குருமார்களின் சரித்திரங்கள்

Page 31: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/31_yoga04_03.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

பதினாறாவது அத்தியாயம் §

அற்புத செயல்கள் §

சுவாமியின் மகாசமாதிக்கு பிறகு, அவர் மக்களை வேதனைகள் மற்றும் நோய்களில் இருந்து எவ்வாறு குணப்படுத்தினார் என்பதைப் பற்றி பல கருத்துக்கள் நிலவுகின்றன. அவர் வாழ்ந்துகொண்டு இருக்கும் போது, இதைப் பற்றி பேசுவதற்கு யாருக்கும் தைரியம் இருந்ததில்லை. சுவாமி தன் வேலையை அமைதியாக எந்த வித ஆர்பாட்டமும் இல்லாமல் செய்தார். ஒரு அன்பருக்கு உடல் நலம் சரியில்லை என்றால், அவர் அவரை வழக்கமாக மருத்துவரிடம் மாத்திரைகளை வாங்க அனுப்பி வைப்பார். அவர் பெரும்பாலும், நோயாளி வரும் அதே நேரத்தில் தானும் மருத்துவரின் அலுவலுக்கு வருவார். அவர் வழக்கமாக மருத்துவரிடம் எந்த மருந்தை வழங்கவேண்டும் என்பதை பரிந்துரைத்து, அதை நோயாளி எடுத்துக்கொண்டதையும் உறுதி செய்து கொள்வார். அவர் சிலசமங்களில் அன்பரிடம் இருந்து மருந்தை தனது குடிசைக்கு எடுத்து சென்று, தனது தலையணைக்கு அடியில் வைத்துக்கொள்வார். அடுத்த நாள் காலையில் அந்த மருந்தை அந்த அன்பரிடம் தரும் போது, “இது தான், உனக்கு சரியாக இருக்கும்," என்று கூறுவார். 1936 ஆம் ஆண்டு நடந்த அத்தகைய சம்பவம் பற்றி ச. அம்பிகைபாகன் குறிப்பிடுகிறார். §§

கிங் ஜார்ஜ் VI முடிசூட்டு விழா மற்றும் சர் பட்டம் பெறுவதற்காக, இலங்கையின் ஆளும்கட்சி தலைவராக இருந்த திரு. வி. துரைசுவாமிக்கு அழைப்பு வந்தது. லண்டன் செல்ல பயண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த போது, அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது மற்றும் மருத்துவர்கள் பயணம் மேற்கொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்தினர். §§

அந்த சமயத்தில், சுவாமிகள் பேராதனையில் சோமசுந்தரப் புலவரின் தம்பி வேலுப்பிள்ளையுடன் தங்கி இருந்தார். சர் துரைசுவாமிக்கு வந்திருந்த வியாதியை பற்றி, சுவாமிகள் பேராதனையில் இருந்தபடியே உணர்ந்துகொண்டு, ஒரு மருந்துகளின் பட்டியலை வேலுப்பிள்ளையிடம் கொடுத்தார். அந்த பட்டியலை திரு. வேலுப்பிள்ளை கடைக்கு எடுத்து சென்றபோது, அந்த மருத்துகள் அதிக நச்சுத்தன்மை வாய்ந்தவை என்று கடைக்காரர் எச்சரித்தார். அவர் அந்த விஷயத்தை சுவாமிகளிடம் தெரிவித்தார், ஆனால் அவர் அதைப்பற்றி கவலை வேண்டாம் என்று கூறி, அந்த மருந்துகளை கொதிக்க வைக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த மருந்துகளை கொண்டு திரு. வேலுப்பிள்ளை ஒரு கஷாயம் செய்து, சுவாமிகளுக்கு வழங்கினார். §§

அந்த கஷாயத்தை சுவாமிகள் குடித்தார் மற்றும் சிறிது நேரம் கழித்து கடுமையாக வாந்தி எடுக்கத் தொடங்கி, தீவிர வயிற்றுப்போக்காலும் பாதிக்கப்பட்டார். இவற்றை கண்ட திரு. வேலுப்பிள்ளை அழத்தொடங்கிவிட்டார். சிறிது நேரம் கழித்து, சுவாமிகள் எலுமிச்சை பழமும் உப்புச் சோடாவும் கொண்டு வரச்சொல்லி, அதை குடித்தார். சில மணி நேரங்கள் கழித்து, அவர் குணமாகிவிட்டார். §§

image§

வாழ்க்கையில் வேதனைகள் நிறைந்து இருந்த போதும் அல்லது மரணம் நெருங்குவதை உணர்ந்த போதும், அன்பர்கள் யோக சுவாமியிடம் செல்வது வழக்கமாக இருந்தது. சிவபெருமான் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருப்பதாகவும், அச்சபடுவதற்கு ஒன்றும் இல்லை என்றும் அவர் எல்லோருக்கும் நம்பிக்கை அளித்தார். ஒரு ஆன்மா எப்போது கிளம்பவிருக்கிறது என்பதை எவ்வாரேனும் அறிந்து இருந்த சுவாமி, அந்த வீட்டிற்கு சென்று, நெற்றியில் விபூதியை பூசி, அது செல்லவிருந்த பயணத்திற்கு தனது ஆசிகளை வழங்குவார்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அடுத்த நாள் காலையில் சுவாமிகள், “துரைசுவாமி இனி லண்டனுக்கு போகலாம். அவருக்கு வைத்தியம் செய்தாகிவிட்டது. அவர் சென்றால் அவருக்கும் தமிழ் சமூகத்திற்கும் நல்லது, “ என்று அறிவித்தார். துரைசுவாமி குணமடைந்து, லண்டன் சென்று அரசரிடம் இருந்து பட்டத்தையும் பெற்றார்.§§

இந்த குறிப்பிடத்தக்க செயலுக்கு பிறகு, சுவாமிகள் ஒன்றும் நடக்காததைப் போல இருந்தார். இந்த விஷயத்தை திரு. வேலுப்பிள்ளை இரகசியமாக வைத்து இருந்து, சுவாமிகள் மகாசமாதி அடைந்த பின்னர் என்னிடம் இதைப்பற்றி கூறினார். விளம்பர உலகில் வாழ்ந்துகொண்டு ஒவ்வொரு சிறிய செயலையும் பெரிதுபடுத்துபவர்களுக்கும் நமது சுவாமிகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை பாருங்கள்.§§

சுவாமி திரு. வேலுப்பிள்ளையையும் நோயில் இருந்து குணப்படுத்தி இருந்தார். இந்த சம்பவத்தை ச. அம்பிகைபாகன் தனது சுயசரிதையில் பதிவு செய்து இருந்தார். §§

ஒரு நாள் மதியம் சுமார் 3 மணி அளவில், எனக்கு தலைசுற்றி மயக்கமடைந்து விட்டேன். என்னை குணப்படுத்த துரையின் மகன் அனுப்பிய இரண்டு மருத்துவர்கள், சில மருந்துகளை தந்தனர். எனக்கு நினைவு திரும்பினாலும், என்னால் எழுந்திருக்க முடியவில்லை, மற்றும் எனக்கு என்ன நடக்கிறது என்று தெளிவாக தெரியவில்லை. காலை 8 மணிக்கு சுவாமிகள் எனது இருப்பிடத்திற்கு வந்து, “நான் உனக்காக மூன்று மருந்துகளை கொண்டு வந்துள்ளேன்,” என்றார். அவர் அருகில் வந்து, கருணை நிறைந்த தனது கைகளால் எனது தலையை தொட்டு, “சிவாயநம” என்று மெதுவாக உச்சரித்தார். மீண்டும் அடுத்த நாள் காலையில் வந்த சுவாமிகள், “நான் உனக்கு சிதம்பர தரிசனத்தை காண்பிக்கப்போகிறேன், பார்,” என்றார். அவர் தனது தலைமுடியை பறக்கவிட்டு, சுமார் ஐந்து நிமிடங்களுக்கு நடராஜரை போல நடனமாடினார். மூன்றாவது நாள், அவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த ஒரு மருந்தை, வெந்நீரில் கலந்து கொடுத்தார். நான் நான்காவது நாள் குணமடைந்து விட்டேன். நான் இந்த அற்புதத்தை பற்றி கம்பாலா மருத்துவமனையின் தலைவர் Dr. இராமநாதனிடம் கூறிய போது அவர், “அந்த அற்புதமான நடனத்திற்கு மிருத்யுஞ்ஜய [மரணத்தை வெற்றிகொள்ளும்] என்று பெயர். அது சிறந்த முறையில் குணப்படுத்தும் தன்மையையும் கொண்டுள்ளது.” §§

மேற்கத்திய நாடுகளில் இருப்பதை போல, கிழக்கு நாடுகளை சேர்ந்த தெய்வீக புருஷர்களும், தாங்கள் அன்பர்களை குணப்படுத்தியதாக அறிவிப்பார்கள். அத்தகைய அற்புத செயல்களின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களை பயன்படுத்தி, ஒரு மிகப்பெரிய ஆதரவாளர் குழுவை உருவாக்க, இது காலங்காலமாக பயன்பாட்டில் இருக்கும் ஒரு வழியாக இருந்தது. யோக சுவாமி அத்தகைய வெளிப்படையான, ஆடம்பரமான சக்திகளின் வெளிப்பாடுகளை அலட்சியம் செய்து, குணப்படுத்துவதற்கும் ஆறுதல் அளிப்பதற்கும், தனது சக்திகளை அமைதியாக தேவைப்படும் போது பயன்படுத்தினார். பின்வரும் கதையை தாத்தா சின்னையாவின் சொந்தங்கள் கூறினார்கள்.§§

யாழ்ப்பாணத்தில் இருந்து யோக சுவாமி கொழும்பிற்கு வந்து இருந்தார். இதைப் பற்றி கொழும்பில் இருந்த பல அன்பர்கள் தெரிந்துகொண்டு, அவரை தரிசிக்க சென்றவர்களில் தாத்தா சின்னையாவும் ஒருவர். அவரது குடும்பம் ஊருக்கு வெளியே வாழ்ந்ததால், அவர் ஒரு இரயிலில் கொழும்பு செல்ல வேண்டியிருந்தது. அவரது மகன்களில் ஒருவர் இரட்டை நுரையீரல் காய்ச்சலால் தீவிர அவதியில் இருந்தார். அந்த மகன் சார்பாக, தாத்தா சுவாமியை காண சென்றார். சுவாமிக்கு முன்பாக சுமார் முப்பது அன்பர்கள் அமர்ந்து இருந்தார்கள், மற்றும் சுவாமி ஒவ்வொருவராக சந்தித்து அனுப்பிய பிறகு, தாத்தா சின்னையா மட்டும் மீதம் இருந்தார். தாத்தா தனது மகனின் நோயை பற்றி சொல்ல, சுவாமி அவரிடம் ஒரு பெரிய திராட்சை கொத்தை தந்து, அவற்றை வீட்டிற்கு எடுத்து சென்று மகனுக்கு தருமாறு கூறினார். §§

அதிக நேரமாகி இருந்ததால், வீடு திரும்புவதற்கு தனக்கு இரயில் கிடைக்குமா என்ற சந்தேகத்துடன் தாத்தா அங்கிருந்து கிளம்பினார். ஆனால் அவர் இரயில் நிலையம் வந்த நேரம் பார்த்து, இரயிலும் நிலையத்தில் வந்து நின்றது. அவர் வீடு திரும்பிய போது, அவர் மகனுக்கு காய்ச்சல் தீவிரமாகி அதிக வேதனையில் இருந்தார். அவர் தன் மகனுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு திராட்சையாக கொடுக்க ஆரம்பித்தார். அவற்றில் மகன் பாதி திராட்சைகளை சாப்பிட்டு உறங்கிவிட்டார். அடுத்த நாள் மகனுக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது. தனது மகன் குணமடைந்ததற்கு யோக சுவாமியின் ஆசிகள் தான் காரணம் என்பதை தாத்தா அறிந்து இருந்தார். §§

ஒண்டாரியோவை சேர்ந்த எஸ். கந்தையா வழங்கும் பகிர்வு: §§

1949 ஆம் ஆண்டில், என் மாமனார் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் டெட்டனஸ் நோயால் தீவிர வேதனையில் இருந்த போது, சுவாமியின் குணப்படுத்தும் சக்தியை முதல் முறையாக அனுபவித்தேன். மருத்துவர்கள் அவர் உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கையை இழந்து இருந்தார்கள். சுவாமி அனந்தபுராவில் இருந்த என் மாமனாரின் குடும்ப வீட்டில் தொடர்ந்து பத்து நாட்கள் தங்கி, அமைதியாக தியானம் செய்ததால், என் மாமனார் சிறு வயதில் இருந்தே சுவாமியின் சீடனாக இருந்தார். §§

எதிர்பாராத விதமாக, சுவாமி மருத்துவ மேலதிகாரியுடன், மருத்துவமனை கூடத்திற்கு வந்து விட்டார். அவர் வந்தவுடன், என் மாமியார் அவர் கால்களில் விழுந்து அழ ஆரம்பித்துவிட்டார். சுவாமி மாமியாரை சமாதானப்படுத்தி, “நாளை நல்லூர் கோயிலுக்கு சென்று, காலை ஐந்து மணி பூஜையின் போது அர்ச்சனை செய்யுங்கள்,” என்றார். என் மாமனார் அது வரை உயிருடன் இருப்பது சந்தேகம் என்று மருத்துவர்கள் கூறினர். ஆனால் அவர் உயிருடன் இருந்தார், மற்றும் அர்ச்சனை நடத்தப்பட்டது, மற்றும் அவரது நெற்றியில் விபூதியை பூசியவுடன், பூட்டுத்தாடையுடன் மூடியிருந்த தாடை திறந்துக்கொண்டது மற்றும் மூன்று நாட்கள் பேசாமல் இருந்த அவர் உடனே பேச தொடங்கினார். பத்து நாட்களுக்கு பிறகு, அவர் முழுமையாக குணமடைந்த நிலையில் வீட்டிற்கு திரும்பினார். §§

சுவாமி பெரும்பாலும் ஒரே சமயத்தில் பல இடங்களில் தென்பட்டார். இவர் இந்த சக்தியை பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை, ஆனால் ஒரு இடத்தில் சுவாமியை பார்த்தவர்கள், வேறொரு இடத்தில் அதே சமயத்தில் பார்த்தவர்களுடன் கூடி ஆலோசித்தார்கள். அவர்கள் யார் உண்மையான சுவாமியை தரிசித்தது என்று தங்களுக்குள் அன்பாக பேசிக்கொள்வார்கள். கருத்து வேறுபாடு இருந்ததாக தெரியவந்தால், சுவாமி புன்னகைப்பார். பின்வரும் கதையை Dr. நித்தியானந்தன் விவரிக்கிறார்:§§

எனது மூத்த சகோதரர் 1938 மற்றும் 1939 வருடத்தின் தொடக்கத்தில், தனது மேற்படிப்பிற்காக இங்கிலாந்தில் தங்கி இருந்தார். அந்த சமயத்தில் மேற்கத்திய நாடுகளில் இரண்டாம் உலகப்போர் தொடங்கி இருந்தது. நேச நாடுகளுக்கு ஹிட்லரின் நடவடிக்கைகள் பெரும் அச்சுறுத்தலாக இருந்தன. ஹிட்லரின் தாக்குதலுக்கு இங்கிலாந்தின் தொழில் நகரங்கள் முக்கிய இலக்காக இருந்தன. அதனால் என் தந்தை அண்ணனை பற்றிய கவலையில் இருந்தார். ஒரு நாள் அவர், இந்த கவலைகள் பற்றிய சிந்தனையுடன் சுவாமியை காண சென்றார். சுவாமி அவரை பார்த்து, “எதைப் பற்றியும் கவலை வேண்டாம்,” என்றார். என் தந்தை செய்தித்தாள்களில் தோன்றிய மிகைப்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக பயந்து இருந்தார். ஆனால் என் சகோதரனை எதிர்கொள்ள, தந்தை எதிர்பாராத மற்ற அபாயங்கள் காத்து இருந்தன. §§

சுவாமியின் கருணை நிறைந்த அந்த வார்த்தைகள், அந்த அபாயங்களில் இருந்து எனது சகோதரனை காப்பாற்றும் நம்பகமான வார்த்தைகளாக விளங்கின. ஒரு நாள், என் சகோதரனின் அறையில் இருந்த சூடேற்றும் கருவி வெடித்து புகைய ஆரம்பித்தது. தீடிரென்று நடந்த இந்த சம்பவத்தால், என் சகோதரன் அதிர்ச்சிக்கு உள்ளாகி, என்ன செய்வது என்று தெரியாது, திகைப்பில் அதே இடத்தில் அமர்ந்து இருந்தார். அதனால் அவர் தன் சுயநினைவை இழந்தார். அப்போது அவரிடம் சுவாமியின் குரல், “தம்பி, ஜன்னல்களை உடைத்துக்கொண்டு, வெளியே செல்,” என்று கூறியது. சத்தமாகவும் தெளிவாகவும் இருந்த சுவாமியின் வார்த்தைகள், என் சகோதரனுக்கு புதிய வாழ்க்கையை வழங்கியது. அவர் சன்னல்களை உடைத்துக்கொண்டு வெளியேறி, தனக்கு வந்த பேராபத்தில் இருந்து தப்பினார். அடுத்த நாள் விடியற்காலையில், என் தந்தை சுவாமியை சந்திக்க சென்ற போது, “நான் நேற்று உங்கள் மகனை பார்த்தேன்,” என்று கூறினார். §§

