடைய வேண்டும்,” என்று யோக சுவாமி என்னிடம் கூறினார். அது வரை நான் கண்காணித்து, அனுபவங்களை பெற்று கற்றுக்கொள்ள வேண்டும். அதனால், நான் எனது முப்பதாவது வயது வரை பொறுமையாக காத்து இருந்தேன். இறுதியாக நான் ஒரு அமைப்பை தொடங்கி நடத்தவேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு, நான் அரிசோனா மாகாணத்தில் இருந்த பீனிக்ஸ் நகரத்திற்கு சென்றேன். அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை நான் தெரிந்துக்கொள்ள விரும்பினேன்! அதனால் நான் வேதாந்த சொசைட்டி, தி ரோசிக்ரூசியன் ஆர்டர், பரமஹம்ச யோகானந்தா அமைப்பு என்று மற்ற நிறுவனங்களை சுற்றிப்பர்த்து, அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை ஆய்வு செய்தேன். உங்களுக்கு பிரச்சனைகள் இல்லையென்றால், தானாக வெற்றி கிடைத்து விடும் என்பதால், நாம் வெற்றிகளை ஆய்வு செய்யவேண்டிய அவசியம் இல்லை. நான் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் மற்றும் அவர்களின் தவறுகள் மற்றும் தோல்விகள் அனைத்தையும் ஆய்வு செய்தேன். §§

எனது 23 ஆவது வயது முதல் 30 ஆவது வயது வரை, அமெரிக்கா முழுவதும் நான் மேற்கொண்ட பயணத்தின் போது பல்வேறு கிளைகள், தத்துவங்கள் மற்றும் மக்களுக்கு உதவி செய்வதற்காக தத்துவ மற்றும் மீமெய்யியல் சிந்தனைகளில் வழங்கப்பட்ட உத்திகளை கவனித்த போது, ஒருவர் தனது வாழ்க்கையில் ஆன்மீக விரிவாக்கம் பெறுவதற்காக அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவான அறிவுறுத்தல்கள் இல்லாமல், தத்துவம் மற்றும் மீமெய்யியல் சார்ந்த தகவல்களே அதிகமாக இருப்பதை கவனித்தேன். அந்த தேவையை பூர்த்தி செய்யும் ஆசை எனக்குள் அதிகமாக வளர்ந்துக்கொண்டே சென்றது. மேற்கத்திய நாட்டவர்கள் கற்பதற்கு ஒரு விரிவான, படிப்படியான, நல்ல மேற்பார்வையுள்ள செய்முறை தேவை என்பதை நான் உணர்ந்தேன். அந்த செய்முறை அவர்களுக்கு அப்போது கிடைக்கவில்லை. மீமெய்யியலில் படிப்படியாக பயிற்சி அளித்தவர்கள், இறைவனையும் மனிதனையும் தனியாக பிரித்து, பிரித்ததை மீண்டும் ஒன்று சேர்க்கும் உத்திகளில் பயிற்சி அளித்தனர். இந்த தத்துவ பிரிவு, மனிதனின் உட்புற பாதுகாப்பை வெளிக்கொண்டு வராமல், நிலையற்ற பதட்டத்தை ஏற்படுத்தியது. நல்ல ஆசிரியர்கள் கிழக்கில் இருந்து வந்து கற்றுத்தந்தாலும், அவர்கள் ஒரு தனிப்பட்ட முறையில் அல்லது ஒரு அமைப்பாக ஒருவரின் விரிவாக்கத்தை நீடித்த, நேர்மறையான, நேரடியான கண்காணிப்பை வழங்க நீண்டகாலம் நிலைத்து இருக்கவில்லை. §§

இறுதியாக, கற்பிக்கும் பணியை தொடங்குவதற்கு உரிய நேரம் வந்தது, மற்றும் நான் பீனிக்ஸ் நகரத்தில் ஒரு அமைப்பை தொடங்கலாம் என்று நினைத்தேன். அதனால் நான் அமைப்புக்களின் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று, “நான் ஒரு அமைப்பை தொடங்க இருக்கிறேன். அதற்கு என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டேன். “நீங்கள் சின்னம் தயாரிப்பவரிடம் சென்று, உங்கள் சங்கத்திற்கு அறிகுறியாக ஒரு சின்னத்தை தயார் செய்துகொள்ள வேண்டும்,” என்று அங்கிருந்த பணியாளர் தெரிவித்தார். “நான் ஏதாவது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமா?” என்று கேட்டேன். அவர் அதற்கு, “இந்த மாகாணம் ஆன்மீக நடவடிக்கைகளை வரவேற்கிறது. நீங்கள் ஒரு சின்னத்தை தயார் செய்தால் போதும்,” என்று அவர் பதில் அளித்தார். §§

நான் பொறுமையாக முடிவு செய்துக்கொண்டு, எனது சிறிய வாகனத்தில் பயணம் செய்த சமயத்தில், இன்னொரு அனுபவத்தை பெற்றேன். எனது உட்புற ஆன்மா வெளிப்புற ஆன்மாவிடம், “அந்த அறிகுறியை பார்,” என்றது. நீங்கள் ஃபீனிக்ஸ் நகரத்திற்கு சென்று இருந்தால், அந்த நகரம் முழுவதும் ஒரு சமவெளி என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். நான் அங்கே கட்டிடங்கள் மற்றும் வீடுகள் நிரம்பி இருந்த ஒரு மிகப்பெரிய சமவெளி வழியாக, வாகனத்தில் பயணம் செய்துக்கொண்டு இருந்தேன். “அந்த அறிகுறியை பார். அந்த அறிகுறி சின்னத்தை நினைவில் வைத்துக்கொள்.” அது ஸ்பிருஸ் ஸ்ட்ரீட். நான் அந்த சின்னத்தை நினைவில் வைத்துக்கொண்டேன். அதன் பிறகு நான், “சரி, நான் எனது உட்புற ஆன்மா சொல்வதை மட்டும் செய்யப்போகிறேன்.” உட்புற ஆன்மா, “இருபது வீடுகள் முன்னே சென்று, இடது புறம் திரும்பி பத்து வீடுகள் முன்னே சென்று, வலது புறம் திரும்பி ஐந்து வீடுகள் முன்னே சென்று, இடது புறம் திரும்பி, இரண்டு வீடுகள் முன்னே சென்று, எதிர் திசையில் திரும்பி பத்து வீடு செல்லவும்,” என்று தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு சொல்லிக்கொண்டு இருந்தது, நானும் அது சொல்லும் திசையில் வாகனத்தை இயக்கிக்கொண்டு இருந்தேன். அதன் பிறகு அது, “வாகனத்தை நிறுத்தி, அறிகுறி சின்னத்தைப் பார்!” என்றது. ஸ்பிருஸ் ஸ்ட்ரீட்! நான் என் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்து இருந்தேன்.§§

அதன் பிறகு நான் சான் பிரான்சிஸ்கோ சென்று, அங்கே ஒரு அமைப்பை உருவாக்கினேன். நான் அங்கே சிறிய உரையை நிகழ்த்தினேன், மற்றும் அங்கிருந்த சிலர் நான் நிகழ்த்திய உரையில் உண்மையில் ஆர்வத்துடன் இருந்தார்கள். கலிபோர்னியாவில் ஆவணங்களை சமர்ப்பித்தல், வரிவிலக்கு மற்றும் மேலும் பல விஷயங்கள் இருந்ததால், “நான் இந்த அமைப்பை எவ்வாறு திறம்பட இயக்குவது? எனக்கு ஒரு வழக்கறிஞர் இருந்தால் சரியாக இருக்கும்,” என்று சிந்தித்தேன். அப்படியென்றால் நான் வழக்கறிஞருக்கு எங்கே செல்வது? “எனக்கு தெரியும்" என்று எனக்கு நானே உறுதி அளித்துக்கொண்டு, FBI கூட்டு புலனாய்வுக் குழுமத்தை நாடி சென்றேன். அந்த குழுமத்திற்குள் சென்று, “நான் இந்த அமைப்பை இயக்கி வருகிறேன். நீங்கள் என்னை ஒரு வழக்கறிஞருக்கு அறிமுகப்படுத்த முடியுமா?” என்று கேட்டேன். அவர் அறிமுகப்படுத்திய நபர், பல ஆண்டுகள் எங்களுக்கு வழக்கறிஞராக இருந்தார். எனக்கு FBI எப்போதும் தொல்லை தரமாட்டார்கள் என்று அவர் சொல்லி, அந்த குழுமத்திற்கு தேவையான ஆவணத்தை தயார் செய்ய எனக்கு உதவி செய்தார்.§§

எனக்கு முப்பது வயது நிரம்பியதும், என்னை நாடி மாணவர்கள் வருவார்கள் என்று என்னிடம் கூறப்பட்டது, அதனால் நான் காத்து இருந்தேன். அவ்வாறே நிகழ்ந்தது. இவ்வாறு இமாலயன் அகாடமி 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. §§

சான் பிரான்சிஸ்கோவில் குடிபுகுதல் §

பீனிக்ஸ் நகரத்தை விட்டு கிளம்பிய பிறகு, ஸ்ரீ சுப்பிரமுனியா சிறிது காலத்திற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் மாணவர்களுக்கு யோகப்பயிற்சியை கற்றுத்தந்தார். ஆனால் விரைவில் அவர் சான் பிரான்சிஸ்கோவிற்கு நகர்ந்தார். அவர் சான் பிரான்சிஸ்கோவின் மையப்பகுதியில் ஸ்மால் புஷ் ஸ்ட்ரீட் குடியிருப்பில் முதல் செய்முறை யோக வகுப்பை நடத்தினார். இரைச்சலான தெருவில் இருந்த தொடர்ச்சியான கூச்சலில் இருந்து விலகி சில மாடிகள் மேலே, சில ஆர்வமுள்ள மாணவர்களை கொண்ட முதல் குழு, தங்களை பற்றிய ஆய்வை தொடங்கி, சாட்சியின் புதிய உலகை விழிப்படைய செய்தார்கள். §§

அவர் பெண்கள் அதிகமாக இருந்த, ஒரு முதியவர்களின் குழுவிற்கு, நகரத்தில் இருந்த ஒரு சிறிய ஆன்மீக தேவாலயத்தில் உரை வழங்கினார். அந்த காலத்தில், யோகம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் மிகவும் குறைவு, மற்றும் அதைப்பற்றி பலர் அறிந்திருக்கவில்லை. அந்த சமயத்தில் மக்கள் தியாசோபி மீது அதிக ஆர்வத்துடன் இருந்தார்கள், மற்றும் கிறிஸ்டியன் சயன்ஸின் சுகமளிக்கும் பணி மீது மக்களின் ஆர்வம் அதிகரித்துக் கொண்டிருந்தது. §§

அவரது பிறந்த நாளான ஜனவரி 5, 1957 அன்று, அவர் தங்களுக்கு எப்போதிலிருந்து கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கிறார் என்று ஆர்வத்துடன் கேட்டனர். “இப்பொழுதே ஆரம்பிக்கலாம்!” என்று அவர் பதில் அளித்தார். அவர் அவர்களுக்கு சில மாதங்கள பயிற்சி அளித்து, அவர்கள் எவ்வாறு பயிற்சி செய்கிறார்கள் என்று கவனிக்கப்போவதாக விளக்கம் அளித்தார். எல்லாம் திட்டப்படி நடந்து, அவர்கள் நன்றாக பயிற்சி செய்து பயன்பெற்றார்கள் என்றால், தான் தனது பணியை தொடரப்போவதாக அவர் கூறினார். §§

அந்த முதல் மாணவ குழுவினரின் சராசரி வயது ஐம்பதாக இருந்தது. அவர்கள் பெரும்பாலும் மனோஉணர்வு சக்திகள் அல்லது ஆன்மீகத்தில் நாட்டத்துடன் இருந்தார்கள். அதில் சிலர் உருவமற்ற சக்திகளின் வழிகாட்டலை பெற்று இருந்தார்கள். அவர்கள் இறந்தவர்களை தொடர்பு கொள்வது மற்றும் அதைப்போன்ற மற்ற நிகழ்வுகளில் ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் மனதை குணப்படுத்துதல், சைக்கோமெட்ரி, இரசவாதம் மற்றும் ஒளி உடல்களை கவனிப்பது பற்றி தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருந்தார்கள். தனது வாழ்நாள் முழுவதும் கற்று அனுபவித்த இந்த பகுதிகள், அவரது பல உரைகளின் தலைப்புக்களாக விளங்கின. அவர் காக்னிசண்டபிலிட்டி சூத்திரங்களைப் பற்றியும் பேசி, ஒருமுகச்சிந்தனை மற்றும் தியானம், நிற உளவியல், சுவாசித்தல் மற்றும் மனதின் ஐந்து நிலைகளின் அடிப்படைகளை கற்றுத் தந்து, ஹட யோகம் மற்றும் நடனத்தைப் பற்றி அறிவுறுத்தல்களை வழங்கினார். அவர் எப்போதும் ஆத்ம ஞானத்திற்கும், மனிதன் தனது சொந்த மெய்ஞ்ஞான மனநிலையை விழிக்கவைக்கும் சாத்தியகூறுகளுக்கும் முக்கியத்துவம் அளித்தார். அந்த நாட்களில், மெய்ஞ்ஞானம் என்ற சொல்லை யாரும் அறிந்திருக்கவில்லை. §§

ஏப்ரல் மாதத்தில், ஸ்ரீ சுப்பிரமுனியா ஒரு நிரந்தர மையத்திற்கு தனது ஆசிகளை வழங்கினார். அந்த மாதம் சட்டர் ஸ்ட்ரீட்டில் இருந்த கோயில் திறக்கப்பட்டது. அதில் சிலோனின் விவசாயத்துறை அமைச்சர் ஸ்ரீ ஆறுமுகம், கௌரவ விருந்தினராக கலந்துகொண்டார். §§

image§

சுப்பிரமுனியா தனது ஆன்மீக பணியை தொடங்குவதற்கு முன்பாக ஏழு வருடங்கள் சாதனா மேற்கொண்ட போது, அவர் ஹட யோகம் மற்றும் நடனத்தின் மூலம் சம்பாதித்துக் கொண்டிருந்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

