10 Questions About Hinduism

imageஇந்துக்களுக்கு ஏன் பல தெய்வங்கள்?

அனைத்து இந்துக்களும் பிரபஞ்சத்தைப் படைத்த ஒரே ஒரு முழுமுதற் கடவுளை நம்புகின்றனர். அவர் அனைத்திலும் இருக்கிறார். அவருக்கு உதவியாக இருக்க மிகவுயர்ந்த ஆன்மாக்களான பல தெய்வங்களைப் படைத்தார்.

தவறான நெறிமுறைகள் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக பல பெயர்களால் ஒரே ஒரு முழுமுதற் கடவுளை (பரம் பொருளை) வழிபடுகின்றனர். ஏனெனில் பல மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவின் மக்கள் ஒரே கடவுள் என்ற கொள்கையை அவர்கள் வெவ்வேறு வகையில் புரிந்து கொண்டவாறு வழிபடுகின்றனர். வரலாற்றுப்படி நோக்கும் பொழுது நான்கு முக்கிய இந்து சமயப் பிரிவுகள் இருந்ததாகத் தெரிய வருகிறது. அவை சைவம், சாக்தம், வைஷ்ணவம், சமார்த்தம் என்பன. சைவர்களுக்கு சிவபெருமான் கடவுளாவார். சாக்தர்கள் சக்தி முழுமுதற் கடவுள். வைஷ்ணவர்களுக்கு விஷ்ணுவே முழுமுதற் கடவுள். சமார்த்தர்களுக்கு அனைத்து தெய்வங்களும் ஒரே கடவுளை பிரதிநிதிப்பதாக நம்புகின்றனர். சமார்த்தர்கள் தாங்கள் விரும்பும் தெய்வத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர்களிடமே விடப்பட்டுள்ளது. சுதந்திரமான சமார்த்தர்களின் தோற்றம் நன்கு புலனாகும். ஆனால் அது இந்துக்களிடம் நிகழும் காட்சியாகாது. இவ்வேற்றுமையின் காரணமாக கருத்து வளமிக்க இந்துக்கள் ஏனைய சமயத்தவர்களிடம் சகிப்புத் தன்மையையும் ஒவ்வொருவரும் ஒரு கடவுள் கொள்கைப் பாதையில் செல்வதையும் மதிக்கிறார்கள்.

இந்து சமயத்தில் உள்ள இணையற்ற நம்பிக்கைகளில் ஒன்று கடவுள் வெகுதூரத்தில் சொர்க்கம் என்னும் இடத்தில் இல்லை, ஒவ்வொரு ஆன்மாவின் மனத்திலும், உணர்விலும் அவரைத் தேடிக் காண வேண்டும் என்பதற்காகவே இருக்கிறார் என்பதாகும். கடவுள் எப்போதும் நம்மிடம் இருந்து கொண்டு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்து ஆன்மீகத்தின் முக்கியக் குறிக்கோள் ஒரே ஒரு முழுமுதற் கடவுளை மிக நெருக்கமாகவும் அனுபவத்தின் மூலமும் காண்பதாகும்.

விரிவான விளக்கம்: இந்து சமயம் அத்வைதத்தையும் (ஒரு கடவுள் கொள்கை) henotheistic கொள்கையையும் கொண்டதாகும். இந்துக்கள் பல இணையான கடவுளர்கள் உண்டு என்ற நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. இந்துவின் பார்வையில் ஒரு கடவுள் கொள்கை வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆனால் மற்ற தெய்வங்கள் உண்டு என்பதை மறுக்காமல் ஒரு கடவுளை வழிபடுகிறார்கள். எங்கும் உள்ள கடவுள் இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகிறார் என்று இந்துக்களாகிய நாங்கள் நம்புகிறோம். அவரது படைப்பாகிய மனிதர்கள் மற்றும் அனைத்து உயிர்களின் வாழ்க்கையில் அவர் பிரகாசிப்பதைக் காணலாம். கடவுள் இருக்கிறார் என்ற இந்த நம்பிக்கையும் எல்லா உயிர்களுக்கும் வாழ்க்கை தருகிறார் என்பதும் அனைத்தும் கடவுளில் அடக்கம் என்பதாகும். கடவுள், பிரபஞ்சம் என்பதற்கு மேல் வேறொன்றுமில்லை என்பதற்கும் எல்லாம் கடவுளில் அடக்கம் என்பதற்கும் வேறுபாடு உண்டு. கடுமையான இறைமைக் கொள்கையுடையவர்கள் கூறும் கடவுள், இவ்வுலகத்துக்கும் மேலாக எல்லாம் கடந்த நிலையைக் கொண்டவர் என்ற கொள்கைக்கும் மாறானது. Panentheism என்ற கொள்கை அனைத்தும் ஒன்று சேர்ந்தது என்பதாகும். இது கடவுள் உலகத்திலும் அதற்கு அப்பாலும் உள்ளார் மேலும் எல்லையற்றவர் மற்றும் அழிவற்றவர் என்ற மேலான கொள்கையைக் கொண்டவர்கள் இந்துக்கள்.

