குருமார்களின் சரித்திரங்கள்

Page 27: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/27_yo03_06.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

அத்தியாயம் பதிமூன்று §

செல்லாச்சி அம்மையார் §

யோக சுவாமி வாழ்ந்த காலத்தில் செல்லாச்சி அம்மையார் என்ற ஒரு பெண் துறவி இருந்தார். அவரது வீடே ஆசிரமமாக மாறி இருந்தது. சுவாமி விவேகானந்தர் இந்த பூமியில் அவதரித்த வருடமான 1863 ஆம் ஆண்டில், அவரும் பிறந்தார். சிறு வயது முதல் பக்தியுடன் இருந்த அம்மையார், அவரது பெற்றோர்கள் கோயிலுக்கு அழைத்து செல்லும் போதெல்லாம் அங்கே வழிபாடு நடத்தி, புராண கதைகள் மற்றும் தமிழ் துறவிகளின் பாடல்களை கற்றுக்கொண்டார். அவர் யாழ்ப்பாண நகரத்திற்கு வெளியே, சுமார் பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த, விவசாயம் மற்றும் வணிகத்தை அடிப்படையாக கொண்ட சுன்னாகம் என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார். §§

செல்லாச்சி தனது திருமண வாழ்க்கையில், தனது கணவனுக்கு ஒரு நல்ல இல்லத்தை அமைத்து, தங்களது இரு குழந்தைகளுக்கும் ஒரு அருமையான சமய பயிற்சியையும் வழங்கினார். அவர்களது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும், அவரது கணவருக்கு வெளியூரில் ஒரு வேலை கிடைத்தது. அவர் தனது மனைவியும் தன்னுடன் வருவார் என்று நம்பி இருந்தார், ஆனால் வீட்டை விட்டு செல்ல செல்லாச்சி மறுத்து விட்டார். அந்த காலத்தில் பயணம் மேற்கொள்வது இந்து சமய பெண்களின் வழக்கமாக இல்லாததால், அவர் அதை ஏற்றுக்கொண்டார். செல்லாச்சி தனது வீட்டிலேயே இருந்தார், மற்றும் கணவருக்கு விடுப்பு கிடைக்கும் போதெல்லாம் வீட்டிற்கு வந்தார். §§

தனது கணவர் புதிய வேலைக்கு சென்றதும், செல்லாச்சி தன்னை முழுமையாக கோயில் வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொண்டார். அவருக்கு தனது லௌகீக பொறுப்புக்கள் அனைத்தும் நிறைவுபெற்றதாக தோன்றியது. அவரால் தனது கணவரை கவனிக்க முடியவில்லை, மற்றும் அவரது குழந்தைகள் பெரியவர்களாகி தனியாக வாழ்ந்து வந்தார்கள். அவரது வளர்ப்பு முறையில் வழக்கமாக இருந்ததைப் போல, தங்களது கடைசி குழந்தை பிறந்ததும், அவரும் அவரது கணவரும் மனத்துறவுடன் வாழ்ந்தனர். அதனால் அவர் இயல்பாக தனது ஆன்மீக வாழ்க்கையை வலுப்படுத்திக் கொண்டார். அவர் கோயிலுக்கு அதிகம் செல்ல ஆரம்பித்தார். §§

சிறிது காலத்திற்கு பிறகு, அவர் தனது வீட்டிலேயே ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார். மேலும் அவர் தனது வீட்டை விட்டு மீண்டும் வெளியே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அவரது கணவர் ஒரு முறை வீட்டிற்கு வந்த போது, அம்மையார் ஆன்மீக வேட்கையில் முழுமையாக ஈடுபட்டு இருப்பதை அவர் கவனித்தார். அவர் இந்த ஈடுபாட்டை மதித்தார், மற்றும் அதன் பிறகு அவரிடம் இருந்து திருமண பொறுப்புகள் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் சிறிது காலம் கழித்து பணியில் இருந்து ஓய்வு பெற்றார் மற்றும் அதன் பிறகு மரணமும் அடைந்தார். மரண அனுபவத்திற்கு தனது கணவரை தயார்படுத்த வேண்டும் என்று தனது உட்புற குரல் கூறியதாக சொல்லி, அம்மையார் தன் கணவரின் மரண தேதியை ஏழு வருடங்களுக்கு முன்பே கணித்து, தனது கணவரை அந்த அனுபவத்திற்கு தயார்படுத்தவும் செய்தார். §§

இந்து சமயத்தை சேர்ந்த விதவை குறைந்தது ஒரு வருடத்திற்கு சமூக வாழ்கையில் இருந்து விலகி, துக்கம் அனுசரித்து விசேட சாதனாக்கள் செய்ய வேண்டும். அவர்கள் கணவன் இறந்த தினத்தில் இருந்து வெள்ளை நிற ஆடை உடுத்தி ஒழுக்கத்துடன், தன்னை அலங்கரிக்காமல், மனத்துறவுடன் சமூகத்தில் இருந்து விலகி வாழ்ந்து வருவார்கள். அவர்கள் சிறிது காலத்திற்கு தங்களுக்கென்று சமைத்துக்கொள்ளவும் கூடாது. ஈமச்சடங்கு நடந்த தினத்தன்று, மரபிற்கு எதிராக, தான் இனி கடவுளுக்கு சொந்தம் என்றும், தான் தனது கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் செய்து முடித்து விட்டதாகவும் அறிவித்து, தனது உணவை தானே சமைத்துக் கொண்டார். §§

