குருமார்களின் சரித்திரங்கள்

Page 32: https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/32_yoga04_04.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

அத்தியாயம் பதினேழு §

சாதனா செய்ய பரிந்துரைகள் §

சுவாமி வலுவாக மற்றும் கலைநயத்துடன் பேசினாலும், அது அன்றாட வாழ்க்கையுடன் பொருந்தி இருந்தது. அவர் பயன்படுத்திய மொழி உண்மையில் மிகவும் எளிமையாக இருந்தது, மற்றும் ஆழமான அர்த்தம் கொண்ட அவரது நற்சிந்தனையும், திருமுறை அல்லது முற்கால முனிவர்கள் எழுதிய பழங்கால பாடல்களை போல அல்லாமல், எளிமையான நடையை கொண்டிருந்தது. நற்சிந்தனை ஒரு தனிப்பட்ட நாட்குறிப்பை போல, சுவாமியின் அனுபவங்கள், அவர் பெற்ற உணர்தல்கள், அவரது வேதனை மற்றும் அவரது நம்பிக்கைகளை பதிவு செய்து இருந்தது. அதன் மொழியும் நடையும் வெளிப்படையாக இருந்தது. முருகப்பெருமான் மற்றும் சிவபெருமான் பற்றி அவர் எழுதிய கவிதைகளின் பக்கங்களை புரட்டி, தொட்டுணரும் அளவிற்கு அவை நமக்கு பரிச்சயமானதாக தோன்றுகிறது. தனது வேட்கையில் உதவி செய்ய, அவர் நம்பிக்கையுடன பல்லி மற்றும் மயிலுடன் பேசுகிறார். அவர் சாதாரண மக்களுடன் தொடர்புகொள்வதை குறிப்பிடும் வண்ணம் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனங்களை பயன்படுத்தியுள்ளார். அவர் சன்மார்கத்தில் இருக்கும் குருவின் பாதங்களை நோக்கி நம்மை தூண்டிவிட்டு, மனித பிறவி எடுத்ததே அதற்காகத் தான் என்று அடிக்கடி ஞாபகப்படுத்துகிறார். §§

ஒருமுறை சித்தாந்த ஞானம் மற்றும் தத்துவத்தில் நன்கு தேர்ச்சி பெற்று இருந்த ஒருவர், தன்னிடம் இருந்த புலமையை அனைத்தையும் பயன்படுத்தி, தத்துவ ஞானம் கலந்த ஒரு விவாதத்தை மேற்கொள்ளும் ஆர்வத்துடன் அவரை சந்திக்க வந்து இருந்தார். அதே சமயம் எளிமையான ஒரு நபரும் வந்து இருந்தார். அவர்கள் இருவரும் சுவாமிக்கு பூக்கள் மற்றும் பழங்களை வழங்கிவிட்டு தரையில் விழுந்து வணங்கினர். §§

சுவாமி தத்துவ ஞானிக்கு அருகில் அமர்ந்து இருந்த எளிமையான மனிதரை பார்த்து, “நீ எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார். “நான் நன்றாக இருக்கிறேன், சுவாமி. எனக்கும் எனது குடும்பத்திற்கும் தேவையானது அனைத்தும் நல்ல முறையில் கிடைத்துக்கொண்டு இருக்கின்றன,” என்றார். “நீயும் உனது குடும்பமும் நன்றாக இருக்கிறீர்கள் என்பதை கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உனக்கு எத்தனை குழந்தைகள்?” என்று சுவாமி கேட்டார். “மூன்று குழந்தைகள், சுவாமி. இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்.” “உன் மாத வருமானம் எவ்வளவு?” “மாதம் இருநூறு ரூபாய் சம்பாதிக்கிறேன், சுவாமி.” “வருமானம் அதிகமாக இல்லையே, இந்த வருமானம் உன் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்கிறதா?” “எந்த பிரச்சனையும் இல்லை, சுவாமி. எங்களுக்கு இந்த வருமானம் போதுமானதாக இருக்கிறது. மேலும் எங்களிடம் இரண்டு பசு மாடுகள் இருக்கின்றன. எங்களுக்கு தேவையான உணவை வீட்டிலேயே வளர்த்துக் கொள்கிறோம்.” “அது சரி, உனது உழைப்பிற்கு உனக்கு இன்னும் அதிகமான சம்பளம் கிடைக்கவேண்டும்.” “எனக்கு தெரியும், சுவாமி. ஆனால் என்னால் என்ன செய்ய முடியும்?” “உன்னைப் போன்று கடுமையாக உழைத்து நன்றாக செயல்படுகிறவர்கள், அதிகம் சம்பளத்தை பெறவேண்டும். நீ இதற்காக ஏதாவது செய்தாக வேண்டும்.” “சரி, சுவாமி.” §§

பொறுமையை இழந்துக்கொண்டு இருந்த தத்துவ ஞானி, “சுவாமி எப்போது இந்த நீளமான அரட்டையை நிறைவு செய்து, தன்னிடம் அவரது உலகை அதிகம் சார்ந்து இருந்த விஷயங்களைப் பற்றி எப்போது பேசப்போகிறார்?” என்று யோசித்துக்கொண்டு இருந்தார். சுவாமி உடனே அவர் பக்கம் திரும்பி, “நாங்கள் பேசுவதை நீ நன்றாக கவனிக்க வேண்டும். நாங்கள் ஆழமான ஆன்மீக விஷயங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டு இருக்கிறோம்,” என்று ஏளனமாக பதில் அளித்தார். §§

சுவாமிகளின் முன்னிலையில், அத்தகைய நிகழ்வுகள் மறைமுக குறிப்புக்கள் மற்றும் கம்பீரம் நிறைந்து இருப்பதாக காட்சி அளித்தன, மற்றும் சிறிய அற்புதங்கள் சாதாரணமாகவும் இயல்பாகவும் காட்சி அளித்தன. வழக்கமாக தினமும் யாராவது ஒரு அன்பர் உணவை கொண்டு வருவார், மற்றும் அந்த உணவு ஆறு அல்லது ஏழு அன்பர்களுக்கு போதுமானதாக இருந்தது. தனது இருப்பிடத்தில் இருபது அல்லது முப்பது அன்பர்கள் கூடியிருந்தாலும், உணவை எல்லோருக்கும் வழங்கவேண்டும் என்று சுவாமி கேட்டுக்கொள்வார். சிலருக்காக தயார் செய்த உணவு பலருக்கு எவ்வாறு போதுமானதாக இருக்கும் என்ற கேள்வி கேட்கப்படாமல், அந்த உணவு போதுமான அளவு எல்லோரையும் சென்று அடைந்தது. §§

image§

சிவ தொண்டன் நிலையத்திற்கு யோக சுவாமி எப்போதாவது வருகை தந்தாலும், அது ஒரு தியானம் மற்றும் சேவை செய்யும் மையமாக அவரது கவனமான வழிகாட்டலுடன் கட்டப்பட்டது. இங்கிருந்து சிவ தொண்டன் என்ற அவரது மாதாந்திர பத்திரிகை வெளிவந்தது, மற்றும் இன்று அன்பர்கள் செய்துக்கொண்டு இருப்பதை போல, திருவிழாக்கள் கொண்டாடுவதற்கும் தங்கள் குருவிற்கு பூஜைகளை செய்வதற்கும் இந்த இடத்தில் அன்பர்கள் கூடினார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

“பூமாதேவி பசியோடு இருக்கிறாள்”§

சுவாமி அன்பர்களுக்கு உணவளிப்பதை பெருமகிழ்ச்சியுடன் செய்து வந்தார். பெரும்பாலும் அவர் ஆசிரமத்தில் இருக்கும் போது, அங்கே வருகை தந்த எந்த அன்பரும் உணவு அருந்தாமல் செல்வதை அவர் அனுமதித்தது இல்லை. சிலசமங்களில் மதிய நேரத்தில், அக்கம்பக்கத்து அன்பர்களிடம் பச்சை காய்கறிகளை வாங்கி வருமாறும், பெரிய சமையல் பாத்திரங்களை கொண்டு வருமாறும் கேட்டுக்கொண்டு, பெரிய அளவிலான விருந்திற்கு ஏற்பாடு செய்துக்கொண்டு இருப்பார். அவர் தனது குடிசைக்கு மிகப்பெரிய மண் அடுப்புக்களை தயார் செய்து வைப்பார். §§

சிலருக்கு இந்த நடவடிக்கை விசித்திரமாக தோன்றியது. விஷேசம் என்று எதுவும் இல்லை, யாரும் வரவேற்கப்படவும் இல்லை. அப்படியிருக்கும் போது, சுவாமி எதற்காக மிகப்பெரிய விருந்திற்கு திட்டமிடுகிறார்? ஆனால் சுவாமி உணவு சுவையாகவும் தரமாகவும் இருப்பதில் கவனம் செலுத்தி தொடர்ந்து சமைத்துக்கொண்டு இருந்தார். “பலர் பசியோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு அளிப்பது நமது கடமை,” என்று அவர் கூறினார். “ஆனால் சுவாமி, அவர்களுக்கு இங்கே விருந்து நடக்கிறது என்பது எப்படி தெரியும்? இப்போது விசேஷம் எதுவும் இல்லையே?” என்று யாராவது கேள்வி எழுப்பினால், “கவலை வேண்டாம். அவர்கள் வருவார்கள்,” என்று சுவாமி கூறுவார். §§

ஆனால் உணவு தயாரானதும், அன்பர்கள் கூட்டம் அங்கே வந்து சேர்ந்தது. அவர்களுக்கு சுவாமி பாடிக்கொண்டு உணவு அளிப்பார். அவர்கள் சிலசமயம் அவர் நடத்தும் யாகத்தில் கலந்துக்கொண்டு, அந்தி சாயும் நேரம் வரை இருந்துவிட்டு செல்வார்கள். §§

சுவாமி கோயிலுக்கும் உணவை வழங்கினார். அவர் மிகப்பெரிய அரிசி மூட்டைகளை வாங்கி, சீடர்களின் மூலம் அதை நல்லூர் கோயிலுக்கு அனுப்பி, அங்கே வரும் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு படி அரிசி என்று பகிர்ந்து அளிப்பார். அந்த பக்தர்களுக்கு கைப்பிடியளவு காய்கறிகள் மற்றும் சில நாணயங்களை கொடுத்து அனுப்புவதையும் உறுதி செய்துக்கொண்டார். பூமியில் உணவு தட்டுப்பாடு காரணமாக எதிர்காலத்தில் மக்கள் அவதிப்படுவது தனது ஞானதிருஷ்டிக்கு தெரிவதாகவும், அண்டத்தில் ஒரு சிறிய பகுதியாக இருந்தாலும், அந்த பிரச்சனையை தணிக்கும் பொருட்டு தான் இதை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். §§

வழக்கமாக கோயில்களில் ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரிய விருந்துகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன, மற்றும் இது புண்ணியம் சேர்க்கும் வழியாக கருதப்படுகிறது. இதை யோக சுவாமி தான் மட்டும் ஏற்பாடு செய்யாமல், தனது சீடர்களும் தன்னை உதாரணமாக பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார். §§

மண்ணில் அடுப்புகள் தயார் செய்யப்பட்டு, அரிசி மற்றும் பருப்பை வேக வைக்க, ஒரு மீட்டர் உயரம் மற்றும் 1.5 மீட்டர் அகலத்தில் இருந்த கனமான உலோக பானைகள், ‘ப’ வடிவில் அமையப்பெற்ற மூன்று சுட்ட செங்கற்கள் மீது வைக்கப்பட்டன. எல்லோரும் நற்சிந்தனை பாடலை பாடிக்கொண்டு இருக்க, ஏழையாக இருந்த தெய்வீக புருஷர்கள் மற்றும் பெண்மணிகள் உட்பட ஆர்வத்துடன் இருந்த விருந்தாளிகள் அனைவரும், சுமார் ஒரு வாரம் அல்லது அதற்கும் அதிகமான நாட்களுக்கு ஒரு முறை வயிறார சாப்பிடுவதற்காக மெதுவாக கூடினார்கள். §§

உணவு சமைக்கப்பட்டதும், கையில் நான்கு அடி உயர மரக்கரண்டிகளுடன் இருந்த ஆண்கள் சாதத்தை மிகப்பெரிய பாய்களில் வைத்து, அதை விரைவாக ஒரு ஆள் உயரத்திற்கு ஒரு மென்மையான, வெள்ளை குன்றாக மாற்றினார்கள். நெய்த கோரைப்பாய்களின் மீது ஆயிரக்கணக்கான சாதுக்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டார்கள். அங்கே டஜன் கணக்கில் இருந்த ஒவ்வொரு வரிசையிலும் ஐம்பது அன்பர்கள் வரை அமர்ந்து இருந்தார்கள். அந்த வரிசை நீளமாக, ஜோடி கோடுகளைப் போன்று நேருக்கு நேராக இரண்டு மீட்டர் இடைவெளியில் அமைந்து இருந்தன. அங்கே கூடியிருந்த அன்பர்கள் எல்லோருக்கும் ஒரே சமயத்தில், 20 முதல் 30 ஆண்கள் வரிசைகளுக்கு இடையில் இருந்த பாதைகள் வழியாக விரைவாக செயல்பட்டு ஆவி பறக்கும் சாதம், பருப்பு மற்றும் காய்கறிகளை மிகவும் சாமர்த்தியமாக திறந்திருந்த வாழை இலைகளில் வியக்கும் வகையில் பரிமாறினார்கள். முதல் அமர்வு பூர்த்தி அடைந்ததும், இரண்டாவது அமர்வு அதே இடத்தில் தொடங்கிவிடும். §§

