குருமார்களின் சரித்திரங்கள்

URL Page 28:§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/28_yoga04_01.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

அத்தியாயம் பதினான்கு §

யோக சுவாமி என்கிற ஈடுஇணையற்ற குரு §

றிந்தவராகவும் அந்த பரமாத்துமாவாகவும் இருக்கும் சற்குருவின் தரிசனம் மட்டுமே முக்கியமானது என்று சிவயோக சுவாமி தனது சீடர்களிடம் காலங்காலமாக தெரிவித்து வந்தார். “செல்லப்பசுவாமி தனக்கு ஒரு தாயாக மற்றும் தந்தையாக மற்றும் குருவாக, எல்லாமாக இருக்கிறார்,” என்று யோக சுவாமி பல பாடல்களில் பாடியுள்ளார். இந்து சமயத்தில் குரு வழிபாடு தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. தமிழில் திருவடி என்றும், சமஸ்கிருதத்தில் ஸ்ரீ பாதுகா என்றும் அழைக்கப்படும் அவரது புனிதமான மிதியடிகள் வழிபாட்டு சின்னமாக விளங்குகின்றன. ஏன்? குருவின் நரம்பியல் அமைப்பில் இருக்கும் சக்தி அவரது கைகள் மற்றும் கால்கள் வழியாக பாய்ந்து செல்வதால், அந்த புனிதமான சக்தியுடன் தொடர்புகொள்ளும் வழியாக அந்த பாதங்கள் விளங்குகின்றன என்று சிலர் கூறுகின்றனர். குருவின் உடலில் மிகவும் தாழ்வான நிலையில் இருக்கும் பாகமாக பாதங்களை எண்ணி, தெய்வீகத்தன்மையின் அந்த அதிக பணிவான பகுதியை தொடுவதற்கு தான் தகுதி பெறவேண்டும் என்பதை மறைமுகமாக குறிப்பிடுவதாக சிலர் கருதுகிறார்கள். இவ்வாறு, தாங்கள் ஒரு நாள் அடைய விரும்பும் தெய்வீகத்தன்மையிடம், அவர்கள் சரணடைவதை இது குறிப்பிடுகிறது. §§

ஒரு அறை மட்டுமே இருந்த யோக சுவாமியின் ஆசிரமத்தில், ஒரு திரைக்கு பின்னால் இருந்த மாடத்தில் அவர் தனது குருவின் மரப்பாதுகைகளை வைத்து இருந்தார். அவர் இந்த மிகவும் புனிதமான தனது உடைமைக்கு, தினமும் காலையில் வழிபாடு நடத்தினார். தினமும் அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, சில பூக்களை பறித்து, ஒரு உயர்ந்த பீடத்தில் இருந்த அந்த திருவடிகளுக்கு கற்பூரம் காண்பித்து ஆரத்தி எடுப்பதே அவரது தினசரி வழக்கமாக இருந்தது. இவை இன்றும் நடைப்பெற்று வருகின்றன. சில குறிப்பிட்ட கோயில்களுக்கு செல்வது இல்லாமல், இது மட்டுமே அவரது தனிப்பட்ட வழிபாடாக இருந்தது. யோக சுவாமியை சந்திக்க வந்தவர்கள், அவருக்கு ஒரு குரு இருந்தார் என்றும் குறிக்கோளை நோக்கி அந்த குரு சுவாமியை வழிநடத்தி சென்றார் என்பதையும், அந்த திருவடிகள் நினைவுறுத்தின. §§

அவர் எப்போதும் ஒரு வெள்ளை நிற வேட்டியை அணிந்து இருந்தார். யாழ்ப்பாணத்தில் புழுதி படிந்த` சாலைகள் இருந்தாலும், அந்த வேட்டி வியக்கும் வகையில் எப்போதும் தூய்மையாக இருந்தது. அவர் தனது தோளில் வெள்ளை நிற கைத்தறி துணியை போர்த்தி இருப்பார், அவரது கால்களில் இருந்த எளிமையான பழுப்பு நிற காலணிகள், இவர் இடைவிடாது நடந்ததால் தேய்ந்து இருந்தாலும் நன்றாக பராமரிக்கப்பட்டு இருந்தது. அவர் பயன்படுத்திய சில பொருட்கள் இன்றும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கவாய் இந்து மடத்தில் இருக்கும் அவரது பூஜை மாடத்தில், துருவுறா எஃகினால் தயாரித்த ஒரு தண்ணீர் குவளை மற்றும் பல வண்ணக்கோடுகளுடன் கூடிய குளியல் துண்டு வைக்கப்பட்டுள்ளது மற்றும் அவருக்கு நெருக்கமான சீடராக இருந்த ரத்னா மா நவரத்தினத்தின் குடும்பம், அவர் பயன்படுத்திய கருப்பு குடையை பாதுகாத்து வருகின்றனர். சுவாமியின் தினசரி பழக்கங்கள் பற்றி Dr. எஸ். இராமநாதன் பின்வரும் உட்பார்வைகளை வழங்கியுள்ளார்.§§

image§

தனது திருவடிகளில் மக்கள் கூட்டங்களை ஈர்த்த ஒரு தனித்த சூட்சும ஞானியாக, கடுமையாக பேசிய அன்புள்ளம் கொண்ட குருவாக, தான் குறைவாக படித்து இருந்தாலும் மிகவும் உயர்வான தத்துவத்தை பற்றி இலக்கிய அறிவுடன் எழுதும் எழுத்தாளராக, கிராமங்கள் வழியாக வாகனம் ஓட்டி செல்வதை விரும்பிய யோகியாக, தன்னை சந்தித்த ஒவ்வொரு நபரையும் பிரமிக்க வைத்த ஒரு எளிமையான மனிதராக, மொத்தத்தில் யோக சுவாமி ஒரு மர்மமான கலவையாக இருந்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

சுவாமி தனது உடலை சுத்தமாக வைத்து இருந்தார். அவர் அதிகநேரம் குளிக்காமல், தனது உடலை எப்போதும் கழுவிக்கொள்வார். அவரது உடலில் இருந்து எப்போதும் ஒரு மென்மையான, இனிமையான வாசம் வெளிவந்தது. அவர் தினமும் காலையில் பால் கலந்த தேநீரை பருகுவார். அவர் மதியம் சாதம் சாப்பிடுவார். அவர் தயாரித்த உணவு எப்போதும் சுத்தமாக இருக்கும், ஆனால் அவர் எப்போதும் ருசியை பற்றி கவலைப்பட்டது இல்லை. அவர் சாதம் சாப்பிடுவதை பல நாட்கள் பார்த்ததன் மூலம், அது அவரது பழக்கமாக இருந்தது என்றும், சாப்பிடுவது அவருக்கு முக்கியமாக இருந்ததில்லை என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். அவர் சாப்பிடும் போது, “எப்போதும் சாப்பிடாமல் எப்போதும் உறங்காமல் இருப்பவருக்கு எனது வணக்கம்,” என்று எப்போதும் நான் நினைத்துக் கொள்வேன். §§

அவர் மாலை நேரங்களில் தேநீர் அருந்துவார். அவருக்கு இரவு நேரங்களில் பசி இருந்தால் இடியாப்பம் அல்லது ரொட்டி சாப்பிடுவார். மற்றவர்கள் தனது கால்களை கழுவுவதற்கு அனுமதிக்க மாட்டார், மற்றும் அவற்றின் மீது தண்ணீர் ஊற்றுவதை கண்டிப்பாக அனுமதிக்க மாட்டார். அவர் தான் சாப்பிட்ட இலையை மற்றவர்கள் எடுக்க அனுமதிக்காமல், தானே அதை அப்புறப்படுத்துவார். அவர் எப்போதும் தனது படுக்கையில் மெத்தையை விரும்பியது இல்லை. மற்றவர்கள் தன்னை சுவாமி என்று கௌரவிப்பதை அவர் எப்போதும் விரும்பியது இல்லை. “என்னை ஒரு சுவாமியாக மாற்றாதீர்கள்,” என்று அவர் அடிக்கடி சொல்வார். §§

பின்வரும் தகவல்களை ச. அம்பிகைபாகன் வழங்குகிறார்.§§

சுவாமிகள் தனது உடலை கவனித்துக்கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். தனக்கு வியாதி வந்து மற்றவர்களுக்கு வேதனை கொடுக்க அவர் விரும்பவில்லை. அவர் தான் உண்ணும் உணவில் கவனமாக இருந்தார். “இறைவன் நமக்கு உணவை வழங்கினாலும், உங்களுக்கு பசிக்காத போது சாப்பிடாதீர்கள்,”என்று அவர் போதித்த படியே, மிதமாக சாப்பிடவும் செய்தார். சில நாட்களில் அவர் நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தார், மற்றும் சில நாட்களில் அவர் வெறும் ஒரு பொங்கியப்பத்தை (bun) மட்டும் சாப்பிட்டார். அவர் சாப்பிடுவதற்கு முன்பாக, கை கால்கள் மற்றும் முகத்தை கழுவிக்கொண்டு, தனது நெற்றி மற்றும் உடலில் விபூதியை பூசிக்கொள்வார். §§

ஒரு நாள் ஒரு உணவகத்தில், ஒரு ஆசிரியராக இருந்த பிராமணர் வெறும் தனது கை விரல்களை மட்டும் கழுவிக்கொண்டு சாப்பிட அமர்ந்தார். “நீங்கள் ஒரு பிராமணர்; ஒருவன் சாப்பிடுவதற்கு முன்பாக தனது முகம், கால்களை கழுவி, விபூதி பூசிக்கொண்டு சாப்பிட அமரவேண்டும். நீங்கள் ஒரு ஆசிரியராக இருப்பதால், நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு ஒரு உதாரணமாக விளங்கவேண்டும்,” என்று அவரை கடிந்துக்கொண்டார். §§

நல்ல எண்ணங்கள்; உள்ளத்து உத்தரவுகள் §

சிவயோக சுவாமி ஒவ்வொரு சீடருக்கும் முறையாக வழிபடும் முறையை கற்றுத்தந்தார். அது முடிவில் ஒருவருக்குள் இருக்கும் தெய்வீக சக்தியை காண்பதற்கு அனுமதி வழங்குகிறது. செல்லப்பசுவாமி தனது குருவை நினைத்து பேசுவது அல்லது பாடுவதன் மூலம், குரு வழிபாட்டையும் கற்றுத்தந்தார். §§

அவர் பெரும்பாலும் தானாக பாடுவார். அவர் சில சமயங்களில், தனது உள்ளிருந்து தோன்றிய பாடலை எழுதிக்கொண்டு ஒரு அன்பரின் வீட்டிற்கு வருவார். சுவாமி பாடுவதை யாராவது ஒருவர் எழுதி, அவர் அதை அருகில் இருந்தவர்களுக்கு வழங்குவார். இறுதியில் பாடல்கள் மற்றும் உரைகளின் தொகுப்பு நற்சிந்தனை (“நல்ல சிந்தனை") என்ற தலைப்பில் 1959 ஆம் ஆண்டிலும், இதன் இரண்டாவது மற்றும் விரிவாக்க பதிப்பு 1962 ஆம் ஆண்டிலும் வெளிவந்தன. §§

image§

ஞானோதயம் பெற்ற ஆன்மாக்கள் இலக்கிய பொக்கிஷங்கள் மற்றும் உட்பார்வைகளை பெரும்பாலும் விட்டு செல்வார்கள். யோக சுவாமி இந்த உலகிற்கு நூற்றுக்கணக்கான பாடல்களின் தொகுப்பான நற்சிந்தனையை வழங்கினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

சுவாமியின் போதனைகள் நுணுக்கமான மற்றும் கடினமான தமிழ் மொழியை தவிர்த்து, அதற்கு பதிலாக அழகான மற்றும் எளிமையான சொல் வளம் மற்றும் சொற்றொடர்களை பயன்படுத்தி, யோகத்தின் மறைபொருள்களை ஆய்வு செய்து, பாதையில் இருக்கும் தெய்வீக அனுபவங்களை தெரியப்படுத்தி, செல்லப்பசுவாமி மற்றும் மகாதேவர்களில் குறிப்பாக சிவபெருமானை போற்றி பாடுகிறது. மொத்தத்தில், சுவாமியின் தொகுப்பில் 385 நற்சிந்தனை பாடல்கள், இருபது திருமுகங்கள், 1,500 அருள் வாசகங்கள் உள்ளன. நற்சிந்தனையில் வரும் முதல் பாடலான “எங்கள் குருநாதன்,” செல்லப்பசுவாமியின் போதனைகள் பற்றி விவரித்து, ஆழமான உணர்தல்கள் மற்றும் ஞானஒளிக்குள் யோக சுவாமியை கொண்டு வந்த ஆன்மாவின் மீது யோக சுவாமிக்கு இருந்த அன்பின் ஆழத்தை, எல்லோருக்கும் பாட்டின் மூலம் தெரியப்படுத்துகிறது. இதோ அந்த பாடலின் தொடக்கம்: §§

