குருமார்களின் சரித்திரங்கள்

Page 35 URL:§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/35_guru05_02.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

அத்தியாயம் இருபது §

ஒரு குகையில் இறைவனை கண்டறிதல் §

னது குருவை தேடுவதற்காக ராபர்ட் மேற்கொண்ட பயணம், அவரை ஒரு வணிக கப்பலில் பல கடல்களை கடந்து இந்தியாவிற்கும், பிறகு இரயில் மூலம் தென்னிந்தியாவிற்கும் அழைத்து சென்றது. அங்கே அவர் சிலோன் செல்லும் பயணப்படகில் ஏறி, மார்ச் 1947 கொழும்பு வந்து சேர்ந்தார். கிரேஸ் பர்ரோஸ் ஏற்பாடு செய்திருந்ததைப் போல, தியானம் மற்றும் மறைஞானத்தில் ஒரு சிங்கள பௌத்த ஆசிரியராக இருந்து, 1930 களின் மத்தியில் அமெரிக்காவிற்கு சென்று, அங்கிருந்த சாதகர்கள் மனதை கவர்ந்த தயானந்த பிரியதாசியிடம் பயின்றார். §§

இளம் அமெரிக்கரை புதிய சிந்தனைகள் மற்றும் தனிப்பட்ட சோதனைகள் மூலம் எதிர்கொண்ட தயானந்தா, தனது மாணவனின் திறமைகளை சோதிக்கும் ஆசிரியராக இருந்தார். இதன் மூலம், இந்த உலகில் நல்ல செயல்களை செய்து முடிக்கும் கலையை ராபர்ட் தெரிந்துக்கொண்டு, ஒரு ஆன்மீக ஆசிரியர் வழங்கும் உத்தரவுகளைப் பற்றியும் தெரிந்து கொண்டார். தனது புதிய தூண்டுகோல், தனக்கு வழங்கிய பணி எவ்வளவு கடினமாக இருந்தாலும், அதை இளம் சாதகன் வெற்றிகரமாக நிறைவு செய்தார். அவர் சிலோன் வந்து சேர்ந்த சில மாதங்களில், கிராமத்து குழந்தைகளுக்கு இரண்டு பள்ளிகள் நிறுவ உதவி செய்து, மந்தமான நிலையில் இருந்த கண்டி நடனத்தை உயிர்ப்பித்து, தச்சர்கள் மின்சார ரம்பங்களை பயன்படுத்தவும் உதவி செய்தார். இதற்கு இடையில் அவர் தனது நடனக்குழுவுடன் பயணம் செய்து, தீவை சுற்றிப்பார்த்து வந்தார். §§

புதிய நாடு வழங்கும் அறிமுகங்கள் மற்றும் ஆச்சரியங்கள், அவரை உற்சாகப்படுத்தின. அவர் அங்கிருந்த மக்களின் பணிவு மற்றும் உபசரிக்கும் முறைகளை ரசித்து, அவர்களது நுணுக்கமான கலாச்சார உள்ளுணர்வைக் கற்றுக்கொண்டு, அவர்களை நேசிக்க ஆரம்பித்தார். அவருக்கு தயானந்தா தொடர்ச்சியாக வழங்கிய பணிகள் மற்றும் உத்தரவுகள், பெரும்பாலும் அரசியல் சார்ந்ததாக இருந்தன. ஆனால் இரண்டு வருடங்களுக்கு பிறகு, அந்த பணிகள் ராபர்ட்டுக்கு பாரமாக இருக்கத் தொடங்கின. அவர் தன் ஆசிரியருக்கு உதவுவதற்கும், தனது கலாச்சார பணியை நிறைவேற்றுவதற்கும் ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் தான் இறைவனை உணர்வதற்காக, சிலோன் வந்தார் என்பதை அவர் என்றுமே மறக்கவில்லை. ஒரு குகையில் தீவிரமாக சாதனா செய்யவேண்டும் என்ற விருப்பம் அவருக்கு எப்போதும் இருந்தது, மற்றும் இந்த விருப்பம் அவர் மனதில் எப்போதும் தீவிரமாக இருந்தது. §§

image§

நான்கு-வார பயணத்தின் போது, அந்த கலாச்சாரக் குழு கப்பலின் மரக்கட்டை தளத்தில் பயிற்சி செய்தனர். ராபர்ட் தனது வாழ்க்கையில், உண்மையான முதல் தனிமையை ரசித்துக்கொண்டு இருந்தார். அவர்கள் பம்பாயில் இறங்கினார்கள்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

எனது பயிற்சி இறுதியாக நிறைவுற்றது. எனது ஆசிரியர், தயானந்தா ஒரு கருத்தரங்கில் கலந்துக்கொள்ள சுவிட்சர்லாந்திற்கு பறந்து சென்றார். நான் சிலோனில் தனியாக இருந்தேன். நான் மீண்டும் குகைக்கு செல்வதைப் பற்றி சிந்தித்தேன். எனக்கு நெருக்கமான இசுலாமிய நண்பர்களில், அன்பகரா என்ற ஒரு ஆஞ்சநேய பக்தன் இருந்தார். அவர் என்னை தீவின் மத்திய வனங்களில் தொலை தூரத்தில், மலைகள் நிரம்பிய பள்ளத்தாக்கில், பலாங்கொடை நகரத்தின் குரகளா பகுதியில் இயற்கையாகவே பெரிய கல்லில் குகையாக அமைந்து இருந்த மறைவான ஜெய்லானி குகைகளுக்கு அழைத்து சென்றார். அங்கே நான் எனது ஞானோதய பாதையின் ஐந்தாவது தூண்டுகோலை சந்தித்தேன். அவர் பெயர் மஸ்தான். §§

ஜெய்லானி குகைகள், கொழும்பில் இருந்து தென்கிழக்கே 150 கிலோமீட்டர் தூரத்தில், ஒதுக்குப்புறமான வனங்களில் அமைந்து இருந்தன. இது இன்றும் ஒரு புண்ணிய தளமாக, சூபி சூட்சும ஞானிகள் ஒன்று கூடும் இடமாக விளங்குகிறது. நாங்கள் பல நாட்கள் மேற்கொண்ட பயணம் சிறிய கிராமங்கள் மற்றும் புழுதி படிந்த சாலைகளுடன், பெரும்பாலும் மக்கள் குடியிருப்பு இல்லாத, சிலோனின் மத்திய மலைப்பிரதேசம் வழியாக சென்றது. ராபர்ட் யானைகள் நதிகளில் குளிப்பதையும், காடுகளில் இருந்து மிகபெரிய சங்கிலிகளில் மரக்கட்டைகளை இழுப்பதையும் கவனித்தான். இதைப் பார்த்த அந்த அமெரிக்க நாட்டவருக்கு, அந்த இடம் தான் புத்தகங்களில் படித்து இருந்த ஷாங்கிரி-லா போன்ற, ஒரு அதிசய உலகமாக தோன்றியிருக்கக்கூடும். அவர் மிகவும் தீவிரமாக மூழ்கி இருந்த வாழ்க்கையில் இருந்து மிகவும் மாறுபட்டு இருந்தது என்பது உறுதியாக தெரிந்தது. அவர் இந்த ஒரு தனிமைக்காக வெகு நாட்களாக ஏங்கி இருந்தார். §§

மலையில் ஏறிய ராபர்ட் மற்றும் அன்பகரா, கல்தோட்டை சமவெளியைப் பார்த்த வண்ணம் அமைந்து இருந்த, மலைக்குகைகளின் தொடக்கம் வரை நடந்து சென்றார்கள். அவர்கள் பெற்ற அனுபவத்தை, 1929 ஆம் ஆண்டு அர். ஹெச். பாசெட் வெளியிட்ட ரொமான்டிக் சிலோன், இட்ஸ் ஹிஸ்டரி, லெஜன்ட் அண்ட் ஸ்டோரியில் விளக்கியுள்ளார்:§§

அந்த குகை மிகவும் சுவாரசியமான இடமாக இருந்தது. அது செயற்கை அகழ்வுகள் அல்லது சடங்குகள் தொடர்பான அலங்காரம் எதுவும் இல்லாமல் முற்றிலும் இயல்பாக இருந்தது. மலை உச்சியில் இருந்து சிறிது கீழே இறங்கியதும், ஒரு செங்குத்தான பாறையின் முகப்பில் நுழைவாயில் அமைந்து இருந்தது. உள்ளே நுழைந்ததும் ஒரு “பெரிய அறை” உள்ளது. அதன் இருபுறமும் பாதைகள் உள்ளன. வலது புறம் இருக்கும் பாதை, பூமியின் ஆழத்திற்குள் குறைந்தபட்சம் 50 கஜங்கள் சென்று, அறையில் எங்கும் பரவியிருந்த நிழலின் இருட்டுடன் ஐக்கியமாகி இருந்தது. §§

அந்த அறையின் நுழைவாயிலுக்கு எதிர்புறத்தில் அமைந்து இருந்த ஒரு குறுகிய பாதை, தியானம் செய்யும் “விளிம்பிற்கு" அழைத்து சென்றது. அது பாறையின் அதிக செங்குத்தான பகுதியின் மூலையில் 6 அடிக்கு 4 அடி அளவில் இருந்தது. அதன் மீது ஒரு பாறை கூரை போல நீட்டிக்கொண்டு இருந்தது. இங்கே ஐம்பது அடி உயர பெரும் பாறையின் அடியிலும், 600 அடி உயர செங்குத்தான பாறையின் விளிம்பிலும், அமர்ந்து இருக்கும் ஒரு துறவிக்கு, தனக்கு அடியில் உடையாமல் படர்ந்து இருக்கும் மரங்களின் கடலுக்கு மத்தியில் உண்மையான அமைதியும், ஆழ்ந்த சிந்தனைக்கு தூண்டுதலும் கிடைக்கும். இந்த பாறையின் சிறிய துவாரத்தில் நுழைந்ததும், இந்த மெல்லிய விளிம்பில் அமர்ந்து இருப்பவருக்கு பின்புறத்தில் முழுமையான பற்றற்ற சூழல் வியாபிக்கிறது. இந்த பிரம்மாண்டமான நிலப்பரப்பின் சிக்கலற்ற மகத்துவம் மற்றும் செங்குத்தான பாதாளத்தின் அழிவுத்தன்மைக்கு முன்பாக, லௌகீக சிந்தனைகள் தங்கள் முக்கியத்துவத்தை இழக்கின்றன. §§

ராபர்ட் வீடு திரும்பி இருந்தார். அவர் இங்கே ஆத்ம ஞானம் பெறும் வரை தியானம் செய்வதற்கு வந்து இருந்தார். ஆனால் அவர் மனம், ஆன்மாவின் சக்தியின் மூலம், உலகத்தின் சூழ்நிலைகளை மேம்படுத்த வேண்டும் என்கிற தனது வாழ்நாள் குறிக்கோள்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தது. அது இரண்டாம் உலகப்போர் முடிந்ததிருந்த சமயம், மற்றும் அப்போது மனித நேயத்திற்கு அமைதியான புதிய யுகம் கிடைக்க அதிகமாக வாய்ப்பு இருந்ததாக அவருக்கு தோன்றியது. இதை அவர் டிசம்பர் 28, 1948 எழுதிய கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளார். §§

தீய சக்திகள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில், இந்த நாட்டில் ஒரு கூட்டுறவை உருவாக்கி, உலக கூட்டமைப்பின் மூலம், நாடுகளின் சுதந்திரத்திற்கு நாம் பிரார்த்தனை செய்தது நினைவில் இருக்கிறதா? §§

தீய சக்திகள் மறைந்து விட்டன, நாம் தொடர்ந்து முன்னேறி சென்று, வகுப்புவாதம் இல்லாமல் மக்களின் மீது அன்பு செலுத்தும் வலையில் இந்த நாடுகள் அனைத்தையும் வழிநடத்தி சென்று, தளைகளில் இருந்து விடுதலை அளித்து, புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கலாம். §§

இறைவன் பூமியில் யதார்த்தமான முறையில் இருக்கிறார்; தற்போது புதிய நிதித்துறை ஆதிக்கம் செலுத்துகிறது. எல்லா நாடுகளும் திரண்டு வந்து இன்றே விழிப்புணர்வை பெறுங்கள். இறைவன் மனிதனுக்குள் ஏற்றிவைத்த வாழ்க்கையின் சுடரை, எல்லா உயிர்சக்திகளும் ஒன்றாக விழிக்க செய்து, உற்சாகமாக செயல்படுங்கள். §§

இன்று இரவில் இருந்து அடுத்த ஏழு வருடங்களுக்கு தெய்வீக ஒளி மிகவும் வலுவாக பிரகாசிக்க இருக்கிறது. அவரது பணி முடிவடைந்தது, திட்டங்கள் நிறைவடைந்தது, உலகம் இப்போது அவரது காலடியில் இருக்கிறது. ஒரு யதார்த்தமான முறையில் ஆன்மீக நாடாக, அந்த பாதையில் முன்னணியில் இருக்கும் சிலோனை எல்லோரும் பாருங்கள். §§

நாடுகளுக்கான சுதந்திரம் வந்து கொண்டிருக்கிறது, இனி அவர் சீர்திருத்துவார். இறைவனின் விருப்பம் ஆதிக்கம் செலுத்தும். ஆன்மா எழுச்சி பெற்றுவிட்டது, தெய்வங்களும் கீழ்படிவார்கள். அவர்கள் வரவிருக்கும் பாதைகள் தயாராக இருக்கின்றன, பூமியை நோக்கி அவர்கள் வருகிறார்கள். ஓம்காரம் கேட்டுக்கொண்டு இருக்கிறது. §§

ஆன்மாக்கள் தாமதமின்றி முழுமை அடைகிறார்கள். இறுதியான போர் நிறைவடைந்தது; போரில் பின்னி இருந்த எல்லா இதயங்களையும் முடிவான உண்மையின் சக்தி திருத்தி அமைத்து, எல்லா உயிர்சக்திகளையும் பனியை போன்று தூய்மையாக்கியுள்ளது. பாதை தெளிவாக இருக்கிறது, புதிய யுகம் தற்போது இங்கே இருக்கிறது. §§

ஜெய்லானி குகைகள் §§

image§

தென் சிலோனின் ஒரு ஒதுக்குப்புறமான காட்டில், ராபர்ட் உபவாசத்துடன் தியானமும் செய்து காலம், உருவம் மற்றும் காரணத்தை கடந்த பரமாத்துமாவை உணர்ந்தார். ஒரு நாள் ஒரு மலைப்பாம்பு அவர் மடி வழியாக ஊர்ந்து சென்றது, ஆனால் அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால், அவர் அதை பார்க்கவும் இல்லை உணரவும் இல்லை..§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ராபர்ட் தனது இருப்பிடத்தில் இருந்து அமெரிக்காவிற்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில், தனது ஆசைகளை எழுதி இருந்தார்: §§

எனது இதயத்திற்கு மிகவும் பிடித்தமான வனத்தில் இருக்கிறேன்.§

வலுவாக இருப்பவர் நீண்டகாலமாக பிடித்து வைத்திருந்த§

புதிய யுகத்தின இயக்கங்களை நாம் தொடங்கி விட்டோம் என்பதால்§

என்னால் இனி ஒரு நொடியும் வீணடிக்க முடியாது.§

ஒரு அலறலுடன் திரும்பி ஓடிய அனைவருக்கும் §

அவர் உதவி செய்ய வேண்டியிருந்தது.§

அதிக அமைதியாக உட்கார்ந்து, கண்களை உட்புறமாகவும் மேல்நோக்கியும் திருப்பி§

நான் எனது மனஉறுதியை அதிகம் வளர்த்து, இந்த இயக்கங்களுக்கு ஒரு ஊக்கம் அளிக்கவேண்டும்.§

இந்த பிரபஞ்சத்தில் நடுக்கம் மற்றும் அதிர்வை ஏற்படுத்தி, பின்பு அமைதியாக இருக்க §

எனக்குள் தேவையான மனஉறுதி நிரம்ப வேண்டுகோள் விடுக்கிறேன்.§

கடலின் மேல் இருக்கும் நிலங்களின் எதிர்கால தலைவர்கள்§

இந்த இயக்கங்களை தங்கள் நாடு முழுவதும்§

அவர்களிடம் மிகவும் வலுவான ஆற்றல், மிகவும் சிறப்பான அன்பின் மூலம் §

நிரப்பி உற்சாகப்படுத்த§

நான் தனியாக ஒரு மலையில் அமர்ந்து மனஉறுதியை வளர்த்துக்கொண்டு இருக்கிறேன்.§

அவர்களின் நிறுவனர் வலுவாக, வாழ்க்கையின் முழுமையான தலைவனாக இருக்கிறார். §

அவருக்கு எவ்வாறு வாழ்வது என்று தெரியும். கொடுத்து வாழ்வதே வாழ்க்கை ஆகும்.§

அதனால் அவர் வெறுப்புக்கள் அனைத்தையும் அழித்து ஒரு ஒழுங்கை கொண்டு வர§

தன்னிடத்தில் இருந்து, ஒரு உலகை வழங்குகிறார்.§§

எல்லோர் மீதும் அன்பு செலுத்துவதே §

உலகத்தின் விதியாக இருக்கிறது.§

எட். மங்கர், Esq. அவர்களுக்கு §

ஜெய்லானி குகைகளில் இருந்து திரும்பும் பாப், ஜனவரி 9, 1949§§

ஜெய்லானியில் மஸ்தான் என்ற ஒரு இசுலாமிய சூட்சும ஞானியும் வாழ்ந்து வந்தார். பல வருடங்கள் கழித்து, அவர் தனது மடவாசிகளிடம் அந்த சூட்சும ஞானியைப் பற்றி நினைவுகூர்ந்தார்:§§