அதன் பிறகு அந்த வாழை இலைகள் பசுமாடுகளுக்கு வைக்கப்படும், மற்றும் பசுமாடு இலைகளை கடிக்கும் போது இடையிடையே காகங்களின் கூட்டம் தனது பங்கை பறித்து சாப்பிடும். இந்த உணவு அளிக்கும் பயிற்சியின் மூலம், சுவாமி தங்களுக்காக உருவாக்கி இருந்த ஒரு சாதனாவை அவரது சீடர்கள் உணர்ந்து கொண்டார்கள். அவர் மகாசமாதி அடைந்து பல வருடங்கள் கழித்து, அவரது சீடர்கள் ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு நல்லூர் கோயில் மற்றும் யாழ்ப்பாணத்தின் மற்ற இடங்களில் அன்னதானம் வழங்கினார்கள், மற்றும் இந்த ஒழுக்கத்தை அவர்கள் பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார்கள். §§

ஒருமுறை சுவாமி தனது ஆசிரம வளாகத்தில் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார். சமையல் செய்ய சீடர்கள் விடியற்காலையில் வந்து விட்டனர். மற்றவர்கள் சுவாமியுடன் அமர்ந்து பாடுவதற்காக வந்து இருந்தார்கள். மதியஉணவு நேரம் வந்துவிட்டது, ஆனால் அவர் அதிக ஈடுபாட்டுடன் மனமுவந்து பாடிக்கொண்டு இருந்ததால், அவரை யாரும் நிறுத்த விரும்பவில்லை. எல்லோரும் பாடிக்கொண்டு இருந்தனர். வெளியில் அமர்ந்து இருந்தவர்கள் அதை கேட்டுக்கொண்டு இருந்தனர். எல்லோரும் திருப்தியாக இருந்தார்கள். எல்லோரும் அவரது தரிசனத்தில் ஆனந்தமாக இருந்ததால், அதை மதியஉணவு போன்ற சாதாரணமான விஷயங்களுக்காக யாரும் தடுக்க விரும்பவில்லை. §§

மதியஉணவு நேரம் முடிந்து பலமணி நேரங்கள் கழித்து, சுவாமி பாடுவதை நிறுத்தி சிறிது நேரம் அமைதியாக இருப்பார். அந்த மௌனத்திற்கு பிறகு சுவாமி சாப்பிட விரும்புவார் என்று சிலர் நினைத்துக்கொண்டு இருக்கும் போது, உபநிடதங்களை கணீரென்று சமஸ்கிருத மொழியில் உச்சரிக்க வேண்டும் என்று பரிந்தரைப்பார். அவர்கள் காலத்தை கடந்த பரமாத்துமாவின் போதனைகளை ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து உச்சரித்துக்கொண்டு இருந்தார்கள். சுவாமி அமைதியாக அமர்ந்து, அந்த உச்சரிப்பின் தீவிர உணர்ச்சி மற்றும் அமைதியை ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டு, தான் ரிஷிகளின் காலத்திற்கு சென்று விட்டதாக கூறுவார். எல்லோரும் அவரது சமாதி நிலையை உணர்ந்து, உட்புறமாக தனது கவனத்தை திருப்பி, அந்த இனிமையான உலகங்களை சுயமாக தொடர்பு கொண்டார்கள். §§

மதியம் நான்கு மணி அளவில், கூடியிருந்த மக்கள் பசியால் அவதிப்படுவதை உபநிடதங்கள் உச்சரிப்பவர்கள் உணர்ந்து, சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். சுவாமியின் கோபத்திற்கு ஆளாக விரும்பாத அன்பர்கள், கூடியிருந்தவர்களில் பலருக்கு சம்ஸ்கிருதம் தெரியாது என்பதால் உபநிடதங்கள் உச்சரிப்பதை நிறுத்தலாமா என்று மெதுவாக கேட்டார்கள். வார்த்தைகளை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. கேட்போர் தனது அறிவுணர்வுடன் கேட்டாலும் கேட்காவிட்டாலும், வார்த்தைகளின் தொனி மற்றும் உச்சரிப்பில் இருக்கும் உணர்வு, போதனைகளை எல்லோருக்கும் எடுத்து சென்றுவிடும் என்று கூறினார். மந்திரங்கள் ஓதுவது தொடர்ந்தது. §§

இறுதியாக சுவாமி மாலை 5 மணி அளவில், “நாம் நமது பிரசாதத்தை பகிர்ந்து கொள்வதற்கு முன்பாக, இந்த தரையில் சதுர வடிவில் ஒரு ஆழமான குழியை தோண்டுவதற்கு, பலசாலிகளாக பதினொன்று ஆண்கள் முன்வர வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார். பதினொரு ஆண்கள் முன்வந்தவுடன், சுவாமி எங்கே குழி தோண்டவேண்டுமென்று குறிப்பிட்டார். அருகில் இருந்த வீடுகளில் இருந்து மண்வெட்டிகள் கொண்டு வரப்பட்டு, குழி தோண்டும் பணி தொடங்கியது. சூடான ரசம் மற்றும் ஆவி பறக்கும் சாதம், ஐந்து வாசனை திரவியங்கள் நிறைந்த காய்கறிகள், சட்னிகள், குழம்பு, தயிர் மற்றும் இனிமையான பாயாசத்தின் நறுமண வாசனையால் எல்லோர் வாயிலும் எச்சில் ஊற, பசி வயிற்றை கிள்ள, அவர்கள் சுவாமியின் உத்தரவு நிறைவேறுவதற்காக காத்து இருந்தனர். அது உண்மையில் ஒரு பெரிய விருந்தாக இருந்தது. §§

இறுதியாக அந்தி சாயும் நேரத்தில், குழி தயாராகி இருந்தது, மற்றும் உணவை பரிமாறலாம் என்று அந்த மிகப்பெரிய துறவி குறிப்பிட்டார். “வாருங்கள், குழந்தைகளே. இந்த குழியை சுற்றி நில்லுங்கள்,” என்றார். அந்த பத்துக்கு பத்து அளவுள்ள குழியை சுற்றி இருநூறு அல்லது முன்னூறு அன்பர்கள் நின்று கொண்டார்கள். பெண்களும் குழந்தைகளும் முன் வரிசையில் அமர்ந்து கொள்ள, ஆண்கள் பின்வரிசையில் நின்று கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் சுவாமி இனி என்ன சொல்ல போகிறார் என்ற சிந்தனை மற்றும் விருந்தை இனி தாமதிக்கமாட்டார் என்ற நம்பிக்கையுடன் இருந்தனர். §§

“நாம் இனி நமது பிரசாதத்தை பரிமாறலாம்,” என்று அவர் அறிவித்தார். அந்த பதினொரு ஆண்களில், வலுவாகவும் உயரமாகவும் இருந்த இரண்டு பேரை முன் வருமாறு அழைத்து, “அரிசியை பரிமாறுங்கள். அந்த பெரிய பானையை கொண்டு வாருங்கள்,” என்று கட்டளையிட்டார். அது ஒரு பெரிய பித்தளை பானையாக இருந்தது மற்றும் அதில் சுமார் 400 பவுண்ட் (180 கிலோ) சாதம் இருந்திருக்கும். அப்போது காலையில் சமையல் வேலைகளை செய்து, மாலையில் பாட்டு பாடியவர்களில் பலர் கிளம்பி இருந்தார்கள். மிகவும் சிரத்தையுடன் இருந்தவர்கள் மட்டுமே, நடப்பதை காண காத்து இருந்தார்கள். காலையில் 1,000 அன்பர்கள் இருந்தார்கள். ஒரு பெரிய மக்கள் கூட்டத்திற்கு உணவு தயார் செய்யப்பட்டு இருந்தது. §§

பெரிய பானை வந்ததும், “அந்த குழியின் நடுவில் அந்த சாதத்தை கொட்டுங்கள்,” என்று சுவாமி கூறினார். அந்த குழியின் அடியில் ஒரு மிகப்பெரிய உணவுத்தட்டுப் போல, வாழை இலைகள் கவனமாக வைக்கப்பட்டு இருந்தன. “குழியில் கொட்டவெண்டுமா?” என்று மக்கள் கூட்டம் வியப்பில் இருந்தது. “தயக்கம் வேண்டாம், வேலை நடக்கட்டும்,” என்று அவர் உத்தரவிட்டார். அந்த இரு ஆண்கள் வியப்பில் இருந்தாலும், எந்த கேள்வியும் கேட்காமல் யோக சுவாமி சொன்ன வார்த்தைக்கு கட்டுப்பட்டு, வாழை இலையின் மத்தியில் ஆவி பறக்கும் சாதத்தின் குவியலை கொட்டிக்கொண்டு இருந்தனர். சுவாமி ஒருவரிடம், “நீ சென்று கத்திரிக்காய் கொண்டு வா!” என்றார். இன்னொருவரிடம், “நீ சென்று உருளைக்கிழங்கு கொண்டு வா! நாம் ஒரு இதை முழுமையான மற்றும் மங்களகரமான காணிக்கையாக படைக்க வேண்டும்.” §§

எல்லா காய்கறிகளும் சாதத்தை சுற்றி முறையாக வைக்கப்பட்ட பிறகு, “நாம் எல்லோரும் குழியில் இருந்து சாப்பிட வேண்டுமா? இதைத்தான் சுவாமி நினைத்துக்கொண்டு இருக்கிறாரா?” என்று எல்லோரும் யோசித்துக்கொண்டு இருந்தனர். அதன் பிறகு சாதத்தின் மத்தியில் குழம்பு ஊற்றப்பட்டது. ஐந்து பவுண்ட் உப்பு இலையின் ஓரமாக சேர்க்கப்பட்டது. மாம்பழம் மற்றும் இஞ்சி சட்னிகள் முறையாக வைக்கப்பட்டன. கூடியிருந்தவர்கள் ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டு இருக்க, வாயில் எச்சில் ஊறச் செய்த ஒவ்வொரு உணவுப்பொருளும் குழியில் ஒவ்வொன்றாக வைக்கப்பட்டன. §§

உணவுகள் அனைத்தும் பரிமாறிய பிறகு, சுவாமி எழுந்து நின்று, “மக்களே, இதில் கலந்து கொள்ளுங்கள். இப்போது எல்லோரும் முன் வந்து…” என்று கூறிய போது, கூடியிருந்த மக்கள் எல்லோரும் “நாள் முழுவதும், ஒரு சீடர்களின் குடும்பமாக காத்து இருந்த எல்லோரும், இந்த உணவை சாப்பிட வாருங்கள்,” என்று சுவாமி கூறுவார் என்று நினைத்தார்கள். ஆனால் வேறொன்றை நினைத்து இருந்த அவர், “பதினொரு மண்வெட்டிகளை எடுத்துக்கொண்டு, இந்த ருசியான உணவின் மீது சிறிதளவு மண்ணை தூவிவிடுங்கள். அதன் பிறகு அந்த மண்வெட்டியை அடுத்த நபரிடம் கொடுங்கள். இந்த மிகப்பெரிய சைவ சமூகத்திற்கு இத்தனை ஆண்டுகளாக, தனது வளத்தில் நமக்கு தாராளமாக வழங்கி வந்த நமது பூமாதேவிக்கு நாம் உணவு அளித்து விட்டோம். இப்போது நாம் தயார் செய்த பிரசாதத்தை ஒரு விலைமதிப்பற்ற, மனப்பூர்வமான பரிசாக அவளுக்கு காணிக்கை செலுத்த போகிறோம். பூமாதேவி பசியுடன் இருக்கிறாள். நாம் அவளிடம் இருந்து எல்லாம் எடுத்துக்கொள்கிறோம், அதற்கு பதிலாக இந்த சிறிய விருந்தை அவளுக்கு திரும்பித் தருகிறோம். தனக்கு மிகவும் தேவையானதை இந்த உலகமும் நாம் ஒவ்வொருவரும் தியாகம் செய்யவேண்டும் என்பதற்கு இது ஒரு அடையாள சின்னமாக விளங்கட்டும்.” §§

