குருமார்களின் சரித்திரங்கள்

Page 14: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/14_na01_05.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

இரண்டாவது அத்தியாயம் §

மகரிஷி நந்திநாதா§

ரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்த இமயமலை ஹிந்துக்கள், வாழ்வாதாரத்திற்காக நம்பி இருக்கும் மற்ற மனிதர்களுக்கு நெருக்கமாக, தங்கள் ஆன்மீக மூலங்கள் மற்றும் நிலத்திற்கு அருகாமையில் இருந்துக்கொண்டு ஒரு கிராமப்புற வாழ்க்கையை வாழ்ந்தனர். வாழ்க்கைக்கு சுத்தமான தண்ணீர் முக்கியம் என்பதால், எப்போதும் ஒரு நதிக்கு அருகே சிறிய கிராமங்கள் மற்றும் ஆசிரமங்கள் கட்டப்பட்டன. பல வடிவங்களில் இருந்த அவர்களது கூரை வீடுகள் பெரும்பாலும் வட்டம் அல்லது செவ்வக வடிவில், உட்புறமாக நான்கு அல்லது ஆறு கம்பங்களுடன் கட்டப்பட்டு, அதன் மீது கையால் நெய்யப்பட்ட கிளைகள், புற்கள் மற்றும் இலைகள் அடுக்கப்பட்டு இருந்தன. தடித்த கீற்றால் உருவாக்கப்பட்ட இந்த கூரையை சரியாக கட்டப்படும் போது, இந்த பகுதியில் நிலவும் கொடிய பருவநிலையில் இருந்து பாதுகாப்பு அளித்தது. பருவநிலையில் இருந்து மேலும் பாதுகாப்பு அளிக்க, பெரிய மரங்களின் மத்தியிலும் அடியிலும் சாதாரண குடியிருப்புக்கள் நன்றாக திட்டமிட்டு பாதுகாப்புடன் கட்டப்பட்டன. இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட குடிசைகள், குளிர்காலத்தில் வெதுவெதப்பாக இருந்ததுடன், அதிக வெப்பத்துடன் சூரியன் பிரகாசமாக இருக்கும் கோடைக்காலங்களிலும் குளுமையாக இருந்தன. ஈரமான மண்ணுடன் மாட்டு சாணம் மற்றும் வைக்கோல் கலந்து உருவாக்கப்பட்ட தரைகள் கிருமநாசினியாக செயல்பட்டு, பூச்சிகளில் இருந்து விடுதலை அளிக்கும் முக்கிய பணியையும் செய்தன. ஒவ்வொரு நாளும் மாட்டு சாணத்தால் உருவாக்கிய தரையில் சுத்தமான தண்ணீர் தெளிக்கப்பட்டு, அந்த தரைக்கு புதுப்பொலிவை தருவதற்கு மொழுகப்பட்டது. §§

பல மலைகளுடன் இருந்த நிலங்கள் அதிக செங்குத்தாக இருந்ததால், இமயமலையில் இருந்த விவசாயிகள் குன்றுகளில் படிகளை அமைத்துக்கொண்டனர். இது கடினமாக இருந்தாலும் அத்தியாவசிய வேலையாக இருந்தது. அவர்கள் அரிசி, தானியங்கள் மற்றும் கார்பான்சோ பீன்ஸ், பருப்பு வகைகள் மற்றும் கிழங்கு வகைகளை வளர்த்தனர். (கிழங்கு வகைகள் உணவுப்பஞ்சம் போன்ற மிகவும் கடினமான சூழ்நிலைகளுக்கு பாதுகாத்து வைக்கப்பட்டன). பழங்கள் மிகுதியாக இருந்தன, மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் வாதுமை பழங்கள் மற்றும் ஆப்பிள்கள் பயிரிடப்பட்டன. அங்கிருந்த குடும்பங்கள் தேன் மற்றும் மெழுகிற்கு தேனீக்களையும், பாலுக்கு மாடுகளையும், இறைச்சிக்கு ஆடுகளையும் வைத்திருந்தார்கள் (பெரும்பாலானோர் சைவமாக இருந்தாலும், எல்லோரும் அப்படி இருக்கவில்லை), மற்றும் ஆடுகள் பாறைகளில் ஏறுவதில் சிறந்து விளங்கியதால், அவை சுமை தூக்கிச் செல்லவும் பயன்படுத்தப்பட்டன. கால்நடை மேய்ச்சலுக்கு புல்வெளிகளை வளர்க்கக் கற்றுக்கொண்டனர். அவர்கள் தங்கள் சாப்பாடு, சமையல் தேவைகள் மற்றும் விளக்குகளை ஏற்றுவதற்கு, கடுகு விதைகளில் இருக்கும் எண்ணெய்யை தயார் செய்தனர். அவர்களது வாழ்க்கையில் கடுகு மிகவும் முக்கியமாக இருந்ததால், வீட்டிற்கு முக்கிய விருந்தாளிகள் வந்ததும், அந்த எண்ணெய் வீட்டின் இருபுறமும் ஊற்றப்பட்டுவிடும். §§

மலைகள் குறுக்கு நெடுக்கான பாதைகளுடன் இருந்தன மற்றும் வெகுதூரத்தில் இருக்கும் சந்தைகளில் வணிகம் செய்ய வாழ்க்கையை நிலைநிறுத்தும் விளைபொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. பாதைகள் மிகவும் குறுகலாக இருந்ததால், ஒரு மனிதன் அல்லது ஒரு ஆடு மட்டுமே அதன் வழியாக செல்லமுடியும். இந்த பாதை அஜ-பாத என்று அழைக்கப்பட்டன, மற்றும் அதற்கு சமஸ்கருதத்தில் “ஆடு செல்லும் வழி” என்று பொருள். ஆடுகளால் சிறிதளவு சுமையை மட்டுமே சுமக்க முடியும் என்பதால், சரக்குகள் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டன. தினமும் காலையில் பயன்படுத்தப்பட்ட இரண்டு முக்கிய பாதைகள் ஜோஷிமட் (ஒரு சைவ மையம்), பத்ரி நாத் (ஒரு வைணவ மையம்) மற்றும் கேதார்நாத் (சைவ சமயத்தின் கோட்டை) வழியாக சென்றன. §§