image

அனைத்து இந்துக்களும் முழுமுதற் கடவுளை இந்து சமயத்தின் பல பிரிவுகளுக்கேற்ப பல பெயர்களால் அழைக்கிறார்கள். பல தேவ தூதுவர்கள் போல் உள்ளவர்களைத் தெய்வங்களாக மிகவுயர்வாக மதிக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மையமாக விளங்குபவர் சிவபெருமான். அவரை சைவர்களும் இந்து சமயத்தின் மற்ற பிரிவினரும் முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றனர். தொட்டிலைப் போன்ற அவர் கைகளில் காணப்படுபவர்கள் கணேசப் பெருமான் உட்பட உயர் ஆன்மாக்கள். அவர்கள் தெய்வங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • •

ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் பலவித முக்கிய பொறுப்புகள் வகிப்பது போன்று இந்துக்கள் பல தெய்வங்கள் இருப்பதையும் அவர்கள் பலவற்றிற்குப் பொறுப்பாக இருக்கிறார்கள் என்பதையும் நம்புகின்றனர். இது முழுமுதற் கடவுளோடு ஒப்பிட்டுப் பார்த்துக் குழம்பிவிடக் கூடாது. இத்தெய்வங்கள் மிக உன்னத நிலையை எய்தியவர்கள், அவர்களுக்குக் குறிப்பிட்ட கடமைகளும் ஆற்றல்களும் உண்டு. அவர்கள் மற்ற சமயங்களில் நம்புவது போன்ற சொர்க்கலோக வாசிகள், உயர்ந்த வாசிகள், தூதுவர்கள் அல்லது ஒவ்வொரு தெய்வமும் முழுமுதற் கடவுளை வணங்கின்றனர்.

இந்து சமயத்தில் பல பிரிவினர் அந்தந்த வட்டாரக் கலாச்சாரத்தின் படியும் இந்து சமயப் பிரிவுகளின் படியும் ஒரே முழுமுதற் கடவுளை வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடுவது இந்து அல்லாதவர்களுக்குச் சில சமயங்களில் குழப்பத்தைக் கொடுக்கிறது. இந்துக்களுக்குப் பல தெய்வங்கள் இருப்பது உண்மைதான் என்றாலும் அதுவே முழு உண்மையாகிவிடாது. நமது சொந்த வழியில் இறைவனை அணுகுவதற்கு இந்து சமயம் நமக்குச் சுதந்திரம் கொடுத்துள்ளது. ஆரோக்கியமான ஒன்று மட்டுமல்லாது பல வகையான வழிகளில் முயற்சிக்க ஊக்குவிக்கிறது. இந்துக்களுக்குக் கூட இந்த தலைப்பு குழப்பம் நிறைந்ததாக இருக்கிறது. இவற்றிலுள்ள சரியான கருத்தையும் அதன் வேற்றுமைகளையும் கற்றுக் கொள்ளுங்கள். அதன் பின்னர் இந்துக்கள் தெய்வங்களைப் பார்க்கும் முறையை ஆழமான கருத்துக்களுடன் விளக்கலாம். மற்றவர்கள் இந்தியர்கள் இறைவனைப்பற்றி கொண்டிருக்கும் சிறந்த கருத்துக்களுக்காக மகிழ்ச்சியடையலாம். சில இந்துக்கள் உருவமற்ற முழுமுதற் கடவுளை நம்புகின்றனர் என்று கூறுலாம். மற்றவர்கள் சொந்தப் பெருமானாகவும் படைப்பவராகவும் கடவுளை நம்புகின்றனர். இந்து சமயத்தில் இந்த சுதந்திரம் இறைவனைப் புரிந்து கொள்ளச் செய்கிறது. இச்சமயம் மிகப் பழமையான நிலைத்திருக்கும் சமயம், பூமியிலுள்ள பிற சமயங்களிலும் மிகச் சிறப்பானது.