குருமார்களின் சரித்திரங்கள்

Page 30: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/30_yoga04_02.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

பதினைந்தாவது அத்தியாயம் §

“யாம் அறியோம்”§

வெறுமை மற்றும் அறியாமல் இருப்பதை பற்றிய மறைஞான உட்பார்வை நிறைந்த சிவயோக சுவாமியின் உபதேசங்கள், அவரது சீடராக அல்லாத பலரை குழப்பியது. வாழ்க்கையில் வழக்கமாக, அறிவை பெறுவதற்கு அல்லது ஒரு விஷயத்தின் மீது நமது அறிவின்மையை அறிவின் மூலம் நிரப்புவதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. நாம் ஒரு கணினியை விலைகொடுத்து வாங்குகிறோம். நாம் அதைப்பற்றி குறைவாக அறிந்து இருப்பதால், நாம் கையேடுகளை படித்து, வல்லுநர்களிடம் ஆலோசித்து, இறுதியாக கணினியை பயன்படுத்துவதற்கு தேவையான தகவல்களை பெறுகிறோம். நாம் அறிவின்மையை அறிவை கொண்டு நிரப்புகிரோம். §§

ஆன்மீக விஷயங்களுக்கு தேவைப்படுவதை போல, யோக சுவாமியின் அணுகுமுறை இதற்கு நேர்மாறாக இருந்தது. நாம் இறைவனை பற்றிய அறிவுணர்வு தகவலுடன் தொடங்கி, அந்த தகவலில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ள முயல்கிறோம். நாம் அதில் வெற்றி பெறும் போது, இறைவனை உணர தொடங்குகிறோம். ஏன் இப்படி நடக்கிறது? ஏனென்றால் அறிவுணர்வால் இறைவனை உணர முடியாது. இறைவனின் தனிப்பட்ட உருவம் மற்றும் அனைத்திலும் வியாபித்து இருக்கும் அவரது சுயநினைவின் அனுபவம், மெய்ஞ்ஞான அல்லது இயலுணர்வு மனதில் இருக்கிறது. முழுமுதற்பொருளாக இருக்கும் இறைவனின் அனுபவம், மெய்ஞ்ஞான மனதையும் கடந்து இருக்கிறது என்பது மேலும் மறைபுதிராக இருக்கிறது. §§

இறைவனின் பண்புகளை பற்றிய தெளிவான அறிவுணர்வு கோட்பாடுகளை பெறுவது நல்லது என்றாலும், இறைவனை உண்மையில் உணர்வதற்கு, இந்த கோட்பாடுகள் இறுதியாக வரம்புகளை கடந்து செல்ல வேண்டும். இந்த உண்மையை யோக சுவாமி, ஒரு மனிதனின் இதயத்திற்குள் எவ்வாறு அனுப்பினார் என்பதை சாம் விக்கிரமசிங்கே நினைவுக்கூர்கிறார்:§§

சுவாமி கெளரிபாலா இலங்கைக்கு திரும்பி, யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தது, அவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. வாழ்நாள் முழுவதும் அவருக்கு புத்தகத்தின் மீது அதீத ஆர்வம் இருந்தது. ஒரு நாள் அவர் யாழ்ப்பாண நகரத்தின் கே கே எஸ் சாலையில் இருந்த ஸ்ரீ லங்கா புத்தகசாலையில் ஆன்மீக பிரிவில் புத்தகங்களை பார்த்துக்கொண்டு இருந்த போது நரைத்த முடியுடன், கோபமாக முறைத்துக்கொண்டு, ஒரு பரிச்சயம் இல்லாத முதியவர், அங்கே திடீரென்று தோன்றி அவரது கைகளில் இருந்து புத்தகத்தை பறித்து, “முட்டாள், அது புத்தகத்தில் கிடைப்பது இல்லை! நீ சும்மா இரு!” என்றார். இதுவே நல்லூரின் யோக சுவாமியுடன் அவரது முதல் சந்திப்பாக விளங்கியது. அவரது தேடல் நிறைவடைந்தது, மற்றும் பல சோதனைகள் மற்றும் தண்டனைகளுக்கு பிறகு அவர் யோக சுவாமியை தனது குருவாக ஏற்றுக்கொண்டார். §§

image§

இந்த சித்திரத்தில் யோக சுவாமி தன் முதுகை காட்டிக்கொண்டு உட்கார்ந்து இருக்கிறார், மற்றும் (இடமிருந்து வலமாக) மார்கண்டுசுவாமியுடன் ஒரு பிரிட்டன் நாட்டவர் (யானைக்குட்டி), ஒரு கொழும்பு வாழ் தமிழர் (பன்றிகுட்டி), ஒரு சிங்களர் (புலிக்குட்டி), ஒரு ஆஸ்திரேலியா நாட்டவர் (நரிக்குட்டி) மற்றும் ஒரு ஜெர்மன் நாட்டவர் (நாய்குட்டி) என்று குட்டி கூட்டத்தின் ஆறு அங்கத்தினர்களில் ஐந்து அங்கத்தினர்கள் காண்கிறோம். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அவர் கூரிய “யாம் அறியோம்,” என்ற வாசகத்தை “நமக்கு தெரியாது” என்று பொருள்படுத்திக் கொள்ளலாம். யோக சுவாமியின் குருவான செல்லப்பசுவாமி வழங்கிய மகாவாக்கியங்களில் ஒன்று இதே கருத்தை உபதேசிக்கிறது. சிறிது காலம் கழித்து, யோக சுவாமியின் சீடரான சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி: “கருத்தறிவால் வலுப்படுத்தப்பட்ட அறிவுணர்வு, மெய்ஞ்ஞானத்திற்கு ஒரே தடையாக விளங்குகிறது,” என்ற சூத்திரத்தில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு சூட்சும ஞானியின் இயலுணர்வு காரணத்தை அடிப்படையாக கொண்டு செயல்பட்டாலும், அது காரணத்தின் செயல்முறைகளை பயன்படுத்துவது இல்லை என்பதால், அவர் பொதுவாக அதிகம் பேசுவது இல்லை. எந்த ஒரு இயலுணர்வு வெற்றியும் மிகவும் யதார்த்தமாக இருக்கும், ஆனால் அது காரணத்தின் செயல்முறையை பயன்படுத்துவது இல்லை. காரணத்திற்கு நேரம் தேவைப்படும். மெய்ஞ்ஞான நிலை தற்பொழுதில் செயல்படுகிறது. அனைத்து மெய்ஞ்ஞான அறிதலும், எதிர்பாராத விதமாக திடீரென்று தோன்றுகின்றன. காரணத்தை காட்டிலும் இயலுணர்வு நேரடியாகவும், அதிக துல்லியமாகவும் இருக்கிறது,” என்று விளக்கம் அளித்தார். ஒரு நாள் யோக சுவாமி வெற்றி களிப்புடன்: §§

நான் இறைவனை எங்கும் காண்கிறேன். நான் எங்கும் வழிபடுகிறேன். எல்லோரும் இறைவனாக இருக்கிறார்கள்! நான் அறியவில்லை என்பதால் என்னால் அதை சொல்ல முடியும். யார் அறியவில்லையோ, அவர் எல்லாம் அறிந்து இருக்கிறார். நீங்கள் அறியவில்லை என்றால், நீங்கள் புனிதமாக இருக்கிறீர்கள். அறியாமல் இருப்பது தூய்மை ஆகும். அப்போது நீங்கள் பணிவோடு இருக்கிறீர்கள். நீங்கள் அறிந்து இருந்தால், நீங்கள் தூய்மையாக இருப்பதில்லை. மக்கள் தங்களுக்கு தெரியும் என்று சொல்லி, பல்வேறு விஷயங்களை சொல்வார்கள். அவர்கள் அறியவில்லை. எல்லோரும் அறியவில்லை. நீங்கள் அறிய விரும்பவில்லை. நான் அறியவில்லை. நீங்கள் ஏன் அறிய விரும்புகிறீர்கள்? நீங்கள் இயல்பாக இருங்கள். நீங்கள் அறிய விரும்பவில்லை. இறைவன் உங்கள் வாயிலாக செயல்படட்டும். “நான் அறிந்துகொள்ள வேண்டும்" என்ற எண்ணத்தை கைவிடுங்கள். இறைவன் பேசட்டும். அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை துறக்க வேண்டும். யோசியுங்கள், யோசியுங்கள், யோசியுங்கள். “நான் அறியவில்லை" என்பது உங்களுக்கு அப்போது புலப்படும். நான் அறியவில்லை. நீங்கள் அறியவில்லை. யாரும் அறியவில்லை. அப்படித்தான் இருக்கிறது. யார் அறிவார்கள்? “நான் அறியவில்லை" என்ற என்னால் சொல்ல முடிந்தால், நான் இறைவன் ஆகிறேன். §§

“புத்தகங்கள் படிப்பதை நிறுத்து,” என்று அவர் சீடர்களில் ஒருவரிடம் கூறினார். “மிகப்பெரிய புத்தகம் உனக்குள் இருக்கிறது. அதை மட்டும் தான் நீ படிக்க வேண்டும். மற்றவைகள் அனைத்தும் வெறும் குப்பைகள். உங்களுக்குள் இருக்கும் புத்தகத்தை திறந்து, அதை படிக்க தொடங்குங்கள். மிகவும் அமைதியாக இருங்கள், அது உங்களை தேடி வரும்.” சாதகர்கள் தொடர்ந்து ஆன்மீக பாதை கடினமானதாக, சிக்கல் நிறைந்ததாக மற்றும் தங்கள் தகுதிக்கு அப்பாற்பட்டதாக மாற்றிக்கொள்கிறார்கள், ஆனால் அது அப்படியில்லை என்று யோக சுவாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.§§

பாதை மிகவும் எளிமையானதாக இருந்தாலும், மனதில் நீ வேறு நான் வேறு என்ற எண்ணத்தை தக்க வைத்துக் கொள்வதால், நீங்கள் அதை கடினமாக்கிக் கொள்கிறீர்கள். நாம் எல்லோரும் ஒன்று. நாம் சூரியனை பார்த்து அதன் ஒளிக்கதிர்களை உணர்கிறோம். அதே சூரியனின் அதே ஒளிக்கதிர்களை, அதே நரம்புகள் உணர்கின்றன. நாம் அகத்தை பார்க்கும் போதும், இப்படியே நடக்கிறது. நாம் பிரபஞ்சத்தின் கடவுளாக இருக்கும் பண்புகள் இல்லாத நிற்குண சிவபெருமானை உணர்கிறோம். நீங்களும் நானும் ஒன்று போலவே தரிசிக்கும் சிவபெருமான் உங்களுடையதாகவும் இல்லாமல், என்னுடையதாகவும் இல்லாமல், சிவபெருமான் எல்லாமாக இருக்கிறார். எல்லாம் சிவமயம் மற்றும் சிவபெருமான் எல்லாமாக இருக்கிறார் என்ற அறிதலில் நாம் ஆசையை எரித்து, தன்முனைப்பை உருக்க வேண்டும். உங்களுக்கு உதவி செய்ய பல லட்சக்கணக்கான தேவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களை வேண்டிக்கொண்டு, சாதனாவின் மூலம் உங்களை நிலைப்படுத்தி கொண்டால் போதும். அதன் மூலம் உங்களால் அனைவரையும் ஒன்றாக பார்க்க முடிந்து, தெய்வீக அமுத்தை ருசிக்க முடியும். §§

யோக சுவாமியின் அணுகுமுறையை செல்லத்துரை சுவாமி பின்வருமாறு தொகுத்துரைத்தார்: §§

ஆன்மீகம் என்பது இறைவன் அல்லது ஒருவரது தனிப்பட்ட பரமாத்துமா மீது தொடர்ந்து சாட்சியை நிலை நிறுத்தி வைப்பது ஆகும். சகஜ நிலை என்பது, ஒருவர் தனது பரமாத்துமா மீது எந்த வித முயற்சியும் இல்லாமல் நிரந்தரமாக விழிப்புடன் இருப்பது ஆகும். ஆனால் இந்த நிலையை அடைவதற்கு, மிகப்பெரிய முயற்சிகளை தேவைப்படும். நமது செயல்கள் அனைத்திலும் இறைவனை நினைக்க முயற்சிப்பதன் மூலம், இந்த நிலையை அடையலாம் என்று யோகர் சுவாமிகள் கற்றுத்தந்தார். ஒவ்வொரு செயலையும் சிவத்தொண்டாக நினைத்து செய்யவேண்டும் என்று அனைவரிடமும் அவர் உபதேசித்தார். இந்த சிவத்தொண்டால், ஒருவர் அடையும் நிலையில், விழிப்புணர்வு இயல்பாக வருகிறது என்பதை அவர் அறிந்து இருந்தார். இது ஆன்மீக அனுபவங்களின் உச்சமாக கருதப்படுகிறது. பரமாத்துமாவை வழிகாட்டியாக கொண்டு, மேற்கொள்ளும் சாதனா அல்லது பயிற்சியின் மூலம் ஒருவர் அடையும் நிலையில், “எல்லாம் அந்த மாபெரும் அமைதியில் இருந்து வெளிவருகிறது” என்றும் “எல்லாம் அந்த மாபெரும் அமைதியின் முழுமை” என்பதையும் உண்மையில் உணர்கிறார் என்பதை யோக சுவாமிகள் அறிந்து இருந்ததால், அவர் உறுதியான அன்பர்களிடம், “உபதேசிப்பதை காட்டிலும் பயிற்சி சிறந்தது;” மற்றும் “உங்கள் பரமாத்துமா உங்களை வழிநடத்தி செல்லட்டும்,” என்று கூறினார். யாழ்ப்பாணத்தில் இருக்கும் சிவதொண்டன் நிலையத்தின் தியான மண்டபத்திற்கு வழிநடத்தி செல்லும் படிகளில் ஏறும் போது, இந்த வாசகங்கள் வருவோரை வரவேற்கின்றன. §§

சிவபெருமானை நினைத்து தியானம் §

இதனால் ஆத்ம ஞானத்தை பெறுவதற்கு, அறிவுணர்வு மற்றும் அதன் கோட்பாடுகளின் வரையறைகளை கடந்து செல்ல வேண்டும் என்று கைலாச பரம்பரையின் குருமார்கள் வலியுறுத்துகிறார்கள். இந்த அனுபவத்தை வழங்கும் பாதைக்கு சாதகர்களை வழிநடத்துவதற்கு, யோக சுவாமி தியானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி “தன்னை அறி” என்று மகாவாக்கியத்தை உருவாக்கினார். இது அவரது போதனைகளில் இரண்டாவது முக்கிய கருப்பொருளாக விளங்கியது. “உங்கள் ஆன்மாவின் மூலம் பரமாத்துமாவை அறிந்துக்கொள்ள வேண்டும். இதற்கு மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்….உங்களிடம் எந்த குறைபாடும் இல்லை. நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியாதது தான் உங்களது ஒரே குறைபாடு….நீங்கள் உங்களை உங்களின் மூலமாக தெரிந்துகொள்ள வேண்டும். வேறு எதுவும் செய்யவேண்டியது இல்லை,” என்று அவர் அறிவித்தார். பிற்காலத்தில் அவருக்கு நெருக்கமான சீடர்களில் ஒருவரான மார்கண்டுசுவாமி, தனது குடிசைக்கு வந்த அன்பர்களிடம் இவ்வாறு கூறினார்: §§