நான் ஒரு குருவாக மாணவர்களின் தேவைகளுக்கு பதில் அளிக்கும் போது, “சும்மா இருப்பதே, இந்த பூமியில் தலைசிறந்த செயலாகும்" என்று எல்லா குருமார்களும் உபதேசித்த அடிப்படை தத்துவத்துடன் தொடங்கினேன். அப்போது விரிவாக்கம் பெற்றுக்கொண்டு இருந்தவர்களின் சமய சக்திகளை கட்டுப்படுத்தி நல்ல முறையில் பயன்படுத்துவதற்காக, நான் ஒரு கோயிலை ஸ்தாபனம் செய்தேன். மாணவர்கள் உற்சாகமடைந்து, கோயிலுக்கு தங்கள் ஆதரவை வழங்கினர். அதன் பின்னர் அவர்கள், கோயிலுக்கு வரமுடியாதவர்கள் வசதிக்காக, நான் வழங்கிய ஊக்கமளிக்கும் உரைகள் மற்றும் போதனைகளை அடக்கிய வாராந்திர பாடங்களின் வகுப்பைப் போன்று எழுத்து பிரதிகளை கேட்டார்கள். நான் துறவற வாழ்க்கையை வாழ விரும்பியோரின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஒரு துறவற சமூகத்தையும் தொடங்கினேன். அந்த துறவிகள் பதிப்பிட்ட பாடங்கள், இன்று தி மாஸ்டர் கோர்ஸ் (பிரதான வகுப்பு) வடிவில் உள்ளது. §§

முக்கியமான இந்த வருடங்களின் போது, மதர் கிறிஸ்டினியின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவர் ஒரு வலுவான மூதாய் சக்தியாக இருந்துக்கொண்டு, போதனைகளை கிறுத்துவ ஆன்மீக பின்னணிக்கு திருப்பிக்கொண்டு இருந்தார். அவரிடம் நீண்டநாள் மாணவனாக, 47 வருடங்கள் இளையவராக இருந்த ஸ்ரீ சுப்பிரமுனியா, அவருக்கு இந்த விஷயத்தில் ஆதரவு அளித்தார். மதர் கிறிஸ்டினிக்கு ஸ்ரீ சுப்பிரமுனியா ஆன்மீக தலைவரின் உதாரணமாக மாறினார் மற்றும் மதகுரு, ஆலோசகர், போதகர், பாவமன்னிப்பு கேட்கும் பாதிரியாராக இருந்த அவரது வளர்ப்புமுறையை தனக்கு இலட்சியமாக்கிக் கொண்டார். கிறிஸ்டினி தான் உருவாக்கிய அமைப்பிற்கு கிறிஸ்டியன் யோகா சர்ச் என்று பெயரிட்ட போது, அவர் அதன் காரணத்தை புரிந்துகொண்டார். §§

அச்சகத்தின் இயல்பான சக்தியை அறிந்து, புத்தம்புதிய உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் மீது வாழ்நாள் முழுவதும் ஆசை இருந்ததால், அவர் ஒரு மிமியோகிராஃப் இயந்திரத்தை வாங்கினார். அவர் அதனை நிகழ்ச்சி நிரல்கள், உரைகள் மற்றும் நிகழ்ச்சிகள் மற்றும் அந்த தேவாலயத்தின் முதல் வெளியீடுகளாகவும் தனது முதல் பதிப்புக்களாகவும் இராஜ யோக மற்றும் ஜெம்ஸ் ஆஃப் விஸ்டம் என்ற தனது புத்தகங்களை அச்சிடவும் பயன்படுத்திக் கொண்டார். அந்த இயந்திரத்தை பயன்படுத்துவது பற்றி ஸ்ரீ சுப்பிரமுனியா தானும் கற்றுக்கொண்டு தனது சமூகத்தில் இருந்த துறவிகளுக்கும் கற்றுக்கொடுத்தார். §§

மிமியோகிராஃப் எனும் ஆபீஸ் பிரின்டிங் டெக்னாலஜி ஃபோட்டோகாபியர்சுக்கு முன்பாக வந்திருந்தது. ஸ்டேன்ஸில் மூலம் காகிதத்தில் நகல்செய்யும் இந்த கருவி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டு, 1980 களில் பயன்படுத்தப்பட்டது. அவர் பிற்காலத்தில், இந்த துர்நாற்றம் வீசும் அசுத்தமான தொழில்நுட்பத்தின் நீளம்-ஊதா நிறங்கள் கலந்த சாயங்களினால் கரை படிந்த கைகளுடன், நள்ளிரவு நேரத்தில் தனது மடவாசிகளிடம் அதிக எண்ணிக்கையில் சிறிய கட்டுரைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை அச்சிட சொல்வார். அது வாழ்நாள் முழுவதும் அவர் மேற்கொண்ட அச்சிடும் பணியின் தொடக்கமாக விளங்கி, அவர் பணியில் முக்கிய அங்கமும் வகித்தது. §§

இரண்டு வருடங்கள் கழித்து, தொடர்ந்து வளர்ந்துக்கொண்டு இருந்த குழுவிற்கு சட்டர் ஸ்ட்ரீட் கட்டிடம் சிறியதாக இருந்ததால், அவர்கள் தங்கள் தேவாலயத்திற்கு நகரத்தில் ஒரு பெரிய இடத்தை தேடினார்கள்.§§

image§

சிறந்த முறையில் தகவல் தெரிவிக்கும் திறனுடன் இருந்த ஸ்ரீ சுப்பிரமுனியா, தொடர்ந்து பதிவு செய்து, உரைகளை வழங்கி அச்சிட்டுக்கொண்டு இருந்தார். ஆரம்பக்காலத்தில் ஒரு சிக்கலான அச்சிடும் தொழில்நுட்பமாக இருந்த மிமியோகிராஃப் இயந்திரத்தை தானே இயக்கினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அப்போது ஒரு அனாமதேய நபர், சிறிய காணிக்கை பெட்டியில் ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பொட்டுவிட்டு சென்றார். அந்நாளில் அது பெரிய தொகையாக இருந்தது. நான் வாடகைக்கு தங்கியிருந்த ஒரு சிறிய இடத்தில், என் தலை மீது சிவபெருமான் நடனமாடும் காட்சியை கண்டேன். எனக்கு உடுக்கை ஒலியுடன் மற்ற சத்தங்களும் கேட்டன. மேலும் அதே காட்சியில் நான் ஒரு பெரிய கதவையும் கண்டேன். நான் அதே கதவை சாக்ரமென்டோ ஸ்ட்ரீட் கோயிலில் பார்த்த போது, அந்த இடம் தான் எனக்கு காட்சியில் தோன்றியது என்பதை தெரிந்துகொண்டேன். அது பிற்காலத்தில் அமெரிக்காவின் முதல் இந்து கோயிலாக மாறியது. §§

3575 சாக்ரமென்டோ ஸ்ட்ரீட்டில் ஒரு கட்டிடம் வாங்குவதற்கு, அவர் அந்த $1,000 நன்கொடையை முன்பணமாக செலுத்தினார். அது ஒரு குறுகலான, இரண்டு குடியிருப்பாக, பின்புறத்தில் ஒரு சிறிய தோட்டத்துடன் இருந்தது. அது பார்க் பிரஸிடியோவிற்கு அருகில் அமைந்து இருந்தது. அருகில் இருந்த குடியிருப்பு லாரெல் ஹைட்ஸ் என்று அழைக்கப்பட்டது. அங்கே குடியிருப்புக்கள், சிறிய வியாபாரங்கள், பூக்கடைகள், உணவகங்கள் மற்றும் சிறிய கடைகள் அமைந்து இருந்தன. அது ஒளிப்பட நிலையமாக பயன்படுத்தப்பட்டு, சீர்குலைந்த நிலையில் இருந்தது. தீயணைப்பு துறையின் நெறிமுறைகளை பின்பற்ற, அந்த கட்டிடத்தை முழுமையாக புதுப்பிக்க வேண்டியிருந்தது. அவரது மாணவர்கள் அந்த கட்டிடத்தில் அடுத்த ஒன்று-இரண்டு வருடங்களுக்கு, தினமும் தங்கள் வேலையில் இருந்து திரும்பி, பல மணி நேரங்களுக்கு கர்ம யோகப்பயிற்சி மேற்கொண்டு வந்தனர். முடிவில், அவர்கள் அமெரிக்காவில் பொதுமக்களுக்கு முதல் இந்து கோயிலை கட்டவிருந்தனர். 1959 ஆம் ஆண்டு அதன் திறப்பு விழாவின் போது, அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு இருந்த, சிலோனின் உலகப்புகழ் பெற்ற கண்டி நடனக்குழுவின் நிகழ்ச்சியை நடத்தப்பட்டது. §§

முக்கிய மண்டபத்தில் ஒரு பீடம் அமைக்கப்பட்டது, மற்றும் தோரணவாயில் வடிவில் இரண்டு மாபெரும் கதவுகள் தயாரிக்கப்பட்டன. ஒருவர் மாபெரும் கதவுகள் வழியாக நுழைந்து, இரண்டு ஊதா நிற திரைகளை கடந்ததும் மரத்தில் செய்த இருக்கைகள், கல்லில் செதுக்கிய ஒரு பீடம் மற்றும் நீர்வீழ்ச்சி மற்றும் ஒரே கல்லில் செய்த பிரசங்க மேடையுடன் முழுமையாக இருந்த ஒரு சிறிய பிரதான தேவாலயத்திற்குள் செல்கிறார். அவர் இந்த பிரசங்க மேடையில் இருந்து, ஃபாதர் சுப்பிரமுனியா என்று அழைக்கப்பட்டு, யோகம் மற்றும் மனநிலைகள் மற்றும் இந்து சிந்தனை பற்றி மத போதனைகளை வழங்கினார். எப்படி சிறப்பாக வாழ்வது, ஆன்மீக ஒளியை எப்படி விழிக்க வைப்பது, உள்ளுணர்வுகள் மற்றும் பழக்கங்களை எப்படி வெற்றிக்கொள்வது மற்றும் ஆன்மீகத்தைப் பற்றி அவர் பேசினார். §§

சேவைகள் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டு இருந்தாலும், மேல்மாடி ஃபாதர் சுப்பிரமுனியா வசிப்பதற்கும், தேவாலய அலுவல்களுக்கும் ஒதுக்கப்பட்டு இருந்தது. தோட்டத்துடன் முதல் தளத்தில் இருந்த அறைகள் அன்பர்களுக்கு தனிப்பட்ட ஆலோசனை, ஒரு சமையலறை, பதிவு செய்யும் அமர்வுகள் மற்றும் குழு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. §§

இந்த சபை புதிய வீட்டில் குடிபுகுந்ததும், ஸ்ரீ சுப்பிரமுனியா முதல் புனித மதச்சடங்கு மற்றும் தீட்சைகளை வழங்கினார். அவர் முதல் யோக சமூகத்தை தொடங்கி, இந்த சபைக்கு சேவை செய்ய முதல் துறவிகளின் குழுவிற்கு தீட்சை வழங்கினார். எதிர்காலத்தில் இந்த பணியின் நடவடிக்கைகளில் ஒரு நிலையான ஒழுங்கை நிறுவினால், அது எல்லோருக்குள்ளும் நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அந்த விதியை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். §§

image§

சான் பிரான்சிஸ்கோவில் கோல்டன் கேட் பிரிட்ஜுக்கு அருகில், அமெரிக்காவின் முதல் இந்து கோயிலை ஸ்ரீ சுப்பிரமுனியா நிறுவினார். இங்கே அவர் பரமாத்துமாவை நோக்கி அழைத்து செல்லும் அத்வைத பாதையை கற்றுத்தந்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ஸ்ரீ சுப்பிரமுனியா தானே முன் உதாரணமாக இருக்கவேண்டும் என்பதற்காக, இலையுதிர் காலத்தில், மரின் கவுண்டியில் இருந்து வட சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியை நன்றாக பார்வையிட உதவும், 2,500 அடி உயர தமல்பைஸ் மலை உச்சியில் முதல் சூரியோதய சேவையை தொடங்கினார். தனது அமைப்பு நன்றாக செயல்படத் தொடங்கி, அதை ஸ்தாபனம் செய்து பன்னிரண்டு வருடங்கள் நிறைவடையும் வரை, இந்த மாதாந்திர யாத்திரையை தொடரவேண்டும் என்று அவர் உறுதி எடுத்துக்கொண்டார். §§

ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும், மற்ற மங்களகரமான நிகழ்வுகளின் போதும், விடியற்காலையில் ஆசிகளை பெறுவதற்கு மற்றும் 108 மெழுகுவர்த்திகளை ஏற்றுவதற்கு, அவரது சீடர்கள் அந்த கோயிலில் கூடினார்கள். கோல்டன் கேட் பிரிட்ஜை கடந்து, மலையில் சிறிது தூரம் கூட்டாக வாகனங்களில் சென்று, மலை உச்சியில் சூரியோத பிரசங்கம் மற்றும் தியானத்தை செய்வதற்கு, ஸ்ரீ சுப்பிரமுனியா நாற்பது நிமிட நடைப்பயணத்தை வழிநடத்தி சென்றார். அவர் வெளிநாடு செல்லாத சமயத்தில், மழை பெய்தாலும் வெயில் அதிகமாக இருந்தாலும், இந்த மாதாந்திர தீர்த்த யாத்திரையை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். அவர் இவ்வாறு 154 யாத்திரைகளை மேற்கொண்டார். §§

நாங்கள் அங்கே ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் ஒரு யாத்திரை மேற்கொண்டோம். அந்த மலையில் இருந்த ஒரு பெரிய பாறையை, நாங்கள் சிவலிங்கமாக பாவனை செய்தோம். அது எங்களது வழக்கமாக இருந்தது. நான் சிறு வயது முதலே பாலே நடன பயிற்சியின் மூலம் ஒழுங்குமுறையுடன் வாழ்ந்ததால், ஒரு ஒழுங்குமுறையுடன் இயங்குவது எனக்கு சுலபமாக இருந்தது. நான் அந்த அமைப்பை நல்ல முறையில் நடத்தி வந்தேன். ஏதாவது ஒன்று எப்போதும் நடந்துகொண்டு இருந்தது, மற்றும் நான் அதை தொடர்ந்து கொண்டு இருந்தேன். §§