இவ்வாறு சற்குரு யோக சுவாமி, வடக்கு இலங்கையில் பூமி வழிபாட்டு சடங்கை துவக்கி வைத்தார். அவர் விரதம் இருந்து நன்கொடை வழங்குதல் மற்றும் நன்கொடை வழங்கி விரதம் இருக்கும் தவம் மற்றும் தியாகம் பற்றிய ஒரு பாடத்தை கற்றுத் தந்தார். இவை அனைத்தும் முடிவதற்குள் இரவு வெகுநேரமாகி விட்டது. சீடர்கள் அவரது காலடியை தொட்டு வணங்கிவிட்டு, தங்கள் நெற்றியில் சிவபெருமானின் அறிகுறியாக விபூதியை அவரிடம் இருந்து பெற்ற பிறகு தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். அதன் பிறகு வீட்டில் சுடச்சுட சமைப்பதற்கு நேரமில்லை, அப்படி சமைத்தாலும் சமையலின் வாசனையால் அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு குறும்பு நடந்துகொண்டு இருக்கிறது என்பது தெரிந்துவிடும். சற்குரு தங்களுக்கு கற்றுத்தந்த ஒரு குறிப்பித்தக்க பாடத்தை நினைத்துக்கொண்டு, சில அன்பர்கள் அல்லது பல அன்பர்கள், அன்று இரவு ஒரு சில வாழைப்பழங்களுடன் தங்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்க வேண்டும். §§

சொற்கள் எல்லாம் மௌனமாக இருக்கும் இடம் §

மே 1953, சங்கரத்தை வட்டுக்கோட்டையை சேர்ந்த திரு. அ. தில்லையம்பலம் தனது இளைய மகளுக்கு திருமணம் முடிந்து வைத்தார். தனது குடும்ப பொறுப்புக்களை நிறைவு செய்து இருந்ததால், திருமணம் முடிந்து நான்கு நாட்கள் கழித்து, அரசாங்க வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு தேவையான ஆவணங்களை சமர்பித்து இருந்தார். அடுத்த நாள், சுவாமி அவரது வீட்டிற்கு சென்று, “தில்லையம்பலம், நீங்கள் இன்னும் பணி ஓய்வு பெறவில்லை, நீங்கள் செய்யவேண்டிய ஒரு முக்கிய காரியம் மீதம் உள்ளது! நாளை யாழ்ப்பாணம் சென்று, சிவ தொண்டன் நிலையத்தின் மாடியில் ஒரு முறையான தியான அறையுடன், கட்டிட பணியை திட்டமிட்டு மேற்பார்வையிடுவதை தொடங்குங்கள்.” §§

அந்த வருடத்தின் தொடக்கத்தில், சிவ தொண்டன் நிலையம் என்ற பெயரில் ஒரு முறையான சமய அமைப்பை உருவாக்கி, நிலையத்தின் நிர்வாகத்தை கவனிக்க, அவர் நியமனம் செய்த ஒரு நிர்வாக குழுவை உருவாக்க முதல் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் “முரடர்கள் குழுவில்" இருந்த பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாதமும் பூஜை மற்றும் பஜனை நடத்தப்பட்டு, வந்திருந்த எல்லோருக்கும் இரவு உணவு வழங்குவது வழக்கமாகிவிட்டது. §§

1954 ஆம் ஆண்டு, அந்த கட்டிடம் நிறைவடைந்து முறையாக தொடங்கி வைக்கப்பட்டது. பக்தர்களுக்கு ஆசிகளை வழங்குவதற்காக, சந்தன மரத்தால் செய்யப்பட்ட அவரது திருவடி, ஆசிரமத்தில் இரண்டு வாரங்கள் வைக்கப்பட்ட பிறகு, தியான மண்டத்தில் வைக்கப்பட்டது. இது தொடர்பாக நூல் ஆசிரியர் ச. அம்பிகைபாகன் வழங்கும் குறிப்பு: §§

சைவ சமய இயக்கங்களுக்கு எல்லாம் கேந்திரமாக விளங்கும் வண்ணார்பண்ணையில் சிவ தொண்டன் நிலையம் அமைந்து இருப்பது மிகப் பொருத்தமானதே. சிவதொண்டன் நிலைய அமைப்பை அறிந்தால் அதன் நோக்கங்கள் தெளிவாகும். நிலையத்தில் புராண மண்டபம், தியான மண்டபம், அன்பர்கள் தங்குவதற்கு அறைகள், சமையற்கட்டு, சுகாதார வசதிகள் எல்லாமுண்டு. புராண மண்டபத்தில் புராண படனம், திருமுறை ஓதுதல், நற்சிந்தனை பாராயணம் முதலியன இடம்பெறும். மேல்மாடியிலுள்ள தியான மண்டபத்தில், திருவடி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அங்கு மௌனமே நிலவும். பூசை நேரத்தில் மணி அடித்தால் திருமுறை ஓதுதல் முதலியன இடம்பெறா. புஷ்பாஞ்சலியும் தீபாராதனையுமே இடம்பெறும். இந்த சமயத்தில் முழுமையான அமைதி நிலவும். §§

இந்த நிலையத்தை, சுவாமி தியானம் மற்றும் வழிபாட்டிற்காக பிரத்யேகமாக ஒதுக்கி இருந்தார். தியான மண்டபத்திற்கு படியில் ஏறும் அன்பர்கள் படிக்க, சுவாமி சுவரில் பின்வரும் மூன்று வாசகங்களை காட்சிக்கு வைத்து இருந்தார். §§

சொலெல்லாம் மோனம். (சொற்கள் எல்லாம் மௌனத்தில் இருக்கின்றன.)§

செயலெல்லாம் மோனம். (செயல்கள் எல்லாம் மௌனத்தில் இருக்கின்றன.)§

எல்லாம் நன்மோன நிறைவே. (எல்லாம் மௌன நிறைவுக்குள் இருக்கின்றன.) §§

மேலும் அவர் ஐந்து நடத்தை விதிகளையும் (தமிழில்) காட்சிக்கு வைத்து இருந்தார்:§§

1. உள்ளிருக்கும் வாசலில் அன்பர்கள் தங்கள் முகம், கைகள் மற்றும் கால்களை கழுவவேண்டும் மற்றும் நிலையத்தின் பிரார்த்தனை கூடங்களில் நுழையும் போது நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு நுழைய வேண்டும். §§

2. அன்பர்கள் நிலையத்தில் மற்ற அன்பர்களின் பொறுப்புக்களில் தலையிடாமல், தங்களுக்கு வழங்கபட்ட பொறுப்புக்களுடன் தங்களை உறுதியாக கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். §§

3. அன்பர்கள் உடல்ரீதியாக முழுமையான புனிதத்தன்மையையும், தங்களுக்குள் முழுமனதுடன் ஆன்மீக சுத்தத்தையும் கடைப்பிடிக்கவேண்டும். §§

4. நிலையத்தில் திருமுறை மற்றும் புராணங்கள் பாடப்படும் போது, அன்பர்கள் மற்றவர்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் உயர்ந்த ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். §§

5. சிவதியானம் மற்றும் பாடல்கள், சைவ சமயம் மற்றும் நற்சிந்தனை பற்றிய விவாதங்கள் மட்டுமே, சிவ தொண்டன் நிலையத்தின் முக்கிய கடைப்பிடித்தல்களாக விளங்குகின்றன. சமயம் சாராத விஷயங்கள் மற்றும் மற்ற லௌகீக விஷயங்கள் பற்றிய விவாதம் உறுதியாக தடை செய்யப்பட்டுள்ளது. §§

இதைப்பற்றி இந்துமதி அம்மா வழங்கும் குறிப்பு:§§

நிலையத்தின் புனிதத்தன்மையை பாதுகாக்க விதிகளை தவறாமல் கடைக்கப்பிடிக்க வேண்டும் என்பதில் சுவாமி உறுதியாக இருந்தார். “இந்த நிலையம் இந்த ஆசிகளை வழங்காமல் சீர்குலைந்துவிட்டால், இதன் செயல்பாட்டை நிறுத்தி விடுங்கள், இதனால் எந்த இழப்பும் ஏற்படாது.” புராண மண்டபத்தில் பூஜை மற்றும் சமயப்பாடல்களை, தியானம் செய்ய தூண்டுவதாக அவர் குறிப்பிட்டு: “ஒருவரால் சும்மா இருக்க முடியாது என்பதால் பாடல்கள் பாடி பாராயணம் மந்திரங்கள் ஓதப்படுகிறது.” §§

நிலையத்தின் அன்றாட நிர்வாகத்தில் யோக சுவாமியின் ஈடுபாட்டை பற்றி தி. சிவயோகபதி பின்வரும் வர்ணனையை வழங்குகிறார். §§

image§

யோக சுவாமியிடம் அதிக உடலுறுதி இருந்ததால், சுட்டெரிக்கும் வெயிலில் அவரால் நாள் முழுவதும் நடந்து செல்ல முடிந்தது. யாழ்ப்பாண மக்கள் அவரைப் பற்றி அறிந்து இருந்தார்கள் மற்றும் தங்களது இதயத்தில் இருப்பதை அவர் அறிந்து இருந்ததால், அவரைக் கண்டு அஞ்சினார்கள். அவர் அன்பர்களை தவிர்க்க விடியற்காலையில் எழுந்துவிடுவார், மற்றும் வெயிலில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள கையில் ஒரு குடையுடன் நடந்து செல்வார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

சிவ தொண்டன் நிலையத்தில் சந்தசுவாமி தங்கியிருந்தபோது, ஜெர்மன்சுவாமி மற்றும் இன்னொரு ஐரோப்பிய சுவாமி சில நாட்களுக்கு தங்கி இருந்தார். பின்னர் குறிப்பிட்ட இரண்டு சுவாமிகளும் நிலையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை. மேலும் அவர்களது தோழமை, சந்தசுவாமியின் சமய நடவடிக்கைகளுக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தது. அதனால் யோக சுவாமி அவர்களை நிலையத்தில் இருந்து வெளியேற்றுவதில் உறுதியாக இருந்தார். சிவ தொண்டன் நிலையத்தின் கண்காணிப்பாளர் என்று சுவாமி தன்னை குறிப்பிட்டுக்கொண்டார். இதன் பொருள் இந்த சம்பவம் மற்றும் மேலும் பல சம்பவங்களின் மூலம் தெளிவாகிறது. §§

யாழ்ப்பாணத்தின் நாவற்குழியில் இயங்கிய, மத்திய மகாவித்தியாலயத்தின் தலைமை ஆசிரியராக இருந்த திரு. செல்லத்துரையிடம் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை யோக சுவாமி வழங்கினார். 1956 ஆம் ஆண்டில் ஒரு நாள், சுவாமி பள்ளிக்கு அருகில் தனது வாகனத்தை நிறுத்தி, செல்லத்துரையிடம் வாகனத்தில் ஏறுமாறு கேட்டுக்கொண்டார். அதன் பிறகு அவர், “நான் உங்களை சிவ தொண்டன் நிலையத்தில் பணியில் அமர்த்த போகிறேன். நீங்கள் இப்போதிலிருந்து அங்கே நிரந்தரமாக தங்கி, நிர்வாகத்தை கவனிக்க வேண்டும்,” என்று அறிவித்தார். §§

அன்றிலிருந்து, செல்லத்துரை அந்த நிலையத்திற்கு மட்டுமில்லாமல், அந்த சமூகம் மட்டக்களப்பில் இரண்டாவதாக தொடங்கிய நிலையத்திற்கும் நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு, யோக சுவாமிக்கு தனது சேவையை வழங்கினார். அவர் பின்னர் துறவற வாழ்க்கையை மேற்கொண்டு, செல்லத்துரை சுவாமியாக மாறினார். அவர் 2006 ஆம் ஆண்டு தனது 92 ஆவது வயதில் காலமானார். §§

ஒரு நாள் சுவாமி செல்லத்துரையிடம் பேசிக்கொண்டு இருந்த போது, பின்புறத்தில் இருந்து வந்த ஒரு சத்தம், அவர்கள் பேச்சுக்கு இடையூறாக இருந்தது. ஒரு சிவ தொண்டன் கழிவறையை சுத்தம் செய்துகொண்டு இருக்கிறான் என்பதை உணர்ந்த சுவாமி உற்சாகமாக சிரித்துக்கொண்டு, “அங்கே சிவ பூஜை நடந்துகொண்டு இருக்கிறது! சிவ தொண்டன் நிலையத்தில் இருக்கும் அன்பர்களின வசதிக்காக கழிவறையை சுத்தம் செய்யும் அவன் மிகவும் உயர்வான சிவ தொண்டன்!” §§

வழக்கமாக சுவாமி சில உத்தரவுகளை வழங்க நிலையத்தில் சிறிது நேரம் தங்கிவிட்டு செல்வார். தனது அக்குளில் ஒரு குடை மற்றும் சூரிய கிரணங்களில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தலையில் ஒரு துண்டை சுற்றிக்கொண்டு, முன்னறிவிப்பு இல்லாமல் நுழைந்து, செல்லத்துரை அல்லது மற்றவர்களை வெளியே வருமாறு அழைத்து, “இதை கட்டவேண்டும். அதை பொருத்த வேண்டும். இதை அச்சிட வேண்டும். இந்தியாவில் இருந்து வரும் விருந்தாளிகளுக்கு அந்த அறையை தயார் செய்யுங்கள்,” என்று உத்தரவிடுவார். தனது உத்தரவுகளை வழங்கியதும், தான் கூறியது அனைத்தும் அக்கறையுடன் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன், அவர் அங்கிருந்து கிளம்பிவிடுவார். §§