நமக்கு யோக சுவாமி நூறு வேலைகளை வழங்கவில்லை. ஒரே ஒரு வேலை தான்: நீங்களே ஆத்ம ஞானத்தை பெறுங்கள், அல்லது உங்கள் பரமாத்துமாவை அறிந்து கொள்ளுங்கள், அல்லது நீங்கள் யார் என்று கண்டு கொள்ளுங்கள். உங்களது பரமாத்துமாவை அறிந்துக்கொள்ளுங்கள் என்றால் என்ன? யோக சுவாமி தனது பிரசுரிக்கப்பட்ட ஒரு கடிதத்தில், அழகாக விளக்கியுள்ளார் : “நீங்கள் உடல் இல்லை; நீங்கள் மனதும் இல்லை, அறிவும் இல்லை, அல்லது விருப்பமும் இல்லை. நீங்கள் ஆன்மா. ஆன்மா நிரந்தரமாக இருக்கிறது. மிகப்பெரிய ஆன்மாக்கள் தங்கள் அனுபவத்தின் மூலம், இதையே முடிவு செய்துள்ளார்கள். இந்த உண்மை உங்கள் மனதில் நன்றாக பதியட்டும்.” §§

பெரும்பாலான மக்கள் ஆழமாக தியானம் செய்து, தங்களது ஆழத்தில் இருக்கும் பரமாத்துமாவுக்குள் நுழைவதற்கு பயப்படுகிறார்கள் என்பதை அறிந்திருந்த யோக சுவாமி, ஆன்மீக வாழ்க்கையும் வெளிப்புற வாழ்க்கையும் இணக்கத்தில் இருப்பதாக உறுதி அளித்தார். “உங்கள் உறவுகள், உங்கள் விருப்பம், உங்கள் அறிவு, உங்கள் புலன்களை கீழ்தளத்தில் விட்டு செல்லுங்கள். இந்த சகாக்களிடம் இருந்து விடைபெற்று, நீங்களே சொந்த முயற்சியில் மேல்தளத்திற்கு சென்று, நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் கீழ்தளத்திற்கு சென்று, அந்த சகாக்களுடன் சேர்ந்து இருக்கலாம்,” என்று ஆலோசனை வழங்கினார். §§

சுவாமி தனக்கு தந்த உபதேசங்கள் புரியாமல், ஒரு அன்பர் போராடிக்கொண்டு இருந்தார். அவர் குருவின் அறிவுரை பற்றிய விளக்கத்தை பெறுவதற்கு, பல நபர்களை சந்தித்தார். இதை சுவாமி அறிந்ததும், அவரை அழைத்து, “செம்மறி ஆட்டுக்குட்டி போல அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு இருக்காதே. அமைதியாக ஓரிடத்தில் உட்கார்ந்து, உனக்குள் செல். தியானம் செய். அதன் பிறகு சிங்கம் போல கர்ஜனை செய்.”§§

அமெரிக்க பிராமணர் §

யோக சுவாமி தனது வாழ்நாளில் சில அமெரிக்கர்களை சந்தித்து இருந்தாலும், விரைவில் ஒரு விசேஷமான நபர் அவரது எளிமையான குடிசைக்கு வரவிருந்தார். 1947 ஆம் ஆண்டில், அமெரிக்க-ஆசிய கலாச்சாரப்பணி என்ற பெயரில் ஒரு பாரம்பரிய நடனக்குழுவுடன் பயணம் செய்த, 20 வயது நிரம்பிய ராபர்ட் ஹான்சென், இலங்கையில் கரை இறங்கினார். ஹான்சென் இந்த தீவிற்கு வந்து தொடக்கத்தில் சில மாதங்களுக்கு, டஜன் கணக்கில் நடன நிகழ்ச்சிகளை வழங்கினார். இங்கே அவர் பிணி நீக்கும் பண்புகளை கொண்ட பழங்கால மணிப்புரி நடனத்தை கற்றுக்கொண்டார் மற்றும் கண்டியை சுற்றியுள்ள பகுதியில் தோன்றி உற்சாகம் நிறைந்து, தைரியமான மற்றும் நுணுக்கமான கலை வடிவமாக இருந்த ஒரு உள்நாட்டு நாட்டிய வடிவத்திற்கு புத்துயிர் அளித்தார். ஆனால் நடனத்தில் தேர்ச்சி பெற்ற அந்த கலைஞர், தனது குருவை சந்தித்து ஆத்ம ஞானம் பெறுவதற்காக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு இருந்தார். §§

லௌகீக உலகம் மற்றும் தியானத்தின் சக்திகளை கட்டுப்படுத்தும் இந்து சூட்சும ஞானமாக, உடலின் நரம்பு ஓட்டங்களில் இணக்கத்தை ஏற்படத்தும் அறிவியலாக விளங்கும், மூன்றாவது கண்ணை பயன்படுத்துவதில் திறமைசாலிகளாக, பல்வேறு யோக பயிற்சிகளில் நிபுணர்களாக இருந்த மகான்கள் மற்றும் முனிவர்களை, அவர் விரைவில் சந்திக்க தொடங்கினார். அவருக்கு ஒவ்வொரு தூண்டுகோலும் சரியான தருணத்தில் வந்தடைந்தனர். ராபர்ட்டிற்கு ஒவ்வொரு சந்திப்பும் மங்களகரமானதாக தோன்றியது. அவர் ஒவ்வொரு கருத்து பரிவர்த்தனையிலும், அவர் தனது குருவின் ஈர்ப்பை உணர்ந்தார். ஒவ்வொரு வல்லுநரும், தான் தரவேண்டியதை முறையாக வழங்கினார்கள். ஒரு தூண்டுகோலிடம் இருந்து விடுதலை கிடைக்கும் வரை, ராபர்ட் தனக்கு கிடைத்த அறிவுறுத்தலை பணிவாக பின்பற்றி வந்தார். அதன் பிறகு அடுத்த ஆசிரியர், அடுத்த சுவாமி, அடுத்த இசுலாம் மதத்தலைவர் தோன்றி, அவரது மெய்யுணர்வை இன்னொரு உலகிற்கு திறந்து வைக்க அவரை வந்தடைந்தனர். இது நடந்துகொண்டு இருக்கும் போது, யோக சுவாமி திரை மறைவில் இருந்துக்கொண்டு, இன்னொரு நபர் மூலமாக செயல்பட்டு வந்தார். §§

ஜலானி குகைகளுக்கு ராபர்ட் சென்று, ஆத்ம ஞானம் பெறும் வரையில் தியானம் செய்து வந்தார். அவர் ஒரு ஒழுக்கம் நிறைந்த சாதனாவை தொடர்ந்து பின்பற்றி வந்தார். அமெரிக்காவில் இருந்து வந்த பிராமணர் என்று அழைக்கப்பட்ட ராபர்ட், 1949 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்து சமய சான்றோராக விளங்கிய சி. கந்தையா செட்டியாரை சந்தித்தார். அவர் பிற்காலத்தில் யோக சுவாமியிடம் ராபர்ட்டை அறிமுகம் செய்து வைத்தார். கந்தையா வாழ்ந்த அளவெட்டி கிராமம், யாழ்ப்பாணம் நகரத்திற்கு அருகாமையில் இருந்தது; அவர் யோக சுவாமியுடன் நெருக்கமாக பல வருடங்கள் பழகி இருந்ததால், அவர் சுவாமியை நன்றாக அறிந்து இருந்தார். அவர்கள் யாழ்ப்பாண தெருக்களிலும் கடைகளிலும் அடிக்கடி சந்தித்து பேசி இருந்தார்கள், மற்றும் செல்லாச்சி அம்மையாரின் ஆசிரம வீட்டில் பல முறை ஒன்றாக அமர்ந்து தியானமும் செய்து இருந்தார்கள். §§

கொழும்பில் பல வாரங்கள் ஒன்றாக இருந்த பிறகு, செட்டியார் அந்த இளைஞனை தன்னுடன் யாழ்ப்பாணம் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அங்கே ராபர்ட் கந்தையாவுடன், அவரது குடும்ப வீட்டில் தங்கினார். யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரபலமாக இருந்த அந்த “முதிய யாசகரை" சந்திக்க, அமெரிக்க பிராமணர் அமைதியான ஆர்வத்துடன் இருந்தார். இறுதியாக, அந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. §§

image§

இறுதியாக 22 வயது நிரம்பிய அமெரிக்க சாதகர் யோக சுவாமியை சந்தித்த போது, அவர்கள் இருவரையும் பார்ப்பதற்கு, “பாலுக்குள் பாலை ஊற்றியதை போல" என்ற பிரபல யாழ்ப்பாண பழமொழியை போல இருந்தார்கள். அவர்கள் ஆழமான தத்துவ விவாதங்களில் ஈடுபட்டனர், மற்றும் யோக சுவாமி தனது விருந்தாளிக்கு சுத்தமான திரட்சைப்பழ சாறு தருமாறு தனது சிப்பந்தியிடம் கேட்டுக்கொண்டார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

சிவயோக சுவாமி அந்த அமெரிக்கா சாதகரை தனது ஆசிரமத்திற்கு பல முறை வரவழைத்து, அவருடன் யோகம் மற்றும் தத்துவ விஷயங்களை பற்றி பேசி, அவருக்கு சுப்பிரமுனிய என்ற இந்து பெயரையும் ஆன்மீக அறிவுறுத்தல்களையும் வழங்கி, அவரது முதுகில் வலுவாக அடித்து, “இது அமெரிக்கா வரை கேட்கும்!" என்றார். முதுகில் அறையும் சத்தத்தை கேட்டதும், நடந்தது என்னவென்று கந்தையாவிற்கு தெரிந்துவிட்டது. அவர் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம், “சுவாமி முடி சூட்டு விழாவை நடத்தி முடித்துவிட்டார்,” என்று குறிப்பிட்டார். அந்த குடிசைக்கு சுப்பிரமுனிய கடைசியாக சென்ற போது, “போய் விடு. நான் வீட்டில் இல்லை,” என்று யோக சுவாமி திட்டி அனுப்பினார். யோக சுவாமி அதன் பிறகு தனது அமெரிக்கா சீடரை பற்றி, ஒரு சில முறை மட்டுமே குறிப்பிட்டு பேசினார். §§

1956 ஆம் ஆண்டில், கொலராடோவில் இருந்த டென்வரில், சுப்பிரமுனிய ஒரு உச்சகட்ட சூட்சும ஞான அனுபவத்தை பெற்ற போது, கந்தையா செட்டியாரின் மகன் விநாயகமூர்த்தியிடம் யோக சுவாமி, “ஹான்சென் செத்துவிட்டான். ஹான்சென் செத்துவிட்டான்,” என்று கூறினார். மேற்கத்திய நாடுகளில் தான் உபதேசிக்கும் பணியை தொடங்கியுள்ளதாக சுப்பிரமுனிய எழுதிய கடிதம் தங்களுக்கு கிடைக்கும் வரை, எல்லோரும் சோகத்தில் ஆழ்ந்து இருந்தார்கள். அந்த செய்தியை கேள்விப்பட்டதும், யோக சுவாமி சொல்ல வந்ததை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சைவர்கள் புரிந்துகொண்டார்கள். பல வருடங்களுக்கு முன்பு, யோக சுவாமியை பற்றி செல்லப்பசுவாமி இதே அறிக்கையை விடுத்து இருந்தார். §§

ஒருமுறை யோக சுவாமியிடம், அவருக்கு பிறகு அவரது சமயப்பணியை தொடர்வதற்கு ஒரு குருவை உருவாக்கி இருக்கிறாரா என்று கேள்வி வந்த போது, “சுப்பிரமுனிய அமெரிக்காவில் இருக்கிறார்,” என்று அவர் பதில் அளித்தார். அவர் இன்னொரு முறை, “எனக்கு ஒருவர் உதவியாக அமெரிக்காவில் இருக்கிறார்,” என்று குறிப்பிட்டார். ஒரு நாள் சுவாமி விநாயகமூர்த்தியிடம், இனி அவர் வாழ்க்கையில் செய்யவேண்டிய பணிகள் பற்றி, சில அறிவுறுத்தல்களை வழங்கிக்கொண்டு இருந்தார். அப்போது விநாயகமூர்த்தி தான் அளவெட்டியில் இருக்கும் சப்பிரமுனியாவின் ஆசிரமத்தை கவனித்து வருவதாக சுவாமிக்கு நினைவூட்டினார். உடனே யோக சுவாமி, “ஓ, உனது தந்தையின் நண்பரை பற்றியா குறிப்பிடுகிறாய்?” என்று கேட்டார். ஆனால் பின்னர் விநாயகமூர்த்தியிடம் ஆர்வம் இல்லாமல், “சரி, நீ நமக்காக, அந்த பாலம் கட்ட உதவி செய்துக்கொண்டு இருக்கிறாய்,” என்று குறிப்பிட்டார். “கிழக்கிற்கும் மேற்கிற்கும் பாலம் அமைக்கவேண்டும் என்று யோக சுவாமி என்னிடம் அறிவுறுத்தினார்,” என்று பின்னர் சுப்பிரமுனியா இதைப்பற்றி குறிப்பிட்டார். இந்த வாசகத்தை சுப்பிரமுனியா அடிக்கடி குறிப்பிட்டார், மற்றும் இந்த இலக்கை அவர் என்றுமே மறக்கவில்லை. §§

இந்த காலகட்டத்தில், யோக சுவாமி மேற்கத்திய நாடுகளுக்கு பாலங்களை அமைக்க மக்களை தூண்டிவிட்டார். அவர் தனது நெருக்கமான சீடர்களை சந்திக்க சிலரை இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிற்கு அனுப்பினார். அவர் அவ்வாறு பயணம் மேற்கொள்வோருக்கு அவர்களது சமயப்பணியின் முக்கியத்துவத்தை கூறி, பல்வேறு மேற்கத்திய நாடுகளுக்கு சைவ சமயத்தை கொண்டு செல்தற்கு அவர்கள் மக்களிடம் சொல்லவேண்டிய தகவல்களையும் வழங்கினார். அவர் அமெரிக்காவில் ஆன்மீக சக்தி எழுச்சி பெறுவதை பற்றி அடிக்கடி பேசியதோடு, அங்கே அவர் பிரபலமாகும் நாளையும் ஊகித்தார்.§§

குட்டி கூட்டம் §

1950 களின் இறுதியில், நரைத்த முடியுடன் இருந்த குருவை சுற்றி, இலங்கையில் இருந்து ஒருவர் மற்றும் உலகெங்கிலும் இருந்து ஐந்து பேர் என்று ஒரு சாதகர்ளின் குழு கூடியது. சிவனொளி பாதமாலைக்கு அருகில் இருந்த ஒரு தேயிலை தோட்டத்தில் வாழ்ந்த ஹரோ ஹர அம்மா என்கிற ஒரு சூட்சும ஞான முருக பக்தர், ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்யேக விலங்கு குட்டியின் பெயரை வழங்கினார், மற்றும் அதனால் அந்த கூட்டம் குட்டி கூட்டம் என்று அழைக்கப்பட்டது. எல்லோரும் சுவாமி என்று அழைக்கப்பட்டாலும், எல்லோரும் தீட்சை பெறவில்லை. அவர்கள் இயல்பாக மற்றும் பலவிதமாக, திறந்த மனப்பான்மையுள்ள குழுவாக இருந்தார்கள், மற்றும் தாங்கள் அனைவரும் யோக சுவாமியின் சீடர்கள் என்பதில் மட்டும் கருத்து ஒற்றுமையுடன் இருந்தார்கள். 1956 ஆம் ஆண்டில், பெரும்பாலும் யோக சுவாமியின் ஆசிகளுடன், இந்த ஆறு பேரும் காவடி சுமப்பதற்கு, கதிர்காமம் சென்றார்கள். §§