வாரத்தின் முக்கிய நாளாக இருந்த ஞாயிறு காலையில், அரை டஜன் துறவிகள் கோயிலை சுத்தம் செய்து காலை 11 மணி சேவைக்கு தயார் செய்துக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் அலமாரிகளில் நிரப்பி வைத்த புத்தகங்கள், நறுமண பொருட்கள் மற்றும் மெழுகுவர்த்திகளை, அந்த சபையின் உறுப்பினர்கள் விரும்பி வீட்டிற்கு வாங்கி செல்வார்கள். அந்த கோயில் சுமார் 50 பக்தர்கள் கூடும் அளவிற்கு போதுமான இடவசதியுடன் இருந்தது. அந்த கோயிலின் நடைக்கூடங்களில் மக்கள் நின்றுக்கொண்டும் உட்கார்ந்துகொண்டும், அது பெரும்பாலும் நிரம்பி இருந்தது. ஞாயிற்றுகிழமை சேவை இரவு 8 மணிக்கு நடைபெற்றது. ஃபாதரின் வழிகாட்டலுடன் துறவிகள் எழுதிய ஆன்மீக பாடல்கள் பாடப்பட்டன.§§

அவர் பீடத்திற்கு பின்னால் இருந்த கதவு வழியாக அறையில் நுழைவார். அந்த சிறிய அறையை அவரது உயரமான உருவமும் நல்ல குரல் வளமும் ஆதிக்கம் செலுத்தியது. அவர் எப்போதும் குறிப்பை எழுதிக்கொண்டு பேசியது இல்லை. அது சுத்தமாக இயல்பாக இருந்தது, மற்றும் அதை “உட்புற ஆகாசத்தில் இருந்து வருவதாக" குறிப்பிடுவார். எல்லோரும் பார்ப்பதற்கு கோயிலுக்கு வெளியே சுவரொட்டியில் ஒரு தலைப்பு சிரத்தையுடன் எழுதப்பட்டு இருக்கும், ஆனால் அன்று அவர் வழங்கவிருந்த பிரசங்கம் பற்றிய ஒரு சிறு தடயமாகவே இருக்கும். §§

ஒரு முறை அவர் பிரசங்கத்தின் தலைப்பாக “இயேசு கிறுத்து ஒரு யோகியா?” என்று எழுதியிருந்தார். இதற்கு பதிலை அறிய விரும்பி, வழக்கத்தை விட அதிகமான மக்கள் கூட்டம் கூடியது. அவர் அன்றைய பிரசங்கத்தை, “நமது இன்றைய தலைப்பு ‘இயேசு கிறுத்து ஒரு யோகியா?’ ஆமாம், அவர் யோகி தான்,” என்று தொடங்கி, “இனி ஆன்மீக ஒளிக்குள் உங்களை கொண்டு வரும் யோகத்தைப் பற்றி நான் சொல்ல இருக்கிறேன்,” என்று உரையை தொடர்வார். அதில் கிறுத்துவை பற்றி ஒரு வார்த்தையும் இருக்காது. §§

அவர் வழங்கிய போதனைகளை, கூடியிருந்த பெரும்பாலான கிறுத்துவ சமூகத்தினர் நன்றாக புரிந்துகொள்வதற்கு, அவர்களது பேச்சுமொழியின் தடைகளை கடந்து செல்லவேண்டி இருந்தது. பிரசங்கத்தை கேட்க வந்த பெரும்பாலானோர், தங்களை கிறுத்துவ யோகிகள் என்றே குறிப்பிட்டுக் கொண்டனர். அந்த காலத்தில் அமெரிக்கா ஒரு முழுமையான கிறுத்துவ நாடாக இருந்தது. அப்போது அந்த நாட்டில், இந்து சமயம் பிரபலமாக இல்லை மற்றும் அதைப்பற்றிய புரிதலும் குறைவாகவே இருந்தது. அதனால், தொடக்கத்தில் வந்த மாணவர்கள் மற்றும் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் வலுவான கிறுத்துவ பின்னணியுடன் இருந்தார்கள். அந்த ஆன்மீக கிறுத்துவர்களின் பிரிவு, எனது-பாதை-தான்-ஒரே-பாதை என்ற தத்துவத்தை பின்பற்றாமல், முழுமையாக சகிப்புத்தன்மையுடன் இருந்த ஒரு மிகப்பெரிய ஆன்மீக உண்மைப்பொருளை நம்பி இருந்தார்கள். அவர்கள் இந்த பண்புகளை சான் பிரான்சிஸ்கோ கோயிலில் கண்டு கொண்டார்கள். அவர்கள் இந்து சமயத்தைப் பற்றி மிகவும் எளிதாக கற்றுக்கொண்டார்கள். §§

குழப்பத்தையும் எதிர்ப்பையும் தவிர்த்து, தனது மேற்கத்திய சீடர்கள் இந்து சமயத்திற்கு மெதுவாக பயனுள்ள வகையில் மாறுவதற்காக, ஸ்ரீ சுப்பிரமுனியா தனது போதனைகளை எளிமையாகவும் தெளிவாகவும் வழங்கினார். §§

சபையின் அங்கத்தினர்களுக்கு கவனமாக கற்பிப்பதன் மூலமாகவே வளர்ச்சி அடையமுடியும் என்பதால், ஆரம்பத்தில் சில வருடங்களுக்கு தொடர்ந்து வகுப்புக்கள், சொற்பொழிவுகள் மற்றும் ஆலோசனைகள் நடந்தன. “கற்பவர்களின் தேவைகளுக்கு ஏற்ப கற்பிக்கப்படவில்லை என்றால் அதை கற்பித்தல் என்று கூற முடியாது,” என்று இலங்கை பெளத்த சமயத்தவர்கள் மத்தியில் ஒரு பழமொழி இருக்கிறது. சபையின் ஆரம்ப காலத்தில், அத்தகைய ஒரு அணுகுமுறையின் விவேகம் தெளிவாக தெரிந்தது. அவர் யாழ்ப்பாணத்தின் ஆச்சாரமான சைவ சமூகத்தின் உறுப்பினராக இருந்தபோது, கிரகித்த சைவ தர்மத்தை அப்படியே மக்களிடம் வெளிப்படுத்த விரும்பினாலும், அத்வைத போதனைகள் மற்றும் யோக சாஸ்திரம் மற்றும் தனது சீடர்களை தொடர்ந்து பக்தியில் பயிற்சி மேற்கொள்ளவேண்டும் என்பதை ஊக்குவிப்பதன் மூலமாகவும், பல வருடங்களுக்கு இந்து சமயத்தின் பொதுவான கோட்பாடுகளை கவனமாக வெளிப்படுத்துவதன் மூலமாகவும், ஸ்ரீ சுப்பிரமுனியா வலுக்கட்டாயமாக பொறுமையுடன் இருந்தார். §§

image§

ஶ்ரீ சுப்பிரமுனியா பன்னிரண்டு வருடங்களுக்கு, தனது சீடர்களை 2,500 அடி உயர தமல்பைஸ் மலை உச்சிக்கு அழைத்து சென்றார். விடியற்காலையில் வந்து, ரெட்வுட் மற்றும் கருவாலி மரங்களுக்கு மத்தியில் அமர்ந்து தியானம் செய்து பெற்ற உணர்வை “ஒரு மலைஉச்சி உணர்வு" என்று அழைத்தார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இந்த ஆரம்ப காலத்தில், நான் சிவபெருமானுடன் ஐக்கியமாதல் புத்த்கத்தில் இருக்கும் “வாழ்க்கை ஒரு சிறப்பான அனுபவம்,” “அன்பு என்பது விதியின் கூட்டுத்தொகை,” “உறுதிமொழியின் சக்தி” மற்றும் “ஜீவநதி” என்கிற பாடங்களில் இருக்கும் போதனைகளை வழங்கினேன். நீங்கள் பலப்பல வருடங்களாக கேட்டுக்கொண்டு இருக்கும் அந்த உரைகள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் தொடங்கியவை. மக்கள் வெள்ளம் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தது. அமெரிக்காவில் ஒரு புதிய வாழ்முறையை நான் கவனித்துக்கொண்டு, அதற்கேற்ப என்னை மாற்றி அமைத்துக்கொண்டு இருந்தேன். §§

ஶ்ரீ சுப்பிரமுனியா தனிப்பட்ட ஆலோசனை வழங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக்கொண்டு, பல திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளில் பங்குபெற்று, அறிவுறுத்துவதற்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் எப்போதும் தயாராக இருந்தார். §§

அவருடைய போதனைகள் அடங்கிய ஜெம்ஸ் ஆஃப் விஸ்டம் என்கிற புத்தகம், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், 1958 வருடத்தின் மத்தியில் இரண்டாவது பதிப்பை அச்சிட வேண்டியிருந்தது. இதனை ஶ்ரீ சுப்பிரமுனியா கவனித்துக்கொண்டு, சபை மற்றும் துறவிகளின் ஆன்மீக வாழ்கையை வழிநடத்த உறுதிமொழிகள், விஷேச உடுப்புகள், புனித சடங்குகள், கட்டுப்பாடுகள் மற்றும் அட்டவணைகள் அடங்கிய ஒரு தொகுப்பாக, முதல் தேவாலய கையேட்டை தயார் செய்துக்கொண்டு இருந்தார். §§

சீடர்கள் மற்றும் அங்கத்தினர்களின் வகுப்புக்கள் மற்றும் ஆய்வுகளின் பரபரப்பான நடைமுறை ஒழுங்கிற்கு ஒரு உருவத்தை வழங்க, அவர் யோகா நிறுவனத்தை நிறுவினார். அதற்கு சான் பிரான்சிஸ்கோ கோயிலில் பல அறைகளையும் வழங்கினார். அது இமாயலயன் அகாடமிக்கு முன்னோடியாக விளங்கியது. அவர் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அது பின்னர் பிரேக்பாஸ்ட் கிளப் என்ற பெயரை பெற்றது. அந்த கூட்டத்தின் போது சீடர்களும் உறுப்பினர்களும் அவருடன் இயல்பாக பேசி ஒருவர் மற்றொருவரின் நட்பை கொண்டாடுவதற்கு ஒரு எளிமையான சூழலில் கூடினார்கள். அது அதிக பிரபலமடைந்தது, மற்றும் அதிலிருந்து ஒரு ஆக்கப்பூர்வ சக்தி வெளிவந்தது. ஆனால் மிகவும் முக்கியமாக, ஶ்ரீ சுப்பிரமுனியா தனது சீடர்களின் பக்தி மற்றும் ஆன்மீக ஒழுக்கம் தொடர்பான விஷயங்களின் மீது கவனம் செலுத்தினார். “கர்மவினையை வெற்றி கொள்வதற்கு நிலையான தன்மை மிகவும் அவசியம்,” என்று அவர் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருந்தார்.§§

அவரது கோயிலும் நடவடிக்கைகளும் பெருகியதும், பல சிக்கல்கள் தோன்றின. பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. பணம் எவ்வளவு இருந்தாலும் போதவில்லை. 1957 வருடத்தின் மொத்த வருமானம் சுமார் $3000 என்று கூட்டு நிதி அறிக்கைகள் தெரிவித்தன. அது வளர்ந்து வரும் நிறுவனத்தை நிர்வகிக்க போதவில்லை. இருந்தாலும் அவர் திறமையாக கையாண்டார். §§

ஒரு சமயத்தில், ஒரு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட பணம் வேறொரு விஷயத்திற்கு செலவழிப்பதை பார்த்து அதிருப்தி அடைந்து, ஒரு காகிதப்பை ஒழுங்குமுறையை உருவாக்கினார். ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், அவர் மாடியில் இருந்த அலுவலங்களின் சுவர்களில் 20 காகிதப்பைகளை குண்டூசி கொண்டு குத்தி வைத்தார். அந்த பையின் மீது உணவு, மெழுகுவர்த்திகள், பயணம், வாடகை போன்று அவர் கைப்பட எழுதிய பிரிவுக்கு, அதில் அவர் வைத்த பணத்தை பயன்படுத்த வேண்டும். ஒரு காகிதப்பையில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை, அந்த பிரிவு இல்லாமல் மற்ற பிரிவுகளுக்கு செலவழிக்க யாருக்கும் உரிமை இல்லை. இது செலவை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு, சிக்கனத்தை கற்றுக்கொடுக்க ஒரு சிறந்த வழியாக விளங்கியது. 26 ஆம் தேதி உணவுப்பை காலியாகி, அடுத்த மாதம் முதல் தேதி வரை எல்லோரும் உண்ணாமல் விரதம் இருந்ததைப் பற்றி பல மடவாசிகள் நினைவு கூர்கிறார்கள். ஆனால் அது நீண்டநாள் நிலைத்து இருக்கும் தன்மையில்லாத ஒரு மிகவும் எளிமையான ஒழுங்குமுறையாக இருந்தது. §§

ஒரு மாணவர் அடிப்படை கணக்கு வேலைகளுக்கு பொறுப்பேற்க ஒப்புக்கொண்டார். மற்ற தேவாலயங்கள், தங்களுக்கு தேவையான நிதியை எவ்வாறு திரட்டுகிறார்கள் என்பதை ஆய்வு செய்த ஶ்ரீ சுப்பிரமுனியா, தசமபாகம் அறிமுகப்படுத்துவதைப் பற்றி சிந்தித்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும், தட்டில் நன்கொடையாக பத்து அல்லது பதினைந்து சென்ட் நாணயங்களை வழங்கி பழக்கப்பட்டு இருந்த யோகம் பயிலும் மாணவர்களுக்கு, இது ஒரு புதிய அதிர்ச்சியாக இருந்தது. ஒரு நாள் அவர் கோயிலின் முன்பாக “ஒரு தசம்பாகம் கட்டணமாக வசூலிக்கப்படும்" என்று ஒரு பலகையில் எழுதி வைத்தார். அந்த காலத்தில் கடன் அட்டைகள் இருக்கவில்லை, மற்றும் இந்த சிந்தனை பத்திரிகையாளர் ஹேர்ப் கேனை மிகவும் கவர்ந்ததால், அவர் சான் பிரான்சிஸ்கோ கிரோனிகில் பத்திரிகையில் “இட்ஸ் நியூஸ் டூ மீ” என்ற தனது கட்டுரையில், இதைப்பற்றி குறிப்பிட்டு இருந்தார். §§

