10 Questions About Hinduism

imageஇந்துக்களுக்கு பைபல் (திருமறை) உண்டா?

நமது "பைபலை" வேதம் என்கிறோம். வேதம் என்றால் ஞானம். அது நான்கு தொன்மையான புனித திருமறைகளைக் கொண்டதாகும். இறைவனிடமிருந்து வெளிப்பட்ட அவற்றை இந்துக்கள் பெரிதும் மதிக்கிறார்கள்.

தாவோ சமைத்தவர்களுக்கு தா தே சிங், புத்தர்களுக்கு தம்மபாதம், சீக்கியர்களுக்கு ஆதிகிரந்தம், யூதர்களுக்கு தோரா, கிறிஸ்தவர்களுக்கு பைபல், இஸ்லாமியர்களுக்கு குரான் - இந்துக்களுக்கு வேதங்கள் புனித நூலாகும். நான்கு வேதங்களாவன: ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் ஆகியன. 100,000 சுலோகங்கள் உள்ளன. பூவுலக பக்தி முதல் மேலான தத்துவங்கள் வரை வேதங்கள் தெரிவிப்பது ஞானமாகும். அதன் சொற்களும் ஞான்மும் இந்து எண்ணம், சடங்குகள் மற்றும் தியானம் முதலியவற்றில் ஊடுருவி உள்ளன. வேதங்கள் இந்துக்களுக்கு அதிகாரத்துவம் கொண்ட அடிபடையான திருமறையாகத் திகழ்கிறது. இவற்றிலுள்ள பழைமையான பகுதிகள் கி.மு. 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும். பெரும்பாலான வரலாறுகள் வாய் வழி கூறப்பட்டு வந்து சமஸ்கிரதத்தில் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டன. உலகின் நீண்ட மிகபழமையான திருமறையாகும். வேதங்கள் பழங்கால இந்திய சமுதாயத்தின் அபூர்வமான கதவுகளைத் திறக்கச் செய்து வாழ்வின் புனிதத் தன்மையையும் இறைவனோடு ஒன்றித்திருத்தலையும் அறிவிக்கிறது.

விரிவான விளக்கம்: நெடுங்காலத்துக்கு முன்னாலிலிருந்து இன்று வரை வேதங்களே கோட்பாடுகளின் (கொள்கை) அதிகாரத்துவம் கொண்ட ஒன்றாக நிலைநிறுத்திக் கொண்டு மக்களின் வழிபாடு, கடமை மற்றும் ஞானம் பெறவும் வழிக்காட்டுகிறது. வேதங்கள் தியான நிலையும் தத்துவங்களும் இலட்சக்கணக்கான துறவிகளுக்கும் கோடிக்கணக்கான இந்துக்களுக்கும் மண்டல மையமாகத் திகழ்கிறது. அவற்றின் செய்யுளடிகள் ஒவ்வொரு நாளும் ஆலய நித்திய பூசையிலும் மற்ற சடங்குகளிலும் குருக்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை மனனமாக ஓதப்படுகின்றன. அனைத்து இந்துக்களும் வேதங்களை முழுமனத்தோடு ஏற்றுக் கொள்கின்றனர்.இருப்பினும் ஒவ்வொன்றும் தேர்ந்தெக்கப்பட்டதாகவும் சுதந்திரமாக அதிக அளவில் விளக்கம் கொடுக்கக் கூடியதாகவும் விளங்குகிறது. கால ஒட்டத்தில் சகிப்புத் தன்மை கொண்ட இந்தப் பற்று இந்து தர்மத்தின் பல்வேறுப்ட்ட கருத்துகளை உருவாக்கியிருக்கின்றது. நான்கு வேதங்கள் ஒவ்வொன்றும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது: 1 ஸமித்துக்கள் (பக்திப் பாடல்களின் சேகரிப்பு) 2 பிராமணம் (பூசைக்கான குறிப்புகள்) 3 ஆரண்யம் (காடு சம்பந்தமான ஆய்வு) 4 உபநிடதங்கள் (ஞானவிளக்கம்) ஸமித்துக்களும் பிராமணியமும் கடவுள் எங்கும் உள்ளவர் என்றும் எல்லாம் கடந்தவர் என்றும் சடங்கு பூர்வ வழிபாடு, ஆன்மீக உலகத்தோடு தொடர்பு கொள்ள மந்திரம் மற்றும் பக்திப் பாடல்கள் முதலியவற்றை விளக்குகின்றன.பக்திப்பாடல்கள் இறைவனையும் இறைத்தன்மை கொண்டதான சூரியன், மழை, காற்று, நெருப்பு அதிகாலை போன்ற இயற்கையையும் திருமணம், சந்த்தியனர், வளமை, இசைவுபட வாழ்தல், பாதுகாப்பு உள்ளூர் சடங்குகள் மேலும் பலவற்றிற்காக பிரார்த்திக்கவும் உதவுகின்றன.

