சிவனை அடையும் வழி

45§

ஜெபம் என்றால் என்ன?§

ந்திரம் என்பது புனித சமஸ்கிருத சொல் அல்லது சொற்றொடராகும். ஒருவரின் மந்திரத்தை ஜெபமாலையில் எண்ணிக்கொண்டு ஜெபிப்பத்தை ஜெபம் அல்லது மந்திர யோகம் என்று அழைக்கிறோம். இப்படிப்பட்ட அதிசய மந்திர உச்சாடனத்தை மனதிலோ அல்லது உரக்கமாகவோ உச்சரிக்கும்போது ஆன்மீக உறுதிமொழியாக செயல்பட்டு கடவுளுக்கு அருகில் இட்டுச் செல்கிறது. எல்லாவற்றுடன் தூய இணக்கத்துடன் இருக்க அது உதவுகிறது. பல மந்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மந்திரமும் கடவுளை அல்லது ஒரு தெய்வத்தை போற்றி செய்கிறது. “ௐம் கம் கணபதயே நமஹ” என்பது கணேச மந்திரங்களில் ஒன்று. “தேவர்களின் தலைவனே போற்றி” என்பதே அதன் பொருளாகும். “ஓம் சரவணபவ” என்பது முருகனின் சிறப்பு மந்திரம். சலனமற்ற அமைதியான பொய்கை என்று மனதை அது விவரிக்கிறது. யாவற்றுக்கும் மேலான மகா சைவ மந்திரம் யஜுர் வேதத்தின் நடுவே காணப்படும் “நமசிவாய” மந்திரமாகும். “சிவபெருமானுக்கு வணக்கம்” என்பதே அதன் பொருளாகும். ந-ம-சி-வா-ய என்று ஐந்தெழுத்துக்கள் இருப்பதால் பஞ்சாட்சர மந்திரம் அல்லது “ஐந்தெழுத்து மந்திரம்” என்று அது அழைக்கப்படுகிறது.§

இளைஞர்களான உங்கள் நோக்கங்களில் ஒன்று ஒரு குருவிடமிருந்து நமசிவாய மந்திர தீட்சைப் பெறுவதற்கு உங்களை நீங்கள் தயார் படுத்திக் கொள்ளவேண்டும்.§

இம்மந்திரம் உங்களுக்கு சிறப்பான சக்தியைத் தரும். மந்திர தீட்சை சடங்கு முடிந்ததும் ஒவ்வொரு நாளும் 108 தடவை ஜெபிக்க வேண்டும். ஓம் நமசிவாய மந்திரத்தை நீங்கள் உச்சரிக்க உச்சரிக்க கோடிக்கணக்கான சிவ அடியார்களோடு உங்களுக்கு தொடர்பு ஏற்படும். ஓம் நமசிவாய மந்திரம் உங்களின் ஆன்மாவுக்கு சக்தி ஊட்டுகிறது. அறிவைக் கூர்மையாக்கி இச்சை மனத்தை மட்டுப்படுத்துகிறது. நமசிவாய மந்திர தீட்சை பெறும்வரை நீங்கள் “ௐம் சரவணபவ” மந்திரத்தை ஜெபிக்கலாம்.§

இனி ஜெபம் செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம். 108 மணிகள் கொண்ட ஒரு ஜெபமாலையை வலது கையில் ஏந்தி அமைதியாக அமர்ந்து கொள்ளுங்கள். மந்திரத்தை மனதிலோ அல்லது வாயில் முணுமுணுத்தோ திரும்ப திரும்ப உச்சரியுங்கள். ஒவ்வொரு தடவையும் சொல்லும்போது வலது கைப் பெருவிரலால் நடுவிரலின்மேல் ஒரு மணியை உருட்டுங்கள். உங்களுக்கு உபதேசித்தபடி மந்திர ஒலியிலும் அதன் அர்த்தத்திலும் கவனம் வையுங்கள். மனதை அலைபாய விடவேண்டாம். நீங்கள் ஜெபிக்கும்போது தேவர்கள் உங்கள்மீது அருள் ஒளியை அனுப்புவார்கள். ஜெபத்தை கோயிலில் செய்யுங்கள். வீட்டு பூசை அறையில் செய்யுங்கள். உங்களுக்கு விருப்பமான மரத்துக்கு அடியில், நதிகரையோரத்தில் அல்லது ஒரு மறைவான குகையில் செய்யுங்கள்.§

image§

shutterstock§

ஒரு ருத்ராட்ச மாலையை தம் பெருவிரலுக்கும் நடுவிரலுக்குமிடையே ஏந்திக்கொண்டு ஒரு பக்தர் அமைதியாக காட்டில் அமர்ந்துள்ளார். அவர் “ஓம் நமசிவாய” மந்திரத்தை 108 தடவை ஜெபமாலையில் எண்ணிக்கொண்டே ஜெபம் செய்கிறார்.§

குருதேவர்: ஜெபத்தை முறையாகச் செய்பவனுக்கு தனக்கு என்ன தெரியும் என்பதை உணர்ந்து கொள்வான். ஜெபம் உள்மனதைத் திறந்து குறிப்பிட்ட சக்கரத்தின்மீது சக்தியைக் குவிக்கிறது. அங்கேதான் நாடி மண்டலத்தின் மனோ உணர்வுக் கொத்தில் தன்னுணர்வு அடங்கிக்கிடக்கிறது§