துறவிகள் மற்றும் உபதேசங்கள் பற்றிய தகவல் §

கோயில் சாக்ரமென்டோ தெருவில் தொடங்கிய போது, ஒரு சில மடவாசிகள் ஆரம்பநிலை பிரமாணங்களை எடுத்துக்கொண்டனர். அவர்கள் சான் பிரான்சிஸ்கோவில் தங்கள் பணிகளை தொடர்ந்து செய்துக்கொண்டு, தங்கள் வருமானத்தில் 25 சதவீதத்தை தசபாகமாக வழங்கினார்கள். அவர்கள் தங்கள் பணியை நகரத்தில் முடித்ததும், அந்தி சாயும் வரை கோயிலில் இருக்கும் குருவுடன் இணைந்து, வகுப்புக்கள் நடத்துவது அல்லது கோயிலுக்கு வரும் அன்பர்களுக்கு உதவி செய்வது போன்று, தங்களை ஏதாவது ஒரு பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர். 1980 களில் சற்குரு வழங்கிய குறிப்பு:§§

1949 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அமெரிக்கா திரும்பிய போது, ஆண் பிரம்மச்சாரிகள் மற்றும் பெண் பிரம்மச்சாரிகளின் முதல் குழுவில் மக்கள் சேர ஆரம்பித்தனர். ஆனால் 1957 ஆம் ஆண்டு வரை எந்த பிரமாணமும் வழங்கப்படவில்லை. டிசம்பர் 1956, மகா தசைகள் இராகுவில் இருந்து குருவிற்கு இடம் பெயர்ந்தது. சமூகம் மிகவும் தீவிரமாக தொடங்க, இந்த இடப்பெயர்ச்சி வழிவகுத்தது. நாங்கள் அப்போது வாங்கிய நிலம், தற்போது பழனிசுவாமி கோயிலாக இருக்கிறது. இதற்கு முன்பாக நான் சிலசமயம் பயணம் செய்வது, உரைகள் வழங்குவது மற்றும் வேதாந்தம், சித்தாந்தங்களை கற்றுத்தருவது மற்றும் இராஜ யோகம் [காக்னிசண்டபிலிடி என்றும் அழைக்கப்பட்டது] எழுதுவது மற்றும் மற்ற வேலைகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அந்த காலத்தில், நாட்டின் பெரும்பான்மை கத்தோலிக்க மற்றும் கிறுத்துவ சீர்த்திருத்த தேவாலயங்களின் நம்பிக்கை மாதிரிகளின் பிடியில் இருந்ததால், மேற்கத்திய நாடுகளில் கோயில் வழிபாடு பற்றி யாரும் அறிதிருக்கவில்லை. §§

ஊக்கமளிக்கும் உரைகள் என்ற பெயரில், ஶ்ரீ சுப்பிரமுனியா ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கிய உபதேசங்களை, ஒவ்வொரு வாரமும் மடவாசிகள் பொறுப்புடன் பதிவு செய்து, எழுத்து வடிவம் வழங்கி அச்சிட்டனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு எண்ணற்ற கையெழுத்து பிரதிகள் சேகரிக்கப்பட்டன, அடிப்படை தத்துவம் மற்றும் பயிற்சிகள் தெளிவாக இருந்தது மற்றும் ஒரு பயிற்சி வகுப்புக்கான தேவை அதிகமாக இருந்தது. 1959 ஆம் ஆண்டில், அஞ்சல் அல்லது நேராக சென்று வழங்குவதற்கு, ஶ்ரீ சப்பிரமுனியாவும் மடவாசிகளும், அவர் வழங்கிய உரைகளை ஒரு தொடர்ச்சியான பாடங்களாக ஒன்று சேர்த்து தொகுத்து அமைத்தனர். இது தி மாஸ்டர் கோர்ஸ் என்ற பெயரில், அவர் வழங்கிய முறையான பயிற்சி வகுப்பின் முதல் பதிவாக விளங்கியது. சுமார் பத்து வருடங்கள் கழித்து, இந்த காலகட்டத்தில் தான் வழங்கிய போதனைகளை பற்றி அவர் இவ்வாறு குறிப்பிட்டார்:§§

மனிதன் தான் என்னவாக இருக்கிறான் என்று நினைக்கிறானோ அதை கடந்து, அவன் உண்மையாக—பரமாத்துமாவை உணரும் வரை முதுகுத்தண்டில் இருக்கும் சக்தி மற்றும் அதற்குள் இருக்கும் சுத்தமான மற்றும் அதற்குள் ஆழமாக இருக்கும் சக்திகள் மீது உணர்வை பெறுவது— விளக்க முடியாமல், ஆற்றலை விட உயர்ந்த திசைவேகத்துடன் இருக்கும் அடிப்படை கோட்பாட்டிற்குள் அழைத்து செல்லும் வகையில், போதனைகள் மற்றும் பயிற்சிகளை வழங்குவதே, இந்த காலகட்டத்தின் நோக்கமாக இருந்துள்ளது. அத்வைத போதனைகளில் சொல்லப்பட்டு இருப்பதைப் போல, நானும் எனக்கு நெருக்கமான பல சீடர்கள் உணர்ந்ததை போல, ஆத்ம ஞானம் பற்றிய விளக்கத்தை வழங்க, அறிவியலில் பருப்பொருள்-எதிரியப் பருப்பொருள் கோட்ப்பாடு நெருங்கி வந்துள்ளது. §§

இந்த சிந்தனை மேற்கத்திய நாட்டு மக்களின் மனதில் சரியாக பதியவில்லை என்பதை உணர்ந்து, அறிவுப்பூர்வமாக இல்லாமல் ஒரு தனி மனித வாழ்க்கையில் இருக்கும் உண்மையான அனுபவ மாதிரிகளில் இந்த சிந்தனையை தெளிவாக மற்றும் நுணுக்கமாக கொண்டு வருவதற்கு, நான் பல வருடங்களாக ஒரு விரிவான பயிற்சி வகுப்பை தயார் செய்துக்கொண்டு இருந்தேன். §§

அந்த ஆரம்ப பாடங்களின் தலைப்புக்களாக, மனித உடல்களில் இருக்கும் மறைஞான தகவல்கள், ஐந்து மனநிலைகள், ஹட யோகம், மந்திர யோகம், பிராண சக்தி, ஒருமுகச்சிந்தனை, தியானம் மற்றும் மேலும் பல தலைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன. இந்த பாடங்கள் வேர்ல்ட் பெல்லோஷிப் ஆஃப் யோகா என்ற தலைப்பில், கிழக்கத்திய நாடுகளின் பாரம்பரியத்தை பின்பற்றி இலவசமாக வழங்கப்பட்டது. இந்த பாடங்கள் அடிக்கடி கோயிலுக்கு வரமுடியாமல் தூரத்தில் இருந்த பல மாணவர்கள் மற்றும் உறுப்பினர்களை நெருக்கமாக வைத்து இருந்து, அவர்கள் முன்னேற்றத்தை கண்காணித்து அவர்களது பாதைக்கேற்ற வழிகாட்டலை வழங்க ஆசிரியருக்கு ஒரு வழியை வழங்கியது. “கிழக்கு நாடுகளின் சிறப்பும் மேற்கு நாடுகளின் சிறப்பும் இணக்கத்தை பெற்றுள்ளன,” என்று 1950 களில் தனது படைப்புக்களின் இயல்பை பற்றி விளக்கும் போது ஶ்ரீ சுப்பிரமுனியா அடிக்கடி குறிப்பிடுவார். 1971 ஆம் வருடத்தில், அவர் அளித்த விளக்கம்:§§

மனிதனுக்குள் இருக்கும் பரமாத்துமாவின் தத்துவத்தை உறுதியாக கடைப்பிடிப்பது கிழக்கு நாடுகளின் சிறப்பு ஆகும். இந்த வாழ்நாளுக்குள் மனிதன் அதனை முழுமையாக உணர்ந்துகொள்ள முடியும். அது அடிப்படையில் சஹஸ்ரஹார சக்கரத்தை திறந்து, பிரம்மத்தின் கதவு வழியாக சாட்சியை விடுவித்து, பரமாத்துமாவுடன் ஐக்கியமாவதை குறிப்பிடுகிறது அல்லது பல்வேறு சக்கரங்கள் வழியாக முதுகுத்தண்டு, அடிமூளை மற்றும் கூம்பு சுரப்பி வழியாக குண்டலினி மேலே எழும்பி சக்தியில் ஐக்கியமாகிறது மற்றும் அதன் ஆழத்துள் சாட்சி இயங்குவதால் அது தெய்வீக பண்பின் மையத்திற்கு வந்து சேர்வதையும் குறிப்பிடுகிறது. இதுவே கிழக்கு நாடுகளை சேர்ந்த மிகப்பெரிய ரிஷிகளின் அடிப்படை கோட்பாடு ஆகும். நான் அங்கே இதைப்பற்றிய ஆய்வு மேற்கொண்ட காலத்தில் இருந்து இதனுடன் வாழ்ந்து வந்துள்ளேன் மற்றும் தற்போதும் வாழ்ந்து வருகிறேன். §§

பாதையில் பல்வேறு நிலைகளில் இருக்கும் மக்களிடம் இந்த போதனையை, பாதையை பற்றி நிறுவனம் வழங்கும் அறிமுகத்தால் ஒருவரை திசைத்திருப்பாமல், அவரது முடிவான குறிக்கோளை நோக்கி மெதுவாக வழிநடத்தி செல்லும் இந்த அறிமுகத்தை பரப்ப உதவும் வசதிகள், மேற்கு நாடுகளின் சிறப்பாக இருக்கின்றன. §§

ஶ்ரீ சுப்பிரமுனியா மற்றும் மடவாசிகள் கலிபோர்னியா முழுவதும் பயணம் மேற்கொண்டு ஹட யோகம் மற்றும் இராஜ யோகம், உபநிடதங்கள் மற்றும் மற்ற சாஸ்திரங்களை பற்றி சொற்பொழிவுகள் மற்றும் பாடங்களை நடத்தி, நூற்றுக்கணக்கான மாணவர்கள் பதிவு செய்து தினமும் படித்து வந்த, அவரது வேர்ல்ட் பெல்லோஷிப் ஆப் யோகா பற்றிய பாடங்களை விளக்கியும் வந்தனர். அவர்கள் கல்லூரிகள், வீடுகள் மற்றும் எப்போதும் நல்ல வரவேற்பை வழங்கிய எபிஸ்கோப்பல் அல்லது யூனிடேரியன் தேவாலயங்களில் பெரும்பாலும் பேசினார்கள். அவர்கள் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு கோடைகால முகாம்களை நடத்தினார்கள். 1961 ஆம் ஆண்டில், சிறையில் இருந்த கைதிகளை சந்தித்து அவர்களுக்கு கிழக்கத்திய இலட்சியங்கள் மற்றும் யோகத்தின் அடிப்படைகளை கற்றுத்தருவதற்கு, ஒரு வலுவான ப்ரிசன் அவுட்ரீச் திட்டத்தை தயார் செய்தார்கள். இந்த முயற்சிகளின் மூலம் போல்சோம், சான் குவெண்டின், வாகாவீல் மற்றும் மற்ற இடங்களில் இருந்த சிறைவாசிகள் ஆறுதல் மற்றும் ஆன்மீக வாழ்க்கையின் மீது புதிய விழிப்புணர்வையும் பெற்றனர். §§

1959 ஆம் ஆண்டு கிறுத்தவ யோக தேவாலயம் முறைப்படி தொடங்கப்பட்டது. இது தன் உறுப்பினர்களுக்கு இந்து மத நம்பிக்கைகள் மற்றும் வழக்கங்களை பற்றி படிப்படியாக வலுவடைந்த புரிதலை கற்றுத்தந்தது. அதே சமயத்தில, ஶ்ரீ சுப்பிரமுனியா மடவாசிகளுக்கு மேடை பேச்சில் பயிற்சி வழங்கி, அவர்கள் பிரமாணங்கள் எடுத்துக் கொண்டதும், அவர்கள் ஹட யோகம், தியானம் பற்றிய அடிப்படைகள் மற்றும் தத்துவத்தின் தொடக்கங்கள் பற்றிய மக்களுக்கு வகுப்புக்கள் நடத்த ஏற்பாடு செய்தார். அவர் அவர்களை அவ்வப்போது அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பிதோடு, கோயிலில் இருந்து ஆசிகள் மற்றும் குணப்படுத்தும் சக்திகளை அங்கிருந்த நோயாளிகளிடம் உணர்வுடன் கொண்டு சென்று சுயநலமற்ற சேவையை செய்ய ஊக்கமும் அளித்தார். அதன் பின்னர் கலிபோர்னியா முழுவதிலும் பல்வேறு வீடுகளில், தான் தொடங்கிய கிறுத்துவ யோக ஆய்வுக் குழுக்களுக்கு அவர்களை மேற்பார்வையாளர்களாக நியமித்தார். §§

அக்டோபர் 4, 1959 அன்று, ஶ்ரீ சுப்பிரமுனியா தனிமையாக இருக்கவும், பிற்காலத்தில் அவர் தொடங்கிய இன்னரசர்ச் டிராவல்-ஸ்டடி திட்டத்தின் முன்னோடியாகவும், ஹவாய் பறந்து சென்றார். அவர் ஓஹு தீவுக்கு மட்டுமே சென்றார். அதன் முக்கிய நிலப்பரப்பில் அவரது ஆன்மீக பணியை பற்றி அந்நாட்டு பத்திரிகை ஒரு நேர்காணலை நடத்தினாலும், தனியாக இருந்த அந்த அரிய தருணம் ஹவாய் தீவு பற்றிய அறிமுகத்தை பெறுவதற்கு அவருக்கு பயனுள்ளதாக இருந்தது. §§