image

வேதங்கள் இறைவனால் ஞானம் பெற்ற துறவிகள் அல்லது ரிஷிகள் மூலம் அருளப்பட்ட திருமறைகளாகும். இந்நான்கு வேதங்களையும் நான்கு ரிஷிகளுக்கு சிவபெருமான் அளிப்பதை இப்படம் விளக்குகிறது. இந்தப் புனித ஞானம் செவிவழியாக வரலாற்றுக்காலம் தொடங்கிக் கூறப்பட்டு வந்துள்ளது. இறுதியாக ஞானத்தைப் பகிர்ந்து கொள்ளவும் பாதுகாக்கவும் பனை ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டது.
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • •

ஆரண்யமும் உபநிடதமும் ஆன்மாவின் பரிணாமப் பயணம், யோகியின் தத்துவப் பயிற்சிக்கும் எல்லா ஆன்மாக்களின் விதிப்படி இறைவனோடு ஒன்றித்திருத்தலுக்கு முதலிடம் கொடுக்கிறது. இன்று வேதங்கள் சமஸ்கிரதம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மனி, மற்றும் பல மொழிகளில் பிரசுரிக்கப்படுகின்றன. புகழ்பெற்ற உபநிடதங்கள் அதிகமாகத் திறம்பட மொழியாக்கம் செய்யப்படுவனவாகத் திகழ்கின்றன.

வேதங்கள் அறிவுறுத்துகின்றன:

"உண்மையை புறக்கணிக்காதிருக்கட்டும், தர்மம் புறக்கணிக்காதிருக்கட்டும், நலன்கள் புறக்கணிக்காதிருக்கட்டும், நல்ல பேறுகள் அல்லது வளம் புறக்கணக்காதிருக்கட்டும், கற்றலும் கற்பித்தலும் புறக்கணிக்காதிருக்கட்டும், இறைவனுக்கும் நமது முன்னோர்களுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் புறக்கணிக்காதிருக்கட்டும்." (தைத்திரிய உபநிடதம் 1.11.1) "உங்கள் தீர்மானங்களை ஒன்றுபடுத்துங்கள், உங்கள் இதயங்களை ஒன்றுபடுத்துங்கள், உங்கள் ஆன்மாக்கள் ஒன்றாவதன் மூலம் சேர்ந்து ஒற்றுமையுடனும் இசைவுடனும் வாழ முடியும்." (ரிக் வேதம் 10.191.4). இருளும் இரவும் இல்லா இடங்கள், பகல் இல்லா இடங்கள், உயிர் இல்லா இடங்கள் முதலியவற்றில் புனிதமான ஒன்று, தனியாக, முழுமுதலாக ஆதி அந்தமில்லா இறைவன் இருக்கிறார். அங்கே நேர்த்தியான இன்ப ஒளி, அவரிடமிருந்து தொடக்கத்தில் புராதன ஞானம் விரைந்தோடி வருகிறது". (ஸ்வேட்தாஸ்வட்ர உபநிடதம் 4.18). வில்லை உபநிடதத்தின் பெரிய ஆயுதமாகக் கொண்டு அவ்வில்லில் தியானமாக கூர்மையாக்கப்பட்ட அம்பை வைக்க வேண்டும். சத்தான அதற்கு (இறைவனுக்கு) எண்ணங்களுக்குக் குறி வைத்து அழிவற்ற அதற்கு அடையாளமிடப்பட வேண்டும் என் தோழனே". (முண்டக உபநிதம் 2.2.3)