மஸ்தான் என்றுமே குளித்தது இல்லை என்று மக்கள் கூறினார்கள், ஆனால் அவர் மீது ஒரு பூவை போல வாசம் வீசியது. அவருக்கு அதிக வயதாகி இருந்தது, மற்றும் அவர் மிகவும் தூய்மையாக இருந்தார். எங்கள் சந்திப்பு சிறப்பாக அமைந்தது. அவர் என்னை பார்த்த போது, “எனக்கு உங்களைப் பற்றிய ஒரு கனவு வந்தது,” என்றார். அவர் அதன் பிறகு தனது பையில் இருந்து ஒரு சிறிய கையேட்டை எடுத்து, “நான் அதைப் பற்றி இதில் எழுதியுள்ளேன். நான் என்னுடைய கனவுகளை இதில் தான் எழுதுவேன்,” என்று கூறினார். “நானும் உங்களைப் பற்றி ஒரு கனவை கண்டேன்,” என்று அரேபிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்த ஒரு நண்பரின் மூலம் அவரிடம் தெரிவித்தேன். நான் அந்த கனவை சில நாட்களுக்கு முன்பாக கண்டு இருந்தேன். நானும் அதைப் பற்றி எழுதி இருந்தேன். எனது கனவுகளை பற்றி குறிப்பு எழுதிக்கொள்ள எனக்கு அப்போது பயிற்சி அளிக்கப்பட்டு இருந்தது. “கடந்த பௌர்ணமி அன்று எனக்கு அந்த கனவு வந்தது,” என்று அவர் கூறினார். நாங்கள் தேதிகளை ஒப்பிட்டுப் பார்த்தோம். நாங்கள் இரவு நேரத்தில் உறங்கிக்கொண்டருந்த போது அந்தர்லோகத்தில் நடந்த எங்கள் சந்திப்பை பற்றி, இருவரும் ஒரே கனவு மற்றும் ஒரே நேரத்தை குறிப்பிட்டு இருந்தோம். §§

image§

ஜெய்லானிக்கு அருகில் வாழ்ந்த மஸ்தான் என்ற சூட்சும ஞானி, அமெரிக்க சாதகரின் தீவிரத்தை பார்த்து, அவருடன் தியானம் செய்தார் மற்றும் கனவுகள் மற்றும் மூன்றாவது கண் பற்றி அரிய அறிவுறுத்தலை வழங்கினார்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அவர் எனக்கு மூன்றாவது கண்ணை மிகவும் கவனமாக பயன்படுத்துவதை மையமாக வைத்து, ஒரு வலுவான பயிற்சியை வழங்க ஆரம்பித்தார். இந்த சக்கரத்தின் புலன்களில் இருக்கும் நுணுக்கமான திறமைகள், வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் பற்றி அவர் எனக்கு தனது மனதின் சக்தி மூலம் விளக்கம் அளித்து எனக்கு தெரியப்படுத்தினார். மஸ்தான் வாழ்ந்த ஒரு சிறிய குகையில் ஒரு சிறிய கதவு இருந்தது. அங்கே செல்வதற்கு மலையில் பல படிகளை ஏற வேண்டியிருந்தது. அவர் குகைக்கு செல்லும் பாதையில், அடிவாரத்தில் இருந்த ஒரு மசூதியில் நான் வசித்து வந்தேன். §§

இரவு நேரங்களில், காற்றோட்டம் அதிகமாக இருந்த மலைப்பகுதிகளுக்கு என்னை அழைத்து சென்று, என்னுடன் தியானம் செய்வார். அங்கே நூறு வருடங்கள் முன்பாக யோகிகள் தியானம் செய்ததாக கருதப்படுகிறது. அவர் என்னை ஒரே சமயத்தில், பல மணி நேரங்களுக்கு அசையாமல் நிமிர்ந்து அமர்ந்திருக்க செய்தார். காற்று என் மீது மிகவும் பலமாக வீசிக்கொண்டு இருந்தது. குளிர் அதிகமாக இருந்தது. அந்த நள்ளிரவில் அவர் என் மொழிபெயர்ப்பாளர் மூலமாக என்னிடம், “இதைப் பார்த்தீர்களா? அதைப் பார்த்தீர்களா? நான் பார்ப்பதை நீங்களும் பார்க்கிறீர்களா?” என்று கேட்பார். கொரான் கற்றுக்கொடுத்த ஒரு சூட்சும ஞான வடிவத்தை, அவர் எனக்கு வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார். அவர் அதைப்பற்றி அனைத்து தகவலையும் என்னுடன் பகிர்ந்துகொண்டார். நான் ஆன்மாவின் புலன்கள் மூலமாக, மூன்றாவது கண்ணின் சில மிகவும் நுணுக்கமான செயல்பாடுகள் மற்றும் மனோஉணர்வு விரிவாக்கம் பற்றி கற்றுக்கொண்டேன். அந்த தகவல், எனது இன்றைய வாழ்க்கையில் ஒரு பயனுள்ள கருவியாக இருக்கிறது. எனது பாதையில் ஐந்தாவது தூண்டுகோலாக விளங்கிய மஸ்தானை நான் மிகவும் உயர்வாக மதிப்பிடுகிறேன். §§

அவர் அந்த தொலைதூர காட்டில் மிகவும் வயதான ஆன்மாவாக, ஒரு வலுவான ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்த ஒரு அரிய உயிர்சக்தியாக விளங்கினார். இந்த ஜெய்லானி குகைகளில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்த, அப்துல் காதிர் ஜெய்லானி என்ற ஒரு இசுலாமிய துறவி, இங்கே தியானம் செய்து ஒரு சூட்சும ஞான பள்ளியையும் நடத்தி வந்தார். இந்த குகைகள், நாங்கள் வசித்த மசூதியில் இருந்து ஒரு மைல் தூரத்தில், ஒரு மலை உச்சியில் அமைந்து இருந்தது. இந்த குகையில் ஆழமாக ஊடுருவி செல்லும் போது, மலையின் மத்தியில் இருந்த பிளவில் ஒரு ஒளியை காண முடியும். இசுலாம் சம்பந்தப்பட்ட ஆன்மீகத்தில், இது மெக்காவின் அந்தர்லோகத்திற்கு செல்ல நேரடி வழியாக கருதப்படுகிறது. §§

இந்த குகைகள் ஒரு செங்குத்தான பாறையின் மீது அமைந்து இருக்கிறது. அந்த பாறை அறநூறு அடி ஆழம் வரை இறங்குகிறது. அங்கே இருக்கும் ஒரு வெப்பமண்டல காட்டில் வழக்கமாக காட்டு யானைகள் தென்படுகின்றன. தியானம் செய்வதற்காக, என் நண்பர் என்னை அங்கே பலமுறை அழைத்து சென்று இருக்கிறார். அந்த கரடுமுரடான பாதை வழியாக நடந்து செல்லும் போது, அந்த இடத்தில் தான் நான் எதிர்காலத்தில் ஆத்ம ஞானம் பெறப்போகிறேன் என்பதை உணர்ந்தேன். அதற்கான காரணம் புரியவில்லை என்றாலும், அந்த இடத்தில் ஆத்ம ஞானம் கிடைக்கும் என்பதை மட்டும் உணர்ந்து கொண்டேன். உணர்தலை பெறுவதற்கு முன்பாக, செய்வதற்கு ஏதோ இருக்கிறது, பெறுவதற்கு அல்லது மாற்றம் பெறுவதற்கு ஏதோ இருக்கிறது என்ற உணர்வு இருந்துக்கொண்டு இருக்கும்.§§

நாங்கள் சில நாட்களுக்கு ஒன்றாக தங்கி இருந்தோம். அன்பகராவும் நானும், இரவு நேரத்தில் குகைக்கு வெளியே இருந்த பாறைகள் வெதுவெதுப்பாக இருந்ததால், அதன் மீது உறங்கினோம். அங்கே மிகவும் அமைதியாக இருந்ததால், நாங்கள் அமைதியாக மனதின் ஆழத்திற்குள் ஊடுருவிக்கொண்டு, நீண்டநேரம் தியானம் செய்துக்கொண்டு இருந்தோம். நான் ஒரு நாள் மதியம், வழக்கம் போல பள்ளத்தாக்கின் மீது பத்மாசனத்தில் அமர்ந்து தியானம் செய்த போது, ஒரு பெரிய மலைப்பாம்பு என் கால்கள் மற்றும் என் மடி வழியாக ஊர்ந்து சென்று, பாறைகளுக்குள் மறைந்து விட்டதாக அவர் என்னிடம் கூறினார். நாட்கள் செல்ல செல்ல, ஒரு வலுவான காந்தம் இழுத்ததைப் போல, நான் எனது முழுமையான மையத்தை நோக்கி இழுக்கப்பட்டு, மிகவும் அதிகமான பேரானந்தத்தை உணர்ந்தேன். §§

ஒரு நாள் காலையில் நான் விழித்த போது, நாங்கள் அந்த குகைகளை விட்டு வெளியேற வேண்டும் என்பதையும், எனது இறுதி நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் தனியாக திரும்ப வேண்டும் என்பதையும் நான் உணர்ந்தேன். நாங்கள் கொழும்புவிற்கு திரும்பினோம். நான் கொழும்பில் எனது முன்னாள் ஆசிரியர் வழங்கிய பல பணிகளை நிறைவு செய்தேன். அதனால் எனக்கு உட்புறத்தில் சற்று விடுதலை கிடைத்தது. நான் அவற்றை முடித்தவுடன், நான் தனியாக ஜெய்லானியின் குகைகளுக்கு திரும்பினேன். நான் மனஉறுதியுடன் திரும்பினேன். இந்த வாழ்க்கையின் முடிவான விரிவாக்கத்தை நான் பெறும் வரை, நான் இங்கிருந்து கிளம்பப் போவதில்லை என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டேன். எனது பாதையில் இந்த தருணம் வரை, நான் பல சிறந்த பயிற்சிகளை பெற்று, பல விஷயங்களை கற்றுள்ளேன். எப்போதும் என் மனதில், இம் கைஃப் என்கிற ஆத்ம ஞானம் பெற வேண்டும் என்கிற ஆசை முக்கியமாக இருந்துள்ளது. §§

ஆத்ம ஞானம் வழங்கும் எதிர்வினையை தாங்க போதுமான வலிமையை பெறுவதற்கு, மனதின் பல்வேறு உட்புற மற்றும் வெளிப்புற பகுதிகளின் அடிப்படை புரிதலை பெறவேண்டும் என்று எனது பாதையில் வந்த ஆசிரியர்கள் எனக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். இதுவரை நான் சந்தித்த ஒவ்வொரு தூண்டுகோலும், எனது பாதையின் அடுத்த ஆசிரியரை ஏதாவது ஒரு வகையில் அறிமுகப்படுத்தினார். இது திட்டமிட்டு நடக்கவில்லை. நான் இன்னொரு ஆசிரியரை தேடவில்லை. நான் எதிர்கொண்ட ஒவ்வொரு ஆசிரியரும் எனக்கு கடைசி ஆசிரியராக இருக்க வேண்டும் என்று தான் நான் விரும்பினேன். நான் அதைப்பற்றி சிந்திக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். எங்களது சந்திப்புக்கள் அனைத்தும் ஒரு எளிமையான, இயல்பான நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இருந்தன. §§

ஒவ்வொரு ஆசிரியரும் எனது நினைவாற்றல், ஒருமுகச்சிந்தனை, ஒருமுக கவனம், மன உறுதி மற்றும் அறிவெழுச்சி சக்திகள் வளர்ப்பதில் ஒரு முக்கிய பங்கு வகித்து, அனைத்தையும் ஒரு உட்புற கண்ணோட்டத்துடன் பார்ப்பது மற்றும் ஒருவர் தன்னை பிரபஞ்சத்தின் மையமாக கருதி உலகை பார்ப்பது பற்றியும் எனக்கு கற்றுக்கொடுத்தனர். §§

ஆத்ம ஞானம் பெறவேண்டும் என்கிற முடிவான குறிக்கோள் மட்டுமே ஓரு குறையாக இருந்தது, மற்றும் அதை நானே கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. நான் சாலையில் இருந்து ஜெய்லானி குகைகளுக்கு செல்லும் போது, மனதில் மகிழ்ச்சி மற்றும் தீராத ஆசையுடன் சென்றேன். என்னிடம் உடைமைகள் எதுவும் இல்லை. எனது உடைகள் மற்றும் பணத்தை எல்லாம் வழியில் சந்தித்த கிராம மக்களிடம் வழங்கி விட்டேன். என்னிடம் எதுவும் இல்லை. நான் அங்கே தனியாக இருப்பதற்கு சென்றேன். §§

நான் என்னுடன் உணவுப்பொருட்களை எடுத்து செல்லாமல், “நான் நீண்டநாட்களாக விரும்பிய, இந்த உணர்தலை பெறும் வரை உபவாசம் இருக்கப்போகிறேன். இதுவே சரியான தருணம்,” என்று நான் எனக்கு மீண்டும் உறுதியளித்துக் கொண்டேன். நான் அன்று மதியம் தாமதமாக வந்து போது, மஸ்தான் அங்கில்லை. அவர் யாத்திரை சென்று இருந்தார். அங்கே யாரும் இல்லை. யாத்ரீகர்கள் யாரும் இல்லை. நான் தனியாக இருந்தேன். நான் குகைக்குள் நடந்து சென்று, உபவாசமும் தியானமும் செய்ய ஆரம்பித்தேன். நான் சாட்சி தன் மீதே முழுமையான விழிப்புணர்வை பெறும் கைஃப் வரை, மற்றும் சுவாசம் சுவாசிப்பதை நிறுத்தும் வரை சுவாசக் கட்டுப்பாட்டிற்குள், மற்றும் முழுமையின் விளிம்பை உணரும் மிகவும் தீவிரமான உணர்வான, கைஃப் நிலையில் இருந்து ஈஈ கைஃப் நிலைக்குள், மற்றும் இறுதியாக பரமாத்துமா என்கிற பரசிவத்திற்குள் செல்லும் வரை மீண்டும் மீண்டும் உட்புறமாக சென்றுகொண்டு இருந்தேன். §§

நான் உள்ளிருந்து மீண்டும் வெளிவந்தேன். கிராம மக்கள் என்னை அறநூறு அடி ஆழத்தில் இருந்து செங்குத்தான பாறையில் நான் அமர்ந்து இருப்பதை பார்த்து இருந்தார்கள். அவர்கள் என்னை ஒரு தெய்வீக புருஷனாக நினைத்துக்கொண்டு உணவு, பானங்கள் மற்றும் பலவிதமான இனிப்புக்களை கொண்டு வந்திருந்தார்கள். ஒரு பெரிய விருந்து நடைப்பெற்றது. நான் பசியோடு இருந்தேன். அவர்கள் பள்ளத்தாக்கில் இருந்து மேலே வந்து இருந்தார்கள். அவர்கள் என்னிடம் அதிக பாசமாக நடந்துக் கொண்டார்கள். §§

பல வாரங்களுக்கு பிறகு, என்னைப் போல ஒரு வெளிநாட்டில் இருந்து வந்திருந்த ஒரு இசுலாமிய யாத்திரியுடன், இலங்கையின் தலைநகரமான கொழும்புவிற்கு திரும்பினேன். அவர் வழியில் எனக்கு ஒரு இசுலாமிய பாடலை கற்றுத் தந்தார். நான் மஸ்தானை மீண்டும் சந்திக்கவில்லை. நான் முதல் முறையாக மேற்கொண்ட சந்திப்புக்களின் போது, அவர் எனது ஆத்ம ஞான பயிற்சிக்கு தேவையான அனைத்தையும் எனக்கு கற்றுத்தந்து இருந்தார். அது தீவிரமாகவும் வலுவாகவும் இருந்து. §§

இந்த சூட்சும ஞானிகள் அந்தர்லோக சக்திகளையும் ராபர்ட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். அதிலும் ஒரு குறிப்பிட்ட ஜினி அவரது வாழ்க்கை முழுவதும் அவருடைய பணியில் துணை இருந்து, குருவிடம் எதிர்கால சீடர்களை வழிநடத்தி, வழக்கமாக தவறவிட்ட பொருட்களை கண்டுபிடித்துத் தரும் பணியை செய்து வந்தது. §§