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கிளம்புவதற்கு முன்பாக, சமய சார்புள்ள வாழ்க்கையின் இலக்கு மற்றும் குறிக்கோளை விளக்கி, “பரமாத்துமா" என்ற பெயரில் கோயிலில் கூடியிருந்த மடவாசிகள் மற்றும் தேவாலய உறுப்பினர்களின் சிறு கூட்டத்திற்கு ஒரு ஊக்கமளிக்கும் உரையை வழங்கினார். இந்த ஆன்மீக பொக்கிஷத்தை மடவாசிகள் உடனே வெளியிட்டார்கள். அது இன்றுவரை முழுமுதற்பொருள் பற்றி வெளிவந்து, மிகவும் தெளிவாக ஊக்கமளிக்கும் உபநிடதங்களாக விளங்குகிறது. இந்த ஒரு சிறிய படைப்பை இலங்கை மக்கள் “சிறிய மாணிக்கம்" என்று அன்புடன் அழைத்தனர். அதில் முதல் மூன்று பத்திகளை இங்கே காணலாம்:§§

பரமாத்துமா: அதை உங்களால் விளக்க முடியாது. அது இருப்பதை உங்கள் புலன்களின் புனிதமான நிலை மூலம் உணர முடியும், ஆனால் உங்களால் அதை விளக்க முடியாது. அதை பற்றி புரிந்துகொள்ள, நீங்கள் அதை அனுபவிக்க வேண்டும். அது உங்கள் தெய்வீக தன்மையின் ஆழமாக, உங்கள் மையமாக இருக்கிறது என்று மட்டும் உங்களால் சொல்ல முடியும். அது உங்களின் பண்பு. §§

நீங்கள் உங்களுக்கு மேலே, கீழே, வலது புறம், இடது புறம், முன்புறம் மற்றும் பின்புறம் வெறுமையை கற்பனை செய்து, அந்த வெறுமையில் நீங்கள் உங்களை கரைத்துக் கொண்டால், அதுவே ஆத்ம ஞானத்தை விளக்குவதற்கு மிகவும் சிறந்த முறையாக இருக்கும். ஒரு காலி பெட்டியில் இருக்கும் வெறுமை, ஒரு சூன்யமாக இருப்பதைப் போல, அந்த வெறுமை ஒன்றும் இல்லாத நிலையாக இருப்பது இல்லை. அந்த வெறுமை அனைத்தின் முழுமையாக இருக்கிறது: அனைத்துமாக தோன்றும் உள்பொருளின் சக்தி, தாங்கி பிடிக்கும் சக்தியாக இருக்கிறது. §§

ஆனால் நீங்கள் ஆத்ம ஞானத்தை பெற்ற பிறகு, நீங்கள் மனதை பற்றி அறிந்து கொள்வீர்கள். அது தொடர்ந்து தன்னை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. மனம் என்கிற உருவம் தொடர்ந்து உருவத்தை உருவாக்கிக்கொண்டு, உருவத்தை பாதுகாத்துக்கொண்டு, புதிய உருவங்களை உருவாக்கி பழைய உருவங்களை அழித்துக்கொண்டு இருக்கிறது. அந்த மனமே மாயை என்றும், அந்த மிகப்பெரிய உண்மையின்மையை நீங்கள் உண்மை என்று நம்பி, நீங்கள் சிந்திக்கும் மனதின் அங்கமாக இருக்கிறது என்கிற சுயமாக உருவாக்கும் கோட்பாட்டை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். §§

சுமார் நான்கு வருடங்களுக்கு 1,100 க்கும் மேலான உபதேசங்கள் மற்றும் நேர்காணல்களை, ஒரு பழைய வோலன்சாக் ரீல்-டூ-ரீல் ஒலிப்பதிவு பெட்டியில், ஶ்ரீ சுப்பிரமுனியாவின் உரைகளை துறவிகள் பதிவு செய்தனர். §§

அவர் 1960 ஆம் ஆண்டில், மேற்கு நாடுகளில் யோகம், நேர்மறை அணுகுமுறைகள் மற்றும் உட்புற மனிதனுக்கு பயிற்சிகள் மீது கவனம் செலுத்தி, வானொலியில் ஒரு விஷேச தொடரை தொடங்கினார். கேபிகோ 105.3 பண்பலை வரிசையிடம் ஒரு நேரத்தை விலைகொடுத்து வாங்கி, ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் காலை 10 மணிக்கு “டெம்பிள் ஆஃப் தி ஏர்” என்ற பெயரில் உரைகள் ஒலிபரப்பப்பட்டன. ஶ்ரீ சுப்பிரமுனியாவின் கடுமையான தொடர் முயற்சியால், சாக்ரமெண்டோ தெருவில் இருந்த இந்து கோயில் விரிகுடா பகுதி முழுவதும் பிரபலமானது. §§

சட்டத்தை வகுத்து அதை பின்பற்ற சீடர்களிடம் வலியுறுத்துதல்§

துறவிகள் கோயிலில் பூசாரியாக மற்றும் பொதுவாக சமூகத்தில் செய்த பல்வேறு பணிகள் மூலமாக பெற்ற சமநிலை மற்றும் ஶ்ரீ சுப்பிரமுனியா ஊக்குவித்த ஒழுக்கம், பற்றின்மை மற்றும் தொடர் ஆன்மீக முயற்சிகளால், அவர்களின் பயிற்சி மற்றும் சேவை நன்றாக முன்னேறியது. தனது சமூகத்தில் இருந்த துறவிகள் பாதையில் முன்னேறி, அதன் மூலம் அவர்களுக்குள் இணக்கம் ஏற்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர் ஒரு கண்டிப்பான ஆசிரியராக இருந்தார், மற்றும் அவர் வழங்கிய அறிவுறுத்தல்களை குழுவில் இருந்த எல்லோரும் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தது தெளிவாக எல்லோருக்கும் புரிந்தது. §§

ஒரு நாள் பூசாரிகள் குழுவின் சந்திப்புக் கூட்டம் நடந்துகொண்டு இருந்தது. அப்போது சில துறவிகள் தங்களுக்குள் காரசாரமாக வாதாடிக்கொண்டு இருந்தனர். அது போல் மீண்டும் நடக்கக்கூடாது என்று நான் அவர்களுக்கு எச்சரித்தேன். பிறகு சில நாட்கள் கழித்து, அவர்கள் மீண்டும் வாதாட தொடங்கினார்கள். நான் உடனே, “மீண்டும் இதைப் போல இன்னொரு முறை நடந்ததால், நான் இந்த சந்திப்புக் கூட்டங்களை நிறுத்தி விடுவேன்,” என்று கூறினேன். நான் வழங்கிய எச்சரிக்கையை அவர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை போல தோன்றுகிறது. அந்த சம்பவம் அடுத்த முறை மீண்டும் தோன்றிய போது, “சரி, அவ்வளவு தான்,” என்று கூறி பூசாரிகள் குழுவுடன் மீண்டும் இன்னொரு கூட்டத்தை, நான் அதன் பிறகு நடத்தவில்லை. §§

image§

சாக்ரமெண்டோ ஸ்ட்ரீட் கோயிலில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், ஶ்ரீ சுப்பிரமுனியா யோகம், பரமாத்துமா, மனநிலைகள் மற்றும் இந்து சூட்சும ஞானத்தின் நடைமுறை பயன்பாடுகள் பற்றி சொற்பொழிவுகளை வழங்கினார். கத்தோலிக்க சமயத்தவர்கள் அதிகம் வசித்த அந்த நகரத்தில், கிழக்கு கலாச்சார பாதையை விளக்கிய முதல் ஆசிரியர்களில் ஒருவராக அவர் விளங்கினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ஒரு நாள் கோயிலுக்கு வந்திருந்த காணிக்கைகளில் இருந்து சில டாலர்களை துறவிகளில் ஒருவர் எடுத்துக்கொண்டதாக தெரிய வந்தது. துறவிகளுக்கு வழங்கப்பட்ட உணவின் அளவு குறைவாக இருந்ததால், தனக்கு பசித்ததாகவும், அதனால் பணம் செலவழித்து தனக்கு கூடுதல் உணவை வாங்கியதாகவும், அந்த துறவி ஒப்புக்கொண்டார். இது ஶ்ரீ சுப்பிரமுனியாவிற்கு ஒரு சிறிய பின்னடைவாக இருந்தது, மற்றும் முப்பது வருடங்கள் கழித்து அதை மன்னிக்க முடியாத நடவடிக்கையாக குறிப்பிட்டார். அவர் அந்த துறவியை முதலில் தனிமையிலும், பின்னர் எல்லோர் முன்னிலையிலும் கடிந்து கொண்டு, பின்னர் தீவிர தவம் மேற்கொள்ள வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தினார். நம்பிக்கைகளின் தளைகள் உடைவதற்கு, சொந்த வேதனைகள் ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்பது இதன் மூலம் எல்லா துறவிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. அந்த சமூகம் வலிமை மற்றும் பக்குவத்தை பெற்று வளரும் போது, இதைப்போன்ற பல பாடங்களை கற்றுக்கொண்டது. §§

சிலர் தங்களுக்கு விருப்பமான துறவற வாழ்கையை மேற்கொள்வதற்கு, தங்கள் குடும்பத்திடம் இருந்து ஆசிகள் அல்லது ஒப்புதலை பெறுவதில் சிக்கல்களை சந்தித்தனர். முற்றிலும் கேள்விப்படாமல், வெளிநாட்டு சமூகம் போல காட்சியளித்த ஒரு அமைப்பில், தங்கள் மகன் சேர்வதை ஒரு சில குடும்பங்கள் தீவிரமாக தடுத்தனர். ஒரு தந்தை சான் பிரான்சிஸ்கோ மடத்தின் கதவை தட்டி, நம்பிக்கை இழந்த குரலில் வீடு திரும்புமாறு தனது மகனிடம் சத்தமாக வற்புறுத்தினார். அத்தகைய சூழலை எதிர்கொண்ட போது ஶ்ரீ சுப்பிரமுனியா சில சமயங்களில், சிறிது காலம் குடும்பத்துடன் வாழ்வதற்கு அந்த துறவியை அனுப்பி வைப்பார், மற்றும் மற்றவர்களை “பாதையில்" தனியாக இருந்து தங்களது பொறுப்புக்களைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும் பணியில் மற்றவர்களை அனுப்பி வைப்பார். தனது கர்மவினைகளை கரைப்பதற்காக, ஒரு இளைஞன் இரண்டு வருடங்களுக்கு ஆயுதப்படை சேவையில் சேரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார். §§

அந்த சபையில் இருந்த மூன்று பெண்மணிகள், தங்கள் சகாக்கள் ஆன்மீக முன்னேற்றம் அடைவதை பார்த்து, தாங்களும் துறவற வாழ்கையை மேற்கொள்ள விரும்புவதாக வேண்டினார்கள். அந்த பெண்மணிகள் தங்கள் வேண்டுகோளில் கனிவாக நிலைத்து இருந்து, தங்களது தீவிர பக்தியின் மூலம் ஶ்ரீ சுப்பிரமுனியாவின் சம்மதத்தை பெற்றனர். 1960 வருடத்தின் இறுதியில், மடத்திற்குறிய உறுதிமொழிகளுக்குள் கட்டுப்பட்ட பிறகு, அவர் அவர்களுக்கு தீட்சையை வழங்கி, சிஸ்டர்ஸ் ஆஃப் டிவோஷன் (முழு ஈடுபாட்டுடன் இருக்கும் சகோதரிகள்) என்று பெயரிட்டார். §§

துறவிகளை போல, கன்னியாஸ்திரிகளும் மேற்கத்திய உடைகளில் எளிமையாக, இடுப்பில் ஒரு வெள்ளை நிற கயிறு மற்றும் தலைப்பாகையுடன் பழுப்பு நிற உடைகளை அணிந்து இருந்தார்கள். அவர்கள் தங்கள் தலைகளில் மொட்டை அடித்துக்கொண்டு ஆண்களை போல காட்சி அளித்தார்கள் மற்றும் அவர்கள் தங்கள் பெண்பால் மற்றும் ஆண்பால் சக்திகளை சமன் செய்து, பாலினத்தை கடந்து, புனிதமான ஆன்மீக சக்திகளாக இருக்க முயற்சி செய்தார்கள். சிலர் அவர்களை ஆண்கள் என்றே கருதினார்கள். அவர்களது சேவைகள் இறைபக்தி சார்ந்த சேவைகள், குடும்பங்கள் மீது கவனம் செலுத்துதல் மற்றும் தங்கள் சொந்த ஆன்மீக பழக்கங்களை சுற்றி அமைந்து இருந்தன. அவர்கள் ஆண் துறவிகளிடம் இருந்து விலகி இருந்து, தினமும் கோயிலுக்கு வகுப்புகள் மற்றும் சேவை செய்வதற்கு வந்தனர். கோயிலை சுத்தம் செய்தல், சமைத்தல், பெண்களுக்கு ஆலோசனை வழங்குதல், கோயில் வரும் விருந்தினர்களுக்கு தேநீர் தயார் செய்தல், அஞ்சல்களை முறையாக கையாண்டு சிறிய அலமாரியில் அடுக்கி வைத்தல் போன்ற வேலைகளை செய்த இந்த சிஸ்டர்ஸ் ஆஃப் டிவோஷன், மற்றவர்கள் மீது அக்கறை செலுத்தும் ஒரு உறுதியான உணர்வை கொண்டு வந்தது. இந்த உணர்வு, ஶ்ரீ சுப்பிரமுனியாவின் ஆன்மீகப் பணியில் ஒரு அன்னையின் சக்தியாக அழைக்கப்பட்டது. §§

1961 ஆம் ஆண்டு, அந்த தேவாலயம் லாஸ் ஏஞ்செல்ஸ் புறநகர் பகுதியில் இருந்த கிலெண்டெலில் ஒரு வீட்டை வாங்கி, அதை அந்த மூன்று அன்னை கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கியது. அவர்களுக்கு ஶ்ரீ சுப்பிரமுனியா மௌனமாக இருந்து சேவை செய்யும் பணியை வழங்கினார். §§

