சிவனை அடையும் வழி

17§

சைவ சமயத்தின் நம்பிக்கைகள் யாவை?§

வ்வொரு சமயத்திற்கும் அதன் முக்கிய நம்பிக்கைகளை உள்ளடக்கிய ஒரு கோட்பாடு தொகுப்பு இருக்கும். அது அவரவர் சமயங்களின் தத்துவக் கோட்பாடுகளின் சுருக்கத்தைக் கொண்டிருக்கும். சிறுவர்கள் இச்சமயக் கோட்பாடு தொகுப்பை இளம் வயதிலேயே பயில்கின்றனர். இக்கோட்பாட்டு தொகுப்பைப் படித்து புரிந்து கொள்வதின்மூலம் அதன் அடிப்படை கருத்துக்களை நாம் ஒரே மாதிரியாக நமது பாரம்பரியத்தை பிற சமயத்தவ௫க்கு தெளிவாக விளக்க முடியும்.§

அடுத்த பக்கத்தில் இருக்கும் பன்னிரண்டு நம்பிக்கைகளும் ஆறு சமயங்களில் ஒன்றான சைவ சமயத்தின் முக்கிய நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது. இறை, உயிர், உலகம், தீமை, அன்பு என்று இன்னும் பலவற்றை அது கொண்டுள்ளது. உலக சமயங்களுக்கிடையே நம்பிக்கைகள் பெருமளவில் வேறுபடுகின்றன. நமது நம்பிக்கைகள் நமது குண இயல்பை உருவாக்குகின்றன. நமது குண இயல்புகள் நமது செய்கைகளைப் பாதிக்கின்றன. எனவே நாம் என்ன நம்பிக்கை கொண்டுள்ளோமோ அது நமது வாழ்வை செதுக்கி நமது கலாச்சாரத்தை தெளிவாக்கி நமது எதிர்காலத்தை உருவாக்குகிறது. ஒருவரின் செய்கையை அவர் தம்மீதும், பிறர்மீதும், தன்னைச்சுற்றி இருப்போர்மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை வைத்தே ஆராய்ந்து கண்டுபிடித்துவிடலாம். அந்நம்பிக்கைகள் சரியானவையாக இருந்தால் அவரின் செய்கைகள் பிறருக்கு நன்மைகள் கொண்டுவரும். ஆண்டவன் மீதுள்ள நம்பிக்கைதான் அனைத்து உயிர்களினூடும் அன்புச் சக்தியாகப் பாய்ந்து நிற்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். அதுவே மரியாதை, இரக்கம், கருணை ஆகிய போக்கை உருவாக்குகிறது. அதற்கு எதிராக தீய சக்தியிலும், அழிவு சக்தியிலும் கொண்ட நம்பிக்கை நாம் தீயவர்களாகக் கருதுபவர்களுக்கே தீமையும் காயங்களும் ஏற்படும் போக்கை ஏற்படுத்தித் தருகிறது.§

நம்பிக்கையின் சக்தியை குருதேவர் விளக்கிக் கூறியிருக்கிறார்: “மனித மனம் ஒரு கம்ப்யூட்டர் மாதிரியேதான் (செயல்படுகிறது). உள்ளே அனுப்பப்படும் கட்டளைகளே நம்பிக்கை எனலாம். அவற்றின் செயலாக்கமே குணநலன்கள். இவ்விரண்டையும் ஊடுருவிச் செல்லும் அறிவு அல்லது தூண்டுவிசை அதன் உற்பத்தியை அல்லது காரியத்தை நிர்ணயிக்கிறது. கருவில் தொடங்கி ஆழ்மனதில் தாய் தந்தையர் விதைக்கும் நம்பிக்கைகளை குழந்தைகள் அப்படியே கிரகித்துக் கொண்டு அடிப்படை குணநலன்களைக் கற்றுக் கொள்கின்றனர். ஒரு (கம்ப்யூட்டர்) புரொக்ராமர் புதிய மனுவை (முதன்முறை) தயார் செய்யும்போது குறிச்சொல்லை (code) உபயோகிப்பதுபோல் இது முதல் படியாகும். “§

