Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

பெண் சொல் பணிதல்

901. §

அளவு கடந்த ஆசையால் மனைவி சொல்படி நடப்போர் என்றும்
பெரும் பயன் பெற மாட்டார். பெரும் புகழை நாடுவோர் அவ்வறு
செய்தலை விலக்கி வைப்பார்.
§

902. §

பெண்ணைப் பின் தொடர்ந்து தலை கவிந்து வாழ்பவன் செல்வம்
மானக் கேட்டினுள் மேலான மானக் கேட்டைக் கொண்டு வரும்.
§

903. §

மனைவிக்கு அஞ்சிப் பணிந்து நடப்பவன் மக்களால் மதிக்கப்படுவர்
இடையே எப்பொழுதும் தலை குனிந்து நிற்க வேண்டும்.
§

904. §

ஆற்றும் செயல்களில் திறமையுடன் விளங்கினாலும் மனைவிக்கு
அஞ்சுபவன் இவ்வாழ்விலோ அடுத்ததிலோ என்ன பயனும் பெற மாட்டான்.
§

905. §

தன் மனைவிக்குத் தானே அஞ்சுகின்றவன் பெற நல்ல மக்க
நன்மை செய்வதற்கு எப்பொழுதும் அஞ்சுவான்.
§

906. §

தேவர் போல் சகல சம்பத்துக்கள் பொற்றிருப்வினும் அழகிய
தன் மனைவிக்கு அஞ்சுபவன் ஆண்மையற்றவனாவான்.
§

907. §

பெண் சொல்லின்படி வாழ்கின்றவனின் ஆண் தன்மையிலும்
இயல்பான நாணத்துடன் வாழ்கின்ற பெண்னின் தன்மை மேலானது.
§

908. §

மனையாளின் விருப்பத்தையே நிறைவேற்றுதற்காக வாழ்வோர்
நண்பர்களின் தேவைகளை நிறைவேற்றவோ பிறர் நலன் காக்கவோ மாட்டார்கள்.
§

909. §

மனைவியரின் ஆணைக்குக் கீழ்ப் படிந்து வாழும் ஆண்களுக்கு
அறச் செயல்கள், அதற்கான பெருஞ் செல்வம், குடும்ப வாழ்வுச்
சிறப்புகள் என்பன கிட்ட மாட்டா.
§

910. §

எண்ணிய கருமத்தை நிறைவேற்றும் மனவுறுதி உடையோருக்கு
எக்காலத்திலும் மனைவி விரும்பியவாறே செயலாற்றும் மடமை
கிடையாது.
§