தமிழ் சேஜஸ் அண்ட் சீர்ஸ் ஆஃப் சிலோனில், Dr. பிரான்சிஸ் பிள்ளை தன்னிடம் விவரித்த ஒரு விசித்திரமான சம்பவத்தை, வி. முத்துக்குமாரசுவாமி பதிவு செய்துள்ளார். §§

கிறுத்துவராக இருந்த ஒரு தாய், ஒரு பொறியாளராக ஐக்கிய இராச்சியத்தில் பணியாற்றிய தனது மகன் நீண்டநாட்களாக தனக்கு கடிதம் எழுதாததால், மிகுந்த வருத்தத்தில் இருந்தார். தன் மகனை பற்றிய தகவல்களை தேடித்தருமாறு, அவர் யோகர் சுவாமியிடம் மன்றாடினார். அவர் மனதை மாற்ற யோகர் சுவாமி முயற்சி செய்தார், ஆனால் அந்த தாய் உறுதியாக இருந்ததால், யோகர் சுவாமி ஒரு மெய்மறதி நிலைக்கு சென்று, அந்த பொறியாளர் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார் என்பதை பதிவு செய்துக்கொண்டார். அந்த பொறியாளர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உற்சாகமாக இருந்ததை தெரிந்துகொண்டார். அதன் பிறகு சுவாமி தனது மெய்மறதி நிலையில் இருந்து வெளிவந்து அவர் மகன், அவரது நண்பர்கள், அவர்கள் இருந்த அறை மற்றும் அவர்கள் என்ன செய்துக்கொண்டு இருந்தார்கள் என்பதை பற்றி ஒரு தெளிவான விளக்கத்தை வழங்கினார். இதை விவரித்து தாய் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதற்கு பதிலாக மகன் அனுப்பிய கடிதம், தாயிடம் யோகர் சுவாமி கூறியதை உறுதி செய்வதாக இருந்தது. §§

தன்னை சுற்றி இருந்த சூழலில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி, ஒரு பெரிய சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துபவராக இருந்தார். ஒரு முறை யோக சுவாமி தனது கொழும்புத்துறை ஆசிரமத்தில், சில சீடர்களுடன் வழக்கம் போல் வடக்கு நோக்கி அமர்ந்து இருந்தார். ஒரு அன்பர் கொண்டு வந்திருந்த ஆரஞ்சு பழங்கள் அவர் காலடியில் அடுக்கப்பட்டு இருந்தன. தனது சீடர்களுடன் ஆர்வத்துடன் பேசிக்கொண்டு இருந்த சுவாமி, திடீரென்று, “பாவம் பிராமணன், ஆசிரமம்,” என்று கூறினார். அவர் அவ்வாறு பேசியதற்கும், அப்போது நடைபெற்ற உரையாடலுக்கு முற்றிலும் தொடர்பு இல்லாமல் இருந்தது. சுவாமி அதை சொல்லிக்கொண்டு, அந்த பழக்குவியலில் இருந்து கீழே விழுந்து இருந்த ஒரு ஆரஞ்சு பழத்தை, மீண்டும் பழைய இடத்தில் வைத்தார். அவர் தன் உரையாடலை தொடர்ந்தார், மற்றும் அன்பர்கள் அவர் மத்தியில் பேசிய வார்த்தைகள் மீது அதிக கவனம் செலுத்தவில்லை. ஆனால், அந்த முக்கியமான வார்த்தைகள், மரியாதைக்குரிய அறிஞராகவும் சிறந்த பேச்சளராகவும் இருந்த இராஜயோகி சங்கர சுப்பையருக்கு பாதுகாப்பாக விளங்கின. சுவாமி அந்த ஆரஞ்சு பழத்தை மீண்டும் பழக்குவியலில் வைத்த போது, அந்த பிராமணர் பயணம் செய்த வாகனம் ஒரு பெரிய விபத்தில் தப்பியது. இதைப்பற்றிய தகவல்களை இராஜ யோகியே விவரிக்கிறார். §§

நான் ஒரு முறை சித்தன்கேணி மகாகணபதி கோயிலில் ஒரு உரை நிகழ்த்தி, இரவு நேரத்தில் நல்லூருக்கு திரும்பிய போது கனமழை பெய்துக்கொண்டு இருந்தது. சீரணி கிராமத்து திருப்பத்தில், கால்வாய் நிரம்பி இருந்தது; வாகன ஓட்டியால் சாலையை சரியாக பார்க்க முடியவில்லை. திடீரென்று ஒரு வெளிச்சம் தோன்றி, சாலையை பிரகாசிக்க செய்ததால், நாங்கள் கால்வாயை தவிர்த்து பாதுகாப்பாக எங்கள் இலக்கை வந்து அடைந்தோம். அந்த வெளிச்சம் மட்டும் இல்லையென்றால், எங்களால் அந்த பாதாள குழியை பார்த்து இருக்க முடியாது, மற்றும் நாங்கள் அதற்குள் விழுந்து இருப்போம். அந்த வெளிச்சத்தால் பல உயிர்கள் தப்பின. நான் அன்பர்களிடம் இருந்து சுவாமி “பாவம் பிராமணன், ஆசிரமம்" என்று சொன்னதை பற்றியும், ஆரஞ்சு பழத்தை குவியலில் வைத்தது பற்றியும் தெரிந்து கொண்டேன். அன்பர்கள் மீது என்ன ஒரு பரிவு!§§

கொழும்பில் சமயப்பற்றுடன் இருந்த ஒரு இசுலாமியர், யோக சுவாமியை பற்றி கேட்டறிந்ததும், தான் யாழ்ப்பாணம் சென்று சுவாமியை தரிசிக்க ஏற்பாடு செய்யுமாறு ஒரு யோக சுவாமியின் சீடரிடம் கேட்டுக்கொண்டார். அந்த நபர் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்தார், மற்றும் அது அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் பதவிக்கு நிகரானது. இருவரும் இரயில் மூலம் யாழ்ப்பாணத்திற்கு சென்று, ஒரு விடுதியில் தங்கினர். அவர்கள் அடுத்த நாள் காலையில் குளித்து விட்டு, கொழும்புத்துறையில் இருந்த சுவாமியின் குடிசையை நெருங்கினார்கள். §§

அவர்கள் கதவை நெருங்கியதும், சுவாமி உரத்த குரலில், “யார் இங்கே? நான் இன்று யாரையும் பார்க்க விரும்பவில்லை. நீங்கள் போகலாம்,” என்று கத்தினார். இருவரும் அதே இடத்தில் நின்றுவிட்டனர். அவர்களுக்குள் பேசிய பிறகு, அன்பர் மட்டும் சுவாமியை சென்று சந்தித்து, சுவாமியை சந்திக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இலங்கையின் அரசு தலைமை வழக்கறிஞர் வந்து இருப்பதாக விளக்கினார். “அவர் அரசு தலைமை வழக்கறிஞராக அல்லது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கலாம். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. நான் அவரை இன்று சந்திக்க விரும்பவில்லை. நீங்கள் போகலாம்,” என்று சுவாமி கத்தினார். §§

அந்த அன்பர் அதிக ஏமாற்றத்துடன் வெளியே வந்து, இனி முயற்சி செய்து பயனில்லை என்று தனது நண்பரிடம் கூறினார். அவர்கள் மனதில் துக்கத்துடன், கொழும்பிற்கு அன்றே திரும்பினார்கள். அரசு தலைமை வழக்கறிஞர் வீடு திரும்பியதும், அவருக்காக அரசாங்கத்திடம் இருந்து ஒரு கடிதம் காத்து இருந்தது. அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அடுத்த நாள் பதவியேற்க வேண்டும் என்றும் அந்த கடிதம் கூறியது. அவர் தன் கண்களில் கண்ணீருடன் சுவாமியை கத்தியதை நினைவுகூர்ந்தார், மற்றும் சுவாமி தன்னை சந்தித்து இருந்தால், அவர் யாழ்ப்பாணத்தில் அதிக நேரம் தங்கவேண்டி இருந்திருக்கும், மற்றும் அதனால் இந்த கடிதத்திற்கு சரியான நேரத்தில் முறையாக செயல்பட்டு இருக்க முடியாது என்பதையும் உணர்ந்துகொண்டார். §§

அவர் சுவாமியை சந்தித்து, மரியாதை செலுத்த அடுத்த வாரம் பயணம் மேற்கொண்டார். இந்த முறை, அவர் வாசற்படியில் கால் வைத்ததும், சுவாமி அவரை ஒரு பெரிய புன்னகையுடன் வரவழைத்து, “உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எனது பணிவான வணக்கங்கள். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார். காலப்போக்கில், சுவாமியை குறைந்தது மாதத்திற்கு ஒரு முறை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதியின் பதவியை வகித்தார். §§

தமிழ்நாட்டில் அறிஞராகவும் பேராசிரியராகவும் இருந்த அ. ச. ஞானசம்பந்தன் யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் சொற்பொழிவு நடத்திய சமயத்தில், ஒரு நாள் காலையில் எழுந்த போது, தன்னால் வாய் பேச முடியவில்லை என்பதை உணர்ந்துக்கொண்டார். அவர் பணி ஓய்வு பெற்று இருந்த ஒரு காது-மூக்கு-தொண்டை அறுவை சிகிச்சை நிபுணரிடம் அழைத்து செல்லப்பட்டார். அவர் ஆய்வு செய்து, நோய் தீவிரமடைந்து இருப்பதால், பரிசோதனைகள செய்ய அவர் கொழும்பு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். அவர் தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு தன் குரலை மட்டுமே நம்பி இருந்ததால், ஞானசம்பந்தன் தன் உற்சாகத்தை இழந்து பயந்து இருந்தார். §§

அவர் வாகனத்தில் ஏறிக்கொண்டு இருந்த போது, மருத்துவர் அவரிடம் விரைந்து வந்து, “நீங்கள் யோக சுவாமியின் சீடன் என்பது எனக்கு தெரியும். நீங்கள் கிளம்புவதற்கு முன்பாக அவரை பார்த்துவிட்டு செல்லுங்களேன்?” என்று கேட்டுக்கொண்டார். வழக்கமாக காலை நேரத்தில் யாரும் சுவாமியை சந்திப்பது இல்லை என்பதை அறிந்து இருந்தாலும், சுவாமியை சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஏன் உதயமாகவில்லை என்று தன்னைத்தானே கடிந்துக்கொண்டு, ஞானசம்பந்தன் சுவாமியை நேரடியாக சென்று சந்திக்க முடிவு செய்தார். சுவாமி அவரை வரவழைத்துக்கொண்டு, “மருத்துவரை முருகப்பெருமான் என்று நினைத்தீர்களா? நீங்கள் அங்கே ஏன் சென்றீர்கள்?” என்று கேட்டார். அவரை அறியாமையை விளக்கும் வண்ணம் ஒரு நீளமான வசவுறை தொடர்ந்தது. அதன் பிறகு சுவாமி அந்த விரிவுரையாளரை உட்கார சொன்னார். அரை மணி நேரத்திற்கு அமைதி நிலவியது. அதன் பிறகு சுவாமி, “இன்று இரவு உங்கள் சொற்பொழிவு நிகழட்டும். அதன் பிறகு என்னை வந்து பாருங்கள்,” என்றார். §§

சுவாமி தனக்கு குரலை சரி செய்துவிட்டார் என்பதை உணர்ந்த ஞானசம்பந்தன் அழுதுக்கொண்டு, “நான் சுவாமிகள் சொல் படி நடப்பேன்,” என்று கூறினார். அவர் சொற்பொழிவை முடித்துக்கொண்டு திரும்பிய போது, எதிரே வந்த சுவாமி, “நாம் கம்பரையும் சேக்கிழாரையும் மிஞ்சி விடுவோம்,” என்று கூறினார். (கம்பர் இராமாயணத்தை தமிழில் மொழிபெயர்த்தார், சேக்கிழார் பெரியபுராணத்தை இயற்றினார். அதில் அவர் 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்தார்). §§

அதன் பிறகு தான் பேசிய குரல் சுவாமிகளால் வழங்கப்பட்டது என்றும் ஞானசம்பந்தன் கூறினார், மற்றும் அதன் பிறகு சிலரால் மட்டுமே புரிந்துகொள்ளப்பட்ட மறைஞான விஷயத்தின் மீது வெற்றியும் அடைந்தார். காலப்போக்கில் இந்த பேராசிரியர் இயற்றிய உயர்தரமான முப்பது புத்தகங்களுக்கு, யோக சுவாமியின் அருள் மட்டுமே காரணம் என்று குறிப்பிட்டார்.§§

பின்வரும் சம்பவத்தை சின்னப்பூ நவரத்னராஜா விவரிக்கிறார்.§§

மலேஷியாவில் வேலை செய்த எனது பெற்றோர்கள், என்னை எனது பாட்டன் பாட்டியின் கவனிப்பில் விட்டு சென்றார்கள். எனது நுனி நாக்கில் இருந்த ஒரு விசித்திரமான நோயினால், நான் சிறு வயதில் அவதிப்பட்டதாக கேள்விப்பட்டேன். நான் அவதிப்படுவதை தாங்க முடியாத பாட்டி, என்னை குணப்படுத்த மேற்கொண்ட மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய (ஆயுர்வேதம்) நாடுகளின் சிகிச்சைகள் பலனளிக்கவில்லை என்றும், எனக்கு இருந்த நோயினால் குடும்பம் அதிக கவலையில் இருப்பதாகவும் சுவாமியிடம் முறையிட்டார். சுவாமி விரிவாக எதையும் பேசாமல், எப்போதும் பேசுவதை போல, “இது தான் பிரச்சனையின் தற்போதைய நிலை” என்று அவர்களிடம் குறிப்பிட்டார். §§

சுவாமி தினமும் காலையில், என் வீட்டு வழியாக, தனது ஆசிரமத்தில் இருந்து இரண்டு மைல் தூரத்தில் இருந்து அரியாலைக்கு சிரமப்பட்டு நடந்து செல்வார். சுவாமி நல்ல உடல்வாகு மற்றும் நீண்ட தாடியுடன் அச்சுறுத்தும் படி இருந்ததால், நான் அவரை பார்த்ததும், அவர் கண்களுக்கு தென்படாமல் ஓடி ஒளிந்துக்கொள்வேன். நான் படித்த தமிழ் பள்ளிக்கூடம் எனது வீட்டில் இருந்து இருபத்தி ஐந்து கஜ தூரத்தில் இருந்தது. தெருவில் இருந்து ஐந்து கஜ தூரத்தில் இருந்த சுவாமியின் ஆசிரமம் வழியாக, நான் பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்தது. §§

ஒரு நாள் நான் பள்ளிக்கு சென்றுகொண்டு இருந்த போது, சுவாமி தனது குடிசையின் கதவை திறந்து, தெருவின் நடுவில் எனக்கு நேருக்கு நேராக வந்து நின்றுவிட்டார். அதனால் என்னால் அவரது பார்வையில் இருந்து தப்பி ஓடமுடியவில்லை. நான் அமைதியாக நின்று இருந்தேன். சுவாமி எனது வாயை திறக்கும்படி ஆணையிட்டார். நான் வாயை திறந்ததும், என் வாயில் துப்பாலமா என்று கேட்டார். ஆனால் அவர் என் உதட்டில் பாதிக்க பகுதியின் மீது மூன்று முறை ஊதிவிட்டார், மற்றும் அந்த பகுதி முழுமையாக குணமடைந்துவிட்டது. §§

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் வெளித்தோற்றத்தை தவிர்க்க வேண்டும் என்று செல்லப்பசுவாமி அவருக்கு கற்றுத்தந்து இருந்ததால், அவர் அத்தகைய மர்மமான சம்பவங்களை பெரிதுபடுத்தவில்லை. ஒரு வேளை தான் நிகழ்த்திய அற்புதங்களை மக்கள் தெரிந்துகொண்டால், அவர் தனது பணியின் இப்பகுதியை தற்செயல் என்று கருதிக்கொண்டு, அற்புதங்கள் அனைத்தையும் சாதாரணமாக தோன்றச்செய்தார். §§

மரணத்தை வாழ்க்கையின் ஒரு அங்கமாக பார்த்தல் §

சோகமும் மரணமும் அச்சுறுத்திய ஒரு நோயாளிக்கு, நிலைமாற்றம் விரைவில் நடக்கப்போவதாக யோக சுவாமிக்கு தோன்றினால், அப்போது சுவாமி சிறப்பாக ஆறுதல் அளிக்கவும் செய்தார். அத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளில், சுவாமி வெளிப்படுத்திய ஆழமான இரக்க குணத்தைப் பற்றி Dr. இராமநாதன் எழுதியுள்ளார்.§§