இந்த பன்னிரண்டு சமயக் கோட்பாடுகளையும் ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். இவற்றை ஞாபகப்படுத்திக் கொள்வதன் மூலம் நீங்கள் சைவசமயத்தின் கொள்கைகளான பக்தி, பணிவு, வன்முறை இல்லாமை, இரக்கம், சேவை ஆகியவவை நிலைபெற்றிட உதவி செய்யலாம்.§

image§

shutterstock§

பக்தர்கள் அன்போடு பூ, பழங்களுடன் சிவனை அணுகுகின்றனர். மற்றவர்கள் கோரிக்கைகளையும் வேண்டுதல்களையும் முன்வைத்து ஆசீர்வாதம் வழிகாட்டலை வேண்டுகின்றனர். மனமுவந்து கடவுளை அணுகினால் மனநிறைவு, மனமகிழ்ச்சி, செல்வம் கிட்டும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.§

குருதேவர்: வரலாற்று ரீதியாக நோக்கினால் தாய்நாட்டை விட்டு சமயங்கள் குடிபெயரும்போது சமயக் கோட்பாடுகள் உருவாகியுள்ளன. அதுவரை நம்பிக்கைகள் கலாச்சாரத்தில் ஊறிக்கிடந்து குழந்தைகள் வளரவளர இயல்பாகவே கற்பிக்கப்பட்டது. சமயக் கோட்பாடு என்பது மொத்தமான பல விசயங்களை வடிகட்டி எளிதாய் நினைவு வைத்துகொள்ளும் நம்பிக்கை தொடர் வாசகங்களாம்.§

இந்து சைவ சமயத்திற்கு ஒரு கோட்பாடு

1 . கடவுளின் வெளிப்படாத உண்மைப் பொருள் குறித்து: சிவனடியார்கள் அனைவரும் சிவபெருமானே கடவுள் என்றும் அவரின் முழுமுதற்பொருளான பரசிவம் காலம், உருவம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கிறது என்றும் நம்புகின்றனர். “அது இதுவல்ல. அது அதுவல்ல” என்று யோகிகள் மௌனமாக வியக்கின்றனர். ஆம் அத்தகைய அறியொணா கடவுள்தான் சிவபெருமான். ஓம்.§

2. கடவுளின் வெளிப்படும் தன்மையாம் யாவற்றிலும் அன்பு வடிவாய் பரவி நிற்பது குறித்து: சிவனடியார்கள் அனைவரும் சிவபெருமானே கடவுள் என்றும் அவரின் உள்ளார்ந்த இயல்பான அன்பே பராசக்தி என்றும் அதுவே ஆதாரத்தளமாக மூலப்பொருளாக அல்லது தூய மெய்யுணர்வாக அனைத்து வடிவங்களூடும் சக்தியாக, உள்பொருளாக, அறிவாக, பேரின்பமாகப் பரவி நிற்கிறது என்றும் நம்புகின்றனர். ஓம்.§

3. கடவுளை ஈஷ்வரன் என்றும் எல்லாவற்றையும் படைப்பவர் என்பதும் குறித்து: சிவனடியார்கள் அனைவரும் சிவபெருமானே கடவுள் என்றும் அவரின் உள்ளார்ந்த இயல்பு பரமான்மா என்றும், அவர் தேவதேவ மகாதேவர் பரமேஷ்வரர் என்றும் அவரே வேத ஆகமங்களை அருளியவர் என்றும், பொருள்கள் அனைத்தையும் அவரே படைக்கிறார், காக்கிறார், அழிக்கிறார் என்றும் நம்புகின்றனர். ஓம்.§

4. யானை முக மூர்த்தி குறித்து: சிவனடியார்கள் அனைவரும் எந்த வழிபாட்டையும் அல்லது எக்காரியத்தையும் தொடங்குவதற்குமுன் சிவசக்தி மைந்தனான மகாதேவர் கணேசப் பெருமானை வணங்க வேண்டும் என்று நம்புகின்றனர். அவரின் ஆட்சி இரக்கமிக்கது, அவரின் சட்டநீதி நேர்மையானது. நியாயமே அவரின் மனம். ஓம்.§

5. கார்த்திகேயன் (முருக) மூர்த்தி குறித்து: சிவனடியார்கள் அனைவரும் சிவசக்தி மைந்தன் மகாதேவர் கார்த்திகேயனை (முருகனை) நம்புகின்றனர். அவரின் திருக்கை வேல் அறியாமை என்னும் தளையை நீக்குகின்றது. பத்மாசனத்தில் ( அமர்ந்திருக்கும்) யோகிகள் முருகனை வணங்குகின்றனர். மனம் அடங்கிப் போவதால் அது அமைதியாகிறது. ஓம்.§