அந்த குழுவினரின் பெயர்கள்: கெளரிபாலா சுவாமி (பீட்டர் ஜோச்சிம் ஸ்கொன்ஃபெல்ட் என்ற பெயருடன் ஜெர்மனியில் 1907 ஆம் ஆண்டு பிறந்தவர்), நாய்க்குட்டி என்று அழைக்கப்பட்டார்; சாம் விக்கிரமசிங்கே, பெளத்த சமயத்தை சார்ந்த இலங்கையின் சிங்களர், புலிக்குட்டி என்று அழைக்கப்பட்டார்; ஆஸ்திரேலியாவின் பாரி வின்ட்சர், சங்கரப்பிள்ளை சுவாமி அல்லது நரிக்குட்டி என்று அழைக்கப்பட்டார்; இலங்கை தலைநகர் கொழும்புவை சேர்ந்த திரு. பாலசிங்கம், முதலியார் சுவாமி அல்லது பன்றிக்குட்டி என்று அழைக்கப்பட்டார்; இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஹெர்வால்ட் ராம்ஸ்போதம் என்கிற 2 ஆவது விஸ்கவுண்ட் சொல்புறி (இவரது தந்தை சிலோனுக்கான பிரிட்டனின் இறுதி தலைமை ஆளுநராக இருந்தவர்), சந்த சுவாமி அல்லது யானைக்குட்டி என்று அழைக்கப்பட்டார்; மற்றும் அமெரிக்காவின் அட்ரியன் ஸ்னோட்கிராஸ், பூனைக்குட்டி என்று அழைக்கப்பட்டார். இந்த குழுவில் மூத்தவராக இருந்த கெளரிபாலா சுவாமி (ஜெர்மன் சுவாமி என்று அழைக்கப்பட்டவர்) மட்டுமே முறையாக தீட்சை பெற்ற சந்நியாசியாக இருந்தார். அவர் அந்த தீட்சையை யோக சுவாமியை சந்திப்பதற்கு முன்பாக, வட இந்தியாவின் கிரி தஷநாமி சமூகத்தில் பெற்றார். §§

நல்லூரில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது, யோக சுவாமி தனது சற்குரு வாழ்ந்து ஆதிக்கம் செலுத்திய தேரடியில், தனது வண்ணமயமான குட்டி குழுவுடன் அமர்ந்து இருப்பார். அந்த குழுவினர் பல நாடுகளில் இருந்து வந்து இருந்தாலும், அவர்கள் எல்லோரும் குருவின் முக்கியத்துவத்தை புரிந்து இருந்தார்கள் மற்றும் அவரது ஒவ்வொரு வார்த்தைக்கும் கட்டுப்பட்டு இருந்தார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் உயிர்சக்தியின் உயர்ந்த நிலைகளை அடைய தீவிரமாக முயற்சி மேற்கொண்டதால், சுவாமி சில சமயம் அவர்களிடம் கடுமையான கோரிக்கைகளை விடுத்து, அவர்களை திட்டி அச்சுறுத்தினாலும், அவர்களுக்கு ஆதரவை வழங்கி, தன்முனைப்பின் கட்டுப்பாடுகளை கடந்து ஒருவர் தனது சமய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான நுணுக்கமான உந்துதலையும் வழங்கி வந்தார். §§

“ ‘வாழ்க்கை என்கிற பாடமே படிக்கவேண்டிய மிகப்பெரிய சாத்திர புத்தகமாக விளங்குகிறது. வாழ்க்கையின் புத்தகத்தை படியுங்கள். வெளியுலக வாழ்க்கையில் உங்களையும் உங்கள் எதிர்வினைகளையும் கண்காணியுங்கள். எதையும் கட்டுப்படுத்தாமல், உங்கள் பாதையில் திடீரென்று தோன்றும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சுகமாக அல்லது துக்கமாக, கோபத்துடன் அல்லது பாசத்துடன் சென்று, அக்கறையுடன் கண்காணித்தால் ஒரு நாள், இவை அனைத்தையும் கவனித்து, தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பார்வையாளர், திடீரென்று எதிர்பாராத விதமாக காட்சி அளிப்பார்!” என்று அவர் என்னிடம் கூறினார்,” என்று சாம் (புலிக்குட்டி) நினைவுகூர்ந்தார். §§

யோக சுவாமியின் பிரதான பிரம்மச்சாரி சீடர்களில் ஒருவராக கருதப்படும் சந்தசுவாமியின் வாழ்க்கை பற்றிய சில நுணுக்கங்களை தி. சிவயோகபதி பகிர்கிறார். §§

ஜெர்மன் சுவாமி 1940 களின் தொடக்கத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில், பெரும்பாலும் அந்த தீவின் வடக்கு மூலையில் இருக்கும் செல்வசந்நிதி முருகன் கோயிலில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அவர் யோக சுவாமியை 1947 ஆம் ஆண்டில் சந்தித்தார், மற்றும் யோக சுவாமியிடம் சந்தசுவாமியை 1953 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். மூன்று வருடங்கள் கழித்து, யோக சுவாமி சந்தசாமிக்கு தீட்சையை வழங்கி, கேகேஎஸ் ரோடு சிவத்தொண்டன் நிலையத்தில் வசித்து, தியானம் மற்றும் சேவை செய்யும் பொறுப்பை வழங்கினார். யோக சுவாமி நிலைய மேலாளர் செல்லத்துரையிடம், “ஜெர்மன் சுவாமி சந்தசுவாமியை தவறான வழியில் அழைத்து செல்லாமல் இருக்க, நீ அவர்கள் மீது கவனமாக இரு,”என்று அறிவுறுத்தினார். தீவிரமாக, சிரத்தையுள்ள பிரம்மச்சாரியாக இருந்த அந்த ஆங்கிலேய சாதகர், பெரும்பாலும் சைவ சித்தாந்தம் தொடர்பான புத்தகங்களை ஆர்வத்துடன் படித்து வந்ததாக பக்தர்கள் நினைவுகூர்ந்தார்கள். அதன்பின்னர் யோக சுவாமியின் மகாசமாதிக்கு பிறகு, அவர் மட்டக்களப்பின், செங்கலடியில் இருந்த சிவதொண்டன் நிலையத்தை, பன்னிரண்டு வருடங்கள் நிர்வகித்து வந்தார். லெளன்சவர் பிற்காலத்தில் யாழ்ப்பாணம் திரும்பி, மார்கண்டு சுவாமியின் எளிமையான குடிசையில் சில வருடங்கள் தங்கி, இறுதியில் தனது அரசக்குடும்பத்துடன் இருக்க இங்கிலாந்து திரும்பினார். அவர் டிசம்பர் 13, 2004 அன்று தனது 92 ஆவது வயதில் மகாசமாதி அடைந்தார். §§

அனைவருக்கும் ஆதரவு §

அவரை சந்திக்க, காலப்போக்கில் உலகின் மூலை முடுக்குகளில் இருந்து, பல்வேறு தரப்புக்களில் இருந்து பல்லாயிரககணக்கான மக்கள் அணுகினார்கள். சிலர் முற்றிலும் லௌகீக காரணங்களுக்காகவும், சிலர் ஆன்மீக ஆசிகளை பெறுவதற்காகவும், சிலர் அவரை சோதனை செய்யவும், சிலர் தங்கள் நோய் குணமடையவும், சிலர் தங்கள் எதிர்காலத்தை பற்றி தெரிந்துகொள்ளவும், மற்றவர்கள் தங்கள் புதிய பொறுப்பில் ஆசிகளை பெறுவதற்காகவும் வந்தனர். “தூல உடலில் தவிப்பவர்கள் அல்லது வேதனையால் தத்தளிப்பவர்களுக்கு, அவரிடத்தில் ஒரு ஆறுதலான வார்த்தை மற்றும் ஆசிகள் காத்து இருந்தன,” என்று ஸ்ரீ திகிரி பண்ட திசனாயகே குறிப்பிட்டார். இது தொடர்பாக ரத்னா மா நவரத்தினம் வழங்கும் குறிப்பு: §§

கிழக்கு மற்றும் மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என்று உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து உதவியை நாடி வந்த அனைத்து மதத்தை சார்ந்த மக்கள், பல்வேறு தரப்பு ஆண்கள் மற்றும் பெண்கள், பணக்காரர் மற்றும் ஏழையுடன் பெரியவரும் சிறியவரும் அவரை சூழ்ந்து கொண்டனர், ஏனென்றால் தாங்கள் மோதல்களும் முரண்பாடுகளும் இல்லாமல், சாந்தம் உபஸ்தானம் என்கிற அகத்தே வாசம் செய்யும் அமைதியை வெளிப்படுத்தும் ஒரு மிகப்பெரிய குருவின் இருப்பில் இருக்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்து இருந்தார்கள். §§

அவரது பிரகாசமான முகம், கூர்மையான கண்கள், நரைத்த நீளமான தாடி, பளிச்சென்ற விபூதியுடன் இருந்த அவரது பரந்த நெற்றி, இடுப்பில் உடுத்தியிருந்த வெள்ளை நிற பருத்தி துணி, அரசருக்குரிய கம்பீரத்துடன் தோற்றமளித்த அவரது உச்சந்தலையில் முடிந்து விடப்பட்டிருந்த தலை முடி ஆகியவை மொத்தத்தில் எல்லையற்ற மதிப்பு மற்றும் பணிவுடன் சுவாமியை அணுகியவர்களின் இதயங்களில் பிரமிப்பையும் கம்பீரத்தையும் ஏற்படுத்தியது. §§

இந்த சிறுகதையை எஸ். நைஜல் சுப்ரமணியம் சிவா பெருமதிப்புடன் பகிர்கிறார்: §§

ஒரு நாள் என் தந்தை சுப்ரமணியம் எப்போதும் போல, சிவயோக சுவாமியை பார்க்க சென்றார். யோக சுவாமி எனது தந்தையிடம், “நான் உன்னிடம் ஒரு செய்தியை சொல்ல வேண்டும்,” என்றார். சுவாமி அடுத்ததாக என்ன சொல்லப் போகிறார் என்பதில் என்தந்தை மிகவும் கவனமாக இருந்தார். அப்போது யோக சுவாமி, “சிவபெருமான் உண்மையில் இருக்கிறார். இதைத்தவிர என்னிடம் வேறு எந்த தகவலும் இல்லை,” என்று அறிவித்தார்.§§

ஒரு நாள் காலையில் ஒருவர் தனது வாழ்க்கையில் இருக்கும் வேதனைகளை சுவாமியிடம் சொல்ல வந்தார். அவர் சுவாமியிடம் தனக்கு திருமண வயதில் பெண்கள் இருப்பதாகவும், அனைவருக்கும் திருமணம் செய்து வைக்க தேவைப்படும் வரதட்சணையை தன்னால் கொடுக்க முடியாது நிலையில் இருப்பதாக தனது மனக்குறையை தெரிவித்தார். மேலும் ஒரு மகளுக்கு தற்போது வரன் வந்து இருப்பதாகவும் அவர் கூறினார். யோக சுவாமி எதுவும் பேசாமல், தனது வேட்டி மடிப்பில் கைவிட்டு, அவரிடம் வரதட்னைக்காக பத்தாயிரம் ரூபாயை வழங்கினார். பொதுவாக தந்தைகள் இதைப்பற்றி கவலைப்படவேண்டாம் என்றும், அவர்களின் பெண்களுக்கு தகுதிக்கேற்ப வரன் அமையும் என்றும் கூறினார். அவ்வாறே தொடர்ந்து நடைப்பெற்றும் வந்தது. தனது பெண்ணின் திருமணத்திற்கு வரதட்சணை தரமுடியாமல் தவித்த முதியவருக்கு உதவிய செய்ய, சுவாமி மற்றவர்களை எவ்வாறு பயன்படுத்திக்கொண்டார் என்பதை பற்றி எஸ். சண்முகசுந்தரம் விவரிக்கிறார்: §§

image§

யோக சுவாமி பெரும்பாலும் அழைப்பு இல்லாமல், ஒரு அன்பரின் வீட்டிற்கு சென்று, தியானம் செய்வார், மற்றும் ஒரு வேளை உணவு சாப்பிட்டு, ஒரு பக்திப் பாடலை பாடுவார். அவர் அவ்வபோது இரவுநேரத்தில் தங்கிவிட்டு செல்வார். அவருக்கு நெருக்கமான அன்பர்கள், அத்தகைய ஒரு விசேஷமான வருகைக்காக ஒரு பிரத்யேக அறையை ஒதுக்கி இருந்தார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

யோக சுவாமியின் இதயத்தில் ஒவ்வொருவருக்கும் அன்பும் கருணையும் நிறைந்து இருந்தது. அவர் ஒருவரை பார்த்து சிரித்தாலும் அல்லது இகழ்ந்தாலும், அவரை அரவணைத்தாலும் அல்லது உதைத்தாலும், அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் அன்பு மற்றும் அருளின் செயலாக இருந்தது. அவர் எந்த வித வெளிப்புற ஆரவாரமும் இல்லாமல், அனைத்து உயிரினங்கள் மீதும் அளவுக்கு அதிகமான கருணையை பொழிவார். அவர் ஏழைகள் மீது செலுத்தும் கவனம் மற்றும் அக்கறையை அளவிடமுடியாது. ஒரு பிரச்சனையுடன் தன்னை நாடி வந்த, ஒரு நேர்மையான அன்பரை அவர் எப்போதும் ஏமாற்றியது இல்லை. ஒரு நாள் காலையில், யோக சுவாமி தனது குடிசையில் அமர்ந்து இருந்தார். அவர் முன்பாக இரண்டு சீடர்கள் அமர்ந்து இருந்தார். சுவாமி அவர்களிடம் பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கே வந்த ஒரு முதியவர், குடிசைக்கு வெளியே நின்று கொண்டார். சுவாமி அவரை உள்ளே வரவழைத்து அவரிடம் நலம் விசாரித்தார். அந்த முதியவர் பதில் ஏதும் பேசவில்லை. அவரது கண்களில் கண்ணீர் வரத்தொடங்கி, இரண்டு மூன்று நிமிடங்களுக்கு தேம்பி தேம்பி அழுதார். §§