image§

பதஞ்சலி, வியாகிறபாத மற்றும் திருமூலரின் புகழ்பெற்ற குருவாக விளங்கிய மகரிஷி நந்திநாதா, இமயமலையில் வசிக்கும் சித்த யோகியாகவும் நந்திநாத சம்பிரதாயத்தின் முன்னோடியாகவும் விளங்கினார். இந்த பரம்பரை சைவ சமயத்தின் அத்வைத (ஒருமை வாதம்) போதனைகளை வழங்குகிறது, மற்றும் அவர் இந்த பரம்பரையில் நன்கு பரிச்சயமான முதல் சற்குருவாக இருந்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இந்த இடையர்கள் வாழ்க்கை, குறிப்பாக ஆசிரமங்களில் கூட்டம் கூடுவதற்கு பல வாய்ப்புக்களை வழங்கியது, மற்றும் இமயமலையின் இந்த தெய்வீக புருஷர்கள் தத்துவ உரையாடல்கள் மற்றும் விவாதங்களைத் தவிர வேறு எதையும் விரும்புவதில்லை, மற்றும் அது பெரும்பாலும் ஒரு ஆலமரத்தின் விசாலமான நிழலில் நடைபெறும். இந்த கூட்டங்களில் பங்குபெற எல்லோரும் தரையில் உட்காருவார்கள். அப்போது புத்தகங்கள் எதுவும் இல்லை. அந்த காலத்தில் கல்வி வாய்மொழியாக வழங்கப்பட்டது மற்றும் அதற்கு மாணவர்கள் நினைவாற்றலை பயன்படுத்தினார்கள். ஆன்மீக சான்றோர்கள் வெவ்வேறு வயதுடன் இருக்கும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்க மற்றும் பிறருக்கு வழிகாட்ட, ஆறு அங்குல உயரத்துடன், பீடம் என்று அழைக்கப்படும் பாய்கள் அல்லது மரப்பலகைகளில் உட்காருவார்கள். இந்த ரிஷிகள் பெரும்பாலும் சந்நியாசிகளாக இல்லாமல் திருமணமானவர்களாக இருந்தார்கள். சில சந்நியாசிகளுடன் சீடர்களும் வாழ்ந்து வந்தனர், மற்றும் வேறு சிலர் தங்களது ஆன்மீக தியானம் மற்றும் ஆச்சாரமாக தனிமையில் மேற்கொள்ளும் மற்ற பயிற்சிகளில் ஈடுபட்டு இருந்தனர். §§

பல்வேறு வயது மாணவர்கள் பழங்கால கலைகள் மற்றும் அறிவியல் பாடம் படிக்க, சமஸ்கிருத மொழியை கற்றுக்கொள்ள மற்றும் யதார்த்தமான வாழ்க்கைக்கு தேவைப்படும் பல்வேறு திறன்களில் தேர்ச்சி பெற, தூரத்தில் இருக்கும் பள்ளிகள் அல்லது வாழ்க்கை மையங்களில் தங்கள் பாதையை தேடிக்கொண்டனர். ஒவ்வொரு குடும்பமும் விவசாய திறன்கள் மற்றும் மற்ற கலைகளில் பயிற்சிகள் வழங்கும் ஒரு பயிற்சி மையமாக விளங்கியது. இமயமலையில் இருந்த மேட்டுப் பகுதிகளில் வாழ்க்கை கடினமாக, சோதிப்பதாக மற்றும் சமயம் மற்றும் ஆன்மீக வேட்கைக்கு மிகவும் அனுகூலமாக இருந்தது. இது தெய்வீக புருஷனுடன் தெய்வங்களை உரையாடும் இடமாகவும், சாதாரண மக்கள் சொர்க்கத்திற்கு செல்ல பயணம் மேற்கொள்ளும் ஒரு புனிதமான இடமாக கருதப்பட்டது. ஜோஷிமட்-பத்ரிநாத் பாதை மகாபாரத காலத்தில் இருந்து, அதன் புண்ணிய தலங்களுக்கு பிரபலமாக இருந்து, “சொர்க்கத்திற்கு செல்லும் பாதை" (ஸ்வர்க - அரோஹன) என்ற அங்கீகாரத்தை பெற்றது. §§

image§

சிவபெருமான் பிரபஞ்சத்தை உருவாக்க, பதினான்கு முறை தனது உடுக்கையை ஒலித்து, பதினான்கு அடிப்படை ஒலிகளை வெளிப்படுத்துகிறார். சைவ சித்தாந்த அத்வைத பாரம்பரியத்தின் வெளிப்படுத்தும் உண்மைகளை, மனித வரலாற்றில் முதல் முறையாக, தனது எட்டு யோகம் கற்கும் சீடர்களுக்கு கற்பிக்க, சித்தர் நந்திநாதா இமயமலையின் உச்சியில் அமர்ந்து இருக்கிறார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

குருமார்களின் பரம்பரை §

இந்த இமயமலையின் தொலைதூரப் பகுதியில் மகரிஷி நந்திநாதா என்ற பெயரில் ஒரு மிகப்பெரிய யோகி வாழ்ந்து வந்தார். ஞானோதயம் பெற்ற அபூர்வ ஆன்மாவாக இருந்த அவரின் அகக்கண்கள் பிரபஞ்ச முழுமைக்கு தயாராக இருந்தது, மற்றும் அவர் சிவபெருமானையும், உட்புறமாக இருக்கும் பரமாத்துமாவையும் அறிந்தவராக இருந்தார். அவரே சற்குருமார்களின் ஒரு நீளமான வரிசையில் வந்தவர், ஆனால் அந்த சற்குருமார்களின் பெயர்கள் மற்றும் வாழ்க்கை வரலாறுகள் தொலைந்து விட்டதால், இலங்கையில் ராபர்ட் ஹான்சென் கண்டுபிடித்த ஆகம பாரம்பரியமாக, இன்று நந்திநாதா சம்பிரதாயம் என்று அறியப்படும் பரம்பரையில், நன்கு பரிச்சயமான முதல் சற்குருவாக அவர் கருதப்படுகிறார். §§