6. ஆன்மாவின் படைப்பும் கடவுளுடன் அதன் ஒற்றுமையும் குறித்து: நம் ஒவ்வொருவரின் ஆன்மாவும் சிவபெருமானால் படைக்கப்படுகின்றது என்றும் அது சிவபெருமானை ஒத்திருக்கிறது என்றும் இந்த ஒற்றுமையை எல்லா ஆன்மாக்களும் சிவபெருமானின் அருளால் ஆணவம், கன்மம், மாயை ஆகிய தளைகள் நீங்கியபின் முழுமையாய் உணரமுடியும் என்றும் நம்புகின்றனர். ஓம்.§

7. பருமையான, நுண்ணிய, காரண உலகங்களின் இருப்பு குறித்து:சிவனடியார்கள் அனைவரும் மூன்று உலகங்கள் இருப்பதாக நம்புகின்றனர். ஆன்மாக்கள் தூல உடம்பெடுக்கும் பருமை உலகத்தையும், ஆன்மாக்கள் நுண்ணிய உடம்பெடுக்கும் நுண்ணிய (சூக்கும) லோகத்தையும், அன்மாக்கள் சுயஞ்சோதியாய் இருக்கும் காரண லோகத்தையும் அவர்கள் நம்புகின்றனர். ஓம்.§

8. கன்மம், சம்சாரம் மற்றும் மீண்டும் பிறக்காமல் விடுதலையடைவது குறித்து: சிவனடியார்கள் அனைவரும் வினைக் கொள்கையை நம்புகின்றனர். ஒருவர் ஏற்படுத்திய எல்லா வினைகளின் பலனையும் ஒருவர் அனுபவித்தே ஆகவேண்டும் என்றும், எல்லா வினைகளும் தீர்ந்து மோட்சம் என்னும் விடுதலை அடையும்வரை, ஒவ்வொரு ஆன்மாவும் தொடர்ந்து மறுபிறவிகள் எடுக்கின்றன என்றும் நம்புகின்றனர். ஓம்.§

9. மனத்தளவில் முன்னேறிச் செல்லும் நான்கு நெறிகள் குறித்து: சிவனடியார்கள் அனைவரும் ஞானம் என்னும் பேரறிவை வெளிப்படுத்த சரியை என்னும் செந்நெறி வாழ்வியலும், கிரியை என்னும் ஆலய வழிபாடும், யோகம் என்ற பரசிவ நிலைக்கு இட்டுச்செல்லும் உயிர்வாழும் குருவின் அருளும், மிகவும் அவசியம் என நம்புகின்றனர்.§

10. எல்லாமே நல்லது என்பது குறித்து: சிவனடியார்கள் அனைவரும் உள்ளார்ந்த தீமை இல்லையென்று நம்புகின்றனர். அறியாமையினால் தீமைக்குத் தோற்றுவாய் இருக்கிறது என்று தோன்றினாலும் தீமைக்கு (உண்மையில்) தோற்றுவாய் இல்லை. கடைசியில் நன்மையும் இல்லை தீமையும் இல்லை என்று தெரிந்துகொண்டு அவர்கள் இரக்கமிக்கவர்களாக இருக்கின்றனர். எல்லாம் சிவ சித்தம்.ஓம்.§

11. ஆலய வழிபாட்டின் அருள்ஞான நோக்கம் குறித்து: மூவுலகங்களின் ஒருசார்ந்த நல்லிணக்க உறவே சமயம் என்றும், ஆலய வழிபாட்டின்மூலம் இந்த நல்லிணக்கத்தை உருவாக்க முடியும் என்றும், மூவுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஆலயத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள இயலும் என்றும் சிவனடியார்கள் அனைவரும் நம்புகின்றனர். ஓம்.§

12. பஞ்சாட்சரம் (மந்திரம்) குறித்து: சிவனடியார்கள் அனைவரும் புனிதமான ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தை, ஐந்தெழுத்து மந்திரத்தை, சைவ சமயத்தின் மிகவும் உன்னதமான முக்கியமான மந்திரம் என்று நம்புகின்றனர். நமசிவாய மந்திரத்தின் ரகசியம் யாதெனில் அதனை சரியான (குருவின்) உதட்டிலிருந்து சரியான நேரத்தில் கேட்பதே. ஓம்.§

image§

shutterstock§