சுவாமி நிலையத்திற்குள் நுழைவது மிகவும் அபூர்வம், ஆனால் சிலசமயங்களில் நிலையத்தில் அமைதி நிலவிய போது, அவர் உள்ளே செல்வார். ஒரு முறை 1961 ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட விபத்திற்கு பிறகு, அங்கே மூன்று வாரங்கள் தங்கி இருந்தார். அங்கே அவர் பயன்படுத்திய படுக்கை இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. §§

அவர் தன்னை சந்திக்க வந்தவர்களிடம் வழக்கமாக, சிவ தொண்டன் நிலையத்திற்கு சென்று துதிப்பாடல்களை பாடுங்கள் அல்லது வேதங்களை ஓதுங்கள், அல்லது மேல்மாடியில் அமைதியாக இருந்த தியான மண்டபத்திற்கு செல்லுங்கள் என்று அறிவுரை வழங்குவார். இன்றும் தியான மண்டபத்தில் அமைதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. “அமைதியாக அமருங்கள். சிறிது நேரம் கழித்து நீங்கள் என்னை தேடி எதற்காக வந்தீர்களோ, அது உங்களை தேடி வரும்,” என்று அவர் உத்தரவிடுவார். “சும்மா இரு,” என்று மையத்தின் சுவரில் தொங்கிய ஒரு பலகை இவற்றை தெளிவாக விளக்கியது. §§

சிவ தொண்டன் நிலையத்தை நிறுவிய பிறகு, சுவாமி சீடர்களிடம், “நீங்கள் என்னை சந்திக்க எதற்காக வருகிறீர்கள்? சிவ தொண்டன் நிலையத்திற்கு சென்று தியானம் செய்யுங்கள்,” என்று கூறுவார். இவர் இந்த தகவலை “உறுதி மொழி யிதனை அறிவீரே,” என்ற தலைப்புள்ள பாட்டில் புகழ்ந்து பாடியுள்ளார். §§

சிவ தொண்ட நிலையத்திற் சேரீர்§

தியானஞ் செய்து கடை தேறீர்§

மவுனமா யிருந்து இளைப் பாறீர்§

மந்திர மிது வெனக் குறியீர்§

அவனிவ னாரென அறிவீரோ§

ஆன்மா நித்தியம் தெரியீரோ§

உவமை கடந்த வின்பம் உள்ளீரோ§

உண்மை முழுது மெனக் கொள்ளீரோ§

ஐம் பொறி வழியினிற் செல்லாதீர்§

ஐம் புலன் தன்னை வெல்வீரே§

வெம்பகை தன்னை விடுவீரே§

வேதாந்த சித்தாந்தந் தொடு வீரே§

ஒரு பொல்லாப்பு மில்லை யுணர்வீரே§

ஓம் சிவாய நமவெனத் தொழுவீரே§

உருகி யுருகி இன்பம் பெறு வீரே§

உறுதி மொழி யிதனை அறிவீரே. §§

நிலையத்தில் பூஜைகள் மிகவும் எளிமையாக நடைப்பெற வேண்டும் என்று சுவாமி வலியுறுத்தினார். அவை எந்தவித பாராயணமும் இல்லை, முழுமையான அமைதியில் அன்றும் இன்றும் நடைபெற்று வருகின்றன. தினமும் எளிமையான முறையிலும், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றக்கிழமைகளில் விமர்சியாக நடைப்பெற்ற திருவடி பூஜையை தவிர, அவர் டிசம்பர் மாதத்தில் சிவபெருமானும் ஆன்மாவும் ஒன்றாக காணப்படும் ஆருத்ரா தரிசனம் மற்றும் வருடந்தோறும் தெய்வீக திருவடிகளை மிகவும் சிறந்த முறையில் பூஜிக்கப்படும் மகாசிவராத்திரி பண்டிகைகளை மட்டுமே அனுமதித்தார். மற்ற நாட்களில் பூஜை செய்ய வேண்டாம் என்று சுவாமி அறிவுறுத்தினார். §§

சிவ தொண்டன் குழுவில் இருந்த ஒரு அங்கத்தினர், இன்னொரு பண்டிகையை கொண்டாட தாம் விரும்புவதாக கூறிய போது, “இதற்கெல்லாம் அனுமதி கிடையாது,” என்று சுவாமி அந்த யோசனைக்கு முடிவு கட்டினார். சுவாமி மகாசமாதி அடைந்த பிறகு, இரண்டு நிலையங்கள் மற்றும் அவரது கொழும்புத்துறை ஆசிரமத்தில், மாதம் ஒருமுறை ஆயில்யம் (ஆஷ்லேஷா) நட்சத்திரத்தன்று திருவடி பூஜையும் நடைப்பெற்றது. 1920 களில் அதே நட்சத்திரத்தில், அவர் தனது ஆசிரமத்தில் செல்லப்பசுவாமியின் திருவடியை நிறுவினார், மற்றும் அது யோக சுவாமி மகாசமாதி அடைந்த நட்சத்திரமாகவும் அமைந்தது. §§

சுவாமி வண்ணார்பண்ணை நிலையத்தை, யாழ்ப்பாணத்திற்கு வெளியில் இருந்து வந்த முக்கிய விருந்தாளிகளுக்கு தங்கும் இடமாக ஏற்பாடு செய்தார். தமிழ்நாட்டை தங்கள் இருப்பிடமாக கொண்டு தமிழ் மொழி, ஆங்கில மொழி மற்றும் சைவ சித்தாந்த தத்துவத்தில் பிரபல அறிஞர்களாக விளங்கிய முனைவர் டி.எம்.பி. மகாதேவன், முனைவர் தெ. பொ. மீனாட்சசுந்தரம் மற்றும் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் ஆகியோர், 30 நிமிட திருச்சி-பலாலி வான்வழி பயணம் மூலமாக, யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி வந்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் முக்கியமாக சுவாமியின் ஆசிரமத்தில் தத்துவத்தைப் பற்றி விவாதிக்கவும், யாழ்ப்பாண தீபகற்பத்தின் பள்ளிகளில் பொதுமக்களுக்கு உரை நிகழ்த்தவும் வருகை தந்தார்கள். அவர்கள் எப்போதும் யாழ்ப்பாண சிவ தொண்டன் நிலையத்தில், சுவாமியின் விருந்தாளிகளாக தங்கி அவரது அறிவுறுத்தல்களை பின்பற்றினர். §§

தான் மகாசமாதி அடைவதற்கு சில வருடங்களுக்க முன்பாக, சுவாமி அன்பர்களிடம், “நாம் பெரும் பஞ்சத்தை எதிர்கொள்ளவிருக்கிறோம். அந்த சமயத்தில் நீர் ஆகாரம் கிடைப்பதும் கடினமாக இருக்கும். உணவை சாகுபடி செய்வதில் கவனம் செலுத்தி, எல்லோருக்கும் உணவை தானமாக வழங்குங்கள்,” என்று கூறினார். சிவ தொண்டன் பத்திரிகையின் பல இதழ்களில், அன்னதானத்தின் மகத்துவத்தை குறிப்பிட்டு கட்டுரைகள் வந்துள்ளன மற்றும் அன்னதானம் வழங்கும் பணி தொடர்வதை உறுதி செய்ய, விவசாயத்திற்கு நல்ல வயல்களை வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சாகுபடியில் இருந்து வரும் உற்பத்தியை எல்லோருக்கும் விநியோகம் செய்து, எல்லோருக்கும் உணவு அளிக்கவேண்டிய தேவையை சுவாமி குறிப்பிட்டார். §§

சுவாமியின் நிர்வாகத்தின் கீழ், சமயம் தொடர்பான ஆய்வுகளுக்கு நிலையம் ஆதரவு அளித்ததைப் பற்றி இந்துமதி அம்மா ஒரு சிறிய கண்ணோட்டத்தை வழங்குகிறார். §§

சிவ தொண்டன் நிலையம் தொடங்கி மூன்று வருடங்கள் கழித்து, சிவ தொண்டன் பத்திரிகையில் இரண்டு விளம்பரங்கள் தோன்றின. அதில் ஒன்று சிவ தொண்டன் கல்வி நிதி பற்றியது மற்றும் இன்னொன்று அந்த நிதியில் இருந்து உதவிகளை பெற்றவர்கள் பற்றியதாக இருந்தது. இந்த நிதியுதவியை பெற்றவர்கள் (தேவாரம், இசை, சமயக்கல்விகள் போன்றவற்றை படிக்க இந்திய பல்கலைக்கழகங்களுக்கு சென்றவர்கள்) தங்கள் படிப்பை முடித்த பிறகு சிவ தொண்டன் நிலையத்தில் ஐந்து வருடங்கள் சேவை செய்ய வேண்டும் அல்லது அவர்களுக்கு விருப்பம் இருந்தால் அதிக வருடங்கள் சேவை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இது சமய அறிவின் உயர்ந்த இலட்சியங்களை நோக்கி மக்களை இயக்கும் சிவ தொண்ட நிலையத்தின் குறிக்கோளை விவரிக்கிறது. சுவாமி கற்றுத்தந்த சைவ சித்தாந்தம், அவரது சீடர்கள் கோயில்களில் நடத்திய பெரியபுராணம் பற்றிய சொற்பொழிவுகள், சர் ஜான் வுட்ரப் எழுதிய தி செற்பெண்ட் பவர் என்ற புத்தகத்தின் அறிமுக அத்தியாயத்திற்கு வழக்கறிஞர் சுப்பையா வழங்கிய மொழிப்பெயர்ப்பு, விவேகசூடாமணி ( ஆதிசங்கரர் அருளிய அத்வைத உரை) மற்றும் இன் தி ஹர்ஸ் ஆஃப் மெடிடேஷன் ஆகியவை சிவ தொண்டன் நிலையத்தின் ஆன்மீக நோக்கங்களை வெளிப்படுத்துகின்றன. §§

யோக சுவாமி வாழ்ந்த காலத்தில் இந்திய மடங்களை சேர்ந்த சில ஆன்மீக தலைவர்கள் மற்றும் பிரபல சமய அறிஞர்கள் மீது அவர் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி தி. சிவயோகபதி சில தகவல்களை வழங்குகிறார். §§

சைவ சித்தாந்தத்தின் கோட்டைகளில் ஒன்றாக விளங்கி ஒரு பழங்கால மடலாய-கோயில் வளாகமாக தமிழ்நாட்டில் இருக்கும், குன்றக்குடி ஆதீனத்தின் ஆன்மீகத் தலைவராக தெய்வசிகாமணி அருணாச்சல தேசிகர் அடிகள் (குன்றக்குடி அடிகளார்) இருந்தார். அவர் 1950 மற்றும் 1960 களில் பலமுறை யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பிற்கு பயணம் செய்து, சைவ கோயில்கள் மற்றும் மண்டபங்களில் சொற்பொழிவுகளை வழங்கியுள்ளார். 1950 களின் இறுதியில் ஒரு நாள், அந்த இளவயது அடிகளார் யாழ்ப்பாணத்தில் இருந்த போது, அவரை எனது தந்தை திரு. அ. தில்லையம்பலம் மற்றும் முதலியார் சின்னதம்பி யோக சுவாமியின் ஆசிரமத்திற்கு அழைத்து சென்றனர். அங்கே அடிகளார் சுவாமிகளுடன் ஒரு அரிய விவாதத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டு இருந்தார். அவருக்கு சுவாமி ஒரு நற்சிந்தனை புத்தகத்தை பரிசாக வழங்கினார். ஆசிரமத்தில் இருந்து கிளம்பிய பிறகு, அந்த அடிகளார் பெரும் விருப்பத்துடன் அந்த புத்தகத்தை முழுவதுமாக படித்து முடித்தார். அவர் அன்றிலிருந்து, சுவாமிகளின் பாடல்ககள் அத்வைத சைவ சித்தாந்த தத்துவத்தில் தலைசிறந்து விளங்குகிறது என்று தனது சொற்பொழிவுகள் அனைத்திலும் பாராட்டி பேசினார். §§

சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த முனைவர் அ. லக்ஷ்மண சுவாமி முதலியார், 1955 ஆம் ஆண்டு சுவாமியை சந்தித்த போது, சிக்கலான கோட்பாடுகளை ஒரு எளிமையான நடையில் வெளிப்படுத்தும் அவரது விசித்திரமான திறமையால் ஈர்க்கப்பட்டார். அந்த பிரபல கல்வியாளர் “இந்த உலகில் மனித நேயத்தின் பொக்கிஷமாக” மதித்த சுவாமியின் பண்புகளுடைய ஒரு மகானை, தான் இந்தியாவிலும் பார்த்தது இல்லை என்று அவர் தில்லையம்பலத்திடம் கூறினார். §§