இந்து கோயில்களை தெரிந்து கொள்ளுதல் §

குகையில் தான் பெற்ற வெளிப்பாடுகளின் பிரகாசமான பின்விளைவில் மூழ்கி இருந்த ராபர்ட், நாகரிக வாழ்க்கையுடன் இருந்த கொழும்பு தலைநகர பாதையில் செல்ல ஆரம்பித்தார். அது அவர் முன்பு பெற்ற அனுபவத்தை விட தரக்குறைவான யதார்த்தமாக இருந்தது. இந்த முறை அவர் உள்ளூர் YMCA விடுதியில் தங்கினார். அங்கே தான் தங்கியிருந்த அறைக்கு வாடகை கொடுப்பதற்காக, ஹட யோக பாடத்தை நடத்தினார். அவர் இரு வெவ்வேறு உலகங்களுக்கு மத்தியில் இருந்தார். அவர் தயானந்தாவின் மேற்பார்வையில் இல்லை. அவரது நடனக்குழு பிரிந்து விட்டதால், அந்த பொறுப்பும் அவருக்கு இல்லை. இதனால் அவர் தொடங்கிய புதிய ஆய்வுப்பயணம், அவரை அந்த ஊரில் இருந்த பல்வேறு கோயில்களுக்கு அழைத்து சென்றது. §§

image§

அந்த அமெரிக்கா நாட்டவருக்கு கந்தையா செட்டியார் நண்பராகி, கொழும்பில் இருந்த சிறிய பாரம்பரிய கோயில்களுக்கு அழைத்து சென்றார். அங்கே ராபர்ட் விநாயகர் மற்றும் மற்ற இந்து தெய்வங்களைப் பற்றி தெரிந்துகொண்டார். அவர்கள் இருவரும் அந்த நகரத்தில் நீண்ட நாள் நண்பர்களைப் போல கோயில் கோயிலாக சென்றுகொண்டு இருந்தார்கள்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

நான் இன்னொரு பரிணாமத்தில் இருந்ததால், நகரத்தில் இருந்த அனைத்தும் எனக்கு முன்பு போல காட்சி அளிக்கவில்லை. எல்லாம் மாறுபட்டு இருந்தது. நான் ஒன்றை இழந்து இருந்தேன்: ஆத்ம ஞானம் பெறவேண்டும் என்கிற ஆசையை இழந்து இருந்தேன். நான் மனநிறைவுடன் இருந்தேன். நான் தனியாக இருப்பது போன்று தோன்றியது. குகையில் எனக்கு ஏற்பட்ட தரிசனத்தை மற்றும் தாக்கத்தை கிரகித்துக் கொண்டு, நான் கொழும்பில் பல வாரங்கள் தங்கி இருந்தேன். அது புத்தியால் புரிந்துகொள்ள, கிரகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு மிகவும் பெரியதாக இருந்ததால், என்னால் என்றுமே தெளிவாக விளக்கமுடியாத ஒன்றை நான் அறிந்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் புரிந்துகொண்டேன். §§

ஒரு நாள் இரவு தூங்கும் முன், ஒரு நீளமான தோகையுடன் ஒரு மயில் என் கண் முன்னே காட்சியாக தோன்றியது. அது தெளிவான நிறங்களில் தோகையை விரித்து, எனது பார்வையை முழுமையாக மறைத்துவிட்டது. இந்து சமய ஆன்மீகத்தில், மிகவும் புனிதமான அதிர்வுடன் இருக்கும் உயிர்சக்திகள் வாழும் அந்தர்லோகத்தின் உணர்வாக இருக்கும் ஆகாசம் வழியாக, மயில் வாகனத்தில் முருகப்பெருமான் பயணம் செய்வதைப் போல, மனதின் உட்புற பகுதியில் பயணம் செய்கிறார். §§

கொழும்பில் இந்துக்கள் அதிகமாக வசித்த பேட்டா (புறக்கோட்டை) நகர்பகுதியில் இருந்த ஒரு பிள்ளையார் கோயில், ராபர்ட்டுக்கு மிகவும் பிடித்து இருந்தது. சிறியதாக, பாரம்பரிய முறையுடன் இருந்த அந்த கோயிலுக்கு, வெளியில் இருந்து வெகு சிலரே வந்தனர். ஆனால் அந்த கோயிலின் சுவர்களுக்குள் அது வரை யாரும் அறியாத, கற்பனையும் செய்யாத ஒரு அந்தர்லோகத்தை கண்டு கொண்டார். அது அவர் கவனத்தை உடனே கவர்ந்தது, மற்றும் அங்கே அவர் தினமும் வரத் தொடங்கினார். §§

மயிலை காட்சியாக பார்த்த அடுத்த நாள், ராபர்ட் இலங்கை தீவில் இந்து சமூகம் அதிகமாக வாழ்ந்த, சிலோனின் வடக்கு முனையில் ஒரு வணிகராகவும் ஆங்கில ஆசிரியராகவும் இருந்த கந்தையா செட்டியாரை சந்தித்தார். நல்ல கல்வியறிவுடன், ஆங்கிலம் பேசி, ஆன்மீக விழிப்புணர்வுடன் தத்துவரீதியான விவேகத்துடன் தமிழ் சமூகத்தின் எடுத்துக்காட்டாக விளங்கினார். அவர் 5' 8" உயரத்துடன், வலுவான முதுகெலும்புடன் இருந்தார். மேலும் அவர் செல்லாச்சி அம்மையாரிடம் பல வருடங்கள் பயிற்சி பெற்று இருந்ததால், அவர் தியானம் செய்ய அமர்ந்த போது, ஒரு கல்லைப் போல அசையாமல் அமர்ந்து இருப்பார். சில நாட்களுக்கு முன் ஆத்ம ஞானம் பெற்று வந்திருந்த அமெரிக்க சூட்சும ஞானியுடன் அவருக்கு ஏற்பட்ட சந்திப்பை, ஒரு தற்செயலான சந்திப்பு என்றே சொல்ல வேண்டும். ராபர்ட்டை அழைத்து வருவதற்கு யோக சுவாமி கந்தையாவை அனுப்பியதாக சிலர் கருதினாலும், அதற்கு தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லை.§§

அடுத்த நாள் காலையில், என் பாதையில் ஆறாவது தூண்டுகோலாகவும், எனது அடுத்த வலுவான ஆசிரியராகவும் இருந்த கந்தையா செட்டியாரை சந்தித்தேன். அந்த தீவின் வடக்கு தீபகற்பத்தை சேர்ந்த அந்த தமிழர் கருத்த மேனி மற்றும் நல்ல உடல்வாகுடன் இருந்தார். அவர் என்னை எனது குருவிடம் அழைத்து செல்ல வந்திருந்தார், ஆனால் அதற்கு முன்னர் நான் என்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருந்து. அதற்கான உதவிகளை அவர் செய்து, என்னை இந்து சமயத்தின் ஆழத்திற்குள் அழைத்து சென்றார். §§

நான் அது வரை யோகத்தை கற்று, இலங்கையின் பெளத்த சமயத்திற்கு ஒரு நல்ல அறிமுகத்தை பெற்று இருந்தாலும், நான் ஆச்சாரமான இந்து சமயத்தைப் பற்றி அறிவுறுத்தப்படவில்லை. அவர் ஆழமான அந்தர்லோக கண்ணோட்டத்துடன் என்னை இந்து சமயத்திற்குள் அழைத்து வந்து, சூட்சும ஞானம் மற்றும் சடங்குகள் பற்றி கற்றுத்தந்தார். நான் மெய்ஞ்ஞான மனதின் உட்பகுதிகளின் உட்புறத்தில் இந்து சமயத்தின் மகாதேவர்கள், தெய்வங்களை சந்திக்க தொடங்கி, அவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்வது என்பதை கற்றுக்கொண்டேன். அவர்கள் என்னுடன் அன்பாக பழகினார்கள். இந்து சமயத்தில் இருந்த மறைஞான தகவல்களை எல்லாம், செட்டியார் எனக்கு பொறுமையாக கற்றுக்கொடுத்தார். §§

உயரமான வெளிநாட்டு இளைஞரும், பாரம்பரியத்தை நன்றாக கடைப்பிடித்த உள்ளூர் பெரியவரும் தங்களது முதல் சந்திப்பில் நன்றாக பழகி, ஒவ்வொருவரும் தனது பண்பை இன்னொருவருக்குள் பார்த்து, ஒருவர் இன்னொருவரின் திறமைகளை வியந்து பாராட்டினார்கள். அவர்கள் தங்களுக்குள் தொடக்கத்தில் இருந்தே ஒரு வலுவான நட்புறவை உருவாக்கிகொண்டனர். கந்தையா தனது சொந்த தூண்டுதல் மற்றும் மன நிறைவு பெறாத ராபர்ட்டின் ஆர்வம் காரணமாக, கோயில் வழிபாட்டில் இருந்த அருள்ஞானங்கள் மற்றும் பழக்கங்கள், சடங்குகளில் செயல்பட்ட பல இரகசிய விதிகளைப் பற்றி அவர் ராபர்ட்டிற்கு அறிவுறுத்த தொடங்கினார். ராபர்ட் இதைப்பற்றி பின்னர் விவரித்தார்:§§

நான் முதல் முறையாக, சைவர்கள் தெய்வங்களை வழிபடுவது, அவர்களது பூஜை மற்றும் பூசாரிகள், கோயிலில் இருந்த மர்மங்கள் மற்றும் அந்தர்லோகங்களுடன் அதன் தொடர்பைப் பற்றி தெரிந்துகொண்டேன். இப்போது அந்த மாதிரி முழுமை பெற்று இருந்தது. நான் தமிழ் இந்து சமூகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, ஒரு மங்களகரமான தருணத்தில் இந்து சமயத்தில் நுழைய நான் என்னை முறையாக தயார் செய்துக்கொண்டு இருந்தேன். §§

வாழ்நாள் முழுவதும் நிலைத்து இருந்த அவர்களுடைய நட்புறவின் முதல் சில வாரங்களின் போது, சைவ இந்து சமயத்திற்குள் அழைத்து செல்லக்கூடிய “ஒரு சுத்தமான பூசாரிக்கு" தன்னை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ராபர்ட் தெரிவிக்க ஆரம்பித்தார். கந்தையாவிற்கு அவர் சொல்வது புரிந்து இருந்தாலும், திட்டமிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக கையாளப்பட்டால், அந்த நாள் விரைவில் வரும் என்பதை அவர் அறிந்திருந்து, ராபர்ட் சொன்ன யோசனையை தொடர்ந்து மறுத்து வந்தார். §§

இருவரும் கொழும்புவை சுற்றி இருந்த கோயில்களை ஆய்வு செய்ய தொடங்கினார்கள். கோயில் செல்லும் பெரும்பாலான பக்தர்களை போல அல்லாமல், அவர்கள் கோயில்களின் உட்புற செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். தங்களது வழிபாட்டின் உட்புற மற்றும் வெளிப்புற செயல்பாடுகளை தனது சீடனுக்கு கந்தையா அறிவுறுத்தினார். ஆன்மீக அதிர்வுகளுக்கு, இந்து கோயிலின் சாரமாக இருக்கும் ஆன்மீக சக்திகளுக்கு ராபர்ட் ஒரு நுண்ணுணர்வை விழிப்படைய செய்து இருந்தார். மேலும் அவற்றை புரிந்துகொள்ள, பூசாரிகள் அவற்றை எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்பதை அறிய, அவை வழிபடுவர்கள் மீது எவ்வாறு தாக்கம் ஏற்படுத்துகின்றன மற்றும் அதன் மூலம் என்ன என்பதை அறிய ராபர்ட் தூண்டப்பட்டார். இதைப்பற்றி கந்தையா செட்டியார் வழங்கிய குறிப்பு: §§

அந்த இளைஞர் வேர்ல்டு பெல்லோஷிப் ஆஃப் யூத், வேர்ல்டு பெல்லோஷிப் ஆஃப் ஆர்டிஸ்ட்ஸ், பெல்லோஷிப் ஆஃப் மதர்ஸ் மற்றும் வேறு பல நடவடிக்கைகளில் உறுப்பினராக இருந்தாலும், அவர் நல்லொழுக்கம் நிறைந்தவராக, விரைவாகவும் எளிமையாகவும் மக்கள் மற்றும் விஷயங்களைப் பற்றி புரிந்துகொள்ளும் திறமையுடன், ஏதோ ஒரு ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையுடன் தென்பட்டார். “காலங்காலமாக கலை என்பது மாமோனின் மிகப்பெரிய தங்கம், பழங்காலத்து பிரமிட் மம்மிகள் அல்லது ஐவரி டிரீமர்சின் நுணுக்கமான அலங்காரங்களாக இல்லாமல், கலையின் நிரந்தர ஆன்மாவின் பீடத்தின் மீது ஆர்வமுள்ள பக்தன் இருப்பதால் மட்டுமே நிலைத்து இருக்கிறது,” என்பது அவர் பொன்மொழியாக இருந்தது.§§

அவர் தொடங்கிய ஒவ்வொரு நடவடிக்கையும் முன்னேறியது, ஆனால் அவருக்கு அதன் மீது பற்று இருக்கவில்லை மற்றும் அதை இயக்கத்தில் வைப்பது தனது கடமை என்று அவர் வழக்கமாக சொல்லிக்கொண்டு இருந்தார். அவரது பேச்சிலும் நடவடிக்கையிலும், தாமரை இதழின் மீது இருக்கும் நீர்த்துளி போல, ஒரு பற்றின்மை தென்பட்டது. §§

இந்திய கோயில்களை ஒப்பிடும் போது இலங்கை கோயில்கள் அளவில் சிறியதாக இருந்தன. இந்தியாவில் இருந்த முக்கிய கோயில்கள் ஒரு சிறிய ஊரின் அளவில், டஜன் கணக்கில் பெரிய சந்நிதிகள் மற்றும் சிறிய கோயில்கள் மற்றும் 12 அடி உயர சுற்றுச்சுவருடன் அமைந்து இருக்கும். ஆனால் இலங்கை கோயில்கள் அளவில் சிறியதாக இருந்தாலும், அதன் தூய்மை மற்றும் சக்தியின் மூலம் அதனை ஈடு செய்கின்றன. பூஜைகள் நேரத்தோடு நடைபெறுகின்றன, மற்றும் கோயில் முழுவதும் வியக்கும் வண்ணம் சுத்தமாக இருக்கின்றன. அந்த இடத்தில் பெளத்த சமய மக்கள் பெரும்பான்மை வகித்தது மற்றும் அந்த பெரும்பான்மையுடன் உறவு எப்போதும் சுமூகமாக இருந்ததில்லை. அதனால் தமிழர்களுக்குள் உருவாகிய நெருக்கமான உணர்வு மற்றும் சமூக பகிர்வு, அவர்களை சுய பாதுகாப்பு நோக்கத்துடன் பிணைத்து வைத்து இருந்தது. அந்த ஒரு ஒற்றுமை வழக்கத்திற்கு மாறான உறுதியான ஒழுக்கம் மற்றும் உடை நெறிமுறைகளுடன் நன்றாக வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு கடைபிடிப்பதில் பிரதிபலித்தது. பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் கோயிலுக்குள் நுழைய மாட்டார்கள், மற்றும் இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலை விட்டு விலகியே இருந்தார்கள். ஆண்கள் எப்போதும் பாரம்பரிய வேட்டியுடன் கோயிலுக்குள் நுழைவார்கள். இவற்றையெல்லாம் ராபர்ட் கவனித்து வந்தார். தனது உயரமும் வெள்ளை நிறமும் எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது என்பதை அவர் அறிந்திருந்தார், மற்றும் தான் அன்பு செலுத்த கற்றுக்கொண்டு இருக்கிறார் என்பதை அவர் மக்களுக்கு நிரூபிக்க விரும்பினார். §§