அப்போது சுவாமி, “கவலை வேண்டாம். உங்கள் வேதனைகளில் இருந்து வெளிவருவதற்கு சிவபெருமான் வழிவகுப்பார். நீங்கள் அமைதியாக வீடு திரும்புங்கள்,” என்று கூறினார். சுவாமி உத்தரவிட்டபடியே அந்த முதியவர் அங்கிருந்து கிளம்பியதும், சுவாமி தனக்கு முன்பாக அமர்ந்து இருந்த இரண்டு சீடர்களை பார்த்து, “அவர் ஒரு நல்ல மனிதர். அவர் தனது பெண்ணை திருமணம் செய்து வைப்பதில் சில இடையூறுகளை சந்தித்து வருகிறார். அந்த பெண்ணுக்கு 26 வயது. அவளது தந்தை திருமணத்தில் சீதனமாக சிறிதளவு நகையை வழங்கினால், திருமணம் செய்துகொள்ள ஒரு உறவுக்கார பையன் தயாராக இருக்கிறான். உங்களில் யாராவது அவருக்கு உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டார். உடனே அ. தில்லையம்பதி தான் உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறினார். அவர் அங்கிருந்து விடைபெற்று, அந்த முதியவருக்கு பின்னால் ஓடி சென்று, அவரது பெயரையும் விலாசத்தையும் பெற்றுக்கொண்டார். அடுத்த நாள் அவர் அந்த முதியவரின் வீட்டிற்கு சென்று, ஐயாயிரம் ரூபாயை பரிசாக வழங்கினார். அவர் காலம் தாழ்த்தாமல், தேவையான நகைகளை வாங்கி, தனது மகளுக்கு மணமுடித்து வைத்தார்.§§

சுவாமியை தரிசிக்க பெருந்திரளான மக்கள் வருவதை பார்த்த சிலர், சுவாமி எதற்காக எல்லோரையும் அனுமதிக்கிறார் என்றும் சுவாமியுடன் சிறிது நேரம் இருந்தால், தனக்கு பலன் தருவதாக இருக்கும் என்பதை அறிந்திருந்த சிலர், குறிப்பாக ஒரு வழக்கை வாதாடுவதற்கு முன்பாக அவரை நாடி வரும் வழக்கறிஞர் போன்றவர்களை அவர் ஏன் தடுக்கவில்லை என்றும் யோசித்தனர். “நான் எல்லோரையும் சந்திக்கிறேன், மற்றும் எல்லோரும் என்னிடமிருந்து தன்னால் கிரகிக்க முடிந்ததை சுமந்து செல்கிறார்கள். என்னை நாடி வருவோரிடம் நீ வா அல்லது நீ போ என்று தேர்ந்தெடுக்கும் பணி என்னுடையது இல்லை, “ என்று அவர் ஒருமுறை விளக்கினார். சுவாமியை நாடி வந்தவர்கள் மூன்று பிரிவுகளை சார்ந்து இருந்ததாக ஒண்டாரியோவை சேர்ந்த எஸ். கந்தையாவிற்கு தோன்றியது. §§

முதல் வகையை சார்ந்தவர்கள் அதிக ஆன்மீக நாட்டத்துடன், துறவியை போன்று வாழ்ந்தவர்கள். இந்த வகையைச் சார்ந்தவர்கள் மிகவும் சிறிய எண்ணிக்கையில் இருந்தார்கள். சுவாமி இவர்களை மற்றவர்களிடம் இருந்து விலக்கி வைத்திருந்தார், மற்றும் அவர்கள் தன்னை வந்து சந்திப்பதை காட்டிலும் அவரே அவர்களை நாடி செல்வார். இரண்டாவது வகையை சார்ந்தவர்கள் லௌகீக சுகங்களை அனுபவித்து வந்தாலும், சிறிதளவு ஆன்மீக நாட்டத்துடன் இருந்தவர்கள். மூன்றாவது வகையை சார்ந்தவர்கள் லௌகீக சுகங்கள், பதவிகள், சொத்துக்களை தங்கள் பிரதான நாட்டமாக கொண்டிருந்தார்கள். §§

நான் சுவாமியிடம் நெருங்கி பழக தொடங்கியதால், என்னிடம் இருந்த அச்சம் மற்றும் பதட்டம் குறைந்து இருந்த சமயத்தில், மூன்றாவதாக குறிப்பிட்ட போலி சீடர்களுக்கு அவர் ஏன் அனுமதி அளிக்கிறார் என்று நான் கேட்டேன். அவர் மனமுவந்து உற்சாகமாக சிரித்த சிரிப்பொலி நூறு மீட்டர் தூரத்திற்கு கேட்டிருக்கக்கூடும். அவர் என்னிடம், “நான் நல்லவனை நல்லவனாக மாற்ற வேண்டுமா, அல்லது தீயவனை நல்லவனாக மாற்ற வேண்டுமா?” என்று கேட்டார். அவரது ஆதரவு தீங்கிழைப்பவர்களும் ஆன்மீக சாதகர்களும் கிடைத்தது என்று சொல்லலாம். §§

ஆனால் அவர் சில சீடர்களை வலுவாக மற்றும் தெளிவாக, கடுமையான முறையில் திட்டி அனுப்பியதால், அது அவர்கள் மீது உடனடி தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்கள் மீண்டும் சுவாமியிடம் வருவதை தவிர்த்தது. மேலும் சிலரை அவர் பார்க்க மறுத்தார். ஒருவரை துரத்துவதால் அல்லது பார்க்க மறுப்பதால், அவர் அவர்களுக்கு தரிசனம் தருவதாக விளக்கம் அளித்தார். §§

ஒருமுறை சுவாமியின் பழைய மற்றும் நாணயமான அன்பர், மறுநாள் திருமணம் நடக்கவிருந்த தனது சிறிய மகளுடன் வந்து இருந்தார். அவர்கள் சுவாமியிடம் ஆசிகளை பெறுவதற்காக வந்து இருந்தார்கள். கதவு திறக்கும் சத்தம் கேட்டது, சுவாமி, “யார் அங்கே?” என்று கேட்டார். குடிசையில் அமர்ந்து இருந்த ஒரு அன்பர், வெளியே வந்தவர்களை பார்க்க சென்றார். அவர் திரும்பி வந்து, சுவாமியிடம் வந்தவர்களை பற்றிய தகவலை வழங்கியதும், “யார் அவர்?” என்று கேள்வி கேட்டார். சுவாமிக்கு அந்த நபரை நன்றாக தெரியும், என்று எல்லோரும் அறிந்து இருந்தார்கள். அந்த நபர் எதற்காக வந்து இருந்தார் என்பதையும் அவர்கள் அறிந்து இருந்தார்கள். §§

சுவாமி சிறிது நேரம் அமைதி காத்து, “நாம் இப்போது பரிச்சயம் இல்லாத நபரை சந்திக்க விரும்பவில்லை. நாம் அவரை சந்திக்க முடியாது என்று சொல்லுங்கள்.” ஒரு அன்பர் வெளியே சென்று, அந்த நபரிடம் தகவலை வழங்கினார். அவர்கள் வந்த வாகனம் கிளம்பியதும், அது சென்றுவிட்டதா என்று ஒரு அன்பரை அனுப்பி பார்க்க சொன்னார். அந்த வாகனம் சென்றுவிட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். அது கிளம்பும் சத்தத்தை எல்லோரும் கேட்டு இருந்தனர். ஆனாலும் சுவாமி ஒருவரை அனுப்பி பார்க்க சொன்னார். அந்த அன்பர் குடிசைக்கு திரும்பியதும், சுவாமி கலகலவென சிரிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு சுவாமி தனது நடவடிக்கையை குழப்பத்துடன் பார்த்துக்கொண்டு இருந்த அன்பர்களிடம், “அது எப்போவோ முடிந்த காரியம். நீண்டகாலம் முன்பே முடிந்து விட்டது,” என்று கூறினார். அந்த அன்பரையும் அவரது மகளையும் சுவாமி ஏன் பார்க்க மறுத்தார் என்பது யாருக்கும் புரியவில்லை, ஆனால் தாங்கள் பார்த்த காட்சியின் பின்னணியில் ஒரு ஆன்மீக காரணம் இருந்துள்ளதை எல்லோரும் உணர்ந்தார்கள். §§

ஆசிரமத்திற்கு தொடர்ந்து வந்துகொண்டிருந்த விசுவாசமான பெண் அன்பர் ஒருவர், ஒரு முறை சுவாமி தன்னை திருப்பி அனுப்பிய சம்பவம் பற்றி எடுத்துரைக்கிறார். §§

வழக்கமாக அக்டோபர் மாதத்தில் வரும் தீபத் திருவிழாவான தீபாவளிக்கு, நமது சொந்தங்கள் அல்லது நமக்கு விருப்பமான நபருக்கு புத்தாடைகளை வழங்குவோம். அதனால் நான் அவருக்கு ஒரு அருமையான வேட்டியை வாங்கி, அவரது ஆசிரமத்திற்கு சென்று எனக்கு அழைப்பு வரும் என்று நீண்டநேரம் காத்து இருந்தேன். இறுதியாக அவர், “யாரும் உள்ளே வரவேண்டாம்; எல்லோரும் சென்று விடுங்கள்,” என்றார். நான் சோகமடைந்து அழத்தொடங்கிவிட்டேன். அதன் பிறகு அவர், “சரி, அந்த வேட்டியை உள்ளே கொண்டு வரவேண்டாம். நீங்கள் மட்டும் உள்ளே வரலாம்.” நான் வாங்கிய வேட்டியை சுவாமி வாங்க மறுத்ததால், நான் சோகமடைந்தேன். அதைப் பார்த்ததும் சுவாமி, ஒரு அரசராகவும் ஒரு மிகப்பெரிய மகானாகவும் இருந்த, ஜனகரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்டார். “ஜனகரின் குரு அவரை நாற்பது நாட்கள் காத்திருக்க செய்தார். ஆனால் அவர் கலங்காமல் ஒரே இடத்தில் நகராமல் காத்து இருந்தார். நீங்கள் ஒரு குழந்தை போல, இந்த சிறிய விஷயத்திற்கு அழ ஆரம்பித்து விட்டீர்கள்,” என்று கூறி என்னை அனுப்பிவிட்டார். “முதலில் அடிபணிந்து நட, பிறகு ஆணை யிடலாம்,” என்று அவர் வழக்கமாக சொல்லிக்கொண்டிருப்பார். §§

ஒரு முறை ஒரு நபர் தன்னிடம் சேர்ந்திருந்த புத்தக தொகுப்புக்களை கொண்டு, ஒரு புத்தகக்கடையை திறக்கலாம் என்று எண்ணினார். அவர் தனது கடைக்கு சுவாமி வந்து ஆசிகளை வழங்கவேண்டும் என்று விரும்பினார், ஆனால் அவர் சுவாமியை பார்த்த ஒவ்வொரு முறையும், தனது வேண்டுகோளை மறந்துவிட்டார். இருந்தாலும், சுவாமியிடம் அதைப்பற்றி குறிப்பிடுவது, அவ்வளவு முக்கியமானதாக அவருக்கு தோன்றவில்லை. அவர் அந்த கடையை திறக்க ஒரு மங்களகரமான தருணத்தில் ஒரு சிறிய விழாவிற்கு ஏற்பாடு செய்து இருந்தார். விழாவின் நேரம் நெருங்கி இருந்தது. இருந்தும், அதுவரை அவர் சுவாமிக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், பூஜை தொடங்குவதற்கு சோதிடர் குறித்து இருந்த நேரத்தில் சரியாக சுவாமி வந்தடைந்தார். காலப்போக்கில், அந்த கடை யாழ்ப்பாணத்தில் ஒரு பிரபல கடையாக மாறியது. அன்றைய தினம் சுவாமி வந்து தனது கடைக்கு ஆசிகளை வழங்கியதன் விளைவாக, அது வெற்றி அடைந்ததாக அந்த கடை உரிமையாளர் கருதினார். §§

கேட்கப்படாத கேள்விகள் மற்றும் அறியமுடியாத தேவைகளின் நிறைவேற்றங்களுக்கு சுவாமியின் பதில்களை பற்றி நூற்றுக்கணக்கான கதைகள் மக்கள் மத்தியில் உள்ளன. சுவாமியை காண வந்த ஒரு நபருக்கு, சுவாமியின் மூலம் ஒரு குறிப்பிட்டதக்க அனுபவத்தை பெற்று இருந்தால், அல்லது ஒரு முக்கிய உதவியை பெற்று இருந்தால், அந்த நபர் அதைப்பற்றி பேசுவதை தடுத்து, “புனிதம் இரகசியமானது, மற்றும் இரகசியம் புனிதமானது,” என்று எச்சரிப்பார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சுவாமியை சென்று பார்த்து இருந்தாலும், இருவரும் தங்களுக்குள் அதைப்பற்றி பேசிக்கொள்ளாத அளவிற்கு, மக்கள் அவரது அறிவுரையை பாதுகாத்து வந்தனர். காற்றின் மூலம் செய்திகள் பரவும் யாழ்ப்பாணத்தில், அத்தகைய ஒரு இரகசியம் பாதுகாக்கப்பட்டதை பலர் ஒரு அதிசயமாக கருதினார்கள். §§

சுவாமியை தரிசிக்க அன்பர்கள் அதிகாலையில் அல்லது மாலையில் வந்தார்கள். அவர் விடிவதற்கு முன்பாக விழித்துக்கொண்டு, தனது குடிசையில் தியானம் செய்து கொண்டிருப்பார். பக்திமான்கள் அவருடன் சேர்ந்து உட்கார்ந்து கொள்வார்கள். சிறிது நேரம் அமைதியாக இருந்த பிறகு, சுவாமி பாடத்தொடங்கி விடுவார். முழுமையாக இருந்த அவரது குரல் வளத்தில் பாடல்கள் இனிமையாக இருந்தன. ஒரு முறை ஒரு அன்பர் சுவாமியிடம், ஒரு குறிப்பிட்ட பாடலுக்கு என்ன பொருள் என்று கேட்டார். அதற்கு சுவாமி, “அந்த பாடலை நான் எழுதவில்லை; அது உள்ளிருந்து வந்தது,” என்று பதில் அளித்தார். அவர் மற்ற மகான்கள் இயற்றிய பாடல்கள் மற்றும் சாஸ்திரங்களை பாடுவார். அந்த பாடல்களும் தனது உள்ளிருந்து வந்ததாக குறிப்பிட்டு, “அவற்றை நான் ஞாபகப்படுத்திப் பாடியதாக தோன்றினாலும், நான் அவ்வாறு செய்யவில்லை. அவை எனது உள்ளிருந்து வந்தன.” §§

அவர் தன்னுடன் அமர்ந்து இருக்கும் ஒரு அன்பரிடம் ஒரு தைத்ரிய உபநிடதம், மிகப்பெரிய திருமுறையில் இருந்து ஒரு பகுதி, சுவாமி விவகானந்தரின் படைப்புக்கள் அல்லது ஏதாவது ஒரு புனிதமான புத்தகத்தை தந்து, அதை வாசிக்க சொல்வார். §§

அன்பர்கள் தனக்காக பாடும் போது அல்லது வாசிக்கும் போது, தங்கள் கவனத்தை சிதறவிட்டு, ஏதோ ஒரு காலத்தில் ஒரு தொலை தூர இடத்தை பற்றி வாசிப்பதாக நினைக்காமல், அந்த தருணத்தில் தாங்கள் சிவபெருமானாக அல்லது மாணிக்கவாசகராக நினைத்துக்கொண்டு வாசிக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொள்வார் அல்லது கடிந்தும் கொள்வார். “இந்த வார்த்தைகளை புரிந்துகொள்வதற்கு, இது தான் ஒரே வழி,” என்று அவர் வலியுறுத்தினார். சுவாமி தன்னை அணுகும் ஒவ்வோரிடமும் சவால் விடுவார். §§

உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என்றால், நான் யார் என்று எனக்கு தெரியும். நீங்கள் யார் என்று தெரிந்துகொள்வதற்கு நான் உதவி செய்யலாமா? என்னால் உங்களுக்கு வழியையும் ஒளியையும் காண்பிக்க முடியும், ஆனால் நீங்கள் உங்கள் சொந்த கால்களில் நின்று முயற்சி செய்து முன்னேற வேண்டும். எல்லாம் உட்புறத்தில் இருக்கிறது. நீங்கள் அதை தேடிப்பிடித்து, அதை உறுதி செய்யவேண்டும். என்னால் உங்களுக்கு கீரிமலை அல்லது நல்லூருக்கு செல்ல வழியை காண்பிக்க முடியும். நான் அங்கே பலமுறை சென்றுள்ளதால், எனக்கு அந்த வழி தெரியும். ஆனால் நீங்கள் அங்கே செல்லவேண்டும் என்றால், நீங்கள் நடந்து செல்லவேண்டும். உங்களுக்காக என்னால் நடந்து செல்ல முடியாது. ஆன்மீக பாதையிலும் அதே நிலை தான். §§

காலப்போக்கில் சுவாமி தான் சந்திக்கும் ஒவ்வொரு நபரையும் மேம்படுத்தி, ஊக்கமளித்து, உதவி செய்ய மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் மூலம், அவர் அன்பர்களின் ஒரு வலுவான குழுவை உருவாக்கி இருந்தார். இதைப்பற்றி இந்துமதி அம்மா வழங்கும் குறிப்பு: §§

கொழும்புத்துறை ஆசிரமத்தில் தங்கியிருப்பதன் மூலமாகவும், அன்பர்களின் வீடுகளுக்கு செல்வதன் மூலமாகவும், சுவாமி ஒரு மிகப்பெரிய சீடர்களின் குழுவை உருவாக்கி இருந்தார். அவர்களில் சிலர் மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம், மற்றவர்களிடம் இருந்து நன்கொடைகளை வாங்கி மற்றும் வழங்குவதன் மூலம், இறைவனின் சேவையில் நிலைமாற்றம் பெற்று இருந்தார்கள். இருந்தாலும் மற்றவர்கள், “என்னை யார் தொடர்ந்து நினைக்கிறார்களோ, அவர்கள் எனது உண்மையான சீடர்கள்,” என்ற வாக்கிற்கு ஏற்ப, அவரை தொடர்ந்து நினைத்துக்கொண்டு இருந்தவர்கள் அவரது சீடர்களாக மாறினர். சில குடும்பங்களில் கணவன், மனைவி, பெற்றோர்கள், குழந்தைகள், மாமன்மார்கள் மற்றும் அத்தைமார்கள் என்று எல்லோரும் ஒரு சீடர்களின் குழுவாக இருந்தனர். இவற்றில் சில குடும்பங்கள், தங்களை ஒரு விசரனாக மற்றவர்கள் பேசுவதை பொருட்படுத்தாமல், சுவாமியை பற்றி நினைவு தங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக சிவன்செயல், சிவதொண்டன், யோகரானந்தன், யோகர் அன்பன் என்று பெயரிட்டனர். மற்றும் சிலர் கர்ம யோகிகளாக மாறினார்கள். §§

சிலர் லௌகீக வாழ்க்கையை துறந்து, சுவாமிக்கு அருகில் வாழும் சிப்பந்திகளாக மாறினார்கள். இங்கிலாந்தின் அரச குடும்பத்தை சார்ந்த ஒருவரும் துறவறம் மேற்கொண்டு, சுவாமியின் சீடர் ஆனார். மார்கண்டுசுவாமி மற்றும் மற்ற பிரம்மச்சாரிகள் சுவாமியின் “தன்னை அறி" பாதையை பின்பற்றி, பக்குவம் அடைந்து, அனைத்து சிவ பக்தர்களுக்கும் வழிகாட்டும் விளக்குகளாக மாறினார்கள். சமய அறிவு மற்றும் தார்மீக ஒழுக்கத்தால் கிடைக்கும் அனுபவத்தின் மூலம், சுவாமியின் தெய்வீக குழந்தைகள், ஒழுங்குமுறையான வாழ்க்கையால் வலுப்படுத்தப்பட்டு மற்றும் மனத்துறவின் விதிகளை கடைப்பிடித்துக்கொண்டு, அவரது பாதையை பின்பற்றினார்கள். §§

சிவயோகர் சுவாமியின் சில சீடர்கள் அரசாங்க வேலையில் இருந்தார்கள். நாடு முழுவதிலும் வேலை செய்த அன்பர்களால், ஆசிரமத்திற்கு தொடர்ந்து வர முடியவில்லை. அதனால் சுவாமி அவர்களை தேடி அவர்களின் வீட்டிற்கு சென்றார். குறிப்பாக அவர்கள் தீவிர வேதனையில் இருந்து, மனம் உடைந்த நிலையில் தன்னை வேண்டிக்கொள்ளும் போது, சுவாமி அவர்கள் முன்பாக தோன்றி அவர்களுக்கு தெய்வீக அருளுடன் ஆசிகளை வழங்குவார். அவர் மாபலேவை சேர்ந்த அஞ்சல் நிலைய அதிகாரியை சந்திக்க, மற்றும் திரு. கந்தசுவாமி வீடு, பேராதனையில் இருந்த திரு. வேலுப்பிள்ளையின் பண்ணை வீடு, கம்பளையில் வேலை செய்த Dr. இராமநாதன் வீடு மற்றும் மற்ற இடங்களுக்கு செல்வதை தனது வழக்கமாக கொண்டிருந்தார். அவர் ரத்னபுராவில் இருந்த திரு. அ. தில்லையம்பதியின் வீடு மற்றும் நாவலப்பிட்டியில் இருந்த மற்ற சீடர்களின் வீட்டிற்கும் சென்றார். இவ்வாறு சுவாமி, இலங்கை தீவில் இருந்த பல சீடர்களின் வீட்டிற்கு சென்றார். அந்த சீடர்கள் தங்கள் பூஜை அறையை, சுவாமியின் சொந்த அறையை கவனிப்பது போல, அதிக அக்கறையுடன் கவனித்து வந்தனர். சுவாமி ஒரு வீட்டிற்கு வந்துள்ளார் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டதும், எல்லோரும் சுவாமியை தரிசனம் செய்ய அந்த வீட்டில் கூடி விடுவார்கள். §§

சுமார் இருபது ஆண்டுகளுக்கு, மாதம் ஒரு முறை மலை பிரதேசத்திற்கு, கொழும்பிற்கு, திரிகோணமலைக்கு, மட்டக்களப்பிற்க்கு சென்றதன் மூலம் தனது சீடர்களை கவனித்து கொண்டார். சுவாமி சென்ற வீடுகள் அனைத்தும், கோயில்களை போல செழிப்படைய தொடங்கின. அதன் பிறகு, 1942 ஆம் ஆண்டு, தனது 70 ஆவது வயதில், “இனி வெளியூர்களுக்கு செல்வதில்லை. விரும்பியவர்கள் இங்கே வரட்டும்,” என்று ஆணையிட்டார். §§

ஒரு அன்பர் பின்வரும் சிறுகதைகளை பகிர்ந்து கொண்டார்.§§

ஒரு நாள் மாலையில், ஆசிரமத்தில் சுமார் பதினைந்து அன்பர்கள் கூடியிருந்த நிலையில், சுவாமி எங்கள் எல்லோரிடமும் இங்கே எத்தனை அன்பர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டார். யாரும் எதுவும் பேசவில்லை. அப்போது சுவாமி, “இங்கே ஒருவர் மட்டுமே உள்ளார்,” என்று கூறினார். §§

“நீங்கள் உண்மையை பேசக்கூடாது, ஒரு பொய்யை பேசவேண்டும் என்று உங்களிடம் கூறப்பட்டால், நீங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று சுவாமி வழக்கமாக எல்லோரிடமும் விசாரிப்பார். ஒரு நாள் சுவாமி, சந்தசுவாமியிடம் அந்த கேள்வியை கேட்டார். உடனே சந்தசுவாமி தன் கைகளால் வாயை மூடிக்கொண்டு, எதையும் பேசாமல் இருந்தார். பின்னர் சுவாமி எங்களிடம், “அவர் ஒரு மகான். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் எனக்கு பலவிதமான விளக்கங்களை வழங்கினார்கள்; ஆனால் அவை அனைத்தையும் அவர் அமைதியில் காண்பித்து விட்டார்,” என்று கூறினார். §§

ஒரு நாள் காலையில் சுமார் 5:30 மணிக்கு, நான் சுவாமியை சந்திக்க சென்றேன். அவர் எப்போதும் போல தனது குடிசைக்கு முன்பக்க வளாகத்தை பெருக்கிக்கொண்டு இருந்தார். அவர் தனது வளாகத்தை தினமும் காலையில் பெருக்கி, தூசியை ஒரு புறமும், மாட்டு சாணத்தை ஒரு புறமும் குவித்து வைப்பார். நான் நுழைந்ததும் அவர் தன் வேலையை நிறுத்தி, “யார் அங்கே? வந்து இருப்பது யார்?” என்று திட்டமிட்டு கத்தினார். அதன் பிறகு அவர் என்னிடம், “நான் இதுவரை ஒரு கழிவறை கூலியாக இருந்தேன்; இப்போது நான் ஒரு சுவாமியாக இருக்கிறேன்,” என்று கூறினார். அதன் பிறகு அவர் குடிசைக்குள் சென்று, ஒரு சிறிய செம்பு பத்திரத்தை எடுத்துக்கொண்டார். அதில் தண்ணீரை நிரப்பி, அதன் மீது ஒரு குவளையை வைத்து மற்றும் சில மலர்களை தூவி, ஒரு கும்பத்தை உருவாக்கினார். தான் மக்களின் இதயங்களை சுத்தம் செய்வது பற்றி சுவாமி குறிப்பிடுவதாக எனக்கு தோன்றியது. “மக்களை சரியான பாதையில் அழைத்து செல்வதற்கு, யாராவது ஒருவர் இருக்க வேண்டும். அவ்வாறு கிறுத்து மக்களை வழிநடத்தினார், அவ்வாறு புத்தரும் செய்தார். நானும் அதை செய்கிறேன்,” என்று அவர் கூறினார்.§§

ஒரு நாள் சுவாமி தனது ஆசிரமத்தில் சந்தசுவாமியுடன் இருந்த போது, நான் சுவாமிக்கு தேநீர் எடுத்து சென்றேன். அவர் அந்த கோப்பையை சந்தசுவாமிக்கு வழங்கவிருந்தார். அதனால் நான், “சற்று பொறுங்கள் சுவாமி, நான் அவருக்கு இன்னொரு கோப்பையை கொண்டு வருகிறேன்,” என்றேன். உடனே சுவாமி, “நீங்கள் உங்கள் வேலையை கவனியுங்கள்; நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்கு தெரியும்,” என்று பதில் அளித்து, அந்த கோப்பையை சந்தசுவாமிக்கு வழங்கினார். §§

மக்கள் எப்போதும் வேலை செய்துக்கொண்டு இருக்கவேண்டும் என்று யோக சுவாமி விரும்பினார். அவர் வேலைக்கு முக்கியத்துவம் அளித்தார். அவர் ஒரு நாள் பெருக்கி முடித்து விட்டு, “இறுதி இரத்தம் சிந்தும் வரை வேலை செய்யவேண்டும்,” என்றார். “உனது வேலையை செய். உனது கர்மாவை செய். எந்த பலனையும் எதிர்பார்க்காதே. அது தான் யோகம். அது தான் சந்நியாசம்.” அதாவது, லௌகீக விஷயங்கள் மீது பற்றுடன் இருக்கக்கூடாது என்பதை குறிப்பிட்டார். §§

ஒரு முறை நாங்கள் எல்லோரும் சுவாமியின் இருப்பிடத்தில் வாழையிலையில் சாப்பிட்டோம். எல்லோரும் தங்கள் இரவு விருந்தை சாப்பிட்டு முடித்த பிறகு, அங்கே வந்திருந்த ஒரு பெண் மருத்துவர், சுவாமியின் இலையை எடுப்பதற்கு முன் வந்தார். சுவாமி அவரிடம், “என்னால் என் வேலையை செய்ய முடியும். நீங்கள் உங்கள் வேலையை கவனியுங்கள்,” என்றார். §§

சுவாமி தன் சீடர்களுக்கு சேவை செய்யும் பாதையை திறந்து வைத்தார். “வேலை, வேலை, வேலை, சேவை, சேவை, சேவை.” அவரிடம் எப்போதும் ஏதாவது ஒரு பணி இருந்துகொண்டே இருந்தது, மற்றும் அந்த பணி எந்த ஒரு நபராலும் குழுவாலும் சாதிக்க முடியாததாக இருந்தது. அந்த பணிகளில் சுவாமி இரண்டாம் தர செயல்பாடுகளுக்கு எப்போதும் அனுமதி அளிக்காமல், முழுமையான செயல்பாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஒரு இந்து திருவிழாவிற்கான நாடகம் என்றால், சுவாமி அதன் தயாரிப்பில் நேர்மறையான அறிவுரைகளை வழங்குவார். சுவாமி அந்த நாடக தயாரிப்பில் இயக்குனர், ஒத்திகை காட்சிகள், நாடக நடிகரை ஊக்குவித்து அவரது திறமையை முழுமையாக பயன்படுத்துதலைப் போன்ற பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டார். “நீங்கள் நினைப்பதை காட்டிலும், உங்களிடம் அதிகமான திறமை அடங்கியுள்ளது,” என்று அவர் கோபித்து கொள்வார். அவரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் போது, ஒவ்வொருவரும் தன்னிடம் இருக்கும் ஒரு புதிய பலத்தை தேடிக்கொண்டனர். இது தொடர்பாக ஒரு அன்பர் சில சம்பவங்களை நினைவு கூர்கிறார்:§§

நீங்கள் நல்லூர் கோயிலில் ஆயிரம் நபர்களுக்கு அன்ன தானம் வழங்க திட்டமிட்டு இருந்தால், அந்த நிகழ்ச்சி சுமூகமாக நடந்து முடிய, நீங்கள் அனைத்தையும் நன்றாக திட்டமிட்டு இருக்கிறீர்களா என்பதை அவர் உறுதி செய்து கொள்வார். அந்த அன்னதானத்தில் என்ன காய்கறிகள் பரிமாறப்படவிருக்கின்றன என்பதை அவர் தெரிந்துக்கொள்ள விரும்புவார், மற்றும் அவர் மாற்று காய்கறிகளை அல்லது எண்ணிக்கையை குறைக்க பரிந்துரைப்பார். “மூன்று காய்கறிகள் போதும்,” என்று அவர் பரிந்துரைப்பார். §§

