Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

ஊக்கம் உடைமை

591. §

ஊக்கமுடையவர்களே யாவற்றையும் பெற்றவர் ஆவார். அது இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருப்பினும் எதனையும் பெறாதவரே யாவர்.§

592. §

உள்ளத்தில் ஊக்கம் இருத்தலே நிலையான சொத்து. மற்றும் பொருட் சொத்து நிலைபெறாது நீங்கும் இயல்பினது.§

593. §

அயராத முயற்சியைக் கைப் பொருளாக உடையோர் எமது உடைமைகளை இழந்தோம் என மனம் கலங்கிக் கூறமாட்டார்.§

594. §

மனம் தளராத ஊக்கம் உடையவர்களிடத்துச் செல்வம் தானாகவே வழி கேட்டுச் சென்றடையும்.§

595. §

தாமரைத் தண்டின் நீளம் நீரின் ஆழத்தின் அளவினதாக இருத்தல் போல் மக்கள் அடையும் உயர்வும் அவரவரின் ஊக்கத்தைப் பொருத்தது.§

596. §

எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றிய எண்ணங்களாக இருத்தல் வேண்டும். உயர்நிலை கிட்டாவிட்டாலும் அதனைத் தோல்வியாகக் கருதலாகாது.§

597. §

அம்பு மழையால் உடல் எல்லாம் புண்பட்ட போதும் எதிர்த்து நிற்கும் யானை போல் நல்லூக்கம் உடையார் கேடு வந்து வருத்தும் காலத்திலும் துணிவிழந்து நிற்கமாட்டார்.§

598. §

உலகத்தில் நாம் கொடை வள்ளல் என்று பெருமையுடன் உணரும் மன எழுச்சியை ஊக்கம் இல்லாதவர் அனுபவிக்க இயலாது.§

599. §

பெரிய உடலும் கூரிய தந்தங்களையும் உடைய யானை கொடிய புலி துணிந்து வந்து தாக்கும் போது அது அஞ்சி நிற்கும்.§

600. §

ஒருவருக்கு உறுதியான மனத் தைரியம் என்பது அளவு மிகுந்த ஊக்கம். அது இல்லாதவர் மக்களாகார், மரங்களே ஆவர்.§