ராபர்ட் அந்த ஊரில் இருந்த பெளத்த மடங்கள் மற்றும் ஸ்தூபிகளுக்கு சென்று இருந்தார், ஆனால் இந்து கோயில்கள் அவர் கவனத்தை கவர்ந்தன. மனித வரலாற்றின் ஆரம்பக்காலம் சார்ந்த சமஸ்கிருத உச்சாரணங்கள் மற்றும் சடங்குகள் மூலம் உயிரூட்டப்பட்ட, அந்த கோயில்களின் ஆழமான ஆன்மீகம் அவர் மீது உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் தனது வாழ்க்கையில் முதல் முறையாக கோயில்களின் புனிதமான கூடங்களில், வலுவான பக்தியுடன் இருந்த தமிழர்களின் உண்மையான பக்தியை கவனித்தார். இதை ஒப்பிடும் போது மேற்கு நாடுகளில் வழிபாடு மேலோட்டமாக இருந்தது. இங்கே மக்கள் ஒன்றாக சென்றனர் மற்றும் திருவிழாக்கள் அந்த பகுதியில் இருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை ஈடுபடுத்திய ஒரு பெரிய கூட்டு கலவையாக இருந்தது. இங்கே பக்தி தடை செய்யப்படாமல் சுதந்திரமாக செயல்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரு சந்நிதியில் இருந்து இன்னொரு சந்நிதிக்கு ஒன்றாக செல்லும் போது பாடிக்கொண்டு இருக்க, திடீரென்று எல்லோரும் ஒரே குரலில் பாறைகளை உலுக்கும் படியாக, “ஹரோ ஹரா!” என்று கோஷமிடுகிறார்கள். மகிழ்ச்சி அடைந்த ராபர்ட் மேலும் தெரிந்துக்கொள்ள விரும்புவோர். இதைப்பற்றி அவர் ஆசிரியர் வழங்கும் குறிப்பு:§§

image§

ராபர்ட் தொடர்ந்து கோயில் நிகழ்ச்சிகளில் பங்குபெற விரும்பிய போது, அவர் சைவ சமய சான்றோர்களின் குழுவிற்கு அழைக்கப்பட்டு, அவரது நோக்கங்கள் மற்றும் இந்து சமயம் பற்றி அவரது புரிதலை பற்றி ஒரு நேர்காணல் நடத்தப்பட்டது. அவர்கள் அவரது நேர்மையை புரிந்துக்கொண்டு, அவர் கோயிலுக்கு வருவதற்கு அனுமதி வழங்கினார்கள்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

கோயில்களில் நடைபெறும் சமய சடங்குகள், பரமாத்துமா மீது ஒரு பக்தியை உருவாக்குகிறது என்பதை அவர் அறிந்ததால் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, அவர் முதலில் கோயில் செல்ல விரும்பினார். அவர் தொடர்ந்து கோயில் செல்ல ஆரம்பித்ததும், அவர் ஒரு மன அமைதியை மற்றும் நிம்மதியை உணர்ந்ததால், அவர் அதிகம் திருப்தி அடைந்து தொடர்ந்து கோயில் செல்ல ஆரம்பித்தார். கோயிலில் அவர் தனது வழக்கமான மனநிலையை மறந்து விநாயகர், சிவபெருமான், உமாதேவி மற்றும் முருகனைப் போன்ற தெய்வங்களின் உருவப்படங்களுக்கு முன்பாக ஒரு விதமான மெய்மறதி நிலை மற்றும் அமைதியை அனுபவித்துக்கொண்டு இருந்ததை மக்கள் பார்த்தனர். அவருக்கு இந்து பஞ்சாங்கத்தில் மங்களகரமான நாட்களைப் பற்றி தெரியாது என்றாலும், அவர் விநாயகருக்கு ஒரு குறிப்பிட்ட நாள் உகந்ததாக இருக்குமா என்று கேட்பார். அது சரியாகவும் இருக்கும். §§

சிலோனில் இருந்த கோயில்கள் மேற்கத்திய நாடுகளின் பார்வையாளர்களுக்கு பழக்கப்பட்டது இல்லை. ஆங்கிலேயர்கள் பெரும்பாலான சமயங்களில், இந்து சமயம் மற்றும் பெளத்த சமயத்தை மதிக்காமல், புனித தளங்களில் இருந்து விலகி இருந்தார்கள். இளம் அமெரிக்கரின் ஆர்வத்திற்கு வரவேற்பு இருந்தாலும், அது சிறிது குழப்பத்தையும் ஏற்படுத்தியது. கோயில் நிர்வாகத்தில் இருந்த பெரியவர்கள், தமிழ் சைவரும் அவரது சீடர்களும் அடிக்கடி வருவதை கவனித்து இருந்தார்கள். ஒரு நாள், அவர்கள் ராபர்ட்டை அழைத்து பேசினார்கள். சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. அவர்கள் அவரது விருப்பம் மற்றும் அவரது அறிவின் ஆழத்தை பற்றி கேள்விகளை கேட்டு, கவனமாக விசாரணை செய்தார்கள். §§

ராபர்ட் கோயிலுக்கு எந்த நேரத்திலும் வரலாம் என்று கந்தையா செட்டியாருக்கு ஒரு தகவல் அனுப்பப்பட்டது. மிகவும் கவனமாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, அவர் கோயிலுக்குள் நுழைய வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகள் மற்றும் அந்த சமூகம் கோயிலுக்குள் வைத்திருந்த வலுவான பாதுகாப்பு பற்றியும் ராபர்ட்டிற்கு தெரியப்படுத்தியது. இவ்வாறு அவர்கள் கோயிலின் புனிதத்தை பாதுகாத்து வந்தனர் என்பதை அவர் அறிந்து இருந்தார், மற்றும் பிற்காலத்தில் அவர் தனது கோயில்களில் இதே மாதிரியான கவனத்தை கடைப்பிடித்தார். இது தொடர்பாக பல வருடங்கள் கழித்து அவர் வழங்கிய குறிப்பு:§§

எனது ஆறாவது தூண்டுகோல், என்னை இந்து கோயிலுக்குள் நடைப்பெற்ற மறைஞான வழிபாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தார். கோயிலில் மணி அடிப்பது, சங்குகள் முழங்குவது மற்றும் மிருதங்கம் வாசிக்கப்படுவது எதற்காக என்று என்னிடம் தெரிவித்தார். பூசாரிகளின் பங்கு என்ன என்பதையும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும், அவர்கள் எதற்காக நெற்றியில், கைகளில் மற்றும் நெஞ்சில் விபூதியை பூசிக்கொள்கிறார்கள் என்பதையும் அவர் நுணுக்கமாக விளக்கினார். நான் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. நான் அவற்றை எல்லாம் உட்புற கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தேன். எனக்கு கோயில்கள் பிடித்து இருந்தன. இந்த அனுபவம் எனது மனதில் கடவுள்களை உயிர்ப்பிக்க செய்தது, மற்றும் நாங்கள் தந்தையும் மகனையும் போல இருந்து, எங்கும் ஒன்றாக சென்றோம். §§

நட்சத்திர ஜோதிட அமைப்புக்களின் அதிர்வு விகிதிகள் மற்றும் அவை ஒரு வருடத்தின் சில சமயங்களில் பூமி மீது ஏற்படுத்தும் தாக்கத்தின் மீது அதிக கூர் உணர்வுடன் இருந்ததால், ஒரு இந்து கோயிலில் எந்த கடவுளை வழிபடுவார்கள் மற்றும் அந்த சேவை எந்த நாள் நடைபெறும் என்பதை எனது தூண்டுகோலிடம் என்னால் துல்லியமாக சொல்ல முடிந்தது. “நாம் விரைவாக கோயிலுக்கு செல்ல வேண்டும். இன்று விநாயகருக்கு உகந்த நாள்,” என்று நான் அவரிடம் கூறுவேன். §§

பூசாரிகள் பயன்படுத்திய பஞ்சாங்கங்கள் இல்லாமல், ஒரு நாளின் அதிர்வை துல்லியமாக உணரும் எனது திறமையை பார்த்து, எனது தூண்டுகோல் வியப்பில் மெய்மறந்து நின்றார். இதன் மூலம், பல்வேறு இந்து தெய்வங்களின் கோயில் வழிபாட்டை நிறுவிய பழங்கால பஞ்சாங்கங்கள், அயிரம் வருடங்களுக்கு முன்பாக மெய்ஞ்ஞான ரீதியாக கணக்கிடப்பட்டு இருக்கவேண்டும் என்பது நிரூபணாகிறது. §§

இந்த குறிப்பிட்ட சக்திகளை ஒருவர் தனக்குள் தேடி தெரிந்துகொள்கிறார். அவை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றன. நான் அதை பயன்படுத்தவும், முன்பே இருந்த தகவல்களின் மீது கூர் உணர்வுடன் இருக்கவும் மட்டுமே கற்றுக்கொண்டேன். அது எனக்கு மிகவும் எளிதாக கிடைத்தது. ஜெய்லானி குகைகளில் நான் பெற்ற அனுபவத்தை போன்று அடுத்தடுத்த அனுபவங்களை நான் பெற்றதும், அது எனக்குள் வளர்ச்சி பெற்றது. §§

எந்த புத்தகங்களிலும் தென்படாமல், தந்தையிடம் இருந்து மகனுக்கு, ஆசிரியரிடம் இருந்து சீடனுக்கு வழங்கப்படும் இந்து சமயத்தின் புனிதமான ஆன்மீகத்தை எனது தூண்டுகோல் எனக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்க, அவரும் நானும் உரையாடுவதில், தியானம் செய்வதில் மற்றும் ஒரு கோயிலில் இருந்து இன்னொரு கோயிலுக்கு பயணம் செய்வதில் நேரத்தை கழித்தோம். §§

யானை பாஸ் §

ராபர்ட் தனது வாழ்க்கை முழுவதும் யோகிகள் மற்றும் அவர்களது மந்திர சக்திகள், வேதாந்தம் மற்றும் அதன் அறிவுணர்வு சக்தியை பற்றி கேட்டிருந்தார். மேலும் அவர் கடந்த இரு வருடங்களாக, பரமாத்துமா அல்லது கடவுள் நம்பிக்கை என்று எதுவும் இல்லாத, பெளத்த சமயத்தவர்களுடன் இருந்துள்ளார். யாவும் கடந்த நிலை பற்றி பெளத்த சமயத்தவர்கள் மற்றும் வேதாந்திகளின் குறிக்கோள்கள் அவரது ஆன்மாவின் ஆழத்தை கவர்ந்து இருந்தாலும், அவற்றில் சிறிதளவு இருந்த தெய்வீக அன்பு, உயர்வான பக்தி மற்றும் உண்மையான சக்தியாக இறைவனுடன் ஒன்றி இருக்கும் உணர்வு, கோயில்கள் மற்றும் தமிழர்களிடம் தடையில்லாமல் வெளிப்பட்டன. இந்த கலவை அவருக்கு முறையானதாகவும், புனிதமான பிரபஞ்சம் பற்றிய முழுமையான கோட்பாடாகவும் இருந்து, தனது சொந்த தியானங்கள் இதனை வெளிப்படுத்தியதாகவும் தோன்றியது. அவர் சைவ மகான்கள் பேசிய மொழியை அதற்கு முன்பு கேட்டிருக்கவில்லை என்றாலும், அது அவருக்கு புரிந்தது. தனது படைப்புக்களில் உள்ளார்ந்து இருந்தாலும் காலம், உருவம் மற்றும் பரவெளியை கடந்து இருக்கும் பரமாத்துமாவாக இறைவனின் கோட்பாட்டை தெளிவுபடுத்தும் சைவ சித்தாந்தம், ராபர்ட்டின் ஆழமான இயலுணர்வுகளை பிரதிபலித்தன. அவருக்கு இந்த முழுமை வேறு எங்கும் தென்படவில்லை மற்றும் சைவ சித்தாந்தத்தை “என் ஆன்மாவின் சமயமாக” உணர்ந்தார். §§

வேதாந்தத்தின் ஒருமைவாத அத்வைதத்தை ஏற்றுக்கொண்டாலும், வாழ்க்கையின் பல்வேறு பரிணாமங்களை பாதுகாத்து மற்றும் பயிற்சி செய்து, திருவிழாக்களை கொண்டாடி, பக்தி என்கிற மிகப்பெரிய யோகத்திற்கு மதிப்பு அளித்து, சாதனா செய்தவர்களை கௌரவித்து, குண்டலினி யோகத்தின் வழிமுறையை புரிந்துக்கொண்டு, சுட்டெரிக்கும் மத்திய வெயிலில் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்வது உட்பட, தவத்தில் இருந்த மர்மத்தை அறிந்து, சடங்கின் உச்சத்தில் கோயிலுக்குள் நுழைவதற்காக, மந்திரங்கள் ஓதும் பூசாரிகளால் வரவழைக்கப்படும் போது, தரிசனம் நாடப்பட்டு தெய்வங்கள் காட்சியளித்து உண்மை சக்திகளாக உணரப்படும் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களின் உள்ளறைகளில், தன்னை இழந்து இருந்த (அல்லது தன்னை தேடிக்கொண்ட என்று சொல்ல வேண்டுமா?) ஒரு முழுமையான கலாச்சாரத்தை தேடிப்பிடித்ததில் நான் மகிழ்ச்சி அடைந்தேன். §§

ஒவ்வொரு நாளும் வடக்கு நோக்கி செல்லவேண்டும் என்ற ஆசை ராபர்ட்டிடம் அதிகரித்து வந்தது. கொழும்பில் தமிழர்கள் சிறிய அளவில் இருந்தார்கள், மற்றும் அவர்களின் கலாச்சார முழுமை, அதிக எண்ணிக்கையில் இருக்கும் வடக்கில் மட்டுமே வெளிப்படும் என்பதை அவர் அறிந்து இருந்தார். யாழ்ப்பாணம், அதன் உன்னதமான வரலாறு, அதன் செழிப்பான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பெருமை, அதன் தெய்வீக புருஷர்கள் மற்றும் பென்மணிகளைப் பற்றி பல கதைகள் இருந்தன. அவர் தன்னை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கந்தையா செட்டியாரிடம் கெஞ்சினார். இதைப்பற்றி செட்டியார் பின்னர் வழங்கிய குறிப்பு:§§

image§

இறுதியாக கந்தையா செட்டியார், ராபர்ட்டை வடக்கில் இருந்த தனது வீட்டிற்கு வாகனத்தில் அழைத்து சென்றார். அவர்கள் தங்கள் பயணத்தின போது சிறிது நேரம் யானை பாஸில் (கணவாய்) நின்றனர். அங்கே சைவர்கள் மரத்தடி விநாயகரை வழிபடுவார்கள். இது யாழ்ப்பாணத்தின் ஆன்மீக நுழைவாயிலாக, சிலோனில் இருக்கும் சைவ சமூகத்தின் கோட்டையாக கருதப்படுகிறது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

எங்கள் இருவருக்கும் இடையே இருந்த நெருக்கம் அதிக வலுவாக, நேர்மையாக மற்றும் உண்மையாக இருந்ததால் நாங்கள் இவரும் ஒன்றானோம். முதல் ஆசிரமம் தொடங்கப்பட்ட இடமாகவும், எனது சொந்த வீடு இருந்த இடமாகவும் விளங்கிய யாழ்ப்பாணத்திற்கு செல்லும் ஆசை அவருக்கு மிகவும் தீவிரமாக இருந்ததால், யாழ்ப்பாணம் செல்வதற்கு நான் ஒப்புதல் அளித்தேன். அவர் என் வீட்டிற்கு ஒரு முறையாவது வர விரும்பினார். நான் இரண்டு காரணங்களுக்காக அதற்கு ஒப்புதல் அளித்தேன். ஒன்று, அவர் ஆசையை நிறைவேற்றுவது, மற்றும் இரண்டாவது, நான் அன்பு செலுத்தி மதிப்பு அளித்து “பேசும் கடவுள்" என்று நான் அழைத்த ஆன்மாவை அவர் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். §§

ஒரு பார்வை, தொடுதல் அல்லது ஒரு சொல்லால் புனிதத்தன்மையின் விதையை வழங்கும் யோகியை சந்திப்பதன் மூலம், சமய வாழ்க்கையின் உண்மையான தொடக்கம் ஆரம்பிக்கிறது. அப்போது சுப்பிரமுனிய என்று பெயர் சூட்டப்பட்டிருந்த எனது நண்பரிடம், இந்த உன்னதமான ஆன்மாவின் மகிமையை பற்றி பேசும் போது, “யோக சுவாமி, ஒரு சாதாரணமான யாசகர்,” என்று குறிப்பிடுவேன். நான் இந்த அறிக்கையை 250 மைல் தூரத்தில் வழங்கி இருந்தாலும், ஞானியாக இருந்த அந்த உன்னதமான ஆன்மா, தனது முதல் சந்திப்பின் போது தன்னை ஒரு “சாதாரண யாசகர்" என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். §§

செட்டியார் வடக்கே பயணம் செய்வதை வலியுறுத்தாமல், விவேகமாக நடந்துகொண்டார். அவர் அதற்கு பதிலாக, திருமூலர் மற்றும் திருவள்ளுவர், பழங்கால தமிழ் புலவர்கள் மற்றும் யோகிகள் பற்றிய கதைகளை சொல்லி, ராபர்ட்டை உற்சாகப்படுத்திக் கொண்டும், யோக சுவாமியின் மண் குடிசைக்கு, சாவகாசமாக ஒரு நாள் சென்று குருவின் ஆசிகளை பெறுவது எவ்வளவு விசேஷமாக இருக்கும் என்பதை பற்றி அவர் அடிக்கடி தெரிவித்துக்கொண்டும் இருந்தார். §§

