10 Questions About Hinduism

imageஇந்துக்கள் புலால் உண்ணுவதை மறுக்கப்படுகின்றனரா?

இந்துக்கள் உயிர் வாழ்க்கைக்கு, மற்ற உயிர்களுக்கு மிகக் குறைந்த துன்பம் தரும் வகையில் சைவ உணவு மட்டும் உண்ணும்படி கற்பிக்கின்றனர். ஆனால் தற்காலத்தில் எல்லா இந்துக்களும் சைவ உணவு உண்பவர்களாக இல்லை.

நமது சமயம் கடுமையான விதிகளான "செய்ய வேண்டியவை, செய்யத் தகாதவை" என்பன போன்றவற்றினைச் சார்ந்திருக்கவில்லை. நமது சமயத்தில் கட்டளைகள் இல்லை. இந்து சமயம் நமது உடலுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஞானத்தை நமக்கு கொடுத்துள்ளது. ஏனெனில் இப்பிறவியில் நமக்கு ஒரே உடல் தான். சைவ உணவு உண்பவர்கள் வட இந்தியாவை விட தென் இந்தியாவில் அதிகமானோர் உண்டு. ஏனெனில் வட இந்தியாவின் சீதோஷ்ணம் மற்றும் கடந்த கால இஸ்லாமியர் செல்வாக்கும் காரணமாகிறது.

அர்ச்சகர்களும் சமயத் தலைவர்களும் கண்டிப்பாக சைவமாக இருக்கிறார்கள். மிகவுயர்ந்த புனிதத் தன்மையைக் காக்கவும் ஆன்மீக உணர்வும் கொண்டு அவர்களின் பொறுப்புகளை நிறைவேற்றவும் அவர்களது இயல்பான தூய்மையைத் தூண்டவும் முடிகிறது.பொதுவாக இராணுவத்தினரும் சட்ட அமலாக்கப் பிரிவினரும் சைவமாக இருப்பதில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும் பொருட்டு சற்று மூர்க்கமாக இருக்க வேண்டியிருகிறது. யோகப் பயிற்சி செய்யவும் தியானப் பயிற்சியில் வெற்றி காணவும் கண்டிப்பாக சைவமாக இருக்க வேண்டும். தாங்கள் செய்ய வேண்டியதைத் தீர்மானிக்க தங்கள் அறிவைப் பயன்படுத்த ஞானம் உண்டு. இன்று இருபது விழுக்காட்டு இந்துக்கள் சைவமாக இருக்கிறார்கள்.

விரிவான விளக்கம்: இது மனத்தைத் தொடும் ஒன்றாகும். யார் கேட்கிறார்கள்? அவர்களது பின்னணி, எவ்வாறு வளர்க்கப்பட்டார்கள் என்பதைப் பொறுத்து பல வழிகளில் தக்கவாறு பதிலளிக்கலாம் இயங்கலாம். இத்தகைய கேள்விகளுக்கு வரையறுக்கப்பட்ட விதியான அகிம்சை ஒர் இந்துவின் பதிலின் அடிப்படையாகும். அகிம்சை என்பது ஒருவருக்கு அல்லது ஒர் உயிருக்கு உடலால், மனத்தால், உணர்ச்சியால் வன்முறை செய்யக்கூடாது என்பதாகும். வன்முறையை கடுமையாக எதிர்ப்பவர் இயல்பகவே சைவ உணவுக்கு மாறிவிடுகிறார். எல்லவற்றிற்கும் மேலாக அவரவர் மனசாட்சியே நல்ல ஆசானாகிறது.

