Śaivite Hindu Religion: Book One for Children Ages 5 to 7

அருஞ்சொற்றொடர் அகராதி

அறியாமை: சிலவற்றைத் தெரியாமல் இருத்தல்.§

ஆரத்தி: வீடுகளிலும் கோயில்களிலும் கடவுளை வழிபடுவதற்கு கற்பூரத் தீபம் எற்றப்பட்ட ஒரு விளக்கு.§

ஆன்மா: நமது ஒளி உடல். நமது ஆன்மா நமது தூல உடலில் வாழ்கிறது.§

உணர்தல்: உங்களுக்கு நேர்ந்த அனுபவம். நீங்கள் பார்க்கும் அல்லது செய்யும் ஒன்று.§

ஓம்: நாம் ஓதும் ஒரு புனித ஒலி. எல்லா ஒலிகளையும் ஒன்றிணைக்கப்பட்டது. §

கடவுள்: பிரபஞ்சத்தைப் படைத்த சிவபெருமான்.§

கடவுளர்: சிவபெருமானால் படைக்கப்பட்ட மகா தேவர்கள். §

கணேசர்: யானை முகம் கொண்ட கடவுள். இவர்தான் முதலில் வணங்கப் படுகிறார். §

கர்மவினை: செயலுக்கு எற்ற பலனடைதல் அல்லது வினையும் அதன் விளைவும். §

காவடி: அலங்கரிக்கப்பட்ட மரத்தாலான ஒரு வளைந்த வடிவம். §

கும்பிடுதல்: கடவுளிடம் அன்பு காட்டுதல். §

குரு: ஓர் ஆசிரியர். §

கோயில்: கடவுளின் இல்லம். அங்கே தான் நாம் கடவுளைக் கும்பிடுகிறோம். §

சதுர்த்தி: பெளர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் நான்காவது நாள். §

சம்ஸ்காரம்: நம் வாழ்வின் முக்கியமான கட்டங்களின் போது கடவுளின் ஆசிகளைப் பெரும் பொருட்டு கோயிலில் அல்லது வீட்டில் நடத்தபடும் சடங்கு. §

சற்குரு: மிகப் பெரிய சமய குரு அல்லது ஆசிரியர். §

சிவன்: முழுமுதற் கடவுள். மங்களகரமானவர் என்று பொருள். §

சுயமாக: தானாக. தானாகத் தெரிந்து கொள்ளல் அல்லது செய்தல். §

தம்புரா: நான்கு நரம்புத் தந்திகள் கொண்ட ஓர் இசைக் கருவி. §

தர்மம்: சிவபெருமானின் அன்பான தெய்வீக நியதி. §

திருஞானசம்பந்தர்: தமிழ் நாட்டில் வாழ்ந்த குழந்தை நாயனார். §

திருவிழா: கடவுளை வழிபடுவதற்கான விசேட தினங்கள். குடும்பத்தாருடன் சேர்ந்து வழிபடும் ஒரு மகிழ்ச்சியான நாள். §

துறவி: துறவி திருமணம் செய்து கொள்ளமாட்டார். கடவுளுக்குச் சேவை செய்பவர். மக்களுக்கு உதவி செய்வதோடு யோகப் பயிற்சியும் செய்பவர். §

தேர்: திருவிழாக் காலங்களில் பயன்படுத்தபடும் இரண்டு பெரிய சக்கரங்களைக் கொண்ட வாகனம். கோயில் உற்சவ மூர்த்தியை அதில் வைத்து ஊர்வலம் செய்வார்கள். §

தேவர்: சுவர்க்கலோகத்தில் வாழும் ஒளியுடன் காணப்படும் ஆன்மா. §

தேவாரம்: கடவுளைப் பற்றிய புனித பாடல்கள். §

தைப்பொங்கள்: நெல் அறுவடைத் திருநாள். இது தை முதல் நாள் வரும். §

நமசிவாய: சமஸ்கிருத மொழியில் சிவனே போற்றி என்பதாகும். இது நன்மை பயக்கும் மிகச் சக்தி வாய்ந்த பிரார்த்தனை மந்திரமாகும். §

நமஸ்காரம்: மற்றவர்களிடம் கடவுளைக் காண்கிறோம் என்பதற்கு அடையாளமாகக் கூறப்படும் இந்து வாழ்த்துச் சொல். §

நந்தி: பெரிய வெள்ளை எருது. சிவபெருமான் நந்தியில் வலம் வருவார்.§

பஜனை: கடவுளுக்குப் பாடப்படும் புனிதப் பாடல்கள்.§

பாரம்பரியம்: மக்களால் மிக நீண்ட காலமாகப் பின்பற்றி வரப்படும் ஒரு செயல் அல்லது நடவடிக்கை.§

புனித நூல்: நம் வாழ்க்கையை வழிநடத்த உதவும் புனித (சிறந்த) நூல்கள்.§

பூசை: கடவுளை வழிபடும் முறை.§

பெருமான்: கடவுளுக்கு வழங்கப்படும் ஒரு பெயர்.§

முருகன்: பெரிய கடவுள். சிவபெருமானால் படைக்கப்பட்டவர்.§

யோகம்: நம்மைக் கடவுளுக்கு அண்மையில் கொண்டு செல்லும் ஆன்மீகப் பயிற்சி.§

யோகி: கடவுளை அறிய முயற்சிப்பவர்.§

ரிஷி: பெரிய புனித மகான், ஞானி.§

வணக்கம்: மற்றவர்களுக்குத் தமிழில் வாழ்த்துக் கூறும் முறையை வணக்கம் என்கிறோம்.§

வீணை: எழு நரம்புத் தந்திகளைக் கொண்ட ஓர் இசைக் கருவி.§

வேல்: முருகனின் வேல் ஆயுதம். இது அவரின் நன்மையின் சக்தியாகத் திகழ்கிறது.§