இராமகிருஷ்ணா மிஷனுடன் சுவாமி ஒரு நெருக்கமான உறவை வளர்த்துக்கொண்டு இருந்தார். அந்த உறவு 1897 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரை அவர் எதிர்கொண்டதில் இருந்து தொடங்கி இருந்தது. கொழும்பு கிளையை சேர்ந்த சுவாமி அசங்கானந்தர் யோக சுவாமியை தரிசிக்க, அடிக்கடி யாழ்ப்பாணம் வந்துக்கொண்டு இருந்தார். வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தில் ஒரு குருகுலம் கட்டுவதற்கு, இராமகிருஷ்ணா மிஷனின் மட்டக்களப்புப் பிரிவு நிதி திரட்டிய போது, யோக சுவாமி முதல் நன்கொடையை வழங்கினார். அவர் தனது ஆசிகளுடன் வழங்கிய நன்கொடையை இராமகிருஷ்ணா மிஷன் இன்றும் பாதுகாத்து வருகிறது. அதன் பிறகு, சுவாமி துறவறத்தை மேற்கொள்ள விரும்பிய பல அன்பர்களிடம், இராமகிருஷ்ணா மிஷனில் சேருமாறு தொடர்ந்து ஊக்குவித்து வந்தார். அதில் பண்டிதர் தி. மயில்வாகனம் மற்றும் சுவாமி பிரேமாத்மானந்தர் அடங்குவர். காவி உடை அணிந்தவர்களை சில இரகசிய காரணங்களுக்காக, சுவாமி தனது சிவ தொண்டன் நிலையத்தில் தங்க அனுமதிக்காவிட்டாலும், இராமகிருஷ்ணா மிஷனை சேர்ந்த சுவாமிகளுக்கு நிரந்தரமான அனுமதியை வழங்கினார். §§

செய்யவேண்டிய ஒரே வேலை §

“நாம் செய்வதற்கு ஒரு வேலை தான் இருக்கிறது: ஆத்ம ஞானத்தை சுயமாக பெறவேண்டும். அதாவது, நீங்கள் யாரென்று நீங்களே தெரிந்துகொள்ளுங்கள். அல்லது தன்னை அறி. நீங்கள் இதை எப்படி செய்வீர்கள்? ஆயிரம் புத்தகங்களை படிப்பதன் மூலம் அல்லது மக்கள் பேசுவதை கேட்பதன் மூலம், உங்களால் இந்த முடிவான உண்மையை தேடிப்பிடிக்க முடியாது. நீங்கள் ஆத்ம ஞானத்தை சுயமாக உணரவேண்டும். உள்ளே சென்று அங்கே நிலைத்து இருங்கள். அதன் பிறகு வெளியே வந்து, இந்த உலகை பாருங்கள்,” என்று யோக சுவாமி வழக்கமாக கூறுவார். யோக சுவாமி சாதகர்களிடம்: §§

மேலே உங்களுக்காக ஒரு நாற்காலி ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அங்கே சென்று அந்த நாற்காலியில் உட்கார வேண்டும். அங்கிருந்து பார்த்தால், உங்களுக்கு எல்லாம் ஒன்றாக தெரியும். இரண்டாவதாக எதுவும் தெரியாது. அந்த நிலையை சில மகான்கள் மற்றும் தேவர்களும் அறியாமல் இருக்கிறார்கள். அந்த நிலையை புத்தர் அடைந்தார் மற்றும் அதன் பிறகு கீழே இறங்கி வந்து மற்றவர்களுக்கு உதவி செய்தார். ஏசு கிறுத்து அதை அறிந்து இருந்தார் மற்றும் அந்த நிலைக்கு மற்றவர்களை கொண்டு வர முயற்சியும் மேற்கொண்டார். அந்த நிலையை பற்றி பலர் கேட்டிருக்கவும் இல்லை அல்லது அறிந்திருக்கவும் இல்லை. அந்த நாற்காலி உங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சென்று அமர்வது உங்கள் வேலை. நீங்கள் அதை இந்த பிறவியில் செய்யவில்லை என்றால், நீங்கள் அடுத்த பிறவியில் செய்யலாம் அல்லது அதற்கு அடுத்த பிறவியில் செய்யலாம். நீங்கள் அந்த ஒரு வேலையை மட்டும் செய்தால் போதும். மேலே அந்த நாற்காலியை நோக்கி விரைவாக பறவைகளை போல பறந்து செல்பவர்களும் இருக்கிறார்கள். §§

தன்னை காண வரும் அன்பருக்கு, சுவாமி ஒரு பிரதிபலிக்கும் குளமாக விளங்கினார். ஒரு எளிமையான மனிதருக்கு, அவர் எளிமையாக மற்றும் வெளிப்படையாக பேசினார். கற்றறிந்தவர்கள் தன்னை நாடி வந்தபோது, அவர்கள் ஒரு இந்து, கிறுத்துவர் அல்லது இசுலாமியராக இருந்தாலும், அவர்களுக்கு பரிச்சயமான மொழியில் பேசுவார். அவர் ஒவ்வொரு அன்பரின் வசதிக்காக, அவரது சூழ்நிலை மற்றும் அவரது மதத்தில் பயன்படுத்தப்படும் சொற்களை பயன்படுத்தி பேசினார். அவர் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக தேர்ச்சி பெற்று இருந்தார். §§

தன்னை நாடி ஒரு கிறுத்துவர் வந்தால், சுவாமி அவரை விவிலியத்தில் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தை உரக்க படிக்க சொல்வார். சுவாமி இடையில் குறுக்கிட்டு, ஒரு பத்தியை பற்றி விளக்கம் அளிப்பார். அவர் அளித்த விளக்கம், அந்த அன்பரின் வாழ்க்கைக்கு தொடர்புள்ளதாக, அவரது கடந்தகாலம் மற்றும் எதிர்காலம் பற்றிய தகவலுடன் அவரை திகைக்க வைப்பதாக இருந்தது. யோவானின் நற்செய்தியில் தொடக்கத்தில் வரும்: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது,” அவருக்கு பிடித்தமான பகுதியாக இருந்தது. இந்த போதனை கேட்பவருக்கு முழுமையாக விளங்கும் வரை, சுவாமி அதைப்பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பார். §§

அவர் பெளத்த மதத்தை சேர்ந்தவர்களிடம், புத்தர் வழங்கிய போதனைகளை மேற்கோள் காட்டி, நிர்வாணாவின் பாதையை விரிவாக்கம் செய்யும் புத்தரை போல விளக்கம் அளிப்பார். இந்துக்களிடம், அவர்கள் எந்த பிரிவை சார்ந்தவராக இருந்தாலும், அவர்களுக்கு பழக்கமான பாரம்பரியத்தில் அவர்களை வேரூன்றி இருக்க செய்வார். ஆனால் அவர் வழக்கமாக ஒன்று அல்லது இன்னொன்றை செய்வார் என்று சொல்வது சரியாக இருக்காது. யோக சுவாமியிடம் “வழக்கமாக" என்று சொல்ல எதுவும் இருந்ததில்லை. அவரிடம் முன்பே தயார் செய்த பதில்கள் அல்லது கேள்விகள், பிரச்சனைகள் அல்லது சூழ்நிலைகளுக்கு உடனடி கையிருப்பு பதில்கள் இருந்ததில்லை. §§

அவரது வரையறைகள் மற்றும் கருவிகளாக ஞானமும் தெய்வீக பார்வையும் விளங்கின. அவர் உங்களை ஒரு முறை அறிந்து இருந்தால், இன்னொரு முறை உங்களை புறக்கணிப்பார் அல்லது உங்களை மறந்திருந்து, உங்கள் பெயரையும் அல்லது தோற்றத்தையும் மறந்து இருப்பார். அவரை சந்தித்த ஒவ்வொருவரும், அவரிடம் எதற்காக வந்தார்களோ அதை பெற்றனர். சிலசமயம் யோக சுவாமி அமைதியாக அமர்ந்து இருப்பார், அதன் பிறகு, “எந்த உத்தரவும் வரவில்லை,” என்பார். அதாவது அந்த தருணத்தில் அவருக்கு உட்புற ஆணைகள், உட்புற ஆன்மீக வழிகாட்டல்கள் எதுவும் வரவில்லை என்பதை குறிப்பிட்டார். §§

1961 ஆம் ஆண்டில் ஒரு நாள், யோக சுவாமி தனது குடிசையில் தனியாக இருந்த போது, அவருக்கு நெருக்கமான சீடராக இருந்த எஸ். சண்முகசுந்தரம் கொழும்பு வந்தார். அவர் நுழைந்த போது, குடிசை காலியாக இருந்ததால், சுவாமி வெளியே சென்று இருக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்த போது, திடீரென்று சுவாமி திரைமறைவில் இருந்து, எப்போதும் நன்றாக முடிந்து வைத்து இருந்த நீளமான தலைமுடியை விரித்த வண்ணம் தோன்றினார். வார்த்தை எதுவும் பேசாமல், யோக சுவாமி நடனமாட தொடங்கினார், மற்றும் அவர் தன் உடலை உற்சாகத்துடன் இயக்கியதால், அவரது தலைமுடி அங்குமிங்குமாக அசைந்தது. சண்முகசுந்தரம் பிரமித்து நின்றார். சுவாமிகள் தனக்கு ஒரு விசேஷமான ஆசியை வழங்குகிறார் என்பதை அவர் அறிந்து இருந்தார். அவர் அந்த ஆசியை என்றுமே மறக்கவில்லை, மற்றும் அவர் அதைப்பற்றி பல வருடங்கள் கழித்து பேசியபோது, பிற்காலத்தில் தான் சுப்பிரமுனியசுவாமியின் சீடான அமெரிக்கா மற்றும் மொரிஷியஸ் பயணம் செய்து, அந்த பயணத்தின் போது யோக சுவாமியின் வாழ்க்கை மற்றும் போதனைகளை பகிர்ந்து கொண்டதால், யோக சுவாமி தனது நடனத்தின் மூலம் சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமியிடம் செல்லுமாறு தனக்கு நுணுக்கமாக வழிகாட்டியதாக சண்முகசுந்தரம் ஊகித்தார். §§

image§

மார்கண்டுசுவாமி துறவறத்தை மேற்கொள்ள, யோக சுவாமியின் ஆசிகளுடன் தனது 60 ஆவது வயதில் பணி ஓய்வு பெற்றார். அவருக்காக யோக சுவாமி மண் மற்றும் கூரை வெய்த எளிமையான குடிசையை கட்டித்தந்து, அவர் அங்கே தனிமையில் வசிக்க அனுமதித்தார். யோக சுவாமி மார்கண்டுசுவாமிக்கு உணவை தயார் செய்து, அதை ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருந்த கைதடி வரை சுமந்து சென்று, தன் சீடனுக்கு சொந்த கைகளால் பரிமாறும் அளவிற்கு, சுவாமி தனது சீடனிடம் அதிக பாசத்துடன் இருந்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

“சும்மா இரு”§

“நான் இறைவனை தேடி நல்லூருக்கு சென்றேன்,” என்று விளக்க தொடங்கிய யோக சுவாமி, “இறைவனை அறியவேண்டும் என்ற ஆசைமட்டும் என்னிடம் இருந்தது. அங்கே நான் எனது செல்லப்பனை சந்தித்தேன், மக்கள் அவரை விசரன் என்று அழைத்தார்கள். அவர் நான் நீ என்ற வேறுபாட்டை அனுமதிக்கவில்லை. அவரது அருளால், நானும் அவரும் ஒன்று என்பதை நான் தெரிந்துகொண்டேன், மற்றும் நான் நீ என்ற வேறுபாடு இல்லாதவனாக நானும் மாறினேன்.” §§

செல்லப்பகுரு தன்னிடம் இருந்து ஆசைகள்,பற்றுகள் மற்றும் ஆணவம் அனைத்தையும் எடுத்துக்கொண்டதாகவும், அதன் பிறகு தான் சும்மா என்ற நிலைக்கு வந்ததாகவும் யோக சுவாமி கூறினார். இந்த சொல் அமைதியாக, எந்த கவலையும் இல்லாமல், அறியாமல் இருப்பதை குறிக்கிறது. அவர் அதை “ஆக்டிவ் அவேர்னஸ்” (active awareness) என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஆன்மீக வாழ்க்கையின் தொடக்கமாக சும்மா இருக்கும் நிலை விளங்குகிறது. ஆசைகளும் பற்றுகளும் இருந்தால், சும்மா இருக்கும் நிலையை சில நொடிகளுக்கு மேல் தக்கவைத்துக் கொள்ள முடியாது, ஆனால் அதை நெருங்கியதும் ஆசைகள் மற்றும் பற்றுகள் கரைய தொடங்கி, இந்த நிலையை தக்க வைத்துக்கொள்வது மிகவும் எளிதாகி, சாட்சி அமைதியில் நன்றாக நிலைகொள்கிறது. சும்மா இருக்கும் நிலையை நீண்ட நேரம் தக்கவைத்துக் கொண்டதும், உயர்நிலை அனுபவங்கள் வரத்தொடங்கி, பரமாத்துமா மட்டும் எஞ்சும் வரை, அவை தங்களை சுத்தப்படுத்திக் கொள்கின்றன. அதே பலனை அடைய யோக சுவாமி இன்னொரு வழியை குறிப்பிட்டார்: “ ‘நான் சிவன்’ என்று தியானம் செய்தால், நிற்குண சிவபெருமானின் பண்புகள் தோன்றும்.” §§

image§

ஒரு ஆசிரமமாகவும் இல்லாமல் ஒரு மடமாக இல்லாமல், வாழ்க்கையில் மனத்துறவை கடைப்பிடித்து, வயல்களில் இயற்கையுடன் வேலை செய்து, தீவிரமாக ஆன்மீக ஒழுக்கங்களை பின்பற்றி யாத்ரீகர்களுக்கு உணவுப்பொருட்களை வளர்க்கும் விவசாய சமூகத்தின் இளைஞர்களைக் கொண்டு ஒரு ஆன்மீக மையத்தை தொடங்கவேண்டும் என்று யோக சுவாமிக்கு ஒரு கனவு இருந்தது. சுவாமி வாழ்ந்துகொண்டு இருக்கும் போதே நிலத்தை வாங்கி இருந்தாலும், 1965 ஆம் ஆண்டு, அவர் மறைவுக்கு பிறகு அந்த மையம் முழுமை பெற்றது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