குடும்ப உறவுகளை வலுப்படுத்த, சமயம் சார்ந்த வாழ்க்கையின் அடிப்படை கோட்பாடுகள் மற்றும் தேவாலயத்தின் தத்துவ மற்றும் இறையியல் கோட்பாடுகளை சுருக்கமாக குறிப்பிட்டு, கேடிசிசம் ஆஃப் தி கிறிஸ்டியன் யோகா சர்ச் என்ற பெயரில் ஒரு புத்தகத்தை ஶ்ரீ சுப்பிரமுனியா எழுதினார். அவர் வீட்டு சேவைகளையும், குடும்பங்கள் தங்கள் பூஜை அறைகளில் காலை மற்றும் மாலையில் கடைப்பிடிக்க தியான வகுப்புக்களையும் தொடங்கினார். விசேஷ சாதனா மற்றும் ஆன்மீக முயற்சிகள், விரதம் மற்றும் ஆன்மீக பாதை மீது இருக்கும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்தல் என்று வருடம் முழுவதும் ஏழு காலங்களாக ஏழு புனித வாரங்கள் வரையறுக்கப்பட்டன. மனிதனின் சூட்சும உடலில் இருந்த ஏழு சக்கரங்களில் ஒன்றை குறிப்பிடும் வண்ணம் அமைந்து இருந்த, புனித வாரம் ஓவ்வொன்றும் ஒரு மிகப்பெரிய மகான் அல்லது முக்கிய சமய திருவிழாவிற்கு அர்ப்பணிப்பட்டு இருந்தது. இது பிற்காலத்தில், அவரது சீடர்கள் ஒவ்வொரு வருடமும் கவனம் செலுத்த வேண்டிய அதிக தீவிரமான ஆன்மீக பணியாக மாறியது. §§

அமெரிக்கா தேவாலய அமைப்பு மற்றும் அமெரிக்காவில் இருந்த பல்வேறு சமய அமைப்புக்களை அவர் ஆய்வு செய்ததன் விளைவாக, 1961 ஆம் ஆண்டின் இறுதியில், ஶ்ரீ சுப்பிரமுனியா உள்நாட்டு வருவாய் சேவையின் கீழ் தேவாலயம் என்ற அதிகாரப்பூர்வ பெயருக்கு ஆவணங்களை சமர்ப்பித்தார். பிப்ரவரி 12, 1962, அவரது தேவாலயத்திற்கு வரி விலக்கு சலுகை அளிக்கும், முறையான ஒப்புதலை ஐ.ஆர்.எஸ். அனுப்பியது. இந்து சமயத்தை கற்றுத்தரும் ஒரு அமெரிக்க தேவாலயம், இந்த அங்கீகாரத்தை பெறுவது அதுவே முதல் முறையாக இருந்தது. §§

அந்த தேவாலயம் தனது பணியை பற்றி ஒரு செய்தி வெளியீட்டில் இவ்வாறு குறிப்பிட்டது: “பாதர் சுப்பிரமுனியாவின் அறிவுறுத்தல்கள் இந்தியா, சிலோன், இங்கிலாந்து, ஜெர்மனி, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் மாணவர்களை சென்று அடைந்துள்ளது. “நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? நான் எங்கே சென்றுகொண்டு இருக்கிறேன்?” போன்ற கேள்விகளுக்கு கிறிஸ்டியன் யோகம் பதில் அளிப்பதாக அவர் கூறுகிறார். ஒருமுகச்சிந்தனை மற்றும் தீவிரமான தியானத்தின் மூலம், தங்கள் ஆன்மீக சக்திகளின் ஆழங்களை ஆய்வு செய்வதைப் பற்றி தேவாலய அங்கத்தினர்கள் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.’”§§

ஶ்ரீ சுப்பிரமுனியாவின் வெளிப்புற வாழ்க்கை தனது சமயப்பணியை தொடங்கி தனது குழுவில் இருந்த துறவிகளுக்கு பயிற்சி அளிப்பதில் இருந்தாலும், அவரது உட்புற வாழ்க்கை அதிக தீவிரமாக மற்றும் வலுவாக வளர்ச்சி அடைந்துக்கொண்டு இருந்தது. அந்த இரண்டையும் சமநிலையில் வைத்திருப்பது, அவருக்கு ஒரு சவாலாகவே இருந்தது. தான் ஆத்ம ஞானத்தின் உட்புற வேலையை செய்ய இந்த பூமியில் பிறவி எடுத்ததாகவும், அதே போல ஆன்மீக மறுமலர்ச்சியை வழிநடத்தி சென்று, தயார்நிலையில் இருப்பவர்களுக்கு சூட்சும ஞான உண்மைகளை கொண்டு வருவதற்காக தான் சிறுவயது முதல் தயாராக இருந்தாகவும் அவர் பிற்காலத்தில் குறிப்பிட்டார். ஆனால் அந்த இரண்டு விருப்பங்களும், மிகவும் பெரியதாக இருந்ததால், அவை எப்போதும் தங்களுக்குள் இணக்கம் இல்லாமல் இருந்தன. §§

சில சமயங்களில், அவரது மெய்ஞ்ஞான மனம் இன்னொரு உலகில் உயர்வாக சென்றுகொண்டு இருக்க, ஒரு லௌகீக விஷயத்தைப் பற்றி உபதேசம் வழங்க வேண்டியிருந்தது. அவர் வெளிப்புற உலகில் செயல்பட்டு, மற்றவர்களுடன் பேசி, வழிகாட்டி மற்றும் அவர்களை ஊக்குவிக்க, அவர் லௌகீக வாழ்க்கைக்கு இறங்கி வந்து, வாழ்க்கை பற்றிய “வழக்கமான" கண்ணோட்டத்தை பெறுவதற்கு கடுமையாக முயற்சி செய்யவேண்டி இருந்தது. அவருக்குள் இருந்த தனிமையான, சூட்சும ஞான யோகி, சில சமயங்களில் ஆன்மீக அமைப்பின் நிறுவனருக்கு முரணாக செயல்பட்டார். ஆனால் அவர் இவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு, தனது வாழ்க்கையில் இந்த இரண்டு குறிக்கோள்களும் வெற்றி பெறுவதற்கு உறுதியாக முயற்சி மேற்கொண்டு வந்தார். §§

லௌகீக வாழ்க்கை சூட்சும ஞானிகளுக்கு எப்போதும் எளிமையாக இருந்தது இல்லை. அவர்கள் வெளிப்படையாக கூர்உணர்வுடன் இருந்தாலும், அவர்கள் தங்களது மற்ற புலன்கள் அனைத்திலும் வலுவடைவதால், செயல்படுவது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. கூர்உணர்வுடன் இருக்கும் பண்பை, பலவீனம் என்று சொல்ல முடியாது. ஆனால் சூட்சும ஞானிகள், மற்றவர்களை விட அதிக மாற்றமடைந்து இருக்கிறார்கள். §§

1960 களின் தொடக்கத்தில், நான் அதிகமான மாணவர்களின் விரிவாக்கத்தின் மீது தீவிரமான கவனம் செலுத்தி வந்ததால், உலகில் செயல்புரிவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஒரு சிறிய காகிதத்தை காட்டிலும் பாரமான ஒரு பொருளை நான் தூக்கிய ஒவ்வொரு முறையும், எனது உள்ளங்கைகள் மற்றும் கைகள் பிரகாசமாகியது, மற்றும் நான் தூல உடலை பார்க்காமல் எனது உட்புற உடலை பார்த்தேன். நான் ஒரு புத்தகம் அல்லது ஒரு நாற்காலியை சுமந்து சென்றால், முதலில் எனது கைகள் பிரகாசமடைந்து, பின்னர் அந்த ஒளி கையின் மேற்புறம் மற்றும் கீழே கால்களை நோக்கி பரவிய, ஒவ்வொரு முறையும் உடல் மறைய தொடங்கியது. இது எனது வாழ்க்கையில் சுமார் ஆறு வருடங்களுக்கு தொடந்தது. இந்த காலகட்டத்தில், எனக்கு ஒரு சிறிய காகிதமும் பாரமாக தோன்றியது. கைக்கடிகாரம் கட்டினால், கையின் அந்த பகுதி பிரமாசமடைந்ததால், அதை அணிவதும் கடினமாக இருந்தது. என்னை சுற்றி இருந்த மற்ற விஷயங்களை காட்டிலும், படிகத்தால் உருவாக்கிய நெகிழி போல அழகாக காட்சி அளித்த பிரகாசமான உள்ளங்கை மீது நான் அதிக கவனத்துடன் இருந்தேன். பிரகாசமான சக்தியில் மின்னிய அவை அனைத்தையும், நான் விருப்பத்துடன் பார்த்துக்கொண்டு இருப்பேன். அது பார்பதற்கு அற்புதமாக இருந்தது. §§

வாகனத்தை ஓட்டும் போது, அதிக வேடிக்கையாக இருந்தது. ஏனென்றால் நான் எனது கைகளை சக்கரத்திருப்பி மீது அழுத்தும் ஒவ்வொரு முறையும், எனது உடல் முழுவதும் எனது உடல் முழுவதும் பிரகாசிக்க தொடங்கி, எனக்கு முன்பாக வாகனத்தில் அடர்ந்த பகுதியாக இருந்த அடிச்சட்டத்தை பார்க்க ஆரம்பிப்பேன். வாகனத்தின் மேலிருந்த பகுதிகள் அனைத்தும், மக்களும் மெதுவாக மறைந்து விடுவார்கள். என் கண்களுக்கு அதிக எடையுள்ள உலோகங்கள் மட்டுமே தெரியும். §§

ஒரு சூட்சும ஞானி விரும்பினால், உண்மையில் ஒரு அற்புதமான உலகில் வாழலாம். இனி நான் விரும்பினால் அந்த நிலையில் நிலைத்து இருக்கலாம். அது இனி ஒரு அனிச்சையான நிலையாக இல்லாமல், ஒரு தனிச்சையாக இருக்கிறது. நான் ஒரு முறை அந்த நிலையில் இருந்த போது, குப்பைத் தொட்டியை நடைபாதை வரை எடுத்து செல்லவேண்டி இருந்தது. அப்போது எனக்கு உதவியாக யாரும் இல்லை. நான் அப்போது அதிக அவதிக்கு உள்ளானேன். நான் சிறிது தூரம் சென்றதும், உடல் முழுவதும் பிரகாசிக்க தொடங்கின மற்றும் நான் அதை மீண்டும் கீழே வைக்க வேண்டியிருந்தது. இறுதியாக, நான் அதிக முயற்சி மேற்கொண்டு, அதை செய்து முடித்தேன். நான் நீண்ட தூரம் நடந்து சென்றது போல தோன்றியது. இதற்கிடையில் தொலைப்பேசி மணி அடிக்க தொடங்கினால், அதன் ஒலி மிகவும் பலமாக இருந்தது, மற்றும் தொலைப்பேசி அழைப்புக்கு பதில் சொல்ல எனது தூல அம்சங்களை மீண்டும் ஒன்று சேர்ப்பது மிகவும் கடினமாக இருந்தது. §§

image§

1950 களின் இறுதியில், ஶ்ரீ சுப்பிரமுனியா தனது ஆன்மீக பணியை நிர்மாணம் செய்துக்கொண்டு இருந்த போது, தனது தலையில் சிவபெருமான் நடனமாடுவதாக ஒரு காட்சியை கண்டார். அவர் அந்த காட்சியுடன் இசைக்கருவிகள் இசைக்கப்படுவதை கேட்டார் மற்றும் அதே சமயத்தில் இரண்டு விசித்திரமான கதவுகள் திறப்பதையும் கண்டார். அந்த கதவுகள் தனது எதிர்கால கோயிலின் நுழைவாயில் என்பதை அவர் பின்னர் தெரிந்துகொண்டார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

மார்க் டிவெயினுக்கு பிடித்தமான வடிப்பாலை §

1962 ஆம் ஆண்டு கோடைகாலத்தில், அங்கோரா ஏரியில் தனிமையாக இருந்த பிறகு, ஶ்ரீ சுப்பிரமுனியா தனிமை மற்றும் அமைதியை தரும் ஒரு நிரந்தர மையத்தை நாடி, அருகில் இருந்த நெவாடா மாநிலத்தின் விர்ஜினியா சிட்டிக்கு சென்றார். அவரது தேடுதல் வேட்டை விரைவில் முடிவடைந்தது. அமெரிக்க எல்லையில் பிரபலமாகவும் செழிப்பாகவும் இருந்த இந்த நகரத்தின் பள்ளத்தாக்கில் இருந்து சுமார் கால் மைல் தூரத்தில், அவர் ஒரு பெரிய ஒரு பாழடைந்த வடிப்பாலையை தேடிப்பிடித்தார். அது 1864 ஆம் ஆண்டு புகழ்பெற்ற காம்ஸ்டாக் லோட் கோல்ட் ரஷ் என்ற இடத்தில் கட்டப்பட்டு இருந்தது. அந்த வடிப்பாலை விற்பனைக்காக காத்து இருந்தது. §§

சேஜ்பிரஷ் என்ற புதர்செடி மற்றும் பினியான் பைன் நிலபரப்புடன், மலைகள் நிரம்பியிருந்த அதன் எளிமையான சியரா நெவாடா நிலப்பரப்பு, மற்றவர்களுக்கு அச்சுறுத்துவதாக இருக்கும், ஆனால் அது அவரை வெகுவாக கவர்ந்தது. அது யோகிகளுக்கு தேவையான தனிமை மற்றும் அமைதியுடன் இருந்தது. அந்த இடத்தில் வெளிப்புறத்தை விட உட்புறத்திற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. அவர் அதற்குள் நுழையும் போது, “இங்கே ஆசிரமம் கட்டினால் மிகவும் அற்புதமாக இருக்கும்!” என்ற எண்ணம் அவருக்கு முதலில் உதித்தது. அவர் உட்புறத்தில் பெரிதாக இருந்த அறைகள் மற்றும் மூன்று தளங்களை சுற்றிப்பார்த்தார், மற்றும் அடையாள சின்னமாக விளங்கிய அந்த கட்டிடம் பாழடைந்த நிலையில் இருந்தாலும், அவர் அதை வாங்க ஏற்பாடு செய்தார். §§