என்னையெனக் கறிவித்தா னெங்கள்குரு நாதன் §

இணையடியென் தலைவைத்தா னெங்கள்குரு நாதன்§

அன்னைபிதாக் குருவானா னெங்கள்குரு நாதன்§

அவனியெல்லா மாளவைத்தா னெங்கள்குரு நாதன்§

முன்னைவினை நீக்கிட்டா னெங்கள்குரு நாதன்§

மூவருக்கு மறியவொண்ணா னெங்கள்குரு நாதன்§

நன்மைதீமை யறியாத னெங்கள்குரு நாதன்§

நான்தானாய் விளங்குகின்றா னெங்கள்குரு நாதன். §§

யோக சுவாமி இயலுணர்வுடன் வேலை செய்து, “ஆன்மீக ஆணைகளுக்கு” கீழ்படிந்து தன்னை நாடி வந்தவர்களுக்கு பதில் அளித்தார். அவர் இதைப்பற்றி விளக்கும் போது, ஒரு முறை, “நான் எதையும் செய்யவில்லை. என்னால் எதையும் செய்யமுடியாது. நீங்கள் பார்ப்பது அனைத்தும், உள்ளத்தில் இருந்து வரும் உத்தரவுகளால் செயல்படுத்தப்படுகின்றன.” அவர் மேலும் இன்னொரு முறை, “நீங்கள் இங்கே வரும் போது, நடக்கவிருப்பது முன்பே நடந்து முடிந்துவிட்டது. நாம் அதை அனுபவிக்கிறோம்; நீங்கள் அதை கொண்டு வருகிறீர்கள், ஆனால் அவை நீண்டநாட்கள் முன்பே நடந்து முடிந்துவிட்டன. அமைதியாக அமர்ந்து இருந்து ஒரு சாட்சியாக இருங்கள்.” “நீங்கள் சுத்தமாக இருக்கும் போது, ஒரு தாமரை இலையின் மீது இருக்கும் நீர்த்துளி போல வாழுங்கள். எது தேவையோ அதை செய்யுங்கள், உங்களிடம் வருவதை செய்யுங்கள், அதன் பிறகு நீங்கள் பெறும் அடுத்த உத்தரவுக்கு செல்லுங்கள், அதன் பிறகு அடுத்து வருவது என்று தொடருங்கள்,” என்று இந்த செயல்முறையை சுவாமி விளக்கினார். §§

“உங்கள் உள்ளத்தில் இருந்து உத்தரவுகள் வரும் போது தைரியமாக செயல்படுங்கள். அந்த உத்தரவில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் முறையாக இருக்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டாம். முழுவதும் சரியாக வேண்டும் என்று காத்து இருந்தால், உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு கை நழுவி செல்லலாம். உள்ளத்தில் இருந்து வரும் உத்தரவுகள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் பணியை தொடருங்கள். நீங்கள் தெய்வீக உத்தரவுகளுக்கு அங்கீகாரம் அளித்தால், பணம் உங்களை பின்தொடர்ந்து வரும். உதவியாளர்கள் வருவார்கள். அனைத்தும் வரும். நீங்கள் உள்ளத்தில் இருந்து வரும் உத்தரவை மட்டும் பின்பற்றுவதில் கவனமாக இருக்கவேண்டும்,” என்று அவர் அறிவுறுத்தினார். §§

உள்ளத்தில் இருந்து வரும் குரல் என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது என்று கேட்டபோது, “சும்மா இரு. சும்மா இரு! உனக்கு தேவையானது உன்னை தேடி வரும்,” என்று கூறினார். “சும்மா இரு!” என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அவர் அதில் பயிற்சி மேற்கொண்டு, உள்ளத்தில் இருந்து வரும் பதில்கள் மீது கவனம் செலுத்தினார். §§

ஒரு அன்பர் அவரிடம் கேள்வி கேட்டால், தனது உத்தரவுகளை உணர்வதற்காக காத்து இருப்பார். அவர் எந்த உத்தரவையும் உணரவில்லை என்றால், அவர் உத்தரவுகள் வரும் வரை சும்மா இருப்பார். ஒரு நாள் சுவாமி ஊர் வழியாக நடந்து சென்ற போது, வாகனத்தில் வந்த ஒருவர் அவரை எங்காவது அழைத்து செல்ல வேண்டுமா என்று சுவாமியிடம் கேட்டார். “எந்த உத்தரவும் வரவில்லை,” என்று சுவாமி பதில் அளித்து, அவரை வழியனுப்பி வைத்தார். சில நிமிடங்கள் கழித்து, அதே நபர் சுவாமிக்கு அருகில் வந்து வாகனத்தை நிறுத்தினார். “இப்போது எனக்கு உத்தரவு வந்து விட்டது,” என்று சுவாமி பதில் அளித்து, வாகனத்துக்குள் ஏறிக்கொண்டார். §§

1930 களில் மெய்ப்பொருள், ஞானஒளி மற்றும் நல்ல பாதையை தேடி, இரண்டு மூத்த ஜெர்மன் நாட்டு பெண்கள் இந்தியாவை நோக்கி புறப்பட்டனர். அவர்கள் பல மாதங்களுக்கு வறண்ட வானிலையை தாங்கிக்கொண்டு,கொதிக்க வைத்த தண்ணீரை குடித்துக்கொண்டு, தங்களுக்கு தென்பட்ட ஒவ்வொரு சாது மற்றும் தெய்வீக புருஷருடன் பேசினார்கள். அவர்களது பயணத்தில் சாதகர்களின் பிரபல இலக்காகவும், பிரபல சூட்சும ஞானியாக அத்வைதத்தில் தேர்ச்சி பெற்று, புனிதமான அருணாச்சல மலையில் ஒரு எளிமையான ஆசிரமத்தில் பல ஆண்டுகள் ரமண மகரிஷி வாழ்ந்த இடமான திருவண்ணாமலையும் இருந்தது. §§

அவர்கள் மேலும் தெற்கு நோக்கி பயணம் செய்து, பால்க் நீர்சந்தியை கடந்து இலங்கையில் நுழைந்தனர். அவர்கள் கொழும்பில் இருந்து வடக்கே, பல மகான்கள் வாழ்ந்ததாக கருதப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தனர். நீளமான, மடிப்புக்கள் நிறைந்த உடைகள், நூலுடன் இருந்த கையுறைகள் மற்றும் விசித்திரமான வடிவத்தில் சூரிய வெப்பத்தை தடுக்கும் குடைகளுடன், அவர்கள் இருவரும் புழுதி படிந்த சாலைகளில் நடந்து சென்றபோது, ஊர் மக்கள் அவர்களை கூச்சமின்றி பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் யோக சுவாமியை ஒரு சிறிய கூரை வெய்த குடிசையில் சந்தித்தனர். இரண்டு அன்பர்களும் சுவாமிக்கு தங்கள் வணக்கத்தை தெரிவித்து, அவர் வழங்கிய நெய்த பாயில் அமர்ந்து, முடிவான உண்மையின் இயல்பு பற்றிய அவர்களது கேள்விகள் மற்றும் அவர்களது யாத்திரை பற்றிய கதையை கேட்ட கருமை நிற குருவுடன் பால் கலக்காத இலங்கை தேநீரை குடித்தனர். §§

“இதே கேள்விகளை தான் மற்றவர்களிடமும் கேட்டீர்களா?” என்று யோக சுவாமி விசாரித்தார். “ஆமாம், சுவாமி,” என்று அவர்கள் பதில் அளித்தனர். “ரமண மகரிஷி என்ன பதில் அளித்தார்?” என்று சுவாமி விசாரித்தார். தங்களது பயணம் பற்றி சுவாமி அறிந்து இருந்ததை கண்டு, அந்த மூத்த பெண்மணி, “அவர் எங்களிடம் ‘ஒரு கடவுள். ஒரு உலகம்’ என்று கூறினார்.” உடனே சுவாமி, “என்னால் இதை விட எதையும் சிறப்பாக சொல்ல முடியாது. நீங்கள் கிளம்பலாம்,” என்று பதில் அளித்தார். அத்துடன் அவர்கள் இருவரும், தாங்கள் வாழ்ந்த நூற்றாண்டின் ஞானோதயம் பெற்ற ஆன்மாக்களில் ஒருவரை தரிசித்த பெருமிதப்புடன் கிளம்பினர். §§

யாழ்ப்பாண முனிவருடன் நடந்த எனது சந்திப்பு §

இலங்கைக்கான முன்னாள் கனடா நாட்டு உயர் ஆணையர் Dr. ஜேம்ஸ் ஜார்ஜ், சுவாமி மீது வலுவாக ஈர்க்கப்பட்டு இருந்தார். அவர் பின்வரும் தகவலை வழங்கினார். §§

அவரை இலங்கை தமிழர்கள் யாழ்ப்பாண முனிவர் என்று அழைத்தார்கள். சிங்கள பௌத்தர்கள் மற்றும் கிறுத்துவர்களை உள்ளடக்கிய அவரது ஆயிரக்கணக்கான சீடர்கள், அவரை ஒரு மகான் என்று அழைத்தனர். தான் அழையாமல் தன்னிடம் வந்து கெஞ்சுபவர்களை, தனது கையில் ஒரு தடியுடன் துரத்தும் அளவிற்கு மிகவும் தீவிரமாகவும் விசித்திரமாகவும் செயல்பட்டதால், அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை வயதான சிங்கம் அல்லது போதிதர்மரின் மறுபிறவி என்று குறிப்பிட்டார்கள். நான் அவரை வெறும் சுவாமி என்று அழைத்தேன். அவர் இந்து சமயத்தை, அதன் புனிதமான வேதாந்த வடிவில் எனக்கு அறிமுகப்படுத்தினார். நான் அறுபதுகளின் தொடக்கத்தில், அப்போது சிலோன் என்ற பெயரிலேயே இருந்த இலங்கைக்கு, கனடா நாட்டு உயர் ஆணையராக இருந்த சுமார் நான்கு வருடங்களுக்கு, சுவாமி எனது ஆசிரியராகவும் இருந்தார். §§

நான் அதற்கு பத்து வருடங்களுக்கு முன்பாக, குருட்ஜீஃப் ஒர்க்கில் பயிற்சி பெற்று இருந்தேன். மற்றும் பி.டி. உஸ்பென்ஸ்கியின் முன்னாள் மாணவன், ஜேம்ஸ் ராம்ஸ்போதம் (லார்டு சோல்புரி) மற்றும் அவரது சகோதரன் பீட்டரின் உதவியுடன், நாங்கள் சிலோனுக்கு வந்திறங்கிய சில நாட்களில், யோக சுவாமியுடன் எனது முதல் சந்திப்பை மேற்கொள்ள, கொளுத்தும் பிற்பகல் வெயிலில், சிலோனின் வடக்கு கரையோரத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரு எளிமையான ஓலை வெய்த குடிசை முன்பாக நான் நின்றுக்கொண்டு இருந்தேன். §§

நான் மெதுவாக கதவை தட்டிய போது, “கனடா நாட்டு உயர் ஆணையரா?” என்று ஒரு குரல் உள்ளிருந்து கர்ஜித்தது. நான் கதவை திறந்த போது, அவர் நீளமான நரைத்த தாடி மற்றும் தலையில் அதிகமான நரைத்த முடியுடன், ஒரு வெள்ளை ஆடையை உடுத்தி, நிமிர்ந்த தலையுடன், கம்பீரமாக சம்மணம் போட்டு தரையில் அமர்ந்து இருந்தார். “சுவாமி,” என்று நான் பேசத்தொடங்கி, “அது தான் என் வேலை, ஆனால் நான் அது இல்லை.” “சரி, அப்போது உள்ளே வந்து என்னுடன் சேர்ந்து உட்காருங்கள்,” என்று சொல்லி ஆரவாரத்துடன் சிரித்தார். §§

அந்த தருணத்தில் இருந்து எனக்கு அவர் மீது வலுவான பிணைப்பு ஏற்பட்டது. நான் செய்யும் வேலையுடன் என்னை குறைவாக தொடர்புப்படுத்தி, நான் யார் என்று தெரிந்துகொள்வதை நோக்கி ஆழமாக செல்ல, அவர் எனக்கு உதவி செய்தார். தனது சமகாலத்தவராகவும், தென்னிந்தியாவின் அருணாச்சலத்தில் வாழ்ந்தவருமான, ரமண மகரிஷியை போல, ஒரு மந்திரமாகும் ஒரு இருத்தலியல் கேள்வியாகவும் விளங்கிய “நான் யார்?” என்ற கேள்வியை யோக சுவாமியும் பயன்படுத்தினார். ஒரு இடத்தில் அமைதியாக தியானத்தில் அமர்ந்து இருப்பதை தவிர்த்து, ஒரு நிகழ்ச்சிக்கு பிறகு இன்னொரு நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு, நான் நாடெங்கும் சுற்றித் திரிவதைப் பார்த்து, அவர் வழக்கமாக என்னை கோபித்துக்கொள்வார். கனடா நாட்டில் எனது விடுமுறை நாட்களை கழித்து பிரான்ஸ், கனடா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் கம்போடியா என்று உலகையே சுற்றி வந்து, சிலோன் வந்தடைந்த போது, அவர் என்னை தனக்கு நெருக்கமாக அமர்த்திக்கொண்டு, உள்ளத்தில் மட்டுமே காண முடிந்ததை, தொடர்ந்து வெளியே தேடிக்கொண்டு, எனது உயிர் சக்தியை நான் தேவையின்றி விரயம் செய்வதாக அவர் கூறினார். §§