நந்தினாதா தன்னிடம் நேரடி சீடர்களாக இருந்தவர்களுக்கு சனக, சனந்தன, சனாதன மற்றும் சாந்தகுமார என்று நான்கு முனிவர்களை நியமித்து இருந்தார், மற்றும் அவர்கள் எல்லோரும் நந்தி என்கிற பட்டதுடன் இருந்தனர். இவர்களுடன் சிவயோக முனி, பதஞ்சலி, வியாகிறபாத மற்றும் திருமூலரும் (சுந்தரநாதா என்றும் அழைக்கப்பட்டார்) இருந்தனர். அவர்கள் எட்டு பேரும், ஆரம்பகால ஆகம பள்ளிகளில் ஏதாவது ஒன்றில் ஆன்மீக தலைவர்களாக இருந்தார்கள் மற்றும் அவர்கள் நாதர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களில் முதலில் குறிப்பிடப்பட்ட நால்வரும் சிவபெருமானின் விசேஷ அருளைப் பெற்றார்கள், மற்றும் அவர்கள் ஆகமங்கள் வழங்கும் தகவல்களை நான்கு திசைகளில் எடுத்துச் செல்ல சிவபெருமான் மூலமாக உத்தரவிடப்பட்டார்கள். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலக்குகளை வந்து அடைந்ததும் வெயில், மழை, ஆலங்கட்டி மழை மற்றும் புயல் என்று பாராமல் தீவிரமாக யோகத்தில் பயிற்சி மேற்கொண்டனர் மற்றும் காலப்போக்கில் சொர்கலோக பதவிக்கு உயர்ந்தனர். §§

மகரிஷி நந்தினாதாவை சுற்றி இருந்த யோகிகள் சிவ சூத்திரங்களில் நன்றாகத் தேர்ச்சி பெற்று இருந்தார்கள். சிவபெருமானின் குரலாக கருதப்படும் இந்த சூத்திரங்கள் ஒரு புதிராக, மேம்பட்ட கணிதத்தின் தொகுப்பாக இருக்கும் பதினான்கு ஈரடி செய்யுள்களின் தொகுப்பாக, சமஸ்கிருத எழுத்துக்கள் பற்றியதாக தோன்றினாலும், ஆழமாக சிந்திக்கும் போது பிரபஞ்ச அமைப்பை புரிந்துகொள்ள பயன்படும் வழியாக விளங்கி, இந்த மொழி எவ்வாறு தனது மூலத்தில் இருந்து தெய்வீகத் தன்மையுடன் ஒரு சூட்சும ஞான தொடர்பை உருவாக்குகிறது என்பதை காண்பிக்கிறது. பருமனான மற்றும் நுணுக்கமான பிரபஞ்சகளின் சூட்சும ஞான அச்சத்தை ஆய்வு செய்ய, 21 ஆம் நூற்றாண்டிலும் யோகிகள் படிக்கும் தெளிவற்ற, இரகசியமான மற்றும் மர்மமான செய்யுள்களாக விளங்கும் சிவ சூத்திரங்கள் மீது காஷ்மீரின் சைவ சமயத்தில் இருந்து சைவ சித்தாந்தம் வரையிலான ஆரம்பகால தாந்த்ரீக பாரம்பரியங்கள் வலுவான நம்பிக்கையுடன் இருந்துள்ளன. §§

image§

மகரிஷி நந்திநாதா ஒரு புலித்தோல் மீது உட்கார்ந்துகொண்டு சுந்தரநாதாவிற்கு ஒரு சாஸ்திர செய்யுளை விளக்கிக்கொண்டு இருக்கிறார். மற்றும் சீடர்கள் புனிதமான உரைகளை பற்றி ஆலோசித்து ஆய்வு செய்து சிவபெருமானின் துதிப் பாடுகின்றனர். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

உயர்ந்து இருக்கும் சிவ நடராஜரின் வலது கையில் உள்ள உடுக்கையில் இருந்து வெளிவந்த பதினான்கு சூத்திரங்கள் பணினிக்கு தெரிவிக்கப்பட்டன, மற்றும் அவற்றை ஒரு வகையில் அந்த காலத்து யோக அறிவியல் குறிப்பேடாக அவர் எழுதிக்கொண்டார். இந்த ஒலி மற்றும் சொற்களின் அறிவியல் பேச்சு வழக்கு இல்லாமல் பரமேஸ்வரனிடம் இருந்து நேரடியாக வந்த தகவலாக, சாதாரண மனதை கடந்து, ஞானோதயம் பெற்றவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடிந்ததாக இருந்ததால், அது பெரும்பாலானோருக்கு ஒரு இரகசயமாகவே இருந்திருந்தது. §§

சனக, சனாதன, சனதகுமார, பதஞ்சலி மற்றும் மற்றவர்களைப் போன்ற முனிவர்களால் சிவபெருமானின் உடுக்கையில் இருந்து வந்த ஆழ்நிலை ஒலிகளை கேட்கமுடிந்தாலும், அந்த சூத்திரங்களின் உட்புறமாக இருந்த மைய கருத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் விளக்கத்தை பெறுவதற்காக மகரிஷி நந்திநாதாவிடம் சென்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த அபூர்வமான தகவலை தேடுவதில் அவர்களது ஆர்வத்தை பார்த்து மெய்மறந்துப் போன சற்குரு, அந்த சூத்திரங்களின் சாரத்தை பற்றி விளக்கத் தொடங்கினார். அவர் வழங்கிய 27 செய்யுள்களை வழங்கினார், மற்றும் அவை மட்டுமே இந்த முதல் சற்குருவால் எழுத்து வடிவில் வழங்கப்பட்டு, காலத்தால் அழியாத போதனைகளாக விளங்குவதால், இது இந்த சைவ சித்தாந்த பரம்பரையின் மிகவும் பழமையான சாஸ்திர உரையாக விளங்குகிறது. இது நந்திகேஷ்வர காஷிகா என்று அழைக்கப்பட்டு, சுருக்கமாகவும் விவேகமாகவும் இருக்கிறது. காஷிகா என்றால் “ஞானோதயம் வழங்கும் ஒன்று" என்று பொருள். §§

சிவபெருமானுடன் ஒரு ஒருமையை அவருக்குள் வழங்கிய, அவரது வலுவான இறைவனின் உணர்தல்கள் மற்றும் நீளமான ஸ்தோத்திரமான ஸ்ரீ ருத்திரத்தை ஒரு கோடி முறை பாராயணம் செய்வது கடினம் மற்றும் சாத்தியமில்லாத விரதம் என்று சிலர் கருதுவதை நிறைவு செய்த காரணத்தால், ஸ்ரீ நந்திகேஷ்வர என்று அழைக்கப்படும் மகரிஷி நந்திநாதா, விளக்கமுடியாததை விளக்கும் சாதனையை நிறைவு செய்தார். §§