அந்த பகுதியில் “விசரன்" என்று அழைக்கப்பட்டு, மிகவும் வலுவான உடலுடன், மிகவும் விசித்திரமாக செயல்பட்டதால், மக்கள் நெருங்கவே பயந்த ஒரு குருவைப் பற்றி, எனது ஆசிரியர் மிகவும் கவனமாக சொல்ல ஆரம்பித்தார். என் ஆசிரியர் அந்த குருவின் இயல்பைப் பற்றியும், அவர் தலைசிறந்த செல்லப்பசுவாமியின் ஒரே சீடராக இருந்தது பற்றியும் விளக்கம் அளித்தார். யாழ்ப்பாணத்தில் அவரது பணியை பற்றியும் நான் அறிந்துகொண்டேன். அத்தகைய ஒரு உயிர்சக்தியை மக்கள் எவ்வாறு நெருங்கினார்கள் என்பது பற்றியும், அவர் நீண்டநாட்களாக முயற்சி மேற்கொண்டு தனது நாற்பதாவது வயதில் ஆத்ம ஞானம் பெற்றது பற்றியும், அவர் அந்த பலத்தில் இருபது மைல் தூரம் ஓடியது பற்றியும், என் ஆசிரியர் எனக்கு கவனமாக விளக்கம் அளித்தார். அவர் இறுதியாக தனது நாற்பதாவது வயதில் தனது மாபெரும் குறிக்கோளை அடைந்ததும், அவர் பெருமகிழ்ச்சி அடைந்தார். நான் பொறுமையாக அமர்ந்து இருப்பேன், மற்றும் ஆசிரியரின் உரை எப்போதும் அந்த பகுதியின் குருவாக விளங்கிய யோக சுவாமியை சுற்றி வந்துக்கொண்டு இருக்கும். இவ்வாறு நான் அவரைப் பற்றியும், அவரது போதனைகளை பற்றியும் கற்றுக்கொண்டேன். ஒரு நாள், என் ஆசிரியர் என்னை வட இலங்கையில் யாழ்ப்பாண தீபகற்பத்தில் இருந்த தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். §§

ஒரு நாள் சரியான நேரம் வந்துவிட்டதை செட்டியார் உணர்ந்ததும், இருவரும் இலங்கை நாட்டிற்கு குறுக்கே 250 மைல் தூர பயணத்தை வாகனத்தில் தொடங்கி, சீரமைக்கப்படாத சாலைகள் வழியாக கண்டியின் மலைப்பகுதிகளுக்கு சென்று, பிறகு வறண்ட வடக்கு சமவெளிகள் வழியாக யானை பாஸ் என்ற இடத்திற்கு சென்றோம். இது சைவ தீபகற்பத்திற்கு செல்லும் பாதையாக கருதப்படுவதால், எல்லா இந்துக்களும் இங்கே சிறிது நேரம் தங்கிவிட்டு செல்வார்கள். அங்கே ஒரு மரத்தடியில் ஒரு சிறிய பிள்ளையார் சந்நிதி இருக்கிறது. யாழ்ப்பாணத்தை நிலப்பரப்புடன் சேர்க்கும் 3,000 அடி நீள குறுகலான நீர்சந்திக்கு செல்லும் முன்னர், தர்மத்தின் தெய்வமான விநாயகரின் ஆசிகளை பெறுவதற்கு, பக்தர்கள் இங்கே கற்பூரத்தை கொளுத்தி, தரையில் தேங்காயை உடைப்பார்கள். §§

அவர்கள் வாகனத்தை நிறுத்தி, விநாயகரை வழிபட்டனர். அங்கே தியானம் செய்யும் போது, ராபர்ட் தனது தலையில் உட்புறமாக ஒரு சுடரை கண்டார். அது அவரது ஆன்மீக பார்வையில் இயல்பாக தோன்றி, மூன்று-நான்கு நாட்கள் நிலைத்து இருந்தது. அது சைவர்களின் உலகிற்குள் தான் நுழைவதற்கு, தனக்கு முறையான நுழைவாயிலாக விளங்கியது என்பதை ராபர்ட் தனது வாழ்நாள் முழுவதும் மறக்கவில்லை. அவர் நினைவில் யானை பாஸ் என்ற பெயர் நிரந்தரமாக பதிந்து விட்டது.§§

கந்தன் கோயிலில் நடராஜரை தரிசித்த போது, நடராஜர் ஆடிய புனிதமான நடன வடிவத்தை சூட்சும ரீதியாக ராபர்ட் கிரகித்துக் கொண்டார். அவர் ஒரு வலுவான காட்சியில், சிவபெருமான் அனைத்து உள்பொருள்களையும் பிரபஞ்ச நாட்டியக்காரராக உயிரூட்டுவதை கண்டார். அது அவரை உருமாற்றியது. அவருக்கு அந்த புனிதமான தருணங்களில் விரிவாக்கம் பெற்ற உத்தி, ஏழு அசைவுகளை கொண்ட தொடர் வரிசைகளில், பாதங்கள் மற்றும் கால்களின் 49 அசைவுகள், உள்ளங்கை மற்றும் கைகளின் 49 அசைவுகள் மற்றும் தலைகள் மற்றும் கண்கள், தோள்பட்டைகள், உடலின் முண்டப்பகுதி மற்றும் உடலின் 49 அசைவுகளின் ஒரு குறிப்பிட்ட கூட்டமைப்பை பயன்படுத்தியது. முருகன் குறிவைத்து தனது வேலை வீசுவதைப் போல, தூரத்தில் இருக்கும் இடங்களுக்கு சக்தியை வீசுவதற்கு நடனம் ஒரு கருவியாக இருந்தது. இதுவே இந்த நடனத்தின் குறிக்கோளாக இருந்து, “தைய தைய தைய தா —தைய தைய தைய தா” என்ற லயத்துடன் தொடங்கியது. §§

அவர்கள் அன்று கோயிலை விட்டு கிளம்பிய போது, “இதன் பிறகு நீங்கள் முன்பு போல இருக்க மாட்டீர்கள்,” என்று கந்தையா செட்டியார் குறிப்பிட்டார். அவர் அமெரிக்காவிற்கு எழுதிய ஒரு கடிதத்தில் இந்த நாட்களை நினைவுகூர்ந்தார்:§§

image§

பல வாரங்களுக்கு செட்டியார் குடும்பத்துடன் தங்கியிருந்த ராபர்ட், அவர்கள் வழங்கிய உபசரிப்பில் தன்னை பறிகொடுத்து அவர்களின் பாரம்பரிய வாழ்முறையை அறிந்துகொண்டு, அங்கிருந்த இந்துக்கள் அனைவரும் உடுத்தியிருந்த பருத்தி வேட்டியை அணியும் நுணுக்கத்தை கற்றுக்கொண்டார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

சக்தி மற்றும் ஞானத்தை பரப்பும் வடிவத்தில், தங்கம் மற்றும் அழகான வைரங்களுடன் அலங்கரிக்கப்பட்ட மூர்த்திகளுக்கு முன்பாக நின்ற போது தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை, அந்த இளைஞர் பெரிதும் பாராட்டி ரசிக்கவும் செய்தார். ஒரு இளவரசரின் தோற்றத்துடன் இருந்த மேற்கத்திய நாட்டவரின் உண்மையான பக்தியின் மீது கோயில் பூசாரிகள் அதிகமாக ஈர்க்கப்பட்டு இருந்ததால், அவர்கள் விசேஷ கவனத்துடன் பூஜை செய்ய தொடங்கினார்கள். எனக்கு ஒரு திருக்கார்த்திகை தினம் நன்றாக நினைவில் இருக்கிறது. அன்று வைரங்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கச்சிலை முருகனின் (சுப்பிரமணியர்) முன்பாக, எனதருமை நண்பர் நின்றிருந்த கோலத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது. நீயும் (இறைவன்) நானும் ஒன்று என்ற உணர்ச்சி வெளிப்பாட்டுடன், அவர் தனது கைகளை கூப்பிக்கொண்டு, கண்களில் இருந்து நீர் வழிய தன்னை மறந்த நிலையில் நின்று இருந்தார். கோட்பாடு அளவிலான தீட்சையின் தொடக்கம் அன்றைய தினம் தொடங்கிவிட்டதாக தோன்றுகிறது. §§

அவரை ஒரு இந்து குடும்பம் சுவீகாரம் எடுத்துக்கொள்ளுதல் §

அதிகாலையில் அளவெட்டி கிராமத்தில் கந்தையாவின் வீட்டிற்கு முன்பாக, அந்த வாகனம் வந்து நின்றது. கந்தையாவுடன் ஒரு உயரமான மேற்கத்திய நாட்டு விருந்தாளி வந்துள்ளதை கண்டதும், கந்தையாவின் மனைவி, மகன் மற்றும் மருமகளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவர்கள் வீடு, மண் மற்றும் ஓலைக்குடிசையால் கட்டப்பட்ட, இரண்டு சிறிய அக்கம்பக்கத்து குடியிருப்புகளாக எளிமையாக இருந்தது. அவர் மரபுகள் தவறாத கிராம மக்கள் செய்வதைப் போல, தங்கள் உணவை தாங்களே வளர்த்துக்கொண்டு, தங்களுக்கு தேவையான மாவை தாங்களே அறைத்துக்கொண்டு, ஒரு எளிமையான கிணற்றில் இருந்து நீரை இறைத்துக்கொண்டு ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தனர். அவர்கள் ஹான்செனை பார்த்ததும் வியந்து நின்றனர். அவர்கள் ராபர்ட்டைப் போன்ற ஒரு உயரமான மனிதரை என்றுமே பார்த்திருந்ததில்லை, மற்றும் தங்களது வீட்டில் ஒரு மேற்கு நாட்டவரை என்றுமே உபசரித்து இல்லை. ஆனால் அவரது கண்ணியம் மற்றும் எளிமை காரணமாக, அவருடன் விரைவில் சாதாரணமாக பழகத் தொடங்கினார்கள். இந்த உறவைப் பற்றி கந்தையா செட்டியார் அளிக்கும் விளக்கம்:§§

image§

அவர் அதிக தனிமையை விரும்பிய போது, கந்தையாவின் குடும்பம் அவரை அருகில் முட்செடிகளுக்கு மத்தியில் இருந்த, ஒரு ஓலை குடிசைக்கு அழைத்து சென்றனர். இங்கே அவர் இரவில் நீண்டநேரம் தியானமும், கிராம வாழ்க்கையில் இருந்த சலசலப்பில் இருந்து விலகிய இருக்கவும், தனக்கு என்று தனியான ஒரு கிணற்றில் குளிக்கவும் முடிந்தது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

நாங்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு, ஒரு புதிய வசதியான ஆஸ்டின் 12 வாகனத்தில் பயணம் செய்தோம். நாங்கள் பல பழங்கால இந்து கோயில்களுக்கு சென்று, இந்து சமய அனுஷ்டானங்களை தீவிரமாக செய்ததால், அந்த பயணம் முழுவதும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. §§

நாங்கள் காலை 5:30 மணிக்கு, எங்கள் எளிமையான மண் குடிசைக்கு வந்து சேர்ந்தோம். அந்த இளைஞரை என் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அந்த இளைஞருக்கு தனது சொந்த வீட்டில் இருந்தது போன்ற உணர்வு தோன்றியது. கிழக்கத்திய நாடுகளின் பாணியில் உணவு தயாரிக்கப்பட்டு, அவருக்கு பரிமாறப்பட்டது. எங்கள் தோப்பில் இருந்த மாம்பழங்கள் மற்றும் மிகுதியாக இருந்த பலாப்பழங்களும் அவருக்கு மிகவும் பிடித்து இருந்தன. §§

அவருக்கு என்னையும் எனது குடும்பத்தினரையும் பிடித்து இருந்தது மற்றும் அவர் என் மனைவியை “மதர் செட்டியார்" என்று அழைக்க ஆரம்பித்தார். அவருக்கு தமிழ் தெரியாது மற்றும் என் மனைவிக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், தாய் மற்றும் செய்க்கு நடுவில் இருந்த அன்பின் அழகை, அவர்களது புன்னகை மற்றும் பார்வைகள் மட்டுமே வெளிப்படுத்தின. அவர் அமெரிக்காவில் இருந்து எழுதிய கடிதத்தில் வெளிப்படுத்திய தனது அன்பு மற்றும் நன்றியுணர்வையும், அதை கேட்டு என் மனைவி பெருமையுடன் பூரிப்பு அடைந்ததையும், இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.§§

அந்த சமயத்தில் கந்தையாவின் மகனுக்கு திருமணமாகி இருந்தது, மற்றும் பதினெட்டு வயது நிரம்பிய மருமகள் அவர்களின் குடும்ப வீட்டிற்கு குடிபுகுந்து இருந்தார். பல வருடங்கள் கழித்து, அன்று மணப் பெண்ணாக இருந்த திருமதி. சிவயோகம் விநாயகமூர்த்தி, அந்த நாட்களைப் பற்றி நினைவுகூர்ந்தார்: §§

என் மாமனார் கொழும்பு YMCA வில் ராபர்ட்டுடன் தங்கி இருந்தார். அவர் காலைநேரத்தில் ராபர்ட் மேற்கொண்ட சீரான பக்தியின் வெளிப்பாடுகளால் கவரப்பட்டார். என் மாமனார் எங்கள் வீட்டிற்கு அந்த இளம் அமெரிக்கரை அழைத்து வருவதாக குடும்பத்தாரிடம் தெரிவிக்குமாறு கடிதம் எழுதியதை கேட்டதும், எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். எங்கள் வீடு மிகவும் எளிமையாக இருந்தது. அந்த விருந்தாளியை உபசரிக்க, நாங்கள் எல்லோரும் வீட்டை விட்டு வெளியேறி, வீடு முழுவதையும் ராபர்ட் தங்குவதற்கு தரலாம் என்று முடிவு செய்தோம். §§

அவர் வீடு வந்ததும், அவரது உயரத்தைப் பார்த்து நாங்கள் திகைத்து நின்றோம். அவர் மிகவும் உயரமாக இருந்ததால், வீட்டின் நடுவில் இருந்த பகுதியைத் தவிர மற்ற இடங்களில் அவரால் தலை நிமிர்ந்து நிற்க முடியவில்லை! சில மணி நேரங்களுக்கு பிறகு, அவர் எங்களுக்கு நெருக்கமாகி, என் கணவரின் சகோதரரைப் போல பழக ஆரம்பித்தார். அன்று மாலை நேரத்தில், என் மாமனார் அவரை விநாயகர் கோயிலுக்கு அழைத்து சென்றார். பூசாரி அவர் பெயரைக் கேட்ட போது, என் மாமனார், “நாங்கள் இவரை தம்பி என்று அழைப்போம்,” என்று பதில் அளித்தார். அவர் எல்லோரையும் ஏற்றுக்கொண்டு மிகவும் சகஜமாக பழகி, எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தார்; நாங்கள் எல்லோரும் அதே வீட்டில் தங்கி இருந்தோம். §§

image§

மே 1949, அந்த அமெரிக்க சாதகர் யோக சுவாமியை முதல் முறையாக சந்திக்க அழைத்து செல்லப்பட்டார். மாபெரும் குருவின் ஆசிரமத்திற்கு பயணம் செல்ல, ஒரு மாட்டு வண்டி வாடகைக்கு எடுக்கப்பட்டது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அந்த வீடு அளவெட்டி கிராமத்தில், விவசாய வளத்திற்கு புகழ்பெற்ற ஒரு பகுதியில், ஒரு கரடுமுரடான சாலையில் அமைந்து இருந்தது. அங்கே அன்றும் இன்றும் எந்த நகரமும் இருந்ததில்லை. 200 கஜ தூரத்தில் இருந்த விநாயகர் கோயிலை தவிர, தெருவின் எதிர்புறத்தில் இருந்த இரண்டு அடுக்கு கடை மிகவும் பெரிய கட்டிடமாக இருந்தது. அந்த கடை எதிர்காலத்தில் ராபர்ட்டின் ஆசிரமமாக மாறியது. பாலைவன பருவநிலையில் வழக்கமாக இருப்பதைப் போல, சுற்றியிருந்த பகுதியில் பெரும்பாலும் வெள்ளை நிற வெப்ப மண்டல வீடுகள் இருந்தன. அவை மண் சுவர்கள், பாதுகாப்பிற்காக சன்னல்களை மூடிய இரும்பு கம்பிகள் மற்றும் வீட்டினுள் திறந்தவெளியில் அமைந்திருந்த முற்றங்களுடன் அமைந்து இருந்தன. இந்த முற்றங்கள் எப்போதாவது பெய்த மழையை வீட்டினுள் நேரடியாக வரவழைத்தன. §§