சும்மா இருக்கும் நிலையை அடைய விரும்பும் பல்வேறு அன்பர்கள் பின்பற்றுவதற்கு, சுவாமி பல்வேறு சாதனாக்கள், ஆன்மீக பயிற்சிகளை வழங்கினார். 1970 களின் தொடக்கத்தில் அளவெட்டியில் சிவாய சுப்பிரமுனியசுவாமியின் ஆசிரம திண்ணையில் கெளரிபாலாசுவாமி (ஜெர்மன்சுவாமி) அமர்ந்து கொண்டு, யாழ்ப்பாணம் வந்திருந்த இளம் அமெரிக்க சாதகர்களுக்கு இந்த கதையை கூறினார். இயல்பாக கதை சொல்லும் திறன் மற்றும் ஒரு வெள்ளை தாடியுடன், அவர் சுருட்டு புகைக்கும் முதியவராக கற்காரை தரையில் சம்மணம் போட்டு அமர்ந்துக்கொண்டு, அறிவுணர்வுடன் தான் நடத்திய போராட்டங்கள், தனது மனதை தானே அமைதிப்படுத்திக் கொள்ள மற்றும் தன்னை ஆன்மீக அனுபவத்தின் ஆழங்களுக்கு கொண்டு செல்வதற்கு, யோக சுவாமி மேற்கொண்ட தொடர் முயற்சிகளைப் பற்றி கூறினார். ஆனால் மனம் தனக்கென்று ஒரு வழியை வகுத்துக்கொண்டு இயங்கும் என்று அவர் கூறினார். “என் குரு குறிப்பிட்ட எண்ணங்கள் இல்லாத நிலையை என்னால் அடைய முடியவில்லை; என்னால் எனது மனதின் இயக்கங்களை குறைக்க முடியவில்லை.” §§

அவர் இதை சொல்லிக்கொண்டு, தனது இளவயது பார்வையாளர்கள் பார்ப்பதற்காக, தனது வலது கையை தோள்பட்டை உயரத்திற்கு உயர்த்தினார். அவரது முன்னங்கையில், தெளிவற்ற முறையில் “சும்மா இரு" என்ற வாசகம் தமிழில் ஒரு அங்குல நீளத்திற்கு பச்சை குத்தப்பட்டு இருந்தது. ஆங்கிலம் பேசும் தாய்மார்கள், “பி ஸ்டில்” என்று பரிந்து பேசுவதை போல, தங்கள் சுட்டி குழந்தையை அமைதிப்படுத்த தாய்மார்கள் தமிழில் “சும்மா இரு” என்று கூறுவார்கள். “எனது குரு எனக்கு வழங்கிய சாதனாவை நான் தினமும் ஞாபகப்படுத்திக் கொள்ள, எனது கையில் இதை பச்சை குத்திக்கொண்டேன். நீங்கள் பின்பற்றுவதற்கு இரண்டு வார்த்தைகளை வழங்கிய குருவின் சக்தியையும், நீங்கள் அவற்றை நிறைவேற்ற உங்கள் வாழ்க்கை முழுவதையும் பயன்படுத்திக் கொள்வதைவும் கற்பனை செய்து பாருங்கள். அது தான் யோகசமையின் மகிமை.” §§

“இறைவனின் இராச்சியம் உன்னிடத்தில் இருக்கிறது. அதன் மீது தியானம் செய்து மேலே செல்ல முயற்சி செய்,” என்று ஒருவருக்கு பரிந்துரைத்தார். இன்னொருவரிடம், “வேலையை செய்யாமல் வேலையை செய். வழிபடாமல் வழிபடு. சாப்பிடாமல் சாப்பிடு. சுத்தம் செய்யாமல் சுத்தம் செய். நடக்காமல் நட. இதை உன்னால் செய்ய முடியும் போது, நீ சும்மா இருக்கும் நிலையை அறிந்துக்கொள்வாய், மற்றும் மற்றவை அனைத்தும் உன்னை வந்து சேரும்.” §§

ஒருவர் தனது வேலைகள் அனைத்தையும் இறைவனுக்கு செய்யும் சேவையின் வெளிப்பாடாக செய்யவேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றி அவர் வழக்கமாக பேசுவார் மற்றும் அதற்கு சிவதொண்டு என்று பெயரும் வழங்கினார். “மகனே, நீ எந்த பணியை செய்தாலும், அதை இறைவனுக்கு வழங்கும் ஒரு காணிக்கையாக இருக்கட்டும்.” அவர் வழக்கமாக ஒரு அன்பர் அல்லது குடும்பத்துடன் நடத்தும் தரிசன அமர்வுகளின் முடிவில், “இனி உங்கள் வேலைக்கு செல்லுங்கள்!” என்று அறிவுரை வழங்குவார். இது தொடர்பாக அவர் வழங்கிய குறிப்பு: §§

நாங்கள் சிவனடியார்கள். எங்களுக்கு ஒரு குறையுமில்லை. சிவதொண்டு செய்வதே எங்கள் தொழில். அதற்காகவே நாங்கள் பூமியில் வாழுகிறோம். சந்திரன் சிவதொண்டு ஆற்றுகின்றது. சூரியனும் ஏனைய கிரகங்களும் அத்திருப்பணியையே செய்கின்றன. தேவர்களும், அசுரர்களும், கின்னரர், கிம்புருடர், வித்தியாதரர்களும் அப்படியே தொண்டாற்றி வருகின்றனர். §§

அனைத்துஞ் சிவன் செயல். அவனன்றி அணுவும் அசையாது. நாம் இழந்து போவதுமொன்றுமில்லை. ஆதாயமாக்கிக் கொள்வதும் ஒன்றுமில்லை. இருந்த படியே இருக்கின்றோம். நமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லை. நமக்கு இதம் அகிதம் இல்லை. மரணம் பிறப்பில்லை. வேண்டுதல் வேண்டாமை இல்லை. மண்ணாதி ஆசையில்லை. மனமான பேய் இல்லை. காலதேச வர்த்தமானம் நமக்கில்லை. நாம் அனைத்துக்கும் சாட்சியாக விளங்குகின்றோம். ஓம் தத் சத் ஓம்.§§

அவர் அடிக்கடி வழங்கிய இரண்டு “மருந்துகளில்" சிவ தொண்டு ஒன்றாக இருந்தது. இன்னொன்று சிவன் மீது தியானம் செய்யும், சிவ தியானமாக இருந்தது. “தவம்" என்ற பெயரில் பின்வரும் சிறிய உபதேசத்தில், யோக சுவாமி அதன் முக்கியத்துவத்தை விளக்குகிறார். §§

தவத்திலே மேம்பட்டவர்களைக்கூட இந்திரியங்கள் வரம்பு கடந்து இழுத்துச் செல்கின்றன. ஆதலால் அவற்றை வெல்வதற்குச் சிவதியானஞ் செய்க. அதனால் மாத்திரந்தான் புலன்களை தன் வசப்படுத்தத்தக்கது. ஆகவே இடைவிடாமற் தியானஞ் செய். §§

மனிதன் விடயங்களைக் கருதும் போதெல்லாம் பற்றுண்டாகிறது. பற்றுதலால் விருப்பம் உண்டாகிறது. விருப்பத்தாற் சினம் பிறக்கிறது. சினத்தால் மயக்கம். அம்மயக்கத்தால் தவறுதல் உண்டாகும். ஆதலால் உன்னைச் சிவத்தியானத்தால் காத்துக்கொள். §§

நாங்கள் எங்கள் சிறுமைக் குணத்தினால் இயல்பழிந்து தரும வழியினின்று தவறுகிறோம். தவறுதல் நீங்கித் திடமுண்டாகச் சிவத்தியானமே சிறந்த கருவியாகும். இந்த உலகத்தில் மிகுந்த செல்வமிருப்பினும், வானொரை ஏவல் கொள்ளக் கூடிய வல்லமையிருப்பினும் நாங்கள் புலன்களை அடக்கி யாளுதல் முடியாது. ஆதலால் திருவருளை முன்னிட்டு மனத்தைப் புலன்வழிச் செல்லாமல் அடக்கியாள். §§

இது தான் தவமென்று பெரியோர் சொல்வர், அதைவிடுத்து இடம்பமான வேள்வி முதலியவை செய்வதால் திடமுண்டாக மாட்டாது. §§

யோக சுவாமி ஒரு ஒழுங்குமுறையுடன் வகுப்புகள், உரைகள் அல்லது கருத்தரங்குகளை நடத்தியது இல்லை, ஆனால் அவர் தினமும் தனிச்சையுடன் காலையில் தனது குடிசையில், மாலையில் பஜார் அல்லது தெருக்களில், அல்லது அவர் எதிர்பாராமல் வருகை தரும் ஒரு அன்பரின் வீட்டில் கற்றுத் தருவார். அவர் சொன்ன சொற்கள் வழக்கமாக ஒருவரின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் பற்றியதாக இருந்தாலும், அங்கிருந்த எல்லோரும் அதனால் பயன் அடைந்தனர். §§

பலர் உலக வாழ்க்கையை துறந்து, வனத்தில் சென்று தியானம் செய்யும் விருப்பத்துடன் யோக சுவாமியிடம் வருவார்கள். சுவாமி அவர்களில் ஒன்று அல்லது இரண்டு அன்பர்களுக்கு மட்டும் ஆசிகளை வழங்கி, மற்றவர்களிடம் உலகில் அவர்களது ஸ்வதர்மத்தை நிறைவேற்ற ஆணையிட்டு, அவர்களுக்கு நன்றாக தெரிந்ததை பற்றின்றி செய்ய உத்தரவிடுவார். ஒருவர் தனது நடவடிக்கைகளை புனிதமானதாகவும் லௌகீக சார்ந்ததாகவும் பிரித்து பார்ப்பது தவறு என்று புரிந்துக்கொண்டு, வாழ்க்கை முழுவதையும் ஆன்மீகமாக கருதுவதே அவரது அணுகுமுறையாக இருந்தது. அவர் இந்த தகவலை, ஆன்மீக வாழ்க்கையில் அதிகமாக ஈடுபடவேண்டும் என்று தங்கள் வேலைகளை துறக்கும் நோக்கத்துடன் தன்னை நாடிவரும் பல ஆன்மாக்களிடம் உறுதியாக தெரிவிப்பார். §§

அவரிடம் ஒரு முறை ஒரு இளைஞன் உலக வாழ்க்கையை துறந்து, ஆத்ம ஞானம் பெறும் முயற்சிக்கு அனுமதி கோரும் நோக்கத்துடன் வந்தான். யோக சுவாமி எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்தார். இந்த உலகில் தான் அதை மட்டுமே அடைய விரும்புவதாகவும், இந்த பணியை தொடங்கும் முன்பாக தனது குருவிடம் ஆசியை பெற விரும்பி வந்ததாக, அவன் தொடர்ந்து குருவிடம் மன்றாடினான். யோக சுவாமி அமைதியாக அமர்ந்து இருந்தார். அவன் சற்குருவின் அருள் இல்லாமல் தன்னால் வாழமுடியாது என்று தொடர்ந்து கெஞ்சிக்கொண்டு, தீவிரமாக மன்றாடிக்கொண்டு இருந்தான். சுவாமி தனக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்றால் அவன் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருந்தான். அவன் நீண்டநேரம் மன்றாடிக்கொண்டும் கெஞ்சிக்கொண்டும் இருந்தான். அந்த அறையில் சுவாமி தான் மட்டுமே தனியாக இருந்ததைப் போல, பதில் ஏதும் அளிக்காமல் இருந்தார். இறுதியாக அந்த இளைஞன் கிளம்பினான். §§