நாங்கள் துயரம் மற்றும் வேதனையில் இருக்கும் போது, பாசம் நிறைந்த சுவாமியின் தெய்வீக வார்த்தைகள், எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை வழங்கியது. “எதற்காக பயப்படுகிறார்கள்? நமக்கு மேலே இருக்கும் ஒருவன், இவற்றை எல்லாம் இயக்கிக்கொண்டு இருக்கிறான் அல்லவா? அவனிடம் சரணடைந்து சும்மா இருங்கள். யாரையும் பகைத்துக்கொள்ள தேவையில்லை. மற்றவர்கள் செய்யும் தீமையை மறந்து மன்னித்து விடுங்கள். இந்த உலகை நிர்வகிக்கும் இறைவன் எல்லாம் அறிந்து இருக்கிறான். சர்வவல்லமை படைத்த பரமாத்துமாவை காட்டிலும் நீங்கள் எந்த வகையில் சிறந்தவராக இருக்கிறீர்கள் அல்லது எதை சிறப்பாக செய்து விடமுடியும்?” என்ற வார்த்தைகளுடன், நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டை இழக்காமல் அமைதியாக வாழ்வதற்கு, அவர் எங்களுக்கு தனது கருணை மற்றும் ஆசீர்வாதத்தை வழங்கினார். §§

எனது மனைவியின் சகோதரன் மரணப்படுக்கையில் இருந்த போது, சுவாமி வருகை தந்து, நெற்றியில் விபூதியை பூசி, அவரது இறுதி யாத்திரையில் அனுப்பி வைத்தார். சுவாமியின் ஆசியால் அவர் நல்ல நிலையை அடைந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. §§

இதற்கு இன்னொரு அன்பரும் சான்றளித்தார்:§§

என் மகள் நோய்வாய்ப்பட்டு இருந்த போது, ஒரு முறை யோக சுவாமி எங்கள் வீட்டிற்கு வந்தார். நாங்கள் அவரிடம் உதவியை நாடினோம். அவர், “கவலைப்படவேண்டாம். அவள் சிவபெருமானின் திருவடிகளை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறாள்,” என்று கூறினார். அன்று இரவு அவள் உயிர் பிரிந்தது. §§

மரணம் பற்றி சுவாமிக்கு இருந்த அறிவைப்பற்றி சி.எஸ். தர்மராஜாவின் குறிப்பு:§§

ஒரு முறை சுகாதாரத்துறையில் உயர் பதவியில் இருந்த ஒரு மருத்துவர், வடமாகாணத்திற்கு பயணம் மேற்கொண்ட போது, அவர் வழக்கம் போல சுவாமியை தரிசிக்க வந்தார். அவரிடம் சுவாமி, “நீங்கள் உங்கள் மேலங்கியை மாற்றும் நேரம் வந்துவிட்டது,” என்று கூறினார். சில நாட்கள் கழித்து, நற்பண்புகள் நிறைந்த அந்த மருத்துவரின் உயிர் பிரிந்தது.§§

சுவாமி நிகழ்த்திய பெரும்பாலான நிலைமாற்ற அற்புதம் பற்றி ரத்னா மா நவரத்தினம் பின்வரும் உட்பார்வையை பகிர்கிறார்.§§

சுவாமி பலதரப்பில் இருந்தும் பெருந்திரளான மக்களின் கவனத்தை கவர்ந்தார். அவர்களில் ஒவ்வொருவருக்கும், அவரது தனிப்பட்ட புரிந்துணர்வின் அளவிற்கு ஏற்ப, அந்த நபரின் எதிர்கால முடிவை வெளிப்படுத்தினார். அவர் ஒரு நபரின் எதிர்காலத்தை சொல்லும் மறைஞானியாக அல்லது கட்புலனுக்கு அகப்படாததை காணும் சித்தராகவும் இல்லை, சாதாரண சிந்தனையை கடந்து தனது ஆற்றல்களுடன் தனிமையில் வாழ்ந்த ஒரு உயிர்சக்தியாகவும் இல்லை. அவர் ஒரு தெய்வீக புருஷராக இருந்தார் மற்றும் அவரது யோக ஞானம், ஒவ்வோரிடமும் மறைந்து இருந்த ஒரு நாணை நெருங்க செய்ததால், அவர்களின் இதயங்களில் இருந்த இரகசிய இடங்களை மேற்பரப்பிற்கு கொண்டு வந்து, அவர்களது நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக விளங்கிய குழப்பமான எதிர்வினைகள் மற்றும் மறைவான நோக்கங்களை அவர்களது பார்வைக்கு வெளிப்படுத்தியதன் மூலம், சுவாமி மக்களின் உட்புற பண்புகளை மாற்றவதற்கு ஒரு அருமையான சக்தியை பிரயோகித்தார். §§

இதன் காரணமாகவே அவருக்கு முன்பாக பலர் நடுங்கிக்கொண்டு இருப்பார்கள் அல்லது அவரது கூர்மையான கண்களுக்கு தென்படாமல், பயந்து விலகி இருப்பார்கள். ஆனால் அவரது மனிதாபிமானம் எல்லோரையும் வலுவாக ஈர்த்ததால், அவரது கடுமையான கண்டிப்புக்களும் கருணையின் பருவமழையாக விளங்கியது மற்றும் அன்பர்கள் அவரை இன்னல்கள் மற்றும் பதட்டமான நேரங்களில் நாடினார்கள். அவர் எண்ணற்ற வழிகளில் அவர்களது வலிகள் மற்றும் பிணிகளை தணித்ததால், அவருக்கு முன்பாக அமர்ந்து இருந்த எண்ணற்ற மக்களின் நம்பிக்கை கைலாய மலை உயரத்திற்கு உயர்ந்து இருந்தது. அவர் சிவபெருமான் அருளிய அந்த குணப்படுத்தும் தீர்த்தத்தை, அந்த கைலாய மலையில் இருந்து கொண்டு வந்து இருந்தார் மற்றும் அது உண்மையில் தெய்வீக கங்கை பூமிக்கு வந்து இறங்கியது போல இருந்தது!§§

நன்மை மற்றும் தீமையின் உலகை கடந்து நோக்கி, நடப்பது அனைத்தும் ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியை மேம்படுத்த நடைபெறுவதாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சுவாமி தன் அன்பர்களுக்கு கற்றுத்தந்தார். அவர் அளித்த விளக்கம்:§§

நாம் ஒருவிதமான பலனை அடைந்தால் நன்மை என்றும் வேறுவிதமான பலனை அடைந்தால் தீமை என்றும் நினைக்கக்கூடாது. இந்த செயல்கள் அனைத்தும் மாயையில் இருந்து தோன்றி, ஆத்ம ஞானம் பெறுவதற்கு உதவி செய்கின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இறைவன் மனிதனை உயர்த்தி மற்றும் தொடர்ந்து தாழ்த்துவதன் மூலம், அந்த மனிதனுக்கு அனுபவத்தை வழங்குகிறார். நீங்கள் மாயைகளில் இருந்து முழுமையாக விடுபடவேண்டும். எல்லா சோதனைகளும் நன்மைக்கே.§§

சிவ தொண்டன் பத்திரிகை §

டிசம்பர் 1934 ஆம் ஆண்டில், சிவ தொண்டன் என்ற ஒரு மாதாந்திர பத்திரிகையை தொடங்க சுவாமி தனது சீடர்களை ஊக்குவித்தார். அந்த பத்திரிகை ஆங்கில வாசகர்களுக்கு ஒரு சிறிய பகுதியுடன், சமயம் தொடர்பான கட்டுரைகள் தமிழில் எழுதப்பட்டு வெளிவந்தது. சிவ தொண்டன் நிலையத்தை பற்றி இந்துமதி அம்மா விவரிக்கிறார்:§§

சிவபெருமானை மறந்து விடுவதே துக்கங்கள் அனைத்திற்கும் காரணமாக இருப்பதாலும், சிவபெருமானின் நிலை மீது தொடர்ந்து ஆழ்ந்த சிந்தனை மேற்கொள்வதே அதற்கு தீர்வாக இருப்பதாலும், சிவபெருமான் மீது ஆழ்ந்த சிந்தனை செய்வதை ஊக்குவிப்பது அதன் நோக்கமாக விளங்கியது. பிரசுரிக்கும் பணி முதலில் கண்டிக்கு அருகில், கடுகண்ணாவ பிரதேசத்தில், கிராகம தோட்டத்தில், கமலாசினி அச்சு நிலையத்தில் நடந்தது. பின்னர் அது பேராதனியாவிற்கு மாற்றப்பட்டது. கண்களை கண் இமைகள் பாதுகாப்பதைப் போல, அந்த பத்திரிகையில் சுவாமி ஒரு ஆழமான மற்றும் நிலையான ஆர்வத்தை கொண்டு இருந்தார். அவர் பத்திரிகை ஆசிரியராகவும் பண்டிதராகவும் இருந்த கே. கே. நடராஜன் மற்றும் அச்சடிப்பவருடன் இணைந்து செயல்பட்டார் மற்றும் அறிஞர்களாக இருந்த தனது சீடர்களிடம் கட்டுரைகளை வழங்குமாறு உத்தரவிட்டார், ஆனால் பத்திரிகையில் எந்த எழுத்தாளரின் பெயரும் எப்போதும் குறிப்பிடப்பட்டது இல்லை. சுவாமி அஞ்சலில் அனுப்புவதையும் பார்வையிட்டு, “நீங்கள் மேலுறையில் இருக்கும் சிவபெருமான் மறையாதவாறு அட்டையை ஒட்டவெண்டும். இந்த பத்திரிகையை பார்ப்பவர்கள் மனதில் சிவபெருமான் என்ற வார்த்தை மட்டும் நிலைத்து நின்றாலும், அது ஒரு மிகப்பெரிய சாதனையாக இருக்கும்,”என்று கூறுவார். §§

சுவாமி இந்த வெளியீட்டிற்காக, “எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவான் ஈசன்” என்ற குறிக்கோளை வழங்கினார். ஒவ்வொரு வெளியீடும் அவர் வழங்கிய நற்சிந்தனை பாடல்களில் ஒன்றை கொண்டிருந்தது. யோக சுவாமி இந்த பத்திரிகைக்கு அதிக மதிப்பு அளித்ததால், அதிக தாக்கம் ஏற்படுத்திய அவரது பாடல்களில் ஒன்றான “சிவதொண்டனில்”, சுவாமி இந்த பத்திரிகையை ஒரு சிறுவனாக உருவகப்படுத்தி உள்ளார்: §§

சிவபெருமானின் தொண்டர்களே! §

சிவதொண் னென்னுந் திருநாமம் பூண்டே§

சிவதொண்ட நுங்கடிரு முன்றிற் §

சிவதொண்டு செய்ய வருஞ்சிறுவன் §

சிந்தை களிகூரச் செய்தல் கடமை தெரி.§

சிவனடி யாரைச் சிவனென வணங்கும் §

சிவதொண் னென்னுஞ் செல்வச் சிறுவன் §

பவவரு டத்துப் பன்னுமார் கழிமதி§

எவரும் மகிழ இன்னிலம் போந்தான் இவனோ, §

சிறுபிள்ளை யாயினுஞ் செய்தவப் பயனால்§

அறிவு மிகுந்த ஆண்டகை யாவான் §

தினைத்துணை நன்றி செய்யினு மதனைப்§

பனைத்துணை யாக்கொள்ளும் பயனைத் தெரிபவன்§

அனைத்துஞ் சிவன்செய லாமென அறிபவன்§

சினத்தைச் செற்ற திருவினை யுடையான்§

சத்தியம் பொறுமை சாந்தம் நிறைந்தவன்§

நித்தியா நித்தியந் தெரியும் நிபுணன்§

அத்துவா மார்க்கம் ஆறையு மகற்றித்§

தத்துவா தீதத் தன்மையை யுணர்ந்தோன்§

வறுமையிற் கலங்கான் செல்வத்தின் மகிழான்§

பொறுமை மிக்குடைப் புண்ணிய புருடன்§

தருமநன் னெறியிற் சற்றும் வழுவான்§

கருமத்திற் கையுங் கடவுளிற் கருத்துமா§

யிருநிலம் மதிக்க வாழு மியல்பினன்§

குருபரன் கூறிய நெறியே செல்பவன்§

திங்க டோறும் திருவக லாத§

உங்கள் மனைக்கே யுவப்புடன் போந்து§

நற்சிந் தனையும் நல்ல சமயமும்§

அற்புத மான போற்றித்திரு வகவலும்§

விற்பன மாக விளங்கு யோகமும்§

சொற்பொருட் சுவைசேர் சூடாலை சரிதமும்§

இன்னும் பற்பல வினியகட் டுரைகளும்§

கொண்டுடன் மகிழ்ந்து கும்பிடு மிவனை§

வாரி யெடுமின் மடிமீது வைம்மின்§

சீரிய வாயாற் செந்தமிழ் பாடுமின்§

பாலுந் தேனும் பாகும் பருப்பும்§

நாலுங் கலந்து நன்றா யுஸ்ரீட்டுமின்§

பட்டாடை சுற்றுமின் பலபணி புனைமின்§

மட்டார் நறுமலர் மாலை சூட்டுமின்§

எட்டாப் பேரின்ப மெய்தி§

இட்டார் பெர்யோர் எனவாழ் வீரே.§§

சிவதொண்டன் பத்திரிகைக்கு “நமது உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே" என்ற முதல் நற்சிந்தனை பாடலை சுவாமி எழுதினார். அது பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது:§§

நமது உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே. ஆகையால் நாம் அவருடைய உடைமை. அவருடைய அடிமை. நம்முடைய அசைவெல்லாம் அவருடைய அசைவே. நாம் ஒரு போதும் அவரை மறந்திருக்க முடியாது. நமக்கு ஒரு குறையுமில்லை. நாம் என்றும் உள்ளோம். எங்குமிருக்கிறோம். எல்லாம் அறிவோம். இப்படியே நாம் இடையறாது சிந்தித்துச் சிந்தித்து கீழ்மையான குணங்களை போக்கி, மேலான தெய்வ தத்துவங்களை அடைவோமாக! §§

தன்னிடம் அதிகமான சீடர்கள் சேர்ந்ததும், சுவாமி அவர்களுக்கு சமஸ்கிருதம் அல்லது ஆங்கிலத்தில் இருக்கும் பல்வேறு படைப்புக்களை தமிழில் மொழிபெயர்ப்பது போன்ற பணிகளை வழங்கினார். §§

அருகில் இருந்தும் தூரத்தில் இருந்தும் எழுதிய கடிதங்கள் §

யோக சுவாமியை பொறுத்தவரையில், அனைத்தும் நீங்கள் யார் என்பதை அறிதல் அல்லது அறியாமல் இருப்பது ஆகும். “தற்பொழுதில் தீவிரமாக இருக்கும் போது, நீங்கள் யார் என்பது உங்களுக்கு புரியவரும்.” அவர் எந்த இடத்தில் இருந்தாலும், இதை இடைவிடாது கற்றுத்தந்தார். அவர் இந்தியாவிற்கு பயணம் செய்த போது அல்லது இலங்கையின் தொலைதூர பகுதிக்கு பயணம் செய்யும் போது, சிலசமயஙகளில் நுண்ணறிவு நிறைந்து கையால் எழுதப்பட்ட கடிதங்களை, தனக்கு நெருக்கமான சீடர்களுக்கு அனுப்புவார். இவை தங்கம் போல கவனமாக பாதுகாக்கப்பட்டன. அதில் பல நற்சிந்தனை என்ற அவரது புத்தகத்தில், அவர் எழுதிய பாடல்களுடன் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு கடிதத்தின் மேற்பகுதியில் எப்போதும் “சிவமயம்" எழுதப்பட்டு இருக்கும். மலை ஊராக இருந்த கண்டியில் அவர் எழுதிய கடிதம்: §§

சிவமயம்§

நான் இங்கே இருக்கிறேன். கொழும்பில் இருந்து வரும் இரயில் வந்துள்ளது மற்றும் அது தனது பயண இலக்கை நோக்கி செல்ல நிலையத்தில் காத்து இருக்கிறது. பாதுளையில் இருந்தும் இரயில் வந்துள்ளது மற்றும் அது தனது பயண இலக்கை நோக்கி செல்ல நிலையத்தில் காத்து இருக்கிறது. எங்கும் தேயிலை தோட்டங்கள் நிரம்பியுள்ளன. தோட்டக்காரன் தனது குதிரையில் அமர்ந்துகொண்டு தேயிலைகள் பரிக்கபடுவதை கண்காணிக்கிறான். பெரிய ஓடையுடன் சேரும் ஆவலுடன் அருகில் இருக்கும் சிறு ஓடை துளி துளியாய் சொட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த உலகம் அருமையான இடமாக இருக்கிறது. எல்லோரும் யோகா செய்கிறார்கள். நாம் [இலக்கினை] அடைய வேகமாக முயற்சி செய்து வருகிறோம். §§

சுவாமி தனது கடிதங்களை சேகரிக்க விருப்பத்துடன் பயன்படுத்தியவர்களில், பிற்காலத்தில் இலங்கை தமிழர்களின் தலைவனாக விளங்கிய யோகேந்திர துரைசுவாமியும் ஒருவராக இருந்தார். அப்போது 9 வயது சிறுவனாக இருந்த யோகேந்திரனுக்கு எழுதப்பட்ட கடிதங்கள், சுவாமியின் வலுவான கண்ணோட்டம் பற்றி ஒரு அருமையான முழுமையை வழங்கியது. நல்ல அறிவுரைகள் நிரம்பிய ஒரு கடிதத்தை இங்கே காணலாம்.§§

