சிவனை அடையும் வழி

21§

மூவுலகங்கள் என்பன யாவை?§

மூன்று உலகங்கள் உள்ளன. முதலாவதாக பூலோகம் எனப்படும் தூல பரு உலகம். இதுவே நாம் கண்களால் காணும் உலகம். கைகளால் தொட்டு உணரக்கூடிய உலகம். இந்த இகலோகத்தில்தான் நாம் நமது பரு உடம்பில் அனுபங்களைப் பெற்று, வினைகளாற்றி (நல்வினை தீவினை) வாழ்வின் விருப்பங்களையும் கடமைகளையும் நிறைவேற்றுகிறோம். இரண்டாவதாக நுண்ணுலகம் (சூக்கும) எனப்படும் இரண்டுக்குமிடையே இருக்கும் அந்தர்லோகம். இந்த உலகம் தூலஉலகத்துக்குள்ளே இருக்கிறது. நமது எண்ணங்களும் உணர்வுகளும் இந்த உள்ளுலகின் ஒரு பகுதியாக இருப்பதால் நாம் நனவுநிலையில் இருக்கும்போதும் இந்த நுண்ணுலகத்தில் செயல்படுகிறோம். உறங்கும்போது நாம் இந்த தூலதேகத்தைவிட்டு வெளியேறி அந்த உள்ளுலகில் முழு தன்னுணர்வோடு இருக்கிறோம். கனவு காண்பதைத் தவிர நாம் நமது சற்குரு கற்பிக்கும் வகுப்பிலும் உள்ளுலகில் கலந்துகொள்கிறோம்.§

அந்தர்லோகம் எனப்படும் உள்ளுலகில் பல பகுதிகள் உள்ளன. அசுரர்கள் அரக்கர்கள் வாழும் துன்பமிகுந்த நரகலோகத்திலிருந்து, தேவர்களும் தேவதைகளும் வாழும் மிகவும் உயர்ந்த லோகமான தேவலோகமும் இருக்கின்றன. நமது தூல உடம்பு இறந்ததும் நாம் அந்தர்லோகத்தில் சூக்கும உடம்பில் வாழ்கிறோம். மூன்றாவது உலகமானது காரண உலகம். இதுதான் ஒளிநிறைந்த அருள் உலகமான சிவலோகம். இதுவே மிகவும் உயர்ந்த உலகம். இதுதான் சிவபெருமானும் சிவனுக்கு உதவி செய்யும் தெய்வங்களான கணேசப்பெருமான் முருகப்பெருமான் போன்றோர் வாழும் இடமாகும். இவ்விடத்தில் ஆன்மீகத்தில் மிகவும் உயர்நிலையடைந்த ஆன்மாக்கள் தம் ஒளிமிக்க ஆன்ம உடலில் வசிக்கின்றனர். நமக்குள்ளே ஒளியை தரிசிக்கும்போது அல்லது பளீரென்று உள்ளுணர்வு ஏற்படும்போது நாம் சிவலோகத்தை அனுபவிக்கிறோம்.§

கடவுளையும் தெய்வங்களயும் நாம் எவ்விடத்திலும் வணங்கலாம் என்றாலும் கோயிலில் வழிபடுவதுதான் சிறந்தது. ஏனெனில் மூவுலகங்களும் ஒன்றாக சந்திக்கும் சிறந்த தெய்வீக இடமாக கோயிலை அமைத்துள்ளனர். நாம் விழிப்புநிலையில் இருக்கும்போது உள்ளுலகங்களைக் காண்பதோ அல்லது உணர்வதோ இல்லை. நாம் பிரத்தியேக கண்ணாடிகொண்டு எப்படி இருட்டில் பார்க்கிறோமோ அதுபோல் இறைவனையும் தெய்வங்களையும் தேவதேவதைகள் இருப்பதையும் உள்ளபடி நாம் உணர்வதற்கு கோயில் வழிசெய்கிறது. இறைவனை நாம் பூஜைமூலம் வழிபடும்போது மந்திரம் ஓதி, ஊதுபத்தி கொளுத்தி, மணியடித்து, தீபம் காட்டி மலர்களால் வழிபடுகிறோம். இந்த பூசைகாரியம் நம்மை இறைவனுக்கு அருகில் நாம் நம்பிக்கையோடு வழிபடும் கடவுளுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.§

image§

shutterstock§

இங்கே முதல் உலகமான பொருள் உலகம் இயற்கையாக விலங்குகளாகக் காட்டப்பட்டுள்ளது. இரண்டாம் உலகமான உயர் சூக்கும உலகம் சந்திரனோடு நட்சத்திரங்களோடு ஒரு தேவதையும் இருப்பதாக காட்டுகிறது. மூன்றாம் உலகம் சிவன் வாழும் உலகமாகும்.§

குருதேவர்: மூவுலகங்களின் ஒருங்கிணைந்த இணக்கச் செயல்முறையே சமயம் என்றும், அந்த இணக்கத்தை எல்லா மூவுலக வாசிகளும் தொடர்பு கொள்ளக்கூடிய கோயில் வழிபாட்டின்மூலம் ஏற்படுத்தமுடியும் என்றும் சிவனடியார்கள் எல்லோரும் நம்புகின்றனர்.§