நந்திநாதாவின் காஷிகா ஒரு விளக்கமாக இல்லாமல் ஒரு தியானமாக, சமஸ்கிருத மொழியின் சொற்களில் எப்பொழுதும் பதிந்து இருக்கும் குறிப்பிட்ட ஒலிகள் மூலமாக பிரபஞ்சத்தில் நடைபெறும் சிவபெருமானின் விரிவாக்கமாக, மிகவும் நுணுக்கமான வஸ்துவில் இருந்து நாம் இருக்கும் பூமி வரை பிரபஞ்சத்தில் உள்ள முப்பத்தி ஆறு பாகங்கள் மீது ஒரு ஆழ்ந்த தியானமாக இருக்கிறது. இந்த பாகங்கள் அல்லது தத்துவங்களில், யதார்த்தமாக இருக்கும் சுயநினைவில் இருக்கும் ஒவ்வொரு நிலை, ஒவ்வொரு பிரிவு, ஒவ்வொரு உணர்வு மற்றும் நிறம், ஒவ்வொரு சக்தி, அதிர்வு மற்றும் ஒலியை தேடிப்பிடிக்கலாம் என்பதால், இவை சைவ சித்தாந்த அண்டத்தின் மையமாக விளங்குகிறது. சைவ சித்தாந்தம் மொத்தத்தில் 36 தத்துவங்களைப் பற்றி எடுத்துரைக்கிறது. தத்துவங்களை அறிவதால், ஒருவர் அனைத்தையும் அறிந்துக்கொள்கிறார். §§

அந்த காலத்தில் யோகம் மற்றும் உட்புற உணர்வின் இரகசியங்களை வெளிப்படையாக விளக்குவதற்கு, அவை அதிக மதிப்புமிக்கதாக கருதப்பட்டதால், பழங்கால உரைகள் சிக்கலான கருத்துக்களாக, பின்பற்ற கடினமாக தெளிவில்லாமல் இருக்கின்றன. அவற்றை தகுதி பெற்றவர் மட்டுமே அணுகவேண்டும், மற்றவர்கள் பிரமிக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய, அவை ஒரு மறைகுறியீட்டு தகவலைப் போன்று, ஒரு விசேஷமான மொழியில் மறைக்கப்பட்டு இருக்கும். பண்டைய காலத்திற்கு சென்று, யோகத்தின் முன்னோடிகளான இமயமலையின் குருமார்களின் இதயத்தில் காணும் காட்சி நிரூபிப்பதைப் போல, இன்று இந்த உரைகளை படிக்கும் போது உண்மையில் பிரமிக்க வைக்கிறது. பின்வரும் பக்கங்களில், மகரிஷி நந்திநாதாவின் 2,200 வருட பழமையான தத்துவ உரையில் இருந்து சூத்திரங்களின் ஒரு பகுதியை வழங்கியுள்ளோம். §§

இறைவனை அறிந்தவர்கள் மற்றும் மிகவும் உயர்ந்த சமூகத்தை சேர்ந்த சம்ஸ்கிருத பண்டிதர்களின் நுண்ணறிவு மற்றும் வர்ணனைகள் இல்லாமல், அதிக மர்மமான பதினான்கு சிவ சூத்திரங்களை விளக்குவதற்காக இயற்றப்பட்ட இந்த சூத்திரங்களை புரிந்துகொள்வதும் கடினமாக இருக்கும். நீங்கள் இங்கே நந்திநாதரின் பத்தாவது செய்யுள் மற்றும் அதன் பின்னர் சபாரத்தினம் சிவாச்சாரியார் தந்த வர்ணனையும் காணலாம்:§§

ரீ (ऋ) என்ற எழுத்தின் மூலம் குறிப்பிடப்பட்டு, புனிதமான உணர்வின் பண்புடைய வடிவமாக, அனைத்திற்கும் பரமேஸ்வரனாக இருப்பவர், ல்ரி (ऌ) என்ற எழுத்தின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள, சிவசக்தியுடன் ஐக்கியத்தில் இருந்துகொண்டு, மாயையில் நுழைந்து, அதை சிறிதளவு தூண்டிவிட்டு, அசைபவை மற்றும் அசையாதவற்றின் உலகை உருவாக்கி, அவற்றை விரிவாக்கம் செய்கிறார். இவை அனைத்தையும் அவர் ஒருவராக இருந்துக்கொண்டு, தனியாகவும் முழுமையாகவும் செய்கிறார். §§

வர்ணனை: பரமேஸ்வரன் முழுமையாக ஒருவராக மட்டுமே இருக்கிறார், மற்றும் சக்தியுடன் ஐக்கியத்தில் இருந்துக்கொண்டு மாயையில் நுழையும் போது அவர் உலகை உருவாக்குகிறார் என்று சொல்லும் போது, அத்வைத இறைவனின் கோட்பாடு பாதிக்கப்படுவதை காணலாம். ஒரு இறைவன் மட்டுமல்லாது, சிவசக்தி மற்றும் மாயையின் பாத்திரமும் இருப்பதை காணும் போது, அத்வைத கோட்பாட்டில் ஒரு குறை காணப்படுகிறது. இந்த செய்யுள் மற்றும் இதைத் தொடரும் மூன்று செய்யுள்களிலும், அத்வைத இறைவனின் கோட்பாட்டில் அத்தகைய குறை எதுவும் இல்லை என்று விளக்கப்பட்டுள்ளது. பரமேஸ்வரனை ரீ (ऋ) என்ற எழுத்து குறிப்பிடுகிறது மற்றும் ல்ரி (ऌ) என்ற எழுத்து சக்தி மற்றும் மாயையை குறிப்பிடுகிறது. ஸ்ரீ தந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல, சிவபெருமானின் மனவடிவமாக இருக்கும் சக்தி, ல்ரி (ऋ) என்ற எழுத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதி எழுத்தாக, வேர்ச் சொல்லாக இருக்கும் (क), “தெளிவாக வெளிப்படாத ஒன்றில் இருந்து வெளிக்கொண்டு வருவதை" குறிப்பிடுகிறது. இறைவனின் உருவம் சக்தியை உள்ளடக்கியுள்ளது, மற்றும் அவரது உருவத்தில் ஒரு அங்கமாக மாயை விளங்குகிறது. தனது உடலை இயக்க, ஒரு மனிதனுக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுவது இல்லை. அதைப்போலவே, தனது உருவத்தை இயக்க மற்றும் செயல்படுத்த பரமேஸ்வரனிற்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுவது இல்லை. இது கேவல என்ற சொல்லின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சக்தி மற்றும் மாயைக்கு, சிவபெருமானை தவிர வேறு எந்த ஒரு தனிப்பட்ட உள்பொருளும் நீடித்து இருப்பதில்லை.§§