சில கடைகள் தெருவில் தங்கள் உற்பத்திப் பொருட்களை குவித்து வைத்து இருந்தன; ஒரு பேனா தொழிற்சாலை (குடிசை தொழில் அளவுள்ள ஒரு வியாபாரம்) அருகில் இருந்தது. அதற்கு அருகில் தொடர்ச்சியான கொட்டகைகளில் 15 நெசவாளர்கள் அதிகாலை முதல் பொழுது சாயும் வரை, தங்கள் கைத்தறிகளில் சத்தமாக நெய்த, 12 அடி நீள வெள்ளை காதி துணியை, பெரும்பாலான தமிழ் ஆண்கள் தங்கள் இடுப்பில் அணிந்து இருந்தனர். மேற்கத்திய நாடுகளை பார்க்கும் போது, அந்த வீடு எளிமையாக இருந்தாலும், தென்னை மரங்கள், வேப்பமரம், நெல்லிக்காய் மரங்கள் மற்றும் மற்ற சாப்பிடக்கூடிய மரங்கள் நிரம்பி இருந்த மூன்று ஏக்கர் வளாகத்தை சுற்றி, சில இடங்களில் இயற்கை வேலியாக இருந்த முட்செடிகளும், மற்ற இடங்களில் பின்னிய பனை ஒலைகளும் சூழ்ந்து சுத்தமாக காட்சி அளித்தது. §§

சமையல் அறையில் இருந்து ஐம்பது அடி தூரத்தில், ஒரு திறந்த வெளி கிணறு இருந்தது. நிலத்திற்கு அடியில் எட்டு அடி அகலமான கிணற்றை செங்கல் சுவர்கள் வரையறுத்தன. நிலத்திற்கு மேலே எந்த சுவரும் இல்லை, மற்றும் குளிப்பவர் ஒரு வட்டவடிவ கற்காரை நடைப்பாதையில் நிற்கவேண்டும். மர வாளி பொருத்தப்பட்ட ஒரு கயிற்றை கொண்டு, தண்ணீர் கைகளால் இறைக்கப்பட்டது. அந்த கயிறு 18 அடி நீளம், 1 அடி அகலத்துடன் இருந்த தென்னைமரக்கட்டையின் சிறிய முனையில் பொருத்தப்பட்டு இருந்தது. அந்த கட்டை ஒரு நெம்புகோல் மீது பொருத்தப்பட்டு இருந்தது. அந்த கட்டையின் இன்னொரு முனையில் இருந்த கற்களின் வலை தேவையான சமநிலையை வழங்கியது. குளிக்கும் இடத்தை சுற்றி வேலி எதுவும் இல்லாததால், குளிப்பதற்கு ராபர்ட் தன் இடுப்பை சுற்றி ஒரு துண்டு கட்டிக்கொள்ள கற்றுக்கொண்டார். வீட்டில் இருந்த அனைவரும் ஒருவர் பின் ஒருவராக, தினமும் கிணற்றில் இரு வேளை குளித்தனர். பெண்கள் முழுமையாக ஆடை உடுத்திக்கொண்டு குளித்தனர். §§

தினமும் நடைபெற்ற நடவடிக்கைகளில் சாப்பாடு முக்கிய அங்கம் வகித்தது, மற்றும் திறந்த விறகு அடுப்பில் பெண்கள் சமையல் செய்ததால், அவர்கள் சமைக்க அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு விருந்தாளி உணவின் சுவையை உணர்ந்தாலும், அவரை சாப்பிட அழைப்பது அந்த குடும்பத்தின் கடமையாக இருந்தது. அந்த சமூகம் தீவிர சைவர்களாக இருந்தார்கள், மற்றும் அவர்களின் சமையற்கலை வியக்க வைக்கும் வகைகளுடன் இருந்தது. கடந்த சில நூற்றாண்டுகளாக இலங்கையில், தென் இந்திய அரிசி மற்றும் காய்கறிகள் அதிக வளர்ச்சி அடைந்துள்ளன. அதில் வித்தியாசமான நறுமணம் மற்றும் மிகவும் லேசான தானியங்களுடன் இருக்கும் இலங்கையின் பிரத்யேகமான நாட்டு சிவப்பு அரிசியும் அடங்கும். §§

குளிர்சாதன பெட்டி வசதி எதுவும் இல்லாமல், எல்லாம் நிலத்தில் இருந்து சுத்தமாக தயாரிக்கப்பட்ட கடைகளில் வாங்கப்பட்டன. மீதம் இருந்த உணவுப்பொருட்கள் வாழை இலைகளுடன், வீட்டிற்கு வெளியே வீசப்பட்டன. அவற்றை மாடுகள் உண்டு மகிழ்ந்தன. இதனால் பாத்திரம் கழுவும் வேலை அதிக அளவு குறைந்தது. எதுவும் விரயமாகவில்லை. ஒரு குடும்பம் அன்றைய தேவைக்கு காய்கறிகள், பயறு வகைகள், தானியங்கள் மற்றும் பழங்களை வாங்க கடைக்கு செல்லும் போது, ஒரு கூடையை எடுத்து செல்லும்; உணவு பொதியல் போன்ற விவகாரங்கள் இல்லை. மாட்டில் இருந்து பால் நேரடியாக காய்ச்சும் பாத்திரத்திலேயே சுறக்கப்பட்டது. இந்த கலாச்சாரம் அதிக தன்னிறைவை வழங்கி, சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாமல் இருந்தது, வீட்டில் கழிவு பொருட்கள் எதுவும் இருக்கவில்லை, வாரம் ஒரு முறை குப்பை சேகரிக்கும் பணி அல்லது குப்பை சேகரித்து புதைக்கும் இடம் இல்லை. மிகவும் அரிய வெளிநாட்டு பேனா உடைந்துவிட்டால், அதை தனியாக வீட்டு வளாகத்தில் புதைக்க வேண்டும். §§

ஒரு ஆச்சாரமான இந்து வீட்டில் நான் தங்கியது அதுவே முதல் முறை. எனக்கு அங்கே எனது சொந்த வீட்டில் இருந்த உணர்வு ஏற்பட்டது. அது அற்புதமாகவும் இருந்தது. இலங்கையின் வடக்கு பகுதி, தெற்கு பகுதியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. அது வேறொரு நாட்டில் இருந்தது போல தோன்றியது. அங்கே இந்து மதம் பின்பற்றப்பட்டது. தெற்கு இலங்கையில், பெளத்த மதம் பின்பற்றப்பட்டது. வடக்கு பகுதி உலர்வாக, வறண்டு சமநிலமாக இருந்தது. அது இலங்கையின் தென் பகுதி மற்றும் மலை பிரதேசம் போல பசுமையான வெப்பமண்டல பகுதியாக இல்லை. எனக்கு உடனே வீட்டில் இருக்கும் உணர்வு ஏற்பட்டது. நாங்கள் கிணற்றில் குளித்து, அந்தி சாய்ந்ததும் கோல்மான் கூண்டு விளக்கை ஏற்றி மிகவும் எளிய வாழ்க்கையை வாழ்ந்தோம். நாங்கள் கோயில் அல்லது சந்தைகளுக்கு செல்லும் போது நடந்து சென்றோம் அல்லது ஒரு மாட்டு வண்டியில் சென்றோம். §§

அங்கே எல்லோரும் எளிமையாக இருந்தார்கள். யார் வீட்டிலும் அறைகலன்கள் இல்லை. அனைத்தும் தரையிலேயே வைக்கப்பட்டு இருந்தன. அதை வாங்கும் வசதி படைத்தவர்களும், அறைகலன்களை வாங்கினால் அதை வாங்க வசதி இல்லாதவர்களை அவமதிப்பதாக இருக்கும் என்று கருதியதால், அவர்களும் அவற்றை வாங்க மாட்டார்கள். யாரும் அறைகலனை பயன்படுத்தவில்லை என்பதால், அவர்களுக்கு அந்த தேவையும் இருந்ததில்லை. அங்கே பெரும்பாலான வீடுகளில் மின்சார வசதியும் இல்லாமல் இருந்தது. அதனால் எல்லாம் மிகவும் இயல்பாக இருந்தது. மேலும் ஒவ்வொரு சிறிய சமூகத்தின் மையமாக கோயில் அமைந்து இருந்தது. §§

நாங்கள் சாவகாசமாக, அங்கே இருந்த பிள்ளையார் கோயில், நல்லூர் கந்தசுவாமி கோயில் மற்றும் மற்ற முக்கிய கோயில்களை சுற்றி பார்த்தோம். நான் இதற்கு இடையில் உட்புற சூழலை கிரகித்து கொண்டு இருந்தேன், மற்றும் கோயிலில் இருந்து வந்த உற்சாகம் தரும் அதிர்வுகள் எனது உடலில் பாய்ந்து சென்ற போது தெய்வங்களின் அருளையும் பெற்றேன். நான் அற்புதமான உணர்வை பெற்றேன். அது அற்புதமாக இருந்தது. நான் அங்கே தற்பொழுதில் நிலைத்து இருந்தேன். நான் எனது வாழ்நாளின் உயர்ந்த அனுபவமாக, ஒரு இந்துவாக மாறும் நாளை எதிர்பார்த்து இருந்தேன். §§

தனியுரிமை அவருக்கும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அறைகளுக்கு மத்தியில் கதவுகள் இல்லாமல், வெறும் திரைகள் மட்டுமே இருந்தன. மேலும் யாரும் தட்டிக்கொண்டு உள்ளே வரவில்லை. மேற்கத்திய நாடுகளில் தனி நபருக்குரியதாக கருதப்பட்ட விஷயங்கள், இங்கே குடும்பத்தின் அங்கமாக விளங்கிய விதம், அவர் மனதை வலுவாக கவர்ந்தது. அவருக்கு வந்த தபால்களை மனதில் எந்த வித தலையீட்டையும் உணராமல் திறந்து படிக்க முடியும். அவருக்கு பகிர்ந்த இருப்பின் உணர்வு ஒரு வெளிப்பாடாக இருந்தது. §§

அந்த குடும்பம் விருந்தாளி மீது அன்பு செலுத்தி, அவருக்கு மரியாதை செலுத்தியது. அவர்கள் தங்களைப் பற்றி கற்றுக்கொண்டு, தங்களது கலாச்சார வேறுபாடுகளை சமன் செய்தனர். ஒரு சமயத்தில், ராபர்ட்டுக்கு அதிக தனிமை தேவைப்பட்டது. அதனால் சுமார் கால் மைல் தூரத்தில் இருந்த ஒரு ஓலை குடிசையில், சில வாரங்கள் தங்க அந்த குடும்பம் அவருக்கு அனுமதி அளித்தது. மணல் நிரம்பிய நிலத்தில் அமைந்து இருந்த அந்த குடிசையை சுற்றி, நருமணமுள்ள ஒரு வகை புதர் செடி மற்றும் தென்னைமரங்கள் மட்டுமே இருந்தாலும், அதனுடன் ஒரு சிறிய கிணறும் இருந்தது. மேலும் அங்கிருந்த அமைதி அவரது சீடர்களுக்கு சாதகமாக இருந்தது. §§

அவர் விடியற்காலையில் அந்த கிராமத்தை ஒன்று சேர்க்கும் புழுதி படிந்த பாதைகள் வழியாக நடந்து கும்பழாவளை பிள்ளையார் கோயிலுக்கு சென்று, பின்னர் தன் இருப்பிடத்திற்கு திரும்பி வந்து நாள் முழுவதும் அமைதியாக தியானம் செய்வார். அந்த வெளிநாட்டு இளைஞர் நாட்டிற்கும் அதன் பழக்க வழக்கங்களுக்கும் புதியவர் என்பதால், கந்தையா செட்டியார் மனதில் எப்போதும் கவலையுடன் அவரை கண்காணித்து வந்தார். அவர்கள் பெரும்பாலும் ஆன்மீக வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டனர். அது ஒரு பாரம்பரிய உறவு என்பதால், அதை கந்தையா தனது குடும்பத்துடனும், தனது குருவுடனும் பகிர்ந்துக்கொள்ள முடியவில்லை. அவர் பேசுவதற்கு தோழராக ஒரு சாதகர் கிடைத்து இருந்தார், மற்றும் இருவரும் ஆன்மீகத்தை பற்றி மணிக்கணக்கில் உரையாடிக்கொண்டு இருப்பார்கள். §§

“வயதான யாசகரை” சந்தித்தல் §

இந்த சைவ சமூகத்தில் ராபர்ட்டு அதிக சுகத்தை உணர்ந்து அதன் கலாச்சாரம், அதன் மக்கள் மற்றும் அதன் வளமான ஆன்மீகத்துடன் ஒன்றி இருந்ததால், அவர் அதனுடன் முறையாக இணைய விரும்பினார். §§

ஒரு நாள் நான் கந்தையாவிடம், “நான் ஒரு இந்துவாக மாற விரும்புகிறேன். எனது சிறு வயதில் இருந்து இன்று வரை ஒரு இந்துவாக இருக்க பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதால், நான் இப்பொழுதே அந்த உணர்வுடன் இருக்கிறேன், ஆனால் அதை எவ்வாறு முறைப்படுத்துவது? நீங்கள் என்னை ஆத்ம ஞானம் பெற்ற ஒரு மிகவும் புனிதமான பூசாரியிடம் அழைத்து செல்ல முடியுமா?” என்று கேட்டேன். “நீங்கள் பேசும் ஆத்ம ஞானத்தை பெற்ற பூசாரிகள் நமது கோயில்களில் இல்லை. சற்று பொறுங்கள். சரியான நேரம் விரைவில் வரும்,” என்று பதில் அளித்தார். அவர் என்னை எனது குருவிடம் அழைத்து செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார், ஆனால் நல்ல தருணம் வருவதற்காக, சமிக்ஞைகளை கவனித்து வந்தார். §§

அந்த சந்திப்பை கந்தையா தொடர்ந்து புறக்கணித்து வந்தார். தனது அமெரிக்க மகன் (ராபர்ட்டை கந்தையா அப்படித்தான் அழைத்தார்) நேரடியாக சென்று சுவாமியை தரிக்க அனுமதி வழங்காமல், அவர் உரிய நேரம் வரும் வரை காலம் தாழ்த்தி வந்தார். இறுதியாக அவர் ஒரு நாள், “நீங்கள் யோக சுவாமியை சந்திப்பதற்கு, இன்று சரியான நாளாக தோன்றுகிறது,” என்று அறிவித்தார். அவர் தானே செல்லாமல், அவர்கள் எப்படி அங்கே செல்ல வேண்டும், அவர்களை யார் அழைத்து செல்ல வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை வழங்கி, தனது மகன் விநாயகமூர்த்தியை அனுப்பி வைத்தார். §§

மே 1949, யாழ்ப்பாணத்தில் திருவிழா காலமாக இருந்தது. அந்த மாதத்தில் யோக சுவாமியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அந்த சமயத்தில் முருகனுக்கு ஒரு விசேஷ திருவிழாவும் நடைபெறும். அந்த சமயத்தில் தெற்கில், புத்தர் பரிநிர்வாணம் பெற்றதை குறிப்பிடும் வெசாக் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்கு உகந்த பழமாக விளங்கி, பலருக்கு பிடித்தமான மாம்பழங்கள் அதிகமாக தென்படும் பருவமும் அது தான். §§

அவர்கள் மதியம் மூன்று மணிக்கு கிளம்பினார்கள். அவர்கள் யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தை பிடிக்க அருகில் இருந்த மல்லாகம் என்ற கிராமத்திற்கு நடந்து சென்ற போது வீசிய தென்றல் காற்று, அவர்களுக்கு குளுமையை வழங்கியது. அவர்கள் சுமார் 3:30 மணிக்கு அந்த கிராமத்தை அடைந்தார்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஒரு பேருந்து வந்தது. அவர்கள் சுமார் ஐந்து மணிக்கு, யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததும் நேராக குமார் சூரியன் என்ற ஒரு வழக்கறிஞர் வீட்டிற்கு சென்றார்கள். அந்த வழக்கறிஞர் அவர்களை சுவாமியிடம் அழைத்து செல்வார் என்று கந்தையா குறிப்பிட்டுக் இருந்தார். அவர்களுடன் செல்ல வழக்கறிஞர் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார். ஆனால் முதலில் அவர்களுக்கு தேநீர் மற்றும் இடியாப்பம் வழங்கி உபசரித்தார். இதற்கிடையே அவர் வீட்டு பணியாளர் மாட்டு வண்டியை தயார் செய்துக்கொண்டு இருந்தார். பதினைந்து நிமிடங்கள் கழித்து, இரண்டு அழகான வெள்ளை நிற பிரம்மன் காளைமாடுகள் இழுத்த ஒரு பாரம் சுமக்கும் வண்டியில், அவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். §§

அந்த வண்டி நிதானமாக முதலில் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு சென்றது. சுவாமியை பார்ப்பதற்கு முன்பாக, கோயிலுக்கு சென்று தெய்வத்தை வழிபட்ட பிறகு செல்லலாம் என்று குமார் பரிந்துரைத்தார். அப்போது மாலை 6 மணி, மற்றும் அது பூஜை தொடங்கும் நேரம். அவர்கள் வண்டியில் இருந்து கீழே இறங்கி முகம், கை மற்றும் கால்களை கழுவிக்கொண்டு, கோயிலுக்குள் சென்றனர். அந்த நாட்களில், இன்று போல் இல்லாமல், இறைவனை கருவறைக்கு அருகில் இருந்து தரிசிக்க அனுமதி இருந்தது. மூவரும் தீவிரமாக தரிசித்துக்கொண்டு, பூஜை தொடங்குவதற்காக கருவறை முன்பாக நின்றுக்கொண்டு இருந்தார்கள். §§