“நீங்கள் ஓரிடத்தில் அமைதியாக சும்மா இருப்பதை தவிர்த்து, எப்போதும் ஏதாவது செய்துக்கொண்டும், ஓடிக்கொண்டும் இருக்கிறீர்கள். “நான் யார்? நான் யார்? நான் யார்? நான் யார்? நான் யார்? நான் யார்?” என்று என்னை கேட்பதை காட்டிலும், நீங்கள் வீட்டில் அமைதியாக உட்கார்ந்து கொண்டு, உங்களிடம் இயல்பாக கேட்டுக்கொள்ளுங்கள். அவர் அந்த கேள்வியை சொல்லிய ஒவ்வொரு முறையும், அவரது குரலின் தொனி, ஒலி அளவு மற்றும் ஒலியின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே சென்றது, மற்றும் அவர் இறுதியாக தனது முழு சக்தியையும் பயன்படுத்தி அலறினார். §§

அதன் பிறகு அவர் திடீரென்று அமைதி அடைந்து, உறுதியாக அமைதி அடைந்தார் மற்றும் வாயால் பேசப்படாத அவரது போதனை அந்த அறை முழுவதும் நிரம்பி, அது சொற்களை காட்டிலும் ஆற்றல்மிக்கதாக இருந்து, அவர் தனது எளிமையான இருப்பின் மூலம் எனது அலைபாயும் எண்ணங்களை விரட்டி அடித்தார். அந்த தருணத்தில் நான் அந்த பரமாத்துமா என்பதை எந்தவித ஐயமும் இல்லாமல் அறிந்து கொண்டேன்; மற்றும் அதற்கு “யார்" என்ற விளக்கம் தேவையில்லாமல் போதுமானதாக இருந்தது. நான் அந்த பரமாத்துமாவாக மட்டும் இருக்கின்றேன். இந்த ஒரு பாடத்தை நான் மறந்தவுடன், “செய்வதும்" “சிந்திப்பதும்" என்னை மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்துவதால், மீண்டும் கற்பதற்காகவும் மீண்டும் அனுபவிப்பதற்காகவும், அதை மனதில் வைத்து இருந்தேன். §§

இன்னொரு முறை நானும் எனது மனைவியும் யோக சுவாமியை பார்க்க வந்த போது, எங்களது மூன்று குழந்தைகளையும் அழைத்து சென்று இருந்தோம். அவர் எங்கள் குழந்தைகளிடம், “உங்கள் வயது என்ன?” என்று ஒவ்வொருவரிடமும் கேட்டார். எனது மகள் “ஒன்பது வயது” என்று கூறினாள், மற்றும் எனது மகன்கள் “பதினொன்று" மற்றும் “பதிமூன்று" என்று கூறினார்கள். யோக சுவாமி அவர்கள் ஒவ்வொருவரிடமும் உறுதியாக, “எனக்கும் உங்கள் வயது தான்,” என்று பதில் அளித்தார். அவருக்கு ஒரே சமயத்தில் மூன்று வெவ்வேறு வயது இருக்கமுடியாது என்றும், அவர் தங்களது பாட்டனாரை காட்டிலும் வயதானவராக இருக்க வேண்டும் என்று குழந்தைகள் பதில் அளித்த போது, யோக சுவாமி தனது முகத்தில் வெறும் புன்னகையை மட்டும் வெளிப்படுத்தி, எங்களுக்கு புரிந்ததா என்பதை தெரிந்துகொள்ள, எங்களை பார்த்து கண் சிமிட்டினார். §§

image§

யோக சுவாமி மின்சாரம் அல்லது குழாய் தண்ணீர் இல்லாமல், ஒரு யோகியின் எளிமையான தேவைகளுக்கு பொருத்தமான, ஒரு எளிய குடிசையில் வாழ்ந்துவந்தார். அவரைத் தேடி ஆயிரக்கண்கான சாதகர்கள் வந்தார்கள், மற்றும் அவர்கள் ஒவ்வொருவரும் வழக்கமாக வியக்கவைக்கும் வகையில், ஆன்மீக உட்பார்வை நிரம்பிய ஒரு நிறைவான தகவலை மனதில் சுமந்து சென்றனர்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அந்த சமயத்தில் அதை கேட்ட போது, அவர் குழந்தைகளுடன் நகைச்சுவையாக விளையாடுவது போல தோன்றியது, ஆனால் நாங்கள் புரிந்துகொள்வதற்கு, அவர் ஆழமான ஒரு தகவலை வழங்கி இருந்தார் என்பது எங்களுக்கு மெதுவாக புரிந்தது. பிறப்பில் இருந்து இறப்பு வரையிலான பாதையில் உடல் பல்வேறு வயதுகளுடன், உடலை போன்று உண்மையானதாக இருந்தாலும், அதற்கு உடல் ஒரு வாகனமாக இருக்கிறது, எப்போதும் இருந்துள்ளது மற்றும் எப்போதும் இருக்கப்போகிறது என்பதை மறைமுகமாக சொல்வதே அவரது வழக்கமாக இருந்துள்ளதாக எனக்கு இப்போது தோன்றுகிறது. அந்த வகையில் பார்த்தால், நாம் எல்லோரும் “ஒரே வயது" என்பதே அதன் சாரம் ஆகும். §§

நான் யோக சுவாமியை பலமுறை சந்தித்த பிறகு, எனது கேள்விகளை மிகவும் கவனமாக தயார்செய்ய கற்றுக்கொண்டேன். ஒரு நாள், நான் அவ்வாறு என்னை தயார் செய்துக்கொண்டு, அவரது குடிசையை நெருங்கி, எனது காலணிகளை எடுத்துவிட்டு, மண் தரையில் இருந்த கோரை பாயில் அமர்ந்த போது, அவரை எப்போதும் கைவிடாத கூர்ந்து கவனிக்கும் திறனால் என்னை நோட்டமிட்டார். “ சுவாமி, நான் என்ன நினைக்கிறேன் என்றால்…” என்று தொடங்கினேன், “தொடக்கத்திலேயே தவறு!” என்று அவர் கர்ஜித்ததும், என் மனம் மீண்டும் கருத்து சாராத நிலைக்கு சென்றது. உயிர்சக்தியின் பாதையில் இருக்கும் தடைகளை விலக்கும் அந்த நிலையை, வரவழைப்பதில் அவர் தேர்ச்சி பெற்று இருந்தார். §§

நாடிய நிலை சிந்தனையற்றதாக மற்றும் சொற்களால் விவரிக்க முடியாததாக இருந்தாலும், ஒரு சீடன் பின்னர் அமைதியாக அமர்ந்து ஆய்வு செய்ய, அவர் ஆற்றல்மிக்க வெளிப்பாடுகளின் மூலம் தனக்கு பிடித்தமான சூத்திரங்களை கற்றுத்தந்தார். அவர் வழங்கிய சூத்திரங்களில் மூன்றை உங்கள் முன் வைக்கிறேன்: “சும்மா இரு”. “ஒரு பொல்லாப்பும் இல்லை” “இது அப்படியே உள்ளது.” அவர் இந்த அறிக்கைகளை தனிநபருக்கும் அண்டத்துக்கும் பயன்படுத்தினார். ஒழுங்கின்மையை காட்டிலும் ஒழுங்குமுறை ஒரு ஆழமான உண்மையாக இருந்தது. நாம் தற்பொழுதில் இருக்கும் போது, நாம் நமது உயிர்சக்தியில் நிறைவான ஒழுங்கில் இருப்பதால், நாம் எதையும் உருவாக்கவோ அல்லது செய்யவோ தேவையில்லை. §§

அவரது உயிர் பிரிந்து முப்பது வருடங்கள் கழித்து, தற்போதைய உலகை காணும் போது, அவரால் அதே சூத்திரங்களை அதே நம்பிக்கையுடன் இன்று சொல்ல முடியுமா என்று நான் யோசிக்கிறேன். அவர் எதை தெரிவித்தார் என்பதை புரிந்துகொள்ள, நாம் இன்னும் ஆழமாக செல்லவேண்டும் என்று நம்மிடம் சவால்விடுவார் என்று எனக்கு தோன்றுகிறது. யதார்த்தம் நிறைவில்லாமல் அல்லது தவறாக இருக்காது; நாம் மட்டும் தவறாகவும் நிறைவில்லாமலும் இருப்போம், நாம் உண்மையாக இல்லாத போது, நாம் தற்பொழுதில் இருப்பதில்லை!§§

குருவின் வழி §

ஒரு அன்பருக்கு யோக சுவாமியின் உதவி தேவை முக்கியமாக தேவைப்பட்டது, ஆனால் சுவாமியிடம் சென்றால் தனது மனம் திறந்த புத்தமாகிவிடும் என்ற அச்சத்தில் இருந்தார். அவர் ஒரு தீவிரமான சீடனாக இருந்தாலும், தன்னை அடிக்கடி உருத்திய ஒழுங்கீன எண்ணங்களால் அவமானத்தில் இருந்தார். அவரால் இந்த இரண்டில் இருந்தும் விலகி இருக்க முடியவில்லை. தனக்கு வேலையில் இருந்து விடுப்பு வரும் போது, சுவாமியிடம் செல்லலாம் என்று அவர் முடிவு செய்தார். அவர் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து சுத்தமான ஆடைகளை அணிந்துகொண்டார், ஆனால் தனது மனமும் சுத்தமாக இல்லையே என்று நெஞ்சில் வருத்தத்துடன் இருந்தார். அவர் தனது மனதை கட்டுப்படுத்த முடியாமல், மேலும் தவறான வழிகளில் சென்றுகொண்டு இருந்தார், மற்றும் அவரது எண்ணங்கள் மிகவும் இழிவாக இருந்ததால், அதை தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் விவாதிக்கவும் முடியாமல் தவித்தார், மற்றும் அவர்களுக்கு இதைப்பற்றி தெரிந்தால், அவர்கள் இவரை கண்டிப்பாக வெறுப்பார்கள். அவர் சுவாமியிடம் சென்று தனது மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி தீர்த்துவிடவேண்டும் என்று முடிவு செய்தார். §§

அவர் செல்லும் வழியில், தனது கொடூரமான கற்பனைகளை நன்றாக உணர்வதற்கு, சுவாமி தியானத்தில் ஈடுபடாமல் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் சென்றார். அவர் ஆசிரமத்தில் நுழைந்ததும், சுவாமி சில சீடர்களிடம் மகிழ்ச்சியாக பேசுவதை கண்டார். அவர் சற்குருவை தரையில் விழுந்து வணங்கி வழிபட்ட போது, “நான் தப்பித்தேன்,” என்று எண்ணினார். சுவாமி ஒரு ஏளன சிரிப்புடன், அவரை நேருக்கு நேராகப் பார்த்து, “உங்கள் தலையில் இருந்து கால்விரல் வரை எனக்கு அனைத்தும் தெரியும். எனக்கு உங்கள் எண்ணங்கள் மட்டும் இல்லை, எல்லோரது எண்ணங்களுக்கும் தெரியும். நான் எல்லோருக்குள்ளும் இருக்கிறேன். நீங்கள் உங்களை மற்றவர்களிடம் இருந்து பிரித்து பார்ப்பதால், உங்களுக்கு இதைப்பற்றி தெரியாது. உங்களை மற்றவர்களிடம் இருந்து பிரித்து பார்க்காமல், மற்றவர்களை உங்களைப் போல எண்ண பழகிக்கொள்ளுங்கள்,” என்று கூறினார். அதன் பிறகு, தனக்கு முன்பாக எரிந்துக்கொண்டு இருந்த கற்பூரத் தட்டை எடுத்து, அந்த சீடனிடம் வழங்கி, “இந்த ஆரத்தியை ஏற்றுக்கொண்டு, இங்கிருக்கும் அனைவரையும் சிவபெருமானாக நினைத்து, அவர்களை வணங்குங்கள்,” என்றார். §§

ஒரு முன்னறிவப்பின்றி, தனக்கு நெருக்கமான சீடர்களின் வீடுகளுக்கு செல்வது சிவயோக சுவாமியின் வழக்கமாக இருந்தாலும், அந்த குடும்பத்தினர் அவரை மகிழ்ச்சியுடன் உபசரித்தனர். அவர் குறுகிய காலம் தங்களுடன் தங்கினாலும், அது தங்கள் வாழ்நாளில் கிடைத்த பாக்கியமாக அந்த குடும்பத்தினர் கருதினார்கள். அவர் வழக்கமாக மதிய உணவிற்கு முன்பாக வந்து, சில சமயங்களில் இரவிலும் தங்கிவிட்டு செல்வார். சில அன்பர்கள், உறுதியாக இல்லாவிட்டாலும், சுவாமி தங்கள் வீட்டிற்கு வருவார் என்ற நம்பிக்கையில் தினமும் உணவை சமைத்து வைப்பார்கள். தனது குடும்பத்துடன் யோக சுவாமிக்கு இருந்த தோழமையை பற்றி, ரத்னா மா நவரத்தினம் தனது புத்தகம், சேயின்ட் யோக சுவாமி அண்ட் தி டெஸ்ட்டமெண்ட் ஆஃப் ட்ருத் என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார். §§