சிவமயம் §

அன்புடன் நானாக இருக்கும் யோகேந்திரனுக்கு எழுதும் கடிதம்:§

நான் உன்னுடன் இருக்கிறேன் மற்றும் நீ என்னுடன் இருக்கிறாய். நீ நானாகவும் நான் நீயாகவும் இருக்கிறோம். நீ எதற்காக பயப்படுகிறாய்? இங்கே பார்! நான் நீயாக இருக்கிறேன். அப்படியென்றால் நீ என்ன செய்ய வேண்டும்? நீ அன்பை உணர்ந்து அதை வெளிப்படுத்த வேண்டும். யாரிடம் வெளிப்படுத்த வேண்டும்? எல்லோரிடமும். உண்மையில் உனது இயல்பு அன்பை தவிர வேறு எதுவும் இல்லை. நீ மட்டும் இல்லை, பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் அன்பால் நிறைந்து இருக்கின்றன. மற்ற அனைத்தும் இல்லை, ஏனென்றால் நீ மட்டுமே உள்பொருளாக இருக்கிறாய். நீ எல்லாமாக இருக்கிறாய். நன்றாக படி. §§

சிவபெருமான் எல்லாம் செய்கிறார். நான் நீயாக இருக்கிறேன். §§

சிவமயம்§

யோகேந்திரா!§

இன்று புதுவருடப்பிறப்பு. உங்கள் வீட்டில் பல சிறப்பான இனிப்புக்களை தயார் செய்வார்கள். நீ பட்டு வேட்டியை அணிந்து கொள்வாய். உங்கள் வீட்டில் சுண்ணாம்பு பூசுவார்கள். நீ குடும்பத்துடன் கோயிலுக்கு செவ்வாய். நீ தெய்வத்தை வழிபட்டு காணிக்கைகளை வழங்குவாய். ஆனால் நான் அமைதியின் நீரில் குளித்து, எனது மனதை சுத்தப்படுத்த புனிதமான விபூதியை பூசி, மன நிறைவு என்கிற மிகப்பெரிய செல்வத்திற்காக எப்போதும் பிரார்த்தனை செய்து, அச்சமின்மையின் கேடயத்தை சுமந்துக்கொள்வேன் மற்றும் இவை அனைத்தையும் வைத்துக்கொண்டு, நான் சுப்ரமணியனின் மார்பில் நடனமாடுவேன். §§

எப்போதும் மறவாத, §

உனது ........... §§

“சிறப்பாக பராமரிக்கப்பட்ட இரகசியம்" என்ற தலைப்பில் யோக சுவாமி பின்வரும் கடிதத்தை ஜூலை 2, 1934 அன்று எழுதினார். §§

சிவமயம் §

நாம் எல்லோரும் ஒரே சாதி மற்றும் மதத்தை சார்ந்தவர்கள். நமக்குள் எந்த வித்தியாசமும் இல்லை. நாம் தெய்வீகத் தன்மை மீதே நிலைகொண்டு இருக்கும் தெய்வீக சக்திகளாக இருக்கிறோம். பல்வேறு விதமான மாற்றங்கள் அனைத்தும் பரம்பொருளின் அழகான பண்பை சித்தரிக்கின்றன. இவற்றை மிகப்பெரிய ஆன்மாக்கள் மாயை என்று அழைப்பார்கள். இந்த உண்மையை ஒரு நேர்மையான வாழ்க்கை வழங்கும் அற்புதமான வசீகரத்தின் மூலம் கிரகித்துக்கொண்டவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் மற்றவர்களால் முடியாது. இதன் காரணமாக, எல்லா உயிர்களையும் தனது சொந்த உயிரைப் போல அன்பு செலுத்துவது முக்கியம் என்பதை முனிவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதனால் எல்லாம் நேர்மையான வழக்கத்தை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது. நாம் புலன்களை நுகரும் சடபொருட்கள் இல்லை என்பதை புரிந்துகொள்ள, இந்த நேர்மையின் பாதையில் நம்மை நிலைநிறுத்திக்கொள்வதன் மூலமாகவும், எல்லோரும் நாமே என்பதை தொடர்ந்து கற்பனை செய்வதன் மூலமாகவும், நாம் அருமையான அனுபவங்களை பெறுகிறோம். §§

என்றுமே மறவாதவர்.§§

“நீங்கள் ஒரு அரசனாக இருந்தால், மனநிறைவுடன் இருப்பீர்களா? நீங்கள் ஒரு ஆண்டியாக இருந்தால், மனநிறைவுடன் இருப்பீர்களா? வாழ்க்கையில் உங்கள் சமுதாய படிநிலை எதுவாக இருந்தாலும், நீங்கள் உங்களை அறிந்துக்கொள்வதால் மட்டுமே உங்களுக்கு மனநிறைவு கிடைக்கும்,” என்று யோக சுவாமி கூறுவார். §§

ஒரு நாள் காலையில் யோக சுவாமியை சந்திக்க, சுவாமிக்கு ஒத்த வயதுடன், அவருக்கு நீண்டநாட்களாக பரிச்சயமான ஒரு முதியவர் வந்தார். அவர் அரசாங்கம் நடத்திய முதியோர் இல்லத்தில் வசித்து, தனக்கு கிடைத்த ஒரு சிறிய ஓய்வூதியத்தில் வாழ்ந்து வந்தார். அவர் ஆசிரமத்தில் நுழைந்ததும், சுவாமியின் பாதத்தில் ஒரு வாழைப்பழங்களின் சீப்பை வைத்து, தரையில் விழுந்தது வணங்கினார். அவரை பார்த்ததும் சுவாமியின் முகத்தில் மகிழ்ச்சி தெளிவாக தெரிந்தது. இந்த நண்பர் அடிக்கடி வந்துக்கொண்டு இருந்தார், மற்றும் சுவாமிக்கும் அவரது நட்புறவு பிடித்து இருந்தது. §§

“வணக்கம். நண்பரே,” என்று சுவாமி அவரை வரவழைத்தார். அதன் பிறகு அவர்கள் அந்த நண்பரின் அன்றாட வாழ்க்கையை பற்றி பேசினார்கள். அவரது உடல்நிலை எப்படி இருந்தது? அவருக்கு நல்ல உணவு கிடைத்ததா? சுவாமி இறுதியாக அவரிடம் பயணத்தை பற்றி விசாரித்தார். “நான் இரயிலில் வந்தேன், சுவாமி,”என்று அவர் பதில் அளித்தார். §§

“ஆனால் உங்களைப் போன்ற வயதானவர்களுக்கு, கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் இந்த காலத்தில், இரயிலில் ஏறி இறங்குவது கடினமாக இருக்கும். இரயிலில் பிரயாணம் செய்வது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்,” என்று சுவாமி பதில் அளித்தார். “சுவாமி, நான் உங்களை காண வரும் போது, மனதில் ஒன்றை மட்டும் சிந்தித்துக்கொண்டு இருப்பேன். அந்த சிந்தனை என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. நான் இங்கே வருவதில் எந்த சிரமும் இல்லை.” §§

“நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது, ஆனால் பயணம் செய்வது உங்களுக்கு அதிக கடினமாக இருப்பதுடன், இக்காலத்தில் அதற்கான செலவும் அதிகமாக இருக்கிறது. நீங்கள் என்னை நாடி வரவேண்டாம். என்னை சந்திப்பதற்கு மற்ற வழிகள் இருக்கின்றன,” என்று சுவாமி பதில் அளித்தார். சுவாமி அமைதி அடைந்ததும் பேசத்தொடங்கிய அவரது நண்பர், “சுவாமி, சில மாதங்களுக்கு ஒரு முறை உங்களை சந்திக்க வருவது எனக்கு ஒரு அருமையான அமைதியை தருகிறது. அதற்காக எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சமாளிக்க தயாராக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார். §§

அந்த உரையாடல் முழுமையாக நிறைவு பெறவேண்டும் என்று சுவாமி மௌனம் சாதித்து, பிறகு மீண்டும் பேச ஆரம்பித்தார். “நண்பரே, வாழ்க்கையில் உங்களுக்கு அனுபவ அறிவும் அதிகம், நீங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்தும் இருக்கிறீர்கள்; நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்களா? உங்கள் மனதில் வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக இடம் பிடித்திருப்பது எது?” §§

“சுவாமி, இப்போதெல்லாம் நான் அந்த கேள்வியை பற்றி பலமுறை விசாரம் செய்து இருக்கிறேன். எனக்கு முக்கியமாக தோன்றியது அனைத்தும் என்னை விட்டு பிரிந்துவிட்டன. என் குடும்பம் என்னை விட்டு பிரிந்து விட்டது. எனது நண்பர்கள் என்னை விட்டு பிரிந்து விட்டார்கள். எனது வீடு என்னிடம் இல்லை மற்றும் நான் பணி ஓய்வு பெற்று விட்டேன். நான் முதியவனாகிவிட்டேன் மற்றும் என் உடல் வலுவிழந்துவிட்டது. இருந்தாலும் அந்த உடலில் எனது பயணத்தை தொடர்ந்துகொண்டு இருக்கிறேன். எனது இதயத்தில் எப்போதும் அன்பு நிரம்பி இருக்கிறது. வாழ்க்கையில் அன்பு தான் மிகவும் முக்கியம் என்று எனக்கு தோன்றுகிறது.” இதனால் சுவாமியின் இதயம் கனிந்தது மற்றும் அவர் ஆத்ம திருப்தியை பெற்றார். “நீங்களும் நானும் ஒன்று தான். அதவும் எனக்கு முக்கியமாக தோன்றுகிறது,” என்று கூறினார். §§

அவர் கிளம்பியவுடன், சுவாமி தனக்கு முன்பாக கூடியிருந்த அன்பர்களை பார்த்து, அந்த நண்பரை போல ஒரு எளிமையான இதயத்துடன் இருப்பதைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை என்று கூறினார். “எல்லாம் எளிமையாக இருக்கிறது, ஆனால் மனிதனின் குரங்கு போன்ற மனம் “நான்” மற்றும் “எனது" எந்த சிந்தனையின் மூலம், அந்த எளிமையை ஒரு சிக்காலாக்கிக் கொள்வதால், அவனுக்கு உண்மை தெரிவதில்லை. அதனால் தன்னை சுற்றி இருப்பவர்கள் மீது குற்றம் சுமத்துகிறான். இன்னும் சில நாட்களில் இவர் உயிர் பிரியவிருக்கிறது. அது எளிமையாகவும் இயல்பாகவும் இருக்கும். மேலும் அவரிடம் இருக்கும் வாழ்க்கை பற்றிய எளிமையான மற்றும் அருமையான புரிந்துணர்வை, தனது அடுத்த பிறவிகளுக்கு அவர் எடுத்து செல்லவிருக்கிறார். அவருக்கு எல்லாம் எளிமையாக அமையும்.” அந்த நண்பர் சில நாட்கள் கழிந்து மரணமடைந்தார். §§

சுவாமியை சந்திக்க வந்த ஒவ்வொருவரும் ஒரு நேர்மையான மற்றும் எளிமையான இதயத்துடன் இருந்ததோடு, நல்ல வரவேற்பையும் பெற்றார்கள். அவரை குழந்தைகள் சந்திக்க வந்த போது, அவர் அந்த குழந்தைகளை தனது தனது மடியில் வைத்துக்கொண்டு சுற்றி இருந்தவர்களிடம், “இந்த குழந்தைக்கும் எனக்கும் ஒரே வயது. நாங்கள் ஒரே மொழியை பேசுகிறோம். நீங்கள் எல்லோரும் மறந்த விஷயங்களை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.”§§

அவர் சிலசமயங்களில் குழந்தைகளை பாடச் சொல்வார். அவர்கள் சுவாமி இயற்றிய நற்சிந்தனை பாடல்களை பாடுவார்கள், மற்றும் அவரும் குழந்தையின் மழலை குரலில் சேர்ந்து கொள்வார். அவர் குழந்தைகளிடம் பொம்மை அல்லது வேறு ஏதாவது விளையாட்டு பொருட்கள் வேண்டுமா என்று கேட்பார். குழந்தை விரும்பத்துடன் எதையாவது கேட்டால், அதை உடனே வாங்கி தந்து விடுவார். §§

அவர் குழந்தைகளிடம் கண்டிப்பாகவும் நடந்துகொண்டார். கீழ்படிந்து நடப்பதை மிகவும் முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் கூறினார். “கீழ்படிந்து நட. உங்கள் தந்தை, தாய், சகோதரிகள், சகோதரர்கள், மற்றும் சொந்த மாமன், அத்தை சொல்லும் அறிவுரைகளை கேட்டு நடக்கவேண்டும். எப்போதும் கீழ்படிந்து நடப்பதில் முன் உதாரணமாக இரு. சிவபெருமான் எல்லாம் செய்கிறார்.” “இதை கேட்பதற்கு கடினமாக தோன்றலாம்,” என்று தொடங்கி, “ஆனால் இதுவே வாழ்வதற்கான சிறந்த வழி. நானும் எனக்கு வரும் உத்தரவுகளை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு உத்தரவுகள் உள்ளிருந்து வருகின்றன. சிறிது காலம் கழித்து, உங்களுக்கும் உட்புறத்தில் இருந்து ஆணைகள் வரும்.” §§

அவரிடம் பெரும்பாலானவர்கள் சிறு வயதிலேயே வந்து, அவருக்கு அடிபணிந்து நடந்தார்கள். அவர் தனது சீடர்களிடம் நெருக்கமாக பழகினதால், அவர்கள் வீட்டில் குழந்தை பிறந்தால், தங்கள் சொந்த குடும்பத்திற்கு செய்தியை தெரிவிப்பதற்கு முன்பாக, சுவாமியிடம் விரைந்து வந்து தெரிவிப்பார்கள். அவர்கள் சுவாமிக்கு வழங்க விசேடமான காணிக்கைகளை முன்பே வாங்கி தயாராக வைத்து இருப்பார்கள். இதனால் குழந்தை பிறந்தவுடன் கடைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், சுவாமி குழந்தைக்கு தனது ஆசிகளை வழங்க, பெற்றோர்கள் அவரிடம் நேரடியாக சென்று விடுவார்கள். §§

அவர் பெரும்பாலும் தனது ஆசிரம கதவிற்கு முன்பாக நின்றுக்கொண்டு, புதிதாக பிறந்த குழந்தைகளின் தந்தைகளை கண் சிமிட்டலுடன் வரவேற்று, “உங்களுக்காக நான் ஒரு நல்ல செய்தி சொல்ல இருக்கிறேன். இன்று காலையில் திரிபுரசுந்தரி என்ற ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தருணத்தை நாம் எல்லோரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்,” என்று உற்சாகத்துடன கூறுவார். அந்த செய்தியை தான் அந்த குழந்தையின் தந்தை சொல்ல வந்து இருந்தாலும், அவர் அந்த குழந்தைக்கு அப்போது பெயர் வைத்திருக்கவில்லை! யாழ்ப்பாணத்தில் இருந்த பலர், இவ்வகையில் சுவாமியால் பெயர் சூட்டப்பட்டனர். §§

ஒரு நாள்...§

யோக சுவாமி எல்லோரையும் கவனித்துக்கொண்டு இருந்தார், மற்றும் அவரது ஆன்மீக பார்வையில் இருந்து எதையும் மறைக்க முடியாது. அவருக்கு தனது கிராமத்திலும், யாழ்ப்பாணம் முழுவதிலும் என்ன நடக்கிறது என்று மிகவும் நன்றாக தெரிந்து இருந்தது. அவரது ஆன்மீக பார்வைக்கு தகுதியான எந்த ஒரு மிகவும் சிறிய விஷயமும், அவரது கவனத்தில் இருந்து என்றும் தப்பியது இல்லை. இந்த காலகட்டத்தில், யோக சுவாமியுடன் தனது அனுபவத்தை பற்றி ஒரு சீடன் பகிர்கிறார். §§

யோக சுவாமி ஒரு அரசரை போல சுற்றித்திரிந்தார். அவரை தங்கள் குருவாக ஏற்றுக்கொண்ட ஒரு குடும்பத்தில் மருமகளாக அடியெடுத்து வைத்த போது, நான் அவரைப்பற்றி தெரிந்துகொண்டேன். நான் அவரை திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக செப்டம்பர் 4, 1951 அன்று தரிசித்தேன். சுவாமி எங்கள் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தாலும், நான் அவரை அதுவரை சந்தித்திருக்கவில்லை. §§

நாங்கள் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, மலேஷியாவில் இருந்து திரும்பி இருந்தோம். 1920 முதல் சுவாமியை அறிந்திருந்த, எனது மாமனார் சர் வைத்தியலிங்கம் துறைசுவாமி மற்றும் எனது கணவருடன் சுவாமியின் ஆசிரமம் சென்ற போது, நான் அவரை முதல் முறையாக பார்த்தேன். நாங்கள் ஒரு குடுவையில் தேநீரையும், ஒரு தட்டில் பழங்களையும் எடுத்து சென்றோம். தென்னை மர ஓலைகளால் கூரை வெய்த, சிறிய மண் குடிசைக்கு நாங்கள் வந்து சேர்ந்த போது, மாலை 7 மணியை நெருங்கியிருக்கும். குடிசைக்குள் இருள் சூழ்ந்து இருந்ததால், நான் என் கணவரையும் மாமனாரையும் பின்தொடர்ந்து சென்றேன். சுவாமிக்கு முன்பாக எரிந்துக்கொண்டு இருந்த கற்பூரத்தை தவிர, அங்கே வேறெந்த வெளிச்சமும் இல்லை. அவரது திருவடியில் விழுந்து வணங்குவதற்கு எனது முறை வந்த போது, எனக்குள் ஊடுருவி ஆழமாக பார்ப்பதை போன்று, மிகவும் வலுவான கண்களை பார்த்துக்கொண்டு இருந்தேன். §§