அவர்கள் மாலை சுமார் 7 மணி அளவில் யோக சுவாமியின் ஆசிரமம் சென்றடைந்தார்கள். சூரியன் மறைந்து, நிலப்பரப்பில் பவுர்ணமி நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது. விளக்குகள் ஏற்றப்பட்டு இருந்தன, மாலைப்பொழுது சுவாமியை தரிசிக்க அன்பர்களை அழைத்து வந்து இருந்தது. அங்கிருந்த சூழல் சற்குருவின் இருப்பால் உற்சாகம் தருவதாக இருந்தது. அவருடன் சுமார் பதினைந்து அன்பர்கள் அமர்ந்து இருந்தார்கள். வண்டி சக்கரங்களின் கிரிச்சீடும் சத்தம் நின்றவுடன், குடிசையில் இருந்து சத்தமாகவும் தெளிவாகவும், “வாருங்கள். வாருங்கள். நான் உங்களுக்காக காத்து இருக்கிறேன்,” என்று சுவாமியின் குரல் கேட்டது. இதைப்பற்றி விநாயகமூர்த்தி நினைவுக்கூர்கிறார்: §§

நாங்கள் கதவை திறந்து ஆசிரமத்திற்குள் நுழைந்ததும், “நீ என்னை எங்காவது பார்த்து இருக்கிறாயா?” என்று யோக சுவாமி உரத்த குரலில் ராபர்ட்டிடம் கேட்டார். அதற்கு ராபர்ட், “ஆமாம். நல்லூர் கோயிலில் நான் உங்களை பார்த்தேன்,” என்று பதில் அளித்தார். அதன் பிறகு பின்வரும் உரையாடல் நடந்தது. யோக சுவாமி: “நீ எனக்குள் இருக்கிறாய்.” ராபர்ட்: “நீங்கள் எனக்குள் இருக்கிறீர்கள்.” யோக சுவாமி: “நான் உனக்குள் இருக்கிறேன்.” ராபர்ட்: “நான் உங்களுக்குள் இருக்கிறேன்.” §§

அங்கிருந்த அன்பர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். செல்லப்பகுரு வாழ்ந்த காலத்திற்கு பிறகு, அவரிடம் யாரும் இதைப்போல பேசவில்லை. அவர் வழக்கமாக ஒரு அன்பரிடம், “நான் உனக்குள் இருக்கிறேன்,” என்று சொன்னதும், அந்த அன்பர் பணிவாக, “ஆமாம், சுவாமி,” என்று பதில் அளிப்பார். அல்லது சுவாமி இயற்றிய ஒரு பாடலைப் பாட ஆரம்பித்து விடுவார். ராபர்ட்டைப் போல யாரும் பதில் அளித்தது இல்லை. அவர் சுவாமியை போல நம்பிக்கையுடன் பேசி, அவர் சொன்ன வார்த்தைகளை எதிரொலித்தார். §§

சிறிது நேரம் கழித்து சுவாமி சூழ்நிலையில் இருந்த தீவிரத்தை குறைத்து, உள்ளே வருமாறு விருந்தாளிகளிடம் சைகை காண்பித்து, “உள்ளே வந்து, யாழ்ப்பாணத்தின் முதிய யாசகருடன் உட்காருங்கள்,” என்று கூறினார். ராபர்ட் நெறிமுறையை அறிந்து இருந்தார் மற்றும் சுவாமி அமர்ந்ததும், தரையில் விழுந்தது வணங்க முன் வந்தார். ஆனால் சுவாமி அவர் செய்ய வேண்டாம் என்று சைகை செய்து, அருகில் இந்த விநோதமான விருந்தாளிக்காக பரப்பி வைக்கப்பட்டு இருந்த ஒரு பாயின் மீது உட்காருமாறு கேட்டுக்கொண்டார். §§

அன்று இரவு யோக சுவாமி நல்ல மனநிலையுடன், தனக்கு முன்பாக வந்த அன்பர்களை பார்த்து சிரித்துக்கொண்டும் புன்னகைத்துக் கொண்டும் இருந்தார். அது ஒரு விஷேசமான விடுமுறை நாள் போல தோன்றியது. அவருக்கு முன்பாக இருந்த ஒரு பெரிய தட்டில் திராட்சையின் பெரிய கொத்துக்கள் இருந்தன. அவர் தனது சீடர்களில் ஒருவரான, பண்டிதர் அ. வி. மயில்வாகனத்தை அழைத்து, அந்த தட்டை எடுத்துச் சென்று, மூன்று விருந்தாளிகளுக்கு பழச்சாறு தயார் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். §§

image§

யோக சுவாமியை சந்திப்பதற்கு முன்னேற்பாடாக, “வேல்” வடிவமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகப்பெருமானின் ஆசிகளை பெறுவதற்கு ராபர்ட் நல்லூர் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். இருண்டு இருந்த கருவறைக்கு முன்பாக நின்று இருந்த போது, அவரது எதிர்கால சற்குரு முதல் முறையாக காட்சி அளித்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

பழச்சாறு தயாராகிக் கொண்டிருந்த போது, பதஞ்சலியின் யோக சூத்திரங்களை படித்து இருக்கிறாரா என்று யோக சுவாமி தனது விருந்தாளியிடம் கேட்டார். அவரது அலமாரியில் இருந்த புத்தகத்தை எடுத்து, அந்த புத்தகம் மட்டுமே தான் வைத்து இருந்ததாக அவர் குறிப்பிட்டார். தான் அதை படித்து இருப்பதாக ராபர்ட் பதில் அளித்தார். அவருக்கு கிடைத்த ஆரம்பக்கால பயிற்சியின் போது, அவர் அந்த புத்தகத்தை மட்டுமே படித்து இருந்தார். அவர் அதை படித்து, பல வருடங்களுக்கு அதில் பயிற்சியும் செய்து இருந்தார். அந்த சுருக்கமான தலைசிறந்த பதிப்பை பற்றி யோக சுவாமி சில கேள்விகளை துருவி துருவி கேட்டார். ராபர்ட் விரைவாகவும் தெளிவாகவும் பதில் அளித்தார். அவர் அந்த அனுபவத்தைப் பற்றி பின்னர் குறிப்பிடும் போது, பதில்கள் அறிவுணர்வு நினைவாக வராமல், உள்ளிருந்து விரைவாக வந்ததாக கூறினார். §§

பிறகு யோக சுவாமி த்வைதம் மற்றும் அத்வைததிற்கு இடையேயான வித்தியாசத்தைப் பற்றி கேட்டார். ஒருவரது கண்ணோட்டத்தை பொருத்து, இரண்டும் உண்மை தான் என்று ராபர்ட் பதில் அளித்தார். அது ஒருமையாகவும் இல்லை, இருமையாகவும் இல்லை அந்த சீடன் கிரகித்துக்கொண்டிருந்த முறையை ரசித்து, யோக சுவாமி சிரித்தார். தத்துவத்தின் இரண்டு கிளைகளுக்கும் இடையே இருந்த சர்ச்சையை நன்கு அறிந்து இருந்த சுவாமி, ராபர்ட் அளித்த பதில் மூலம் திருப்தி அடைந்தார். பிற்காலத்தில் Dr. எஸ். இராமநாதன இதைப்பற்றி பின்வரும் நுண்ணறிவுகளை வழங்கினார்: §§

image§

அவர்களுக்கு இடையே நடந்த உரையாடலின் போது, ராபர்ட் தான் அளவெட்டியில் ஒரு சிறிய ஆசிரமம் அமைத்துள்ளதாக குறிப்பிட்டார். அது எதிர்காலத்தில் மூன்று அடுக்கு கட்டிடமாக மாறும் என்று யோக சுவாமி கணித்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

“அஹம் பிரம்மாஸ்மி” என்ற மகாவாக்கியத்தை, அத்வைத வேதாந்த விமர்சகர்கள் தவறாக புரிந்துக்கொண்டு இருப்பதாக, சுவாமி ஒரு முறை கூறினார். அவர் ஸ்ரீ சங்கராச்சாரியாரின் அத்வைத வேதாந்தம் மற்றும் சிந்தாந்த சாஸ்திரங்களை மிகவும் உயர்வானதாக கருதினார். ஒரு நாள் நான் கொழும்புத்துறை ஆசிரமத்திற்கு செல்லும் போது, வேதாந்தம் மற்றும் சிந்தாந்தத்திற்கும் இடையிலான விவாதத்தை பற்றி சிந்தித்துக் கொண்டு சென்றேன். நான் சுவாமி பார்த்த போது, அவர் தாயுமானவர் படைப்பில் இருந்து “வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே" என்ற பாடல் வரியை பாட ஆரம்பித்தார். அது திடமான உண்மை என்பதை குறிப்பிடும் வண்ணம், அவர் தனது கைகளை தனது நெஞ்சில் வைத்துக்கொண்டார். §§

தத்துவதைப் பற்றிய அவர்களது உரையாடல் சுமார் இருபது நிமிடங்கள் நீடித்தது. இறுதியாக திராட்சை பழரசம் வந்ததும், யோக சுவாமி அதை விருந்தாளிகளுக்கு வழங்கினார். அத்துடன் அன்றைய மாலை பொழுது விவாதம் நிறைவு பெற்றது. நீண்டதூரம் செல்ல வேண்டி இருந்ததால், வீட்டிற்கு கிளம்புமாறு சுவாமி அவர்களிடம் கேட்டுக்கொண்டார். §§

அவர்கள் சுவாமியிடம் இருந்து விடைபெற்று, காத்திருந்த மாட்டுவண்டியை நோக்கி நடந்தார்கள். இந்த மர்மமான சந்திப்பின் மூலம் வியப்பில் இருந்த சீடர்களும் தங்கள் வீட்டிற்கு திரும்பினர். ஒரு வழக்கறிஞராகவும் புத்திசாலியாகவும் இருந்த குமார் மகிழ்ச்சியாக இருந்தாலும், சற்று வருத்தத்துடனும் இருந்தார். “இன்று மாலை நல்லூர் கோயிலில் சுவாமியை பார்த்தேன் என்று எதற்காக சொன்னீர்கள்? நான் உங்களுடன் தான் இருந்தேன், ஆனால் நான் அவரை பாரக்கவில்லையே,” என்று தனது விருந்தாளியிடம் விசாரித்தார். “நான் அவரை பூஜையின் போது கருவறையின் உள்ளே பார்த்தேன். அவர் அந்த இடத்தில் எனக்கு முன்பாக நின்றுக்கொண்டு இருந்தார்,” என்று ராபர்ட் பதில் அளித்தார். இதன் மூலம், யோக சுவாமி மற்றும் ராபர்ட்டுக்கு இடையே இருந்த உறவின் ஆன்மீகப்பண்பைப் பற்றி அந்த வழக்கறிஞர் புரிந்துகொண்டார். §§

பல வருடங்கள் கழித்து, அந்த அமெரிக்கர் யோக சுவாமியுடன் தான் மேற்கொண்ட சந்திப்புக்களைப் பற்றி விளக்கினார். §§

ஒரு நாள், நான் யோக சுவாமியை தரிசனம் செய்ய அழைத்து செல்லப்பட்டேன். யோக சுவாமி என்று அன்புடன் உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்ட ஞானகுரு யோகநாதன், ஒரு அற்புதமான மனிதராக இருந்தார். நல்ல மனநிலையில் இல்லாதவர்கள், அவரை நெருங்கவே அஞ்சுவார்கள். அவருக்கு அருகில் இருக்கும் பொது, அங்கிருக்கும் சூழல் பிரகாசமாக இருப்பதை உணரமுடியும். அங்கிருக்கும் சூழலில் உற்சாக உணர்வை உணர முடிந்தது. இந்த குருவை சந்திக்கும் முன்பாக, சீடர்கள் தங்களை ஆன்மீக ரீதியாக தயார்ப்படுத்திக் கொள்வார்கள். ஒரு தட்டு நிறைய பழங்களை மட்டும் எடுத்து செல்ல, அவர்கள் சிலசமயங்களில் மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை தங்களை தயார்ப்படுத்திக் கொள்வார்கள். அவர்களிடம் நீங்கள் எப்போது குருவை தரிசிக்க செல்லப்போகிறீர்கள் என்று கேட்டால், “நான் யோக சுவாமியை தரிசிக்க இன்று தயாராக இல்லை, நாளை செல்ல வாய்ப்புள்ளது,” அல்லது, “நான் ஒரு மங்களகரமான நாளில் செல்லலாம் என்று இருக்கிறேன்,” என்று அவர்கள் பதில் அளிப்பார்கள். ஏனென்றால் தாங்கள் தங்களுக்குள் கண்டுகொண்டதை, அவர் தங்களுக்குள் கவனித்து சுட்டிக்காட்டுவதை அவர்கள் விரும்பவில்லை. மக்கள் தன்னை நாடி வரும் முன்னர், அவர்கள் எப்போது வருவார்கள் என்பதை அவர் அறிந்து இருந்தார். §§

அவருடன் என்னுடைய சந்திப்பு விசித்திரமாக இருந்தது, ஏனென்றால் நான் அறிமுகப்படுத்தப்பட்டதும் அவர் என்னிடம், “உள்ளே வந்து, இங்கே உட்கார்,” என்று கூறினார். அவரை மற்ற எல்லோரும் நமஸ்காரம் செய்தார்கள். கிழக்கத்திய நாடுகளில், சீடர்கள் தங்கள் குருவின் முன்பாக, முகம் மற்றும் உடல் முழுவதும் தரையில் படும்படியாக விழுந்து வணங்குவார்கள். அவர் என்னிடம், “நீ உள்ளே வந்து உட்கார். நீ அதை செய்யவேண்டாம். நீயும் நானும் ஒன்று.”§§

அவர் அதன் பிறகு என்னிடம் மிகவும் ஆழமான தத்துவ கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். நான் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான பதிலை அளித்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் அதிக திருப்தியுடன் தென்பட்டார். அவர் கேள்வி கேட்டவுடன், நான் எந்த வித தயக்கமும் இல்லாமல் பதில் அளித்தேன். அதன் பிறகு அவர் எனக்கு சுப்பிரமுனியா என்று பெயர் சூட்டினார். அதுவே என்னுடைய இன்றைய பெயர். “நீ வெள்ளை நிறத்தில் இருக்கிறாய்; சுப்பிரமுனியா வெள்ளை நிறமாக இருக்கிறார்,” என்று என்னிடம் நம்பிக்கையுடன் கூறினார். அவர் எனக்கு குருவாக, எனது ஆசானாக இருந்தார். சுப்பிர என்றால் “மத்திய மூலத்தில் இருந்து வெளிவரும் ஒளி” என்று பொருள். அது தடையில்லாமல் வெளிப்படுகிறது. முனி என்றால் ஒரு அமைதியான ஆசிரியர் என்று பொருள். யா என்றால் கட்டுப்பாடு. சுப்பிரமுனியா என்றால் அமைதியாக இருந்து அல்லது இயலுணர்வில் இருந்து பேசும், உட்புற ஆகாசத்தில் இருந்து பேசும் தன்னடக்கத்துடன் இருக்கும் ஆன்மா என்று பொருள். §§

அவர் தன்னிடம் வைத்து இருந்த பதஞ்சலியின் யோக சூத்திரங்கள் பற்றிய புத்தகத்தை என்னிடம் காண்பித்தார். நான் பதஞ்சலி எழுதிய அந்த புத்தகத்தை படித்து இருந்தேன். எங்களது ஆன்மீக சந்திப்பு அற்புதமாகவும் ஆழமாகவும் இருந்தது. அவர் என்னை தனது சகோதரனை போல கவனித்துக் கொண்டார். இதனை கண்டு மற்ற எல்லோரும் வியந்தாலும், நான் ஆச்சரியப்படும் உணர்வில் இல்லாமல் அதிகம் உட்புறமாக இருந்ததால், அது என்னை வியப்பில் ஆழ்த்தவில்லை. நான் அவருடன் சேர்ந்து உணவு சாப்பிட்டேன், பின்னர் நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம். நான் கிளம்புவதற்கு முன்பாக, நான் அளவெட்டிக்கு அருகில் ஒரு ஆசிரமத்தை அமைத்துள்ளேன் என்று கூறி, அதற்கு அவரது ஆசிகளை வேண்டினேன். அவர் அதற்கு, “நல்லது, அது ஒரு நாள் மூன்று அடுக்கு கட்டிடமாக வளர்ச்சி பெறும். நீ உலகம் முழுவதும் சுற்றி வந்து, ஆயிரக்கண்கான மக்களுக்கு உணவு அளிப்பாய். நீ பல அரண்மனைகளை கட்டப்போகிறாய்,” என்று கூறினார். §§