image§

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்த ஆன்மீக சோதிகளில், செல்லாச்சி அம்மையாரும் ஒருவர். அவர் ஒரு சூட்சும ஞானியாகவும் ஆன்மீக ஆசிரியராகவும் இருந்தார். அவர் யோக சுவாமியை காட்டிலும் ஒன்பது வயது மூத்தவர். அம்மையார் தனது இறுதி காலத்தில், அதிக வலுவிழந்து இருந்ததால், சுவாமி சமைத்த உணவு மட்டுமே அவரால் சாப்பிட முடிந்தது. சுவாமி தினமும் உணவை சமைத்து, பதினாறு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த அம்மையாரின் ஆசிரமத்திற்கு எடுத்து செல்வார். சிலசமயம் அம்மையார் சோர்வாக இருந்தால், அவரே அம்மையாருக்கு உணவை ஊட்டியும் விடுவார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அன்றில் இருந்து, அவரது வாழ்க்கை முழுமையான ஆன்மீக வாழ்க்கையாக மாறியது. அவர் வாழ்ந்த கிராமத்து கோயிலில், பூஜை நேரத்தில் மணி அடிக்கும் ஒவ்வொரு முறையும் தியானத்தில் அமர்ந்து இருந்து, சிவபெருமானின் சுயநினைவின் ஆழத்திற்கு அவரை அழைத்து செல்லும் சக்தியில் பேரானந்தத்தில் இருக்கும், ஒரு கடுமையான பயிற்சியை அம்மையார் பல வருடங்களுக்கு பின்பற்றினார். இவ்வாறு செய்வதை நிறுத்தி, சில விநாயகரின் பாடல்களை பாடவேண்டும் என்று அவரது மனசாட்சி ஒரு நாள் கூறியது. இந்த பாடல்களை பல மாதங்களுக்கு பாடிய பிறகு, பரம்பொருளை குறிப்பிடும் விதமாக ஒரு லிங்கத்தை வைத்து, சிவபெருமானுக்கு தினமும் பூஜை செய்யவேண்டும் என்ற உத்தரவு வந்தது. அவரது பூஜை அறையில் ஒரு லிங்கம் இல்லாததாலும், எதையும் தேடி தனது வீட்டு வாசலை தாண்டியது இல்லை என்பதாலும், அவருக்கு கவலை ஏற்பட்டது. ஆனால் அன்று மாலை அவர் தனது தோட்டத்தில் நடந்துகொண்டு இருந்த போது, ஒரு புதரில் லிங்கம் போன்ற வடிவில் ஒரு கல்லை கண்டார். அவர் அதை சுத்தம் செய்து, அதற்கு தினமும் செய்யும் பூஜையை செய்தார். §§

அவரது உடல் தன்னைத்தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் என்றும், அவர் இனி குளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவரது உள்ளத்தில் இருந்து இறுதியாக இன்னொரு தகவல் வந்தது. அவர் இது வரை தனது வாழ்நாளில் செய்து வந்ததை போல, கிணற்றுக்கு சென்று தலைக்கு தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டாம் என்று அந்த தகவல் குறிப்பிட்டது. அவர் அதற்கு கீழ்படிந்தார். அவர் மீண்டும் குளிக்கவில்லை. அன்றில் இருந்து அவரது நரைத்த முடிக்கு சீப்பை பயன்படுத்தாததால், அது நீளமாக வளர்ந்து சிக்கல்கள் நிறைந்து இருந்தது. அவரை காண வந்தவர்கள் மனதில், அவரது தலையில் இருந்த சடைமுடி நீங்காது இடம்பெற்று இருக்கிறது. மற்றபடி, அவர் முழுமையான சுத்தத்துடன், ஒரு அற்புதமான, பிரகாசமான தோற்றத்தை கொண்டிருந்தார். §§

ஒரு நாள் அவரது அகத்தில் இருந்து, அவர் செய்யும் பூஜையை நிறுத்தி, பரமாத்துமாவாக சிவபெருமானை நினைத்து தியானம் செய்யும் சிவதியானத்தை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வந்தன. இந்த காலகட்டத்தில் அவர் செய்த சிவபூஜை, அவருக்குள் பேரானந்தத்தை நிரப்பி இருந்தது, மற்றும் சிவலிங்கத்தை இன்னொரு முறை வழிபடலாம் என்று அவருக்கு தோன்றியது. பூஜை தொடங்கியது, செல்லாச்சியால் தொடர முடியவில்லை. அவர் அபிஷேகம் செய்த தீர்த்தம் லிங்கத்தை தொட்டதும், அவர் அதில் இருந்து ஆறு மீட்டர் தூரம் தூக்கி எரியப்பட்டதாக, அதை கண்களால் பார்த்த சீடர்கள் பின்னர் தெரிவித்தார்கள். §§

அந்த அனுபவத்திற்கு பிறகு, செல்லாச்சி அம்மையார் தனது அகத்தில் இருந்து வரும் ஆணைகளை, புதுப்பிக்கப்பட்ட சிரத்தையுடன் பின்பற்றி வந்தார். ஒரு சமயத்தில், தெய்வத்துடன் நடைபெறும் முதல் சந்திப்பான, கடவுளை உணர்தல் என்ற அதிக ஆழமான சமாதிக்குள் செல்ல, அவர் தயாராக இருக்கவேண்டும் என்று உத்தரவுகள் வந்தன. அவர் பூஜை அறையில் தியான நிலையில் நீண்டநேரம் உட்கார்ந்து இருப்பார் என்றும், அவரை யாரும் எக்காரணத்திற்கும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தல்கள் வந்தன. இதனை அவர் ஒவ்வொருவருக்கும் கவனமாக விளக்கினார். அதன் பிறகு செல்லாச்சி பூஜை அறைக்குள் நுழைந்து, பல நாட்களுக்கு தனது சுவாசத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, முழுமையான அமைதியில் அமர்ந்து இருந்தார். அவர் சில சமயங்களில் மிகவும் மெதுவாக மற்றும் அமைதியாக சவாசிப்பார்; சில நேரங்களில் சுவாசிப்பது முழுமையாக நின்றுவிடும். அவர் அந்த ஆழமான நிலையில் பல நாட்களுக்கு அமர்ந்து இருந்தார். §§