நாங்கள் அவருக்கு எதிர்புறத்தில் அமர்ந்தோம். அவர் சிறிது நேரம் என் மாமனாருடன் பேசிய பிறகு, என் பக்கம் தனது பார்வையை திருப்பி, “உங்களுக்கு சமைக்க தெரியுமா?” என்று கேட்டார். “தெரியும்" என்று நான் பதில் அளித்தேன். அவர் எனக்கு திருஞானசம்பந்தர் பாடல்கள் அடங்கிய ஒரு தேவார புத்தகத்தையும் எனக்கு வழங்கினார். அதன் பிறகு, நான் சுவாமிக்கு உணவு சமைக்க பெரும்பாலும் தினமும் ஆசிரமம் வந்து கொண்டிருந்தேன். அவர் தேநீரை தேங்காய் சிரட்டையில் குடித்தார். அந்த சிரட்டை வெப்பத்தை தக்க வைக்க உதவியது, மற்றும் அதை யாழ்ப்பாணத்தில் பெரும்பாலனோர் தங்கள் வீடுகளில் வைத்து இருந்தார்கள். §§

என் கணவர் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்த போது, சுவாமி மூன்று வருடங்களுக்கு மதியம் சாப்பிடவும் வந்தார். என் கணவர் அவருக்காக சில நூல்களை வாசித்தார். “சொர்ணா வாசித்தால், எனக்கு நன்றாக புரியும்,” என்று அவர் கூறுவார். அவர் என் கணவரை சொர்ணா என்று பெயரிட்டு இருந்தார், மற்றும் அவரது சகோதர சகோதரிகளும் அவ்வாறே அழைக்கவேண்டும் அவரை என்றும் கேட்டுக்கொண்டார். §§

சுவாமியை யாழ்ப்பாண மக்கள் தங்களது அரசாக கருதினார்கள். அவர் யாழ்ப்பாணத்தின் நெல் வயல்கள் மற்றும் பனை மரத்தோப்புக்கள் வழியாக பவனி வந்து, நல்வழிப் பாதையில் அழைத்து வரவேண்டிய மக்களின் வீடுகளுக்கு சென்று வசைமாரி பொழிந்தார். என் மாமனாரின் வீட்டில், சுவாமி சொல்வதே வேதவாக்காக இருந்தது. குடும்பத்தில் எடுக்கப்பட்ட பெரும்பாலான தீர்மானங்கள் சுவாமி முன்பாக வைக்கப்பட்டு, அவரது இறுதியான முடிவு செயல்படுத்தப்பட்டது. §§

எல்லோரும் கோயிலுக்கு செல்வதை சுவாமி ஊக்குவித்தார். நல்லூர் கோயிலில் வருடம் ஒரு முறை நடைபெற்ற தேர்த்திருவிழா தொடங்கி இருந்தது. ஆனால் என் மாமனார் தூங்கிக்கொண்டு இருந்தார், மற்றும் நாங்கள் அவர் உத்தரவு இல்லாமல் எப்போதும் கிளம்பியது இல்லை. காலை 7 மணி ஆகியிருந்தது, மற்றும் 8 மணிக்கு உற்சவ மூர்த்தி கோயிலை விட்டு வெளியே வந்து விடுவார். திடீரென்று எங்கள் வீட்டிற்கு முன்பாக தோன்றிய சுவாமி, “நீ வீட்டில் என்ன செய்துக்கொண்டு இருக்கிறாய்? வெளியே வந்து கோயிலுக்கு புறப்படு! ஆறுமுகம் வருடத்திற்கு ஒரு முறை வந்து எல்லோருக்கும் தனது ஆசிகளை வழங்குகிறார். கிளம்பு!” என்று கத்த ஆரம்பித்துவிட்டார். அவர் மக்கள் மீது ஆட்சி செய்யும் நல்லூரான் போலவே இருந்தார். அவர் எல்லோரையும் பெயர் சொல்லி அழைத்தார். §§

என் தாயார் நல்லூரானின் மிகப்பெரிய பக்தையாக இருந்தார். நாங்கள் நல்லூருக்கு அருகில் வாழ்ந்த போது, அவர் கோயில் மணியின் ஓசைக்கு ஏற்ப தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இருந்தார். காலை 4 மணிக்கு எழுந்து, “என் நல்லூரான் எழுந்து விட்டான்,” என்று கூறுவார். சுவாமி பெரும்பாலும் ஏதாவது திண்ணை நாற்காலிகளில் அமர்ந்து இருப்பார். சுவாமி என் தாயாரை பார்க்கும் போது, “என்னை தெரிகிறதா? நான் தான் உன் நல்லூரான்,” என்று சொல்வது போல் இருந்தது. அவர் யாழ்ப்பாண மக்களுக்கு பக்கபலமாக, நல்லூரானாக இருந்தார். §§

விதானையார் யோக சுவாமியின் குடிசைக்கு அருகே வாழ்ந்தார் மற்றும் அவர் சுவாமியின் வாழ்நாள் நண்பனாக இருந்தார். எப்போதும் உற்சாகமாக இருந்த அவர், யோக சுவாமியுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டு இருப்பார். “நான் அப்போது செல்லப்பசுவாமியுடன் இருந்தேன். அவர் யோகநாதனை தள்ளிவிட்டு, துரத்தி அனுப்பியதை பார்த்து இருக்கிறேன். ஆனால் இப்போது அவரிடம் பேரும் புகழும் இருக்கிறது, மற்றும் நான் அவரை நாடி வரவேண்டி இருக்கிறது!” என்று கூறினார். யோக சுவாமிக்கு விதானையார் பிடித்து இருந்தது மற்றும் அவரது விசித்திரமான வழிகளை பொறுத்துக்கொண்டார். §§

அவர் எப்போதாவது தனக்கு வழங்கப்பட்ட காணிக்கைகளை வாங்க மறுப்பார், மற்றும் சிலசமயங்களில் அந்த உணவு பதார்த்தங்களை தோட்டத்தில் சென்று புதைக்குமாறு கேட்டுக்கொள்வார். “இந்த உணவை காகங்களும் சாப்பிடக்கூடாது. இது காகங்கள் சாப்பிடுவதற்கும் உகந்ததாக இல்லை!” என்று கடிந்து கொள்வார். ஒரு நாள் அன்பர் ஒருவர் ஒரு தட்டு நிறைய காணிக்கைகளுடன் ஆசிரமத்திற்கு வந்தார். அந்த தட்டின் மத்தியில் ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அந்த காலத்தில் ஐநூறு ரூபாய்க்கு அதிக மதிப்பு இருந்தது. அந்த பணம் சுவாமிக்கு பிடிக்காத ஒரு வியாபாரத்தில் இருந்து வந்து இருந்தது. அதனால் அன்பர் அந்த காணிக்கையை வழங்கிக்கொண்டு இருந்த போது, சுற்றி இருந்த மக்கள் எல்லோரும் சுவாமி என்ன செய்யவிருக்கிறார் என்று தெரிந்துகொள்ளும் ஆவலுடன் அமர்ந்து இருந்தனர். §§

சுவாமி வழக்கமாக, அத்தகைய காணிக்கைகளை ஏற்றுக்கொள்ளமாட்டார். தனது நிராகரிப்பை வலுப்படுத்த, அந்த தட்டு மற்றும் அதில் இருக்கும் பொருட்களை வலுவாக வீசி எரியவும் செய்வார். ஆனால் இந்த முறை எல்லோருக்கும் ஆச்சரியப்படும் வண்ணம், அவர் அந்த காணிக்கையை வந்திருந்தவர்களுக்கு பகிர்ந்து அளிக்குமாறு ஒரு அன்பரிடம் கேட்டுக்கொண்டார். “அதில் ஒரு பகுதி திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக, தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்திருக்கும் ஒரு ஏழை குடும்பத்திற்கு வழங்க வேண்டும். அதில் ஒரு பகுதி தேநீர் கடையை நடத்தி வரும் ஒரு நேர்மையான அன்பருக்கு வழங்கவேண்டும். அவர் அதை பயன்படுத்தி தனது கடையில் மோர் வியாபாரத்தை தொடங்கி, தனது வருமானத்தை அதிகரித்து கொள்வார்.”(அவர் அவ்வாறே செய்து, தனது வியாபாரத்தை கணிசமாக அபிவிருத்தி செய்துக்கொண்டார்). மேலும் சுவாமி, “அதில் நூறு ரூபாயை தனியாக வைத்திருந்து, விதானையாரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல பயன்படுத்திக்கொள்ளுங்கள். அவருக்கு உடல்நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டேன். அவர் பணத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பார், அதனால் பணத்தை பிறகு திருப்பித்தந்தால் போதும் என்று அவரிடம் சொல்லுங்கள். அப்படி சொன்னால் அவர் ஏற்றுக்கொள்வார்.” §§

அவர் வீட்டிற்குள் நுழையும் போது, விதானையார் தன் வீட்டு வாசலில் அமர்ந்து இருந்தார். அவர் உடலுறுதியுடன் அமர்ந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அன்பர், அவர் உடல்நலம் பற்றி விசாரித்தார். விதானையார் தான் நன்றாக இருப்பதாக பதில் அளித்தார். அதனால் அந்த அன்பர் சுவாமி வழங்கச் சொல்லிய பணத்தை வழங்கினார். சுவாமி சொன்னதை போலவே, முதலில் மறுத்த விதானையார், அதை பின்னார் திருப்பித் தரலாம் என்ற நிபந்தனையின் பேரில் ஏற்றுக்கொண்டார். §§

அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அன்பர் ஆசிரமத்திற்கு திரும்ப முடிவு செய்து கிளம்பிய போது, விதானையாரின் மகள் அவரிடம் தனியாக பேசவேண்டும் என்று சைகை காண்பித்து, தன் தந்தை தீவிர காய்ச்சலால் அவதிப்படுகிறார் என்றும், ஆனால் அதற்கு தகுந்த நடவடிக்கையை எடுக்க அனுமதிக்காமல் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார் என்றும் கூறினார். அந்த அன்பர் இதை புரிந்துக்கொண்டு, அவரை மருத்துவரிடம் அழைத்து செல்லுமாறு சுவாமி தனக்கு உத்தரவிட்டுள்ளதாக விதானையாரிடம் குறிப்பிட்டார். “நீங்கள் வரவில்லை என்றால், சுவாமி என்னை கடிந்து கொள்வார். அவரது கண்டிப்பு பற்றி உங்களுக்கு தெரியும்,” என்று கெஞ்சினார். “தயவு செய்து என்னுடன் வாருங்கள். சுவாமியை திருப்தி படுத்துவதற்காக மட்டுமாவது நீங்கள் என்னுடன் வரவேண்டும்" என்று மேலும் மன்றாடினார். §§

விதானையார் சம்மதித்தார், மற்றும் யோக சுவாமியை குறிப்பிட்ட மருத்துவரை சந்திக்க, அவர்கள் கிளம்பினார்கள். விதானையாரை பரிசோதித்த வைத்தியர், நோயாளி ஒரு வாகனத்தில் வந்து இருந்தாலும், “இவருக்கு இரட்டை நுரையீரல் காய்ச்சல் தாக்கியுள்ளது, இவரை இந்த நிலையில் இங்கே அழைத்து வந்ததே தவறு” என்று வசைமாரி பொழிந்தார். ஆனால் அன்பர் நடந்தது அனைத்தையும் விவரித்தவுடன், மருத்துவர் புரிந்துகொண்டார். அவர் சில மருந்துகளை வழங்கிய பிறகு, விதானையார் வீட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தி, அடுத்த நாள் காலையில் தான் வந்து அவரை பரிசோதிப்பதாகவும் குறிப்பிட்டார். ஒரு விலையுர்ந்த புதிய நுண்ணுயிர்க் கொல்லியாக இருந்த அந்த மருந்தின் விலை, மருத்துவரை சந்திப்பதற்காக சுவாமி ஒதுக்கிய தொகைக்கு நிகராக இருந்தது. §§

சுவாமி திருமணங்களை நிச்சயம் செய்தார், குழந்தைகளுக்கு பெயரிட்டார், அன்பர்கள் புதுமனை வாங்குவதற்கு உதவி செய்தார், அவர்களுக்கு வேலைகளை வாங்கித் தந்தார் மற்றும் பொதுவாக எல்லோரையும் கவனித்து வந்தார். அவர் யாழ்ப்பாணம் முழுவதிலும் தனது கவனத்தை செலுத்தி, மக்களுக்கு தேவையானது மற்றும் தகுதியானது சென்று சேர்வதை உறுதி செய்துக்கொண்டார். அவர் தொடர்ந்து வழங்கிகொண்டு இருந்தார். அவர், “நாம் கொடுத்து வாழ்ந்த பரம்பரையை சேர்ந்தவர்கள். நாம் எதற்கும் தகுதி இல்லாமல், சுயநலமாக மற்றும் பொறாமையுடன் இருப்பவர்களுக்கும் நன்கொடைகளை வழங்குகிறோம்.” §§

பல வருடங்களாக யோக சுவாமியை தரிசித்து வந்ததால், தான் பெற்ற பலன்களை பற்றி அரியாலை பள்ளி ஆசிரியர் பஞ்சாட்சரம் வழங்கிய தகவலை இந்துமதி அம்மா பதிவு செய்துள்ளார். §§

திருமணமாகி ஒரு வருடமாகியும் எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. நிதி நெருக்கடி இருந்ததால், நாங்கள் அதை நினைத்து வருந்தவில்லை. இரண்டு வருடங்கள் கழிந்தும், எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இந்த முறை நாங்கள் குருதேவாவை தரிசிக்க சென்ற போது, “இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்பது தானே உங்களுக்கு இருக்கும் கவலை?” என்று அவர் கேட்டார். “ஆம், குருவே,” என்று நாங்கள் பதில் அளித்தோம். அதன் பிறகு அவர் ஒரு கொத்தில் இருந்து ஒரு பெரிய திராட்சையை பறித்து, என் மனைவியிடம் கொடுத்து, “இதை நீ மட்டுமே சாப்பிடவேண்டும். வேறு யாரிடமும் கொடுக்கககூடாது,” என்று கூறினார். என் மனைவியும் சுவாமி அறிவுறுத்திய படியே செய்தாள். அவள் கருவுற்று இருக்கிறாள் என்பது ஒரு மாதம் கழிந்து எங்களுக்கு தெரியவந்தது. எங்களுக்கு இரண்டு வருடங்களாக குழந்தை இல்லை என்பதால், எங்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பதாக கிராமத்தில் ஒரு வதந்தி இருந்தது. இதை அறிந்து இருந்த குருதேவா, எங்களுக்கு ஒரு பரிகாரத்தை வழங்கினார்.§§

நேரம் கிடைக்கும் போதெல்லாம், நாங்கள் குருதேவாவை தரிசிக்க சென்றோம். அந்த காலத்தில், அவர் எங்கள் வேதனைகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பதில் அளித்தார். மற்ற விஷயங்களை பற்றி பேசிய போது, எங்களுக்கு மறைமுக பதில்கள் வந்தன. ஆனால் எங்களது பிரார்த்தனைகளுக்கு எப்போதும் ஒரு பதில் இருந்தது. குருதேவாவின் தரிசனம் எங்களது பாதையை மெதுவாக திசை மாற்றியது. பிறப்பு மற்றும் இறப்பின் பாதளத்தை கடப்பதற்கு மற்றும் மனதின் மீது தேவையான கட்டுப்பாட்டை நாடி அமைதியை பெறும் ஆசையுடன், நாங்கள் அவரிடம் செல்ல ஆரம்பித்தோம். §§

1963 ஆம் ஆண்டில், எங்களால் குருதேவாவை இரண்டு முறை மட்டுமே சந்திக்க முடிந்தது. நாங்கள் முதல் முறையாக ஏப்ரல் மாதத்தில் சென்றோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன மற்றும் மூன்றாவது குழந்தையை எதிர்பார்த்து இருந்தோம். நாங்கள் அவரது அனுமதியுடன் ஆசிரமத்தில் நுழைந்து, தாமரை மலர் போன்ற அவரது பாதங்களில் விழுந்து வணங்கினோம். அவர் எங்களை வரவேற்று உட்கார வைத்து, இரண்டு குழந்தைகளின் பெயரை கேட்டார். அதன் பிறகு அவர், “மூன்றாவது குழந்தை எங்கே?” என்று கேட்டார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் தான் என்று பதில் அளித்தோம். சுவாமி முகத்தில் புன்னகையுடன், “இன்னொரு சிறுவனும் இங்கே தான் இருக்கிறான்,” என்று கூறினார். ஆமாம், எங்களுக்கு மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தான். §§