போதனையின் இரு கிளைகள் §

நாதா என்றால் உட்புற உடல்கள் மற்றும் தனது மனநிலைகளின் நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்ற “தலைவன்" அல்லது “குரு" என்று பொருள். பல்லாயிரம் ஆண்டுகளாக, நாதர்கள் மறைபொருள் தகவல்களை வழங்குபவர்களாக ஸித்திகளை பயன்படுத்துபவர்களாக, ஆன்மாவின் சக்திகளாக இருந்துள்ளார்கள். நாத சித்தர்கள் சிவபெருமானின் அருளை வேண்டிக்கொண்டு, குண்டலினி சக்தியை கட்டுப்படுத்தி, மனதின் அழத்திற்குள் தேடலை மேற்கொள்கிறார்கள். அவர்கள் முழு மனதுடன் தலைவர்களின் தலைவனாக இருக்கும் சிவபெருமானை வழிபட்டு, யோகத்தின் மூலம் ஆழ்ந்த தியானத்தை மேற்கொண்டு, அவரது தெய்வீக தன்மையில் ஒருமையை அனுபவிக்கிறார்கள். §§

நிலையான உண்மைகளின் தெய்வீக தகவல்கள் மற்றும் ஞானோதய பாதையில் வெற்றிகொள்ளும் செய்முறை ஆகியவை நாத பரம்பரையில் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளது. ஆகம கோயில் வழிபாடு, ஹோமம், சந்நியாசம், சாதனா, தபஸ், யோகம், தாந்தரீகம் மற்றும் அத்வைத சாஸ்திரம் என்று சைவ சமயமாக இன்று நாம் அறியும் அனைத்தும், நாத சம்பிரதாயத்தின் இமாலய சமூகங்களால் வழிநடத்தப்பட்டுள்ளது. சம்பிரதாயம் என்பது பாரம்பரியம் அல்லது சாஸ்திரத்தின் ஒரு துடிப்புணர்வுள்ள பிரிவாக விளங்குகிறது. நாதர்கள் ஹட மற்றும் ராஜ யோகத்தின் மூலமாக கருதப்படுகிறார்கள். §§

நந்திநாத சம்பிரதாயம் மற்றும் ஆதிநாத சம்பிரதாயம் என்று இன்று இருக்கும் மிகவும் பழமையான சைவ சம்பிரதாயங்கள், இரு முக்கிய பிரிவுகளை கொண்டுள்ளன. மகரிஷி ஆதிநாதா, மத்ஸ்யேந்திரநாதா மற்றும் சித்த சித்தாந்த சைவ சமயத்தை விவரமாக விளக்கியதோடு அதற்கு முக்கிய குருவாகவும் இருந்து, மிகவும் பிரபலமான கன்பட யோகிகள் சமூகத்தை நிருவியவருமான கோரக்ஷநாதர் ( சுமார் கி.பி. 950) ஆகியோர் முந்தைய காலத்தில் ஆதிநாத சம்பிரதாயத்தில், நன்கு பரிச்சயமான முன்மாதிரிகளாக விளங்கினர். §§

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில், ஆதிநாத மற்றும் நந்திநாத சம்பிரதாயங்கள் துடிப்புணர்வுடன் வலுவாக இருக்கின்றன. கடந்த 1,000 வருடங்களில் வரலாற்று, சமூக மற்றும் பூகோள சக்திகள், அவற்றிற்கு இடையே வேறுபாடுகளை உருவாக்கி இருந்தாலும் வேதங்கள், ஆகமங்கள் மற்றும் பதஞ்சலியின் யோக சூத்திரங்கள் உட்பட இறையியல், கோட்பாடுகள், சாதனாக்கள் மற்றும் சாஸ்திரங்களில் அவை உடன்பட்டு இருக்கின்றன. நாதர்கள் பற்றி எழுதப்பட்டுள்ள பெரும்பாலான குறிப்புகள், திருமூலரின் பிரிவை காட்டிலும், வடக்கு கோரக்ஷநாதர் பிரிவு மற்றும் வாழ்முறையை குறிப்பிடுகிறது. §§

இரு பிரிவுகளும் முக்கியமான வழிகளில் பிரிகின்றன. நந்திநாத சம்பிரதாயத்தின் முதன்மை விரிவுரையாக திருமூலரின் திருமந்திரம் (சுமார் கி.மு. 200) விளங்குகிறது, மற்றும் ஆதிநாத சம்பிரதாயத்தின் முதன்மை விரிவுரையாக கோரக்ஷநாதரின் சித்த சித்தாந்த பத்ததி (சுமார் கி.பி. 950) விளங்குகிறது. நந்திநாத சம்பிரதாயத்தின் பெரும்பாலான உரைகள் தமிழ் மொழியில் இருக்கின்றனர், மற்றும் ஆதிநாத சம்பிரதாயத்தின் உரைகள் சம்ஸ்கிருத மொழியிலும் இருக்கின்றன. இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் நந்திநாத சம்பிரதாயம் அதிக வலுவாகவும், வட இந்தியாவில் ஆதிநாத சம்பிரதாயம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது. நந்திநாத சம்பிரதாயத்தின் தத்துவம் சைவ சித்தாந்தம் என்றும், ஆதிநாத சம்பிரதாயத்தின் தத்துவம் சித்த சித்தாந்தம் என்று அறியப்படுகிறது. இரு பிரிவுகளும் இடையே தத்துவத்தில் இருக்கும் அடிப்படை வேறுபாடு முக்தி சார்ந்ததாக இருக்கிறது. நமக்கு முக்தி சொந்த சிந்தனைகள் மற்றும் செயல்களால் கிடைக்கிறது என்று ஆதிநாத பிரிவு நம்புகிறது, ஆனால் சிவபெருமானின் சித்தம் இல்லாமல் அதை அடையமுடியாது என்று நந்திநாத பிரிவு நம்புகிறது. §§