அந்த இளைஞனின் மனைவி இன்னொருவருடன் சென்று விட்டதால், காட்டில் சென்று சென்று தனிமையில் வாழ்ந்தால் அவமானத்தில் இருந்து தப்பிக்கலாம் என்ற அவன் எண்ணத்தில் இருந்ததாகவும், யோக சுவாமி மற்ற சீடர்களிடம் விளக்கம் அளித்தார். “ அவன் இயல்பாக வளர்ச்சி பெற்று இருந்தால், ஆசிகளை வழங்குவதைத் தவிர எனக்கு வேறெந்த வழியும் இருந்திருக்காது.” §§

அன்பர்கள் மிகவும் தீவிரமான விரதங்களை மேற்கொண்டு தங்கள் உடலை வருத்திக்கொண்டு இருந்தால், சுவாமி அந்த விரதத்தை நிறுத்துமாறு வலியுறுத்துவார். “உடல் கோயிலை போன்றது, மனம் கருவறை போன்றது. நீங்கள் அவற்றை சுத்தமாகவும் தெளிவாகவும் வைத்து இருக்கவேண்டும். உங்கள் வேலையை செய்ய அவை உங்களுக்கு தேவைப்படுகின்றன. அவற்றை அழிக்கவோ துன்புறுத்தவோ வேண்டாம்.” அவர் தனது காலடியில் அமர்ந்து இருந்த ஒரு சீடனிடம் திரும்பி, இவ்வாறு கூறினார்:§§

நீ ஆன்மீக பாதையில் இருப்பதாலும், ஆன்மா இருப்பதை உணர தொடங்கி இருப்பதாலும், நீ இந்த அறையில் நுழைந்ததும், நான் குளிர்ச்சி மற்றும் புத்துணர்ச்சியை உணர்ந்தேன். சிலர் வந்ததும் நான் வெப்பத்தை உணர்கிறேன், மற்றும் அறையில் காற்றோட்டம் இல்லாத உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ஏனென்றால் அவர்கள் இங்கே வஞ்சனை செய்யும் எண்ணத்துடன் வந்திருந்து, என்னை ஏதாவது ஒரு வகையில் ஏமாற்ற முயற்சி செய்கிறார்கள். நீ ஆன்மீக வேட்கையுடன் எந்த வித சுயநலமும் இல்லாமல் வந்திருக்கிறாய். நீ இங்கே அமைதியாக அமர்வதற்காக வந்து இருக்கிறாய். என்னிடம் இருக்கும் அமைதியை உன்னால் உணரமுடிகிறது. அதற்காகத்தான் நீ இங்கே வந்து இருக்கிறாய். ஆன்மீக பாதையில் இருப்பவர், அவரைப் போன்று இன்னொருவருடன் அமர்வது இருவருக்கும் நல்லது. §§

இறைவனுக்கு முன்பாக இருக்கும் உணர்வை, நான் பெரும்பாலான சமயங்களில் உணர்ந்து இருக்கிறேன். நீ இறைவனுக்கு முன்பாக இருக்கும் உணர்வை, ஒரு குழந்தையை போல கருதி, அதற்கு தேவையானது அனைத்தையும் வழங்கி பேணி வளர்க்க வேண்டும். நீ அதை ஒரு குழந்தையை போல கருதினால், அதன் ஒவ்வொரு ஆசையையும் நிறைவேற்றி, அதன் விருப்பப்படி செய்வதைத் தவிர உன்னிடம் வேறு வழி ஏதும் இருக்காது. தாய் தன் குழந்தைக்கு ஒவ்வொரு நொடியும் என்ன தேவை என்பதை அறிந்து இருப்பதை போல, அது அழும் காரணத்தை அறிந்து அதற்கு தேவையானதை தருவதைப் போல, இறைவனின் இருப்பும் தன்னைப்பற்றி பக்தனுக்கு உணர்த்துகிறது. உனக்குள் வளர்ந்துக்கொண்டு இருக்கும் இறைவனின் விழிப்புணர்வை, நீ கவனமாக பேணி வளர்க்க வேண்டும். நீ அதை தொடர்ந்து செய்து வந்தால், உனக்கும் தெரியாமல், நீ மறைந்துவிடுவாய், இறுதியில் எஞ்சுவது பரமாத்துமா மட்டுமே. §§

யோக சுவாமி அடிக்கடி சிவபெருமானை பற்றி, திருவடிகளை வணங்குவதை பற்றி, ஆன்மீக ஒழுக்கம் மற்றும் அன்பைப் பற்றி பேசிக்கொண்டு இருப்பார். இதனை “ ஈசனின் திருவடியை வழிபடுங்கள்,” என்ற தலைப்புடைய பாடலில் காணலாம். §§

நீங்கள் ஈசனின் திருவடிகளை தொடர்ந்து வழிபட்டு வந்தால், உங்களுக்கு அமைதி கிடைக்கும். அதனால் நீங்கள் காண்பது அனைத்தும் நிலையற்றது என்பதை உணர்ந்துக்கொள்வீர்கள். அது உடலை அடக்கும் வழியை காண்பிக்கும். நீங்கள் ஈசனின் திருவடிகளை தொடர்ந்து வழிபட்டு வந்தால், உங்களுக்கு அமைதி கிடைக்கும். §§

அது புலன்வழி பாதையில் செல்லும் மனதின் மீது ஆட்சி செய்ய, உங்களுக்கு துணையாக இருக்கும். அது மீண்டும் மீண்டும் ஐந்து எழுத்துகளை உங்கள் இதயத்தில் ஒலிக்கச் செய்யும். நீங்கள் ஈசனின் திருவடிகளை தொடர்ந்து வழிபட்டு வந்தால், உங்களுக்கு அமைதி கிடைக்கும்.§§

அது உறுதியாகவும் மெதுவாகவும் சினத்தை அழித்து விடும். அது தவறுகள் அனைத்தையும், தனக்கு கிடைத்த வரங்களாக ஏற்றுக்கொள்ளும். நீங்கள் ஈசனின் திருவடிகளை தொடர்ந்து வழிபட்டு வந்தால், உங்களுக்கு அமைதி கிடைக்கும்.§§

அது மூன்று ஆசைகளையும் நீக்கி விரட்டி விடும். அது என்றுமே வராமலும் செல்லாமலும் இருக்கும் திருவடியை வெளிப்படுத்துகிறது. நீங்கள் ஈசனின் திருவடிகளை தொடர்ந்து வழிபட்டு வந்தால், உங்களுக்கு அமைதி கிடைக்கும்.§§

அது உங்களை நிரந்தரமாக சும்மா இருக்கும் நிலையில் நிலைக்க செய்கிறது. அது ஏழைகள் மீது பரிவை உணர, உங்களுக்கு உதவி செய்கிறது. நீங்கள் ஈசனின் திருவடிகளை தொடர்ந்து வழிபட்டு வந்தால், உங்களுக்கு அமைதி கிடைக்கும்.§§

அது உங்களை வெளிப்படையான வெறுமையில் அமர்த்தி, வேதனைகள் அனைத்தையும் நீக்குகிறது. அது வேதாந்தம் மற்றும் சித்தாந்தத்தை ஒன்றாக பார்க்கிறது. நீங்கள் ஈசனின் திருவடிகளை தொடர்ந்து வழிபட்டு வந்தால், உங்களுக்கு அமைதி கிடைக்கும்.§§

அது கட்டுப்படுத்த முடியாத நிலையற்ற மனதை கட்டுப்படுத்துகிறது. அது இரவு அல்லது பகல் இல்லாத ஒரு இடத்தில் உங்களுக்கு பார்வையை வழங்கும். நீங்கள் ஈசனின் திருவடிகளை தொடர்ந்து வழிபட்டு வந்தால், உங்களுக்கு அமைதி கிடைக்கும்.§§

யோகநாதன் எழுதிய இந்த பாடல் நேர்மையான வழியை காண்பிக்கும். அது உங்கள் வாழ்நாள் முழுவதும் தேனமுதத்தை வழங்கிக் கொண்டு இருக்கும். அது “அஹம் பிரம்மாஸ்மி” என்ற கிரிடத்தையும் வழங்கும் என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் ஈசனின் திருவடிகளை தொடர்ந்து வழிபட்டு வந்தால், உங்களுக்கு அமைதி கிடைக்கும்.§§

யோக சுவாமிக்கு ஒரு நெருக்கமான சீடனாக இருந்த மார்கண்டுசுவாமி இருந்தார். அவர்கள் இருவரும் முதல் முறையாக 1931 ஆம் ஆண்டு சந்தித்தனர். வாழ்நாள் பிரம்மச்சாரியாக இருந்த மார்கண்டுசுவாமி, தனது தொழில் வாழ்க்கையின் மத்தியில் துறவறம் மேற்கொள்ள விரும்பினார். ஆனால் அவரது நில அளவாய்வாளர் வேலையை தொடருமாறு யோக சுவாமி கூறினார். இறுதியாக மார்கண்டுசுவாமி 60 வயதை எட்டிய போது, கைதடி கிராமத்தில் ஒரு சிறிய தென்னந்தோப்புக்கு மத்தியில், கற்காரை தரை மற்றும் சுவர்கள் மற்றும் பனை ஓலைகளில் பின்னிய கூரையுடன் ஒரு அறை மற்றும் ஒரு திறந்த திண்ணையுடன் ஒரு குடிரை (குடிசையை) யோக சுவாமி ஏற்பாடு செய்து, மார்கண்டுசுவாமியை வியக்க வைத்தார். சுவாமி தனது சீடனை அங்கே வசிக்க செய்து, பல ஆண்டுகள் கவனித்தும் வந்தார். §§

தனது குரு சொன்ன வார்த்தைகளை மட்டுமே சொல்வது, அந்த சீடனின் முக்கியமான சாதனாவாக இருந்தது. அது மிகவும் கடினமான சாதனாவாக கருதப்பட்டது. அதனால் அவருடன் ஒரு மணி நேரம் இருந்தவர்கள், “யோக சுவாமி இவ்வாறு கூறினார்…” “எங்களுக்கு யோக சுவாமி கற்றுத்தந்த…” போன்ற வாக்கியங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். அவருக்கு ஆழமான ஞானம் வழங்கப்பட்டு இருந்தாலும், அவர் தனது சொந்த ஞானத்தை வெளிப்படுத்தாமல் இருக்கும் ஒழுக்கத்தின் மீது மிகவும் விசுவாசமாக இருந்தார். அவர் தனது திண்ணையில் நின்றுக்கொண்டு அல்லது விதானம் மற்றும் நான்கு கால்களுடன் சிறிது உயர்வாக இருந்த வேப்பமர பலகையில் அமர்ந்துகொண்டு, யோக சுவாமி தனக்கு வழங்கிய பின்வரும் சாதனாவைப் பற்றி உற்சாகமாக விளக்குவார். அது அன்பர்கள் மத்தியில் மனக்கட்டுப்பாட்டை ஊக்குவிக்க, அவர் பயன்படுத்திய மறைமுக வழியாக இருந்தது.: §§

ஒரு இடத்தில் உட்கார். அசையாதே. உன் மனம் எங்கே செல்கிறது என்று கவனி; அந்த நபரை கவனி. அவர் முதலில் கண்டிக்கு, பின்னர் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் செல்வார். அவர் எல்லா இடத்திற்கும் ஒரு நொடிப்பொழுதில் சென்று வந்து விடுவார். அவர் செல்லும் ஒவ்வொரு இடத்தையும் கவனத்தில் வைத்துக்கொள். அவர் நூறு இடங்களுக்கு சென்று, அதில் உனக்கு தொண்ணூற்று ஒன்பது மட்டுமே நினைவில் இருந்தால், நீ தோற்று விட்டாய். நீ இந்த சாதனாவில் முன்னேறும் போது, உனக்கு உட்புறத்தில் இருந்து வரும் தகவல்களை கிரகித்துக் கொள்வாய். உனக்கு உட்புறத்தில் இருந்து தகவல்கள் வரும் போது, அறியவேண்டிய நபர்களுக்கு நீ அவற்றை வழங்க வேண்டும். அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். §§

ஒரு மகாசிவராத்திரி மாலை பொழுதில், மார்கண்டுசுவாமியின் குடிசைக்கு யோக சுவாமி திடீரென்று வருகை தந்து, வயதான சாதுவிடம், “நாம் தியானம் மட்டுமே செய்து, மகாசிவராத்திரி விரதத்தை அனுசரிப்போம்.” அன்று இரவு அவர்கள் பூஜை எதையும் செய்யாமல் நற்சிந்தனை, ஆகமங்கள் மற்றும் புராணங்களை பாராயணம் செய்யாமல் முழுமையான அமைதியில் கழித்தனர். இதைப்பற்றி தி. சிவயோகபதி வழங்கும் பகிர்வு:§§