நீங்களும் மற்ற அன்பர்களும் சேர்ந்து ஒரு பாழடைந்த கோயிலை புனர்நிர்மாணம் செய்கிறீர்கள் என்றால், அவர் அதில் அக்கறை செலுத்தி, அதை முறையாக மீண்டும் கட்டுவதையும், அதன் குடமுழுக்கு விழாவிற்கு தேவையான சடங்குகளை செய்வதையும், அவர் உறுதி செய்து கொள்வார். அந்த கோயில் எதிர்காலத்தில் தொடர்ந்து செயல்படுவதற்கு, போதுமான நன்கொடை நிறுவலை வழங்கி இருக்கிறீர்களா என்பதையும் விசாரிப்பார்.§§

தன் வாழ்க்கையில் ஒரு சாதனை செய்திருந்த ஒரு அன்பர், சுவாமியிடம் பாராட்டை பெறுவதற்காக வந்தால், அவர் அன்பரின் தற்பெருமையை உடனே முடிவுக்கு கொண்டு வந்துவிடுவார். சில சமயம் அவர் அன்பரின் சாதனையை உடனே புறக்கணித்து, கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு பணியின் மீது தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். அப்படி இல்லையென்றால், “இந்த செயலால் நீ பலருக்கு நல்ல உணவை வழங்கியுள்ளதாக கருதுகிறாயா? நீ தான் உணவிற்கு உயிரை வழங்கினாயா? அல்லது அந்த காய்கறிகளை சமைத்தவர்களுக்கு உயிரை வழங்கினாயா? யார் பசியை உருவாக்கியது? நீ தான் பசியாறுவதற்கு வழியை தேடி தந்தாயா? தம்பி, நீ எதையும் சாதித்து விட்டதாக கருதக்கூடாது. இவை அனைத்தும் இறைவனின் செயல். நீ அதை புரிந்துகொண்டதும், நீ எதையும் செய்யவில்லை என்பது உனக்கு புரியும், “ என்று அதட்டுவார். §§

“நீ தாமரை இதழின் மீதிருக்கும் நீர் துளி போல இரு,” என்று அவர் வற்புறுத்தினார். அதாவது பற்றுடன் இருக்காதே; எதுவும் நடைபெறவில்லை என்ற நினைப்பில் சுதந்திரமாக சுற்றி திரி. ஒரு முறை தனக்கு ஒரு விசேஷமான ஆன்மீக அனுபவம் நடந்துள்ளதாக, சுவாமியின் நெருக்கமான சீடருக்கு தோன்றியது. அவர் தனது தியானத்தில் எதிர்கொண்ட மெய்யுணர்வின் பரிணாமங்கள், அவருக்கு முற்றிலும் புதிதாக இருந்தன. அடுத்த நாள் காலையில் அவர் சாலையில் நடந்து செல்லும் போது, சுவாமி எதிரில் வந்து, என்ன நடந்தது என்று கேட்டார். அவர் எதையும் யோசிக்காமல், “ஒன்றுமில்லை, சுவாமி,” என்று பதில் அளித்தார். “சரியாக சொன்னாய், ஒன்றும் நடக்கவில்லை,” என்று சுவாமி வலியுறுத்தினார்.§

தன்னை நாடி வந்தவர்களுக்கு என்ன தேவை என்பதை யோக சுவாமி நன்றாக அறிந்து இருந்தார். அவரது முன்னிலையில் மக்கள் குறைவாகவே பேசினார்கள். குரு பேச்சு வார்த்தையை தொடங்காமல், சீடர்கள் தொடங்குவது குரு நெறிமுறைக்கு எதிராக இருந்தது. பெரும்பாலும் அன்பர்கள் கேள்வி கேட்கமுடியாமல் தவித்தனர். அப்படி அவர்கள் கேள்வி கேட்டால், “ உங்கள் அறியாமை, கேள்வி கேட்கிறது! அதை அதன் வீட்டிற்கு அனுப்பு!” என்று கூறுவார். பெரும்பாலும் கேள்விகள் கேட்கப்படுவதற்கு முன்பே, சுவாமி அவற்றை தெளிவு படுத்திவிடுவார். ஒரு அன்பர் தனது மனதில், “அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் தனது தெய்வீக உருவத்தை காண்பித்தார். சுவாமி நீங்கள், உங்களது தெய்வீக மற்றும் பிரகாசமான ஆன்மாவை எனக்கு காண்பிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்கவேண்டும் போல தோன்றுகிறது. ஆனால் நான் அவரிடம் இதை எப்படி கேட்பது? அவர் என்னை கடிந்து கொள்வாரே?” என்று நினைத்துக்கொண்டார். அப்போது சுவாமி, §§

அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் தனது பிரகாசமான சக்தியை கண்பித்ததை போல, என்னாலும் எனது பிரகாசமான உருவத்தை காண்பிக்க முடியுமா என்று யோசிக்கிறீர்கள். அது மிகவும் சுலபம். நேரம் அனுகூலமாக இருக்கும் போது, அது ஒவ்வொருவருக்கும் நடைபெறும். ஆனால் உங்கள் மனதின் எந்த ஒரு மூலையிலும் ஆசை குடிக்கொண்டு இருக்கக்கூடாது. நீங்கள் உங்கள் ஆசைகளை நீக்கி சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். தெய்வீக பாடல்களை பாடுங்கள், “ ஓம் நமச்சிவாய, சிவாய நம ஓம்,” பாராயணம் செய்யுங்கள், நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு, ஆசைகளை தணிய செய்யும் சாதனாக்களை செய்யுங்கள். மனதில் ஆசை தோன்றினால், உங்கள் மனதை ஈமச்சடங்கு தீயாக மாற்றி, அந்த ஆசையை எரித்து விடுங்கள். அதை எரித்து விடுங்கள்! தியானம் செய்து, அந்த ஆசை எரிவதை கவனியுங்கள். அந்த சுடர்களை உணருங்கள். அதன் பிறகு இருப்பிடத்தில் இருந்து எழுந்து, குளித்துவிட்டு நெற்றியில் விபூதியை பூசிக்கொள்ளுங்கள். நெற்றியில் பூசிக்கொண்டு அந்த சாம்பல், உங்கள் ஆசையின் சாம்பல் என்பதை புரிந்துகொள்ளுங்கள். §§

ஆசீர்வதிக்கப்பட்ட கண்டிப்புக்கள் §

தனக்கு மரியாதை அளித்தவர்களை யோக சுவாமி கூர்ந்து கவனித்தார். அவர் எதுவாக அன்பர்களின் மனதில் தோற்றம் அளிக்கிறாரோ, அதை அவர்கள் தங்களுக்குள் உணரவேண்டும் என்பது அவரது மிகப்பெரிய போதனைகளில் ஒன்றாக விளங்கியது. ஒரு நபர் அவரை “நான் மிகவும் சிறியவனாக வலுவில்லாமல் இருக்கிறேன். நீங்கள் மிகவும் சிறந்தவராக ஆற்றல்மிக்கவராக இருக்கிறீர்கள். என்னை உங்கள் நற்பண்புகளில் நுழைய அனுமதியுங்கள். அதன் பயனால், என் மீது ஒரு நாள் எதிர்வினை வழங்கவிருக்கும், என்னால் இயக்கப்பட்ட தீமைகள் அனைத்தும், நடைபெறாமல் இருக்கட்டும்,” என்ற உணர்வுடன் வழிபடக்கூடும். இதைப்போன்ற எண்ணங்களுடன் யோக சுவாமியை பார்க்க வருவோர், கண்டிக்கப்பட்டு வந்த வழியில் திருப்பி அனுப்பப்படுவார்கள். “நீங்கள் எதற்காக என்னை வழிபடுகிறீர்கள். எனக்கும் உங்களைப் போன்று இரு கண்கள், இரு காதுகள், ஒரு வாய் மற்றும் ஒரு மூக்கு உள்ளது. நீங்கள் உங்கள் வேலையை சென்று பாருங்கள். உங்கள் சொந்த கால்களில் நில்லுங்கள்!” §§

யோக சுவாமியின் கண்டிப்பு, மிகவும் வலுவாக இருந்து, அது தீயை விட அதிக ஆழமாக ஊடுருவியது. சுவாமி மகாசமாதி நிலையை அடைந்து சில வருடங்கள் கழித்து, அவரது ஜெர்மன் நாட்டு சீடரான கௌரிபாலா சுவாமி சிறிது முரட்டுத்தனமாகவும் தீவிரமாகவும் இருப்பதாக, அவரது சீடர்களில் ஒருவர் அவரிடமே குறிப்பிட்டார். “அப்படியா! நான் முரட்டுத்தனமாக இருக்கிறேனா? அப்படியென்றால, உங்களால் எனது குருவை முப்பது வினாடிகளுக்கு மேல் எதிர்கொண்டு நிற்கமுடியாது,” என்று கோபித்து கொள்வார். சுவாமியின் தரக்குறைவான பேச்சை குறிப்பிடும் சம்பவங்கள் பல இருந்தாலும், அவர் அவற்றை சீடர்களுடன் அரிய தருணங்களுக்காகவும், பரிச்சயம் இல்லாத கீழ்த்தரமான நபர்களை தவிர்க்க ஒரு பயனுள்ள வழியாகவும் பயன்படுத்திக்கொண்டார். §§

ஒரு அன்பர் உண்மையை போன்று காட்சி அளித்த பக்தியுடன், சுவாமிக்கு சேவை செய்வதற்கும், வழிபடுவதற்கும் அவரை தொடர்ந்து சுற்றிக்கொண்டு இருந்தார். ஒரு நாள் யோக சுவாமி அவரை எல்லோருக்கும் முன்பாக, ஒரு மாலுமியும் அதிர்ச்சி அடையும் அளவிற்கு, மிகவும் மோசமான தமிழ் வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தார். அவர் அந்த அன்பரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, தனக்கு என்ன நடந்து விடுமோ, தான் எதை எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தில் கட்டுப்படுத்தி வைத்து இருந்தார். அந்த அன்பர் பயந்து இருந்த எல்லா விஷயங்களும், சிந்திக்காத சில விஷயங்களையும் பற்றி யோக சுவாமி பேசியதோடு மட்டும் அல்லாமல், ஒவ்வொருவராக பெயர் சொல்லி அழைத்து திட்டியது கேட்போரை அச்சுறுத்துவதாக இருந்தது. அவர் இறுதியாக, “நான் உன்னை இந்த விஷயங்களில் ஏதாவது ஒன்றில் இருந்து பாதுகாப்பேன் என்று நீ நினைத்தால், அது தவறு. எனக்கு அவை உண்மையாகவும் தோன்றவில்லை. நீங்கள் அவற்றிற்கு ஆற்றலை வழங்கி, அவற்றிடம் இருந்து விடுதலை பெற முயற்சி செய். இதில் பயப்படுதுவதற்கு ஒன்றும் இல்லை. அதனால் இனி நீ உன் சொந்த கால்களில் நின்று, உனது கவலைகள் மற்றும் அச்சங்களால் என்னை தொந்தரவு செய்வதை நிறுத்தி, நீ மீண்டும் என்னை சந்திக்க வருவதற்கு முன்பாக, அவற்றை விட்டொழிக்க வேண்டும்,” என்று கூறி நிறைவு செய்தார். §§

ஹோமேஜ் டூ யோக சுவாமியில், யோக சுவாமி தன்னை சந்திக்க வந்தவர்களுக்கு வழங்கிய பதில்களுக்கு, சாம் விக்ரமசிங்கே ஒரு சூட்சுமமான விளக்கத்தை வழங்கினார்.§§

ஒரு விடுதலை பெற்ற மனம் ஒரு கண்ணாடியின் பண்பை கொண்டு இருப்பதால், அதில் விடுதலை பெறாத மனதால் தனது உண்மை நிலையை பார்க்க முடிகிறது. சுவாமியின் “ஆளுமை", சந்திக்க வருபவர்களின் பண்புகளை தற்காலிகமாக பெற்றுவிடுவதால், யோக சுவாமியிடம் ஒரு மாற்றமில்லாத ஆளுமை இல்லாததாக தென்பட்டது. அதனால் எதிர்பார்த்ததை போல, தற்பெருமையுள்ள நபர்களுக்கு யோக சுவாமி எப்போதும் தங்களிடம் முரட்டுததனமாக நடந்துக்கொண்டதாக தோன்றியது. பயத்தால் நடுங்கிக்கொண்டு இருந்தவர்களின் கண்களுக்கு, யோக சுவாமியின் அணுகுமுறையில் கோழைத்தனம் தெரிந்தது. §§

ஒரு தென்னிந்தியாவின் சந்நியாசி, யோக சுவாமியிடம் பகவத் கீதையில் ஒரு பாடலை பாடிக்கண்பித்தார். அதன் பிறகு, யோக சுவாமி அந்த பாட்டில் சில மாற்றங்களையும், சில வார்த்தைகளுடன் புத்திசாலித்தனமான சிலேடைகளை சேர்த்துக்கொண்டதால், அந்த புனிதமான வரிகள் ஒரு பாலியல் அர்த்தத்தை பெற்றது. யோக சுவாமி அந்த சந்நியாசியின் அடிமனதில் மறைந்து இருந்த சிற்றின்ப உருவங்களுக்கு எதிர்செயலாற்றி கொண்டு இருந்ததால், அவரால் அதை தவிர்க்க முடியவில்லை. இதனால் அந்த சந்நியாசி, யோக சுவாமியை காணவந்த பலரை போல, பதட்டத்துடன் சங்கடத்தையும் அனுபவித்தார். §§

ஒரு வகையில், யோக சுவாமி விருப்பப்பட்டு செய்யாவிட்டாலும், மக்களை அதிர்ச்சியின் மூலம் அவர்களின் உள உறக்கத்தில் இருந்து விழிக்க வைக்கும் ஒரு ஜென் குருவாக விளங்கினார். யாழ்ப்பாண மக்கள் யோக சுவாமியை மரியாதை, பாசம் மற்றும் அச்சத்தின் ஒரு கலவையாக பார்த்தனர். அவரது தீவிரமான அன்பர்களில் சிலர், அவர் மீது பாசத்துடன் இருந்ததை காட்டிலும், அச்சத்துடன் இருந்தனர். யோக சுவாமியிடம் முறையான வரவேற்பை பெறுவதற்கு, அவரை எந்த ஒரு உள்நோக்கத்துடன் அணுகாமல் இருப்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது. §§

யோக சுவாமி தன்னை சந்திக்க வந்த பெரும்பாலானோரை துரத்தி அனுப்பினார். பலர் யோக சுவாமியை, எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் ஒரு சோதிடராகவே கருதினார்கள். ஒரு சமயத்தில், யோக சுவாமியை காண்பதற்கு, அதிகாலையில் இருந்து அந்தி மாலை வரை மக்கள் கூட்டம் தொடர்ந்து வந்துக்கொண்டு இருந்தது. அவர்கள் பல்வேறு சொந்த மற்றும் மற்ற காரணங்களுடன் சுவாமியை காண வந்தனர். அவரிடம் வரவேற்பை பெற்ற பாக்கியசாலிகள், தாங்கள் இருமடங்கு ஆசிகளை பெற்றதாக கருதினார்கள். யோக சுவாமியால் கண்டிக்கப்பட்ட சிலர், தாங்கள் ஆன்மீக ரீதியாக தண்டிக்கப்பட்டதாக கருதினார்கள்.§§

