701. § | முகத்தை நோக்கியே ஒருவர் எண்ணங்களை அறிய வல்லவன் கடல் சூழ்ந்த பூமியில் ஓர் ஆபரணமாவான்.§ |
702. § | ஒருவர் மனத்தில் எண்ணுவதை சந்தேகம் இல்லாது உணர்பவனை தெய்வத்துக்குச் சமமாகக் கொள்ளல் வேண்டும்.§ |
703. § | ஒருவரின் உள்ளத்தில் உள்ளதை அறியும் ஆற்றல் உள்ளவரை வேண்டியது எதனையும் கொடுத்துத் துணைவராக ஆக்கிக் கொள்ளல் வேண்டும்.§ |
704. § | ஒருவர் மனத்தில் தோன்றும் எண்ணங்களை அறிய வல்லவன் ஏனை மக்களைப் போல் உடலுறுப்புகளைப் பெற்றிருப்பினும் விவேகத்தால் அவன் மாறுபட்டவனே.§ |
705. § | முகக் குறிப்பைக் கொண்டே மனதில் நிகழும் எண்ணத்தை அறிய முடியாவிடின் உடலில் உள்ள கண்களால் என்ன தான் பயன் உண்டு.§ |
706. § | தன் எதிரிலுள்ள பொருளை அப்படியே காட்டும் கண்ணாடி போல் நெஞ்சில் உள்ளதை முகம் காட்டி விடும்.§ |
707. § | உள்ளத்தில் களிப்பானாலும் வெறுப்பானாலும் அதை முதலில் வெளிக் காட்டும் முகம் போல் அறிவுமிக்க உறுப்பு வேறுண்டோ?§ |
708. § | பிறர் மனத்தைக் குறிப்பால் அறிந்து உணர்பவரைச் சந்தித்த பின் முகம் நோக்கிப் பேசாமல் நின்றாலே போதுமானது.§ |
709. § | கண்கள் பேசும் மொழி அறிந்து உணர்பவர்க்குப் பிறர் கண்களே அவர் உள்ளத்தில் மறைந்திருக்கும் பகைமையும் நட்பும் வெளிப்படுத்தி விடும்.§ |
710. § | பிறர் உள்ளத்தைத் தெரிந்து கொள்ளும் நுண்ணறிவு உடையோரின் அளவுகோல் எதுவெனில் அது அவர் கண்கள் அல்லது வேறில்லை.§ |