குருவிடம் இருந்த ஒளியின் வட்டப்பாதையில் எங்கள் பெற்றோர்கள் சுற்றிக்கொண்டு இருந்ததை நாங்கள் பார்த்த போது—“என்னிடம் நீ உன்னையே கொடுத்து, என்னை கடவுளிடம் அழைத்து சென்றாய். சங்கரா, இதில் யாருக்கு ஆதாயம் அதிகம்?”—சைவ சமய குருவரான மாணிக்கவாசகரின் பிரபலமான வேண்டுதலின் பொருள், எங்களுக்குள் லேசாக தோன்றியது. முப்பதுகளின் ஆரம்பத்தில், எங்கள் தகப்பனாரின் வற்புறுத்தலின் பேரில், நாங்கள் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்த திருவாசகம், எங்களது ஆன்மீக வேட்கையில், கடவுள்-குருவின் வலுவான முக்கியத்துவத்தை தெளிவுபடுத்த உதவியது. §§

மே 1939, கடைசி வாரத்தில் சுவாமி ஒரு மிகப்பெரிய ஒளிக்கதிராக பிரகாசிக்கும் வரை, எங்களது இந்த நட்புறவுகளில், அவர் எங்களது வாழ்க்கையை தூரத்தில் இருந்து தொடர்ந்து வலுவாக்கி வந்தார். எங்களது தகப்பனார், “செல்லியம் பதி" என்ற அவரது புதிய வீட்டின் கதவிற்கு முன்பாக இருந்த ஒரு கற்களின் குவியலின் மீது தடுக்கி கீழே விழுந்தார். அதனால் அவர் கணுக்காலில் சுளுக்கு மற்றும் உடல் சோர்வைத் தவிர, பலத்த காயம் ஏதும் இல்லாமல் தப்பித்தார். ஆனால் அவர் இந்த சிறிய விபத்தால் ஏப்ரல், 1939 வீட்டுக்குள்ளேயே அடைபட்டு இருந்தார். சித்திரா-பௌர்ணமி விரதத்தை மேற்கொண்ட பிறகு, அவருக்கு காய்ச்சலுடன் சிறிது வயிறு கோளாறும் இருந்தது, மற்றும் பதினைந்து நாட்களுக்கு பிறகு அவரது உடல்நிலை எந்த முன்னேற்றமும் இல்லாமல், மோசமும் அடையாமல் நிலையாக இருந்தது. §§

மே 28, மாலை நேரத்தில், எங்கள் தகப்பனார் தாயையும் குழந்தைகளையும் அழைத்து, அனைத்து மின் விளக்குகளும் எரிய வேண்டும் என்றும் அவருக்கு அருகில் இருந்த ஒரு நாற்காலியில் ஒரு வெள்ளை நிறத்துணியை போர்த்தி வைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு, நாங்கள் பாடவேண்டும் என்று உத்தரவிட்டார். சிறிது நேரத்தில் வரவிருப்பவரின் காலில் விழுந்து நாங்கள் வணங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். எங்களுக்கு அவரது பேச்சின் அர்த்தம் புரியவில்லை. அதை புரிந்துகொள்வதற்கு கடினமாக இருந்தாலும், நாங்கள் அவரது உத்தரவை அதிகம் யோசிக்காமல் ஏற்றுக்கொண்டு காத்து இருந்தோம்.§§

சந்தியா [அந்தி நேரம்] நேரத்தில், வைகாசி மாதத்தின் வளர்பிறை நிலவு தனது தெளிவான ஒளியை வீசிய போது, அவர் தனது அக்குளில் தனது குடையை மடித்து வைத்துக்கொண்டு, தோட்டத்து கதவை திறந்தார். சின்னதம்பி என்று சுவாமி எனது தகப்பனாரின் செல்லப்பெயரை அழைத்த போது, அவரது குரல் எதிரொலித்தது, மற்றும் கண்களில் கண்ணீருடன் எனது தாய் அவரை தரையில் விழுந்து வணங்குவதை பொருட்படுத்தாமல், சுவாமி நேராக எனது தகப்பனாரின் படுக்கையறைக்கு சென்றார். அதன் பிறகு நடந்த ஒரு இனிமையான இணக்கம் மிகவும் புனிதமாக இருந்ததால், அதை முழுமையாக விளக்குவது மிகவும் கடினமாக இருக்கிறது. §§

எனது தகப்பனார் சுவாமியை பார்த்ததும், படுக்கையில் இருந்து எழுவதற்கு முற்பட்டார், ஆனால் குரு சோர்வாக வணங்கிக்கொண்டு இருந்த இரு கைகளையும், தனது நெஞ்சில் வைத்துக்கொண்டு பாட ஆரம்பித்தார். அது சிவபெருமானிடம் ஐக்கியமாகும் நபர்களுக்காக காத்து இருக்கும் பேரானந்தத்தை தெரிவிக்கும் பாட்டாக இருந்தது. அவரது குரல் காலத்தை கடந்து அநாதியாக எதிரொலித்தது. அதன் பிறகு அவர் படுக்கைக்கு அருகில் இருந்த மேசையில் இருந்த சங்கில் இருந்து விபூதியை எடுத்து, எனது தகப்பனாரின் நெற்றியில் மென்மையாக பூசினார். இந்த இனிமையான இணக்கத்தால், எங்களது தகப்பனாரின் முகம் பிரகாசித்ததை எங்களால் பார்க்க முடிந்தது:§§

அது ஒரு பிரிவாக இல்லை. அது ஒரு வாக்குறுதியின் நிறைவேற்றமாக, சிவபெருமானின் ஆழகான பேரின்பத்தில் இருந்த உறுதிப்பாட்டிற்கு உத்தரவாதம் தருவதாக இருந்தது! அவர் படுக்கையில் இருந்து எழுந்திருத்து, எங்களை வியக்க வைத்தார். நோயால் படுத்த படுக்கையாக இருந்த எந்த ஒரு நபர் உயிர் துறக்கும் போதும், ஒரு வார்த்தை கூட ஆறுதலாக சொல்லாதது எங்களுக்கு விசித்திரமாக இருந்தது. அது அவரது வழக்கமாக இருந்தது. ஒரு பொல்லாபும் இல்லை! [“தவறாக ஒன்றும் இல்லை!”] நாம் சும்மா இருக்கவேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. குருவின் அருள் வழங்கிய இந்த அற்புதமான நாடகக் காட்சியில் நாங்கள் வெறும் பார்வையாளர்களாக இருந்தோம்! எனது தகப்பனார் 30 மே 1939 அன்று இரவு சமாதி அடைந்தார். §§

மர்மத்தின் மூலமாகவும், தொடர் ஈர்ப்பாக விளங்கிய சிவ ஞானம் என்கிற கடவுளின் அருளுடன் இருந்த குருவைப்பற்றிய, நமது சந்தேகங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்தி, நமது நம்பிக்கையை அதிகரிப்பதற்கு, அது ஒரு அறிமுகமாக விளங்கியது. ஒரு புதிய தொடக்கமாக விளங்கிய அந்த காலகட்டத்தில், குருவின் அருள் குவியலில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு, நாங்கள் மெதுவாக கற்றுக்கொண்டோம். அனைத்து தடைகளும் விலகின. அந்த காந்த ஈர்ப்பு சக்தி தடுக்க முடியாமல் வலுவாக இருந்தது; மற்றும் எங்களது வாழ்க்கையின் மதிக்க முடியாத பொக்கிஷத்தின் வேதனை அளிக்கும் பிரிவுக்கு பிறகு, அனைத்திலும் குரு இருக்கிறார் என்ற உணர்தல் எங்களுக்குள் உதயமானது. §§

image§

தனது பரமகுருவான கடையிற்சுவாமி, சந்தை வழியாக நடந்து செல்வதை விரும்பியதை போல, யோக சுவாமியும் 1940 களில் தயாரிக்கப்பட்ட கருப்பு அம்பாசடரில் அடிக்கடி பயணம் செய்தார். அவர் அதை தீபகற்பம் முழுவதையும் சுற்றி வருவதற்கு அல்லது வெகு தொலைவில் இருந்த ஒரு நெருக்கமான அன்பரின் வீட்டிற்கு முன்னறிவப்பின்றி செல்வதற்கு பயன்படுத்தினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அதன் பிறகு ரத்னா மா நவரத்தினம் மற்றும் அவரது கணவர் திருநாவுக்கரசுவும், சுவாமியின் நெருக்கமான சீடர்களாக இருந்தனர். அவர்களது வீடு யோக சுவாமியின் ஆசிரமத்திற்கு அருகாமையில் இருந்தது, மற்றும் அவர் அதற்கு தினமும் சென்று வந்தார். திரு வழக்கமாக யோக சுவாமியின் வாகன ஓட்டியாக இருந்தார். அவர் தனது கருப்பு அம்பாஸடரை, சுவாமிக்கு தேவைப்படும் போது எடுத்து செல்ல, தனது சிறிய வாகனக்கூடத்தில், மெருகூட்டி எப்போதும் தயார் நிலையில் வைத்து இருந்தார். ஒரு சிறந்த எழுத்தாளராகவும் கல்வியாளராகவும் இருந்த ரத்னா மா நவரத்தினம், சுவாமியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், அவர் பேசுவதை தன் காதால் கேட்ட ஒவ்வொரு சொல்லையும் எழுத, மொழியில் இருந்த தனது புலமையை பயன்படுத்திக் கொண்டார். அன்றாட நிகழ்வுகள் அவரை சுற்றி நடந்து கொண்டிருக்க, அவர் அந்த குடிசைக்கு காலையிலும் மாலையிலும் சென்று பின்புறத்தில் அமைதியாக அமர்ந்து கொள்வார். அவர் தன் வீட்டிற்கு திரும்பியதும், சுவாமியை தரிசிக்க வந்தவர்களின் பெயர்களுடன், நடந்த உரையாடல்களை மற்றும் குறிப்பாக யோக சுவாமியின் உபதேசங்களை, மிகவும் நுணுக்கமாக பதிவு செய்துகொள்வார். §§

புகைவண்டி நிலையப் பொறுப்பாளர் எஸ்.வினாசித்தம்பி தனது அனுபவங்களை விளக்குகிறார்.§§

சுவாமி எங்கள் வீட்டிற்கு வந்து தங்கியிருந்த போது, அவர் சிலசமங்களில் நீண்ட நேரத்திற்கு ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து இருப்பார். நான் வீட்டிற்கு வேலையில் இருந்து திரும்பி வரும் போது, தியானத்தின் தலைவனைப் போல பத்மாசனந்தில் அமர்ந்து இருந்த அவரை கண்டதும் நான் பரவசமடைவேன். அதிகாலையில் நாங்கள் எழுந்ததும், சுவாமி படுக்கையில் படுத்து இருப்பதை பார்க்கும் போது, அவர் அமைதியின் தலைவனாக தோன்றினார். அந்த உருவத்தை பார்க்கும் போது, நாங்கள் கடவுளை பார்த்துக்கொண்டு இருப்பதைப் போன்ற ஒரு உணர்வை என்னால் உணர முடிந்தது, மற்றும் அது “நான் கடவுள்" என்ற அபூர்வமான மந்திரத்தை நிரூபிப்பதாக இருந்தது. §§

சுவாமி எங்கள் வீட்டில் இல்லாத போதும், அவரது தெய்வீக உருவம் மற்றும் முனிவரின் வார்த்தைகளை நினைவுகூர்வது எங்கள் வழக்கமாக இருந்தது. “கடவுளை கடவுளின் மூலமாக தான் பார்க்க முடியும்,” என்று அவர் ஒரு முறை கூறியதை, நான் நினைவுகூர்ந்தேன். நான் இதை நினைவுகூர்ந்த போது, உள்ளேயும் வெளியேயும் மற்றும் எங்கும் தொடர்ந்து கடவுளை கண்ட யோக சுவாமியை விட சிறந்த கடவுள் இல்லை என்ற நம்பிக்கை மனதில் தோன்றியது. §§

நான் இந்த மனநிலையுடன், சுவாமியை கொழும்புத்துறை ஆசிரமத்தில் சென்று சந்தித்த போது, அவர் சில சீடர்களுக்கு மத்தியில் அமர்ந்து இருந்தார். எந்த வித முன்யோசனையும் இல்லாமல், நான் அவரது காலடியில் விழுந்து வணங்கினேன். “மக்கள் முன்னிலையில் வணங்குவது முக்கியமில்லை. தரையில் விழுந்து வணங்குவது முக்கியமில்லை. மனதளவில் வழிபடுவதே போதுமானது,” என்று அவர் கூறியிருந்தாலும், அந்த தினத்தில் இருந்து, அவர் மகாசமாதி அடைந்த நாள் வரை, சுவாமியை தரிசிக்க சென்ற போதெல்லாம், அவரை வழிபடவும் செய்தேன். §§

