சிவனை அடையும் வழி

10§

அத்வைத ஈஷ்வரவாதம் என்றால் என்ன?§

த்வைத ஈஷ்வரவாதம் என்பது அத்வைதம் மற்றும் ஈஷ்வரவாதம் ஆகிய இரண்டு கொள்கைகளும் கலந்த தத்துவமாகும். அத்வைதம் என்பது உண்மைப்பொருள் ஒன்றே அனைத்துமாய் நிற்கிறது என்ற சித்தாந்தமாகும். எல்லாமே ஈஷ்வரன்தான் என்ற கருத்தை அது கொண்டிருக்கிறது. ஈஷ்வரவாதம் என்பது இறைவன் அன்பானவராக, தனிப்பெருந்தெய்வமாக படைப்பவராக இருக்கிறார் என்ற நம்பிக்கையாகும். இவ்விரண்டும் பெரும்பாலான இந்திய தத்துவங்களில் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கின்றன.§

நமது சைவ சித்தாந்த தத்துவம் என்பது அத்வைத இறைக்கொள்கை வகையைச் சேர்ந்தது. நாம் இறைவனை ஈஷ்வரனாகவும், இருக்கின்ற எல்லாவற்றிலும் அவரே சாராம்சமாக உயிர்நாடியாக இருக்கிறார் என்றும், அவரே முழுமுதற் பொருளாக பரசிவமாக எல்லா வடிவங்களையும் கடந்து நிற்கிறார் என்றும் காண்கிறோம். நமது ஈஷ்வரவாதம் அனுசரிக்கும் முறைகளில் கடவுளையும் தெய்வங்களையும் நாம் மிகுந்த பக்தியோடும் அடி பணிந்தும் வணங்குகிறோம். நமது அத்வைதம் அனுசரிக்கும் முறைகளில் ஆத்மாவின் சாரமும் இறைவனின் சாரமும் ஒரே மாதிரி என்பதால், அதுவே பிரபஞ்சம் முழுதும் இருக்கிறது என்பதால், நமது ஆத்ம சாராம்சத்தை அனுபவிக்க ஆழ்நிலையில் தியானம் செய்கிறோம். சிவபெருமானுக்கு அத்வைத அம்சமும் ஈஷ்வரவாத அம்சமும் உண்டு. நமது இந்த இருவழி வழிபாட்டின்மூலம் நாம் இரண்டுக்கும் மதிப்பு கொடுத்து அருகே நாடுகிறோம்.§

முழுமையான பூரணமான மார்க்கத்துக்கு அத்வைதமும் ஈஷ்வரவாதமும் தேவைப்படுகின்றது. அத்வைதத்தின் எதிர்ப்பதம் துவைதம். அது கடவுளும் படைப்பும் வெவ்வேறு உண்மைப்பொருள்கள் என்று போதிக்கின்றது. பானை செய்யும் ஒரு குயவனைப்போல் கடவுள் ‘களிமண்ணில்’ அதாவது அனாதியாய் உள்ள மாயையைக் கொண்டு இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்றும், அது கடவுளின் ஓர் அங்கம் அல்ல என்றும் துவைதிகள் நம்புகின்றனர். ஆனால் அத்வைத சைவ சமயம் எல்லாமே சிவபெருமான் எல்லாவற்றிலும் சிவபெருமான் என்றும், குயவனும், களிமண்ணும், செய்யப்படும் பானையும்—அனைத்தும் அவரே என்றும் கூறுகிறது. அத்வைத சமயத்தின் சில பிரிவுகள் ஈஷ்வரவாதத்தை அவ்வளவாக உள்ளடக்கவில்லை. நமது பிரிவில் அதை உள்ளடங்கியுள்ளது.§

நாம் சிவபெருமானை அன்புக் கடவுளாக பரமேஷ்வரராக, சிவனே ஆக்கல் காத்தல் அழித்தல் செய்பவராக, சிவன் நம்மிலிருந்து வேறாக தம் படைப்புக்களை நேசிப்பதுபோல் நம்மையும் நேசிப்பவராக வணங்குகிறோம். அதுவே ஈஷ்வரவாதப் பகுதி. என்றாலும் சிவபெருமான் நம்மிலிருந்து வேறாக இல்லையென்றும் நாம் நம்புகிறோம். அவர் பராசக்தியாக தூய மெய்யுணர்வாக எல்லா வடிவங்களிலும் நின்று முழுமுதற்பொருளாக பரசிவமாக நம்முள்ளே இருக்கிறார். அதுவே அத்வைதப் பகுதி.§

image§

shutterstock§

நமது நம்பிக்கைபோல இந்த சிகப்பு பந்தும் விநோதமானதுதான். அதன்மீது சைவ சமயத்தின் சின்னம் உள்ளது. அதன்மீதுள்ள மூன்று பட்டைகளும் விபூதி என்ற திருநீற்றால் பூசப்பட்டு சந்தனம் பூசி நடுவே சிகப்பு பொட்டும் உள்ளது.§

குருதேவர்: அத்வைதிகள் மலையுச்சிப் பார்வையில் எல்லாப் பொருள்களிலும் ஒரே உண்மைப் பொருளைக் காண்கின்றனர். துவைதிகளோ மலையடிவாரத்தில் இருந்துகொண்டு கடவுளையும் உயிரையும் உலகத்தையும் தனித்தனிப் பொருளாக அனாதியாய் பிரிந்திருப்பதாகக் காண்கின்றனர். இந்த இரு கருத்துக்களையும் இணைப்பதாக அத்வைத ஈஷ்வரவாதம் விளங்குகிறது.§