மக்கள் தன்னிடம் காண்பித்த தோற்றத்தின் மூலமாக, யோக சுவாமி அவர்களது மனதில் உண்மையில் என்ன இருந்தது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தினார். திரு. நாகேந்திரன் தனது அனுபவத்தை பகிர்கிறார். §§

1940 களின் தொடக்கத்தில், நான் வழக்கறிஞர்களின் இறுதி பரீட்சையில் தேர்ச்சி பெற்று, வழக்குரைஞர் கழகத்தில் உறுதிமொழி எடுக்கவிருந்த சமயத்தில், சில வாரங்கள் தங்குவதற்காக யாழ்ப்பாணம் திரும்பினேன். நான் தங்கியிருந்த எனது மாமா தாத்தா செல்லமுத்துவின் வீட்டிற்கு, மானிப்பாய் இந்துக் கல்லூரியின ஓய்வுபெற்ற முதல்வர் திரு. வீரசிங்கம் வந்து, யோகரை சந்திக்க தன்னுடன் கொழும்புத்துறை வரை வருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். §§

நாங்கள் சுவாமியின் குடிசையை அடைவதற்கு முன்பாக, திரு. வீரசிங்கம் என்னிடம், “ஒரு மகானை சந்திக்க செல்லும் போது, வெறும் கையுடன் செல்லக்கூடாது. ஏதாவது அன்பளிப்புகள் வாங்கி செல்லவேண்டும்,” என்று கூறினார். அவர் தன் வாகனத்தை நிறுத்தி வாழைப்பழங்கள், ஆப்பிள்கள் மற்றும் மற்ற பழங்களை வாங்கி, அவற்றை சுருட்டி பொட்டலமாக மடித்து வைத்துக்கொண்டார். நாங்கள் மாலையில் யோகரின் ஆசிரமத்திற்கு வந்த போது, தரையின் மீதிருந்த ஒரு மெல்லிய மெத்தையின் மீது ஒரு பாயில் அவர் அமர்ந்து இருந்தார். §§

யோகருக்கு முன்பாக, என் தந்தை வேலை செய்த இடத்தில் மூத்த அதிகாரியாகவும், கூட்டுறவு வளர்ச்சித்துறையின் ஆணையராகவும் இருந்த திரு. வீரன் அவர்களுடன் மற்ற முக்கிய பெரியவர்களும் அமர்ந்து இருந்தார்கள். நாங்கள் ஆசிரமத்தில் நுழைவதை பார்த்ததும், யோகர், “முனிவர்கள் இறைவனை பல்வேறு பெயர்களுடன் அழைத்தாலும், அவர் ஒருவர் தான்,” என்று கூறினார். நான் அந்த சமயத்தில் வழக்கமாக சென்ற, வெள்ளவத்தையின் மிஷன் மண்டபத்தில், ராமகிருஷ்ணரின் சந்நிதி சுவரில், இந்த வார்த்தைகள் சாயம் பூசப்பட்டு இருந்ததால், இந்த வாசகம் என் மீது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் ராமகிருஷ்ண மிஷனுக்கு பயணம் மேற்கொண்டதை, அவர் ஊகித்து இருந்தாரா? §§

யோகர் வழக்கம் போல, திரு. வீரசிங்கம் வழங்கிய பொட்டலத்தை பிரித்து, தனக்கு முன்பாக அமர்ந்து இருந்த முதியவர்களுக்கு பழங்களை வழங்க தொடங்கினார். ஒவ்வொரு முதியவருக்கும் எத்தனை பழங்களை சுவாமி வழங்கினார் என்பதை பின்னால் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த நான், முதியவராக இல்லாத எனக்கு சுவாமி எத்தனை பழங்களை வழங்குவார் என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். யோகர் எனக்கு பழங்களை வழங்கும் போது, “இங்கே எல்லோருக்கும் பழங்கள் சமமாக பிரித்து தரப்படுகின்றன. இதில் உனக்கு சந்தேகம் இருந்ததால், நான் உனக்கு தரவிருந்த பழங்களில் ஒன்று கீழே விழுந்துவிட்டது,” என்று குறிப்பிட்டார். யோகர் என் மனதை புரிந்துக்கொண்டு இருந்தார். நான் எனது தவறை உணர்ந்துகொண்டேன்.§§

டிவைன் லைஃப் சொசைட்டியின் (தெய்வீக வாழ்க்கையின் சமூகம்) சுவாமி சிவானந்தா, கண்டியின் மலை வாழிடத்தில் ஒரு சிறிய யோக மையத்தை அமைக்க, 1953 ஆம் ஆண்டில் இலங்கைக்கு சுவாமி சச்சிதானந்தா என்கிற ஒரு இளவயது சந்நியாசியை அனுப்பினார். வசீகரமும் நகைச்சுவையும் நிறைந்து, கருத்த முடியுடன் இருந்த அந்த தென்னிந்திய சுவாமி நடத்திய ஹட யோக வகுப்புக்களில் மக்கள் பெருமளவில் பங்கு பெற்றனர். அவர் ஒரு நாள் யோக சுவாமியிடம் ஆசிகளை பெறுவதற்காக கொழும்புத்துறை சென்றார். அவர் அந்த சந்திப்பு தொடர்பாக வழங்கிய விளக்கம்: “நான் ஆசிரமத்தில் நுழைந்து, சுவாமியை தரையில் விழுந்து வணங்கினேன். உடனே யோக சுவாமி என்னிடம், “சுவாமி, நீங்கள் இன்று எத்தனை அன்பர்களுக்கு சிரசாசனம் கற்று தந்து (அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தி) இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். இந்த கேள்வியின் மூலம், பொதுமக்களுக்கு யோக அப்பியாசங்களை கற்று தருவதில், தன்னிடம் இருந்த எண்ணற்ற மற்ற திறமைகளை பயன்படுத்த யோக சுவாமி தனக்கு ஊக்கம் அளித்ததாக சச்சிதானந்தா புரிந்துகொண்டார். பல வருடங்கள் கழித்து, நியூ யார்க்கின் உட்ஸ்டாக் பெஸ்டிவலில் வழங்கிய உரையின் மூலம் சுவாமி சச்சிதானந்தா புகழின் உச்சத்திற்கு சென்றார், மற்றும் அவர் பின்னர் அமெரிக்காவில் இண்டெகிரல் யோக இன்ஸ்டிட்யூட்டை (Integral Yoga Institute) நிறுவினார். §§

சிவயோக சுவாமிக்கு நெருக்கமான சீடர்கள், சுவாமி தங்களை கடிந்துக்கொள்ள வேண்டும் என்று ஏங்கினார்கள் மற்றும் அது தங்களுக்கு கிடைத்த ஆசியாக கருதினார்கள். ஒரு நாள் யோக சுவாமி கந்தன் என்ற தனது சீடனின் வீட்டிற்கு, ஆறுமுகம் என்று இன்னொரு சீடரையும் தன்னுடன் அழைத்து சென்றார். சுவாமி தன் வீட்டிற்கு வந்த போது, கந்தன் தோட்டத்தில் காத்து இருந்தான். சுவாமி திடீரென்று, கந்தனின் இரு தோள்களிலும், தனது இரு கை முட்டிகளை கொண்டு முழு பலத்துடன் குத்த தொடங்கினார். கந்தன் அதை தாங்கிக்கொண்டு நின்றான். சுவாமி குத்தி முடித்ததும், நடந்தது அனைத்தையும் பார்த்த திகைப்பில் இருந்த ஆறுமுகத்திற்கு, கந்தனின் முகத்தில் வேதனையை காட்டிலும் மகிழ்ச்சியே அதிகமாக தென்பட்டது. கந்தன் தனது நண்பனின் குழப்பத்தை உணர்ந்து, நிம்மதி பெருமூச்சுடன், “நான் அந்த ஆசியை பெறுவதற்காக வருடம் முழுவதும் காத்து இருந்தேன். மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை, நான் சுவாமியிடம் இருந்து வலுவாக அடி வாங்க வாங்கினால் தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்,” என்று தனது அந்தரங்க விஷயத்தை தெரியப்படுத்தினார். §§

image§

இன்று வரை சிவபெருமான் பற்றிய தமிழ் துதிப்பாடல்களை பாடுவது, இலங்கை ஆன்மீக கலாச்சாரத்தின் ஒரு வலுவான பகுதியாக இருந்து வருகிறது. தனது ஆசிரமத்திற்கு அன்பர்கள் எப்போது வந்தாலும், யோக சுவாமி அவர்களை தேவாரம் மற்றும் நற்சிந்தனை பாடல்களை நன்றாக சத்தமாக, உற்சாகத்துடன் பாடும்படி கேட்டுக்கொள்வார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அனைத்தும் அறிந்தவர் §

யோக சுவாமி தனக்கு வெளிப்படுத்திய தனது குணத்தை சரி செய்ய வேண்டும் என்று சுவாமியை ஒரு அன்பர் வழிபட வரும் போது, அவருக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு, வேண்டியது வழங்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டார். அத்தகைய அன்பர்கள் சுவாமிடம் தங்கள் குறைகளை சுவாமியிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல், அவரே அவர்களது கேள்விகளுக்கு பதில் அளிப்பார் அல்லது அவர்கள் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி கூறுவார். அன்பர்கள் எதைப்பற்றி யோசித்தார்கள் என்றும், அவர்கள் தங்கள் மனதில் எந்த எதிர்பார்ப்புடன் சுவாமியை நாடி வந்தார்கள் என்பதையும் அவர் அறிந்து இருந்தார். யார் எப்போது எதற்காக வருகிறார்கள் என்பதையும் அவர் முன்பே அறிந்து இருந்தார். அவர் சிலசமயம், “நாம் இப்போது இங்கிருந்து புறப்படவேண்டும். அந்த நபர் அடுத்த பதினைந்து நிமிடங்களில் இங்கே வந்து விடுவார். அப்போது நாம் இங்கே இருக்கக்கூடாது,” அல்லது, “அங்கே ஒரு பாயை விரித்து தேநீரை தயார் செய்து வைத்திருங்கள். அவர் அடுத்த ஒரு மணி நேரத்தில் இங்கே வந்துவிடுவார் மற்றும் அவருக்காக நாம் முற்றிலும் தயார்நிலையில் இருக்கவேண்டும்,” என்று கூறுவார். §§

பலர் குடும்பம், பணம் அல்லது மற்ற பிரச்சனைகளுடன் வந்தார்கள். சிலசமயங்களில் அவர், “இந்த குழப்பத்தில் எவ்வாறு சிக்கிக்கொள்வது என்பதை நீங்கள் அறிந்து இருந்தீர்கள், அதனால் இதில் இருந்து எப்படி வெளிவருவது என்பதை நீங்களே அறிந்து கொள்ளவேண்டும்,” என்று அவர்களது பிரச்சனைகளுக்கு அவர்களே தீர்வு காணவேண்டும் என்று திட்டி அனுப்பிவிடுவார். சிலசமயம் சுவாமி அவர்களை கோயிலுக்கு சென்று பூஜை செய்து வருமாறு அனுப்பி விடுவார். “அருகில் இருக்கும் விநாயகர் கோயிலில் அபிஷேகம் செய்தால், உங்கள் பிரச்சனைக்கான தீர்வு தானாக வரும்.” சிலசமயங்களில் அவர் வேறொரு அன்பரை உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்வார். அவர் மூன்றாம் தரப்பினரை அழைத்து, “இவரிடம் இருந்து ஐநூறு ரூபாயை பெற்று அந்த நபரிடம் கொடு. அந்த நபரின் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை மற்றும் அவருக்கு உதவி தேவைப்படுகிறது.” பண உதவி தொடர்ந்து வந்துக்கொண்டு இருந்தது. §§

ஒரு தீவிர முருக பக்தையாக மாறி, நியூயார்க் நகரத்தின் ஃப்ளஷிங் பகுதியில் போன் ஸ்ட்ரீட்டில் விநாயகர் கோயிலை நிறுவுவதற்கு உதவி செய்த ஹில்டா சார்ல்டன், யோக சுவாமியை தான் பலமுறை சென்று சந்தித்த பிறகு தனது பணப்பிரச்சனைகள் முடிவு வந்ததாக குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் பகிரும் அனுபவம்: §§

யோகி என்றால் நமது கற்பனைகளில் தோன்றுவதை போலவே, அவர் மென்மையான நரைத்த முடி மற்றும் நரைத்த தாடியுடன் முதியவராக, அற்புதமாக காட்சி அளித்தார். நான் அவரை பார்க்க சென்ற போது, இலங்கையில் தற்போது போர் நடந்துகொண்டு இருக்கும், யாழ்ப்பாணத்திற்கு இரவு முழுவதும் ஒரு பழைய இரயிலில் பயணம் செய்வேன். நான் ஒரு முறை என்னுடன் கற்பூரம் எடுத்து சென்றேன். எனது நண்பர், ஒரு நாள் முன்னதாக சுவாமியிடம் இன்னொரு நபரை அழைத்து சென்று இருந்தார். அந்த நபர் பல லௌகீக விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள விரும்பினார். அந்த நபர் ஆசிரமத்திற்கு சென்றதும், யோகி அவரிடம், “உன் முதுகு பின்னால் என்ன இருக்கிறது?” என்று கேட்டார். அவர், “கற்பூரம் இருக்கிறது, சுவாமி,” என்று கூறி இருக்கிறார். உடனே சுவாமி, “அதை உனது நாக்கில் வைத்து எரித்துவிடு,” என்று கூறினார்.§§

யோகிகளை எதிர்கொள்வது கடினமாக இருக்கக்கூடும். பிறகு அவர் என் நண்பரிடம், “இதைப்போன்ற நபர்களை என்னிடம் எதற்காக அழைத்து வருகிறாய்?” என்று கேட்டார். நான் அடுத்த நாள் அங்கே சென்றேன். நான் எனது முதுகிற்கு பின்னால் சில கற்பூர வில்லைகளை வைத்து இருந்தேன். நான் நேற்று நடந்த சம்பவத்தை பற்றியும் அப்போது தான் கேள்விப்பட்டு இருந்தேன். சுவாமி என்னிடம், “உன் முதுகிற்கு பின்னால் என்ன வைத்து இருக்கிறாய்?” என்று கேட்டார். நான் “கற்பூரம் வைத்திருக்கிறேன்,” என்று கூறியபோது, “சரி, நீங்கள் உள்ளே வரலாம்,” என்று கூறினார். பார்த்தீர்களா? §§

நான் ஒவ்வொரு முறை அங்கே சென்ற போதும், “உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது?” என்று கேட்பார். அது சிறுவனாக யோகானந்தன் கேட்பது போல இருந்தது. “இவர் எதற்காக இந்த கேள்வியை கேட்கிறார்?” என்று எனக்கு தோன்றியது. நான் பதில் அளிக்க மாட்டேன். என்னிடம் பணம் இல்லை என்பது அவருக்கும் தெரியும். அவர் என்னிடம், “உங்கள் மாத வருமானம் எவ்வளவு?” என்று கேட்பார். அப்போது, எனக்கு வருமானம் என்று எதுவும் இல்லை. அதனால் நான் ஒரு நாள் நேர்மையாக, “என்னிடம் பணம் ஏதும் இல்லை, சுவாமி,” என்றேன். அவர் உடனே, “அப்படியா?” என்றார். அவருக்கு தனக்கு அருகில் இருந்த ஒரு சிறுவனிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து வாசிக்க சொன்னார், மற்றும் யோகி தன் கையை ஒரு குறிப்பிட்ட முறையில் இயக்க ஆரம்பித்தார். §§