ஓல்ட் நெவாடா பிரீவரி என்று அழைக்கப்பட்ட அந்த கட்டிடம், அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் மார்க் டிவெயினுக்கு பிடித்த இடமாக இருந்தது. சாமுவேல் கிளமென்ஸ் (டிவெயினின் உண்மையான பெயர்) முதலில் ஒரு எழுத்தாளராக இருந்தார். அவர் அதன் பின்னர் 1862 முதல் 1864 வரை, விர்ஜினியா சிட்டியில் டெர்ரிடோரியல் எண்டர்பிரைஸ் என்ற பத்திரிகையில் இதழாசிரியராக இருந்தார். அவர் அந்த சமயத்தில் பிரபலமான ரஃபிங் இட் என்ற நாவலை எழுதினார். மிகவும் பெரிய மற்றும் பிரபலமான மதுபானக்கடையின் பீர் தோட்டங்களில், ஒவ்வொரு மதியமும் முரடர்களாக இருந்த சுரங்க தொழிலாளிகளுக்கு நீளமான வியக்கவைக்கும் கதைகளை சொன்னதாக கூறப்படுகிறது. மேலும் அங்கே பெரிய கூட்டம் கூடியிருந்தது. அந்த காலத்தில், புதர்கள் படர்ந்த குன்றுகளில் பள்ளம் தோண்டி தங்க வேட்டை நடத்த, உலகெங்கிலும் இருந்து வைல்ட் வெஸ்ட்டை நோக்கி வந்த மக்கள் வெள்ளம் காரணமாக, விர்ஜினியா சிட்டியில் 30,000 மக்கள் இருந்தனர். அது சான் பிரான்சிஸ்கோ மக்கள் தொகையில் பாதியாக இருந்தது. §§

அடையாள சின்னமாக விளங்கிய அந்த கட்டிடத்தின் செங்கல் மற்றும் ஆடரம்பர மரவேலைப்பாடுகள் நிரம்பிய அறைகளில், அதன் புதிய உரிமையாளர் ஶ்ரீ சுப்பிரமுனியா காலடி எடுத்து வைக்கும் போது, அது சுமார் அரை நூற்றாண்டு பழமையான ஒரு அமைதியான நினைவுச் சின்னமாக மாறி இருந்தது. நரைத்த முடியுடன் கனிவளம் தேடிய ஒரு முதியவர், அந்த கட்டிடத்தின் காப்பாளராக இருந்தார். அவர் தனது கோவேறு கழுதையை அடித்தளத்திலும், ஒரு பன்றியை குளியலறையிலும் வைத்து இருந்தார். அவருக்கு காது சரியாக கேட்கவில்லை மற்றும் அவரது குடியிருப்பின் முதலாளி மாறியுள்ளார் என்று சொல்லி, அவரை புரியவைப்பது மிகவும் கடினமாக இருந்தது. §§

அந்த கட்டிடத்தை ஶ்ரீ சுப்பிரமுனியாவின் தரத்திற்கு கொண்டு வர, தேவாலய குடும்பங்கள் அந்த கோடைகாலத்தில் மீதம் இருந்த நாட்கள் முழுவதும், தங்களிடம் இருந்த சக்தி, ஆர்வம் மற்றும் பணத்தை பயன்படுத்தி, ஒரு அனாதை சிறுவனை பெற்றோர்கள் அரவணைப்பது போல, அவர்கள் அந்த ஆசிரமத்தை உடனே தத்து எடுத்துக்கொண்டனர். பனியால் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்ட நெவாடா குளிர் காலம் முழுவதும், சில துறவிகள் பொறுப்பாளர்களாக இருந்தார்கள் மற்றும் பெரிய அளவிலான சீரமைக்கும் பணி, வசந்த காலத்தில் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தன. அந்த ஆசிரமத்தில் தங்கவிருக்கும் துறவிகளின் கடவுளாக முருகன் என்கிற ஸ்கந்தன் விளங்குகிறான் என்கிற ஶ்ரீ சுப்பிரமுனியாவின் நுண்ணறிவை பிரதிபலிக்கும் வண்ணம், அது ஸ்கந்தமலை மடாலயமாக மாறியது (மவுன்ட்டன் டெசர்ட் மடம் என்றும் அழைக்கப்பட்டது). §§

அது பிற்காலத்தில் ஒரு பிரதான வெளியீடு மற்றும் அச்சுக் கூடமாக, விரைவாக வளர்ச்சி அடையத்தொடங்கியிருந்த இமாலயன் அகாடெமியின் பயிற்சி வகுப்புக்கள் மற்றும் திட்டங்களின் புதிய மையமாக மாறிய காம்ஸ்டாக் ஹவுஸின் மன்றமாக மாறியது. கடல் மட்டத்திலிருந்து 6,500 அடிகள் உயரத்தில் இருந்த இந்த தனிமையான, அமைதியான மற்றும் காற்றோட்டமான மலைப்பகுதியில், ஶ்ரீ சுப்பிரமுனியா தனது துறவிகள் குழுவிற்கு வேதாந்தம், சித்தாந்தம் மற்றும் இலக்கியம், பயண திட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் மூலம் சைவ சமயத்தில் பல வருடங்களுக்கு பயிற்சி அளித்தார். §§

LSD என்கிற உளமாற்றி மருந்து ஏற்படுத்திய இரசாயன குழப்பம் §

1964 ஆம் ஆண்டு, உளமாற்றி இயக்கம் மற்றும் போதை மருந்துகளின் காலம் உச்சத்தை அடைந்து இருந்த போது, ஹிப்பிக்கள் மற்றும் மலர் குழந்தைகளின் முதல் குழுவினரை, அமெரிக்க தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகள் உலகிற்கு முதலில் படம்பிடித்து காட்டின. அந்த இயக்கத்தின் தலைமை இடமாக இருந்த ஹைட்-ஆஷ்பரி என்ற குடியிருப்பு, சிறியதாக மற்றும் சாதரணமாக சான் பிரான்சிஸ்கோவில் முன்பு அறியப்படாத பகுதியாக இருந்தது. அது சாக்ரமெண்டோ தெருவில் இருந்து ஒரு மைல் தூரத்தில் இருந்தது. ஹிப்பி இயக்கம் மற்றும் இந்த மாவட்டத்தைப் பற்றி, நாடு முழுவதும் செய்தி ஒலிபரப்பப்பட்டதால், இந்த இடத்திற்கு அமெரிக்கா முழுவதிலும் இருந்து இளைஞர்கள் வரத்தொடங்கினார்கள். §§

அது அமெரிக்காவில் போதை மருந்து சகாப்த தொடக்கத்தின் ஒரு விசித்திரமான அம்சமாக விளங்கியது. மேலும் அது தீவிரமடையும் வரை, அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்த நகரத்திற்கு பெருமளவில் மக்கள் வருவதையும், அதற்கு தேசிய செய்தி நிறுவனங்கள் வழங்கிய முக்கியத்துவத்தையும் கவனித்த ஶ்ரீ சுப்பிரமுனியா, மாநகராட்சி தலைவர் அலுவலக ஊழியர்கள் மற்றும் இந்த பிரச்சினையை கவனித்த பல்வேறு சமய மற்றும் சமூக சேவகர்களுக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். இதன் விளைவாக, இந்த போதை மருந்து கலாச்சாரத்தில் இணைவதற்காக, இந்த நகரத்திற்கு வரவிரும்பிய இளைஞர்கள் வரவேண்டாம் என்று கடுமையாக எச்சரித்து, மாநகராட்சி தலைவர் மற்றும் மற்றவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொடரை சான் பிரான்சிஸ்கோ கிரோனிக்ள் வெளியிட்டது. §§

ஹிப்பி இயக்கத்தின் தொடக்க காலத்தில், அமெரிக்காவில் இருந்தவர்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் புரியவில்லை. அது ஏற்படுத்தும் உடல் உபாதைகள் மற்றும் ஆபத்துக்களை பற்றி ஶ்ரீ சுப்பிரமுனியா அறிந்து இருந்து, அதற்கு எதிராக பேசவும் செய்தார். ஆனால் இந்த பிரச்சினை நாடு முழுவதும் தலைவிரித்து ஆடும் என்பதை அவரும் ஊகிக்கவில்லை. §§

பொழுதுபோக்கு பயனர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த LSD பற்றி நான் முதல் முறையாக அறிந்த போது, அதைப்பற்றி தெரிந்துக்கொள்ள மென்லோ பார்க் கிளினிக் சென்றேன். நான் அங்கிருந்த ஒரு மனநல மருத்துவரிடம் பேசினேன். இந்த மருந்து வழங்கும் பல்வேறு அனுபவங்களை பற்றி அவர் என்னிடம் விளக்க ஆரம்பித்தார். “ஆன்மீக வெளிப்பாடுகள், விரிவாக்கம் பெற்ற சாட்சி, பேரானந்தம் மற்றும் பிரகாசமான உட்புற அனுபவங்களாக நீங்கள் விளக்கும் அனுபவங்களில் சிலவற்றை, நான் தியான சக்தியின் மூலம் கடந்த இருபது வருடங்களாக எனது வாழ்க்கையிலும் அனுபவித்து வருகிறேன்,” என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவர், “அப்படியென்றால், நீங்கள் ஒரு அதிஷ்டசாலி என்று நினைக்கிறேன். சரி தானே?” என்று கேட்டார். §§

இந்த சிக்கல் தேவாலயத்தின் மீதும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. நாட்கள் செல்ல செல்ல, வகுப்புக்கள் மற்றும் சேவைகளுக்கு விசித்திரமாக தென்பட்ட விருந்தாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆயிரக்கணக்கான LSD பயனர்களுக்கு, அமெரிக்க குரு பல வருடங்களுக்கு ஆலோசனை வழங்கினார். அந்த மருந்துகள் தவறானவை இல்லை, ஆனால் சூட்சுமமான அனுபவங்களை பெறுவதற்கு ஒரு பழமையான, இயல்பான மற்றும் நிரூபிக்கப்பட்ட வழி இருக்கிறது என்பதே அவரது மைய கருத்தாக இருந்தது. §§

போதை மருந்துகளில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்றும், அதற்கு பதிலாக யோகப்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் இளைஞர் சமுதாயத்தை கனிவாக ஊக்குவித்தார். அந்த மருந்துகள் அதைப்போன்ற அனுபவங்களை வழங்கினாலும், அவை அவற்றை பற்றிய அடிப்படை அல்லது புரிந்துணர்வை வழங்குவதில்லை, மற்றும் அதே அனுபவம் அல்லது பயனை மீண்டும் வழங்க வாய்ப்பில்லை என்று அவர் இளைஞர்களிடம் அந்த மருந்துகளில் இருந்த பிரச்சினைகளைப் பற்றி விளக்கினார். நரம்பு அமைப்பு மற்றும் மனதிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு ஆதாயமாக எதுவும் கிடைப்பதில்லை. அவர் சொன்ன வார்த்தைகள் எப்போதும் குற்றம் சுமத்துவதாக இருந்ததில்லை, ஆனால் அவர்கள் அனுபவித்த மற்றும் அவரிடம் தெரிவித்த ஆழமான மனதின் நிலைகளை பற்றி அவர் தனிப்பட்ட முறையில் அறிந்து இருந்ததால், அவர் சொன்ன வார்த்தைகள் விசேஷ சக்தியுடன் இருந்தன. அவர் அந்த ஆழமான மனநிலைகளுக்கு சென்று வந்ததை, அவர்கள் கவனித்து இருந்ததால், அவர் வழங்கிய ஆலோசனையை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். §§

ஶ்ரீ சுப்பிரமுனியாவின் நகரத்தை மையமாக கொண்டிருந்த, இந்த சமூக இடையூறின் மீது அவர் மேற்கொண்ட தியானங்களின் மூலம், அவர் கோயிலில் “இரசாயன குழப்பம்" என்ற பெயரில் ஒரு உரை வழங்கினார். அது உளமாற்றி இயக்கம் மற்றும் அதன் தத்துவம் பற்றிய ஒரு விளக்கம் மற்றும் விமர்சனமாக இருந்தது. இந்த மருந்துகளை பயன்படுத்தியதால் வேதனையை அனுபவித்த நபர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு துறவிகள் மற்றும் வயதுவந்தோருக்கு ஆலோசனை வழங்குபவர்களிடம் கேட்டுக்கொண்டார். அவர் நகரத்தின் மந்திரிகள் மற்றும் மற்றவர்கள் மத்தியில், இந்த பிரச்சினையின் இயல்பைப் பற்றிய புரிந்துணர்வை பரப்புவதற்கு பெருமளவு முயற்சியை மேற்கொண்டார். §§

1960 களின் தொடக்கத்தில், உளமாற்றி அனுபவத்தின் மூலம் திறந்து கொண்ட மனதின் உயர்நிலைகளில், தாங்கள் பெற்ற அனுபவங்களின் அம்சங்கள் பற்றி, என்னிடம் ஆலோசனை பெறுவதற்கு நாளுக்கு நாள் அதிகமான மக்கள் வருகிறார்கள் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். தாங்கள் பெற்ற இந்த அனுபவங்களுடன், யோகம் மற்றும் தியானத்தின் மூலம் கிடைக்கும் உணர்வை தொடர்புபடுத்துவதில் அவர்கள் ஆர்வத்துடன் இருந்தார்கள். ஒருவருக்குள் இருக்கும் உட்புறத்தின் மீது அந்த நபருக்கு அனுமதி வழங்க, சிலநேரங்களில் பல வருடங்கள் தேவைப்படும் கடினமான யோக பயிற்சிகளுக்கு செல்லாமல், அதே பலனை மிகவும் விரைவாக, அடக்கமாக தென்பட்ட இந்த தியானத்தின் மூலம் கிடைத்ததால், அவர்கள் தங்களது புதிய உலகை நினைத்து அதிக உற்சாகத்துடன் இருந்தார்கள். இப்போது நாடு முழுவதும் இருக்கும் மக்கள், தங்களுக்குள் இருந்த உலகின் மீது விழிப்புணர்வை பெற தொடங்கி இருக்கிறார்கள். §§