செல்லாச்சி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சுவாசிக்காமல் இருப்பதை கவனித்த, அவரது உறவுக்கார பெண்ணுக்கு செல்லாச்சி இறந்துவிட்டதாக தோன்றியது. அந்த உடல் ஒரு வேளை இறந்து இருந்தால், அதனை ஆவி உருவம் ஆட்கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்ற கவலையில் இருந்த அந்த பெண், உயிரின் அறிகுறி ஏதாவது தெரிகிறதா என்று நீண்டநேரம் கவனித்துக்கொண்டு இருந்தாள். அவள் இறுதியில் செல்லாச்சி அம்மையாரை கவனமாக நெருங்கி, அவரது வாயை திறந்து, நாக்கில் மரணத்தின் ஏதாவது அறிகுறி தெரிகிறதா என்று பார்க்க, அதனை வெளியே இழுத்தாள். அது ஒரு மிகப்பெரிய தவறாகவும், சிவபெருமானின் சுயநினைவில் மூழ்கி இருந்த துறவிக்கு, அது ஒரு திடுக்கிடும் தலையீடாகவும் இருந்தது. எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லாமல், அவரது சமாதிநிலை சீர்குலைந்தது மற்றும் சாட்சி தூல உடல் உணர்வுக்குள் திரும்பியது. அவரது நரம்பியல் அமைப்பு இந்த பயங்கரமான அதிர்ச்சியில் பல நாட்களுக்கு தடுமாறியது. §§

அந்த அபூர்வமான ஆழ்நிலையை சீண்டியதால் ஏற்பட்ட ஒரு தீவிர விளைவு, அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்து இருந்தது. அவர் வெளிச்சத்தின் மீது கூர் உணர்வுடன் இருந்ததால், நேரடியாக நிலவு வெளிச்சத்திற்கு முன்பாக நிற்பதும் அவருக்கு கடினமாக இருந்தது. இருண்ட தாழ்வாரம் அவருக்கு பிடித்த இடமாக மாறியது. சுத்தமான மனதுடன் இல்லாமல், சுயநல எண்ணத்துடன் யாராவது அவரை அணுகினால், அவருக்கு வலி ஏற்படும் அளவிற்கு அவரது உடலின் வெப்பம் அதிகரிக்கும். நெருக்கமான சீடர்கள் அவருக்கு அருகில் யாரை அனுப்புகிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.§§

நல்ல நோக்கத்துடன் செயல்பட்ட உறவுக்கார பெண்ணை, செல்லாச்சி தானும் குற்றம் சுமத்தவில்லை, மற்றவர்கள் குற்றம் சுமத்துவதையும் அனுமதிக்கவில்லை. அவர் தனது நிலையை, பூமியில் தனது சமயப்பணியின் அங்கமாக தெய்வங்கள் ஏற்பாடு செய்ததாக கருதினார். §§

ஒரு ஆன்மீக பாலைவனச்சோலை§

ஆசிரமம் போன்ற அவரது வீடு அமைதி மற்றும் உறுதிநிலையை வெளிப்படுத்தியது. அந்த இடத்திற்கு யோக சுவாமி 1914 ஆம் ஆண்டில் இருந்து அடிக்கடி வந்துக்கொண்டு இருந்தார். செல்லாச்சி சுவாமியை காட்டிலும் ஒன்பது வயது மூத்தவராக இருந்தார், மற்றும் சுவாமி அம்மையாரை தனது ஆன்மீக வழிகாட்டியாக கருதினார். செல்லாச்சி சுவாமியை தம்பி என்று அழைத்தார். தனது சமாதிநிலை தடைப்பட்டதால் தோன்றிய அதிர்ச்சி அனுபவம் காரணமாக, யோக சுவாமி தோற்றமளித்து தன்னை ஆன்மீக ஆழத்திற்கு அழைத்து சென்றார் என்றும், அவரது அருள் இல்லாமல் தன்னால் அந்த ஆழத்தை அடைந்திருக்க முடியாது என்றும், அவர் தனது ஒரு சீடரிடம் ஒருமுறை கூறினார். §§

ஒருவர் இன்னொருவரின் ஆன்மீக பணியில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தினார்கள் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் அவர்களுக்குள் இருந்த பரஸ்பர மரியாதை மற்றும் பயபக்தியை யாராலும் மறுக்க முடியாது. மாதத்திற்கு ஒருமுறை, ஒரு வரிசைமுறையின்றி நடந்த இயல்பான தியான மற்றும் சத்சங்க கூட்டங்களில், யோக சுவாமி மற்றும் சில நெருக்கமான சீடர்களான கலைப்புலவர் க. நவரத்தினம், சார் வைத்தியலிங்கம் துரைசாமி, மற்றும் Dr. ச. இராமநாதன் கலந்து கொண்டனர். §§

சமூகத்தில் செல்லாச்சி பிரபலம் அடைந்ததற்கு, பெண் விடுதலைக்கு ஆதரவாக அவர் வழங்கிய புரட்சிகரமான கருத்தை ஒரு காரணமாக குறிப்பிட்டாலும், அவர் இந்து சமயத்தில் சூட்சும பயிற்சிகளை பின்பற்றியதே மிகவும் முக்கியமான காரணமாகும். அந்த காலகட்டத்தில், ஆன்மீகம் பிரத்யேகமாக ஆண்களுக்கு என்று கருதப்பட்டாலும், அவருக்கு அந்த தடையேதும் தெரியவில்லை மற்றும் அவர் அந்த காலத்தின் குருக்களில் ஒருவராக மதிக்கப்பட்டார். §§