மார்கண்டுசுவாமி மிகவும் குறைவாக பேசி, சமூக வாழ்க்கையை தவிர்த்தார். அவர் நற்சிந்தனை பாடல்களின் தொகுப்பு முழுவதையும் மனப்பாடமாக அறிந்து இருந்தார். மேலும் இந்து சமயம் மற்றும் ஆன்மீகத்தை பற்றி பேசும் போது, எப்போதும் நற்சிந்தனையை மேற்கோள்காட்டி பேசுவார். “உங்கள் எல்லோருக்கும் மார்கண்டுசுவாமி நான் நியமித்த திசைகாட்டியாக விளங்கி, எல்லோருக்கும் ஆன்மீக பாதைகளை காட்டுவார்,” என்று யோக சுவாமி தனது சீடர்களிடம் கூறியதாகவும், அது மார்கண்டுசுவாமியின் நில அளவாய்வாளர் பணியை மறைமுகமாக குறிப்பிடுவதாகவும் இருந்தது. மே 29, 1984 அன்று மார்கண்டுசுவாமி மகாசமாதி அடைந்தார். §§

சந்தையில் சுத்தமான உணவுப்பொருட்களை வாங்குவது, அன்பர்களின் வீடுகளுக்கு செல்வது, அவர்கள் வாழ்க்கையில் கலந்து கொண்டு தனது ஆசிகளின் மூலம் அவர்களை மேம்படுத்துவது என்று யோக சுவாமி கருனையுள்ளம் படைத்த முனிவராக இருந்தார். 1950 மற்றும் 60 களில் தான் பெற்ற அனுபவத்தை பற்றி தி. சிவயோகபதி இங்கே விளக்குகிறார்: §§

சுவாமி சங்கரத்தையில் இருந்த “தில்லை வாசா" என்று எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து, ஒரு நாள் முழுவதும் தங்கி விட்டு செல்வார். அவர் சந்தையில் காய்கறிகளை வாங்கிவிட்டு, எங்கள் வீட்டிற்கு காலை 8 மணி அளவில் வருவார். 8:30 மணி அளவில், எங்கள் ரோவர் வாகனத்தில் சுவாமி எனதருமை தந்தை மற்றும் நான் திருவடி நிலை என்ற பெயரில் அருகில் இருந்த கடற்கரைக்கு செல்வோம். எல்லோரும் கடலில் குளித்துவிட்டு வீடு திரும்புவோம். வீடு திரும்பியதும் நாங்கள் மீண்டும் கிணற்று தண்ணீரில் குளிப்போம். அதன் பின்னர் நாங்கள் எங்கள் பூஜை அறையில் கூடுவோம். சுவாமி அறையின் மத்தியில் அமர்ந்து இருக்க, சுவாமி வழங்கிய அறிவுறுத்தலின் படி, எல்லோரும் சிவபுராணங்களில் இருந்து பாடல்களை பாடிக்கொண்டு பிரார்த்தனை செய்வோம். இதற்கிடையில், சுவாமி காலையில் கொண்டு வந்திருந்த பச்சை காய்கறிகளை பயன்படுத்தி, எனது தாயார் தையல்நாயகி, எங்களுக்காக மதிய உணவை தயார் செய்துக்கொண்டு இருப்பார். உணவு சாப்பிடுவதற்கு முன்பாக, சுவாமி உணவை ஆசிர்வதிக்கும் (போஜன) பாடலை பாடுவார், அதன் பிறகு நாங்கள் எல்லோரும் அவருடன் அமர்ந்து உணவு சாப்பிடுவோம். உணவு அருந்திய பிறகு, “தில்லைநாயகி தாயே! நீ இந்த யாசகனுக்கு வயிறார ருசியான உணவை வழங்கி இருக்கிறாய். வாழ்க வளமுடன்!” என்று சுவாமி என் தாயாரை பாராட்டி ஆசிகளையும் வழங்குவார். §§

பக்திமான்கள் தங்கள் இடத்திற்கு சுவாமி வரவேண்டும் என்பதற்காக, தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டனர். கே.கே.எஸ். சாலையின் தொடக்கத்தில் இருந்து சுமார் 200 கஜ தூரத்தில் பிரபல வி.எஸ்.எஸ்.கே. சைவ உணவகம் இருந்தது. அந்த கடையில் காபி குடிக்க அல்லது மதிய உணவு சாப்பிட வந்த சுவாமி மீது, அதன் முதலாளி திரு. வி.எஸ்.எஸ். குமாரசாமிக்கு ஒரு விசேஷ மரியாதை இருந்தது. கே.கே.எஸ். சாலையின் வடக்கில் சுப்ரமணியம் மருத்துவ கடையைப் (வி.எஸ்.எஸ்.கே. கஃபேக்கு அடுத்த கடை) போன்ற மூலிகை மருந்துப்பொருட்கள் நிரம்பிய கடைகள் இருந்தன. அந்த கடைகளில் சுவாமி சிறிது நேரம் தங்கி அன்பாக சில வார்த்தைகளை பேசிவிட்டு செல்வார். §§

வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன்-தையல்நாயகி சிவன்கோயிலுக்கு செல்லும் முன்பாக, தெருவின் அதே வரிசையில், தாமோதர விலாஸ் என்ற பிரபல சைவ உணவகம் இருந்தது. அதன் நிறுவுனராக தாமோதர ஐயர் இருந்தார். அவரது உணவகத்தில் யோக சுவாமி மதிய உணவு சாப்பிடுவதை ஊக்குவித்தார். அவர் தனது அணுகுமுறையில் சாமர்த்தியாக இருந்தார். அவர் உணவகத்திற்கு அருகில் இருந்த ஒரு காலியான கடை, யோக சுவாமியின் சீடர் திரு. எஸ். அர். கந்தையாவிற்கு சொந்தமாக இருந்தது. யோக சுவாமி தினமும் மேற்கொண்ட நடைப்பயணங்களின் போது தங்கி ஓய்வெடுக்க, மற்றும் குறிப்பாக அந்த உணவகத்தில் இலவச மதியஉணவை உண்ட பிறகு இளைப்பாறுவதற்காக, அந்த இடம் எப்போதும் தயார் நிலையில் ஒரு எளிமையான படுக்கையுடன் இருந்தது. §§

பூமிக்கு அருகாமையில் §

சிவ தொண்டன் நிலையத்தின் இரண்டாவது கிளையை, மட்டக்களப்பு மாவட்ட சித்தாண்டிக்கு அருகில் செங்கலடியில் நிறுவவேண்டும் என்று யோக சுவாமி 1960 ஆம் ஆண்டு, தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். 1910 ஆம் ஆண்டு, அவர் மேற்கொண்ட கதிர்காம யாத்திரையின் போது, அந்த ஊரில் திரு. வேலுப்பிள்ளையின் வீட்டில் அவர் இரண்டு-மூன்று நாட்கள் தங்கி இருந்ததால், அந்த ஊர் அவருக்கு விசேட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. சுவாமி மட்டக்களப்பில் இருந்த போது, சித்தாண்டி முருகன் கோயிலுக்கு செல்வதை வழக்காக கொண்டிருந்தார். அவரது விருப்பத்திற்கு ஏற்ப, அந்த இடத்தில் 1965 ஆம் ஆண்டில் அந்த சமூகம் ஒரு நிலையத்தை அமைத்தது. அது தொடங்கப்பட்ட நாளில், அவரது திருவடிகளை அவரது சீடர்கள் கே.கே.எஸ். சாலையில் இருந்த நிலையத்தில் இருந்து 300 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்து சென்றார்கள். நிலையத்தில் நடந்த நடவடிக்கைகள் பற்றிய ஒரு குறுகிய பார்வையை தி. சிவயோகபதி வழங்குகிறார். §§

செங்கலடியில் ஒரு நிலையத்தை கட்டவேண்டும் என்று சுவாமி முடிவு செய்த போது, அதற்கு சுவாமியின் சில சீடர்கள் நிலத்தை தானமாக வழங்கினார்கள். நிலையத்தை கட்டி முடித்த பிறகு, நெல் சாகுபடி செய்வதற்கு நெல்வயல்களும் தானமாக வழங்கப்பட்டன. சந்தசுவாமி நிலையத்தை நிர்வகித்துக்கொண்டு, நெல்வயல்களிலும் வேலை செய்தார். அவர் நெல்வயல்களை உழுவதற்கு, நான்கு சக்கர டிராக்டரை பயன்படுத்துவார். 1967 ஆம் ஆண்டில், என் தந்தை அ. தில்லையபலத்துடன் அந்த நிலையத்தை சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்த போது, சந்தசுவாமி தனது தினசரி சிவதொண்டில் தீவிரமாக இருந்ததை கவனித்தேன். 1910 ஆம் ஆண்டு, காட்டில் ஒதுக்குபுறமாக இருந்த கதிர்காம சந்நிதிக்கு தான் பயணம் மேற்கொண்ட போது சுவாமி பல வேதனைகளை சந்தித்து இருந்ததால், அங்கே பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் மீது அவர் ஆழ்ந்த அனுதாபத்துடன் இருந்தார். அதனால் கதிர்காமம் கோயிலுக்கு யாத்திரை செல்பவர்களுக்கு, நிலையம் உணவு மற்றும் தங்கும் இடத்தை வழங்கவேண்டும் என்பது யோக சுவாமியின் நோக்கமாக இருந்தது. யோக சுவாமியின் கனவை நனவாக்க ஸ்ரீமத் சந்தசுவாமி (சோல்பரி சுவாமி) கடினமாக முயற்சி செய்தார், ஆனால் மக்களிடம் இருந்து போதிய வரவேற்பு கிடைக்காததால் அவரது முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அந்த நிலையத்தில் 1965 முதல் 1977 வரை, சந்தசுவாமி சேவை செய்த போது, நெல்பயிர் சாகுபடி மற்றும் நடந்தது. §§

யாழ்ப்பாண மையத்தைப் போல, செங்கலடியில் இருந்த நிலையமும் கடினமான விதிமுறைகளுடன் தியான மண்டபம் மற்றும் பிரார்த்தனை கூடத்துடன் அமைக்கப்பட்டது. ஆனால் மட்டக்களப்பு மையம் நன்றாக சேவை செய்து, ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிக்க பயிர் சாகுபடி செய்யவேண்டும் என்று யோக சுவாமி வலியுறுத்தி இருந்தார். இந்த இடத்தின் மீது யோக சுவாமிக்கு இருந்த விசேஷ கனவைப் பற்றி இந்துமதி அம்மா விளக்குகிறார். §§

யாழ்ப்பாண சிவ தொண்டன் நிலையம் தியானம் செய்வதற்கு உகந்ததாக இருந்ததை போல, செங்கலடி சிவ தொண்டன் நிலையம் சேவை செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. யோக சுவாமியின் விருப்பப்படி தயார் செய்யப்பட்ட கட்டிட வரைபடைத்தில், மேற்கே கோயிலைப் போன்ற இன்னொரு கட்டிடம் இருந்தது. அது மனத்துறவுடன் வாழும் பிரம்மச்சாரிகள் மற்றும் சந்நியாசிகள் தங்குவதற்காக கட்டப்படவிருந்தது. சமய அறிவு மற்றும் மற்ற கலைகளில் தேர்ச்சி பெற்று இருந்து, நல்ல நடத்தை மற்றும் நல்ல அனுபவத்துடன் இருந்த சந்நியாசிகள், இங்கே தங்கியிருந்து அவர்களது அனுபவத்தை மற்றவர்களுக்கு கற்று தர திட்டமிடப்பட்டிருந்தது.§§

மக்களிடம் இருந்து பெறப்பட்ட செழிப்பான நிலங்களில், சிப்பந்திகள் தங்கள் கடினமான உழைப்பினால் உணவு சாகுபடி செய்து, மற்றவர்களுக்கு பயனுள்ள வாழ்க்கையை வாழ்வதே நோக்கமாக இருந்தது. இந்த சிவ தொண்டு அவர்களது ஆணவத்தை அழிக்க உதவி செய்து, “நான்" என்பதை மறக்க செய்து “நாங்கள்" என்பதில் இணக்கத்துடன் வாழ உதவி செய்தது. §§

இந்த சூழ்நிலையில் வளர்பவர்கள் நல்ல சமய ஒழுக்கம் மற்றும் மன அமைதியின் வலிமையை வெளிப்படுத்தும் தோற்றத்துடன் இருப்பார்கள் என்று சுவாமி கூறினார். அவர்கள் மண்டபத்தில், மரத்தடியில் மற்றும் வயல்களுக்கு மத்தியில் அமர்ந்து தியானம் செய்து, தாங்கள் அமரும் போதும், நடக்கும் போதும் வேலை செய்யும் போதும் தங்களிடம் இருக்கும் அமைதியின் மூலம் உலகை வழிகாட்ட வேண்டும் என்று அவர் கனவாக இருந்தது. ஆத்ம ஞான வேட்கையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள தயாராக இருப்பவர்களை பொறுத்து, யோக சுவாமிக்கு தோன்றிய இந்த சிந்தனையின் நிறைவேற்றம் அடங்கி இருக்கிறது. பிரச்சாரத்தில் ஈடுபடுவது, மக்களை வற்புறுத்துவது அல்லது சொற்பொழிவுகள் நிகழ்த்துவது, சிவ தொண்டனின் நோக்கமல்ல என்று யோக சுவாமி தெரிவித்தார். §§