44§ |
யோகம் என்றால் என்ன?§ |
எல்லாம் கடந்த உணர்வோடு அல்லது தெய்வீக உணர்வோடு தனியொருவரின் தன்னுணர்வை ஒன்றுகலக்கச் செய்யும் ஒரு வழிமுறைதான் இந்து சமயம் காட்டும் யோகம். யோகம் என்றால் “ஒன்றிணைவது” என்று பொருள்படும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் யோகம் என்றால் என்ன என்று பதஞ்சலி முனிவர் தமது யோகசூத்திரம் என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார். எட்டு அங்கங்கள் அல்லது படிகளைக் கொண்ட தியானமுறை என்று அவர் விளக்கியுள்ளார். அதனால்தான் அது ஆஷ்டாங்க யோகம் (எட்டு நிலைகள்) என்று அழைக்கப்படுகிறது. ராஜயோகம் என்றும் அது அழைக்கப்படுகிறது. “மனதின் செயல்களைக் ஒடுக்கி வைத்தல்” என்று பதஞ்சலி அதற்கு பொருள் கூறுகிறார்.§
இயமங்கள், நியமங்கள் ஆகியன முதலிரண்டு படிகளாம். தியானத்தில் நாம் வெற்றியடைய கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகளை இவை தெளிவாக விளக்குகின்றன. மூன்றாவது அங்கம் “ஆசனம” எனப்படும் “அமரும்முறை.” அதாவது நீண்ட நேரம் ஆடாமல் அசையாமல் வசதியாக அமர்ந்திருக்கும் முறை. இதனை ஹடயோகம் என்ற யோகாசனங்களின் வழி அடையப்படுகின்றது. அவை உடம்பின் சக்தியையும் மனதின் சக்தியையும் சரிசமப்படுத்தி உடல் நலத்தையும் தூய அமைதியையும் பேணுகிறது. நான்காம் அங்கம் பிராணாயாமம் என்னும் சுவாசப் பயிற்சி. பிராணன் என்ற நுண்சக்தியை நமது பிடிக்குள் கொண்டுவரும் சுவாச முறைகளின் அறிவியலாகும். ஐந்தாவது அங்கம் பிரத்தியாகாரம் என்பது. புலன்களிலிருந்து, உணர்ச்சிகளிலிருந்து, எண்ணங்களிலிருந்து நமது நினைவுணர்வை மீட்டுக்கொள்ளும் பயிற்சிமுறை இது. ஓர் ஆமை தன்னைத் தற்காத்துக்கொள்ள எப்படி தன் தலையையும் கால்களையும் ஓட்டுக்குள்ளே இழுத்துக் கொள்கிறதோ, அதுபோல யோகியானவன் தன் நினைவுணர்வை வெளியுலகிலிருந்து மீட்டுக்கொண்டு, எல்லையற்ற அந்த உலகை அவன் தன்னுள்ளே கண்டுகொண்டு ஆனந்திக்கிறான்.§
ஆறாம் படி என்னவென்றால் தாரணை என்னும் ஆழ்ந்த கவனம். எண்ணத்தை அங்கும் இங்கும் ஓடவிடாமல் ஒரே பொருள்மீது அல்லது எண்ணத்தின்மீது சிந்தனையைக் குவிப்பது. ஏழாம் படி தியானா என்பது. இதுவே உண்மை தியானம். குருதேவர் இதனை, “அமைதியான விழிப்பு நிலையில் சக்திவாய்ந்த மனங்குவிந்த நிலையில் புத்தம் புது அறிவும் உள்ளுணர்வும் தன்னுணர்வில் வீழ்கின்ற நிலை,” என்று விவரித்திருக்கின்றார். ஒரு நல்ல தியானம் நமக்கு நம்மைப்பற்றியும் உலகத்தைப் பற்றியும் ஒரு புதிய விஷயத்தை அறிவிக்கிறது. எட்டாவது படி சமாதியாகும். இதுவே இறுதி நிலை. தியானம் செய்பவரும் செய்யப்படும் பொருளும் ஒன்றே என்ற நிலையை அடைவதே தியானத்தின் இலக்கு. கால வெள்ளத்தில் யோகத்தில் நிபுணத்துவ கிளைகள் உருவாயிற்று. உதாரணத்துக்கு, கிரியா யோகம் மூச்சைக் கட்டுப்படுத்துவதிலும், மந்திரம், முத்திரைகளிலும் முக்கிய கவனம் செலுத்துகிறது. கர்ம யோகம் வேலையை தெய்வம் என்று உருமாற்றம் செய்து செயல்படுகிறது. பக்தியோகம் பக்தியால் இறைவனைச் சேரவைக்கிறது. சிலவகை ஹடயோகங்களில் உடம்பை பூரணமாக வைத்துக்கொள்வதே நோக்கமாக இருக்கிறது.§
குருதேவர்: நீங்கள் அசையாமல் அமர்ந்து சுவாசித்துக் கொண்டிருந்தீர்களானால்….தன்னுணர்வு குறுகிய எண்ணத்துக்குள்ளிருந்து கட்டவிழ்ந்து, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் சீர்குலையாமல் அமைதியும் பேரானந்தமும் குடிகொண்டிருக்கும் அந்த உள்மனதின் ஆழத்துக்கு மிகத் துடிப்புடன் சுதந்திரமாகச் சென்றணுகுகிறது.§