நந்திநாத சம்பிரதாயம் வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு சற்குருவின் தேவைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அவர் இந்த பரம்பரையின் முதல் சந்நியாசியாகவும் பரம்பரை முன்னோடியாகவும் விளங்கும் முருகப்பெருமானுக்கு பாதைகளை திறந்து வைக்கிறார். இதைப்பற்றி திருமூலர் தனது திருமந்திரத்தில்: §§

தெளிவு குருவின் திருமேனி காண்டல்;§

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்;§

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்;§

தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே. 139§§

நந்திநாத சம்பிரதாயம் என்பது ஒரு சித்த யோக பாரம்பரியம் ஆகும் ( சித்த என்றால் “முயற்சியால் அடைதல்"), மற்றும் அதன் குருமார்கள் பெரும்பாலும் மிகப்பெரிய சூட்சும ஞான திறமைகள் மற்றும் ஞானத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஆசிரியர்கள் பரமேஸ்வரனாக இருக்கும் சிவபெருமானுடன் தங்களது ஒருமையை உணர்ந்து, அனைத்திற்கும் தெய்வீக மூலமாக விளங்கும் இதனுடன் முடிந்தவரையில் மனித உணர்வுடன் முழுமையாக ஐக்கியமாகி இருக்கிறார்கள். இத்தகைய உணர்தலுடன் எல்லையற்ற பேரின்பம் மற்றும் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு சக்தியின் மீதும் நேரடி பொறுப்பும் தோன்றுகிறது. இந்த பரம்பரையை சேர்ந்த குருமார்கள் வெளிப்படுத்திய அபூர்வமான சக்திகளை பற்றி பல கதைகள் உள்ளன. அத்தகைய ஒரு உயர்ந்த உணர்தலை பெற்ற ஸித்தியால் கிடைக்கும் உதவி அல்லது அதன் மீது விழும் பார்வை மட்டுமே, ஆன்மீக பயிற்சியை விரைவுப்படுத்தக்கூடும். அத்தகைய ஆசிரியர்களின் தீட்சை இல்லாமல், மனித தூண்டுதல்கள் மிகவும் உயர்வான இந்த உணர்தலை நோக்கி வழிநடத்தி செல்வதில் எப்போதும் தோல்வி அடையும். §§

image§

பழங்காலத்து யோகிகள் வனங்களிலும் காடுகளிலும் பெரும்பாலும் நதிக்கரைகளிலும் வாழ்ந்தார்கள். அங்கே அவர்கள் புலன்களை அடக்கி, மெய்யுணர்வை ஆழமாக உள்ளே இயக்கி, ஆன்மீக பயிற்சிகளை மேற்கொண்டார்கள். அந்த உட்புற வழிபாட்டை, ஹோமம் என்று அழைக்கப்படும் வெளிப்புற வழிபாடு மூலமாக சமன் செய்யப்பட்டது. ஹோமம் என்கிற வழிபாட்டு முறையில், அக்னியை வளர்த்து தேவர்கள் மற்றும் அந்தர்லோகங்களை ஆவாகனம்\ செய்து, அவர்களுக்கு ஆகுதி வழங்கப்படுகிறது. இந்த வழிபாட்டு முறையை உலகெங்கும் இருக்கும் ஹிந்துக்கள் இன்றும் செய்து வருகிறார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

நாத சம்பிரதாயம் ஒரு ஸித்த குரு-சிஷ்ய சம்பிரதாயம் ஆகும். இந்த சம்பிரதாயத்தில் எப்போதும், உறுப்பினர் தகுதி ஒரு தீட்சை குருவால் வழங்கப்படுகிறது, மற்றும் அந்த தீட்சை-குரு அந்த பரம்பரையையின் தலைமை பொறுப்பில் இருக்கலாம் அல்லது தனது தீட்சை-குருவிடம் இருந்து தீட்சை வழங்க அங்கீகாரம் பெற்ற, அந்த சம்பிரதாயத்தின் இன்னொரு உறுப்பினராகவும் இருக்கலாம். §§

நாத தீட்சை ஒரு முறையான சடங்காக நடைபெறுகிறது மற்றும் அந்த சடங்கின் போது குருவின் சாட்சி மற்றும் ஆன்மீக சக்தியில் ஒரு பகுதி, சிஷ்யனுக்கு (மாணவன்) அளிக்கப்படுகிறது. தற்போது ஒரு நாதராக இருக்கும் அந்த புதிய உறுப்பினரின் புதிய அடையாளத்திற்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் அவருக்கு ஒரு புதிய பெயர் வழங்கப்படுகிறது. குருவின் இந்த அளித்தல் அல்லது “தொடுதலுக்கு" அடையாளமாக, உடம்பின் பல்வேறு பகுதிகளில் விபூதி பூசப்படுகிறது. ஆதிநாத சம்பிரதாயத்தில் ஒரு சற்குருவாக இருந்த, ஸ்ரீ குருதேவ் மகேந்திரநாத் எழுதிய தி பாண்டஸ்டிகோஸில் இருந்து ஒரு தொகுப்பு:§§

ஞானம் மற்றும் தகவல் பல தலைமுறைகளை கடந்து செல்ல, தீட்சையின் சூட்சுமமாக மந்திரம் போதிக்கும் நிகழ்வு தேவைப்பட்டது, மற்றும் தொடுதல், அறிகுறி மற்றும் மந்திரம் மூலம், உடலில் உடுப்பு இல்லாத ஒரு குரு உடுப்பு இல்லாத ஒரு சீடனுக்கு அளிக்கும் தீட்சை இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த சாதாரண சடங்கில், தீட்சை வழங்குபவர் தீட்சை பெறுபவருக்கு தன்னுள்ளிருந்து ஏதாவது ஒன்றை வழங்குகிறார். இந்த தீட்சை புதிய நாதருக்குள் நடைபெறும் மாற்றத்தின் தொடக்கமாக விளங்குகிறது. இந்த தீட்சை ஆயிரம் வருடங்களாக தடையில்லாமல் தொடர்ந்துள்ளதால், இதை அலட்சியம் செய்யக்கூடாது. நீங்கள் ஒரு முறை தீட்சை பெற்றுவிட்டால், அது வாழ்க்கை முழுவதும் உங்களுடையதாக இருக்கும். அதை உங்களிடம் இருந்து யாராலும் அபகரிக்க முடியாது, மற்றும் அதை உங்களாலும் துறக்க முடியாது. இது நிரந்தரமில்லாத ஒரு வாழ்க்கையில் மிகவும் நிரந்தரமான ஒன்றாக விளங்குகிறது. §§