மெதுவாக மக்கள் செல்லாச்சி அம்மையாரிடம் அறிவுரை பெறுவதற்கு, அமைதிக்கு மற்றும் அவரது தரிசனத்தில் மூழ்கி இருக்க வந்தனர். அப்படி வருகை தந்தவர்கள், அங்கே வரும் முன்பாக தங்களை ஆன்மீக ரீதியாக தயார்படுத்திக் கொள்வதில் மிகவும் கவனமாக இருந்தார்கள். அவர்கள் அம்மையாரின் குடிசையை அடைந்ததும், அவரது அதிர்வுடன் இணக்கம் ஏற்படும் வரை வெளியில் அமர்ந்து இருப்பார்கள். இல்லையென்றால் வருகை தருபவர்களிடம் மீதம் இருக்கும் லௌகீகதன்மையால் அம்மையார் பாதிக்கப்படுவார். §§

அனைவரும் அவர் வெளியிட்ட ஆறுதலான, தாயின் சக்தி நிறைந்த புனிதத்தன்மையை குறிப்பிட்டார்கள். விசித்திரமாக, அவரை சுற்றி இருந்த பகுதி குளுமையாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் அதிக வெப்பம் நிலவிய பகல்களிலும், வெதுவெதுப்பான இரவுகளிலும், அவரது ஆசிரமம் வசதியாக இருந்தது. அவர் பெரும்பாலும் விநாயகரின் துதிப்பாடல்களை பாடிக்கொண்டு இருப்பார். அவர் பாடிய போது அமைதி நிலவி; உலகம் மறைந்து, பழங்கால தமிழ் பாடல்களை இராகத்துடன் பாடும் மென்மையான குரல் மட்டுமே நிலைத்து இருந்தது.§§

செல்லாச்சி ஆழ்ந்த உள்முக சிந்தனையால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், இயல்பாக குறிப்பிட்ட சில ஸித்திகள் உருவாக்கிக்கொண்டார். ஒரு நாள் அங்கே வருகை தந்த ஒரு வியாபாரி, தனது வாகன ஓட்டியை வாகனத்தில் இருக்கச் சொல்லி, ஆசிரமத்திற்குள் நுழைந்தார். அவர் அங்கே முதல் முறையாக வந்து இருந்தார், மற்றும் அந்த வியாபாரி செல்லாச்சிக்கு அருகில் அமர்ந்து, அவரது சக்திகளை உண்மையில் சோதித்துக்கொண்டு இருந்தார். அவர் அதிக பதட்டத்துடன் ஏதோ ஒரு எண்ணத்தில் மூழ்கி இருந்தார், மற்றும் அவர் எதற்காக வந்தாரோ அதை பெற்றுவிட்டார் என்று செல்லாச்சி திருப்தி அடையும் முன்பாக கிளம்பிவிட்டார். அவர் தனது வாகனத்திற்கு திரும்பி, கிளம்புமாறு வாகன ஓட்டியிடம் உத்தரவிட்டார். ஆனால் வாகனத்தின் விசைப்பொறி சரியாக வேலை செய்யவில்லை. வாகன ஓட்டி தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டு இருக்க, வியாபாரிக்கு எரிச்சலும் கோபமும் வந்தது. ஏனென்றால் அந்த வாகனம் புதியது என்பதால் அது நல்ல செயல்பாட்டு நிலையில் இருந்திருக்க வேண்டும். இறுதியாக அவர் தனது வாகன ஓட்டியிடம், “வாகனம் பழுது பார்ப்பவரை எங்கிருந்தாவது தேடிப்பிடித்து வா,” என்று திட்டி அனுப்பி, தாழ்வாரத்திற்கு மீண்டும் திரும்பி துறவிக்கு அருகில் அமர்ந்து கொண்டார். §§

இனி அவர் செல்வதற்கு வேறு இடம் இல்லாததாலும், செய்வதற்கும் ஒன்றும் இல்லை என்பதாலும், அவர் காதால் கேட்டிருந்த புனிதமான அமைதி, அவரது உயிர்சக்திக்குள் நிரம்பி, ஒரு மென்மையான அலையை போல அவரை திடீரென்று வலுவாக தாக்கியது. நீண்டநேரம் கழித்து, “நீங்கள் இனி போகலாம்,” என்று அவருக்கு செல்லாச்சியின் இனிமையான குரல் கேட்டது. அவர் புத்துணர்வு மற்றும் உற்சாகத்துடன் எழுந்து நின்று, கைகளை அஞ்சலி முத்திரையில் வைத்துக்கொண்டு, செல்லாச்சியை வணங்கினார். அவர் தாழ்வார படிக்கட்டில் இருந்து இறங்கினார். அப்போது வெளியே சென்ற வாகன ஓட்டி திரும்பாததால், அவர் வாகன ஓட்டியின் இருக்கையில் அமர்ந்து, விசையை திருப்பினார். முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்து இயந்திரம் இயங்கத்தொடங்கியது. §§