சில உளமாற்றி அனுபவங்களை பெற்ற சாதகர்களுடன் நான் நேர்காணல் நடத்தி இருக்கிறேன். அதன் மூலம் ஒரு புதிய உலகில் அதிக ஆற்றல் மற்றும் அதிக துடிப்புணர்வுடன், எதிர்கொள்ள தயாராக இருக்கும் சவால்களை பற்றி நான் அறிந்து கொண்டேன். நான் அதைப்போன்று வேறு சிலரையும் சந்தித்து இருக்கிறேன். அவர்கள் வெற்றுப் பார்வையுடன், தங்கள் விருப்பங்களை மற்றும் தங்கள் சுய-மரியாதையையும் இழந்து இருப்பதையே என்னால் காண முடிகிறது. அதற்கு முன்பு அவர்களது மனதின் சக்தி பாய்ந்து சென்ற அமைப்பை அவர்கள் இழந்து இருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும், மற்றும் அந்த இழப்பு ஈடு செய்யப்படவில்லை. §§

ஒரு நாடு அல்லது உலகம் முழுவதும், ஒரு சிறிய “அமிலத்தை" சுற்றி ஒரு இயக்கம் உருவாவதை நான் பார்க்க விரும்பவில்லை. இளம் ஆன்மாக்களிடத்தில், இது பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் நான் இதை பார்க்க விரும்பவில்லை. தன்னை தயார்படுத்திக் கொள்ளாமல் விரிவாக்கம் செய்துக்கொண்டு சில இளம் ஆன்மாக்கள், மனோஉணர்வு திறனால் சிக்கி தவிக்கிறார்கள். அவர்கள் சிந்தனை உருவங்களை ஆய்வு செய்யலாம், ஒளி உடல்களை பார்க்கலாம் அல்லது சூட்சும உலகில் பயணம் செய்யலாம். ஒருவர் ஆத்ம ஞானம் பெறும் வரை, இந்த மனோஉணர்வு பாதையை தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் யோகத்தில் குறிப்பிடுவோம். ஏனென்றால் நாம் உயர்ந்த சக்திகள் மற்றும் அழகான அனுபவங்களுக்கு மனதை திறந்து கொண்டால், நாம் முதுகுத்தண்டின் அடியில் மூலாதார மையத்திற்கு கீழே இருக்கும் நிழல் உலக சக்கரங்களின் வெறுக்கத்தக்க அனுபவங்களுக்கு நம்மை திறந்து கொள்கிறோம். அந்த உணர்வு பகுதிகளை பூர்வாங்க பயிற்சி இல்லாமல், நம்மால் கட்டுப்படுத்த முடியாது. §§

image§

1960 மற்றும் 1970களில் தூண்டுதல், போதை மருந்து பரிசோதனை மற்றும் ஆன்மீக வேட்கை நிரம்பி இருந்த காலத்தில், ஶ்ரீ சுப்பிரமுனியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்த முக்கிய பல்கலைக்கழகங்களில் தொடர்ச்சியாக சொற்பொழிவுகளை நடத்தி, ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அத்வைத பாதையை கற்றுத் தந்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

விரிவாக்க செயல்முறையில் இருக்கும் தனது மாணவர்களின் உயர்நிலை உலகங்கள் திறக்கும் போது, கீழ்நிலை உலகங்களை மூடி, அவர்களை எப்படி காப்பாற்றுவது என்பதை யோகம் கற்றுக்கொடுக்கும் குரு அறிந்து இருக்கிறார். இதை எப்படி செய்வது என்பதை அவர் அறிந்து இருக்கிறார், ஆனால் அதற்கு நிலையான பயிற்சி மற்றும் கால அவகாசம் தேவைப்படுகிறது. உளமாற்றி அனுபவத்தை பெற்று, சாலையில் சில வீடுகளை கடந்து செல்ல முடியாமல் தவிக்கும் சிலரை நான் சந்தித்து இருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட வீட்டில் நடைபெறும் வாக்குவாதத்தின் எதிர்மறை விசைப்பகுதியின் மீது அவர்கள் கூர்உணர்வுடன் இருப்பதால், அவர்களால் அந்த வீட்டை கடந்து நடக்க முடிவதில்லை. இதில் சிலர் தங்களது கீழ்நிலை மனதின் அதிக நுணுக்கமான சக்திகளை விரிவாக்கம் செய்துக்கொண்டு உள்ளனர். §§

“தூண்டுதலை பெற்ற" மற்றும் “தூண்டுதலை பெறாத" மக்களுக்கு இடையே உருவாகி இருக்கும் இடைவெளியை, தியானம் செய்து மனதின் மீது கட்டுப்பாட்டை பெறுவதன் மூலம், ஒருவர் தனக்கு தலைவனாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. நீங்கள் உங்களுக்கு தலைவனாக இருக்கும் போது, நீங்கள் தனிமையில் இல்லாமல், முழுமையில் தனியாக நிற்கிறீர்கள். அவ்வாறு செய்யும் போது, தியானத்தின் செயல்முறை மூலமாகவும், ஒரு பிரச்சனையை பற்றி உட்கார்ந்து சிந்தித்து, இறுதியில் அதை முழுமையான மெய்ஞ்ஞான கண்ணோட்டத்துடன் பார்த்து, புத்துணர்வு நிரம்பிய பலன் தரக்கூடிய பதிலை வெளிக்கொண்டு வருவதன் மூலமாகவும், உங்களால் அறிவு மற்றும் ஞானத்தை வெளிக்கொண்டு வர முடிகிறது. தியானம் ஒரு வலுவான செய்முறை. அது ஓரிடத்தில் அமர்ந்து காத்து இருப்பதை விட உயர்வானதாக இருக்கிறது. அது ஒரு உயர்வான தனிப்பண்புடைய மனதை உருவாக்குகிறது. §§

1967 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அவர் Dr. ரிச்சர்ட் அல்பெர்ட்டுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். அந்த நபர் Dr. டிமோதி லியரியுடன் சேர்ந்து, LSD பிரசாரகராக மாறி, “டியுன் இன், டர்ன் ஆன் மற்றும் ட்ராப் அவுட்" என்ற வாசகத்தின் மூலம் அமெரிக்க இளைஞர்களின் ஆர்வத்தை அவர்கள் தூண்டிவிட்டனர். அந்த சந்திப்பை ஒரு இளம் வயது துறவி ஏற்பாடு செய்து, ஶ்ரீ சப்பிரமுனியாவுடன் அந்த சந்திப்பில் கலந்து கொண்டார். ஒரு பெர்க்லி அபார்ட்மெண்ட்டில் நடந்த ஒரு ஸ்பகெட்டி விருந்தில், LSD தூண்டிய பிரகாசமான மற்றும் சில சமயங்களில் அழிவை ஏற்படுத்தும் மனநிலைகளை பற்றி விவாதித்தனர். §§

ஶ்ரீ சுப்பிரமுனியா அவரிடம், இயல்பான வழியில் உயர்ந்த உலகங்களை அடைந்த ஆன்மாவிற்கு அந்த உலகம் திறந்து இருப்பதாகவும், ஆனால் போதை மருந்துகளை பயன்படுத்தி தகுதியற்ற மக்கள் சூட்சும ரீதியாக வரத் தொடங்கியதும், தேவர்கள் கதவுகள் அனைத்தையும் மூடி விட்டதாகவும் கூறினார். அவரும் டிமோதி லியரியும் இணைந்து செய்யும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும் என்று ஶ்ரீ சுப்பிரமுனியா அவரை எச்சரித்து, போதை மருந்துகளை பயன்படுத்தும் ஆன்மாக்கள், தங்கள் உணர்வை விரிவாக்கம் செய்ய இயலாமல் கீழ்நிலை உலகில் சிக்கிக்கொள்ளும் என்றும் கூறினார். §§

அந்த அந்தி சாயும் நேரத்தில், எப்போதும் சுற்றிக்கொண்டு, நூறு முறை LSD எடுத்துக்கொண்டிருந்த, முன்னாள் ஹார்வர்ட் பேராசிரியர், இளைஞர்கள் வாழ்க்கையுடன் விளையாடுவதால், அவர் கர்மவினைகளை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார் என்று ஶ்ரீ சுப்பிரமுனியா கடுமையாக எச்சரித்த போது, அந்த பேராசிரியர் முன்பக்கமாக சாய்ந்து கவனமாக கேட்டுக்கொண்டு இருந்தார். அல்பெர்ட் இந்த நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்று திடமாக கேட்டுக்கொள்ளப்பட்டார். அவர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும், அதன் பின்னர் அவரது வாழ்க்கையின் போக்கை மாற்றிய இந்திய பயணத்திற்கு அந்த உரையாடல் ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும். அவர் அதன் பிறகு விரைவில் தன் மனதை மாற்றிக்கொண்டு, LSDக்கு எதிராக மக்களிடம் பேசினார். அவர் இந்தியா சென்று நீம் கரோலி பாபாவின் சீடனாகி, ராம் தாஸ் என்ற பெயரையும் பெற்றார். §§

மேலும் 1967 ஆம் ஆண்டு, ISKCON ஐ நிறுவிய, வைணவ குரு சுவாமி பிரபுபாதா, ஹைட்-ஆஷ்பரி மாவட்டத்தின் எல்லையில் இருந்த பிரெடெரக் ஸ்ட்ரீட்தில் ஒரு சிறிய கிருஷ்ணன் கோயிலை கட்டுவதற்காக, சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் குடிபுகுந்தார். இந்தியாவில் இருந்து வந்த குருவை, எப்போதும் போல ஶ்ரீ சுப்பிரமுனியா சந்தித்து வரவேற்பை வழங்கி, அமெரிக்காவில் அவர் கோயிலை நிறுவுவதற்கு வேண்டிய உதவிகளை செய்தார். சுவாமி பிரபுபாதாவின் சீடர்களுக்கு, ஶ்ரீ சுப்பிரமுனியாவின் குழுவில் இருந்த அங்கத்தினர்கள் அவ்வப்போது பழங்கள் மற்றும் தானியங்களை பெட்டிகளில் எடுத்து சென்று உதவி செய்தனர். அவர் சாஸ்திரங்களில் இருந்து நீளமான கதைகளை சொல்லி ஶ்ரீ சுப்பிரமுனியாவின் சீடர்களை மகிழ்விப்பார். ஒரு முறை அவர் சாக்ரமெண்டோ ஸ்ட்ரீட் கோயிலுக்கு வந்திருந்து, ஒரு உபதேசம் வழங்கி பஜனையையும் முன்னின்று நடத்தினார். §§

அமெரிக்காவில் சின்மயா மிஷன் தொடங்க உதவி தேவைப்பட்ட போது, சுவாமி சின்மயானந்தாவிற்கு தனது வழக்கறிஞரின் சேவையை அனுமதித்தது போல, அமெரிக்காவில் சமயப்பணி நோக்கத்துடன் வந்த இந்து தலைவர்களுக்கு, ஶ்ரீ சுப்பிரமுனியா பல வருடங்களுக்கு வேறு பல வழிகளிலும் உதவி செய்து வந்தார். §§

பொறுப்பு ஏற்றல் §

1950 களில் மற்றும் 60 களின் தொடக்கத்தில், தேவாலயத்தில் மதர் கிறிஸ்டினி முக்கிய பங்கு வகித்தார். அவர் சாக்ரமெண்டோ ஸ்ட்ரீட் கோயிலில் கன்னியாஸ்திரிகள் சமூகத்தின தலைவியாக இருந்தார், மற்றும் வயதில் மூத்தவராக, ஶ்ரீ சுப்பிரமுனியாவிற்கு தனது முழு ஆதரவையும் வழங்கினார். ஒரு அன்பர், அந்த சபையில் தனது ஆரம்ப நாட்களைப் பற்றி நினைவுக் கூர்கிறார்: §§

அப்போது மதர் கிறிஸ்டினிக்கு 83 வயது. அவர் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைப்பெற்ற தேவாலய நடவடிக்கைகளின் போது, பீடத்திற்கு பின்னால் இருந்த ஒரு சிறிய அறையில் அமர்ந்துகொண்டு, ஶ்ரீ சுப்பிரமுனியா வழங்கிய உபதேசங்களில் பங்குபெறுவார். அவர் சில சமயங்களில், தனது வாழ்க்கை மற்றும் அனுபவத்தைப் பற்றி எனக்கு மற்றும் மற்ற புதியவர்களுக்கு உரை நிகழ்த்துவார். “உங்கள் குருவிற்கு கீழ்படிந்து நடக்கவேண்டும், உங்கள் குருவிற்கு கீழ்படிந்து நடக்கவேண்டும்,” மற்றும் “உங்கள் ஆன்மீக விதியை நோக்கி உங்கள் குரு வழிநடத்தி செல்வார்” போன்ற அறிவுரைகளின் மூலம் அவர் எப்போதும் ஶ்ரீ சுப்பிரமுனியாவிற்கு ஆதரவாக இருந்தார். §§

அதே சமயத்தில், மதர் கிறிஸ்டினி தொடர்ந்து கிறுத்துவ தாக்கத்திற்கு ஆதரவாக இருந்தார். அவருக்கு வயதாகியது, ஶ்ரீ சுப்பிமுனியா ஒரு இந்து குருவாக முழு அதிகாரத்தையும் பயன்படுத்தத் தொடங்கிய போது, அவர் தேவாலயத்தில் சில நிர்வாக மாற்றத்தை ஏற்படுத்த முயன்றார். அவரது முயற்சிகள் தோல்வி அடைந்தன; மற்றும் 1967 ஆம் ஆண்டில், முதுமை காரணமாக, சபையில் இருந்து விலகி, தனது மகனுடன் சேர்ந்து வாழ சென்றுவிட்டார். அதன் பிறகு தனிப்பொறுப்பு வகித்த ஶ்ரீ சுப்பிரமுனியா, தனது சமூகத்தின் போதனைகளில் இருந்து மதர் கிறிஸ்டினியின் ஆன்மீக கிறுத்தவ சமயத்தின் அடிச்சுவடுகள் அனைத்தையும் நீக்கி, தனது நிறுவனத்தை ஒரு முழுமையான இந்து அமைப்பாக புனர்நிர்மாணம் செய்தார். §§