221. § | இரந்த வறியவர்க்குக் கொடுத்தலே உண்மையான ஈகை. மற்றவை ஏதேனும் பலன் கருதிக் கொடுத்ததாகவே இருக்கும்.§ |
222. § | நல்லவழி எனச் சிலர் கொள்ளினும், பிறரிடமிருந்து பெற்று பொருள் திரட்டுதல் தீது. விண்ணுலகை அடைவதைத் தடை செய்யும் எனினும் பிறருக்குக்கொடுத்தலே நன்று.§ |
223. § | "என்னிடம் இல்லை" எனும் இழிவான காரணம் காட்டாது நற்குடிப் பிறந்தோர் இரக்கத்துடன் கொடுப்பர்.§ |
224. § | இரவலன் விரும்பியது பெற்று மகிழும் முகத்தைக் காணும் போது முதலில் அவன் கேட்ட போது அடைந்த சங்கடம் மறைந்து போகும்.§ |
225. § | பசி தாங்கும் தபசியர்களின் ஆற்றல் சிறப்பாகும். எனினும் ஏழைகளின் பசிக் கொடுமையைத் தீர்ப்போனின் ஆற்றல் அதனினும் சிறந்தது.§ |
226. § | வறியோரை வாட்டும் பசியைத் தீர்க்கும் பண்பே மக்கள் பெற்ற செல்வத்தைப் பேணும் நல்வழியாகும்.§ |
227. § | நாள் தோறும் தன் உணவைப் பிறருடன் பகிர்ந்து உண்பவனைப் பசி எனும் கொடுநோய் என்றுமே தீண்டாது.§ |
228. § | தாம் தேடிய பொருளைச் சேமித்து இழக்கும் கல்நெஞ்சத்தவர் கொடையால் வரும் இன்பத்தை அறியாதவரோ?§ |
229. § | தம் பணத்தைச் சேர்த்து வைத்துத் தானே தனித்துண்ணும் உணவு இரவலனுடைய உணவிலும் கசப்பானது.§ |
230. § | மரணத்திலும் கொடியது வேறில்லை. அதுவும் இரப்போர்க்கு ஈய முடியாத நிலையில் ஏற்படுங்கால் இனியது போல் தோன்றும்.§ |