பலர் தங்களுக்கு இருந்த வேதனைகள் குணமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செல்லாச்சியை நாடி வந்தனர். தன்னை நாடி வந்த அத்தகைய நபர்களுக்கு, செல்லாச்சி ஒரு பிரத்யேகமான வழக்கத்தை பயன்படுத்தினார். அவர் அந்த நபருக்கு இருந்த வேதனையை உணர்வது போல், சிறிது நேரம் அமைதியாக கவனித்துக்கொண்டு இருப்பார், பின்பு அந்த நபரிடம் “அந்த கிணற்றிற்கு சென்று, அதன் நீரை சிறிது அருந்துங்கள்” அல்லது “கிணற்றிற்கு சென்று, அதன் சுத்தமான நீரில் குளிக்கவும்,” என்று அறிவுறுத்துவார். அவர் வழங்கும் பரிந்துரைகள் பெரும்பாலும், வாழ்முறை மாற்றம் அல்லது பத்திய உணவு சார்ந்ததாக இருக்கும். மிகவும் தீவிரமாக இருந்த சில வியாதிகள், சில வாரங்களில் குணமடைந்து விடும். அவரது வீட்டிற்கு வெளியே எட்டு அடி விட்ட வடிவில் கற்களால் சுற்றுச்சுவருடன் இருந்த பழங்கால ஆழ்துளை கிணறுகளில், ஒரு எளிமையான தென்னை மரக்கட்டை பிடித்திருந்த ஒரு மர வாளியின் மூலம், பூமியில் இருந்து மூன்று மீட்டர் அல்லது அதற்கு அதிகமான ஆழத்தில் இருந்து தண்ணீர் இறைக்கப்படும். §§

ஒரு சமயத்தில் கிராமத்து சிறுவனுக்கு தீவிர காய்ச்சல் இருந்தது. சிறுவனின் காய்ச்சலை குணப்படுத்துவதில் நம்பிக்கை இழந்த மருத்துவர்கள், “இந்த சிறுவன் இன்னும் ஒரு நாள் பிழைத்து இருப்பதே அதிசயம் தான்,” என்று அவனது தாயிடம் உண்மை நிலையை தெரிவித்தனர். அப்போது வேதனையில் இருந்த அந்த தாயின் அகக்காட்சியில் செல்லாச்சி அம்மையாரின் முகம் தோன்றியது. துறவியிடம் செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்பதை அந்த தாய் புரிந்துக்கொண்டு, ஆசிரமத்திற்கு தனது குழந்தையை அழைத்து செல்லவேண்டும் என்று தனது குடும்பத்தாரை விரைவுபடுத்தினாள். “எனது ஆசிரம கிணற்றில் இருந்து மூன்று வாளிகள் தண்ணீரை சிறுவன் மீது ஊற்றி, அவனை வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்,” என்று செல்லாச்சி பரிந்துரைத்தார்.§§

அந்த பரிந்துரை மிகவும் சாதாரணமாக தோன்றியதால், குடும்பத்தினர் முதலில் தயங்கினாலும், பின்னர் செல்லாச்சி சொன்னதை போல, மூன்று வாளிகள் தண்ணீரால் தங்கள் சிறுவனை முழுமையாக குளிக்க வைத்தனர். தீவிர காய்ச்சலால் வாடிய அந்த சிறுவன், மேலங்கி இல்லாமல் தனது நனைந்த சரோங்குடன், மாலை பொழுதில் வீசிய குளிர்ந்த காற்றில் நடுக்கத்துடன் நின்று இருந்தான். உடனே குடும்பத்தினர் அவன் உடலில் இருந்த ஈரத்தை துடைத்து, ஒரு மாட்டு வண்டியில் ஏற்றி, அவன் இரவு நன்றாக உறங்குவான் என்ற நம்பிக்கையுடன வீட்டிற்கு அழைத்து சென்றனர். அடுத்த நாள் காலை, குடும்பத்தினர் வியக்கும் வண்ணம், காய்ச்சல் தணிந்து இருந்தது, மற்றும் அந்த சிறுவன் சோர்வாக தனக்கு காலை சிற்றுண்டி வேண்டும் என்று கேட்டான்! அவன் சில நாட்களில் தனது இயல்பு நிலைக்கு திரும்பி, தனது நண்பர்களுடன் ஓடி விளையாட தொடங்கிவிட்டான். §§

யோக சுவாமி இந்த அருமையான பெண் துறவியை, இன்னல்களில் இருந்து எவ்வாறு கப்பாற்றினார் என்பதை இன்னொரு சம்பவம் தெரிவிக்கிறது. ஒரு நாள் அவர் தாழ்வாரத்தில் செல்லாச்சி அம்மையாருடன் இருந்த போது, செல்லாச்சியை சந்திக்க ஒரு குழு வந்தது. அவர்கள் ஒரு தொடங்கியிருந்த ஆசிரமத்தில் சாதனா செய்ய விரும்பினார்கள், ஆனால் அவர்களுக்கு வழிகாட்ட ஒரு சுவாமி இல்லை. செல்லாச்சி அங்கே வந்து, தங்களுக்கு ஒரு ஆன்மீக குருவாக இருந்து வழிநடத்துவார் என்ற நம்பிக்கையில் அவர்கள் வந்து இருந்தனர். நலிவுற்ற நிலையில் இருந்த செல்லாச்சிக்கு இது பொருத்தமாக இருக்காது என்பதை அறிந்த சுவாமி, திடீரென்று ஒரு பெட்டி நிறைய தீக்குச்சிகளை எரித்துவிட்டார். ஆனால் வெளிச்சம் செல்லாச்சிக்கு முற்றிலும் ஆகாது என்பதால், செல்லாச்சி உடனே நினைவு இழந்த நிலைக்கு சென்று, அந்த நிலையில் சில மணிநேரங்கள் நிலைத்து இருந்தார். அந்த குழுவினர் நீண்டநேரம் காத்து இருந்து, ஏமாற்றத்துடன் கிளம்பினர். அவர்கள் சென்றதும் செல்லாச்சி நினைவு இழந்த நிலையில் இருந்து வெளிவந்தார். §§

செல்லாச்சியின் நோய் முற்றிய நிலையை அடைவதற்கு முன்பாக, அவரை பலர் சந்திக்க வந்தனர். சிலர் தங்களுக்கு உதவி தேவைப்படும் போது மட்டும் வந்தனர். சிலர் ஞானோதயம் பெறும் நாட்டத்துடன் வந்தனர். இந்த வெகுசிலருடன், செல்லாச்சி அதிகமான நேரத்தை கழித்தார். அவர் அவர்கள் பின்பற்ற சில பயிற்சிகளை வழங்கி, அவர்களுடன் ஆழமான தலைப்புக்களில் விவாதித்தார். §§

