Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

நிலையாமை

331. §

நிலத்திராது விரைவில் அழிவனவற்றை நிலைத்திருப்பனவாகக் கொள்ளும் மடமையிலும் வேறு எவையும் இல்லை.§

332. §

கூத்துக் கொட்டகைக்குள் மக்கள் சேருவது போல் கை கூடுஞ் செல்வம், கூத்து முடிய கலைவது போல் விரைவில் அழிந்து விடும். §

333. §

நிலையிலாத இயல்பினை உடையது செல்வம். சேருங்கால் நிலைத்து நிற்கும் அறத்தை உடன் செய்க. §

334. §

ஒவ்வொரு நாளும் தீங்கற்றதாகத் தோன்றினும் அது வாழ்வெனும் மரத்தைப் படிப்படியாக அரியும் கூர்வாள் என்பதை மெய் உணர்ந்தோர் அறிவர்.§

335. §

நாக்கு விழுந்து சேடம் இழுக்கத் தொடங்கி உயிர் பிரியு முன் விரைவு உணர்வோடு நற்செயல்கள் ஆற்றுக.§

336. §

நேற்று இருந்தவன் இன்றில்லை எனும் வியத்தகு பெருமை உடையது இவ்வுலகு.§

337. §

தன் உடலில் அடுத்த கணம் உயிர் நிலைக்குமோ என்பதை அறியாதவன் தீட்டும் திட்டங்கள் கோடிக் கணக்கல்ல அதனினும் கூடியன.§

338. §

தான் வளர்ந்த முட்டையின் ஓடு வெறுமே கிடக்க, குஞ்சு பறந்து விடுவது போன்றதே உடும்புக்கும் உயிருக்குமுள்ள தொடர்பாகும்.§

339. §

வாழ்வில் சாதல் என்பது நித்திரை செய்தல் போன்றது, பிறப்பு என்பது நித்திரையினின்றும் விழித்தெழுதல் போன்றது.§

340. §

இவ்வுயிருக்கு நிலையான வீடு கிடையாமையினாலோ உடும்புகளில் ஒவ்வொன்றாகத் தற்காலிகமாக வாழுகின்றது?§