மருத்துவர் கே. நித்தியானந்தன் தனது அனுபவத்தை கூறுகிறார்:§§

சுவாமியின் சீடர்களாக இருந்த தம்பதிக்கு, பத்து வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தது. ஒரு சிவராத்திரி அன்று அவர்கள் சுவாமியின் முன்பாக அமர்ந்து உபவாசம் இருந்தார்கள். சுவாமி தாயின் முகத்தை பார்த்து ஒரு சிறுவனின் பெயரை குறிப்பிட்டார். ஒரு வருடத்திற்குள், அந்த பெண்மணிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது மற்றும் அவர்கள் அந்த குழந்தைக்கு சுவாமி குறிப்பிட்ட பெயரை சூட்டினார்கள். §§

ஒரு முறை ஒரு நபர் பண மோசடி செய்த குற்றத்தில் சிக்கி இருந்தார். அவர் மீது நடந்த விசாரணையில், அவர் செய்யாத குற்றங்களும் சுமத்தப்பட்டு இருந்தன. அவர் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம், சட்ட நடவடிக்கைக்கு முன்னேற்பாடாக வழங்கவேண்டிய கட்டணங்களுக்கு செலுத்தி இருந்ததால், அடுத்த நாள் நடக்கவிருந்த தனது வழக்கிற்கு வழக்கறிஞர் வாதாட போதுமான பணம் இல்லாமல் இருந்தார். இலங்கையில், வழக்கை வாதாடுவதற்கு முன்பாக, வழக்கறிஞர்களுக்கு கட்டணங்களை செலுத்தி விடவேண்டும். இல்லையென்றால், அவர்களால் தனது கட்சிக்காரர் சார்பாக நீதிமன்றத்திற்க்குள் நுழைய முடியாது. §§

அவர் மனைவி விசாரணை முழுவதும் அவருக்கு விசுவாசமாக இருந்து கையில் பணம் ஏதும் இல்லாமல் குடும்பத்தை நிர்வகித்து வந்தாள். ஆனால், அவளால் சமாளிக்க முடியாத நிலை வந்த போது, சுவாமியை தரிசித்து வரலாம் என்று அவள் பரிந்துரைத்தாள். அவர்கள் கிளம்பி, சுவாமியின் அறைக்குள் நுழைந்ததும், சுவாமி அவர் மீது அக்கறை செலுத்தவில்லை. அந்தி சாய்ந்து இருந்தது மற்றும் அந்த தம்பதிக்கு சுவாமியிடம் இருந்து அழைப்பு ஏதும் வரவில்லை. அவர்களுக்கு கவலை அதிகரித்தது, ஆனாலும் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். §§

இறுதியாக, சுவாமி அன்பர்களை கிளம்புமாறு உத்தரவு வழங்க ஆரம்பித்தார். அவர் ஒவ்வொரு அன்பராக தன்னிடம் அழைத்தார் அல்லது நீங்கள் கிளம்பலாம் என்று நேரடியாக கூறி அனுப்பி வைத்தார். அந்த அறையில் இறுதியாக அந்த தம்பதிகள் மட்டுமே அமர்ந்து இருந்தார்கள். சுவாமி நடந்தது அனைத்தையும் அறிந்து இருந்தார். ஒரு தீவிர பக்தையாக இருந்த மனைவி, இந்து பாரம்பரியத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, தனது கணவனுக்கு இறுதி வரை துணை நின்றாள். அவளை முன்னுக்கு வருமாறு அழைத்தார் சுவாமி, ஒரு வாழை இலையில் மடித்து வைத்திருந்த ரூபாய் நோட்டுக்களை அவளிடம் வழங்கினார். அது வழக்கறிஞர்கள் கட்டணத்திற்கு போதுமானதாக இருந்தது. விசாரணை நடந்தது, மற்றும் அந்த அன்பருக்கு வழக்கில் வெற்றியும் கிடைத்தது. இந்த சம்பவங்கள் மற்றும் அவர் மனைவியின் நற்பண்புகள் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, அவர் தன்னிடம் இருந்த பல தவறான வழிகளை சரி செய்துக்கொண்டார். §§

வழக்கமாக சுவாமி வழங்கிய ஆறுதல் நுணுக்கமாகவும் மறைமுகமாகவும் இருந்தது. ஒரு விபத்திற்கு தான் செய்த தவறு தான் காரணம் என்று பழி சுமத்தப்பட்டதால், வாடிய தனது மனதை சுவாமி எப்படி அமைதிப்படுத்தினார் என்பதை பற்றி ஸ்ரீ எம். பிரசாத் கூறுகிறார். இந்த கதை சிவ தொண்டன் பத்திரிகையில் வந்துள்ளது. §§

சுமார் 1952 வாக்கில், நான் அரசு அலுவலராக யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்த போது, காயலின் மறுபுறத்தில் ஒரு மிகப்பெரிய சமயத்திருவிழா நடந்துகொண்டு இருந்தது. மக்கள் அந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, ஒரு விசைப்படகில் கூட்டம் கூட்டமாக சென்றுக்கொண்டு இருந்தனர். திருவிழாவில் இருந்து திரும்பும் போது, அந்த படகின் கொள்ளளவை காட்டிலும் அதிகமான மக்கள் ஏறிக்கொண்டார்கள். படகோட்டியால் மக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. துரதிஷ்டவசமாக படகு கரையில் இருந்து சிறிது தூரம் சென்று இருக்கையில் மூழ்கியது, மற்றும் இதன் காரணமாக பலர் உயிர் இழந்தனர். காயமடைந்தவர்களுக்கு என்னால் இயன்ற உதவியையும், உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்தேன். §§

எனது கவனக்குறைவுக் காரணமாக இந்த விபத்து நடந்தது என்றும் பலர் என் மீது குற்றம் சுமத்தினார்கள். என் மனம் பெரும் வேதனையை அனுபவித்தது. யோக சுவாமியிடம் சென்று, அவரை வணங்கி ஆசிகளை பெற்று வருமாறு எனது நண்பன் அறிவுறுத்தினான். நான் விபத்து நடந்து ஒரு வாரத்திற்கு பிறகு, அவன் சொன்ன அறிவுரையை கடைப்பிடித்தேன். நான் எதற்காக வந்தேன் என்பதை சுவாமி அறிந்து இருக்கவேண்டும், ஆனால் இருபது நிமிடங்கள் கடந்தும் சுவாமி எதையும் பேசாததால் நான் கிளம்ப தயாரானேன். அப்போது சுவாமி என்னிடம், “எந்த கவலையும் வேண்டாம். நான் உனது சாட்சியாக இருக்கிறேன்,” என்றார். அவர் கூறிய வார்த்தைகள் எனக்கு அளித்த ஆறுதல் மற்றும் மன அமைதியை என்னால் விவரிக்க முடியவில்லை. §§

யோக சுவாமியின் அற்புத வழிகளை தனது வாழ்நாளில் பலமுறை சந்தித்து இருந்த ஐக்கிய இராச்சியத்தின் ஜனநாயகம் என்பவர், தனது அனுபவத்தை இங்கே பகிர்கிறார்: §§

தெளிவு குருவின் திருமேனி காண்டல்§

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்§

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்§

தெளிவு குருஉரு சிந்தித்தல் தானே” §

என்று திருமூலர் அருளிய மந்திரத்திற்கு ஏற்ப, நான் மற்றும் எனது சந்ததியர்கள் அறிந்திருந்த ஒரு ஆன்மீக வழிகாட்டியாக குரு யோகர்சுவாமி நான்கு தலைமுறைகளுக்கு நிலைத்து இருந்தார். அவரது கண்காணிப்பில் நாங்கள் இருந்ததை எங்களது பாக்கியமாக கருதினோம் மற்றும் அந்த உணர்வை எங்களால் வார்த்தைகளை கொண்டு விவரிக்க முடியவில்லை. §§

சுவாமி சைவ சமயம் சார்ந்த தனது சிவ தொண்டன் பத்திரிகையை வெளியிடும் போது, என் தாயிடம் ஆய்வுரைகள் மற்றும் கட்டுரைகளை எழுதுமாறு கேட்டுக்கொண்டார். இந்த கட்டுரைகளுக்கு தலைப்புக்களை சுவாமி தேர்வு செய்து இருந்தாலும், அவை எழுத்தாளனுக்கு நுணுக்கமாக பொருந்தி இருந்தது. அதில் ஒரு கட்டுரை, “நதி கரைபுரண்டு ஓடத்தொடங்கினால், யார் அழுதாலும் நிற்காது,” என்ற தலைப்பில் இருந்தது. என் தாயார் ஒரு கட்டுரையை எழுதி, சுவாமியிடம் சமர்ப்பித்தார். அவர் அதை தனக்கு வாசித்துக் காட்டுமாறு கேட்டுக்கொள்ள, எனது தாயும் உடனடியாக வாசித்துக் காண்பித்தார். ஒரு சில நாட்களில், எனது தாயார் கருவுற்றார். இந்த செய்தியை கேட்டு குடும்பமே மகிழ்ச்சியில் மூழ்கி, சுமார் பன்னிரண்டு வருடங்கள் கழித்து வீட்டில் ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்க காத்து இருந்தது.§§

குழந்தை பிறந்ததும் எங்கள் குல வழக்கப்படி, சுவாமிகளின் ஆசிகளை பெற அந்த குழந்தையை அவரது ஆசிரமத்திற்கு அழைத்து சென்றோம். சுவாமி தனது ஆசிரம வளாகத்தில் ஒரு பேயை போல சுற்றிக்கொண்டு, எல்லோரையும் அதிர்ச்சியால் நடுங்க செய்தார். “சுவாமி எங்கள் வீட்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நாங்கள் உங்களுக்கு இனிப்புகளை கொண்டு வந்துள்ளோம்,” என்று நாங்கள் அவரிடம் கேட்டுக்கொண்டோம். சுவாமி உடனே, “நான் அதை தொட மாட்டேன். வேண்டுமானால் அதை உன் தாயிடம் கொடு,” என்று சுவாமி உடனே மறுத்துவிட்டார். நாங்கள் அதிர்ச்சி, வேதனை மற்றும் ஏமாற்றம் கலந்த அச்சத்துடன் வீடு திரும்பினோம். மூன்று வாரத்தில் அந்த குழந்தை வயிற்றுப்போக்கால் இறந்து விட்டது. எதிர்காலத்தில் நடக்கவிருந்ததை பற்றி எச்சரிக்கவே, என் தாயிடம் அந்த கட்டுரையை எழுத சுவாமி கேட்டுக்கொண்டார் என்பதை நாங்கள் பின்னர் புரிந்துகொண்டோம்.§§

சிலமயங்களில் சுவாமி அன்பர்களுக்கு உதவி செய்ய மறுத்து, அவர்களுக்கு தரிசனம் தராமல் திருப்பி அனுப்பியிருக்கிறார். இனி கட்டுறுதியான உடலுடன் காவல்துறை அலுவலராக இருந்த இரயில் நிலையத் தலைவர் ராசையா, சுவாமியின் தீவிர சீடனாக மாறிய கதையை பார்க்கலாம். தலைநகரில் வேலை செய்த யோக சுவாமியின் சீடர்கள் வழக்கமாக நீண்ட பயணம் மேற்கொள்வதை போல, தான் கொழும்புவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இரயிலில் பயணம் செய்த நாளை பற்றி ராசையா குறிப்பிட்டார். அவர் தனது பயணம் முழுவதும் தோள்பட்டை பையில் பழங்களை சுமந்து கொண்டு, கொழும்புத்துறையில் இறங்கி சுவாமியின் ஆசிரமத்தை நோக்கி முன்னேறினார். அவர் ஆசிரமத்தில் நுழைந்ததும், தனது குருவிற்கு வணக்கம் செலுத்தி, அவரது காலடியில் பழங்களை வைத்து வணங்கினார். சுவாமி அவரிடம் கீழே உட்காரும் படி கேட்டுக்கொண்டார். அதன் பிறகு சிறிது நேரத்திற்கு எதுவும் நடைபெறவில்லை, ஆனால் சுவாமி திடீரென்று, “நீங்கள் போகலாம்! கிளம்புங்கள்!”என்று உத்தரவிட்டார். §§

இந்த உத்தரவை கேட்ட ராசையா, தன்னை சுவாமி எதற்காக திருப்பி அனுப்புகிறார் என்பது தெரியாமல் அதிர்ச்சி அடைந்து செயலற்று நின்றார். தனது உத்தரவிற்கு மதிப்பு அளிக்காததால், இலங்கை காவல்துறையினர் தீவிர இராணுவ பயிற்சி மேற்கொண்டு இருப்பார்கள் என்பதை அறிந்திருந்த யோக சுவாமி ஒரு தேகப்பயிற்சி அளிக்கும் ஒரு சார்ஜன்ட் போல, “ஸ்டான்ட் அப் (எழுந்து நில்)!” என்று கூச்சலிட்டார். ராசையா எழுந்து நின்றார். “அபவுட் பேஸ் (திரும்பி நில்)!” என்றதும் ராசையா நன்றாக பயிற்சி பெற்ற நுணுக்கத்துடன் திரும்பினார். “லெஃப்ட், ரைட், லெஃப்ட், ரைட்" என்று யோக சுவாமி குரலில் ஏற்ற இரக்கத்துடன் ஆணையிட, ராசையா கதவிற்கு வெளியே சென்று ஆசிரம வளாகத்திற்குள் நுழைந்தார். “லெஃப்ட் ஃபேஸ் (இடப்பக்கம் திரும்பு),” என்று ஆணை வந்தது, “லெஃப்ட், ரைட், லெஃப்ட்,” என்றதும் அவர் வாசல் கதவை அடைந்தார். “ நில்! கதவை திற! லெஃப்ட், ரைட். நில்! கதவை மூடு! ரைட் பேஸ் (வலப்பக்கம் திரும்பு)! லெஃப்ட், ரைட்…” மற்றும் யோக சுவாமியின் குரலின் ஒலி மங்கியதும், ராசையா தான் தெருவில் முன்னேறி செல்வதை கண்டார். குரு அவரை திருப்பி அனுப்பிய முறை, அவரது வாழ்நாள் முழுவதும் ஒரு புதிராகவே இருந்தது. இந்த கதையை கேட்ட மற்றவர்கள், இதன் சம்பவத்தின் மூலம், காவல்துறையினருக்கு அவ்வளவாக பழக்கம் இல்லாத பணிவை, யோக சுவாமி தனது சீடனுக்கு கற்றுத்தந்ததாக கருதினார்கள். §§

பல வருடங்களாக எஸ். சண்முகசுந்தரம் யோக சுவாமிக்கு நெருக்கமாக இருந்தார், மற்றும் அவர் ஒரு கண்காணிப்பாளராக ஆசிரமத்திற்கு பலர் வந்து போவதை கவனித்து இருந்தார். பல வருடங்களுக்கு பிறகு, கலிபோர்நியாவில் சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமியின் அமெரிக்க சீடர்களுடன், அந்த அனுபவங்களை அவர் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். §§

சிவயோக சுவாமி பணக்காரர் மற்றும் ஏழை என்ற பாகுபாடு பார்த்தது இல்லை. தனது சீடர்கள் எந்த சாதி அல்லது மதத்தை சார்ந்தவர்கள் என்பதை அவர்கள் பொருட்படுத்தியது இல்லை. அவரை எப்போது சந்திக்க சென்றாலும், அவர் ஆணாக இருக்கட்டும் அல்லது பெண்ணாக இருக்கட்டும், சுவாமியிடம் தங்களுக்கு வரவேற்பு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பதை யாராலும் யூகிக்க முடியாமல், ஒரு மர்மமாகவே இருந்தது. சுவாமியின் மனநிலையை பொறுத்து, ஒருவரை அன்புடன் வரவேற்பதும் அல்லது “என்னால் இன்று உங்களை பார்க்க முடியாது,” என்று சொல்லி அவரை துரத்தி அனுப்புவதும் ஒரு தினசரி நிகழ்வாக இருந்தது. அந்த மனநிலை ஒரு நபர் எந்த நோக்கத்துடன் சுவாமியை தரிசிக்க வந்தார் என்பதை பொறுத்து மாறியது. பூமியில் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் மற்றும் செல்வந்தர்கள் மற்றும் அதே சமயத்தில மிகவும் அடிமட்டத்தில் இருந்தவர்கள் மற்றும் ஏழை எளிய மக்களும் சுவாமியின் ஆசிரமத்தில் தென்பட்டனர். சிலசமயங்களில் இரண்டு சாராரும், அவர்கள் வெகு தொலைவில் இருந்து வந்து இருந்தாலும், துரத்தி அனுப்பப்பட்டனர். ஆனால் சிலசமயங்களில் அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. §§

சுமார் 200 மைல் தூரத்தில் ஒரு செழிப்பான மலைப்பிரதேசத்தில், ஒரு உயர்ந்த சமூக அந்தஸ்துடன் வாழ்ந்த நபர், சுவாமியை ஒரு நாள் சந்திக்க வந்தார். அவர் கற்றறிந்தவராகவும் செல்வந்தராகவும் இருந்தார். அவர் தன் செல்வம் மற்றும் அந்தஸ்து காரணமாக, மற்றவர்களுடன் இயல்பாக பழகவில்லை. ஆனால் அவர் யோக சுவாமியின் சீடராக இருந்தார் மற்றும் அவர் அதற்கு முன்பு பலமுறை சுவாமியை சந்தித்து இருந்தார், மற்றும் சுவாமியும் அவரது வீட்டிற்கு சென்று ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். §§