ஒரு நாள் சுவாமி என்னை அழைத்து, “எந்த செயலை கடவுளால் செய்ய முடியாது?” என்று கேட்டார். அந்த கேள்வியை கேட்டதும், எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. கடவுள் சர்வவல்லமை படைத்தவராக இருக்கிறார் என்றால், அவரால் முடியாதது என்று ஏதாவது இருக்கிறதா என்ன? “நீங்கள் இப்போது பதில் அளிக்க வேண்டாம். இரண்டு நாட்கள் கழித்து வரும் போது, பதில் அளித்தால் போதும்,” என்று அமைதியாக கூறினார். நான் வீடு திரும்பிய போது, அந்த கேள்வி எனது மனதில் எதிரொலித்துக்கொண்டு இருந்தது. என்னால் வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை. அப்போது மகாபாரதத்தில் படித்த ஒரு பகுதி, என் நினைவுக்கு வந்தது. போரை எப்படி தவிர்ப்பது என்று கிருஷ்ணர் கேட்ட போது, “நான் உங்களை கட்டி வைத்தால், இந்த போரை தவிர்க்க முடியும்,” என்று சகாதேவன் பதில் அளித்தான். “என்னை கட்டி வைப்பதா? அது எப்படி சாத்தியமாகும்?” என்று கிருஷ்ணர் கேள்வி கேட்டார். அதற்கு சகாதேவன், “அன்பின் சங்கிலியால், எனது இறைவனை என்னால் கட்டி வைக்கமுடியும்,” என்று பதில் அளித்தான். இது சுவாமியின் கேள்விக்கு பொருத்தமான பதிலாக இருக்கும் போல் தோன்றியது. §§

இரண்டு நாட்கள் கழித்து, நான் யோக சுவாமியை பார்க்க சென்றபோது, “ஒரு பக்தனின் அன்பில் கடவுள் சிறைப்பட்டு இருக்கும் போது, அவரால் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது,” என்று பதில் அளித்தேன். அதைக்கேட்ட சுவாமி, “அது எப்படி சாத்தியம் ஆகும். அன்பும் கடவுளும் வெவ்வேறாக இருந்தால் தான் உங்களால் கடவுளை கட்டி வைக்க முடியும். கடவுளை அன்பில் இருந்து பிரிக்க முடியாது. அன்பு தான் கடவுள்,” என்று கூறினார். அவர் மேலும், “நம்மிடம் இருந்து கடவுளால் தம்மை பிரித்துக்கொள்வது இயலாத காரியம். அவரால் ஒரு கணத்திற்கும் நம்மை விட்டு பிரிந்து இருக்க முடியாது,” என்று கூறினார். இந்த உத்தியின் மூலம் எனது குரு, கடவுளால் நம்மை விட்டு ஒரு நொடியும் பிரிந்து இருக்க முடியாது என்றும், அவர் நமக்குள் ஆன்மாக்களின் பரமாத்துமாவாக எப்போதும் இருக்கிறார் என்பதையும், என் மனதில் பதிய வைத்தார். அதன் பிறகு சுவாமி எனது கடவுளாக இருந்ததால், என்னிடம் இருந்து பிரிக்க முடியாத கடவுளாக அவர் இருக்கிறார் என்ற உண்மையின் மீது தியானம் செய்ய தொடங்கினேன். சுவாமியின் ஆசியை பெறும் நாட்டத்தில், ஒருவன் அவருக்கு முன்பாக மாட்டு சாணம் மொழுகிய தரையில் விழுந்தது வணங்கும் போது, “பார், நான் வணங்குவதை பார்,” என்று அவர் அடிக்கடி சொல்வார். §§

இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில், ஒரு சிறுவனாக இருந்த நாகேந்திரன் என்ற அன்பர், கொழும்பிற்கு அருகில் இருந்த தனது மாமனின் வீட்டிற்கு, சிவயோக சுவாமி மதிய உணவு சாப்பிடுவதற்காக வந்த அனுபவத்தை பற்றி இங்கே விளக்குகிறார். அவர் உலகமே போரில் மூழ்கி இருந்த அந்த கடினமான காலத்தில் இருந்த சூழ்நிலையை பற்றிய ஒரு விளக்கத்துடன் தொடங்குகிறார். §§

இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு இடையேயான பெரும் போர் 1938 ஆம் ஆண்டில் தொடங்கி இருந்தது. ஜெர்மனிக்கு எதிரான போரில் இங்கிலாந்துடன் பிரான்ஸ் மற்றும் ரஷ்யா சேர்ந்துக்கொண்டது. செக்கோஸ்லோவாக்கியா, போலந்து, ஹாலந்து, நார்வே, சுவீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் மீது ஜெர்மனி மற்றும் இத்தாலி படை எடுத்தது. இங்கிலாந்தும் அதன் நேச நாடுகளும், தங்களையும் மற்ற ஐரோப்பிய நாடுகளையும் காப்பாற்றிக்கொள்ள, ஒரு கடினமான தற்காப்பு போரில் சண்டையிட்டு கொண்டிருந்தன. §§

இங்கிலாந்து மற்றும் அதன் நேச நாடுகளுடன் சேர்ந்து போரிடுவதற்கு, ஆஸ்திரேலியா மற்றும் கனடா தனது படைகளை அனுப்பியிருந்தது. இந்த போரில் உதவி செய்ய, இங்கிலாந்தின் குடியிருப்பாக இருந்த இந்தியா, இலங்கை, மடகாஸ்கர் மற்றும் ஆப்ரிக்காவில் இருந்த மற்ற குடியிருப்புக்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டன. முரட்டுத்தனமாக நடந்த போர்கள் மற்றும் நேச நாடுகள் படைகளின் முறியடிப்புக்கள், சிலோனின் தினசரிகளில் தலைப்புச் செய்திகளாக இருந்தன. எனக்கு தெரிந்த வரை, சிலோனில் இங்கிலாந்திற்கு முழுமையான ஆதரவு இருந்தது. ஹிட்லர் மற்றும் முசோலினி எல்லோராலும் வெறுக்கப்பட்ட பெயர்களாக இருந்தன. போர்களை பற்றி கலந்துரையாடி ஆய்வு செய்ய, கொழும்பிற்கு அருகில் கொல்பெட்டியில் இருந்த எங்கள் வீட்டு திண்ணையில், தினமும் மாலை நேரத்தில், என் தந்தையும் அவரது நண்பர்களும் சந்தித்து வந்தனர். அப்போது தான் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் மீது அமெரிக்கா போர் அறிவித்து இருந்தது மற்றும் அது இங்கிலாந்து மற்றும் அதன் நேசநாடுகளுடன் சேர்ந்து போரிடுவதற்காக, ஐரோப்பாவிற்கு ஜெனரல் ஐசனாவரின் தலைமையில் படைகளை அனுப்பி இருந்தது. §§

எனது தந்தை நண்பர்களிடம், “அமெரிக்கா போரில் நுழைந்து விட்டது. இனி அதன் ஆற்றல்மிக்க படைகள், ஜெர்மனி மற்றும் அச்சு நாடுகளின் கூட்டணியை வீழ்த்தி விடும்,” என்று கூற, அதை அவர் நண்பர்களும் ஆமோதித்தனர். ஆனால் அந்த போரால் சிலோன் பெருமளவு பாதிக்கப்படவில்லை. ஏழு-எட்டு வயது சிறுவர்களாக இருந்த நாங்கள், பின்னால் திரைமறைவில் இருந்துக்கொண்டு, பெரியவர்கள் பேசும் இந்த விவாதங்களை, மிகவும் கவனமாக கேட்டுக்கொண்டு இருந்தோம். §§

எனது மாமா இராமநாதன் சைவ உணவு உண்ணும் பழக்கமுடையவர். அவர் வீட்டு வரவேற்பறையில் இந்து துறவிகளின் சுருக்கமான மற்றும் ஆற்றல்மிக்க வாசகங்களை அடக்கிய பெரிய, பச்சை நிற தமிழ் எழுத்து பிரதிகள் சட்டகம் செய்ப்பட்டு தொங்கிக்கொண்டு இருந்தன. “இறைவனிடம் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், அவரிடம் இருந்து என்றுமே விலகி செல்லக்கூடாது,” என்று அதில் ஒரு எழுத்துப்பிரதி குறிப்பிட்டது. நான் அங்கே சென்ற போது, எனது மாமாவும் மற்ற பெரியவர்களும், யோக சுவாமியை பற்றி அமைதி மற்றும் மரியாதை கலந்த குரல்களில் பேசினார்கள். §§

நான் என் மாமா வீட்டிற்கு சென்றிருந்த போது, யோக சுவாமியை முதல் முறையாக பார்த்தேன். யோகர் சராசரி உயரம் மற்றும் நல்ல உடல் வாகுடன் இருந்தார். அகன்ற நெற்றியில் இருந்து, பின்னோக்கி சென்ற நீளமான நரைத்த முடி, அவரது தலைக்கு பின்னால் முடிந்து விடப்பட்டு இருந்தது. அவர் கழன்று கொள்ளும் தனது தலைமுடியை எப்போதாவது அவிழ்த்து, மீண்டும் உறுதியாக கட்டி வைப்பார். வழக்கமாக தெய்வீக புருஷர்கள் பூசி இருக்கும் திருநீறு, அவரது நெற்றியிலோ அல்லது உடலிலோ தென்படவில்லை. அவரது கழுத்தை உருத்திராட்ச மாலை அல்லது மலர்மாலைகள் அலங்கரிக்கவில்லை. அவர் எளிமையாகவும் அலங்காரம் இல்லாமலும் இருந்தார். இந்த எளிமையின் முக்கியத்துவம் எனக்கு பிற்காலத்தில் தெரிய வந்தது. §§

அவர் வருகை தரும் போது, அவருக்கும் எனது மாமா அழைப்பு விடுத்திருந்த அன்பர்களுக்கும் மதிய உணவு பரிமாறப்படும். பெரிய வரவேற்பறையின் தரையில் கோரை பாய்கள் சதுர வடிவில் விரிக்கப்பட்டு இருக்கும். முதலில் சுவாமிக்கு ஒரு வாழை இலை வைக்கப்பட்டு, பின்னர் அன்பர்களுக்கு வைக்கப்படும். அந்த இலைகளில், மிளகாய் அல்லது மற்ற காரமான சுவையூட்டிகள் இல்லாத சுத்தமான காய்கறிகளுடன், வெள்ளை நிறத்தில் ஆவி பறக்கும் சாதம் பரிமாறப்பட்டன. யோகர் முதலில் தனது இலையில் சில தண்ணீர் துளிகளை தெளித்து, முறைப்படி மந்திரங்கள் ஓதி உணவை சாப்பிட ஆரம்பிப்பார். அவர் சாப்பிட்ட ஆரம்பித்த பிறகே, மற்ற அன்பர்கள் சாப்பிட ஆரம்பிப்பார்கள். §§

அவர் விரைவாக ஒரு சில நிமிடங்களில் சாப்பிட்டு முடித்து விடுவார். அவர் அதன் பிறகு அந்த இடத்தில் இருந்து எழுந்து, வெளியே இருந்த தோட்டத்திற்கு, ஒரு வெங்கல பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து சென்று, கையை அலம்பிக்கொள்வார். இதற்கிடையில் அன்பர்களும் சாப்பிட்டு முடித்து தங்கள் கைகளை அலம்பிக்கொள்வார்கள். நாங்கள் எப்போதும் கைகளை அலம்பிக்கொண்டு, பாரம்பரிய முறைப்படி, கைகளை கொண்டு சாப்பிட்டோம். நாங்கள் உணவு சாப்பிடுவதற்கு எப்போதும் கரண்டி மற்றும் முள்கரண்டியை பயன்படுத்தியது இல்லை. §§

அந்த பிறகு அந்த அறையில் சுத்தம் செய்யப்பட்டு நன்றாக பெருக்கப்படும். யோகர் ஒரு பாயில் அமர்ந்து கொள்வார் மற்றும் அவரது மெய்யறிவு போதனைகளை கேட்க, அவரை சுற்றி அன்பர்கள் அமர்ந்து கொள்வார்கள். அத்தகைய பிரசங்கங்கள் சுருக்கமாக இருந்தன, மற்றும் அவர் சிறிது நேரம் கழித்து திடீரென்று கிளம்பி சென்று விடுவார். அத்தகைய ஒரு வருகையின் போது, சிறுவர்களாக இருந்த நாங்கள் மாடியில் இருந்தோம். நாங்கள் கீழே வந்தால், அவர்களுக்கு தொல்லையாக இருப்போம் என்பதை நாங்கள் அறிந்து இருந்தோம். நாங்கள் மாடியில் இருந்தால், எங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் இருக்காது. எங்களுக்கு இந்த நடவடிக்கை தான் பொருத்தமானது மற்றும் தேவையானது என்பதை நாங்கள் அறியும் அளவிற்கு, அந்த சூழ்நிலை விஷேசமானதாக இருந்தது. §§

யோக சுவாமி அனைத்து மதங்களையும் மதித்து, மற்ற நம்பிக்கைகளை பற்றி விமர்சிக்காவிட்டாலும், தமிழ் சைவர்களுக்கு மத்தியில் சைவ சமய கோட்பாடுகளை காப்பாற்றி ஊக்குவிப்பதில் உறுதியாக இருந்தார். இது தொடர்பாக Dr. எஸ். இராமநாதனின் கருத்து: §§