பாதரசம், இங்குலிகம் (cinnabar) மற்றும் மற்ற கனிமப்பொருட்கள், ஸ்படிக தயாரிப்புகள் மற்றும் காயகல்பத்தின் சடங்கு, ஆன்மீக மற்றும் மருத்துவ பயன்பாடுகளை உள்ளடக்கிய இந்திய இரசவாதம் அல்லது இரசாயன என்கிற செய்முறையில் நாத சித்தர்கள் பயிற்சி மேற்கொள்கிறார்கள். இந்த ஜென்மத்தில் முக்தி அல்லது மோக்ஷத்தை பெறுவதே நாத சித்தர்களின் முக்கிய குறிக்கோள் ஆகும்.§§

புனர்ஜென்மம் தவிர்ப்பதை இன்னொரு குறிக்கோளாக குருதேவ் மகேந்திரநாத் குறிப்பிடுகிறார்: “இந்த வாழ்க்கையில் அமைதி, சுதந்திரம் மற்றும் சந்தோஷத்தை அனுபவிப்பது மட்டுமல்லாமல், இந்த பூமியில் புனர் ஜென்மம் எடுப்பதை தவிர்ப்பதும் நமது வாழ்க்கையின் குறிக்கோள்களாக விளங்குகின்றன. இவை அனைத்தும் தெய்வீக கருணையை சார்ந்து இல்லாமல், நமது சிந்தனை மற்றும் செயல்களை சார்ந்து இருக்கிறது.” ஆனால் நந்திநாத சம்பிரதாயத்தை பின்பற்றுவோர், இந்த இறுதி அறிக்கையை சம்மதிக்கமட்டார்கள். சைவ சித்தாந்தத்தில் திருமூலர் தாமே குறிப்பிட்டுள்ளதைப் போல, சிவபெருமானின் அருளினால் மட்டுமே, மோக்ஷத்தின் தலைசிறந்த பரிசை வழங்கமுடியும். §§

தானே படைத்திடும் தானே அளித்திடும் §

தானே துடைத்திடும் தானே மறைத்திடும் §

தானே இவை செய்து தான்முத்தி தந்திடும் §

தானே வியாபித் தலைவனும் ஆமே. 1809§§

Page 16: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/15_na01_06.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

மகரிஷி நந்திநாதாவின் தத்துவ உரையில் இருந்து ஒரு சூத்திரங்களின் தொகுப்பு §

1. பிரபஞ்ச நடத்தின் ஈடு இணையற்ற மற்றும் முழுமையான கடவுளான நடராஜர், பரிவுடன் சனகா மற்றும் மற்ற சித்தர்களை உயர்த்த மற்றும் அவர்களை ஆழ்நிலை ஒலியுடன் தொடர்புடைய மெய்யுணர்வின் மிகவும் உயர்ந்த நிலையில் அமர்த்த, திருநடனம் முடியும் கட்டத்தில் பதினான்கு முறை உடுக்கையை (அவர் தனது வலது கையில் பிடித்து இருந்தார்) ஒலித்தார். உடுக்கையில் இருந்து வெளிவந்த ஆழ்நிலை ஒலிகள், பதினான்கு சூத்திரங்களின் வடிவத்தை எடுத்துக்கொண்டு, சிவ சூத்திரங்கள் என்ற பெயரை பெற்றது. இனி அந்த பதினான்கு சூத்திரங்களின் மையக்கருத்தை வழங்கத்தொடங்குகிறேன். §§

3. மூன்று பண்புகளின் தொடர்பில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்பட்டு இருக்கும் பரமேஸ்வரன், மாயை எனப்படும் பிரபஞ்சத்தின் தொடர் மாற்றத்தில் நுழைந்து, தனது உணர்வுள்ள சக்தியின் மூலம் எங்கும் எதிலும் வியாபிக்கும் தன்மையை பெற்று, உலகங்களின் உருவத்தை பெற்று அவற்றை நிர்வாகம் செய்கிறார். §§

4. 51 எழுத்துக்களின் முதலாவதாக இருக்கும் எழுத்து (अ) சுயமாக பிரகாசிக்கும் பண்புடன் இருக்கிறது. அது பரமேஸ்வரனுடன் முழுமையான ஒற்றுமையுடன இருப்பதால், அது பரமேஸ்வரனை போலவே பிரகாசிக்கிறது. முதல் எழுத்தான (अ) எழுத்துடன், இறுதி எழுத்தான (ह), அஹம் என்ற சொல் உருவாகிறது. §§

9. (अ) எழுத்து உணரமுடியாமல் இருப்பதால், அதை மனதால் கிரகிக்க மட்டுமே முடிகிறது. (इ) எழுத்து சித்கலாவை குறிக்கிறது. (उ) எழுத்தில் இருக்கும் வியாபிக்கும் தன்மையால், அது விஷ்ணுவை குறிப்பிடுகிறது. மனத்தால் மட்டுமே கிரகிக்ககூடிய நிலையில் இருக்கும் ஒன்று, சித்கலாவுடன் தொடர்பை பெற்று, பிரபஞ்ச செயல்பாட்டிற்கு ஒரு உருவத்தை ஏற்றுக்கொண்டு, உலகங்களை உருவாக்கி வியாபிக்கும் பண்பின் மூலமாக அந்த உலகங்களுக்குள் நுழைந்து, மகேஸ்வரனாக மனத்தால் கிரகிக்ககூடியத் தன்மையை பெறுகிறது. §§