“ஒரு மேல் தாடை மற்றும் ஒரு கீழ் தாடை இருக்கிறது. நாக்கு இணைப்பாக இருக்கிறது. நாக்கு ஒலியை ஏற்படுத்துகிறது. அந்த ஒலி செழிப்பை குறிப்பிடுகிறது,” என்று அந்த சிறுவன் வாசித்தான். யோகி இடையே குறிக்கிட்டு, “அது என்ன வார்த்தை? நீ அதை தவறாக உச்சரிக்கிறாய்? செழிப்பை எவ்வாறு உச்சரிப்பது?” என்று கேட்டார். அந்த சிறுவன் உச்சரித்து காட்டினான். யோகி இந்த கேள்வியை கேட்டுக்கொண்டு இருக்கையில், தனது கைகளை இயக்கிக்கொண்டு, ஏதோ செய்துக்கொண்டு இருந்தார். உங்களுக்கு புரிந்ததா? அதன் பிறகு பணம் எனக்கு தொந்தரவாக இருந்தது இல்லை. §§

சுவாமி இன்னொரு முறை சந்திக்க சென்ற சம்பவத்தை பற்றி ஹில்டா சார்ல்டன் விவரிக்கிறார்: §§

ஒரு நாள் அதிகாலை நான்கு மணி அளவில், நாங்கள் யோக சுவாமியை காண பயணம் செய்த போது, விடியாமல் இருள் சூழ்ந்து இருந்தது. நிலையில்லாமல் ஊசலாடிக்கொண்டு இருந்த தேங்காய் எண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில், அவரது உரையை கேட்க உட்கார்ந்தோம். அவர் மேரி எலென் போலவே பேசினார் அல்லது அவர் ரூபத்தில் மேரி எலேன் பேசி இருக்கலாம். அவர் மிகவும் இனிமையாக, எளிமையாக, குழந்தையை போன்று, “எல்லோரும் சுத்தமாகவும் முழுமையாகவும் இருக்கிறார்கள், அதைப்பற்றி அவர்களுக்கு மட்டும் புரியவில்லை. உலகில் இருக்கும் அனைத்து விஷயங்களுக்கும் அன்பு செலுத்துவது மட்டுமே தீர்வாக விளங்குகிறது,” என்று அவர் வழங்கிய தகவல் மேரி எலென் வழங்கியதாக இருந்தது. நான் ஆன்மீக ரீதியாக வலுப்படுதப்பட்டு, அங்கிருந்து கிளம்பினேன். அது ஒரு அருமையான அனுபவமாக இருந்தது. அவர் அன்பளிப்பாக ஏற்றுக்கொள்ளவில்லை. “நான் எதையும் வாங்குவதும் இல்லை வழங்குவதும் இல்லை,” என்று அவர் கூறினார். ஆனால் அவர் உண்மையில் பெரிய அளவில் வழங்குகிறார். அவர் சிலரை மட்டும் சந்தித்தாலும், எங்களுடன் சுமார் ஒரு மணி நேரம் பேசினார். §§

காலையில் சுவாமிக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகள் அனைத்தும், இரவில் எல்லோரும் கிளம்புவதற்கு முன்பாக பகிர்ந்து அளிக்கப்பட்டு விடும். அவர் தனக்கு வழங்கப்பட்ட பழங்கள் மற்றும் பூக்களை அன்பர்களுக்கு பகிர்ந்து அளித்து, அவர்களை வழியனுப்ப ஆரம்பித்து விடுவார். அவரது உத்தரவு இல்லாமல் யாரும் அவரது இருப்பிடத்தில் இருந்து கிளம்ப மாட்டார்கள், மற்றும் யாரும் உத்தரவு கிடைத்த பிறகு தங்கியதும் கிடையாது. பொதுவாக சுவாமியின் உதவியை நாடி வந்தவர்கள் இறுதியாக செல்பவர்களாக இருப்பார்கள். அதன் பிறகு அவர் தனக்கு வழங்கப்பட்ட பணம், உணவு அல்லது துணியை அவர்களுக்கு வழங்குவார். §§

அவர் தனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டது இல்லை. “எங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறவர்களுக்கு அல்லது உலகில் முன்னேற விரும்புகிறவர்களுக்கு அல்லது ஒரு நல்ல மனசாட்சியை பணம் கொடுத்து வாங்க முயல்பவர்களிடம் இருந்து நாங்கள் எதையும் எப்போதும் ஏற்றுக்கொண்டது இல்லை,” என்று அவர் விளக்கம் அளித்தார். அவர் அத்தகைய அன்பளிப்பை தொடமாட்டார் அல்லது அதை விலக்கி வைத்து விடுவார். அவர் சிலசமயம், தனக்கு நெருக்கமான சீடர்கள் வழங்கிய அன்பளிப்புக்களை தொடாமல், “எனக்கு உத்தரவுகள் வரவில்லை,” என்று கூறிவிடுவார். §§

ஒரு முறை சுவாமியின் சீடர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு அதிஷ்ட தேவதை கதவை தட்டியதால் செல்வம் குவிந்தது. அவர்கள் இதற்கு சுவாமியின் அருள் தான் காரணம் என்று நினைத்ததால், அவர்கள் தங்கள் கையில் ஒரு தட்டு நிறைய தங்கம் நாணயங்களுடன் ஆசிரமத்திற்கு வந்தனர். அந்த தட்டில் மொத்தம் நூறு நாணயங்கள் இருந்திருக்க வேண்டும். “எங்களால் இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நாணயங்களை நீங்கள் எடுத்து சென்று, ஏதாவது ஒரு நல்ல வழியில் செலவழியுங்கள்,” என்று சுவாமி அவர்களிடம் கூறி, அதில் இருந்து மூன்று அல்லது நான்கு நாணயங்களை மட்டும் எடுத்துக்கொண்டார். பொழுது சாய்வதற்குள் அந்த நாணயங்களும் மாயமாக மறைந்து விட்டன. அவை சில அதிஷ்டசாலி அன்பர்களுக்கு, ஒரு பூக்கொத்து அல்லது இனிப்புக்களுடன் சேர்த்து வழங்கப்பட்டு இருக்கவேண்டும். §§

பொது வாழ்க்கை அல்லது அரசியலில் பெரிய பதவிகளில் இருக்கும் பிரபலங்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு யோக சுவாமி முன்னுரிமை வழங்குவதாக, மக்களிடம் ஒரு பரவலான கருத்து இருந்தது. இந்த விமர்சனத்திற்கு சுவாமி வழங்கிய கருத்துகளை எஸ். சண்முகசுந்தரம் பதிவு செய்துள்ளார்.§§

ஆசிரமத்தில் அமர்ந்து இருந்த ஒரு இளவயது அன்பர், நன்றாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “சுவாமி, நீங்கள் பணக்காரர்களுடன் மட்டும் நட்புறவு வைத்திருப்பதாகவும், அவர்கள் வீட்டிற்கு மட்டுமே செல்வதாகவும், ஏழைகளைப் பற்றி கவலைப்படுவது இல்லை என்றும் நம் மக்களிடம் ஒரு கருத்து வேறுபாடு நிலவுகிறது. இது உண்மையா?” என்று சுவாமியிடம் கேள்வி கேட்டார். §§

சுவாமி சிரித்துக்கொண்டே, “செல்வம், பதவி மற்றும் ஆடம்பர வாழ்க்கையை பார்த்திராத மக்கள் பொதுவாக நல்லவர்களாக இருப்பார்கள். அவர்களால் உலகிற்கு எந்த பாதகமும் இல்லை. ஆனால் செல்வந்தர்கள் மற்றும் உயர்ந்த சமூகத்தை சார்ந்த மக்களிடம் தீய பண்புகள் நிறைந்து இருப்பதோடு சுயநலம், பொறாமை, பேராசை, தீய பழக்கங்கள் போன்ற பண்புகளும் இருக்கின்றன. அதனால் ஒரு நல்ல விதமான வாழ்க்கையை வாழ்வதற்கு, இந்த இரண்டாவது பிரிவு மக்களை நல்வழிப்படுத்தினால், அவர்கள் தங்களது மக்களுக்கும் உலகிற்கும் அதிகம் பயன் தருபவர்களாக இருப்பார்கள். அதிஷ்டவமாக, அந்த பிரிவு மக்களே என்னை அதிகம் காண வருகிறார்கள். நான் அந்த பிரிவு மக்களை மேம்படுத்தி, அவர்கள் மூலம் நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது? இந்த பதிலால் அந்த கேள்வியை கேட்ட இளைஞன் மட்டுமல்லாது, சுவாமிக்கு முன்பாக அமர்ந்திருந்த அன்பர்கள் அனைவரும் திருப்தி அடைந்தனர். §§

சமூகத்தில் தங்கள் அந்தஸ்தை அதிகரிக்கும் பொருட்டு, பல செல்வந்தர்களும் பிரபலங்களும் சுவாமிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் பிரபல திரைப்பட நடிகர் நடிகைகளுடன் நட்புறவை வைத்துக்கொள்ள முயற்சிப்பார்கள். அத்தகைய நோக்கத்துடன் பலர் யோக சுவாமியை அணுகி இருந்தாலும், அவர்களில் பெரும்பாலான நபர்களால் சுவாமியின் வசவு மற்றும் கண்டிப்புக்களை எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால் அதில் சிலர் யோக சுவாமியுடன் இணைந்து தங்களை சீர் செய்து, நல்ல சிரத்தையுள்ள இந்துக்களாக மாறி, பயனுள்ள வாழ்க்கையை வாழ்ந்தனர். அதில் பலர் மிகப்பெரிய சிவத்தொண்டர்களாகி, ஒரு நல்லொழுக்கமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து, தங்கள் வாழ்வில் சமய ஈடுபாடுகளை புகுத்தி, சுவாமியின் தீவிரமான சீடர்களாக தங்கள் வாழ்க்கையை தொடர்ந்தனர். §§

image§

சிவபெருமானின் பாரம்பரிய மூர்த்திகளில் ஆண் பாதி பெண் பாதியாக இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் மூர்த்தியும் ஒன்றாக விளங்குகிறது. இலங்கையை சேர்ந்த சைவர்கள், இந்த வடிவத்தை சிவன் மற்றும் சக்தியின் ஐக்கியமாக வணங்குகிறார்கள். “ஆணுமாகி பெண்ணுமாகி இருப்பவரை, பரமனாக இருப்பவரை, சாஸ்திரத்தின் பொருளை விரிவாக விளக்கம் அளித்து வழங்கியவரை, தனது இடது புறத்தில் மெல்லிய இடையுடைய அம்மனுடன் இருப்பவரை, பக்தர்கள் போற்றி பாடுகிறார்கள்!” என்று யோக சுவாமி பாடினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

“மனிதனும் இறைவனும் ஒன்று" என்பது சிவயோக சுவாமியின் கருத்துரையாக இருந்தது. அதனால் அவர் அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்தினார். ஒரு விலங்கு கொடியதாக இருந்தால், அது கொடியது என்று மக்கள் தெரிந்து கொண்டு, அதிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்வதால், அந்த விலங்கால் உலகிற்கு அதிகம் தீங்கு நேரிடுவது இல்லை. ஆனால் ஒரு மனிதன் கொடியவனாக இருந்தால், அவனால் சமூகத்தையே அழித்து விடமுடியும் என்று சுவாமி கூறுவார். அதனால் தங்களது மனசாட்சிக்கு உண்மையாக நடந்துக்கொள்ளாத மனிதர்களை, நற்பண்புகளுடன் வாழாதவர்களை, சுயநல நோக்கங்களுக்காக அவருக்கு வணக்கம் செலுத்துபவர்களை சுவாமி குறுக்கிட்டால், அவர் அவர்களை முறையாக கண்டித்து, அவர்களை திட்டி தனது இருப்பிடத்தில் இருந்து துரத்தி விடுவார். அவரது கண்டிப்பால் பல அன்பர்கள் தங்களை சீர் செய்துக்கொண்டதால், இதுவும் சுவாமி வழங்கிய அருளின் ஒரு அங்கமாக விளங்கியது. ஆனால இவ்வாறு அச்சுறுத்தும் வகையில் சுவாமி அருளை வழங்கியதால், பலர் சுவாமியை தரிசிக்கவே அஞ்சினார்கள். §§

எஸ். சண்முகசுந்தரம் இந்த விரிவுரையில் குறிப்பிடுவதை போல, ஆசிரமத்திற்கு வந்த அனைவரும் கல்வி கற்றவர்களாக, செல்வாக்குள்ளவர்களாக இருந்ததில்லை:§§

ஒரு நாள் மதியம் பன்னிரண்டு மணிக்கு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போது, ஒரு வயதான பெண்மணி ஆசிரமத்திற்கு வியர்த்து விருவிருத்து வந்தார். அவரை பார்த்தால் வெகு தொலைவில் இருந்து வந்தது போல தோன்றியது. சுவாமிக்கு மிகவும் பிடித்தமான பழங்களில் பலா பழமும் ஒன்று என்பதால், அவர் ஒரு பெரிய பலா பழத்தையும் சுமந்து வந்து இருந்தார். அவர் தனது சுமையை சுவாமிக்கு முன்பாக இறக்கி வைத்துவிட்டு, ஒரு நிம்மதி பெருமூச்சுடன் அமர்ந்து கொண்டார். இதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த சுவாமி அந்த பெண்ணிடம், “நீங்கள் எதற்காக கொளுத்தும் வெயிலில், இந்த பெரிய பலா பழத்தை சுமந்துகொண்டு, நெடுந்தூரம் நடந்து வந்து இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். §§

அந்த பெண்மணி இரண்டு நிமிடங்கள் காத்திருந்து, “உங்களுக்கு வழங்குவதற்காக, அந்த பழத்தை நெடுந்தூரம் சுமந்து வருவது, எனக்கு சந்தோஷத்தை தருகிறது. அதற்கு நீங்கள் என்னை ஏன் கடிந்து கொள்கிறீர்கள்? அதற்கு பதிலாக நான் உங்களிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. நான் அதை கொண்டு வரவேண்டும் என்று நினைத்தேன், கொண்டு வந்து விட்டேன். நான் இனி சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு வீடு திரும்புகிறேன். நீங்கள் பேசாமல் இருங்கள்,” என்று பதில் அளித்தார். அந்த பெண் தவறில்லாமல் திட்டி முடித்ததும், “நீங்கள் இங்கே நன்றாக இளைப்பாறலாம் மற்றும் நீங்கள் அமைதியான ஆனந்தம் பொருந்திய வாழ்க்கையை வாழவேண்டும்,” என்று சுவாமி அவரிடம் கூறினார். சுவாமி அவர் குடிப்பதற்கு ஒரு குவளை காபி வாங்கிக்கொடுத்து, தனது சீடர்களிடம், “அவர் ஒரு வாக்கியத்தின் மூலம் என் வாயை அடைத்து விட்டார். நான் அவரை கண்டித்தது தான் தவறு,” என்று கூறி, அந்த பெண்ணுக்கு ஒரு ஆரஞ்சு பழத்தை கொடுத்து அனுப்பி வைத்தார். §§