சைவ சமயத்தின் சடங்குகள் மற்றும் அதன் வழிபாட்டு முறைகளை சுவாமி தீவிரமாக கடைப்பிடித்து வந்தார். கோயில்கள் மற்றும் வீடுகளில் முறையாக பூஜைகளை செய்து, திருவிழாக்களில் பக்தி மற்றும் சிரத்தையுடன் கலந்து கொண்டால், அந்த செயல்கள் அந்த தனிநபர் மற்றும் உலகம் முழுவதற்கும் நன்மைகளை செய்கின்றன என்று அவர் கற்றுத்தந்தார். இது தொடர்பாக சுவாமி பின்வரும் சம்பவத்தை நினைவுகூர்ந்தார். யாழ்ப்பாணத்தில் டைக் என்ற ஒரு அரசாங்க பிரதிநித இருந்தார். அவர் வறட்சி காலத்தில், பூநகரி சென்றார். அங்கே நீர்பாசன வசதிகள் எதுவும் இல்லை. அவர் ஊர் மக்களிடம், “நீர்பாசனம் இல்லாமல், நீங்கள் எவ்வாறு சாகுபடி செய்கிறீர்கள்?” என்று கேட்டார். கூட்டத்தில் ஒருவர், பிள்ளையார் கோயிலை காண்பித்து, “நாங்கள் பிள்ளையாரை வணங்கினால், மழை வரும்,” என்று கூறினார். அந்த கோயில் பூசாரி குளித்து விட்டு, சடங்கு சார்ந்த அனைத்தையும் பின்பற்றி, கோயிலுக்கு சென்று மழையை வேண்டி வழிபட்டார். அதன் பிறகு பெய்த பெரிய மழையில், அந்த ஊரே வெள்ளக்காடனது. டைக் தண்ணீர் வடிவதற்கு மூன்று நாட்கள் காத்து இருந்தார். அதன் பின்னரே அவரால் யாழ்ப்பாணம் திரும்ப முடிந்தது. §§

சைவ சமயத்தை வலுப்படுத்துதல் §

சுவாமி பாரம்பரிய பழக்கங்களை முறையாக கடைபிடிப்பதை ஊக்குவித்து புத்துணர்வு வழங்க கடுமையாக உழைத்தார். அவரது ஆசிரமத்தில், அந்தி சாயும் நேரத்தில் பெரும்பாலும், மங்களகரமான குத்து விளக்கு ஏற்றப்பட்டு இருக்கும் மற்றும் அவருக்கு முன்பாக மாட்டு சாணம் மொழுகிய தரையில் அரைவட்ட வடிவில் அன்பர்கள் அவரை பார்த்து உட்கார்ந்து, சில சமயங்களில் திருமுறை போன்ற உரைகளில் இருந்தும், மற்றும் வேறு சில சமயங்களில் அவரது நற்சிந்தனை பாடல்களில் இருந்தும் தெய்வீக பாடல்களை சத்தமாக பாடுவார்கள். எல்லா குழந்தைகளும், குறிப்பாக இசையை கற்கும் அனைவைரும், பழங்கால பாடல்களை கற்கவேண்டும் என்று சுவாமி வலியுறுத்தினார். “ஆற்றல்மிக்க திருமுறையை படித்து பாடாமல், மற்ற சாதாரண பாடல்களை பாடுவதில் என்ன பயன்?” என்று அவர் சவால் விட்டார். ச. அம்பிகைபாகன் வழங்கும் குறிப்பு: §§

சைவ சமயத்தை ஊக்குவிக்க சுவாமி தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட பல நடவடிக்கைகளில், சைவ சித்தாந்த தத்துவ வகுப்புகள் நடத்துவது மற்றும் திருமுறையை முறையாக பாராயணம் செய்வதற்கு பயிற்சி வகுப்புகள் நடத்துவது மற்றும் புராண காலத்து பாடல்கள் மற்றும் கதை சொல்லுதலை கற்றுத்தந்து, அதற்கு புத்துயிரை வழங்குவதும் அடங்கும். சுவாமி கோயில்கள் மற்றும் ஆசிரமங்களில் புராணங்களை தொடர்ந்து படித்து வரவேண்டும் என்று விரும்பினார். கந்தபுராணம் மற்றும் பெரியபுராணத்தை வாசிப்பதால், தமிழ் சமூகத்தை வருத்தும் இன்னல்கள் அனைத்தும் மறைந்துவிடும் என்று சுவாமிகள் கூறி வந்தார். §§

எல்லோரும் சைவத்துறவிகளை பின்பற்றுவதை ஊக்குவிக்க, சுவாமி மேற்கொண்ட இன்னொரு வழியைப் பற்றி வி. முத்துகுமாரசுவாமி நினைவுக்கூர்கிறார்: §§

1945 வருடம் வாக்கில், வண்ணார்பண்ணையின் வைத்தீஸ்வர வித்தியாலயத்தை, சுவாமி விபுலானந்தா உயிர்ப்பிக்க விரும்பிய போது, முதல் நன்கொடையாக யோக சுவாமி ஒரு ரூபாயை வழங்கி, அந்த திட்டத்திற்கு தனது ஆசிகளையும் வழங்கினார். ஒரு பெரிய ஆலமரமாக வளர்ந்துள்ள இந்த கல்வி நிறுவனத்தின் நிழலில், பல மாணவர்கள் வலுவான சமய அடிப்படையுடன் ஒரு முழுமையான கல்வியை கற்று வருகிறார்கள். மக்களை நான்கு சைவ சமய குரவர்களின் நேர்மையான நோக்கங்களை பின்பற்ற ஊக்குவித்து, அதன் மூலம் இந்து சமயத்திற்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்று சுவாமி விரும்பினார். மேலும் அவர் வண்ணார்பண்ணை சிவன் கோயிலின் கதவுகள் மிகவும் தாழ்ந்தப்பட்ட சமுதாயத்திற்கு திறக்கப்பட்டதை கேள்விப்பட்டதும் பெருமகிழ்ச்சி அடைந்தார். §§

கொழும்பில் எஸ். சண்முகசுந்தரம் தனது அனுபவத்தை பகிர்கிறார்:§§

ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் ஒரு முறையான பூஜை அறை இருப்பது முக்கியம் என்று சுவாமி வலியுறுத்தினார். புதிதாக கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புதிய மற்றும் பிரத்யேகமான பூஜை அறையை சேர்க்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். இந்த சிறிய அறிவுரை திரு. வைரமுத்து மனதில் நன்றாக பதிந்து இருந்தது. 1932 ஆம் ஆண்டில், கொழும்பில் தனக்கும் தனது குடும்பத்திற்கும் புதிய வீட்டை கட்டும் போது, தனது வீட்டின் மத்தியில் ஒரு பெரிய அழகான பூஜை அறையை சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். §§

அந்த வீடு காலப்போக்கில் கட்டி முடிக்கப்பட்டது, மற்றும் அவர் அந்த புதிய வீட்டிற்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் குடிபுக இருந்தார். அவர் அந்த தேதியில் மாலை 6 மணியளவில் நடக்கவிருந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பல நண்பர்கள் மற்றும் சொந்தங்களை அழைத்து இருந்தார். சுமார் 3 மணியளவில் அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து இருந்தன மற்றும் திரு. வைரமுத்து தனது வீட்டின் முன்பாக அமர்ந்து கொண்டு, “தற்போது சிவயோக சுவாமி இங்கே வந்து, வீட்டை ஆசிர்வதித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்,” என்று மனதில் நினைத்துக்கொண்டு இருந்தார். §§

என்ன அதிசயம்! அவர் அவ்வாறு நினைத்துக்கொண்டு இருக்கும் போது, வீட்டின் முன்பாக ஒரு வாகனம் வந்து நின்றது மற்றும் அதில் இருந்து யோக சுவாமி வெளிவந்தார். திரு. வைரமுத்து வாகனத்தை நோக்கி ஓடி சென்று, சுவாமியை வரவேற்று தனது வீட்டிற்குள் அழைத்து சென்றார். “என்னிடம் அதிக நேரம் இல்லை. நான் இந்த வழியாக சென்று கொண்டு இருந்த போது, வீட்டை சில நிமிடங்கள் பார்த்துவிட்டு செல்லலாம் என்று மனதில் தோன்றியது. வீட்டின் பூஜை அறையை நான் பார்க்க வேண்டும், அது எங்கே இருக்கிறது?” என்று சுவாமி கேட்டார். அவர் பூஜை அறைக்கு அழைத்து செல்லப்பட்டார், மற்றும் அங்கிருந்து அவர் வீடு முழுவதற்கும் தனது நல்லாசிகளை வழங்கினார். அவர் விநாயகர், முருகன் மற்றும் சிவபெருமானுக்கு கற்பூர ஆரத்தியை காண்பித்து, தனக்கு வழங்குவதற்கு பிரசாதம் ஏதாவது இருக்கிறதா என்று திரு. வைரமுத்துவிடம் கேட்டார். திரு. வைரமுத்து தன்னிடம் இருந்த அனைத்தையும் வழங்கினார், ஆனால் சுவாமி ஒவ்வொரு பண்டத்தில் இருந்தும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, “நான் வந்த வேலை முடிந்தது,” என்று கூறி பூஜை அறையையும் வீட்டியையும் விட்டு கிளம்பி, வாகனத்தில் ஏறி புறப்பட்டார்.§§

விலங்குகளை பலி கொடுக்கும் சடங்கை சுவாமி எதிர்த்தார். இந்த சடங்கு கிராமத்தில் இருந்த சிறிய கோயிலில் அன்றைய வழக்கமாக இருந்தது. அவர் அதற்கு எதிராக வாதாடி, எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தினார் என்பதையும் Dr. இராமநாதன் நினைவுக்கூர்கிறார். §§

எங்கள் கிராமத்து நெல் வயல்களுக்கு மத்தியில் ஒரு பழைய ஐயனார் கோயில் இருந்தது. அந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது, மக்கள் அதிக அளவில் விலங்குகளை பலியிடுவார்கள். ஆடுகளையும் சேவல்களையும் கொன்று, இந்த கிராமத்து காவல் தெய்வத்திற்கு காணிக்கையாக கொடுக்கப்பட்டன. ஒரு நாள் அனுநாகத்தில் இருந்து திரும்பிய சுவாமி, கோயிலில் பலியாக பெருமளவில் ஆடுகளும் சேவல்களும் வழங்கப்பட்டிருப்பதை குறிப்பிட்டு, “நான் உங்கள் கிராமத்தில் நிறைய சடலங்களை பார்த்தேன்,” என்று என்னை பார்த்து கூறினார். அந்த விலங்குகள் மற்றும் பறவைகள் மீது சுவாமிக்கு இருந்த இரக்கத்தின் சக்தி, இறுதியாக இந்த பலி வழங்கும் பழக்கத்தை நிறுத்தியது. அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தீவிரமாக எதிர்த்த பின்னரும், இந்த பழக்கத்தை நிறுத்த மறுத்த கோயில் நிர்வாகிகள், இப்போது தானாக முன்வந்து நிறுத்தியுள்ளனர். §§

சகிப்புத்தன்மை மற்றும் இரக்கம்§

சுவாமிக்கு முதுமையில் சுருட்டு புகைக்கும் பழக்கம் இருந்தாலும், அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததில்லை மற்றும் அவர் சைவ உணவை மட்டுமே சாப்பிட்டு வந்தார். இருந்தாலும், அவர் வாழ்க்கையின் மீது தார்மீக அணுகுமுறையை பயன்படுத்தவில்லை. இது தொடர்பாக ஒரு அன்பர் சில சம்பங்களை நினைவுக்கூர்கிறார்: §§

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மதுவிலக்கு போராட்டத்தில் பல அன்பர்கள் தீவிரமாக பங்குபெற்றார்கள். அதில் ஒரு அன்பர் ஒரு பெரிய மதுபானக் கடையை வைத்து இருந்து, அதில் வியாபாரமும் நடத்தி வந்தார். சுவாமி யாரையும் பாவம் செய்பவராக என்றுமே கருதவில்லை என்பதால், அவருக்கு இதில் தவறு எதுவும் தெரியவில்லை. சிவபெருமான் என்கிற சங்கிலியில் ஒன்றாக கட்டப்பட்டு இருக்கும் முத்துக்களாக சுவாமி அனைவரையும் கருதினார். இதைப்போல குடி பழக்கம் இருப்பவர்களையும் பிரித்து பார்க்கக்கூடாது என்பதை சுவாமிக்கு நெருக்கமான சீடர்களில் ஒருவர் தெரிந்துகொண்டார். §§

அந்த நபர் ஒரு பள்ளி முதல்வராக இருந்தார் மற்றும் அந்த பள்ளியின் வளர்ச்சிக்கு தாராளமாக உதவியவர்களுடன் மிகவும் நட்புடன் பழகினார். ஆனால் ஒரு தீவிரமான ஒழுக்கசீலராக இருந்ததால், தனது நண்பருக்கு அதிகமாக மதுபானம் குடிக்கும் பழக்கம் இருக்கிறது என்பதை அறிந்ததும், அவருடனான உறவுகளை துண்டித்துக்கொண்டார். ஆனால் தனது முன்னாள் நண்பர் பெருமளவு நன்கொடைகளை கொடுத்து கட்டிய ஒரு பள்ளிக்கு திறப்புவிழா ஏற்பாடு செய்யவேண்டிய தருணம் வந்த போது, அவர் செய்வதறியாது தவித்தார். தனது நண்பரை பற்றிய சிந்தனை தன்னை வருத்திக்கொண்டு இருக்க, அவர் சுவாமியை நாடி சென்றார். அவர் அந்த பள்ளி முதல்வரை வரவேற்று, “சரி நான் சொல்வதை கேளுங்கள். நமக்கு குடிகாரர்கள் சகவாசமும் தேவை. கெட்டவனாக கருதப்படும் ஒரு மனிதன் இடத்திலும், மகாத்மா காந்தியிடம் இல்லாத சில நற்குணங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் நாம் அத்தகைய நபர்களை நிராகரிக்காமல், அவர்களுடன் சகவாசம் வைத்துக்கொண்டு, யதார்த்தமாக பழக வேண்டும்,” என்று கூறினார். §§