அவரது சீடர்களில் ஒருவரான சி. கந்தையா செட்டியார் முடிவான குறிக்கோள் மீது நாட்டத்துடன் இருந்தார். ஆலவெட்டி கிராமத்தை சேர்ந்த, அந்த 30 வயது ஆங்கில ஆசிரியர், வலுவான ஆன்மீக நாட்டத்துடன் இருந்தார். இவர் பிற்காலத்தில் சிவயோக சுவாமியிடம் சிவாய சுப்பிரமுனியசுவாமியை அறிமுகப்படுத்தி, பரம்பரையின் தொடர்ச்சிக்கு ஒரு முக்கிய தொடர்பை வழங்கினார். அவருக்கு அம்மையார் நேர்மறையான உறுதிப்பாட்டில் பயிற்சி அளித்தார். §§

அவர் பல வருடங்களுக்கு தொடர்ந்து செய்வதற்காக, செல்லாச்சி வழங்கிய பல குறிப்பிடத்தக்க சாதனாக்களில், ஒரு குறுகலான மரப்பலகையில் உறங்கும் சாதனாவும் அடங்கும். அவர் அந்த பலகையில் இடது அல்லது வலது புறம் சிறிது புரண்டாலும், கீழே விழுந்தது விடுவார் என்பதால், அவர் இரவு முழுவதும் அசையாமல் படுத்து இருக்கக் கற்றுக்கொண்டார். அவர் பலகையில் படுத்து, கைகளை தனது மார்பை சுற்றி மடக்கிக்கொண்டு, உடனே உறங்கிவிடுவார். அவர் காலையில் அதே நிலையில் உறங்கிக்கொண்டு இருப்பார். §§

ஒரு நாள் செட்டியார் கோயிலுக்கு அருகில் இருந்த ஒரு சிறிய பனைமரத்தை இடமாற்றிக்கொண்டு இருந்தார். அவர் அந்த மரத்தை சுற்றி ஆழமாக குழி தோண்டி இருந்தாலும், அவரால் அதை வேரோடு பிடுங்க முடியவில்லை. அவருக்கு சரியான பிடிமானம் கிடைக்கவில்லை. அப்போது நண்பகல் நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது, மற்றும் உச்சி வெயில் கடுமையாக இருந்தது. அவர் சோர்வடைந்தார், மற்றும் அவருக்கு வியர்க்கவும் பசிக்கவும் ஆரம்பித்தது.§§

அந்த மரத்திற்கு இரு புறமும் ஒரு தடித்த கம்பத்தை மட்டமாக கட்டி, ஒரு புறத்தில் அந்த கம்பங்களை ஒன்றாக இணைத்து, மறுபுறத்தில் அந்த மரத்தை பூமியில் இருந்து வேரோடு எடுக்க அருகில் இருக்கும் ஒரு சிறிய மரக்கட்டையுடன் கட்டவேண்டும் என்று அவருக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. அவர் பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும் கோயிலின் பின்புறத்திற்கு விரைந்து சென்றார். அங்கே திருவிழா காலங்களில் உற்சவ மூர்த்திகளை சுமந்து செல்லும் இரண்டு வழுவழுப்பான இலுப்பை மர கம்பங்கள் இருந்தன. “பொருத்தமாக இருக்கும்" என்று நினைத்த அவர், அங்கிருந்து அந்த கம்பங்களையும் சிறிது சணல் கயிறையும் எடுத்துக்கொண்டார். §§

அவர் தான் கற்பனை செய்ததை போல கம்பங்களை தயார்படுத்திக்கொண்டு, கம்பங்களின் ஒரு புறத்தில் சிறிய மரக்கட்டையை நிமிர்த்தி வைத்து, அதன் மறுபுறத்தை கையில் பிடித்துக்கொண்டு, தனது முழு பலத்தையும் பயன்படுத்தி மேலே உயர்த்தினார். அவருக்கு முயற்சியில் வெற்றியும் கிடைத்தது. கூடுதல் பிடிமானத்துடன், அவர் பூமியில் இருந்து அந்த மரத்தை வேரோடு பிடுங்கினார். அதன் பிறகு கம்பங்களை மரத்தில் இருந்து பிரித்து, அதை புதிய இடத்திற்கு மாற்றினார். “நன்றாக திட்டமிட்டு செய்தாய்,” என்று தன்னை பாராட்டிக்கொண்டு, நன்றாக குளிப்பதற்காகவும், மதிய உணவிற்கு மனைவி தனக்காக தயார் செய்திருந்த சாதம் மற்றும் காய்கறியை சாப்பிடுவதற்காகவும், வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார். §§

அடுத்த நாள் அவர் செல்லாச்சியை சென்று பார்த்த போது, அவர் திட்டிக்கொண்டே கந்தையாவை வரவழைத்தார். நூறு வருடங்களாக புனிதமாக வைக்கப்பட்டு, சிறந்த கலைப்பொருட்களாக இருக்கும், அந்த விசேட கம்பங்களை நிலத்தை சீர் செய்யும் பணிக்கு எதற்கு பயன்படுத்தினார்? அவர் எந்த எண்ணத்தில் இதை செய்தார்? அவர் செய்தது முற்றிலும் சரியில்லை. “அந்த கம்பங்கள் பிரத்யேகமானவை, அவற்றை அந்த கோயில் பணிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்,” என்று அவர் கண்டித்தார். “அவ்வாறு தவறாக பயன்படுத்தியதால், நீங்கள் அதன் புனிதத்தன்மையை அவமதித்து இருக்கிறீர்கள். அவற்றை மீண்டும் சுத்தப்படுத்தி பிரதிஷ்டை செய்தால் தான், கோயிலில் பயன்படுத்த முடியும்,” என்று சொல்லி அந்த பணியை உடனே செய்து முடிக்குமாறு அவரை திருப்பி அனுப்பினார்.§§