அன்றைய தினம் அவரும் அவரது மனைவியும், சுவாமிக்கு வழங்க ஒரு வெள்ளி தட்டு நிறைய பலவிதமான பழங்கள் மற்றும் இனிப்புக்களுடன், யாழ்ப்பாணம் வரை வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்தனர். சுவாமி அவர்களை வரவேற்பதற்கு முன்பாக, அவர்கள் குடிசைக்குள் நுழைந்து, சுவாமிக்கு முன்பாக குனிந்து அவரது காலடியில் அந்த தட்டை வைத்தார்கள். அப்போது அந்த தம்பதியர் காதில் இடி இடிப்பது போல சத்தம் கேட்டது. §§

ஆமாம், சுவாமி பேசியது தான் அப்படி கேட்டது. அவர் கண்களில் கோபம் வெளிப்படையாக தெரிய, சுவாமி உரத்த குரலில், “இதை எடுத்து செல்லுங்கள். இவை எதுவும் எங்களுக்கு வேண்டாம். நீங்கள் அவற்றை எடுத்து செல்லலாம். உங்களை சந்திப்பதற்கு என்னிடம் இப்போது நேரம் இல்லை. எதற்காக காத்து இருக்கிறீர்கள்? அதை எடுத்து செல்லுங்கள் என்று என்னால் ஒரு முறை தான் சொல்ல முடியும். புரிந்துகொள்ளுங்கள்,” என்று கத்த ஆரம்பித்தார். §§

பாவம் அவர்கள். அவர்கள் அத்தகைய நடவடிக்கையை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அச்சத்தில் நடுங்கிக்கொண்டு பேசமுடியாமல் இருந்தார்கள். அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த வெள்ளி தட்டை எடுத்துக்கொண்டு, அதிக அவமானத்துடன் அமைதியாக அந்த குடிசையை விட்டு கிளம்பினார்கள். குடிசையில் இருந்த சீடர்கள் அவர்களை நினைத்து பரிதாபப்பட்டார்கள். §§

அந்த தம்பதி கிளம்பியதும், சுவாமி சத்தகமாகவும் உற்சாகமாகவும் சிரித்து மகிழ்ந்தார். சிரித்து முடித்ததும், சுவாமி அன்பர்களிடம், “நான் அவர்கள் மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இங்கே வந்து இருந்தார்கள். அவர்கள் ஒரு இளைஞனை மனதில் முடிவு செய்து இருக்கிறார்கள், ஆனால் அவன் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அதனால் நான் தலையிட்டு அவன் சம்மதத்தை பெறவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். என்ன ஒரு வேடிக்கை. நான் ஒன்றும் திருமண தர்கர் இல்லை! எனக்கு லஞ்சம் கொடுக்க எதையெல்லாம் கொண்டு வந்தார்கள் என்று பாருங்கள். இவர்கள் படித்த முட்டாள்கள்,” என்று கூறினார். §§

image§

யோக சுவாமி இந்தியாவிற்கு யாத்திரை மேற்கொண்ட போது, சிவபெருமானின் அருணாச்சல மலையில் ஒரு பிரபலமான முனிவராக இருந்த ரமண மகரிஷியை சந்தித்தார். அந்த சந்திப்பு தனது எளிமையால் எல்லோர் கவனைத்தையும் கவர்ந்தது. அறிந்துக்கொள்ள முடியாததை அறிந்து இருந்த இருவரும் ஒரு முழுமையான ஆன்மீக கூட்டுறவில் ஒரு வார்த்தையும் பேசாமல் அமர்ந்து இருந்தனர். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

சிலர் அந்த முனிவரிடம் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே சென்றிருந்தனர். அந்த குறுகிய சந்திப்புக்களின் போது, அவர்களின் வாழ்நாளுக்கு தேவையானதை சுவாமி வழங்கி இருந்ததால், அவர்களுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. ஒரு நாள் யோக சுவாமியை பார்க்க சென்றுகொண்டிருந்த ஒரு இளைஞன், நல்லூர் கோயிலுக்கு அருகில் வந்து நின்றான். அவன் முருகப்பெருமானின் சந்நிதியில் வழிபாடு நடத்திய பிறகு, சுவாமியின் ஆசிரமத்திற்கு எப்படி செல்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது, ஒரு வாகனத்தில் சென்றுகொண்டு இருந்த சுவாமி, அவனுக்கு அருகில் வாகனத்தை நிறுத்தி, வண்டிக்குள் ஏறுமாறு உத்தரவிட்டு, வாகனத்தை ஆசிரமத்திற்கு ஓட்டிச் செல்லுமாறு வாகன ஓட்டியிடம் கூறினார். அன்று சுவாமி அவனது கடந்தகாலம் மற்றும் நிகழ்காலத்தை பற்றி அவனிடம் வெளிப்படுத்தி, இனி தனக்கு சிறந்த கர்மவினைகளை உருவாக்கிக்கொள்ள எப்படி வாழ்க்கையை வாழவேண்டும் என்பதையும் குறிப்பிட்டார். அன்று நடைபெற்ற வலுவான சந்திப்பு, அந்த சீடனின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருந்தது. அவன் தன் வாழ்நாள் முழுவதும் அந்த தரிசனத்தை மனதில் பாதுகாப்பாக வைத்திருந்து, சுவாமியின் அறிவுரையை நுணுக்கமாக பின்பற்றினார். §§

ஆனால் மற்றவர்கள் முடிந்தவரை சுவாமியுடன் சுற்றிக்கொண்டு இருந்தார். அவர் அவர்களது வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்தார். அவர் கவனம் செலுத்தியவர்களில் விதானையாரும் ஒருவராக இருந்தார். அவரது உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் இனி அவர் குணமடைவதற்கு உடலில் போதுமான வலிமை இல்லை என்ற செய்தி சுவாமி காதுகளுக்கு எட்டியது. சுவாமி விதானையர் வீட்டிற்கு சென்று, ஒரு மங்களகரமான பாடலை பாடி, அவரது நெஞ்சில் விபூதியை பூசி, தன் ஆசிரமத்திற்கு திரும்பினார். சிறிது நேரம் கழித்து விதானையார் காலமானார் என்ற செய்தி வந்தது. §§

image§

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு யோக சுவாமி மூன்று முறை பயணம் மேற்கொண்டார். அவர் புனிதமான பாரதத்தைப பற்றி தெரிந்துகொள்ள வடக்கே வாரணாசி சிவன் கோயிலில் இருந்து தெற்கில் திருவண்ணாமலை மற்றும் மதராஸ் வரை பயணம் மேற்கொண்டார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ஒரு முறை சுவாமி இந்தியாவின் புனித யாத்திரையில் இருந்து இலங்கை திரும்பிய போது, செல்லையாபிள்ளை என்ற செல்லப்பசுவாமிக்கு நெருக்கமான சீடரை காண சென்றார். செல்லப்பசுவாமி உணவு அருந்துவதற்காக அந்த சீடரின் வீட்டிற்கு பலமுறை சென்று இருந்தார். அந்த சீடர் இறக்கும் தருவாயில் இருந்தார். சுவாமி அவரிடம், “சின்னதம்பி, நீ நீண்டகாலத்திற்கு முன்பே சென்று இருக்க வேண்டுமே, இன்னும் எதற்காக காத்து இருக்கிறாய்?” என்று கேலிக்கூத்தாக கேட்டார். செல்லையா சிரித்துக்கொண்டு, “என்னிடம் பயணச்சீட்டு இருக்கிறது மற்றும் பெட்டி படுக்கையும் தயாராக இருக்கிறது, ஆனால் இரயில் நகராமல் நிலையத்தில் உட்கார்ந்து இருக்கிறது. நீங்கள் என்னை வழியனுப்ப வேண்டும் என்பதற்காகத்தான் நான் காத்து இருந்தேன்,” என்று கூறினார். சுவாமி அவர் நெற்றியில் விபூதியை பூசி, அவருக்காக ஒரு பாட்டை பாடிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார். அன்று இரவு அந்த முதியவர் உயிர் பிரிந்தது. §§

பயணம் செய்தல் §

சுவாமி தனது பிற்கால வாழ்க்கை முழுவதும் கால்நடையாக, வாகனம் அல்லது இரயில் மூலம் பயணம் செய்துக்கொண்டு இருந்தார். அவர் சீடர்களை சந்திக்க கொழும்பிற்கு செல்வார், கிழக்கு பிராந்தியத்திற்கு செல்வார் அல்லது உள்நாட்டிற்குள் பயணம் செய்வார். அவர் எங்கே சென்றாலும், அவரது தரிசனத்தை பெற்று மகிழ்வதற்கு பல அன்பர்கள் அவரை நாடி வந்தார்கள். அவர் ஏதாவது ஒரு அன்பரின் வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்த மக்கள், அவருக்கு திருப்தி அளிக்கும் அல்லது அவருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் மனதிற்கு தோன்றிய காணிக்கைகளுடன் அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். தேங்காய்கள், பூக்கள், மலர்கள், பணம், புத்தகங்கள், ஆடை ஆகியவை அந்த காணிக்கைகளாக இருக்கும். “சுவாமிகள் ஒரு இடத்திற்கு வந்த போது, அருகில் இருந்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அவரை காண வந்தார்கள். வழக்கமாக சுவாமிகள் தங்கிய இடத்தில் ஒரு மிகப்பெரிய ஹோமம் நடத்தப்படும்,” என்று ச. அம்பிகைபாகன் குறிப்பிட்டார். §§

இலங்கையில் செழுமையான மலைப்பிரதேசத்தில் இருந்த தேயிலை தோட்டத்தில் ஒரு மேற்பார்வையாளராக இருந்த ஒரு அன்பரின் வீட்டிற்கு அவர் ஒரு முறை சென்று இருந்தார். இந்த அன்பரின் வீட்டு உரிமையாளர் அவரது குடும்பத்திற்கு ஒரு வீட்டை வழங்கி இருந்தார். அது வசதியாக இருந்தாலும், அந்த வீட்டிற்கு என்று தனியாக ஒரு கழிவறை இல்லை. அவர்கள் கழிவறையை பயன்படுத்த சிறிது தூரம் செல்ல வேண்டியிருந்தது. அந்த மேற்பார்வையாளர் தனது வீட்டிற்கு பின்புறத்தில் ஒரு கழிவறை கட்டித்தரவேண்டி, அந்த தேயிலை தோட்ட மேலாளராக இருந்த ஒரு ஆங்கிலேயருக்கு ஒரு மனு வழங்கி இருந்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. அந்த அன்பர் இதைப்பற்றி சுவாமியிடம் கூறியதும், சுவாமி அந்த மேலாளர் மறுத்த காரணத்தை அறிந்துகொண்டார். இந்த பணி நடைபெற்றால், மேற்பார்வையாளரின் நேரம் மற்றும் கவனம் தேயிலை தோட்டத்து நடவடிக்கைகளில் குறைந்துவிடும் என்று அவர் அஞ்சி அந்த மனுவை நிராகரித்ததை சுவாமி தெரிந்துகொண்டார். ஆனால் அந்த மேலாளர் அவர்களது வசதியை கவனத்தில் கொள்ளவில்லை. §§

இந்த சங்கடமான சூழ்நிலையை பற்றி அவர்கள் விவாதிக்கும் போது, சுவாமியின் சீடனாக இருந்த சாலை கட்டுமான குழுவின் தலைவரும் அருகில் இருந்தார். அந்த இடத்தில் ஒரே நாளில் ஒரு கழிவறையை கட்டித்தரமுடியுமா என்று சுவாமி அவரிடம் கேட்டார். தாம் மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்கிறோம் என்பதை நினைத்து அவர் மகிழ்ச்சி அடைந்து, தன்னிடம் பல கூலித்தொழிலாளிகள் வேலை செய்வதாகவும், தேவையான பொருட்கள் அனைத்தையும் தன்னால் ஏற்பாடு செய்யமுடியும் என்றும் கூறினார். மேற்பார்வையாளர் கட்டுமானப்பொருட்கள் மற்றும் தொழிலாளிகள் செலவை ஏற்க சம்மதித்தால், தன்னால் ஒரே நாளில் கழிவறையை கட்டித்தர முடியும் என்று அவர் கூறினார். சுவாமி கழிவறை கட்டவேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்து, அடுத்த நாள் பணியை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அன்று மாலை அந்த வேலை முடிவடைந்தது. தேயிலை தோட்ட மேலாளர் சிறிய கழிவறை இருப்பதை கவனிக்கவே இல்லை, மற்றும் அதைப்பற்றி யாரும் பேசிக்கொள்ளவில்லை. §§

வழக்கமாக சுவாமி இரயில் மூலமாக பயணம் செய்வார். இரயில் பெட்டியில், அவர் பல சக பணியாளர்களை சந்திப்பார். இரயில் பெட்டிகள் வழியாக சென்று பயணியர்களை சந்தித்து பேசும் போது, அவர் சிறப்பான உதவிகளை செய்ததாக அவரது சீடர்கள் உறுதியாக கூறுகிறார்கள். §§

ஒரு நாள் அவர் கொழும்பு நோக்கி இரயிலில் சென்றுகொண்டு இருந்தார். அவரது இரயில் பாதி தூரம் சென்று ஒரு நிலையத்தில் நின்றுக்கொண்டு இருக்கும் போது, வடக்கு நோக்கி செல்லும் இரயில் அங்கு வந்து சேர்ந்தது. காரணம் எதுவும் சொல்லாமல், சுவாமி தெற்குநோக்கி செல்லும் இரயிலில் இருந்து இறங்கி, யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் இரயிலில் ஏறினார். பின்பு அவர் தன்னை பலமுறை சந்திக்க வந்திருந்த ஒரு அன்பரிடம் நேராக சென்று, “நீ அதிருப்தியுடன் இருப்பது எனக்கு நன்றாக தெரிகிறது. இன்னொரு இரயிலில் இருக்கும்போது என்னால் உனது பயங்கரமான எண்ணங்களை உணர முடிந்தது,” என்று கூறினார். தனது உயிரை மாய்த்துக்கொள்வதைப் பற்றி சிந்தித்ததாக அந்த அன்பர் ஒப்புக்கொண்டார். அவர் மனதை பல பிரச்சனைகள் ஆட்க்கொண்டு இருந்தன, மற்றும் அதிலிருந்து விடுபெற தற்கொலையை தவிர அவருக்கு வேறெந்த வழியும் தென்படவில்லை. §§

சுவாமி சிரித்துக்கொண்டே, “உனக்கு தெரிந்தது அவ்வளவு தான். ஆனால் அது பல பிரச்சனைகளுக்கு தற்கொலை, ஒரு தொடக்கமாக தான் இருக்கும்,” என்று கூறினார். அதன் பிறகு அவர் அந்த அன்பரிடம் பேசி, வாழ்வை சரி செய்வது குறித்து சில வலுவான அறிவுறுத்தல்களை வழங்கினார். சுவாமியின் அறிவுரை மிகவும் வலுவாக இருந்து, நல்ல எதிர்காலத்திற்கும் உத்தரவாதம் அளித்ததால், அந்த அன்பரின் மனநிலை நேர்மறையாக மாறியது. கொழும்பு நோக்கி செல்லும் இரயிலில் ஏறுவதற்காக, சுவாமி அடுத்த இரயில் நிலையத்தில் இறங்கிக்கொண்டார். மீண்டும் அந்த நபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படாமல், இயல்பாக இருக்கிறாரா என்பதை தெரிந்துகொள்ள, யோக சுவாமி அவரை பலமுறை சோதித்துக்கொண்டு இருந்தார். §§

சிவ தொடண்டன் பத்திரிகையில் அறிஞர் பத்மாசனி இராசேந்திரம் பின்வரும் அனுபவத்தை பகிர்கிறார். பிற்காலத்தில் இன்னர்சேர்ச் என்ற பெயரில் சிவாய சுப்பிரமுனியசுவாமி நடத்தியதை போல, யோக சுவாமியும் குறைந்தபட்சம் ஒரு பயணக்கல்வி திட்டத்தை நடத்தியிருப்பார் போல தோன்றுகிறது. §§

image§

தனது குடிசைக்கு வந்த விருந்தாளிகள், கோயிலில் இருந்த சாதுக்கள், ஒரு திருவிழாவை கொண்டாடும் அன்பர்கள் என்று யோக சுவாமி எல்லோருக்கும் உணவு அளிப்பதை விரும்பினார். அவர் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி தானே சமைப்பார் அல்லது உள்ளூர் விவசாயிகள் உற்பத்தி செய்த பச்சை காய்கறிகள் நிரம்பிய சந்தையில் எதை வாங்கவேண்டும் என்று தெளிவான அறிவுறுத்தல்களை வழங்குவார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