மக்களை நல்லவர் அல்லது தீயவர் என்று பாகுபடுத்தக் கூடாது என்று சுவாமி தனது சீடர்களிடம் வேண்டிக்கொண்டார்: §§

எல்லோரையும் கடவுளாக பாருங்கள். “இவர் ஒரு திருடன். அவருக்கு பெண் ஆசை இருக்கிறது. அங்கிருப்பவருக்கு குடிப்பழக்கம் இருக்கிறது,”என்று சொல்லாதீர்கள். இவரும் கடவுள், அவரும் கடவுள் மற்றும் கடவுள் எல்லோரின் உள்ளும் விதையாக இருக்கிறார். அதை மட்டும் பார்த்து, மற்றத்தை பொருட்படுத்தாதீர்கள். நீங்கள் நல்லவரா கெட்டவரா? இந்த உலகில் யார் கெட்டவர்? இங்கே யாரும் கெட்டவர் இல்லை. எல்லோரும் நல்லவரும் இல்லாமல், கெட்டவரும் இல்லாமல் இருக்கிறார்கள். §§

யோக சுவாமி மக்களை எந்த வித பாகுபாடு இல்லாமல் ஏற்றுக்கொண்டாலும், சமூகத்தில் மதுபானத்தினால் ஏற்படும் தீமைக்கு எதிராக குரல் கொடுக்காமல் இல்லை. 1950 களில், சுவாமி மதுவிலக்கு சட்டங்களுக்கு ஆதரவாக தனது அன்பர்களை ஒன்று சேர்த்தார். §§

சுவாமியின் சகிப்புத்தன்மை மற்றும் கருணை நிறைந்த அணுகுமுறையை விளக்கும் வண்ணம், எஸ். சண்முகசந்தரம் இன்னொரு சம்பவத்தை பதிவு செய்கிறார். §§

ஒரு சுவாமியின் ஆசிரமத்தில் சுமார் இருபத்தி ஐந்து அன்பர்கள் கூடியிருந்தார்கள், மற்றும் அவர்கள் எல்லோரும் சுவாமி கூறிய கதைகளை கேட்டுக்கொண்டு இருந்தார்கள். அந்த கதைகள் ஆன்மீக ஞானத்தின் முத்துக்களை உள்ளடக்கி இருந்தன. அப்போது சுவாமி தனது அன்பர்களில் ஒருவர் சிறிது பதட்டத்துடன் இருப்பதை கண்டார். அவர் உடனே அந்த அன்பரை அழைத்து, கையில் எதையோ கொடுத்து, அங்கிருந்து கிளம்பலாம் என்று கூறினார். அந்த நபர் ஆனந்தமாக சிறிது கூச்சத்துடன் அங்கிருந்து கிளம்பினார். §§

“அவர் ஒரு சட்ட வழக்கறிஞர் மற்றும் ஒரு நல்ல சீடரும் கூட. அவர் துரதிஷ்டசமாக மதுபானத்திற்கு அடிமையாகிவிட்டதால், தினமும் மாலையில் மதுபானம் குடிக்கும் பழக்கம் அவருக்கு இருக்கிறது. மதுபானக்கடை ஆறு மணிக்கு மூடிவிடும் என்பதாலும், அவர் தனது வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த கடை மூடுவதற்கு முன்பாக திரும்புவது கடினம் என்பதாலும் பதட்டத்தில் இருந்தார். அதனால் நான் அந்த நபருக்கு தேவையான பணத்தை கொடுத்து, சரியான நேரத்தில் அனுப்பி வைத்தேன். அவர் மதுபானம் குடிக்கவில்லை என்றால், அவரால் சாப்பிடவோ உறங்கோ முடியாது,” என்று மீதம் இருந்த சீடர்களிடம் சுவாமி கூறினார். §§

தனது சீடர்கள் மீது சுவாமிக்கு இருந்த அன்பு மற்றும் அக்கறைக்கு இது ஒரு உதாரணமாக விளங்குகிறது. அவருக்கு ஒரு இரக்க குணமுள்ள இதயம் இருந்தது மற்றும் அவர் ஒருவரை திருத்துவதற்கு முன்பாக, தனது மென்மையான கவனம் மற்றும் அக்கறையின் மூலம் அவர்களின் அன்பு மற்றும் மரியாதைக்கு பாத்திரமாகி விடுவார். அவர் அன்பர்களை மந்திரம் மற்றும் லௌகீக பரிசுகளால் ஈர்க்காமல், அன்பு மட்டும் இரக்கத்தால் ஈர்த்தார். §§

சுவாமி தனது நற்சிந்தனையில் “யாரையும் ஒரு பாவி என்று அழைக்காதே" என்ற பாட்டிலில் தனது கண்ணோட்டத்தை தெரிவிக்கிறார்:§§

யாரையும் ஒரு பாவி என்று அழைக்காதே!§

அந்த பரம்பொருள் நீ காணும் இடமெல்லாம் இருக்கிறார்.§

அவரை வரவழைக்க தொடர்ந்து பாடிக்கொண்டும் வணங்கிக்கொண்டும் இரு.§

ஒரு குழந்தை போல உனது வழிபாட்டை வழங்கு.§

கோபம் மற்றும் பொறாமை அனைத்தையும் கைவிடு;§

காமம் மற்றும் சபிக்கப்பட்ட மதுவை தவிர்த்திடு.§

தவம் செய்வோருடன் இணைந்திருந்து,§

ஆன்மாவின் மூலம் ஆத்ம ஞானம் பெற்ற சிறந்த ஆன்மாக்களுடன் ஒன்று சேர்ந்திடு.§§

image§

பக்தி நிறைந்த ஒவ்வொரு இந்து குடும்பமும் தங்கள் வீட்டிற்கு சற்குரு ஒரு நாள் வந்து சாப்பிடுவார் என்று நம்பி இருக்கிறார்கள் மற்றும் தங்கள் வீட்டிற்கு சுவாமி எந்த சமயமும் வரலாம் என்று யோக சுவாமியின் சீடர்கள் எப்போதும் தயாராக இருந்தனர். மிகவும் நன்றாக சமையல் செய்த ஒரு சில தாய்மார்களின் வீட்டிற்கு, அடிக்கடி செல்வதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

எஸ். சண்முகசுந்தரம் வழங்கும் கதையில் இருந்து, யாழ்ப்பாண மக்களிடம் அவருக்கு இருந்த பரிச்சயம் மற்றும் மனிதநேயம் முழுவதையும் அவர் ஏற்றுக்கொண்டதையும் பற்றி விவரிக்கிறது. §§

யோக சுவாமிக்கு நெருக்கமான ஒரு அன்பர், சுவாமியை தரிசிக்க அவரது குடிசைக்கு சென்றார். சுவாமி அவரை உள்ளே அழைத்து உட்கார வைத்து, அவர் வாகனத்தில் வந்து இருக்கிறாரா என்று கேட்டார். அந்த அன்பர் தான் வாகனத்தில் தான் வந்துள்ளதாக கூறியதும், யோக சுவாமி, “சரி, உங்கள் வாகனத்தில் ஒரு சிறு பயணம் சென்று வரலாம்,” என்றார். அவர் வாகனத்தில் ஏறி, அந்த அன்பரிடம் தெற்கு நோக்கி செல்லுமாறு கூறினார். பத்து மைல் தூரம் சென்ற பிறகு, சுவாமி அந்த அன்பரை ஒரு குறிப்பிட்ட தெருவில் செல்லுமாறு கூறினார். நான்கு மைல் தூரம் சென்ற பிறகு, சுவாமி, “உங்கள் வீடு இங்கே தான் இருக்கிறது. நாம் உங்கள் வீட்டிற்கு சென்று, நோயுற்று இருக்கும் உங்கள் மனைவியை பார்க்கலாம்,” என்று கூறினார். §§

அந்த அன்பர் ஆச்சரியம் அடைந்தார். அந்த அன்பரின் வீட்டிற்கு சுவாமி எப்போதும் வந்தது இல்லை, மற்றும் அவரும் தான் இங்கே வசிக்கிறார் என்பதை சுவாமியிடம் தெரிவிக்கவில்லை. அவர் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்பது சுவாமிக்கும் தெரியாது. என்ன அதிசயம், சுவாமி வாகனம் நிறுத்த சொல்லிய இடம், அவரது வீடாக இருந்தது. பிரமிப்பு மற்றும் மரியாதையுடன், அந்த அன்பர் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி சுவாமியை வீட்டிற்குள் அழைத்து சென்றார். அவர் மனைவி படுத்த படுக்கையாக இருந்தார், அதனால் சுவாமி அவள் அறைக்குள் சென்று, நோயாளியை கூர்ந்து கவனித்து, அவளுடன் சில நிமிடங்கள் பேசினார். சுவாமி வெளியே வந்ததும், ஒரு வார்த்தையும் பேசவில்லை, மற்றும் அன்பரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. §§

அந்த சமயத்தில், வீட்டின் பின்புற தோட்டத்தில் இருந்து ஒருவர் ஏதோ கூச்சலிட்டார். சுவாமி அவர் யார் என்று கேட்டார். “அது என் மாமனாரின் குரல், சுவாமி. அவர் ஒரு விசித்திரமான மனிதன். அவருக்கு மதத்திலும் தர்மத்திலும் ஈடுபாடு இல்லை. அவர் சுயநலத்துடன் செயல்பட்டு, எப்போதும் பொருள் ஈட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்,” என்று அந்த அன்பர் பதில் அளித்தார். §§

அதை கேட்ட சுவாமி, “இந்த உலகம் சிவபெருமான் தனது நெஞ்சில் அணிந்து இருக்கும் ஒரு ஆபரணத்தை போன்றது. அந்த ஆபரணம் மாணிக்கம், வைரம், நீலக்கல் மற்றும் பச்சைக்கல் போன்ற பல்வேறு கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதில் சில வெள்ளையாகவும் சில வேறுசில நிறங்களிலும் இருக்கலாம். சில கற்கள் பிரகாசமாக இருக்கும் மற்றும் சில அவ்வளவு பிரகாசமாக இருக்காது. ஆனால் அனைத்து கற்களும் ஒன்றாக சேர்ந்து ஒரு அழகான ஆபரணமாக உருவாகிறது. அதைப்போன்று, ஆபரணத்தில் இருக்கும் கற்களை போல, பூமியில் இருக்கும் மக்களும் ஒன்று போல இருக்க முடியாது. அனைவரும் நல்லவர்களாக இருந்தால், உலகத்தால் இயங்க முடியாது. அதனால் உங்கள் மாமனாரின் அணுகுமுறையில் தவறு ஒன்றும் இல்லை,” என்று குறிப்பிட்டார். அவர்கள் திரும்பி செல்லும் போது, சுவாமி அந்த அன்பரிடம், அவர் மனைவியின் உயிர் மூன்று வருடம் கழித்து பிரியும் வரை, அவள் படுத்த படுக்கையாகவே இருப்பாள் என்று குறிப்பிட்டார். §§

“நான் யோக சுவாமியை சந்தித்த அந்த நாள்”§

1950 களின் இறுதியில், கொழும்புவை சேர்ந்த சிங்கள பெளத்த சமயத்தை சேர்ந்த சாம் விக்ரமசிங்கே, யாழ்ப்பாணத்தில் இருந்த, ஒரு மூத்த தமிழ் நண்பருடன் யோக சுவாமியை சந்திக்க வந்தார். ஒரு உண்மையான சாதகராக இருந்த சாம், யோக சுவாமியை பற்றி நிறைய அறிந்து இருந்தாலும், அவரை சந்தித்தது இல்லை. கொழும்பில் கடற்கரை ஓரமாக நடந்து சென்ற போது, சாம் தனது புதிய நண்பரை சந்தித்தார். அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதும், அந்த பெரியவர் யோக சுவாமியை பற்றி அதிக உற்சாகத்துடன் பேச ஆரம்பித்து, “இந்த தீவில் வசிக்கும் எங்கள் முனிவரை பார்க்க முயலாதது அதிர்ச்சி தருவதாக இருக்கிறது” என்று யோக சுவாமியை சந்திக்காததற்காக கடிந்து கொண்டார். அவர் சாம் யாழ்ப்பாணம் வருவதற்கான இரயில் செலவை ஏற்பதாக கூறி, தெல்லிப்பழையில் இருந்த தனது வீட்டில் தாராளமாக தங்கலாம் என்று அழைப்பு விடுத்தார். சாம் 1970 ஆம் வருடத்தில், சுசுநாக வீரபெறுமா என்ற புனைப்பெயரில் ஹோமேஜ் டூ யோக சுவாமி என்ற தலைப்பில் எழுதிய ஒரு சிறிய புத்தகத்தில், இந்த அனுபவத்தை பற்றி விவரிக்கிறார். §§