“இறைவனை உங்கள் வாழ்க்கையின் மையமாக மாற்றிக்கொள்ளுங்கள்”§

செல்லாச்சி அம்மையார் ஒரு திறமையான ஆசிரியராக இருந்தார். ஒருவர் தனது உள்ளத்தில் இருந்து வரும் தெய்வீக குரல் அறிவுறுத்துவதை மற்றும் ரிஷிகள் உணர்ந்த தெய்வீக விதிகளை பின்பற்றி நடப்பது எவ்வளவு முக்கியம் என்பதை பற்றி, அவர் தனது சொந்த அனுபவத்தில் இருந்து பேசினார். மக்கள் தன்னிடம் பிரச்சனைகளுடன் வரும் போது, செல்லாச்சி அந்த மக்களின் வாழ்க்கை ஓட்டம் சாத்திரங்களை விட்டு விலகி செல்கிறதா என்பதை கவனிப்பார். இதைப்பற்றி செல்லாச்சியின் குறிப்பு:§§

இப்படித்தான தன்முனைப்பு பிறந்து வலுவடைகிறது. நீங்கள் உணர்வதை, உங்கள் உள்ளத்தில் சரியென்று தோன்றுவதை சீர் குலைக்க தொடங்கி, ஒழுக்கத்தின் பாதையில் இருந்து விலகி செல்லும் போது, “நான்" என்பதை உருவாக்கிக் கொள்கிறீர்கள், அந்த “நான்" உங்களை வாழ்க்கை முழுவதில் இருந்தும், வாழ்க்கையின் உண்மையான வசந்தகாலத்தில் இருந்தும் விலக்கி வைக்கிறது. §§

அவர் தான் பேசுவதை கேட்பதற்கு அதிக கூச்சப்படுவதை போல, ஒரு அமைதியான மெல்லிய குரலில் பேசினார். ஆனால் அது ஒரு ஊடுருவி செல்லும் அதிர்வுடன் இருந்தது, மற்றும் அவர் சொன்னது அனைத்தையும் எல்லோரும் உணர்ந்து கொண்டனர். §§

நீங்கள் வாழ்க்கையில் இருக்கும் மகிழ்ச்சிக்காக மட்டும் வாழ்ந்தால், நீங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை தவற விடுகிறீர்கள், ஏனென்றால் வாழ்கையை இறைவனின் புகழ் பாடுவதற்காக வாழவேண்டும், மற்றும் இறைவன் மட்டுமே வாழ்க்கையின் மையமாக இருக்கவேண்டும். உங்களுக்குள் இருக்கும் குருவின் குரலுக்கு அடிபணிந்து நடப்பது, வாழ்க்கையை காட்டிலும் மிகவும் முக்கியமானது ஆகும். §§

“ஆன்மீக பாதை என்பது அனல் கக்கும் நதியின் மீதிருக்கும் மயிர் இழைப்போன்ற ஒரு மெல்லிய பாலம் ஆகும்!” என்பது அவர் கூறிய பிரபலமான பழமொழிகளில் ஒன்று. யோக சுவாமி ஆழமான ஞானம் நிறைந்த அந்த வார்த்தைகளை அவ்வபோது சொல்லிக்கொண்டு இருப்பார். இந்த பழமொழி, இந்த பாதையின் கடுமையான இயல்பு மற்றும் சாதகர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எண்ணற்ற கவனச்திறதல்களைப் பற்றி எச்சரிக்கிறது. இறைவன் பல உருவங்களில் வருவதாகவும், நீங்கள் அவரை புரிந்துக்கொண்டு, அன்பு செலுத்தி, அவரது அறிவுறுத்தல்களை பின்பற்றும் போது, அந்த உருவங்கள் மாறுவதாகவும் அவர் கற்றுத்தந்தார். “நீங்கள் அதிக தெளிவாக காணத்தொடங்கி, இறுதியில் நீங்கள் அதிகமாக புனிதமாகிவிடுவதால், நீங்கள் அந்த பரமாத்துமாவாக மட்டுமே இருப்பீர்கள்.” §§

யோக சுவாமி மற்றும் செல்லாச்சி அம்மையாரின் தோழமை தொடங்கி பத்து வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும், யோக சுவாமி மக்களின் கண்பார்வையில் இருந்து மறைந்தே இருந்தார். செல்லாச்சியுடன் இருந்த தோழமை மற்றும் செல்லப்பசுவாமியுடன் ஆன்மீக தொடர்பின் மூலம், அவர் தனது போதனைகளுக்கு தெளிவான சொல் வடிவங்களை வழங்கினார். பக்குவம் அடைந்து, கிரகித்து கொண்டு, ஆழ்ந்த சிந்தனை மேற்கொள்ளும் மிகவும் முக்கியமான அக்காலத்தின் வெளிப்பாடாக “சிவனின் சேவையை" குறிப்பிடும், சிவத்தொண்டுக்கு அவர் அளித்த முக்கியத்துவம் அமைந்தது. அந்த வலுவான வாசகம், “சிவபெருமானுக்கு சேவை செய்யும் புனிதமான செயலுக்கு முழுமையாக அர்பணித்து கொள்ளுங்கள். சும்மா இருங்கள். உங்கள் பரமாத்துமாவை அறிந்து, சர்வ வல்லமை படைத்தவராக இருக்கும் இறைவனுக்கு சேவை செய்யுங்கள்,” என்று அனைவரின் கவனத்தை கவரும் வண்ணம், யாழ்ப்பாண சமூகம் மற்றும் மனித நேயம் முழுவதற்கும் அவர் வழங்கிய தகவலை உள்ளடக்கியுள்ளது. சிவத்தொண்டு மற்றும் சிவ தியானம் என்ற இரண்டு வார்த்தைகள், மக்களுக்கு அவர் வழங்கும் உன்னதமான தகவலை விளக்குகின்றன. §§