10. ரீ (ऋ) என்ற எழுத்தின் மூலம் குறிப்பிடப்பட்டு, புனிதமான உணர்வின் பண்புடைய வடிவமாக, அனைத்திற்கும் பரமேஸ்வரனாக இருப்பவர், ல்ரி (ऌ) என்ற எழுத்தின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள, சிவசக்தியுடன் ஐக்கியத்தில் இருந்துக்கொண்டு, மாயையில் நுழைந்து, அதை சிறிதளவு தூண்டிவிட்டு, அசைபவை மற்றும் அசையாதவற்றின் உலகை உருவாக்கி, அவற்றை விரிவாக்கம் செய்கிறார். இவை அனைத்தையும் அவர் ஒருவராக இருந்துக்கொண்டு, தனியாகவும் முழுமையாகவும் செய்கிறார். §§

11. நிலவுக்கும் நிலவு ஒளிக்கும் மற்றும் சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் இடையே ஒரு சிறிய வித்தியாசத்தையும் காணமுடியாது. அதைப்போலவே, மாற்றங்களுக்கும் அந்த மாற்றங்களை தாங்கிக்கொள்ளும் பொருளுக்கும் அல்லது உயிர்சக்திக்கும் இடையே சிறிதளவு மாற்றத்தையும் காணமுடியாது. §§

12. பரமேஸ்வரன் சித்-சக்தி எனப்படும் தனது சொந்த சக்தி மற்றும் தனது சொந்த விருப்பத்தின் மூலமாக, மாயை எனப்படும் காரண மூலத்தில் இருந்து அனைத்து உலகங்களையும் விரிவாக்கம் செய்கிறார். பரமேஸ்வரனை குறிக்கும் ரீ என்ற எழுத்தும், சக்தியை குறிக்கும் ல்ரி (ऌ) என்ற எழுத்தும், ஆண்பால் அல்லது பெண்பால் சாராமல் இருக்கும் விசேஷ எழுத்துக்கள் என்பது சாஸ்திரங்களை அறிந்தவர்களுக்கு தெரியும். §§

13. எ (ए), (ओ) மற்றும் (ङ) சொற்கள் மாயை மற்றும் ஈஸ்வரனின் ஒருங்கிணைந்த நிலையை குறிப்பிடுகின்றன. இத்தகைய ஒருங்கிணைப்பு தற்போது துடிப்புடன் இருக்கும் அனைத்து உள்பொருள்களிலும் காணப்படுகிறது. உணரக்கூடியதாக இருக்கும் அனைத்திற்கும் அவர் சாட்சி-மெய்யுணர்வாக இருப்பதால், மகேஸ்வரன் தனது தனிப்பட்ட உள்பொருளைத் தவிர வேறு எதையும் கொண்டிருக்காமல், அவர் மட்டுமே தனியாக இருக்கிறார் என்பது உறுதியாகிறது. §§

16. எது பரவெளியாக அறியப்படுகிறதோ, அது (ह) என்ற சொல்லில் இருந்து வளர்ச்சி அடைகிறது. காற்று (य) என்ற சொல்லில் இருந்து வளர்ச்சி அடைகிறது. நெருப்பு (र) என்ற சொல்லில் இருந்து வளர்ச்சி அடைகிறது. நீர் (व) என்ற சொல்லில் இருந்து வளர்ச்சி அடைகிறது. இவ்வாறு உயர்வாக பேசப்படும் சிவயோகத்தின் அரசர், தனது ஆகமங்களின் மூலம் அறிவிக்கிறார். §§

18. ஒலி, தொட்டுணர்வு, உருவம், ருசி மற்றும் வாசனை என்ற பருமனான ஐந்து பண்புகள் தோன்றுவதற்கு மூலமாக இருக்கும் நுணுக்கமான பஞ்ச பூதங்கள், (ञ), (म), (ङ), (ण) மற்றும் (न) என்ற ஐந்து எழுத்துக்களில் இருந்து வளர்ச்சி பெறுகின்றன. பரவெளி, காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலத்தின் பண்புகளாக முறையே ஒலி, தொட்டுணர்வு, உருவம், ருசி மற்றும் வாசனை விளங்குகின்றன. இந்த ஐந்து பண்புகளை துடிப்புடன் இருக்கும் அனைத்து உள்பொருள்களிலும் உணரலாம்.§§

21. உடலோடு இருக்கும் உயிர்சக்திகள் அனைத்திற்கும் ஐந்து ஞானேந்திரியங்களாக இருக்கும் காது, சருமம், கண், மூக்கு மற்றும் நாக்கு ஆகியவை முறையே (ज), (ब), (ग), (ड) and (द) என்ற ஐந்து எழுத்துக்களில் இருந்து வளர்ச்சி பெறுகின்றன என்பது அறிவிக்கப்படடுள்ளது. §§

25. உலகங்களை படைப்பதற்கு முன்பு வளர்ச்சி பெற்ற சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் என்ற மூன்று பண்புகளுடன் தன்னை நன்றாக தொடர்புப்படுத்திக்கொண்டு, பிரபஞ்சத்தின் முழுமையான கடவுளாக இருக்கும் மகேஸ்வரன், உடலோடு இருக்கும் ஒவ்வொரு உயிர்சக்தியிலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, தொடர்ந்து விளையாடுகிறார். ஶ (श), (ष) மற்றும் ச (स) என்ற மூன்று எழுத்துக்களில் இருந்து சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் என்ற மூன்று பண்புகள் வளர்ச்சி பெறுகின்றன. §§

27. இது வரை விளக்கப்பட்ட வளர்ச்சியுடன் தொடர்புடைய தத்துவங்கள் அனைத்தையும் சிவபெருமான் கடந்து இருக்கிறார். அவர் பரமனாக இருக்கிறார். அவர் எல்லா உயிர்சக்திகள் மற்றும் அதன் செயல்களுக்கு ஒரே சாட்சியாக இருக்கிறார். எல்லா உயிர்சக்திகளுக்கும், தன்னிடம் இருக்கும் மிகுதியான அருளை வழங்க ஒரு பொருத்தமான உருவத்தை எடுத்துக்கொள்கிறார். “நான் எல்லோருக்கும் பரமாத்துமாவாக இருக்கிறேன், மற்றும் நான் மிகவும் உயர்வான எழுத்தாக விளங்கும் (ह) எழுத்துடன் இணங்கி இருக்கிறேன்.” இந்த இறுதி தகவலை நடராஜர் வழங்கிய பிறகு, தன்னை முனிவர்களின் பார்வைக்குள் மறைத்துக் கொள்கிறார். இவ்வாறு நந்திகேஷ்வர காஷிகா முடிவடைகிறது. §§