இந்து சமயத்தில் அதிக பற்றுடன் இருந்த எனது நண்பர், யோக சுவாமியை சந்திப்பதற்கு முன்பாக, நான் என்னை சுத்தப்படுத்திக் கொள்வது அவசியம் என்று முழுமையாக நம்பி இருந்தார். சூரிய உதயத்திற்கு முன்பாக காலை வேளையில், அவர் மனைவி இந்து சாஸ்திரங்களில் இருந்து சில கீர்த்தனைகளை பாடுவார். சில கோயில்களில் நுழைவதற்காக எனது உடலில் சந்தனமும் திருநீறும் தாராளமாக பூசப்பட்டன மற்றும் நான் அடிக்கடி ஒரு வெள்ளை வேட்டியை அணியவேண்டி இருந்தது. இந்த சடங்குகளில் எனக்கு சமய அல்லது ஆன்மீக முக்கியத்துவம் எதுவும் தெரியவில்லை, ஆனால் இந்த மந்தமான மற்றும் புனிதமான நிகழ்வுகளுக்கு, அவை ஒரு தெளிவை வழங்குவதாக எனக்கு தோன்றுகிறது. §§

பல வாரங்கள் கழிந்தன, எனது நண்பர் வழங்கிய தாராள உபசரிப்பில் நான் ஆனந்தமாக இருந்தாலும், பல நாட்களாகியும் யோக சுவாமியை சந்திக்க முடியாததால், பதட்டத்தை உணர தொடங்கினேன். யோக சுவாமியிடம் ஒரு நேர்காணலை நடத்துவதற்கு, ஒருவர் தன்னை தயார்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என்ற தனது உறுதிப்பாட்டில் எனது நண்பர் சிரத்தையுடன் இருந்தது எனக்கு பின்னர் தெரிய வந்தது. சுமார் ஒரு மாதம் முடிவடைந்து இருந்தது, மற்றும் எப்போது கொழும்பு செல்வது என்ற ஏக்கத்தில் நான் இருந்தேன். §§

யோக சுவாமியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு விரைவாக குறைந்து கொண்டு இருந்தது, மற்றும் அவரை சந்திக்காமல் யாழ்ப்பாணத்தில் இருந்து கிளம்பலாம் என்று இறுதியாக முடிவு செய்தேன். நான் எடுத்த முடிவை பற்றி எனது நண்பரிடம் சொன்ன போது, அவர் வெற்றி களைப்புடன் புன்னகைத்தார். “சரி, சரியான தருணம் வந்துவிட்டது. நீங்கள் அவரை சந்திக்கும் ஆர்வத்தை இழந்து கொண்டு இருப்பதால், நீங்கள் அவரை தரிசிக்க தகுந்த நிலையில் இருக்கிறீர்கள். நாம் நாளை செல்லலாம்.” எங்கள் சந்திப்பிற்கு காலை நேரம் உகந்ததாக இருந்ததால், அடுத்த நாள் விடியற்காலையில் யோக சுவாமியை சந்திக்கலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். §§

உயரமான மற்றும் அழகான பனைமரங்களை அசைத்த மென்மையான காற்றினால் உருவான சலசலப்பு சத்தங்களை தவிர, அன்றைய காலை பொழுது குளுமையாகவும் அமைதியாகவும் இருந்தது. நாங்கள் குறுகலான புழுதி படிந்த சாலைகள் வழியாக அமைதியாக நடந்து சென்றோம். அந்த நகரம் இன்னும் உறக்கத்தில் இருந்தது. யாழ்ப்பாணத்திற்கு வெளியே சுவாமிக்காக பிரத்யேகமாக ஒரு வீட்டின் தோட்டத்தில், சிறியதாக ஓலை வெய்த கூரையுடன் கட்டப்பட்ட குடிசையை நாங்கள் நெருங்கினோம். நான் கற்பனை செய்ததை போலவே யோக சுவாமி இருந்தார். அவர் 83 வயதில், அதிக வயதானவராகவும் மெலிந்தும் காணப்பட்டார். அவர் சராசரி உயரத்துடன் இருந்தார், மற்றும் நீளமான நரைத்த முடி, அவரது தோளின் மீது பரவியிருந்தது. நாங்கள் அவரை முதல் முறையாக பார்த்த போது, அவர் தோட்டத்தை ஒரு பெரிய துடப்பம் கொண்டு பெருக்கிகொண்டு இருந்தார். அவர் எங்களை நோக்கி மெதுவாக நடந்து வந்து கதவுகளை திறந்தார். §§

“நான் ஒரு கூலியின் வேலையை செய்துக்கொண்டு இருக்கிறேன், நீங்கள் எதற்காக ஒரு கூலியை பார்க்க வந்து இருக்கிறீர்கள்?” என்று கூறிய சுவாமி, குறும்புத்தனமாக தனது கண்களை சிமிட்டிக்கொண்டு அமைதியாக சிரித்தார். அவர் ஒரு அருமையான உச்சரிப்புடன் ஆங்கிலத்தில் நன்றாக பேசியதை கவனித்தேன். அவரது அறிக்கைகளில் வழக்கமாக ஒரு மறைஞான பொருள் இருக்கும் என்பதால், “நான் மனிதர்களை ஆன்மீக ரீதியாக சுத்தம் செய்பவன். நீங்கள் எதை சுத்தம் செய்துக்கொள்ள விரும்புகிறீர்கள்?” என்று அவர் குறிப்பிட்டதாக எனக்கு தோன்றியது. §§

அவர் உள்ளே வருமாறு மெதுவாக சைகை காண்பித்து, அவர்களை தனது குடிசைக்குள் அழைத்து சென்றார். சிறிது உயர்த்தப்பட்ட வேப்ப மர விசைப்பலகையின் மீது யோக சுவாமி சம்மணம் போட்டு அமர்ந்தார். அந்த பலகை அவரது எளிமையான படுக்கையாகவும் விளங்கியது. நாங்கள் அவரைப் பார்த்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தோம். அன்று காலையில் நாங்கள் இருவரும் எதையும் பேசவில்லை; சுவாமி மட்டுமே பேசினார். §§

சுவாமி தன் கண்களை மூடிக்கொண்டு, அசையாமல் சுமார் அரை மணிநேரம் அமர்ந்து இருந்தார். அவர் அந்த நேரத்தில் தனது உயிர்சக்தியின் இன்னொரு பரிணாமத்தில் இருந்தது போல தோன்றியது. அவரது முகபாவத்தில் தென்பட்ட அமைதிக்கு, அவரது உட்புற தியானத்தின் ஆனந்தம் தான் காரணமா என்று யோசிக்க வைத்தது. அவர் உறங்குகிறாரா அல்லது இளைப்பாறுகிறாரா? அவர் எங்கள் மனங்களை ஆய்வு செய்ய முயற்சி செய்கிறாரா? அவரது வரவேற்பை பெறுவதற்கு நாங்கள் இருவரும் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று என் நபர் குறிப்பிட்டார். யோக சுவாமி திடீரென்று தன் கண்களை திறந்தார். அந்த பிரகாசமான கண்கள், குடிசை முழுவதையும் பிரகாசிக்க செய்தன. இரக்கத்தால் மென்மையாக இருந்த அவரது கண்கள் அந்த மென்மைக்கு ஈடாக பிரகாசத்தையும் கொண்டு இருந்தன. §§

எனக்கு பசியெடுத்தது மற்றும் உடல் சோர்வடையவும் ஆரம்பித்தது. அப்போது யோக சுவாமி, “காலை சிற்றுண்டிக்கு என்ன சாப்பிட விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார். எனக்கு இருந்த பசிக்கு, எதை கொடுத்தாலும் வாங்கி சாப்பிட்டு இருப்பேன், ஆனால் யாழ்ப்பாணத்தில் பிரபலமான உணவு வகைகளான இட்லி மற்றும் வாழைப்பழங்களை சாப்பிட விரும்பினேன். உடனே அந்த குடிசையில் ஒரு பரிச்சயம் இல்லாத நபர் நுழைந்து, நான் நினைத்த உணவு வகைகளை ஒரு தட்டில் வழங்கினார். சிறிது நேரம் கழித்து, என் நண்பர் காபி குடிக்க விரும்பினார். அவர் அதை கேட்பதற்கு முன்பாகவே, அதே மீண்டும் நபர் மீண்டும் குடிசையில் தோன்றி, எங்களுக்கு காபி வழங்கினார். §§

காலை சிற்றுண்டியை சாப்பிட்ட பிறகு, வாழைப்பழ தோல்களை தூக்கி எறிய வேண்டாம் என்றும், அவற்றை தனது குடிசையில் இருக்கும் பசு மாடு சாப்பிடும் என்றும் யோக சுவாமி குறிப்பிட்டார். அவர் அந்த பசு மாட்டை உரக்க கத்தி அழைத்த போது, அது நேரடியாக குடிசைக்குள் வந்துவிட்டது. அவர் அதற்கு வாழைப்பழத் தோல்களை தந்தார். அது பாசத்துடன் அவர் கைகளை நக்கி, தரையில் உட்கார முயற்சி செய்தது. சுவாமி பசு மாட்டிற்கு கடைசி தோலை வழங்கிக்கொண்டு, “சில விருந்தாளிகள் வந்து இருக்கிறார்கள். எங்களுக்கு தொல்லை தரக்கூடாது, வள்ளி. இப்போது நீ போகலாம்,” என்று உத்தரவிட்டார். அந்த மாடு மரியாதையுடன் தலை அசைத்து விட்டு, அவர் கூறிய அறிவுறுத்தல்களை கடைப்பிடித்தது. §§

யோக சுவாமி மீண்டும் தன் கண்களை மூடிக்கொண்டார். அதை பார்ப்பதற்கு, அவர் மீண்டும் தனது உலகில் தொலைந்து விட்டது போல தோன்றியது. அந்த சமயத்தில், அவர் என்ன செய்தார் என்பதை தெரிந்துகொள்வதில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அவர் தியானம் செய்தாரா என்பதை நான் தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருந்தேன். இந்த கேள்வியை ஆய்வு செய்ய ஒரு சரியான தருணம் வந்தது, ஆனால் கேள்விகள் கேட்பதற்கு முன்பாகவே அவர் பேச தொடங்கிவிட்டார். §§

“அந்த மரங்களை பாருங்கள். அந்த மரங்கள் தியானம் செய்து கொண்டிருக்கினறன. தியானம் என்பது அமைதி. உங்களுக்கு முழுமையாக எதுவும் புலனாகவில்லை என்பதை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் அப்போது உண்மையில் தியானத்தில் இருக்கிறீர்கள். அத்தகைய ஒரு உண்மை நிலை, அமைதிக்கு நல்லோதொரு நிலம் போல விளங்குகிறது. அமைதியே தியானம் ஆகும்,” என்று அவர் சொல்லிக்கொண்டு, ஆர்வத்துடன் முன் பக்கமாக சாய்ந்து, “நீங்கள் உங்கள் மெய்யுணர்வில் முற்றிலும் உடுப்பில்லாமல் எளிமையாக இருப்பீர்கள். உங்கள் ஆன்மா மறைந்து, நீங்கள் உங்களை எதுவுமற்ற வெறுமையாக்கிக் கொண்ட நிலையில், நீங்களே கடவுளாக இருப்பீர்கள். இறைவன் என்பது எதுவுமற்ற வெறுமை என்பதால், வெறுமையாக இருப்பவன் இறைவனை அறிந்து இருக்கிறான். வெறுமை எங்கும் நிறைந்து எல்லாமாக இருக்கிறது. நான் வெறுமையாக இருப்பதால், நான் ஒரு யாசகனாக இருப்பதால், எல்லாம் என்னுடையதாக இருக்கின்றன. அதனால் வெறுமை என்பது அனைத்தையும் குறிக்கிறது. புரிந்ததா?” §§

எனது நண்பர் ஆர்வத்துடன், “வெறுமை நிலையை பற்றி எங்களுக்கு விளக்குங்கள்,” என்று கேட்டார். “அது உண்மையில் எதையும் விரும்பாமல் இருப்பது ஆகும். உங்களுக்கு எதுவும் புலனாகவில்லை என்று நீங்கள் நேர்மையாக சொல்வதை அது குறிப்பிடுகிறது. இந்த வெறுமை நிலையில் எதையும் செய்ய உங்களுக்கு ஆர்வம் இல்லை என்பதையும் இது குறிப்பிடுகிறது.” “எதுவும் புலனாகாத நிலை?” என்று அவர் எதை குறிப்பிட்டார் என்று நான் யூகிக்க ஆரம்பித்தேன். “புனிதமான சக்தியாக மாற்றம் பெறுவதை" குறிக்காமல் “புனிதமான சக்தியாக இருக்கும்” நிலையை குறிப்பிடுகிறதா? “உங்களுக்கு புரிவதாக தோன்றுகிறது. ஆனால் அது உண்மையில் அறியாமை. உங்களுக்கு உங்களை பற்றி எப்போது புலனாகவில்லையோ, அப்போது நீங்களே கடவுளாக இருக்கிறீர்கள்,” என்று எனது சிந்தனைக்கு பதில் அளித்தார். §§