“நீ அமெரிக்கா திரும்பி கர்ஜிக்கப் போகிறாய். நீ மீண்டும் இங்கே திரும்பி வரும் போது, எந்த ஆதாயமும் இருக்காது, எந்த இழப்பும் இருக்காது,” போன்ற பல்வேறு விதமான அறிவுறுத்தல்களை அவர் எனக்கு வழங்க ஆரம்பித்தார். “இனி நீ பெற்ற உணர்தல்களை மற்றவர்களுக்கு கற்றுக் கொடு,” என்று அவர் கூறினார். எனது பாதையில் இருந்த ஆறு ஆசிரியர்களும் என்ன செய்யவேண்டும் என்று சொல்லி கேட்டிருந்தபடியால், இந்த நேர்மறையான அறிவுறுத்தலின் மூலம் நான் மகிழ்ச்சி அடைந்தேன். நான் குருவை சந்தித்து கிளம்பிய பிறகு, எல்லோரும் என்னை வேறுவிதமாக பார்க்க ஆரம்பித்தார்கள். §§

image§

அவர்களது மூன்றாவது சந்திப்பின் முடிவில், யோக சுவாமி கதவு வரை தனது அமெரிக்க விருந்தாளியை பின் தொடர்ந்து சென்றார். அவர் பின்னால் இருந்து வந்து, சுப்பிரமுனியாவின் முதுகில் பலமாக அடித்ததால், அந்த உயரமான இளைஞர் தடுமாறி கீழே விழ இருந்தார். அதை கவனித்த பெரியோர்கள் குழம்பி நிற்க, அது ஒரு வலுவான ஆன்மீக தீட்சையாக இருந்தது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

நான் எனது குருவை இரண்டாவது முறையாக சந்தித்த போது, சந்தோஷமாக நேரத்தை கழித்தோம். நாங்கள் தியானம் மட்டுமே செய்து, ஒரு அழகான ஓட்டத்தை ரசித்துக்கொண்டு இருந்தேன். பல அன்பர்கள் வந்து இருந்தார்கள். §§

மூன்றாவது சந்திப்பின் போது, நாங்கள் ஆன்மீக பாதையை பற்றி ஒரு அழகான உரையாடலை மேற்கொண்டோம். அதன் பிறகு நான் ஆசிரமத்தை விட்டு கிளம்பும் போது, என்னை வழியனுப்ப வந்த அவர் என் முதுகில் பலமாக அடித்தார். அதற்கு முன்பு என்னை யாரும் அவ்வளவு பலமாக அடித்தது இல்லை. அவர் என்னை நெருங்கி, தோள்பட்டை எலும்புக்கு நடுவே முதுகுத்தண்டில் ஓங்கி அடித்தார். அந்த அடி பலமாக இருந்தது, நான் மட்டும் உயரமாக இல்லை என்றால், தரையில் விழுந்து இருப்பேன். அது மிகவும் பலமான தீட்சைகளில் ஒன்றாக இருந்ததால், அங்கே கூடியிருந்த இந்து அன்பர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த தீட்சைக்கு பிறகு, அவர் எனக்கு சில வலுவான அறிவுறுத்தல்களை வழங்கினார்…. இந்த தீட்சையுடன், அவர் என்னை அமெரிக்காவிற்கு ஒரு சந்நியாசியாக அனுப்பினார். அப்போது எனக்கு 22 வயது, மற்றும் அவருக்கு 77 வயது. §§

அந்த ஆசிரமத்தில் கூடியிருந்த டஜன் கணக்கான அன்பர்கள், இளம் அமெரிக்கரை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க ஆரம்பித்தனர். இதைப்பற்றி சுப்பிரமுனியா பின்னர் வழங்கிய ஆழமான கருத்து:§§

ஒரு குரு நான்கு வகைகளில் தீட்சை வழங்குவார். அதில் மிகவும் மென்மையான முறையாக, பேசுவதன் மூலம் வழங்குவார். இன்னொன்று தனது பார்வையின் மூலமாகவும், மற்றுமொன்று தனது சிந்தனை மூலமாகவும் வழங்குவார். உண்மையான ஆன்மீக பலத்துடன் கலந்த தொடுதல் மூலமாக அதிக ஆற்றல்மிக்க தீட்சை வழங்கப்படுகிறது. ஏனென்றால் குறிக்கோளுடன் தொடுவதன் மூலம், அவர் சீடனுக்கு தன்னிடம் இருக்கும் எல்லா ஆன்மீக புரிதல் மற்றும் ஆன்மீக சக்தியையும் வழங்க ஆரம்பிக்கிறார். இதன் மூலமாக யோக சுவாமி, எப்படி ஒரு குருவாக இருக்கவேண்டும் என்ற தனது புரிதல் அனைத்தையும் எனக்கு வழங்கினார். அது பின்னர் அவரிடம் இருந்து, அவரது குருவிடம் இருந்து மற்றும் அவரது குருவின் குருவிடம் இருந்து எனக்குள் விரிவாக்கம் பெற்றது. இந்த வழியில், ஆன்மீக சக்தி குருக்களின் பரம்பரையில் இடமாற்றம் பெற்று அதிகரிக்கிறது. §§

இதைப்பற்றி, விநாயகமூர்த்தி வழங்கிய குறிப்பு:§§

ஒரு குரு தனது சீடனை சிந்தனை, சொல், பார்வை மற்றும் தொடுதல் என்று நான்கு வழிகளில் தீட்சை வழங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் சப்பிரமுனியாவின் விஷயத்தில், நல்லூர் கோயிலில் சுப்பிரமுனியா இருப்பதை அறிந்த யோக சுவாமி அங்கே தரிசனம் (சிந்தனை) வழங்கி, “நீ எனக்குள் இருக்கிறாய். நான் உனக்குள் இருக்கிறேன்,” என்று கூறி (சொல்), அவரை இயல்பாக பார்த்து (பார்வை), மற்றும் அவரது முதுகில் ஓங்கி அடித்து (தொடுதல்), ஒரு குரு தனது சீடனுக்கு வழங்க வேண்டிய சகலவிதமான ஆசிகளையும் சக்தியையும் வழங்கி கௌரவித்தார். §§

ஸ்ரீ சுப்பிரமுனியாவின் முதுகில் பலமாக அடித்து, அங்கிருந்த எல்லோரையும் வியக்க வைத்தார். அவர்களுக்கு அதன் பொருள் புரியவில்லை. அதைக்கேட்டதும் கந்தையா சிரித்துக்கொண்டு, “அப்படியென்றால், யோக சுவாமி அவருக்கு முடிசூட்டிவிட்டார்,” என்று கூறினார். இது இளம் சீடருக்கு வழங்கப்பட்ட தீட்சையாக விளங்கியது. மேலும் இதன் மூலம் யோக சுவாமி தனக்கு ஒரு வாரிசை நியமித்ததாகவும் பிற்காலத்தில் புரிந்துகொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தின் சாட்சியாக, அமைதி காப்பு நடுவர் திரு. எஸ். சுப்ரமணியம் இருந்தார். அவர் பிற்காலத்தில் இந்த சம்பவத்தை பற்றி பிற்காலத்தில் விளக்கும் போது “அது யோக சுவாமியின் சம்ஸ்காரங்கள் அல்லது முக்கிய தெய்வீக ஆன்மீக சக்திகளின் இடமாற்றம்" என்று குறிப்பிட்டார். §§

“நீ குருவாக இருக்கும் போது, ஒரு அமெரிக்க தாயை போல இருக்காதே,” என்று யோக சுவாமி தீட்சை பெற்ற இளம் சீடருக்கு அறிவுரை வழங்கினார். அவர் தனது அறிக்கையின் பொருள் புரிந்துகொள்ள முடியாமல் தவித்த தனது சீடனை பார்த்து, “அவர்கள் அங்கே இங்கே என்று சுற்றிக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் குழந்தைகளை இன்னொருவர் கவனித்துக்கொண்டு இருப்பார்கள். இதை நீ பார்த்து இருப்பாய். நீ ஆசிரமத்தில் இருந்து கொண்டு, உன் மாணவர்களுக்கு நெருக்கமாக இரு,” என்று கூறினார். இந்த முறை அவர்கள் பிரியும் போது, யோக சுவாமி தனது சீடரிடம், “உனக்கு என் உதவி தேவைப்படும் போதெல்லாம், நான் உன்னுடன் இருப்பேன்,” என்று சொல்வதை அருகில் இருந்த அன்பர்கள் கேட்டனர். §§

சுப்பிரமுனியா அங்கிருந்து கிளம்பியதும், என்ன நடந்தது என்பதைப் பற்றி வியக்கவோ பேசவோ இடம் அளிக்காமல், யோக சுவாமி விரைவாக பேச்சை மாற்றி, “அவன் நாட்டியக்காரனாக இருக்க வேண்டும். அவன் ஒரு போர்சோய் போல நடக்கிறார்,” என்று சிரித்துக்கொண்டே கூறினார். இதைப்பற்றி பின்னர் கந்தையா செட்டியார் “பேசும் கடவுளுடன் நடந்த சந்திப்பு,” என்று கடிதத்தில் எழுதி இருந்தார். §§

அன்றிலிருந்து ஸ்ரீ சுப்பிரமுனியா மறுபிறவி எடுத்தது போல காட்சி அளித்தார். அவரிடத்தில் மன அமைதி மிகவும் தெளிவாக தென்பட்டது. அவர் தொடக்க நிலையில் இருந்தார் மற்றும் அவருக்கு கலை, நடனம், இசை மற்றும் மற்ற நடவடிக்கைகளில் ஆர்வம் இருந்ததாக தோன்றியது. பெண்களுடன் இணைந்து செயல்பட வேண்டிய இந்த லௌகீக நடவடிக்கைகளிலும், “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தை உச்சரிப்பது போன்ற நடவடிக்கைகளில் பங்குபெற, அந்த பெண்களுக்கு பயிற்சி அளித்தார். மனித நேயம் புலன்களை அடக்குவதற்கு இந்த மந்திரம் உதவிகரமாக இருக்கிறது. §§

தான் நான்காவது முறையாக யோக சுவாமியை சந்திக்க சென்றபோது, அவர் தனியாக உட்கார்ந்து, ஆழமாக தியானம் செய்துக்கொண்டு இருந்ததாக, சுப்பிரமுனியா நினைவுகூர்ந்தார். அவர் கதவை நெருங்கியதும், யோக சுவாமி கண்களை திறந்து, “நான் வீட்டில் இல்லை,” என்று கர்ஜித்தார். அதிர்ச்சி அடைந்த இளைஞர் மெதுவாக திரும்பிய போது, இந்த முறை உரத்த குரலில், “நான் வீட்டில் இல்லை!” என்று சுவாமி மீண்டும் கூறினார். தகவல் தெளிவாக இருந்தது; அவர்கள் ஒன்றாக இருக்கும் நேரம் முடிவுக்கு வந்து விட்டது; மற்றும் அந்த சீடன் ஆசிரமத்தில் இருந்து இறுதியாக கிளம்பினார் மற்றும் திரும்பி வரவில்லை.. §§

மீண்டும் கொழும்பு வருகை §

1949 ஆம் ஆண்டு, கந்தையா செட்டியாருடன் இணைந்து உலக விவகாரங்களின் சிலோன் அலுவலகத்தை அமைத்தார். “கிழக்கு நாடுகளின் கலாச்சாரம் மேற்கு நாடுகளின் கலாச்சாரத்துடன் இணக்கத்தை பெற்றுள்ளது, அனைத்தும் நன்மைக்கே நடந்துள்ளது,” என்பது அவர்களின் குறிக்கோள் வாசகமாக இருந்தது. அவர்கள் ஆனந்த ஆசிரமத்தையும் நிறுவி இருந்தார்கள். மே 22 1949 அன்று, அத்தகைய முயற்சிகளை பற்றி ஒரு தமிழ் பத்திரிகை இந்த அறிக்கையை வெளியிட்டு இருந்தது. §§

யாழ்ப்பாணத்திற்கு ராபர்ட் ஹான்சென் வருகை. அமெரிக்க ஆசிய கலாச்சார பணியில் ஒரு அலுவலராக இருக்கும் இவர், கடந்த இரண்டு வருடங்களாக கொழும்பில் இருந்து வருகிறார். அவர் பெயர் ராபர்ட் ஹான்சென். அவர் சென்ற வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வந்து இருந்தார். ஆன்மீக கலாச்சாரத்தில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் இந்த இளைஞர், இந்து சமய இரகசியங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை அதிக ஆர்வத்துடன் கற்று வருகிறார். அவர் இங்கிருக்கும் கலையுணர்வு மிக்க நடவடிக்கைகள் மற்றும் கிழக்கு நாடுகளின் நடனங்களுக்கு அதிக மதிப்பு அளிக்கிறார். அமெரிக்க ஆசிய கலாச்சார பணியின் ஆதரவுடன் யாழ்ப்பாணத்தின் அளவெட்டியில், ஆனந்த ஆசிரமம் என்ற ஒரு மையம் நிறுவப்பட்டு உள்ளது. இந்த ஆசிரமம் ஆன்மீக மற்றும் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இந்த சங்கத்தில் சமய ஆர்வமுள்ள எவரும் அங்கத்தினர் ஆகலாம். ஒரு வியாபாரியாக இருக்கும் திரு. சி. கே. செட்டியார், இந்த சங்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவர் மகன் திரு. விநாயகமூர்த்தி செட்டியார், இங்கே செயலாளராக பணி புரிகிறார். உலகெங்கும் அன்பை பரப்புவதே இந்த ஆசிரமத்தின் முதல் குறிக்கோள் ஆகும்.”§§

யாழ்ப்பாணத்தில் சுப்பிரமுனியா மேலும் சில வாரங்களுக்கு தங்கி இருந்தார், ஆனால் அவர் கொழும்பிற்கு திரும்பி வருவார் என்பது எல்லோருக்கும் தெரிந்து இருந்தது. செப்டம்பர் 1949, அவர் மீண்டும் தலைநகரத்தில் நடனமாடினார் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தும் நோக்கத்துடன் மீண்டும் இணைந்த குழுவை கண்டியின் மலைப்பகுதிகளுக்கு அழைத்து சென்றார். ஆனால் அவை அனைத்தும் முன்பு போல இருக்கவில்லை. அவர் யோக சுவாமி மற்றும் செட்டியார் குடும்பத்துடன் இருந்த காலம், அவருக்குள் நிலைமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. §§

யோக சுவாமியிடம் தீட்சையை பெற்று மற்றும் செட்டியார் குடும்பம் என்னை தத்து எடுத்துக்கொண்ட பிறகு, நான் இலங்கை குடியுரிமை பெறுவதற்காக ஆவணங்களை சமர்பித்தேன். நான் மீண்டும் ஒரு தொழில் வாழ்க்கைக்கு திரும்பும் சாத்தியக்கூறுகளை நீக்கி விட்டதால், அமெரிக்கா திரும்பவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. எனது விசா காலாவதி ஆகும் நிலையில் இருந்தது. அதனால் நான் குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன். செட்டியார் என்னை அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். நான் பிரதம மந்திரியை சந்தித்து பேசினேன். நான்கு மாதங்கள் கடந்தன, ஆனால் எங்களுக்கு அலுவலகத்தில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. §§

அந்த ஆவணங்களின் நிலையை கவனிக்க, அந்த அலுவலகத்திற்கு எங்களை செட்டியாரின் நண்பர் அழைத்து சென்றார். அங்கே ஆவணங்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல், அலமாரியில் இருந்தன. அந்த தகவல் யோக சுவாமிக்கு எட்டிய போது, “(அமெரிக்கா) சென்று பாலத்தை கட்டு,” என்று கூறினார். அதனால் எனக்கு தேவையான உடைமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்ற அனைத்தையும் ஒரு பெரிய பயணப்பெட்டியில் வைத்து தயானந்தாவிடம் சாவியை கொடுத்து விட்டேன். நான் அமெரிக்கா செல்லும் கப்பலில் ஏறினேன். பயணமும் கடினமாக இருந்தது. நான் சூயஸ் கால்வாய் வழியாக சென்று போஸ்டனில் இறங்கி, அங்கிருந்து ஒரு உந்துவிசை விமானத்தின் மூலம் சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்தேன். விமானச் செலவு $80. கப்பலில் பயணச் செலவு $400. இவை அனைத்தையும் எனது பரம்பரை சொத்தில் இருந்து செலவழித்தேன். §§

அமெரிக்கா திரும்பிய சுப்பிரமுனியாவின் கப்பல் டிசம்பர் 14, 1949 அன்று செட் துறைமுகம் வழியாக பயணம் செய்து, அட்லாண்டிக் கடலுக்கு குறுக்கே பயணம் செய்து, டிசம்பர் 29 போஸ்டன் சென்றடைந்தது. §§