நாங்கள் ஒரு முறை இந்தியா செல்ல விரும்பினோம், மற்றும் அந்த விருப்பத்துடன் நாங்கள் சுவாமிகளை பார்க்க விரும்பினோம். சுவாமிகள் எங்களிடம், “இந்தியாவை மறந்துவிடுங்கள். நாம் வேறொரு இடத்திற்கு பத்து நாட்களுக்கு சென்று வரலாம்,” என்றார். அன்று மாலையில் நாங்கள் மீண்டும் சுவாமியை சந்திக்க சென்றோம். நாம் ஒரு இடத்திற்கு சென்று, ஒரு வசதியான இடத்தில் தங்கலாம் என்று சுவாமிகள் கூறினார். நாங்கள் இரத்தினபுரம் கிளம்பினோம் மற்றும் வழியில் சுமார் பத்து நிமிடங்களுக்கு ஒரு அன்பரின் வீட்டிற்கு சென்றோம். நாங்கள் அங்கே நீண்டநேரம் தங்கவில்லை. சுவாமி தேநீர் அருந்தியதும் கிளம்ப விரும்பினார். அங்கிருந்து நாங்கள் நேராக பெலிஹுலோயா சென்றோம். அங்கே எங்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருந்தார். நாங்கள் கிராமப்புற கூட்டமைப்பு கட்டடத்தில் தங்கினோம். அங்கே கொழும்பு, பலாங்கொடை மற்றும் இரத்தினபுரத்தில் இருந்து அன்பர்கள் கூடியிருந்தார்கள். காலையிலும் மாலையிலும் நாங்கள் சிவ புராணம், தேவாரப் பாடல்கள் மற்றும் திருவாசகம் பாடினோம் மற்றும் மற்ற நேரங்களில் நாங்கள் சுவாமிகளின் சொற்பொழிவுகளை கேட்டோம். அந்த பத்து நாட்கள் சந்தோஷம் பொருந்தியதாக இருந்தன. சுவாமிகள் எல்லோருக்கும் அவர்களது தேவை மற்றும் பக்குவத்திற்கு ஏற்ப அறிவுரைகளை வழங்கினார்.” §§

1932 ஆம் ஆண்டு அறுபதாவது வயதில், யோக சுவாமியின் கன்னத்தில் ஒரு சிறிய கட்டி உருவாகி இருந்தது. மருத்துவர்கள் அதை நீக்கவேண்டும் என்றார்கள், ஆனால் சுவாமி மறுத்துவிட்டார். பல வருடங்கள் கழித்து, அவர் அதை சோதிக்க சம்மதித்தார். சோதனையில் அது புற்றுநோய் கட்டி என்பது தெரியவந்தது. ஊடுகதிர் சிகிச்சை மற்றும் மற்ற சோதனைகளை செய்ய கொழும்பு மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் அவருக்கு பரிந்துரை செய்தார்கள். இதற்கு சுவாமி மறுப்புத் தெரிவித்தார். அதற்கு பதிலாக சுவாமி பருத்தி விதை எண்ணெயை பூசிக்கொண்டார். இதைப்பார்த்து கொண்டு இருந்த Dr. எஸ். இராமநாதன் திகைப்புடன், “சுவாமி! சுவாமி! இது நச்சுத்தன்மை கொண்டது. இதை எதற்காக கன்னத்தில் பூசுகிறீர்கள்?” என்று கேட்டார். சுவாமி சிரித்துக்கொண்டு, “மருத்துவர் ஐயா! சிகிச்சை முடிந்துவிட்டது. நான் இப்போது நலமாக இருக்கிறேன்,” என்று கூறினார். யோக சுவாமி பாலும் அரிசியும் கலந்த ஒரு விரதத்தை மேற்கொண்டார். இதன் கலவை அவரது வீக்கத்தை குணப்படுத்தியது. §§

அவருக்கு வேறு சில நோய்களும் இருந்தன. சுவாமி அவ்வபோது சுருட்டு (இதை பிரெஞ்சு மொழியில் செரூட் என்று அழைப்பார்கள்) பிடிப்பதை விரும்புவார். 1940 களின் தொடக்கத்தில் இருந்து, காலையில் கழிவறை செல்லும் போது ஒரு சுருட்டு பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அடுத்த பத்து வருடங்களில் அவருக்கு நீரழிவு நோயும் தொற்றிக்கொண்டது. அவர் தொடக்கத்தில், மூலிகளை மருந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். 1950களின் தொடக்கத்தில் இருந்து, அவர் தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டார். அதை அவரது சீடனாக இருந்த மருத்துவர்களே ஆசிரமத்திற்கு வந்து அவருக்கு போட்டு விட்டனர். §§

1934, 1940 மற்றும் 1946 என்று மூன்று முறை யோக சுவாமி இந்தியாவிற்கு யாத்திரை மேற்கொண்டார். அவர் ஒவ்வொரு முறை சென்ற போதும், தன்னுடன் சில சீடர்களை அழைத்து சென்றார். அவர்கள் தென்னிந்தியாவில் இருந்த ஆறுபடை வீடுகளுக்கும், மதுரை மற்றும் சிதம்பரத்தின் மிகப்பெரிய மற்றும் பிரபல சிவன் கோயில்களுக்கும் சென்றார்கள். அவர்கள் நீண்டதூரம் நடந்து சென்றார்கள் மற்றும் பல ஆன்மீக வழிகாட்டிகளையும் சந்தித்தார்கள். §§

ஒரு யாத்திரையின் போது, யோக சுவாமி மற்றுமொரு மிகப்பெரிய குருவான ஸ்ரீ ரமண மகரிஷியை சந்திக்க, திருவண்ணாமலையின் ஸ்ரீ ரமணாசிரமம் சென்றார். 1879 ஆம் ஆண்டு பிறந்த அவர், யோக சுவாமியை விட ஏழு வயது இளையவராக இருந்தார். 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்து சமய போதகர்களில், இவர்கள் இருவரும் மிகவும் புனிதமாக தலைசிறந்து விளங்கியதாக பலர் கருதுகிறார்கள். புனிதமான மலைக்கு அருகில் இருந்த ஸ்ரீ ரமணரின் எளிமையான அறையில், அவர்கள் இருவரும் அமைதியாக ஒரு மணிநேரம் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் சந்தித்த போதும் அல்லது பிரியும் போதும், தங்களுக்குள் ஒரு வார்த்தையையும் பேசிக்கொள்ளவில்லை. §§

யோக சுவாமி ஸ்ரீ ரமண மகரிஷியை சென்று பார்த்து இருக்கிறார் என்பதை அறிந்த மக்கள், என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வத்துடன் இருந்தனர். சுவாமி அவர்களிடம், “நாங்கள் பேசவேண்டியது அனைத்தையும் பேசினோம். நாங்கள் எந்த ஆசையுடனும செல்லவில்லை. நாங்கள் சும்மா இருக்க சென்றோம். நாங்கள் ஒரு மணி நேரம் அங்கே தங்கி இருந்தோம். அவர் பேசவே இல்லை. அவர் ஒரு மாவீரன்,” என்று கூறினார். சுவாமி “சும்மா” என்பதன் மூலம், “முழுமையான நிசப்தத்தில் அமைதியான ஆன்மீக கூட்டுறவில் இருந்தார்கள்" என்பதை குறிப்பிட்டார். §§

image§

யோக சுவாமி வழக்கமாக தங்களது ஆன்மீக வழிகாட்டலுக்காகவே ஒரு ஆன்மீக பாடலை இயற்றி தங்களுக்கு வழங்கிய அபூர்வமான தருணங்களை, தங்களுக்கு கிடைத்த ஆசியாக அந்த குடும்பங்கள கருதினார்கள். இவை பல வருடங்களுக்கு மிகவும் அக்கறையுடன் பாதுகாக்கப்பட்டன. அதன் பிறகு அவை ஒன்று சேர்க்கப்பட்டு நற்சிந்தனை என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ஒவ்வொரு பயணத்தின் போதும், சக பயணிகள் தன்னுடன் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் இருந்த பிறகு, அவர்களை யாழ்ப்பாணம் அனுப்பிவிட்டு, தான் தனியாக இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்வார். 1940 வருட பயணத்தின் போது, நுவாரா எலியா ரயில் நிலையத்தலைவர் ராசய்யாவின் துணையுடன் மதராஸ், கல்கத்தா, பம்பாய், வாரணாசி மற்றும் மற்ற இடங்களுக்கு சென்றார். சிவபெருமானின் புனித தலமாக விளங்கும் பெனராஸ் அல்லது வாரணாசி என்று அழைக்கப்படும் காசி, கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளது. இங்கே இந்துக்கள் உயிர் நீத்து, தகனம் செய்யப்பட்டு, சிவபெருமானின் உச்சந்தலையில் பாய்ந்து வரும் இந்த புனிதமான நதியில் தங்கள் அஸ்தி கரைக்கப்படுவதற்காக வருவார்கள். நவம்பர் 3, காசியில் இருந்து யோக சுவாமி பின்வரும் கடிதத்தை எழுதினார். §§

தேடித் திரிந்து காசிக்கு வந்து கண்டேன் விசுவநாதனை என்னுள். வாடித் திரிந்து வருந்த வேண்டாம். தேடிய பூண்டு காலுக்குள்ளே என்ற தெவிட்டாத வாசகமொன்றுண்டு. இவ்விடத்திலும் மனிதர்களேல்லாம் எங்களைப் போல தானிருக்கிறார்கள். நூதனமான காரணமொன்றும் பூதலமீதில்லவே இல்லை. இருந்த, இருக்கிற, இருக்கும் யாழ்ப்பாணத்தாரெல்லாருக்குமாகக் கருமாதிகளெல்லாஞ் செய்து முடிந்து விட்டன. இனிமேல் உங்களுக்கியைந்தபடி அன்பாக உலகில் நடந்து ஆண்டவன் அடிக்கீழ் அமர்ந்து வாழ்க. §§

அந்த யாத்திரைக்கு பிறகு, சி. எஸ். தர்மராஜா சுவாமியை பற்றி சண்டே அப்சர்வரில் (பிப்ரவரி 20,1983) எழுதினார். §§

அந்த யாத்திரையில் இருந்து திரும்பியதும், சுவாமி தனது பிரகாசமான முகம், கூர்மையான கண்கள், வெள்ளி நிறத்தில் நீளமான தாடி, நெற்றியில் விபூதி, இடுப்பில் வெள்ளை நிற பருத்தித் துணி, முடிந்து விடப்பட்ட தலைமுடி மற்றும் கையில் ஒரு குடையுடன், ஆசிரமத்தில் இருந்து விடியற்காலையில் கிளம்பி பல மைல் தூரம் நடந்து, செல்லும் வழியில் வாகன சவாரியை தொடர்ந்து நிராகரித்து, மாலையில் தனது இருப்பிடம் வந்து சேர்வார். §§

அங்கே அவர் ஒரு மரப்பலகையில், சம்மணங்கால் போட்டு அமர்ந்துக்கொள்ள, ஒரு சமயத்தில் சிலர் மட்டுமே அமரக்கூடிய அந்த அறையில், தனியாக அல்லது குழுவாக கூடியிருந்த அன்பர்கள் ஒவ்வொருவரின் தேவை மற்றும் புரிதலுக்கு ஏற்ப, தனது தெய்வீகத்தன்மையை மறைத்த எளிமையான சொற்பொழிவுகளுடன் சுத்தப்படுத்தும் தனது அருளை வழங்கிக்கொண்டு, சிலசமயங்களில் தன் குருவை புகழ்ந்து பாடுவார். §§

image§

யோக சுவாமியின் படைப்புக்கள் எளிமை மற்றும் ஆழமான உட்பார்வையின் ஒரு அபூர்வமான கலவையை கொண்டிருந்தது, மற்றும் அதில் உண்மைப்பொருள் அதன் தெளிவான மற்றும் மிகவும் சுலபமான வடிவில் விளக்கப்பட்டு இருந்தது. தனது உச்சரிப்புக்களின் மகத்துவத்தை உணர்ந்திருந்த அக்கறையுள்ள சீடர்கள் கிரகித்துக்கொள்ள, அந்த படைப்புக்களைப் பற்றி பேசுவார் அல்லது பாடி காண்பிப்பார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

சுவாமி தன் வீட்டிற்கு அருகில் தங்கி இருந்தாலும், பயணம் செல்வதை எப்போதும் நிறுத்தவில்லை. அவர் அடிக்கடி யாழ்ப்பாணம் தீபகற்பத்தை சுற்றி வலம் வந்தார். அவர் இருந்தது வறண்ட பூமி என்பதால், நீண்டநாட்களாக மழை பொழியவில்லை என்றால், பயிர்கள் வாடத்தொடங்கி, மக்கள் அவரை நாடி வர ஆரம்பித்து விடுவார்கள். “சுவாமி, பல மாதங்களாக மழை பொழியவில்லை. என் வயல்கள் தயாராக இருக்கின்றன, ஆனால் மழை பொழிந்தால் தான் என்னால் நெல் பயிரிட முடியும். இப்பொழுதே தாமதமாகி விட்டது.” §§

இதை கேட்டவுடன் சுவாமி தீபகற்பத்தில் விரைந்து சென்று, வறண்ட நெல் வயல்கள் வழியாக நீண்ட அடிவைத்து நடந்து, மேகங்கள் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தி, அவை மக்களுக்கு பரிசாக வழங்கும் மழையை எதற்காக வழங்கவில்லை என்று அவற்றை கடிந்துக்கொண்டார். “நீ மழை பொழியாமல் என்ன செய்துக்கொண்டு இருக்கிறாய்? இங்கே என் நாட்டு மக்கள் பசியால் வாடுகிறார்கள், நீ அங்கே ஏதும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறாய். என் நாட்டு மக்கள் சாப்பிடவேண்டும், அதற்கு நீ உதவவேண்டும் என்று உன்னை ஆணையிடுகிறேன்.” உடனே வானத்தில் இருள் சூழ்ந்து, பயிர்களுக்கு உயிரளிக்கும் மழையை வழங்க தொடங்கிவிடும். இது ஒரு அபூர்வமான நிகழ்வாக இல்லாமல் அடிக்கடி நிகழ்ந்தது, மற்றும் சுவாமி தன்னிடம் இருந்த விநோதமான திறமைகள் மூலம் இயற்கை சக்திகள் மீது இவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்று அவரது புகழ் மீது ஒரு களங்கத்தை ஏற்படுத்தி இருந்தது. §§

சுவாமி மட்டக்களப்பில் மழையை உருவாக்கியது பற்றி, பின்வரும் விளக்கத்தில் எஸ். சண்முகசுந்தரம் விவரிக்கிறார். §§

ஒரு நாள் சுவாமி யாழ்ப்பாணத்தில் இருந்து தெற்கே 90 மைல் தொலைவில் இருந்த வவுனியா என்ற ஊருக்கு வாகனத்தில் சென்றார். அவர் அந்த ஊரை சென்றடைந்ததும், தேநீர் அருந்த ஒரு உணவகத்தில் வாகனத்தை நிறுத்திக்கொண்டார். அங்கிருந்த எல்லோரும் அவரை அடையாளம் கண்டுகொண்டனர், மற்றும் யோக சுவாமி ஊருக்கு வந்துள்ளார் என்ற செய்தி ஊரெங்கும் பரவியது. அரை மணி நேரத்தில், அவரை சுற்றி சுமார் நூறு கிராமவாசிகள் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் எல்லோரும் விவசாயிகளாக இருந்தார்கள். ஊரில் வழக்கமான பருவமழை பொழியாமல், வயல்களில் பயிர்கள் வாடுவதாகவும், இன்னும் ஒன்று இரண்டு நாட்களில் நல்ல மழை பொழியவில்லை என்றால் பயிர்கள் அழிந்து விடும் என்றும் அவர்கள் தங்கள் மனக்குறையை சுவாமியிடம் தெரிவித்தார்கள். §§

இந்த பரிதாபகரமான கதையை சுவாமி கேட்டதும், ஒரு சில நிமிடங்களுக்கு தியானம் செய்தார். அதன் பிறகு அவர் “நல்ல மழை பெய்யாதோ, நாடு சிறவாதோ, எல்லோரும் இன்புற்று வாழாரோ,” என்று தொடங்கும் நற்சிந்தனை பாடலின் ஒரு தொகுப்பை பாட ஆரம்பித்தார். பத்தாவது செய்யுளின் முடிவில், வானத்தில் மேகங்கள் கூடி மழை பொழிய ஆரம்பித்தது. அரை மணி நேரத்திற்கு, நன்றாக மழை பொழிந்ததால், எல்லோரும் மகிழ்ச்சியுடன் மன நிம்மதியை பெற்றனர். §§

image§

யோக சுவாமி சென்ற வழக்கமான யாழ்ப்பாண வீடுகள் தென்னை மர உத்திரம், கூரை ஓடுகள், சானம் மொழுகிய அல்லது கற்காரை தரைகள், விரகு அடுப்பு மற்றும் வீட்டில் தண்ணீர் தேவைக்காக பின்புறத்தில் ஒரு திறந்த கினற்றுடன் வெப்பமண்டலத்திற்கு ஏற்றார் போல் கட்டப்பட்டு இருந்தது. அந்த வீடுகளுக்கு விருந்தாளிகள் அடிக்கடி, எந்தவித முன்னறிவிப்பின்றி வந்துக்கொண்டு இருந்தார்கள் மற்றும் அவர்கள் எப்போதும் சிறந்த முறையில் உபசரிக்கப்பட்டனர். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§