Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

மருந்து

941. §

வாதம், பித்தம், கபம் என மருத்துவ நூல் சொல்லூம் மூன்று உயிர் நாடிகளும் அளவுக்கு மேல் குறைவதால் அல்லது கூடுவதால் வருவதே நோய்.§

942. §

முதலில் உண்ட உணவு முற்றாகச் செரித்த பின்பே உண்டால் உடலுக்கு மருந்து எதுவும் தேவைப்படாது.§

943. §

முதலில் உண்ட உணவு செரித்த பின் அளவோடு உண்க. அதுவே உடலில் உயிர் நீடிக்க வாழ்வதற்கு உரிய வழியாகும்.§

944. §

முதலில் உண்ட உணவு செரித்ததை அறிந்து பசி மிகத் தோன்றுவதை உணர்ந்து உடலுக்குக் கேடு செய்யாத உணவை உண்க.§

945. §

பொருந்தாத உணவுகளைத் தவிர்த்துக் கட்டுப்பாட்டோடு உண்டால் உயிருக்கு ஆபத்து இல்லை.§

946. §

மிதமாக உண்பவனிடம் உடல் நலம் நிலைத்து இருப்பது போல அளவுக்கு மீறி உண்பான் உடலில் நோய் பல குடியிருக்கும்.§

947. §

பசித் தீயின் அளவை அறியாது உணவை விழுங்கும் பெருந்தீனிக்காரன் ஓயாது வரும் நோய்களால் வாட்டப்படுவான்.§

948. §

நோயை அறிந்து, அதன் காரணம் கண்டு, பின் பொருத்தமான மருந்தை நாடி விதி முறைப்படி நோயாளிக்குக் கொடுக்க வேண்டும்.§

949. §

நன்கு தேர்ந்த மருத்துவன் நோயாளியின் உடல் நிலை, நோயின் தன்மை, பருவ காலம் என்பனவற்றைக் கருத்திற் கொண்டு மருந்து கொடுப்பான்.§

950. §

நோயாளி, நோய் அகற்றும் மருத்துவன், ஏற்ற மருந்து, நோயாளியைக் கவனிக்கும் தாதி என்ற நான்கும் மருத்துவக் கலையின் நான்கு பகுதிகளாகும்.§