36§ |
நமது குரு பரம்பரை யாது?§ |
காலந்தொடங்கிய முதல் சிவபெருமானின் திருவருட்சக்தியை ஞானஒளி பெற்ற சற்குருக்கள் தம் கையில் ஏந்தி வந்துள்ளனர். அத்திருவருட்சக்தியானது ஒளிக்கதிர்வீச்சு போன்று பிரகாசமாக ஒளிரும் ஆன்மீக சக்தியாம். இந்த அருட்சக்தியை ஞானாசிரியர்கள் பலர் பல உத்தம ஆன்மாக்களை (சீடர்களை) பயிற்றுவித்து அவர்களுக்கு அருளியுள்ளனர். இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மீண்டும் மீண்டும் இந்நிகழ்வுகள் நடைபெற்றதால், பல குருமார்களின் பேரில் சங்கிலித்தொடர்கள் உருவாகி, (குரு)பரம்பரைகள் தோன்றின. அவ்வகையில் தோன்றிய நமது குருபரம்பரையின் பெயர் கைலாச பரம்பரை என்பது. அப்படியென்றால் நமது குருபரம்பரை சிவபெருமான் இமயத்திலிருக்கும் கைலாச மலையிலிருந்து வந்ததாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இப்பரம்பரை தொடங்கியது. சரித்திரக் குறிப்புப்படி நமது பரம்பரையின் முதல் ஞானகுரு நந்திநாத மகரிஷியாகும் (கிமு 250). அவர் தனது அருட்சக்தியை திருமந்திரம் என்ற யோகசாத்திரத்தை இயற்றிய திருமூலர் ரிஷிக்கு வழங்கி அருளினார். அவருக்குப் பிறகு 15 0க்கும் மேற்பட்ட ரிஷிகள் சிவபெருமானின் அந்த அருட்சக்தியை தொடர்ந்து மேற்கொண்டுவந்தனர் என்றாலும் அவர்களின் பெயர்கள் கால வெள்ளத்தில் மறைந்துபோயின.§
19 ம் நூற்றாண்டில் இமயமலையிலிருந்து நமது பரம்பரையைச் சேர்ந்த பெயர் தெரியாத ஒரு யோகி தென் இந்தியாவிலிருக்கும் பெங்களூருக்குப் பயணமானார். அங்கு கடையிட்சுவாமி (1804-1891) என்பவருக்கு தாம் தொடர்ச்சியாய் கொண்டுவந்த அருட்சக்தியை வழங்கி, சைவம் தழைத்தோங்க அவரை இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.§
அவர் செல்லப்பாசுவாமி என்ற ஞானிக்கு (1840-1915) அச்சக்தியை அருளினார். அவர் அந்த அருள்ஞானசக்தியை சற்குரு யோகசுவாமிக்கு (1872-1964) அருளிச்செய்தார். பிறகு 1949 ம் ஆண்டு குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிக்கு (1927-2001) அந்த அருட்சக்தியை யோகசுவாமிகள் அருளிச்செய்தார். குருதேவர் சைவசமயத்தை மேற்கு நாட்டுக்குக் கொண்டுவந்து 1970 ம் ஆண்டில் ஹாவாய்த் தீவுகளில் ஒன்றான காவாய் என்ற தீவில் காவாய் ஆதீனம் என்ற தனது மடத்தைத் தொடங்கினார். பிறகு அவர் 2001ம் ஆண்டில் போதிநாத வேலன்சுவாமிக்கு தீட்சையளித்து தனது அடுத்த வாரிசாக நியமித்தார். முன்கூறப்பட்ட எல்லா குருமார்களின் திருவருட்சக்திகளும் அவை தொடர்ச்சியாய் வருவதற்கு உறுதுணையாக இருந்த தேவகூட்டங்களின் ஆசியும் இப்போதுள்ள ஞானசற்குருவிடம் உறைந்துள்ளது.§
குருதேவர்: இந்துக் கோயில்கள் இந்து சமயத்தை உலகம் முழுதும் நிலைநாட்டி வருகின்றன. ஞானசாத்திரங்கள் நாம் செல்லக்கூடிய செல்லவேண்டிய பாதையை நமக்கு எப்போதும் ஞாபகப்படுத்தினாலும், ஒரு சற்குருவின் அருளால்தான் உற்சாக உணர்வையும் சக்தியையும் தொடர்ந்து நிலைநாட்டக்கூடிய உணர்வைப் பெறவும், உங்கள் வாழ்வில் அவை நடந்தேறி கோயிலை அர்த்தமுள்ள தலமாகவும் ஞானசாத்திரங்கள் சொல்வது உண்மையே என்பதையும் உங்களின் சொந்தப் பார்வையால், சொந்த மூன்றாம் கண் பார்வையால் பார்க்க இயலும்§