சமூக அங்கத்தினர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, செல்லாச்சி அம்மையாரும் யோக சுவாமியும் எவ்வாறு செயலாற்றினார்கள் என்பதை செல்லதுரை சுவாமியின் பின்வரும் விவரணம் குறிப்பிடுகிறது:§§

ஒரு அன்பர் யோக சுவாமியின் குடிசைக்கு சென்று தன் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறினார். இன்னொரு அன்பர் செல்லாச்சி அம்மையாரின் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அவர் அங்கிருந்து கிளம்பும் போது, செல்லாச்சி அவரிடம் சில வாழைப்பழங்களை கொடுத்து, அவற்றை யோக சுவாமியிடம் கொடுக்குமாறு கூறினார். அவர் சுவாமியிடம் சென்று கொடுத்த போது, “இந்த வாழைப்பழங்களை என்னிடம் யார் கொடுக்க சொன்னது?” என்று கேட்டு திட்ட ஆரம்பித்தார். அதனால் அவர் வெளியே சென்று, அந்த வாழைப்பழங்களை தரையில் வைத்தார். சுவாமி அவரை மீண்டும் உள்ளே அழைத்தார். அவரிடம் சிறிது நேரம் பேசிய பின்னர், தன் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்று சொன்ன நபரிடம், அந்த வாழைப்பழங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அவரது மனைவிக்கு வழங்குமாறு அறிவுறுத்தினார். அவர் அவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று, தினமும் தன் மனைவிக்கு வழங்கி வந்தார். வாழைப்பழங்கள் தீர்ந்ததும், அவர் மனைவியும் குணமடைந்தாள். §§

செல்லாச்சி தனது இறுதி காலத்தில், அதிக வலுவிழந்து இருந்ததால், அவரால் யோக சுவாமி சமைத்த உணவை மட்டுமே சாப்பிடமுடிந்தது. காலையில் சுவாமி தனது வீட்டில் உணவை சமைத்து, அதை தினமும் செல்லாச்சியின் வீட்டிற்கு பதினாறு கிலோமீட்டர் எடுத்து செல்வார். செல்லாச்சி மிகவும் சோர்வுற்று இருந்தால், அவருக்கு சுவாமியே உணவை ஊட்டிவிடுவார். செல்லாச்சியை காண ஒரு சுத்தமில்லாத அன்பர் வருகை தந்தால், அவர் உடல் வீக்கம் அடைந்து சுவாசிப்பதே கடினமடையும் அளவிற்கு, அவரது எதிர்வினைகள் அதிக தீவிரமடைந்து இருந்தன. வருகை தரும் அன்பர்களை கவனமாக ஆய்வு செய்வது, முன்பு ஒரு எச்சரிக்கை விதியாக இருந்தது, ஆனால் செல்லாச்சியின் உடல்நலம் காரணமாக அவசரத் தேவையாக மாறிவிட்டது. §§

ஜனவரி 27, 1929 அன்று செல்லாச்சி அம்மையார் மகாசமாதி அடைந்தார். ஞானோதயம் பெற்ற உயிர்சக்திகளுக்கு வழக்கமாக செய்வதை போல, செல்லாச்சியின் உடலை அங்கேயே புதைத்து, ஒரு சிறிய மாடம் அமைக்கவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் சில அன்பர்கள் விரும்பினார்கள். யோக சுவாமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கே நடக்கும் சடங்கிற்கும் தான் விலகிக்கொள்வதாக பகிரங்கமாக தெரிவித்தார். செல்லாச்சியின் மகன் யோக சுவாமியிடம் சென்று, அவரது விருப்பப்படி தனது தாயின் உடலை தகனம் செய்ய சம்மதித்த போது, பிரச்சனைக்கு தீர்வு வந்தது. §§

அவரது உடல் ஒரு சந்தனக்கட்டை ஈமவிறகில் தகனம் செய்யப்பட்டது. யோக சுவாமி, சார் வைத்தியலிங்கம் துரைசாமி மற்றும் மருத்துவர் இராமநாதன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அம்மையார் உயிர் நீத்த போது, 57 வயது நிரம்பிய சுவாமி மட்டுமே, யாழ்ப்பாண மக்களுக்கு ஒரே ஆன்மீக அடைக்கலம் மற்றும் வழிகாட்டியாக விளங்கினார். அவர் அடுத்த 35 வருடங்களுக்கு, அந்த சமூகத்தில் முக்கிய ஆன்மீக ஒளியாக விளங்கினார். §§

image§

யாழ்ப்பாண சூட்சும ஞானிகளான செல்லாச்சி அம்மையார், யோக சுவாமி மற்றும் மற்றவர்கள் திடமான சைவர்களாக, அத்வைத கடவுள் நம்பிக்கையுடன், இறைவன் உள்ளர்ந்து மற்றும் யாவும் கடந்து, உருவத்துடன் மற்றும் உருவமில்லாமல் இருப்பதாக அறிந்து இருந்தார்கள். மற்றவர்கள் சிவபெருமானை அழிக்கும் கடவுளாக அழைத்தார்கள், ஆனால் அவர்கள் சிவபெருமானை சுத்தமான ஒளி மற்றும் அன்பாக அறிந்து இருந்தார்கள்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§