சிவனை அடையும் வழி

20§

நமது புனித வேதசாத்திரங்கள் யாவை?§

வேதங்களும் ஆகமங்களுமே நமது புனித சாத்திர நூல்கள். இம்மாபெரும் சமய நூல் சேகரிப்பு ‘சுருதி’ (கேட்கப்பட்டது) என்றழைக்கப்படுகிறது. அதாவது அவை இறைவனால் இந்திய ரிஷிகளுக்கு நீண்ட நீண்ட காலத்துக்கு முன் அருளப்பட்டவை. வேதங்கள் பற்றி கூறவேண்டுமானால் அவை 6000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கலாம். பல நூற்றாண்டுகள் வேதங்கள் மனப்பாடமாக வாய்வழியாகவே ஓதப்பட்டு, பிறகுதான் சமஸ்கிருத மொழியில் இறுதியாக எழுதப்பட்டன. ரிக், சாம, யஜுர், அதர்வம் என நான்கு வேதங்கள் உள்ளன. ஒவ்வொரு வேதமும் தோத்திர சுலோகங்கள், சமயச் சடங்குகள், பொருள் விளக்கம் மற்றும் தத்துவங்கள் என (நான்காக) பிரிக்கப்பட்டன. கோயில் வழிபாட்டின்போது ஓதப்படும் பெரும்பான்மையான மந்திரங்கள் வேதங்களிலுள்ள மந்திரங்களாகும். உபநிடதங்களே வேதங்களின் மிகவும் புகழ்வாய்ந்த ஞானப்புதிர்மிக்கப் பகுதியாகும்.§

ஆகமங்களும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை. அவையும் சமஸ்கிருத மொழியில் உள்ளன. இந்து சமயத்தின் (எல்லா) முக்கிய பெரிய பிரிவுகளுக்கும் தனித்தனியே ஆகமங்கள் உள்ளன. சைவ சித்தாந்த ஆகமங்கள் 28 உள்ளன. ஒவ்வொன்றிலும் நான்கு பிரிவுகள். ஆகமங்கள் கோயில் வரைபடம் மற்றும் கட்டுமானம், அன்றாட வழிபாடு, திருவிழாக்கள் ஆகியவவை குறித்து விளக்குகின்றன. தியானம், சைவ சமய தத்துவம் குறித்தும் அவை போதிக்கின்றன. வேதங்கள் பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன என்றாலும் ஆகமங்கள் இன்னும் பரவலாக அறியப்படாமலே இருக்கின்றன.§

வேதங்கள், ஆகமங்களைத் தவிர்த்து சைவ சித்தாந்தத்தில் ஆயிரக்கணக்கான புனித நூல்களும் தோத்திரப் பாடல்களும் உள்ளன. அவை பெரும்பாலும் வழிநூலாக (துணைநூலாக) கருதப்படும் ஸ்மிருதிகள். தமிழில் எழுதப்பட்டவை. சைவ சமயாச்சாரியர்கள் பலரால் பாடப்பட்ட பன்னிரண்டு திருமுறைகள் மிகப் புகழ்வாய்ந்த வழிநூலாம். அவற்றில் மிகவும் முக்கியம் வாய்ந்தது திருமூலர் அருளிய திருமந்திரமாகும். திருமூலர் ரிஷியால் யோகநெறியில் அருளப்பட்ட இந்நூலின் 3047 பாடல்களில் சைவக் கொள்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சித்தாந்த வேதாந்த கருத்துக்களை சமரசப்படுத்திய பெருமைக்காக திருமந்திரம் மிகவும் போற்றப்படுகிறது. இன்னொரு முக்கியமான ஸ்மிருதி திருவள்ளுவரால் அருளப்பட்ட திருக்குறள் நூல். இதில் 1330 குறட்பாக்கள் உள்ளன. உலகின் மிக உயர்ந்த அறநூல்களில் ஒன்றான திருக்குறள், தமிழக நீதிமன்றங்களில் சத்தியப் பிரமாண நூலாகப் பயன்படுத்தப்படுகிறது. நாமும் நமது சற்குருக்களால் அருளப்பட்ட புத்தகங்களை சாத்திர நூல்களாகக் கருதுகிறோம்.§

image§

shutterstock§

ஓர் இந்து பக்தர் கையில் ஒரு கிழிந்த சுலோக புத்தகத்தை வைத்துள்ளார். ஆயிரக்கணக்கான முறை அச்சுலோகங்களை ஜெபித்துள்ளார் என்று அது குறிக்கிறது. அவர் முன்னேயிருக்கும் பூஜிக்கப்பட்ட நீர் நிறைந்த ஒரு செப்புக் குடம் மலர்கள் மாவிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.§

குருதேவர்: ஏதாவது ஒரு அழுத்தமான கேள்விக்கு பதில் தெரிய விரும்பினால் நீங்கள் உங்களுக்குள்ளேயே அந்த பதிலைக் கண்டுபிடிக்கலாம். அல்லது நமது வேதசாத்திர நூல்களில் அல்லது ஞானசாத்திரங்களில் காணலாம்.§