குருமார்களின் சரித்திரங்கள்

Page 74: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/74_bk12_06.html§

குருமார்களின் சரித்திரங்கள்§

இந்து பாரம்பரிய நன்கொடை நிறுவல் §§

தென்னிந்தியாவில் ஆன்மீக மையங்களாக இருக்கும் ஆதீனங்கள் காலங்காலமாக கோயில்கள், அனாதை ஆசிரமங்கள் மற்றும் பூசாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் பள்ளிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. பழங்காலத்தில் உள்ளூர் சமய மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து நன்கொடை வழங்குவதற்கு தேவையான நிதியை, இந்த மடத்தை நிர்வகித்த அமைப்புக்களுக்கு சொந்தமான வயல்கள் அல்லது கடைகள் வழங்கின. இன்றைய காலகட்டத்தில், ஆதீனத்திடம் இருக்கும் நன்கொடை நிறுவல்களில் பங்குகள் மற்றும் பத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. கவாய் இந்து மடத்தின் நன்கொடை நடவடிக்கைகள் அதிகமாக வெளிநாடுகள் சார்ந்து இருக்கின்றன. மேலும் அந்த நடவடிக்கைகள், இந்து பாரம்பரிய நன்கொடை நிறுவல் (HHE) என்ற தனிப்பட்ட நிறுவனம் பொறுப்பேற்கும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. இதனை 1994 ஆம் ஆண்டு குருதேவா ஸ்தாபனம் செய்து வைத்தார். HHE மூலம் கோயில்கள், திருவிழாக்கள் மற்றும் அன்னதானங்கள், அனாதை ஆசிரமங்கள், குழந்தைகள் முகாம்கள், இளைஞர்கள் கல்வி, ஆசிரமங்கள் மற்றும் மடங்கள், மதம் சம்பந்தமான பதிப்புக்கள், புண்ணிய தலங்கள், பூசாரிகள் பயிற்சி மையங்கள், பண்டிதர்களுக்கு உதவி, சாதுக்களுக்கு தங்கும் இடங்கள், முதியோர் இல்லங்கள், தத்துவம் அல்லது சாஸ்திர ஆராய்ச்சி மையங்கள், ஆயுர்வேதம் மற்றும் ஜோதிட சேவைகள், பல்வேறு சுவாமிகளின் சமயப்பணிகள் மற்றும் இசை, கலை, நாடகம், நடனம் மற்றும் யோகம் சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் போன்ற பல்வேறு விதமான நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு நிறுவனம் தனது சமயப்பணியை நிலைநிறுத்த சுலபமாக ஒரு HHE நிதியை உருவாக்கிக்கொள்ளலாம். தனிநபர்கள் தங்களுக்கு விருப்பமான இந்து சமய தர்ம காரியங்கள் அல்லது கொள்கைகளுக்காக தற்போது செயல்பாட்டில் இருக்கும் நிதிக்கு நன்கொடை வழங்கலாம் அல்லது புதிய நிதியை உருவாக்கலாம். HHE நன்கொடை நிறுவலில் நிதி செலுத்திய பிறகு, அதை நீக்கவோ அல்லது முன்பு குறிப்பிட்ட காரணங்கள் இல்லாமல் மற்ற விஷயங்களுக்கு பயன்படுத்தவோ கூடாது. உதவித் தொகைகள், முதலீடுகளில் இருந்து பெறும் இலாபங்கள், பயனர்களின் திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களை மேம்படுத்த தொடர்ந்து பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன. நன்கொடைகளுக்கு அமெரிக்காவில் (US) வரி விலக்கு கிடைக்கும். 2011 ஆம் ஆண்டில் HHE யிடம் 80 தனிப்பட்ட நிதிகள் இருந்தன, மற்றும் அவற்றின் கூட்டுத்தொகை $10 மில்லியன் கடந்து இருந்தது. பல்வேறு பரஸ்பர நிதிகளை சிறந்த முறையில் நிர்வகிக்கும் முதலீட்டு ஆலோசகராக லாங் பீச், கலிபோர்னியாவில் இருக்கும் ஹால்பர்ட் ஹார்குரோவ் LLC மூலம் இந்த சொத்துக்கள் நேர்த்தியாக கண்காணிக்கப்படுகின்றன. ரொக்க பணம், பத்திரங்கள் அல்லது நிலங்கள், உயில் அல்லது லிவிங் டிரஸ்ட் (living trust), ஆயுள் காப்பீடு அல்லது சாரிடபில் ரிமைந்டர் டிரஸ்ட் (charitable remainder trust), கிப்ட் அன்யுட்டி (gift annuity) அல்லது பூல்ட் இன்கம் பண்ட் (pooled income fund) போன்று வாழ்நாள் முழுவதும் வருமானம் அளிக்கும் திட்டங்கள் என்று பல்வேறு வழிகளில் HHE நிதிக்கு நிதியுதவி வழங்கலாம். §§

image§

§§

இந்து பாரம்பரிய நன்கொடை நிறுவல்§

கவாய் இந்து மடம்§

107 கஹோலலேலே சாலை§

காபா, ஹவாய், 96746-9304 அமெரிக்கா (USA)§

தொலைப்பேசி: (800) 890–1008, Ext. 244§

அமெரிக்காவிற்கு(US) வெளியே: (808) 822–3152, Ext. 244§

தொலைநகலி: (808) 822-4351§

www.hheonline.org§

மின்னஞ்சல்: hhe@hindu.org §§