Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

தூது

681. §

அன்புடைமை, உயர் குடிப்பிறப்பு, மன்னனோடு இணைந்து அளவளாவும் இயல்பு என்பன ஒருதூதுவனுக்கு இன்றியமையாத குணங்களாகும்.§

682. §

அன்பு அறிவு முன் யோசித்துப் பின் உரையாடல் என்பன தூது செல்வோருக்கு அத்தியாவசியமான தகுதிகளாகும்.§

683. §

வேல் தாங்கி அரசாளும் மன்னருக்கு தன் மன்னனின் வெற்றியை எடுத்துரைக்கச் செல்லுந் தூதன் நூலறிவுள்ள பண்டிதருள் மிகச் சிறந்த பண்டிதனாக இருத்தல் வேண்டும்.§

684. §

கற்றுத் தெளிந்த அறிவு, கவர்ச்சியான தோற்றம், மிகுந்த கல்வி எனும் இம் மூன்று சிறப்பியல்புகளும் உடையோனைத் தூதுவனாக அனுப்பி வைக்க.§

685. §

ஒரு தூதுவன் பெருந் தகுந்த நலன்கள் யாவும் சுருங்கச் சொல்லல், மகிழ்ச்சி ததும்ப உரையாடல், வாக்குவாதம் தவிர்த்தல் என்பனவற்றால் பெறப்படும்.§

686. §

கற்பன கற்று, பிறர் ஏற்கும்படி சொல்லி, கொடுர பார்வைக்கு அஞ்சாது சமயம் அறிந்து நடப்பவனே தூதுவன்.§

687. §

தன் கடமையை உணர்ந்து, இடம் காலம் அறிந்து முன் ஆலோசித்துப் பின் உரையாடுபவனே தலை சிறந்த தூதுவன்.§

688. §

நேர்மை, செல்வாக்கு, அஞ்சாநெஞ்சம் இவை மூன்றுடன் வாய்மையையும் கூடிகருத்து பிசகாமல் தன் மன்னன் உரைத்ததை தெரிவிப்பவனே தூதுவனாவான்.§

689. §

கேடுதரும் சொற்களைத் தவறியும் கூறாத உறுதியுடன் தன் மன்னின் ஆணைகளை அச்சமில்லாது எடுத்துக் கூறவல்லானையே தூதுவனாக நியமித்துக் கொள்க.§

690. §

தன் உயிரை இழக்க நேரிடனும் அதற்கு அஞ்சாது தன் மன்னன் புகழோங்கச் செயலாற்றுபவனே தூதுவனாவான்.§