நாம் இறைச்சி, மீன், கோழி, முட்டை ஆகியவற்றை உண்ணும் பொழுது அவற்றின் அதிர்வுகளை நாம் கிரகிப்பதால் நம் உடலின் நரம்பு மண்டலங்களில் போய்ச் சேர்கின்றன. இவை இரசாயனமாகி நமது மன உணர்வுகளை மாற்றுகிறது. கீழ்நிலை குணங்களான பயம், கோபம், பொறாமை, குழப்பம், ஆத்திரம் போன்றவற்றிற்கு ஆளாகிறோம். பல இந்து சுவாமிகள் பின்பற்றுகிறவர்களுக்குத் தீட்சை பெருவதற்கு முன் சைவமாக மாறும்படியும் அதன் பிறகு அதனை விடாமல் கடைப்பிடிக்கும்படியும் ஆலோசனை கூறுகிறார்கள். ஆனால் பலர் தீட்சை பெறாதவர்களை சைவமாக மாறும்படி வலியுறுத்துவதில்லை. அசைவமாயிருப்பவரகளைவிட சைவமாயிருப்பவர்களின் குடும்பத்தில் குறைந்த பிரச்சனைகள் இருப்பதை சுவாமிகள் அறிந்திருக்கிறார்கள்.

புகழுக்குறிய திருமறைகள் இறைச்சி உண்பதை எதிர்க்கின்றன. யஜுர் வேதம் (36.18) பூமியில் நீரிலும் வெளியிலும் வாழும் எல்லா ஜீவராசிகளிடம்மும் அன்பைப் பொழிய வேண்டுமெனக் கூறுகிறது. 2,200 ஆண்டுகக்கு முற்பட்ட நன்னெறிகளின் கருவூலமான திருக்குறள் கூறுகிறது: வேறொரு உயிரைக் கொன்று கிடைத்தது தான் அந்த இறைச்சி என்று மனிதன் உணர்ந்தால் அதை உண்ண மாட்டான்.

image

சந்தையில் வியாபாரி பழங்கள், காய்கறிகள், தானியங்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் இனிப்புப் பண்டங்கள், புகழ் பெற்ற சமையல் வல்லுனர்களால் சமைக்கப்பெற்ற சிற்றுண்டிகள் விற்கின்றனர். இந்துக்கள் புலால் உண்ணுவதற்கு எதிரான காரணங்களை நன்கு அறிந்திருக்கிறார்கள். சிலர் முழுமையாக கைவிட்டு விட்டனர். சுவையான ஆரோக்கிய்மான் சைவ உணவு இருக்கும் போது புலால் வேண்டுவதேன்?
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • •

"உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

புண்ணது உணர்வார்ப் பெறின்."

(குறள் 257), மனுதர்ம சாஸ்திரம் கூறுகிறது:

"துன்புறுத்திக் கொன்று கிடைத்த இறைச்சியைப்பற்றி நன்கு சிந்தித்துப் பார்ப்பவர்கள் புலால் உண்ண மறுப்பார்கள். உணவு தூய்மையாயிருந்தால் நமது மனமும் இதயமும் தூய்மையாயிருக்கும்.

இந்துக்கள் இதற்காகவும் மற்ற விஷயங்களுக்காகவும் வழிகாட்டியாக அவர்களது சொந்த குரு, சமூகத் தலைவர்கள், அவர்களது சொந்த மனசாட்சி மற்றும் புலால் மறுப்பதால் விளையும் நன்மைகள் பற்றிய அறிவு முதலியவற்றை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்கின்றனர். முழு சைவ உணவை உண்டு மகிழ்கிறார்கள். சில நல்ல இந்துக்களும் அசைவ உணவு உண்கிறார்கள் என்பது உண்மைதான். அவ்வாறே சில இந்துக்கள் சைவமாக இருந்தும் அவ்வளவாக நல்லவர்களாக இருப்பதில்லை.

இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மில்லியன் கணக்கான மக்கள் சைவமாக உள்ளனர். ஏனெனில் அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க விரும்புகின்றனர். புலால் உண்ணுவது அதிகரிப்பதால் தான் வன்முறை அதிகரித்து வருகிறது, அதைத் தவிர்க்கலாம் என்ற மன போக்கிற்காக சைவமாகின்றனர். சைவ உணவு பற்றி நல்ல நல்ல புத்தகங்கள், Diet for a New America by John Robbins போன்றதும் சஞ்சிகை Vegetarian Times. மற்றும் புலால் உண்ணுபவருடனான வாதங்களை வெற்றி கொள்ளும் விதம் சம்பந்தமான நூல் How to Win an Argument with a Meat-Eater by Mr. Robbins. இப்புத்தகத்தின் 43 அத்தியாயத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.