18§ |
நமது நம்பிக்கை உறுதிமொழி என்ன?§ |
சிவபெருமானே உள்ளார்ந்த அன்பு, யாவும் கடந்த பரம்பொருள்.” இதுவே ஆங்கிலத்தில் நமது உறுதிமொழி. இந்த உறுதிமொழி சைவ இந்து சமயத்தின் நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் சுருக்கிக் காட்டுகிறது. “உள்ளார்ந்த” என்றால் “எங்கும் எப்போதும் இருப்பது.” “யாவும் கடந்த” என்றால் “அப்பால்” என்று பொருள்படும். இந்த உறுதிமொழியை நாம் வலியுறுத்தி மீண்டும் மீண்டும் சொல்லும்போது கடவுள் வெளிப்படும் பொருளாகவும் வெளிப்படாத பொருளாகவும் இருக்கிறார் என்று வலியுறுத்துகிறோம். அவர் உலகில் எங்கும் வியாபித்திருப்பதோடு அதனைக் கடந்தும் இருக்கிறார். தன்னிலையில் தெய்வீக அன்பாகவும் தன்னிலைக்கு அப்பால் பரம்பொருளாகவும் இருக்கிறார். நாம் “சிவபெருமானே உள்ளார்ந்த அன்பு, யாவும் கடந்த பரம்பொருள்” என்று உறங்கப் போகும்போதும், உறங்கி விழித்தெழும்போதும் மீண்டும் மீண்டும் சொல்கிறோம். இந்த வாசகமொழி நம்மை சிவன் அருகில் இட்டுச் செல்கிறது. அந்த நாள் சிறப்பாக விளங்க நம்மைத் தயார் படுத்துகிறது.§
இதுவே தமிழில் “அன்பே சிவமயம், சத்தியமே பரசிவம்” என்றழைக்கப்படுகிறது. சமஸ்கிருத மொழியில் இதனை “பிரேமைவ சிவமய, சத்யமேவ பரசிவ” என்பர். பிரெஞ்சு மொழியில் இதை டியு சிவா எஸ்ட் ஆமோர் ஓம்னிபிரசண்ட் எட் ரியலிட்டெ டிராசெண்டண்ட்” என்பர். நாம் நமது உறுதிமொழியை மந்திரம் போல் 108 தடவை ஜெபிக்கலாம். 108 தடவை எழுதலாம். அல்லது இதனை ஆத்மசாதனா பயிற்சிபோல் 1008 தடவை எழுதலாம்.§
இந்த உறுதிமொழியை திரும்பத் திரும்பக் கூறுவதன்மூலம் நமது சமயத்தின் முடிவான உண்மைகளை நாம் மனதில் ஆழமாகப் பதிவுசெய்கிறோம். இப்பதிவுகள் நாம் கவலையடைகின்றபோது, உலகவாழ்வில் திளைத்திருக்கும்போது அல்லது பீதியடைந்திருக்கும்போது நமக்கு ஊக்கம் அளிக்கின்றன. கடவுளின் உள்ளார்ந்த அன்பு நம்மைப் பாதுகாத்து வழிகாட்டுகின்றது என்பதை அது நினைவூட்டுகிறது. நாள் முழுதும் அது நமது மனதை உயர்நிலைக்கு கொண்டுசென்று தேவையான நல்ல எண்ணங்களை சிந்திக்கச்செய்து தீங்கேதும் நடவாமல் நம்மைக் காக்கிறது. இந்த உறுதிமொழியை திரும்பத் திரும்பச் சொல்வதால் சிவ உணர்வுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. மற்ற மதங்களிலும் உறுதிமொழிகள் உள்ளன. உதாரணமாக கிறிஸ்துவர்கள் ‘அபோசல் கிரீட்’ (Apostle’s Creed) என்றும் முஸ்லிம்கள் ‘ஷாஹாடா.’ (Shahada) என்றும் சமயக் கோட்பாடுகள் வைத்துள்ளனர். சிவனடியார்கள் தங்களின் உறுதிமொழியை சிறந்த செல்வமாக மதித்துத் தனியாகவோ அல்லது குழுவாகவோ திரும்பத் திரும்ப ஜெபிக்கிறார்கள்.§
குருதேவர்: சைவசமயம் என்ற புனித பசுவிடமிருந்து “சிவபெருமானே உள்ளார்ந்த அன்பு யாவும் கடந்த பரம்பொருள்” என்ற பாலினைக் கறந்து, தயிராக்கி, வெண்ணெய் கடைந்து, அதிலிருந்து சில அரும் நெய்த் துளியை எடுக்கின்றனர்.§